கார்த்தி சிதம்பரம் மற்றும் ப.சிதம்பரம் மீது சுவாமி சமீபத்தில் புதிய புகார்களை கூறியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஏர்செல் நிறுவனத்தை மாக்சிஸ் நிறுவனம் கையகப்படுத்துவதற்கு முன்பு கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனமான அட்வான்டேஜ், ஏர்செல்லுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஒப்பந்தம் மூலம் கார்த்தியின் நிறுவனத்திற்கு ரூ. 26 லட்சம் கிடைத்தது.
இந்த ஒப்பந்தம், பணப் பரிவர்த்தனை ஆகியவை ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்தது.
ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக தற்போது உள்ளார். எனவே கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐயால் விசாரணை நடத்த முடியாத நிலை நிலவுகிறது. இதனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
ஆனால் இந்தப் புகாரை காங்கிரஸ் கட்சி மறுத்திருந்தது. ரூ. 26 லட்சம் பணம், கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு நிர்வாக ஆலோசனைக்காக கொடுக்கப்பட்ட கட்டணம்தானே தவிர வேறு எந்த வகையிலும் வந்த பணம் அல்ல என்று கூறியது காங்கிரஸ். மேலும் ஏர்செல் நிறுவனத்தில் அட்வான்டேஜ் நிறுவனம் எந்த பங்குகளையும் வைத்திருக்கவில்லை என்றும் காங்கிரஸ் கூறியது.
இந்த நிலையில் சுப்பிரமணியம் சாமி மீது கார்த்தி சிதம்பரம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.