New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "ஆதாம் பாவ”க் கொள்கையின் அபத்தம்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
"ஆதாம் பாவ”க் கொள்கையின் அபத்தம்
Permalink  
 


“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1

September 14, 2010

மூலம்: ரிச்சர்ட் ஷேனிக் (Richard Schoenig)
தமிழில்: ஆர்.கோபால்

மொழிபெயர்ப்பாளர் முன்னுரை:

இந்தக் கட்டுரை கிறிஸ்துவ மதத்தைப் பற்றியது. இது ஏன் இங்கே ‘தமிழ்ஹிந்து‘வில் பிரசுரிக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழலாம்.

adam-and-eveதமிழ்நாட்டில் பரவியுள்ள கிறிஸ்துவ இஸ்லாமியக் கலாசாரத்தின் விளைவாக பல இந்துக்களும் ஆதாம் ஏவாள் கொள்கையை நம்புபவர்களாக இருக்கிறார்கள். முதல் பாவம் என்பது கவிதைகளிலும் கதைகளிலும் சினிமாக்களிலும் பேசப்படுகிறது. முதல் மனிதர்களைக் குறிக்க ஆதாம் ஏவாள் என்ற பெயர்கள் பொதுவாகப் புழங்கும் பெயர்களாக ஆகிவிட்டன. “முதல் பாவம்”என்ற பெயரில் ஓர் ஆபாசத் திரைப்படம் எடுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. பரவலாகிவிட்ட இந்த யூதப் பழங்குடியினரின் புராணக் கதையை பெரும்பாலான நம் மக்கள் நம்பவில்லை என்றாலும், ஏதோ ஒரு ரீதியில் ஆதிமனிதனைக் குறிக்க இந்தச் சொற்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. இந்த முதல் பாவக் கொள்கை காரணமாகவே தெருமுனைகளிலும் தொலைக்காட்சி பெட்டிகளிலும் பல்வேறு கிறிஸ்துவப் பிரசாரகர்கள், “பாவிகளே!…” என்று நம்மைப் பார்த்துக் கத்துகிறார்கள். அவர்கள் உலகத்தில் உள்ள அனைவரையும்- ஒரு பாவமும் செய்யாத பச்சை குழந்தையிலிருந்து மகாத்மா காந்தி வரை எல்லோரையும்- பாவிகள் என்று ஏன் சொல்கிறார்கள் என்று நாம் அறிந்துகொள்வது தேவையான ஒன்று.

மற்றொன்று, பரவலாக இருக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமியத் தொலைக்காட்சிகளில் வெளிநாட்டினரும் நம்மக்களில் சிலரும் இந்த ஆதாம் ஏவாள் கதையை, தொடர்ந்து பிரசாரம் செய்துவருகின்றார்கள். இதனால், ஒரு சில இந்துப் பொதுமக்கள் ஆதம் ஏவாள் என்பவர்கள் இவர்கள் சொல்வது போல கடவுளால்6000 வருடங்களுக்கு முன்னால் படைக்கப்பட்டவர்கள் என்று நம்புகிறார்கள். இது இந்து மதக் கொள்கை அல்ல. மாறாக, இந்து மதப் புத்தகங்களின்படி, இந்தப் பிரபஞ்சம், வயது கணக்கிட முடியாத அளவு புராதனமானது. ஒவ்வொரு யுகமும் பல லட்சம் வருடங்கள் கொண்டது. கிரித யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகியவை பருவகாலங்கள் போல சுழற்சியாக வருகின்றன. இந்த நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு சதுர்யுகமாகிறது. 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம் என்று சொல்லப்படுகிறது. (ஒரு கிரித யுகத்தின் அளவு 1728000 வருடங்கள்).

கார்ல் சாகன் (Dr. Carl Sagan, 1934-1996) என்ற புகழ்பெற்ற வானவியல் இயற்பியலாளர் தனதுகாஸ்மோஸ் (cosmos) என்ற புத்தகத்தில், கூறுகிறார்:

nataraja-in-chakra-form“The Hindu religion is the only one of the world’s great faiths dedicated to the idea that the Cosmos itself undergoes an immense, indeed an infinite, number of deaths and rebirths. It is the only religion in which the time scales correspond, to those of modern scientific cosmology. Its cycles run from our ordinary day and night to a day and night of Brahma, 8.64 billion years long. Longer than the age of the Earth or the Sun and about half the time since the Big Bang. And there are much longer time scales still.” Carl Sagan further says: “The most elegant and sublime of these is a representation of the creation of the universe at the beginning of each cosmic cycle, a motif known as the cosmic dance of Lord Shiva. The god, called in this manifestation Nataraja, the Dance King. In the upper right hand is a drum whose sound is the sound of creation. In the upper left hand is a tongue of flame, a reminder that the universe, now newly created, with billions of years from now will be utterly destroyed. These profound and lovely images are, I like to imagine, a kind of premonition of modern astronomical ideas.” Sagan continues, “A millennium before Europeans were wiling to divest themselves of the Biblical idea that the world was a few thousand years old, the Mayans were thinking of millions and the Hindus billions”
– (source: Cosmos – By Carl Sagan p. 213-214).

இந்தப் பிரபஞ்சமும் இது போன்ற எண்ணற்ற அனந்த அனந்தப் (infinite) பிரபஞ்சங்களும் பிரம்மத்தில் முகிழ்த்து மறைகின்றன என்று வேதங்கள் கூறுகின்றன. எல்லாக் காலங்களுக்கும் வெளிகளுக்கும் அப்பாலும் அதனுள் உறைந்தும் பிரம்மம் இருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. எண்ணற்ற பிரம்மாக்கள் எண்ணற்ற பிரபஞ்சங்களை உருவாக்கியவண்ணம் இருக்கிறார்கள். தங்கள் காலம் முடிந்ததும் அந்த பிரம்மாக்கள் மறைந்து புதிய பிரம்மாக்கள் பிறக்கிறார்கள் என்று இந்து மதம் உரைக்கிறது. பிரம்மத்துக்குள் ஒடுங்கியுள்ளது வெளிப்படுகிறது  என்று இந்து மதப் புத்தகங்கள் உரைக்கின்றன. ஆகவே ஆதாம் ஏவாள் என்ற சிறுபிள்ளைக்கதையை நாம் நம்புவது தவறு.

அறிவியற்பூர்வமாகவும் ஆதாம் ஏவாள் என்ற மனிதர்கள் இல்லை. தொடர்ந்து மாறிவரும் பரிணாமத்தில் இதுவரை குரங்கு, இதற்குப் பிள்ளை மனிதன் என்று சொல்வதும் தவறு. மேலும் பல்வேறு அறிவியல்களில் ஒன்றான பரிணாமவியலை கிறிஸ்துவமோ அல்லது இஸ்லாமோ ஒப்புக்கொள்வதும் இல்லை. ஆகவே பரிணாமவியலின்படி ஒருவரை மனிதன் என்று சொன்னாலும் அது ஆதாம் அல்லது ஏவாள் என்று கிறிஸ்துவமும் இஸ்லாமும் ஒப்புகொள்வதில்லை. ஏனெனில் பைபிள் சொல்லும்யாஹ்வே என்னும் தெய்வத்தால் களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டாலே ஆதாம். பரிணாமவியலின்படி தோன்றும் மனிதன் ஆதாம் அல்ல.

நமது இந்து மதப் புத்தகங்களுக்கும் அறிவியலுக்கும் புறம்பான, இப்படிப்பட்ட தவறான கருத்துகளை, ஊடகங்களின் இடைவிடாத பொய்ப் பிரசாரங்களின் காரணமாக இந்துக்களான நாம் உண்மையெனக் கருதிவிடக்கூடாது ஆகவே இந்தக் கட்டுரை, தொடர்ந்து ஒலித்துகொண்டு வரும் இப்படிப்பட்ட யூதப் பழங்குடி மக்களின் புராணக்கதைகளை வரலாறு என கருதிவிடக்கூடாது என்பதற்காகவும் இந்துக்கள் தெளிவு பெற வேண்டும் என்பதற்காகவும் மொழிபெயர்க்கப்பட்டதே அன்றி, கிறிஸ்துவ மதத்தின், அல்லது இஸ்லாமிய மதத்தின் கருத்துகளை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது அல்ல.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

1. முன்னுரை

கிறிஸ்துவ மதத்தில் [1] முதல் பாவம் என்ற கொள்கை (doctrine of original sin (DOS)) உள்ளது. இந்தக் கொள்கையை கிறிஸ்துவத்தின் அடிப்படைக் கொள்கையாக கிறிஸ்துவம் கருதுகிறது. இது “மெல்லவும் முடியாத, துப்பவும் முடியாத” கொள்கை. இந்தக் கொள்கையை வைத்துகொண்டும் கிறிஸ்துவத்தால் இருக்கமுடியாது. தூக்கி எறிந்துவிடவும் முடியாது. இக்கட்டுரையில், முதல் பாவம் நடந்திருக்கமுடியாதது; ஒழுக்க ரீதியில் தவறானது என்று காட்டியதோடு, கிறிஸ்துவத்தால் இதனை வைத்துகொள்ளவும்முடியாது என்று சுட்டிக்காட்டுகிறேன். ஆனால், அதே வேளையில், 2000வருடங்களாக இதனை கிறிஸ்துவத்தோடு இறுக்கிப் பிணைத்துவிட்டபடியால், இதனைத் தூக்கி எறிவது கிறிஸ்துவ மதத்துக்கே ஆபத்தாகவும் ஆகும் என்றும் காட்டுகிறேன்.

2. முதல் பாவக் கொள்கை என்றால் என்ன?

1. மத்திய தரைக்கடல் (mediterranean sea) பகுதியில் வாழ்ந்துவந்த பழங்குடியினரான யூதர்கள், தங்கள் புராணக்கதைகளை, எல்லாப் பழங்குடியினர் போலவே எழுதிவைத்தனர். பூமி எப்படி உண்டாயிற்று, மனிதன் எப்படி உண்டானான் ஆகிய கதைகளை இவர்கள் மற்ற ஆப்பிரிக்க, அமெரிக்கப் பழங்குடியினர் போலவே கற்பனை செய்து எழுதினார்கள். பின்னர் இவர்களிலிருந்து கிளைத்த ஒரு கிளைமதம்கிறிஸ்துவம் என்ற பெயரில் மெல்ல மெல்ல பரவியது. ரோம அரசால் தத்தெடுத்துகொள்ளப்பட்ட பின்னர் அந்த சாம்ராஜ்யத்தின் வழித்தோன்றல்களாக உருவான ஐரோப்பிய நாடுகளாலும் உலகெங்கும் பரப்பப்பட்டு இந்தப் பழங்குடிப் புராணக்கதைகள் வரலாறு போலப் பிதற்றப்பட்டன. இந்த முதல் பாவம் என்ற கொள்கை இவர்களது ஜெனஸிஸ் எனப்படும் ஆதியாகமம் என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.

adam_in_gardenயாஹ்வே என்ற தெய்வம் உலகத்தை உருவாக்கியதாம், பிறகு ஆரம்ப ஆண், பெண் ஜோடியை உருவாக்கியதாம். இந்த ஜோடியை தான் உருவாக்கிய ஒரு தோட்டத்தில் வைத்ததாம். அந்தத் தோட்டத்தில் பலவித விலங்குகளும், செடி கொடி தாவரங்களையும் உருவாக்கிவைத்திருந்ததாம். இந்தச் சமயத்தில் ஆதாமும் ஏவாளும் சாகாவரம் பெற்றவர்களாகவும், வலி, துயரம் ஆகியவை அண்டாதவர்களாகவும் இருந்தார்களாம். அந்தத் தோட்டத்தில் அவர்கள் சுற்றித்திரிய அனுமதித்திருந்தாலும், அறிவு மரத்தின் (Tree of the Knowledge of Good and Evil) கனியை மட்டும் சாப்பிடக்கூடாது என்று சொல்லி, அதனைச் சாப்பிட்டால் உடனே மரணமடைவார்கள் என்றும் எச்சரித்ததாம். பேசும் பாம்பு (இது லூசிபர் என்னும் சாத்தானாம்) இவர்களைத் தூண்டிவிட, இவர்கள் அந்த மரத்தின் கனியைச் சாப்பிட்டார்களாம். கிறிஸ்துவ மதத்தில் உள்ளவர்கள் இதனை மனிதனின் முதல் ஒழுக்கக்கேடு என்றும், முதல் பாவம் என்றும், இதனால், மனிதனின் வீழ்ச்சி உருவானது என்றும் கூறுவார்கள். யாஹ்வே (இதனைத்தான் கர்த்தர் என்று கிறிஸ்துவர்கள் தமிழில் கூறுவார்கள்.) இந்த ஜோடியை தனது தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி வலி, துயரம், கடின வாழ்க்கை, இறுதியில் சாவு என்று வாழும்படிக்கு தண்டித்ததாம். (தோட்டம் வானத்தில் இல்லை. பூமியில்தான் இருக்கிறது. அவர்கள் திரும்பவும் உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காக தோட்ட வாசலில் தேவதைகள் காவல் வேறு இருக்கிறார்களாம்.)

god-creates-eve-from-adams-ribஅவர்களுடைய தண்டனையில், அவர்கள் பாவம் செய்ய இயற்கையிலேயே விருப்பமுள்ளவர்களாகவும், தங்களைத் தாங்களாகவே அந்தத் தண்டனையிலிருந்து மீட்டுகொள்ள முடியாதவர்களாவும் மனிதர்களை ஆக்கியதும் சேர்த்தியாம். கூடவே, அவர்களது தண்டனை அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது குழந்தைகளுக்கும் சந்ததிகளுக்கும் மேலேயேயும் இருக்குமாம்; கூடவே மிருகங்களுக்கும் இந்த தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டதாம். (மிருகங்கள் செய்யாத தவறுக்கு மிருகங்களுக்கும் தண்டனை!)

உலகம் உருவானது எப்படி என்று யூதர்களது பழங்குடிக் கதை போன்றே ஒவ்வொரு பழங்குடிகளிலும் ஒரு கதை உண்டு. அவற்றை இந்தச் சுட்டியில்காணலாம் . அந்தப் பழங்குடிக் கதைகளைப் பிரசாரம் செய்ய, பெரிய கூட்டம் உங்களை தெருமுனைகளில் சந்தித்து பாவிகளே என்று கதறவில்லை என்பதால் அதனைப் பற்றிப் படிப்பதோடு நிறுத்திக்கொள்ளலாம்.

adam_and_eve_sinஇதற்கு மேல் உபரிச் செய்திகளாக இந்த கிறிஸ்துவ மதத்தின் அடிப்படைக் கருதுகோள்களை நினைவுப்படுத்திக்கொள்வது நல்லது. அதாவது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், யாஹ்வே தெய்வம் உலகத்தையும் வானத்தையும் படைத்து அதில் ஆண் பெண் இருவரையும் படைத்து அவர்கள் கீழ்ப்படியாததால், அவர்களின் சந்ததிகளுக்கும் மிருகங்களுக்கும் முதல் பாவத்தைக் கொடுத்தது. இந்த முதல் பாவம் எல்லோர் மேலும் இருக்கிறது. அந்த முதல் பாவத்தை போக்க யாஹ்வே தெய்வம் ஒரு வழியைச் சிந்தித்தது. அது தனக்குத் தானே ஒரு பலி கொடுத்துக்கொள்வதாக முடிவு செய்ததாம். யூதர்களின் பழைய ஏற்பாட்டில் யாஹ்வே தெய்வத்துக்கு, களங்கமில்லாத ஆடு பலி கொடுக்கப்பட்டால் சந்தோஷமாகி, பலி கொடுத்தவரின் பாவங்களை மன்னிக்கிறதாம். ஆகவே இப்போது களங்கமே இல்லாத ஒரு மனிதனை தனக்குப் பலிகொடுப்பதன் மூலம் யாஹ்வே சந்தோஷமடைந்து பொதுமக்களின் முதல் பாவத்தை மன்னிக்குமாம். ஆகவே இயேசு கிறிஸ்து என்ற தன் மகனைப் பிறக்கவைத்து, தவறே செய்யாத அவரைக் கொலைசெய்து, அதன் மூலம் சந்தோஷமடைந்து, பொதுமக்களின் பாவங்களை மன்னிக்கிறதாம். முன்பு பலி கொடுக்கப்பட்ட ஆட்டின் ரத்தத்தையும் சதையையும் யூதர்கள் புசிப்பார்கள். அதனால்தான் கிறிஸ்துவத்தில், பலி கொடுக்கப்பட்ட இயேசுவின் ரத்தத்தையும் சதையையும் சர்ச்சுகளில் புசிப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு நிபந்தனை. அப்பாவியான இயேசு கொலை செய்யப்பட்டதால் எல்லோருடைய பாவங்களும் போய்விடாதாம். இயேசு கிறிஸ்து என்பவர் பாவங்களை மன்னிக்க யாஹ்வேயால் அனுப்பப்பட்டார் என்று நம்புபவர் மட்டுமே முதல் பாவத்திலிருந்து மீட்கப்படுவாராம். இதனால்தான் தெரு மூலைகளில் நின்று பாவிகளே என்று நம்மைப் பார்த்துக் கத்தி, இயேசுவை நாம் நம்பவேண்டும் என்று சொல்லுகிறார்கள். இயேசுவும் இந்த உலகத்தில் பிறந்தபோது மேரியிடமிருந்து அவருக்கு முதல் பாவம் ஒட்டியிருக்குமே என்ற கேள்விக்கு, மேரியின் வயிற்றில் இயேசு கருவாக வரும்போது முதல் பாவத்தின் தீட்டு தீண்டாவில்லை என்று எழுதிகொண்டார்கள். ஏன் தீண்டவில்லை என்பதற்கு காரணமெல்லாம் இல்லை. தீண்டவில்லை; அவ்வளவுதான். அதற்கு ஒரு பெயர் வைத்துகொண்டார்கள். அது முதல் பாவம் தீண்டாத கருவடைதல் என்ற பொருளில் immaculate conception of Mary.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 


3. இந்த முதல் பாவக் கொள்கையுடன் கிறிஸ்துவம் இருக்கமுடியாது

கிறிஸ்துவம் இந்த முதல் பாவக் கொள்கையுடன் இருக்கமுடியாது என்று காட்ட, இந்தப் பழங்குடிக் கதைக்கும் அறிவியலுக்கும் இடையே பெரிய முரண்பாடு இருக்கிறது என்று காட்டுகிறேன். கூடவே, இந்தப் பழங்குடி முதல் பாவக் கதையில் ஏராளமான ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பது மட்டுமல்ல; இதில் அறிதலின் பிரச்சினையும் (knowledge problem) இருக்கிறது என்று காட்டுகிறேன்.

 

3.1 பரிணாமவியல் அறிவியலும் யூதப் பழங்குடியினரின் ஆதியாகம உருவாக்கமும் ஏடன் தோட்டக் கதைகளும். [2]

முன்னரே சொன்னது போல, முதல் பாவக் கொள்கை, யூதப் பழங்குடியினரின் உலக உருவாக்கக் கதைகளின் பகுதி. உண்மையான உலக உருவாக்கம் யூதப் பழங்குடியினரது புராணக்கதைப்படி நடக்கவில்லை என்றால், முதல் பாவமும் இல்லை. அதனால்தான் பெரும்பாலான கிறிஸ்துவ அடிப்படைவாதிகள் யூதப் பழங்குடியினரின் ஆதியாகமக் கதைகளின்படிதான் உலகம் உருவானது என்று வலியுறுத்துகிறார்கள். இந்தக் கால கிறிஸ்துவ அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, கடந்த 2000வருடங்களாக எல்லா கிறிஸ்துவர்களும் யூதப் பழங்குடிப் புராணக்கதைகளின்படிதான் உலகம் படைக்கப்பட்டது என்று சொல்லிவந்திருக்கிறார்கள். அப்போஸ்தலர் பவுல், சர்ச் தந்தைகளில் ஒருவரான அகஸ்டின் ஆகியோர் உள்ளிட்ட கிறிஸ்துவத் தலைவர்கள், யூதப் பழங்குடியினரின் புராணக்கதைகளின்படிதான் உலகம் படைக்கப்பட்டது; அது வரலாற்று உண்மை என்றுதான் எழுதி வந்திருக்கிறார்கள். பார்ட் கிளிங் [3] சுட்டிக்காட்டுவது போல, யேசுவும் அதன் உண்மையை வலியுறுத்துகிறார்.

பைபிளில், வரலாற்றில் இருந்த ஒரு நபராகவே ஆதாம் சித்தரிக்கப்படுகிறார். இதனால்தான் பல்வேறு பைபிள் வம்சாவளிகள் ஆதாமின் வழியில் பிறந்ததாக எழுதப்படுகின்றன. ஆதியாகமம் 4-5 ஆதாமின் வழித்தோன்றல்களையும் அவர்களது வயதையும் வரிசைப்படுத்துகிறது. 1 Chronicles முதல் அத்தியாயம், ஆதாமின் வழித்தோன்றல்களை வரலாற்று நபர்களாகச் சித்தரிக்கிறது. லூக்காவில் இயேசுவும் ஆதாமின் வழித்தோன்றலாகத்தான் கருதப்படுகிறார்.

Jesus was about thirty years old when he began his work. He was the son (as was thought) of Joseph son of Heli, … son of Enos, son of Seth, son of Adam, son of God. (Luke 3:23-38)

23 இயேசு போதிக்கத் தொடங்கும்பொழுது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது. அவரை மக்கள் சூசையின் மகன் என்று கருதினர்.

24 சூசை ஏலியின் மகன்; ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்;

இப்படியே போய்…

… 37 மத்துசலா ஏனோக்கின் மகன்; ஏனோக்கு யாரேதின் மகன்; யாரேது மகலாலெயேலின் மகன்; மகலாலெயேல் காயினானின் மகன்;

38 காயினான் ஏனோசின் மகன்; ஏனோஸ் சேத்தின் மகன்; சேத் ஆதாமின் மகன்; ஆதாமோ கடவுளின் மகன்.

மாத்தியூவின் சுவிசேசத்தில் யேசுவே ஆதாமையும் ஏவாளையும் வரலாற்று நபர்களாகக் கருதிப் பேசுகிறார்.

He answered, ‘Have you not read that the one who made them at the beginning “made them male and female.”‘ (Matthew 19:4)[4]

அதற்கு அவர், “படைத்தவர் தொடக்கத்திலிருந்தே- ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்” என்றும், (Matthew 19:4) [4]

கிறிஸ்துவர்கள் இவ்வளவு உறுதியாக ஆதியாகமப் புராணக்கதைகள் நடந்ததாகவும் வரலாறு என்றும் உறுதியாகக் கூறினாலும், ஆதியாகமப் பழங்கதைகள் தற்போதைய அறிவியல் ஆய்வுகளுக்கும், பரிணாமவியல் போன்ற அறிவியல்களுக்கும் இன்னும் பல நிலவியல், வானியல், புவியியல், அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளுக்கும் முரண்படுகின்றன. ஆதியாகமத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது போல உலகம் தோன்றியதற்கோ, அல்லது மனிதன் தோன்றியதற்கோ எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஒரு மரத்தின் கனியைச் சாப்பிட்டு எது சரி எது தவறு என்று தெரிந்துவிடும் என்பது போன்ற மரத்திற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. பாம்புகள் பேசும் என்பதற்கோ அல்லது மிருகங்களும், மனிதர்களும் சாவா வரம் பெற்றவர்களாக இருந்தார்கள் என்பதற்கோ எந்தவித ஆதாரங்களும் இல்லை. அவர்கள் வலி துக்கம் உணராமல் இருந்திருந்தார்கள், அல்லது இருந்திருப்பார்கள் என்பதற்கோ எந்தவித ஆதாரங்களும் இல்லை. இப்படிப்பட்ட ஆதியாகமக் கதைகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பது மட்டுமல்ல, இந்தக் கதைகள் பொய் என்பதற்கான ஏராளமான ஆதாரங்களையும் அறிவியல் குவித்து வைத்திருக்கிறது. ஆகவே ஆதியாகமம் என்று சொல்லக்கூடிய யூதப் பழங்குடியினரின் புராணக்கதைகள் வரலாற்றுரீதியில் பொய்யானவை. ஆகவே முதல் பாவம் என்பதும் பொய் என்பதே அறிவியலின் அதிகாரபூர்வமான நிலைப்பாடு. (இதனை இன்னும் விவரிக்கலாம். உதாரணமாக ஆதாமின் பின்னே வரும் வம்சாவளியையும் அதில் ஒவ்வொருவர் பிறப்பும் அவர்கள் வாழும் வயதும் கொடுக்கப்பட்டிருப்பதால், அவற்றை கணக்கிட்டு உலகம் 6000 வருடங்கள் பழையது என்று யூத அடிப்படைவாதிகளும் கிறிஸ்துவ அடிப்படைவாதிகளும் இன்னும் நம்புகிறார்கள். ஆனால் உலகம் பல பில்லியன் வருடங்கள் பழையது மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சம் நமது பூமியை விட இன்னும் பல கோடி வருடங்கள் பழையது. தற்போது பல அகழ்வாராய்வுகளில் 100000 வருடங்களுக்கு முந்தைய மனிதர்களது எலும்புகள் கிடைத்துள்ளன.டைனசோர்கள் இன்னும் பல லட்சம் வருடங்கள் பழையவை. அவற்றின் எலும்புகளும் கிடைத்துள்ளன. ஆகவே யூதப் பழங்குடியினரது புராணக்கதையில் வரும் ஆதியாகமத்தில் உள்ளது அறிவியற்பூர்வமாக பொய் என்று அறியலாம்.)



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

3.1.1 ஆதியாகமப் புராணக்கதைகளுக்கும் ஈடன் தோட்ட கதைகளுக்கும் உவமேயப் பொருள் கொடுத்தல்

சில முற்போக்கு வேடம் போடும் கிறிஸ்துவ வட்டங்களில் ஆதியாகமக் கதைகளை வேறுமாதிரி விளக்குகிறார்கள். அதன்படி, இந்தக் கதைகளை வரிக்கு வரி உண்மை என்று அப்படியே புரிந்துகொள்ளக்கூடாது; கருத்துகளை விளக்கும் புராணக்கதைகளாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற பார்வையை முன்னிருத்துகிறார்கள். “ஒரு விதமான” வகையில் இவை உண்மையானவை என்றும், ஆனால், அவற்றை வரலாற்று நிகழ்வுகளாகப் பார்க்கக்கூடாது என்பதும் இந்த நிலைப்பாடு. கருத்துகளைப் புரிந்துகொள்வதற்காக சொல்லப்படும் வகையில் “உண்மையானவை” (அதாவது கருத்துகள் சரி, ஆனால் நிகழ்வுகள் வெறும் கதை) என்றும், அதாவது யாஹ்வே தெய்வம் உலகத்தைப் படைத்தது; மனிதர்களையும் படைத்தது; மனிதர்கள் பெரும்பாலும் தங்களுக்குத் தெரிந்தே தவறான விஷயங்களை அவர்கள் செய்கிறார்கள்; பெரும்பாலும் இப்படிப்பட்ட தவறான செயல்களால் அவர்களும் அவர்களது சந்ததியினரும் பாதிக்கப்படுகிறார்கள்.. இது போலப் புரிந்துகொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள். ஏறத்தாழ, இந்தக் கருத்து விளக்கும் புராணக்கதைகளை சுவிசேஷத்தில் வரும் நீதிக்கதைகளைப் போலவும் ஏசாப்பின் நீதி கதைகளைப் போலவும் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.

adam_and_eve_banishedஇருந்தாலும், இப்படி ஆதியாகமக் கதைகளை அப்படியே வரலாற்று நிகழ்வாகப் பொருள் கொள்ளக்கூடாது என்று பின்வாங்குவதால், முதல் பாவம் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் விளைவு என்பது அடிபட்டுப் போகிறது. இப்படி இந்தப் புராணக்கதைகளுக்கு விளக்கம் கொடுத்தால், இரண்டாயிரம் வருடமாக கிறிஸ்துவ சர்ச் இந்த ஆதியாகமக் கதைகளை வரலாற்று நிகழ்வுகள் என்று சொல்லியதும் அப்படியே சொல்லவேண்டும் என்று கிறிஸ்துவர்களை வற்புறுத்தியதும் தவறு என்று ஆகிவிடும். அதுவும் நிரந்தர உண்மைகளை புனித ஆவியிடமிருந்து பெற்று கிறிஸ்துவ மக்களுக்கு இரண்டாயிரம் வருடங்களாகக் கொடுத்து வந்திருப்பதாகச் சொல்லும் சர்ச்சுக்கு இது தலைகுனிய வைக்கும் மாபெரும் தவறு.

இரண்டாவது, வானியல், புவியியல், பரிணாமவியல் அறிவியல் கண்டுபிடிப்புகளோடும் ஒத்துப்போவதற்காக உருவாக்கப்படும் இப்படிப்பட்ட புரிந்துகொள்ளவைக்க சொல்லப்பட்ட ஆதியாகமக் கதை என்ற நிலைப்பாடு மிகவும் அதிகமான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். முதல் பாவம் என்பது வரலாற்று உண்மை என்பதை, இல்லை என்று சொல்லியாக வேண்டும். புரிந்துகொள்ள சொல்லப்பட்ட புராணக்கதை என்று சொல்லிவிட்டால், முதல் பாவத்தில் வந்து முடியும் அந்தக் கதைகள் நடக்கவில்லை என்றும் சொல்லியாக வேண்டும். இது மாதிரி ஒப்புக்கொள்ளுவது, எந்த முதல் பாவத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தக் கதைகளை, புரிந்துகொள்ள சொல்லப்பட்ட கதைகள் என்று சொல்லிச் சமாளித்தார்களோ அந்த நோக்கத்துக்கே, முதல் பாவத்துக்கே ஆப்பாக முடியும்.

 

3.1.2 ஆதியாகமக் கதைகளையும், ஏடன் கதையையும் வரலாறும் கதையும் கலந்ததாகச் சொல்லும் வாத நிலைப்பாடு

இறுதியாக, கலப்பட நிலைப்பாடு என்று கூறப்படுவதைப் பார்ப்போம். அதாவது இது- ஆதியாகமக் கதைகளில் பாதி உண்மையான வரலாறு; மற்ற பாதி விளக்குவதற்காக சொல்லப்பட்ட கதை என்று சொல்கிறது. இதற்கான நல்ல உதாரணம் கத்தோலிக் ஆன்ஸர்ஸ் (Catholic Answers) என்ற அமைப்பு கூறுவது. இது ஆதியாகமக் கதைகளை, சரியாக எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை கீழ்வருமாறு விளக்குகிறது.

The story of the creation and fall of man is a true one, even if not written entirely according to modern literary techniques. The Catechism [of the Catholic Church] states, “The account of the fall in Genesis 3 uses figurative language, but affirms a primeval event, a deed that took place at the beginning of the history of man. Revelation gives us the certainty of faith that the whole of human history is marked by the original fault freely committed by our first parents” – (Catechism of the Catholic Church 390). [5]

“நவீன காலத்து வரலாறு எழுதும் முறைப்படி எழுதப்படவில்லை என்றாலும், உலகத்தை உருவாக்கிய கதையும், மனிதனின் வீழ்ச்சியும் உண்மையானவை. கத்தோலிக்க சர்ச்சின் உறுதியான நிலைப்பாடு (Catechism) கூறுவதாவது, “ஆதியாகமத்தின் மூன்றாவது அத்தியாயம், உவமை நடையில் மனிதனின் வீழ்ச்சியைச் சொல்கிறது. ஆனாலும் அது ஆதிகாலத்தில் நடந்த ஓர் உண்மையான நிகழ்ச்சியையே கூறுகிறது. மனித வரலாற்றின் ஆரம்பத்தில் நடந்த ஒரு நிகழ்வு அது. அது கத்தோலிக்க கிறிஸ்துவ மத நம்பிக்கை பற்றிய உறுதியைத் தருவதோடு, நமது முதல் பெற்றோர் சுதந்திரமாக செய்த முதல் தவறு நமது ஒட்டுமொத்த மனித வரலாற்றின் மீது இருப்பதைக் கூறுகிறது” – (Catechism of the Catholic Church 390). [5]

இந்தக் கலப்படமான விளக்கம் பிரயோசனமற்றது என்பது முதல்வரியிலேயே தெரிந்துவிடுகிறது. ஒரு பக்கத்தில், “ஆதிகாலத்தில் நடந்த உண்மை நிகழ்வு” என்று கூறி, அது வரலாறு என்று சொல்கிறது. மற்றொரு பக்கம், “உவமை மொழியில் எழுதப்பட்ட கதை” என்று சொல்லி ஒரு கருத்தை விளக்கச் சொன்ன கதையாக ஆக்குகிறது. உவமை என்றும் வரலாற்று உண்மை என்றும் ஒன்றுகொன்று முரண்பட்ட இரண்டு விளக்கங்களைக் கொடுப்பதன் மூலம் முதல் பாவத்தை உண்மை என்று சொல்ல வைக்க முயற்சி செய்வதாகவே இருக்கிறது. (இதனை இன்னும் விளக்கலாம். மனித வரலாற்றில் ஆதிகாலத்தில் நடந்த நிகழ்வு என்று வரலாறாகச் சொன்னால், அந்த ஆதிகால மனிதனை உருவாக்கியது யார் என்ற கேள்விக்கு பதில் சொல்லவேண்டிவரும். அதாவது மனிதன் பரிணாமம் அடைந்து உருவான ஒரு மிருகம் என்பது உண்மை என்றால், யாஹ்வே அவனை உருவாக்கவில்லை என்று ஆகும். யாஹ்வே உருவாக்கவில்லை என்றால் தோட்டமும் கனியும் லூசிபரும் இல்லை. யாஹ்வே உருவாக்கினார் என்றால் அது உண்மையில் நிகழ்ந்த நிகழ்ச்சி. ஆகவே இரண்டையும் ஒரே விளக்கத்துக்குள் அடைக்கமுடியாது.)

ஆகவே, முதல் பாவம் என்பது இருக்கமுடியாது ஏனெனில் அது சொல்லப்பட்டிருக்கும் ஆதியாகமக் கதைகள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் முடிவுக்கு வரவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

3.2 முதல் பாவக் கொள்கையின் ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள்

முதல் பாவத்தின் காரணமாக இந்த யாஹ்வே என்ற தெய்வம் மனிதர்களுக்குக் கொடுத்த தண்டனை தீவிரமான ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள் கொண்டது. இந்தத் தண்டனை ஆதாம் ஏவாள் என்ற இருவருக்கும் அவர்களது சந்ததியினராக சொல்லப்படும் பல கோடிக்கணக்கான மனிதர்களுக்கும் ஆதாம் ஏவாளின் வீழ்ச்சி என்று சொல்லப்படும் அந்தக் காலத்தில் இருந்த விலங்குகளுக்கும் அவற்றின் சந்ததியினருக்கும் வலி, துயரம், பட்டினி, சாவு ஆகியவைகள் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்தத் தண்டனைகள் தார்மீக ரீதியில் கேள்விக்குரியவை.

ஆதாம் ஏவாள் ஆகியோரது செயல்பாடுகளை ஒழுக்கம் தவறிய செயல்பாடுகள் என்று கூறமுடியாது. ஏனெனில், ஆதாமும் ஏவாளும் அந்தக் கனியைச் சாப்பிடும் முன்னர் எது சரி எது தவறு என்ற அடிப்படை அறிவே இல்லாமல் இருந்திருக்கிறார்கள். (கனியை சாப்பிட்டதால்தானே அவர்களுக்கு எது சரி எது தவறு என்ற அறிவு வந்தது? அதற்கு முன்னால், யாஹ்வே தெய்வம் சொன்னதைக் கீழ்படிந்து நடக்கவேண்டும்; அதுதான் சரி என்ற அறிவு இல்லையே?)

இப்போதுதான் உருவான ஒரு குழந்தை மாதிரியான ஒரு ஜோடி, லூசிபர் என்ற சாத்தான் என்று சொல்லப்படக்கூடிய பேசும் பாம்புக்கு நிகராக இருக்கமுடியுமா? எந்தத் தண்டனையைக் கொடுப்பதாக இருந்தாலும், இந்த ஜோடியின் சூழ்நிலையையும் கணக்கிலெடுத்துகொள்ளவேண்டும். யூதப் பழங்குடியினரது புராணக்கதையின்படி, இந்தப் பேசும் பாம்பாக வந்த லூசிபர்தான் யாஹ்வே தெய்வத்தின் மிக சக்தி வாய்ந்த புத்திசாலியான உருவாக்கமாம். ஆதாம் ஏவாள் என்ற இந்தக் குழந்தை மாதிரியான ஜோடி, இப்படிப்பட்ட படு புத்திசாலியான, சக்திவாய்ந்த, லூசிபரின் தூண்டுதலினால்தான் குற்றமிழைத்தார்கள் என்பது இவர்களை விடுவிக்கப் போதுமான தடயம். குறைந்தது இவர்களுக்கு தண்டனை கொடுக்கும்போதாவது இந்த விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஆதாம் ஏவாளின் இந்தச் சாதாரண “சொன்ன பேச்சு கேட்காததற்கு” கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் தண்டனை- வாழ்நாள் முழுவதும் வலி, துயரம், பட்டினி, சாவு ஆகியவை- குற்றத்தின் அளவை விட அதிகமான தண்டனை. இவர்கள் வணங்கிய, பாராட்டிய, அன்பு செலுத்திய யாஹ்வே தெய்வத்தைப் போல அவர்கள் இருக்க விருப்பப்பட்டதால்தான் ஆதாம் ஏவாள் அந்தக் கனியைச் சாப்பிட தூண்டப்பட்டார்கள். பெற்றோர் சொன்ன பேச்சைக் கேட்காமல், சச்சின் டெண்டுல்கர் மாதிரி ஆக, ஏராளமாக பூஸ்ட் சாப்பிட்ட குழந்தை போன்றதுதான். இதனை ஒழுக்கம் கெட்ட செயல் என்று சொல்லமுடியுமா? இருக்கலாம். அப்படியே இருந்தாலும் இது ரொம்ப சாதாரணமான சிறு தவறுதான். சச்சின் டெண்டுல்கரின் பிரபல பிம்பத்துக்கும், விளம்பரத்தின் சக்திக்கும் முன்னால், இது புரிந்துகொள்ளக்கூடியதுதான். நிச்சயமாக இது மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டிய செயல் அல்ல.

adam-and-eve-in-the-gardenஇதே போல, கனியைச் சாப்பிட்டது ஒழுக்கம் கெட்ட செயலா? இருக்கலாம். ஆனால், அப்படியே இருந்தாலும், யாஹ்வே தெய்வத்தின் மாபெரும் சக்திக்கு முன்னாலும் லூசிபரின் தூண்டுதலுக்கு முன்னாலும் மிகச்சிறிய ஆனால் புரிந்துகொள்ளக்கூடிய குற்றம். இது நிச்சயம் மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டிய குற்றம் அல்ல. இறுதியிலும் அந்தக் கனியைச் சாப்பிட்டதால், யாரும் பாதிக்கப்படவில்லை. நிச்சயம் துயரமோ வலியோ அண்டமுடியாத யாஹ்வே தெய்வம் பாதிக்கப்படவில்லை. டெனிஸ் டிடெராட் (Denis Diderot) என்ற ஃப்ரெஞ்சுச் சிந்தனையாளர், 1762-இல்,“தன் சொந்தக் குழந்தைகளை விட ஆப்பிள்கள் மீது மிகவும் அக்கறை கொண்ட அப்பா போன்றவர்தான் கிறிஸ்துவர்களின் தெய்வமான யாஹ்வே” என்று குறிப்பிட்டார். [6]

மனித இயற்கையைக் கொடுத்து, அவர்களுக்கு வலியும், துயரமும் சாவையும் கொடுத்து, ஒட்டுமொத்தமாக அவர்களது சந்ததிகளுக்கும் மிருகங்களுக்கும் அவர்கள் பொறுப்பேற்க முடியாத ஒரு செயலுக்காக இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்திருப்பதுதான் ஒழுக்கம் கெட்ட செயல்.

 

3.2.1 முதல் பாவக் கொள்கையில் தார்மீகப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை சமாளிக்க உருவாக்கிய இயற்கைக்கு முந்தைய கொடை (Preternatural Gift)

முதல் பாவக் கொள்கையில் ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதால், அவற்றைச் சமாளிக்க சில கிறிஸ்துவர்களால், “இயற்கைக்கு முந்தைய கொடை” என்ற கருத்துருவாக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, ஆதாமும் ஏவாளும் சாதாரண மனிதர்களைப் போல துயரமும் வலியும் சாவுடனும்தான் படைக்கப்பட்டார்கள். அதன் பின்னால், யாஹ்வே தெய்வம் அவர்களுக்கு சாகாவரத்தையும் வலியின்மையையும் யாஹ்வே தெய்வத்தின் முன்னால் இருக்கக்கூடிய வாய்ப்பையும் கொடைகளாக அளித்தது. அவர்கள் அந்த முதல் பாவத்தைச் செய்த பின்னால், கொடுத்த கொடைகளைத் திரும்பவும் எடுத்துகொண்டுவிட்டது. அதனால், அவர்கள் தங்களது பழைய மனிதத்தன்மைக்குத் திரும்பிவிட்டார்கள். இந்தச் சாதாரண மனிதத்தன்மையே அவர்களது சந்ததியினருக்கு வந்திருக்கிறது. இப்படி, கொடுத்த கொடையைத் திரும்ப எடுத்துக்கொள்வதில் எந்தவிதமான தார்மீகப் பிரச்சினையும் இல்லை. முதலில், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இந்தக் கொடைகளுக்கான தார்மீக உரிமை ஏதும் இல்லை. ஆகவே திரும்ப அவற்றை எடுத்துக்கொண்டதில் யாஹ்வே தெய்வம் எந்த ஒழுக்கக்கேட்டையும் செய்யவில்லை. அதுவும் அப்படி யாஹ்வே தெய்வம் சொன்னதைக் கேட்காமலிருந்த பின்னால், அதற்கான தார்மீக உரிமை நிச்சயம் கிடையாது. இரண்டாவது, ஆதாம்-ஏவாளின் சந்ததியினரிடமும் யாஹ்வே தெய்வம் எந்தவிதமான ஒழுக்கக்கேட்டையும் செய்யவில்லை ஏனெனில், அந்தச் சந்ததியினருக்கு சாகாவரம் போன்றவைகள் மீது எந்த விதமான தார்மீக உரிமையும் இல்லை. கத்தோலிக்க என்சைக்ளோபீடியாவில் இந்த நிலைப்பாட்டை இப்படி எழுதுகிறார்கள்..

“கத்தோலிக்க மதக் கொள்கையின் படி மனிதன் தனது இயற்கையான எந்த ஒரு குணாம்சத்தையும் இழக்கவில்லை. ஆதாமின் பாவத்தால், யாஹ்வே தெய்வத்தின் கொடைகளைத்தான் இழந்தான். அவனது உணர்வுகள் மீதான முழுமையான கட்டுப்பாடு, சாவிலிருந்து தவிர்ப்பு, அருள், அடுத்த வாழ்வில் யாஹ்வேயின் தரிசனம் ஆகிய அந்தக் கொடைகள் மீது அவனுக்கு எந்த ஓர் உரிமையும் பாத்தியதையும் இல்லை. யாஹ்வே, இந்தக் கொடைகளை மனித இனத்துக்குப் பாத்தியதையாகச் செய்யவில்லை. குடும்பத் தலைவர் (ஆதாம்) எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்து அவர் அந்தக் கொடைகளைக் கொடுக்க விரும்பினார். ஒரு ஜமீந்தாரர் தனக்கு எந்த அளவுக்கு விசுவாசமாக நடந்துகொள்வார் என்பதை வைத்து அரசர் அவருக்கு பரம்பரை ஜமீன் தருகிறார். அந்த ஜமீந்தாரர் அரசருக்கு எதிராக போர்க்கொடி பிடித்தால், அந்தப் பட்டாவை அரசர் அந்த ஜமீந்தாரரிடமிருந்தும், அவரது சந்ததிகளிடமிருந்தும் நீக்குகிறார். ஆனால், அந்த அரசர் அந்த ஜமீந்தாரர் செய்த தவறுக்காக, அந்த ஜமீந்தாரரின் ஒவ்வொரு சந்ததிகளையும் பிறக்கும்போதே பிடித்து அவர்களது கை கால்களை வெட்டும்படி உத்தரவு தரமாட்டார். இந்த ஒப்பீடு லூசிபரின் கொள்கை. அதனை நாங்கள் ஒருபோதும் உபயோகப்படுத்தமாட்டோம். சர்ச்சின் கொள்கையின்படி, காட்டுமிராண்டித்தனமான மிகவும் கொடுமையான தண்டனையை குழந்தைகளுக்குக் கொடுத்தார் என்று சொல்வதில்லை. அந்த குழந்தைகள் முதல் பாவத்தையும், யாஹ்வே தெய்வத்தை உடனே கண்ணால் பார்க்கமுடியாததையும் கொண்டுதான் பிறக்கின்றன…” – [Denz., n. 1526 (1389)]. [7]

(தொடரும்….)

மேற்குறித்த தரவுகள்

[1] By “orthodox Christianity” I mean Christianity as practiced in Roman Catholicism, the Eastern Orthodox denomination, and most versions of mainline, Evangelical, Pentecostal, and fundamentalist Protestantism.

[2] This section has benefited from Bart Klink’s “The Untenability of Theistic Evolution,” The Secular Web (2009).

[3] See, for example, Davis A. Young’s “The Contemporary Relevance of Augustine’s View of Creation,” Perspectives on Science and Christian Faith, Vol. 40, No. 1, pp. 42-45 (March 1988).

There have been some heterodox interpretations of the Garden of Eden story, and of the sin of Adam, by some Christian groups (e.g., by the Mormons), and by figures such as Origen and Pelagius. Unsurprisingly, these have not been shared by “Saint” Origen or “Saint” Pelagius—for the victors write the history, even in the Church.

[4] Bart Klink, “The Untenability of Theistic Evolution,” The Secular Web (2009).

[5] “Adam, Eve, and Evolution” (with Imprimatur), Catholic Answers.

[6] John Gross, The Oxford Book of Aphorisms (New York, NY: Oxford University Press, 1987), p. 11.

[7] “Original Sin” in The Catholic Encyclopedia, ed. Stéphane Harent (New York, NY: Robert Appleton Company, 1911). 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Arokya on September 14, 2010 at 1:01 pm

அடிப்படையிலேயே பல குளறுகளை கொண்ட ஒரு கதை பற்றி எந்த சந்தேகமும் கொள்ளாமல் அதைப் பின் பற்றுபவர்களைப் பற்றி ஆச்சரியப் பட வேண்டிஉள்ளது.

1. உலகத்தைப் படைத்த தெய்வம் சாத்தானையும் படைத்ததா?

ஆம் என்றால் எதற்காகப் படைத்தது? இல்லை என்றால் பின் அது எங்கிருந்து வந்தது? யாரால் படைக்கப் பட்டது?

2 . உலகத்தைப் படைத்த தெய்வம்தான் சிறப்பானது என்றால், தெய்வத்தால் படைக்கப் பட்ட முதல் மனிதர்கள் ஏன், அதன் சொல்படி கேட்காமல் சாத்தானின் சொல்படி கேட்டு நடந்தார்கள்? அப்படி நடந்தால் அது யார் செய்த தவறு?

3.தன்னால் படைக்கப் பட்டவர்கள் சாத்தானின் சொல்படிதான் கேட்பார்கள் என்பதை அறிய இயலாத ஒன்று, தெய்வம் என்ற தகுதிடையதா?

அறிந்திருந்தால் பின் ஏன் சாத்தானை அங்கே உலவ விட்டது?

4.நல்லது கெட்டதை அறிய உதவும் அறிவை ஏன் அது முதல் மனிதற்கு கொடுக்கவில்லை? முட்டாளைப் படைத்த அது வணங்குதற்கு உரியதா?

இதிலுள்ள பல சந்தேகங்களுக்கு விடை இல்லை.
இனி ஒருபடி மேலே போய், அடுத்த கட்டத்தைப் பார்த்தால் அது மஹா கேவலமாக உள்ளது.

5.முதல் மனிதர்களான இருவர் மூலம் எப்படி ஒரு சந்ததி, நாட்டு மக்கள், உலக மக்கள் உருவானார்கள்?

குழப்பங்களின் ஒட்டு மொத்தமான ஒரு கதையை நம்பி, கூச்சலிட்டுக் கொண்டு திரிவது மூடத்தனமில்லையா?? ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்!

சிலர் தான் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்.அறிவை மழுங்கடிக்க முயலும் கூட்டத்தை அடையாளம் கண்டு அவர்களை மீட்க முயற்சிப்போம்.

அன்புடன்,
ஆரோக்யசாமி



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

sarang on September 14, 2010 at 2:44 pm

//
களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டாலே ஆதாம்

//

அதாம் மட்டும் தான – அறுப்பு நாட்டுக்காரன் மொத்தமும் தான்

முதல் மனிதன் பிறப்பதற்கு முன்பே அபத்தம் தொடங்கிவிடும்

கர்த்தர் முதலில் செடி கொடிகளை படைப்பார் – அதை காயவிட்டு மறு நாள் ஒளியை படிப்பார் – எப்படிங்காணும் photosynthesis நடந்தது என்றால் ஹிஹி ன்னு தான் முழிக்கணும்

முதல் பாவத்தை பற்றி இன்னும் சற்று பார்த்தால் –

கர்த்தர் எப்படி அவர் கொடுத்த கொடையை எடுத்துக் கொள்ளலாம் – நீ ஆப்பிள் சாப்பிட்டால் எடுத்துக் கொள்வேன் என்று சொல்லி விட்டு எடுக்கும் ஒரு basic etiquette கூட இல்லாமலா இருப்பது.

சரி இயேசு பிறந்தாகிவிட்டது – அவரை நம்புவோருக்கு முதல் பாவம் போய் விட்டது – இப்படி முதல் பாவம் போன நமது லசாரஸ், சில்லிசாம், ஜோ, டிடஸ் இதாய்திகளுக்கு வலி இல்லவே இல்லையா – வலி இருந்தால் முதல் பாவம் போகவில்லை என்று தான் அர்த்தம் – வலி இல்லை என்றால் மரணமே இருந்திருக்க கூடாது – ஏசுவும் மரித்தே இருக்க கூடாது, நம்ம தினகரனும் இன்னு உசுரோட தான் இருந்திருக்கணும், அப்பப்பா இன்னும் எத்தன ஊழியம் செய்பவர்கள் உசுரோட திரிஞ்சுகிட்டு இருப்பாங்க

ஆணையும் பெண்ணையும் மட்டுமே கர்த்தர் படைத்தால் – திருநங்கைகள் பிறப்பது எப்படி? இவர்கள் அதாம் ஏவாளின் சந்ததியாய் இருக்கவே முடியாதே?

மிருகங்களுக்கும் பாவம் தொற்றிக் கொண்டதென்றால் – அவை பைபிள் படிக்காமல் என்னை சட்டியில் தானே வாட வேண்டி வரும் – என்ன ஒரு கல் நெஞ்சம் கொண்ட படைப்பு

அடாமும் ஏவாளும் ஒரு சேர ஆப்பிள் தின்னார்களா – தின்னதால் பாவம் வந்ததா – ஆப்பிள் பறித்ததால் பாவம் வந்ததா

ஒரு சேர தின்ன வில்லை என்றால் – யார் முதில் தின்றார் – அது தான் முதல் பாவம் – அடுத்தது இரண்டாவது பாவம்

அதாம் தான் ஆப்பிள் தின்றார் – ஈவ் சாப்பிடதான் சொன்னார் என்றால் – ஈவிருக்கு எப்படி பாவம் வந்தது – அப்படி என்றால் இன்றைக்கு உள்ள எந்த பெண்ணுக்கும் முதல் பாவம் அண்டாதே – சாப்பிட சொன்னதால் பாவம் அண்டிற்று என்றால் பாவம் லூசிபர் பாம்பையே சேரும் – ஈவை அல்ல –

இப்படி சொன்னது ஒரு பாவம் தின்றது ஒரு பாவம் என்றால் – இவற்றுள் எது முதல் பாவம் – சொன்னதா, தின்றதா – சொன்னதற்கு தண்டனையா, தின்னதர்க்கு தண்டனையா – இதில் எதை ஒத்துக் கொண்டாலும் இல்லை இரண்டையும் ஒத்துக் கொண்டாலும் – எக்க சக்க logic சிக்கல் வரும்

sarang on September 14, 2010 at 3:22 pm

//
அது முதல் பாவம் தீண்டாத கருவடைதல் என்ற பொருளில் immaculate conception of Mary.
//

only a sinner needs punishment
if a sinner needs to be redeemed, only a sinner needs to be given as a sacrifice
then to redeem a whole lot of sinners, why was an immaculate soul given in sacrifice
If someone is affected by H1N1, only he needs to be qurantined or sacrficed for the commuinty, will anyone sacriice a person in good health to save someone with H1N1 – beats logic
If jesus after 4000 years of earth’s creation came to redeem people, what happened to those who were born inbetween earth’s creation an Jesus’s birth – What a non sense – even Jesus’s great grandfather could not be redeemed
Was God cruel for all these 4000 years – why did he chage heart suddenly

கந்தர்வன் on September 14, 2010 at 6:19 pm

சாரங் அவர்களே,

“ஆதி பாவம்” பிதற்றலில் உள்ள லாஜிக் சிக்கல்களை நன்றாகப் படம்பிடித்துள்ளீர்கள்.

// மிருகங்களுக்கும் பாவம் தொற்றிக் கொண்டதென்றால் – அவை பைபிள் படிக்காமல் என்னை சட்டியில் தானே வாட வேண்டி வரும் – என்ன ஒரு கல் நெஞ்சம் கொண்ட படைப்பு //

அதான் கிறித்தவத்தில் “மிருகங்களுக்கு ஆன்மாவே இல்லை” என்று மற்ற உயிரினங்களை அச்சித்தாக்கி விட்டிருக்கிறார்களே. இப்படிக் கூறுபவர்களுக்கு மற்ற உயிர்களிடம் எங்கிருந்து அன்பு ஏற்படும்?

// Was God cruel for all these 4000 years – //

இல்லை இல்லை, பழைய ஏற்பாட்டில் ஜெஹோவா ஒரு அன்புமிகுந்த தெய்வமாகத் தான் வருகிறார் — உதாரணமாக,

(1) கர்த்தர் “தன்னுடைய குழந்தைகலாகிய” இசுறேளியர்களை பாரோ சிறை வைத்திருந்ததால் எகிப்தில் உள்ள அப்பாவி சிசுக்களை அழிக்கிறார்.

(2) அமேலகைத்தில் உள்ள அப்பாவி சிசு, பெண், சிறுவர்-சிறுமியர், ஆடு, மாடு, கழுதை, புல், பூண்டு, ஆகியவற்றை எல்லாம் அழித்து ஒரு நாட்டையே தரைமட்டம் ஆக்குமாறு தன்னுடைய “குழந்தைகளாகிய” இசுறேளியர்களுக்கு ஆணை விடுக்கிறார்.

(3) ஏவாள் (eve) செய்த குற்றத்திற்காகத் தாய்க்குலம் முழுவதையும் “பிள்ளை பெறும் பொழுது வலியால் தவிப்பாயாக” என்று சாபிக்கிறார்.

இதை எல்லாம் செய்து காட்டுவதற்குக் கருணையே வடிவான தெய்வம் அன்றி வேறு யாரால் முடியும்?



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

தங்கமணி on September 16, 2010 at 12:17 am

சில்சாம்,
பைபிளில் இருப்பதை இப்படி வரிக்கு வரி எழுத்துக்கு எழுத்து புள்ளிக்கு புள்ளி நம்புவதாக சொல்லிக்கொள்கிறீர்கள். ஆனால், விஷத்தை குடித்தாலும் ஒன்றும் செய்யாது என்றால் மட்டும் நம்ப மாட்டேன்னென்கிறீர்களே? <IMG SRC=" style="height:auto;" /> ) இது நியாயமா?
//விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு – 16 : 17-18)// வியாதியஸ்தர்கள் மீது கை வைத்து சொஸ்தமாவதாக பிலிம் காட்டி ஏமாற்று வேலை செய்து பிழைக்கிறீர்கள். ஆனால், அதே வரியில் சாவுக்கேதுவான விஷத்தை குடித்தால் ஒன்றும் செய்யாது என்பதை மட்டும் செய்ய மாட்டேன் என்கிறீர்களே? ”தேவனாகிய கர்த்தரை பரீட்சியா இருப்பாயாக. ” என்பதை வைத்து தப்பிக்க முயல்கிறீர்களே. அதே போல வியாதியஸ்தர்கள் மீது கை வைத்து சொஸ்தம் செய்ய முயற்சிப்பதும் இதே போல பரிட்சை செய்வது இல்லையா? அதை மட்டும் ஏன் செய்கிறீர்கள்? அது ஏமாற்றுவேலை தானே?. சொஸ்தம் ஆகிவிட்டது என்று பொய் சொல்லலாம். ஆனால், விஷம் குடித்து காட்டுவதில் அப்படி ஏமாற்றமுடியாது <IMG SRC=" style="height:auto;" /> ) என்பதால் ஜகா வாங்குகிறீர்களா?
//அப்படிப்பட்ட அருள்நாதருக்காக நான் விஷம் குடிக்கத் தயாராக இருக்கிறேன்; ஆனால் நான் விஷம் குடித்தால் மரித்துப்போவேன் என்பது நிச்சயம்; அதில் எந்த சந்தேகமும் இல்லை; ஏனெனில் இயேசு விஷம் குடிக்க‌ என்னை அழைக்கவில்லை; // என்று புளுகுகிறீர்களே? இயேசு விஷம் குடித்தால் ஒன்றும் செய்யாது என்று ஆணித்தரமாக சொல்லும்போது, விஷம் குடிக்க சொல்லவில்லை என்று இப்படி புளுகி த்ப்பிக்க முயல்வதில் உங்களுடைய விசுவாசமின்மைதானே தெரிகிறது? சாவுக்கேதுவான விஷத்தை குடித்தால் ஒன்றும் செய்யாது என்றுதானே சொல்லுகிறார்? அதில் தெரியாமல் குடித்துவிட்டால் ஒன்றும் செய்யாது என்று சொல்கிறாரா? அல்லது தெரிந்தே குடித்தால் நிச்சயம் செத்துபோவாய் என்று சொல்லுகிறாரா? அவர் சொல்லாததெல்லாம் அதில் இருப்பதாக நீங்களாக போட்டுக்கொண்டு தப்பிக்க முயல்கிறீர்களே? உங்களுக்கே நம்பிக்கையில்லாத ஒரு விஷயத்தை மற்றவர்களிடம் விற்று பிழைப்பு நடத்த முயலும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

sarang on September 16, 2010 at 11:22 am

சில்லிசாம்,

கால சர்ப்ப தோஷம் என்பது ஆப்பிள் சாப்பிட்டதால் வராது – அது சாபமும் அல்ல ஹிந்து மரபில் மறு பிறப்பை ஒத்துக் கொள்கிறோம் – அதனால் பாவ புண்யங்கள் தொடரலாம் என்பதை ஒத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை

டபக்குன்னு ஒரு மூணு சுத்து சுத்தி – இதோ ஆவியே நீ இப்போது உண்டானை, இப்போது மைதனானாய் என்று instant காபி போல உருவாக்கப்படும் உயிர் தான் கிறிஸ்தவ உயிர் – அப்படி இருக்கையில் பாவம் எங்கேருந்து வரும் – கர்த்தர் செய்த பாவம் தான் முதல் பாவமாக இருக்க வேண்டும்

அப்படி டபக்குன்னு உயிரை படிக்கிற கர்த்தர் ஏன் இயேசுவை late ஆ படைத்தார் ஒரு நாலாயிர வருஷம் சும்மா ஜாலிய இருந்தார் – திடீர்ன்னு ஞானம் வந்து இயேசுவை படைக்கிறார் – அப்புறம் முதல் பாவம் போயிரும் -

இப்படி டபால்ன்னு உயிரை படைக்கிற கர்த்தர் ஏன் மங்கோலியா காரண படைக்கிறார் – அரபு நாட்டுக் காரண படைக்கிறார் – ஒரு புத்திஸ்ட படைக்கிறார், ஒரு பார்சியை படைக்கிறார் – எடுக்கு – இவங்களெல்லாம் சும்மா புடிச்சு ஞான ஸ்நானம் ஆகலன்னு காரணம் காட்டி என்ன சட்டில போடவா? இல்ல சாது செல்லப்பா வந்து அறுவடை பண்ணவா?

இப்படி முதல் பாவத்திற்கு முன்னுக்கு பின் முரணாக எண்ணற்ற விஷயங்கள் உள்ளது – இந்த அபத்தம் உங்களுக்கு தேவை தானா

உங்களை பற்றி தாழ்வாக நினைக்க சொல்லும் ஒரு மதம் என்ன மதம் – மனிதனின் மேம்பட்டிர்க்கே மதம் – மனிதனை சிந்திக்க வைப்பதே மதம் – இப்படி பாவிகளே என்று நிந்திக்க வைக்க அல்ல

இதற்க்கு உங்களிடம் பதில் உண்டா?

செடி கோடியை படைத்து ஒரு நாளைக்கப்பறம் light போட்டாரமே – அப்போ photosynthesis எப்படி நடந்திருக்கும்?

//
ஆனாலும் இந்த கட்டுரையாசிரியர் இதனை எழுத எடுத்துக்கொண்ட காலத்தைப் போலவே இதற்குரிய பதிலை ஆயத்தம் செய்யவும் நேரம் தரப்படவும்
//

இதெல்லாம் பல பல வருசங்களா கேட்கப்படும் கேள்வி தான் – இன்னும் உன்காளுங்களிடமிருந்து பதிலே வரல – புத்சால்லாம் யோசிச்சு ஏதும் நீங்க கண்டுபிடிக்க வேண்டாம் – பேசாம கொச்சினையே திருப்பி எழுதி வையுங்க grace மார்கானும் கிடைக்கும்

//
அப்படியானால் நம்மூலம் பேசப்படும் காரிய‌ங்கள் மனித அறிவுக்கு உட்பட்டவை தானே
//
இது விவிலியம் படிகாதவருக்கு மட்டமே பொருந்தும் – அதை படித்தவர்களின் அறிவு அப்பப்ப – எதற்கும் உட்பட்டதல்ல – சரி – நீங்கள் tom and jerry , animal kingdon, yesabs fables, mother goose rhymes, barney and children, thomas the tank engine bob the builder இதெல்லாம் பார்த்ததுண்டோ?



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

sarang on September 19, 2010 at 2:56 pm

அறிவியல் தெரியாதவர் சாதான கர்த்தரா என்றே தெரியவில்லை

God said let there be light and there was light – first day
மூன்றாம் நாள் செடிகொடிகள் பூமியிலிருந்து எடுக்கப்படுகின்றன
அப்புறம்

இதற்க்கு அப்புறம் தான் கர்த்தர் எங்கயோ கேப்பு கீதேன்னு சூரியனையும் நிலவையும் படைக்கிறார் – அதெப்படி முதிலில் வெளிச்சமாம் அதற்கப்புறம் வெளிச்சம் கொடுக்கும் பொருள்களாம் – Cause Effect theory க்கு ஒரு causuality

உருவைகியது எதுவும் அழியும் இது நாம் காணும் உண்மை – கர்த்தர் உருவாக்கிய உயிரும் அழியும் அப்புறம் எங்கப்பா நிரந்தர சொர்க்கம்

கிறிஸ்தவத்தின் படி சூரியனும் வெளிச்சம் உருவாக்கும், சந்திரனும் உருவாக்கும் – உண்மையில் நிலா வெளிச்சம் சூரிய வெளிச்சமே

முதல் மனிசனுக்கு தான் கர்த்தர் மூச்சு காத்து ஊதினார் – அப்புறம் வந்தவங்களுக்கு – நமக்கு தெரிந்து மேலே பிராண வாயு கிடையாது

மனிதனுக்காகவே (சாப்பிட ஓட்டிப் போக) கர்த்தர் பிராணிகளை படைக்கிறார் – உண்மை என்னன்னா ஒரு சின்ன எலி கடிச்சு மனுஷன் செத்து போறான்

வௌவால் பறவை இனம்

பூமியை தூணினால் கர்த்தர் தாங்குகிறார் – அடேயப்பா
பூமி ஸ்திரமாக அப்படியே இருக்கும் – நகராது
சூரியன் பூமியை சுத்துகிறது

ஆசா கடவுளின் துணையோடு பத்து லட்சம் எதியோப்பியர்களை கொன்றார்

மனிதர்கள் இதயத்தின் மூலம் சிந்திக்கிறார்கள் – மண்ட சுத்துது



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

S.Marcus on September 19, 2010 at 3:04 pm

கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய்,உண்மை அறிந்தும் மூடராய் கூட்டமாக வந்து ஓதிய சாத்தான்களின் சொல்லில் மூளை மழுங்கி……ச்சே …ச்சே… எவ்வளவு கீழ்த்தரமாக வெறிபிடித்து அலைந்த என்னை, இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்ட உண்மைகள் என் கண்ணை திறந்தது. கட்டுரை ஆசிரியர்கு நன்றி….நன்றி…நன்றி. என் போன்ற ஓராயிரம் மக்கள் இனிமேல் விடுதலை பெற்று மனிதராய் வாழ்வார்கள்.

மார்கஸ்



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

தங்கமணி on September 20, 2010 at 7:57 pm

இது போல எனக்கும் ஒரு கிறிஸ்துவ நண்பரை தெரியும். பிறப்பால் கிறிஸ்துவர். தீவிரமான கிறிஸ்துவ பிரச்சாரகராகவும் கல்லூரியில் அறிமுகமானார். காலையில் எழுந்ததுமே யாரை பிடித்து இயேசுவை பற்றி சொல்லலாம் என்று அலைவார். என்னிடமும் பலமுறை இயேசுவை நான் மீட்பராக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினார். நான் பதிலுக்கு அவரிடம் நீங்கள் முருகனை கடவுளாக ஏற்றுக்கொண்டால், நான் உங்கள் இயேசுவை ஏற்றுகொள்கிறேன் என்று சொன்னேன். அவர் திடுக்கிட்டார். என்ன இப்படி சொல்கிறீர்கள் என்றார்.
ஆமாம். உங்களுக்கு இப்படி என்னிடம் வந்து சொல்ல உரிமை இருக்கிறது என்றால் நானும் உங்களிடம் இப்படி சொல்ல உரிமை உண்டுதானே என்று சொன்னேன்.
பிறகு பைபிளில் இருக்கும் சில வாசகங்களை எடுத்து அவரிடம் காட்டினேன். இது ஏமாற்று வேலை என்று அவருக்கே புரியவைத்தேன். மாற்கில் இருக்கும் இயேசு யூதரல்லாதவர்களை நாய்கள் என்று திட்டுவதை எடுத்து காட்டினேன். அதன் பின்னே இருக்கும் உளவியலை எடுத்து சொன்னேன். தன்னை கும்பிடாதவனை காலில் கொண்டு வந்து கொல்லச்சொல்வதை எடுத்து காட்டினேன். அதனை வைத்துத்தான் யூதர்களை ஹிட்லர் கொன்றான் என்று எடுத்துக்காட்டினேன். இயேசு என்ற இந்த கற்பனை பாத்திரம் ஒரு பசுத்தோல் போத்திய பயஙக்ரவாதி என்று காட்டினேன். இதன் மூலமாகத்தான் அடிமைகளை அடக்கி ஒடுக்கினார்கள், அமெரிக்க பழங்குடியினரை கொன்றார்கள். ஆப்பிரிக்காவை அடிமையாக்கினார்கள் என்று காட்டினேன். இயேசுவின் சாந்தமான முகமூடி வேஷத்தின் பின்னால் ரத்த ஆறுதான் ஓட வைக்கப்பட்டது என்று காட்டினேன். முதலில் என்னை அடிக்கவே வந்துவிட்டார். ஆனால் பலமுறை என்னிடம் விவாதித்தார்.

தற்போது இந்துவாக ஆகி, இந்து கோவில்களுக்கு செல்கிறார். தன் குழந்தைகளுக்கெல்லாம் செந்தமிழில் அழகாக குமரன், முருகன் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

sarang on September 20, 2010 at 9:05 pm

நேசன்

இவ்வளவு தான நீங்கள் புரிந்து கொண்டது – தவறு செய்வது தவறு என்றுதான் எந்த ஒரு நல்ல மதமும் சொல்லும் (இதற்க்கு விதி வ்ள்ளக்கும் உண்டு)

நாம் கேட்பது – எவனோ ஒரு கிறுக்கன் செய்த தவறுக்கு நான் ஏன் பொறுப்பேற்க வேண்டும்

சனாதன தர்மத்தில் வரும் கர்மா என்பதை முதல் பாவத்துடன் போட்டு குழப்பி கொள்கிறீர்கள் –

கர்மா என்ன சொல்கிறது – எந்த ஒரு செயலுக்கும் பயன் உண்டு
- சனாதனா தர்மம் ஆத்மா உண்டு அது அநாதி அதற்க்கு பிறப்பில்லை இறப்பில்லை என்று சொல்கியது – ஆத்மாவை இறைவன் ஸ்ரிஷ்டிக்க வில்லை என்று சொல்கிறது – ஆத்மா தனது நிலைக்கு அல்லது கர்மத்திற்கு ஏற்றார் போல உடலை பெற்று – அதன் மூலம் அந்த கர்மாவை கழிக்கிறது

கிறிஸ்தவத்திலோ உயிர் இறைவனால் டபக்குன்னு படைக்க படுகிறது அதுவும் பாவியாகவே – என்ன கருமத்துக்கு ஒரு உயிரை பாவியாய் உருவாக்க வேண்டும் பின்னர் ஒருத்தரை நாலாயிரம் வருஷம் கழிச்சு அனுப்ப வேண்டும் – தான் உருவாக்கிவிட்டு ஏன் தானே என்னை சட்டியில் போட வேண்டும்
இது அபத்தம் அல்லவா

இந்த கருமத்தை ஏன் ஹிந்து தர்மத்தின் கர்மா என்பதோடு ஒப்பிடுகிறீர்கள்

இதில் மறை முகமாக கிறிஸ்தவமே மேல் என்று வேற காட்ட முயற்சி

இதில் வேறு தேவன் முடிவு கட்ட எண்ணினார் என்று சொல்கிறீர்கள் – அதாவு தானே அவர் செய்த ஒரு அபத்த காரியத்தை அவர் தானே முடிவு கட்ட எண்ணினார் (தானே பாவியாய் படைத்து தானே பாவி என்ற ஒன்றை நீக்கி ) என்ன இது சுத்த பேத்தலா இருக்கு – இதை எல்லாம் எப்படி அறிவுள்ளவர்கள் ஒத்துக் கொள்வார்கள்

சரி உங்களுக்கு சிந்திக்க ஒரு கேள்வி

உங்கள் தேவனை சிரமப்படுத்தாமல் கிறிஸ்தவர் அனைவரும் குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் இருந்து விட்டால் இப்படி பாவமே நேராதே – ஒன்று செய்யுங்கள் கிறிஸ்தவர் அனைவரும் கல்யாணமே செய்யாதீர்கள் அப்புறம் என்ன நடக்கிறது என்று பாருங்கள் – ஒரு பாவி உருவாவதை தடுத்த புண்ணியம் உங்களை சேரும்

எவனோ ஒரு மனிதன் செய்த பாவத்தினால் மற்ற மனிதர்கள் எல்லோரும் பாவிகலாகிரார்கள் – இதை உண்மை என்று வைத்துக் கொள்வோம்
நீங்கள் சொல்வது போல் பார்த்தல் தாவுது இப்ராஹீம் செய்த அட்டுழியம் கூட மொத்த மனித ஜென்மத்தை பாதிக்கும் – அதாவது அவனது பாவம் அச்சு அசல் மொத்த பேரையும் வட்டும் – நீங்களும் நானும் அவன் செய்த மகா அட்டுழியத்திர்க்கு சமமான பாவத்தை பெறுகிறோம்
இப்படிப்பட்ட ஒரு பாவத்திலிருந்து உங்கள் தேவன் எப்படி ஒருவனை வெறுமே ஏசுவே எல்லாம் என்று சொன்னவுடன் உங்களை விட்டுவிடுகிறார் என்னை விட மறுக்கிறார் – தவறு செய்ததோ தாவூத் இப்ராஹீம் – சரி நீங்கள் நானாகவும், நான் நீங்களாகவும் இருந்தால் அந்த நிலையை சற்று யோசித்து பாருங்கள் – உங்களுக்கு எதிராக ஒரு பெரிய அக்கிரமமாக அது தெரியும்

இரக்கமுள்ள தேவன் ஏன் தன்னை ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டும் நல்லது செய்கிறார் – ஏன் கருணை உள்ள அவர் எல்லா நல்லவருக்கும் நல்லது செய்யலாமே – அதாவது ஒரு புத்த பிச்சு இருக்கிறார் அவர் எல்லோருக்கும் நல்லது செய்கிறார், உணவை தருகிறார் – இவருக்கு ஏன் கர்த்தர் நரகம் தருகிறார்

கிறிஸ்தவத்தின் படி ஒரு உயிர் ஒரே ஒரு முறை மட்டும் புத்திச்டாக பிறந்து நல்லது செய்து நரகத்திற்கு போகிறது – அனால் தாவூத் இப்ராஹிமும், ஹிட்லரும் கிறிஸ்தவர்களாக மாறி பாவ மனிப்பு கேட்டால் சொர்கத்திற்கு போகிறார்கள்

நல்லது செய்த உயிர் கடைசி வரை நரகத்தில் சாகிறது – இது என்ன வெக்கக் கேடு

ஒண்ணுமே செய்யாத ஒரு பிஞ்சு குழந்தை நரகத்திற்கு செல்கிறது

உங்களை வெறுமனே சமாதானம் செய்து கொள்ளாமல் – சற்று உண்மையாகவே சிந்தியுங்கள் – கிறிஸ்தவ அடையாளத்தை ஒரு நிமிடம் கழட்டி வைத்து விட்டு கடவுள் கொடுத்த அந்த அறிவை ஒரு முறை பயன் படுத்துங்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

3.2.1.1 இயற்கைக்கு முந்தைய கொடை சமாளிப்புக்கான பதில்கள்

(1) கத்தோலிக்க என்சைக்ளோபீடியாவுக்கு மாறாக, ஓர் அரசர் விசுவாசமில்லாத ஜமீந்தாரைத் தண்டிப்பது என்பது, யாஹ்வே தெய்வம் முதல் பாவத்துக்காக தண்டிப்பதற்குச் சரியான ஒப்பீடாகக் கருத முடியாது. இந்த உவமையில் இருக்கும் பிரச்சினைகள் கீழே:

ஒரு கொடையைக் கொடுத்துவிட்டு மீண்டும் எடுத்துகொள்வதன் மூலம் பெரிய தீங்கு விளையுமென்றால், அந்த கொடையை மீண்டும் எடுத்துகொள்வது ஒழுக்கக்கேடான விஷயம். உதாரணமாக நான் யாருக்காவது கிட்னி தானமாக கொடுத்துவிட்டு கிட்னியை பெற்றுக்கொண்டவர் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை என்பதற்காக கிட்னியை திருப்பிக்கொடு என்று கேட்பது ஒழுக்கக்கேடான விஷயம். பொருளாதார ரீதியில் வறிய நிலையில் இருக்கும் தாய்மார்களுக்கு செலவுக்குப் பணத்தை கொடுத்துவிட்டு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது அதற்கு பதிலாக ஃபார்முலா பால்தான் கொடுக்க வேண்டும் என்று கோருவது போன்றது. மீறி தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களிடமிருந்து கொடுத்த பணத்தைப் பிடுங்குவது என்பது ஒழுக்கக்கேடானது ஏனெனில் அது குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும்.

adam-eveமுதல் பாவத்துக்கான யாஹ்வே தெய்வத்தின் தண்டனை என்பது ஆதாம் ஏவாள், இன்னும் அவர்களது பல கோடிக்கணக்கான சந்ததியினர், இன்னும் மிருகங்களின் சந்ததியினர் ஆகியோருக்குக் கொடுத்திருந்த கொடைகளை நீக்குவதன் மூலம் உயிர், கை, கால், வாழ்க்கை அனைத்தையும் பாதிக்கும்படி செய்துவிட்டது. ஆகவே கொடுத்த கொடைகளை நீக்குவது தார்மீக நிலைப்படி தவறானது. அரசர் தனது பட்டாவை விலக்கிகொள்வது என்பது இப்படிப்பட்ட மாபெரும் அழிவையும் துயரத்தையும் ஜமீந்தாரரின் சந்ததிகளுக்கு கொடுக்கவில்லை. ஆகவே அரசர் தனது பட்டாவை விலக்கிக்கொள்வதை ஒழுக்கக்கேடு என்று சொல்லமுடியாது.

யாஹ்வே தெய்வம் தனது கொடைகளை விலக்கிக்கொண்டதன் மூலம் ஆதாம் ஏவாளுக்கு மிகப்பெரிய துன்பம் நேர்ந்தது என்பதையும், இவற்றோடு அரசர் தனது பட்டாவை விலக்கிக்கொண்டதை ஒப்பிடமுடியது என்பதையும் பார்த்தோம். எந்தக் குற்றத்துக்காக யாஹ்வே தெய்வம் தனது கொடைகளை நீக்கிக்கொண்டதோ அந்தக் குற்றம், ஓர் அரசர் பட்டாவை நீக்கிகொள்ளத் தூண்டிய குற்றத்தைவிட மிக மிகக் குறைவான குற்றம் என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும். ஓர் அரசர் ஓர் அமைப்புக்குள் வேலை செய்கிறார். அந்த அமைப்பில் ஒருவரை ஜமீந்தாராக ஆக்கி பிறகு அவர் விசுவாசமில்லாமல் போய்விட்டால், அந்த அரசருக்கும், அந்த அரசுக்கும் பெரும் கேடு விளையும். ஆனால், ஆதாம் ஏவாள் விஷயத்தில் அவர்களது விசுவாசமின்மை காரணமாக எந்த ஒரு பெரிய கேடும் நடந்துவிடப்போவதில்லை. அவர்கள் கனியை உண்டதால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 


(2)
 இயற்கைக்கு முந்தைய கொடை சமாளிப்பில், ஆதாம் ஏவாளைப் பொருத்தமட்டில் எது இயற்கைக்கு முந்தைய கொடை, எது இயற்கையான குணாம்சம் என்ற வித்தியாசம் சமாளிப்பாகத்தான் இருக்கிறது. ஏனெனில், இந்த வேறுபாடு ஆதியாகமக் கதைகளில் எங்கேயும் இல்லை. இதன் ஒரே வேலை, யாஹ்வே தெய்வம் முதல் பாவத்துக்குக் கொடுத்த தண்டனையைச் சமாளிப்பதுதான்.

jesus-baptism(3) யாஹ்வே தெய்வம் முழுமையான நல்லது பொருந்திய தெய்வம் என்ற கொள்கைக்கு இயற்கைக்கு முந்தைய கொடை சமாளிப்பு ஆப்படிக்கிறது. முன்னரே குறிப்பிட்டதுபோல, இந்தச் சமாளிப்பு ஆதாம் ஏவாளும் பாவம் செய்தபோது அவர்களது சந்ததியினர் ஆதாம் ஏவாளின் இயற்கை குணாம்சங்களை வழிவழியாகப் பெற்றார்கள். ஆனால், இயற்கைக்கு முந்தைய கொடைகளைப் பெறவில்லை. ஆனால், இந்தக் குணாம்சங்களால், மனிதர்கள் பிறக்கும்போதே யாஹ்வே தெய்வத்திற்குப் பிடிக்காதவர்களாகப் பிறக்கிறார்கள் என்று கிறிஸ்துவ மதம் கூறுகிறது. முதல் பாவத்தைஞானஸ்நானம் செய்து போக்கிக்கொள்ளாமல் இறக்கிறவர்களுக்கு நடுநரகம் (perdition) காத்திருக்கிறது என்று அது கூறுகிறது. ஒரு குழந்தை உருவாகிறபோதே அதன் மனித இயற்கையால் (அவர்கள் என்ன நல்லது கெட்டது செய்தாலும்) யாஹ்வே தெய்வத்திற்குப் பிடிக்காததாக இருக்கிறது. விட்டேத்தியாக இந்த யாஹ்வே தெய்வம் இருந்தால்கூடப் பரவாயில்லை; ஆனால் அவர்களை விரோதியாகவே கருதும் ஒரு யாஹ்வே தெய்வத்தைத்தான் கிறிஸ்துவம் காட்டுகிறது. ஒன்றும் செய்யவில்லை என்றாலோ, அல்லது ஞானஸ்நானம் கொடுப்பதற்கு முன்னால் மரித்துவிட்டாலோ அவர்களுக்கு நடுநரகம்தான். சுயமாக யாஹ்வேயை மதிக்க சொந்தமாக முடிவெடுக்கும் முன்னாலேயே அவர்களுடன் வீம்புக்கு என்று சண்டைக்குப் போகும் ஒரு தெய்வமாகத்தான் கிறிஸ்துவ தெய்வத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இயற்கைக்கு முந்தைய கொடை என்ற இந்தக் கருத்துருவாக்கம், மிகவும் நல்ல, எல்லோரையும் அன்பு செலுத்தும் ஒரு தெய்வத்தைக் காட்டாமல் வீம்புச் சண்டை போடும் தெய்வத்தைத்தான் காட்டுகிறது.

தனியே இன்னொரு வார்த்தை- கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியாவின் இந்தக் கட்டுரையில் கடைசிவரி குறிப்பிடத்தகுந்தது.

“The doctrine of the Church supposes no sensible or afflictive punishment in the next world for children who die with nothing but original sin on their souls, but only the privation of the sight of God.”

“முதல் பாவத்தை மட்டுமே சுமந்து இறக்கும் குழந்தைகளுக்கு (அதாவது ஞானஸ்நானம் செய்யாமல் இறந்துவிடும் குழந்தைகளுக்கு) அறிவுக்குப் பொருந்தாத கொடூரமான தண்டனை வழங்கப்படாது; ஆனால், யாஹ்வே தெய்வத்தின் பார்வை மட்டும் விழாது என்பதே சர்ச்சின் கொள்கை.”



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

ஞானஸ்நானம் செய்யாமல் இறந்துவிட்ட குழந்தைகளுக்கு என்ன விதி என்று கிறிஸ்துவ மதம் கூறுவதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமே மிஞ்சுகிறது. யாஹ்வே தெய்வத்தின் கண்பார்வை விழுவதையே ரொம்பப் பெரிய விஷயமாக சொல்லிக்கொள்ளும் கிறிஸ்துவ மதத்தில் அது கிடைக்காது என்பதை அது ஏதோ பெரிய விஷயம் இல்லை என்பதுபோல சும்மா,“ஆனால்” (but only) போட்டுத் தாண்டிப்போய்விட்டார்கள். இரண்டாவது, ஞானஸ்நானம் செய்யப்படாமல் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்ட குழந்தைகளுக்கு இந்த மாபெரிய யாஹ்வே தெய்வத்தின் பார்வை கிட்டாது என்பது ஆதாம் ஏவாளின் சந்ததிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை மாதிரி அநீதியான தண்டனை இல்லையா? யாஹ்வே தெய்வத்தின் கண்பார்வையை அவ்வளவு பெரிய விஷயமாக வைத்துகொண்டு, இந்த ஞானஸ்நானம் செய்யாத குழந்தைகளுக்கு அது கிடையாது என்பதன்மூலம் இந்தக் குழந்தைகள் பொறுப்பேற்க முடியாத ஒரு விஷயத்துக்குப் பழிவாங்குகிறது கிறிஸ்துவக் கொள்கை. [8]

 

 

 

 

 

3.2.2 முதல் பாவக் கொள்கையில் ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைச் சமாளிக்க உதவும் “உருவாக்கியவர் உரிமை” நிலைப்பாடு

“உருவாக்கியர் உரிமை” (Creator Card) என்ற கொள்கையை முன்வைப்பவர்கள் யாஹ்வே தெய்வம் உலகத்தை உருவாக்கியது என்ற காரணத்தால், உயிர்களுக்கு எந்த இயற்கையைக் கொடுக்கவேண்டும், கொடுக்க வேண்டாம், கொடுத்த எந்த உரிமையை எடுத்துகொள்ளலாம் என்கிற முழு உரிமை உண்டு; அதே நேரத்தில் அதனால் அவரை எந்தவிதமான ஒழுக்க கேட்டுக்குள்ளும் அடைக்கமுடியாது என்ற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

 

 

3.2.2.1 “உருவாக்குபவர் உரிமை” சமாளிப்புக்கு பதில்

உருவாக்குபவர் என்ற ஒரே காரணத்துக்காக, ஒருவர் தான் உருவாக்கும் உயிர்களுக்கு வலி, துயரம், சாவு ஆகியவற்றைக் கொடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. ஒழுக்கத்தின் உறைவிடமாக சொல்லிக்கொள்ளக் கூடிய யாஹ்வே இந்த ஒழுக்கரீதியில் தவறான தண்டனைகளைக் கொடுக்க என்ன நியாயம் இருக்கிறது? எந்த அளவுக்கு முதல் பாவத்தின் காரணமாக யாஹ்வே தெய்வம் செய்கிறதோ அதன்படியே இது ஒழுக்கக்கேடு.

 

 

3.3 முதல் பாவக் கொள்கையின் அறிதல் பிரச்சினை

யாஹ்வே அனைத்தும் அறிந்ததாக இருந்தால், ஆதாமும் ஏவாளும் பரிசோதனையில் தோற்றுப்போவார்கள் என்று அறிந்திருக்க வேண்டும். நல்ல, கருணை நிறைந்ததாகச் சொல்லப்படும் இந்தத் தெய்வம் ஏன் தண்டனையே விளையும்படியும் அந்த தண்டனையின்படி பல கோடி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வலி, துயரம், பட்டினி, சாவு என்று இந்த நாடகத்தை நடத்தவேண்டும், அதுவும் இதற்கு மாற்றாக பல நல்ல முடிவுகள் இருக்கும்போது?

யாஹ்வே தெய்வம் எல்லாம் அறிந்ததாக கற்பனை செய்யப்படுவதால், இதுவரை நடந்ததையும், இனி நடக்கப்போவதையும் அறிந்திருக்க வேண்டும். பல கிறிஸ்துவத் தத்துவவியலாளர்கள், [9] மனிதனுக்குக் கொடுத்த சுதந்திரத்தின் விளைவுகளையும் (counterfactuals of freedom) அறிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதாவது ஒரு மனிதனின் சுதந்திர எண்ணம் மூலம் எடுக்கும் செயல்களின் விளைவுகளையும், அந்தச் செயல்களை செய்யாமலிருப்பதன் விளைவுகளையும் யாஹ்வே தெய்வம் அறிந்திருக்க வேண்டும். ஒரு செயல் நடந்திருக்கக்கூடிய, நடக்காதிருக்கக்கூடிய எல்லா விளைவுகளையும் அறிந்திருக்கும் இது நடு அறிவு (middle knowledge) என்று அறியப்படுகிறது. அதாவது, ஆப்ரஹாம் லிங்கன் காலை உணவை ஆர்டர் செய்தால், என்ன ஆர்டர் செய்வார் என்பதையும் யாஹ்வே அறிந்திருக்கவேண்டும்.

creation-of-adam-and-eveமுதல் பாவக் கொள்கையைப் பொருத்தமட்டில், ஆதாமும் ஏவாளும் எப்படியும் தோற்றிருக்கக்கூடிய ஓர் உலகத்தை யாஹ்வே படைத்திருக்க வேண்டாம். பதிலாக, அவரது நடு அறிவைப் பயன்படுத்தி, ஆதாமும் ஏவாளும் பரிசோதனையில் வெற்றிபெற்றிருக்கக்கூடியதோர் உலகத்தைப் படைத்திருக்கலாம். அதன் மூலம் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அவர்தம் பல கோடி சந்ததியினருக்கும் பல கோடி மிருகங்களுக்கும் அத்தனை வலி, துயரம், சாவு அனைத்தையும் தவிர்த்திருக்கலாம். யாஹ்வேக்கு, ஆதாமும் ஏவாளும், எப்படிப்பட்ட உலகத்தைத் தோற்றுவித்தாலும், பரிசோதனையில் தோற்றுவிடுவார்கள் என்று தெரிந்திருக்கும் என்று ஒருவர் பதில் சொல்லலாம். அப்படியென்றால், அவர் வேறொரு ஆதாம் ஏவாளை- பரிசோதனையில் வெற்றிபெற்றிருக்கக்கூடிய ஆதாம் ஏவாளை- உருவாக்கியிருக்கவேண்டும். மற்றொருவர் எல்லா ஆதாம்-ஏவாள்களும் பரிசோதனையில் தோற்றிருப்பார்கள் என்று சொல்லலாம். அப்படியென்றால், மனிதர்களை உருவாக்கும் வடிவமைப்பிலேயே தவறு இருக்கிறது என்பதே பொருள். கருணையும் நன்மையுமே பொங்கித்ததும்பும் இந்த யாஹ்வே தெய்வம் ஒன்று பரிசோதனையை மாற்றியிருக்க வேண்டும் அல்லது மனிதர்களையே உருவாக்கியிருக்கக்கூடாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

4.3 சூழ்நிலைகளை மாற்றுவதன் மூலம் பாவ நிலையின் அளவை மாற்றவோ குறைக்கவோ முடியும்

“முதல் பாவ”க் கொள்கை இல்லையேல், தெய்வீக உதவி இல்லாமலேயே சில மனிதர்கள் சில வேளைகளில் சமூகத்தைச் சீர்திருத்தி ஒழுக்க ரீதியில் சிறப்பானதாக ஆக்கினார்கள் என்பதை மறுக்கமுடியாது. வறுமை, அறியாமை, கல்வியின்மை, பஞ்சம், துரதிர்ஷ்டம், பாதுகாப்பின்மை, உடல் ரீதியான குறைபாடுகள், உள்ளக் குறைபாடுகள் ஆகிய சூழல்கள், குற்றங்களுக்குத் (பாவ காரியங்கள்) தூண்டுதலாக இருக்கின்றன என்பதை பெரும்பாலான சமூகவியலாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். [14]சமீப காலத்தில் மதச் சார்பற்ற நாடுகளான மேற்கத்திய நாடுகளும் இன்னும் பல மதச் சார்பற்ற நாடுகளும் கல்வி, சுகாதாரம், மருத்துவ உதவி, வேலைகள், பாதுகாப்பான வாழ்க்கை, முன்னேற சந்தர்ப்பங்கள் போன்றவற்றை அளித்து, எந்தவிதமான தெய்வீகப் பிரார்த்தனையின் உதவியும் இல்லாமலேயே குற்றங்களைக் குறைத்துள்ளன என்பதையும் அறிவோம். [15]

ஜான் 16:3-இல் யாஹ்வே மனிதர்களை மிகவும் நேசித்தது என்றும், அவர்களைப் பாவங்களிலிருந்து காப்பாற்ற விரும்பியது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், தார்மீக ரீதியிலும் நடைமுறையிலும் யாஹ்வே செய்ததை விட சிறப்பான வழிகளில் அதே விஷயத்தைச் சாதித்திருக்கலாம். உதாரணமாக, ஓர் அப்பாவியை கொடூரமாகக் கொலை செய்வதை விட, இந்த யாஹ்வே, மக்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருக்கலாம். அதே போல, மக்கள் பாவம் செய்யத் தூண்டும் வறுமை, அறியாமை போன்ற சுற்றுச்சூழல் விஷயங்களை மாற்றி அவர்களைப் பாவம் குறைவாக செய்பவர்களாகவோ செய்யவே வாய்ப்பில்லாதவர்களாகவோ ஆக்கியிருக்கலாம். இந்த அணுகுமுறை, தனது சொந்த மகன் என்று சொல்லப்படுபவரை, கொடூரமாகக் கொலை செய்யாமலேயே, மனிதர்களின் சுதந்திர எண்ணத்தை எந்த விதத்திலும் பாதிக்காமலேயே, யாஹ்வே தனது மக்களுக்கு அன்பு செலுத்துபவராகவும் பாவங்களைக் குறைப்பவராகவும், பாவம் குறைந்தவர்களை ஊக்குவிப்பவர்களாகவும் ஆக்கியிருக்கும்.

இங்கே கிறிஸ்துவ மதம் “முதல் பாவ”க் கொள்கையைக் கைவிட்டுவிட்டு இருக்கவும் முடியாது என்று இங்கே முடிக்கிறேன். யாஹ்வே தெய்வம் மனிதர்கள், விலங்குகள் மீது சாபம் கொடுத்ததால்தான் அவர்கள் மீது முதல் பாவம் படிந்திருக்கிறதாம். அந்த முதல் பாவத்தைத் தீர்க்கத்தான், இயேசு என்ற தன் மகனை அனுப்பி அவரை அடி வாங்க வைத்து, அவரைச் சாவடித்து, அவரை மீண்டும் உயிர்த்தெழ வைத்தாராம். இப்படி கிறிஸ்துவ மதத்துக்கு முதல் பாவம் தேவைப்படுவதால், இந்தக் கொள்கை இல்லாமல் கிறிஸ்துவ மதமே பரிதாபமான நிலையைத்தான் அடையும்.

5. முடிவுரை

கிறிஸ்துவ மதத்துக்கு, தீவிரப் பிரச்சினை இருக்கிறது என்று இங்கே வாதிட்டுள்ளேன். “முதல் பாவ”க் கொள்கையை நம்பகத்தன்மையுடன் கிறிஸ்துவத்தால் காப்பாற்றிக்கொள்ளவும் முடியாது; அதனை விட்டுவிட்டு, கிறிஸ்துவத்தை நம்பகத்தன்மையுடன் பிரசாரம் செய்யவும் முடியாது.

 

 

 

மேற்குறித்த தரவுகள்

[8] This argument is developed in my “The Argument from Unfairness” in the International Journal for Philosophy of Religion Vol. 25, No. 2, pp. 115-128 (April 1999).

[9] William Lane Craig, Alvin Plantinga, Terrance Tiessen, and Thomas Flint are examples.

[10] Kathleen Stassen Berger, The Developing Person through Childhood and Adolescence (6th ed) (New York, NY: Macmillan, 2003), p. 94.

[11] Steven Mohr, “Exposing the Myth of Alcoholics Anonymous,” Free Inquiry April/May 2009, pp. 42-48.

[12] Ibid., p. 44.

[13] The Secular Web page “On Average, Are Atheists as Moral as Theists?” provides an excellent bibliography on atheism and morality.

[14] For example, see:

Adrian Raine, Patricia Brennan, Birgitte Mednick, and Sarnoff A. Mednick, “High Rates of Violence, Crime, Academic Problems, and Behavioral Problems in Males With Both Early Neuromotor Deficits and Unstable Family Environments,” Archives of General Psychiatry Vol. 53, No. 6, pp. 544-549 (1996). Bruce P. Kennedy, Ichiro Kawachi, Deborah Prothrow-Stith, Kimberly Lochner, and Vanita Gupta, “Social Capital, Income Inequality, and Firearm Violent Crime,” Social Science & Medicine, Vol. 47, Issue 1, pp. 7-17 (July 1, 1998). “Tackling the Underlying Causes of Crime: A Partnership Approach,”Submission to the (Irish) National Crime Council by the Combat Poverty Agency of Ireland (2002)

[15] Gregory S. Paul, “The Big Religion Questions Finally Solved,” Free Inquiry December 2008/January 2009, pp. 24-36. See especially Figs. 6, 7, and 8.

மொழிபெயர்ப்பாளர் பின்குறிப்பு

கிறிஸ்துவர்களோ முஸ்லீம்களோ ஆதாம் ஏவாளை பிரசாரம் செய்யும்போது இதற்கெல்லாம் என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்று நாகரிகத்தின் பொருட்டு நாம் கேட்பதில்லை. ஆனால் அவர்களோ தங்களது பிரசாரத்தை மறுத்து யாரும் பேசமுடியவில்லை என்பதே அவர்கள் கூறுவது உண்மை என்பதற்கு நிரூபணம் என்று எடுத்துகொள்கிறார்கள். ஆகையால், அவர்களைத் தேடிப்போய் நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். ஆனால் யாராவது உங்களை பாவிகள் என்று அழைத்தாலோ, அல்லது உங்களிடம் வந்து ஆதாம் ஏவாள், முதல் பாவம் என்று யூதர்களின் புராணக்கதையை பேசினாலோ இந்தக் கட்டுரையை அச்சடித்து வைத்துகொண்டு,  அவர்களிடம் கொடுத்து, படிக்கச்சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.)

சுவாமி விவேகானந்தர் உரை (சுட்டி)

vivekananda-stamp‘அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!’ ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே! ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

ஸ்டீபன்ராஜ் on September 14, 2010 at 11:54 pm

ஆர். கோபால்,

தமிழ் இந்து தளத்தை தொடர்ந்து வாசித்து வந்தாலும் இப்போதுதான் பின்னூட்டம் எழுதுகிறேன்.

ஒவ்வொரு கிறிஸ்துவரும் வளர்ந்தவுடனும் பள்ளிக்கு சென்றவுடனும் அவர் சந்திக்கும் முதல் பிரச்னை இதுவாகத்தான் இருக்கும். இந்துக்கள் இந்த பூமி பல யுகங்கள் பழையது என்று சொல்கிறதே, அறிவியலில் டைனசோர்கள் என்றெல்லாம் பல கோடி வருடங்களுக்கு முன்னால் நடமாடியது என்றெல்லாம் வருகிறதே, ஆனால் பைபிளில் இந்த உலகம் 6000 வருடங்களுக்கு முன்னால் கடவுள் உருவாக்கியது என்று சொல்கிறதே என்று குழம்புவார். ஆனால் பெரும்பாலான வளர்ந்த கிறிஸ்துவர்கள் ஒரு மாதிரி கம்பார்மெண்டலைஸ் பண்ணிவிடுவார்கள். சர்ச்சுக்கு போகும்போது ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னால் உலகத்தை கர்த்தர் படைத்தார் என்று படித்துவிட்டு மாலையில் கோடி வருடங்களுக்கு முன்னால் இந்த பூமியில் டைனசோர்கள் நடமாடின என்றும் முரண்பாடில்லாமல் படிப்பார்கள். இதனை விவாதிக்கும்போது சர்ச்சிலும், வீட்டிலும் இதனை ஒரு மாதிரி அமுக்கி விடுவார்கள். திரும்பத் திரும்ப யேசு, கர்த்தர், ஜெபம், யேசுவை விசுவாசிக்கிறேன் என்று கிளிப்பிள்ளை மாதிரி சொல்லி மூளைச்சலவை செய்து மற்றவற்றை அமுக்கி விடுவார்கள். ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னால் முதல் பாவம் நடக்கவில்லை என்றால் ஏசுவை கிறிஸ்துவர்கள் நம்புவது முட்டாள்தனம் என்று இப்படி நெத்தியிலடித்தாற்போல சொல்லவோ எழுதவோ தமிழ்நாட்டில் யாருமில்லை.

இயேசு என்ற ஒருவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் இருந்தார் என்பதற்கு பைபிளை விட்டால் வேறு ஆதாரம் இல்லை. ஆனால், அவருக்கு முன்னால் இந்த உலகில் பிறந்த அலெக்ஸாந்தருக்கு வண்டி வண்டியாக ஆதாரங்கள் இருக்கின்றன. இயேசுவை பார்த்தே இராதவர்கள் அவரை தலை முடி நீளமாக தாடி மீசை இல்லாமல் படமாக வரைந்து வரலாற்று கதாபாத்திரமாக ஆக்கிவிட்டார்களே தவிர அவர் இருந்த ஒரு ஆதாரமும் இல்லை. அந்த காலத்தில் பலரும் இப்படித்தான் தலைமுடி நீளமாகவும், தாடி மீசை இல்லாமலும் இருந்தார்கள். இயேசு கிறிஸ்து என்பது மாற்கு எழுதிய நாவலில் வரும் ஹீரோ. அந்த ஹீரோவை சுற்றி கதை எழுதி அவரை வரலாற்று பாத்திரமாக ஆக்கிவிட்டார்கள் என்று இப்போது சொல்கிறார்கள்.

நான் இந்த காரணங்களுக்காக கிறிஸ்துவ மதத்தை விடவில்லை. இனந்தெரியாமல் எனக்கு முருகன் மீது பக்தி வந்ததால் நான் முருகனை கும்பிடுகிறேன். நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தாலும், என் பெற்றோரும் சகோதரர்களும் தீவிர கிறிஸ்துவர்களாக இருந்தாலும் நான் சர்ச்சுக்கு போவதில்லை. அவை எனக்கு அந்நியமாகவும் எனது அடிமைத்தனத்தை பறைசாற்றுவது போலவும் உணர்வதால் நான் சர்ச்சுக்கு போவதில்லை. இந்த கட்டுரை என்னுடைய முடிவு சரியானதே என்று எனக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Ravikumar on September 14, 2010 at 10:39 pm

This article was sent to me by a friend. I started reading this with a contempt at first and then realized that my belief was wrong.

I am going to forward this to my friends. I want them to realize their mistakes as well.

I have to say that “I was a christian”

Thanks for the enlightenment.
Ravikumar



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

கந்தர்வன் on September 16, 2010 at 12:10 pm

சில்சாம்,

ஒரே ஒரு கேள்வி: கருவாக இருக்கும்போதே இறக்கும் சிசுக்களின் கதி என்ன?

(1) அவை “ஆதி பாவத்தால்” இறந்து போகும் பச்சைக் குழந்தைகளும், கருவறையிலேயே இறக்கும் சிசுக்களும் நரகத்திற்குப் போகின்றன என்று St. Augustine போன்ற உங்கள் ஆதிகாலத் தலைவர்கள் கூறுகின்றனரே? அவரை ஏற்கிரீர்களோ இல்லையோ, சிசுக்கள் நரகம் செல்வதை ஏற்றுக் கொண்டால் உங்கள் கர்த்தர் கருணையே இல்லாதவன் என்றாகிவிடுமே?

(2) இறக்கும் சிசுக்கள் சுவர்க்கம் போகின்றன என்றால், சம்சாரத்தில் இருப்பவர்களுக்கு பெரும் அநியாயமாகிவிடுமே? ஏன் சிலரை மாத்திரம் ஈசியாக சொர்க்கம் அனுப்புகிறார்? உம் போன்றவர்க்கு அந்த ஈசியான வழியை ஏன் கொடுக்கவில்லை? கர்த்தர் பாரபட்சம் பார்ப்பாரோ? அது இருக்கட்டும், இறக்கும் சிசுக்கள் சொர்க்கம் தான் போகின்றன என்றால் நீங்கள் கருகலைப்பையும் சிசுவதையையும் ஏன் எதிர்க்கிறீர்கள்? அவர்களை சிசுவாக இருக்கும்போதே அழிந்து நிச்சயமாக சுவர்க்கம் போவதைத் தடுக்கிரீர்களே? என்ன கருணையின்மை உமக்கு?



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

கந்தர்வன் on September 17, 2010 at 11:13 am

//
எந்தவொரு உயிரையும் துன்புறுத்துவது இறைவனுடைய நோக்கமல்ல; மாறாக இறைசக்தியின் எதிர்சக்தியான சாத்தானே உயிர்களைக் கவர்ந்து செல்கிறான்; இது அனைத்து மார்க்கங்களுக்கும் பொதுவான நம்பிக்கையாகும்;
//

சில்சாம்,

அப்படியானால், உங்களுடைய ஓரிறைக் கோட்பாடும் சர்வவள்ளமைபடைத்த இறைக்கொட்பாடும் அடிபட்டுப் போகிறது. இரண்டு ‘இறைவர்கள்’ என்று நீங்கள் ஒத்துக் கொண்டு ஆக வேண்டும். மேலும், “ஒரு இறைவர் (கர்த்தர்) நல்லது செய்யப் பார்க்கிறார், இன்னொரு இறைவர் (சாத்தான்) உயிர்களைத் துன்புறுத்தப் பார்க்கிறார். ஒரு இறைவர் (சாத்தான்) செய்வதை இன்னொரு இறைவரால் (கர்த்தர்) தடுக்க முடியாது. சில நேரங்களில் கர்த்தர் சாத்தானிடம் நிரந்தரமாகத் தோற்கிறார். ஏனென்றால், நரகத்தில் விழுந்த உயிர்களைக் கர்த்தருக்குக் காப்பாற்றும் சக்தி இல்லை. சக்தி இருந்தால் அனைவரிடத்திலும் கருணை கொண்ட இறைவர் அவர்களை மன்னிக்க மாட்டாரா?” என்று இரண்டு இறைவர்களை ஒப்புக் கொள்ள வேண்டி வரும்.

(ஹிந்துக்களாகிய மற்றவர்களுக்கு ஒரு சுவாரசியமான விஷயம் — அந்த இரண்டு இறைவர்களில் யார் அயோக்கியர் யார் கருணை உள்ளவன் என்பதெல்லாம் வேறு விஷயம்… “ஒருவர் ஆப்பிள் தின்னத் தூண்டுபவர், இன்னொருவர் இனப் படுகொலை செய்யச் சொல்பவர்” என்று மாத்திரம் கூறிவிட்டு நிறுத்திக்கொள்கிறேன்.)

கந்தர்வன் on September 17, 2010 at 11:34 am

சில்சாம்,

// இப்படி எனக்குத் தெரியாத தங்களுக்குத் தெரிந்த ஏதோ ஒரு காரணத்தையும் இதனால் துன்பமடைந்த உயிர்களுக்கு நல்ல தீர்வையும் நீங்களே சொல்லுங்களேன்..! //

சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் உங்களுக்கு இருக்கிறதா என்பது சந்தேகம். இருப்பினும் எவராவது பயன்பெறுவார்கள் என்று கணித்துக் கூறுகிறேன்:

எல்லா உயிர்களுக்கும் பிறப்பு இறப்பிலிருந்து மோக்ஷமாகிய திருவீட்டினை அடைய வழி உண்டு. எவரும் நிரந்தரமாக நரகத்திற்குச் செல்வதில்லை. பல பிறவி எடுத்து உயிர்கள் பல விதமாகத் துன்பப்படுவது அந்த ஆன்மா சேர்த்து வைத்துள்ள பாப கர்மத்தின் பலனாகும். மோக்ஷத்திற்கு ஏதுவாகிய ஆன்ம ஞானத்தை இறைவன் தன்னுடைய காரணமற்ற (நிர்ஹேதுக) கிருபையாலே தந்து பாப கர்மாக்களை அழிக்கிறான். அத்தகைய நிர்ஹெதுக கிருபைக்குப் paaththiramaavadhu eppadi enbadhellaam veru vishayam. adhu eppodhu nadakkum enbadhellaam avan kaiyil dhaan uLLadhu. eninum, அது நடக்கும் வரை சம்சாரத்தில் இருக்கும் நாம் கைங்கர்யமாக இறைப்பணியில் ஆழ்ந்து உலகத்து உயிர்கள் அனைத்தும் உய்வு பெற உழைக்க வேண்டும். அவ்வளவு தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

sarang on September 18, 2010 at 5:16 pm

சில்லி சாம்

எங்கே யோசிக்கத் தொடங்கினால் ஹிந்டுவாகிவிடோவோமோ என்ற கவலையை சற்றே புறம் வைத்து சிறிதேனும் சிந்தியும்

//
ஒரு இந்து நம்பிக்கையாளனாக உங்களைக் கேட்டால் கருவில் கலையும் சிசுவின் நிலையைக் குறித்து என்ன சொல்லுவீர்கள்?
//

ஹிந்துக்கள் மறுபிறப்பை ஒத்துக் கொள்வதாலும் – கர்மா என்ற ஒன்றை ஒத்துக் கொள்வதாலும் வீணாக பாவத்தின் மீது பழியை போடா மாட்டோம் – கருவிலே குழந்தை இயற்கையாக கலைந்தால் – பிரச்சனையை ஆராய்ந்து அடுத்த முறை சரி செய்வோம்
- மேலும் தோஷம் என்பது தானாக வராது – முன் செய்த வினைபயனையே அந்த வினையின் கருத்தை ஒட்டி தோஷம் என்று அறியப்படுகிறது

கர்மா என்பது தன தவறுக்கு தானே பொறுப்பேற்பது – அதாம் மீது பழியை போடும் escapism இல்லை – பாவ மன்னிப்பு கோரும் நோஞ்சான் தனமும் இல்லை

கருவிலே இராக்கும் குழண்டியின் ஆன்மா மீண்டும் பிறக்கிறது – மேன்மெய் பெறுகிறது – விடுதலையை நோக்கி முன்னேறுகிறது – ஹிந்து தர்மத்தில் ஒரு எறும்பும் வாழ்வு சக்கரத்தின் எதோ ஒரு நிலையில் தான் இருக்கிறது – அதுவும் ஒரு நாள் விடுதலை பெரும் – அரபு நாட்டு மத கொள்கை படி – மற்றவை எல்லா மனிதன் கொடூரமாக கொள்வதற்கே, மனிதன் enjoy செய்வதற்கே என்றில்லாமல் – எவ்வுயிரையும் முக்தி பெற தகுதி கொடுக்கிறது ஹிந்து மதம்

தோஷம் என்பது வேதத்தில் வைக்கப்படும் விஷயம் அல்ல – தோஷம் என்ற ஒன்று இல்லாவிடிலும் ஹிந்து தர்மம் இருக்கும் – முதல் பாவமோ கிறிஸ்தவம் எனும் ஒரு ஓட்டை வீட்டின் முக்கிய சுவர் – விவில்யத்தின் மையம் – ஆன்மீக வேட்டைக் காரனின் பீரங்கி குண்டு, லோக்கல் பிராடுகள் வசிதியாக வாழ ஏற்பட்ட ஒரு நோட்டடிக்கும் மிசின்

முதல் பாவத்தை தள்ளி விட்டால் ஏசு ஒன்னுமிள்ளதவராகி விடுவார் – அதனால் தான் மொத்த க்ரிஷ்டவ கூட்டமே கிஞ்சித்தும் யோசனை என்ற ஒன்றையே செய்வதில்லை –

முதல் பாவம் என்ற காட்டு மிராண்டி தனத்திலிருந்து வெளியே வாருங்கள் – எறும்பு ஊற கல்லும் தேயும் – அறிவுடன் யோசிக்க முயற்சி செய்யுங்கள் – வெற்றி நிச்சயம்

கந்தர்வன் on September 18, 2010 at 6:21 pm

சில்சாம்,

‘சுவாரசியமான விஷயம்’ என்று கிண்டலாகக் கூறியிருப்பதை நீங்கள் எடுத்து விமர்சிக்கிறீர்கள். நீங்கள் விநாயக சதுர்த்தி பற்றி உங்கள் blog-இல் கூறியதை இங்கே அம்பலப்படுத்தினால் உங்கள் கதி என்ன ஆகும்? இதோ நீங்கள் எழுதியது:

// விநாயகர் என்றும் கணபதி என்றும் பக்தர்களால் அன்போடு புகழப்படும் முச்சந்தி தெய்வம் தனது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார்

இதில் நிலைதடுமாறிய குட்டி யானை அதாவது விநாயகரை ஏற்றிவந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

ஆனாலும் விநாயகர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்;விநாயருக்கு ஏற்கனவே பிராணன் இல்லாததால் பிராணவாயு செலுத்தி உயிர் பிழைக்கச் செய்த முயற்சிகளும் பலிக்கவில்லை;

அவரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி பூஜை மரியாதை செய்து பிறகு ஊர்வலமாகக் கொண்டுச் சென்று கிரேன் மூலம் உடைத்து கடலில் தூக்கிப் போட்டு கொலை செய்வதே பக்தர்களின் வழக்கம்;ஆனால் இங்கே விநாயகர் சாலை விபத்தில் அகால மரணமடைந்தது பக்தர்கள் கண்களில் நீரை வரவழைத்தது; //

ஏதோ நேர்மையானவர் போல நீங்கள் நடிப்பது வேடிக்கையாக உள்ளது. இந்து விரோதத்தில் ஊறிப் போயுள்ளவர் நீங்கள் என்று மேற்கண்டதிலிருந்து தெரிகிறது.

எங்கே உங்களுடைய பழைய ஏற்பாட்டில் கர்த்தர் இனப்படுகொலை செய்யவில்லை, இசுறேளியர்களை இனப்படுகொலை செய்விக்கவில்லை என்று கூறுங்கள் பார்ப்போம்? இதோ… பழைய ஏற்பாடு என்ன கூறுகிறது பாருங்கள்…

1 Samuel 15:2-3
Thus saith the LORD of hosts … go and smite Amalek, and utterly destroy all that they have, and spare them not; but slay both man and woman, infant and suckling, ox and sheep, camel and ass.

கேட்ட கேள்விக்கு பதிலைக் காணம். நீங்கள் எனக்குக் கேட்ட கேள்விக்கு நான் கூறிய சமாதானத்திற்கும் நீங்கள் ஒன்றும் கூறவில்லை. மீண்டும் தெளிவாக ஒரு முறை:

இறந்து போகும் சிசுக்களுக்கு என்ன கதி?இக்கேள்விக்கு நீங்கள் “சொர்க்கம்” “நரகம்” ஆகிய இரண்டில் ஒன்றைத் தவிர வேறு எதையும் கூற இயலாது. (இயன்றால் கூறவும்.) இந்த இரண்டு பதில்களில் நீங்கள் என்ன கூறினாலும் அது உங்கள் கர்த்தருடைய பாரபட்சமின்மைக்கும் கருணைக்கும் உலை வைக்கிறதே? ஏன் இரண்டில் எந்த பதில் கூறினாலும் உங்கள் கர்த்தருடைய கருணைக்கும் பாரபட்சம் இன்மைக்கும் உலை வைக்கிறது என்று புரிகிறதா? இதற்கு உங்களால் சமாதானமே கூற இயல முடியுமா? இதுவே என்னுடைய சவால்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 

sarang on September 19, 2010 at 11:45 am

ஜான்சன்,

//கிறிஸ்தவத் தத்துவப்படி //

அப்படின்னா – கிறிஸ்தவத்துக்கு தத்துவமும் உண்டோ – தத்துவம் பற்றி பேசிவிட்டு பதில் முழுக்க சாத்தான் பற்றிய பிதற்றல் – கிறிஸ்தவம் இயேசுவை விட சாத்தனுக்கு தான் அதிகம் கட்டுப்படுகிறது

கேள்வி பிறந்த சிசுவை பற்றி மட்டுமல்ல – முதல் பாவம் என்பதே இருந்திருக்க முடியாது என்றே –

நாங்கள் ஒன்னும் தெளிவு பெற்று விட்டதாக எழுதவில்லை – நாங்கள் எதோ கிறிஸ்தவம் உண்மி என்று இதுகாலும் நம்பி – இப்போ டபக்குன்னு மாரிட்டோமக்கும்

உமது பதிலில் ஒரு வரியாவது அறிவுப் பூர்வமாக இருக்கா – சாத்தான் சாத்தான் என்று ஜபித்துல்லீர்கள் – அரபு நாட்டுகாரநேல்லாம் சாத்தானை தான் அதிகம் ஜபிக்கறான் – அதனால் தான் உலகம் பூர சாத்தான் மாதி அட்டுழியம் பண்றான் – இது தான் உங்கள் தேவனின் விருப்பம் போலும்

//
ஆனால்,கட்டுரையாளருக்கும் பின்னூட்டம் எழுதியவருக்கும் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்.

உங்களிடத்தில எந்தப் பாவமும் இல்லையா?
//

பாவம் இல்லை – நாங்கள் பாவிகள் இல்லை – நாங்கள் செய்த காரியங்கள் என்று நிறைய உண்டு அதற்க்கு (நாங்கள் செய்த காரியத்திற்கு மட்டும்) எங்களுக்கு பலன் கிடைக்கும் என்ற நினைவு உண்டு

இப்படி வெட்டி பேச்சு பேசி உங்கள் சூழ்ச்சி சுவிசேஷத்தில் இறங்க வேண்டாம்

//
ஆனால், கிறிஸ்தவர்கள் விதைகளை நிலத்தில் தூவிக் கொண்டே போவார்கள். உங்கள் மனம் மாதிரி மணலும்
//
நீங்கள் தூவவது எல்லாம் விஷம் மேலை நாடுகளின் கிறிஸ்தவ விதை விழுந்த இடமெல்லாம் என்ன ஆகிவுள்ளது என்பது உள்ளங்கி நெல்லிக்கனி – வெறும் ஆபாசம், வெடிகுண்டு கலாசாரம், தேக முஹம, அடுத்தவனை ஏமாற்றி பிழைக்கும் பிழைப்பு, ஹிட்லர் போன்றோரின் தோற்றம், மன உளைச்சல், வாழ்கையில் என்ன செய்வதென்றே அறியாத ஒரு சீர்கேடு – இது தான் கிறிஸ்தவம் விடைத்த இடத்தில் முளைத்துள்ளது

நீங்கள் சாத்தானை எதிர்த்து எழுதவில்லை – சாத்தான் உங்கள் உல் புகுந்து எழுதி இருக்கிறான் (மூணு மணி சாத்தான் உலவும் நேரம் தான்)

நாங்கள் பதில் சொல்லாமல் போகலாம் அதனால் நாங்கள் தோற்றுவிட்டோம் என்று அர்த்தம் இல்லை என்று வரிக்கு வரி எழுதுகிறீர்கள் – இதை எல்லாம் நாங்கள் திராவிட கழக மேடையில் நிறைய கேட்டகி விட்டது – நாங்கள் இதே போல பேச்சை கொழிகளிடமிருந்தும், ஏமாற்று காரர்களிடமிருந்து, வெத்து டப்பைக்களிடமிருந்து நிறைய கேட்டாகி விட்டது

கொஞ்சாமாவது அந்த சாத்தான் பயல தலயி வைத்து விட்டு சுயமாக சிந்தியுங்கள்

உங்களுக்கு வேண்டுமென்றால் விவில்யத்தில் உள்ள அத்தனை பைத்திய கார தனங்களையும் தமிழில் மொழி பெயர்த்து ஒரு வெள்ளை அட்டை போட்டுத்தர தயார்

தயவு செய்து சிந்தியுங்கள் – இப்படி நாடு ராத்திரியில் எழுந்து ezhudhuvathu உடம்பிற்கும், மனத்திற்கும் நல்லது alla

 

கந்தர்வன் on September 19, 2010 at 1:05 pm

ஜான்சன் அவர்கள் தமது மறுமொழியில் ஒரு பெரிய காமெடி ஷோ நடத்திக் காட்டியுள்ளார்.

இங்கு நாம் மிஷனரிகளின் தந்திரத்திற்கு எதிராக நடத்தும் non-violent intellectual பிரச்சாரத்தையும் கேள்விகளையும் கண்டு கிறித்தவ இவர் மதிகலங்கி உள்ளார். இதோ-

// ஏன், எனக்கே கூட கருவில் மரிக்கும் சிசுவைக் கர்த்தர் நரகத்துக்கு அனுப்புவாரா, சொர்க்கத்திற்கு அனுப்புவாரா என்று தெரியாது. //

கருவில் மரிக்கும் சிசு மாத்திரம் அல்ல, பார்த்தாலே நம்மை மறக்கச் செய்யும் அழகும் மழலையும் உள்ள ஆறு மாதக் கைக்குழந்தை ஞானஸ்நாநம் இல்லாமல் மரித்தாலும் அக்குழந்தைக்கு என்ன கதி என்னும் கேள்விக்கு இவர்களுடைய அபத்தக் கடவுட்கொள்கை பதில் சொல்லத் திணறுகிறது. (ஆனால், இவர்களது மதத்தலைவரான St. Augustine of Hippo மிகத் தெளிவாக, “ஞானஸ்நாநம் செய்யாத குழந்தைகள் கண்டிப்பாக நரகத்திற்குத் தான் போகிறார்கள்” என்று கூறியுள்ளதை இவர்கள் இல்லை செய்துவிட முடியாது.)

“ஒரு பாவமும் செய்யாத குழந்தை நரகத் தீயில் நிரந்தரமாக விழுவது என்பது சாத்தியமில்லை” என்பதைக் கூட மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ள இவருடைய கடவுட்கொள்கை தடையாக உள்ளது என்பதைப் புகைப்படம் எடுத்துக் காட்டிவிட்டார்.

இப்படி மதிகலங்கியும், “கிறித்தவக் கடவுள் கோட்பாடு அபத்தமானது, இப்படி ஒரு கர்த்தர் இருப்பது சாத்தியமில்லை” என்று அறிவுப்பூர்வமாக ஒப்புக்கொள்ள இவருடைய மதாபிமானம் தடுக்கிறது. ஆகையால் intellectual-ஆக பதில் எழுதத் தெரியாமல், நம் அனைவரையும் பெயரால் குறிப்பிட்டு ( தனபால், எஸ்எஸ், கந்தர்வன், ராமா, தூயவன், பாஸ்கர், சாராங், கோயமுத்துர் கவுண்டன், உமாசங்கர், ஜெயசங்கர், கோபால், ஸ்டீபன்), நம்மை “சாத்தானால் ஏவப்படுபவர்” என்றும், “தமிழ்ஹிந்து தளம் சாத்தானால் நடத்தப்படுகிறது” என்றும் தூஷித்துள்ளார்.

இந்துமத விரோதிகளான இவர்கள், தமிழ்ஹிந்துவில் வந்துள்ள இக் கட்டுரைக்குப் பதில் அளிக்க முடியாமல் படுதோல்வி யடைந்துள்ளனர் என்று தெரிகிறது

 

கந்தர்வன் on September 19, 2010 at 1:35 pm

// இங்கேதான் சாத்தானின் தந்திரம் பரிணாமம் அடைகிறது.//

//வினா வடிவில் கேட்டு, ஏவாளால் பதில் சொல்ல முடியாவில்லால், மனிதனின் தேவ கீழ்ப் படிதலைப் பாதியாவது பாழாக்கிப் போடலாம் என்ற நம்பிக்கை சாத்தானுக்கு இருந்திருக்க வேண்டும். சாத்தானின் நம்பிக்கையும் பலித்தது. //

// பதில் சொல்வதில் தடுமாறிப் போன ஏவாளிடம், நீங்கள் சாவதில்லை. மாறாக தேவனைப் போல் ஞானம் பெறுவீர்கள் என்று வஞ்சகமாக ஆசை வார்த்தை காட்டி விட்டான். அந்த வஞ்சகத்தில் விழுந்த மனித குலம், தலைமுறை தலை முறையாய் பாவத்தில் விழுந்து வருகிறது. //

அம்புலிமாமா கதையை வைத்து பூச்சாண்டி காட்டி இருநூறு கோடி மக்களுடைய சிந்தனைக்கு முற்றுபுள்ளி வைப்பது எப்படி? என்று ஆபிரகாமியர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 


vedamgoapl
 on September 19, 2010 at 1:57 pm

முதல் பாவத்தை பற்றி குழப்பத்திற்கு முன் நாம் ஆதி மனித தோற்றம் பற்றியும் என்ன குழப்பியுள்ளார்கள் என்பதை அறியவேண்டும்

ஆதி மனிதன் உற்பத்தி பற்றி விவிலியத்தின் ஆதியாகமம் இரண்டாம் அதிகாரம்
” 7 தேவனாகிய கர்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் மனுஷன் ஜீவாத்துமாவானான். இந்த ஆணே ஆதாம்.

” 21 அப்பொது தேவனாகிய கர்த்தா ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார் அவன் நித்திரையடைந்தான் அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தை சதையினால் அடைத்தார்

“ 22 தேவனாகிய கர்த்தர் தான் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

இப்படி உருவாக்கப்பட்ட முதல் பெண்தான் ஏவாள் ஆவாள். ஒரு மனிதனின் உடலில் தோன்றி ஒன்றிலிருந்து உருப்பெறும் ஒரு பெண் அந்த மனிதனின் மகள் என்பது சர்வ உலகமும் ஏற்க்கும் உண்மை. எங்கேயோ உதைக்கிறது

இதை தவிற வேறுவிதமாக ஆதாம் ஏவாள் தோற்றத்தை ஆதியாகமம் 1:27 கூறுவது ” தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார் அவனை தேவசாயாலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். இப்படி தெளிவாக மானிட தோற்றம் பற்றிக்கூறிய விவிலியம் அடுத்த அதிகாரத்தில் இதற்க்கு மாறாக கூறியது ஏன் ? இந்த தோற்றமே கிருஸ்துவர்களால் ஏற்க்கப்பட்டு நடைமுறையில் இருந்துவருகிறது. காரணம் விவிலியம் பலவித (INCEST) இன்செஸ்ட் பற்றி பேசுவதே. மேலும் ஆதாமுக்கு லிலித் என்ற முதல் மனைவி உண்டு என்றும் அவள் ஏவாளால் அப்புறப்படுத்தப்பட்டாள் என்றும் யூதர்களின் தால்முட் (TALMUD) கூறுகிறது.

விவிலியம் (INCEST)ஐ தூக்கிப்பிடித்து நிறுத்துகிறது. எகிப்து தேசத்தில் அடிமைகளாக்கப்பட்ட எபிரேயர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தவர் மோசஸ். இவர் ழூலமே இறைவன் தந்த 10 கட்டளைகள் வெளியாயின. யாத்திராகமம் 6 20 சான்றவது ”அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம் பண்ணினான். அவளுக்கு ஆரோன் மோசஸ் பிள்ளகளாக பிறந்தார்கள்.

மேலும் (II) சாமுவேல் 13ஆம் அதிகாரத்தில் 1 முதல் 14 வரை எவ்வாறு அப்சலோம் என்பவன் தன் சொந்த தங்கையான தாமார் மேல் காதல் கொண்டு பலவந்தமாய் அவளோடு சயனித்து கற்பழித்தான் என்பதை விளக்குகிறது

மேற்கண்ட விவிலிய பகுதியிலிருந்து கிருஸ்துவ மத முன்னோர்களிடையே நிலவிய ஒழுக்ககேட்டை அறியலாம்..

அபிரகாம் என்பவரை யூதமத ஸ்தாபகராகக்கொள்வர். இயேசுநாதர் ஒரு யூதர் இந்த அபிரகாம் தன் சகோதரியை மணந்துகொண்டவர். ஆதியாகமம் 20:12 அவள் என் சகோதரி என்பது உண்மை ஆனால் அவள் என் தகப்பனுக்கு குமாரத்தி என் தாய்க்கு அல்ல எனக்கு மனைவியானாள்.

(ஆதாரம் – கிருஸ்துவம் –உள்ளது உள்ளபடி – திராவிட சான்றோர் பேரவை)

முடிந்தால் மேலும் படித்துவிட்டு தேவையான செய்தியை கூறலாம் ஆனால் தலை சுற்றுகிறது !!!! ஓ ஜிஸஸ்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

தேவப்ரியா சாலமோன் on September 19, 2010 at 3:03 pm

.
ஆதாமின் பாவம் காரணமாக மரணமாம்.
பூமியில் மரணத்திற்கு காரணமான ஆதி பாவம் நீங்கியது என்றால் யாரும் மரணம் அடையக் கூடாது. தண்டனைக்கு உரிய அபராதம் கட்டிவிட்டால் விடுதலை தானே?

கீழுள்ள வசனங்களில் இயேசு கதைப்படி வானத்திலிருந்து மன்னாவை பற்றி கூறி உள்ளது –

யோவான் -அதிகாரம் 6

31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘ அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ‘ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ‘ என்றனர்.32 இயேசு அவர்களிடம், ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ‘ என்றார்

49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.51 ‘ விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.

மன்னாவை சாப்பிட்டவர்கள் மரணம் அடைந்தனர். ஆதாமின் பாவம் காரணமாக மரணமாம்.

இயேசு தன்னை சாப்பிட்டவர்கள் மரணமடைவதில்லை என்கிறார். பாவம் இயேசுவின் சீடர்கள், ஏன் மதம் துவக்கி வைத்த பவுல் உட்பட யாரும் உயிரோடு இல்லை.

இயேசு கதைப்படி உயிர்த்தெழுந்த பின்பு பற்றி கூறி உள்ளதாக
யோவான் -அதிகாரம் 21
.20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ‘ ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ‘ என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ‘ ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ‘ என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ‘ நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ‘ என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ‘ நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ‘ என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்

இயேசுவின் சீடர் உயிரோடு இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

சூசைராஜ் on September 24, 2010 at 2:14 am

ஆர் கோபால் அவர்களுக்கும், ஷேனிக் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன்.

யூதப் பழங்குடியினரது கதைகளை சிறுவயது முதலாக படித்த காரணத்தால் அதிலுள்ள ஆபாசங்களை கண்டு வெட்கி தலைகுனிந்திருக்கிறேன். பொதுவாக விமர்சனம் செய்யும்போது அவற்றை எளிதில் எடுத்து அதில் உள்ள ஆபாசங்களை பட்டியலிட்டாலே குமட்டிக்கொண்டு வரும். அதிலும் கர்த்தர் எத்தகைய ஆபாசங்களையும் குரூரங்களையும் இஸ்ரவேலர்களை செய்யத்தூண்டுகிறார் என்று படித்தாலே குலை நடுங்கும். அதனை பார்த்தால் கர்த்தர் ஒரு கடவுளா சாத்தானா என்ற சந்தேகமே வரும். கிறிஸ்துவர்களுக்கே வாந்தி வரக்கூடிய விஷயங்களை ஒரு மாதிரி புரியாதமாதிரி மொழிபெயர்த்து வைத்திருப்பதால் கிறிஸ்துவர்களுக்கே ஒன்றும் புரியாமல் கடந்து சென்றுவிடுவார்கள். ஆனால் இந்துக்கள் அவற்றை படித்துவிட்டார்கள் என்றால் கிறிஸ்துவர்கள் என்றாலே அசிங்கம் பிடித்தவர்கள் என்றுதான் நினைப்பார்கள்.

பழைய ஏற்பாடு கதைகள் என்றால், அதுவெல்லாம் பழசு, இயேசு திருந்திட்டார், அதல்லாம் வேணாம்னு சொல்லிட்டார் என்பார்கள். பன்னிக்க்றி சாப்பிடலாம் என்று ஒரு இடத்திலும் ஏசு சொல்லவில்லை. பவுல்தான் சொல்லுகிறார். பன்னிக்கறியை தின்பார்கள். ஆனால் ஏசுவோ, பழைய ஏற்பாட்டு சட்டங்களை நான் மாற்றவரவில்லை, உறுதிபடுத்தத்தான் வந்தேன் என்று சொல்லுகிறார். பழைய ஏற்பாடு சட்டத்தின்படி யூதரல்லாதவர்கள் எல்லொரும் பன்றிகள், நாய்கள். அதனால், ஒரு கானானிய பெண்மணியை நாயே என்று திட்டுவார். அதெல்லாம் இருக்கிறது. அப்படியென்றால் தமிழர்களும் நாய்கள்தானே? தமிழர்களை நாய்கள் என்று சொல்லும் ஒருவரை கடவுள் என்று நினைத்து கும்பிடும் இவர்களை நினைத்து எங்கே போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

பைபிள் கூறும் உண்மைகள்

பாவத்தைப் போக்க வந்த பரமபிதா

- ஆய்வாளன்

jesus-christ-0206_03.jpg

லகிலுள்ள மக்கள் அனைவரையும் உலுக்கி எடுக்கும் வார்த்தை ஒன்று உண்டானால் அது பாவம் என்பதாகும். அது ஒருவனைப் பிடித்துக் கொண்டால் அவன் பாவியாகிவிடுகின்றான். அப்படிப்பட்ட பாவம் உலகத்தில் எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது? அதை விரட்டுவது எப்படி என்ற விவரங்கள் உலகின் பெரும்பான்மையான மக்களுக்குத் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த விவரங்கள் பைபிளிலேயே இருக்கின்றது என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாததால், எல்லோருமே தெரிந்து கொள்ளும்படிச் செய்வது அவசியமாகின்றது. முழுமையாகத் தெரிந்து கொள்ள தேவன் உலகத்தைப் படைத்த ஆதிகாலத்திலிருந்தே வரவேண்டும்.

(பேதுரு 3:5) பூர்வ காலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயின.

இறைவனாகிய தேவன் ஆதிநாளிலே பூமியையும், சூரியனையும், சந்திரனையும், நீரையும், காற்றையும் படைத்தார். பூமியில் வாழ்வதற்கு ஆதாம், ஏவாள் என்று பெயரிடப்பட்ட ஆண், பெண் இருவரையும் படைத்தார். பூமியிலே அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்காக கார்டன் ஆப் ஈடன் (Garden of Eden) என்ற தோட்டத்தையும் உருவாக்கி அதில் அவர்களை ஆனந்தமாக வாழும்படிச் செய்தார் சில நிபந்தனைகளுடன்.

ஆதாம், ஏவாள் இருவருக்கும் இறைவன் விதித்த நிபந்தனைகள் என்ன என்று பார்ப்போம். அவர்கள் இருவரும் தோட்டத்திலோ, உலகின் மற்ற பகுதிக்கோ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், இறைவனால் அமைக்கப்பட்ட கார்டன் ஆப் ஈடன் என்ற தோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலே உள்ள ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை மட்டும் சாப்பிடக்கூடாது. மேலும், அந்தக் கனி இருக்கும் மரத்தின் அருகில்கூட போகக் கூடாது என்று நிபந்தனையாக மட்டுமல்லாது கட்டளையாகவும் கூறியிருந்தார்.

ஆண்டவனின் ஆணைப்படியே நடந்து ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள் தேவனால் படைக்கப்படாத சாத்தானைக் காணும் வரை.

reading-bible_2316_1024x805_02.jpgசாத்தானின் ஏமாற்று வார்த்தைகளில் சிக்கிய ஆதாமும், ஏவாளும் தேவனுடைய கட்டளைப்படி நடக்காமல், எந்தக் கனியைக் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது என்று தேவன் கட்டளை யிட்டிருந்தாரோ அந்தக் கனியை இருவரும் சாப்பிட்டார்கள். பழத்தைச் சாப்பிட்ட மறுவிநாடியே பாவம் அவர்கள் இருவரையும் பிடித்துக் கொண்டது. மேலும், அவர்கள் இருவரும் பாவிகள் ஆகிவிட்டனர். இந்தப் பாவமானது அவர்கள் இருவரோடு மட்டும் விடாமல், ஆதாம், ஏவாள் இருவருக்கும் பிறந்த அவர்களின் சந்ததியினரையும் தொடர்ந்து பிடித்துக் கொண்டது. இதனால் ஆதாம், ஏவாளுக்குப் பின் தோன்றிய உலக மக்கள் அனைவரையும் பாவம் பிடித்து பாவிகளாக மாறினார்கள்.

பாவம் என்றால் என்ன? அது எப்போது எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு விடை இப்பொழுது எல்லோருக்கும் நன்றாக, தெளிவாக விளங்கியிருக்கும். உலகில் இப்படித் தோன்றிய பாவத்தைப் போக்கவே இயேசு பூமிக்கு வந்தார்.

1. மத்தேயு (1:15) பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். அவர்களில் பிரதான பாவி நான்.

இப்படியாக உலகில் தோன்றிய பாவத்தினால் ஜனங்கள் பாவியாகி விட்டதால், அந்தப் பாவிகளைக் காப்பாற்றவே இயேசு உலகிற்கு வந்தார் என்பதனைப் பைபிள் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றோம். ஆதாமையும், ஏவாளையும் அவர்களால் உண்டான உலக மக்கள் அனைவரையும் பாவியாக்கியது அவர்கள் சாப்பிட்ட பழத்தினால் அல்லவா. அப்படியானால் அவர்கள் சாப்பிட்ட பழத்தில் என்னதான் மகிமை இருக்கின்றது. இதனுடைய மகத்துவம்தான் என்ன? மர்மம்தான் என்ன என்பதையும் நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதாம், ஏவாள் இருவரும் சாப்பிட்ட பழத்தின் பெயர் ஆங்கிலத்தில் புரூட் ஆப் நாலெட்ஜ் (Fruit of knowledge), தமிழில் அறிவுக் கனி என்பதாகும்.

அதாவது, உலகத்தைப் படைத்த தேவன் ஆதாம், ஏவாள் இருவரையும் படைக்கும் பொழுது அவர்கள் இருவரது அறிவையும் எடுத்து, அதைப் பழமாக்கி தோட்டத்திலுள்ள ஒரு மரத்திலே வைத்துவிட்டு ஆதாம், ஏவாள் இருவரையும் முட்டாள்களாக உலாவ விட்டிருந்தார். அவர்கள் இருவரும் சாத்தானின் பேச்சைக் கேட்டு அறிவுக்கனியைச் சாப்பிட்டதால் அறிவாளி ஆகிவிடுகிறார்கள்.

adam-eve.jpgஒரு மனிதன் அறிவாளியாக ஆவது என்பது இயேசுவின் கணிப்பின்படி பாவியாக ஆவது என்பதாகும். எனவேதான் இந்தப் பாவத்தைப் போக்கி, அதாவது அவர்களுடைய அறிவைப் போக்கி மனிதர்களை மீண்டும் பழைய நிலைக்கு, அதாவது அவர்களை முட்டாள்களாக மாற்றுவதற்காகவே இயேசு பூமிக்கு வந்தார் என்பது தெளிவாக நமக்குத் தெரிய வருகின்றது.

மத்தேயு (3:11) மனந்திரும்புத லுக்கென்று நான் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கிறேன்.

ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து மக்களிடமுள்ள பாவத்தைப் போக்குவதாகக் கூறி ஜனங்களிடையே பிரச்சாரத்தை ஆரம்பித்தார். பாவத்தைப் போக்கக்கூடிய ஞானஸ்நானம் என்றால் என்ன? ஜலத்தைக் கொண்டு ஞானஸ்நானம் செய்வது என்பது எப்படி என்ற கேள்வி எழக்கூடும்.

ஞானம் என்றால் அறிவு. ஸ்நானம் என்றால் கழுவுதல், குளிப்பாட்டுதல் என்று பொருள். ஒரு மனிதனுடைய பாவத்தைப் போக்க அதாவது அவனுடைய அறிவைப் போக்க, அவனுடைய அறிவை ஜலத்தினாலே கழுவி, குளிப்பாட்டி ஞானத்தை ஸ்நானம் செய்து முட்டாளாக்குவதுதான் இயேசு தேர்ந்தெடுத்த வழி. இதே முறைதான் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எவ்வளவோ முயன்றும் இயேசுவால் பன்னிரெண்டு பேர்களை மட்டுமே சீடர்களாக ஆக்கி முழு முட்டாள்களாக மாற்ற முடிந்தது. பதிமூன்றாவது நபரான யூதாசை இயேசுவால் பாதிதான் முட்டாளாக மாற்ற முடிந்தது. பாதி அறிவாளியாக இருந்தான். பாதி அறிவாளியாக இருந்த யூதாஸ் இயேசுவின் செயலை பிலாத்து மன்னனிடம் காட்டிக் கொடுத்தான்.

மாற்கு (15:15) அப்பொழுது பிலாத்து இயேசுவை வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

மாற்கு (15.24) அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.

மாற்கு (15:37) இயேசு மகா சப்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.

பூமிக்கு வந்த நோக்கம் முழுமையாக முடிவடையாமல் இறக்க நேரிட்டதால், ஆவி வடிவமெடுத்து இயேசு தன்னுடைய பன்னிரெண்டு சீடர்களைச் சந்தித்து, தாம் பூமிக்கு வந்த நோக்கத்தை அவர்கள் மூலம் நிறைவேற்றுவதற்காக அவர்களிடம் வந்து கீழ்க்கண்டவாறு கட்டளையிடுகிறார்.

மத்தேயு (28:18) இயேசு சமீபத்தில் வந்து அவர்களை நோக்கி,

மத்தேயு (28:19) நீங்கள் புறப்பட்டுப் பேய், சகல ஜாதிகளையும், சீஷராக்கி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,

மத்தேயு (28:20) நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேஷம் பண்ணுங்கள்.

அவர்களுடைய ஞானத்தை ஸ்நானம் செய்து அவர்களுடைய பாவத்தை, அதாவது அறிவைப் போக்கி, புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாற்றுங்கள். முட்டாள்களாக மாறிவிட்டார்களா? என்பதைக் கண்டுகொள்வதற்குச் சில வழிமுறைகளையும் கூறினார்.

மாற்கு (16:16) விசுவாசமுள்ளவனாகி ஞானஸ் நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்.

மாற்கு (16:17) விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்க ளாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்.

மாற்கு (16:18) சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றையும் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது.

மனிதர்களுக்கு அறிவை உண்டாக்கிய சாத்தானாகிய பிசாசுவை விரட்டியடிப்பார்கள். பாம்புகளைக் கையிலே பிடிக்கச் சொன்னாலும் பிடிப்பார்கள். சாவைத் தரக்கூடிய விஷத்தைக் குடித்தாலும் சாகமாட்டார்கள் என்று சொன்னாலும் நம்புவார்கள். இதில் எதையேனும் நம்ப மறுத்தால் அவர்களுடைய ஞானம் சரியாக ஸ்நானம் செய்யப்படவில்லை. அவர்கள் புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாறவில்லை என்பதை நாம் எளிதாகக் கண்டு கொள்ளலாம் என்று இயேசு எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அதன்பின்,

லூக்கா (24:51) அவர்களை ஆசீர்வதிக்கையில் அவர்களை விட்டுப் பிரிந்து பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.

மாற்கு (16:20) அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள்.
கொர்த்தியர் (1:23) நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்.

ரோமர் (6:6) நாம் இனி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடிக்கு

ரோமர் (6:12) சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக மாற்கு (1:4) யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தான்.

மாற்கு (1:8) நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன் என்று பிரசங்கித்தான்.

இவ்வாறாக உலக முழுவதும் பல இடங்களையும் சுற்றி பல்வேறு விதமாகப் பிரசங்கம் செய்து அனைத்து ஜாதியிலும் அநேகம் பேருக்கு ஞானஸ்நானம் செய்து புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாற்றினார்கள். தன் வாழ்நாளிலேயே இயேசுவால் பன்னிரெண்டு பேர்களை மட்டுமே பாவத்தைப் போக்கிப் புனிதர்களாக மாற்ற முடிந்தது. ஆனால், இயேசுவால் புனிதர்களாக மாற்றப்பட்ட பன்னிரெண்டு சீடர்களும் உலக முழுவதும் பெரும்பான்மையான மக்களைப் புனிதர்களாக, அதாவது முட்டாள்களாக மாற்றி இயேசுவுக்குள் பலப்படுத்தினார்கள். ஒருவன் ஸ்நானம் பெற்று முழுமையான இயேசுவின் விசுவாசியாக அதாவது கிறித்தவனாக மாறிவிட்டான் என்று சொன்னால் அவன் ஒரு முழு முட்டாளாக மாறிவிட்டான் என்றே அர்த்தம்.

ரோமர் (5:14) ஆதாம் முதல் மோசே வரைக்கும் ஆதாமின் மீறுதலுக்கொப்பாய் பாவஞ் செய்தவர்களையும் ஆட்கொண்டது.

1. யோவான் (3:8) பாவஞ் செய்கிறவன் பிசாசினாலுண்டாகிறான். ஏனெனில், பிசாசானவன் ஆதி முதல் பாவஞ் செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். ரோமர் (16:20) சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்.

ஆதியிலேயே சாத்தானுடைய செயல்பாடு களால் பூமியில் பாவம் உண்டாயிற்று. அந்தப் பாவத்தைப் போக்கவே இயேசு பிறந்து வர வேண்டியதாயிற்று. சாத்தானால் உண்டான ஞானத்தை, ஸ்நானம் செய்து ஒவ்வொருவருடைய பாவத்தை அதாவது அறிவைப் போக்கி அவர்களை இயேசுவுக்குள் பலப்படுத்தினாலும் ஞானஸ்நானம் பெற்றவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பாவியாகவே அதாவது அறிவாளியாகவே பிறக்க ஆரம்பித்து, இதனால் ஞானஸ்நானம் பெற்று கிறித்துவின் விசுவாசியாக மாறிய ஒவ்வொரு குடும்பத்தாரும் தங்களுக்குக் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையை சர்ச்சுக்குக் கொண்டு சென்று அந்தக் குழந்தையின் ஞானத்தை ஸ்நானம் செய்து அதனுடைய பாவத்தை - அறிவைப் போக்கி இயேசுவின் விசுவாசியாக்கி, கிறித்தவனாக மாற்றி வீட்டுக்குக் கொண்டுவரும் நிகழ்ச்சியானது தொடர்ந்து நடந்து வருகின்றது என்ற விஷயம் எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆதாம், ஏவாள் காலத்திலிருந்தே இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை உண்மையென்று பைபிளும் ஒப்புக் கொள்கின்றது. அப்படியானால், பாவத்தை - அறிவை நிரந்தரமாகப் போக்கும் வழிதான் என்ன? அறிவை உண்டாக்கிய சாத்தானை நசுக்கி அழிப்பதுதான் அதற்கு ஒரே தீர்வு. அப்படியானால் சாத்தானை அழிப்பதற்கு இயேசு மறுபடியும் பிறந்து வரவேண்டுமே.  அதுவும் சீக்கிரமாய் வரவேண்டுமே.

(வெளி 22:20) இவற்றைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்.

சாத்தானை நிரந்தரமாக அழித்து, பூமியின் மேலுள்ளோரின் பாவத்தை அதாவது அறிவை நிரந்தரமாகப் போக்கி அவர்களை நிரந்தர முட்டாள்களாக மாற்றி இரட்சிக்க பரம பிதாவாகிய இயேசு மீண்டும் சீக்கிரமாய் பிறந்து வர தயார் ஆகிவிட்டார். பாவத்தை, அதாவது அறிவை நிரந்தரமாகப் போக்கிக் கொள்ள நீங்கள் தயாரா? இயேசுவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.

கிறித்தவர்களும், கிறித்தவ மதபோதகர்களும் மற்றவர்களைப் பாவிகளே என்று அழைப்பதற்கான காரணமும், இயேசு விரைவில் வருகிறார் என்று கூறுவதன் காரணமும் எல்லோருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 https://www.facebook.com/photo.php?fbid=1454006004834308&set=a.1410575435844032.1073741829.100006747669873&type=1

https://www.facebook.com/priya.natarajan.1447/posts/226377317554003?comment_id=465251&offset=0&total_comments=124&notif_t=feed_comment_reply

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

இயேசு யாருக்கு பலி கொடுக்கப்பட்டார்? தெய்வமில்லாமல் பலிபீடமில்லாமல் ஒரு ம்ருகம் வெட்டப்பட்டால் அது பலியன்று! யூதர்களிடம் ஜெஹோவா தகணபலி கேட்டார், பெற்றார்? அதேமாதிரி இயேசு பலியிடப்படவில்லை! மாறாக யூதர்களால் மதவிரோத நடவடிக்கைகளுக்கு குற்றம்சாட்டப்பட்டு ரோமர்களால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்! இயேசு ரோமர்களோடோ அல்லது யூத பூசாரிகளோடோ போரிடவும் இல்லை! போரிவே வீரமரணம் அடைவதும் பலியாகும்! ஆகவே இயேசு பலிதானியல்லர்! திருப்பலி என்னும் கிறிஷ்த்தவக்கோட்பாடு கற்பிதம்! யாருடைய பாவத்தையும் யாரும் சுமப்பது ஏற்பது சாத்தியமில்லை! வீரமரணம் அடைகிற பலிதானிகள் அழுது அரற்றி புலம்புவதும் இல்லை! இந்தப்பொய்யை நம்பினால் பல்லாண்டு முன்னே செத்தவர் எல்லாம் உயிரோடு எழுந்து ஹெவனுக்குப்போவர் என்பது ஏமாற்றுவேலை! இதை நம்புவதால் பயனில்லை!



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

தமிழினம் என்பது தவறு. திராவிட இனம் என்பதே சரி. ஏன்?

உருது மொழி என்பது ராணுவத்தில் சங்கேத பாஷைக்காக உருவான மொழி. ஒரு இனம் அந்த மொழியை பேசியது என்று எந்த வரலாறும் இல்லை. பின்பு எப்படி உருது மொழி பேசுபவர்கள் தமிழரில்லை என்கிறார் சீமான்?

மொழியை வைத்து இனத்தை அடையாளமே காண முடியாது. இந்தியாவில் பிறந்த ஒருவர் வேலைவாய்ப்பிற்காக ஐரோப்பா செல்கிறார். அவரின் பிள்ளைகள் அங்கு தான் வளர்கிறது. ஆங்கிலம் பேசுகிறது. ஒரு நாள் ஊருக்கு வருகிறார். அங்கேயே தங்குகிறார். அப்போது அவர்களின் பிள்ளைகள் ஆங்கிலம் தான் பேசும். அதற்காக அந்த பிள்ளை ஆங்கிலேயன். தமிழனில்லை என்று கூற முடியுமா?

உருது மொழியும் அப்படியே. ராணுவ பாஷை, வியாபாரம் போன்றவற்றிற்கு உருவான ஒரு மொழியை படித்தவர்கள், அதை அப்படியே பேச ஆரம்பித்து விட்டார்கள். ஒருவனுக்கு பல மொழிகள் தெரியும் என்றால் அவனை எந்த இனம் என்பீர்கள்?

மொழியை வைத்து இனத்தைப் பிரிப்பது அடி முட்டாள்தனம்.

தமிழினம் என்று ஒன்று இல்லை. திராவிடர்களின் DNA வும், ஆஸ்திரேலிய பழங்குடியின் DNA வும் ஒன்று என்கிறது ஆய்வு. that means நானும் அவனும் ஒரே இனம் தான். அப்படி உருவானது தான் திராவிட இனம் என்ற பதம். ஏன் குறிப்பிட்ட சில மாநிலங்களை காட்டி திராவிடர்கள் என்கிறோம். ஏனெனில் நமக்கு எல்லாம் ஒரே DNA இருப்பதால் தான். இது நிரூபணம் ஆன ஒன்று. ஆரியன் - திராவிடம் என்று ஏன் கூறுகிறோம். ஆரியனின் DNA வேறு, நம் DNA வேறு. Google ல் தட்டினால் அந்த ஆய்வு அறிக்கையை பார்க்கலாம்.

ஒன்றாக இருந்த இனம் ஆரிய வருகைக்கு பின்பு, தமிழில் சமஸ்கிருத சொற்களை கலந்து பேசி, நாளடைவில் அவர்கள் பேசியது வேறு மொழி ஆகியது என்பதே எதார்த்தம். அப்படி தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம், பங்கா போன்ற மொழிகள் உருவானது. மன்னர்கள் ஆண்ட நிலப்பரப்பை வைத்து இனத்தைப் பிரிப்பது போன்ற அடி முட்டாள் தனம் எதுவும் உண்டா?

எனவே இனம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் ஒரே DNA வை கொண்டதன் அடிப்படையில் தான் பிரிக்கப்படுகிறது.

தமிழ் மொழி பேசுவதால் நாம் தமிழினம் கிடையாது. தமிழ் என்பது ஒரு மொழி. அதை எந்த இனமும் பேசலாம். எனவே மொழியை வைத்து இனத்தை பார்க்க முடியாது.

திராவிட இனம் என்பதே சரியான ஒன்று.

ஆதாரம் : https://www.google.com/…/how-genet…/article19090301.ece/amp/

யாசிர்



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 முட்டாள்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டிய கட்டாயம். 
"இப்படித்தான் ஒரு முறை நேரு சொன்னார்... படேல் சொன்னார்.... பெரியார் சொன்னார்... என்று வாய்வழியாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டவை வரலாறாகா. அவை எழுத்து மூலமாகவும் பகிர்ந்து கொள்ளப்பட்டாலும் வரலாற்றுச் சான்றுகளாக ஏற்றுக் கொள்வதற்குத் தயக்கம் காட்டப்படும். இது போன்ற தகவல்கள் ஏற்கனவே முதல்வகை தரவுகள் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளை உறுதி செய்யும் இரண்டாம் வகைத் தரவு ஏற்றுக் கொள்ளப்படுமே தவிர, இவற்றை மட்டும் வைத்துக் கொண்டே தற்கால வரலாற்றைப் படைக்க முடியாது. 
பண்டைய கால வரலாற்றைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு - புத்தர், சங்கரர், ராமானுஜர் போன்றவர்களின் வரலாறுகளை - வாய்வழிக்கதைகளைத் தவிர நமக்கும் ஏதும் கிடைக்காததால் அவற்றில் சிலவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அவற்றையும் நாம் முன்னுக்குப்பின் முரணாக இருந்தால் புறம் தள்ளி விடுகிறோம். மாய மந்திரக்கதைகளையும் புறம் தள்ளி விடுகிறோம். 
ஆனால் தற்கால வரலாற்றை வாழ்வழித்தகவல் மூலம் கட்டமைப்பதை மூடர்கள் மட்டுமே செய்வார்கள்; அல்லது வாட்ஸ்ஸப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர்கள் செய்வார்கள்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard