புதிய ஏற்பாடு பொ.கா.30 வாக்கில் இறந்தவரான இயேசுவை கிறிஸ்து (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்கிறனர். ஆனால் பழைய ஏற்பாட்டில் தெளிவாக யூதரல்லாத பாரசீக மன்னர் கோரேசுவை கர்த்தர் கிறிஸ்து என சொன்னார்.
ஏசாயா 44: 26 கர்த்தர் அவரது வேலைக்காரர்களை ஜனங்களிடம் தமது செய்திகளைச் சொல்ல அனுப்புகிறார். கர்த்தர் அந்தச் செய்திகளை உண்மையாக்குகிறார். கர்த்தர் ஜனங்களிடம் அவர்கள் செய்யவேண்டியதைச் சொல்லத் தூதுவர்களை அனுப்புகிறார். கர்த்தர் அவர்களது ஆலோசனைகளை நிறைவேற்றுவார்.
தேவன் கோரேசை யூதாவைத் திரும்பக் கட்டத் தேர்ந்தெடுத்தார்
கர்த்தர் எருசலேமிடம் கூறுகிறார், “ஜனங்கள் மீண்டும் உன்னிடம் வாழ்வார்கள்!” யூதாவின் நகரங்களிடம் கர்த்தர் கூறுகிறார்:“நீங்கள் மீண்டும் கட்டப்படுவீர்கள்!” அழிந்துபோன நகரங்களிடம் கர்த்தர் கூறுகிறார்: “நகரங்களே! உங்களை மீண்டும் அமைப்பேன்”.
27 ஆழமான தண்ணீரிடம் கர்த்தர் கூறுகிறார்: “வற்றிப்போங்கள்!
நான் உங்கள் ஊற்றுகளை வற்றச் செய்வேன்!”
28 கர்த்தர் கோரேசிடம் கூறுகிறார்: “நீ எனது மேய்ப்பன்.
நான் விரும்புவதை நீ செய்வாய். நீ எருசலேமிடம் சொல்வாய், ‘நீ மீண்டும் கட்டப்படுவாய்’ நீ தேவாலயத்திடம் கூறுவாய், ‘உனது அஸ்திபாரம் மீண்டும் கட்டப்படும்!’”