பொ.கா.முதல் நூற்றாண்டில் ரோமன் ஆட்சி இஸ்ரேலை அடிமைப்படுத்தி ஆண்டுவந்தபோது, ஆட்சிக்கு எதிராக ஆயுதப் புரட்சி செய்வோருக்கு தரப்படும் தூக்குமரத்தில் தொங்கும் தண்டனையால் இறந்ததானவர் இயேசு எனப்படும்கிறிஸ்துவ மதக் கதைகளின் நாயகர். இவர் காலகட்டத்தை ஒட்டி வாழ்ந்த யூத, ரோமன், எகிப்து ஆசிரியர்கள் எழுதிய நூல்கள் எதிலும் இவர் பெயர் -இயக்கம் பற்றி குறிப்பிடப்பட வில்லை.முதல் நூற்றாண்டு இறுதியில் ரோமன் எழுதிய குறிப்புகள் என்று இன்று காட்டுபவை இடைசெருகல்கள் ஆகும்.
சுவிசேஷங்கள்படி- ரோமன் கவர்னர் விசாரணைக்குப்பின் தன் கைப்பட நிருபிக்கப்பட்ட குற்றத்தை குற்ற அட்டையில் எழுதி தொங்கவிட்டர்-" நசரேயன் இயேசு- யூதர்களின் ராஜா" என.
இறந்த ஏசு தன்னை - கிறிஸ்து என்னும் யூதர்களின் ராஜா என்பதாக சொல்லிக் கொண்டார்.சுவிசேஷங்கள் முழுதும் இயேசு தன்
வாழ்நாளில் உலகம் அழியும் எனப் பார்த்தார். இயேசுவை நேரில் அறியாத பவுலும், இறந்த ஏசு உயிர்த்து காட்சி தர மதம் மாறியதாக கதை. இவர் இரண்டாவது வருகை தன் வாழ்நாளில்- உலகம்
அழியும் என்றே மதம் ஆரம்பித்தார்.
பவுல் - இயேசுவை தாவிதின் பரம்பரையில் வந்தவர் எனத் தெளிவாகச் சொல்கிறார்.
ரோமன் 1: 3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர் (Greek-Spherma David) கலாத்தியர் 4:.4 ஆனால் காலம் நிறைவேறியபோது நியாயப் பிராமணங்களுக்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு 5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் நியாயப் பிராமணங்களுக்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். |
நியாயப் பிராமணங்களில் எங்கும் கடவுள் மனிதனாகப் பிறத்தல் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் மோசேயின் 10 கற்பனை என யாவே தந்ததில் என் பெயரை வீணில் உச்சரிக்க வேண்டாம்.
கடவுளை அனாவசியமாக பெயரைக் கூடச் சொல்லக் கூடாது. அவர் மனிதனாகப் பிறத்தல் கிடையாது.