New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜெயகாந்தன் உரை – வேதம் என்றால் என்ன?


Guru

Status: Offline
Posts: 24625
Date:
ஜெயகாந்தன் உரை – வேதம் என்றால் என்ன?
Permalink  
 


http://solvanam.com/?p=35348

ஜெயகாந்தன் உரை – வேதம் என்றால் என்ன?

jeyakanthan6

நண்பர் சிதம்பரநாதர் சொன்னது போல இது ஒரு வளமான கூட்டம். வளம் என்றால் மன வளம் படைத்தவர்களின் கூட்டம். உங்களுடைய மனம் எவ்வளவு பெரியதென்பதற்கு – என்னை அழைத்து வேதம் பற்றி பேச சொல்லியிருக்கிறீர்களே அதிலே தெரிகிறது உங்கள் மனம் எவ்வளவு விசாலமானது என்று.

`வித்தை ஏதும் கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிட செய்தனை` என்று பாரதியார் சொல்லுகிறார்.

 
 
 
00:00
 
00:00
 
 
 

நண்பர் சிதம்பரநாதர் சொன்னது போல நான் வேதம் படித்ததே இல்லை.நான் படித்த வேதம் எல்லாம் பாரதியார் புத்தகம் ஒன்று தான். அதில் வேதம் எவ்வளவு இடத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணி பாருங்கள்.

நம்மை பற்றி சொல்லுகிற பொழுது, இந்த தமிழ் நாட்டை பற்றி சொல்லுகிற போது, வேதம் நிறைந்த தமிழ்நாடு. ஒரு கடவுளை வர்ணிக்கின்ற பொழுது வேதத்திருவிழியினாள், வேத வாழ்வை கைப்பிடிப்போம். அதுக்கு ஒரு definition. வேத வாழ்வென்றால் என்ன? `வியனுலகு முழுவதையும் அமுதென நுகரும் வேத வாழ்வு`.

 
 
 
00:00
 
00:00
 
 
 

புதுமை செய்வது என்றால் என்ன? நம்முடையது ஆக்கி கொள்வது. தமிழில் சொன்னால் வேதம் புதுமையாகி விடுகிறது. புது பொருள் வருகிறது. காலத்திற்கு ஏற்ப வேத்தை நாம் கண்டு கொள்ள வேண்டுவது நம் கடமையாகிறது. அது யாரோ சொல்லி யாரோ கேட்பதல்ல.

வேதம் என்று எது எதெற்கெல்லாம் பெயர் நான்மறை என்பது நாமெல்லாம் பொதுவாக சொல்லுகிற வேதம். விவிலியத்திற்கும் பெயர் வேதம் தான். குரானுக்கும் பெயர் வேதம் தான்.திருக்குறளுக்கு பெயர் கூட வேதம் தான். இந்த வேதம் என்ற பொருள் ஒன்றிற்கு ஏன் வருகிறது என்றால் அது காலம் தோறும் மனிதனுக்கேற்ப புதுப்பிக்கப்பட்டு புரிந்துக்கொள்ள படுவதால் தான். அது சிரஞ்ஜீவியானது.எது எது சிரஞ்சீவியானதோ, அது காலம் தோறும் புதுமையுறும்.

காலம் என்பது மனிதன் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல.அது பிரபஞ்சம் சம்பந்தப்பட்டது. மனிதன் சம்பந்தப்பட்டதற்கு பெயர் நேரம். சில காலங்களில் சில மனிதர்களல்ல, சில நேரங்களில் சில மனிதர்கள் தான்.

 
 
 
00:00
 
00:00
 
 
 

ஆகவே பாரதியை புரிந்து கொள்வதும்  தமிழர்கள் பாரதியை பரிச்சயம் கொள்வதும், பாரதியை குருவாக ஏற்பதும் நமக்கு வாய்த்த நல்ல நேரம்.

வேதம் அறிந்தவன் பார்ப்பான் என்பது definition. வேதம் தெரியாதவர்கள், நீங்கள் நினைக்கிற மாதிரி அல்லது நீங்கள் வெறுக்கிற மாதிரி பார்ப்பனர்கள் அல்ல. பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான். ஒரு வித்தை மட்டுமல்ல – பல வித்தை. ஷத்திரியனுக்கு வில் பயிற்சியை கற்று தந்தவர்கள் பார்ப்பனர்கள். என்னத்துக்கோ தெரியல. ஷத்திரியர்களுக்கு தான் கற்று தருவார்கள். சூத்திரனுக்கு கற்று தர மாட்டார்கள்.

 
 
 
00:00
 
00:00
 
 
 

ஏன்?

மனிதரை கொல்லும் உரிமை எல்லா மனிதருக்கும் இல்லை.

சில தருமங்கள் நீங்கள் சொன்னது போல யாருக்கு சொல்லுகிறோம் என்பதை பொறுத்து அமைகிறது. இந்த வேதத்தை எல்லோருக்கும் பரிச்சயம் செய்யவேண்டிய காலம் ஒன்று வந்தது பாரதியாருக்கு.

ஆரம்பத்தில் சொன்னது போல் நாமெல்லாம் கடவுளை கருத்துக்களில் தேடுகிறோம். நூல்களில் தேடுகிறோம். கவிதையில் தேடுகிறோம். பிரபஞ்சத்தில் தேடியதற்கு பெயர் வேதம்.

அது நீங்கள் சொல்வது போல விநாயகரையோ அல்லது நாம் வணங்குகிற விக்கிரக தெய்வங்களையோ குறிக்கவே இல்லை. உனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா – ஃ- சொன்னவர்கள் கேட்டு தான்.

அதாவது விஞ்ஞானத்திற்கு எது எது முக்கியமோ அந்த பஞ்ச பூதங்களை குறித்து தான் பேசுகிறது.சூரியன், வருணன், காற்று, மண், வெளி இவற்றை வணங்குகிறோம். எதற்கு? இந்த மனிதர்க்கு நலம் தரும் பொருட்டு.

மனிதர்கள் மேல் பாசம் இல்லாவிட்டால் வேதம் கூட பிறந்திருக்காது. உலகம் சுபிட்சமாக இருக்க வேண்டும்.என்று நினைத்தால், நான் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்ற நினைப்புக்கு அவசியமே இல்லை. நான் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால், அதுவே என்னை தின்று அழிக்கின்ற கவலை ஆகும். ஆகவே வேதம் என்பது பிறர் பொருட்டு ஓதப்படுவது.

 
 
 
00:00
 
00:00
 
 
 

`மழையே நன்கு பொழிக எங்களை அழிக்காமல் பொழிக. தீயே விலகி நின்று எங்களை காக்க`. இவற்றில் எல்லாவற்றிற்க்கும் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இருக்கிறது பாருங்கள். நமக்கு வெளிச்சம் மட்டுமே தேவை. இருட்டு இல்லாமல் வெளிச்சம் எப்படி வரும். இருட்டுக்கு எதிர்மறையாக இருப்பதால் தான் அதற்கு வெளிச்சம் என்று பெயர். நம் அறிவுக்கு சுடராக இருப்பதனால் தான் எது எது நம் அறிவுக்கு ஒளி தருகிறதோ அதெல்லாம் வேதம் என்பதனால் தான் நமக்கு திருக்குறள் வேதமாகிறது. இன்னொருவருக்கு விவிலியம் வேதமாகிறது. இன்னொருவருக்கு குரான் வேதமாகிறது.

இதிலேருந்து என்ன தெரிகிறது? வேதம் பொது. நம் தனிப்பட்டவருடைய பொருட்டு அல்ல. மனித சமூகத்தின் பொருட்டு, மனிதர்களின் மீது கொண்ட அன்பின் பொருட்டு. முன்னாளில் வேதம் ஓதுவார்கள், மூன்று மழை பொழியும்.அப்புறம் இன்னொன்று சொல்ல வேண்டாம்.

இந்நாளில் இருக்கிற கதியை பற்றி என்னத்தை சொல்றது? முன்னாளில் இருந்த பெருமை தான் வேதம். அந்த வேதத்திற்கு உரியவர்கள், அந்த வேதத்தை காப்பவர்கள், அதன் படி வாழ்கிறவர்கள் வேதியர்கள். கடவுள் கூட ஒரு வேதியன் தான்.சிவபெருமானை வேதியன் என்று சொல்கிறார்கள். அதாவது பிராமண சங்கத்தில சேர்த்துக்கலாம்னு பார்க்கறீங்களா?

அப்படிப்பட்ட வேதத்தை மக்களின் நலன் பொருட்டு உபாசிப்பது, அவர்களுக்காகவே தங்கள் சுக துக்கங்களை எல்லாம் துறப்பது என்று சில மனிதர்கள் அக்காலத்தில் வாழ்ந்தார்கள். இன்றைக்கு அவர்கள் இல்லை என்று நினைக்காதீர்கள். அவர்கள் வேதியர்களாக மட்டும் இல்லை. அவர்கள் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள்.மக்களை வாழ வைப்பவர்கள், மக்களின் நலம் பொருட்டு வாழ்பவர்கள், இவர்கள் எல்லாம் புதிய வேத்த்தின் படி வேதியர்கள் தான்.

 
 
 
00:00
 
00:00
 
 
 

எல்லாவற்றையும் புதுமை செய்ய சொன்னார் அவர். வேதத்தை மட்டும் அல்ல. மனிதனை, சிந்தனையை, பெண்ணை, இந்த பூமியை.

`புதியதோர் உலகம் செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்`. இன்னொன்று சொன்னால் தான் ஒன்றிற்கு அர்த்தம் வருகிறது. புதியதோர் உலகம் செய்தால் கெட்ட போரிடும் உலகம் இல்லாமல் போய்விடும். ஆகவே வேதத்தை போற்றுவதும் வேதத்தை வாழ்வாக கொள்ளுவதும் நமது மண்ணில் மரபாக இருந்திருக்கிறது.

முன்னோர்கள் சொல்லுவதை எல்லாம் நாம் முதலில் நம்புதல் வேண்டும். அறிவு என்பதே முன்னோர்கள் சொல்வதை நம்பாமல் இருப்பது என்ற விபரீத பொருள் கொண்டு விட்டது இன்றைக்கு. அதை நம்பி அங்கேயே நின்று விடுவது அல்ல.

தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு தெய்வ நம்பிக்கை வரவே முடியாது. தன்னம்பிக்கைக்கு ஒரு எல்லை உண்டு. எதுவரைக்கும் என்னையே நான் நம்புவது? ஒரு எல்லைக்கு மேலே என் நம்பிக்கை இருக்கிறது, நான் இல்லை என்றாகிறது.

எனது நம்பிக்கை இருக்கிறது. நான் இல்லை.வேறு எது இருக்கிறது?

எதுவுமே இல்லை. இதுதான் வேத்த்தின் இறுதி வாக்கியம்.

இல்லை- நாத்திகர்களுக்கு மட்டுமல்ல, நம்புவர்கள் கூட கண்ட உண்மை என்னவென்றால், நம்புவர்களும் இல்லை என்பதே.

இதில் பாரதியார் தான் புதிய விளக்கம் சொல்கிறார். வேதம் சொல்லாத புதுமையை, வேத்த்தில் இல்லாத புதுமையை, வேதம் இல்லை என்று சொல்லிவிட்ட ஒன்றை- `எல்லை ஒன்று, இன்மை எனும் பொருள் அதனை கம்பன் குறிகளால் காட்டிட முயலும்` அதாவது வேத்திலே புரியாததை கம்பன், தமிழ் ஏன் அமரத்துவம் வாய்ந்த்து என்று நான் கருதுகிறேன் என்றால் இது காரணம் என்று ஒரு காரணத்தை சொல்லுகிறார்.

அதிலே கம்பன், ஒரு காரணம் தமிழ் அழியாமல் இருப்பதற்கு. எதனாலென்றால் – `எல்லை ஒன்று, இன்மை எனும் பொருள் அதனை கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியை கருதி` அது என்ன?



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Jeyaganthan_JK_Young_25_Saraswathi_Cover_Thamizham_Writers_Authors_Youth_Old_Jeya_Kaanthan

நீங்கள் ஆராயாவிட்டால் அப்புறம் எங்கிருந்து அறிவு வரும்? ஒருவர் ஆராய்ந்தால் போதும். எல்லோரும் ஆராய வேண்டும் என்பதில்லை. அதனை பகிர்ந்து கொள்வதற்காக தானே பேசுகிறோம்.

நான் பிரகடனம் செய்கிறேன் என்பதல்ல. நான் சொல்வது தான் முற்றிலும் முடிந்த உண்மை என்று நான் எப்போதும் எதையும் சொன்னதில்லை. சிந்தியுங்கள். Consider. இதை பொருட்படுத்துங்கள். இப்படி ஒரு விஷயத்தை பொருட்படுத்துங்கள். அன்றைக்கு அப்படி சொன்னாயே, இன்றைக்கு இப்படி சொல்லுகிறாயே… அன்றைக்கு அப்படி இருந்தது அப்படிச் சொன்னேன், இன்றைக்கு இப்படி இருக்கிறது, இப்படிச் சொல்லுகிறேன்.

வேதத்தில் கடவுள் ஒன்று என்று சொல்லுகிறதா? கடவுளையே சொல்லவில்லை. இது தான் கடவுளா என்று கேட்டால் இல்லை என்று சொல்லிற்று. கம்பன் தான் திருப்பி போட்டான். புரட்சி என்பதே என்ன? புரட்டி போடுதல். ஆம். வேதத்தின் இறுதி வாசகம் ‘இல்லை’. கம்பனின் விளக்கம் ‘ஆம்’. எத்தனை ஆம் தெரியுமா?

ஒன்றே என்னில் ஒன்றே யாம்
பலவென் றுரைக்கிற் பலவே யாம்
அன்றே என்னில் அன்றே யாம்
ஆம்என் றுரைக்கில் ஆமே யாம்

எத்தனை ‘ஆம்’ பாருங்க. இது தான் ‘கம்பன் குறிகளால் காட்டிட முயலுகின்ற’ முயற்சி. இல்லை என்பதல்ல, உண்டு. ஒன்று என்றால் ஒன்று. பல என்றால் பல. இல்லை என்றால் இல்லை, இதில் நமக்கென்ன சண்டை.

 
 
 
00:00
 
00:58
 
 
 

நன்றே நம்பி குடி வாழ்க்கை
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு.

பிழைப்பு-னா தப்புனு அர்த்தம். இதில் நாம் ஒன்றும் பிழை செய்வதற்கில்லை. அது இப்படி எல்லாம் இருக்கிறது, இதில் எது சொன்னாலும் பிழை ஆகாது என்று அர்த்தம். இந்த தீர்வை சொன்னது தமிழ். எதனாலென்றால், வேதத்தை தமிழில் சொல்ல முயன்றதனால், பொது விளக்கம் கிடைத்தது. இது தான் வேதத்தை பொதுமை செய்வது.

கடவுள் நமக்குள்ள இருக்கறார்னு தானே நினைக்கிறோம். நின்னுளே என்னை நிருமித்தாய்… கடவுளில் நாம் இருக்கிறோம் என்று கண்டுகொள்ளுதல். கடவுள் நம் மனசுக்குள்ளே இருக்கிறார்-ங்கறது எல்லாரும் சொன்னது – இல்ல… கடவுளுக்குள்ள நாம் இருக்கிறோம்.

 ‘பொன்னுளே பூத்த்தோர் பொற்கலனே போல்கின்றேன்’.

பொன்னு இருக்கு, அத வெச்சு தான் நகை வருதே ஒழிய, நகையை வெச்சு பொன் வருது-னு நினைக்கறீங்களா? அப்படி சில பேர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்த பொன் உருக்கினதாலே கிடைத்தது. கடவுளுக்குளே மனிதன் இருக்கிறான். அவன் எப்படி இருக்கான். எனக்கு புரியல… கடவுளை எப்படி காண்பது? நம்முடைய சேவகனாக காண்பது.

ஒருத்தர் கேள்வி கேட்டிருக்கார். அந்த கேள்வியில் ஒரு அழகான வரி.

இரும்பை காய்ச்சி உருக்கிடுவீரே’’ என்று என்னத்துக்கு பாடினாரு? கடவுளை நாம் கண்டு கொள்வதற்கு.

அது இரும்பை காய்ச்சி உருக்குகிறது. எந்திரங்களை வகுக்கிறது. கரும்பு சாறை பிழிகிறது. கடலில் மூழ்கி நன்முத்தெடுக்கிறது. அரும்பு வியர்வை உதிர்த்து புவி மேல் ஆயிரம் தொழில் செய்கிறது. ‘பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு நீரே’. மண் எடுத்து குடங்கள் செய்கிறது. மரத்தை வெட்டி மலை செய்கிறது. உண்ண காய் கனி தந்திடுகிறது. உழுது நன்செய் பயிரிடுகிறது. எண்ணை பால் நெய் கொணர்கிறது. இழையை நூற்று நல் ஆடை செய்கிறது. ‘விண்ணில் நின்று காப்பர். மேவி பார்மிசை காக்கின்ற தெய்வம்’ இவர்கள் தான்.அப்புறம் நம்மையும் சேர்த்துக்கிறார் தெரியுமா? பாட்டும் செய்யுளும் கோர்த்திடுகிறது. பரத நாட்டிய கூத்திடுகிறது. ‘காட்டும் வையப் பொருள்களில் உண்மை கண்டு’  -  சும்மா கவிதைன்னா எல்லாம் கவிதையா? இவ்வளவு பொருள் செறிந்திருக்கணும்.

 
 
 
00:00
 
01:19
 
 
 

இலக்கியம் என்றால் என்ன? படைப்பு என்றால் என்ன? வேதம் என்றால் என்னவென்றால் ‘காட்டும் வையப் பொருள்களில் உண்மை கண்டு சாத்திரம் தெளிதல்’… இது தான் வேத விளக்கம்.

‘சாத்திரம் கோடி வைத்தாள் அவை தன்னிலும் மிக்கதோர் ஞானம் வைத்தாள்’. அதில்லாட்டி போனா சாத்திரம் என்ன பண்ணும்? அதையெல்லாம் மீறியது உங்கள் அறிவு. பகுத்தறிவு கூட.

சாத்திரம் கோடி வைத்தாள்; – அவை
தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினி லே – நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே
கோத்தபொய் வேதங்களும்

பாருங்க, வேதத்திற்கு ஒரு அடைமொழி. கோத்த பொய் வேதங்கள். அரசர் தம் கூத்துக்கள், மத கொலைகள், மூத்தவர் பொய் நடை, இளம் மூடர்கள் கவலை, மூத்தவர் பொய் நடப்பது எவ்வளவு மோசமானதோ அதை விட மோசமானது இளைஞர்களின் கவலை.

கவலை ஏன் வருகிறது சிந்தனை இருந்தால் வருகிறது. அந்த கவலை என்பது வருத்தத்தினால் வருவது அல்ல. கன்னத்தில கை வெச்சிட்டு இருந்தா “என்னடா கவலையா இருக்க?” யோசிக்கிறவனும் அது தான் பண்ணறான். அப்போ சிந்தித்திருப்பவர்களெல்லாம் கவலையோடு இருப்பவர்களா? வேதம் எங்கே இருக்கிறது? நம் சித்தத்தில் இருக்கிறது. அதனால் தான், ‘என் சிந்தனையே, என் சித்தமே’ என்று வணங்குகிறார். என்று புகழ்கிறார். என்று கொஞ்சுகிறார். காதலியை… என்னென்னவோ சொல்லி கொஞ்சுவான், என் சிந்தனையே என் சித்தமே.

ஆகவே மனிதனை நேசிப்பதற்கும், மனிதனில் கடவுளை காண்பதற்கும், காலம் தோறும் துணை செய்வதற்கும், வேதம் என்று பெயர். இந்த காலத்தில் அது பொதுமை செய்யப்பட்டிருக்கிறது. அதை செய்தவர் பாரதி. தமிழில் எல்லாவற்றையும் அறிந்து கொண்டீர்கள் என்றால் பொதுமையாக இருக்கிறது. எதை அறிந்து கொள்வது தமிழிலே? தமிழில் தானே எல்லாம் இருக்கிறது, எதை அறிந்து கொள்வது?

ஏற்கனவே பிற மொழிகளில் சொல்லப்பட்டவை எல்லாம் நாம் அறிகிறோம். தமிழ் ரொம்ப ஆதி மொழி. அதன் காலத்தில் பிற மொழி ஏது? அந்த காலத்தில் ஒரே ஒரு மொழியாம் பிற மொழி. அது வடமொழி. சம்ஸ்கிருதம். ஆகவே சம்ஸ்கிருத்த்தில் இருப்பது தான் வேதம் என்பதல்ல. புதிய வேதம் என்பது தமிழில் இன்றைக்கு எழுதப்படுவது. பாரதியார் எழுதியது. நீங்கள் எழுதுவது. நீங்கள் படிப்பது. அதில் என்ன இருக்க வேண்டும் என்றால்

‘காட்டும் வையப் பொருள்களில் உண்மை கண்டு சாத்திரம் சேர்ப்பது’.

பொருளறிந்தால் போதாது. மெய்ப்பொருள் காணல். பொருள் ஒண்ணு இருக்கு, மெய்ப்பொருள் ஒண்ணு இருக்கு, ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அரிது’. திருக்குறளை படிக்கும் போது நமக்கேத்த மாதிரி பாட பேதங்கள் விழும். அது தானே அரிதாக இருக்கிறது என்பதனால் அறிவு என்பதற்கு பதிலாக அரிது என்று வந்துவிட்டது. சரியாக இருக்கிறது. இலக்கணப்படி. ஆனால் அறிவுக்கு definition தான் சொன்னான்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.’

அன்பை வளர்த்திட வேண்டும். அது தான் வேத்த்தின் விளக்கம். அன்பு மயமானது. இது எல்லாம் எதற்கு நாம் செய்கிறோம். மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். எந்தக் காலத்து மனிதர்கள் துன்பப்பட்டார்கள்? அதைத் தான் காலையில் சொல்லி கொண்டிருந்தேன். ஆன்ம தாகம் எங்கிருந்து வரும். தண்ணீர் தாகமும் வயிற்று பசியும் அடங்காதவனுக்கு ஆன்மா ஏது? அந்த சமூகத்தில் ஆன்மா ஏது? கடவுள் கூட பசித்தவன் முன்பு விவிலியமா வரமாட்டார். குரானா வரமாட்டார்.திவ்யபிரபந்தமா வரமாட்டார். பிரசாதமா வரணும். ரொட்டியாக வர வேண்டும். என்னத்துக்கு ரொட்டி, ஆஸ்பத்திரியில தானே தருவாங்கனு எனக்கு தோணிச்சு. ப்ரட்னா உணவுனு அர்த்தம்னா அப்புறம் புரியுது. ஆக மொழிபெயர்த்தா கடவுள் ரொட்டி உருவத்தில் தான் வருவார். ரொட்டி செஞ்சா தான் வரும். உணவுனா இன்னொருவர் செய்து அல்லவா தரணும். அது யாருமே செய்யாமல் தனக்கே நேரடியாக கிடைப்பது மாதிரி.

 
 
 
00:00
 
01:10
 
 
 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 இதற்கெல்லாம் என்ன பெயர்.இந்த மாதிரி பேசிக்கொண்டே இருந்தால் இதற்கு என்ன பெயர் சொல்லுவீர்கள்? ‘வேதாந்தம்’ என்று சொல்லுவீர்கள். அதனால் தான் பாரதியை வேதாந்தி என்று சொன்னார்கள். என்ன சொன்னாலும் பொருந்தும் சரியாக புரிந்து கொண்டால். வேதாந்தினா நீங்க வேறேதாவது விஷமமாக அர்த்தம் வைத்து கொண்டு பாரதியை வேதாந்த சிமிழில் அடைக்காதீர்கள். வேதாந்தம் சிமிழ் என்று யார் சொன்னது? வேதாந்தம் கடல். வேதாந்தம் என்று எதற்கு பெயர். நம்மால் எங்கு அறிய முடியாமல் திகைத்து நிற்கிறோமோ, அந்த அறியாமையில் கிடைக்கிற ஒளி வேதாந்தம். அதனால் தானே வேத வாழ்க்கை என்று சொல்லுகிறார்கள். அது வாழ்க்கையை வெறுப்பது அல்ல.

‘வியனுலகு முழுவதையும் அமுது என நுகரும் வேத வாழ்வு’.

இந்த Definition னால் தான் எனக்கு வேதம் தெரியுமே தவிர வேதம் படித்து அல்ல. நமக்கு அந்த உரிமையும் கிடையாது. அந்த அறிவும் கிடையாது. ஆகவே வேதம் படித்தவர்களுக்கு மட்டும் வேதம் சொந்தமல்ல. வேதத்தை ஓதியவர்களுக்கு கூட அது சொந்தமல்ல.

‘ஓதியும் உணர்ந்தும், பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா பேதையிற் பேதையாரில்’.

அப்படி வேதியர் ஆனதால் வந்த விதி அல்லவா? அது பிறர்க்கு சொல்லப்படுவது என்று நினைத்ததனால். அது தனக்கு தானேயும் தன் மூலம் அனைவருக்கும். எவன் ஒருவனும் தனக்காக வாழ முடியாது. ஏன் விவசாயியை நாம் கும்பிடுகிறோம்? அவன் நட்டது அவனுக்கு மட்டுமில்லை. நிலம் வேணா அவனுக்கு சொந்தமா இருக்கலாம். ஆனால் அந்த நிலத்தில் உற்பத்தி செய்வதை, நீயே தின்னுட்டேனா ஒவ்வொரு விவசாயியும் செத்து போய்டுவான். அவன் அவ்வளவு உற்பத்தி செய்கிறான்.

 
 
 
00:00
 
00:00
 
 
 

ஆகவே மனித இயல்பே தான் வளர்ந்தால் கரம் எதற்கு எடுக்கிறது? பிறர்க்கு தருவதற்கு. கொடுப்பதற்கே கரம் இருக்கிறது. பிறர் துன்பத்தை நாடி ஓடுவதற்கே கால் இருக்கிறது. பிறர் துன்பத்தை கண்டு உருகுவதற்கே மனம் இருக்கிறது. மனத்தின் இயல்பு என்ன? அது பறவை மாதிரி. சின்னஞ் சிறு குருவி போல நீ திரிந்து பறந்து வா. திரிந்து பறந்து வந்தா தானே தெரியும் இந்த உலகம் இருக்கிற இருப்பு. மகிழ்ச்சியடைய முடியாது. ஏனென்றால் துன்பம் தவிர வேறெதுவும் தெரியவில்லை. இந்த துன்பத்தை கண்டு துவண்டு போய் விட கூடாது. துன்பமே இயற்கை என்பது ஒரு சொல்.

’துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறந்திடுவோம்’. அவ்வளவு தான் பண்ண முடியும். துன்பத்திலேயே சென்று விழுவதை விட. துன்பத்திலேருந்து விலகுவது எனபதை தவிர வேறு வார்த்தை எனக்கு தெரியல.

ஒரு நாள் என்றால் ஒரு இரவு ஒரு பகல். சில பேருக்கு இரவு புடிக்காது. சில பேருக்கு பகலும் புடிக்காது. ஆந்தைகளுக்கு பகல் புடிக்காது. ஏன்? அதற்கு பகலில் கண் தெரியாது. ஏனென்றால் வெளிச்சம் கூட ஒரு எல்லை மீறி விட்டால் இருட்டாகி விடும். சத்தம் கூட ஒரு எல்லையை தாண்டி விட்டால் பேரமைதியாகிவிடும். இது வேதாந்தம் இல்ல. இது சயின்ஸ். வேதாந்தத்தை நீங்கள் உற்று, ஊர்ந்து, அமிழ்ந்து பார்த்தீர்களென்றால் அதில் விஞ்ஞானம் இருப்பதை உணரலாம். விஞ்ஞானத்தின் அடிப்படை வேதம். ஆகவே வேதத்தின் விகாசம் தான் இந்த மின்விளக்கு. என்ன தெரிந்து கொள்ள வேண்டும். இது நாம் பண்ணிணது. கடவுள் படைத்த உலகம் மனிதனுக்கு அவ்வளவு வசதியாக இல்லை. அவனுக்கு ஒரு சொர்க்கம் வேண்டியிருக்கிறது இந்த உலகத்தில். இந்த உலகம் சொர்க்கமாக இல்லை.

நீரோடை நிலங்கிழிக்க நெடும ரங்கள்
நிறைந்துபெருங் காடாக்கப் பெருவி லங்கு
நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்
நெடுங்குன்றில் பிலஞ்சேரப் பாம்புக் கூட்டம்
போராடும் பாழ்நிலத்தை

மனிதர்க்கு தகுமா? புலிகள் வாழலாம். காட்டிலே பாம்புகள் வாழலாம். விஷ ஜந்துக்கள் வாழலாம். மனிதன் எப்படி வாழ்வான்?

 
 
 
00:00
 
00:00
 
 
 

இவ்வளவு துன்பகரமான வாழ்க்கையில் மனிதனுக்கு ஒரு விளக்கு, இதை வைத்து கொண்டு நீ பிழைத்துப்போ. இப்படித்தான் இருக்கும்.அப்புறம் இருட்டில் வெளிச்சம் வருகிறது. காற்றில்லாத இட்த்தில் காற்றை கட்டுப்படுத்தி நமக்கு வேண்டிய அளவில் வைத்துக் கொள்ள முடிகிறது. இதெல்லாம் யார் தந்தது? மனிதர்க்குரிய உலகத்தை மனிதன் தானே சமைத்தான். அகம்பாவம் வந்துவிடலாகாது. அப்போது வருகிறது தெய்வத்தை பற்றிய எண்ணம்.

நானே என்னை உருவாக்கிக் கொண்டேனா? நான் பள்ளிக்கூடம் போகவில்லை. பள்ளிக்கூடம் போனா படிப்புனா அந்த படிப்பு வேண்டாம்னு சொன்னேனே தவிர படிப்பே வேணாம்னா சொன்னேன். அந்த படிப்பு எனக்கு வேண்டாம் என்று தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் வேண்டாத படிப்பு எனக்கு வேண்டாம். எனக்கு என்ன வேண்டுமென்று எனக்கென்ன தெரியும். மாணிக்கவாசகர் சொல்லுகிறார்.

வேண்டத்தக்கது அறிவோய் நீ

எனக்கென்ன தெரியும், எதாவது வேண்டாத வம்பை விலைக்கு வாங்கிக்குவேன். என்னைக் கேட்டு தரேன்னா, அப்படியல்லவோ அசுரர்கள் கெட்டார்கள். கேட்டதெல்லாம் கொடுத்தான் அப்புறம் இவங்களுக்கு ஏறிப்போயிடுச்சு. மனிதனுக்கு இறைவனின் பரிபூரண ஆசி கிடைக்கிற போது அவன் அசுரனாகிறான். அதுதான் விஞ்ஞானத்தினால் ஏற்படுகிற விபரீதம்.

ஏன்?

வேத வாழ்க்கையிலிருந்து பிறழ்ந்து விடுகிறீர்கள்.

‘வியனுலகு முழுவதையும் அமுதென நுகரும் வேத வாழ்வு’.

வெறுத்து அழிப்பதற்கும் , இல்லாமல் போக்குவதற்கும் பகைமையை வளர்ப்பதற்கும். ‘இருட்டுக்கும் வெளிச்சத்தற்கும் பகையா’ பாரதியார் கேட்கிறார்.

ஒளியே இருளை என்ன செய்துவிட்டாய். தின்று விட்டாயா?

ஆஹா… எதை தின்பீர்கள். விருப்பமில்லாத்தையா தின்பீர்கள். ரொம்ப அன்பு வந்தா தின்னுட வேண்டியதுதான். மனிதர்கள் மீது ரொம்ப அன்பு வந்துதான் மனிதர்களை மனிதர்கள் தின்கிறார்கள் என்று நினைக்கிறீர்களோ? மனிதர்களை மனிதர்கள் தின்பதில்லை. மனிதர்களுக்குரியதை மனிதர்கள் தின்றுவிடுகிறார்கள். அதனால் தான் விபரீதம் வருகிறது. மனிதர் நோக மனிதர் பார்க்கிறார்கள். மனிதர் உணவை மனிதர் பறிக்கிறார்கள். So meant for men. அதை போய் லூட் பண்றதாவது. பிறருக்கு இல்லாமல் செய்வதாவது. இந்த விபரீதமெல்லாம் ஏன் வருகிறது. வேத வாழ்வினை கைவிட்டதால்.

அதுக்கு விளக்கம் சொல்றார் கோணங்கியின் மூலம். அது எப்படியிருக்கும்? தொப்பை தொப்பையாய் இருக்காது அது. தொப்பை சுருங்கி இருக்கும். வீரியத்தோடு இருக்கும். வேதபுரி என்று. இந்த வேதம் தான் நம்முடைய கற்பனைகளுக்கு எல்லாம் அடிப்படையாய் இருக்கிறது. கலைஞன் தான் கடவுளை கண்டுபிடித்திருக்க முடியும்.  கலைஞர்களெல்லாம் என்ன செய்கிறது? கலை மூலம் தான் காட்ட முடிகிறது.

 
 
 
00:00
 
00:00
 
 
 

There is a logical way. லாஜிக் எல்லா இட்த்திலேயும் எடுபடாது. வாதம் பண்ணி நிரூபிக்க முடியாது எல்லாரிடமும். சிலருக்கு காட்ட வேண்டும். அது என்ன காட்டுகிறார் என்று கற்று கொள்வதற்கு மரபு வேண்டும். ஒரு யானை முகமும் மனித உடலும் கைல நமக்கு வேண்டிய விஷயமெல்லாம். பிஸ்கோத்து, ஐஸ்க்ரீம் எல்லாம் கொடுத்து நமக்கு வேண்டியது அந்த காலத்தில் என்ன இருந்ததோ அதெல்லாம் கொடுத்து ஒரு படம் போட்டு, – இது தான் முழுமுதற்கடவுள் – என்று சொன்னால் இது நமக்குதான் தெரியும்…

மத்தவன் பார்த்தா it’s a funny picture what is this funny creature னு கேப்பான். இல்லையா இதுக்கு பின்னால ஒரு அர்த்தம் இருக்கு ஒவ்வொரு பொம்மையும் பார்த்தா, அது பொம்மைதான். `மரத்தில் மறைந்தது மாமதயானை.` யானைனு பார்த்தா யானை மரம்னு பார்த்தா மரம் அது. அப்படித்தான் எல்லாம். அதன் பொருள் என்ன? வேதத்தின் பொருள் கண்டு கொள்ள வேண்டும். அது முணுமுணுப்பதற்கு அல்ல. அதையெல்லாம் நம் முன்னோர்கள் நன்றாக பரிகாசம் செய்திருக்கிறார்கள்.

நட்ட கல்லை தெய்வமென்று –

பெரியார் சொல்லல இது. இது பகுத்தறிவாளர் சொல்லல. நாத்திகர்கள் சொல்லல. விளக்கம் சொன்னார்கள்.

நட்டகல்லை சுற்றி வந்து நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா.
நட்டகல்லும் பேசுமோ,

இங்கு தான் இருக்கு,இதுக்கு அப்புறம் தான் இருக்கு. ‘நாதன் உள்ளிருக்கையில்’. அப்போ பேசும். நட்ட கல்லும் பேசும். நடாத கல்லும் பேசும். நாதன் உள்ளிருத்தல் வேண்டும்.

இசை எங்கே இருக்கிறது என் செவியில் இருக்கிறது. வீணையிலா இருக்கிறது. காட்சி எங்கே இருக்கிறது. என் கண்களில் இருக்கிறது. உணர்ச்சி எங்கேயிருக்கிறது, என் உடம்பிலிருக்கிறது. சூரியனுக்கும் வாயுக்கும் அக்னிக்கும் பூமிக்கும் கூட கடவுள் எனக்கு சொந்தமானது. நானே கடவுள். இது வேதாந்தம். தன்னை கடவுளாக உணர்தல். அகம் பிரம்மாஸ்மி. எனக்குள்ளே என்ன இருக்கு. லைட், சவுண்ட். அதெல்லாம் இல்லைனா நான் இல்லை. நான் என்பது எது? இந்த உடம்பா? இதற்கு தான் மெய் என்று பெயர்.

`இந்த தேகம் பொய் என்று உணர் வீரரை என் செய்வாய் மாயையே`

 
 
 
00:00
 
00:00
 
 
 

என்று பாரதியார் கேட்கிறார் பாருங்கள். இதெல்லாம் வேதத்தின் சாரத்தால் வந்த விளைவு. பாரதியை நான் வேதத்தின் முழு வடிவமாக காண்கிறேன். விஸ்வரூபம் காட்டுவதில்லை. நீங்கள் காண்பது. அது காண முடியாதது. சேவகனையும் தாயையும் தந்தையையும் குருவையும் நண்பனையும் கடவுளாக காண்பாருக்கு கடவுளென்று தனியாக ஒன்று உண்டோ? இதெல்லாம் தான் கடவுளாக வந்து, இது ஒரு கடவுள் உழைக்க ஒரு கடவுள் சுமக்க ஒரு கடவுள். அதனால் தான் கடவுள்களை மனிதர்களுக்கு பரிச்சயமாக்கி வைப்பதற்கே அவதாரங்கள் நிகழ்ந்ததாக கற்பனை செய்தார்கள். கதைகள் பொய்யென்று கண்டோம். இதிலொன்னும் விவாதமே வேண்டாம். கதைகள் பொய். ஆனால் என்ன பொய்?. பொய்யென்றால் நீங்கள் பேசுகின்ற அற்பத்தனமான பொய்யா?

ஏதோ அற்ப ஆசைகளுக்காக நாம் பேசுகிறோமே அந்த பொய்யா.இது? புரைதீர்ந்த நன்மை பயக்கும் ஒரு பொய் ஒன்று உண்டென்றால் அது கடவுள் என்கிற பொய்யே. கடவுள் நம்பிக்கை இல்லை எனக்கு. 11 தடவை போனேன். விரதம் எல்லாம் இருந்து பார்த்தேன். என்ன்னவோ வேதனை எல்லாம் வருதே ஒழிய பக்தி மட்டும் வர மாட்டேங்குது.

எனக்கெதற்கு பக்தி!?

நண்பர்களில் சுவையில் வாழ்க்கையில் இன்பத்தில் பாரதியாரை கடவுளை கண்டபிறகு எனக்கெதற்கு, எங்கேயாவது கண்டு விடுங்கள். தேட வேண்டாம். கோயில் முழுவதும் கண்டு கோபுரம் எல்லாம் ஏறி கண்டு தேரோடும் வீதி கண்டு தேவாதி தேவனை நான் தேடியும் கண்டிலேன்.

- See more at: http://solvanam.com/?p=35620#sthash.ZHL9Yseg.dpuf 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard