New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "நான் ஏன் முஸ்லிம் அல்ல" - இப்னு வர்ராக்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
"நான் ஏன் முஸ்லிம் அல்ல" - இப்னு வர்ராக்
Permalink  
 


WHY I AM NOT A MUSLIM ..






*

 

WHY I AM NOT A MUSLIM

நூலாசிரியர்: IBN WARRAQ 
PROMETHEUS BOOKS
59. John Glenn Drive
 Amherst,
New York

1995





*
R. JOSEPH HOFFMANN 
WESTMINISTER COLLEGE, OXFORD
என்பவர் எழுதிய முன்னுரையிலிருந்து ....



*


இந்த நூல் ஒரு நீண்ட பயணம் பற்றியது; அந்தப் பயணம், இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து அதன் நம்பிக்கைகளில் ஊறி, அதன்பின் ஒரு சிலரால் 'வெள்ளைக்காரத்தனம்' என்று சொல்லப்படும் மேற்கத்திய 'திறந்த மதம்' என்ற அமைப்பில் வாழ்ந்து, அந்த வாழ்க்கையால் பிறந்த ஐயங்களின் ஊடே பயணித்து, இறுதியில் மத மறுப்பு என்னும் புள்ளியைப் பெற்ற பயணம்.

*

இது போன்ற பயணங்கள் எல்லாமே மிகவும் தனிமைப் படுத்தப்பட்ட பயணங்களே!

*

இந்த 'மதப் பயணங்களில்' செல்பவர்கள் தாங்கள் சொல்வதையெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஒரு குழு தன்னைச் செவி மடுப்பதாகவும், புரிந்து கொள்வதாகவும் நம்புகிறார்கள்.



*
DEDICATION

மதப் பாசிஸத்தையும் மீறி
நான் பெற்ற
என் தாய், மனைவி, சகோதரி, என் மகள்கள்
அவர்களுக்காக ...

*

ஆசிரியரின் 
முன்னுரையிலிருந்து ...


*

இன்று தன்னை ஒரு இஸ்லாமிய நாடாகச் சொல்லிக்கொள்ளும் நாட்டில் நான் ஒரு இஸ்லாமியனாகப் பிறந்து வளர்ந்தேன்.


*
என் தாய்நாட்டின் மொழியைக் கற்றுக் கொள்வதற்கு முன்பே நான் அராபிய மொழியில் எதுவும் புரிந்து கொள்ளாமலேயே குரானை வாசிக்கக் கற்றுக் கொண்டேன். ஆயிரக்கணக்கான முஸ்லீம் குழந்தைகளுக்கு உரிய விஷயம்தான் இது.

*

சிந்திக்க ஆரம்பித்த போது மதங்கள் என் மீது ஏற்றி வைத்தவைகளை நான் ஒதுக்க ஆரம்பித்தேன். இப்போது நான் என்னைப் பற்றி நினப்பதெல்லாம், நான் ஒரு சமயத் தொடர்பில்லாத, மனித நேயம் மட்டும் கொண்டவன். எல்லா மதங்களுமே மனம் பிறழ்ந்தவர்களின் கனவுகள்; ஆய்வில் புறந்தள்ளப்பட வேண்டிய, எங்கும் எளிதாகப் பரவும் கனவுகள்தான் அவை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: WHY I AM NOT A MUSLIM ..
Permalink  
 


நான் இதுவரை எந்த ஒரு நூலும் எழுதியதில்லை. ஆனால் ஷல்மான் ருஷ்டி விவகாரத்திற்குப் பிறகுதான் இந்த நூலை எழுத வேண்டும் என்ற முயற்சி எனது மனத்தில் தோன்றியது. 1930-களில் பெரும்போருக்குப் பிறகு நாஸிஸம்,கம்யூனிசம், சுதந்திரப் போராட்டங்கள், சனநாயக அமைப்புகள், காலனிய எதிர்ப்பு போன்ற பல மாற்றங்களில் தாங்கள் எவ்வாறு பங்கெடுத்திருப்போம் என்ற நிலைப்பாடு என் வயதினருக்கு வழக்கமாக எழுவதுண்டு. இதுபோன்ற பெரிய நிலைப்பாடுகளில் நாம் எந்தப் பக்கம் இருந்திருப்போம் என்ற கேள்வி எப்போதும் எழுவதுண்டு. சல்மான் ருஷ்டி விஷயமும், இஸ்லாம் பரவும் விஷயமும் எனக்கு அத்தகைய ஒரு நிலைப்பாடை நான் எடுக்க வேண்டும் என்ற சூழலைத் தந்தன. அந்தச் சூழலில் விளைந்ததுதான் இந்த நூல். அந்த விஷய்ங்களில் என் நிலைப்பாட்டை சொல்வதே இந்த நூல்தான்.

1930-களின் நிலைப்பாடை எடுக்க முடியாதவர்கள் இன்று இரு விஷயங்களில் - ஒன்று சல்மான் ருஷ்டி பிரச்சனை, இன்னொன்று போர் மேகங்கள் குவிந்து கிடைக்கும் அல்ஜீரியா, சூடான், ஈரான், செளதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அல்லலுறும் இஸ்லாமியர், இஸ்லாமியப் பெண்கள், இஸ்லாமிய அறிஞர்கள், எழுத்தாளர்கள், சாதாரண மக்கள் - இந்த இரு விஷயங்களில் தத்தம் முடிவை எடுக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளனர். இந்த நூல் எனது அத்தகைய முயற்சியின் ஒரு போர்க்கால நடவடிக்கையே. இப்படியெல்லாம் ஒரு நூலை எழுத வேண்டுமா என்ற நினைப்பு எனக்கு வரும்போதெல்லாம் கடவுளின் பெயராலும் இஸ்லாத்தின் பெயராலும் அல்ஜீரியாவிலும், ஈரானிலும், துருக்கியிலும், சூடானிலும் நடக்கும் கொலைவெறிகள் என்னை இந்த நூலை விரைந்து முடிக்கத் தூண்டின.

*

இஸ்லாமுக்கு தோழர்களாக உருவெடுத்த மேற்கத்திய பத்திரிகையாளர்கள், அறிஞர்கள், கம்யூனிசத்திலிருந்து மனம் மாறியோர் என்று பலரும் கொஞ்சமும் பொருந்தாத, மேட்டிமைத்தனமான, சினம் தூண்ட வைக்கும் விதமாக இஸ்லாமுக்குப் பரிந்து பேச ஆரம்பித்தார்கள். ஆனால் மிக தைரியமான சில இஸ்லாமியர்கள் தொடர்ந்து சல்மானை ஆதரித்து வந்தனர். எகிப்தின் Rose al - Yousef என்ற பத்திரிகை 1994 ஜனவரி மாதம் Satanic Verses-லிருந்து சில பகுதிகளை தங்கள் பக்கங்களில் எழுதினார்கள்.

இந்த நூலுமே இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளைத் தீவிரமாக ஆராய்ந்து, சில நியாயமான எண்ணங்களை எழுப்பி, முழு நம்பிக்கையோடு இருக்கும் இஸ்லாமியக் கொள்கைகள் மீது ஒரு துளி ஐயத்தை எழுப்புவதுமாகும். இந்த நோக்கிற்காக குற்றம் சாட்டப்பட உள்ள நிலையில், நான் ஒரு மேற்கோளை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.

John Stuart Mill: 'நாம் மூடி மறைக்க விரும்பும் ஒரு செய்தி தவறானது என்று முன்கூட்டியே நாம் முடிவு செய்ய முடியாது; அப்படியே அது உண்மையாக இருந்தாலும் அப்படி மூடி மறைப்பது தவறானதே'.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ACKNOWLEDGMENTS அதிலிருந்து சில பகுதிகள்

 

*

நான் ஒன்றும் பெரிய அறிஞனோ, ஆராய்ச்சியாளனோ இல்லை. நான் எழுதுவதெல்லாமே என் சொந்த சரக்கு என்றும் சொல்லப்போவதில்லை. நான் கையாண்டிருப்பது எல்லாமே மெத்த படித்த அறிஞர்களின் கருத்துக்களே. அவைகளை வாசித்து, எல்லோருக்கும் புரியும்படிக்கு எளிதாக்கி இங்கே அளித்துள்ளேன். ஒன்று முழுவதுமாக அவர்களது எழுத்துக்களைத் தந்திருப்பேன்; இல்லை, அதை அவர்களது பெயர்களோடு என்னால் முடிந்தவாறு எளிதாக்கித் தந்திருப்பேன். நிச்சயமாக இந்த நூல் என் படைப்பல்ல.’முழுவதும் காப்பியடிக்கப்பட்ட ஒரு நூல்’ என்று யாரும் இந்நூலைப் பற்றிச் சொன்னால், அதை முழு மனதோடு ஒப்புக்கொள்வேன். அதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை.

*


Encyclopedia of Islam-ன் முதலிரு பதிப்புகளைப் பயன்படுத்தியுள்ளேன். அதிலும் முதல் பதிப்பே சிறிது ‘திறந்த புத்தகமாக’ இருப்பதாகக் கருதியதால் அதையே மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளேன். ஏனெனில், இரண்டாவது பதிப்பில் அரசியல், சமயக் குறுக்கீடுகளால் கருத்துக்களும், சொற்களும் தங்கள் முனைப்பை அதிகம் இழந்துவிட்டிருக்கின்றன. The Dictionary of Islam – இதிலும் முதலாம் பதிப்பே மிக்க பயனுள்ளதாயிருந்தது – அதே காரணங்களுக்காக!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முன்னுரையிலிருந்து
சில பகுதி
கள்

 

*

இந்த நூலை வாசிக்கும்போது சிலவற்றை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு கோட்பாட்டிற்கும், அதன் செயல் முறைக்கும் உள்ள வேற்றுமைகள்; இஸ்லாமியர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்; அவர்கள் எதை நம்பி எப்படியிருக்க வேண்டுமோ அப்படியில்லாமல் அவர்கள் நம்பிக்கைகளும் அதைக் கடைப்பிடிப்பதில் உள்ள வேற்றுமைகளும் – இந்த வேறுபாடுகள் எல்லாவற்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.


*

நாம் இஸ்லாம் 1, இஸ்லாம் 2, இஸ்லாம் 3 என்ற மூன்று வித இஸ்லாமைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் 1 -- நபியால் சொல்லிக்கொடுக்கப்பட்ட வேதம்.
இஸ்லாம் 2 -- ஹடித், ஷாரியத், இஸ்லாமியச் சட்ட திட்டங்கள் இவைகளின்படி மதாச்சாரியார்களால் புரிந்துகொள்ளப்பட்ட, வளர்த்தெடுக்கப்பட்ட, விளக்கப்பட்ட இஸ்லாம்.
இஸ்லாம் 3 -- இஸ்லாமிய நாகரீகம்; அதாவது இன்று முஸ்லீமகளால் உண்மையில் கடைப்பிடிக்கப்படும் இஸ்லாம்.

*

இந்த நூலில் இஸ்லாம் 1 & 2 மூலம் சொல்லப்படுவதற்குத் தொடர்பில்லாமலேயே இஸ்லாம் 3 அல்லது இஸ்லாமிய நாகரீகம் உயர வளர்ந்து நிலைபெற்றது என்பது தெளிவாகும்.இஸ்லாமிய தத்துவார்த்தங்கள், இஸ்லாமிய அறிவியல், இஸ்லாமிய இலக்கியப் படைப்புகள், இஸ்லாமிய கலை நுட்பங்கள் - இவை எல்லாமே இஸ்லாம் 1 & 2-களின் அடிப்படை இல்லாமலேயே வளர்ந்து செழித்தன. இஸ்லாமிய இலக்கியப் பாடல்களை எடுத்துக் கொள்ளுங்களேன். நபி தன் முதல் கால கட்டத்தில் இத்தகைய பாடல்களுக்கு எதிரானவராக இருந்தார். சுரா 26:224-ல் 'மனம்போனபடி இருப்பவர்கள் மட்டுமே இத்தகைய பாடல்களை நோக்கிச் செல்பவர்களாக இருப்பார்கள்' என்கிறார். மிஷ்கத் என்ற பழக்க வழக்கங்கள் என்ற பகுதியில் நபி, 'வயிறு முட்ட இப்படிப்பட்ட பாடல்களோடு இருப்பதைவிட சீழ்பிடித்த வயிற்றோடு இருப்பது சிறந்தது' என்கிறார். இத்தகையக் கருத்துக்களோடு உள்ள இஸ்லாம் 1 & 2 - இவைகளை பின்பற்றுவது மட்டுமே இருந்திருந்தால் அபு நுவாஸ் போன்று ஒயினைப் பாராட்டும் இலக்கியங்களையோ, மற்றும் அதிகமாக உள்ள ஒயினைப் புகழும் அராபிய இலக்கியங்களைக் காண முடிந்திருக்காது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இஸ்லாமிய கலைகளைப் பொறுத்தவரை இஸ்லாமிய அருட்பொருள் சொல்லகராதியில் (மி்ஷ்கத், 7, ch, 1, pt.1) ஓவியக்காரர்களும், மனித, மிருகங்களை வரைபவர்கள் எல்லோரும் சட்டத்திற்குப் புறம்பானவர்களாக நபி சொன்னதாக உள்ளது.

*


Ettinghausen எழுதிய Introduction to Arab Painting என்ற நூலில் இஸ்லாமிய ஹாடித்களில் ஓவியக்காரர்கள் மிகுந்த அளவு கண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் நம்மையெல்லாம் உருவாக்கிய கடவுளோடு படைப்பில் போட்டியிடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்நூலாசிரியர் மேலும், 'வேத நூல்களின்படி அத்தகைய ஓவியங்களுக்கு இடமே தரவில்லை'. நல்ல வேளையாக இத்தகைய பழைய இஸ்லாமியரின் வழக்கத்தை மீறி, புதிதாக மாறிய இஸ்லாமியர்கள் இந்தத் தடையை மீறியதால்தான் நமக்கு மிக அழகான பெர்ஷியன், மொகல் சின்னச் சித்திரங்கள் பலவும் கிடைத்தன.

*


கலை நுணுக்கங்கள், தத்துவங்கள், அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாமே அரேபியாவில் இல்லாது போயின. எப்படியோ இலக்கியப் பாடல்கள் மட்டும் சிறிதளவாவது வந்தன.

*


Byzantine and Sassaninian art - இவைகள்தவிர வேறு எந்த அரேபிய கலைகளும் வளராது போயின.

*


பெண்கள், காஃபிர்கள், நம்பிக்கையற்றவர்கள், மதத்தைக் கேள்விக்குட்படுத்துபவர்கள், ஆண்-பெண் அடிமைகள் நடத்தப்படும் முறைகள் பேச்சளவிலும் செயலளவிலும் மிகவும் கீழான நிலையில் இருந்தன. இதற்குக் காரணம் குரானும், இஸ்லாமிய தீர்ப்பாளர்களால் சொல்லப்பட்ட விளக்கங்களுமே காரணம்.

*


இஸ்லாமிய சட்ட திட்டங்கள் முழுமையாக மனிதனைக் கட்டுப் படுத்தும் சட்டங்கள்; மனிதன் பிறப்பிலிருந்து சாகும் வரை உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப் படுத்தும் சட்டங்கள்.

*


பல நேரங்களில் இஸ்லாமிய ஷாரியாவைவிடவும் இஸ்லாமியப் பழக்கங்கள் கடுமையானவை. விருத்த சேதனம் (ஆண்குறியின் முன்தோலை எடுத்தல்) குரானில் சொல்லப்படாத ஒன்று. ஆனால் தொடர்ந்து, கட்டாயமாக இது நடைபெற்று வருகிறது. இதைப் பெண்களுக்குமாக சில இஸ்லாமிய நாடுகளில் நடந்தேறுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: "நான் ஏன் முஸ்லிம் அல்ல" - இப்னு வர்ராக்
Permalink  
 


தருமி said...

//நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதை அனுமதியளித்திருக்கிறார்களா?அதை எனக்கு தெளிவுபடுத்துங்களேன்.//

பதிவிலேயே கொடுத்துள்ளேன். இருந்தும் கேட்கிறீர்கள். கொஞ்சம் இங்கே: 
http://www.mwlusa.org/topics/violence&harrassment/fgm.html
Um Atiyyat al-Ansariyyah said: A woman used to perform circumcision in Medina. The Prophet (pbuh) said to her: Do not cut too severely as that is better for a woman and more desirable for a husband. (!!!!!)

This is known to be a "weak" hadith in that it does not meet the strict criteria to be considered unquestionable (classified as mursal, i.e. missing a link in the chain of transmitters in that none was among the original Companions of the Prophet.) In addtion, it is found in only one of the six undisputed, authentic hadith collections, that is in the Sunan of Abu Dawud (Chapter 1888). According to Sayyid Sabiq, renowned scholar and author of Fiqh-us-Sunnah, all hadiths concerning female circumcision are non-authentic.
எப்படி இஷ்டத்துக்கு இது வேணும் இது வேண்டாம் அப்டின்னு முடிவு பண்றீங்களோ .. தெரியலை!!


http://www.jannah.org/genderequity/equityappendix.html
While the Prophet (P) did not explicitly ban this practice, his words project agreat deal of sensitivity to the instinctive needs of females and their matrimonal happiness and legitimate enjoyment.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Chapter I

THE RUSHDIE AFFAIR


*

14 பிப். 1989-க்கு முன்னால் ..

1280-ல் பாக்தாத்தில் ஒரு யூத மருத்துவரும் தத்துவஞானியுமான Ibn Kammuna என்பவர் எழுதிய Examinations of the Three Faiths என்ற நூலில் மூன்று யூத மதங்களைப் பற்றி எழுதியவர் முகமது நபியை எவ்வாறாக ஒரு தூதராகக் கொள்வது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்காக அவரை தீயில் எரிக்கப்பட வேண்டும் என்று எமிர் ஒரு தீர்ப்பளிக்க, ஆனால் அவர் எப்படியோ அந்த தண்டனையிலிருந்து தப்பி விட்டார். (4)

இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகளை நாம் நிறைய காண முடியும்.

1961-63-ல் இந்திய தூதுவராக இருந்த அமெரிக்கர் John Kenneth Galbraith தன் செல்ல பூனைக்கு 'அஹமது' என்று பெயரிட்டு வைத்திருந்தார். அதுவும் முகமதின் மற்றொரு பெயர். அந்த சமயத்தில் பெங்களூரிலிருந்து வந்த Deccan Herald 'முகமது என்ற முட்டாள்' என்று ஒரு சிறுகதை எழுத, அதனால் அந்த தினசரி அலுவலகம் எரிக்கப் பட்டது. 'சமீபத்தில்' ஷார்ஜாவில் 'The Ants That Eat Corpses' என்ற மலையாள நாடகம் முகமது பற்றிய வசனம் வந்ததால் அதை நடத்தியவர்களுக்குச் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது.

Daniel Pipes என்பவர் எழுதிய The Rushdie Affair என்ற நூலில் இதுபோன்ற பல நிகழ்வுகள் - இஸ்லாமிய எழுத்தாளர்கள், அறிஞர்கள் பலருக்கும் நேர்ந்தவைகள் - கொடுக்கப்பட்டுள்ளன.(4)

*

1937-ல் எழுதப்பட்டு, 1974-ல் மட்டுமே பதிப்பிக்கப்பட்ட Dashti என்பவரின் 'இருபத்தி மூன்று ஆண்டுகள்' ( நபி தூதுவராகச் செயல்பட்ட 23 ஆண்டுகள் ) என்ற நூல் 1980-1986 வரையிலும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக விற்கப்பட்ட அந்த நூலில் -

*
பகுத்தாயும் அறிவினை ஆதரித்து, கண்மூடித்தனமான நம்பிக்கைகளைக் கண்டிக்கிறார். அந்த வகை நம்பிக்கைகள் அறிவு மிக்கவர்களின் மூளையின் கூர்மையைக் கூட மழுக்கடிக்கின்றன.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குரானின் மொழிநடை பற்றிக் கூறுகையில், குரானின் வாசகங்களின் அமைப்பும் நடையழகும் மிக உயர்ந்தவை அல்ல; இதைப் போன்றோ இதைவிட மேலாகவோ இன்னொரு கடவுள் நம்பிக்கையாளர்களால் எழுத முடியக்கூடியதே. (5)

*
குரானில் நூற்றுக்கும் அதிகமாகவே தவறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

* குரானில் புதிதாக ஏதும், அதுவரை சொல்லப்படாதவைகள் ஏதும் சொல்லப்படவில்லை.

*
இஸ்லாமில் சொல்லப்படும் கடமைகளும், சமயச் சார்புள்ளவைகளும் ஏற்கெனவே இருந்துவந்த பாகனிய அராபிய, யூத வழக்கங்களே.

*
நபியின் வழித்தோன்றல்களுக்கு கொலை செய்வதைக் கூட இஸ்லாமியக் கடமையாகக் கூறப்பட்டுள்ளது. (5)

*
Pipes என்பவர் தன் நூலில் சொல்வது: முமார் அல் கடாபி என்ற லிபியன் தலைவர்
வெளிப்படையாக குரானைப் பற்றியும், நபியையும் பற்றி் சொன்னவைகள் இதுவ்ரை சொல்லப்பட்டவைகளை விடவும் மிகவும் மோசமான கடவுள் தூஷணமாக இருக்கும். (7)

*
Farah Fada அவரது 'NO to Sharia' என்ற தன் நூலில்: சமயங்களும் அரசியலும் தனித் தனியே கையாளப்பட வேண்டும்; ஏனெனில் இஸ்லாமால் ஒரு மதச்சார்பற்ற, தற்காலத்திற்கேற்ற அரசாங்கத்தை நடத்த முடியாது. (8)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பிப். 14, 1989-க்குப் பிறகு ...

ஈரானிய கோமேனி கூறியவைகள்: "புகழ் பெற்ற இஸ்லாமிய அகராதி ஜிகாட் என்பதை 'முகமதின் கொள்கைகளை நம்பாதவர்களுக்கு எதிராக எழுப்பப்படும் ஒரு யுத்தம். குரானில் சொல்லப்பட்டது போல் அது ஒரு தெய்வீகக் கடமை; இஸ்லாம் பரவுவதற்கும், இஸ்லாமியரிடம் உள்ள தீமைகளை வேரறுக்கவும் பயன்படும்'.(12)

*
இப்பகுதியில் ஆசிரியர் ரஷ்டிக்கு ஆதரவாகவும்,எதிராகவும் பேசிய பலரின் கூற்றுக்களைத் தொகுத்தளிக்கிறார். இறுதிப் பத்தியில்:படைப்பைப் பொறுத்தவரையில் விவிலியமும் குரானும் ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டதைப் பற்றிச் சொல்கின்றன. ஆனாலும் பல கிறித்துவர்கள் அறிவியல் சொல்லும் பரிணாமக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தங்கள் நம்பிக்கைகளில் ஆதாமும் ஏவாளும் தங்கள் முதல் பெற்றோர்கள் என்பதை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். விவிலியத்தில் சொல்வது போல் நம் 'முதல் பெற்றோர்கள்' என்பதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அந்த 'முதல் காலடியைக்' கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை. (33)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மு மாலிக் said...

தருமி,

ருஷ்டி புத்தகத்தின், ஆறாம் அத்தியாத்தின் சில பக்கங்களில் வரும் வரிகளை கவனிக்க. இதில்,Jahilia எனும் நகரில் "The Curtain" எனும் விபச்சார விடுதியில் நடக்கும் சம்பவங்களெனக் கூறப்பட்டுள்ளவைகளை கவனிக்க. "The girls of The Curtain" என்று தொடங்கும் பத்தியிலிருந்து அனைத்தும், நான் கூறியதைத் தான் சொல்கின்றன. 

எடுத்துக்காட்டாக ஓரிரு வரிகளை நான் சுட்ட வேண்டுமானால், இதோ....

"
How many wives? Twelve, and one old lady, long dead. How many whores behind The Curtain? Twelve again; and, secret on her
black--tented throne, the ancient Madam, still defying death. Where there is no belief, there is no blasphemy. Baal told the Madam of
his idea; she settled matters in her voice of a laryngitic frog. "It is very dangerous," she pronounced, "but it could be damn good for
business. We will go carefully; but we will go."

"

மற்றொரு வரி ...

"
When the news got around Jahilia that the whores of The Curtain had each assumed the identity of one of Mahound's wives,...
"



"
The
oldest, fattest whore, who had taken the name of "Sawdah",...
"

"
The whore "Hafsah" grew as hot-tempered as her namesake ...
"

"
...becoming "Umm Salamah the Makhzumite" and ...
"

"
And there was a "Zainab bint
Jahsh", and a "Juwairiyah", named after the bride captured on a military expedition, expedition, and a "Rehana the Jew", a "Safia" and a "Maimunah",
"

(நான் காசுக் கொடுத்து வாங்கி அதைப் படித்து, ருஷ்டிக்கும் பதிப்பகத்தாருக்கும் லாபம் தர விருப்பமில்லாததால், ஒரு pirated காப்பியை இணையத்தின் மூலமாக மட்டுமே படித்ததால், பக்க எண் தெரியாது. )

மிக வெளிப்படையாகவே அவரது புத்தகத்தில் இவ்வாறு பாத்திரங்கள் உருவாக்கப்பட்டும் சொல்லப்பட்டும் இருந்தும், நீங்கள் அவைகளைப் பற்றி வினா எழுப்புகிறீர்கள்..

அவர் புத்தகத்தினைப் படிக்காமலேயே, அவரது ரசிகராகவும், அவரது ரசிகர்களின் ரசிகராகவும் இருப்பது எதனால் ? சிந்தனை ஒருமைப்பாட்டினாலா ?

தருமி said...

//ருஷ்டி புத்தகத்தின், ஆறாம் அத்தியாத்தின் சில பக்கங்களில் வரும் வரிகளை கவனிக்க.//

நான் காசுக்கு வாங்கிய புத்தகத்தில் இதை வாசித்துக் கொள்கிறேன்.

இன்னொன்று .. அதைச் சொன்னாலும் நீங்கள் கேட்கப்போவதில்லை; இருந்தும் … 

ஏறத்தாழ 20 வருடங்களுக்கு முன்னாலிருக்கும் என்று நினைக்கிறேன். Irving Wallace என்பவர் எழுதிய Seven minutes என்ற கதையை வாசித்தேன். ஈசா தன்னோடு பாலியல் உறவு கொள்வதாக தான் ஒரு கனவு கண்டதாக ஒரு பெண் .. இப்படி ஒரு கதை; அந்த நூலை தடை செய்து விடுகிறார்கள்; அதற்காக அதன் ஆசிரியர் வழக்கு தொடுக்கிறார். வழக்கில் வென்று விடுவாரென நினைக்கிறேன். இதுதான் அக்கதை.

இந்த நாவலை நான் ஒரு “நல்ல” மத நம்பிக்கையாளனாக, ஒரு கிறித்துவனாக இருந்தபோது படித்தேன். படிக்கும்போது நெருடல் .. ஆனாலும் படித்து முடித்தபின் யாருக்கும் "நான் பட்வா கொடுக்கவில்லை". தூர எறிந்துவிட்டு அடுத்த புத்தகத்தை எடுத்தேன்.

ஏனெனில் “என் கடவுள்” தன்னைக்காத்துக்கொள்ளும் வலு உடையவர் என்பது எனக்குத் தெரியும். அவரைக் காக்க நான் யாரையும் மிதிப்பேன்; கொல்லுவேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்க வேண்டியதில்லை. “என் கடவுள்” மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. இது போன்ற’வெத்துக்கதைகள்’ “என் கடவுளை” ஒன்றும் செய்துவிட முடியாது; என் ஆழ்ந்த நம்பிக்கையையும் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற நம்பிக்கையிருந்தது எனக்கு. “என் கடவுளை”க் காக்க நான் யாரிடமும் போரிடத் தேவையில்லை என்பது எனக்குத் தெரியும். (ஆபிதின் பக்கங்களில் அப்பதிவர் சொல்வது போல்: //அவனிடம் நான் கொண்டுள்ள நேசம் அளவில்லாதது. ‘Why I am not a Muslim?‘ படித்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டான்!// என்பது மாதிரிதான்.)

கிறித்துவத்திற்கு எதிராகவும் எத்தனையோ புத்தகங்கள், திரைப்படங்கள். அங்கங்கே சில அலைகள் .. அவ்வளவே. ஆனால் சல்மானுக்கு கொலைத்தண்டனை. அதனால் நடந்தது … அவரது புத்தகத்தின் (நீங்கள் வாங்காவிட்டாலும் .. ) அதிக விற்பனை. Midnight children என்ற அவர் கதையை வாசிக்க ஆரம்பித்து முடியாமல் விட்டுவிட்ட நான் இப்போது இந்த புத்தகத்திற்குக் காசு கொடுத்து வாங்குகிறேன். 

இதையொட்டிய என் கேள்வியை 22வது கேள்வியாக என் பழைய பதில் கேட்டுள்ளேன். வாசித்துக் கொள்ளுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வால்பையன் said...

பூமி உருண்டை என்பதற்கு குரானில் இன்னொரு ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்கள். குரானில் 18 ஆவது அத்தியாயம் வசனங்கள் 84 லிருந்து 98 வரை துல்கர்னைன் என்ற ஒரு மன்னனின் பயணத்தைப்பற்றி விவரிக்கிறது. அதாவது அந்த மன்னன் ஒரு வழியில் பயணிக்கிறான், வழியில் ஒரு சமுதாய மக்களை காண்கிறான் அங்கு சூரியன் சேறு நிறைந்த நீரில் மூழ்குகிறது, தொடர்ந்து செல்கிறார் மீண்டும் சூரியன் உதிப்பதை காண்கிறார். இது தான் அந்த பதினைந்து வசனங்களின் சாரம். பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண்கிறாரென்றால் பூமி உருண்டையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம் எனவே இந்த வசனங்கள் பூமி உருண்டை என்பதை உணர்த்தி நிற்கிறது என்கிறார்கள். பூமி உருண்டையாக இருந்தாலும் நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த மன்னர் நேர் கோட்டில் தொடர்ந்து சென்றதால் பூமி உருண்டையாயிருக்கும் பட்சத்தில் அவ்வாறு காணமுடிந்தது என்று சாதிக்கிறார்கள். ஆனால் குரானில் அவர் ஒரே திசையில் சென்றார் என கூறவில்லை என்பதே உண்மை. 18:85 ம் வசனம் அவர் ஒரு வழியில் சென்றார் என்றும் 18:89 ம் வசனம் பின்னர் ஒரு வழியில் சென்றார் எனவும் இருக்கிறது.


பூமி உருண்டை என்று குரான் கூறியிருக்கிறது என்று நிரூபிப்பதற்காக தோதுப்பட்ட வசனங்களிலெல்லாம் வலிந்து அறிவியலை ஏற்றியிருக்கிறார்கள். பூமியின் வடிவத்தைப்பற்றி நேரடியாக எதுவுமே கூறாத வசனங்களை, சாதாரண காட்சிகளை விவரிக்கும் வசனங்களை பூமி உருண்டை என ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டபின்னான் காலத்தில் நின்றுகொண்டு பூமி உருண்டையாக இருந்தால் தான் இப்படி இருக்கமுடியும் எனவே இவ்வசனங்கள் பூமி உருண்டை என கூறுவதாக டம்பமடிக்கும் இவர்கள்; பூமியின் வடிவம் பற்றி கூறும் குரான் வசனங்களுக்கு வேறு விதமாக விளக்கமளிக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல அனேக இடங்களில் பூமியின் வடிவத்தை ஒரே மாதிரியாக வர்ணிக்கிறது குரான். 2:22; 13:3; 15:19; 20:53; 43:10; 50:7; 51:48; 55:10; 71:19; 78:6; 79:30; 84:3; 88:20; 91:6 குரானில் வரும் இந்த வசனங்களெல்லாம் ஒரே மாதிரியாக பூமியை தட்டை என பொருள் கொள்ளும்படி பூமியை விரித்திருப்பதாக கூறுகிறது. இவைகளையும் பூமி உருண்டை எனக்கூறுவதாக திரிக்கிறார்கள். விரிப்பு என்பதன் பொருளை பூமிக்கு எப்படி பொருத்துகின்றனர்? விரிப்பு என்றால் அவை சமதளத்தில் மட்டுமல்ல கோளத்தின் மீதும் பரப்பலாம் எனவே விரிப்பு என்ற உவமையின் மூலம் பூமி தட்டை என்பதை அல்ல உருண்டை என்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது என்று ஜல்லியடிக்கின்றனர். பூமி அதன் புவியியல் அமைப்பில் மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது அ) இன்னர் கோர் எனப்படும் உட்கரு ஆ) அவுட்டர் கோர் எனப்படும் வெளிக்கரு இ) மேண்டில் எனப்படும் மேலோடு. இதில் உட்கரு திடப்பொருளாகவும், வெளிக்கரு எரிமலைக்குளம்பாக திரவப்பொருளாகவும் இருக்கிறது. மேலோடு நாம் காணும் கடல், மலை, நிலம் என்று மேற்பரப்பாகவும் இருக்கிறது. இந்த மேலோட்டைதான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற விரிப்பாக ஆக்கியிருப்பதாக பொருள் சொல்கிறார்கள். பூமியின் மேலோட்டை குரான் விரிப்பாக குறிப்பிடுவதாகவே கொள்வோம். எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?

cont......

Thursday, December 24, 2009 12:55:00 PM

வால்பையன் said...

மேற்கூறிய விவரங்களெல்லாம் குரான் இறங்கிய வேளையில் மக்களுக்கு பூமி உருண்டை எனும் அறிவியல் தெரியாமல் இருந்ததாகவே எடுத்துக்கொண்டு விளக்கப்பட்டவை. ஆனால் பூமி உருண்டை எனும் அறிவு பன்னெடுங்காலத்திற்கு முன்பே மக்களிடம் இருந்தது என்பது தான் மெய். கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. கடலில் செல்லும் கப்பலும், கரைக்கு திரும்பும் கப்பலும் கரையிலிருந்து பார்க்கையில் கடலுக்குள் கீழ் வளைந்து செல்வதுபோலவும், கீழ் வளைவாக மேலேறி வருவதையும் கண்டு பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர். மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பூமி உருண்டை என‌ முத‌லில் கூறிய‌வ‌ர் பைலோலாஸ் எனும் கிரேக்கர் ஆண்டு கிமு 450. கிமு இர‌ண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த‌ எரோட்ட‌ஸ்த‌னிஸ் எனும் கிரேக்கர் பூமியின் சுற்ற‌ள‌வை தோராய‌மாக‌ க‌ண‌க்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய‌ துல்லிய‌மான‌ க‌ண‌க்கீடு 24902.4 மைல். அதே கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஹிப்பார்க்கஸ் என்பவர் பூமியை அட்சரேகை கடகரேகை எனும் கற்பனைக்கோடுகளால் பூமியை பிரித்தார். கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தாலமி எனும் எகிப்திய மாலுமி பூமியை வரைபடமாக வரைந்தார். இதன் பிறகு கிபி ஆறாம் நூற்றாண்டில்தான் அரேபியாவில் முகம்மது பிறக்கிறார். ஆனால் இஸ்லாமிய அறிஞர்களோ முகம்மதுவின் காலத்தில் பூமி உருண்டை எனும் அறிவு மக்களுக்கு இல்லை என்று இன்றும் வெட்கமில்லாமல் கூறித்திரிகிறார்கள்.

நன்றி செங்கொடி!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

CHAPTER II
THE ORIGINS OF ISLAM
IGNAZ GOLDZIHER:
இஸ்லாமிய வரலாற்றுக் குறிப்புகள் பல மாற்றுச் சிந்தனைகளின் தொகுப்பு. முகமது புதிய கருத்துக்களாக ஏதும் கூறவில்லை. மனிதன் இறையருளைப் பெற அவனுக்கு ஏற்கெனவே இருந்த வழிமுறைகளி்ல் பெரிதாக மாற்றம் ஏற்படுத்திவிடவில்லை.
அரேபிய நபி கூறியவைகள் ஏற்கெனவே இருந்து வந்த கருத்துக்களில் உள்ள சிறப்பானவைகளின் தொகுப்பாகும். யூத, கிறித்துவ, இன்னும் பிற பாரம்பரியங்களோடு ஏற்படுத்திக் கொண்ட தொடர்பால் அவருக்குக் கிடைத்தவைகளின் தொகுப்பே அது.
*
அரேபிய சிலை ஆராதனை:
குரானின் பல பகுதிகள் ஏற்கெனவே இருந்த சமய வழிமுறைகளின் மேல் பூசப்பட்ட இஸ்லாமிய (வார்னிஷ்) பூச்சுதான். (the Islamic varnish only thinly covers a heathen substratum) சான்று: சுரா 113. (தமிழ் மொழிபெயர்ப்பு சரியாக புரியாததால் நூலிலுள்ள ஆங்கிலத்தையே தருகிறேன்.) 'I seek refuge in the Lord of the Daybreak, from the evil of what He has created; and from the evil of the night when it comes on; and from the evil of the witches who blow upon knots, and from the evil of the envious when he envies.'
*
பாகனீய அரேபிய மதத்தின் கூறுகளே மெக்காவிற்குச் செல்லும் திருயாத்திரை.
(சுரா: 2.153; 22.28-30; 5.1-4; 22-37). (35)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஹஜ் யாத்திரை:
பத்தாவது நாள் -- விருந்து முடிந்த பிறகு யாத்திரைகைக்காரர்கள் தங்கள் தலைகளை மொட்டையடித்துக் கொள்வதோ, சில முடிகளை வெட்டிக் கொள்வதோ நடக்கிறது.
இந்த நிகழ்வு ஆபிரஹாம் சைத்தான்களிடமிருந்து விலகிச் சென்றதை நினைவு படுத்துவதற்காகச் செய்யப்படுகிறது.
ஓரிறை என்ற தத்துவத்திலுள்ள முகமது ஏன் இந்த பழைய மூடநம்பிக்கைகளை இஸ்லாமின் மய்யப் பொருளாக வைத்தார்? (37)
*
புனிதக் கருப்புக் கல்: (HUBAL)
இந்தக் கருப்புக் கல் வழிபாடு அரேபியாவில் பல இடங்களில் நடந்து வந்துள்ளது. (Clement of Alexandria -190-ம் ஆண்டு; Maximus Tyrius -200; Persians) (39)
*
காபா:
இஸ்லாமியக் கருத்துபடி, காபா முதலில் சுவனத்தில் உலகம் படைக்கப்படும் முன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, அதன் பின் ஆதாமால் இங்கும் கட்டப்பட்டது. அதன் பின் வெள்ளத்தால் அழிக்கப்பட்டதை ஆப்ரஹாமால் மறுபடியும் கட்டப்பட்டது.
இந்த கதை - யூதக் கதையை - ஜெருசலேம் சொர்க்கத்திலும், உலகத்திலும் கட்டப்பட்டது என்பதற்கு ஒட்டியது. (41)
*
இஸ்லாம் பகானிய அரேபிய வழக்கங்கள் சிலவற்றை அப்படியே சுவிகரித்துக் கொண்டன: பலதார மணங்கள், அடிமைத்தனம், எளிதில் விவகார ரத்து, விருத்த சேதனம் போன்ற சமூகக் கடமைகள்.
முகமது மிகப்பழைய கெட்ட ஆவிகளைப்பற்றிய மூட நம்பிக்கைகளை வளர்த்து விட்டார். சான்றாக, முகமது கூறுகிறார்: 'இரவில் தூக்கத்திலிருந்து திடீரென விழித்தால், மும்முறை மூக்கைச் சீந்த வேண்டும்; ஏனெனில், சைத்தான் ஒவ்வொரு மனிதனின் மூக்குத் துவாரங்களில் இரவு நேரத்தில் தங்கியிருக்கும்.
தொழுகைக்கு முன் கை,கால் கழுவுவதும் தண்ணீரில் சைத்தான்கள் ஓடி விடும் என்ற கருத்து பழைய நம்பிக்கையின்பால் பட்டதே. (42)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ZOROASTRIANISM: (PARSISM)
*இஸ்லாம் நேரடியாக ஈரானிய மதத்தாலும், மறைமுகமாக யூத, கிறித்துவ மதங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது நிச்சயம். 

*
ஆறு நாட்களில் ஆதியாகமத்தின் படி எல்லாம் படைக்கப்பட்டது என்பது அப்படியே ஜோராஸ்ட்ரியன் மதத்தில் உள்ளதே. இரு மதங்களிலுமே மனித குலம் ஒரே ஒரு தம்பதியிடமிருந்து வந்தது. ஜோராஸ்ட்ரியனில் அவர்க்ளின் பெயர்கள் மாஷ்யா - மாஷ்யானா. விவிலியத்தில் ஒரு குடும்பத்தைத் தவிர மற்ற மனிதர்கள் எல்லோருமே தண்டிக்கப்படுகிறார்கள். ஜோராஸ்ட்ரியனின் அவஸ்தாவில் வாரா மட்டும் காப்பாற்றப் படுகிறார். (43)
*புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் Goldziher ஈரானிய மதம் இஸ்லாமை எப்படி பாதித்தன என்று எழுதியதையே நான் இங்கு அதிகமாகக் குறிப்பிடுகிறேன்.
* மனப்பாடமாக தங்கள் வேத நூலைப் படிப்பதிலும் இந்த இரு மதங்களிடையே ஒற்றுமை உண்டு.
* இஸ்லாமில் ஊழிக்காலத்தில் மனித பாவ புண்ணியங்களை எடை போடும் 'மிஸான்' / தராசு (சுரா 21:47) பெர்ஷியன் மதத்திலிருந்து எடுத்தது. (44)
* முகமதுவினால் ஒரு நாளைக்கு இரு முறை கடவுளைத் தொழ வேண்டும் என்ற கடமை கொடுக்கப்பட்டது. பின், யூதர்களின் மும்முறை வணக்கம் போல் இஸ்லாமிலும் தொழுகை மூன்று முறையாக்கப்பட்டது. ஜோராஸ்ட்ரிய மதத்தின் தாக்கத்தின்படி அதன்பின் இது ஐந்து முறையாக்கப்பட்டது.
* முகமதுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய Ibn Hisham சல்மான் என்ற ஒரு பெர்ஷியன் எப்போதும் முகமதுவோடு இருந்து வந்தார். அவர் தன் மதக்கதைகளை முகமதுவுக்குச் சொல்லியிருக்கலாம். (45)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இஸ்லாமிய சுவனம் இந்திய, ஈரானிய சமயக் கோட்பாடுகளுக்கு ஒட்டியே உள்ளது. ஜோராஸ்ட்ரியத்தில் மனிதன் இறந்த பிறகு ஆன்மா இறந்த உடலை மூன்று நாட்களுக்கு சுற்றி வருகிறது. அதன்பின் ஒரு அழகிய 15 வயது பெண்ணின் மூலம் சுவனத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இது இந்து மதத்தில் வரும் 'அப்ஸரஸ்கள்' போல், இந்திரனின் சபைக்கு ஆன்மா செல்வதுபோல் உள்ளது.
* இந்து சமய பழக்கம்போல் இஸ்லாமிலும் சுவனம் விவரிக்கப் படுகிறது. நல்ல ஆர்வமுள்ளவர்களுக்கு சுவனம் செல்லவும், ஹெளரிகள், அதோடுமேலும் இனி வரப்போகும் கன்னிப் பெண்கள் பற்றியெல்லாம் இந்து பழக்க வழக்கங்களிலிருந்து தொற்றிக்கொள்ளும். (47)
* இஸ்லாமிய பாரசீய இரு மதங்களிலும் பொதுவாக சில எண்களுக்கு சில 'மரியாதைகள்' உண்டு. பார்சிய மதத்தில் 33 மிக மோசமானது. அதே போல் இஸ்லாமில் 33 வான தூதர்கள் மனிதனின் புகழ் மொழிகளைச் சுவனத்திற்கு எடுத்துச் செல்கின்றன


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

JINNS, DEMONS, AND OTHER SHADOWY BEINGS:

அப்போதிருந்த மூட நம்பிக்கைகளோடு வளர்ந்த முகமதுவிற்கு பேய்களிடம் நம்பிக்கை இருந்தது. மற்ற சமையக் கடவுள்களை பேய்களோடு சேர்த்துப் பேசியுள்ளார். (சுரா 37.158)
யூதரிடமிருந்து கடன் வாங்கிய இஸ்லாம்:

Islam is nothing more or less than Judaism plus the apostleship of Mohammad.
............. S.M. Zwemer
முகமதுவிற்கு யூத வரலாறு, கதைகள், சட்டங்கள் எப்படித் தெரிந்திருக்கும்? குரானில் வரும் இரு வசனங்களிலிருந்து அவருக்கு யூத ஆசிரியர்கள் - ராபிக்கள் - இருந்திருக்கலாமென தெரிகிறது. சுரா 25:5f., யாரோ சொல்லிக்கொடுக்கும் பழையவைகளை நபி கேட்டு வருவதாக மதநம்பிக்கையற்றவர்களால் சொல்லப்படுகிறது. சுரா 16:105 - இதிலும் வேறு ஆசிரியர் இருந்திருக்கலாமென கூறுகிறது.
குரானின் முதலில் சொல்லப்பட்ட சுராக்களில் முகமது யூத சமயம், வழக்கங்கள் இவைகளின் தாக்கம் கண்டிருந்தார். அவர்களின் பல பழக்க வழக்கங்களை - (சான்றாக, தொழுகைக்கு ஜெருசலேமைத் தேர்ந்தெடுத்தது) தனதாக்கிக் கொண்டு, தானும் பழைய நபிகளின் வழியைத் தொடர்வதுபோல் காண்பித்தார். (50)
தனது அராபிய மொழியில் சொல்ல முடியாத சில சொற்களை முகமது அராமிக், சிரிய மொழிகளிலிருந்து கடனாகப் பெற்றுள்ளார். - words such as Sawt (scourge), Madina, Masjid (a place of worship), Sultan, Sullam ( a ladder), Nabi ( a prophet) (51)
சில முக்கிய இஸ்லாமியச் சமயக் கருத்துக்களை யூதத்திலிருந்து பெற்றுள்ளார்; அவற்றில் சில:


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இறையாண்மை:
யூதத்தின் ஒற்றை இறையாண்மை
எழுதப்பட்ட தீர்க்க தரிசனம்:
யூதர்கள் தங்கள் வேத நூல்களை அவர்களது குழந்தைகளைத் தெரிந்து கொள்ளும் அளவு தெரிந்து வைத்துள்ளார்கள் (2.141; 6:20) அதே போல் அராபியர்களுக்கும் ஒரு வேத நூல் வேண்டுமென்று முகம்து நினைத்துள்ளார்.
சுவனத்தில் எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளதின் நகலே குரான் என்பதுவும் (85:22) Pirke Aboth, v.6-ல் சொல்லப்பட்டுள்ளதின் மறுபதிப்பாகும்.
படைப்பு:
யாத்திராகமம் 20:11 என்பதில் சொல்லப்பட்டுள்ள படைப்பின் மேல்தான் முகமதுவின் ஆறு நாள் படைப்பும் சொல்லப்பட்டுள்ளது.(சுரா 1:37) ஆனால் மற்றோரிடத்தில் இரு நாட்களில் படைக்கப்பட்டதாகவும் சொல்லியுள்ளது. (41. 8-11)
ஏழு வானங்களும் ஏழு நரகங்களும்:

வானங்கள் ஏழு; நரகங்கள் எழு என்று குரானில் உள்ளது. இந்து மதத்திலும், ஜோராஸ்ட்ரியத்திலும் உண்டு.
படைப்புக்கு முன் கடவுளின் அரியணை சுவர்க்கத்தில் ஒரு நீரலைக்கு மேல் இருந்தது என்பதுவும் ஆதியாகமத்தில் உள்ளது.
சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நடுவில் ஒரு சுவர் உள்ளது என்பதும் பொதுவானதே. (52)
தொழுகைகள் மிகுந்த ஒலியோடு இருக்கக் கூடாது. (சுரா 17:110) (அப்புறம் ஏன் அவ்வளவு சத்தமாக நாளும் பல முறை பாங்கொலி?)
இது போன்ற வேறு சில பொது நிகழ்வுகளின் நீளப் பட்டியல் ஒன்றும் கொடுக்கப் பட்டுள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வால்பையன் said...

//தொழுகைகள் மிகுந்த ஒலியோடு இருக்கக் கூடாது. (சுரா 17:110) (அப்புறம் ஏன் அவ்வளவு சத்தமாக நாளும் பல முறை பாங்கொலி?)//

அவுங்க தொழுகுறாங்கன்னு எல்லாருக்கும் தெரியனுமுல்ல!

Tuesday, January 05, 2010 5:47:00 PM

அராகன் said...

உங்களுடைய வலைப்பதிவை இன்றுதான் பார்த்தேன்.நீங்கள் இப்போது எந்த மதம்? கடவுள் என்ற சிந்தனை இன்றி உங்களால் இருக்கமுடிகிறதா? உங்களுடைய பிள்ளைகள் எப்படி அவர்களுக்கும் சொல்லி உண்மையை புரியவைத்தீர்களா? அல்லது ஊருக்கு உபதேசமா? உங்களுடைய கிறிஸ்தவ பெயரை மாற்றிவிட்டீர்களா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

muslim.jpg

CHAPTER 3

THE PROBLEM OF SOURCES

முகமதின் வாழ்க்கையும் அவர் ஆரம்பித்த மதத்தின் வரலாறும் பொதுவாகவே மூன்று வழிகளில் நமக்குக் கிடைத்துள்ளது. 1. குரான்; 2. முகமதின் வாழ்க்கை வரலாறுகள்; 3. ஹாடித், இஸ்லாமிய வழக்கங்கள்.


1. குரான்:
இஸ்லாமியர் வழக்கத்திற்கு மாறான பலவற்றை குரானின் வரலாற்றில் ஏற்றிச் சொல்வதுண்டு. ஆனால் அவைகள்உண்மையல்ல; the traditional accounts are "a mass of confusion, contradiction and inconsistencies". Serious scholars have called into question the authenticity of the Koran itself, நாம் அந்த விளக்கங்களை இனி காணலாம்.


அதற்கு முன் வணக்கத்துக்கரிய சில இஸ்லாமிய குறிப்பெழுத்தாளர்களின் ஒரு பட்டியல் இதோ: 

MUHAMMAD IBN-JARIR AL-TABARI (a.d. 923)
Al-ZAHAWI (1117 OR 1122)
Al_ZAMAKHSHARI(1143)
Al-BAYDAWI (1286 OR 1291)
FAKHR-AL-DIN AL-RAZI (1210)
JALAL-AL-DIN AL-MAHALLI (1459)
JALAL-AL-DIN AL-SUYUTI (1505)


2. இஸ்லாமிய வாழ்க்கை வரலாறுகள்:

முகமது 632-ம் ஆண்டு இறந்தார். அவரை பற்றிய முதல் எழுத்துக் குறிப்பு Ibn Ishaq என்பவரால் 750-ம் ஆண்டு, அதாவது 120 ஆண்டுகளுக்குப் பிறகு, எழுதப்பட்டுள்ளது. (இன்றைய சமூகத் தலைவர் ஒருவரின் வாழ்க்கையை இன்று எழுதுவதற்கும், இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து எழுதுவதற்கும் வேற்றுமை ஏதும் இருக்குமா, இருக்காதா?) அதைவிடவும் 
Ibn Ishaq எழுதிய வரலாறு முழுவதுமாகக் கிடைக்கவில்லை. அவரது முழு நூலும் தொலைந்து போக, 834-ல் இறந்த Ibn Hisham என்பவரின் எழுதியதில் சில பகுதிகள் மட்டுமே கிடைக்கப் பெற்றன. இவைகளைத் தவிர மற்ற நூல்கள்; Annals of Al-Tabari என்பவர் Ibn Ishaq-யை மேற்கோள்காட்டி எழுதிய நூல். இதையும் சேர்த்து இன்னும் 7 நூல்கள் பட்டியலிடப்படுகின்றன.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

3. ஹாடித் / ஹதீஸ்:
இவை எல்லாம் Books of Tradition - பழக்க வழக்கங்களின் நூல்கள். இவைகள் முகமது சொன்னவைகளும், செய்தவைகளும், அனுமதித்தவைகளும், அவரது முன்னிலையில் அவரது உடனிருந்தோர் சொல்லியவைகளும் ஒன்றிணைந்தவைகள். 'சுன்னா- பழக்க வழக்கங்கள் - என்ற சொல்லும் ப்யன்படுத்தப்படுகிறது.

ஹதீஸ்
 முகமதால் வாயால் சொல்லப்பட்டது. ஆனால் சுன்னா வாழ்க்கை நடத்துவதற்கான செயல்முறைகளைச் சொல்லப் பயன்பட்டது.
ஆறு வகையான ஹதீஸ் இருப்பதாக சுன்னி முஸ்லீம்கள் கருதுகிறார்கள். (67)

ஐயங்கள்:

மகமூதின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் உண்மைகளிலிருந்து மிக விலகியே எழுதியுள்ளார்கள். சார்பற்ற எழுத்துக்கள் என்பது போலல்லாமல் மாறுபட்டே (tendentious fiction) எழுதியுள்ளனர். உண்மையிலேயே நடந்தைவகளை எழுதாமல் அவைகளை மாற்றி சாதகமாகவே எழுதியுள்ளனர். (68)

Goldziher - 1870 முதல் 1920 வரை இவர் இஸ்லாமைப் பற்றி எழுதியவைகள் இன்றும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் முழுவதுமாகப் படிக்கப்பட்டு வருகின்றன. 'ஹாடித் வளர்ந்த விதம்' என்ற அவரது ஆராய்ச்சிப் பதிவில், "இஸ்லாமியர்களால் முழுவதுமாக நம்பப்படும் பல்வேறு ஹாடித்துகள் 8-ம், 9-ம் நூற்றாண்டுகளில் மாற்றம் (forgeries) செய்யப்பட்டவைகள்; அந்த ஹாடித்துகளின் தொடர்புகள் (isnads = chains of transmitters) உண்மையானவைகள் அல்ல. (69)

மேலும் அவர், "பல ஹாடித்துகள் சமய, வரலாற்று, 
சமுதாய வளர்ச்சிக்கேற்ப முதலிரு நூற்றாண்டுகளில் மாறியவை" என்கிறார்.



Goldziher-ன் எழுத்துக்களைப் புரிந்து கொள்ள வரலாற்றின் ஒருபகுதியை இப்ன் வராஹ் தருகிறார்நபி இறந்த பிறகு அவரின் துணையாளர்கள் நால்வர் முகமதியர்களின் தலைவர்களாகிறார்கள். அவர்களில் கடைசியானவர் நபியின் மருமகனும், cousin-ஆகவும் இருந்த அலி என்பவர். இவருக்கு அப்போதைய சிரியாவின் மேலும், அதன் கவர்னராக இருந்த மெளவியா (muawiya) மேலும் எந்த ஆளுமையும் இல்லாது போயிற்று. மெளவியாவிற்கும் அலிக்கும் சிஃபின் என்ற இடத்தில் போரொன்று நடக்கிறது. அதன்பின் 661-ல்மெளவியாவினால அலி கொல்லப்படுகிறார். உமயாத் என்ற குழுவின் முதல் கலீபாவாக மெளவியா ஆகி, 750 வரை அக்கு(டும்பத்தின்)ழுவின் அரசாட்சி நடக்கிறது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்த உமயாத்தின் ஆட்சியில் மக்களும், ஆட்சியாளர்களும் மதத்தின் மேல் எந்த வித அதிகமான ஈடுபாடுமின்றி இருந்து வந்தனர். ஆனால்ஒரு பக்திக்குழு எவ்வித குற்றவுணர்வுமின்றி புதிய பழக்க வழக்கங்களை ஏற்படுத்தினர். சமூகத்தின் நன்மைக்காகவே உண்டாக்கினார்கள்; அத்தகைய புதிய மாற்றங்களை நபியோடு எம்முறையிலும் தொடர்பு படுத்த முடியாது. ஆளும் உமயக் குழுமமும் தன்னிச்சைப்படி தனக்குத் தகுந்த, தனக்குப் பலனளிக்ககூடிய புதிய ஹாடித்துகளை உருவாக்கினார்கள். இப்புதிய ஹாடித்துகள் அலியின் புகழை இழக்கும்படியாக உருவாக்கப்பட்டன. 

Goldziher
: உமயாத்துகள் மதப்போர்வைக்குள் பல மாற்றங்களைச் செய்து கொண்டு, அவைகளைச் சில மதக்குருக்கள் தாங்கிப் பிடிக்குமாறும் செய்து கொண்டார்கள்.(70)

ஹடித்துகள் மிக மிகச்சின்ன மத விஷயங்களுக்குக் கூடஉருவாக்கப்பட்டன. அலி குழுமத்தின் புகழைக் குறைக்க அப்பாஸிட்கள் புதிய ஹாடித்துகளை உருவாக்கினார்கள். சான்றாக,  அலியின் தந்தை - அபு டாலிப் - ஆழ்கிணற்றின் அடியில் ஆழ்த்தப் பட்டுள்ளதை நபி கண்டதாகக் கூறியுள்ளார்கள். 

புதுப் புது ஹாடித்துகள்ஆரம்பித்து வைப்பது ஒரு வணிகம் போலவே செயல்பட்டு வந்தது.


பல போலி ஹாடித்துகள் உலவி வந்தாலும், அல்-புக்காரியால் தொகுக்கப்பட்ட ஆறு சீரான ஹாடித்துகள் கூட எல்லோரும் நினைப்பதுபோல் அறுதியான ஹாடித்துகள் கிடையாது. .. அல் புக்காரியின் ஹாடித்துகள் கூட முதலில் ஏறத்தாழ ஒரு டஜன் எண்ணிக்கையில் இருந்தன. 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவர் ஹஜாஜ், புக்காரி இவர்களின் தொகுப்பில் உள்ளவைகளில் ஏறத்தாழ 200 கேள்விக்குறியது.

Goldziher க்குப் பிறகு Joseph Schacht என்ற ஒரு பெரிய இஸ்லாமியர் (இஸ்லாமிய சட்டங்களின் மீது இவர் எழுதிய நூல்கள்   இன்றும் இஸ்லாமிய ஆராய்ச்சி நூல்களுள் பெரிதும் மதிக்கப்படுகிறது.) கூறுபவை வெகுவாக கலக்கமடையச் செய்யக் கூடியவை. 


அவைகள்: 
1. isnads - chain of transmitters நபியோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் எல்லாமே அப்பாஸிட் புரட்சிக்குப் பின்தான்  ஆரம்பித்தது. அப்புரட்சி நடந்தது 8-ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் தான்.


2. சில இஸ்னாடுகள் ( isnads ) நபியோடு தொடர்பு கொண்டவையாக இருந்தாலும் பெரும்பான்மையான இஸ்னாடுகள் - தொடர்புகள் - நிச்சயமாக நபியோடு தொடர்புடையவை அல்ல. (71)


Joseph Schacht தனது நூலில் Goldziher பற்றிக் கூறியதோடு, இரண்டாமவர் கூறிய சில ஆய்வுகளைத் தருகிறார்:  மிக அதிகமான ஹாடித்துகள் எல்லோருமாலும் கருதப்படும் காலத்தில் உள்ளதல்ல; அவைகள் பெரும்பாலும் இஸ்லாம் ஆரம்பித்த முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை. இவைகளை Schacht - This brilliant discovery became the corner-stone of all serious investigation" - முக்கிய ஆராய்ச்சிகளுக்கு எல்லைக்கோடுகளாகும் சிறந்த கண்டுபிடிப்பு - என்று கூறுகிறார். ... Schacht இவைகளையெல்லாம் 'மாற்று ஹாடித்துகள்' என்று கூறுகிறார்.


நபியின் வழிவந்தோர் கூறியவை நபியின்  தொடர்புடையவர்களிடமிருந்து (companions) வந்ததாகவும், அப்படி தொடர்புடையவர்களிடமிருந்து வந்தவை நபியிடமிருந்தே வந்ததாகவும் கருதப்பட்டன. (72)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Schacht: இஸ்லாமியச் சட்டங்கள் குரானிலிருந்து வரவில்லை; அவைகள் உமயாதுகளின் பிரபல்யமான, ஆளுமைக்கான சட்டங்களிலிருந்தே வந்தன.  
 

குரான் எப்படி முழு உருப் பெற்றது என்பது பலவிதமாகக் கூறப்படுவதுண்டு. அதில் அதிகமாகக் கூறப்படும் ஒன்றை இங்கு காணலாம்: 
 
அபு பக்கரின் ஆட்சிக் காலத்தில் (632-634)  உமர் (634-ல் இவரே கலிஃபா ஆகிறார்) குரானை மனனம் செய்திருந்த இஸ்லாமியர் பலரும் மத்திய அரேபியாவில் நடந்த யமமா யுத்தத்தில் கொல்லப்பட்டதால் கவலை கொள்கிறார்.  அதனால் Zayd ibn Thabit என்ற நபியின் துணைவரை குரான் வசனங்களை ஒருமித்துச் சேர்க்க ஆணையிடுகிறார். அவரும் அவ்வாறே தேடுகிறார்: "from peices of papyrus, flat styones, palm leaves, shoulder blades and ribs of animals. pieces of leather and wooden boards, as well as from the hearts of men" (( இவைகள் எப்படி தெளிவாக, தெளிவான தகவல்களாக இருந்திருக்க முடியும்?) இவைகள் அபு பக்கரிடம் சேர்ப்பிக்க, அவர் அதைத் உமரிடம் தர, அதன் பின் உமருக்குப் பின் அவை உமரின் மகள் ஹஃப்ஸாவிடம் தரப்படுகிறது,  (இதிலும் சிற மறுப்புகள் சொல்லப்படுவதுமுண்டு;  குரானைத் தொகுத்தது அபு பக்கரா, அலியா என்பது போன்ற கேள்விகள் உண்டு.) அதோடு இந்த குரான் மட்டுமே சரியானது என்று ஏதாவது ஒரு அத்தாட்சி வேண்டும். ஆனால் அபு பக்கரிடமிருந்து அப்படியேதும் அத்தாட்சி கொடுக்கப்படவில்லை. அதே சமயத்தில் வேறு சில குரான்களும் உண்மையான குரானாகக் கருதப்பட்டன. (73) 
 
பல இடங்களில் இதுவே உண்மையான குரான் என்று எழுந்த இக்குழப்பங்களால் உத்மன் (644-656) மீண்டும் Zayd ibn Thabit மூலம் உண்மையான குரானைக் கண்டு பிடிக்க முயல்கிறார். தன்னிடம் உள்ள "ஓலைகளில்" உள்ளவற்றிற்கும், உமரின் மகளிடமிருந்த பகுதிக்கும் ஒப்பீடு செய்கிறார். வாசிப்பு எளிதாக இருக்க, Zayd ibn Thabit நபியின் மொழியான குராய்ஷ் (Quraysh) மொழியை Zayd ibn Thabit எடுத்துக் கொள்கிறார். இந்தப் படிவம் உத்மனிடம் 650-ம் வருடம் சேர்ப்பிக்கப்படுகிறது. 656-ல் அவர் இறந்த பிறகு அது குஃபா, பஸ்ரா, டமாஸ்கஸ், மெக்கா போன்ற இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மற்ற  படிவங்கள் அழிக்கப்பட உத்தரவிடப்படுகிறது. (இந்த உத்தரவே வேறு சில மாற்றுப் படிவங்கள் அப்போது இருந்து வந்துள்ளன என்பதை ருசுப்படுத்துகிறதே!)

இன்றும் குரான் எவ்வித மாற்றமுமில்லாமல் இருந்து வந்துள்ளது என்ற கோட்பாடு மத நம்பிக்கையால் மட்டுமே எழுந்ததல்லாமல், எவ்வித வரலாற்றுச் சான்றும் இல்லாத ஒரு கருத்தாகும். (74)
 
Wansbrough : 8-ம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் இஸ்லாமியர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள  நூல் Fiqh Akbar I. இந்நூலில் குரானைப்பற்றிய எத்தகவலும் இல்லை என்பது நினைத்துப் பார்க்க முடியாததாக உள்ளது.

நீண்ட நாட்களாக, பலரால் ஒருமித்த கருத்தோடு உருவானதாகவே குரான் இருக்க முடியும். (76)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Zia said...

Dear Dharumi,

Could u challenge the article by hamza?

http://hamzatzortzis.blogspot.com/2010/01/dawkins-delusion-response-to-richard.html

I respect , u could reply for the article..

Wednesday, February 24, 2010 11:25:00 PM

Zia said...

Dharumi..,

All your mystries about how the quran is organisd after the death of prophet Mohammed(Peace be Upon Him). First u forget about how the quran is preserved. All sahabas ie. companions of the prophet, have memorised the holy quran. Abu Bakar has only organised it. There is no change in verses.. You failed provide any evidence for this.Yes there are difference about the how to organize the chapters either by revelation time or by what message it says.

Wednesday, February 24, 2010 11:40:00 PM

தருமி said...

Zia,

//Could u challenge the article by hamza?//
அடடா .. நான் அம்புட்டு பெரியா ஆளெல்லாம் இல்லீங்க.. அவரு எவ்வளவு எழுதியிருக்கார் ..
ஆனாலும் நீங்க சொன்னதற்காக வாசிச்சேன். கீழே உள்ளதெல்லாம் அவர் சொன்னது; அதில் எல்லாமே என் கேள்விக்குட்பட்டது.

//best explanation - with the greatest explanatory power - is that there is a supernatural designer. (!!) 

that supernatural design is the most reasonable explanation for the fine-tuning of the universe to permit life. . (!!) 

However if some skeptics were to argue that we cannot make such inferences because we do not know anything about this civilization, how they lived and who created them, would that make the archaeologists conclusions untrue? Of course not! . (!!) 

Simply put, evolution has no say. . (!!) 

And if anyone were to accept evolution by chance, they would have to believe in a miracle as these numbers are so high! Therefore evolution itself would prove the existence of God! . (!!) 

Dawkins basically says that since there is a naturalistic explanation for the apparent design in species and we do not have a similar explanation for physics, we should just wait. Does this not sound like blind faith to you?(!!) 

Gerald Schroeder points out that there is no real difference between a heap of sand and the brain of an Einstein. . (!!) 


he states, “We don’t know. We don’t understand it…………..”this is best explained by God. No other answer provides an adequate explanation for this phenomenon. . (!!) 

Without God morality is subjective. (!!) 

1. If God does not exist, then objective moral values do not exist; . (!!) 

from quran: and the water which God sends down from the sky ....subservient between heaven and Earth,…(SO YOUR KNOWLEDGE TELLS YOU THAT THERE IS EARTH AND JUST ABOVE IT A SKY; THAT’S ALL. NO MORE OF THE UNIVERSE. . (!!)

Thursday, February 25, 2010 8:15:00 PM

தருமி said...

ZIA,
உங்களைப் போன்ற குரான் - விசுவாசிகளிடம் பரிணாமம் பற்றிப் பேசுவது வீண்வேலை. ஏனெனில் நீங்கள் அதை வாசித்துப் புரிந்து கொள்ள முயலுவதேயில்லை. நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிடினும் சொல்ல வேண்டியது என் கடமை; பரிணாமம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. மறுப்பு சொல்ல வேண்டியதிருந்தால் வாசித்துவிட்டு வாருங்கள்; பேசுவோம். இன்னும் missed links இருக்கான்னு கேள்வி மட்டும் கேட்டால் போதாது.

Thursday, February 25, 2010 8:19:00 PM

தருமி said...

//First u forget about how the quran is preserved.//
கிளிப்பிள்ளை மாதிரி இதையே எத்தனை முறைதான் கேட்டுக்கொண்டிருப்பதோ !!!

All sahabas ie. companions of the prophet, have memorised the holy quran. //

Is it humanly possible?அல்லாவின் அனுக்கிரஹத்தால் அது முடியும்னு வச்சுக்குவோம். அதுக்குத்தான் நான் ஏற்கெனவே கேட்ட கேள்வி ஒன்றுண்டு: – ஆதாம், மோசே,இப்ராஹீம், தாவுது, ஈசா – இப்படி பல நபிகளின் வார்த்தைகளை ஏன் முதலில் காப்பாற்ற கடவுள் மறந்து போனார்? குரானும் அவரது வார்த்தைகள்தான்… அதே போல் முந்தியவர்களுக்கும் சொன்னது அதே அல்லாதானே! குரானை மட்டும் இரண்டாம் புத்தியில் (on second thoughts, கடவுளுக்கும் இப்படியெல்லாம் இருக்கே!) safeguard செஞ்ச அல்லா மொதல்ல சொன்னதையெல்லாம் ஏன் இப்படி கைகழுவி விட்டார்?

கொஞ்சம் அந்த நாள் அரசியல், மனித குணங்கள், இவைகளைப் பற்றியும் ஏதும் யோசிக்காமல், ஒரே வசனத்தை மட்டும் எங்களிடம் சொல்வதில் பயன் என்? சின்னப்பிள்ளையில் சொல்லிக் கொடுத்ததை மட்டும் திருப்பித் திருப்பி கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொன்னால் நாங்கள் கேட்டுக் கொள்ள வேணுமா?!

Thursday, February 25, 2010 8:30:00 PM

தருமி said...

Zia,மேலே ராபினுக்கும் முகமதிவிற்கும் கேட்ட அதே கேள்விதான் உங்களுக்கும் ..

//ஏனெனில் அப்படி காக்கும் திறமை பெற்ற அல்லா முதலில் மற்ற நபிகள் மூலமாகக் கொடுக்கப்பட்டவைகளை - அதுவும் ஈசாவுக்குக் கொடுக்கப்பட்டவைகளை - ஏன் காக்காமல் விட்டு விட்டார்? on second thoughts,குரானை மட்டும் ஏன் காப்பாற்றினார்?

இது ஒரு நியாயமான கேள்விதானே முகமது?

நபின்னா எல்லா நபியும் அல்லாவுக்கு ஒண்ணுதானே; இல்லியா?//



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


சென்ற பதிவினில்
 குரானின் வரலாறு, அதிலுள்ள ஐயங்கள், கேள்விகள் பற்றி WHY I AM NOT A MUSLIM என்ற நூலில் இருந்த பகுதியினைக் கொடுத்திருந்தேன்,. அப்புத்தகத்தின் மற்றைய பகுதிகளைப் பார்ப்பதற்கு முன் தொடர்பு கருதி, குரானின் வரலாறு பற்றிய வேறு இரு நூல்களின் தொகுப்பை இங்கே பதிவேற்றப் போகிறேன்.

 

god+%28Small%29.jpg



CHRISTOPHER HITCHENS என்பவர் எழுதிய god is not great (HOW RELIGION POISONS EVERYTHING) என்ற நூலின் 9-வது பகுதியை - குரானின் வரலாற்றைத் தரும் அப்பகுதியை - இங்கு   பதிவிடுகிறேன்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

god is not great
(HOW RELIGION POISONS EVERYTHING)

CHRISTOPHER HITCHENS

THE KORAN IS BORROWED
FROM BOTH JEWISH AND
CHRISTIAN MYTHS



மோஸஸ், ஆபிரஹாம், ஏசு – இவர்களெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக, நன்னெறிக்கு எதிராக, அடிப்படையற்று சொன்ன பல கூற்றுக்கள் போலவே குரானிலும் முகமதுவினால் தொடர்கிறதா என்றே பார்க்க வேண்டும். இங்கேயும் காபிரியேல் / ஜிப்ரேல் வருகிறார்;  படிக்காத ஒருவருக்கு சுராக்களை அளிக்கிறார். இங்கேயும் நோவாவின் பிரளயம், விக்கிரக ஆராதனைகளுக்கு எதிரான தண்டனைகள் வருகின்றன. யூதர்களுக்காகச் சொல்லப்பட்டவைகளும், அவைகளை அவர்களே கண்டுகொள்ளாமல் செல்வதும் நடக்கிறது. இங்கேயும், ஹாதிஸ் என்றழைக்கப்படும் நபியினால் சொல்லப்பட்டவைகளும் செய்தவைகளும் நிறைய நிச்சயமில்லாத விஷயங்களாகவும் நிகழ்வுகளாகவும் உள்ளன. (123)

குரானில் சொல்லப்படும் நிகழ்வுகள் எல்லாமே ஒரு சமூகத்தின் மிகச்சிறிய பகுதிக்கானதாகவும், அங்கே நடந்த சிறு தகராறுகளாகவும் உள்ளன. அதுவுமின்றி, மற்ற ஹீப்ரு லத்தீன், க்ரீக் மொழி நூல்களிலிருந்து எவ்வித வரலாற்று ஒற்றுமையையும் காட்ட முடியாத நிகழ்வுகளாகவே அவை உள்ளன. அவைகள் யாவுமே வாய்வழியாக, அதுவும் அரபியில் மட்டுமே வாய்வழியாக வந்தவைகள்.

விற்பன்னர்கள் பலரும் குரான் அது எழுதப்பட்ட அராபிய மொழியில் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ளப்படும் என்கின்றனர்.  ஏனெனில் அம்மொழி கணக்கற்ற சொல்லடைகளும், பகுதிவாரியான பேச்சு மொழிகளும் நிறையப் பெற்றது. (அப்படிப்பட்ட மொழியை ஏன் அல்லா தேர்ந்தெடுத்தார்?) Introducing Muhammad என்ற நூலின் ஆசிரியர்கள் இருவரும் அராபிய மொழியில் மட்டுமே குரான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள். (..they insist that ”as the literal Word of God, the Koran is the Koran only in the original revealed text. A translation can never be the Koran, that inimitable symphony, ‘the very sound of which moves men and women to tears’.)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எம்மொழிபெயர்ப்பாயினும் அது ஓரளவு மட்டுமே குரானின் உண்மைப் பொருளைத் தரமுடியும். (அப்படிப்பட்ட மொழியை ஏன் அல்லா தேர்ந்தெடுத்தார்?) கடவுள் ஒரு அராபியராக இருந்தால் ( ஒரு பாதுகாப்பற்ற கற்பனைதான் இது! ) அவர் ஏன் ஒரு படிப்பறிவில்லாதவரை, தான் சொன்னதை அப்படியே மாற்றாமல் கொடுக்க முடியாத ஒருவரை எதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?  இது சொல்வதற்கு மிக எளிதான ஒரு விஷயமில்லை.  ஏனெனில் கிறித்துவர்களுக்கு கன்னிமரியாள் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு இதுவும் இஸ்லாமியருக்கு முக்கியமானது. (124)

இன்றுவரையிலும் எம்மொழியில் குரான் மொழிபெயர்க்கப்பட்டாலும் குரானின் அராபிய மொழியாக்கமும் சேர்த்தே பதிப்பிடப்படுகிறது.(125)

இஸ்லாம் புதியதாகத் தோன்றிய ஒரு மதம்; ஆகவேதான் அது இன்னும் தன் உயர்ந்த தன்னம்பிக்கையளிக்கும் நிலையில் நின்றுகொண்டிருக்கிறது.

முகமதுவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளும், சொன்னவைகளும்  அவரது காலத்திற்குப் பின் பல்லாண்டுகள் கழித்து தொகுக்கப்பட்டவை. அவைகள்  சுய விருப்புகளாலும், வதந்திகளாலும், படிப்பறிவற்றதாலும் பல மாற்றங்களுக்கு உட்பட்ட ஒரு தொகுப்பாகும். (127)

முகமது தன்னை 'கடவுளின் அடிமை' என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்த வரலாறு (Pickthall -வின் கூற்றுப்படி):



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மெக்காவிலுள்ள காபா ஆபிரஹாமால் கட்டப்பட்டது; பின் வஹாபிகளால் அழிக்கப்பட்டது; அதிலுள்ள விக்ரகங்களும் அழிக்கப்பட்டன. முகமதுவும் அதனாலேயே அமைதியை நாடி ஹீரா மலைக்குச் செல்கிறார். அங்கே அவர் தூக்கத்திலோ மயக்கத்திலோ இருக்கும்போது ஒரு குரல் அவரை  வாசிக்கச் சொல்கிறது. முகமது  இருமுறை தன்க்கு வாசிக்கத் தெரியாது என்று கூறியும் மும்முறை அந்தக் குரலால் வாசிக்க அழைக்கப்படுகிறார். தன்னையும் அல்லாவிடமிருந்து வந்ததாக அந்தக் குரல் சொல்கிறது. இதன்பின் முகமது தன் மனைவி கத்தீஜாவிடம் சொல்ல, அவர் முகமதுவை கதீஜாவின் உறவினர் நெளபால்  (Waraqa ibn Naufal) என்பவரிடம் அழைத்துச் செல்ல, யூத, கிறித்துவ நூல்களைப் பற்றி அறிந்த  அவர்மோஸேவிடம் பேசியவரே உன்னிடமும் பேசியவர் என்று சொன்ன பிறகே, முகமது தன்னை அல்லாவின் அடிமை என்று கருதத் தொடங்குகிறார். (128)

முகமது 632-ம் ஆண்டு இறக்கிறார். அதன் பின் 120 ஆண்டுகளுக்குப் பிறகு இப்னு இஷாக் (Ibn Ishaq) என்பவரால் முகமதுவின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்படுகிறது. ஆனால் அது காணாமல் போக, இப்னு ஹிஷாம் (Ibn Hisham) என்பவரால் மீண்டும் மற்றுமொரு வரலாறு எழுதப்படுகிறது. (129)

முகமதுவின் செயலர்கள், நண்பர்கள், உடனிருந்தோர் இவர்களிடமிருந்தெல்லாம் எப்படி முகமது சொன்னவைகள், நடந்த நிகழ்வுகள் எல்லாம் எப்படிப் பெறப்பட்டன என்பதற்கான எந்த ஒரு பொதுமுறையும் இருந்ததாகத் தெரியவில்லை.

ஈசாவைப் போலல்லாமல் முகமது ஒரு குடும்பத்தைத் தனக்குப் பின் விட்டுப் போயிருந்தாலும், தனக்குப் பிறகு யார் தன் பொறுப்பை ஏற்று நடத்துவது என்று சொல்லிச் செல்லவில்லை. அதனால் அவர் இறந்ததுமே தலைமைக்குப் போட்டியும் சண்டைகளும் ஆரம்பித்து விட்டனதான் ஒரு மதமாக இஸ்லாம் உருவாவதற்குள் சன்னி, ஷியா என்று இரு குழுக்கள் பிறந்துவிட்டன.(130)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முகமதுவிற்குப் பின் கலிபா ஆன அபு பக்கர் முகமதுவின் வார்த்தைகளை ஒருங்கிணைக்க முயல்கிறார். மனனம் செய்த பலர் போர்களில் இறந்துபட  ஒரு சிலரே மனனம் செய்தவர்கள் இருந்தார்கள். ஆகவே, எல்லாவித விஷயங்களையும் - தாட்களில், கற்களில், ஓலைகளில், தோளெலும்புகளில், மற்ற எலும்புகளில், தோல்களில் - எழுதப்பட்ட வைகளை (ஜிப்ரெல் மூலமாகத் தன் வார்த்தைகளைத் தந்த கடவுள் அப்படியே அவைகளை ஒழுங்காக 'ரிக்கார்ட்' செய்யவும் ஏதாவது ஒரு நல்ல வழி காண்பித்திருக்கலாம்.) முகமதின் செயலராக இருந்த ஸைட் இப்னு தாபிட் (Zaid Ibn Thabit)மூலமாகத் தொகுக்கப்படுகிறது.

மேலே சொன்னது உண்மையாயின் முகமதுவின் வாழ்க்கை முடிந்த உடனேயே அவரது வரலாறு எழுதப்பட்டு விட்டது என்ற கூற்று சரியாக இருக்கும். ஆனால் மேலே சொன்னது உண்மையா என்ற கேள்வி பெரிதும் உள்ளது. ஏனெனில் இவைகளைத் தொகுத்தது முதல் கலிபா இல்லை; நாலாவது கலிபாவான அலி; அவரே ஷியா குழுமத்தை ஆரம்பித்தவர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சன்னி குழுமத்தினர் இவைகள் தொகுக்கப்பட்டது 644 முதல் 656 வரை ஆண்ட உத்மன் என்ற கலிபாவினால் என்கிறார்கள். உத்மன் இறுதி வடிவத்திற்குக் காரணாமாயிருந்தார் என்கிறார்கள். இறுதி வடிவத்திற்குக் கொண்டு வந்ததும், ஏற்கெனவே இருந்தவைகளை - earlier and rival editions- எல்லாவற்றையும் உத்மன் எரித்து அழித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் வேறு நகல்கள் இருக்கக்கூடாதென்ற உத்மனின் திட்டம் சரியாகச் செயல்பட முடியாது. ஏனெனில் அராபிய மொழியின் எழுத்துக்கள் 9-வது நூற்றாண்டில்தான் இறுதி நிலைக்கு வந்தன. அதற்கு முன்பு புள்ளிகள், அரைப்புள்ளிகள், குறில்களுக்கான குறியீடுகள் ஏதும் இல்லாதிருந்தன. இதனால் வசனங்களில் மாறுபட்ட கருத்துகள் அன்றும், இன்றும் இருந்து வருகின்றன. (131)

வசனங்களை விடவும் ஹாடிஸ்கள் - வாய்மொழிச் சொல்லாக வந்தவைகள் - மேலும் குழப்பமூட்டுபவைகளாகவும், பொறுக்க முடியாதவைகளாகவும் உண்டு. ஒவ்வொரு ஹாடிசும் உண்மையானதென்று ஒரு isnad or chain என்ற ஒரு சாட்சி மூலம் வரவேண்டும். ஆனால் சில சமயங்களில் A- B யிடம் சொன்னதாகவும், அது C -யிடம் சொல்லப்பட்டு, பின் அது D- மூலமாக ..... இப்படியாக அந்த சாட்சிகள் சொல்லப்படுவதுண்டு. 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சான்றாக, புகாரி முகமதுவின் மரணத்திற்குப் பிறகு 238 ஆண்டுகள் கழித்து காலமானார். இவரது சாட்சிகள் மிகவும் கெளரவிக்கப்படுபவை. அவைகளில் எந்த வித குற்றம் குறை காண்பதரிது என்றும் சொல்லப்படும்.  ஆனால் அவர் மொத்தம் 3,00,000 ஹாடிசுகள் சொன்னதாகவும், பின் அதில் 2,00,000 ஹாடிசுகளை மதிப்பற்றவைகள் என்றோ உறுதி செய்யப்பட முடியாதவை என்றோ அவர் கழித்து விட்டார்.  மறுபடியும் தான் சொன்னவைகளில் சலித்தெடுத்து வெறும் 10,000 ஹாடிசுகளை மட்டுமே கொடுத்துள்ளார்.


எவ்வித சான்றுமின்றி  மூன்று லட்சத்திலிருந்து  (குத்து மதிப்பாக!)வெறும் 10,000 ஹாடிசுகளைத் தன் நினைவிலிருந்து புகாரி கொடுத்தார் - அதுவும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு ----அப்படி அவர் தந்த ஹாடிசுகள் புனிதமான, எவ்வித மாறுதலுமற்றவைகள் என்று நீங்கள் நம்ப வேண்டுமானால் ...  நம்பிக்கொள்ளுங்கள்.(132)

சலித்துப் பார்த்தால் சில ஹாடிசுகள் எங்கிருந்து கிடைத்தன என்பதுவும் தெரியும். ஹங்கேரி நாட்டு Ignaz Godlziher என்ற அறிஞர், Reza Aslan என்பவர் செய்த ஆராய்ச்சியின்படி, நிறைய ஹாடிசுகள் யூதர்களின் டோரா, கிறித்துவர்களின் விவிலியம், யூத குருமார்களின் வார்த்தைகள், பழைய பெர்சியன் கருத்துக்கள், க்ரேக்க தத்துவங்கள், இந்தியப் பழமொழிகள் … இதையெல்லாம் விட கிறித்துவர்களின் Lord’s Prayer வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எடுத்தாளப்பெற்றுள்ளன. விவிலியக் கதைகள் சிலவும், ‘’உன் வலதுகை செய்வது இடது கைக்குத் தெரியக்கூடாது’ என்ற வார்த்தைகளும் அப்படியே ஹாடிசுகளில் இடம் பெற்றுள்ளன. 

அஸ்லான் தனது ஆராய்ச்சியில் ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய சட்ட திட்டங்களை ijitihad மூலம் வடிவமைக்கும்போது, அவர்கள் பல ஹாடிசுகளை இரு கூறாகப் பிரித்துள்ளார்கள்:  பொருளிய லாபத்துக்காகச் சொன்ன பொய்கள்; கருத்துச் சிறப்புக்காகச் சொன்ன பொய்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இப்படி பல வழிகளிலிருந்து தங்கள் வேத நூல்களைப் படைத்திருந்தாலும் அவர்கள் தங்கள் வேதப்புத்தகமே முழுமையான, கடைசியான வேதநூல் என்று வலியுறுத்தி வருகிறார்கள். (133)


தன்னைத் தவிர வேறு கடவுள்களை வணங்குபவர்களை மன்னிக்க மாட்டேன் என்ற அல்லாவின் கட்டளை  கிறித்துவ பத்துக்கட்டளைகளிலிருந்து வாங்கிய கடனே.


முகமதுவின்  மனைவியர்களில் சிலர் முகமதுவின் சில சின்னத் தேவைகளுக்குக் கூட அவருக்கு வசனம் இறக்கப்படும் என்றும்,  இதை வைத்து முகமதுவை அவர்கள் கேலி செய்ததும் உண்டு. 


பொதுவிடத்தில் முகமதுவிற்கு வசனம் இறக்கப்படும் போதெல்லாம் அவர் வலியால் துடிப்பவராகவும், காதினுள் பலத்த மணியொலியும் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. மிகுந்த குளிர் காலத்தில் கூட அவருக்கு வியர்வைப் பெருக்கு ஏற்பட்டதாகவும்  சொல்லப்படுகிறது. (134)

சில இதயமற்ற கிறித்துவர்கள்  இவையெல்லாம்  அவரது வலிப்பு நோயால் வந்தது என்று சொல்வதுண்டு. (ஆனால் அவர்கள் பவுலுக்கு டமாஸ்கஸ் செல்லும் வழியில் நடந்த நிகழ்வை அவ்வாறு சொல்வதில்லை.)


David Hume -ன் கேள்வியை இங்கே கேட்டாலே போதும்: ஏற்கெனவே எழுதப்பட்டு இருந்த ஒன்றை கடவுள் ஒரு மனித ட்ரான்ஸ்மீட்டர் மூலம் நமக்குக் கொடுத்தாரா? இல்லை ... முகமதுவே தானாகவே இருந்த சிலவற்றைச் சொல்லி  அதெல்லாமே கடவுள் எனக்குச் சொன்னது என்று சொன்னாரா?  


ஆனாலும் வசனம் இறங்கும்போது முகமது பெற்ற வலி, தலைக்குள் ஒசை, வியர்வைப் பெருக்கு - இவை எல்லாமே கடவுளிடமிருந்து முகமது பெற்றதெனின் அந்த நிகழ்வு அமைதியான, அழகான, தெளிவான ஒரு நிகழ்வாக இருந்திருக்கவில்லை.


கிறித்துவத்தைப் போலன்றி இங்கே முகமதுவிற்கு ஒரு சந்ததியினர் இருந்துள்ளனர்.  இருந்தும் இஸ்லாம் பிறந்ததிலிருந்தே அவர்களுக்குள்ளே பல பிளவுகளும், குருதி சிந்தியதுவும் தொடர்ந்து வந்துள்ளன. (135)

இஸ்லாமிய   நம்பிக்கையில்லாதவர்களுக்கு மெக்காவிற்குள் அனுமதி கிடையாது என்பதுவே இஸ்லாம் ஒரு உலகளாவிய (Universal) மதம் என்பதை  மறுப்பதாக அல்லவா உள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மற்றைய ஒரு-கடவுள்-மதங்களைப் போலல்லாமல் இஸ்லாம் இதுவரை எவ்வித மாற்றத்திற்கும் உட்பட்டதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. இது மிகச் சரியென்றும், மிகத்தவறு என்றும் கருதலாம்.  இஸ்லாமிலும் பல வேறுபட்ட படிமங்கள் உண்டு. ஏனெனில், சுபிக்கள் இஸ்லாமிய தத்துவங்களுக்கு அதிக மரியாதை கொடுக்கிறார்கள்.  அவர்களது படிமங்களில் மற்ற நம்பிக்கைகளுக்கும் இடமுண்டு. 

இஸ்லாமியத்திற்கென்று ஒரே தலைமை இல்லாததால், பல்வேறு பத்வாக்கள் வருவதுண்டு. இதுவரை நம்பி வந்தவைகளை இனி நம்பத் தேவையில்லை என்று யாரும் இம்மதத்தில் கூற முடியாது. இது ஒரு வகையில் நல்லதற்கேயாயினும், எங்கள் இஸ்லாம் மாற்றுவதற்கு இடமில்லாத, கடைசி வேதமே என்ற இஸ்லாமியரின் அடிப்படை நம்பிக்கை மாற்ற முடியாத, ஆனால் அதே சமயத்தில் ஒரு தவறுதலான நம்பிக்கையாகவே இருக்க முடியும். 


இஸ்லாமியத்திலுள்ள முன்னுக்குப் பின்னான முரண்கள், பல பிரதிகளுள் உள்ள வேற்றுமைகள் இவைகளை பொறுமையுடன் பட்டியலிடவும் கூட மிகப்பெரும் எதிர்ப்புகள் வரும்.


அவர்களது முழு நம்பிக்கையானது ஒரு பரந்த உள்நோக்கைக் கூட முடியாத ஒன்றாக்கி விடுகிறது. (137)




EC8E1548066E8691FE8C4E82AB8A105B.png



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தருமி said...

வால்ஸ்,
//இனிமேல் தான் ”இறக்க” பட போகுது!
அதுக்கு தான் நாங்க வந்துருக்கோம்!//

இல்லை வால்ஸ். நம்பிக்கையாளர்கள் சொல்றது மாதிரியே 1400 வருஷமா எத்தனையோ பேர் தங்கள் ஆராய்ச்சியின் முடிவைக் காண்பித்தும், குரான் ஒரு நேரடி இறக்கமாக இருக்க முடியாது என்ற லாஜிக்கைச் சொன்ன பிறகும் அந்தச் செய்திகள் நம்பிக்கையாளர்களின் ஒரு காதில் நுழைந்து மற்றொரு காது வழியே எவ்வித மாற்றமுமில்லாமல் வெளியே வருவதுதான் நிதர்சனம். சிறு பிள்ளையிலேயே பதிக்கப்பட்ட ஆழமான விழுதுகள் ...

நீங்கள் சொன்னது போல் //சிந்திக்கவே மாட்டேன் என்பவர்களிடம் என்ன சொல்லி என்ன பயன்!//
ஒன்றுமில்லைதான். இருப்பினும் நமது கருத்துக்களை நிலை நாட்ட நாமெடுக்கும் முயற்சிகள். இவை நம் மனதை நிரப்பும். அறிவை விசாலமாக்கும். ஆனால் மத நம்பிக்கையாளர்களிடம் ஏதும் / அதிக பயனிருக்காது.இவையெல்லாம் நாம் சரியான பாதையில் இருக்கிறோம் என்ற நினைப்பை நமக்குத் தருவதுதான் முக்கியம்.

தருமி said...

கும்மி,
SARFUDEEN போலவே பலரும் நிறைய ஹோம் ஒர்க் கொடுத்திர்ராங்க!

//நீங்கள் பார்த்தவற்றை, நீங்கள் அறிந்தவற்றை இங்கே //கூறி வாதிடலாமே என்று நானும் பலமுறை கூறினாலும் அவர்கள் பொதுவாக மேற்கோளிடுவதோடு நின்று விடுகிறார்கள்.

உங்கள் இஸ்லாமிய அறிவு பற்றி ஒரு வார்த்தை: எப்படித்தான் பல அராபிய சொற்களை நினைவில் கொள்கிறீர்களோ!
பாராட்டுக்கள் ..

Friday, March 19, 2010 11:14:00 AM

SARFUDEEN said...

ஹஜ் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையானது என்று சொல்லி வந்தார்கள்; அப்படிதான் குரானிலும் சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு ஏழை முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாதே என்று கேட்கத் தொடங்கியதும், அது வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே கடமையானது என்று கூற ஆரம்பித்துவிட்டனர்.

நான் முன்பே குறிப்பிட்டது போல் ஹஜ்ஜை பற்றி சரியான இஸ்லாமிய அறிவு உங்களுக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. குர்ஆன் சொல்வதாக தவறான தகவல்களை தந்துள்ளீர்கள். சக்தி உள்ளவர்களுக்கு கடமை என்றுதான் 3:97 ல் விளக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர் முஹமது நபி அவர்கள் அதற்கு விளக்கம் தந்துள்ளார்கள். பொருளாதாரம் மற்றும் சென்று வர உடல் ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் ஹஜ் கடமை என்று சொல்லியுள்ளார்கள். இரண்டில் ஒன்று இல்லையென்றாலும் அவறுக்கு ஹஜ் கடமையில்லை. இதுதான் உண்மை. இஸ்லாம் என்பது இறைவனும் அவனுடைய அடிமையான தூதர் அவர்கள் வாழும் காலத்தில் சொன்ன, செய்த, அங்கீகரித்தவைகள் மட்டுமே இஸ்லாமாகும். மார்க்க விஷயத்தில் முஸ்லீம்கள் அவர்களாகவே புதியதாக செய்தால் அதற்கு இஸ்லாம் பொருப்பல்ல. மரணத்திற்கு பிறகு அவர்களுக்கு கடுமையான தண்டனை தயார்படுத்தி வைத்திருபதாக எல்லோரையும் படைத்த இறைவன் எச்சரித்துள்ளான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கும்மி said...

@SHARFUDEEN

எந்த வித இடைசெருகலும், அடைப்புக்குறிகளும் இல்லாத அந்த குறிப்பிட்ட வசனங்களின் ஆங்கில மொழியாக்கம் இங்கே. 

95. Say "Allah has spoken the truth; follow the religion of Ibrahim Hanifa and he was not of Al-Mushrikun." 

96. Verily, the first House appointed for mankind was that at Bakkah, full of blessing, and a guidance for Al-'Alamin. 

97. In it are manifest signs, the Maqam of Ibrahim; whosoever enters it, he attains security. And Hajj to the House is a duty that mankind owes to Allah and whoever disbelieves then Allah stands not in need of any of the 'Alamin

98. Say: "O people of the Scripture! Why do you reject the Ayat of Allah while Allah is Witness to what you do?"


99. Say: "O people of the Scripture! Why do you stop those who have believed, from the Path of Allah, seeking to make it seem crooked, while you are witnesses? And Allah is not unaware of what you do." 

இந்த வசனங்களின் முழுமையான அர்த்தத்தைப் பார்த்துவிட்டும் நீங்கள் அதே வாதத்தை கூறுவீர்களா? இந்த வசனங்களின் எடுத்துக்கொள்ளப்பட்ட context- ஐ கவனியுங்கள். நான் மேற்கோள் காட்டியிருப்பது குர் ஆனில் இருந்துதானே அன்றி, எந்தவொரு முஸ்லிமின் வாழ்க்கையில் இருந்தும் அல்ல.

@ தருமி அய்யா
நான் பிறப்பால் இஸ்லாமியன். அதனால் இந்த வார்த்தைகள் உரையாடும்போது சரளமாக வரும்.

Friday, March 19, 2010 1:31:00 PM

தருமி said...

கும்மி,
//And Hajj to the House is a duty that mankind owes to Allah//

இதுதான் அல்லாவின் கட்டளை என்கிறீர்களா?

Friday, March 19, 2010 2:08:00 PM

தருமி said...

பதில் சொல்ல முடியுமாயின் ...

//நான் பிறப்பால் இஸ்லாமியன். //

இஸ்லாமிய நம்பிக்கையற்றவனாவது பல பிரச்சனைகளுக்குக் காரணமாகும் என்பார்களே ...

உங்களை நீங்கள் வெளிக்காண்பிப்பது பிரச்சனையா?

கும்மி said...

//இதுதான் அல்லாவின் கட்டளை என்கிறீர்களா? //

குர் ஆனில் இருக்கும் வசனம் என்றே மேற்கோள் காட்டியுள்ளேன். நான், அல்லாஹ் என்பதே இட்டுக்கட்டப்பட்ட ஒரு பாத்திரம் என்று கூறுகின்றேன்.

//இஸ்லாமிய நம்பிக்கையற்றவனாவது பல பிரச்சனைகளுக்குக் காரணமாகும் என்பார்களே ...//

உண்மைதான்! ஜமாத்தை விட்டு விலக்கி வைப்பது உட்பட பல விஷயங்கள் நடந்தேறும். ஜமாத்திய நம்பிக்கைகளுக்குப் புறம்பாக, யாரேனும் ஈடுபட்டால் அபராதம், ஊர் விலக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும். 80 களின் பிற்பகுதியிலும், 90 களிலும் தவ்ஹீது எண்ணம் கொண்டோர் மீது இப்படிப்பட்ட நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டன. இப்பொழுதும் கூட, தவ்ஹீது அமைப்பினரால், முஸ்லிம்கள் செறிவாக வாழும் ஒரு சில பகுதிகளில் கூட்டம் நடத்த முடியாது. தவ்ஹீது அமைப்பினருக்கே இப்படியென்றால், இஸ்லாமிய நம்பிக்கைகள் அறவே அற்றவன் என்றால்?...


//உங்களை நீங்கள் வெளிக்காண்பிப்பது பிரச்சனையா? //

எங்கள் (சொந்த) ஊரின், என் வயதையொத்த பலருக்கும் என்னைப் பற்றி தெரியும்; அதனால் எனக்கு ஒன்றும் பிரச்சனை ஏற்படவில்லை. அவர்களில் பலரும் கூட என் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றனர்; ஆனால், வெளிப்படையாக அவர்கள் அறிவிக்கவில்லை. எங்கள் ஊரின் ஜமாத்தோடும் ஏதும் பிரச்சனை ஏற்படும் என்று தோன்றவில்லை. நான் எங்கள் ஊர் ஜமாத்தாரோடு தொடர்பு கொண்டது, எனது திருமணத்திற்கான NOC வாங்க மட்டுமே. அதனால், என்னை ஊரை விட்டு விலக்கினாலும், எனக்கு ஏதும் இழப்பு இருக்காது. எனது மரணத்திற்கு பின்பு உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படக்கூடும் என்று சிலர் கூறினார். எனது உடலை தானம் தர நான் முடிவெடுத்துவிட்டதால், எனக்கு அப்படியும் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு இல்லை. :)

ஆனாலும், வேறு சில சமூகக் காரணிகளால், சில காலத்திற்கேனும், நான் வெளிக்காண்பிக்க விரும்பவில்லை. (இருப்பினும், நான் சில பதிவர்களோடு தொலைபேசியில் உரையாடியுள்ளேன்.)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

9:1. (முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.
★(இங்கன கவனிக்க வேண்டியது, முஷ்ரிக்குகள் உடன்படிக்கையிலிருந்து விலகவில்லை. அல்லாஹ்வும் அவரோட தூதருந்தான் விலகுகிறார்கள்.. அல்லாஹ் காஃபிர்களோட எப்ப உடன் படிக்கை போட்டான் என்றோ, அல்லாஹ் காபிர்களோட உடன் படிக்கை போடற அளவுக்கு காபிர்களும் அல்லாஹ்வும் ஒரே லெவல்லதான் இருக்கிறாங்க என்று நீங்கள் கருதினால், நீங்கள் மூமின். இந்த பிரபஞ்சத்தை படைத்ததாக சொல்லப்படும் ஒரு இறைவன், அவனை நம்பாதவர்களோட உடன் படிக்கை போடுவது லூசுத்தனம் இல்லையா என்று நினைத்தால் நீங்கள் காஃபிர்.)
முஷ்ரிக் அப்படிங்கிறதும்... காஃபிர் அப்படிங்கிறதும் ஒன்னா அப்படின்னு யாருக்காச்சும் சந்தேகம் வந்தால்... எளிமையான விளக்கம்... நாகபதனி... நாகப்பதனி... எங்களுக்கு ஒரு 'ப்' சேர்த்து வரும்ங்கிற விளக்கம்தான்... 😁😁
இங்கே படிச்சுக்கோங்க.. 👇👇
9:2. நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
★(அந்த நாலு மாசத்தை உட்டுட்டு, மத்த எல்லா மாசமும் தேடி தேடி ஒவ்வொரு காபிரா கொல்லுங்கறார் நம்ம ஈமாந்தாரிகளோட அல்லாஹ். அப்படி காபிர் சாவும்போது அல்லாஹ் அவங்களை இழிவு படுத்துவார்.)
9:3. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணை வைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.
★(சும்மா மிரட்டிக்கிட்டே இருப்பாரு அல்லாஹ். ஆனா குன் என்று சொன்னதும் நடந்துடும்! இதெல்லாம் எப்படின்னு கேக்கக்கூடாது. கேட்டா நீ காபிர்..)
9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
★(அல்லாஹ் எப்படி அட்டாக் பண்றதுன்னு சொல்லித்தரான். காபிர் கிடைச்சான். உடனே கண்ட இடத்திலெ வெட்டு! இதுவல்லவோ அறுவை சிகிச்சை! அல்லாஹ்வின் அளப்பரிய கருணையை பார்த்து என் கண்ணீர் சுரக்கிறது!)
9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
★(அட்டாக் அட்டாக்!)
9:35. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).
★(இன்னும் கொஞ்சம் மிரட்டல்! காபிர் நீ செத்த உடனே நரகத்தில போட்டு நெத்தி விலப்புறத்துல எல்லாம் சூடு போடுவாரு அல்லாஹ்! ஜாக்ரதை! ஆனா அவர் குன் என்று சொன்னதும் உருவாயிடும்! அது வேற.. இதில காபிர் சாவற வரைக்கும் அல்லாஹ் வெயிட்டிங்.. அதுவும் மூமுன் கழுத்தை வெட்டி காபிர் சாவணும்.. ஜூப்பரு.)
9:38. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.
★(எல, சண்டைக்கு போயி காபிரை குத்து கொல்லுடான்னா சும்மா படுத்துகிறியே.. நீயெல்லாம் மூமினான்னு அல்லாஹ் வேதனைப்படுகிறார்! அவரு குன்னு நெனச்சா காபிரெல்லாம் காலியாய்டுவாங்க.. ஆனா அது அவரால முடியாது. பிளீஸ் நீ போயி காபிரை குத்துகொல்லுன்னு அல்லாஹ் உன்னை புடிங்கிஎடுக்கிறார்.
அது என்னது மறுமை என்று கேட்பவர்களுக்கு “அத்தாட்சி” பின்னால் வருகிறது! )
9:39. நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது – அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்.
★(ஆனா காபிரோட மனதை மாற்ற முடியாது! அவனை மூமின் வெட்டிகொல்லத்தான் வேண்டியிருக்கிறது!)
9:41. நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் – நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.
★(பாருங்கய்யா.. நம்ம ஹூரிபிரியன் மாதிரி, இப்ப என் கையில் ஏகே 47 இல்லையே, குண்டுஇல்லையேன்னு காரணம் சொல்லமுடியாது. என்ன இருக்கோ அத வச்சிக்கினு காபிரை அடிங்கறார் அல்லாஹ்.)
9:44. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டவர்கள், தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து, போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவேமாட்டார்கள் – பயபக்தியுடையவர்களை அல்லாஹ் நன்கு அறிவான்.
★(எல, என்ன அனுமதி உண்டா, இல்லையான்னெல்லாம் விவாதம் பண்ணிகிட்டிருக்க? இப்ப காலிபா இல்லை, நாம காபிரை அடிக்கலாமா கூடாதான்னு ஒரு மூமின் விவாதம் பண்ணறாரு. இன்னொருத்தர், நமக்கு காலிபாவை உருவாகிக்கிட்டு காபிரை அடிப்போம், சரி நாந்ந்தான் அந்த காலிபாங்கறார். இதெல்லாம் சும்மா மவனே.. அனுமதி கேட்டுகிட்டெல்லாம் நிக்காதடா.. சும்மா காபிர் கழுத்தை வெட்டக் கிளம்புலே.. என்று நச்சரிக்கிறார் அல்லாஹ்.)
9:45. (போரில் கலந்துகொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொள்ளாதவர்கள்தாம்; அவர்களுடைய இருதயங்கள் தங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன; ஆகவே, அவர்கள் தம் சந்தேகங்களினாலே (இங்கு மங்கும்) உழலுகின்றனர்.
★(நம்ம ஈமாந்தாரிகள்கிட்ட கேட்டீங்கண்ணா, அல்லாஹ் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அளிச்சவுடனே மவனே காபிருக்கெல்லாம் கத்னாதான் என்று வீரவசனம் பேசுவார்கள். எலே .. யாரேல ஏமாத்துற, நான் வஹி விட்டுருக்கேன் பாருன்னு மிரட்டுகிறார்.)
9:49. “(வீட்டிலேயே தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்; என்னை சோதனைக்கு உள்ளாக்காதீர்கள்” என்று சொல்வோரும் அவர்களிடையே இருக்கிறார்கள்; அவர்கள் சோதனையிலன்றோ வீழ்ந்துவிட்டார்கள். மேலும் நிச்சயமாக நரகம் காஃபிர்களை (எல்லாப் பக்கங்களிலிருந்தும்) சுற்றி வளைத்துக் கொள்ளும்.
★(எனக்கு பயமாயிருக்கு.. அண்ணே உட்டுடுங்கண்ணே.. என்றெல்லாம் கெஞ்சுற கேட்டகிரியெல்லாம் காபிர் என்று அல்லாஹ் இந்த வசனத்தில் அவர்கள் தலை மீதே எறக்குகிறான்.)
9:52. (நபியே!) நீர் கூறுவீராக: ”(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?” ஆனால் உங்களுக்கோ அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம் – ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம்.
★(இனிமே, நீ காபிரை கொலை பண்ணி வெற்றியடையணும், இல்லைன்னா, நீ காபிர் கையால சாவணும். இது தவிர ஏறென்ன உனக்கு? சும்மா லுலுலாயி பண்ணிகிட்டு இருக்காதல என்று காககககே உசுப்பேற்றுகிறார்.)
9:63. எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவில்லையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் – இது பெரும் இழிவாகும்.
★(அல்லாஹ்வை கடவுள்னு ஒத்துகிடலைன்னா அவன் அல்லாஹ்வுக்கு விரோதம். எவன் ரசூலை ரசூல் என்று ஒத்துக்கிடலையோ அவன் ரசூலுக்கு விரோதம். அதாவது இஸ்லாத்தை ஒத்துக்கிடலைன்னா அவன் காபிர் அவனுக்கு நரகநெருப்புதான். நரக நெருப்புல பாத்துகிடுன்னு அவன் சாவுற வரைக்கும் சும்மா இருக்க சொல்றார்னு நெனச்சிக்கிடக்கூடாதுன்னு இங்கணயே சமாதி பண்ணச்சொல்லி நச்சரிக்கிறார்.)
9:68. நயவஞ்சகர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் – அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.
★(நரகத்துல காபிரையெல்லாம் அல்லாஹ் சுடப்போறாருன்னு க.கா.கே சொல்றாரு. அதுக்காக இங்கண காபிரை எப்படியோ இருக்க உடுன்னா சொல்றாரு? அடுத்த வசனத்தை படிங்கோ!.)
9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் – அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும்.
★(அல்லாஹ் மூமின்களோட ஒரு டீல் போடறான். உனக்கு சுவனம் தரேன், பதிலுக்கு நீ போய் காபிரை கொல்லு! காபிரை நீ கொல்லு, இல்லாட்டி காபிர் உன்னை கொல்லட்டும். இதுதான் அல்லாஹ் போடற டீல்! (ஹூரிப்பிரியர்கள் கவனிக்கவும்! ) தவ்ராத்திலும் இன்ஜீலிலும் கூட இதத்தான் அல்லாஹ் எறக்குனானாம். அத நஸரியாக்களும் யூதர்களும் திரிச்சிபிட்டானுங்கள்!.)
9:113. முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.
★(அல்லாஹ்வோட இன்னொரு சாமியை கும்பிடுபவன் சொந்த அப்பா மகன் அம்மா மனைவியாயிருந்தாலும் அவுகளை வெட்டித்தான் ஆவோணும். அல்லாஹ் சொல்றதா காககககே சொல்றார்!.)
9:120. மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல; ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன – நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
★(”உயிரினும் மேலான” என்று நம்ம மூமின்கள் அடிக்கடி முகம்மதுவை சொல்வது இதனால்தான். ஏனென்றால் அல்லாவே அப்படித்தான் சொல்றார். ஒவ்வொரு மூமினும் அவரவர் உயிரை விட முக்கியமாக காககககேவை கருத வேண்டும் என்று.)
9:123. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் – நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
★(அடுத்திருக்கும் என்றால் பக்கத்து வீடு என்று பொருள். நம்ம தக்கியா பாய்ஸ் சொல்றது மாதிரி பக்கத்து வீட்டில் இருக்கும் காபிர்களிடம் ரசம் வாங்கி குடித்து ஒண்ணா ஒண்ணுக்கு போக முடியாது. காபிர்கள் மூமின்களிடமிருந்து கடுமையையே காணவேண்டும் என்று அல்லாஹ் சொல்றார்.)
சும்மா உட்கார்ந்திருக்கிற முஸ்லீம்களையும் விரட்டி... எதற்காக அல்லாஹ் போய் காபிர்களையும் முனாபிக்குகளையும் கொல்லு கொல்லு என்று உயிரை எடுக்கிறார் என்று மூமின்கள் சிந்திக்க வேண்டும்?

 

உசுப்பேத்தி உசுப்பேத்தியே மூமின் உடம்பை ஏன் இந்த முகம்மது ரணகளமாக்க வேண்டும் என்று கேள்வி எழலாம்...
ஆம் .... எதுக்கு ?


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard