ஆதியாகமம் 2: 16 ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம்.17 ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டுச் சொன்னார். |
கனியை மனிதன் சாப்பிட்டான். சாகாவில்லை. கர்த்தர் சொன்னது பலிக்கவில்லை. கர்த்தருக்கு சக்தி இல்லை.
ஆதியாகமம்3: 9 ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கேட்டார். 10 "உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்" என்றான் மனிதன். 11 "நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?" என்று கேட்டார். |
மனிதன் நல்லது கெட்டது என அறிய உதவும் பகுத்தறிவை பெறாமல், ஆடை அணிதல் அவசியம் என்பது உணராத மிருகமாகத்தான் கர்த்தர் விரும்புகிறார்.