New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆபிரகாமின் காலம் என்ன?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஆபிரகாமின் காலம் என்ன?
Permalink  
 


 ஆபிரகாமின் காலம் என்ன?

 
இயேசுவின் முன்னோர் என மத்தேயு 1:1-14 என்பதில் ஆபிரகாமிலிருந்து தொடங்குவதில், ஏசு 41வது தலைமுறை (KJVபடி 40, RSVபடி 41)
மத்தேயுபடி ஒரு தலைமுறை 25 வருடம் எனில் ஆபிரகாம்  பொ.மு11 வது நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் லூக்கா சுவிசேஷம் 3:22ல் ஆபிரகாமிலிருந்து தொடங்கி 57வது தலைமுறை ஏசு என்கிறது. லூக்கா கணக்கின்படி ஆபிரகாம் பொ.மு 16ம் நூற்றாண்டாகும்.

இன்னொரு கதை -ஆதியாகமம்: 12:10 - 20
கர்ட்தர் தேர்ந்தெடுத்த கானான் தேசத்தில் பஞ்சம் வர எகிப்து செல்ல எகிப்து மன்னன் ஆபிரகாம் மனைவி சாராளை காதலோடு நோக்குவதைத் தடுக்க சாராளைத் ஆபிரகாம் தங்கை என்றாராம்.

http://isakoran.blogspot.in/2012/07/blog-post_09.html

பிறகு மீண்டும் இதே கதை கேரார் நாட்டில்கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் சாராள் தங்கை என்றதாக கதை  ஆதியாகமம்20:1-11
 images?q=tbn:ANd9GcQKBtfDu4y6DmLI_BFUxS19Q0dxzty-8EPDj7gzwBmswgm48aNz

இந்த இரண்டு கதையில் ஆபிரகாமின் மனைவி கிழவி, இரண்டாவது கதையின் போது மாதவிடாய் நின்றுபோனவள். ஆனால் ஒரு நாட்டு ராஜா கிழவியை காதலுடன் பார்த்ததாக் கேவலமான கதை.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆபிரகாம் மகன் ஈசாக்கும் இதே கதை அதுவ்ம் இதே பிலிஸ்திய கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் எனக் கதை ஆதியாகமம்26:1-6

images?q=tbn:ANd9GcTM5urPqTnEPIG5bjfxxL-fSNfwI1aVPPDrQx_Q7HD64--btitb   images?q=tbn:ANd9GcR44HTZFCdIqoqX_J1cqVklkNKIv0rIT4cQxwCkme1jsjnYdkRvfw
ராஜா அபிமெலேக்கு என்பது பிலிஸ்தியப் பெயர். 8ஆம் நூற்றாண்டிற்குப் பின் வந்தவர்கள்.

இன்னுமொரு கதை ஆபிரகாம் கதையில் -
ஆதியாகமம்24:63 மாலையில் வெளியே வயல்புறம் சென்றபோது ஆபிரகாம்  கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டார்.64 ரெபேக்காவும் கண்களை உயர்த்தி ஈசாக்கைப் பார்த்தார். உடனே அவர் ஒட்டகத்தைவிட்டு இறங்கினார்.


ஒட்டகங்கள் ஒரு பழக்கப்பட்ட மிருகமாக மாற்றப்பட்டதுபொ.மு 10நூற்றாண்டு வாக்கில், பரவலாக பயன்பாட்டில் வந்தது மேலும் சில நூற்றாண்டிற்குப் பின். ஆனால் பொ,மு.2000 வாக்கிலான ஆபிரகாம் ஒட்டகம் பயன்படுத்தியதாகக் கதை

http://www.npr.org/2014/02/14/276782474/the-genesis-of-camels



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

28 ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான். 29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான்.

Chaldeans -கல்தேயர் -இப்பெயர்களே  பொ.மு. 1000- 600 இடையிலே தான்.
http://en.wikipedia.org/wiki/Chaldea

ஆபிரகாம் - இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது -இந்தக் கதைகள் பிதாக்கள் கர்த்தரிடம் செல்வாக்குடையவர்கள்-பாதுகாப்பு பெற்றவர்கள்,  மனைவிகள் அழகானவர்கள் எனக்காட்ட புனையப்பட்ட கதைகள்
Jewish Encyclopedia,
"From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity."

இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300௨00 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள்.
ஆய்வு நூல்-R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch”:
  images?q=tbn:ANd9GcTR9ISZnejrmwdq5MyoiFd_UWU4zElNOBulzAscH8TxOuPR17BXsQ

ஆதியாகமம்15:18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்" என்றார். 
இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள்அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300-200 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள்.

இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8

 பைபிள் பழைய - புதிய ஏற்பாடு எல்லாமே கட்டுக்கதை



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறித்தவ இலக்கிய வளம்

 
உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களுள் ஒருவரான புனித தோமையர்,   தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய சேரநாட்டிலுள்ள கொடுங்கல்லூர் என்னுமிடத்தில் கடல்வழியாக கி.பி. 52 ஆம் ஆண்டு வந்திறங்கினார்இன்றைய கேரளப் பகுதியான அன்றைய சேரநாட்டில்இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய கொள்கைகளைப் பற்றியும் சுமார் ஏழு ஆண்டுகளாகப்பரப்பி கொடுங்கல்லூருக்குப்  பக்கத்திலுள்ள மாலியங்கரைகரிக்கோணியின் பக்கத்திலுள்ளகொல்லம்வடக்கன் பறவூரின் பக்கத்திலுள்ள கொக்கமங்கலம்கொட்டக்காவு,  நிரணம்பாலையூர்  ,சாயல் என்னும் இடங்களில் தேவாலயங்களைக் கட்டினார்பின்னர் இன்றைய கன்னியாகுமரிமாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு என்னும் ஊரில் ஆலயம் ஒன்று கட்டினார்அவ்வாலயப்பணிமுடிவுறாத நிலையில் கடல் வழியாக சென்னையிலுள்ள மயிலாப்பூர் வந்தடைந்தார்.திருவிதாங்கோட்டிலுள்ள ஆலயம் அவரது காலத்தில் முடிவுறாததால் இன்றும் அவ்வாலயத்தைஅரைப்பள்ளி என்றே அழைக்கின்றனர்இது இன்றைய தமிழகத்தின் முதல் தேவாலயமாகும்.இவ்வாலயம் 25 அடி நீளமும் 15 அடி அகலமும் 10 அடி உயரமும் உடையதுஇவ்வாலயம் முழுவதும்கருங்கல்லால் கட்டப்பட்டதுபின்னர் இவ்வாலயத்தை முழுமையாகக் கட்டி முடித்தனர்.போர்த்துக்கீசியர்கள் இவ்வாலயத்திற்கு வருகை புரிந்துள்ளனர்இவ்வாலயம் தற்போது மலங்கராபாரம்பரிய சிரியன் திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ளதுஇந்த ஆலயத்தையும் சேர்த்து ஏழரைக்கோயில்களைத் தோமையர் கட்டினார் என்னும் கருத்து இன்றும் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
 
புனித தோமையர் மயிலாப்பூர் பகுதிகளில் மக்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி உபதேசம்செய்தார்இதனால் பலர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர்சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ளசின்னமலைக் குகையில் அடிக்கடி தங்கியிருந்தார்அதே காலத்தில் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்ததிருவள்ளுவரும் தோமையரும் நண்பர்களாக விளங்கினர்  என்னும் நம்பிக்கை இன்றும் மக்களிடம்காணப்படுகிறதுஇதை ஆதாரமாகக் கொண்டு நாவலாசிரியர் .நாசுப்பிரமணியம் அவர்கள் "தாமஸ்வந்தார்என்னும் நாவலை எழுதியுள்ளார்தோமையரின் மேல் வெறுப்புக் கொண்ட கொலைப்பாதகன்ஒருவன்,    புனித தோமையர் மலை என இன்று அனைவராலும் அழைக்கப்படும் மலையில்தோமையர் ஷெபம் செய்து கொண்டிருக்கும்போது முதுகில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான்.பின்னர் அவரது உடல்  இன்று சாந்தோம் ஆலயம் இருக்கும் இடத்தில்    அடக்கம் செய்யப்பட்டது.மயிலாப்பூரில் தோமையர் கட்டிய ஆலயத்தில் அவரது உடலை  அடக்கம் பண்ணினர் என்னும்கருத்தும் உண்டு.
 
கி.பி. 250 ஆம் ஆண்டு சிரியா நாட்டில் எழுதப்பட்ட அருள் தொண்டரின் அருளுரைகள் என்னும் நூல்தோமையர் தமிழகத்தில் ஆற்றிய பணிகளைக் குறிப்பிடுகின்றது.   இசுபியஸ் என்பவர்இந்தியாவிலுள்ள கிறித்தவர்களிடம் எபிரேய மொழியில் மத்தேயு எழுதிய நற்செய்தி நூலின் நகல்ஒன்று இருந்ததாகவும்அந்நகல் இயேசு கிறிஸ்துவின் பன்னிருசீடர்களுள் ஒருவரானபர்த்தலோமேயு விட்டுப்போனதாகக் கூறப்படுவதாகவும்   குறிப்பிட்டுள்ளார்இவர் மேலும் தமதுநூலில் 190 ஆம் ஆண்டிற்கு முன்னர் அலெக்சாண்டிரியா நாட்டைச் சார்ந்த பாண்டேனஸ்இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
 புனிதர் பர்த்தலோமேயுவின்  இந்திய அருட்பணி குறித்து இரண்டு பழைய சான்றுரைகள் உள்ளன.அவை நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த செசரியாவின் யூசிபியஸ்  உடையதும்நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த புனிதர்  ஜெரோம் உடையதும் ஆகும்இரண்டாம்நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்ததாகக் கூறப்படும் பாண்டேனசது வருகை பற்றிப்பேசும்போது இந்த மரபுவழிச் செய்தி பற்றி இவை கூறுகின்றன.  அருட்தந்தை .சிபெருமாலில் மற்றும் மொரோஸ் ஆகியோரது ஆய்வுகள்பழைய கல்யாண் பட்டணம் என்றுஅறியப்பட்டிருக்கக்கூடிய பகுதியாகிய கொங்கணக்கரையின் மும்பைப் பகுதிதான் புனிதர்பர்த்தலோமேயுவின் அருட்பணி நிகழ்வுகளுக்குக் களமாய் அமைந்ததாகக் கூறுகின்றன.
 
 சுமார் 295-300 ஆம் ஆண்டுகளுக்கிடையில் மொசபொத்தோமியாவிலுள்ள கண்காணியர் டூடி என்றதாவீது என்பவர்  இந்தியாவிற்கு வருகை புரிந்து நற்செய்தியை அறிவித்தார் என ஆதாரபூர்வமானக்குறிப்பு காணப்படுகிறதுஅலெக்சாண்டிரியா நாட்டைச் சார்ந்த காஸ்மாஸ் என்னும் கிறித்தவ வணிகர்கி.பி. 522 ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள சேரநாட்டில் கிறித்தவர்கள் இருந்தது பற்றித் தமது"உலகெங்கும் உள்ள கிறித்தவ உறைவிடங்கள்என்னும் நூலில் எழுதியுள்ளார்அகழ்வாய்வின்போதுஎட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட கல்லில் செதுக்கப்பட்ட சிலுவைகள்தோமையர் மலைகோட்டயம்மைசூரிலுள்ள கோலார் என்னும் இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன.இச்சிலுவைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவைஇச்சிலுவைகள் பீடத்தின் மேலுள்ளன.மேல்பகுதியிலிருந்து புறா இறங்கி வருவது போன்று உள்ளதுஇவற்றைச் சுற்றி ஓர் ஒளி வட்டம்இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதுஇவ்வளைவில் பாலி மொழியில் எழுதப்பட்டுள்ளதுமேலும்இச் சிலுவையில் சிரியக் மொழியில்  "நானோ நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்சிலுவையைப் பற்றியே அல்லாமல் வேறொன்றையும் பற்றி ஒருக்காலும் பெருமைபாராட்டாதிருப்பேனாகஎன்னும் கலாத்தியர் ஆறாம் அதிகாரத்திலுள்ள பதிநான்காம் வசனம்பொறிக்கப்பட்டுள்ளதுதியோடர் என்பவர் பிரான்ஸ் நாட்டிலுள்ள கிரகரி என்னும் கண்காணியாரிடம்தோமையர் அடக்கம் பண்ணப்பட்ட இடத்தில் ஓர் ஆலயத்தையும் மடத்தையும் பாஈர்த்ததாகக்கூறியுள்ளார்இச்செய்தியை கிரகரி என்பவர் கி.பி. 590 இல் எழுதியுள்ளார்இவற்றை ஆதாரமாகக்கொண்டு தமிழகத்தில் அக்காலத்தில் கிறித்தவர்கள் வாழ்ந்து வந்தனர் என்று உறுதி செய்துள்ளனர்.
 
தோமையர் அடக்கம் பண்ணப்பட்ட இடத்தை ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்தஅர்மீனியர்கள் கண்டுபிடித்து அவ்விடத்தில் ஓர் ஆலயத்தைக் கட்டினர் என்னும் செய்தியும் உள்ளது.இந்தியாவிற்கு வருகை தந்த அர்மீனியர்கள் பெர்ஜியா(ஈரான்), அர்மேனியா(ஈராக்மற்றும்மெசபடோமியா நாட்டைச் சார்ந்தவர்களாவர்.   இன்றும் சென்னையிலுள்ள உயர்நீதிமன்றத்தின்எதிர்திசையில் உள்ள அர்மீனியன் தெருவில் அர்மீனியர்களால் 1772 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயம்உள்ளதுஇவ்வாலயத்தின் மணிக்கோபுரத்தில் ஆறு மணிகள் உள்ளனசென்னையிலுள்ள ஆலயமணிகளில் இம்மணிகளே அளவில் பெரியதும் எடையில் அதிகமானதுமாகும்.
 
மார்க்கோபோலோ  என்னும் வெனீசிய பயணி 1288 இலும் 1292 இலும் வந்தார்அவர்  தமதுபயணத்தின்போது தோமையரின் கல்லறையைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.   மார்க்கோபோலோ24 ஆண்டுகளாகப் பல பல நாடுகளில் பயணம் செய்து 24000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளார்.மத்திய ஐரோப்பாவின் மிகப் பிரபலமான நூல்களில் ஒன்றாக மார்க்கோபோலோவின் நூல்காணப்பட்டதுஅமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகப் புகழப்படும் கிறிஸ்டோபர் கொலம்பஸ்இந்நூலின் பிரதி ஒன்றினை வைத்திருந்தார்.
பல நூற்றாண்டுகளாகக் கடல் வழி மறந்து போனமையினால் இந்தியாவிற்கு வருபவர்களின்எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்பட்டதுபருவக்காற்று வீசும் மாதங்களையும் கடல்வழிகளையும் தெரிந்தவர்களால் மட்டுமே அக்காலத்தில் பயணம் செய்ய முடியும்மேலும்அக்காலத்தில் கடல் பயணம் என்பது மிகவும் துன்பமயமானதுஇத்தகைய சூழலில் போர்ச்சுக்கீசியநாட்டைச் சேர்ந்த வாஸ்கோட காமா என்பவர் இந்தியாவிற்கான கடல்வழியைக் கண்டுபிடிக்கவேண்டும் என்னும் நோக்கத்தில் லிஸ்பன் என்னும் துறைமுகத்திலிருந்து 1497 ஆம் ஆண்டு ஷூலை18 ஆம் நாள் தமது பயணத்தை மேற்கொண்டார்பல்வேறு தடைகளுக்குப் பின்னர் 1498 ஆம் ஆண்டுமே மாதம் 22 ஆம் நாள் கள்ளிக்கோட்டை (கோழிக்கோடுதுறைமுகத்தை அடைந்தார்.வாஸ்கோடகாமா மூன்றாவது முறை வருகையின்போது கொச்சியில் வைத்து 1524 ஆம் ஆண்டுடிசம்பர் 24 ஆம் நாள் மரணம் அடைந்தார்.  வாஸ்கோடகாமாவால் கொச்சியில் கட்டப்பட்டஆலயத்தில் அவர் அடக்கம் பண்ணப்பட்டார்பின்னர் அவரது மகன் கொச்சி வந்தடைந்துஅவரதுஎலும்புகளை எடுத்துக் கொண்டு சென்று தமது நாட்டில் அடக்கம் செய்தார்வாஸ்கோடகாமாஇந்தியாவிற்குக் கடல்வழியைக் கண்டுபிடித்ததால் அதன் பின்னர் அவ்வழியைப் பயன்படுத்திப்பல்வேறு நாட்டு இறைத்தொண்டர்களும்பயணிகளும்வணிகர்களும் இந்தியாவிற்கு வரத்தொடங்கினர்இவர்களது வருகையினால் இந்தியாகுறிப்பாகதமிழகம் சொல்லி முடியாத பல்வேறுவளர்ச்சிகளைப் பெற்றது.
 
போர்ச்சுக்கீசியர்கள் கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்   வியாபாரம் மற்றும்சமயப்பணி செய்து வந்தனர்இவர்கள் குறிப்பாக கன்னியாகுமரி முதல் வேம்பார் வரையிலுள்ளமுத்துக்குளித்துறையினைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்முத்துக்குளித்துறையின்தலைமையிடமாகத் தூத்துக்குடி விளங்கியது.    பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள்மயிலாப்பூரிலுள்ள புனித தோமையாரின் கல்லறை இருந்த இடத்தில் ஓர் ஆலயத்தைப் புதிதாகக் கட்டினர்காலப்போக்கில் அவ்வாலயம் அழியத் தொடங்கியதுதற்போதுள்ள சாந்தோம் ஆலயம் 1893ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.  


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இயேசு சபைத்துறவி  புனித பிரான்சிஸ் சவேரியார் (1506-1552) என்பவர்இந்தியாவில் இறைப்பணியாற்றுவதற்காக  1542 மே மாதம் 6 ஆம் நாள் கோவா வந்தடைந்தார்முதல்நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகக் கடற்கரைக்கிராமங்களிலும் தமது இறைப்பணியைச் செய்தார்முதலில் தூத்துக்குடியை அடுத்துள்ளபழையகாயல் என்னும் இடத்தில் இறைப்பணியாற்றினார். 1543 ஆம் ஆண்டு   கன்னியாகுமரிமாவட்டத்தில் தம் இறைப்பணியைத்  தொடர்ந்தார்சுமார் பதினைந்து மாதங்கள்  இப்பகுதியிலுள்ளகிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசுகிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார்.    குமரிமாவட்டத்திலுள்ள கோட்டாறு என்னும் இடத்தில்  புனித சவேரியார் ஆலயம் ஒன்று கட்டினார்.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்பாடு என்னும் இடத்தில் அவர் தங்கியிருந்த குகைமற்றும்அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன இன்றும் உள்ளனஅந்தக் கிணறு கடற்கரையில் உள்ளது.ஆனால் அதன்  தண்ணீர் உப்புத் தன்மை இல்லாத நல்ல குடிநீராக இன்றும் புதுமையாகக்காணப்படுகின்றது
  
புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை  வழியாகப் பயணம் செய்துஇறைப்பணியாற்றினார்.  காயல்பட்டினம்தூத்துக்குடிமணப்பாடுதிருவிதாங்கூர்  தேசம்கோவளம்,யாழ்ப்பாணம்மன்னார்,   மயிலாப்பூர்மலாக்கா தீவு, ஜப்பான்காங்கோசிமா தீவுபீரந்தோ நகர்,அமங்குஷி நகர்மெய்யாக்கோ நகர்பொங்கோ நகர்,     சஞ்சியான் தீவு என்னும்  பல இடங்களுக்கு,நாடுகளுக்குதீவுகளுக்குச் சென்று இறைப்பணி செய்தார்இறுதியாக சஞ்சியான்  தீவில்   நோயால்பாதிக்கப்பட்டார்.  புனித சவேரியார் 1552 ஆம்  ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் மரணமடைந்தார்.  கோவா அரசாங்கத்தின் உதவியுடன்    சுமார் 460 ஆண்டுகள் கழிந்த   பின்னரும்   இப்புனிதரின் உடல்இன்றும் மக்கள் பார்க்கும்படியாகவே காணப்படுகின்றது.
 
போர்ச்சுக்கீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள் தமிழகத்திற்கு வந்தனர். 1609 ஆம் ஆண்டுசென்னைக்கு அருகிலுள்ள பழவேற்காடு (புலிக்கட்என்னுமிடத்தில் டச்சுக்காரர்கள் கோட்டையைக்கட்டினர்இந்தியாவுடன் வாணிகம் செய்யும் நோக்கத்துடன் 1616 இல் டச்சுக் கிழக்கிந்திய கம்பெனிஉருவானது. 1620 இல் தரங்கம்பாடியில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினர்இவர்களைத்தொடர்ந்து 1625 இல்   ஆங்கிலேயர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்தனர்ஆங்கிலேயர்களைத்தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிப் பகுதியில் வந்து காலடி பதித்தனர்போர்ச்சுக்கீசியர்கள்,டச்சுக்காரர்கள்ஆங்கிலேயர்கள்பிரெஞ்சுக்காரர்கள் ஆகிய நான்கு வகையினரும் தமிழகத்தில்வாணிபம் செய்வது அவர்களது கொள்கையாக இருப்பினும் சமயம் மற்றும் சமூகப் பணி அவர்களதுமைய நோக்கமாகவும் செயல்பாடாகவும் இருந்தது மறுக்கமுடியாத உண்மை.
 
இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதல் அச்சு நூல் வெளியானது.  அந்த நூலின் பெயர் கார்டிலா என்பதாகும்இந்தியாவுக்கு அச்சு இயந்திரம் வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்குமுன்னதாகவே, 1554 இல் லிஸ்பன் நகரில்   இத்தமிழ்ப் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதுஇந்த நூல் 38 பக்கங்கள் கொண்டதுபோர்ச்சுகீசிய மொழி தெரிந்த  தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத கிறித்தவ இறைத்தொண்டர்களுக்கு உதவும் வகையில் தமிழ் உச்சரிப்பில் வேதவாசகங்களைக்கூறுவதற்காக இந்நூல் உருவாக்கப்பட்டது.  போர்ச்சுகீசிய அரசரின் அழைப்பின்பேரில்முத்துக்குளித்துறை  எனப்படும்  தூத்துக்குடி  பகுதியிலிருந்து மூன்றுபேர் லிஸ்பர்ன் நகர் சென்றுஇந்நூல் உருவாக்கத்திற்கு உதவினர்.   இந்த நூலின் ஒரே ஒரு மூலப் பிரதி லிஸ்பனை அடுத்து உள்ளபெலெம் நகரில் உள்ள மானுடவியல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது
                புனித சவேரியாரைத் தொடர்ந்து இயேசு சபைத் துறவியர் பலர் தமிழகத்திற்குவந்தவண்ணமாக இருந்தனர்அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் போர்ச்சுக்கீசியரான  அன்டிரிக்குஅடிகளாராவார்.  இவர் தம்பிரான் வணக்கம் (1578), கிரீசித்தியானி வணக்கம் (1579) என்னும் நூல்களைகொல்லம்கொச்சி என்னும் இடங்களில் அச்சிட்டு வெளியிட்டார்இவ்விரண்டு நூல்களின் மூலமேஅன்றைய மக்கள் கிறித்தவ சமயத்தின் உண்மைகளை சிறிது அறிந்து கொண்டனர்.   இந்நூற்களைத்தொடர்ந்து அடியவர் வரலாறு என்னும் நூலை 1586 ஆம் ஆண்டு வெளியிட்டார்இக்காலக்கட்டத்தில்அண்டிரீக்கு அடிகளாரின் வேண்டுகோளுக்கிணங்க திருநெல்வேலி  மாவட்டத்திலுள்ளபுன்னைக்காயலைச் சேர்ந்த அந்தோனி என்பவர்   சந்தந்தோனியார் அம்மானை (புனித பதுவைஅந்தோனியார் அம்மானைஎன்னும் நூலை எழுதினார்ஆனால் இந்நூல் முதல் பதிப்பாக 1892 ஆம்ஆண்டு இலங்கையில் வெளியிடப்பட்டதுதமிழ் அச்சுக்கலையின் தந்தை அன்டிரீக்கு அடிகளார்என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் காலத்தில் புன்னைக்காயல்கொல்லம்கொச்சி ஆகிய இடங்களில்காணப்பட்ட அச்சகங்கள் பல்வேறு உள்நாட்டுப் போர்களின் காரணமாக அழிந்திருக்கலாம்.
 
                தத்துவப்போதகர் என்று அழைக்கப்பட்ட ராபர்ட்-டி-நொபிலி 1605 ஆம் ஆண்டு கோவாவந்தடைந்தார்இவர் தமிழகம் வந்து தமிழைக் கற்று தமிழ் உரைநடையின் தந்தை என அழைக்கும்வகையில் பல நூல்களை எழுதினார்இவர் எழுதிய சுமார் 48 நூல்களுள் ஞானோபதேசம்ஆத்மநிருணயம்அஞ்ஞான நிவாரணம்திவ்விய மந்திரிகைதத்துவக் கண்ணாடிஞான சஞ்சீவி,இயேசுவின் சரிதம்சிலுவையின் விசேச சல்லாபம்வியாகுல பிரசங்கம்தவக்காலப் பிரசங்கம்,வெள்ளிக்கிழமை பிரசங்கம்புனர்ஜென்ம ஆட்சேபம் என்பன குறிப்பிடத்தக்கன.
                சீர்திருத்தச் சபையின் முதல் இறைத்தொண்டரான செர்மன் நாட்டைச் சேர்ந்த அருள்திரு.பர்த்தலோமேயு சீகன்பால்கு (1683-1719) தரங்கம்பாடிக்கு 1706 ஆம் ஆண்டு வந்தடைந்தார்தமது முழுமுயற்சியுடன் விரைவாகத் தமிழ் மொழியைக் கற்றார்விவிலியத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில்மொழிபெயர்த்தார். 1708 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் தமது நண்பனுக்கு எழுதிய கடிதத்தில்தாம் தமிழில் 14 நூற்களை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.   சீகன்பால்கு 1713 இல் Book of Hymns Set to Malabaric Music என்னும் பாடல் தொகுப்புநூலை வெளியிட்டார்இவை ஞானப்பாட்டுகள் என்றும்வழங்கப்படுகின்றன.  இந்நூலில் 48 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.   செர்மன்ஆங்கிலமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட   தமிழ் வழிபாட்டுப் பாடல்களை அவற்றிற்குரியஇசைமரபுப்படி மக்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பாடிப் பரவசமடைந்தனர்.    இப்பாடல்களேகிறித்தவக் கீர்த்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்தன. 1714 ஆம் ஆண்டு நான்கு நற்செய்திநூல்களும் அப்போஸ்தல நடபடிகளும் நூலாக வெளிவந்தனஎஞ்சிய  நூல்கள் 1715 ஆம் ஆண்டுவெளியாயின.  புதிய ஏற்பாடு முழுவதும் நூலாக வெளிவந்த பின்புபழைய ஏற்பாட்டைமொழிபெயர்க்க  ஆரம்பித்தார்பழைய ஏற்பாட்டில் ரூத்தின் புத்தகம் வரை அவரால் மொழிபெயர்க்கமுடிந்ததுசீகன்பால்கு 36 ஆவது வயதில் காலமானது கிறித்தவ இலக்கியத்திற்குப் பேரிழப்பாகும்
                 
 சீகன்பால்குவைத் தொடர்ந்து இத்தாலி நாட்டைச் சார்ந்த வீரமாமுனிவர் 1711 ஆம் ஆண்டில் மதுரைவந்தடைந்தார்தமிழ் மொழியை விரைவாகவும் ஆழமாகவும் கற்ற வீரமாமுனிவர்தமிழ்எழுத்துகளில் குறில்நெடில் ஆகியனவற்றில் காணப்பட்ட குழப்பத்தைப் போக்கினார்.   இவரதுதமிழ்ப்பணி சிற்றிலக்கியம்காப்பியம்உரைநடைஇலக்கணம்மொழிபெயர்ப்புஅகராதி எனவிரிவான எல்லையுடையதாக அமைந்தது.   சீர்திருத்தப் பிரிவைச் சார்ந்த சீகன்பால்குவும்கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்த வீரமாமுனிவரும் கிறித்தவ இலக்கிய உலகில் நல்லநெல்மணிகளை விதைத்தவர்களாவர்சீகன்பால்கு மொழிபெயர்ப்புப் பணியுடன் அச்சகம்காகிதத்தொழிற்சாலை ஆகியனவற்றை நிறுவிநூல்கள் மக்களின் கைகளில் கிடைக்க வழிவகுத்தார்.வீரமாமுனிவர் காப்பியம்சிற்றிலக்கியம்இலக்கணம்அகராதிஉரைநடைமொழிபெயர்ப்பு என்னும்வகைமைகளில் நூல்களைப் படைத்தார்.  இவ்விருவரின் பணிகள் தமிழக மக்களிடம் விழிப்புணர்வைஏற்படுத்தின.  விவிலியத்தைத் தமிழில் படித்தபின் இலக்கியஇலக்கணப் புலமையுடையவர்கள்கிறித்தவ இலக்கியங்கள் படைக்க ஆரம்பித்தனர்அவர்களுள் முதன்மையானவர் வேதநாயகசாஸ்திரியாராவார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 1774 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் பிறந்த வேதநாயக சாஸ்திரியாருக்குக்   கவிபாடும் திறன்  இயல்பாகவே அமைந்திருந்தது.            


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  தமிழ் இலக்கியப் போக்கு, தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கிய மரபுஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நூல்களை வேதநாயக சாஸ்திரியார் படைத்தார் பல்வேறுநூல்களை எழுதிக் கிறித்தவ இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெறுவதுடன் கிறித்தவ இலக்கியவளர்ச்சிக்கு ஆதாரமாகவும் அமைகிறார். வேதநாயக சாஸ்திரியார் சுமார் 77 சிறிய அளவிலானஉரைநடை நூல்களை எழுதியுள்ளார். சாஸ்திரியார் தமது கீர்த்தனைகள் மூலமாகவே தமிழ்க்கிறித்தவர்களிடம் பெரிதும் அறியப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏறத்தாழ ஐநூறுஞானப்பதக் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். சாஸ்திரியார் நாட்டுப்புறப் பாடல் நடையைத் தழுவிகீர்த்தனைகளை எழுதியுள்ளார் என்றாலும் இசை மேதைகளின் நுண்ணிய ராகதாளங்களின்அடிப்படையிலும் எழுதியுள்ளமை நோக்கத்தக்கது.   வேதநாயக சாஸ்திரியாரோடு மிகவும் நெருங்கியநட்புறவு கொண்டவர் டாக்டர் ஜி.யு. போப் அவர்களாவர். வேதநாயக சாஸ்திரியாரோடு கிரேக்கப்புலவரான ஹோமரை ஜி.யு. போப் ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.   வேதநாயக சாஸ்திரியார் தன்னிடம்வந்த பல அயல்நாட்டு இறைத்தொண்டர்களுக்கும் நம்நாட்டவர்க்கும் கீர்த்தனைகள் பாடும்முறைமையைக் கற்றுக் கொடுத்தார். அதனால் கீர்த்தனைகள் பாடும் வழக்கம் அக்காலத்தில் பலஇடங்களுக்கும் வேகமாகப் பரவியது.
 
திருச்சபைகளில் பொதுவாகப் பயன்படுத்துவதற்குரிய கிறிஸ்தவக் கீர்த்தனை நூலுக்கு ஆதாரமாகஇருந்தவர் அருள்திருவெப்இவர் 1846 இல் அமெரிக்கன் மிசன் மூலம் மதுரையில்இறைப்பணியாற்ற வந்தார்மதுரையில் இறைப்பணியாற்றிக் கொண்டிருக்கும்போது தமிழ்க்கீர்த்தனைகளில் அதிக ஆர்வம் உடையவராக விளங்கினார்தஞ்சாவூரில் வாழ்ந்து வந்த வேதநாயகசாஸ்திரியாரின் கிறிஸ்தவ இலக்கியப் பணிகளையும்அவரது படைப்பாற்றலைப் பற்றியும்கேள்விப்பட்டார்ஆர்வமிகுதியினால் சாஸ்திரியாரை நேரில் சென்று பார்த்து அவருடையகிறிஸ்தவப் பணியையும் குறிப்பாகக் கீர்த்தனைகள் இயற்றும் புலமையையும் அறிந்து கொண்டார்.
 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இந்நேரடி சந்திப்பின் மூலம் பெற்ற அனுபவங்களைச் சபை மக்களுக்கு நயம்பட எடுத்துக் கூறிசாஸ்திரியாரின் கீர்த்தனைகளைச் சபையில் அறிமுகப்படுத்தினார்கீர்த்தனைகளைப் பாடபயிற்சிதேவைப்பட்டதால் வெப் 1852 ஆம் ஆண்டு தம்முடன் எட்டு இளைஞர்களை அழைத்துக் கொண்டுசாஸ்திரியாரிடம் சென்றுஅவரிடம் கீர்த்தனைகளைப் பாடும் முறை பற்றியும்அதில்பயன்படுத்தப்பட்டுள்ள இராகதாள முறை பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார்பயிற்சி பெற்றஇவர்கள் சபை மக்களுக்குக் கீர்த்தனைகள் பாடும் முறைபற்றி விளக்கினர்மக்களும்கீர்த்தனைகளைப் பாட ஆரம்பித்தனர்மக்களின் கைகளில் ஞானப்பாடல் இருப்பது போன்றுகீர்த்தனைகளும் இருக்கவேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் வெப் போதகர் 1853 ஆம் ஆண்டுஞான கீதங்கள் என்னும் நூலைத் தொகுத்து வெளியிட்டார்இதுவே கீர்த்தனைகளின் முதல் தொகுப்புநூல்இந்நூலில் சாஸ்திரியாரின் பாடல்களை வெளியிட வெப் போதகர் சாஸ்திரியாரிடம் அனுமதிபெற்றிருந்தார்
 
இக்கீர்த்தனை நூலுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருந்ததுகீர்த்தனைகளை எவ்வாறு பாடவேண்டும் என்பதை சாஸ்திரியாரிடம் பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் கிராமம் கிராமமாகச் சென்றுகற்றுக் கொடுத்து கிறிஸ்தவக் கீர்த்தனைகளைப் பாடுவதற்கு ஊக்கம் கொடுத்தனர்இதன் பின்னர்கிறித்தவத் தாய்மொழிக் கல்விக் கழகம்  இந்நூலை 1870க்கு முன்னர் இருமுறை மறுபதிப்புச் செய்தது.
 
வேதநாயக சாஸ்திரியார் வாழ்ந்த காலக்கட்டத்தில்அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராயர்கால்டுவெல்      இடையன்குடியில் 1838 ஆம் ஆண்டு  தமது   இறைப்பணியைத் தொடங்கினார்.கால்டுவெல்லின் படைப்புகளில் மிகவும் சிறப்பாக இன்றும் பேசப்பட்டுவருவது திராவிடமொழிகளின்ஒப்பிலக்கணம் என்னும் நூலாகும்இந்நூலை 1856 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.கால்டுவெல் பதினைந்து ஆண்டுகள் ஆராய்ச்சி செய்ததன் விளைவாக இந்நூல் எழுதப்பட்டதுதென்னாட்டு மொழிகளையும் வடநாட்டு மொழிகளையும் ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டதுதிராவிடமொழிகள் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை முதன்முதலாக உலகிற்கு உணர்த்தியவர்  கால்டுவெல்இவ்வாராய்ச்சிக்காக கிளாஸ்கோ பல்கலைக்கழகம் கால்டுவெல்லிற்கு டாக்டர் பட்டம்வழங்கியது.      கால்டுவெல் பதினெட்டு மொழிகளில் புலமையுடையவராகத் திகழ்ந்தார்.   திருநெல்வேலி வரலாறு என்னும் நூலிற்காக அன்றைய அரசுகால்டுவெல் பேராயருக்கு ரூபாய்ஆயிரம் நன்கொடை அளித்ததுநற்கருணை தியானமாலை என்னும் நூலில் அழகிய தமிழ் நடையில்மேலைநாட்டு நூல்களை அடிப்படையாகக் கொண்டு ஷெபங்கள் எழுதப்பட்டுள்ளனகால்டுவெல்தமிழ்மொழிக்காக ஆற்றிய பணிதமிழக மக்களிடையே கிறித்தவ இறைத்தொண்டர்களின்மதிப்பினை உயரச் செய்தது.       
 
1888 ஆம் ஆண்டு அக்டோபர் பன்னிரண்டாம் நாள் இறைத்தொண்டராக இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட அருள்திருஸ்தொஷ்,  தமிழகத்தில் ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து இறைப்பணி செய்தார்.  இவர்தரங்கம்பாடியிலிருந்த அச்சகத்தின் மேலாளராகவும்   பணிபுரிந்தார்இவர் தரங்கன்பாடி லுத்தரன்மிசன் அச்சகத்தின் மூலம் 1891 ஆம் ஆண்டு கிறிஸ்து மான்மியம் என்னும் கிறித்தவக் காப்பியத்தைவெளியிட்டார்.   மதுரை மாவட்டத்தில் அரசாங்கப் பணி செய்து வந்த ஸ்காட்  என்னும் ஆங்கிலேயர், 1891 ஆம் ஆண்டு சுவிசேட புராணம் என்னும் காப்பியத்தை மதுரை கிளக்ஹார்ன் அச்சாபீஸ் மூலம்வெளியிட்டார்இவர் தமது பெயரைத் தமிழ் நடைக்கேற்ப சுகாத்தியர் என மாற்றியிருப்பதன் மூலம்இவரது தமிழ்ப் பற்றினை உணர்ந்து கொள்ள முடிகிறது
 
இலங்கை நாட்டினரும் கிறித்தவ இலக்கியத்திற்குப் பெரும் பாங்காற்றியுள்ளனர்இலங்கைக்கிறித்தவர்கள்  காப்பியம்சிற்றிலக்கியம்கீர்த்தனைமொழிபெயர்ப்புஅகராதிநாவல்சிறுகதை,கவிதை என அனைத்து வகைமைகளிலும் கிறித்தவ இலக்கியங்கள் படைத்துள்ளனர்.  இவர்களதுபடைப்புகள் பலநிலைகளிலும் சிறப்பு வாய்ந்தனவாக உள்ளன.    இலங்கையில் வெளிவந்த கிறித்தவஇலக்கியம் தேவஅருள் வேதபுராணம் எனப்படுகிறதுஇதன் ஆசிரியர் 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தசாங்கோபாங்கர் கொன்சலாஸ் சுவாமிகள் (1676-1742) ஆவார்.   இவர் 1676 ஆம் ஆண்டு  இந்தியாவிலுள்ள கோவா மாநிலத்தில்  பிறந்தார்.    கோவாவில் இறையியல் பட்டம் பெற்ற பின்னர்    இலங்கைக்கு இறைப்பணியாற்றச் சென்றார்இவர் தமிழ் மொழியைக் கற்று   கிறித்தவ நூல்கள் பலபடைத்து இலங்கையில் 27 ஆண்டு காலம் இறைப்பணியாற்றினார்.  இலங்கையில் 'வியத்தகுவிண்மீன்'  எனப் புகழப் பெற்றவர்.  சாங்கோபாங்கர் கொன்சலால் சுவாமிகளின் படைப்புகள்  இலங்கையிலுள்ள கத்தோலிக்கக் கிறித்தவத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளனஇவர்சுவிசேச விரித்துரைகள்,  சுகிர்த குறள்அற்புத வரலாறுவியாகுலப் பிரசங்கம்தேவஅருள்வேதபுராணம்தர்ம உத்தியானம்ஞான உணர்த்துதல் என தமிழிலும் சிங்களத்திலுமாக சுமார் 35நூல்களை எழுதியுள்ளார்.        கொன்சாலஸ் சுவாமிகள் எழுதிய பழையபுதிய ஏற்பாட்டுச் சரித்திரம்என்னும் நூலே தேவஅருள் வேதபுராணம் என அழைக்கப்படுகிறதுஇந்நூல் 1725 ஆம் ஆண்டுஉரைநடை வடிவில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இவரைத் தொடர்ந்து இலங்கை நாட்டினர் காப்பியம்சிற்றிலக்கியம்மொழிபெயர்ப்புகீர்த்தனை,புனைகதை எனப் பல வகைமைகளில் கிறித்தவ இலக்கியத்திற்குத் தமது பங்களிப்பைச்செய்துள்ளனர்இலங்கையில் யோசேப்புப் புராணம்திருவாக்குப் புராணம்ஞானானந்த புராணம்,திருச்செல்வர் காவியம்நசரேய புராணம்இயேசு புராணம் என்னும் ஆறு காப்பியங்கள்வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
மேலைநாட்டு இறைத்தொண்டர்களின் படைப்புகளுக்கு சீகன்பால்குவும் வீரமாமுனிவரும்முன்னோடிகளாக இருந்ததைப் போன்று தமிழ்க் கிறித்தவ இலக்கியப் படைப்பாளர்களுக்குவேதநாயக சாஸ்திரியார் முன்னோடியாக இருந்தார்வேதநாயக சாஸ்திரியாரின் பல்வகைப்படைப்புகள் மக்களுக்கு மிகவும் உந்துதலாக அமைந்திருந்தனசாஸ்திரியார் கிறித்தவர்களுக்குத்தமது இலக்கியங்களின் மூலம் பக்தி உணர்வும் விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்ஆலயங்களில்மேலைநாட்டு இறைத்தொண்டர்களின் காலத்தில் மொழிபெயர்ப்புப் பாடல்களும் வேதநாயகசாஸ்திரியாரின் கீர்த்தனைகளும் பாடப்பட்டனவேதநாயக சாஸ்திரியாரின் கீர்த்தனைகளைப் பாடிப்பரவசமடைந்தவர்களுள் விவிலியம்இலக்கணம்கவிதைப் புலமை உடையவர்கள் புதிதாகக்கீர்த்தனைகளை இயற்றினர்அவர்களுள் ஷான்பால்மர்ஞாசாமுவேல்தேவவரம் முன்ஜியார்,மரியான் உபதேசியார்ஜி.எஸ்வேதநாயகர்வேமாசிலாமணிசந்தியாகுஆபிரகாம் பண்டிதர்ஆகியோரைச் சில சான்றுகளாகச் சுட்டலாம்கீர்த்தனைக் கவிஞர்களின் கீர்த்தனைகள் மக்களின்பக்தி வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினஇக்கீர்த்தனைகளும் கிறித்தவ இலக்கியவளர்ச்சிக்குப் பெரிதும் துணை நின்றனஇன்று புத்தெழுச்சிப் பாடல்களின் வரவினால்கீர்த்தனைகளைப் பாடிவருவது வெகுவாகக் குறைந்து வருகின்றது என்பது வருந்தத்தக்கசெய்தியாகும்.
 
ஞானப்பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெற்றி பெற்றதை ஆதாரமாகக்கொண்டுஆங்கிலத்தில் எழுதப்பட்ட பல கிறித்தவ இலக்கியங்கள் தமிழில் எழுதப்பட்டனஅதைப்போல சிலநூல்கள் தமிழில் தழுவல் முறையில் எழுதப்பட்டனஜான் மில்டனின்  Paradise Lost, Paradise Regainedஆகிய நூல்கள் அருள்திருவேதக்கண் அவர்களால் ஆதிநந்தாவனப் பிரளயம்ஆதிநந்தாவன மீட்சிஎன்னும் கீர்த்தனை நாடங்களாகக் கொண்டு வரப்பட்டனமில்டனின் சிம்சோன் என்னும் நூல்மாமல்லன் சிம்சோன் என மொழிபெயர்க்கப்பட்டதுஜான்பனியனின்  Pilgirim Progress  என்னும் நூல்மோட்சப் பிரயாணம் என்னும் நூலாகத் தமிழில் அருள்திருசாமுவேல் பவுல் அவர்களால்மொழிபெயர்க்கப்பட்டதுஇம்மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு முதலில் சுவீகரனார்முத்திவழி அம்மானை என்னும் சிற்றிலக்கியத்தையும் பின்னர் எச்.கிருஷ்ணபிள்ளை இரட்சணியயாத்திரிகம் என்னும் காப்பியத்தையும் படைத்தனர்ஆங்கில இலக்கியத்தின் இருமகா கவிகளானபனியனும் மில்டனும் தமிழ்க் கிறித்தவ இலக்கியங்களின் வாயிலாக இன்றும் பேசப்பட்டுவருகின்றனர்.
 
மீதிஇருள் என்னும் முதல் கிறித்தவ நாவலை எழுதிய சிஅருமைநாயகம் அன்றைய கிறித்தவசமூகத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்இதைத் தொடர்ந்து எழுதிய கிறித்தவநாவலாசிரியர்களும் கிறித்தவ சிறுகதை ஆசிரியர்களும் கிறித்தவ சமூகத்தில் காணப்படுகின்றசிக்கல்களையும் இழிவுகளையும் வெட்ட வெளிச்சமாகப் படம் பிடித்துக் காட்டி வருகின்றனர்.இத்தகைய நடப்பியல் தன்மை ஏராளமான புனைகதை இலக்கியங்களைப் படைப்பதற்குஅடிப்படையாக இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.
 
கிறித்தவ இலக்கிய வகைமைகளில் சிற்றிலக்கியம் அதிக அளவில் படைக்கப்பட்டுள்ளதுகிறித்தவசிற்றிலக்கியத்தை வீரமாமுனிவர் அறிமுகப்படுத்தியவராக இருப்பினும்தமிழராகிய அந்தோனிஎன்பவரால் எழுதப்பட்ட சந்தந்தோனியார் அம்மானை முதல் கிறித்தவச்  சிற்றிலக்கியமாகவிளங்குகிறதுவீரமாமுனிவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக் கிறித்தவர்கள் கிறித்தவ உண்மைகளைஎளிமையாக விளக்க சிற்றிலக்கியத்தைக் கருவியாக எடுத்துக் கொண்டனர்பூரணி என்னும்புதுவகைச் சிற்றிலக்கியத்தைக் கிறித்தவப் படைப்பாளர்கள் அறிமுகப்படுத்தினர்மேலும்சிற்றிலக்கியங்களிலே பெரிய அளவிலான சிற்றிலக்கியமாக முத்திவழி அம்மானை திகழ்கிறது.கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் கிறித்தவக் கொள்கைகளை மட்டுமன்றி சமூகச் சீர்திருத்தக்கருத்துகளையும் விவரிக்கின்றனவேதநாயக சாஸ்திரியாரின் சாஸ்திரக்கும்மி மூடப்பழக்கவழக்கங்களைக் கண்டிக்கிறதுஅருள்திருமாசிலாமணியின் மதுகொண்டான்கதை மது உண்பதால்ஏற்படும் கேடுகளை விளக்கிக் காட்டுகிறதுகுமரி மாவட்டத்தில்  ஏராளமான கிறித்தவச்சிற்றிலக்கியங்களைப் படைத்த பெருமை திட்டூர் தேசிகரையேச் சாரும்கிறித்தவச்சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையை அளவிட்டுக் கூறவியலாதுஇவற்றில் பல அழிந்துவிட்டனஎன்பது வருத்தத்திற்குரியது.
 
விவிலியத்திலுள்ள மத்தேயுமாற்குலூக்காயோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்களைஆதாரமாகக் கொண்டு பல காப்பியங்களும் குறுங்காப்பியங்களும் படைக்கப்பட்டுள்ளனஇவைகிறிஸ்துவின் பிறப்பு முதல் அவர் பரலோகம் சென்றது வரையிலான நிகழ்வுகளைச் செய்யுள்வடிவில் தருகின்றனஇப்படைப்புகள் கிறித்தவ இலக்கிய வளர்ச்சிக்குச் சான்றுகளாக அமைகின்றன.விவிலியச் செய்திகளை மட்டுமல்லாது விவிலியத்திலுள்ள மாந்தர்களைஇறைத்தொண்டர்களைஅடிப்படையாகக் கொண்டும் காப்பியங்கள் படைக்கப்பட்டுள்ளனதேம்பாவணியைத் தொடர்ந்துஇன்றும் காப்பியப் படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 

 

1600 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழராகிய அந்தோனி என்பவரால் எழுதப்பட்ட சந்தந்தோனியார்அம்மானை (புனித பதுவை அந்தோனியார் அம்மானைமுதல்இன்றுவரை  வெளிவந்துகொண்டிருக்கும் வகையில் தனித்துவம் பெற்றனவாகக் கிறித்தவ இலக்கியங்கள் திகழ்கின்றன.  இக்கிறித்தவ இலக்கியங்களின் வரலாறுவளமைசெழுமைதனித்துவம் ஆகியவை கிறித்தவஇலக்கிய உலகில் நிலையாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன.  இவ்வளர்ச்சிக்கெல்லாம்மேலைநாட்டு இறைத்தொண்டர்களின் உழைப்பும் தியாகமும் என்பது மறுக்க முடியாத உண்மை.இக்கிறித்தவ இலக்கியங்கள் பற்றிய விழிப்புணர்வும் அவற்றைப் படிக்கும் ஆர்வமும் பாதுகாக்கும்உணர்வும் அவற்றை ஆய்வு செய்யும் தன்மையும் இன்று வளர்ந்து வருவது கண்கூடு.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard