New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அப்போஸ்தலர் கட்டுக்கதை


Guru

Status: Offline
Posts: 24740
Date:
அப்போஸ்தலர் கட்டுக்கதை
Permalink  
 


அப்போஸ்தலர் பணி  வுல் அழைப்பு பெறல்
(திப 22:6 - 16; 26:12 - 18)
9: 1 இதற்கிடையில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் திருத்தூதர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி,2 இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார்.3 இவ்வாறு அவர் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது.4அவர் தரையில் விழ, சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார்.5அதற்கு அவர், ஆண்டவரே நீர் யார்? எனக்கேட்டார். ஆண்டவர், நீ துன்புறுத்தும் இயேசு நானே.6 நீ எழுந்து நகருக்குள் செல்: நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.7 அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர்.8 சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள்.9 அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.
அப்போஸ்தலர் பணி7
7 நான் தரையில் விழுந்தேன். அப்போது, சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? என்ற குரலைக் கேட்டேன்.8 அப்போது நான், ஆண்டவரே நீர் யார்? என்று கேட்டேன். அவர், நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே என்றார்.9என்னோடிருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்: ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை.10 ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்? என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கென குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும் என்றார்.11 அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை. என்னோடியிருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத் தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள்.1
அப்போஸ்தலர் பணி 26
பவுல் தம் அழைப்பை பற்றிக் கூறுதல்
12 இந்நோக்கத்துடன் நான் தலைமைக் குருக்களிடம் அதிகாரமும் அனுமதியும் பெற்றுக் கொண்டு தமஸ்குவுக்குச் சென்றேன்.13போகும் வழியில் நடுப்பகல் வேளையில், அரசே! கதிரவனை விட அதிகமாகச் சுடர் வீசிய ஒளி ஒன்று வானிலிருந்து தோன்றி என்னையும் என்னோடு வந்தவர்களையும் சுற்றி ஒளிர்ந்ததை நான் கண்டேன்.14 நாங்களனைவரும் தரையில் விழுந்தோம். எபிரேய மொழியில், சவுலே! சவுலே! ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? தாற்றுக்கோலை உதைப்பது உனக்குக் கடினமாயிருக்கும் என்று ஒரு குரல் ஒலித்ததைக் கேட்டேன்.15 அதற்கு நான், ஆண்டவரே நீர் யார்? என்று கேட்க அவர், நீ துன்புறுத்தும் இயேசு நானே.16 எழுந்து நிமிர்ந்து நில். என் ஊழியனாகவும் சாட்சியாகவும் உன்னை ஏற்படுத்தவே நான் உனக்குத் தோன்றினேன். நீ என்னைக் கண்டது பற்றியும் நான் உனக்குக் காண்பிக்கப் போவதைப்பற்றியும் சான்று பகர வேண்டும்.17 உன் மக்களிடமிருந்தும், பிற இனத்தவரிடமிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன்: பிற இனத்தவரிடமே உன்னை அனுப்புவேன்.18 நீ அவர்களை இருளிலிருந்து ஒளிக்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து கடவுளிடத்துக்கும் திரும்புமாறு அவர்கள் கண்களைத் திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்: என்னிடம் நம்பிக்கை கொண்டு தங்களைத் தூயோராக்கிக் கொண்டவர்களோடு உரிமைப்பேறு அடைவார்கள் என்றார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24740
Date:
Permalink  
 

அப்போஸ்தலர் பணி1 யூதாசை

16 அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது.17 அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.18 அவன் தனது நேர்மையற்ற செயலுக்கு கிடைத்த கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு அவன் தலைகீழாய் விழ, வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போயின.19 இது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது. அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் அக்கலிதமா என வழங்குகின்றார்கள். அதற்கு இரத்தநிலம் என்பது பொருள்.20 திருப்பாடல்கள் நூலில், அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக! என்றும் அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்! என்றும் எழுதப்பட்டுள்ளது.

மத்தேயு 27

யூதாசின் தற்கொலை
(திப 1:18 - 19)

3 அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,4 ' பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ' என்றான். அதற்கு அவர்கள், ' அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ' என்றார்கள்.5 அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.6 தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ' இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ' என்று சொல்லி,7 கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள்.8 இதனால்தான் அந்நிலம் ' இரத்த நிலம் ' என இன்றுவரை அழைக்கப்படுகிறது.9 ' இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து10 ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard