மத்தேயு21: 23 இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும் போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, ' எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? ' என்று கேட்டார்கள்.24 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ' நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.25 யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா? ' என்று அவர் கேட்டார். அவர்கள், ″ ' விண்ணகத்திலிருந்து வந்தது ' என்போமானால், ' பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை ' எனக் கேட்பார்.26 ' மனிதரிடமிருந்து ' என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்″ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.27 எனவே அவர்கள் இயேசுவிடம், ' எங்களுக்குத் தெரியாது ' என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம், ' எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன் 'என்றார். |