New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இலங்கை


Guru

Status: Offline
Posts: 24625
Date:
இலங்கை
Permalink  
 


இலங்கையில் ஹிந்துக் கோவில்கள் இடிக்கப்படுகின்றனவா? துக்ளக்’ - 5

 

Buddhaஹிந்துக் கோவில்களை அழித்து, புத்த ஆலயங்களைக் கட்டுவதாகத் தமிழகம் முழுக்கப் பிரசாரம் நடந்தது. நீங்கள் தமிழ்ப் பகுதி முழுக்க எங்கு வேண்டுமானாலும் விசாரணை நடத்திக் கொள்ளுங்கள். ஒரு கோவில் கூட இடிக்கப்பட்டிருக்காது” என்று சவால் விட்டார் ஒரு ராணுவ அதிகாரி. மேலும் அவர், “புத்த மதம், ஹிந்து மதத்தோடு பின்னிப் பிணைந்ததுதான். புத்தர் கோவில்களில், ஹிந்துக் கடவுள்களுக்குக்கூட இடம் உண்டு. புத்த மதத்தினர் ஹிந்து தெய்வங்களையும் வணங்கியே வருகிறார்கள். போருக்குப் பிறகு, ஹிந்துக் கோவில்கள் அரசு செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் ஒரு முதலமைச்சர் ஸ்தானத்தில் இருந்தவரே, இலங்கையில் ஹிந்துக் கோவில்கள் இடிக்கப்படுவதாகப் புகார் தெரிவித்தார். தமிழகத்திற்குத் தவறான தகவல்களே போய்ச் சேருகின்றன என்பதற்கு, இதைவிட நல்ல உதாரணம் கிடையாது” என்றும் குறிப்பிட்டார்.
நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான சரவணபவனிடம் இதுபற்றிக் கேட்டபோது, “இங்கே புதிதாக புத்தர் கோவில்களைக் கட்டுகிறார்களே தவிர, ஹிந்துக் கோவில்கள் எதுவும் இதுவரை இடிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை” என்றார் அவர். யாழ்ப்பாணம் மேயரைச் சந்தித்தபோது, “ஹிந்துக் கோவில்கள் எதுவும் இடிக்கப்படவில்லை. இங்குள்ள ஒவ்வொரு ஹிந்துக் கோவிலும் பல லட்சம் ரூபாய் அரசு செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத் தீவு பகுதிகளில் புதிய புத்தர் கோவில்கள் எழுந்திருப்பதை நாங்களே நேரில் பார்த்தோம். அது பற்றி ராணுவ அதிகாரி ஒருவரிடம் விளக்கம் கேட்டோம். “தமிழ்ப் பகுதிகளில் புத்தர் கோவில்களை எழுப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இந்தக் கோவில்களை யாரும் எழுப்பவில்லை. முன்பு இந்தப் பகுதிகள் எல்லாம் முழுக்க முழுக்கப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால், தற்போது தேசியப் பாதுகாப்பு அடிப்படையில் இங்கெல்லாம் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் இருக்கும் புத்த மதத்தினர் வழிபடுவதற்காக இந்தக் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு புத்தக் கோவில் வந்து விட்டது என்பதற்காக, ஹிந்து மதம் அழிக்கப்படுகிறது என்று அர்த்தம் அல்ல. இங்கிருந்து புலம் பெயர்ந்து போன ஹிந்துக்கள், கனடா, பிரிட்டன், நார்வே, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் எத்தனை முருகன் கோவில்களை, விநாயகர் கோவில்களைக் கட்டியுள்ளார்கள் என்று பாருங்கள். இதனால் அவர்கள் அங்குள்ள கிறிஸ்தவ மதத்தை அழிக்க நினைக்கிறார்கள் என்றா, அங்குள்ள மக்கள் நினைத்தார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
கட்டம் இடப்பட்ட செய்தி 2
தமிழர்கள் தற்போதும் வெளிநாடுகளுக்கு ஓடுவது ஏன்?
கிளிநொச்சி, முல்லைத் தீவு பகுதியில் தற்போது வசிக்கும் தமிழர்களுக்கு, புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் அவ்வப்போது அல்லது மாதாமாதம் பணம் அனுப்பி உதவி வருகிறார்கள். ‘தனி ஈழமா? அப்பா... சாமி... பட்டதெல்லாம் போதுமடா’ என்று எங்களிடம் கூறிய தமிழ்க் குடும்பத்தினர் பலர், தங்களின் படம், பெயர் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். காரணம் கேட்டபோது, “புலம் பெயர்ந்த தமிழர்கள் தனி ஈழத்துக்கு ஆதரவானவர்கள். ‘தனி ஈழம் எல்லாம் வேண்டாம்’ என்று சொன்னால், அவர்கள் கோபப்பட்டு பணம் அனுப்புவதை நிறுத்திக் கொள்வார்கள்” என்று தெரிவித்தனர்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் மீது உள்ளூர் தமிழர்களுக்குப் பொறாமையும், கொஞ்சம் கோபமும் இருப்பதை அவர்களது பேச்சில் உணர முடிந்தது. “அவர்கள் உயிரிழப்பு, அங்க இழப்பு, குடும்ப உறுப்பினர் இழப்பு என்று பெரிய சேதாரங்கள் வருவதற்கு முன், வெளிநாடுகளில் குடியேறி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட்டனர். இனி இங்கு ஈழம் அமைந்தால்கூட, அவர்களும், அவர்களது வாரிசுகளும் வந்து குடியேறுவார்களா என்பது கூட நிச்சயமில்லை. ஆனால், வெளியிலிருந்து ‘தனி நாடு, பொது வாக்கெடுப்பு’ என்று மேலும் மேலும் கிளறி விட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
“ஏனென்றால், இங்கு பிரச்னை இருந்து கொண்டே இருந்தால்தான், அவர்கள் அந்தந்த நாடுகளில் குடியிருந்தபடியே காலம் தள்ள முடியும். மேலும், இங்கிருக்கும் மற்ற நெருங்கிய உறவினர்களை, ‘அகதிகள்’ என்ற பெயரில் அங்கு அழைத்துக் கொள்ளவும் முடியும். எனவே, தனி ஈழம் குறித்துப் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதில் அர்த்தமில்லை” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
அதே நேரம் வன்னிப் பகுதி தமிழர்கள் பலருக்கு கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குப் புலம் பெயரும் ஆசை இன்னமும் இருக்கிறது. “இந்த மண்ணில் அனுபவித்த கொடூரங்களை மறக்க நினைக்கிறோம். மேலும், இங்குள்ள ராணுவ நடமாட்டம் இன்னும் ஒரு இறுக்கத்தையே எங்கள் வாழ்க்கையில் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயம் உள்ளுக்குள் இன்னமும் இருப்பதை மறுக்க முடியாது. எனவே, அமைதியான ஒரு வெளிநாட்டில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நல்லது என்ற மனோபாவம், எங்களில் பலருக்கு இன்னமும் இருக்கிறது. அதனால்தான் கள்ளத் தோணிகளில் வெளிநாடுகளுக்குத் தப்பிப் போகும் சம்பவங்கள் தொடர்கின்றன” என்றனர் ஒரு தமிழ்க் குடும்பத்தினர்.
நமது நிருபர்கள் எஸ்.ஜே. இதயாவும் ஏ.ஏ. சாமியும் கிளிநொச்சி பகுதியில் அவர்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்....
கிளிநொச்சியில் உள்ள பெண்கள் ராணுவ முகாமிற்குச் சென்று, அங்கு புதிதாக இணைந்துள்ள தமிழ்ப் பெண்களைச் சந்திக்க முயற்சி செய்தபோது, கிளிநொச்சி ராணுவ முகாம்களுக்குப் பொறுப்பான மேஜர் பந்துல என்பவரைச் சந்தித்து அனுமதி பெற்றோம். கிளிநொச்சியில் ராணுவம் செய்து வரும் செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.former ltte-1
“நாங்கள் கிளிநொச்சியைக் கைப்பற்றிபோது, இங்கு பறவைகள் தவிர வேறு உயிரினங்கள் கிடையாது. வெறிச்சோடிக் கிடந்தது. புலிகள், இப்பகுதி மக்களை, தங்களுக்கு அரணாகத் தங்களுடனே அழைத்துச் சென்று விட்டனர். ஆனாலும், இங்கிருக்கும் வீடுகளையோ, ஹிந்துக் கோவில்களையோ ராணுவம் துளியளவும் சேதப்படுத்தவில்லை. இறுதிப் போர் முடிந்த இந்த நான்கு வருடங்களில், 42 ஆயிரத்து 580 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 35 ஆயிரத்து 605 தமிழர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழகத்தில் பிரசாரம் நடப்பதுபோல், இங்கு எந்த அவலநிலையும் இல்லை. கிளிநொச்சி முள்வேலி முகாமில் ஒரு குடும்பம் கூடக் கிடையாது. ராணுவத்தினரைத் தவிர, ஒரு சிங்களக் குடும்பம் கூட இங்கு குடியேற்றப்படவில்லை. எல்லாம் வதந்திகள்தான். இதுபோன்ற குற்றச்சாட்டைக் கிளப்புபவர்கள், ‘இந்த இடத்தில் முள்வேலி முகாம் உள்ளது. அதில் இன்னும் இத்தனை பேர் தங்கி இருக்கிறார்கள். இந்த இடத்தில் இத்தனை சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன’ - என்று ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். சும்மா வாய்க்கு வந்தபடி சொல்லக் கூடாது.
“உண்மையில் இலங்கை ராணுவம் இங்குள்ள தமிழர்களுக்கு உறுதுணையாகவே உள்ளது. அரசாங்கம் 1.75 மில்லியன் பணத்தை கிளிநொச்சி மறுவாழ்வுக்கென ஒதுக்கிச் செலவு செய்து வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நாங்கள் ராணுவத்தின் செலவில் 3 ஆயிரம் தமிழ் மாணவர்களைப் படிக்க வைக்கிறோம். இதுபோக, ஒவ்வொரு ராணுவ வீரரும், குறைந்தது மாதம் 100 ரூபாய், தமிழ் மாணவர்களின் கல்விக்காக நன்கொடையாகத் தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 400 தமிழ் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. ராணுவத்தின் செலவில் அவர்களுக்கு இலவச ஷுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு ராணுவமே இலவச சைக்கிள்களை வழங்கியுள்ளது.
“மேலும் இப்பகுதியிலுள்ள தமிழ் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு ராணுவத்தின் சார்பில் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. எலெக்ட்ரிஷியன் வேலை, கொத்தனார் வேலை, தச்சு வேலை, டெய்லரிங் வேலை, சமையல் வேலை, பேக்கரி வேலை, செல்ஃபோன் ரிப்பேர், கம்ப்யூட்டர், அழகுக்கலை உள்ளிட்ட பல துறைகளில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 14 ஆயிரம் பேர் இந்தப் பயிற்சிகளைப் பெற்றுள்ளார்கள். இதில் முன்னாள் விடுதலைப் புலிகள் மட்டுமே 10 ஆயிரத்து 683 பேர்” என்று விளக்கினார் அவர்.
கடைசியாக அவர் ஒன்று சொன்னார். “ராணுவத்தின் வேலை பயங்கர வாதத்தை அழிப்பது மட்டும்தானே தவிர, தமிழர்களை அழிப்பது இல்லை. போர் எப்போதோ முடிந்து விட்டது. இப்போது ராணுவத்தின் லட்சியம், இங்கு ஐந்து கீகளை ஏற்படுத்துவதுதான். Rehabilitation, Reintegration, Reconstruction, Resettlement, Reconciliation (மறுவாழ்வு, மறு இணைப்பு, மறு நிர்மாணம், மறுகுடியேற்றம், மறு சமாதானம்) ஆகிய ஐந்தும்தான் இப்போதைய எங்கள் லட்சியம். அதை நிறைவேற்றுவோம்” என்றார்.
இதையடுத்து, இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ள 102 தமிழ்ப் பெண்களில், சுமார் 40 பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டது. ராணுவ அதிகாரிகள் யாரும் அருகில் இல்லாமல் அந்த தமிழ்ப் பெண்களுடன் சுதந்திரமாக நாங்கள் உரையாடினோம். எல்லோரும் சுமார் 21 முதல் 25 வயது வரையிலான இளம்பெண்கள். 35 ஆயிரம் இலங்கை ரூபாய் சம்பளம். பிடித்தம் 5 ஆயிரம் ரூபாய் போக, 30 ஆயிரம் கையில் வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர். இது பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் தங்கள் குடும்பத்தினருக்குப் பேருதவியாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
அதில் ஒரு பெண், “ஏண்டா இந்த வேலையில் சேர்ந்தோம் என்று இருக்கிறது. வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் எல்லாம் எங்கள் குடும்பத்தைக் கேவலமாகப் பேசுகிறார்கள். ‘துரோகிகள்’ என்பது போல் பார்க்கிறார்கள். முன்பு எங்களுக்குச் செய்து வந்த உதவிகளை இதனால் நிறுத்திக் கொண்டTamilarmy womwnு விட்டார்கள்” என்றார் சோகமாக.
இன்னொரு பெண், “என் வீட்டிலும் நான் ராணுவத்தில் சேருவதற்குப் பலத்த எதிர்ப்பு. உறவினர்கள் தவறாகப் பேசுவார்கள் என்ற பயம் என் அம்மாவுக்கு இருக்கிறது. நான்தான் என் அம்மாவிடம், ‘நம் பொருளாதாரத்தை நாம்தான் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் சொகுசாக இருக்கும் உறவினர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, நாம் பட்டினி கிடந்து சாக முடியாது’ என்று தீர்மானமாகப் பேசி, அவரைச் சமாதானம் செய்து இப்பணியில் சேர்ந்தேன்” என்றார்.
எங்களிடமே சில பெண்கள், “நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் அண்ணா? எங்களைத் தவறாக நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அந்தளவுக்குக் குற்றவுணர்ச்சியை அவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளார்கள், நமது தமிழ் உணர்வாளர்கள். (‘இது உங்கள் வாழ்க்கை. உங்களுக்கு எது சரி என்று தெரிகிறதோ, அதைச் செய்வதில் தவறில்லை. வெளிநாடுகளில் உள்ளவர்கள் வெறும் வார்த்தைகளை மட்டும்தான் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்; வாழ்க்கையை அல்ல’ - என்பது அவர்களுக்கு நாங்கள் தந்த பதில்.)
போருக்குப் பிறகு அமைதியாகவும், நிம்மதியாகவும் தாங்கள் வாழ்வதாக அவர்கள் குறிப்பிட்டனர். ராணுவத்தினர், தங்களை மிகுந்த மரியாதையாகவும், கனிவாகவும் நடத்துவதாக அவர்கள் குறிப்பிட்டனர். நாங்கள் அவர்களைச் சந்தித்த அறையில், கேமெரா எதுவும் உள்ளதா, ஏற்கெனவே ராணுவத்தினர் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து ‘இப்படித்தான் பேச வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்தது. இதையடுத்து சில பெண்களை அறைக்கு வெளியே அழைத்துச் சென்று, மரத்தடியில் நிறுத்தி தனியே பேசினோம். ராணுவ அதிகாரிகள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. அங்கும் அந்தப் பெண்கள், அதே ரீதியிலேயே ராணுவத்தைப் புகழ்ந்தனர். ‘இப்படித்தான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று எந்த நிபந்தனையும் எங்களுக்கு விதிக்கவில்லை’ என்று அடித்துச் சொன்னார்கள். ‘உண்மையிலேயே மிகுந்த பாசத்தோடு நடத்துகிறார்கள். வேலைக்குச் சேர்ந்த ஓரிரு மாதங்களிலேயே டூ வீலர் வாங்க லோன் கொடுத்துள்ளார்கள். நாங்கள் பெரும்பாலோர் தற்போது டூ வீலர் வைத்திருக்கிறோம்’ என்றார்கள் சந்தோஷம் பொங்க.
‘புலிகள் இயக்கத்தில் இருந்த பெண்கள் யார், யார்’ என்று அவர்களிடம் நாங்கள் கேட்டபோது, முதலில் சொல்லத் தயங்கினார்கள். பின்னர் அவர்கள் எங்களிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லி, கொஞ்சம் சகஜநிலைக்குத் திரும்பியதும், இருவர் கை தூக்கினார்கள். (சென்னை வந்தால் ரஜினியைப் பார்க்க முடியுமா? ஷாலினி, ஜோதிகா எல்லாம் இனி நடிக்கவே மாட்டார்களா? சிம்பு - தனுஷ் சண்டை உண்மையா - இப்படியெல்லாம் அமைந்தன அவர்களது கேள்விகள்.)
அந்த இருவரையும் நாங்கள் தனித்தனியே சந்தித்துப் பேசினோம். அவர்கள் சில மாதங்கள் மட்டுமே இயக்கத்தில் இருந்தவர்கள். (விடுதலைப் புலிகள் இயக்கத்தை அங்குள்ள தமிழர்கள் சுருக்கமாக ‘இயக்கம்’ என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.)
அவர்கள் இருவருமே விரும்பி இயக்கத்தில் இணைந்தவர்கள் இல்லை. புலிகளால் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டவர்கள். ஆரம்பத்தில் வீட்டுக்கொரு பிள்ளையை இயக்கத்துக்குத் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்த புலிகள், இறுதிக் கட்டங்களில் இளைஞர், இளம் பெண்கள் யாராயிருந்தாலும் இயக்கத்திற்கு இழுத்துச் சென்று விடுவார்களாம். 14 வயது, 15 வயது சிறார்களையும் அவர்கள் விடவில்லையாம்.
முதல் பெண் (பெயர் நீக்கப்பட்டுள்ளது) இயக்கத்தில் இருந்தது சில மாதங்கள்தான். “முதலில் என்னையும், பிறகு என் தங்கையையும் இயக்கத்தில் பிடித்துச் சென்று விட்டார்கள். கடைசிக் கட்டப் போர் நடந்த நேரம் என்பதால், என்னைப் பயிற்சியில் எல்லாம் ஈடுபடுத்தவில்லை. பிற்பாடு நாங்கள் ராணுவத்தில் சரணடைந்த போது, நான் இயக்கத்தில் இருந்தவள் என்பதால், என்னை 9 மாதம் தடுப்பு முகாமில் ராணுவத்தினர் வைத்திருந்தனர். பின்னர் சிறு வயது என்பதால், கட்டாயத்தின் பேரில்தான் நான் இயக்கத்தில் இருந்தேன் என்பதை உணர்ந்து, என்னை விடுவித்து விட்டார்கள். அந்தத் தடுப்பு முகாமில் எந்தச் சித்திரவதைக்கும் நான் ஆளாகவில்லை. உணவு, உடை வழங்கியதோடு கல்வியைத் தொடரவும் உதவியது ராணுவம். என் தங்கைதான் என்ன ஆனாள் என்று இன்றுவரை தெரியவில்லை. புலிகள் பிடித்துக் கொண்டு போனதோடு சரி. அதன் பிறகு இறந்தாளா, இருக்கிறாளா என்பது கூடத் தெரியவில்லை” என்று கண் கலங்கினTamil girls armyார் அந்தப் பெண்.
இரண்டாவது பெண் (பெயர் நீக்கப்பட்டுள்ளது) 2008-ஆம் ஆண்டு இறுதியில் இயக்கத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார். “என்னையும் என் அண்ணனையும் இயக்கத்தினர் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். இருவரில் ஒருவரையாவது திரும்பப் பெற்று விட வேண்டும் என்று அம்மா அலையாத இடமில்லை. ஒவ்வொரு முகாமுக்கும் சென்று கெஞ்சி அழுதிருக்கிறார். பிறகு என் தங்கையையும் பிடித்துக் கொண்டு போனார்கள். ஆனால், என் தங்கை கொஞ்சம் தைரியமானவள். இயக்கத்தினர் பிடித்துக் கொண்டு போனாலும், ஓரிரு நாட்களிலேயே தப்பி வந்து வீட்டு வாசலில் நிற்பாள். எனக்கு வழியும் தெரியாது, தைரியமும் கிடையாது. அப்படி ஒரு முறை தப்ப முயன்று பிடிபட்டும் இருக்கிறேன். தப்பி ஓடுபவர்களை இயக்கத்தினர் மீண்டும் பிடித்தால், பையன்களுக்கு மொட்டை அடித்து விடுவார்கள். பெண்களுக்கு கிராப் வெட்டி விடுவார்கள். அப்போதுதான் மீண்டும் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் பிடிக்க முடியும் என்பது அவர்களது யுக்தி. எத்தனையோ பெண் பிள்ளைகள் கூந்தலை இழக்க நேர்ந்ததற்காக அழுது கூப்பாடு போட்டிருக்கிறார்கள்.
“ஒன்றரை மாதங்கள் பயிற்சியில் இருந்தேன். துப்பாக்கி தூக்கும் அளவிற்கு எனக்கு வலு இல்லை. இரவில் பயத்தில் தூக்கமில்லாமல் விழித்திருப்பேன். தப்பி ஓடக் காத்திருக்கிறேன் என்று எண்ணி, ‘தப்பித்தால் சுட்டு விடுவோம்’ என்று மிரட்டுவார்கள். போரின் கடைசி நேரத்தில் ஆளில்லாமல், சின்னச் சின்னப் பிள்ளைகளையெல்லாம் இயக்கத்திற்குப் பிடித்துக் கொண்டு போனார்கள். தாய்மார்கள் எவ்வளவு அழுதிருக்கிறார்கள் தெரியுமா? ரைஃபிளைப் பிடிக்கக் கூட முடியாத சிறுவர்கள் எல்லாம் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனால்தான் புலிகள் என்றாலே எல்லோருக்கும் வெறுத்துப் போச்சு.
“2009 பிப்ரவரி மாதம் சுதந்திரா புரத்தில் வேறு சிலரோடு நானும் ரிஸீவிங் பாயின்ட்டுக்குச் சென்றேன். என் குடும்பத்தில் யார் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாத நிலை. முகாமில் அம்மாவைப் பார்த்து விடலாம் என்று ஆசைப்பட்டேன். அது முதலில் நடக்கவில்லை. என் சின்னத்தம்பி என்றால் எனக்கு உயிர். அவனையும் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில், சாப்பிடாமலே பல நாள் முகாமுக்குள் சுற்றிச் சுற்றித் திரிந்தேன். ராணுவத்திடம் இன்னின்னாரைக் காணவில்லை என்று கடிதம் கொடுத்து வைத்திருந்தேன். பிற்பாடுதான், பக்கத்து வீட்டு அக்கா மூலமாக என் அம்மாவும் ரிஸீவிங் பாயின்ட்டுக்கு வந்துள்ளது தெரிந்து அவர்களைச் சந்தித்தேன்” என்றார்.
இந்தப் பெண், இயக்கத்தில் இருந்தது என்னவோ ஒரு சில மாதங்கள்தான். ஆனால், இவர் இயக்கத்தில் இருந்த பெண் என்பது ராணுவத்திற்குத் தெரிய வந்ததும், தடுப்புக் காவலில் இரண்டே முக்கால் வருடமும், சிறையில் நான்கு மாதங்களும் அடைக்கப்பட்டுள்ளார். அதற்குக் காரணம், இயக்கத்தில் இவருக்குச் சூட்டப்பட்ட பெயர்தான். இயக்கத்தில் இணைந்ததும் புலிகள், அவர்களுக்குப் புதிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவார்களாம். அதன்படி, இந்தப் பெண்ணிற்கு இறந்து போன ஒரு பெண் புலியின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். அந்தப் பெயர் ராணுவத்தினருக்குத் தெரிந்த, பிரபலமான பெயர் என்பதால், இந்தப் பெண்தான் அவரோ என்ற ஐயத்தில், நீண்ட நாள் விசாரணைக்கு ஆளாகியிருக்கிறார்.
தன் இளமைப் பருவம் அநியாயமாகத் தொலைந்து போனதற்குப் புலிகள் இயக்கத்தையே குற்றம் சொல்லும் அந்தப் பெண், “நாங்கள் புலிகள் என்று தெரிந்த பிறகும் ராணுவத்தினர் கடுமையாக நடத்தவில்லை. நான் முகாமில் இருந்தவரை உணவு, உடை மட்டுமில்லாமல் கல்வியும் கொடுத்தார்கள். நான் பள்ளி இறுதித் தேர்வு எழுதியது ராணுவ முகாமில்தான். பாலியல் தொந்தரவு எதையும் நான் அனுபவிக்கவில்லை; பார்க்கவில்லை. என் கூட்டாளிகள் மத்தியில் கேள்விப்பட்டதும் இல்லை. ஆனால், வெளியில் அப்படி ஒரு பேச்சு உள்ளது. ஆனால், என்னளவில் அப்படி எதையும் நான் பார்க்கவில்லை’‘ என்றும் குறிப்பிட்டார்.
மேலும் “என் சித்தி குடும்பத்தினர் 2006-ல் பொங்கல் கொண்டாட யாழ்ப்பாணத்திலிருந்து எங்கள் ஊருக்கு (ஊரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது) வந்தனர். ஆனால், அவர்கள் வந்த நேரத்தில் இயக்கத்தினர் ‘பாதை குத்தி விட்டதால்’ (கண்ணி வெடி மூலம் பாதையை மறித்து விட்டதால்), அவர்கள் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிப் போக முடியாமல் நரக வேதனையை அனுபவித்தார்கள். மிகுந்த வசதி படைத்தவர்கள், இயக்கத்திற்குப் பணம் செலுத்தி விடுதலையாகிப் போன சம்பவங்கள் உண்டு. எல்லோருக்கும் அந்த வசதியில்லையே?” என்றும் அவர் குறிப்பிட்டார்.
புலிகள் இயக்கத்தில் விரும்பி இருந்தவர்களும் சரி, வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டவர்களும் சரி, போரின் இறுதிக்கட்டத்தில், ராணுவத்தின் ரிஸீவிங் பாயின்ட்களுக்கு சிவிலியன்களோடு சிவிலியன்களாக வந்து சரண்டர் ஆனார்கள். ஆனால், ராணுவத்தினர் அந்தப் புலிகளை எப்படி அடையாளம் கண்டுபிடித்துப் பிரித்தெடுத்தனர்? இங்குள்ள புலி ஆதரவாளர்களால் கொஞ்சமும் ஜீரணிக்க முடியாத அந்த உண்மைகள் அடுத்த வாரம்.
(குறிப்பு: பேட்டிகள் எல்லாம் பெரும்பாலும் ஆடியோ மற்றும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவற்றை மீண்டும் கேட்டு இலங்கைத் தமிழர்களின் வட்டார மொழியிலேயே கட்டுரையை வெளியிடும் வாய்ப்பு இருந்தது. எனினும், வாசகர்கள் புரிந்து கொள்வதற்குக் கடுமையாக இருக்கும் என்பதாலும், அடிக்கடி அடைப்புக்குள் விளக்கம் தர வேண்டியிருக்கும் என்பதாலும், பத்திரிகைத் தமிழிலேயே கட்டுரை வெளியாகிறது.)


-- Edited by Admin on Thursday 13th of June 2013 07:48:30 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

இன்னமும் அகற்றப்படாத கண்ணி வெடிகள்! இலங்கையில் ‘துக்ளக் – 4

தமிழக மீனவர்கள் செய்வது சரியா? தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் தாக்கப்படுவது குறித்து தொடர் சர்ச்சை எழுந்தபடியே இருக்கிறது. யாழ்ப்பாணத் தமிழர்களுக்காக இங்கு குரல் கொடுப்போர்தான் பெரும்பாலும், தமிழக மீனவர்களுக்காகவும் இங்கு குரல் கொடுக்கிறார்கள். எனவே, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து யாழ்ப்பாண தமிழ் மீனவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய முயற்சித்தோம்.

யாழ்ப்பாணத்தின் கடற் தொழில் அபிவிருத்தி சங்கத் தலைவர் ஏ.சகாயராஜாவைச் சந்தித்துப் பேசினோம். “இலங்கைக் கடலோரத்தில் மீன்கள் அதிகம். இதனால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்கரை வரை வருகிறார்கள். நாங்கள் எங்கள் கரைகளில் இருந்தபடி பலமுறை இந்திய மீனவர்களின் படகுகளைப் பார்த்திருக்கிறோம். நாங்களும் சரி, அவர்களும் சரி, படகுகளைக் கிளப்பி ஒன்றரை மணி நேரத்தில் அடுத்த நாட்டு எல்லைக்குள் நுழைந்து விட முடியும்.

“ஒரு காலத்தில் இங்கு நடந்த போரின் காரணமாக, நாங்கள் தொழில் செய்யவே பயந்து வேறு தொழில்களுக்குப் போய் விட்டோம். அதனால், இந்திய மீனவர்கள் எங்கள் கடற்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி மீன் பிடித்து வந்தனர். இப்போது இங்கு பல பேர் வெவ்வேறு தொழில்களை இழந்து, இந்த மீன் பிடி தொழிலுக்கு வந்துள்ளனர். இதனால் இப்போது இந்திய மீனவர்களின் ஆதிக்கத்தை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எங்களை விட இந்திய மீனவர்கள் தொழில் நுணுக்கமும், உயரிய தொழில்நுட்பமும் கொண்டு தொழில் செய்கிறார்கள். இதனால் அவர்களை மீறி மீன்பிடி தொழில் செய்வது எங்களுக்கு மிகுந்த சிரமமாக இருக்கிறது.

“இங்கு மடி போடும் விசைப் படகுகளுக்குத் தடை உள்ளது. இந்திய மீனவர்களோ ஒற்றை மடிக்கு மேல் இரட்டை மடி போட்டுக் கூட மீன்களைக் கவர்ந்து சென்று விடுகின்றனர். கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவுக்குச் சென்ற போது, அங்கு வந்திருந்த இந்திய மீனவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தோம். ஆனால், பேச்சுவார்த்தைக்கு வராமல் கிளம்பி விட்டனர். அவர்களும் தமிழர்கள், நாங்களும் தமிழர்கள். இதை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. பேசாமல் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு தனி மீன்பிடி காலமும், எங்களுக்குத் தனியே மீன் பிடி காலமும் ஒதுக்கி விட்டால் பிரச்னை எழாது. எங்களுக்கு மீன் பிடி காலம் இல்லாத நாட்களில், நாங்கள் வேறு தொழில் செய்து பிழைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்றார் அவர்.

‘போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பு, கடந்த ஆண்டு இலங்கை வடக்குக் கடலோரப் பகுதிகளில், சுமார் 600 கி.மீ. தொலைவிற்கு ஒரு பாத யாத்திரை நடத்தியுள்ளது. இந்திய மீனவர்கள் இரட்டை மடி மூலம் மீன் பிடிப்பதை தடுக்கக் கோரியே இந்த யாத்திரை நடத்தப்பட்டிருக்கிறது.

“இந்திய மீனவர் படகுகள் அனைத்திலும் ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்தி சாட்டிலைட் மூலம் கண்காணித்தால், அவர்கள் எந்தப் பகுதியில் சென்று மீன் பிடிக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி விடும். அதை இந்திய அரசு செய்யுமா?” என்றும் யாழ்ப்பாணத்தின் சில மீனவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

கட்டம் இடப்பட்ட செய்தி 2

பாலச்சந்திரனைக் கொன்றது யார்?

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படங்கள்தான், தமிழகத்தில் அமுங்கியிருந்த இலங்கைத் தமிழர் பற்றிய உணர்வுகளை மீண்டும் வெளிப்படச் செய்தது எனலாம். அதன் பின்தான் தமிழகத்தில் போராட்டங்கள் கிளம்பின. இது குறித்து ராணுவ அதிகாரிகளிடம் நாங்கள் கேள்விகளை எழுப்பினோம். “பாலச்சந்திரன் உடல் எங்களுக்குக் கிடைத்தது உண்மை. ஆனால், கொன்றது யார் என்பது தெரியாது. வெளியான ஒரு புகைப்படத்தில் இலங்கை ராணுவ உடை தெரிவதால், இது ராணுவத்தின் செயல் என்று சிலர் குற்றஞ்சாட்டுகிறார்கள். புலிகள் பல நேரங்களில் இலங்கையின் ராணுவ உடைகளையே பயன்படுத்தி வந்தனர் என்பது உலகறிந்த உண்மை.

“மேலும் இன்றைய உலகம் டிஜிட்டல் உலகம். ஃபோட்டோக்களில் எதையும் எப்படியும் மாற்றியமைக்க முடியும். அதையும் தாண்டி ‘அந்தச் சிறுவன் மணல் மூடைகளால் சூழப்பட்ட ஒரு பதுங்கு குழியில் இருக்கிறான்’ என்பது மட்டும்தான் அந்தப் படம் சொல்லும் உண்மை. அது புலிகளின் பதுங்கு குழியாகவும் இருக்கலாம். புலிகள், ராணுவத்திடம் சிக்காமல் சாவதற்காக சயனைட் குப்பிகளைக் கடிக்கத் தயாராக இருப்பவர்கள். அந்தச் சிறுவன் ராணுவத்திடம் உயிரோடு சிக்கி விடக் கூடாது என்று புலிகள் கூட முடிவு எடுத்திருக்க முடியுமே?

“சிறுவனை இரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளியவர்கள் இலங்கை ராணுவத்தினர் என்று குற்றஞ்சாட்டுபவர்கள், அந்தச் சிறுவனுக்கு ராணுவம் ஏன் பிஸ்கட் தந்து சுட்டுத் தள்ள வேண்டும் என்ற கேள்வியை தங்களுக்குள் எழுப்பிப் பார்க்க வேண்டும்? ஒரு பாலகனைக் கொல்லும் கல் நெஞ்சம் படைத்தவர்கள், அவனின் பசிக்கு பிஸ்கட் கொடுத்தா உபசரித்திருப்பார்கள்?” என்று அவர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள்.

“தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இலங்கையைப் பற்றிப் பெரும்பாலும் தவறான தகவல்களே தரப்படுகின்றன. இவற்றைப் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள்தான் இன்டர்நெட் மூலம் பரப்புகிறார்கள் என்று நினைக்கிறோம். இது டிஜிட்டல் உலகம். க்ராஃபிக்ஸில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இலங்கைப் படை வீரர்களை, விடுதலைப் புலிகள் பிடித்து வைத்துக் கொன்ற காட்சிகளைக் கூட, இலங்கை ராணுவம் தமிழர்களைக் கொன்றதாக மாற்றிப் பிரசாரம் செய்தார்கள். பயங்கரவாதிகள் எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம். ஆனால், ஒரு அரசு சார்ந்த ராணுவ வீரர்கள், நாளை பல பேருக்குப் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் உண்டு. அதனால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செயல்பட்டு விட முடியாது என்பதை தமிழக மக்கள் மறந்து விடக் கூடாது” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி எங்களிடம் இதுபற்றி பேசியபோது, “அந்தச் சிறுவனின் மரணம் தமிழகத் தமிழர்களை உலுக்கியதில் ஆச்சரியமில்லை. பாலகனின் மரணம் எந்த மனிதனையும் உலுக்கும் வலு படைத்தது. அதே தமிழகத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் கொன்று குவித்த பாலகர்களின் எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துப் பார்க்க வேண்டும்” என்று கூறி, விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் இறந்து போன சிறார்களின் புகைப்படங்கள் வெளியான பல நாளிதழ்களை எங்கள் முன் எடுத்துப் போட்டார். “இந்தச் சிறுவர்களின் மரணத்திற்கெல்லாம் நாம் இதே இரக்கம், கருணை காட்ட வேண்டாமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஆனால், தமிழகத்தைப் போலவே நாங்கள் சந்தித்த இலங்கைத் தமிழர்கள் பலரும், பாலச்சந்திரன் மரணம் குறித்து உருக்கமாகவே பேசினர். அந்தச் சிறுவனின் இறப்புக்கு இலங்கை ராணுவமே காரணம் என்று அங்குள்ள பெரும்பாலானோர் கருதுகிறார்கள். எனினும் வீட்டுக்கு வீடு இதுபோன்ற சிறார்களை அவர்கள் பலி கொடுத்திருப்பதால், தமிழகம் அளவுக்கு அந்த மரணம் அவர்களைப் பெரிதாக பாதிக்கவில்லை. பிரபாகரனின் மரணம் கூட அங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர்கள் எந்த மரணத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுமளவிற்கு விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள்.

கட்டம் இடப்பட்ட செய்தி 3

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பித்த மக்கள்

விடுதலைப் புலிகள் தங்கள் பிடியில் இருந்த நகரத்தை இழக்கும் நிலையில், அடுத்த நகரத்துக்கு நகருவார்கள். அப்போது அங்குள்ள தமிழ் மக்களையும் தங்களுடன் அழைத்துக் கொண்டே நகர்ந்து விடுவார்கள். அப்படி அடுத்த நகரத்துக்கு நகரும்போது, தாங்கள் கடந்து போகும் பகுதியில் எல்லாம் கண்ணி வெடிகளைப் புதைத்து விடுவார்கள். ராணுவம் பின் தொடர்ந்து வந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த ஏற்பாடு. இதனால், போர் நடக்கும் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் தப்பியோடும் வாய்ப்பும் இருக்கவில்லை. அதை மீறித் தப்பி வந்தாலும், தங்களைப் புலிகள் என்று சந்தேகித்து ராணுவத்தினர் சுட்டு விடுவார்களோ என்ற அச்சமும் அம்மக்களிடையே இருந்துள்ளது.

பொதுமக்களை அப்புறப்படுத்தாமல் தொடர்ந்து போர் நடத்துவதால், இன அழிப்பு என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டிய நிலை இலங்கை ராணுவத்திற்கும் இருந்தது. இந்த நிலையில்தான் இலங்கை ராணுவம் ‘நோ ஃபயர் ஸோன்’களை அறிவித்து, அப்பகுதிகளில் ‘ரிஸீவிங் பாயின்ட்’களைத் திறந்து, ‘பொதுமக்கள் வந்து சரணடையலாம்’ என்று அறிவித்தது. ராணுவம் இப்படி அறிவித்ததும், ஏராளமான தமிழ்க் குடும்பங்கள் புலிகளின் எச்சரிக்கையையும் மீறித் திரள் திரளாக ரிஸீவிங் பாயின்ட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

சுதந்திராபுரத்தில் முதன் முதலாக மக்கள் அப்படி விடுதலைப் புலிகளின் எச்சரிக்கையை மீறித் திரண்டபோது, ஒரு பெண் புலியும், ஒரு ஆண் புலியும் மனித வெடிகுண்டாக மாறி, ரிஸீவிங் பாயின்டுக்குச் சென்ற தமிழ் மக்களிடையே வெடித்துச் சிதறினார்கள். இதில், உயிருக்குப் பயந்து ராணுவத்திடம் சரணடைய வந்த அப்பாவித் தமிழர்கள் பலர் செத்து மடிந்தார்கள். இதையடுத்து, ‘ரிஸீவிங் பாயின்ட்’டுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்து விட்டது.

ஆனால், புலிகள் பலமிழந்து முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கிப் பின்வாங்கப் பின்வாங்க, அவர்களின் பிடியில் இருந்த பகுதிகள் கணிசமாகக் குறைந்தன. சுமார் 3 லட்சம் மக்கள், ஒரு குறைந்த பரப்பளவில் வேலையில்லாமல், உணவுக்கு வழியில்லாமல் அல்லாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தொடர்ந்து இலங்கை ராணுவம் அதிகப்படியான இடங்களில் ‘நோ ஃபயர் ஸோன்’களை அறிவித்ததால், புலிகளை மீறி, மக்கள் ரிஸீவிங் பாயின்ட்டுகளுக்கு வரத் துவங்கியுள்ளனர். ‘இனிமேலும் தாக்குப் பிடிக்க முடியாது’ என்ற சூழலில், புலிகள் இயக்கத் தலைமைக்குத் தெரியப்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளே மக்களை வெளியே செல்ல அனுமதித்து, அவர்களோடு தாங்களும் சிவிலியன்களைப் போல் வந்து ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.

– இவையெல்லாம் யாரோ சொன்ன தகவல்கள் இல்லை. அப்பகுதியில் இருந்து தப்பி வந்த மக்களும், முன்னாள் விடுதலைப் புலிகளும் சொன்னவைதான். ஆடியோ, வீடியோவில் பதிவு செய்யப்பட்ட அவர்களின் முழுமையான பேட்டி விவரங்கள் அடுத்து வரும் இதழ்களில் இடம் பெறவுள்ளன.

000
நமது நிருபர்கள் எஸ்.ஜே. இதயா, மற்றும் ஏ.ஏ. சாமி ஆகியோர், ஆறு நாட்கள் இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள பல தரப்பினரிடமும் பேசி, செய்திகளைச் சேகரித்து வந்துள்ளனர். இந்த இதழில் கிளிநொச்சி பகுதியில் அவர்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்:

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வரும் ஏ9 நெடுஞ்சாலையில் பகலில் பயணம் செய்ததால், இடையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலையின் இரு மருங்கிலும் சிவப்புக் கலரில் மண்டையோடும், இரு எலும்புகளும் கொண்ட எச்சரிக்கைப் பலகைகளை எங்களால் கவனிக்க முடிந்தது. உடனே காரை அங்கே நிறுத்தச் செய்து இறங்கினோம். அவ்வளவுதான்… அருகிலிருந்த புதருக்குள்ளிருந்து சரசரவென ஆறேழு பேர் வித்தியாசமான யூனிஃபார்மில், முகத்தை மூடிய கண்ணாடி, கையில் வாக்கி டாக்கி சகிதம் எங்களை நோக்கி ஓடி வந்தனர். “காரை இங்கு நிறுத்தக் கூடாது. உடனே கிளம்புங்கள்” என்று எங்களை விரட்டினர்.

நாங்கள் தமிழர்கள் என்பதை முகத்தைப் பார்த்தே உணர்ந்து கொண்ட ஒருவர், “இங்கே மிதிவெடிகளை (கண்ணி வெடி) அகற்றும் பணி நடந்து கொண்டிருக்கிறது. எந்த நேரமும் ஏதாவது ஒன்று வெடிக்கக் கூடும். எனவே, இங்கு வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை. உடனே அகன்று செல்லுங்கள்” என்று எச்சரித்தார். அப்போதுதான் அந்த எச்சரிக்கைப் பலகைகளையும் நாங்கள் கவனித்தோம். ‘மிதிவெடி அபாயம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து நாங்கள் காரில் கிளம்பி விட்டோம். சில கிலோ மீட்டர்களுக்கு அந்த எச்சரிக்கைப் பலகைகள் தொடர்ந்து காணப்பட்டன. இரு பக்கமும் பல பேர் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மண்ணைத் தோண்டி வெடிகள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், அப்பகுதிகளில் குச்சி ஊன்றி அதைப் பாதுகாப்பான பகுதி என்று அடையாளப்படுத்துகின்றனர். (ஏற்கெனவே அந்தப் பகுதிகளில் ஆளில்லா ரோபோ வாகனம் ஒன்றை ஓடவிட்டு, வெடிகளை வெடிக்கச் செய்து விடுவார்களாம். அதன் பின்னர், ஆட்கள் மூலம் மண்ணைத் தோண்டி வெடி எதுவும் இல்லை என்று உறுதி செய்வார்களாம். உயிரைப் பணயம் வைத்து நடக்கும் அந்த வேலை சிரமமானது என்பதைப் பார்த்ததுமே தெரிந்து விடுகிறது. முதலில் மீள் குடியேற்றப் பகுதிகளில் வெடிகளை அகற்றி, மக்களைக் குடியேற்றும் பணி நடந்ததாம். அது முடிவுற்ற பிறகு, இந்த வனப் பகுதியில் வேலை நடக்கிறதாம். இந்தத் தகவல்களை பின்னர் நாங்கள் சந்தித்த ராணுவ அதிகாரி மூலம் தெரிந்து கொண்டோம்.)

மேலும், அந்தப் பகுதியில் இருந்த பனை மரங்கள் அனைத்தும், மேலே கீற்றுகளை இழந்து வெறும் கம்பங்களைப் போல நின்றன. அந்தப் பகுதியின் முக்கியத்துவத்தை எங்களுக்குக் கார் ஓட்டிய தமிழ் டிரைவர் விளக்கினார். “2004 முதலே யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடத் துவங்கி விட்டது. துறைமுகம் மற்றும் விமான நிலையம் இருந்ததால், பெருமளவில் ராணுவத்தைக் கொண்டு வந்து இறக்கி, இலங்கை அரசு யாழ்ப்பாணத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது. ஆனால், கிளிநொச்சி பகுதி 2009 ஜனவரி வரை புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

“இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி செல்லும் இந்தப் பாதையில் ராணுவம் முன்னேறி வந்ததால், இப்பகுதி முழுக்க கண்ணி வெடிகளைப் புலிகள் புதைத்து விட்டனர். இதனால் இப்பகுதியில் பல ஆண்டுகள் கடும் போர் நடந்தது. வான்வெளித் தாக்குதல்கள் அதிகம் நடந்தன. இதில்தான் இந்தப் பகுதி மரங்கள் அத்தனையும் அழிந்தன. இந்தப் பகுதிகளில் தொடர் வான்வெளித் தாக்குதல்களை நடத்தி, புலிகளை அப்புறப்படுத்திய ராணுவம், பல மாதங்கள் கண்ணி வெடிகளை அகற்றி, பாதை ஏற்படுத்தி முன்னேறிச் சென்று கிளிநொச்சியைக் கைப்பற்றியது” என்று கூறிய டிரைவர், “கண்ணிவெடிகள் அதிகபட்சமாக புதைக்கப்பட்ட பகுதி இது என்பதால், இன்னும் இந்தப் பகுதிகளில் வெடிகளை அகற்றும் பணி முடிவடையவில்லை” என்று குறிப்பிட்டார்.

கிளிநொச்சி நகரத்தை நெருங்கியதும், வழியில் ராணுவமும், போலீஸும் எங்கள் காரை வழி மறித்தன. ஏதோ விசாரிக்கப் போகிறார்கள் என்று நாங்கள் நினைத்தபோது, ஒரு துண்டுப் பிரசுரத்தை மட்டும் எங்கள் கையில் கொடுத்து, பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுமாறு டிரைவரைக் கேட்டுக் கொண்டு வழியனுப்பி வைத்தனர்.

கிளிநொச்சியை அடைந்தபோது, அது பளிச்சென இருந்தது. புதிய பள்ளிகள், புதிய அரசு அலுவலகங்கள், புதிய நீதிமன்ற வளாகங்கள், புதிய துணைமின் நிலையங்கள் ஆகியவை பளபளவென நின்றன. தமிழர்களின் தனியார் கட்டிடங்களும், புதுப்பிக்கப்பட்ட புதுப்புது ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், டூ வீலர் ஷோரூம்கள் எல்லாம் காணப்பட்டன. பள்ளி மாணவ- மாணவியர் யூனிஃபார்முடன் ஆள் நடமாட்டமில்லாத சாலைகளில் கூட, எந்தவிதப் பயமுமின்றி சைக்கிள்களில் பயணம் செய்ததைப் பார்க்க முடிந்தது.

வீ.ஆனந்த சங்கரியின் அலுவலகத்தை நாங்கள் அடைந்தபோது, அதையடுத்த நிலத்தில் ஒரு ராட்சத வாட்டர் டேங்க் தரையோடு சாய்ந்து கிடந்தது. அதைப்பற்றி அந்த வழியே போனவர்களிடம் விசாரித்த போது, ‘இந்நகரைக் கைப்பற்றும் ராணுவத்தினருக்கு தண்ணீர் வசதி இருக்கக் கூடாது என்பதற்காக, இந்த வாட்டர் டேங்கை விடுதலைப் புலிகள் வெடி வைத்துத் தகர்த்து விட்டனர். இங்கிருந்த அரசுக் கட்டிடங்களையும் அவர்கள் வெடி வைத்துத் தகர்த்து விட்டுத்தான் வெளியேறினர்’ என்றார்கள்.

அதைப் படமெடுத்துக் கொண்டு, அடுத்த வாசலில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் நுழைந்து, அதன் செயலாளரான முன்னாள் எம்.பி. வீ.ஆனந்த சங்கரியைச் சந்தித்தோம். முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (டி.என்.ஏ.) இருந்தவர், தற்போது அந்தக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி விட்டார். “ராஜபக்ஷ எந்த அளவு குற்றவாளியோ, அதே அளவு குற்றவாளிதான் புலிகள் தலைவர் பிரபாகரனும். கடும் போரின் போதும் வன்னிப்பகுதி தமிழர்களை வெளியே விடாமல், தனக்கு அரணாக வைத்துக் கொண்டு பல தமிழ்க் குடும்பங்களை அழித்தொழித்தார். தமிழர்களை அழித்ததில் பிரபாகரனுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே பங்கு டி.என்.ஏ.க்கும் இருக்கிறது.

“பிரபாகரனை ஒரு அரசியல் தீர்வுக்குத் தயார் படுத்தாமல், அவரது அழிவுக்கும், ஆயிரக்கணக்கான தமிழர்களின் அழிவுக்கும் டி.என்.ஏ.வும் ஒரு காரணமாக இருந்தது. கடைசிக் கட்டப் போரின்போது, விடுதலைப் புலிகளின் வளையத்துக்குள்ளே லட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும், டி.என்.ஏ. அவர்களைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பிரபாகரன் இருந்தால் நாம் அரசியல் செய்ய முடியாது, அவரும் அவரது குடும்பமும் அழியட்டும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை” என்று குறிப்பிட்டார் ஆனந்த சங்கரி.

மேலும் அவர், “பல கட்டங்களில் தீர்வுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. ராஜபக்ஷ கூட ஒரு கட்டத்தில் இந்திய மாடல் மாகாணசபைத் தீர்வுக்கு ஒத்து வந்தார். ஆனால், புலிகள் அழிவை மட்டுமே தேர்வு செய்தனர். கடைசிக் கட்டத்தில் கூட ராஜபக்ஷ தமிழ் கட்சிகளை அழைத்துப் பேசினார். ‘ஏறக்குறைய 65 ஆயிரம் தமிழர்கள் ராணுவத்திடம் வந்து தஞ்சம் அடைந்து விட்டனர். இன்னும் சுமார் 20 ஆயிரம் மக்கள்தான் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்’ என்று எங்களிடம் குறிப்பிட்டார் ராஜபக்ஷ. ஆனால், நான் அதை மறுத்தேன். ‘இன்னும் 3 லட்சம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்’ என்று தெரிவித்தேன். ராஜபக்ஷ என் மீது கோபப்பட்டார். ‘பொய் சொல்லாதீர்கள்’ என்றார்.

“ஆனால், நான் ஆணித்தரமாக அடித்துச் சொன்னேன். அதன் பிறகு அவர் கொஞ்சம் நம்பினார் என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் அனுப்பும் உணவுகளைக் கூடுதலாக அனுப்பச் சொன்னார். (போர் நடக்கும்போதும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில், புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்களுக்கு, தினசரி உணவு அனுப்பப்பட்டுள்ளது.) அதோடு, மீண்டும் பல ‘நோ ஃபயரிங் ஜோன்’களை உருவாக்கி, மக்கள் வெளியே வந்து ராணுவத்தின் ‘ரிஸீவிங் பாயின்ட்’டில் தஞ்சம் புகலாம் என்று ராஜபக்ஷ அறிவித்தார். முதல் நாளே உள்ளிருந்து 85 ஆயிரம் பேர் ‘ரிஸீவிங் பாயின்ட்’டுக்கு வந்து சேர்ந்தனர். அடுத்தடுத்த நாட்களில் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் வெளியே வந்து விட்டனர். அதன் பிறகுதான் போர் மேலும் தீவிரமடைந்து முடிவுக்கு வந்தது” என்று குறிப்பிட்டார்.

“புலிகள் மீது பெருந்தவறு என்றாலும், அது பயங்கரவாதக் குழு என்பதால், அது தமிழர்களைக் கொன்று குவித்தாலும் அந்தக் குழுவைத் தண்டிக்க முடியாது. ஆனால், அதே தவறை ஒரு அரசாங்கம் செய்யக் கூடாது. அதற்குச் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். பொறுமை இழந்து ஆயிரக்கணக்கான மக்களையும் சேர்த்துக் கொன்றொழிக்கக் கூடாது. இப்போது என்னதான் உலக அளவில் மனித உரிமைப் பிரச்னைகளை எழுப்பினாலும், ராஜபக்ஷவை யாரும் தூக்கில் போட்டு விட முடியாது. ஆண்டவன் மட்டும்தான் தண்டனை அளிக்க முடியும். இல்லையென்றால், அடுத்து வருகிற ஆட்சி விசாரணை நடத்தி, அவருக்குத் தண்டனை அளிக்க வேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியமில்லை.

“ஆனால், தமிழர்களைச் சமமாக நடத்த இனி வரும் அரசாங்கங்கள் நடவடிக்கை எடுத்தால், அதுவே போதுமானது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர் கொண்டிருக்கும் நாடாக இருந்தாலும், ஒரு இஸ்லாமியரான அப்துல் கலாமை அதிபர் ஆக்கியது இந்தியா. இந்திரா காந்தியை வீழ்த்தியவனைச் சார்ந்த சமூகம், நாட்டில் பிரிவினை கோரியவர்களைச் சார்ந்த சமூகம் என்று ஒரு சிலருக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்காமல், பெருந்தன்மையுடன் ஒரு சீக்கியரை பிரதமராக்கியுள்ளது இந்தியா. காந்தி பிறந்த இந்தியா காட்டும் பெருந்தன்மையைத்தான், நாங்கள் இலங்கை அரசிடமும் எதிர்பார்க்கிறோம். புலிகள் போகட்டும். இங்கிருக்கும் தமிழர்களுக்குச் சம உரிமை கொடுக்கட்டும்” என்று முடித்தார் வீ.ஆனந்த சங்கரி.

அவரைச் சந்தித்து விட்டு வெளியே வந்த நாங்கள், ஒரு உணவு விடுதியில் உணவருந்தினோம். அப்போது அங்கிருந்த ஒருவர், “இலங்கை ராணுவத்தில் தற்போது இந்தப் பகுதி தமிழ்ப் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். 102 தமிழ் இளம்பெண்கள் அப்படி ராணுவத்தில் இணைந்துள்ளனர். அதில் விசேஷம் என்னவென்றால், அதில் ஒரு சிலர் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள். கிளிநொச்சி பெண்கள் பிரிவு ராணுவ முகாமுக்குப் போனால், அவர்களில் பலரைச் சந்திக்கலாம்” என்று எங்களுக்குத் தகவல் தந்தார். இதையடுத்து ராணுவ முகாமில் அப்பெண்களைச் சந்திப்பதற்கு அனுமதி பெற முயற்சி செய்தோம். எங்கள் முயற்சி பலித்தது.

‘தமிழகத்தில் இலங்கை ராணுவத்தைத் தமிழர்கள் தூற்றிக் கொண்டிருக்கும் வேளையில், அதே ராணுவத்தில் புதிய தமிழ்ப் பெண்களா? அதிலும் அவர்களில் சிலர் முன்னாள் பெண் புலிகளா?’ – அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன் அந்த முகாமுக்கு விரைந்தோம்.

(தொடரும்)

 


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

எத்தனையோ கட்டங்களில், எத்தனையோ தீர்வுகளுக்கு யார் யாரோ உதவ முன் வந்தனர். புலிகளால் இலங்கைக்கு நல்ல தீர்வு எந்தக் காலத்திலும் அமையாது .ராஜபக்ஷவை ஜெயிக்க வைத்த தமிழர்கள்!இலங்கையில் ‘துக்ளக்

 
cho1‘இந்தக் கட்டுரைத் தொடர் திட்டமிட்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் எழுதப்படுவதாகச் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். முதலில் இந்தக் கட்டுரைத் தொடர் உருவான பின்னணியை அவர்கள் தெரிந்து கொள்வது நலம்.

இலங்கைப் பிரச்னை துவங்கிய காலம் முதலே நமது ஆசிரியர் எடுத்த நிலைப்பாடு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அன்றைக்கு தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவும் விடுதலைப் புலிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொடுத்தபோதே, அதை எதிர்த்து எழுதியவர் நமது ஆசிரியர். “1983-லேயே உங்கள் ஆசிரியர் சோ, புலிகளுக்கு எதிராக எழுதினார். ‘இவர்களை ஆதரித்தால் அழிவுதான் வரும். இவர்களை சப்போர்ட் செய்வது தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் நல்லதல்ல. புலிகளால் இலங்கைக்கு நல்ல தீர்வு எந்தக் காலத்திலும் அமையாது’ என்றெல்லாம் அப்போது அவர் எழுதியபோது, என்னைப் போன்ற, இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் கோபப்பட்டோம். ஆனால், அவரது தீர்க்கதரிசனம்தான் இப்போது பலித்துள்ளது” என்று எங்களிடம் பேசும்போது குறிப்பிட்டார் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி கருணா.

MRN021313.jpg


இப்படி, தமிழக வெகுஜனக் கருத்து புலிகளுக்கு ஆதரவாக இருந்த காலம் தொட்டே, புலிகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் உறுதியாகத் தொடர்ந்து இருந்து வருகிறார் ஆசிரியர். ‘துக்ளக்’ அலுவலகத்திலும் கூட இவ்விஷயத்தில் ஆசிரியரின் கருத்துக்கு எதிரான கருத்து நிலவியதுண்டு. இலங்கைப் பிரச்னை தமிழகத்தில் அவ்வப்போது சூடு பிடிக்கும் போதெல்லாம், ‘பேசாமல் இலங்கைக்குச் சென்று பார்த்து ஒரு நேரடி ரிப்போர்ட் தந்தால் என்ன’ என்ற விவாதம் துக்ளக் அலுவலகத்தில் நடப்பதுண்டு. அந்த விவாதம் நிறைவடையும் முன்னரே, தமிழகத்தில் அந்தச் சூடு அடங்கிப் போய், வேறு பிரச்னை சூடு பிடித்து விடும். இந்த முறை பாலகன் பாலச்சந்திரனின் படங்கள் வெளியாகி, அதைத் தொடர்ந்து தமிழகத்தில் மாணவர் போராட்டம் சூடு பிடித்து, எதற்காகவும் பதவியை விட்டுக் கொடுக்காத தி.மு.க.வே மத்திய அரசிலிருந்து வெளியேறிய தருணத்தில், ‘இலங்கைக்கு நிருபர்களை அனுப்பி விடலாம்’ என்று முடிவெடுத்தார் ஆசிரியர்.

காரணம், இலங்கையில் ஆசிரியருக்கு இருக்கும் தமிழ்த் தொடர்புகள் தரும் செய்திகள் வேறாகவும், தமிழகத்தில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் வேறாகவும் இருந்தன. எங்களை இலங்கைக்கு அனுப்பும் முன் எங்களுக்கு ஆசிரியர் சொன்னது இதுதான்: “துக்ளக்கின் தனிப்பட்ட நிலைப்பாடு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். எனக்குத் தேவை அங்குள்ள உண்மை நிலவரம். இங்கு வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகளைத் தொகுத்துக் கொள்ளுங்கள். அவற்றின் உண்மை நிலை அங்கு எப்படியிருக்கிறது என்பதைப் பார்த்து வாருங்கள். இலங்கைத் தமிழர்களின் மனவோட்டம் என்னவென்பது தெரிய வேண்டும். உங்கள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் சந்தியுங்கள். என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டுப் பதில் வாங்கி வாருங்கள்.”

இப்படித்தான் எங்களைச் சுதந்திரமாக ஆசிரியர் அனுப்பி வைத்தார். இத்தனைக்கும் நாங்கள் இருவரும் ஈழத் தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்பதும் ஆசிரியருக்குத் தெரியும். “ஒருவேளை நாங்கள் சேகரித்து வரும் கட்டுரை முழுக்க, முழுக்கப் புலிகளுக்கு ஆதரவான கட்டுரையாக அமைந்து விட்டால் என்ன செய்வது?” என்ற கேள்வியை நாங்கள் ஆசிரியரிடம் வைத்தோம். “ஒட்டுமொத்த இலங்கையே புலிகளை ஆதரித்துக் கருத்துச் சொன்னாலும், அந்த இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்ற எனது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது. அந்த இயக்கத்தை ஆதரித்து என்னால் எழுத முடியாது. உங்கள் இருவரையும் இலங்கைக்கு இலவச சுற்றுலா அனுப்பி வைத்ததாக நினைத்துக் கொள்வேனே தவிர, கட்டுரையைப் பிரசுரிக்க மாட்டேன். ஆனால், அதே நேரம் இலங்கை மக்கள் எல்லாம் உண்மையிலேயே புலிகளைத்தான் ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை நான் மனதில் வைத்துக் கொள்வேன். புலிப் பிரசாரம் செய்ய என் மனசாட்சி இடம் கொடுக்காது. அப்படி ஒரு மனநிலை அங்கு நிலவினால், அதற்காக, அதை மாற்றி பொய்யான ஒரு கட்டுரையைப் பிரசுரிக்க வேண்டிய எந்த அவசியமும் நமக்கில்லை. எனவே, அங்குள்ள உண்மை நிலையை மட்டும் படம் பிடித்து வாருங்கள். மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று பதில் தந்தார்.

இப்படித்தான் நாங்கள் இலங்கைக்குப் பயணமானோம். இலங்கையில் கால் பதிக்கும் வரையிலும் நாங்கள் இருவரும், ‘பெரிய அளவில் கட்டுரைகள் எழுத வேண்டி வராது. ஆதாரங்கள் இல்லாமல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்தளவுக்குக் குற்றச்சாட்டுகளைத் தைரியமாக வைக்க மாட்டார்கள். நமது இந்தப் பயணம் ஆசிரியருக்கு ஏமாற்றமாக அமையவே வாய்ப்புகள் அதிகம்’ என்கிற ரீதியில்தான் பேசிக் கொண்டு போனோம்.

ஆனால், இலங்கையில் இறங்கிய நிமிடம் முதலே, நாங்கள் பார்த்ததும், கேட்டதும் எங்களைத் தூக்கி வாரிப் போட வைத்தது. ‘ஹிந்து கோவில்கள் அழிப்பு, தமிழ் பெயர்கள் அழிப்பு, சிங்களக் குடியேற்றம், சீனர் ஆதிக்கம், இன அழிப்பு, முள்வேலி முகாம்கள், புலிகளுக்கான சித்திரவதைக் கூடங்கள்.... என்று தமிழகத்தில் கிளப்பி விடப்பட்ட அத்தனை புகார்களும் பச்சைப் பொய் என்பதை நாங்கள் நேரடியாக அறிந்தபோது, ஏமாற்றமாகத்தான் உணர்ந்தோம். புலிகளை, தமிழகத்தில் சிலர் காவல் தெய்வமாக வழிபடும் நிலையில், அங்குள்ள ஈழப் பகுதி மக்கள் புலிகளைப் புழுதிவாரித் தூற்றுவதைப் பார்த்தபோது, முன்பு சில தருணங்களில் ஆசிரியரிடம் புலிகளுக்கு ஆதரவாகச் சில வாதங்கள் செய்ததை எண்ணி வெட்கமாகக் கூட இருந்தது.

ஆகவே, இந்தக் கட்டுரைத் தொடர், ஆசிரியரின் விருப்பத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. இலங்கையில் நிலவும் உண்மையின் உரைகல். ‘துக்ளக்’ வாசகர் ஒருவர் ‘டியர் மிஸ்டர் துக்ளக்’ பகுதியில் குறிப்பிட்டதுபோல, இந்தக் கட்டுரைத் தொடர் ‘துக்ளக்’கிற்கு ‘தமிழ் துரோகி, இலங்கை அரசின் கைக்கூலி’ உள்ளிட்ட பட்டங்களை ஒரு சிலரிடம் பெற்றுத் தரலாம். ஆனால், அது இலங்கையின் உண்மை நிலையை மாற்றி அமைத்து விடாது.
கட்டம் இடப்பட்ட  செய்தி 2
பிரபாகரன் மீண்டும் வருவார்?

எங்களுடன் சில நிமிடங்கள் மட்டுமே பேசிய புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அந்த ஓரிரு நிமிடத்திற்குள்ளாகவே அநியாயத்துக்குக் கொந்தளித்துத் தீர்த்து விட்டார். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அவரை நாங்கள் சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று. அப்படி ஏன் கொந்தளித்தார் அவர்?

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவ ஆட்சி நடக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒன்று வெளிநாட்டில் உள்ள தமிழர்களால் வைக்கப்படுகிறது.

on_20100110.1.jpg
இங்குள்ள மக்கள் எல்லோர் முகத்திற்கு நேராகவும் துப்பாக்கி இருப்பதுபோன்ற ஒரு சித்தரிப்பு அது. ஆனால், அப்படி ஏதும் இங்கு இல்லை. முன்பு புலிகள் துப்பாக்கியுடன் நடமாடினார்கள். இப்போது ராணுவத்தினர் நடமாடுகிறார்கள். அப்போது வேலை கிடையாது. சாலை கிடையாது. மின்சாரம் கிடையாது. பயணம் கிடையாது. இப்போது எல்லாம் இருக்கிறது. 2009-ல் இறுதிப் போர் முடிந்த சில காலத்திற்கு ராணுவ நெருக்கடி இருந்தது உண்மை. ஆனால், இப்போது அந்த அளவு இல்லை. படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது காலம் கழிந்தால், இலங்கையின் பிற மாகாணங்களைப் போல் நாங்களும் முழுச் சுதந்திரமாக இருக்க முடியும் என்று நம்பி கொண்டிருக்கிறோம்.

“அந்த நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுவது புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழகத்திலுள்ள சில அரசியல்வாதிகளும்தான். அவர்களுக்கெல்லாம் இலங்கைத் தமிழர் என்றால், அது புலிகள் மட்டும்தான். அவர்கள் எடுத்த எல்லா மடத்தனமான முடிவுகளுக்கும்
MR04112011_6.jpg
ஜால்ரா தட்டியவர்கள். இங்குள்ள வெகுஜனத்தின் கருத்து மீது அக்கறையில்லாதவர்கள். சண்டை போட வலு இல்லாதவர்கள். சினிமா ஹீரோ சண்டை போட்டால் விஸில் அடிப்பார்களே, அதைப் போன்ற விஸிலடிச்சான் குஞ்சுகள். அடிமைகளைச் சிங்கத்தோடு சண்டை போடவிட்டு, ‘சபாஷ்... அப்படித்தான்’ என்று உற்சாகக் குரல் எழுப்பிய சில கொடுங்கோல் மன்னர்களுக்கு இணையானவர்கள் அவர்கள். புலிகளின் சண்டையை ‘தமிழனின் வீரம்’ என்று சிலாகித்து விட்டு, அவரவர் நாடுகளில் பத்திரமாக இருப்பவர்கள். இங்கே பெற்றோர்களையும், பிள்ளைகளையும், சகோதர, சகோதரிகளையும் இழந்து நிற்பது நாங்கள். சுமார் 30 ஆண்டுகள் இருட்டிலும், பதுங்கு குழிகளிலும் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் நாங்கள்.

“எங்கள் நிம்மதியைத் தொலைத்தவர்கள் புலிகள்.
Tamilvictim1.jpg
எத்தனையோ கட்டங்களில், எத்தனையோ தீர்வுகளுக்கு யார் யாரோ உதவ முன் வந்தனர். ஆனால், எதற்கும் புலிகள் உடன்படவில்லை. மயானத்தில் அமைதி என்கிற மாதிரி, அவர்களின் அழிவுக்குப் பிறகுதான் ஓரளவு அமைதி திரும்பியிருக்கிறது. இப்போதுதான் எல்லோரையும் போல நாங்களும் சகஜமான ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.
943707_10200898344168590_1659358032_n.jpg
அதையும் மேற்சொன்ன நபர்கள் குலைக்கப் பார்க்கிறார்கள். புலிகளின் தோல்வியை ஜீரணிக்க முடியாத அவர்கள், ‘பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார். மீண்டும் வருவார். மீண்டும் தமிழீழம் மலரும்’ என்று தங்களுக்குத் தாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்கிறார்கள். நள்ளிரவில் காட்டு வழி போகிறவர்கள், பயத்தில் விஸிலடித்துக் கொண்டே போவதைப் போன்ற அவர்களின் இந்த வீரவசனம், எங்களைத்தான் மேலும் பாதிக்கும் என்பதை அவர்கள் கொஞ்சமும் உணரவில்லை.

“படிப்படியாகக் குறைந்து வரும் ராணுவ நெருக்கடி, மென்மேலும் குறைந்து நாங்கள் சுதந்திரமாக வாழ வழி செய்யாமல், ‘பிரபாகரன் திரும்பி வருவார். ஈழம் மலரும்’ என்று சொல்வதன் மூலம், ‘ராணுவமே! அதற்கு இடம் கொடுக்காமல், தமிழர்களை எச்சரிக்கையோடு கண்காணித்துக் கொண்டே இரு. அவர்களுக்கு மேலும் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இரு’ என்று மறைமுகமாக ராணுவத்துக்குச் சொல்வது போலத்தான் இருக்கிறது. ராணுவ ஆட்சி நடக்கிறது என்று முதலை கண்ணீர் விடுக்கும் அவர்கள்தான், ராணுவ நடவடிக்கை குறைந்து விடக்கூடாது என்று பாடுபட்டு வருகிறார்கள்” என்று கொந்தளித்தார் அவர்.
கட்டம் இடப்பட்ட  செய்தி 3
இந்தியாவில் தனி நாடு சாத்தியமா?
இப்போது தமிழ் ஈழம் கோரி எந்தத் தமிழரும் இலங்கையில் கோஷமிடவில்லை என்பதுதான் உண்மை. அரை வயிறு கஞ்சியோடு உயிர் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள் அநேகம். யாழ்ப்பாணத்தில் எங்களிடம் பேசிய ஒருவர் இப்படிச் சொன்னார்: “இந்தியாவில் தமிழகத்தின் நிலை என்ன? கேரளா தண்ணீர் தராது. கர்நாடகா தண்ணீர் தராது. ஆந்திரா தண்ணீர் தராது. அதற்கு மத்திய அரசும் உதவாது. ஆனால், நெய்வேலியிலிருந்து பிற மாநிலங்களுக்கு மின்சாரம் போகும். கூடன்குளம் அணு உலை, அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் அமையும். ஆனால் மின்சாரம் அயல் மாநிலத்திற்குப் போகும்.

“தமிழக மீனவர்கள் தாக்குதல் மீது, மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை என்ற புகார் பலரிடம் இருக்கிறது. ‘தமிழகத்திற்குப் போதிய அளவு நிதி ஒதுக்குவதில்லை, மண்ணெண்ணெய் அளவைக் குறைக்கிறது’ என்று வாரம் ஒரு முறையாவது மத்திய அரசு மீது மாநில அரசு புகார் பட்டியல் வாசிக்கிறது. இந்த நிலையில் தமிழகம் என்ன செய்கிறது? தனி நாடா கேட்கிறது? தொடர்ந்து மத்திய அரசிடம் போராடுகிறது. சட்டங்களின் மூலம் நீதிமன்றத்தை அணுகுகிறது. பிரிந்து சென்றால் இதைவிட பெரிய பிரச்னைகள் பல உருவாகும் என்பதைத்தானே நீங்கள் இலங்கை தமிழருக்கும் உபதேசிக்க வேண்டும்?

“இந்தியாவில் தெலுங்கானா என்ற ஒரு மாநிலத்தை பிரித்துத் தருவதிலேயே உங்களுக்கு எவ்வளவு நெருக்கடி இருக்கிறது? அப்படியிருக்கும்போது ஒரு நாட்டைப் பிரித்து தருவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? வன்முறையால் ஒரு நாட்டைப் பிரித்து விட்டால், எல்லா நாடுகளிலும் அதுபோன்ற நிலை தோன்றி விடும் என்றுதான் எந்த நாடும் பயப்படும். எனவே, இதை ஆதரிக்கக்கூடாது என்றுதான் எந்த நாடும் மனதளவில் சிந்திக்கும். எனவே, உலகளவில், தனி நாட்டிற்காக இனிமேல் ஆதரவு திரட்ட முடியாது.”
கட்டம் இடப்பட்ட  செய்தி 4
சிறப்பாகப் பராமரிக்கப்படும் வள்ளுவர் சிலை!
இலங்கை ராணுவம் தமிழர் அடையாளங்களை அழித்து வருகிறது என்பது தமிழகத்தில் வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டுகளில் முக்கியமானது. ஆனால், வவுனியா நகரில் நாங்கள் பார்த்த காட்சி அந்தக் குற்றச்சாட்டுக்கு நேர் எதிரிடையாக இருந்தது. வவுனியா நகரில் பல தமிழ் அறிஞர்களின் சிலைகளை நாங்கள் பார்க்க முடிந்தது. குறிப்பாக, ஒரு முக்கிய சாலையின் சந்திப்பில் இருந்த வள்ளுவர் சிலை பெயிண்ட் அடிக்கப்பட்டு ‘பளிச்’சென்று இருந்தது. நாங்கள் பார்த்த நேரத்தில், அந்தச் சிலையைச் சுற்றி பராமரிப்புப் பணிகளும் நடந்து கொண்டிருந்தன. இங்கு தமிழக மக்களிடையே எப்படியெல்லாம் பொய்கள் அள்ளி வீசப்படுகின்றன என்பதற்கு இது ஒரு மிகப் பெரிய உதாரணம்.thuglak8

இலங்கையில் ஆறு நாட்கள் தங்கி, செய்திகள் சேகரித்த நமது நிருபர்கள், எஸ்.ஜே. இதயா மற்றும் ஏ.ஏ. சாமி ஆகியோர் இலங்கையில் தாங்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்....

இலங்கை அரசாங்கங்கள் தமிழருக்கு எதிராகச் சில நிலைப்பாடுகளை எடுத்ததால்தான், 1970-களின் இறுதியில் அஹிம்சை முறையிலும், பின்னர் ஆயுதம் ஏந்தியும் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் ஆரம்பமாகின. குறிப்பாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன தமிழருக்கு எதிரியாக இருந்தார் என்று பலர் எங்களிடம் குறிப்பிட்டனர்.

மேலும் அவர்கள் கூறியவை: “ராஜீவ் காந்தி ‘பூமாலை ஆபரேஷன்’ என்ற பெயரில் இலங்கை வானில் அத்துமீறி நமது போர் விமானங்களை அனுப்பி, உணவுப் பொட்டலங்களை தமிழர் பகுதிகளில் வீசியபோதே, ஜெயவர்த்தன முற்றிலுமாகப் பணிந்து விட்டார். ராஜீவ் காந்தியின் ஆலோசனைப்படி அரசியல் சாஸனத்தில் 13-ஆவது சட்டத் திருத்தத்தையும் அவர் கொண்டு வந்தார்.

“ஆனால், அந்த இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைப் புலிகள் ஏற்கவில்லை. அன்று அவர்கள் இந்தியாவின் ஆதரவோடு, அந்த ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால், இந்தியாவின் நிர்பந்தங்களுடன், தாங்கள் நினைத்ததை எல்லாம் படிப்படியாகச் சாதித்து, தமிழர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. ஆயுதம் ஏந்திப் போரிட்ட பிற தமிழ் அமைப்புகள் எல்லாம் இந்த அரசியல் தீர்வை வரவேற்றன. ஆனால், புலிகள் இயக்கமோ இலங்கை அரசை எதிர்ப்பதை விடத் தீவிரமாக, சக தமிழ்ப் போராளி அமைப்புகளையே தாக்கி அழிக்கத் துவங்கியது.

“இதனால், இந்திய அமைதிப் படை இலங்கைக்குச் சென்றபோது, பல போராளிக் குழுக்கள் இந்திய ராணுவத்தின் பக்கம் நின்றன. புலிகளோ இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டதுடன், திடீரென்று தங்கள் நிலைப்பாட்டை மாற்றி, அதிபர் பிரேமதாஸவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்திய ராணுவத்தை வெளியேற்றினார்கள்.

“இன்று இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கும் தமிழர்களான டக்ளஸ் தேவானந்தா, கருணா, கே.பி. உள்ளிட்ட பலரையும் ‘தமிழ்த் துரோகிகள்’ என்று முத்திரை குத்தும் புலிகளின் ஆதரவாளர்கள், ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். தேவைப்படும் தருணத்தில், தங்கள் நலனுக்காக இலங்கை அரசாங்கத்துடன் கூட்டணி வைத்தால், தப்பில்லை என்று பலருக்கும் சொல்லிக் கொடுத்ததே புலிகள்தான். இலங்கை அரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, ‘இது இலங்கை நாட்டின் சகோதரர் பிரச்னை. இதில் அயல் நாடான இந்தியா தலையிடத் தேவையில்லை’ என்று இந்தியாவைத் துரத்தியது புலிகள்தான்.

“தமிழருக்கு விரோதமாகச் செயல்பட்ட பல இலங்கை அரசாங்கங்கள் கூட, நாட்டின் அமைதி கருதி புலிகளுடன் பல தருணங்களில் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தன. இந்தியா, நார்வே உள்ளிட்ட பல நாடுகள் சமரசத்துக்கு வந்தன. அப்பேதெல்லாம் அதைப் பயன்படுத்தி, தமிழர்கள் எதிர்பார்த்த தீர்வுகளைத் தாண்டி, பல சலுகைகளைப் புலிகள் பெற்றிருக்கலாம். ஆனால், தனி நாடு, தனி நாடு என்று பேசியே தங்களையும் அழித்துக் கொண்டு, பல ஆயிரம் அப்பாவித் தமிழர்களையும் அழித்து விட்டார்கள் புலிகள்.

“இலங்கையின் பல்வேறு அரசாங்கங்கள் - ஜெயவர்த்தன, பிரேமதாஸ, சந்திரிகா, ராஜபக்ஷ ஆகிய அதிபர்கள் தலைமையில் புலிகளுக்கு எதிராகப் போர் நடத்தி வந்தன. அதில் இறுதியாக, 2009-ல் அரசுக்கு வெற்றி கிடைத்தது. 30 ஆண்டு கால போரின் வெற்றியைத் தனது வெற்றியாக ராஜபக்ஷ கொண்டாடுவதால், போர்க்குற்றங்கள் என்ற குற்றச்சாட்டும் ராஜபக்ஷ மீதுதான் விழுகிறது. இது இயற்கையே. கடந்த 2005 தேர்தலில் ரனில் விக்ரமசிங்கவின் கட்சி, புலிகளின் ஆதரவைக் கோரியது. அப்போதுதான் ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முடியும் என்று தமிழர்கள் பலரும் வாதிட்டனர். ஆனால், புலிகள் அதை ஏற்கவில்லை. தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்று உத்திரவு போட்டனர். இதனால் ராஜபக்ஷ ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்து விட்டார். பல உலக நாடுகளின் உதவியோடு, புலிகளையும் அழித்து விட்டார். ராஜபக்ஷவை அதிபராகக் கொண்டு வந்ததே புலிகள்தான். தங்கள் அழிவைத் தாங்களே தேடிக் கொண்டனர்” என்று, கொழும்புவிலுள்ள பல தமிழர்கள் எங்களிடம் குறிப்பிட்டனர்.

கடந்த இதழில் ஒரு பெரியவர் குறிப்பிட்டதைப் போல, இலங்கை ராணுவம் ஒரே இரவில் அத்தனை அப்பாவித் தமிழர்களையும் புலிகளையும் கொன்று அழித்து விடவில்லை. 30 வருடங்களாகத் தொடர்ந்து போராடி, படிப்படியாகத்தான் புலிகளை அழித்துள்ளது. ஒரு பயங்கரவாதத்தை அழிக்க இதை விடப் பொறுமையான கால இடைவெளி இருக்க வாய்ப்பில்லை. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளாக இருந்தால், ஒரே வருடத்தில் பயங்கரவாதக் குழுவை உண்டு - இல்லை என்று ஆக்கியிருப்பார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

“1980-களுக்கு முன்பு இலங்கை ராணுவம் என்றால், காலையில் நடைப்பயிற்சி, மாலையில் வாலிபால், இரவில் மது என்று, ஜாலியான ஒரு பணியாகத்தான் இருந்தது. வீரர்களுக்குப் போர் நுட்பங்களே தெரியாது. புலிகள் உருவான பிறகுதான், அவர்கள் சண்டைக்கான பயிற்சிகளைப் பெற ஆரம்பித்தனர். ராணுவ வீரர்கள் போரில் எல்.கே.ஜி. படிக்கத் துவங்கியபோது, புலிகளோ அதில் பி.ஹெச்.டி. முடித்திருந்தனர். பல உலக நாடுகளில் பயிற்சி எடுத்து வந்துதான், இலங்கை ராணுவத்தினர் புலிகளுடன் போரிட்டனர்” என்றார் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான ஆடிட்டர் ஒருவர்.

இலங்கை ராணுவம் நிறைய இழந்துதான் இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இழந்தது என்பது ராணுவ வீரர்களின் உயிர்கள் மட்டுமில்லை; அரசின் சொத்துக்கள், பொருளாதாரம், சுற்றுலா... என்று பல விஷயங்களை அந்த நாடு இழந்துள்ளது. எனவேதான், புலிகளை அழித்த ராஜபக்ஷவை இலங்கை மக்கள், குறிப்பாக வர்த்தகர்கள் கொண்டாடுகிறார்கள். இதனால்தான் 2010 பொதுத் தேர்தலில் ராஜபக்ஷவும், அவரது கூட்டணிக் கட்சிகளும் பெருவாரியான வெற்றியைப் பெற்றுள்ளனர். இன்று அரசியல் சாஸசனத்தைத் திருத்தக் கூடிய அளவிற்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் ராஜபக்ஷ அரசுக்குக் கிடைத்துள்ளது.

ஏதோ சிங்களர்கள்தான், தமிழர்களை அழித்த ராஜபக்ஷவைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடி, அவரை ஜெயிக்க வைத்தார்கள் என்று நினைக்க முடியாது. புலிகள் தங்கள் ஈழ நாட்டின் ஒரு பகுதியாகக் குறிப்பிட்ட கிழக்கு மாகாணத்தில் கூட, ராஜபக்ஷ கூட்டணிதான் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் ராஜபக்ஷ கூட்டணி மூன்று எம்.பி. ஸீட்டுகளை வென்றுள்ளது. யாழ்ப்பாண கார்ப்பரேஷனையும் ராஜபக்ஷ கூட்டணிதான் பிடித்துள்ளது. ஆக, தமிழ் மக்களே கூட ராஜபக்ஷ கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால், அதற்கு என்ன அர்த்தம்? அங்குள்ள தமிழ் மக்களே போரை முடிவுக்குக் கொண்டு வந்த ராஜபக்ஷவைப் பாராட்டுகிறார்கள் என்றுதானே அர்த்தம் கொள்ள முடியும்? (ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தமிழில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையும் நாங்கள் பார்த்தோம். பார்க்க: படம்)

அதே நேரம், புலிகளால் அடையாளம் காட்டப்பட்ட தமிழ் தேசியக் கூட்டணியும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைத் தமிழ்ப் பகுதிகளில் பெற்றுள்ளது. ஆனால், போரின் போது அவர்கள் பெற்ற வெற்றியை விட, போர் முடிந்த பின் அவர்கள் பெற்ற வெற்றி குறைந்து போனதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இதையெல்லாம் சொல்லும் தருணத்தில், ராஜபக்ஷ மீது தமிழர்கள் சொல்லும் குறைகளையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. ராஜபக்ஷ பற்றி இலங்கை வாழ் தமிழர்கள் என்ன குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்பதை அடுத்த இதழில் பார்க்கலாம்.


__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

Forget about Individual opinions which are situation based and generalizing using one incident/experience shows the author's foolishness...One should look at this issue in a broader view and not with a narrow view, else it could be biased and individual experience based and not based on historical truths and facts...

Historically, Srilanka was dominated by Tamilian both in terms of Politically as well as Business / Trade. Colombo was seen as a port of Tamilians in the ancient period until British left India and Srilanka...

It was British who united the land of Tamils and Sinhalese under one central rule. Off course, this was the cause for the whole episode since post Independent of Srilanka.
Due to centralized British rule, Tamils becomes language minority, due to democratic rule, minority becomes politically weakened. They were targeted both Politically as well as suppressed Business / Trade...

Knowingly or Unknowingly British ruler community were the root cause for all the post independent Majority Vs Minority issues...The minority Tamil rights were not protected by Law, that was the single source of cause for all the subsequent episodes, Sinhalese rulers were reluctant to address this due to Majority vote bank Politics. The British Ruler community should be held responsible, they should present the original facts in front of the UN security council to take appropriate decision to bring back the lost livelihood of Tamils in the past 2 generations

In 50s, 60s and 70s, almost all Tamil migrants from native Tamilnadu, left their Wealth/Property/Business/Trade and returned to India from Colombo and other Sinhalese dominated areas. I don't want to explain the "burnt" story told by my grand father who was doing Business in Colombo and part of that generation. This shows minorities interest were not protected and hatreds were allowed to perform and finish the episode

If someone looked at Srilankan issue only from 20th century then it is totally wrong...

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard