பைபிளின் அடிப்படை ஆணிவேர் கதை- எபிரேயர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் - கானான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனின் அன்னியரான ஆபிர ஹாம் கர்த்தரால் தேர்ந்தெடுத்து அவர் வாரிசுகளுக்கு மட்டும் அரசியல் ஆட்சியுரிமை. பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எகிப்தியர் செய்த கொடுமைகளால் கர்த்தர் சொல்ல மோசே தலைமயில் 30 லட்சம் எபிரேயர்கள் எகிப்திலிருந்து வெளியேரி வந்ததாகக் கதை.
வழியில் இர்ந்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் அப்பக்கம் செல்ல துரத்தியவர்களை கடல் விழுங்கியதாம். பின்னர் சாக்கடலும் வழிவிட்டதாம். பின் கானான் நாட்டு மண்ணின் மைந்தர்களை கொலை செய்து அடிமைப்படுத்தி எபிரேயர்கள் தங்கள் பகுதியை கைப்பற்றியதாகக் கதை.
இதன் காலம் எப்போது-என்பதை தெரிந்தால் மட்டுமே வேறு ஆதாரம் மூலம் சரி பார்க்கலாம்.
பழைய ஏற்பாட்டில் உள்ள ஆபிரகாம் முதல் சாலமன் வரை யாரைப் பற்றியும் எவ்வித ஆதாரமும் நடுநிலையாளர் ஏற்கும்படி இல்லை. கதைகளில் நமக்கு காலம் குறிக்கவும் சரிபார்க்க சமகால நடுநிலை கல்வெட்டு எனில் 1ராஜா14:25- 26ல் சொல்லப்படும் எகிப்து மன்னன் சீசாக்கு என்பவர் கல்வெட்டு உள்ளது. இஸ்ரேல் முழுவதையும் சீசாக்கு வென்றதாக இவரது கல்வெட்டு சொல்கிறது. இது பைபிள் சொல்வதற்கு மாற்றாக இருப்பினும் காலம் குறிக்க உதவுகிறது.
1ராஜா14:25- ரெகபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான்.26 ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களையும் அரசனது அரண்மனையின் செல்வங்களையும் சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனான். 2நாளாகமம் 12:2ரெகபெயாம் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னன் சீசாக்கு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்தான்.3 சீசாக்கின் படையில் ஆயிரத்து இருநூறு தேர்களும், அறுபதாயிரம் குதிரைப்படை வீரரும் இருந்தனர்: அவனோடு எகிப்திலிருந்து எண்ணற்ற ஆள்கள்-லிபியர், சுக்கியர், எத்தியோப்பியர் வந்திருந்தனர்.4 அவன் யூதாவின் அரண்சூழ் நகர்களைக் கைப்பற்றியபின், எருசலேமுக்கு வந்தான். |
பவுல் பரிசுத்த ஆவி மேலே வர சொன்னதாக நம்க்கு வருபவை.
அப்போஸ்தலர் பணி13:17 இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாயரைத் தேர்ந்தெடுத்தார்: அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர்தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டுவந்தார்:18 நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலை நிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார்.19 அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்:20 அதன் பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம்வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார்.21 பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.22 பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்: அவரைக் குறித்து ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்: என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான் என்று சான்று பகர்ந்தார்.23 தாம் அளித்த வாக்குறுதியின் படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். |
மோசேயுடன் அலைதல்- 40 வருடம் + யோசுவா 40 +நியாதிபதிகள் 450 + சாமுவேல் 40 + சவுல் 40 + தாவீது 40 ; பிறகு சாலமன்.
இப்போது மேலுள்ள சீசாக்கின் காலம் வைத்து தாவிது ஆட்சி 1010–970 BCE எனபடுகிறது.