New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆம் ஆத்மி கட்சி


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஆம் ஆத்மி கட்சி
Permalink  
 


'ஆம் ஆத்மி'யை குறிப்பிட்ட மதத்தினர் கபளீகரம்? அதிருப்தியாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

டில்லியில், ஆட்சியை கைப்பற்றியதால், தேசிய அளவில் பிரபலமாகியுள்ள, 'ஆம் ஆத்மி' கட்சிக்கு, தமிழகத்தில் நேரம் சரியில்லை. 'இக்கட்சி பெயரைப் பயன்படுத்தி, வெளிநாட்டு நிறுவனங்களிடம், கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது; குறிப்பிட்ட மதத்தினர், கட்சியை கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றனர்; கட்சி பதவிகளில், உறவினர்களை நியமித்து வருகின்றனர்' என, அடுத்தடுத்து, பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

 

 

'சஸ்பெண்ட்':

Tamil_News_large_89369720140112013432.jpgarasiyaltoday115-300x284.jpgChristina Samy.தமிழகத்தில், ஆம் ஆத்மி துவங்கப்பட்ட நாளில் இருந்தே, அக்கட்சியில், கோஷ்டிப்பூசல் துவங்கியுள்ளது. தற்போது, அது, உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஆம் ஆத்மியின், தமிழக பிரிவிலிருந்து, பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, நாராயணன், நசீரின், அருள் மற்றும் மாரி செல்வம் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டதாக, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான, கிறிஸ்டினா சாமி அறிவித்தார். ஆனால், சஸ் பெண்ட் செய்யப்பட்ட, ஆறு பேரும், 'நாங்களே, உண்மையான ஆம் ஆத்மி' என, கூறி வருகின்றனர்.

 

அத்துடன், கிறிஸ்டினா சாமி குறித்து, சென்னை, அமைந்தகரையில் உள்ள, ஆம் ஆத்மி அலுவலகத்தில், நாராயணன், கிருஷ்ணமூர்த்தி, நசீரின், பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று கூறியதாவது: கிறிஸ்டினா சாமி, கரூர் மாவட்டத்தில் செயல்படும், ஏ.ஆர்.ஈ.டி.எஸ்., மற்றும், சுவாதி அறக்கட்டளைகளின் இயக்குனர். அந்த மாவட்டத்தில், இந்த அறக்கட்டளைகளுக்கு, 200 கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன. ஆம் ஆத்மி கட்சி பதவியை பயன்படுத்தி, தன் அறக்கட்டளைகளுக்கு, வெளி நாடுகளில் இருந்து, கிறிஸ்டினா சாமி, நிதியுதவி பெற்றுள்ளார். கடந்த, ஆறு மாதத்தில், 1 கோடி ரூபாய் பெற்றுள்ளார். தன்னைப் பற்றிய, உண்மைகளை மறைத்து, கட்சி பதவியில் கிறிஸ்டினா நீடிக்கிறார். இவரின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களும் தவறானவர்கள். இதுகுறித்து, கேள்வி கேட்ட எங்களை, கட்சியில் இருந்து நீக்கி விட்டனர். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எங்களை நீக்க, கிறிஸ்டினா சாமிக்கு அதிகாரம் இல்லை. அவர் மீதான, குற்றச்சாட்டுகள் குறித்து, கட்சியின் மத்திய தலைமையிடத்தில் புகார் அளித்துள்ளோம். தமிழகத்தில், ஆறு மாதத்தில், கட்சியின் வளர்ச்சி குறித்து ஆராய, டில்லியில் இருந்து, இருநபர் குழு சென்னை வர உள்ளது. அந்தக் குழு, கிறிஸ்டினா சாமி மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கிறோம். இது மட்டுமின்றி, மத்திய அரசு, இதில் தலையிட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிறிஸ்டினா சாமியின் அறக்கட்டளை சொத்துகளை, பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர், கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களை, ஆம் ஆத்மி கட்சியில், திட்டமிட்டு சேர்த்து வருகிறார், கிறிஸ்டினா சாமி. தற்போது, கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள ரோஸ்லின் ஜீவா, சாம் ஆகியோர், அவரின் உறவினர்கள். தமிழகத்தின், பல பகுதிகளிலும், குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களே, கட்சிப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

 

 

கிறிஸ்டினா மறுப்பு:



குற்றச்சாட்டுகள் குறித்து, கிறிஸ்டினா சாமி கூறியதாவது: தமிழகத்தில், ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், கட்சி வளர்ச்சியை தடை செய்ய, திட்டமிட்டு செயல்படுகின்றனர்.என் மீதான குற்றச்சாட்டு, அப்பட்டமான பொய்; அபாண்டமான குற்றச்சாட்டு. மாவட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்ட வர்களில் ஓரிருவர், குறிப்பிட்ட மதம் சார்ந்தவராக இருந்திருக்கலாம். ஆனால், அனைத்து மாவட்டங்களில் உள்ளவர்கள், ஒரே அமைப்பினர் அல்ல. பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவர்கள் மீது, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.



-- Edited by Admin on Wednesday 15th of January 2014 07:46:43 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஆம் ஆத்மி பெயரில் நன்கொடை வசூல்: நடவடிக்கை கோரி போலீஸில் புகார்

ஆம் ஆத்மி கட்சியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களிடம் நன்கொடை வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில்

ஆம் ஆத்மி கட்சியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களிடம் நன்கொடை வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து தமிழக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி செய்தியாளர்களிடம் கூறியது:-

தமிழக ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகம் கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை அமைந்தகரையில் செயல்பட்டு வந்தது. தற்போது கீழ்ப்பாக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்சியின் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த நாராயணன் என்பவர் மீது அண்மையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சி பொறுப்புகளில் இருந்த அவரது ஆதரவாளர்கள் பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, நஸ்ரின், அருள்தாஸ் ஆகியோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாராயணன், அமைந்தகரையில் கட்சி அலுவலகம் செயல்பட்டுவந்த அதே இடத்தில் போட்டி அலுவலகமாகத் தொடர்ந்து நடத்தி வருகிறார். அது தவிர ஆம் ஆத்மி கட்சி பெயரைப் பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கை மற்றும் நன்கொடை வசூலித்து வருகிறார்.

இது குறித்து கட்சி தலைமையிடத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் நாராயணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

இந்த புகார் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் சென்னை மாவட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் நாராயணன் கூறியது:-

அமைந்தகரையில் செயல்பட்டு வருவது கட்சியின் மாவட்ட அலுவலகம். கீழ்ப்பாக்கத்தில் செயல்படுவது மாநில தலைமை அலுவலகம். எனவே கிறிஸ்டினா சாமி கூறுவது போல நாங்கள் போட்டி அலுவலகம் நடத்தவில்லை.

மேலும் எங்களை கட்சியில் இருந்து நீக்கிய தகவல் கடந்த இரு நாள்களுக்கு முன்புதான் எங்களுக்கு தெரியப்படுத்தினார்கள். இது குறித்து கட்சி தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்னை குறித்து விசாரிக்க கட்சி மேலிடக் குழு சென்னை வரவுள்ளது என்றார் அவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஆம் ஆத்மி கட்சி அல்ல, கருத்து….!

Gnani Logo

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருப்பதை அடுத்து , இன்று இந்தியா முழுவதும் மாற்று அரசியலை விரும்புவோர் மனதில் இருக்கும் கேள்வி – நம் ஊரிலும் ஆம் ஆத்மி சாத்தியப்படாதா ?

இந்த விருப்பம் நிறைவேறும் சாத்தியங்கள் என்ன என்று பார்ப்பதற்கு முதலில் ஆம் ஆத்மி கட்சி டெல்லிக்கு வெளியே வளரக் கூடிய அனைத்திந்திய கட்சியாகப் பரிமாணம் எடுக்கக் கூடிய கட்சியா என்று பார்ப்போம். ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவிலிருக்கும் மனிஷ் சிசோடியா, கோபால் ராய், சஞ்சய் சிங், பங்கஜ் குப்தா, குமார் விஸ்வாஸ், நவீன் ஜெய் ஹிந்த், தினேஷ் வகேலா, அஜித் ஜா, ஆனந்த் குமார், இலியாஸ் அஸ்மி, ஷாசியா இல்மி, ஹபுங் பயங்க், யோகேஷ் டாஹியா,எம்.பி.என்.பணிக்கர், அசோக் அகர்வால், கிரிஷ்காந்த் சவேடா, மாயாங்க் காந்தி, கேஷ் சின்ஹா, கிறிஸ்டினா சாமி என்று நீளும் 21 பேர் பட்டியலில் மூவரைத் தவிர மீதி அனைவரும் வட இந்தியாவின் ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். முக்கியமான தலைவர்கள் என்று நால்வரைச் சொல்லலாம். அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ், பிரஷாந்த் பூஷண். இவர்கள் நால்வரும் ஹிந்தி மொழியினர்தான்.

இந்திய அளவில் ஒரு கட்சி நாடு தழுவிய கட்சியாக வளரவேண்டுமானால் பெரும்பாலான மாநிலங்களில் அதற்கு வலிமையான உள்ளூர் தலைவர்கள் இருக்க வேண்டும். அந்த தலைவர்கள் எல்லாரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மத்திய தலைமை இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் வரலாம். ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் அது ஹிந்தி பேசும் மாநிலங்களிலிருந்து வருவோரின் தலைமையாகவே ஆக்கப்பட்டிருக்கிறது.

இன்று நாடு தழுவிய கட்சிகள் என்று சொல்லக்கூடிய நிலையில் இருப்பவை மிகச் சில. காங்கிரஸ், பிஜேபி, இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே அவை. இவையும் தம்மை அனைத்திந்திய கட்சிகள் என்று சொல்லிக் கொண்டாலும் நடைமுறையில் பல மாநிலங்களில் இவற்றுக்கு எந்த செல்வாக்கும் கிடையாது. சில இடங்களில்  பலவீனமாக இருந்தாலும் கூட , எல்லா மாநிலங்களிலும் ஓரளவேனும் இருக்கும் கட்சி காங்கிரஸ் மட்டும்தான். இதற்குக் காரணம் அதன் நூறாண்டு வரலாறு மட்டுமே.

அந்நிய ஆட்சிக்கெதிரான இயக்கமாக காங்கிரஸ் கட்சி உருவான காலத்தில் அதில் ஆதிக்கம் செலுத்தியவர்கள், அதை வளர்த்தவர்கள் பெரும்பாலோர் ஹிந்தி பேசும் மாநிலத்தவர் அல்ல. வங்காளம், பஞ்சாப், மராட்டியம், சென்னை ராஜதானி ஆகியவற்றிலிருந்தே அன்று பெருவாரியான போராட்டத் தலைவர்களும் சாத்வீகத் தலைவர்களும் உருவாகி வந்தார்கள். ஹிந்தி பேசும் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் இத்துடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் குறைவென்றாலும், காந்தி, நேரு, பட்டேல் போன்ற பெரும் ஆற்றல் மிகுந்தவர்கள் அங்கிருந்து வந்தவர்கள். மற்றவர்களுக்கு தலைமை தாங்கும் இடத்தைப் பெற்றிருந்தார்கள். சுதந்திரத்துக்குப் பின்னர் ஹிந்தி பகுதி தலைவர்களின் ஆதிக்கம் அதிகமாகி, இதர மொழித் தலைவர்களின் பலம், செல்வாக்கு காங்கிரசில் குறையத் தொடங்கி இந்திரா காந்தி காலத்தில் எல்லா வட்டாரத் தலைவர்களுமே முற்றிலும் முக்கியமற்றவர்களாக்கப்பட்டுவிட்டனர். ஹிந்தி வட்டாரத் தலைமையும் பரவலானதாக இல்லாமல் ஒற்றை தலைமையாக நிலை நிறுத்தப்பட்டுவிட்டது. இந்திய அளவில் காங்கிரஸ் தேய்வுக்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று.

இதை காங்கிரசுக்குள்ளேயே முன்கூட்டி எதிர்பார்த்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே கருத்து சொன்னவர்கள் இருந்தார்கள். சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் சுய நிர்ணய உரிமையே வேண்டும்; அந்த அடிப்படையில்தான் புதிய இந்தியா, புதிய தமிழகம் அமைக்கப்படவேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றிக் கையெழுத்து போட்டவர்களில் பெரும்பாலோர் காங்கிரஸ்காரர்கள்தான் – காமராஜர், தி.ரு.வி.க, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, செங்கல்வராயன், டாக்டர் சுப்பராயன், வ.ரா, கல்கி, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்,ம.பொ.சி, இவர்களுடன் பாரதிதாசன், ரசிகமணி டி.கே.சி, கம்யூனிஸ்ட் ஜீவானந்தம். பலமான தேசிய இனங்களின் கூட்டமைப்பாக இந்தியா இருக்க வேண்டும்; ஒற்றை தேசிய இனத்தின் ஆதிக்கத்தில் இருக்க முடியாது, இருந்தால் பலவீனப்படும்  என்பதே அவர்களின் அன்றைய கருத்து. காங்கிரஸ் இயக்கமே அப்போது நடைமுறையில் அப்படி இருந்ததினால்தான் நாடு முழுவதும் அது செல்வாக்கோரு இருந்தது. அந்த அணுகுமுறையைக்  கைவிட்டது முதல் காங்கிரஸ் தேயத் தொடங்கியது.

இதே காலகட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த தேசிய இனங்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கக்கூடிய, பிரதிபலிப்பதாக சொல்லக்கூடிய கட்சிகளின் உருவாக்கம் ஏற்பட்டு வளர்ந்து வந்திருக்கிறது. இதன் பிரதிபலிப்பாகவே இன்று மத்தியிலும் ஒற்றைக் கட்சி ஆட்சி நடத்த முடியாது, மாநிலக் கட்சிகளின் கூட்டணியோடுதான் ஆட்சி நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கடிகாரத்தைத் திருப்பி வைப்பது போல இதை இனி திருப்பி வைக்கமுடியாது.

ஆனால் காங்கிரசுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தக் கூடிய பி.ஜே.பி  காங்கிரஸ் பாணியிலேயே தன்னை ஒற்றை அனைத்திந்திய கட்சியாகவே வளர்க்கவும் காட்டவும் முயற்சித்து வருகிறது. நடைமுறையில் இது காலாவதியாகிவிட்ட கருத்தியல் என்பதால்,அதை செயல்படுத்துவது சிக்கலாகவே இருக்கிறது. பழைய கால காங்கிரசைப் போல மாநிலங்களின் வட்டாரத் தலைவர்களை செல்வாக்குடையவர்களாக வைத்திருப்பதன் மூலம் தன் எண்ணம் சாத்தியப்படும் என்று பி.ஜே.பி  முயற்சிப்பதன் அடையாளங்கள்தான் எடியூரப்பா, சவ்ஹான், வசுந்தரா, ராமன்சிங், கல்யான்சிங் , நரேந்திர மோடி எல்லாமே. ஆனால் வட்டாரத் தலைவர்கள் மத்திய தலைமைக்கு சவாலாக காங்கிரசில் ஆனதைப் போன்ற அதே சிக்கலை பி.ஜே.பியும் சந்திக்க வேண்டி வந்திருக்கிறது. உதாரணம்: எடியூரப்பா.

இப்படிப்பட்ட அரசியல் சூழலில்தான் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் மாற்றாக டெல்லியில் வந்திருக்கிறது. அதுவும் காங்கிரஸ், பிஜேபி போல  அனைந்திந்திய கட்சி ஆகமுடியுமா என்ற கேள்விக்கு உடனடியான பதில் : அனைத்திந்திய கட்சியாக இருக்க காங்கிரசும் பி.ஜே.பியுமே திணறிக் கொண்டிருக்கின்றன என்பதேயாகும்.

தவிர ஆம் ஆத்மி கட்சி அடுத்த மக்களவை தேர்தலில் பல மாநிலங்களிலிருந்து போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்தாலும் இதுவரை அது டெல்லியின் மாநிலக் கட்சியாகவே தன்னை நடைமுறையில் வைத்திருக்கிறது. அதிகபட்சமாக அது ஹிந்தி பேசும் ஒரு சில மாநிலங்களின் கட்சியாகவே தன்னை அடையாளம் காட்டும் நிலையிலேயே இப்போதைக்கு இருக்கிறது.

டெல்லி தேர்தலை ஆம் ஆத்மி கட்சி வென்ற வழிமுறைகளைப் பார்த்தாலே அது மாநிலக் கட்சியாக செயல்பட்டே வென்றிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். அதன் முக்கிய தலைவர்கள் எல்லாரும் டெல்லி மாநிலப் பகுதிகளிலேயே  பல வருடங்களாக தொண்டு நிறுவனக் களப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள். அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கமத்தின் முதல் அத்தியாயம் முடிந்துபோய் ஆம் ஆத்மி கட்சி உருவானதும், அது மேற்கொண்ட கள நடவடிக்கைகள் எல்லாம் டெல்லி மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் தொடர்பானவையே ஆகும். டெல்லி பஸ்சில் நடந்த பாலியல் வன்முறைக் கொடூரம் நாடு முழுவதும் மீடியாவினால் அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும் அது டெல்லி வட்டாரத்தில் மீடியா உதவியில்லாமலே பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிகழ்வாகும். அதில் தொடங்கி, டெல்லி மக்களின் மின்கட்டணம், தண்ணீர் கட்டணம், குடிசைப் பகுதிகளை ஒழுங்குபடுத்தி நிரந்தரமாக்குதல் முதலிய பிரச்சினைகள் அனைத்தும் ஆம் ஆத்மி கட்சியால் கையாளப்பட்ட உள்ளூர் பிரச்சினைகளேயாகும். சட்டப் பேரவை தேர்தலில் உள்ளூர் பிரச்சினைகளையே முன்வைக்கமுடியும்.

ஆம் ஆத்மிகட்சி தோன்றி வளரும் சமயத்தில் அதற்கு வாய்ப்பாக அமைந்த ஆங்கில மீடியா கவனிப்புகளில்கூட,  அரவிந்த் கெஜ்ரிவால் ஆங்கிலம் தெரிந்தவரனபோதும் ஆங்கிலக் கேள்விகளுக்கெல்லாம் ஆங்கில சேனல்களில் பெரும்பாலும் ஹிந்தியிலேயே பதில் அளித்து வந்தார். தன் உடனடி வாக்காளர்கள் டெல்லியில் இருக்கும் ஹிந்தி பேசும் மக்கள் என்ற உணர்வே இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

இப்போது ஆம் ஆத்மி கட்சி தன்னை பல மாநிலங்களில் விரிவுபடுத்திக் கொள்ள விரும்பினால், அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா, யோகேந்திரா, போன்ற பலமான ஆற்றலுடைய உள்ளூர் தலைவர்களை, அதிலும் மக்களை ஈர்க்கும் ஆளுமையும் உடையவர்களை ஒவ்வொரு மாநிலத்திலும் கண்டறிந்தால் மட்டுமே கொஞ்சமேனும் வளரமுடியும். இப்போதைக்கு ஆம் ஆத்மி கட்சியின் இதர மாநிலப் பிரதிநிதிகளைப் பார்க்கும்போது அவர்கள் அந்தத் தகுதி உடையவர்களாகத் தெரியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலின் பிம்பத்தை முன்னிறுத்தியே கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் கட்சியை வளர்க்க முற்பட்டால், சோனியா, ராகுல், அத்வானி, மோடி, மாயாவதி போன்ற பிம்பங்களை முன்னிறுத்தி மாநிலக் கிளைகளை அந்தக் கட்சிகள் எல்லாம் வளர்க்க முயற்சித்து தோல்வியடைந்து கொண்டிருக்கும் அதே விளைவைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

இன்னொரு பக்கம், அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற பலமான தலைமைகள் வெவ்வேறு வட்டாரங்களில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்தாலும், அவர்களை இந்திரா காந்தியின் கால காக்கிரசைப் போல நடத்தாமல், காந்தி-நேரு கால காங்கிரசைப் போல (அதுவும் முற்றிலும் சரியான மாடல் அல்லதான்.) நடத்தும் பக்குவமும் முதிர்ச்சியும் ஆம் ஆத்மியின் மத்திய தலைமைக்குத் தேவைப்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆம் ஆத்மி கட்சி ஊழல் எதிர்ப்பு, கட்சி நடத்துதல், பண விஷயங்களில் பகிரங்கத்தன்மை, எளிமை என்பதற்கு மேல் பல முக்கிய சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் பிரசிச்னைகளில் என்ன நிலை வைத்திருக்கிறது என்பது இன்னும் அறிவிக்கப்படவே இல்லை. காவிரி, முல்லைப் பெரியாறு , ஈழத் தமிழர் உரிமை, மீனவர் மீது தாக்குதல், இட ஒதுக்கீடு, ஆட்சி மொழிக் கொள்கை, கல்வி மொழிக் கொள்கை, மதவாதம், சாதியம் போன்றவற்றில் நிலை என்ன என்று அறிவிக்காமல் தமிழகத்தில் ஒரு அரசியலும் இயங்கமுடியாது. இப்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் உரிய பிரத்யேக விஷயங்களும் இந்திய அளவிலான பிரச்சினைகளும் ஆம் ஆத்மியால் கருத்து தெரிவிக்கப்படாமலே உள்ளன.

உண்மையில் ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் கிளைகள் தொடங்கி வளர்க்கப்படவேண்டிய அனைத்திந்திய கட்சியாக ஆவதற்கான கட்சியும் அல்ல. அதற்கான தேவையும் இல்லை. ஆம் ஆத்மி என்பது ஒரு கருத்தாக்கம். பொது மக்களிடம் நேரடியாக உரையாடி கருத்து கேட்பது, கட்சி நிதி, நிர்வாகம் பற்றிய எல்லா தகவல்களையும் பகிரங்கமாக வைத்திருப்பது, எளிமை, நேர்மை, ஆடம்பரமற்ற நிர்வாகம் முதலிய அம்சங்களே இன்றைய அரசியலில் மக்களுக்கு தேவைப்படுகின்றன, மக்கள் விரும்புவன என்ற கருத்தாக்கத்தின் ஓர் அடையாளமே ஆம் ஆத்மி.

இதே கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உள்ளுர் இயக்கம் உள்ளூர் தலைஅமையின் கீழ் தோன்றி வலுவடைவதும் அதற்கு உதவுவதுமே ஆம் ஆத்மி கட்சியின் மெய்யான வெற்றியாக இருக்கமுடியும். அப்படி உருவாகும் இயக்கங்களுடன் ஹிந்தி மாநிலக் கட்சியாக இருக்ககூடிய ஆம் ஆத்மி கூட்டணி வைக்கலாம். அவற்றை தன் கிளையாக ஆக்க தேவையுமில்லை. இந்தியாவில் ஒற்றைக்கட்சி  மாற்று என்பது இனி இயலாதது. அது முடிந்துவிட்ட காலகட்டத்தின் வடிவம். வரவிருக்கும் நாட்களில் இந்திய அரசியலும் இந்திய சமூகமும் வேண்டி நிற்பது ஒவ்வொரு மாநிலத்திலும் இப்போது இருக்கும் ஊழலும் நேர்மையின்மையும், அராஜகமும் நிரம்பிய கட்சிகளுக்கு மாற்றான நேர்மையான, பகிரங்கமான, எளிமையான உள்ளூர் மாற்றுக் கட்சிகளாகும். அப்படி உருவாகி வரும் கட்சிகளின் கூட்டணியே  நாளைய இந்தியாவை ஆளும் அணியாகவும் இந்தியாவை மெய்யான கூட்டமைப்பாக மாற்றுவதாகவும் இருக்கும். அதை நோக்கிய வழியைத் திறந்துவைக்க ஆம் ஆத்மி கட்சி பயன்பட்டால், அது கட்சி என்பதைத் தாண்டி கருத்தாக்கமாக  இந்திய அரசியலில் தனி இடம் பெறும். ஒற்றைக் கட்சியாகத் தானே இருக்க முயன்றால் அது காங்கிரஸ், பி.ஜே.பி வழியில் சீரழிந்து மங்கித் தேய்வதற்கான சாத்தியங்களே அதிகம்.

இந்து தமிழ் தினசரி ஏடு 29.12.2013



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

‘ஆம் ஆத்மி’ கட்சி ஒருங்கிணைப்பாளராக கிறிஸ்டினா சாமி நியமனம் !



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard