New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்
Permalink  
 


ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்

எஸ். இராமச்சந்திரன்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தமிழக வரலாற்றில் தனது தொல்லியல் முதன்மையால் இடம்பிடித்த ஊர். இவ்வூர் தாமிரபரணியாற்றின் தென்கரையில், திருநெல்வேலி திருச்செந்தூர்ச் சாலையில் திருவைகுண்டத்துக்கு முன்னர், பொன்னன் குறிச்சி பேருந்து நிறுத்தத்தையடுத்து அமைந்துள்ளது. இவ்வூருக்கு ஆதிச்சநல்லூர் என்ற பெயர் எப்போது எப்படி ஏற்பட்டதென உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆயினும், இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆதிச்சநாடாழ்வான் என்ற பட்டப்பெயர் உடைய நிலைமைக்கார நாடார் குடும்பத்தவர் இருந்துள்ளனர் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குதிரைமொழித்தேரி எள்ளுவிளையிலுள்ள கி.பி. 1639ஆம் ஆண்டுக் கல்வெட்டு, திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் மடத்து அச்சம்பாடு தேவபிச்சை நாடார் தோட்டத்திலுள்ள கி.பி. 1645ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஆகியவற்றில் ‘ஆதிச்ச நாடாவான்' என்ற பட்டப் பெயர் கொண்டோர் இடம்பெறுகின்றனர். குறிப்பாக, மடத்து அச்சம்பாடு கல்வெட்டின்மூலம் அச்சன்பாடு என்ற அவ்வூரைத் திருவைகுண்டம் கைலாசநாதர் கோயிலுக்கு மானியமாகக் கொடுத்தோருள் ஆதிச்ச நாடாவார்களும் அடங்குவர் எனத் தெரியவருகிறது. எனவே அவர்களுடைய பெயர்த் தொடர்பு இவ்வூருக்கு இருந்திருக்க வாய்ப்புண்டு. 

முதலில் ஆதிச்சநல்லூர்ப் பறம்பு என்ற பெயர் பற்றி நான் ஆய்ந்து அறிந்த செய்தியைக் கூறிவிடுகிறேன். இப்பறம்பு 114 ஏக்கர் பரப்புள்ள, சீனிக் கல் பாறைகள் (Quartzite) நிரம்பிய மேட்டுநிலம் ஆகும் இப்பறம்பு அமைந்துள்ள இடத்தைத் தொட்டடுத்து ஆதிச்சநல்லூர் என்ற சிற்றூர் அமைந்திருப்பதால் இது ஆதிச்சநல்லூர்ப் பறம்பு என வழங்கப்படுகிறது. இப்பறம்பில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாகப் புதைக்கப்பட்டிருப்பதால் தாழிக்காடு என்றும் கூறப்படுவதுண்டு. இங்கு தாழிகளில் அடக்கம் செய்யப்பட்ட மனிதர்களின் வாழ்விடமாக இருந்த பேரூர் எது என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. 

ஆதிச்சநல்லூர் மிகச் சிறிய ஊர். நெல்லை - திருச்செந்தூர் ரயில்ப் பாதையில் ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் உள்ளது. ஆதிச்சநல்லூர்ப் பறம்பு 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே மிகப் பிரபலமாகிவிட்டதால் இந்த ரயில் நிலையம் உருவாக்கப்பட்டிருக்கலாம். (இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டபோது நிகழ்ந்த ஒரு சாதாரண நிகழ்வு இப்போது வேடிக்கையான செயல்பாடாக எஞ்சித் தொடர்கிறது. அது பற்றிப் பிறகு பார்க்கலாம்.) ஆனால் ஆதிச்சநல்லூர் என்பது வெள்ளூர் கஸ்பா என்ற வருவாய்க் கிராமத்தின் பிடாகையாகக் கருதப்பட்டு வெள்ளூர் ஆதிச்சநல்லூர் என்றே அடங்கல் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டு வருகிறது. வெள்ளூர் என்ற ஊர் கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்குரிய சுசீந்திரம் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது1. எனவே அவ்வூர் மிகப் பழமையான ஊரென்பது தெரியவருகிறது. 18-19ஆம் நூற்றாண்டுகளில் 'வெள்ளூர்க் கவிராயர் குடும்பம்' என்று பெயர் பெற்ற ஒரு புலவர் குடும்பத்தவரும் அக்குடும்ப வாரிசுகளும் இவ்வூரில் வாழ்ந்துள்ளனர். மேலும், வெள்ளூரிலுள்ள பெருமாள் கோயில் திடலில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு - சிவப்புப் பானையோடுகள் என்னால் சேகரிக்கப்பட்டன2. எனவே, ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் அடக்கமாகியிருக்கிற மனிதர்கள், வெள்ளூரில் வாழ்ந்தவர்களாக இருக்கலாம். 

1906ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்ட அலெக்சாண்டர் ரீ, தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கொங்கராயக் குறிச்சி என்ற ஊரே, இத்தாழிக்காட்டு முன்னாள் மனிதர்கள் வாழ்ந்த இடமாக இருந்திருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். தற்போது ஆதிச்சநல்லூர்ப் பறம்புக்கும் கொங்கராயக் குறிச்சிகுமிடையே மேற்கு - கிழக்காக ஓடுகிற தாமிரபரணி, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதிருப்பதைவிட வடக்கில் 2 கி.மீ. தொலைவில் கொங்கராயக் குறிச்சிக்கு வடக்கே ஓடியிருக்கலாம் என்று அலெக்சாண்டர் ரீ கருதியுள்ளார். இவ்வாறு ஆற்றின் போக்கு மாறியது - மாற்றப்பட்டது - பற்றி இப்பகுதியில் ஒரு கதை வழங்குகிறது. பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தாமிரபரணி வெள்ளத்தால் திருவைகுண்டம் ஊரும், கைலாசநாதர், கள்ளப்பிரான் கோவில்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவந்தன என்றும், செழுவனூர் வேளாளர் பொன்னப் பிள்ளை என்பவரின் முன்முயற்சியால் ஆற்றின் போக்கு மாற்றப்பட்டது என்றும், அவருடைய உதவிக்குக் கைமாறாக திருவைகுண்டத்தில் கோட்டையொன்று உருவாக்கப்பட்டு அக்கோட்டைப் பகுதியில் அவரது வர்க்கத்தார் குடியேற்றப்பட்டுக் 'கோட்டைப் பிள்ளைமார்' என அழைக்கப்படலாயினர் என்றும், அவருடைய நினைவைப் போற்றும் வகையில் ஆதிச்சநல்லூர்க்கு அருகில் பொன்னன் குறிச்சி என்ற ஊர் உருவாக்கப்பட்டதென்றும் அக்கதையில் கூறப்படுகின்றன. அக்கதையில் இடம்பெறும் பொன்னப் பிள்ளையைப் பற்றித் திருவைகுண்டம் கைலாசநாதர் கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 1441ஆம் ஆண்டுக்குரிய வீரபாண்டியனின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதென்றும், “செழுவனூர்ப் பிறவிக்கு நல்லான் பொன்னப் பிள்ளை” என்பது அவருடைய முழுமையான பெயரென்றும் முனைவர் கமலா கணேஷ், திருவைகுண்டம் கோட்டைப் பிள்ளைமார் பற்றிய தமது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.3 

கொங்கராயக் குறிச்சி, பழமையான ஊரே. அவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கட்டுமானம் ஒன்றினைத் தாம் கண்டதாக ரீ குறிப்பிட்டுள்ளார். அவ்வூரில் உள்ள விநாயகர் கோயில் வாயில் நிலையில் கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இரண்டு என்னால் கண்டறியப்பட்டன.4 அக்கல்வெட்டுகளின் மூலம், கொங்கராயக் குறிச்சியின் பழம்பெயர் ‘முதுகோனூர்' என்பதும், அக்கல்வெட்டுகள் ‘முன்றுறை வீரர் ஜினாலயம்' என்ற சமணப் பள்ளிக்குரியவை என்றும் தெரியவருகின்றன. சமண சமயம் பின்பற்றுவாரின்றி மறைந்துபோன பின்னர், இக்கல்வெட்டுகள் மட்டும் விநாயகர் கோயிலின் நிலைக்காலில் பொருத்தப்பட்டுவிட்டன எனத் தெரிகிறது. முன்றுறை வீரர் ஜினாலயத்தின் இறைவன் என்ன ஆனார் எனத் தெரியவில்லை. சற்றொப்ப 40 ஆண்டுகளுக்கு முன்னர்வரை ஆதிச்சநல்லூர்ப் பறம்பில் ஒரு சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் இருந்ததாகவும், இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஒருமுறை இப்பகுதிக்கு வருகைதந்தபோது இப்பறம்பையும் இங்கிருந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தையும் பார்வையிட்டுள்ளாரென்றும் இப்பகுதி மக்களால் பேசப்படுகிறது. அச்சிற்பமே கொங்கராயக் குறிச்சியிலிருந்த ஜைனப் பள்ளியின் தீர்த்தங்கரர் சிற்பம் போலும். அச்சிற்பம் இப்போது எங்கு உள்ளதெனத் தெரியவில்லை. 

ஆங்கிலேய அரசு, மதராஸ் அரசாணை 867 - நாள்: 13.08. 1876 மூலம் ஆதிச்சநல்லூர்ப் பறம்பு பற்றிய ஒரு குறிப்பினைப் பதிவு செய்தது. அந்த ஆணையில் அரசு செயற்பொறியாளர் ஜே.டி. கிரான்ற் என்பவர், திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மாதேவி, தூத்துக்குடிக்கு மேற்கே புதுக்கோட்டை என்ற ஊரையடுத்து அமைந்துள்ள நல்லமலை, ஆதிச்சநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் முதுமக்கள் தாழிகள் புதையுண்ட நிலையில் காணப்படுவது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜாகோர் என்ற மானிடவியலாளர் ஆதிச்சநல்லூர்ப் பறம்பில் அகழாய்வு செய்து, ஆய்வில் கிடைத்த அரும்பொருள்களை பெர்லின் நகருக்கு எடுத்துச் சென்றார். (அவை Volkar Kunde அருங்காட்சியத்தில் உள்ளன.) இதனையடுத்து 1903-1904ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சுத் தொல்லியலாளர் லூயி லாப்பெக்யூ அகழாய்வு மேற்கொண்டு, கிடைத்த அரும்பொருள்களை பாரிஸ் நகர அருங்காட்சியகத்திற்குக் கொண்டுசென்றார். இதே காலகட்டத்தில் அலெக்சாண்டர் ரீ அகழாய்வு மேற்கொண்டு, 1906ஆம் ஆண்டில் அகழாய்வு அறிக்கை வெளியிட்டார். இந்த அகழாய்வின்போது கிடைத்த அரும்பொருள்களுள் பெரும்பாலானவை சென்னை அரசு அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டன. பொன்னாலான கழுத்தணி போன்ற ஓரிரு அரும்பொருள்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் மனைவியால் எடுத்துச் செல்லப்பட்டன. பழங்கலைப் பொருள்கள் பதிவுச் சட்டமோ, அகழாய்வு குறித்த திட்டவட்டமான வரையறைகளோ இல்லாமலிருந்த நிலை இத்தகைய நிகழ்வுகளுக்குத் துணைக் காரணங்களெனில், இந்நாடே தமது உடைமை எனக் கருதிய ஆங்கிலேயர்களின் ஆதிக்க மனப்பான்மையே முதன்மையான காரணம். 

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரும்பொருள்கள் பற்றிய ரீ அவர்களின் அறிக்கை, வரலாற்று ஆர்வலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திற்று. குறிப்பாக இங்கிருந்து கிடைத்த மனித மண்டையோடுகள், உடற்கூறு அடிப்படையிலான மானிடவியல் ஆய்வு மேற்கொள்வோருக்குச் சுவையான ஊகங்களைத் தூண்டுகிற பொருள்களாயின. அரும்பொருள்களுள் மட்கலன்களின் வகைப்பாடுகள், பிற பழமையான பண்பாட்டு அகழ்விடங்களில் கண்டறியப்பட்ட மட்கலன்களின் வகைகளுடன் ஒப்பிடப்பட்டுக் குடிப்பெயர்வுகள் பற்றிய ஊகங்களுக்கு வித்திட்டன. ஆனால் தமிழறிஞர்கள் இத்தகைய ஆய்வுகளையோ ஊகங்களையோ அதிகமாகப் பொருட்படுத்தவில்லை. சாத்தான்குளம் இராகவன் போன்ற இதழாளர்கள் ஆதிச்சநல்லூர் பற்றி விரிவான கட்டுரைகள் எழுதி இவ்வூரைப் பிரபலப்படுத்தினர் என்ற அளவில்தான் தமிழறிஞர்கள், தமிழக வரலாற்றறிஞர்களின் முயற்சி நின்று போயிற்று. 

2003-2004ஆம் ஆண்டுகளில் இந்திய அரசு தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் தென் மண்டலக் கண்காணிப்புத் தொல்லியலாளர் தியாக. சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை அகழாய்வில் கிடைத்த அரும்பொருள்களை உலோகவியல், மானிடவியல் முதலிய துறை சார்ந்த வல்லுநர்களின் சோதனைக்கு ஆட்படுத்திச் சில முடிபுகளை அறிவித்துள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை இரண்டு: 1) உலோகங்களின் அறிமுகம், குறிப்பாக இரும்பின் அறிமுகம் கி.மு. 1000 ஆவது ஆண்டுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது. கி.மு. 1500 அளவில் இருக்கலாம். 2) மண்டையோட்டு ஆய்வின் அடிப்படையில் கூறுவதானால், இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள மனிதர்கள் முன்னிலை நிக்ராய்டு, முன்னிலை ஆஸ்திரலாய்டு, மங்கோலாய்டு, இந்தோ ஐரோப்பிய (காகசாய்டு) இனங்களின் கலப்புக் கூறுகள் உடையோர். திராவிட இனம் என நம்பப்படும் மத்தியதரைக் கடற்பகுதி இனக்கூறுகள் மிகக் குறைவான அளவிலேயே (ஐந்து விழுக்காடு) உள்ளன. 

மண்டையோடுகளை ஆராய்ந்து மேற்குறித்த முடிவினை வெளியிட்டவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கைத் தமிழர் திரு. பத்மநாதன் இராகவன். உலோகங்களின் பயன்பாட்டுக்கான கால வரையறையை நிர்ணயித்தலில் தியாக. சத்தியமூர்த்தி அவர்களுக்கு, கடல் சார் தொழில்நுட்பவியலுக்கான தேசிய நிறுவனத்தின் (National Institute of Ocean Technology) சென்னைக் கிளையைச் சேர்ந்த விஞ்ஞானி திரு. சசிசேகரன் உதவி புரிந்துள்ளார். 

தற்சமயம், இந்திய அரசின் தொல்லியல் பரப்பாய்வுத் துறை - தென் மண்டலக் கண்காணிப்புத் தொல்லியலாளர் திருமதி. சத்தியபாமா பத்ரிநாத் தலைமையிலான குழுவினரால் அகழாய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிகிறது. 

ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வின் வரலாற்றைப் படிக்கும்போதே ஓர் உண்மை விளங்கியிருக்கும். தமிழ்ச் சமூக வரலாற்றின் முதன்மையான ஆவணங்களாகக் கருதத்தக்க சங்க இலக்கியங்களையும், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும், பாண்டிய நாட்டின் மிகப் பழமையான வரலாற்று நிகழ்வுகளைப் புராண வடிவில் கூறுகிற திருவிளையாடற் புராணம் போன்ற இடைக்கால இலக்கியங்களையும் ஆதிச்சநல்லூர் ஆய்வு மூலம் கண்டறியப்பட்ட விடயங்களுடன் தொடர்புபடுத்தி ஆழமாக ஆராயப்படவில்லை. சங்க இலக்கியங்களிலும் மணிமேகலையிலும் தாழிகளைப் பற்றி வருகிற குறிப்புகளைப் பட்டியலிடுவது மட்டுமே நடைபெற்றுள்ளது. 

சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் வீரயுகத்தின் கூறுகள் மிகுந்த அளவில் கலந்திருந்தன. ஆனால் முழுமையான வீரயுகச் சமூகம் என்று கூறஇயலாத வகையில், நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் கூறுகளும் பரவலாக இருந்தன. வீரர் குடியைச் சேர்ந்தவனான பாண்டிய மன்னன், ‘கொற்கைப் பொருநன்' (கொற்கைத் துறைமுகத்தின் போர்வீரன்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டாலும், அவன் பொருநராற்றுப் படை குறிப்பிடும் பொருநர் குடியைச் சேர்ந்தவன் அல்லன். பொருநர் குடி என்பது கழைக் கூத்தாடிகளையொத்த (சர்க்கஸ் வீரன் போன்ற) மற்போர், வாள்வீச்சு போன்ற போர் முறைகளில் தேர்ந்த நிபுணர் குடி. ஆனால் அரசர்கள் குடி என்பது சமூகப்படி நிலையில் மிக உயர்ந்த நிலையிலிருந்த குடியாகும். நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்படைகளை வழிநடத்துதல் போன்ற, ‘அரச தர்மம்' சார்ந்த முறையான உயர் கல்வியை அரச குடியினர் பெற்றிருந்தனர். அத்தகைய நிலையில் அரச குடியினர்க்கு மிக நெருக்கமான குடியினராகக் கருதப்பட்ட ஆசான் குடியினர் அல்லது ஆசிரியக் குடியினர் யாராக இருந்திருக்கலாம்? (தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப்படும்) அதங்கோட்டாசான் போன்றோரின் குலமாகக் கருதத்தக்க அரசகுலமும், சங்கறுத்து வளையல் செய்கிற நக்கீரரின் குலமாகிய கொல்லர் குலமுமே ஆசிரியர் குலம் எனக் குறிப்பிடத்தக்கவையாகக் தோன்றுகின்றன. இவ்விரு சமூகப் பிரிவினர்தவிர வானநூல், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் நிபுணர்களாக இருந்த வள்ளுவர் குலத்தவரும் ஆசான் பதவிக்குப் பொருத்தமானவர்களே. இவர்களுள் கொல்லர் சமூகப் பிரிவினைச் சேர்ந்த, சங்கறுத்து வளையல் செய்யும் பிரிவினர், ‘வேளாப்பார்ப்பனர்' (வேள்வி செய்யாத பிராமணர்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.5 நக்கீரர் பற்றிய பிற்காலக் கதைகள், அவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்ததோடு, “ஆரியம் நன்று தமிழ் தீது” என்றுரைத்த குயக்கோடன் என்பவனை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச்செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என்றும் குறிப்பிடுகின்றன.6 இத்தகைய பல குறிப்புகளைச் சங்க கால வாழ்வியலோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அரசர்களின் படைக் கலன்கள், மணிமுடி போன்றவற்றையும் அரியணை அல்லது அரசு கட்டில், அரண்மனை முதலானவற்றையும் உருவாக்கிப் படைத்தளித்த விஸ்வகர்ம சமூகத்தவரே ஆசான்களாக இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். 

ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்களை உருவாக்கியவர்கள் சமூக அந்தஸ்தில் உயர்வாகக் கருதப்பட்ட ஆச்சார்ய மரபினராகவே இருந்திருக்க வேண்டும். இத்தகைய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் தலைநகர இருக்கையாகத் திகழ்ந்தமையால்தான் (கொல்லுத் தொழில் இருக்கை) கொற்கை என்ற ஊர்ப்பெயர் உருவாகி இ¢ருக்கவேண்டும். கொற்கை, ஆதிச்சநல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொற்கையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் நக்கீரரை நினைவூட்டும் வகையில் கீரனூர் என்ற ஊரும் உள்ளது. 

‘வேள்வி செய்யாத பார்ப்பனர்' எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது வேறொரு வகையிலும் கவனத்துக்குரியதாகும். வேள்விச் சடங்குகளைப் புறக்கணித்த வைதிக சமயத்தவரை விராத்யர் எனப் புராணங்களும், தர்ம சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. முதுமக்கள் தாழிப் பண்பாடு அதாவது இரும்பு யுகத்தை அறிமுகப்படுத்திய பெருங்கற்படைப் பண்பாடு என்பதே விராத்யர்களுடைய பண்பாடுதான் என்பது அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்து.7 கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட ‘சாதிநூல்', விஸ்வகர்ம சமூகத்தவரை ‘விராத்யர்' பிரிவிலேயே சேர்க்கிறது.8 

விஸ்வகர்ம சமூகத்தவர் பலர், சமண பெளத்த சமயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அச்சமயங்களை ஆதரித்தனர். கருங்கல்லை மரணச் சடங்குகளோடு மட்டுமே வைதிக சமயம் தொடர்புபடுத்திற்று. பெருங்கற்படைப் பண்பாட்டின் அரச குருக்கள் மரபினரான விஸ்வகர்ம சமூகத்தவர், சமண பெளத்தப் பள்ளிகளை உருவாக்கவும், அப்பள்ளிகளுள் கற்படுக்கைகள் அமைக்கவும், கற்படுக்கைகள் அமைக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு எழுத்தின் மூலம் அறிவிக்கவும் செய்தனர். எழுத்து என்ற சொல் தொடக்கத்தில் ஓவியத்தையே குறித்தது. ஓவிய எழுத்துகளிலிருந்தே ஓரொலிக்கு ஓர் எழுத்து என்ற அகர ஆதி எழுத்துகள் உருவாயின. எனவே, ஓவியச் செந்நூல் உருவாக்கிய விஸ்வகர்ம சமூகத்தவரே எழுத்துகளை வடிவமைத்திருக்க வேண்டும். ‘கண்ணுள் வினைஞர்' எனச் சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடும் சொல்லாட்சியையும் எழுத்தினைக் குறிப்பதற்கு வடமொழியில் வழங்குகிற ‘அக்ஷரம்' (அக்ஷம் = கண்) என்ற சொல்லையும் ஒப்பிட்டால் இவ்வுண்மை புலப்படும். ‘அக்ஷசாலி' என்ற தொடரின் திரிபான ‘அக்க சாலி' என்பதே கன்னட மொழியில் பொற்கொல்லர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும். 

அரசர்களின் மனையை - அரண்மனையை வடிவமைக்கும் ஸ்தபதியை ‘நூலறி புலவர்' என நெடுநல்வாடை (வரி 76) குறிப்பிடுகிறது. சரியாகச் சொல்வதானால் அவர்கள் நூல் அறிபுலவர்கள் மட்டுமல்லர், நூல் உருவாக்கிய புலவர்கள். இத்தகைய விஸ்வகர்ம சமூகத்தவரின் பங்களிப்பு, சங்க காலச் சமூகத்தின் வாழ்வியலில் முதன்மையான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாகச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களுக்கே, பாண்டிய அரசகுலம் உருவான காலப்பகுதியிலும் எழுத்தறிவு சார்ந்த நிர்வாக நடைமுறைகள் உருவான காலப்பகுதியிலும் விஸ்வ கர்ம சமூகத்தவர் தாம் குலகுருக்களாக இருந்திருக்க வேண்டும். அத்தகைய மக்கட் பிரிவினர் தாம் ஆதிச்சநல்லூரில் உலோக நாகரிகத்தை அறிமுகப்படுத்தினர் என்ற வரலாற்று உண்மையைப் பாண்டிய மன்னர்களின் முத்துபடு துறைமுகமாக இருந்த கொற்கை மூதூரின் வரலாற்றுடன் இணைத்து ஆராய்ந்தால்தான் தமிழக வரலாற்றின் தொடக்கப்பகுதி துலக்கமுறும். அத்தகைய ஆய்வில் தொல்லியல் அறிஞர்களும், தமிழறிஞர்களும் இணைந்து ஈடுபடவேண்டும் என்பதே நமது விண்ணப்பம். 

(ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் பற்றிய ஒரு வேடிக்கையான செய்தி: 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு ரயில் பாதை போடப்பட்டபோது, ஆழ்வார் திருநகரியிலிருந்த சடகோபாச்சாரியார் வைணவ மடத்துக்குரிய துண்டு நிலமொன்றின் ஊடாக ரயில் பாதை போடநேர்ந்தது. அம்மடத்தின் அதிபர், நிலத்தை ரயில்வே துறையிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார். பிரிட்டிஷ் அரசு, அந்நிலத்துக்கு வருட வாடகையாக நான்கணா கொடுப்பதாகத் தீர்மானித்தது. வைணவ மடாதிபதி அதனை ஏற்றுக்கொண்டார். நான்கணா ஆண்டு வாடகை, நானறிந்தவரை 2000ஆம் ஆண்டு வரை கொடுக்கப்பட்டு வந்தது. தற்போதும் தென்னக ரயில்வே சார்பில் 25 பைசா கொடுக்கப்பட்டு வருகிறதா எனத் தெரியவில்லை.) 

அடிக்குறிப்புகள்: 

1. “திருவழுதி வளநாட்டுத் திருவெள்ளூரில் சேனாவரையன் தத்தன் அந்தரி” - கோ மாறஞ்சடையனின் சுசீந்திரம் கல்வெட்டு (Travancore Archaeological Series Vol. III, no. 27.) 
2. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கொற்கை அகழ்வைப்பகக் காப்பாட்சியராக நான் பணிபுரிந்தபோது 6. 10. 1995 அன்று கள ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்தது. 
3. South Indian Inscriptions, Vol. V, no.736, quoted in “Boundary walls: Caste and women in a Tamil community”, Dr. Kamala Ganesh, South Asia Books, 1993. 
4. 7 .03. 1999 அன்று கள ஆய்வில் கண்டறிந்த கல்வெட்டுகள். 
5. அகநானூறு 
6. தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், ‘‘நிறை மொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப'' என்ற நூற்பாவுக்கான நச்சினார்க்கினியர் உரை. 
7. ”Arguments for the Aryan origin of South Indian Megaliths”, Asko Parpola, Published by the State Dept. of Archaeology, Tamilnadu, 1970. 
8. கமலை ஞானப்பிரகாசரின் ‘சாதிநூல்', பதிப்பாசிரியர்கள்: சந்திரசேகர நாட்டார், சண்முக கிராமணி, மயிலை, 1870. (உ.வே.சா. நூலகத்தில் அச்சுப்பிரதி உள்ளது.) 

(நன்றி: தமிழினி, ஏப்ரல் 2009.) 


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Pieces of history

A must visit for history students and teachers, says SOMA BASU

 

 

 

 


2005111901160301.jpg 
FASCINATING FINDS At the Adichanallur excavation site Photos: A.SHAIKMOHIDEEN

 

As you drive on the Thoothukudi-Tirunelveli Road, the stretches of barren land and the brown landscape are hardly welcoming. In fact, you are likely to miss out on the importance of the area unless you spot the Tamil Nadu Archaeology Department's sign board. For, hidden on this stretch of land, 24 km from Tirunelveli, is a glorious past. Adichanallur is a must-visit for students and teachers of history. Located on the southern bank of the Tamirabarani, the place's significance stems from the fact that it was an ancient habitation. The State Archaeology Department commenced excavation of the area last year.

Adichanallur is known to have a history of excavations, the earliest was carried out in 1876, followed by two more in 1896 and 1904. It was after a gap of 100 years that the State Department resumed excavation to unearth an extraordinarily large burial site spread over 114 acres. The majority of the earthenware excavated from the site is now housed in the Government Museum, Chennai. But if you walk carefully along the six trenches dug by the department, you can still pick up pieces of mud or burnt clay utensils, said to be akin to those found in Harappan sites.

 

 


2005111901160302.jpg

 

Adichanallur is not the usual RLT - forests, streams and pretty countryside. A battery of bulldozers lined up along the elevated area by the river bund greet the visitor. From the main road, you need to walk a bit interior to the site where the urns and utensils were found — evidence that a civilisation dating back over 3,000 years had existed. The staff of the Archaeology Department and the locals were eager to share the details of the archaeological treasure here. The weather was fairly pleasant and we sat on a huge rock in the middle of a brown mound of earth surrounded by half-a-dozen 10 by 10 metre square pits. The children running about the site offered us tiny pieces of earthenware. An old man recounted with an air of authority how a 2,800-year-old human skeleton had been found in one of the urns that had been excavated. It is reported that 15 such skeletons had been unearthed at this Iron Age habitation. In fact, the excavations at Adichanallur had thrown up interesting facts about the advanced engineering skills of the people of this ancient habitation.

The site revealed a three-tier burial system. Urns made of burnt clay were inserted by cutting circular pits in the rocky hillock. The discovery of several pits indicated the farsightedness of the people in creating space for future burials. The big urns were mainly used for interring bodies of old people. Two urns with beautiful decorations were unearthed intact. These are known as twin pots, where the mouth of one urn is covered by inverting the other over it. Several such pre-historic urns with inscriptions in rudimentary Tamil Brahmi script were found. In the upper layers of the site was found pottery belonging to 2 B.C. to 3 A.D. In one of the trenches, a series of motifs resembling pre-historic cave paintings were found. Other remarkable finds include a three-pronged fork (or iron trident) and several iron implements such as knives, spearheads and axes. Red and black ware, bowls, urns made of clay, pot sherds with graffiti, copper bangles and ear rings and terracotta lids with tiered knobs are some of the artefacts that take you back in time.

It is however ideal to make Adichanallur a brief stop on a trip that includes more places. But even a short visit to the "earliest historical site of Tamil Nadu" will ensure that you return with fascinating facts.

 

http://www.thehindu.com/mp/2005/11/19/stories/2005111901160300.htm



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 

Posted by : தமிழ் வேங்கை

 


aathijanallur1.jpg
பழைய கொற்கை என்பது கடலுக்கு அருகாமையில் இருக்கிறது.

கடல் அங்கிருந்து அய்ந்து மைல் இருக்கிறது. இன்று தமிழகத்தினுடைய அடையாளமாக சொல்லப்படுகிற இந்த ஊர்களெல்லாம் முன்பு எங்கு இருந்தனஎந்த ஊரை பழைய கொற்கையாகபழைய வஞ்சியாகபழைய முசிறியாகநாம் கருத முடியும் என்றால்நாம் நம்முடைய
அடையாளங்களாக, தேடிமீளாய்வு செய்து,இன்னும் சொல்லப்போனால்இன்று இருப்பதை வைத்து இருப்பதைக் கொண்டு அங்கு இருப்பதை நாம் அடையாளம் காணமுடியாது. கொற்கையைப் பார்த்துவிட்டுகொற்கையிலிருந்து திரும்பி வரும்போதுதான் ஆதிச்சநல்லூர் ஊர் இருக்கிறது. ஆதிச்சநல்லூர் தமிழகத்தினுடைய மிகத் தொன்மையான ஒரு புதைமேடு, 114 ஏக்கர் இருக்கக்கூடிய ஒரு பெரிய நிலப்பரப்பு. அவ்வளவும் இடுகாடுதான். முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன.

ஓர் ஊரில் இவ்வளவு பெரிய இடுகாடு இருக்கிறதென்றால் இதை ஒட்டி,மிகப்பெரிய மக்கள் வசித்திருக்கணுமில்லையாஒரு நகரம் இருந்திருக்கணுமில்லையாஇன்று சிந்துஹரப்பாவை ஆய்வு செய்யும்போதுஎன்ன சொல்றாங்கஹரப்பாமொஹஞ்சதாரோ என்ற நகரம்இவ்வளவு செழிப்பாக இருந்திருந்தால் இங்கு ஓர் இனம் வாழ்ந்திருக்கணும்அந்த இனம் பண்பாட்டில்மேலோங்கியிருக்கணும்,கட்டடத்திலும் சரி எத்துறைகளிலும் சரி உயர்ந்து விளங்கியிருந்தால்,இவ்வளவு பெரியதைக் கொண்டு வந்திருக்க முடியும். அப்ப இவ்வளவு பெரிய நகரம் ஆதிச்சநல்லூருக்குப் பக்கத்தில் என்ன இருந்ததுஎந்த நகரம் இருந்ததுஎந்த நகரத்தினுடைய இடுகாடு இதுபக்கத்தில் இருந்த,இன்றைக்கும் இருக்கிறநகரம் கொற்கை என்றால் ஒரு காலத்தில் கொற்கை பெரிய நகரமாகபெரிய விரிவோடு இருந்ததாக இருந்தால் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஆதிச்சநல்லூர் போன்ற ஒன்று பக்கத்தில் இருக்க முடியும்.

இந்த ஆதிச்சநல்லூர் ஊரைப் பார்க்கும்போதுஆதிச்சநல்லூரைப் பற்றி கல்வெட்டு இருக்கிறது. கல்வெட்டில் ஆதிச்சநல்லூரைப்பற்றிச் சொல்லும்போது குறிப்பு வருகிறது. வெள்ளூர் ஆதிச்சநல்லூர் எனக் குறிப்பிடுகின்றனர். வெள்ளூர் என்று குறிப்பிடும் சொல் சங்ககால இலக்கியத்திலும் வரக்கூடிய சொல். இந்த வெள்ளூர் ஆதிச்சநல்லூர் என்கிற கிராமத்தை ஏன் வெள்ளூர்னு குறிப்பிடுறாங்கன்னாவெள்ளூர் என்ற இன்றைய பஞ்சாயத்திற்குட்பட்டதாக இந்த ஆதிச்சநல்லூர் இருக்கிறது. ஆனால் வெள்ளூர் என்ற சொல் பழந்தமிழ்ச் சொல். சங்க இலக்கியத்தில் வரக்கூடியதாக இருக்கிறது. கொங்கராயக்குறிச்சி பழமையான ஆதிச்சநல்லூரின் எச்சங்கள் இருக்கின்றதுகிடைக்கக்கூடும்அதே ஊரில் அவர்கள் சொன்னார்கள்:-இங்கே ஓடிக் கொண்டிருந்த தாமிரபரணி ஆறுதான் திசைமாறி இன்றைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அப்படி ஓடிக் கொண்டிருக்கும் நதியானது பாண்டிய மன்னர்கள் காலத்தில் ஓடத் தொடங்கியது. பொன்னையாப்பிள்ளை என்பவர் இந்த ஆற்றினுடைய கரையை மாற்றி திசை திருப்பி ஆற்றினுடைய போக்கை மாற்றினார் என்பதால் கோட்டை கட்டிக்கச் சொல்லி உரிமை கொடுத்தார்கள். அப்படி கோட்டை கட்டிக்கச் சொல்லி அவருக்குக் கொடுக்கப்பட்ட உரிமையின் காரணமாக சிறீவைகுண்டம் பக்கம் கோட்டை கட்டி,பொன்னையாப்பிள்ளையும்அவருடைய குடும்பத்தினரும் வசித்தார்கள். அந்த கோட்டை கட்டி வசித்த பிள்ளைகளின் பெயர்தான் கோட்டைப் பிள்ளைகள். கோட்டைப்பிள்ளைமார் கோட்டைக்குள்ளேயே பிறந்து கோட்டைக்குள்ளேயே வளர்ந்து பெண்கள் இறந்தால்கூட வெளியே வரமுடியாது. இந்த கோட்டைப்பிள்ளைகள் எப்படி உண்டானார்கள் என்று பார்த்தால் அவர் சொல்கிறார்: பாண்டிய மன்னர்கள் காலத்தில் இந்த தாமிரபரணி ஆற்றைத் திசை திருப்பி மாற்றம் செய்த பொன்னையாப் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்டதுதான் இந்த உரிமைன்னு சொல்கிறார். இதனுடைய காரணமாக பக்கத்தில் பொன்னங்குறிச்சி ஊர் இருக்கிறது. நமக்கு என்ன தேவை இருக்குன்னாதமிழர்கள் தங்களுடைய ஊர்ப் பெயரையெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கு. இந்த பொன்னங்குறிச்சி ஊருக்குள் இருக்கக்கூடிய பொன்னன் யாருஅந்தப் பொன்னனுக்குஇந்த ஊரினுடைய பெயர் எப்படி வந்ததுஇது ஆதிச்சநல்லூருக்குப் பொருந்துதான்னு பார்த்தாஆதிச்சநல்லூர்ல இன்னொரு குறிப்பும் சொல்றாங்க. ஆதிச்சநல்லூர் ஒரு காலத்தில்ஒரு சமணத் திருவுருவத்துடன் இருந்திருக்கிறது. இந்தப் புதைமேடை ஒட்டியே இருந்ததாகவும்இந்தப் புதைமேடையை ஒட்டி இருந்தசமண தீர்த்தங்கரரை பின்னர் வந்த யாரோ எடுத்துச் சென்று விட்டனர் என்று சொல்கின்றனர். எனக்கே அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவும் சொல்றாங்க. நான் நாகப்பட்டினத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகஒரு சிலையைப் பார்ப்பதற்காக போதிமங்கலம் என்ற ஊருக்குப் போனேன். முதலில் இந்த ஊரில் போய் கேட்டோம். இங்கே இளவரசர் சிலை இருக்கு.




__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 போய் பாருங்கன்னாங்க. இளவரசர் சிலையை நாங்கள் போய் பார்த்தால்,அது புத்தருடைய சிலை. அவங்க சொல்றாங்கஇது வானத்திலிருந்து பறந்துவந்து ஓர் இளவரசன் எங்க ஊரில் விட்டுட்டான். இந்த இளவரசனை நாங்க பாதுகாத்து வச்சிருக்கோம் என்றார்கள். நாங்க சொன்னோம்இது புத்தருடைய சிலை. உங்க ஊர்ல புத்த மடாலயமும் அல்லது ஏதாவது ஒரு வழிபாட்டுத்தலமும் இருந்திருக்கும் என்று சொன்னோம். பாதுகாத்து வச்சுருங்க என்றோம். நாங்க இன்னும் பாதுகாத்து வச்சிருப்போம்னு சொன்னார்கள். ஒரு 5, 6 வருடங்களுக்கு முன்பாக திரும்பப் போனேன். நான் திரும்பிப்போகும்போது அந்த ஊரில் வழிபாட்டுத் தலத்தைத் தவிர, 6 அடி புத்தர் சிலையைக் காணோம்.


கேட்டபோது அந்த ஊர்க்காரர்கள் சொல்றாங்க. பறந்து தானே வந்தாரு,பறந்து போயிட்டாரு என்று. அய்யா! உங்களுடைய பகுத்தறிவு கொண்டு நீங்கள் யோசிக்க வேண்டாமாபெரிய சிலை எப்படிப் பறந்து வரும்! பறந்து வந்ததுபறந்து போயிடுச்சுய்யா! ஏன்னாநாங்க சொல்றோம்லஇதுதான் வானத்திலிருந்து வந்த இளவரசர்னுஅவர் பறந்து போயிட்டார். ஆகஇப்படி நம்ம கண்ணு முன்னாடியே பவுத்த மிச்சங்கள் எல்லாமேஅழிஞ்சி போயிட்டு இருக்கிறதைப் பார்க்கிறேன். இங்கேயும் இதே மாதிரி பவுத்தம்போல்மிச்சம் இருந்துட்டு இருக்கு ஆதிச்சநல்லூர்ல. அது காணாமல் போயிருச்சுங்கறாங்கஇந்த 2004ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் விரிவான ஆய்வைசத்தியமூர்த்தி அய்யா அகழ்வாராய்வுத் துறையில் போய் ஆய்வு மேற்கொண்டார்கள். மேற்கொண்டு நிறைய முதுமக்கள் தாழிகளை எடுத்துகிடைத்தபாசிமணிகளைக் கொண்டு ஆய்வு செய்தார்கள். இன்றைக்கு வரைக்கும் நமக்கு இருக்கும் கேள்வி என்னன்னா,ஏன் இந்த ஆய்வைஆய்வு முடிவுகளை வெளியிட மறுக்கிறார்கள்.

பொதுவாக ஓர் ஆய்வுவெளியாகி ஓர் ஆண்டுகளிலேயேஇல்லை ஒன்றரை ஆண்டுகளுக்குள் ஆய்வின் முடிவுகள் புல்லட்டின் என்று சொல்லக்கூடிய வெளியீடாக வெளியாகும். தமிழில் வெளியாகாவிட்டாலும்நாங்க மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ஆங்கிலத்தில்தான் வெளியிடலாம்னு, 2004ஆம் ஆண்டிலிருந்து இவ்வளவு ஆண்டுகாலமாகவா இந்த அறிக்கையை வெளியிட மாட்டேங்கிறாங்க என்றால் இந்த ஆய்வறிக்கையின் பின்னால் ஓர் அரசியல் இருக்கிறது. நண்பர்களேஇது வெளியானால் சிந்துசமவெளிஹரப்பா,மொகஞ்சதாரோவைவிட பழமையானதுஒருவேளைஆதிச்சநல்லூர் தமிழனுடைய தொன்மையான நாகரிகத்திற்கான சான்றாகும். அதை வெளியிடாமலே வைத்திருக்கிறார்கள். இன்னொன்று இந்த நிலப்பரப்பில்114 ஏக்கரில் ஆய்வு செய்யப்பட்டது. பார்த்தீங்கன்னாஒரு 10 அடி, 100அடிக்குள்ளதான் ஆய்வு செய்திருக்கிறார்கள்ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணம் சிந்துசமவெளியை ஆய்வு செய்வதற்குக் கொடுக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள்சிந்து,ஹரப்பாவையும் சரிஇதற்கப்புறம் போஸ்ட் ஹரப்பான்னு சொல்லக்கூடிய லோத்தல் மாதிரிகுஜராத்தைச் சார்ந்த இடங்களும் சரிஆய்வு செய்றாங்க. தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான நாகரிகம் இருக்கிறது. இந்த இடம் சிந்து சமவெளியைவிட புராதனமானது. இரண்டு உதாரணங்களை தொ.பரமசிவம் சொல்கிறார்.

ஒன்றுஇரும்பை உருக்குகிற எஃகு தொழில்நுட்பம்சிந்துசமவெளியில் இருந்திருக்கு. அப்படி இரும்பை உருக்குகிறபோதுஎன்ன பதத்தில் உருக்க வேண்டும்எவ்வளவு உஷ்ணம் வேணும்உருக்குகிறபோது இரும்பை,உருக்குகிற இரும்பைஎப்படி ஒரு கருவியாக செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு தொழில்நுட்பமாக இருந்திருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை சிந்துசமவெளியினுடைய எங்கேயிருந்தும் இரும்பைக் கண்டுபிடித்தாலும்,ஒரே தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் சிந்துசமவெளிக்கு வெளியில் எங்கே இருக்கிறது என நான் தேடிப் பார்க்கிறேன். சிந்துசமவெளிக்கு வெளியே இருக்கக்கூடிய கங்கைப் பகுதியில் இல்லைஇந்தப் பக்கம் வந்தால்மத்திய இந்தியாவில் இல்லை,வட இந்தியாவில் இல்லைதென்னிந்தியாவிலும் வேறு மாகாணங்களிலும் இல்லை. சிந்துசமவெளியைப் போலவேஅதே இரும்பை உருக்குகிற தொழில்நுட்பத்தைஅதேபோலஸிணீவீஷீ எனச் சொல்லக்கூடியகலப்பு முறை தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் மட்டும்தான் இருக்கிறது எனச் சொல்றாரு. அப்ப என்ன இருக்கிறதென்றால்சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்ட அதே அளவுமுறைகள் ஆதிச்சநல்லூரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றால்தமிழன் இங்கிருந்து சிந்து சமவெளிக்குச் சென்றிருக்கிறானா அல்லது சிந்துசமவெளி தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்ததாஎன்ன நடந்ததுஇப்போ அந்த செங்கற்களையெல்லாம் அளவிடுகிறார்கள். சுட்ட செங்கற்களைசிந்து சமவெளியில் கிடைத்த அதனுடைய அளவை எடுத்துபருமனும்நீளமும் ஒரே அளவாக இருக்கிறது எனச் சொல்றாங்க. எங்கே கல்லை எடுத்தாலும் சிந்துசமவெளிஒரே மாதிரியானசுடு செங்கல் உருவாக்கப்பட்டிருக்கு. அதே செங்கல் அதே அளவுகளில்ஆதிச்சநல்லூர்ல கிடைக்கிறதுஅப்போ ஆதிச்சநல்லூர் என்பது சிந்துசமவெளி நாகரிகத்திற்கு இணையான,இன்னும் சொல்லப்போனால் அதைவிட மூத்த ஒரு நாகரிகம். அந்த நாகரிகத்தைஅந்த நாகரிகத்தினுடைய முடிவுகளை நாம் பார்க்கிறோம். நான் ஏன் தெரிஞ்சுக்கலைஇன்றைக்கு நாம் திரும்பத்திரும்ப என்ன சொல்றோம்நாம நம்ம பண்பாட்டு வேர்களை இழந்துட்டோம். நம்ம உடையை மாத்திட்டோம்.




__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

எல்லாவற்றையும்விட அடிப்படையையே கைவிட்டு விட்டோமே?அடிப்படையாக தமிழர்கள்தமிழர்களுடைய உரிமைக்காக நிலைபெறவும்,அடையாளப்படுத்தவும் வேண்டிய விசயத்தையே கைவிட்டு விட்டோம்,இதெல்லாம் மேலான விஷயங்கள். அடிப்படையான விஷயங்களைக் கைக்கொள்ளவும்மீட்டெடுக்கவும்இன்னும் சொல்லப்போனால்இன்று இருக்கக்கூடிய ஊடகத்தளத்திற்குக் கொண்டு வரும்போதுதான் தெரியும். நாம் யாருநம்முடைய பூர்வீகம் எதுநம்முடைய அடையாளங்கள் எது?பண்பாட்டுத்தளத்தில் எப்படி இருக்குவரலாற்றுத் தளத்தில் எப்படி இருக்குகொஞ்சம் கொஞ்சமாக பகுத்து ஆராய்ந்து தெரிந்துகொள்ள விரும்புவான். என்னுடைய மொத்தத் தேடுதலின் ஒரு பகுதியாக,இன்னொன்றையும் தேடினேன். நூலாக எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்தை எடுத்துக்கொண்டுபூம்புகாரிலிருந்து தொடங்கி வஞ்சி வரைக்கும் இருக்கக்கூடிய கண்ணகிகடந்து சென்ற பாதையை, 7ஆண்டுகளும் மீளாய்வு செய்திருக்கிறேன். பூம்புகாரிலிருந்து எப்படியெல்லாம் கண்ணகி போயிருப்பாள்எந்த வழியாகச் சென்றாள்?நிஜமாபொய்யா என்ன நடந்ததுசங்க காலத்தில் நிலங்கள்சங்க காலத்தின் நிழற்படங்கள் எல்லாம் இருக்கிறதாஇல்லைன்னா சிலப்பதிகாரத்தில் வரக்கூடிய இடப்பெயர்கள்ஊர்ப்பெயர்கள்அதில் குறிப்பிட்டதெல்லாம் நிஜந்தானாஓர் உண்மையை அதிலிருந்து சொல்ல விரும்புகிறேன். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய வழிகளில் ஒரு 70, 80 சதவீத வழிகளில்அப்படியே இன்றைய தமிழகத்தில் இருக்கிறது. வழிகளெல்லாம் மாறவேயில்லை. பேர் மாறியிருக்கு. பஸ் போக்குவரத்து மாறியிருக்கு. ஆனால் அதே போக்குவரத்து சாலைகள்,போக்குவரத்து சாலையில் இருந்த ஊர்கள். அங்கே தென்பட்ட மலைகள். அந்த மலையைக் கடந்து வரக்கூடிய பயம். அங்கிருந்த தெய்வம் உட்பட எல்லாம் இருக்கிறது. அப்ப தமிழ் நிலம் மூடப்பட்டிருக்கிறது. தமிழ் வாழ்க்கை ஒரு புகையால் சூழப்பட்டிருக்கிறது. தமிழ் தன்னுடைய அடையாளங்களை எல்லாம் இழந்து வேறு அடையாளங்களைத் தன்னுடைய அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் புகையை விளக்கினால்இந்தத் தூசிகளை அப்புறப்படுத்தினால்இந்த அழுக்குகளை நீக்கி தண்ணீரைச் சுத்தம் செய்தால்அடியில் மாறாத-இன்னும் சொல்லப்போனால்நம்முடைய தொன்மை வடிவங்கள் அப்படியே இருக்கிறது. இதைக் கண்டுபிடித்து மீளாய்வு செய்துஎடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய பொறுப்புஆய்வாளர்களுடைய பொறுப்பல்லநம் அனைவருடைய பொறுப்பு. நாம் அனைவருமேநம்முடைய பண்பாட்டு வேர்களை ஆராயவேண்டிய கடமையில் இருக்கிறோம். உங்கள் வீதிக்கு ஏன் பெயர் வந்ததுஉங்கள் அப்பாவுக்கு ஏன் பெயர் வந்ததுஉங்களுடைய சமயசடங்குகளை எப்படி அறிமுகப்படுத்தியதுஏன் இந்த சடங்குகள் _செய்யும்போது ஒரு குறிப்பிட்ட சடங்குகளைச் செய்யும்போதுநாம் புனிதமாகக் கருதுகிறோம். ஒரு குறிப்பிட்ட சடங்காகச் செய்யும்போது,பலியாக கருதுகிறோம். இதற்குப் பின்னாடிஅன்றாடத் தமிழனின் வாழ்க்கையை ஒருவன் ஆராயாமல் அவனால் தமிழ் அடையாளங்களைக் கைக்கொள்ள முடியாது. இன்றைக்கு நடந்தது. நாம் கைவிட்டோம்,நம்முடைய பிள்ளைகள் கைவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையில் இது எல்லாமே தகவல்களாகப் போய்விடும்.
சொல்லப்போனால் நான் பார்த்த ஒடிசா ஆதிவாசிகளைப்போல,அவர்களுக்குத் தமிழ் என்பது புராதன அடையாளமாக இருக்கிறதே தவிர,இன்றைக்கு ஒன்றுமே இல்லை. கேட்டேன். அவன் விறகைச் சுமந்து கொண்டு வந்தான். தோளில் அந்த விறகைச் சுமந்து கொண்டு வரக்கூடிய முறையினுடைய பெயர் என்ன என்றுஅவன் சொல்கிறான். காவடி என்று,காவடி என்ற சொல் அவனிடம் இருக்கிறது. ஆனால் காவடி என்றால் தமிழ்ச் சொல் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது ஒரு தமிழ்ச்சொல். தமிழ்ச் சொல்லைத்தான் பயன்படுத்துகிறோம் என்பதுதான் தெரியாது. இந்த நிலைக்குத் தமிழர்களே போய்விடுவோம்! இது எங்கோ இருக்கக்கூடிய பழங்குடியினர் அல்ல. எதிர்காலத் தலைமுறைக்கு இப்படி ஓர் அச்சுறுத்தலை நாமே கொடுக்கிறோம். ஓர் எழுத்தாளனாக என்னுடைய பெரிய வருத்தமே என்னன்னா நம்முடைய வீட்டிலிருந்து தமிழ் வெளியேறிக் கொண்டிருக்கிறது என்றால் அது நம்முடைய அழிவினுடைய முதல் புள்ளி. ஒரு சமூகத்திலிருந்து வெளியேறும்போதாவதுசமூகக் காரணிகளைபின்னாடி இருக்கக்கூடிய பதவி ஆசையைபொருள் தேடும் ஆசையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு குடும்பம் ஒரு மொழியை அதுவும் தமிழ் மக்கள்இத்தனை ஆண்டுகாலமாக தமிழைக் கற்றுக் கொண்டுதேர்ந்த குடும்பம் ஏன் கைவிடுகிறதுஒரு காரணமும் இல்லாமல் கைவிடுகிறோம்சீனர்கள் எங்கே போனாலும் சீன நகரத்தை உருவாக்கிவிடுகிறார்கள். சீனப் பண்பாட்டை உருவாக்கி விடுகிறார்கள்.

சீன மொழியை உருவாக்கி விடுகிறார்கள். நான் முந்தா நாள் மலேசியாவில் போய்கருத்தைச் சொல்லும்போதுஓர் இளைஞர் ஆவேசமாக என்னிடம் சொன்னார். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தமிழர்கள் இருக்கிறோம். தமிழனுக்கென்று ஒரு நாடு கிடையாது. ஒருவேளை நாடு கிடைத்தால் நாம் அந்த உரிமையைப் பெறுவோம் என்று சொல்கிறார். என்ன சொல்கிறீர் நண்பரே விரிவாகச் சொல்லுங்கள் என்றேன். அப்போ அவர் சொல்கிறார்,நாங்கள் இன்னொரு தேசத்தில் வசிக்கிறோம்எங்கள் நாட்டில் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால்எங்கள் நாட்டோடுதான் ஒப்பந்தம் போட வேண்டும். நாங்கள் தமிழகத்தோடு ஒப்பந்தம் போட்டால் அரசு சொல்கிறது மாநிலத்தோடு ஏன் ஒப்பந்தம் போட வேண்டும். ஒரு நாட்டோடுதானே ஒப்பந்தம் போட வேண்டும்என்று.

இவ்வளவு கோடி பேர் தமிழர்கள் வசிக்கிறோம். தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லையே என்று ஆதங்கப்பட்டார். இந்த ஆதங்கம்நண்பர்களேஇதுவும் ஓர் அரசியல்தான். இந்த அரசியலையும் நாம் மேலோட்டமாகப் பார்த்து யாரோ ஒருவர் கூட்டத்தில் ஆதங்கப்படுறாரேன்னு போயிட முடியாது. ஆழமாக சமகால உண்மைகளைசமகால வலியை நாம் புரிந்து கொள்ளத் தொடங்கினால்நாம் அடுத்தகட்டத்தை நோக்கி நகருவோம்.

எழுத்தாளனான என்னுடைய தேடுதல் என்பது தமிழ் வாழ்வினுடைய,தமிழின் பெருமையினுடைய இன்னும் சொல்லப்போனால் தமிழ் விட்டுப்போன விஷயங்களை மீளாய்வு செய்வதும்கண்டுபிடிப்பதும் அதைப் பகிர்ந்து கொள்வதும்தான்.

aathijanallur.jpg



எஸ்.ராமகிருஷ்ணன்

தொகுப்பு : க.செல்வக்குமார்அ.பிரபாகரன்.
 
http://tamilveangai.blogspot.in/2013/05/blog-post_8969.html


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

பல மொழிகளுக்குத் தமிழே மூல வரிவடிவம்

 

பல மொழிகளுக்கு தமிழே மூல வரிவடிவம்

முருகேசு பாக்கியநாதன். B.A


நோக்கம்
தமிழ் மொழியின் சொல் வளத்தினாலும்; அதன் வரிவடிவத்தினாலும் தோற்றம் பெற்றதுமான பல இந்திய மொழிகளுக்கும், அண்டை நாடான இலங்கையின் பெரும்பான்மை இன மொழியான சிங்கள மொழியினுக்கும்;;, தமிழ் வரிவடிவமே அம்மொழிகளின் தோற்றத்திற்கு ஆதாரமாகவும் மூல வரிவடிவமாகவும் இருந்தது என்பதனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அதனை ஆராயும்போது தமிழின் தொன்மை, அதன் வரலாறு அதன் மொழி வரிவடிவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அத்தோடு அம்மொழி வரிவடிவம் ஏனைய மொழிகளின் வரிவடிவத்தில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தியது என்பதனை நோக்குவதே இக்கட்டுரையாகும்;;.


தமிழின் வரலாறு இற்றைக்குப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு லெமூரியா தொடங்கி சிந்துவெளி நாகரீக காலத்திலிருந்து முழு இந்தியாவிலும் மற்றும் முழு இலங்கையிலும்; செழித்தோங்கிய மொழியாகவே இருந்துள்ளது. லெமூரியா இன்று எம் முன் இல்லாமல்; மறைந்து போயிருந்தாலும் தமிழ்மொழி பற்றிய உண்மையான வரலாறு 6000 ஆண்டுகளிலிருந்து சி;ந்துவெளியிருந்து எமக்குக் கிடைக்கப்பெறுகின்றது. இந்த வகையான தொன்மையும், வரலாறும், ஆதாரமும் கொண்டதான மொழிகள் உலகில் மிகச் சிலவே.


தமிழும் திராவிடமும்
தமிழும் திராவிடமும் என்ற இரு பதங்கள் ஒரு கருத்தையே பிரதிபலிக்கின்றன. தமிழ் என்பதன் உச்சரிப்பே காலப்போக்கில்; திரிபடைந்து திராவிட என்று மாறியதாக அறிஞர் பெருமக்கள் கொள்ளுவர்;.
திராவிடம் என்ற சொற்பதத்தினை றெபேட் கால்டுவெல் அவர்களே 1856ல் திராவிட மொழிகளுக்கான ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலில் முதன் முதலில் பயன்படுததினார். திராவிட மொழிக் குடும்ப மொழிகளாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, கொடகு, துத, தோத, கோந்தி, கூய், ஓரான், ராஜ்மஹால் ஆகிய 12 மொழிகளைத் தெரியப்படுத்தினார். இக்குடும்பத்திற்கு தாய் மொழியாக தமிழேயென அறிய முற்பட்டுள்ளார்.
இதன்பின்பு நடைபெற்ற ஆராச்சிகளின்போது பின்வரும் மொழிகளும் அதனுள் அடக்கப் பெற்றன. அவையாவன பிரகூய், கொலாமி, நாய்க்கி, குவி, கோண்டா, கட்பா, குரூக், ஒல்லாரி, கோயா, மோல்டா, பார்ஜி, கதபா, பெங்கோ, இருளா, கொடகு, குறவா, தோடா, படகா, ஆகியனவாகும். இதில் காட்டப்பட்ட பிரகூய் மொழியானது இந்தியாவிற்கு வடக்கேயுள்ள பலுகிஸ்தானினும் ஆப்கானிஸ்தனிலும் பாகிஸ்தானின் ஒரு சிறுபகுதியில் பேசப்படும் மொழியாகும். அத்தோடு பாகிஸ்தானிய பல்கலைக் கழகத்தில் பயிலுவதற்கான விருப்புப் பாடமாகவுள்ளது. இம்மொழிகள்; தாய்த் திராவிட மொழியிலிருந்து பேசப்பட்ட பிராந்திய மற்றும் இனக்குழுமங்களின் மொழிகளாக அறியப்பட்டுள்ளன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு ஆகிய மொழிகளின் இலக்கண ஓப்புமைகள், சொல் ஒப்புமைகள் பற்றி ஏராளமான தரவுகளை கால்டுவெல் அவர்கள் தந்துள்ளார்.
கால்டுவல் கோடிட்டுக் காட்டியதை மேலும் ஆராந்து மாந்த இன முதன் மொழி ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும் எனவும், மிகு தொன்மை வாய்ந்த தமிழே அனைத்து மொழிக் குடும்பங்களுக்கும் (இந்தோ-ஆரிய மொழிகள் உட்பட) மூலமான மொழியாகக் கருதப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை மாறல் கார்த்திகேய முதலியார் 1913இலும், கா.சுப்பிரமணியபிள்ளை 1920களிலும், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் 1930, 1940 களிலும், ஞா. தேவநேய பாவாணர் 1940- 1980 களிலும் மிக விரிவாக ஆராந்து நிறுவியுள்ளனர்;. ஆதாரம் 1.


லெமூறியாவில் திராவிடன்
இன்றை ஸ்ரீ லங்கா அடங்கலாக பாண்டியத் தமிழ் பேரரசே கோலோச்சி தமிழர்களே ஆதிக்குடிகளாக இருந்துள்ளனர். இதற்கு முந்திய காலப்பகுதியிலேயே நாகர்கள் என்றழைக்கப்பட்ட மனிதஇனம் வாழ்ந்துள்ளதாக லெமூறியா பற்றி ஆராந்த அறிஞர்கள்; ஆராச்சிக் கட்டுரைகளின் மூலம் தெரிவித்துள்ளார்கள். இவர்களைப் பாம்பு மனிதர்கள் (Snake People) என அழைத்துள்ளார்கள். இவர்கள் பற்றி அவர்கள் கூறும்போது பாம்பு மனிதர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் மிக மிக ஆதிகாலத்தில் எறத்தாள 10000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களாவர். அவர்களே லெமூறியாவின் தொன்மையான குடிகள். பாம்பு மனிதர்களே உலகில் பதிவுகள் பற்றிய அறிதலை விட்டுச் சென்றவராவர். பாம்பு என்பது ஒரு குறியீடே இது உலகியலில் அதி விவேகத்தினைக் குறிக்கும் குறியீடென அறியப்பட்டுள்ளது. ஆகவே பாம்பு மனிதன் என்று அவர்கள் குறிப்பிடுவது நாகர்களையே ஆகும். அவர்களே தமிழனின் பரம்பரையினர். அன்றே அவன் எழுத்தை அறிந்து வைத்து அதனைத் தமது பதிவுகளுக்குப் பயன் படுத்தியிருக்கிறான் என்ற ஒரு செய்தி இங்கிருந்து கிடைக்கின்றது.
லெமூறியாவின் எஞ்சிய பகுதிகளான தென்இந்தியா, இலங்கை, வடமேற்கு அவுஸ்ரேலியா ஆகிய இடங்களில் திராவிடர்களின் பரம்பரையினரே இன்றும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக பல்லாயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் வடமேற்கு அவுஸ்ரேலியாவில் வாழும் ஆதிக்குடிகள் பற்றி ஆய்ந்தபோது பெறப்பட்ட உண்மைகள் அதிசயிக்க வைத்தன.

அவுஸ்ரேலியாவின் வடமேற்குப் பகுதியில் தற்போதும் வாழும் கரிறியா என்னும் ஆதிக்குடிகள் ஆதித் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியும் என எண்ணத் தோன்றுகின்றது. இதற்கு அவர்களது உருவத் தோற்றப்பாடு; ஆதாரமாயுள்ளது. அத்தோடு அவர்களது மொழியிலும் திராவிட மொழியின் சாயலும் இலக்கண, ஒலியன் ஒற்றுமைகள் உள்ளதாக கு.அரசேந்திரன் குறிப்பிடுகின்றார். ஆதாரம்;: தமிழ்க்கப்பல் பக்3. குமரிக் கண்ட நிலத்தொடர்பு இருந்த காலத்திலேயே ஆதித் திராவிடர் குமரிக் கண்டத்திலிருந்து புலம் பெயர்ந்து உணவு தேடி வேட்டையாடும் நோக்கோடு வேறொறு பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்கள்.


மேலும் அங்குள்ள சில ஆதிக்குடிகளின் சில இனக்குழுமங்களின் பெயர்கள் வியப்புத்தருவதாகவும் மேலும் ஆராயப்பட வேண்டியதனையும் வலியுறுத்துகின்றது. அவையாவான குவினி இது இலங்கையின் இயக்கர் இனப்பெண்ணான குவேனியின் பெயரை ஒத்திருக்கின்றது. இவரையே இந்தியாவின் கலிங்கத்திலிருந்து துரத்தப்பட்ட கலிங்கத்து இளவரசனான விஜயன்; மணம் முடித்தார் என மகாவம்சம் கூறுகின்றது. மேலும் அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளின் சில குழுக்களின் பெயர்களான நகர, நன, நந்தா, நங்கா, நகரியா, நகுரி, நகண்டி, நகம்பா என்ற பெயர்களை நோக்கும போது நாகர் என்ற பெயருடன் தொடர்பட்டது போன்றும் ஏதொவொரு அறிந்த பெயரான தமிழ்ப் பெயர்கள் போலவும் இருக்கின்றது. – ஆதாரம்: விக்கிப்பிடியா தேடுதளம். இக்காரணத்தினாலும்;; லெமூறியாவில் தமிழன் வாழ்ந்தான் என்பதற்குரிய ஒரு ஆதாரமாகக் கொள்ள முடியும். குமரிக்கண்டத்தில் வாழ்ந்தவனின் இறுதிக் குடிகளே அதன் எஞ்சிய பகுதிகளான இலங்கையிலும் இந்தியாவிலும் வடமேற்கு அவுஸ்ரேலியாவிலும் 10,000 ஆண்டுகளுக்கு முந்திய ஆதிக்குடிகளாவர்.


அவுஸ்ரேலியாவின் சில ஆதி இனக்குழுமங்களின் மரபணுக்கூறுகள் (டீ.என்.ஏ) ஐ.நா சபையினால் ஆராயப்பட்டுள்ளன. திரவிட இனத்தொடர்பு இருப்பதாக நாம் கருதும் இனங்களின் மரபணுக்கள் பரிசோதிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும். இதற்கு தமிழ்நாட்டு அரசு நிதியொதுக்கி இச்செயற்பாட்டினை ஆரம்பித்து வைக்கவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.





மேற்கு அவுஸ்ரேலியாவில் வாழும் திராவிட ஆதிக்குடிகள்


திராவிடனின் மூதாதையர்கள் - நாகர்களும் இயக்கர்களும்
இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்ந்த ஆதிமக்களை நாகர்கள் மற்றும்; இயக்கர்கள் என மகாவம்சம் என்ற பௌத்த நூல் கூறுகின்றது. இந்த இரண்டு இனங்களும் திராவிடரின் மூதாதையராவேயிருக்க முடியும். நாகர் என்ற இனம்; வாழ்ந்த வாழ்க்கை நாகரிகம் என்றும், அவர்கள் வாழ்ந்த இடம் நகரம் என்றும் அவர்கள் பேசிய மொழி நகரி என்றும் உருப்பெற்றது. இதனை ஒத்த தமிழ் பெயர்களே நாகராசா, நாககன்னி, நாகதுவீபம் அல்லது நாகதீபம், நாகவிகாரை, நாகர்கோவில், நாகபட்டினம், நாகர்லாந்து என்ற பெயர்களாகும். நாகர் இனத்திலிருந்தே இப்பெயர்கள் தோன்றியருக்க வேண்டும். ஆரியர் இந்தியாவை ஆக்கிரமித்தபோது நாகர்களிடமிருந்தே எழுத்து முறையினைக் கற்றிருக்க வேண்டும். இதனாலேயே அங்கு வாழ்ந்த மூதாதையராகிய நாகர்களின் மொழியாகிய நகரியை தங்கள் மொழிப் பெயராக தேவ என்னும் இறைவன் பெயர் சார்ந்த அடைமொழியினைச் சேர்த்து தேவநகரி என பெயர் சூட்டிக்கொண்டனர்.


சிந்துவெளித் தமிழ்
தமிழ் இனமானது மிகவும் தொன்மையான இனமாக ஆசியாவின் நாகரீகத்திற்கே தோற்றுவாயாக அமைந்த சிந்துவெளியின் மொஹஞ்சதாரோ ஹறப்பா நாகரீத்தின் பிதாமகராகத் திகழ்ந்த திராவிடரின் மூலவேராக இருந்தது. இந்த இனம்; கிறிஸ்துவக்கு முன்பு 6000 ஆண்டுகளுக்கு முன்பு செழுமையுடன் வாழ்ந்த ஒரு இனமாகும். தமிழ் மொழியின்; பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப மொழி வரிவடிவாகிய தமிழ்பிராமியின் வழிவந்ததே தமிழ் என்பதாகும். மேற்கொண்டு தமிழ்பிராமி என்பதனை விடுத்து தமிழி என அழைப்போம்.


இன்று உள்ள தமிழ்மொழித் தோற்ற வரிவடிவம் அப்போது இல்லததிருந்தாலும் அப்போது அறியப்பட்ட திராவிடர் பாவித்த மொழியின் பரிணாம வளர்ச்சியே தற்போது பாவனையில் உள்ள தமிழ் மொழியாகும்;. அவர்கள் பாவித்த மொழி திராவிட தமிழ் மொழியென அறிய பலவித ஆராச்சிகள் உதவியுள்ளன. சிந்துவெளியில் நடைபெற்ற அகழ்வாராச்சியின் போது பெறப்பட்ட சில உலோக முத்திரைகளில் பதிக்கப் பெற்ற பெயர்கள் இன்றும் தமிழில் வழங்கப்படும் தமிழ் பெயராக இருப்பது குறிப்பிடக் கூடியது. உதாரணமாக கூத்தன், தக்கன், அண்ணி, அரட்டன், அப்பன், ஐயன், சாத்தன,; ஐயாவு, கக்கன், கந்தன் - கந்தப்பன், குப்பன் ஆகிய பெயர்கள் சிந்துவெளி நாகரீக புதைபொருள் ஆராச்சியாளர்களின் முறையே 232, 3762, 2190, 157, 2626, 6074, 4195, 7513, 4323, 6120, 2719, 2025 என்;ற இலக்கங்கள் கொண்ட உலோக முத்திரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பம்பாய் வரலாற்று ஆராச்சி நிலையத்தில் சிந்துவெளி ஆய்வினை முன்னெடுத்துச் சென்று ஆய்வு செய்த ( Fr Heras ) ஹெராஸ் பாதிரியார் அவர்களே முதன் முதலில் இது தமிழர்களின் நாகரீகமெனவும் அவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் உலகுககுக் கூறியவர். இவர் சீன நாகரீகத்தினையே சிந்து வெளியின் கிளை நாகரீகம் என்று வெளிப்படுத்தினார். பல சிந்து வெளி எழுத்துக்கள் சீன எழுத்துகளுக்கு வழிகாட்டியாகும் எனவும். தமிழுக்கும் சீனத்திற்கும் உள்ள தொடர்புகள் பற்றி “ சீனம் என்ற செந்தமிழ்” என்ற கட்டுரையில் விரிவுபடக் கூறியுள்ளார்.

பிரகிருதம்
பிரகிருதம் என்பது வடஇந்தியாவிலே ஆதிகாலத்தில் பயன்பாட்டில் இருந்த மொழியாகும். பிரகிருதத்திலேயே அசோகன் பிராமி எழுதப்பட்டிருந்தது. அத்துடன் தேவநகரி பிரகிருதத்திலேயே எழுதப்பட்டது. பிரகிருத மொழிப் பிறப்பினையும் அதன் வழக்கத்தினையும் தேவநேயப்பாவணர் மறுத்துரைத்து பிரகிருதம் என்பது வடக்கில் பயன்படுத்திய வடதிராவிடம் என்றே கொள்ளப்பட வேண்டும் என தனது ஆராச்சியின் போது குறிப்பிடுகின்றார். தேவநேயப்பாவணர் அவர்கள் கால்டுவெல் வழியிலே தொடர்ந்து ஆராச்சிகளைச் செய்து இந்திய மொழிகளில் தமிழே சகல மொழிகளுக்கும் தாய் மொழியென 1900-81 காலப்பகுதியில் நிறுவினார்.


மேலும் சிந்துவெளி முத்திரைகளைவிட அடுத்ததாகக் கண்டுபிடிக்கப்பெற்ற அசோகன் கல்வெட்டு பிரகிருதத்திலேயே எழுதப்பட்டுள்ளது. பிரகிருதம் என்பது வடதிராவிடம் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று அடித்துக் கூறுகிறார் பாவாணர். ஆதாரம்: தமிழ்க்கப்பல், கு.அரசேந்திரன் பக் 46



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

தென்இந்திய குகைக் கல்வெட்டுக்கள்

 


தமிழ் எழுத்தின் வரிவடிவம் சிந்துவெளியின் சித்திர வரி வடிவத்தின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்; பின்பு தொடர்ந்து வந்த வரிவடிவங்களின் பரிணாம வளர்ச்சியே இன்று காணப்படும் வரிவடிவமாகும். இதனை மறுப்பவர்களும் உண்டு. சிந்துவெளி நாகரீக காலத்தே பதிக்கப்பெற்ற சித்திரவடிவங்களும் இதனைத் தொடர்ந்து கண்டெடுக்கப் பெற்ற கடலூர், சானூர், கொடுமணல் மற்றும் ஆதிச்சநல்லூர் கல்வெட்டுக்கள் தமிழ் வரிவடிவம் எப்படியாக வளர்ச்சி பெற்றன என்பதற்குச் சான்றாக அமைகின்றன.

 


இதனைவிட திருநாதன் குன்றத்து கல்வெட்டின் காலம் கி.மு 2ம் நூற்றாண்டு என வரையறை செய்யப்பட்டுள்ளது. இங்கு காணப்பட்ட எழுத்துக்கள் உண்மையான தமிழ் வரிவடிவத்தினைப் பிரதிபலித்தது . பிரம்மகிரி அகழ்வாராச்சிகளானது பெருங்கற்காலத்து மக்கள் கி.மு 5ம் நூற்றாண்டளவில் தென் நாட்டில் வாழ்ந்தாகவும் அவர்கள் திராவிடரகள் எனவும்;, அப்பண்பாட்டின் பண்புகளை சங்க இலக்கியத்தில் காணக்கூடியதாக உள்ளதாக குருராஜராவ் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

 


தெ.பொ.மீனாட்ச்சிசுந்தரனாரின் கருத்துப்படி தமிழகத்தில் பெறப்பட்ட கல்வெட்டுக்களின் காலம் கி.மு3ம் நூற்றாண்டு என்பதாகும். இவை தென் பிராமியில் எழுதப்பட்டிருப்பதாகவும் இதே வகையான தென் பிராமி எழுத்து வகையான எழுத்துக்களே இலங்கையில் கண்டுபிடிக்கப் பெற்ற குகைக் கல்வெட்டுக்களாகும்.

 


இந்திய வரலாற்று நூலை எழுதிய சத்தியநாதையர் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு எழுதும் பழக்கம் கி.மு 2ம் நூற்றாண்டளவில் தொடக்கம் பெற்றாகவே குறிப்பிடுவர். History of India Vol. 1 – P-209. தமிழகத்திலே சமஸ்கிருதத்தில் கல்வெட்டெழுதப் பெற்றது பல்லவ அரசன் வி;ட்டுணுவர்த்தனன் காலமான கி.பி 6ம் நூற்றாண்டிலிருந்து என்கிறார் ஐராவதம் மகாதேவன். – Early History Epigraphy from the times to the Sixth Century AD P-114

தமிழ் வரிவடிவத்தின் வளர்ச்சி
தமிழ் அரிச்சுவடி பற்றி கி.மு 3ம் நூற்றாண்டின் எழுதப்பெற்ற தொல்காப்பியம் பின் வருமாறு கூறுகின்றது.
எழுத் தெனப் படுப
அகர முதல
னகர இறுவாய் முப்பஃதென்ப
சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே
என அ முதல் ன வரையான தமிழ் உயிரெழுத்து பன்னிரண்டுடன் மெய்யெழுத்துமாக முப்பது என இங்கு காட்டுகின்றார். அத்தோடு குற்றியலிகரம், குற்றியலுகரம் அத்துடன் முப்புள்ளியுடைய ஆய்த எழுத்தெனவும் குறிப்பிடுகின்றார்.

தொல்காப்பியர் ஒரு கருத்தினைச் சொல்ல விளையும்போது அதனை தனக்கு முந்திய புலவர்கள் சொல்வார்கள் என்றும் அதனை என்மனார் புலவர் என்று பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். அப்படியாயின் கி.மு 3ம் நூற்றாண்டிற்கு முன்பு பல காலத்திற்கு முன்பே தமிழில் தொல்காப்பியத்திற்கு முந்திய ஒரு இலக்கணம் இருந்திருக்க வேண்டும் அல்லது இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு செழித்து வளர்ந்த மொழிக்கோ அன்றி செழித்த இலக்கியங்கள் உள்ள மொழிக்கோ மட்டுமே இலக்கணத்தினைப் படைக்க முடியும். ஆகவே கி.மு 500 ஆணடிற்கு முன்பும்; தமிழ் மிகச் சொழிப்புற்று இருந்த ஒரு மொழியாகவே இருநதுள்ளது என கொள்ளமுடியும். அதுவே தமிழ்ப் பிராமி எனப்படும் தமிழி என்பதாகும்.

சித்திர முத்திரைகளின் வரிவடிவம்
சித்திர முத்திரைகளினால் எழுத்துக்கள் எழுதும்போது சில தனியாகவும் சில ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட முத்திரைகள் சேர்ந்தோ ஒரு எழுத்தை அமைப்பதாக கொள்ள முடியும். அதேபோலவே தமிழ் வரிவடிவம் தனிக் கோடுகளாலும், தனி வட்டங்களாலும், பல கோடுகளாலும், பல வட்டங்களாலும் எழுதப்படும் எழுத்துக்களாகும் அந்தக் காரணத்தின் அடிப்படையிலேயே சிந்துவெளி முத்திரைகள் தனியாகவோ அன்றி ஒன்றாகவோ அன்றி ஒன்றிற்கு மேற்பட்டனவாகவோ சேர்ந்து வரிவடிவங்களை அமைக்கிறதென்று கொள்ள முடியும்.

கி.மு.1500 இன் இறுதியிலிருந்த சித்திரவெழுத்து கி.மு 500 ஆண்டுகளில் தமிழியாக வளர்ச்சி பெற்று தொடர்ந்து கி.பி 200 லிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று கிபி400 ஆண்டளவில் வட்டெழுத்தாக மாற்றம் பெற்று மேலும் வளர்ச்சியடைந்த நிலையிலேயே இன்றைய வரிவடிவத்தின் பரிணாம வளர்ச்சித் தோற்றம் பெற்றது.

சிந்துவெளி சித்திர எழுத்திலிருந்து தற்காலம் வரையான தமிழ் அகரத்தின் பரிணாம வளர்ச்சி
சிந்துவெளி சிந்திர வரிவடிவிலிருந்து தமிழ் அகரத்தின் பரிணாம வளர்ச்சியும் அசோகன் பிராமிக்கு அது எவ்வாறாக வித்திட்டது என்பதனை கீழே நோக்கவும். மனித உருவத்திலிருந்தே சிந்துவெளித் தமிழன் தனது அகரத்தினைத் தோற்றுவித்தான். அதன் அவையவங்களை வைத்தே அகரத்தின் பரிணாமவளர்ச்சி வளர்ந்துள்ளது.




1. கிமு 6000 – கிமு1500 வரையான சிந்துவெளி அகரத்தின் சித்திர வரிவடிவம்
2. சித்திர வரிவடிவத்தின் தொடர்ச்சியான அகர பரிணாம வளர்ச்சி
3. கிமு.5ம் நூற்றாண்டிற்கு முந்திய அகரத்தின் பரிணாமம்
4. கி.மு.5ம் நூற்றாண்டின் தமிழி
5. அகரத்தின் அடுத்ததான பரிணாமம்;.
6. தற்போதைய அகரத்தினை அண்டிவிட்ட அ
7. தற்போதைய நவீன அகரத்திற்கு முந்திய அகர தோற்றம்
8. கி.பி 4ஆம் நூற்றாண்டிகத் தோன்றம் பெற்ற வட்டெழுத்தான நவீன அகரம்
அசோகன் பிராமி
பிரகிருதத்தில் எழுதப்பெற்ற அசோகன் பிராமியினை அடியொற்றியே தேவநகரியும் அதனை அடியொற்றிப் பிறந்த வடஇந்திய மொழிகளும் பிறந்ததாகக் பல அறிஞர்கள் கொள்ளுகின்றார்கள். இம்மொழிகளை இந்தோ-ஆரிய மொழிகள் என்ற பெயரினால் அழைக்கத் தலைப்பட்டனர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தேறு குடிகளாவர். அவர்கள் மத்தியசியாவிலிருந்தும் குறிபாக றஷ்யா, பாரசீகம், கிழக்கு ஐரோப்பா ஆகிய பிரதேசங்களிலிருந்து குடியேறியோராவர். இதன் காரணமாக பல மொழிகளினைப் பேசும் ஒரு கூட்டமாகவே வந்து ஆக்கிரமிப்புச் செய்திருந்தார்கள். ஆகவே இப்பல மொழி பேசுவோர் இந்தியாவில் ஏற்கனவே வாழ்ந்த சுதேசிகளுடன் கலந்தபோது அந்த சுதேசிகள் பாவித்த மொழியினையொட்டிய ஒரு மொழி பாவனையில் இருப்பின் அவர்களுடன் ஒன்றிணைவதற்கு ஒரு பாலமாக அமையும் என்று கருதியதனால் ஒரு பொது மொழி தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம். இதனாலேயே அப்போது வடநாட்டில் வாழ்ந்த திராவிடர்கள் பாவித்த பிரகிருதத்தினைத் தங்கள் மொழித் தோற்றத்திற்குப் பாவித்திருக்கலாம். இக்காலத்தே அசோகன் பிராமியானது சிந்துவின் சித்திரவெழுத்திலிருந்து தோன்றிய தமிழியில் இருந்து தனக்கு வேண்டிய வரிவடிவங்களை அமைத்துள்ளது என்றே கொள்ள வேண்டும். அதற்கான காரணங்களைப் பின்வருவனவற்றினைக் கொண்டு அறிய முடியும்
1. தமிழி வரிவடிவம் தோன்றுவதற்கு சிந்துவெளியின் சித்திரவெழுத்துக்கள் ஆதாரமாகவிருந்தது. இது முழுக்க முழுக்க திராவிட வரிவடிவமென ஐயம்திரிபற ஏற்கப்பட்டுவிட்டது.
2. அசோகன் பிராமியிலிருந்து ஏனைய மொழிகளின் வரிவடிவம் தோன்றியதாயின் அதற்கான மூல வரிவடிவம் எங்கிருந்து கிடைக்கப் பெற்றது. சிந்துவெளி நாகரிக முத்திரைகளை விட வேறெந்த முத்திரைகளோ அன்றி சித்திர வரிவடிவங்ளோ கிடைக்காதபோது அசோகன் பிராமியின் மூல வரிவடிவ ஆதாரத்தினை நிறுவுவதற்று எந்தச்சான்றுகளும் இல்லை.
3. சிந்துவின் சித்திரவெழுத்திலிருந்து தமிழியும், தமிழியிலிருந்து அசோகன் பிராமியும் தோன்றியதனை மேலே நோக்கினோம்.
4. ஆரியர்கள் இந்திய சுதேசிகளுடன் கலந்தபோது அங்கு திராவிடர்களே ஏற்கனவே அதிஉச்ச நாகரிகத்தில் வாழ்ந்துள்ளார்கள். ஒரு இடத்தினை ஆக்கிரமிப்போர் அங்குள்ள செல்வம், கலை கலாசாரம் போன்றவற்றினை அபகரிக்கவே முயன்றிருப்பர். இதனைச் செய்ய அவர்களுக்கு அங்கு பாவனையில் இருந்த சுதேச மொழியில் அறிவு தேவைப்பட்டது. ஆகவேதான் ஏற்கவே பாவனையில் இருந்த திராவிடர்கள் பாவித்த பிரகிருதம் அவர்களுக்குக் கைகொடுத்தது. தேவநேயப் பாவாணர் அவர்களது கருத்துப் போல் வடதிரவிடர்கள் பாவித்த வடதிராவிடமாகிய பிரகிருதமே அசோகன் பிராமியின் பிறப்பிற்கும் தேவநகரியின் பிறப்பிற்கும் ஆதாரமாயின.
5. மேலேயுள்ள ஆதாரங்களை நோக்கின் சகல வடமொழிகளின் பிறப்பிற்கு திராவிடமே ஆதாரமாகவிருந்தது என்ற உண்மை இங்கு வெளியே தெரிகின்றது.


அசோகன் பிராமியின் அகரம்

மேலே காணப்படுவதே அசோகன் பிராமியின் அகரம். இதன் தோற்றம் கிமு.3ஆம் நூற்றாண்டாகும். தமிழியின் காலம் கிமு.5ஆம் நூற்றாண்டாகும். ஆகவே தமிழ் பிராமியிலிருந்தே தோற்றத்தின் அடிப்படையிலும் காலத்தின் அடிப்படையிலும் வரிவடிவத்தின் அடிப்படையிலும் தமிழியே அசேகன் பிராமிக்கு முந்தியது மட்டுமல்லாது அது தோன்றுவதற்கும் ஆதாரமாய் அமைந்து அதன் பிரதிமையே அசோகன் பிராமியென உறுதியாகக் கூறமுடியும். ஆகவே அதன் வழிவந்த வட மொழிகள் அத்தனையும் தமிழ் பிராமி வழிவந்ததெனறே கொள்ளவேண்டும். தமிழிக்கு அதன் வரிவடிவத்தினை அமைக்க அதன்பின்புலமாக சிந்துவெளியின் சித்திர எழுத்துக்கள் இருந்துள்ளன. சிந்துவெளி வரிவடிவங்களும் அக்காலத்தே பாவிக்கப்பட்ட மொழி திராவிடம் என்பதும் ஐயம்திரிபற சகல ஆராச்சியாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அசோன் பிராமி எங்கிருந்து தனது மூலவரிவடிவத்தினைப் பெற்றுக் கொண்டது என்பதற்கான விளக்கம் என்ன? சிந்துவெளி நாகரிகத்தினை விட வேறு எங்கிருந்தும் வரிவடிவங்களினை அசோகன்பிராமி பெற்றுக் கொள்ளுவதற்கு வேறு ஏதும் வரிவடிவங்கள் இந்திய துணைக்கண்டத்தில் இருந்ததா என்று நோக்கின் அதற்குரிய விடை அப்படியேதும் இருந்ததில்லையென்பதாகும். ஆகவே இதனையொற்றிப் பிறந்த பிரகிருதமும் அதிலிலிருந்து பிறந்த ஆரிய மொழிகளினதும்; மற்றும் வடஇந்திய மொழிகளின் வரிவடிவத்திற்கும் திராவிடமே மொழிவரிவடித்தினைக் கொடுத்தததென்றே கூறமுடியும்.

அகரவரிசைகளின் ஒப்பீடு
கீழே காணப்படும் அட்டமவணையில் தமிழ் அகர வரிசையில் உள்ள அ வும் ஆ என்ற வரிவடிவத்தினைப் போன்ற சாயலுடனேயே சமஸ்கிருத அ, ஆ ஆகிய இரண்டு எழுத்துக்களும் அமைந்தன. அ விற்கு மேலே சுழியிட்டு பின்பு அதற்குக் கீழே ஒரு வண்டியிட்டு பிற்பகுதியில் ஒரு கோட்டினை இட்டு முடிப்பதே தமிழ் அகரமாகும். இதே எழுத்து முறையினைப் பின்பற்றியே கீழே குறிப்பிட்ட கால வரிசைப்படி தோன்றிய பல இந்திய மொழிகளின் எழுத்து வரிவடிவங்கள் தோற்றம் பெற்றன., திராவிட மொழிகளிலோ அன்றி; ஆரிய மொழிகளிலோ அந்ததந்த மொழிகளின் வரிவடிவங்கள் தமிழ் வரிவடிவத்தின் சாயலை அடியொற்றியே அமைக்கப் பெற்றன.. தெலுங்கும் கன்னடமும் தமிழ் அ வரிவடிவத்தை தலை கீழாக போட்டு எழுதியிருப்பதனை அவதானிக்க முடியும்;. அதிலும் ஒரு வட்டம், ஒரு வண்டி மற்றும் ஒரு கோட்டுடனேயே அகரம் அமைக்கப்பட்டுள்ளது. கீழே காணப்படும் பட்டியலின் வரிவடிவங்களை நோக்கின் உயிர் எழுத்துக்களின்; தொடர்பு பற்றி ஒரு முடிவிற்கு வர முடியும்.
கீழே காணப்படும் அட்டவணையில் மொழிகளின் அகரவரிசை வரிவடிவங்களும் அவை தோன்றிய காலவரிசையின் அடிப்படையிலும் எழுத்து வரிவடிவங்களின் ஒப்பீட்டடிப்படையிலும் தரப்பட்டுள்ளன. இவ்வட்டவணையிலிருந்து சிந்து சித்தரவெழுத்திலிருந்து தமிழியும் தமிழியிலிருந்து தற்கால தமிழ் அகரவரிசையும் தமிழியைப் பின்பற்றி ஏனைய எழுத்துக்களின் வரிவடிவங்களும் எவ்வாறாகத் தோன்றியதென்பதை ஐயம்தெளிவுற அறிந்துகொள்ள முடிகின்றது. அகரவரிசையின் ஏனைய எழுத்துகளாக இ, ஈ, உ, ஊ, எ, ஏ, உ, ஊ, ஐ, ஒ ஆகிய எழுத்துக்ளை பட்டியலில் காட்டப்பட்ட ஏனைய எழுத்துக்களுடன் நோக்கின் தமிழ் எழுத்துக்களுக்கும் மற்ற மொழிகளின் அதே எழுத்துக்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை அறிந்து கொள்ள முடியும்.
சிந்துவின் சித்திரவரிவடிவம் - தமிழி – அசோகன் பிராமி – ஏனைய மொழிவடிவங்களின் ஒப்பீடு
 
 
 

தமிழின் தொன்மையும் அதன் நீண்ட வரலாறும், சிந்துவெளியில் கிடைத்த முத்திரைகளும்; தென்னாட்டில் கிடைக்கப்பெற்ற குகைக் கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்ட மட்பாணடங்களில் காணப்படும்; வரிவடிவங்களும், தொல்காப்பியத்தின் தொன்மையான வரலாறும் ஏனைய மொழிவரிவடிவங்களில் எவ்வாறான தாக்கத்தினையும்; செல்வாக்கினையும் செலுத்தியது என்பதனை அறிய முடியும்.
• மேலேயுள்ள அட்டவனையில் காணப்படும் தமிழின் எழுத்துக்கள் கி.பி 2ம் நூற்றாண்டிலிருந்து படிப்படியாக வட்டெழுத்தாக மாற்றம் பெறுகின்றன.
• வடமொழி தமிழியின்; வடிவத்தினின்றும் தனது சொந்த வரிவடிவத்திலிருந்து மாற்றம் பெற்று வட்டெழுத்தாக கிரந்தம் என்ற பெயருடன் கிபி500 ஆண்டளவில் தென்நாடடிற்கு அறிமுகமாயிற்று. இக்காலத்தேதான் பல்லவப் பேரரசர்கள் ஆரியச் செலவாக்கினைத் தென்நாட்டில் வேரூன்றச் செய்யும் நோக்கோடு தமிழோடு இணைந்த ஒரு வரிவடிவத்தினை கிரந்தமாகத் தோற்றுவித்து தென்நாட்டில் புகுத்தினார்கள். முதன் முதலில் கிரந்தமே தமிழ் வரிவடிவத்தினையொற்றிப் பிறந்த மொழியாகும். தேவநகரி எழுத்துகள் நேர் கோட்டு வரிகளைக் கொண்ட எழுத்து வடிவத்தால் அமைந்தது. ஆனால் அதன் அ மற்றும் ஆவன்னாவிலும் தமிழ் அ, ஆ வன்னாவின் வட்டெழுத்துச் சாயல் காணப்படுகின்றது அதனை ஆரியர்களால் மறைக்க முடியவில்லை..
• சிந்துவெளியில் வாழ்ந்த திரவிடர்களே இந்தியாவின் ஆதிக் குடிகளாகளாவும் சிறப்புடன் கட்டிடக்கலை, சிற்பக்கலை, உலோக பயன்பாட்டுக்கலை, நகர நிர்மாணம், மண்பாண்ட பாவனையில் தங்கள் மொழியினைப் பதிவு செய்யும் கலை போன்றவற்றை அங்கு வாழ்ந்தவர்களே இந்திய நாட்டிற்கு அறிமுகம் செய்தார்கள்;. அவர்கள் எழுதி வைத்த சித்திர எழுத்து வடிவங்களே இந்தியாவின் முதல் எழுத்து வடிவங்களாகும்;. இதற்கு முன்பு இந்தியாவில் எந்தவிதமான சித்திரவரிவடிவங்களோ அல்லது எழுத்து வடிவங்களோ இருந்ததேயில்லை. அதற்கான ஆதாரங்கள் எதுவுமேயில்லை. இந்த சித்திர வடிவங்களே முதலில் இந்திய துணைக்கண்ட மனிதன் பேசும் மொழியின் கருத்தினை எழுத்தில் வடிக்க படைக்கப்பெற்ற வரிவடிவமாகும். இதிலிருந்து பிறந்த தமிழிலில் இருந்தே ஏனைய மொழிகளும் அடியொற்றி பின்பற்றியிருக்க முடியுமேயல்லாமல் வேறு எக்காரணிகளும்; அந்தந்த மொழிகளின் வரிவடிவம் தோன்றக் காரணமாவிருக்க முடியுhது.
• தமிழில் முதல் தோன்றிய இலக்கண நூல், தொல்காப்பியமாகும். இதன் காலம் கிமு 300 என்று பல அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழில் தொல்காப்பியம் எழுதப்பட முன்னர் ஒரு சில இலக்கிய வடிவங்கள் இருந்திருக்க வேண்டும் என சிந்திக்கும் எவருக்கும் உதிக்கும் ஒரு உண்மையாகும்;. காரணம் அதில் படைக்கப் பெற்ற எழுத்ததிகாரம்;, சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பனவற்றிக்கான இலக்கணவடிவம் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த ஒரு இலக்கிய வடிவத்திற்கோ அன்றி ஒரு திருந்திய மொழிக்கோ எழுதப்பட்டிருக்க வேண்டும் அல்லாது விட்டால் வெறும் வெறுமையிலிருந்து ஒரு மொழியின் இலக்கணத்தைப் படைக்க முடியாது. ஆகவே தமிழ் எழுத்து வரிவடிவம் கி.மு விற்கு முற்பட்ட கி.மு 500 ஆகக் கருதப்பட முடியும்.
• திராவிட மொழிகளான தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்களுக்கோ அன்றி சிங்களத்திற்கோ எந்தவொரு தெலுங்கு பிராமியோ அன்றி கன்னட பிராமியோ அல்லது சிங்கள பிராமியோ இதுவரை ஆந்திராவிலோ அல்லது கன்னடத்திலோ அல்லது இலங்கையிலோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே அதற்கான வரிவடிவம் நேரடியாகத் தமிழில் இருந்தும் அம்மொழிகளின் சில அம்சங்கள் பிரகிருதத்திலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இந்த இரண்டு வரிவடிவங்களுக்கும்; மேலே அட்டவணையிலுள்ள ஏனைய திராவிட மற்றும் ஆரிய மொழிகளெனக் கூறப்படும் மொழிகளுக்கும் வரிவடிவத்தில் வேறுபாடுகள் தெரிந்தாலும் அ எழுத்தையும் ஆ வன்னா எழுத்தையும் தொடர்ந்து ஏனைய எழுத்துக்களையும் நோக்கும் போது சகல மொழிகளின் அ, ஆ எழுத்து இரண்டும் தமிழுக்கேயுரியதான ஒரு வட்டம் ஒரு வண்டி ஒரு கோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளது.
• ஆரிய மொழிகள் என்று கூறப்படுகின்ற ஒரியா, சிங்களம், குஜராத்தி ஆகிய மொழிகளுக்கும் அ, ஆ அகிய இரண்டு எழுத்துக்கள் ; தமிழுக்கென விசேடமாக அமைந்த ஒரு வட்டம் ஒரு வண்டி ஒரு கோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளது. ஏனைய உயிர் மெய் எழுத்துக்கும் தமிழ் வரிவடிவத்தினையொற்றியே எழுதுப்பட்டு இருப்பதனைக் காணமுடியும். இந்த மொழிகள் ஆரிய மாயைக்கு உட்பட்டே ஆரிய மொழிகளாக தங்களை ஆக்கிக் கொண்டன. அதனை தங்கள் மேன்மையென்றும் கருதிக் கொண்டனர். அண்மைய ஆராச்சிகள் ஒரிய மொழியும் திராவிடம் என்ற முடிவிற்கு ஒரு சில அறிஞாகள் வந்துள்ளனர்.
• சேர் கியேசன் என்னும் அறிஞர் கூறும் போது தமிழ் மிகவும் அனாதியானது மிக நேர்த்தியாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு மொழியாகும். தமிழ் ஆரம்ப காலத்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை உள்ளடக்கிய மொழியாகவேயிருந்தது. பின்பு கி.பி 10ம் நூற்றாண்டில் தெலுங்கும், கிபி. 850ஆம் ஆண்டுகளில் கன்னடமும், கி.பி. 1400ல் மலையாளமும் தனித் தனி மொழிகளாயின. ஆதாரம்: Concise History of Ceylon. P40
• கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ஒரு மொழியே இருந்துள்ளது. அதுபற்றி இன்னொரிடத்தில் கிரியேசன் குறிப்பிடும்போது இலங்கையில் தமிழோ அன்றி அதனையொட்டிய ஒரு மொழியோ வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தேயிருந்திருக்க வேண்டும். ஆதாரம் Concise History of Ceylon. P42 பௌத்த சமயம் இலங்கையில் பரவியதனைத் தொடர்ந்தும் விஜயனின் வருகையோடும் அதனைத் தொடர்ந்துமே ஆரியச் செல்வாக்கு இலங்கையில் பரவியது.
முடிவுரை
மேலே கூறப்பட்ட தமிழின் வரலாறும் அதன் தொன்மையும் அதன் மொழிச் செழிப்பும் சிந்துவெளியிலிருந்து வளர்ந்த மொழிவரிவடிவ பரிணாம வளர்ச்சியும் ஆரிய ஆக்கிரமிப்பின் போதுகூட தனது தனித்தன்மையுடன் வளர்ந்து அதன் வரிவடிவத்தனை ஏனைய மொழிகளுக்கும் கொடுத்து அந்தந்த மொழிகளும் வளர வழிசமைத்ததென்றே கூறமுடியம்.
உசாத்துணை நூல்கள்:
1 கு. அரசநாதனின் தமிழ்க்கப்பல் நூலில் என்ற நூலின் முகவுரையில் பி.இராமநாதன்,)
2. விக்கிப்பீடியா தேடுதளம் -
3. கு.அரசேந்திரனின் தமிழ்க்கப்பல்.
4. மொழி வரலாறு தெ.பொ.மீ களஞ்சியம் 1
5. Concise History of Ceylon 19616. என் மொழியின் கதை – ச.வீ.துருவசங்கரி canada
 
http://tamilennam.blogspot.in/2010/07/blog-post_31.html


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

ஆதிச்சநல்லூர் அகழாய்வும் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும்
 
தமிழகத்தில் 100 க்கும் மேலான இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நிலத்தின்,  அதன் மக்களின் தொடக்க கால வரலாற்றையும் பண்பாட்டையும் குறித்த ஒளிவெள்ளத்தை பாய்ச்சி உள்ளது.  இந்த அகழாய்வுத் தளங்கள் பழங்கற்காலத்தில் தொடங்கி அப்படியே இறங்கி தொடக்க இடைக்காலம் வரையான பண்பாட்டு நிரலை வெளிப்படுத்தி உள்ளன.
 
இந்த தளங்கள் மலை அடிவாரம், ஆற்றுக் கரைகள், கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் இடம் கொண்டுள்ளன.  இருந்தபோதிலும், மிகச் சில வரலாற்று - முந்து காலத் தளங்களே அகழாய்வு செய்யப்பட்டு உள்ளன. எஞ்சிய தளங்கள்  இரும்புக் காலம், தொடக்க வரலாற்றுக் காலம் ஆகியவற்றை சார்ந்தவை ஆகும். சிறப்பாக, ஆற்றுப் படுக்கைகள், கடற்கரைகள் என எங்கெல்லாம் தோண்டுகிறோமோ அங்கு நமக்கு இரும்புக் காலப் பண்பாடும் மட்கலமுமே காட்சிப்படுகின்றன. 
 
இத் தளங்களைக் காலக்கணக்கிடுவது (dating) இன்னமும் முடிவாகவில்லை ஏனென்றால் இந்த ஆகழாய்வில் இருந்து எந்த புலப்பாட்டுச் சான்றும் கிட்டவில்லை. இருந்தபோதிலும், ஒரு சில தளங்கள் கரியம் 14 (C 14)  காலக்கணக்கீடு காட்டி உள்ளன. அவை தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்து ஆதிச்சநல்லூர் சான்றளிப்பது போல் 1,600 BCE க்கும் முற்பட்டதாக இல்லை என முடிவு கட்டி உள்ளன.  அகழாய்வு செய்யப்பட்ட இரும்புக் காலத் தளங்களிலேயே ஆதிச்சநல்லூர் ஆகழாய்வுகள் சிறப்பு கவனத்தைப் பெறத் தக்கனவாக உள்ளன. அதுவே தமிழகத்தில் அண்மைக் காலம் வரையில் அகழாய்ந்த தளங்களிலேயே மிகப் பழமையானது. அண்மைக் கால அகழாய்வின் முடிவு, தமிழ் நாட்டில் தமிழ் நாகரிகத்தின் பழமை, வளர்ச்சி ஆகியவற்றின் மீது ஒரு மீவலிய விளைவை பெற்றிருந்தது. 
 
தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் சுற்றுப் பகுதிகள் கற்கால ஊழியில் தொல்பழமையான இடத்தைப் பெற்றிருந்தன. சிறப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகியவற்றின் சுற்றுப் பகுதிகள் நுண்கற்காலத்து மாந்தர் வாழிடங்களின் சான்றெச்சங்களைக் (vestiges) கொண்டுள்ளன. அங்கு நுண்கல் வகை சார்ந்த கற்கருவிகளை உள்ளிணைத்த மணற்குன்றுகள் உள்ளன. அக் கற்கருவிகள் செம்பட்டைக் கல் (Jasper), படிமக்கல் (agate), சூதுபவழம் (Carnellian), படிகக்கல் (crystal) மற்றும் கல்மம் (quartz) ஆகிய குறைமணிக் (Semi precious) கற்களால் ஆனவை. இவ்வகை கற்கருவிகள் இப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. அவை சற்றொப்ப 12,000 முதல் 10,000 B.C.E. காலத்தன எனக் காலக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுவே நம் முந்து - வரலாற்று மூதாதைகள், சிறப்பாக, திராவிடர்கள் பிந்து அரப்பா நாகரிகக் கால பண்பாட்டுடன் ஒப்பிடத்தக்க பண்பாட்டுத் தனிகூறுகளைக் கொண்டிருந்த இடம். அரப்பா நாகரிகப் பண்பாட்டின் வீழ்ச்சி தமிழ் நிலத்தின் தென்கோடியில் அமைந்த ஆதிச்சநல்லூரின் திராவிட நாகரிகப் பண்பாட்டின் எழுச்சியோடு ஒன்றிப்பதாகத் (coincide) தோன்றுகின்றது.  
 
இங்ஙனமாக, ஆதிச்சநல்லூர் தமிழ் நிலத்துத் தொடக்க வரலாற்று வரைபடத்தில் முந்து தலைமை நிலையைப் பெறுகின்றது. அண்மையில் ஆதிச்சநல்லூரில் 2004 - ஆம் ஆண்டு மற்றும் அதைத் தொடர்ந்தும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் செய்திப் பத்திகளில் இடம் கொண்டன, அதோடு அரசின் கவனத்தையும் பொது மக்களின் கவனத்தையும் ஈர்த்தன. தொல்லியல் ஆராய்ச்சிகளைப் பொறுத்தமட்டில் ஆதிச்சநல்லூர் ஒரு தொடரல்லாத தடைநிலை (checkered) வரலாறு உடையது.  
 
இனி, ஆதிச்சநல்லூர்த் தொல்லியல் அகழாய்வு வரலாற்றையும் அவற்றின் வரலாற்று முதன்மையையும் ஆய்வோம். ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து  24 அயிர் மாத்திரி (கிலோ மீட்டர்) தொலைவில் தென்கிழக்கு திசையில் இடம் கொண்டுள்ளது. இவ்வூர் திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் அதற்கும் மேல் இதன் மேற்குப்புறத்தில் அமைந்த தாமிரபரணி ஆற்றுக் கரையில் இடம் கொண்டுள்ளது. இங்கு பேர் எண்ணிக்கையிலான  புதைகலன்கள் (முதுமக்கள் தாழிகள்) கண்டறியப்பட்டன. அங்கு முற்காலத்தே வாழ்ந்த மக்களுடையது எனும் பொருளில் இதனைத் தாழிக்காடு என்கின்றனர்.
 
தொல்லியல் அகழாய்வுகள் இந்தப் புதை தளத்தில் 1876, 1899, 1903, 1904 மற்றும் 1906 ஆகிய ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டு உள்ளன.   பின்னர் 1914 ஆம் ஆண்டில் அயல்நாட்டவர் இங்கு தொல்லியல் அகழாய்வுகளை நிகழ்த்தினர். அண்மைக் காலத்தில், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் (ASI) துறை இத்தளத்தில் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் அகழாய்வுகளை நடத்தியது.
 
1914 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகள் 9,000 க்கு அதிகமான தொல்பொருள்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.  அவற்றுள் தாழியிற் புதைத்தல் தொடர்பான மட்கலன்கள், பொன்னாலான பொருள்கள், செம்பு வடிவங்கள், முருகப் பெருமானின் மூன்று முனை வேல், தாய்த் தெய்வத்தின் மட்கல வடிவங்கள், தொங்கும் விளக்குகள், முதலாயவை அடங்கும். இங்கத்து மட்கலத் தொழிலில் கருப்புநிற மட்கலன், சிவப்புநிற மட்கலன், தென்னிந்திய இரும்புக் கால நாகரிகத்தின் தனிக்கூறான கருப்பு - சிவப்பு நிற மட்கலன் ஆகிய வகைகள் அடங்கும். 
 
அண்மைய (2004 மற்றும் 2005) அகழாய்வுகள் 150 க்கும் மேற்பட்ட புதைத்தல் கலன்களையும், கருப்பு - சிவப்பு நிற மற்றும் கருப்புநிற மட்கலன்களையும், செப்பு வளையல்கள், செம்புக் கோடாரிகள், இரும்பு வேல்கள் இவை தவிர, புதியகற்கால கற்கருவிகள் ஆகியனவற்றையும் மேற்பரப்பிற்கு கொண்டு வந்தன. சிறு அளவு நெல் உமியும், அரிசியும் தவசங்களும் அகழாய்வில் கண்டறியப்பட்டன. இங்கு கிடைத்த பானைஓடுகள் எழிலூட்டும் வேலைப்பாடுகளையும், கீரல்குறிகளையும் இவை தவிர, மூல தமிழ் எழுத்துகளையும் பெற்றிருந்தன. 
 
பேரெண்ணிக்கையில் வெண்கலத்தால் ஆன பொருள்களும்  புலி, எருமை, வெள்ளாடு, மான், சேவல் முதலாயவற்றை ஒத்த வடிவுகளும் முந்தைய அகழாய்வில் கண்டறியப்பட்டன.
 
மேற்சொன்ன பழம்பொருள், செம்பு மற்றும் வெண்கலப் பொருள்கள் தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகத்தைப் பின்தொடர்ந்து  வெண்கல மற்றும் செம்பு ஊழிகள் (ages) நிலைப்பட்டிருந்ததைச் சுட்டுகின்றது. 
 
இத்தளத்தின் கரியம் 14 (C 14) காலக்கணக்கீடு, அகழாய்வாளர் திரு. தியாக. சத்தியமூர்த்தியால் 1570 BCE  என பதிவு செய்யப்பட்டு உள்ளது. இத்தளமே காலத்தால் பழமையானது அதோடு, புதியகற்காலம், நுண்கற்காலம், இரும்புக் காலம், செம்பு - வெண்கலக் காலம் தவிர, இரும்புக் கால நாகரிகங்களின் சான்றெச்சங்களையும் உடையதாக நாம் அறியும் தளமும் இது ஒன்றே ஆகும். அதைமுன்னிட்டு, ஆதிச்சநல்லூர் மக்கள் எல்லா மாழைகளையும் (Metals) பயன்கொண்டனர், அவற்றின் பயன்பாட்டையும் அறிந்து இருந்தனர். இங்கு திரட்டிய மாழைப் (Metal) பொருள்கள், ஆதிச்சநல்லூர் விறுவிறுப்பான உள்நாட்டு வணிக நடுவமாகவும், நகரமாகவும் திகழ்ந்தது என்பதைச் சுட்டுகின்றன.
 
இத்தளத்தில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மட்கலத் தாழிகள், ஆதிச்சநல்லூர் மக்கள் நிரம்பிய நகரமாகவும், நாடறிந்த நகரமாகவும் செழிப்புற்று விளங்கியது என்ற உண்மையைப் புள்ளியிட்டு குறிப்பிடுகின்றது. கருப்பு - சிவப்புநிற மட்கலன்களுடன் கூடிய பழந் தமிழ் எழுத்துப் பொறிப்போடு உள்ள பானைஓடுகள் பிந்து அரப்பா நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒருமைப் பண்பு உடையன என்பதைச் சுட்டுகின்றன. இவற்றில் பிந்து அரப்பா தளங்களில் காணப்படும் கீரல்குறிகளை அதிகம் ஒத்த கீரல்குறிகளைக் கொண்ட பானைஓடுகளும் உள்ளன. 
 
ஆதலால், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் நடு இந்தியாவில் காணப்படுவது போன்றே புதிய கற்காலத்தைப் பின்தொடர்ந்து வெண்கல - செம்புக் காலம் நிலைப்பட்டிருந்ததை வெளிப்படுத்தி உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நாகரிகமும் பிந்து அரப்பா நாகரிகமும் ஒன்றற்கு ஒன்று தொடர்புடையன என்பதை நிறுவி உள்ளன. 
 
இந்திய நாகரிகத்தின் தொடக்கம் குறித்து சூழ்ந்துள்ள புதிர்மறைவுச் செய்தியின் மடிப்பை அவிழ்க்க இத் தளத்தில் மேலும் அகழாய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். இஃது அரப்பா மற்றும் தமிழ் நாகரிகத்தை இணைக்க, அதற்கான கால்வாய்களைத் திறந்துவிட்டுள்ளது.
 
 
இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர்:
பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி,
பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை,
சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு).
 
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர்
சேசாத்திரி
 
பார்வை நூல்: கல்வெட்டு இதழ், ஏப்ரல் 2009. 


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D

 

தமிழ் எழுத்துக்கள் சர்ச்சை[தொகு]

மேலுள்ள படத்தில் தாழியில் உள்ள கீறல்கள் எழுத்துக்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதை "கறிஅரவனாதன்" என்று படித்து நச்சுடைய பாம்பை அனிந்த மாலையாக கொண்ட சிவன் என்று பொருள் தருகிறார் நடன காசிநாதன்.[4]

ஆனால் அந்த தாழிகளை அகழாய்வு செய்த சத்திய மூர்த்தி அதை "கதிஅரவனாதன்" என்று படித்து அதற்கு கதிரவன் மகன் ஆதன் என்று பொருள் தருகிறார். ஆனால் அந்த தாழியில் இருப்பது வெறும் சாம்பல் கீறல்களே என்றும் அவை எழுத்துக்கள் அல்ல என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.[5]

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=4902:2010-03-19-12-18-09&catid=996:10&Itemid=253

 

தொல்லியல் துறையைப்பற்றி ஒரு பழமொழி உண்டு-” வரதட்சணை இல்லாத அழகான மணமகள் “ என்று. அதனால் பெரிதும் படித்தவர்களாலேயே கவனத்தில் கொள்ளப்படாத துறை இது. ஆனால் தொன்மையான கிரேக்க நாகரிகத்தைப் பார்த்துப் பொறாமை கொண்ட ஐரோப்பிய சமூகம் தொல்லியல் ஆய்வுகளில் நாட்டம் கொள்ளத்துவங்கியது.

இந்தியாவில் காலனி ஆட்சியாளர்களே இந்த ஆர்வத்தைப் பதிய வைத்தனர். ஹரப்பா நாகரிகம், அரிக்கமேடு கண்டுபிடிப்பு என இவையெல்லாம் காலனி ஆட்சிக்காலத்தில்தான் நடைபெற்றன.

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தஞ்சையை மையமாகக்கொண்டு “தொல்லியல் ஆய்வுக்கழகம்” என்ற அமைப்பு 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இது அரசு சாராத அமைப்பாகும். இதன் செயல்பாடுகளின் விளைவாக 1905இல் நிறுத்தப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வு 2005இல் மீண்டும் தொடங்கப்பட்டது. சத்தியமூர்த்தி, நம்பிராசன், அறவாழி ஆகிய அறிஞர்கள் இதில் பங்கேற்றனர். வழக்கம்போலவே மைய அரசின் இந்த அகழாய்வுப்பணி அறிக்கை தமிழில் இதுவரை வெளியிடப்படவில்லை. 150 ஏக்கர் பரப்பளவுள்ள ஆதிச்சநல்லூரில் 600 சதுர அடிப் பரப்பில் மட்டுமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் குறுகிய பரப்பிலேயே 165 தாழிகள் இப்போது கண்டெடுக்கப்பட்டன. அவைகள் ஒன்றன் கீழ் ஒன்றாக மூன்று அடுக்குளாகக் காணப்பட்டது. இப்படி இன்னும் எத்தனை ‘கால அடுக்குகள்’ தோண்டப்படா மலேயே இருக்கின்றன என்று தெரியவில்லை. (ஒரு அடுக்கு என்பது ஒரு காலத்தைக் குறிக்கும்). ஆனால் முந்தைய (1905)அகழ்வாய்வாளர்களான டாக்டர் ஜேகோர், அலெக்ஸாண்டர் ரீ ஆகியோருக்குக் கிடைத்த வெண்கலப்பொருட்களில் ஒன்று கூட இந்த ஆய்வில் கிடைக்கவில்லை(செம்பாலான ஒரு குழந்தை வளையலைத் தவிர).

இந்த 2005 அகழாய்வு விவாதப்புயல் ஒன்றையும் துவக்கி வைத்தது. கண்டுபிடிக்கப்பட்ட பானை ஒன்றின் உட்புறமாக பிராமி எழுத்துக்கள் இருந்ததாக முதலில் பத்திரிகைச்செய்தி வந்தது. அதைக்கண்டு தமிழ் ஆர்வலர்கள் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தனர். பானை ஓட்டின் உட்புறமாக எழுத்து இந்தியாவில் இதுவரை எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எலும்பும் சாம்பலும் படிந்த கீறல்களையே இவர்கள் பிராமி எழுத்துக்களாக வாசித்து விட்டனர் என்பதுதான் உண்மை. ஐந்தாண்டுகள் கழித்து ஆர்வக்கோளாறு காரணமாக ஏற்பட்ட இத்தவறினை அரைகுறையாக ஒப்புக்கொண்டனர்.

ஆனால் ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை -கரிம வேதியல் ஆய்வுக்கு உட்படுத்தி-கி. மு. 8 ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு சென்றது இந்த ஆய்வின் சாதனையாகும். (முந்தைய ஆய்வுகள் ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை சங்ககாலத்தில் -கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் -நிறுத்தியிருந்தன).

ஆனால் ஆதிச்சநல்லூர் மக்கள் பேசிய மொழி எது என்ர கேள்விக்கான விடை இன்னும் எஞ்சியே நிற்கிறது. ஆதிச்சநல்லூர் புதைமேட்டின் குடியிருப்புப் பகுதிகளைக் கண்டறிவதற்கான முயற்சியும் முழுமையாக வெற்றி பெறவில்லை. இந்த மேட்டின் உட்புறமாக ஆற்றங்கரை ஓரமாக அமைந்திருக்கும் இரண்டு ஏக்கர் நிலப்பகுதி தொல்லியல் ஆய்வாளர்களால் இன்னமும் தீண்டப்படாத பகுதியாகவே உள்ளது.

ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் வியப்புக்குரிய செய்தி அங்கு வாழ்ந்த மக்கள் உலோகவியலில் பெற்றிருந்த அறிவாகும். இரும்பு, செம்பு மற்றும் கலப்பு உலோகமான வெண்கலம் ஆகியவற்றை அந்த மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அந்த அறிவு குறித்த எந்தக்கூடுதலான தகவலையும் இந்த 2005 ஆய்வு தரவில்லை. மாறாக புதைமேடு ஆக்கப்படுவதற்கு முன் இந்த இடம் தாதுச்சுரங்கமாக இருந்தது
என்கிற ஓர் தகவலை மட்டுமே தந்துள்ளார்கள்.

ஆதிச்சநல்லூருக்கு நேர் வடக்கே வல்லநாட்டு மலையில் கருங்காலி ஓடைக்கு இருபுரமாகவும் இருக்கிற 200 ஏக்கர் பரப்பளவுள்ள தொல்லியல் தளத்தை மைய ஆய்வுக்குழு கண்டுகொள்ளவே இல்லை என்பது வருந்தத்தக்கது.

ஆனால் தமிழகத்தில் வேறு சில இடங்களில் நடந்த ஆய்வுகள் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிப்பனவாக உள்ளன. முதலாவது ஆண்டிபட்டிக்கு அருகில் பிராமி(தமிழி) எழுத்தில் அமைந்த நடுகற்களின் கண்டுபிடிப்பாகும். தமிழ்ப்பல்கலைக்கழக மாணவர்களே இதைக் கண்டுபிடித்தனர். இந்த நடுகல் ஒன்றில் ‘ஆகோள்’ என்ற சொல் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொல்காப்பியர் பயன்படுத்திய சொல்லாகும். “ வேயே புறத்திறை ஊர்கொலை ஆகோள்” என்பது தொல்காப்பியக் கூற்றாகும். தொல்காப்பியம் வழக்கு மொழிக்கு முதன்மை தந்ததற்கு இதுவே சான்றாகும். இரண்டாவதாக தமிழ் எழுத்து மக்கள் புழங்கிய எழுத்தல்ல அது மேலோர் மரபு சார்ந்தது என்ற பேராசிரியர் கா. சிவத்தம்பி போன்றோரது கருத்தை இந்தக்கண்டுபிடிப்பு தகர்த்தெறிந்தது.

அடுத்து, மிக அண்மைக்காலத்தில் பழனிக்குத் தெற்கே 20 கி. மீ. தொலைவில் ‘பொருந்தல்’ என்ற இடத்தில் ஓர் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர் கா. இராஜன் இந்த ஆய்வை முன்னின்று நடத்தினார். ஒரே ஆய்வுக்குழுவில் 7500 மணிகள் கண்டெடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் “ CORNELIAN BEADS” என வழங்கும் இவற்றைத் தமிழில் ‘சூது பவளம்’ என்பார்கள். இந்தக் கற்கள் தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. குஜராத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக இருக்கலாம். கேரளத்தின் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இந்தக் கற்கள் இங்கே மணிகளாகச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. பொருந்தல் தமிழக-கேரள வணிகப்பாதையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘பொருந்தில்’ என்ர ஊர்ப்பெயர் சங்க இலக்கியத்திலேயே காணப்படுகிறது. எனவே இது சங்க கால நாகரிகத்தைக் காட்டும் கண்டுபிடிப்பு என்பதில் ஐயமில்லை.

இந்தியாவில் ஆய்வுகுரிய தொல்லியல் தளங்களாக 3500 தளங்களை மைய அரசு பட்டியலிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே 5000 தலங்கள் வரை உள்ளன என்பது கள ஆய்வாளரின் நம்பிக்கையாகும். அண்மையில் இந்தத் தொல்லியல் தளங்களை பட்டியலிட்டு பேராசிரியர் கா. இராஜனின் மாணவர்கள் இரு தொகுதிகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேர்களைப்பற்றிய அறிவு என்பதும் விஞ்ஞானத்தில் ஒரு பகுதிதான். பண்டைக்காலத் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்வது ஐரோப்பியக் கொடும்பிடியிலிருந்து இத்தளத்தில் நம்மை விடுவிக்க உதவும் என்பது இடதுசாரி ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.

- தொ.பரமசிவன்



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 

Excavations - Adichchanallur

Adichchanallur, An Iron Age Urn Burial Site

Adichchanallur (8° 37’ 47.6" N; 77° 52’ 34.9"E) is located on the right bank of the Tambraparani River, in the Tuticorin District of Tamil Nadu. The extensive urn burial site at Adichchanallur in Tuticorin District (formerly Tirunelveli) was first discovered by Dr. Jagor of Berlin Museum in 1876. A. Rea excavated a good number of urns during 1910s and discovered gold diadems with parallels from Mycenae; bronze objects notably lids with exquisite finials depicting many animal forms, iron objects besides thousands of potsherds. The excavation was resumed during 2003-04 and 2004-05. More than 160 urns within the area of 600 square meters have been exposed.

 

adichchanallur_001.jpg

 

General View of the Excavatede Trenches with urn burials in Situ, Adichchanallur

 

 

The burials have been classified into three phases, viz., Phase I, II and III. Phase I contains predominantly primary burials, while in Phases II & III, both primary and secondary burials are found.

 

 

 

adichchanallur_002.jpg

 

General View of the Excavated Trenches with urn burials in Situ, Adichchanallur

 

 

The skeletal remains inside the urns are invariably placed in crouched position. No orientation seems to have been followed. There are two examples of double burial. A potsherd with appliqué narrative scene is an important find. It depicts a slim and tall woman standing near by plantain tree. An egret is shown sitting on the tree and holding a fish. A deer and alligator are also depicted near the woman. Good number of graffiti on pottery has been discovered.

 

 

adichchanallur_003.jpg

 

Contents of an Urn burial: Remains of bones and burial goods in situ, Adichchanallur

 

 

Pottery types include black and red ware, red ware and black ware. The dominant shapes include bowls, dishes, vases etc. Some of the pots are painted in white. Iron implements like arrowheads, spearheads and axe are found, but eroded and badly preserved. Few copper ornaments have also been found. Husk and cloth impression has been found on one of the Iron sword. A potter’s kiln was also exposed in the habitational site.

 

 

adichchanallur_004.jpg

 

Contents of an Urn burial: Remains of bones and burial goods in situ, Adichchanallur

 

 

 

 

adichchanallur_005.jpg

 

Contents of an Urn burial: Remains of rice husk, Adichchanallur

http://asi.nic.in/asi_exec_adichchanallur.asp

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தமிழ் நாட்டின் மிகப் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களில் ஒன்று.

 

உலகின் முதல் நாகரீகம்! ஆதிவரலாற்றைக் கூறும் ஆதிச்சநல்லூர்...

 

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 

இந்த ஆதிச்ச நல்லூர்.......ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?.. ஆம் அதுதான் உண்மை ...

 

இந்த இடுகாடு கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது

 

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போதுமண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார். இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்கு மேலும் தெரியும்.

 

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

 

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்...

 

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா?..அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

 

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்துதேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர். பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

 

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

 

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது. 1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

 

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான். எகிப்தில் கிடைத்த தமிழ் எழுத்துருவுகள் பொறிந்த மட்பாண்டத்தின் ஒரு பாகம்எகிப்தில் கிடைத்த தமிழ் எழுத்துருவுகள் பொறிந்த மட்பாண்டத்தின் ஒரு பாகம்   

 

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார். எனவே தமிழர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.    

http://ta.wikipedia.org/wiki/வளரிஆஸ்திரேலிய ஆதிவாசிகளினால் பயன்படுத்தப்பட்ட பூமராங் (வளரி)ஆஸ்திரேலிய ஆதிவாசிகளினால் பயன்படுத்தப்பட்ட பூமராங் (வளரி)    

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை வேளாண்மை செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது. ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

 

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால்..

 

”எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்”

 

எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான்.

 

இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

 

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.

 

 

இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.

 

ஆனால், இவர்கள் என்ன செய்வார்கள் பாவம்?,

 

இந்த கொடுமையை விட அது இடுகாடாகவே இருந்து விட்டு போகட்டும்...

 

- மே.இளஞ்செழியன் 

Wikipedia article: http://en.wikipedia.org/wiki/Adichanallur

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

http://en.wikipedia.org/wiki/Adichanallur

 

Adichanallur

From Wikipedia, the free encyclopedia
 
 
Adichanallur
Adichanallur is located in India
Adichanallur
 
Location in Tamil Nadu, India
LocationTirunelveliIndia
Coordinates8.73°N 77.7°E
 
TypeCultural
State Party India

Adichanallur is an archaeological site (Tamil:ஆதிச்சநல்லூர்) in Tirunelveli district in Tamil NaduIndia. The town is known locally as Aathichanallur, and has been the site of a number of very important archaeological finds. Korkai the capital of the Early Pandyan Kingdom is located about 15 km from Adichanallur.

 

 

Archaeological excavations[edit]

In 2004, a number of skeletons dating from around 3,800 years ago[1] were found buried in earthenware urns. More than 160 urns have been found. These urns also contained writing, which according to some ASI archaeologists, is "very rudimentary" Tamil Brahmi. The script is dated to 500-300 BC.[2]

Later, a three-tier burial system was discovered in which earlier generations were buried in urns at 10 feet depth and recent ones above them. Soon the habitation site of the people who were buried was also discovered recently.

Analyzing the habitation site, it was understood that people lived in a fortified town and it had a separate potters quarters. There was also evidence of industrial activity and archaeologists think that it was a crowded busy town. Sherds were also found with writings in Tamil-Brahmi scripts.

Site Museum[edit]

New initiative involves setting up of site museums. Efforts are on to set up museums in the very places from where significant objects are excavated, the ASI has a huge collection of materials like urns excavated from Adichanallur. At present, they are lying in Chennai. The idea is to set up a museum in Adichanallur itself and putting on display whatever had been excavated from there.[3]

Past excavations[edit]

ADICHANALLUR has a history of excavation. The urn-burial site was brought to light when a German, Dr. Jagor, conducted a haphazard excavation at the place in 1876. An Englishman called Alexander Rea, who was the Superintending Archaeologist, excavated the urn-burial site between 1889 and 1905. A Frenchman called Louis Lapique had also conducted an excavation in 1904.

In his article entitled "Prehistoric antiquities in Tinnevelly", which appeared in the Archaeological Survey of India's annual report in 1902-03, Rea called the Adichanallur site "the most extensive prehistoric site as yet discovered in southern if not in the whole of India... . The site was first brought to notice in 1876 when it was visited by Dr. Jagor of Berlin, accompanied by the Collector of Tinnevelly and the District Engineer."

Excavations by Dr. Jagor had yielded "upwards of 50 kinds of baked earthenware utensils of all sizes and shapes, a considerable number of iron weapons and implements, chiefly knives or short sword blades and hatchets, and a great quantity of bones and skulls". Rea says "these articles were taken away by Dr. Jagor for the Berlin Museum".

In his first excavations, Rea discovered about 1,872 objects, and about 4,000 more later. He said: "The objects yielded by these burial sites are finely made pottery of various kinds in great number; many iron implements and weapons; vessels and personal ornaments in bronze; a few gold ornaments; a few stone beads; bones; and some household stone implements used for grinding curry or sandalwood." Traces of cloth, urns with mica pieces, and husks of rice and millet were found in pots inside the urns. Lamp stands, hanging lamps, bell-mouthed jars, `chatties', necklaces, wire bangles, swords, spears and arrows were found.

Importantly, several gold diadems with a hole on each end for tying them around the forehead were found. Rea also discovered a number of bronze figurines of the buffalo, the goat or the sheep, the ****, the tiger, the antelope and the elephant.

He had this to say about how the dead were interred in the urns at Adichanallur: "In those urns which contained complete skeletons, and which were thus preserved by the lid remaining intact, the position of the bones made it obvious that the body had been set inside in a squatting or sitting position. On its decay, the leg and arm bones fell over and rested against one side of the urn, while the skull, ribs, and vertebrae dropped down to the bottom. This was the position in which every complete skeleton, without exception, was found; and the urns in which they were placed were all devoid of earth."

G. Thirumoorthy, Assistant Archaeologist with the ASI, who led the first phase of the excavation in 2004, said of Rea's excavation: "Above all, his excavation was important for the bronze objects discovered because they are quite unique in the proto-history of South India. Besides, he discovered a figurine of a Mother-Goddess. All this showed that the Tamil culture was rich then."

Rea's discovery of gold diadems is intriguing, for gold does not occur at Adichanallur or any nearby place. The gold could have been brought from outside because of trade contacts, Thirumoorthy said.

Also intriguing is the fact that, although Rea found a number of bronze objects and several gold diadems, no bronze or gold objects have so far been found in excavations conducted by the ASI from 2004. Besides, the trenches dug by Rea have not been located so far, although they are said to be in the centre of the mound.

Rea systematically documented all the objects that he discovered and handed them over to the Government Museum in Chennai, where they are on display.

The centrepiece of the discoveries is this potsherd with the motifs of a woman, a stalk of paddy, a crane, a deer and a crocodile.

The Iron-Age urn-burial site at Adichanallur, about 24 km from Tirunelveli town in southern Tamil Nadu, has attracted nationwide attention for three important findings: an inscription in a rudimentary Tamil-Brahmi script on the inside of an urn containing a full human skeleton; a potsherd (fragment of broken earthenware) with dramatic motifs; and the remains of living quarters (rampart wall, potters' kilns, a smith's shop and so on) close to the site.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 


`Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur

By T.S. Subramanian

 

 

 


2005021704471301.jpg 
The picture shows the urn with the rudimentary Tamil-Brahmi script, and a human skeleton and miniature pots at the Iron Age urn burial site at Adichanallur in Tamil Nadu. The inset with the arrow mark depicts how the script has been written inside the urn. — Photo courtesy: ASI, Chennai Circle.

 

CHENNAI, FEB. 16. A piece of writing has been discovered inside an urn at the Iron Age burial site at Adichanallur, 24 km from Tirunelveli town in Tamil Nadu. The script has six letters. The urn has a human skeleton in it along with miniature pots. What is unusual is that the script was inscribed inside the urn after it was baked. Normally, scripts are inscribed on the outer surface of urns.

The Archaeological Survey of India (ASI), Chennai Circle, made this discovery when it resumed its excavation at Adichanallur after about 100 years. Dr. T. Satyamurthy, Superintending Archaeologist and Director of the excavation, first noticed the script. He has proposed that the piece of writing is in very rudimentary Tamil-Brahmi. M.D. Sampath, retired Director, Epigraphy, ASI, Mysore, also "suggested that the writing is in Tamil-Brahmi in a rudimentary form." Dr. Sampath says he has "tentatively read" the script as "Ka ri a ra va [na] ta." He says the script has seven letters.

"Might date back to 500 B.C."

Dr. Satyamurthy has proposed, on the basis of "preliminary thermo-luminescence dating," that the pottery found at the site, including the pots found in the urn along with the script, might date back to circa 500 B.C. This date is, however, subject to confirmation by carbon-14 dating, which is the more reliable method.

The claim on the date of the script and the assertion that it is in Tamil-Brahmi will be subjected to the scrutiny of scholars in the field.

The term `Tamil-Brahmi' is used when the script is in Brahmi but the language is Tamil. The Brahmi script was predominantly used for Prakrit from the Mauryan (Asokan) period. The Brahmi script was brought to the Tamil country in the third century B.C. by the Jain and Buddhist monks during the post-Asokan period.

According to Iravatham Mahadevan, one of the foremost authorities on the Tamil-Brahmi script: "The Brahmi script reached Upper South India (Andhra-Karnataka regions) and the Tamil country at about the same time during the 3rd century B.C. in the wake of southern spread of Jainism and

Buddhism." In his magnum opus, Early Tamil epigraphy, From the Earliest Times to the Sixth Century A.D., Mr. Mahadevan says that "the earliest Tamil inscriptions in the Tamil-Brahmi script may be dated from about the end of 3rd century or early 2nd century B.C. on palaeographic grounds and stratigraphic evidence of inscribed pottery. The earliest inscriptions in the Tamil country written in the Tamil-Brahmi script are almost exclusively in the Tamil language."

While Upper South India was under the sway of the Nanda-Maurya domain, the Tamil country was politically independent. As a result of political independence, Tamil was the language of administration in the Tamil country. "When writing became known to the Tamils, the Brahmi script was adapted to suit the Tamil phonetic system. That is, while the Brahmi script was borrowed, the Prakrit language was not allowed to be imposed along with it from outside," says Mr. Mahadevan.

Dr. Satyamurthy, however, proposes that the script found inside the urn may belong to circa 5th century B.C. According to him, this was based on "preliminary thermo-luminescence dating," which "takes the site to the period from 1500 B.C. to 500 B.C. So the script is also likely to be dated to 5th century B.C. even if we take the latest date into consideration."

Name of hero?

He pointed out that the Tamil-Brahmi script had been found in Sri Lanka too. The script found at Adichanallur could be the name of the hero whose skeleton is in the urn. "The associated pottery including the thin black and red ware [found in the urn] indicate the importance given to the dead person," he said. The denture has been sent to the Anthropological Survey of India for examination.

Delivering the T. Balakrishna Nair Memorial Lecture on "The geneses and features of Brahmi scripts," organised on January 12 by the Department of Ancient History and Archaeology, Madras University, Dr. Sampath said: "It may be suggested that the writing is in Tamil-Brahmi script in a rudimentary form. Attempts were made to blow up the writing so as to decipher it. It may be tentatively read as, `Ka ri a ra va [na] ta'. The reading is subject to improvement."

"A rare occurrence"

Estampages of the script could not be taken because it was inside the urn. So eye-copies were taken. Although the exact meaning of the script was not clear, it was quite likely to be the name of the engraver or the maker of the urn or the person whose skeletal remains were interred inside, he said. He described the script found inside the urn as "a rare occurrence."

Six trenches dug by the ASI, Chennai Circle, at the Iron Age urn burial site Adichanallur in 2004 yielded a cornucopia: 157 burial urns, 50 of them intact and 15 with human skeletons. The urns with skeletons had exquisite miniature pots inside along with paddy and husk. Around the urns were ritual pots and iron implements, including daggers, broken swords, a spearhead, celts and so on. One of the urns had the script inside it and this urn had a big lid too. It is called "twin pot."

http://www.thehindu.com/2005/02/17/stories/2005021704471300.htm



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard