இயேசுவின் கதைகளை சுவிசேஷக் கதைகளில் காண்கிறோம். பைபிளிற்கு வெளியே உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கு நடுநிலையாளர் ஏற்கும் வரலாற்று ஆதாரம் ஏது கிடையாது.
அனைவரையும் சமமாக மதித்து சூரியன் ஒளியையும் மழையையும் கூறிவிட்டு சீடர் அனுப்பும்போது ஏசு சொன்னது என்ன பாருங்களேன்.
பகைவருக்காக ஜெபம் செய்ய வேண்டுமாம்!
யூதர்களில் பிரிவான சமாரியரிடம் செல்லாதே, யூதரல்லாதவர்களிடம் செல்லாதே.
இயேசு சொல்லியதானதாக மத்தேயு சுவியிலுள்ள மலைப் பிரசங்கம், முதலில் வரையப்பட்ட மாற்கு சுவிசேஷத்தில் இது கிடையாது. லுக்கா சுவிக் கதாசிரியர் இதையே இரண்டு மூன்றாகப் பிரித்து தரையில் (மலையில் இல்லை) செய்ததாக புனைந்துள்ளார்.இந்த மலைப் பிரசஙத்தில் ஏசு நிறைய ந்ல்ல போதனைகள் கூறுவதாக அமைந்துள்ளது. அவற்றில் சில நாம் காண்போம். ஏசு தன் சீடர்களொடு இயங்கியபோது நடந்து கொண்டதையும் ஒன்றிணைத்துப் பார்ப்போம்.முடிவு.
சொல்லுதல் யார்க்கும் எளிதம் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் – என்பார் தெய்வப்புலவர்.
பகைவரிடம் அன்பாயிருத்தல் (லூக் 6:27 - 28, 32 - 36)மத்தேயு5: 43 ' ″ உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ″ , ″ பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக ″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 45 ' இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் சூரியனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். 46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிவசூலிப்போரும் இவ்வாறு செய்வதில்லையா? |
பகைவருக்காக ஜெபம் செய்ய வேண்டுமாம்!
திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 - 13; லூக் 9:1 - 6) மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ' ' யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்.. 11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். |
யோவான் 4:22 (சமாரிய பெண்ணிடம்) யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. . |