மூலம்: ரிச்சர்ட் ஷேனிக் (Richard Schoenig)
தமிழில்: ஆர்.கோபால்
மொழிபெயர்ப்பாளர் முன்னுரை:
இந்தக் கட்டுரை கிறிஸ்துவ மதத்தைப் பற்றியது. இது ஏன் இங்கே ‘தமிழ்ஹிந்து‘வில் பிரசுரிக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழலாம்.
தமிழ்நாட்டில் பரவியுள்ள கிறிஸ்துவ இஸ்லாமியக் கலாசாரத்தின் விளைவாக பல இந்துக்களும் ஆதாம் ஏவாள் கொள்கையை நம்புபவர்களாக இருக்கிறார்கள். முதல் பாவம் என்பது கவிதைகளிலும் கதைகளிலும் சினிமாக்களிலும் பேசப்படுகிறது. முதல் மனிதர்களைக் குறிக்க ஆதாம் ஏவாள் என்ற பெயர்கள் பொதுவாகப் புழங்கும் பெயர்களாக ஆகிவிட்டன. “முதல் பாவம்”என்ற பெயரில் ஓர் ஆபாசத் திரைப்படம் எடுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. பரவலாகிவிட்ட இந்த யூதப் பழங்குடியினரின் புராணக் கதையை பெரும்பாலான நம் மக்கள் நம்பவில்லை என்றாலும், ஏதோ ஒரு ரீதியில் ஆதிமனிதனைக் குறிக்க இந்தச் சொற்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. இந்த முதல் பாவக் கொள்கை காரணமாகவே தெருமுனைகளிலும் தொலைக்காட்சி பெட்டிகளிலும் பல்வேறு கிறிஸ்துவப் பிரசாரகர்கள், “பாவிகளே!…” என்று நம்மைப் பார்த்துக் கத்துகிறார்கள். அவர்கள் உலகத்தில் உள்ள அனைவரையும்- ஒரு பாவமும் செய்யாத பச்சை குழந்தையிலிருந்து மகாத்மா காந்தி வரை எல்லோரையும்- பாவிகள் என்று ஏன் சொல்கிறார்கள் என்று நாம் அறிந்துகொள்வது தேவையான ஒன்று.
மற்றொன்று, பரவலாக இருக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமியத் தொலைக்காட்சிகளில் வெளிநாட்டினரும் நம்மக்களில் சிலரும் இந்த ஆதாம் ஏவாள் கதையை, தொடர்ந்து பிரசாரம் செய்துவருகின்றார்கள். இதனால், ஒரு சில இந்துப் பொதுமக்கள் ஆதம் ஏவாள் என்பவர்கள் இவர்கள் சொல்வது போல கடவுளால்6000 வருடங்களுக்கு முன்னால் படைக்கப்பட்டவர்கள் என்று நம்புகிறார்கள். இது இந்து மதக் கொள்கை அல்ல. மாறாக, இந்து மதப் புத்தகங்களின்படி, இந்தப் பிரபஞ்சம், வயது கணக்கிட முடியாத அளவு புராதனமானது. ஒவ்வொரு யுகமும் பல லட்சம் வருடங்கள் கொண்டது. கிரித யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகியவை பருவகாலங்கள் போல சுழற்சியாக வருகின்றன. இந்த நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு சதுர்யுகமாகிறது. 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம் என்று சொல்லப்படுகிறது. (ஒரு கிரித யுகத்தின் அளவு 1728000 வருடங்கள்).
கார்ல் சாகன் (Dr. Carl Sagan, 1934-1996) என்ற புகழ்பெற்ற வானவியல் இயற்பியலாளர் தனதுகாஸ்மோஸ் (cosmos) என்ற புத்தகத்தில், கூறுகிறார்:
“The Hindu religion is the only one of the world’s great faiths dedicated to the idea that the Cosmos itself undergoes an immense, indeed an infinite, number of deaths and rebirths. It is the only religion in which the time scales correspond, to those of modern scientific cosmology. Its cycles run from our ordinary day and night to a day and night of Brahma, 8.64 billion years long. Longer than the age of the Earth or the Sun and about half the time since the Big Bang. And there are much longer time scales still.” Carl Sagan further says: “The most elegant and sublime of these is a representation of the creation of the universe at the beginning of each cosmic cycle, a motif known as the cosmic dance of Lord Shiva. The god, called in this manifestation Nataraja, the Dance King. In the upper right hand is a drum whose sound is the sound of creation. In the upper left hand is a tongue of flame, a reminder that the universe, now newly created, with billions of years from now will be utterly destroyed. These profound and lovely images are, I like to imagine, a kind of premonition of modern astronomical ideas.” Sagan continues, “A millennium before Europeans were wiling to divest themselves of the Biblical idea that the world was a few thousand years old, the Mayans were thinking of millions and the Hindus billions”
– (source: Cosmos – By Carl Sagan p. 213-214).
இந்தப் பிரபஞ்சமும் இது போன்ற எண்ணற்ற அனந்த அனந்தப் (infinite) பிரபஞ்சங்களும் பிரம்மத்தில் முகிழ்த்து மறைகின்றன என்று வேதங்கள் கூறுகின்றன. எல்லாக் காலங்களுக்கும் வெளிகளுக்கும் அப்பாலும் அதனுள் உறைந்தும் பிரம்மம் இருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. எண்ணற்ற பிரம்மாக்கள் எண்ணற்ற பிரபஞ்சங்களை உருவாக்கியவண்ணம் இருக்கிறார்கள். தங்கள் காலம் முடிந்ததும் அந்த பிரம்மாக்கள் மறைந்து புதிய பிரம்மாக்கள் பிறக்கிறார்கள் என்று இந்து மதம் உரைக்கிறது. பிரம்மத்துக்குள் ஒடுங்கியுள்ளது வெளிப்படுகிறது என்று இந்து மதப் புத்தகங்கள் உரைக்கின்றன. ஆகவே ஆதாம் ஏவாள் என்ற சிறுபிள்ளைக்கதையை நாம் நம்புவது தவறு.
அறிவியற்பூர்வமாகவும் ஆதாம் ஏவாள் என்ற மனிதர்கள் இல்லை. தொடர்ந்து மாறிவரும் பரிணாமத்தில் இதுவரை குரங்கு, இதற்குப் பிள்ளை மனிதன் என்று சொல்வதும் தவறு. மேலும் பல்வேறு அறிவியல்களில் ஒன்றான பரிணாமவியலை கிறிஸ்துவமோ அல்லது இஸ்லாமோ ஒப்புக்கொள்வதும் இல்லை. ஆகவே பரிணாமவியலின்படி ஒருவரை மனிதன் என்று சொன்னாலும் அது ஆதாம் அல்லது ஏவாள் என்று கிறிஸ்துவமும் இஸ்லாமும் ஒப்புகொள்வதில்லை. ஏனெனில் பைபிள் சொல்லும்யாஹ்வே என்னும் தெய்வத்தால் களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டாலே ஆதாம். பரிணாமவியலின்படி தோன்றும் மனிதன் ஆதாம் அல்ல.
நமது இந்து மதப் புத்தகங்களுக்கும் அறிவியலுக்கும் புறம்பான, இப்படிப்பட்ட தவறான கருத்துகளை, ஊடகங்களின் இடைவிடாத பொய்ப் பிரசாரங்களின் காரணமாக இந்துக்களான நாம் உண்மையெனக் கருதிவிடக்கூடாது ஆகவே இந்தக் கட்டுரை, தொடர்ந்து ஒலித்துகொண்டு வரும் இப்படிப்பட்ட யூதப் பழங்குடி மக்களின் புராணக்கதைகளை வரலாறு என கருதிவிடக்கூடாது என்பதற்காகவும் இந்துக்கள் தெளிவு பெற வேண்டும் என்பதற்காகவும் மொழிபெயர்க்கப்பட்டதே அன்றி, கிறிஸ்துவ மதத்தின், அல்லது இஸ்லாமிய மதத்தின் கருத்துகளை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது அல்ல.