நாம் கிழே காணும் வசனங்கள் பலமுறை மீண்டும் மீண்டும் திருப்பி கூறப்படுபவை. ஆனால் இவை மூல கிரேக்க பைபிளில் இல்லையே
யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது யோவான் 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். யோவான் 3:16தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனைவிசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில்விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 1யோவான் 4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது |
யோவான்1:14 வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார். யோவான் 1:18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரைவெளிப்படுத்தியுள்ளார். யோவான் 3:16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். யோவான் 3:18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. 1யோவான் 4:9 நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. |
முதலில் புனையப்பட்ட சுவிசேஷம் மாற்கு 65- 75 வாக்கில். அதல் கன்னிபிறப்பு, தேவனின் குமாரன் என்பது இல்லை.
சரி ஏசு குடும்பத்திலே இவர் ஒரே மகனா? பார்ப்போம்.
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் பைபிளியல் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் "The Real Jesus" என்ற தன் நூலில்
"The Conclusion usually (and I thingk rightyly) drawn from their Comparitive Study is that the Gospel of Mark (or something very like it) served as the source for the Gospels of Mattwhew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus (Convenientily called 'Q')....."
சுவிசேஷங்களை ஒன்று இணைத்துப் பார்க்கும் பைபிள் அறிஞர்கள் பெரும்பாலும் ஒருமுகமாக மாற்கு சுவி(அல்லது அது போல ஒன்று)அடிப்படையைக் கொண்டு மத்தேயூ லூக்கா சுவிகள் எழுதப்பட்டன, மேலும் ஏசு சோன்னவை என ஒரு செவி வழி தொகுப்பையும் சேர்த்து இவ்விரு சுவிகள் வந்தன.
மாற்கு சுவியில் ஏசு பிறப்பு அதிசயம் கிடையாது. ஏசுவிற்கு சகோதர சோகதரிகள் உண்டு.