New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்து- யார்? இயேசுவா-முஹம்மது நபியா?


Guru

Status: Offline
Posts: 24769
Date:
கிறிஸ்து- யார்? இயேசுவா-முஹம்மது நபியா?
Permalink  
 


கிறிஸ்து- இறுதிதூதர்- யார்? இயேசுவா-முஹம்மது நபியா?

  000002.jpg?w=194 00001.jpg?w=176

இவ்வுலகில் 3 பெரிய சமயங்களில் இரண்டும் கிறிஸ்துவமும்- இஸ்லாமும் இஸ்ரேல் நாட்டின் எபிரேய புராணக் கதைகளான எபிரேய பைபிள் எனப்படும் பழைய ஏற்பாட்டின்படி எதிர்பார்க்கப்பட்ட மேசியா என்ச் சொல்லிக் கொள்கின்றனர்.மேசியா என்றால் மேலே எண்ணெய் ஊற்றப் பட்டவர் எனப் பொருள். யூத அரசர் பதவி ஏற்கும்போது அபிஷேகம் செய்தல் என்னும் பொருள் தரும் சொல்.

நாம் இயேசுவின் கதையைச் சொல்லும் புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் இயேசுவா-முஹம்மது நபி-இருவரும் கிறிஸ்து  ஆக முடியுமா? எனப் பார்ப்போம்.

“இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்ற மரண ஓலத்துடன் இறந்தவர் இயேசு. ஒரு சிறிய குழுவைச் சேர்த்துக்கொன்டு இயக்கம் நடத்திய கலிலேயாவை சேர்ந்த இயேசுவை ரோமன் ஆட்சியினர் கைது செய்து, ரோமன் தண்டனைமுறையில் ஆட்சிக்கு எதிரான புரட்சிபோராளிக்கு உரிய தூக்கு மரத்தில் தொங்கும் முறையில் கொல்லப்பட்டவர், நிருபிக்கப்பட்ட குற்ற அட்டை-ரோமன் கவர்னர் பிலாத்து கைப்பட எழுதியது -நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்.

இரந்த இயேசுவை நேரில் அறியாத பவுல் என்பவர் -இயக்க காலம் முழுமையும் தீவீர யூதரிடம் மட்டுமே  இயங்கிய  இயேசுவை- கிரேக்கர்களிடம்- தெய்வீகமானவர் என எழுதிய கடிதங்களே புதிய ஏற்பாட்டின் முதல் எழுத்துக்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

பவுலின் கடிதங்களில் 6 மட்டுமே அவர் வரைந்தது அதில் பழமையானது

images?q=tbn:ANd9GcRq1QFOCJLMZMGekxOyqsZSMmUWH01hkYvmAjuoei9YfPml0BRi

1தெசலோனிக்கர் 1:10- நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.

1தெசலோனிக்கர் 4: 1313 சகோதர சகோதரிகளே! இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.14 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே:ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.

7 பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.

1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்: நாம் யாவரும் சாகமாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.53 ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.

 கொரிந்தியர் 1: 14 ஆனால் நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று, நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள்.

கலாத்தியர் 1: 4 இவரே நம் தந்தையாம் கடவுளின் திருவுளத்திற்கேற்ப இன்றைய பொல்லாத காலத்தினின்று நம்மை விடுவிக்குமாறு நம்முடைய பாவங்களின் பொருட்டுத் தம்மையே ஒப்புவித்தார்.

 

பிலிப்பியர் 1: .5 ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர்கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன்

ரோமன் 8”:1 கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது.

18 இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். 19 இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள்வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.

கலாத்தியர்4: 4 ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

ரோமன்1: .3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்(Greek Spherma Greek )

இஸ்ரேல் நாட்டு எபிரேய புராணக் கதைகளில் வீரன் தாவிது கீழ்தாந் பெரும்பகுதி ஆட்சி இருந்தது- மேலும் கதைப்படி எக்பிதின் நைல் நதி முதல் எபிராய்த்து நதி வரை உள்ள நிலத்தின் அரச்ச்ட்சி அன்னியர் ஆபிரகாம் வாரிசு என்பதே பழைய ஏற்பாட்டின் அடிப்படை, அதில் புனையப்பட்டுள்ள கதைப்படியே பெரும் பகுதியை ஆண்ட ஒரே அரசன் தாவீது மட்டுமே, அவனுக்கு இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தர் தாவீதின் வழி மகன்களுக்கு தடையில்லாமல் இறுதிகாலம் வரை ஆட்சி உரிமை வழங்கினார். அந்த ஆட்சியை மீட்க வரவேண்டியவனே மேசியா-கிறிஸ்து, மேசியா காலத்தோடு உலகம் அழியும்- மேசியாஉடனுள்ளோருக்கு சொர்க்கம்-மற்றவர்க்கு நரகம்.

இதை பவுல் நீட்டி மேசியாவைத் தேய்வீகர் எனப் புனைந்து- மேசியா மரணத்தினால் பூமியில் மனிதன் மறணத்திற்கு காரணம் ஆதாமின் பாவம்- ஆதாமின் பாவம் இயேசுவின் மரணத்தினால் நீங்கியது- இயேசு பெயலில் சேருவோர்க்கு சொர்க்கம் என கதை சொன்னர்-இயெசுவை- மேசியா வாழ்நாளில் என்பதை இரண்டாவது வருகையில் என நம்பி மதம் பரப்பினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

நாம் மேலே பார்த்த 6 கடிதங்களைத் தவிர புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களில் எதையும் எழுதியவர் யார் என்பது தெரியாது- சர்ச்- பல சீடர் பெயரில் தருகிறது. அதிலும் காணலாம்.

1பேதுரு  1: .5 நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.

1பேதுரு  1.20 உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார்.

1பேதுரு  4: 7 எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்.

17 ஏனெனில், தீர்ப்புக்கான காலம் கடவுளின் வீட்டாரிடத்தில் தொடங்கிவிட்டது. நம்மிடையே அது முதலில் தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்?

1யோவான் 2: 18 குழந்தைகளே, இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக் காலம் இதுவேயென அறிகிறோம்.

யூதா 1: 17 அன்பார்ந்தவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள் முன்னுரைத்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.18 ஏனெனில், இறைப்பற்றில்லாமல் தமது தீய நாட்டங்களின்படி வாழ்ந்து ஏளனம் செய்வோர் இறுதிக் காலத்தில் தோன்றுவர் என்று அவர்கள் உங்களுக்குச் சொன்னார்கள்.19 இவர்கள் பிரிவினை உண்டுபண்ணுபவர்கள்: மனித இயல்பின்படி நடப்பவர்கள்: கடவுளின் ஆவியைக் கொண்டிராதவர்கள்.

எபிரேயர்: :25-29  25 தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை.26 அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.27 மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி.28 அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

இது போல மேலும் பல உள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

இறந்த இயேசு சொன்னதாக சுவிசேஷக். ( good spelle  நல்ல கதை)  கதாசிரியர்களும் இயேசு சோன்னதாக உள்ளவை

மாற்கு 9:1 1 மேலும் அவர் அவர்களிடம், ’ இங்கே நின்று கொண்டு இருப்ப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார்.

மாற்கு 13: 29 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.30இவையனைத்தும் நிகழும்வரை இப்பொழுது வாழும் மக்கள் ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.-24 ’ அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

மாற்கு 14: 62 அதற்கு இயேசு,  நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் ‘என்றார்

மத்தேயு 10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ’ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.7 அப்படிச் செல்லும்போது ‘ விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ‘ எனப் பறைசாற்றுங்கள்.

.23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.

மத்தேயு 26: 27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ’ இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.29 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ‘என்றார்.

மத்தேயு11:  12 திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசுவன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.13 திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன.14உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்

யோவான்21: 0 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ‘ ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ‘ என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ‘ ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ‘ என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ’நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ‘ என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ‘ நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ‘ என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

மத்தேயு 23: 2  மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள்

அப்போஸ்தலர்  நடபடிகள்4: 1 பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்:2 அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின் மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சலடைந்து,3 அவர்களைக் கைது செய்தார்கள்.

அப்போஸ்தலர்  நடபடிகள்23: 6 அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறுபகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்: இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன் என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார்.7 அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர்.

அப்போஸ்தலர்  நடபடிகள் 23: 8 சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.

வரலாற்றுபடி 65 – 70 போருக்குமுன் சதுசேயர்கள் தான் யூதப் பாதிரிகளாக இருந்தனர், அதாவது யூத மோசே நாற்காலியில் அதிகாரத்தோடே அமர்ந்தவர்கள்- தேவதூதநிறுதி நாள்- உயிர்த்தெழுதல் எதுவும் இல்லை என்றனர். எனேனில் எபிரேய மூலத்தில் எங்குமே இவை நேரடியாக கிடையாது.

இயேசுவை கடவுள் என்கின்றனர்- அவர் சொன்னதாகயோவான்6: 8 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே. 58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ‘ பலித்ததா?? யூதர்களுள் உலகம் அழியப் போகிறது என நம்பிய ஒரு குழுவினர் அதீதமாய் நம்பிய கட்டுக்கதை- மேசியா வருகை. மேசியா வந்தால் அவரோடு உலகம் அழியும் – யார் அந்த கிறிஸ்து-கடைசி நபி????

யூதர்களுள் உலகம் அழியப் போகிறது என நம்பிய ஒரு குழுவினர் அதீதமாய் நம்பிய கட்டுக்கதை- மேசியா வருகை. மேசியா வந்தால் அவரோடு உலகம் அழியும் – யார் அந்த கிறிஸ்து-கடைசி நபி



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

//குரானில் நடந்த வரலாற்றை- தவறாக உளறி உள்ளதை இன்று வரை சுபி இங்கே மறுக்க வில்லை. http://suvanappiriyan.blogspot.in/2012/02/blog-post_23.html
http://devapriyaji.wordpress.com/2012/02/26/3857/
மேலும் வரலாற்று அடிப்படையில் தான் பார்க்க வேண்டும். ஊகங்களின் பெயரில் அல்ல. இதை விமர்சிக்கவும்.//

குரானில் நடந்த வரலாற்றை என்று உங்கள் தலைப்பை இட்டுள்ளீர்கள்.அந்த வரலாறு நிச்சயம் நடந்துள்ளது அதனை குர்ஆன் பதிவு செய்துள்ளது என்ற உண்மையை தாங்கள் (அறியாமல்)ஒத்துகொண்டமைக்கு முதலில் நன்றி.

தொல்லியல் என்றால் என்ன என்பதனை அறிய இதனை பார்க்கவும்-http://en.wikipedia.org/wiki/Archaeological_site 

இந்த சம்பவங்களை பற்றி குறிப்பிடும் பொழுது குர்ஆனிலே ஏன் அதனுடைய காலம் குறிப்பிடப்படவில்லை என்று கேட்கிறீர்கள்.இது போன்ற சம்பவங்கள் நடந்த இடம்,காலம்,நேரம், என்றெல்லாம் குர்ஆனிலே குறிப்பிட்டு இருந்தால் இன்று இருக்கும் குர்ஆனை விட 10 மடங்கு பெரிய குர்ஆன் தான் இருக்கும்.அப்பொழுது உங்களை போன்றவர்கள் என்ன கேட்பார்கள் இவ்வளவு பெரிய வேதத்தை என்று நாங்கள் முழுவதும் படிப்பது அதனை என்று செயல்படுத்துவது என்று....ஒரு வேளை சம்பவங்கள் நடந்த இடம்,காலம்,நேரம் இவ்வற்றை எல்லாம் குறிப்பிட்டு இருந்தாலும் அப்பொழுதும் உங்களை போன்ற அறிவு ஜீவிகள் யார் அப்பொழுது அதனை ஆட்சி செய்தார் என்று கேட்பார்கள் உங்களுக்கு கேள்வி மட்டும் தானே கேட்க தெரியும்(தினமும் எவ்வளவு பேர பாக்குறோம்)..
குர்ஆன் ஏன் இதுப் போன்ற குறிப்புகளை குறிப்பிடவில்லை.ஏனென்றால் இதுபோன்ற சம்பவங்களில் குர்ஆன் குறிப்பிடும் பொருள்(subject)மட்டுமே முக்கியம்..நீங்கள் ஒருவரிடத்திலே வேளை செய்கிறீர்கள் உங்களை அவர் கடைக்கு அனுப்பி ஒரு மிட்டாய் வாங்கிவரசொல்கிறார்(சும்மா ஒரு பேச்சிக்குதான்).நீங்கள் கடைக்கு போய் வேறு பொருளோ அல்லது ஒன்றும் வாங்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு திரும்ப மாட்டீர்கள் காரணம் உங்களை கடைக்கு அனுப்பியதே மிட்டாய் வாங்க தான்.இங்கு மிட்டாய் என்பது தான் பொருள்(subject)அதனை நன்கு விளங்கியதால் தான் அதனை நீங்கள் வாங்கிவருகிரீர்கள்.இந்த சம்பவத்தினை ஒருவர் உங்களிடத்திலே கேட்டல் நான் கடைக்கு நடந்து போனேனா அங்கு ஒரு நாய் போச்சு,பஸ் போச்சு,அப்பறம் ஒரு பெரிய கட்டடம் கட்டுறாங்க இதலாம் தாண்டி பச்சை கலர் பெயிண்ட் அடிச்சு சிவப்பு கம்மி போட்ட....இப்படி நீங்கள் மிட்டாய் வாங்கி வரும் வழியில் என்ன நடந்தது எதுப் போனது என்றெல்லாம் அவரிடம் விவரிக்க மாடீர்கள் ஏனென்றால் அதற்கு அவசியம் இல்லை என்று விளங்கி வைத்துள்ளீர்கள்,வேண்டும் என்றால் நீங்கள் மிட்டாய் வாங்கிய கடையை குறிப்பிடுவீர்கள் அதும் அவசியம் ஏற்பட்டால். 
அதுப் போல தான் இறைவனுக்கு மாறு செய்தவர்களை இறைவன் அழித்தான் என்பது தான் subject ஆகவே அவனுக்கு மாறு செய்யக் கூடாது என்பது இதிலிருந்து பெறப்படும் நியதி.இங்கு நியதியும்,பொருளும் தான் முக்கியம் இடமும்,காலகட்டமும் அல்ல.....இருந்தாலும் கார்போன் 14 செய்யப்பட்டுள்ளதா,ஆதாரம் இருக்கிறதா என்ற கேள்விக்கும் பதில் உள்ளது கிழே குறிப்பிடும் லிங்கை பார்க்கவும்.

http://en.wikipedia.org/wiki/Madain_Salih 
http://www.dainst.org/en/project/tayma?ft=all 

//கிறிஸ்து- இறுதிதூதர்- யார்? இயேசுவா-முஹம்மது நபியா?
http://devapriyaji.wordpress.com/2012/05/13/jesus-or-mohammad/// 
இதற்க்கு மறுபெழுதுவது வீண் வேளை என்றால் தலைபிற்கும் கட்டுரைக்கும் சமந்தமே இல்லை. இயேசுவை பற்றி உங்கள் கட்டுரையிலே குறிப்பிடுள்ளீர்கள் ஆனால் முஹம்மது நபியை பற்றி குர்ஆன் என்ன சொல்கின்றது,நபி மொழி என்ன சொல்கின்றது,பைபிள் என்ன சொல்கின்றது என்றும் ஒன்றும் குறிப்பிடவில்லையே(எங்கையாவது காப்பியடித்து அதனை கட்டுரையில் paste செய்ய மறந்திருக்கலாம்).குர்ஆனிலோ,நபி மொழியிலோ,பைபிளிலோ முஹம்மது நபி இறுதி தூதர் இல்லை என்று ஏதேனும் ஆதாரம் இருந்தால் தாருங்கள்....



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

Old Testament -does not expect any Messiah and if Jesus misunderstood and expected one- Quran is another product of this false belief.

If a book does not give details and any thing can be said on that and they are meaning less to a neutral person.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard