New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் சமணச் சமயம் இல்லயே


Guru

Status: Offline
Posts: 24459
Date:
திருக்குறள் சமணச் சமயம் இல்லயே
Permalink  
 


திருக்குறள் சமணச் சமயம் இல்லயே

பா.வீரமணி

சிறந்த ய்வாளர்களுள் சிலர் திருக்குறளைச் சமணம் சார்ந்த நூலென்றும், சமணச் சிந்தனைகளே திருக்குறளில் இடம் பெற்றிருக்கின்றன வென்றும் கூறியுள்ளனர். இவர்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.க, பேராசி¡¢யர் வையாபுரி பிள்ளை மயிலை. சீனி வேங்கடசாமி கியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள்ளும், திருக்குறளிலுள்ள சமணக் கருத்துகளைச் சற்று வி¡¢வாக எழுதியவர் மயிலையாரேவர். தலால் மயிலையா¡¢ன் கருத்துகளையும், சமணத்தின் சில அடிப்படைக் கொள்கைகளையும் திருக்குறளுடன் ஒப்பிட்டு நோக்குவதும் இக்கட்டுரையின் நோக்கமாகும். அவற்றைச் சுருங்க நோக்குவோம்.

‘சமணர் மட்டும் தமது அருகக் கடவுளின் திருவடியைக் கூறும்போதெல்லாம் மலர் போன்ற திருவடி என்று கூறுவது மட்டுமன்றி, மலர்மேல் நடந்த திருவடி என்றும் யாண்டும் கூறியிருக்கின்றனர். ஜைன சமய நூல்களிலிருந்து எடுத்துக்காட்டிய மேற்கோள்களால் ~மலர்மிசை ஏகினான் என்று திருவள்ளுவர் கூறியது, அருகக் கடவுளையே என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக விளங்குகிறது.

‘அறவாழி அந்தணன் என்பவர் யார்? அவர் எந்தக் கடவுள் என்பதை ராய்வோம். அறக்கடவுளாகிய அந்தணன் என்று பொருள் கொள்வதைவிட தரும சக்கரத்தையுடைய அந்தணன் என்று பொருள் கொள்வது சிறப்புடையதாகத் தோன்றுகிறது. நூல்களிலே ஜைனருடைய அருகக் கடவுள் அறவாழியை உடையவர் என்று கூறப்படுகிறார். கவே அறவாழி அந்தணன் என்று குறிக்கப்படுவர் ஜைனருடைய அருகக் கடவுள் எனக் கொள்ளத்தகும்”.

மயிலையா¡¢ன் இந்தக் கட்டுரை வெளிவருவதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே இலங்கைப் பெரும்புலவரான புலோலி. தில்லைநாத நாவலர், மேற்கண்ட தொடர்களைக் கொண்டு வள்ளுவரைச் சமணரெனக் கொள்வதைத் திறம்பட மறுத்துள்ளார்.

‘மலர்மிசையெழு தருபொருள் நியதமு முணர்பவர்”

-என்று திருஞான சம்பந்த மூர்த்திகளும்,

‘ஏ¡¢யாய தாமரை மேலியங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே”

-என்று திருநாவுக்கரசு நாயனாரும்,

‘போதகந்தோறும் புரிசடையானடி”

-என்று திருமூலர் திருமந்திரத்தானும்,

‘மனைகமலமற மலர்மிசை யெழுதரும்”

-எனத் திருவாய் மொழியில் சடகோபர் கூறுதலானும்,

இம்மூர்த்திகளை யெல்லாம் விடுத்து ‘மலர்மிசை ஏகினான்” என நாயனார் அருகனைக் கூறினார் என்றால் அஞ்ஞான விருத்தியே என்க.”

மேலும் அருகனுக்கு அறவாழி வேந்தன் என்பதன்றி ~அறவாழி அந்தணன்| என்பது பெயரன்மையானும், வேந்தனுக்கும் அந்தணனுக்கும் தம்முள் வேற்றுமை பொ¢யதாகலானும் அறவாழிவேந்தன் என்பது தரும சக்கரத்தையுடைய அரசன் என்னும் பொருட்டாகலின் சக்ரம் வேந்தனுக்கன்றி, அந்தணனுக்கியைதல் சிற்ப்பின்றாகலானும், நாயனார் அறக்கடவுளெனும் உருவகப் பொருட்டாகவன்றி, அறச்சக்கரமென்னும் பொருட்டாகக் கூறாமையானும், அருகனுக்கும் அறவாழி அந்தணனுக்கும் வெகுதூரம் என்க” என்று மிக நுட்பாகத் தில்லை. நாத நாவலர் மறுக்கிறார். இம்மறுப்பின் வழி மயிலையா¡¢ன் முடிவு சா¢யன்று என்பதை உணரலாம்.

மற்றும் வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் வாலறிவன், வேண்டுதல் வேண்டாமைஇலான், தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான்| என்று பலவிடங்களில் இறைவனின் பண்புகளை பேசுகிறாரேயன்றி, அவனின் உருவத்தையோ, யுதத்தையோ எங்கும் குறிப்பிட்டார் அல்லர். எனவே, தரும சக்கரம் உடைய அந்தணன் எனக்கொண்டு அது சமணக் கடவுளைத்தான் குறிக்குமெனவும் ‘ மலர்மிசை ஏகினான்” என்பதும் அருகனைக் குறிக்குமென்பதும் பொருந்தா என்பதே உண்மை.

திருக்குறளில் உள்ள இத்தொடர்களைக் கொண்டு வள்ளுவா¢ன் சமயத்தை ய்வதைக் காட்டிலும், சமணத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு ய்வதே சிறந்தது, ஏற்றது.

சமணச் சமயம் கடவுளை ஏற்பதில்லை. உயிர்களுக்குக் கன்ம பலன்களைப் (வினைகளை) புசிக்க வைக்கக் கடவுள் தேவையில்லை என்றும், கன்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரும் என்றும் சமணம் கூறுகிறது. னால் வள்ளுவம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. மக்கள் இறைநெறியில் நின்றால் தான் துன்பங்களையும், விளைகளையும் கடக்க முடியும் என்று அது வலியுறுத்துகிறது. உயிர்களுக்குக் கன்மங்கள் தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்) பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக் கீழுள்ள குறட்பாக்களினால் நன்கு உணரலாம்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்பூ¢ந்தார் மாட்டு

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

‘வகுத்தான் வகுத்த வகையல்லர்”

என்றும் கூறியிருப்பதால் ஊழை வகுப்பவன் இறைவன் என்பதே அவர் கருத்தாகும். வகுத்தான்| என்பது ஊழைக் குறிப்பதாயினும் ஈங்கு இறைவன் என்று பொருள் கொள்வதே ஏற்புடைத்து.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு – 4 என்றும்,

இருள்சேர் இருவினையும் சேரா – 5 என்றும்,

அறவாழி அந்தணன் தாள் சோந்தார்க் கல்லால் – 8 என்றும்,

பிறவிப் பெருங்கடல் நீத்துவர் – 10 என்றும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை – 350 என்றும்,

திரும்பத்திரும்ப எல்லாவற்றிற்கும் மூலமுதல்வன் இறைவன் எனறே அவர் கூறுவதால், இங்கு வகுத்தான்| என்று கூறியிருப்பதை இறைவன் என்று பொருள் கோடலே ஏற்றது. வினையை வகுத்து ஊட்டும் முதல்வன் இறைவனேயென்று வள்ளும் கூறுவது சமணத்துக்கு நேர்மாறானது. இறைவனை மறுக்கும் சமணம் எங்கே? இறைவனை ஏற்கும் வள்ளுவம் எங்கே? இ•து அடிப்படை மாறுபடன்றோ!

மேலும், ஊழைக் காட்டிலும் வலிமையுடையது வேறொன்று இல்லையென்றும், வினைப்பயனை யாராலும் தவிர்க்க முடியாது என்று வலியுறுத்துவது சமணம். னால், வள்ளுவம் ஊழை ஏற்றுக் கொண்டாலும் அதனை உலையா உழைப்பினால் புறம் தள்ளலாம் என்பது அதன் துணிபு. இதுவும் சமணத்துக்கும் வள்ளுவத்துக்கும் அடிப்படையிலுள்ள முரணாகும். வள்ளுவர் ஊழுக்கெதிராக ள்வினையுடைமையை வகுத்திருப்பது இந்தியச் சிந்தனை மரபில் ஒரு புதிய அத்தியாயம் கும். பெளத்தம் கூட, ஊழை வெல்ல வேண்டுமெனக் கூறியிருந்தாலும், யாமறிந்த வரையில் மனித முயற்சிக்கு (ள்வினைக்கு) வள்ளுவம் தந்த அழுத்தத்தை அது தரவில்லை என்பதே உண்மையாகும்.

தெய்வத்தான் கா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும் (குறள்.619) என்றும்,

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்

தாழா துஞற்று பவர் -(குறள் 620) ; என்றும்

வள்ளுவம் பொ¢தும் வலியுறுத்துவது, சமணத்துக்கு முற்றிலும் மாறானது.இக்கூற்று இந்தியத் தத்துவ மரபுக்கே சிறப்புத் தருவது.

சமணத்தின் உயிர்க்கொள்கை துறவறமேயாகும்.

சமணர் என்றாலே துறவி என்றே பொருளாகும். துறவு பூண்டோரே வீடுபேறு அடைவர் என்பது சமணக் கொள்கை. சமணத்தைப் போன்று பெளத்தம் அத்துணைக் கடுமையாகத் துவவறத்தைக் கூறாவிடினும், ய்வாளர்கள் இரண்டு சமயங்களையும் துறவறச் சமயங்களென்றே கூறுவர். வள்ளுவம் துறவறத்தை மேற்கொள்வது உண்டு. வள்ளுவர் அனைத்துப் பகுதியினர்க்கும் அறம் கூற விழைந்தவராதலின், அவர் துறவறத்துக்கும் ஓரளவு இடம் தந்தார். எனினும் இல்லறத்தையே பொ¢தும் போற்றினார்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்

போஓய்ப் பெறுவது எவன் (குறள் – 46)

துறந்தா¡¢ன் தூய்மை உடையர் இறந்தார்வாய் (குறள் – 159)

இன்னாச் சொல் நோற்கிற்பவர்

;வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்டும் (குறள் – 50)

இக்குறட்பாக்களின் வழித் துறவறத்தைத் தவிர்த்து இல்லறத்தை எப்படிப் போற்றி வலியுறுத்துகிறார் என்பதை நன்கு தெளியலாம். இவையாவும் சமணத்துக்கு மாறானவையாகும்.

அறத்துப்பாலிலுள்ள 38 அதிகாரங்களில் துறவறத்துக்கு 15 அதிகாரங்களும், 22 அதிகாரங்கள் இல்லறத்தார்க்கும், ஓர் அதிகாரத்தை இரு அறத்தார்க்கும் கூறியுள்ளார். ஏனைய பொருட் பாலிலும், காமத்துப் பாலிலும் உள்ள அதிகாரங்கள் யாருக்கு உ¡¢யன என்பதைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை. இவற்றிலிருந்து வள்ளுவா¢ன் சமணத்துக்கு மாறான இல்லறக் கோட்பாட்டை நன்கு உணரலாம்.

சமணம், அச்சமயத் துறவிகளுக்கு ஏழு தா;மங்களை விதித்தது. அத்தர்மத்தை அவர்கள் யதிதா;மம் என்றார். அவை உலோசம், திகம்பரம். நீராடாமை, தரையிற் படுத்தல் பல் தேய்க்காமை, நின்று உண்ணல், ஏக புக்தம் என்பர். வள்ளுவம் இவற்றிற்கு மாறானது.உலோசம் என்பது தலையிலிருந்து மயிரைக் களைவதாகும். . வள்ளுவரோ மழித்தலும் நீட்டலும் வேண்டா – 280 என்று கூறியிருப்பதால் உலோசத்தை அவர் ஏற்கவில்லை என்பதை உணரலாம்.

திகம்பரம் என்பது டையின்றி இருப்பதை குறிக்கும். வள்ளுவரோ ‘ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல – 1012 என்றும் ‘உடுக்கை இழந்தவன் கைபோலும் – 788 என்றும், உடையின் இன்றியமையாமையைக் கூறுவதால் வள்ளுவர் திகம்பரத்துக்கு மாறானவர் என்பதை அறியலாம். மற்றும் அவர் புறந்தூய்மை நீரான் அமையும் – 298 என்று கூறுவதால் சமணம் கூறும் நீராடாமையை ஏற்கவில்லை என்பதை உணரலாம். மென்தோள் துயிலின் இனிது கொல் – 1191 என்று அவர் கூறுவதாலும், தரையிற் படுத்தலை எங்கும் கூறாததாலும், அதற்கு அவர் மாறானவர் என்றும் தெளியப்படும். நின்று உண்ணல், ஏக புக்தம் (ஒரு வேளை மட்டும் உண்ணல்) இவற்றை வள்ளுவர் துறவறத்திலோ, மருந்து அதிகாரத்திலோ குறிப்பிட்டார் அல்லர். . அகத்தூய்மையும், புறத்தூய்மையையும் வலியுறுத்தும் அவர், பல் தேய்க்காமையை விரும்புவாரா? மாட்டார். ‘பணிமொழி வாலெயீறு ஊறியநீர் 1121 என்ற குறட்பாவிலுனுள்ள “வாலெயிறு” என்பது தூய்மையான பற்களையே குறிக்கும். இதிலிருந்து பல்தேய்க்காமையை அவர் சிறிதும் விரும்பாதவர் என்பதை உணரலாம்.

சமணர் இரத்தன திரயத்தை முக்கியக் கோட்பாடாய் கூறுவர். இரத்தன திரயம் என்பது நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் கியவையாகும். இவற்றைச் சமணர் நோக்கிலோ, இரத்தன திரயப் பொருளிலோ அவர் எங்கும் விளக்கினார் அல்லர். வள்ளுவம் கூறும் கூடாவொழுக்கம், அவா அறுத்தல், மெய்யுணர்வு கியவை இரத்தன திரயத்திற்கு வேறானவை. இரத்தன திரயத்துக்கு மாற்றாக வள்ளுவர்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய் -(குறள் 360)

என்பவற்றைக் குறிப்பிடுவதால் அவர் மாற்றுக் கொள்கையுடையவர் எனக் கூறலாம்.

சமணர் இன்னா செய்யாமையை, எல்லை கடந்து தித உணர்வில் வலியுறுத்தினர். மூக்கின்வழி காற்றை உட்கொண்டால், காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும் என்பதற்காக மூக்கில் துணியைக் கொண்டு மூடிக் கொண்டனர். மரங்களைச் செதுக்குவதாலும், கொளுத்துவதாலும், மரத்திலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்பதற்காகத் தச்சுத் தொழிலை அவர்கள் தடை செய்தனர். இதனால், பூமியை உழுதால், மண்ணிலுள்ள புழு பூச்சிகள் அழிந்துவிடும் என்பதற்காக உழவுத் தெழிலில் சமணர்கள் ஈடுபடக்கூடாதென அவர்கள் விதித்தனர். மனுநீதியோ உழவுத்தொழிலை இழிந்தோர் தொழில் என்றது.

உழவுத்தொழிலை மனுநீதி மறுத்தற்கும், சமணம் மறுத்ததற்கும் வேறுபாடு உண்டு. சமூகத்தில் சமநீதி ஏற்படாமல் இருக்க மனுநீதி அதனை இகழ்ந்தது. சமணமோ, வரம்பு கடந்த இரக்கத்தை முன்னிட்டு மறுத்தது. னால், வள்ளுவமோ உலகியல் நடப்பைக் கொண்டு உழவுத் தொழிலைப் போற்றியது.

சுழற்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்

உழந்தும் உழவே தலை (குறள் – 1031)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் – 1033)

-இக்குறட்பாக்களின் மூலம் வள்ளுவம் சமணத்துடன் எத்துணை மாறானது என்பது பெறப்படும்.

மேலும், சமணம் பெண்களைத் தாழ்ந்த பிறவியாகக் கருதியது. பாவம் செய்தவரே பெண்ணாகப் பிறக்கின்றனர் என்றும் கூறியது. பெண் வீடுபேறு அடைய வேண்டுமாயின், அடுத்த பிறவியில் ணாகப் பிறந்தால்தான் முடியும் என்றது. இவை போன்ற கருத்துகளைச் சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற சமண நூல்களிலும் காணலம். வள்ளுவம் இவற்றிற்கு முற்றிலும் மாறானது.

வள்ளுவம், பெண்களின சிறப்பை எண்ணி ‘வாழ்க்கைத் துணைநலம்” என்ற அதிகாரத்தை வகுத்து ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள -54 என்றும், வேறொரு அதிகாரத்திலும் ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண¦;டாழுகின் உண்டு -974 என்றும், மதித்துப் போற்றியது. சமணம் காமத்தை இகழ்ந்து கடிந்தது. வள்ளுவமோ, இருபத்தைந்து அதிகாரங்களை வகுத்துக் காமத்தின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது. இவ்வாறு, பல்லாற்றான் அடிப்படையில் சமணத்துக்கு மாறான கருத்துகளை வள்ளுவம் வலியுறுத்தியிருக்க, மயிலையார் போன்றோர் வள்ளுவத்தில் சமணக் கருத்துகளே மிகுந்து தோன்றுகின்றன. என்று கூறியிருப்பது ஏற்க முடியாததேயாகும்.

பா.வீரமணி__________________


Member

Status: Offline
Posts: 11
Date:
Permalink  
 

Thirukural is said to be neutral, but more close to Hinduism.__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

வள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல் September 16, 2011

சௌம்யநாராயணன் [பிரவாஹன்] http://www.jeyamohan.in/?p=20607

திருக்குறள், பொருட்பால், ஒழிபியலில், பெருமை எனும் அதிகாரத்தில் வருகின்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (972) என்ற குறளுக்கு தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், பொருளதிகாரம், களவியல், நூற்பா எண். 90 – “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின்  ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோனாயினுங் கடிவரை இன்றே” என்ற நூற்பாவில் வருகின்ற ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்பதற்கு, ஒப்பு பத்துவகைப் படும் என்று கூறுகிறார். அதை  மெய்ப்பாட்டியல் சூத்திரம் (25) “பிறப்பே குடிமை ஆண்மை, ஆண்டோடு / உருவு நிறுத்த காம வாயில் / நிறையே அருளே உணர்வொடு திருவென / முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” என்பதைக் கூறி இதில் பிறப்பு என்பதற்கு “பிறப்பாவது அந்தணர், அரசர், வணிகர் . . . என்றாற்போல் வருங் குலம். குடிமையாவது, அக்குலத்திலுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் ‘குடிமை’ என்றார்” என்று சொல்கிறார்

ஆகவே ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான்” எனப் பிறரும் குலத்தின் கண்ணே சிறப்பென்பது ஒன்று உண்டென்று கூறினராகலின்” என்கிறார்.  குலம் என்பது பிறப்பினால் வரக்கூடியது எனில், “குலத்தின் கண்ணே சிறப்புண்டு” எனும்போது அது பிறப்பின் வழியே வந்த சிறப்பு என்றாகிறது. இப்படியான நிலையில் “பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதற்கு என்ன பொருள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.

நான்:   அதைப்பற்றி கீதை உரையில் எழுதியிருக்கிறேன்

சௌம்யநாராயணன்: சரி..பார்க்கிறேன்

நான்: சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஜ என்பதற்கும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்பதற்கும் வேறுபாடே இல்லை

இவர்கள் கீதையிலும் குறளிலும் முதல் வரியை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்

சௌம்யநாராயணன்: சரிதான்

நான்: நால் வருணங்களும் என்னால் படைக்கப்பட்டன, இயல்புகள் செயல்களின் அடிப்படையில் – கீதை [பிறப்பால் அல்ல]

பிறப்பு எல்லா உயிர்களுக்கும் சமம் .ஆனால் செய்யும் செயல்களால் சிறப்புகள் வேறுபடுகின்றன- குறள்

அதாவது உயிர்கள் சமம் அல்ல, செயல்மூலம் அவற்றின் தரம் மாறுபடுகிறது

சௌம்யநாராயணன்: இல்லை செய்தொழில் வேற்றுமையான் என்பதைக் கொண்டு அவ்வாறு சொல்லிவிட முடியாது… குறளைப் பொறுத்தவரையிலும் பிறப்பினால் ஒத்த அந்தணர்களுள் அல்லது அரசர்களுள் அல்லது வைசியர்களுள் தங்களின் செயலினால் மாறுபடுவோரைக் குறிப்பதாக நான் கருதுகிறேன்

காரணம், மறப்பினும் ஓத்துக் கொளலாகும் என்ற குறளையும் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது.

எனை வகையான் தேறிய பின்பும் வினைவகையான் வேறாகும் மாந்தர் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன்.

எடுத்துக்காட்டாக, ஒரு அந்தணர் அந்தணர்க்குரிய தொழில்கள் என வரையறுக்கப்பட்டவற்றையல்லாது வேறொன்றைச் செய்வாராயின் அவர் கீழாகவே கருதப்படுவார் என்பதுதான்.

நான்: அந்தக் குறளில், அல்லது அந்த அத்தியாயத்தில் அப்படி இல்லை. அது நீங்கள் கொள்ளும் பொருள். குறளுக்கு அது எழுதப்பட்டுக் குறைந்தது 500 வருடம் கழித்து பரிமேலழகர் அளித்த உரை அதற்கான முகாந்திரமாக அமையலாம். ஆனால் அது ஒருபோதும் கடைசிப்பொருள் அல்ல. வழிகாட்டுப்பொருளும் அல்ல.

சௌம்யநாராயணன்: பரிமேலழகர் அளித்த உரையில் நான் கூறியதெதுவும் இல்லை

நான்: இல்லை- பரிமேலழகர் அந்த குறளுக்குச் சம்பந்தமே இல்லாமல் வருணத்தை  எடுத்துகொண்டு வருகிறார்.  வருணந்தோறும் தொழிற்பாகுபாடுகள் வேறுபாடு பற்றி அந்த வரியில் சொல்கிறார்

சௌம்யநாராயணன்: அந்த வரிகளில் இல்லை என்பது இருக்கலாம்.. ஆனால், அவர் அதை மனதில் கொண்டிருந்தார் என்பதற்குத்தான், “மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” என்று சொல்லி இருப்பதாகத் தோன்றுகிறது.

நான்:  குறளின் அந்தவரிகளில் வருணம் பற்றி ஏதும் இல்லை.

சௌம்யநாராயணன்: மீண்டும் பார்க்கிறேன்..

நான் அதனால்தான் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரைக் குறிப்பிட்டிருந்தேன்

மேலும் வாராததனான் வந்தது உணர்தல் என்ற தொல்காப்பிய நூல் உத்தியை அடிப்படையாகக் கொண்டு குறளைப் பார்த்தேன்

நான்: பார்ப்பான் பிறப்பொழுக்கம் என்பது அக்காலத்தைய நம்பிக்கைகளில் ஒன்று. அது அவரவர் வர்ணத்து வேலையை அவரவர் செய்யாவிட்டால் தப்பு என்பதல்ல.

அன்றைய நோக்கில் பார்ப்பாருடையது தொழில் அல்ல, நெறி,தவம். ஒருவேளை உணவுண்டு, உறுதொழிலென ஏதும்செய்யாது, மூன்று தீ வளர்த்து மட்டுமே வாழவேண்டிய கடும் நெறி அது. அதைச் செய்யாதவர்கள் பிராமணர்களே அல்ல, அவர்களால் நாடு கெடும் என்ற நம்பிக்கையை சங்ககாலம் முதலே காணலாம். எங்கெல்லாம் பார்ப்பான் குறிப்பிடப்படுகிறானோ அங்கெல்லாம் அவனைத் தவசீலன், மெலிந்தவன், பசலை படிந்தவன், தீ கர்மம் செய்பவன் என்றே தமிழிலக்கியம் சொல்கிறது. அங்கே சொல்லப்படும் பிறப்பொழுக்கம் அதுவே.

சௌம்யநாராயணன்: அது சரிதான்…  வேளாப் பார்ப்பான் என்ற ஒரு குறிப்பும் உள்ளது.  அவர்கள் சற்று கீழாகவே கருதப்பட்டனர்

ஆனால், இதே பார்ப்பனர்கள் வாயில்களாகவும் இருந்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது

நான்: வள்ளுவரின் காலகட்டத்தில்- அதவாது சிலம்பின் காலகட்டத்தில் – வேள்விநெறியை நிராகரிக்கும் பார்ப்பார்கள் இருந்தனர். சிலம்பில் கோவலனின் மதுரைப் பயணத்தில் சந்திக்கிறான்.

குறள் வருண நெறியை இறுக்கமான ஒரு நியதியாக முன்வைக்கிறதென்பதற்கு ஆதாரங்களேதும் இல்லை. ஆனால் அது வருண சாதிக்கு நேர் எதிரான கலகக்குரலை எழுப்பவும் இல்லை.

சௌம்யநாராயணன்: வேள்வி நெறியை நிராகரிக்கும் என்று சொல்வதைவிட… பார்ப்பனர்களுக்கென்று ஒத்துக்கப்பட்டிருந்த தொழில் என்பதாகக் கொண்டு பார்க்கையில் கோயில் வழிபாடுகளில் பூசாரிகளாக இருந்தவர்களை எங்கே பொருத்துவது என்பது வினாவாகிவிடும்..

குறள் எந்த கலகக் குரலையும் எழுப்பவில்லை என்பது உண்மை..

ஆனால், அது சமத்துவத்தைப் போதிப்பதாக, அதுதான் தமிழ் நெறி என்பதாக ஒரு உருவேற்றம் நிகழ்ந்துள்ளது. அது சரியல்ல

அரச குலத்தவர்களில் மகுட தியாகிகள் என்றொரு பிரிவினர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.. அவர்களை அரச வர்ணத்தில் அல்லாது வேறிடத்தில் வைக்க முடியாது…

நான்: கோயில்களில் பார்ப்பார் பூஜைசெய்ய ஆரம்பித்ததெல்லாம் 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், பல்லவ சோழ காலகட்டத்தில். முற்காலத்தில் அவர்களுக்கும் கோயில்களுக்கும் சம்பந்தமில்லை. அவர்கள் வைதிகர்கள். வேத வேள்விசெய்பவர்கள்…ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னால் கோயில்களில் வள்ளுவர் [பறையர்ப்பிரிவினர்] கூடப் பூசை செய்துள்ளனர். உவச்சர்கள் பூசை செய்துள்ளனர். தென்னகக் கோயில்களில் 17 ஆம் நூற்றாண்டுவரைகூட அப்படித்தான்

வேதவேள்வியும் ஆலயவழிபாடும் ஆகமங்கள் மூலம் இணைக்கப்பட்ட காலகட்டம் மிக மிகப் பிந்தையது. அதுவே சைவ வைணவ பெருந்தெய்வ உருவாக்கக் காலகட்டம்…….. புராணங்கள் உருவான காலகட்டம்.

சௌம்யநாராயணன்: சங்ககாலத்தில் பறையர்கள் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர் என்பதுதான் பல்வேறு சான்றுகள் காட்டுகின்ற உண்மை.. இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்ப்பித்துள்ளோம்.

நான்: ஓ   அப்படியா? அனுப்ப முடியுமா?

சௌம்யநாராயணன்:   அனுப்புகிறேன்..

பெருந்தெய்வ உருவாக்கம் என்று சொல்லும்போது அது திட்டமிட்ட உருவாக்கம் போலதொனிக்கிறது..

தொல்காப்பியத்தில் சொல்லப்படுவனவற்றில் பெருந்தெய்வங்களும் உண்டு…

மாயோன்

முருகன்

நான்:  நான் உருவாக்கம் என்பதை ஒரு வரலாற்றுநிகழ்வு என்றே பொருள்கொள்கிறேன்

அது சுவாரசியமான ஒரு விஷயம்…பறையர்x பார்ப்பார் மோதல். அயோத்திதாசர் அதைப்பற்றிச் சொல்கிறார். பிராமணர்களை வேஷப்பார்ப்பார், அதாவது பூசைத்தொழிலை மோசடியாகக் கவர்ந்துகொண்டவர்கள் என்றே சொல்கிறார்.

இரு துருவ சாதிகள். ஆனால் பலவகையிலும் இணையானவை. தமிழ்ச்சாதிகளில் இரு ‘இண்டெலக்சுவல்’ சாதிகள் இவர்களே. இன்றுகூட தமிழிலக்கியத்தில் ஒரு தனிச்சாதி எனப் பார்த்தால் பறையர்சாதி எழுத்தாளர்களே அதிகம்

சௌம்யநாராயணன்: தங்கவேல், சிதம்பரநாதன் மற்றும் நான் சேர்ந்து சமர்ப்பித்தது..

நான்: ஓ

சௌம்யநாராயணன்: ஆம், அது உண்மை..

இடைக்காலத்தில் அவர்கள் பௌத்தத்தைத் தழுவியதால் சைவ, வைணவர்கள் அவர்களை ஒதுக்கியிருக்கலாம்..

பறையர்கள் இன்றைக்கும் உடலுழைப்புக்கு சற்று தயங்குபவர்கள் என்றே கூறலாம்..

குறிப்பாக, வட மாவட்டங்களில் வன்னியர்கள் கட்டுமானத் தொழிலாளர்களாக அதிக அளவில் ஈடுபட்டு ஒரு குறைந்தபட்ச கௌரவமான வாழ்க்கையை மேற்கொள்ளும்போது, பறையர் சமூகத்தவரில் குறைந்த எண்ணிக்கையிலேயே அத்தொழிலில் ஈடுபட முனைகின்றனர்.

விவசாயத் தொழிலுக்கு அவர்கள் வந்தது கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் என்பதாகக் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து தெரிகிறது..

நான்: அந்தக் கட்டுரையை அனுப்புங்கள்

சௌம்யநாராயணன்: இணையத்தில் இல்லை.. பின்னர் நகல் எடுத்து அனுப்புகிறேன்

நான்: பார்ப்போம்.   நன்றி__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

I take from Madurai Kamarajar University’s Kural Peedam established by
Dr. Mu.Varadarajanar, and Peedam selected Lecturer. Selvi.Kamatchi Sinivasan, who was born in a Saivite family in Srilanka, came to India, served various collages before Joining the Kural Peedam. She had converted to Christianity also. She was of highest repute for integrity, and Peedam asked her to bring Books 

1. குறள் கூறும் சமுதாயம்
2. திருகுறளும் விவிலியமும் (Tirukural and Bible)
3. குறள் கூறும் சமயம் ( Religion of Tirukural) and One more also.

The books were published by Peetam after the death of the Author, i.e., the views represented edited by A team of Experts who made final Edition.
The Author was selected for Her Strict Integrity, being a Christian Convert- as that was the time Deivanayagam was making with the political support of DMK rule and Pavanar links that Tiruvalluvar was Christian and Tirukural is a book based on Bible. The end result was that the Author Madam lost her beliefs on Christianity on researching Bible. Now let me come to the references of Anthanar in this.


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 30

The author of the book analysises the Relligious situation in Tholkappiyam to and takes all references of every song in Sangam Literature, Tholkappiyam, Silapathikaram and Manimekhalai and confirms the research view.

I QUOTE:
அந்தணர் நு¡ற்கும் அறத்திற்கும் தியாய்
நின்றது மன்னவன் கோல். 543

அந்தணர் என்னும் சொற்கு எவ்வுயிர்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் என வள்ளுவர் கூறினாராயினும் இங்கு அச்சொல் பிரமாணரைக் குறிப்பதாகக் கொள்வதெ பொருந்தும். அந்தணர் நூல் என்பதும் வேதம் முதலிய சமயனூல்களையே எனலாம். இவ்வாறே பழைய உரையாசிரியர்கள் அனைவரும் பொருள் கொண்டனர்.
அறுதொழிலோர் என சிரியர் குறிபிட்டதும் பிரமாணர்களையே யாதால் வேண்டும். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் ஏற்றல் என்னும் று தொழில்கள் அவர்க்குரிய என்பது சங்க காலத்தில் முன்பெ வகுக்கப்பட்டது. இவ்வாறு தொழில்கள் பதிற்றுபத்தினுள்ளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று றுபுரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் .. .. பதிற்றுபத்தது 24.
தொல்காப்பியரும் 
“ அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் சொல்-75 
எனப் பார்ப்பனரின் அறுதொழிலைக் குறிப்பிட்டார். வேதம் முதலிய சமயநூல்களைக் கற்பது சிறப்பாக அந்தணர் (பிரமாணர்) கடமை என அக்காலத்து நிலவிய கருத்தை வள்ளுவரும் ஏற்றுக் கொண்டார் போலும். 
ஓதுவித்தலும் அவர்கள் தொழில் கையினால் அந்தணர் அல்லாத பிறர்க்கும் 
(மன்னவர் வணிகர் குலத்தவரா?) வேதம் முதலிய நூல்களைக் கற்பித்த்வர் எனக் கருதலாம்.

பயன் குன்றும் அறுதொழிலோர் நு¡ல்மறப்பர்
காவலன் காவான் எனின். 560

மக்கள் வாழ்க்கையில் வேதம் முதலிய சமையநூற்கல்விக்கு இடம் உண்டு, அவை மக்கட்கு நன்மை பயப்பன என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப் படுவதனாலேயே அவற்றை தரிப்பது மன்னனின் கடமையாயிற்று.
காவலன் காவானெனின் அறுதொழிலோர் நு¡ல்மறப்பர் என எச்சரிக்கப் படுவதும் சமய நூல்கள் மறக்கப் படுதல் சமுதாயத்திற்கு கேடு எனக் கருதப் படுவதனாலேயே.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134

இக்குறள் பார்ப்பாரையும் அவர் ஓதும் வேதத்தையுமே குறிக்கிறதென்பது தெளிவு. “மறப்பினும் ஓத்துக் கொளலாகும்” (134) என்ற தொடரும் பார்ப்பான் ஓத்தை(வேதம் ஓதக்கற்றதை) மறத்தலாகாது. ஒருகால் மறப்பினும் விரைவில் திரும்ப ஓதிக் கற்றுக் கொள்ளல் வேண்டும் என்ற் கருத்தைத் தரும்
பக்கம்-194,195.

On Kural which was interpreted as Valluvar being against Vedas, the Peedam Author again confirms

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259
தீ மூட்டி செய்யப் படும் வேள்வியைக் ரிய வழிபாடு முறையையே குறிப்பிடப் படுகின்றது. தேவர்களுக்கு உணவாகத் தீயிலிடபடும் பொருளையே வடமொழியில் ஹவிஸ் என்பர், அதுவே தமிழில் “அவி” யாயிற்று, .. அவிப்பொருள்களை நெருப்பில் சொரிந்து யிரம் வேள்வி செய்வதை விட ஒன்றின் உயிர் செகுத்து அதன் ஊனை உண்ணாமை நன்று என வள்ளுவர் இங்கு கூறினார். இதனால் வேள்வி தீயது என வள்ளுவர் கருதினார் எனல் குமா? வேள்வியையும் நல்லதாகக் கருதித்தானே வேள்வி செய்தலை விடக் கொல்லாமை நன்று என்றார். .. .. ரிய வேள்விக்களத்திலுமே உயிர்க்கொலையும் விலங்குபலியும் இல்லை. பசுயாகம் எனப்படும் சில வேள்விகளில் மட்டுமே விலங்குபலியளிப்பர். நெய், பால், தானியங்கள் தானியங்களினால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் கியவற்றை நெருப்பிலிட்டும் வேள்விகள் செய்வர் ( Author quotes this from " INDIA OF THE AGE OF THE BRAMANAS" book-iii, CHAP-2, The forms of Sacrifice- by Basu, Dr.Jogiraj.). எனவே உயிர்க் கொலையின்றி இவ்வாறு செய்யப்படும் வேள்விகள் வள்ளுவர்க்கு உடன்பாடு என்றே கொள்ளலாம். பக்கம் - 192,193.//
From Page-14 by Devapriya//

I further add

நாம் எல்லா நூல்களை படித்து ஓதி கற்கிறோம். ஆனால் வேதங்கள் ஏட்டில் எழுத்ப்படுவது கிடையாது. இது ஏன் எனில், bce 5000 -bce 1000 இடையே எழுத்ப்பட்டவை வேத உபநிஷதங்கள். வால்மிகி இராமாயணம் bce1000, மகாபாரதம் bce 600 வாக்கில், இதன் பின் வரையப்பட்ட பாணினியின் அஷ்டாத்யாயி மேலுள்ள இதிகாசங்களை அதில் அடக்கினார், ஆனால் இதன் வரைமுறையில் வேதங்கள் இல்லை, எனவே குரு பரம்பரையாக வாய்வழியே சொல்லித்தர இவை ஓதப்படும்.

ஓதாமல் ஒத்து சொல்லி தருவதாலும் பலரும் சேர்ந்து ஒத்து இவற்றை ஓதுவதாலும் வேதங்கள் ஓத்து என்னும் அற்புதமான தமிழ்பெயர் கொண்டது.

நாட்டிற்கு மழையின்மையை விட அறுதொழிலர் நூல்-வேதங்களை மறப்பர் எனவும் வள்ளுவர் தமிழர் மேன்மைக் கூற எதற்காக இப்படி பல தேவையற்ற பொருந்தாத விளக்கங்கள்.__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர். பெரியாரின் வரலாற்றை முதன் முதலில் பெரியார் உயிருடன் இருந்தபோது எழுதி, பெரியரால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அளவிற்கு பெரியாருக்கும் - அவரது இயக்கத்தோடும் தொடர்ந்த செயல்பூர்வமான தொடர்பை வைத்திருந்தவர்.

இறுதியில் பெரியாரின் திராவிட இயக்கத்தில் இருந்து வெளியேறி பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் இவரது வரலாறும் - இவர் எழுதிய பல புத்தகங்களும் மறைக்கப்பட்டும் - மறக்கப்பட்டும் வருகிறது. இவரது எழுத்துக்கள் மிக எளிமையானது. இலக்கியம் அறியாதவர்கள் கூட, மிக எளிமையாக இவரது எழுத்தின்பால் கவர்வர். அந்த அளவிற்கு இவரது எழுத்திற்கு வலிமையுள்ளது.

“தமிழர்களைப் பற்றித் தமிழ் இலக்கிய உண்மைகளை உணராதவர்களால் எழுதப்பட்ட வரலாறுகளே இன்று மலிந்து கிடக்கின்றன. தமிழர் வரலாற்றைப் பற்றி வெளிநாட்டினர் பலவாறு கூறுகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களிலே பயிற்சியில்லாத சரித்திரக்காரர்கள் என்னென்னவோ சொல்கின்றனர். இவர்கள் கூறுவதைவிடப் பழந்தமிழ் நூல்களைக் கொண்டு தமிழர் நாகரிகத்தை ஆராய்ந்தறிவதே சிறந்த முறையாகும்.”

“தொல்காப்பியர் காலத்துத் தமிழர் வாழ்வைப்பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாகத் தமிழ்மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் பழந்தமிழர் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்; பழந்தமிழர் வரலாறு, நாகரிகம் ஆகியவைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கியத்தின் சிறப்பைப் பற்றியும், வளர்ச்சியைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும். இதுவே இந்நூலை எழுதியதின் நோக்கம்.”

“தமிழகத்திலே இன்று இனவெறுப்பு தலைவிரித்தாடுகிறது. மொழிவெறுப்பு முறுக்கேறி நிற்கின்றது. நாகரிக வெறுப்பு நடனமாடுகின்றது. வரலாறு, நாகரிகம், பண்பாடு என்ற பெயர்களைச் சொல்லித் தமிழ்மக்களிடையே கலகத்தீயை மூட்டிவிடுகின்றனர் சிலர். இத்தகைய வெறுப்புத்தீ அணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழர் முன்னேற்றமடைவர்; தமிழ்மொழி வளர்ச்சியடையும்.”

“இன்று நடப்பது விஞ்ஞான யுகம். விஞ்ஞானவளர்ச்சி காரணமாகப் பண்டைய பழக்கங்கள் சிலவற்றைத் தவறு என்று சொல்லுகின்றோம். பண்டைய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை.”

“தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். 'தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். தமிழ்நாட்டிலே புகுந்த ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும், குருட்டு நம்பிக்கைகளையும் தமிழர்களிடம் புகுத்தினர் ' என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்.”

“ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் என்பது உண்மையன்று.”

“தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடையே இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் எண்ண வேண்டும். அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை.”

சாமி சிதம்பரனார் மேலும் சொல்கிறார்:

“இந்தியாவின் அடிப்படை நாகரிகம் ஒன்றுதான் என்று கூறும் சரித்திராசிரியர்கள் உண்டு. 'இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ' என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை. இந்தக் கொள்கைக்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கிறது.”

“இந்த நூலில் விளக்கப்படும் செய்திகள் கற்பனையோ, ஊகமோ அன்று. ஒவ்வொரு செய்தியும், தொல்காப்பியச் சூத்திரத்தின் மேற்கோளுடன் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சூத்திரத்தின் இறுதியிலும் அச்சூத்திரத்தின் எண், அதிகாரம், இயல் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன.” - என்றும் முன்னுரையின் இறுதியில் அழுத்தமாய்க் குறிப்பிடுகிறார் சாமி சிதம்பரனார்.

இந்த நூலில் திராவிடஸ்தான் அரசியல்வியாதிகள் காலம்காலமாய் அப்பாவித் தமிழ்மக்களை ஏமாற்றி ஏய்ப்பதற்குச் சொல்லிவரும் பல பொய்கள் உடைத்தெறியப்பட்டுள்ளன.

1. நால்வகை வகுப்புப்பிரிவுகள் வெளிநாட்டினர் கொண்டுவந்ததல்ல என்ற உண்மையை புறத்திணை இயல்சூத்திர ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்கிறார் ஆசிரியர். (பக்கம் - 55,56)
2. தொல்காப்பியர் 'அந்தணர் மறைத்தே ' என்று குறித்திருப்பதும், எட்டுவகை (கந்தருவம் உள்ளிட்ட) மணங்களைக் குறிப்பிட்டிருப்பதும் அவை (தொல்காப்பியர் சொல்லும் மறை என்பது) வடமொழி வேதங்கள்தாம் என்பதற்குப் போதுமான சான்றாகும். அவை தமிழ்வேதங்கள் என்பது பொருந்தாது. (பக்கம் - 81-84)
3. தொல்காப்பியம் கடவுளையும் வேறுபல தெய்வங்களையும் மறுக்கவில்லை. தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்று துணிந்து கூறலாம். (பக்கம் - 86)
4. தொல்காப்பியர் காலத்திலே திருமால், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை, சூரியன், சந்திரன், அக்கினி முதலிய தெய்வங்கள் வணங்கப்பட்டன. இன்னும் கூற்றுவன், தேவர்கள், பேய்பிசாசுகளும் இருப்பதாகவும் தமிழர்கள் நம்பினர். தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலிருந்தது. தமிழர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர் என்பதற்கு இவை போன்ற பல ஆதரவுகள் தொல்காப்பியத்திலே காணப்படுகின்றன. இவ்வழக்கம் தமிழர்களிடம் இயற்கையாகவே தோன்றியதாகும். வேறு எவராலும் புகுத்தப்பட்டதும் அன்று. போதிக்கப் பட்டதும் அன்று. (பக்கம் - பக்கம் 92,93)
5. 'பண்டைத் தமிழகத்திலே உருவ வணக்கம் இருந்ததில்லை; அது இந்நாட்டிலே குடிபுகுந்த ஆரியரால் புகுத்தப்பட்ட வழக்கம் ' என்று சிலர் சொல்லுகின்றனர். இதற்கு ஆதரவு ஒன்றுமில்லை. இது வெறுப்பைத் தூண்டும் வீணான கூற்று. உருவ வணக்கமுறை எல்லா நாடுகளிலும் இருந்தது. பழைய பைபிளைப் படிப்போர் இதைக் காணலாம். பல நாட்டு வரலாறுகளிலும் இதைக் காணலாம். தமிழ்நாட்டிலும் உருவ வணக்கமுறை தொன்றுதொட்டே ஏற்பட்டிருந்தது என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். (பக்கம் - 94)
6. தமிழ்மொழி தொல்காப்பியத்துக்கு முன்பாகவே பிறமொழிச் சொற்களை ஏற்று வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் ஆதாரத்துடன் காட்டுகிறார்: பழந்தமிழ்ச் செல்வமாகிய தொல்காப்பியத்திலேயே பல வடசொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். திசை, பூதம், பிண்டம், ஏது (ஹேது), பயம், மந்திரம், நிமித்தம், தாபதம், அவிப்பலி, அமரர், மங்கலம், மாயம், காரணம், கருமம், கரணம், அந்தம், அந்தரம், புதல்வன், வதுவை, பதி, மாத்திரை, படலம், அதிகாரம், வைசிகள் இவைகள் எல்லாம் வடசொற்கள் என்று கருதப்படுகின்றன. இன்னும் பல வடசொற்களும் தொல்காப்பியத்தில் பலவிடங்களில் காணப்படுகின்றன. இன்றுள்ள தமிழ்நூல்களிலே தலைமையான நூல் என்று எண்ணப்படும் தொல்காப்பியத்திலேயே இவ்வாறு வடசொற்கள் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது. (பக்கம் - 130)

இறுதியாய் இன்றைய தமிழர்களுக்கு சாமி சிதம்பரனார் மிகுந்த வருத்ததுடன் கூறுவது:

“இன்று குறிக்கோளைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அடுக்குச் சொற்களைச் சேர்த்து எழுதுவதையே இலக்கியம் என்று எண்ணுகின்றனர். மற்றொரு சாரார் மறுமலர்ச்சி இலக்கியங்கள் என்ற பெயரில் எழுதும் வெறும் காமவிகாரத்தை வளர்க்கும் கட்டுக்கதைகளே இப்பொழுது மலிந்து வருகின்றன. தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு என்று எதை எதையோ எழுதிக் குவித்து வருகின்றனர். தனித்தமிழ் அன்பர்களும், காதல் வெறியர்களும் எழுதி வெளியிடும் புத்தகங்களிலே பெரும்பாலானவை தமிழையோ, தமிழ் இலக்கியங்களையோ வளர்ப்பதற்கு வழிகாட்டவேயில்லை. இவைகளிலே பெரும்பாலான புத்தகங்கள் மொழிவெறி, சாதிவெறி, இனவெறி இவைகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுதப்படுவன. மக்களிடம் இன்று வேரோடியிருக்கும் இத்தகைய வெறிகள் எல்லாம் அழிந்துபட வேண்டும் என்னும் ஆர்வத்தில் எழுதப்படும் புத்தகங்கள் மிகச்சிலதான்.


இதே போன்று இவர் சிலப்பதிகாரக் காலத்து தமிழ் நாடு என்ற நுல்லையும் எழுதியுள்ளார். அதிலும் இது போன்ற கருத்துக்களை அழுத்தமாகச் சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நூல் வெளியீடு:

தொல்காப்பியத் தமிழர் - சாமி சிதம்பரனார்,
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098.__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

Certainnly Casteism in Hinduism is not a Pleasant one and I quote GILBERT Slater- who gives from Maxmuller, and I Quote from Tamil Translation by PanmozhiPulavar Appadurai. 

மனுவில் குறிக்கப்பட்டு இன்று வழக்கிலுள்ள சாதி முறை வேதங்களின் மிகப் பழமையான சமயத் தத்துவங்களில் இடம் பெறுகிறதா? "இல்லை" என்ற ஒரேசொல்லில் நாம் அதை அழுத்தமாக மறுட்துவிடலாம். பெருஞ்சிக்கல் வாய்ந்த சாதி அமைப்பு முறைத் திட்டத்துக்கு வேத சூக்தங்களில் எத்தகைய தரமும் இல்லை. அது போலவே சூத்திரரின் இழிதகை நிலைமைக்கு தாரமோ; பல்வேறு வகுப்பினர் ஒருங்கே குழுமி வாழ, ஒருங்கே உண்ணப் பருகத் தடை விதிக்கும் எந்தச் சட்டமோ; பல்வேறு சாதியினர் தம்முள் ஒருவருக்கொருவர் மண உறவு கொள்வதைத் தடுக்கும் முறைமையோ; அத்தகைய மண உறவால் வரும் பிள்ளைகளுக்கு விலக்க முடியாத தீக்குறியிட்டுட் தீண்ல்த்தகாதவராக ஒதுக்கி வைக்கும் கட்டுப்பாடோ; எதுவும் அவற்றில் இல்லை. அத்துடன் சிவன், காளி கியவர்களின் அச்சந் தரும் செயல் முறைகளைப் பற்றீயோ; கண்ணனின் சிற்றின்பக் களியாட்டம் பற்றியோ; .. ... வேத்த்தில் ஒரு சுவடு கூடக் கிடையாது. கடவுளுக்குரிய மதிப்பைத் தமெதெனக் கொண்டு பழிசூழும் ஒரு குருமார் குழுவின் வீம்புரிமைகள், மனித இனத்தின் இல்லங்களை விலங்கினங்களினும் கிழாக இழிவு படுத்தும் முறை கியவற்றை தரிக்கும் எந்தச் சட்டமும் அவற்றில் இல்லை. குழந்தை மணத்திற்கு தரவோ, குழந்தை விதவைகள் மணத்தைத் தடைசெய்யவோ கணவன் பிணத்துடன் உயிருள்ள கைம்பெண்ணின் உடலையும் வைத்தெரிக்கும் பொல்லாப் பழக்கத்தை தரிவிக்கவோ அதில் ஒரு வாசகங் கூடக் கிடையாது. இவை யாவும் வேதத்தின் சொல்லுக்கும் பொருளுக்குமே மாறுபட்டவை." Quote frm Maxmuler “இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு”- கில்பர்ட் சிலேட்டர், தமிழ் கா.அப்பாதுரை. பக்கம் 40,41.

Now Tholkapiyam has in depth of Varna System. It denies Education to the Fourth, Fourth cannot enter trade at any time etc., Sangam Literature names many Sub-castes even such as “ Irular, Villiar, Pallar, Vettuvar, Aayar, barathavar, maravar, kuravar etc., Sangam Lit. mentions even Many Gotras of Brahmins such as “Kasiyaba, Vathula, Aathreya, Koutinya, Kousika” etc, and as per Vedic practice calling them “Twice Born” etc.,Bible has extensive Racism even practiced by Jesus, but that is not discussed always but ..
We have a Pratice of Telling our Problems to Religion and Missionaries have taught like that Barathiyar condemens it in his Short ARTICLE called மதிப்பு 
இந்தியாவை வெளியுலகத்தார் பாமரதேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக்கருவிக ள் பல. முதலாவது, கிறிஸ்துவப் பாதிரி. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிகள், தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படிட் தாழ்ந்து போய் மகட்தான அநாகரிக நிலையில் இருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மடத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்டைச் செய்வதாகச் சொல்லுகிறகள். இந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்த்ரிகளை (முக்கியமாக, அநாதைகளாய்ப் புருஷர்களை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல நடத்துகிறர்கள் என்றும் பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலெ இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக்கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை. Barathiyar, கட்டுரை- மதிப்பு

So Vedas which as per Panmozi Arignanar Jaggannatha Raja- in his Book “Tamilum Pragiruthamum” published by TN Govts. International Tamil Studies- dated 5000-1000BCE, has much superior Science and Maths etc., is ignored.// 
quoted from http://www.mayyam.com/talk/showthrea...-on-veda/page5

Let us value Literaure for its positives please.__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 2
முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
திருக்குறளும் வடமொழி வேதமும்


மாமுனிவர் திருவள்ளுவர்

தமிழ் வேதம் என்றும் உத்தரவேதம் என்றும் போற்றப்படுவது திருக்குறள். திருவள்ளுவரின் காலம் கி.பி 2 எனக்கருதப்படுகின்றது. திருக்குறள் வேதநெறியினைத் தழுவிக்கொண்டு தமிழ்மரபின் தனித்தன்மையையும் நிலைநிறுத்தும் அறநூலாகும்.

திருக்குறளின் முதலதிகாரம் கடவுள் வாழ்த்து. அதில் இறைவனைக் குறிக்க எட்டு பெயர்கள் கூறப்படுகின்றன. ஆதிபகவன்(1), வாலறிவன்(2), மலர்மிசை யேகினான்(3), வேண்டுதல் வேண்டாமையிலான்(4), இறைவன்(5), பொறிவாயிலைந்தவித்தான் (6), தனக்குவமையில்லான், அறவாழியந்தணன்(8) எனும் இவ்வெட்டுப் பெயர்களும் இறையாகிய பதிக்கு வேதாகமங்கள் கூறும் தன்வயம், இயற்கையறிவு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேராற்றல், தூயவுடம்பு, வரம்பிலின்பம், பேரருள் எனும் எட்டுக் குணங்களை முறையே உணர்த்துவனவாகும். இறைவன் ‘எண்குணத்தான்’ ஒன்பதாவது திருக்குறளும் கூறுகின்றது. இந்த இலக்கணம் இறைக்கு வேறெங்கும் கூறப்படவில்லை.

பிறப்பைப் ‘பெருங்கடல்’ என்றது, அதைக் கடக்கப் புணை இறைவனது திருவடி என்றது, (10), அவிச்சை காரணமாகப் பிறப்புத் தோன்றலின் ‘ பிறப்பைப் பேதமை’ என்றது, (358), மக்கள் தேவர் நரகர் விலங்கு பறவை முதலிய எந்தப் பிறப்பும் துன்பமேயாகையால் பிறப்பினை ‘மாணாப் பிறப்பு(351) என்றது, பிறப்புத் துன்பமாதலறிந்து அப்பிறப்பே வேண்டாமென ‘வேண்டுங்கால் பிறவாமை வேண்டும்’(362) என்றது, ‘தூய்மை அவாவின்மை,(364), உயிர் இருவினையை ஈட்டுவதற்கும் அதனால் பிறப்புண்டாதற்கும் காரணம் இருள் என்னும் ஆணவமலம் அதனைப் போக்கிக் கொள்ள இறைவனின் புகழ்சேர் புகழை இடைவிடாது சிந்திக்க வேண்டும் (5) என்றது இவை போன்றவையெல்லாம் வேத சிவாகமங்களில் பேசப்பட்ட பொருள்களாகும்.

திருக்குறள் ‘தாமைரைக் கண்ணா னுலகு’(1103), ‘புத்தேள் நாடு’(1323), ‘அளறு’(நரகம் 255) முதலிய உலகங்களையும் ,’அடியளந்தான்’(திரிவிக்ரமன் 610)’தாமரையினாள்’, ‘முகடி’(617), தென்புலத்தார்’ (43), என்னும் இவை போன்ற வேதாகமக் கருத்தாக்கங்கள் திருக்குறளில் செறிந்துள்ளன.

திருமகளைச் செய்யாள் என்பது தமிழ்வழக்கு. முகமினியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவாரது இல்லின்கண் செய்யாளாகிய திருமகள் அகனமர்ந்து உறைவாள்(84) எனக் கூறிய திருவள்ளுவர், வேதநெறி பற்றிச் செய்யாளுக்கு மாறுபட்ட இயல்புடைய மூத்தாளையும் கூறுகிறார். சீதேவிக்கு மூத்தவள் மூதேவி. அவளை ‘ஜ்யேஷ்டா’ என வடமொழியிலும், அதனைத் தமிழ் எழுத்தில் ‘சேட்டை’ என்றும் கூறுவர். “முன்னம் தோன்றலால் முகடியைச் சேட்டை என்றனர்” (லிங்கபுராணம்2-5-4) தமக்கை எனப் பொருள்படும் ‘ஜ்யேஷ்டா’ என்னும் சொல்லை மொழிபெயர்த்துத் திருவள்ளுவர்,

“அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்” (167) என்றார். தவ்வை மூத்தவள்.

“அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு”

என்னும் முதற்குறளில் வேதாகமத் தாக்கம் பெரிதும் காணலாம். வேதங்களின் ஆறங்கங்களில் ஒன்று தருக்கம். முதற்குறள் தருக்க முறைப்படி முதற்கடவுளது உண்மையை நிறுவுகின்றது.

தருக்கத்தில் ஒருபொருளை(வஸ்து)ப் பெயர்(உத்தேசம்) கூறிய பின்னரே மேற்கோள் ஏது உதாரணம் முதலியவற்றல் நிறுவ வேண்டும் என்பது விதி. திருவள்ளுவர் ஆதிபகவன் என்று தாம் சாதிக்கப் போகும் பொருளுக்கு முதலில் பெயர் கூறினார். உலகம் ஆதிபகவனாகிய முதலை யுடைத்து என்று மேற்கோள் கூறினார். அகரமுதல வெழுத்தெல்லாம் என்று ஏது கூறினார். காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறும் அனுமானமும் இதனால் உணர்த்தினார்.

ஆதி என்ற தமிழ்ச் சொல்லும் பகவன் என்னும் வடசொல்லும் சேர்ந்த தொகைச் சொல் ஆதிபகவன் என்பது. பகவன் தமிழ்ச் சொல்லாயின் ஆதிப்பகவன் என ஒற்று மிகவேண்டும் ஒற்று மிகாமல் ஆதியாகிய பகவன் என்னும் பொருளைத் தருதலால் இச்சொல் இருபெயரொட்டுப் பண்புத்தொகை யென்றும் இது வடநூன்முடிபு என்றும் பரிமேலழகர் கூறினார்.

பகவன் என்பது ‘பகவான்’ என்னும் வடசொல் என்றும், பகவான் என்பது சிவனுக்குப் பெயர் என்றும், அதர்வசிகோபநிஷத், “யோவை ருத்ர: ஸ பகவான்” என முப்பது முறை கூறுகின்றது. சங்கார காரணனாகிய சிவனே உலகத்துக்கு ஆதி என்பது இதனால் உணர்த்தப்பட்ட பொருளாம்.

“சங்கரோ பகவான் ஆத்யோ ரரட்ச ஸகலா: ப்ரஜா:
மஹேசோ பகவான் ஆதி தேவ:”

எனச் சரபோபநிஷதம் கூறுகின்றது. அதாவது சங்கரனுக்குத் தவிர ஏனையோருக்கு இறைமைக் குணங்கள் இல்லை. அவனே பகவான். எனவே ‘மஹேசனே பகவான், ஆதி தேவன்’ என்பது இதன் பொருள். எனவே ‘ஆதிபகவன்’ என்ற பெயரில் உள்ள ‘ஆதி’ என்பது, இறைமைக் குணங்கள் இலராகிய ஏனைத் தேவர்களை விலக்க வந்த அடை, அதாவது சிவனே முதற்கடவுள் என்றுணர்த்துவது இதன் கருத்தாம்.

சித்தாந்த சைவர்கள் ‘ஆதிபகவன்’ எனுமித்தொடருக்கு ‘ஆதிசத்தியொடு கூடிப் பிரிவின்றி யுள்ளானாகிய சிவன்’ என்று மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சிப் பொருள் விரித்துப் பொருள்கொள்வர். பதிப்பொருளாகிய ஒருபொருள் சிவமும் சத்தியுமாகத் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு உலகினை இயக்கி நிற்றல் பற்றி இறைவனை “ஆதிபகவன்” எனும் பெயரால் திருவள்ளுவர் குறித்துள்ளார் எனகொள்ளுதல் பொருந்தும் என்பர். (திருவருட்பயன். 1-2. க. வெள்ளைவாரணம். சமாஜபதிப்பு)

திருவள்ளுவர் வேதங் கூறும் நான்கு வருணங்களை அறிந்தேயுள்ளார். அதில் தமிழ் மரபுக் கேற்றதைத் தழுவிக் கொண்டுள்ளார்.

“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” (134)

என்னும் குறளில் ‘பார்ப்பானின் தொழில்களில் ஒன்று வேதங் கற்றல். கற்ற வேதத்தை மறந்தாலும் மீண்டும் கற்று மீட்டுக் கொளலாகும். ஆனால் அவன் தன்னுடைய பிறப்பொழுக்கத்தைக் கைவிட்டால் அழிந்துவிடுவான்’ என்று பார்ப்பனன் தொழிலின் சிறப்பையும், அவன், தன் பிறப்பொழுக்கத்தைக் கைவிடாமையின் சிறப்பையும் ஓதினார்.

பார்ப்பான் என்னும் பெயர் முன்பு மரியாதைக்கு உரியதொன்றாகவே வழங்கியது. இது இருபிறப்பாளன் என்ற பொருளைத் தருவதாகும்.

“பார்ப்பு” என்பது பறவையின் குஞ்சுக்குப் பெயர். (“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை” தொல். பொருள்- மரபியல் சூ559). பறவைக்குஞ்சுக்கு இரண்டு முறை பிறப்புண்டாகும். தாயின் வயிற்றினின்றும் முட்டையாக வெளிவருவது ஒருபிறப்பு. முட்டையினின்றும் குஞ்சாக வெளிவரல் மற்றொரு பிறப்பு. அந்தணர்களுக்கும் இரண்டு பிறவிகள் உண்டு. ஒன்று அன்னையின் வயிற்றினின்றும் வெளிவரல், மற்றொன்று, உபநயனத்தின் பின் உள்ள வாழ்க்கை. ஆதலின் அவர்களை “இருபிறப்பாளர்” என்பர். அதாவது, பறவையின் குஞ்சு போல்பவர் என்ற பொருளில் “பார்ப்பு அன்னவர்” என்பர். ‘பார்ப்பன்னவன்’ என்பதில் உள்ள மெல்லொற்றும் ‘வ’கர உயிர்மெய்யும் கெட்டுப் ‘பார்ப்பனன்’ என நின்றது. மாணிக்கவாசக சுவாமிகள் குருவாக வந்து ஆண்டு கொண்ட சிவபரம்பொருளை, “பார்ப்பானே” என விளிப்பது அறியத் தக்கது. ( புணர்ச்சிப்பத்து -10 திருவாசகம், சிவக்குடில் விளக்கம்.)

“அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்” (543)

என்னும் குறளில் அரசசாதியையும் செங்கோலின் மாட்சியையும் கூற வந்த திருவள்ளுவர், முதற்சாதியாகிய சிறப்புடைய அந்தணசாதிக்குரிய வேதத்திற்கும் அறத்திற்கும் மன்னவன் செங்கோலே காரணமாக நின்றது என்றார். சிறப்புடைய அந்தணசாதியைக் கூறி ஏனைய இரண்டுசாதியையும் தழுவிக் கொண்டார்.

“ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்” (560)

என்னும் குறளில் அரசன் செங்கோல்முறையினால் உயிர்களைக் காவானாகில் கேடுகளாக அறனில்லாத அந்நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறுதொழிலோராகிய அந்தணரும் தம்முடைய வேதக் கல்வியை மறந்து விடுவர் என்று கூறுகின்றார்.

இதனால், ‘வேதமும் அறனும் அநாதி; பசுக்கள் பால் குன்றியவழி அவியில்லாது போகும். அவி கொடுத்தற்கு உரியராகிய அந்தணர் வேள்வியின்மையின் வேதக் கல்விக்குரிய மந்திரங்களை ஓதார். வேள்வி நடவாது. ஆதலால் வானம் மழை பொழியாது’ என்று வேள்விக்கும் மழைக்கும் உள்ளதொடர்பினைக் கூறினார்.

இந்தத் தொடர்பைத் தொல்காப்பியமும்,
“அமரர்கண் முடியும் அறுவகையானும்” (தொல். பொருள்81 புறத்திணை 26)
என்று கூறிற்று. ‘அமரர்கண் முடியும் அறுவகையாவது பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய அறுமுறை வாழ்த்தின் கண்ணும்’ என்றும், அந்த ஆறாவன, ’முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம்’ என்று நச்சினார்க்கினியர் எடுத்துரைத்தார்.

இச்சூத்திரத்திற்கு பலர் பலவாறு கூறினும் நச்சினார்க்கினியர் கூறியதே பண்டை மரபு தழுவியதாம். திருஞானசம்பந்தசுவாமிகள் தம்முடைய திருப்பாசுரத்தில் இந்த அறுமுறை வாழ்த்தை வலியுறுத்தியுள்ளார்.

‘வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே’ (3-54-1)

என்னும் இவ்வறுமுறை வாழ்த்தில் நச்சினார்க்கினியர் கூறிய முனிவருக்குப் பதில் ‘வானவர்’ இடம்பெற்றுள்ளது.

அரசனது செங்கோலுக்கும் அந்தணர் வேள்விக்கும் மழைக்கும் நாட்டின் வளத்துக்கும் குடிகளின் மகிழ்ச்சிக்கும் உள்ள சங்கிலித் தொடர்பினைச் சமயச்சான்றோர் உடன்பட்டு ஏற்றுக் கொண்டுள்ளனர்.

“வேந்தன் முறைதிறம்பின் வேத விதிதிறம்பும்
ஏந்திழை யார்தம் கற்பும் இல்லறமும் நில்லாவாம்
மாந்தர் பசியால் உணங்க மழைவறந்து
பாந்தள் மூடிக்கிடந்த பாரின்விளை வஃகுமால்”
(பிரமோத்தரகாண்டம்,10- 1)
என எதிர்மறையானும் வலியுறுத்தப்பட்டது.


பராசரருக்கும், மீனவப்பெண் மத்ஸ்யகந்திக்கும் பிறந்த மாமுனிவர் வேதவியாசர்

திருவள்ளுவர், வேதவேள்வி செய்யும் அந்தணர்களுக்கு இவ்வளவு ஏற்றம் கொடுத்துப் பேசினாலும் பிறப்பால் மட்டுமே அந்தப் பெருமை ஒருவர்க்கு வந்துவிடாது; அதாவது, ‘ஜன்ம பிராமணனை விடக் கன்ம பிராமணனுக்கே ஏற்றம்’ என்பதையும் தெய்வப்புலவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

“பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” (972)
என்னும் குறளில், திருவள்ளுவர், பெருமையாவது குலத்தினா லறியப்படாதென்றும் அதற்குக் காரணம் இன்னது என்றும் சுட்டிக் காட்டினார்.

இங்குத் தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 2-ஆம் சூத்திரத்திற்கு இளம்பூரணர், இத்திருக்குறளை மேற்கோள் காட்டி செய்தவுரை ஆன்றோர் கருத்தை நன்கு புலப்படுத்தும்.

“ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப” என்பது.
ஒப்பு பத்து வகைப்படும். அவை,
“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு வகையே (மெய்ப்.25)

என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள் கூறிய பத்துமாம்.

அவற்றுள் பிறப்பாவது, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வருங் குலம். குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்” (குறள் 972)

எனவே குலத்தின்கண்ணே சிறப்பென்பது ஒன்றுண்டு.

அந்தணர் ,பார்ப்பார் என்பன காரண இடுகுறிப் பெயர். காரணம் குறிக்கும் பொழுது அப்பெயர் அந்தக் காரணத்தை உடைய எல்லாரையும் குறிக்கும். சுட்டப்பட்ட காரணம் அந்தணரிடம் சிறப்பாக விளங்க வேண்டும் என்பது விதி. பிறப்பந்தணர்களிடத்தில் எதிர்பார்க்கப்படும் பண்பு.. இதனைத் திருவள்ளுவர் அளவையியலில்(Logic) கூறப்படும் முக்கூற்று விதியில் (Deductive syllogism) வைத்துக் கூறியுள்ளது அறியத்தக்கது.

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர்
அந்தணர் எவ்வுயிரிடத்தும் செந்தண்மை யுடையவர்
ஆதலால் அந்தணர் என்போர் அறவோர்.

மற்றொரு முறையிலும் இதனைக் கூறலாம்.

அந்தணர் என்போர் அறவோர் – இது மேற்கோள்
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் – இது ஏது.
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர். – முடிவு__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

இதனால், எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகும் சிறப்பொழுக்கம் அந்தணர்களுக்குப் பிறப்பால் குடிவரவாக வரும் என்பதும், அச்சிறப்பொழுக்கம் இல்லாதவன், பிறப்பால் அந்தணனாயினும் அந்தணன் எனப்படமாட்டான் என்றும், ஏனைய குலத்தில் பிறந்தாலும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் அந்தணர் எனப்படுவாரென்பதும் வள்ளுவனார் கருத்தென்பது பெறப்படும்.

இவ்வாறு வேதவழிச் செல்வதே தமிழ்வேதமாம் திருக்குறள் எனலாம்.
பிறப்பால் மட்டுமே சாதியுயர்வைப் பேசுவாரை வேதமும் இழித்துரைக்கின்றது. ஈண்டு சந்தமறையும் தமிழும் வல்ல பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கூறுவது கருதத் தக்கது.

“ஸாமவேத வஜ்ரஸூசிகோபநிஷதம் – பிராமணத் தன்மைக்குரியது சீவனன்று, உடம்பன்று, சாதியன்று, கல்வியறிவன்று, கன்மமன்று, தன்மமன்று எனத் திருட்டாந்த வாயிலாக விளக்கிச் சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணனென்றோதி இதுவே, சுருதிஸ்ம்ருதி புராணேதிஹாசங்களின் அபிப்பிராயம் என்று முடிவுரை மொழிந்துளது. “

“மஹாபாரதத்து வனபர்வத்து 206ஆம் அத்தியாயங்களிற் பகரப்பட்ட தர்மவியாதரென்னும் வேடரும் அந்தப் பாரதத்திற் பல இடத்துங் கூறப்பட்ட விதுரரென்னுஞ் சூத்திரரும் மகாஞானிகளா யிருந்தனர் என்பதை அறியலாம். இத்திறத்தோரும் பலரே.”

“இன்னோர், பிராமணராகப் பிறந்திருந்த சன்மாந்தரத்தில் ஆர்ச்சித்த ஞானம் அழியாதிருந்ததினாற் பிரமநிட்டராயினரென்று அவர்கள்நிலைக்கொரு போக்குக் காட்டினும் அஃது அத்திறமுள்ளார் இக்காலத்து மிருப்பர், இனி வருங் காலத்துந் தோன்றுவரென்பதையும்; சன்மாந்தரத்தில் ஆர்ச்சித்த அறியாமை அநீதி. அநீதி அழியாம லிருந்தோரே அநீதிகளை யெழுதி வைத்தார், அவற்றைப் பிரமாணமாக வெடுத்துக் காட்டுகின்றாரென்பதையும்; பிரம வித்தைக்கும் பிரமோபாசனைக்கும் உரியோர் பிராமணசாதியிற் பிறந்தவரே யல்லால் இதரரல்லரென் றியம்பிக்கொண்டு கல்வி யறிவுமில்லாதிருப்போரும் அவரொத்தவரே யென்பதையும் நிலைநிறுத்தும்” எனப் பாம்பனடிகள் கூறுவது கருத்தில் இருத்தத் தக்கது..

“பிரஜாபதியின் முகம், தோள், தொடை, காலெனுமிடங்களில் முறையே பிராமணனும், சத்திரியனும், வைசியனும், சூத்திரனும் பிறந்தனரென்று நுவறல் – முகம் (பிரம வித்தையாகிய ) வாக்குக்கும், தோள் வெற்றிக்கும், கால் ஒருவனைச் சரணடைந்து ஊழியஞ்செய் துயிர் வாழ்தற்கும், தோலுக்குங் காலுக்கும் இடையிலுள்ள தொடை நடுநாவுடைத் துலையினுக்கும் அருத்தமாதலைக் காட்டவல்லதாமேயன்றிப் பிறப்பிடமே அவைகளெனக் காட்ட வல்லதாகாது. வல்லதாமென்னின், மேற்சொல்லப்பட்ட சூதமுனிவரும், பிறமுனிவருள் வியாசர் முதலாயினார் பலரும் பிறப்பிடத்தா லிழிந்தோராவரெனுந் தீர்வை யேற்படும். இதுநிற்க.”

“குறிப்பிட்ட தொழில்களை யுடையாரெல்லாம் அவ்வத்தொழில் இழைக்குங்காறும் அவ்வச்சாதியாரென விருத்தலுங் கண்கூடன்றோ. முனிவர் சரிதைகளையுங் கருதுக. பூணூல் பல தொழிலாளருந் தரிக்கின்றமையின் அதனையொரு பெரிதாக நினைப்பதும், இருபிறப்பாள ரென்பார் அத்துவித ஆன்மஞான வேதம் தமக்கே யுரித்தென்பதற்கியைய ஆசாரமுள்ள மற்றையர் அவ்வேதத்தைக் கைவிடலும் அறிவுடைமையாகா” (பரிபூரணானந்த போதம், சிவசூரியப்பிரகாசம். பக் 208-209)

 


 
TitleINDIA OF THE AGE OF THE Brahmanas
AuthorJOGIRAJ BASU [GAUMATY SANSKRIT UNIVERSITY DEPARTMENT]
TopicHISTORY
EditionPustak Bhandar, BEFORE CALCUTTA CALCUTTA, D. MITRA ELM Press November 1989 1 295
Other dataEnglish and Sanskrit.


__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

George Jacob wrote:

Thirukural is said to be neutral, but more close to Hinduism.


No, it is more close to Jainism / Bhuddism

During his period, India was ruled by Ashoka and Jainism / Bhuddism was followed as the Religion of the Kingdom so as the people. Though, Tamil Kingdom was not ruled by Ashoka but culturally integrated through trades__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

Jainism  and Buddhism are branches of Hinduism.

BUT Fraud Godless Racist book BIBLE Believing Mercenary Pastors made these  false  for conversion business __________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

வள்ளுவம் சமண நூலன்று.

உலகியற்றியான், செய்யாள், தவ்வை, தேவர், புத்தேள், புத்தேள்நாடு, வானோர், அகல் விசும்புளார், அவி உணவின் ஆன்றோர், இந்திரன், சந்திரன், தாமரைக்கண்ணான், தென்புலத்தார், மாலவன் அடியளந்த செய்தி, ’திங்களைப் பாம்புகொண் டற்று' எனும் சந்திர க்ரஹணக் கதை எல்லாம் குறளில் இடம்பெறும் வைதிக சமயக் கருத்துகள். உவமைக்காக - கருத்து வலியுறுத்தலுக்காக இவை இடம் பெறுகின்றன.

அமரர் பற்றிய செய்திகள் மஹாவீரர் காலத்திலும், பழைய சமண நூல்களிலும் இல்லை என்கிறார் ஒரு சமண அறிஞர் -

If you study Jain history, you will find that all such Bhavatipati
devas were introduced in Jainism about 200 to three hundred years after Lord Mahavir's Nirvan.

The Agam sutras and ancient literature did not mention them.
To ask help by praying or reciting Mantras to Bhavanpati devas
violates the true Jain principles.

Pravin K. Shah
Jaina Education Committee
Raleigh NC 
USA

கழுவாய் தேடுதல், பரிஹாரம் தேடுதல், துன்பம் நீங்கக் கடவுளை வேண்டுதல், துறை படிந்து தீர்த்தமாடுதல் இவை சமண சமயத்தில் தடுக்கப்பட்டவை. தெய்வ மூடம், தீர்த்த மூடம் என்பர் சமணர். மனத்துயர் வாட்டிய நிலையிலும் கண்ணகி இவற்றைக் கடைப்பிடிக்கவில்லை என்கிறது சிலம்பு.

படைக்கலம் தாங்கிய கடவுளர், தேவியருடன் இருக்கும் கடவுளர் - இவர்களைத் தொழுவது சமணத்தில் தடுக்கப்பட்டுள்ளது; கொலையும், காமமும் விலக்கத்தக்கவை என்பதால்.

முக்தி அடைந்த தீர்த்தங்கரரைத் தொழுதால் அவர்கள் நாம் முக்திபெற ஒருகாலும் உதவமாட்டார்கள்; ஏனெனில் உயர்நிலை எய்திவிட்ட அவர்களுக்கு இவ்வுலகுடன் ஒருவிதத் தொடர்பும் கிடையாது. அவரவர் தம் வினை நீங்கத் துறவு பூண்டு, கடுமையான தவநெறிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமண நெறி.__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

 

தற்காலப் பார்வையில் திருக்குறள்

பெ. சக்திவேல்

திரு. பெ. சக்திவேல்,
உதவிப்பேராசிரியர்,
ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
காஞ்சிபுரம்
.

இந்தியத் திருநாடு வள்ளுவர் காலத்திருந்த மன்னராட்சி முற்றிலும் ஒழிக்கப்பட்டு மக்களை மக்களே ஆளும் மக்களாட்சி முறை (அ) குடியாட்சி முறை சென்ற நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்துவிட்டது. “மாற்றம் என்பது மானுடத் தத்துவம்’ என்பார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். எல்லாக் காலத்துக்கும் நிலைபெற்ற உண்மைகள்/நீதிகள் என்று ஒன்றுமே இல்லை. உண்மைகளும் நீதிகளும் காலத்துக்குக் காலம் இனத்துக்கு இனம் மொழிக்கு மொழி மாநிலத்துக்கு மாநிலம் நாட்டுக்கு நாடு மாறும் தன்மை கொண்டன. அதாவது, மாற்றம் என்பதே மாற்றம் இல்லாதது. இதில் உலகப் பொதுமறை, பொய்யாமொழி என்று நாம் வாயாறப் புகழ்ந்து மார்தட்டிக் கொண்டிருக்கும் திருக்குறள் மட்டும் விதிவிலக்கல்ல. ஒரு படைப்பாளன் தான் வாழும் காலத்தைத்தான் பிரதிபலிக்கிறானே ஒழிய நிலைபெற்ற உண்மையை அல்ல.
தமிழ்ச் சமூகத்தில் ஆகச்சிறந்த இலக்கியங்களில் தலையாயது திருக்குறள். தமிழ் மறை என்று மிக மிக உன்னத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது குற்றம் சுமத்துவதா? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்.
உன்னதமான ஒரு கலைஞனை அற்புதமானதொரு படைப்பாளனை, தமிழனை உலகப்பரப்பில் தலை நிமிரச் செய்ததில் மிகப்பெரும் பங்காற்றியிருக்கும் ஒரு புனிதனைக் கறைபடுத்தலாமோ என்கின்ற வாசிப்பாளராகிய உங்களுடைய தார்மீகக் கோபம் கட்டுரையாளருக்குப் புரியாமல் இல்லை. உங்களுடைய அளவு கடந்த கோபத்திற்கு கட்டுரையாளரின் சிரம்தாழ்ந்த நன்றிகளும் வரவேற்புகளும் உரித்து. நிற்க.
தலைமுறை இடைவளியை இட்டு நிரப்பும் மாயத்தகுதி எந்த ஒரு படைப்புக்கும் பூரணமாக அமையும் சாத்தியப்பாடுகள் இல்லை. ஆனால், “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் இவ்வையகமே’, “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’, “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை’ என்னும் கருத்துக்களோடு கட்டுரையாளருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதே சமயம், ஒரு மகன் தன் தந்தையின் தோளில் அமர்ந்து இந்த உலகத்தைக் காண்கிறான் என்பதையும் நினைவில் வைத்து நோக்க வேண்டும். அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனும் குருவை மிஞ்சிய சீடனும் தமிழ்ப்பரப்பில் இல்லையா என்ன? அதற்காகக் கட்டுரையாளர் குருவை மிஞ்சிய சீடரா என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். திருவள்ளுவரோடு ஒப்பிடும்போது அவர் முன்னால் நிற்கக் கூட யோசிக்க வேண்டிய நிலையில்தான் கட்டுரையாளர் இன்னும் இருக்கிறார். ஆனால், வெண்ணிலவில் களங்கம் இல்லையா என்ன? அப்பேர்பட்ட ஐந்தெழுத்து மந்திரத்துக்குச் சொந்தக்காரரான சிவபெருமானே தவறு செய்யவில்லையா என்ன? உங்களுக்குக் கோபப்படுவதற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதற்கு நிகரான உரிமை கட்டுரையாளருக்கும் கட்டாயம் உண்டு. கட்டுரையாளர் தனது தாத்தனை விமர்சிப்பதில் என்ன தவறு? வரலாறுகள் கட்டாயம் கீழிருந்தும் நோக்கப்பட வேண்டும்.
கற்பு
“கற்பென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்’
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதி.
“கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை’
என்றார் அவ்வையார். இருவருமே ஆண், பெண் என்ற இரு இனத்தவருக்குமே சமமான நீதியைப் போதிக்கின்றனர். கற்பு என்பது பெண்ணுக்கானது மட்டுமல்ல. மாறாக, இருவருக்குமானதுதான் என்பது பாரதியின் வாதம். ஆனால், அவ்வையார் கற்பு என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் கருத்தையே விடுத்து கற்பு என்பதற்குப் புதிதான பொருளையே தருகிறார். கற்பு என்பது வாக்கு தவறாமை; சொன்ன சொல்லை மாற்றிப் பேசாமை என்று விளக்கம் கொடுக்கிறார்.
ஆனால், வள்ளுவர் மட்டும்தான் கற்பு என்பது பெண்களுக்கானது மட்டும்தான். கற்புடைய பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று பெண்களை உயர்த்துவதாகக் கூறி மறைமுகமாகத் தனக்கு அடிமைக்கிக் கொள்ளும் ஆணிய மனோபாவம் திருவள்ளுவர் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை யுண்டாகப் பெறின்.

கடவுள் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இதில் திருவள்ளுவரைச் சொல்லிக் குறையில்லை. கலைஞன்/கவிஞன் காலத்தின் கண்ணாடியாவான். திருவள்ளுவர் தனது காலத்தைப் பிரதிபலிக்கிறார். என்பதுதான் நிதர்சனம். கட்டுரையாளரின் கருத்துக்கு வளம் சேர்க்கும் இன்னொரு எடுத்துக்காட்டு சிலப்பதிகாரம். முலைமுகம் திருகி முக்கூடலை எரித்தாளாம் கண்ணகி. அவள் மார்பகம் என்ன பாஸ்பரஸ் கட்டியா? இதே போன்று திருவள்ளுவர் மனைவியாகக் கருதப்படும் வாசுகி குறித்த கதைகள் தமிழில் ஏராளம். அனைத்துக் கதைகளும் ஒட்டுமொத்தமாகக் கட்டுக்கதைகள் என்று புறந்தள்ளிவிடவும் முடியாது. ஆனால், கற்புத்தன்மையை உயர்த்திச் சொல்வதற்காக, பெண் இனத்தை எப்பொழுதும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்வதற்காக ஆணினத்தால் கையாளப்பட்ட மாபெரும் யுத்தி. இதே தன்மை கொண்ட கற்பை ஏன் ஆண் இனத்திற்கும் விதித்திருக்கக் கூடாது? கம்பர் இராமனுக்கு விதிக்கவில்லையா என்ன? அப்படி ஒரு ஆண் மகன் இருக்கின்றானா என்பது கேள்விக் குறியாக இருந்தாலும் அப்படிப்பட்ட ஓர் சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்ற கற்பனைச் சமுதாயம் கம்பருக்குத் தோன்றியிருக்கிறதல்லவா? கவிச்சக்கரவர்த்தி கம்பர் மீது இருக்கும் விமர்சனம் என்பது வேறு. அவர் கற்புத்தன்மையைச் சீதாபிராட்டிக்கு வற்புறுத்திய அளவுக்கு இராமபிரானுக்கு வற்புறுத்தினாரா என்பது ஐயப்பாடுதான்.
கண்ணகியின் கற்பை விதந்துரைக்கும் பலரும் கோவலனின் கற்புத்தன்மையைக் கேள்வி கேட்பதில்லை. பஞ்சவர் தேவி பாஞ்சாலியை ஆராயும் பலரும் அருச்சுனனின் ஆண்மை குறித்துத்தான் புளகாங்கிதம் அடைகிறார்கள். இதே மனநிலைகளில்தான் திருவள்ளுவரும் இயங்கியிருக்கிறார்.
ஒரு படைப்பாளன் காலத்தைப் பிரதிபலிப்பவன் மட்டும் அல்லன். காலத்தையே உருவாக்கும் தகுதிப்பாடும் கொண்டவன். தன்னால் காலத்தைப் படைக்க முடியாமல் போனாலும் கம்பன் முயற்சித்த மாதிரி திருவள்ளுவர் முயற்சித்திருக்கலாம். இப்படி விவாதிக்கும்பொழுது கம்பர் பெரியவரா வள்ளுவர் பெரியவரா என்ற ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம். கட்டுரையாளரின் நோக்கம் இங்கு என்னவென்றால் திருவள்ளுவர் ஒருதலைச்சார்பாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதை நிரூபணம் செய்வது மட்டுமே.
கல்வி
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்று கூறும் வள்ளுவர் கருத்தோடு யாரும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்க முடியாது. கற்றவருக்கு இருப்பதுதான் கண். கல்லாதவருக்கு இருப்பது புண்ணாகும் என்பதைக் கூட ஏற்றுக்கொள்வார்கள். இங்கே ஒரு கேள்வி. திருவள்ளுவரின் காலத்துக்கு முன்பும் திருவள்ளுவரின் காலத்திலும் எத்தகைய சமூகம் தமிழ்ச் சூழலில் நிலவியது? கல்வி பெறும் உரிமை யார் யாருக்கு வரையறுக்கப்பட்டது? எத்தனைச் சதவிகித மக்கள் கல்வி கற்றார்கள்?
நூல்களின் மூலமாகக் கற்றறிவது கல்வி. ஆசிரியர்கள் மூலமாகக் கேட்டு அறிந்து கொள்வது கேள்வி. கல்வியும் கேள்வியும் இரண்டுமே அறிவு எனும் புள்ளியில்தான் சங்கமிக்கின்றன. அதனால்தான் அறிவுடைமை அதிகாரம் இந்த இரண்டு அதிகாரங்களுக்குப் பின்னால் வைக்கப்பட்டுள்ளது. கல்விக்கும் கேள்விக்கும் இடையில் இருக்கும் கல்லாமை எனும் அதிகாரத்தில் நிறைய கேள்விகள் அநீதையைப் போதிப்பதாகவே உள்ளன. குல/பொருளாதாரக் காரணங்களால் ஒருவன் படிக்க முடியாமல் போனாலும் பட்டறிவில் ஏட்டுப் படிப்பாளியைக் கட்டிலும் சிறந்த அறிவு பெற்றிருக்கும் ஒருவன் மற்றவரால் போற்றப்படமாட்டான்.
கல்லாதான் ஒட்பங் கழிய நன்றாயினும்
கல்லார் அறிவுடை யார்.(404)

பல்வேறு இயலாமைகளால் படிக்கும் வாய்ப்பிழந்த ஒருவன் தானே முயன்று அறிவாளியாகின்றான். அவனை ஏன் அறிவாளியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது? இந்த இடத்தில்தான் சிக்கலானதும் அநீதியானதுமான முடிச்சு போடப்பட்டிருக்கிறது. கட்டுரையாளரின் கேள்வி என்னவென்றால் பட்டறிவால் அறிவாளியான ஒருவனை ஏன் நாம் அறிவாளியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது? எளிதில் கிடைக்கும் வாய்ப்புகளால் அறிவாளியான ஒருவனைக் காட்டிலும் அரிதின் முயன்று பெரும்பாடு பட்டு அறிவைப் பெறும் ஒருவனைத்தானே பாராட்டி வரவேற்க வேண்டும்? அதைவிடுத்து அவனைப் புறமொதுக்குதல் என்ன விதமான அரசியல்? திருவள்ளுவர் இந்த இடத்தில் வெகுசன மனோபாவத்தை விலைகொடுத்து வாங்கியிருக்கிறார். அதாவது அநீதிக்குப் பாடுபட்டிருக்கிறார். இந்த இடத்தில் துரோணாச்சாரியார் தன் மாணவன்(!) ஏகலைவனுக்கு இழைத்த கொடூரமான பாவம்தான் நினைவுக்கு வருகிறது. பாவம் இழைத்த துரோணாச்சாரியாரும் திருவள்ளுவரும் வேறல்லர். “கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!’ என்னும் வாக்குப்படி கர்ணன் பரசுராமரிடம் ஒரே ஒரு பொய்யைச் சொல்லி பாடம் கற்றுக் கொள்கிறான். உண்மை வெளியான பிறகு பரசுராமர் செயல்பட்ட அதே தன்மையில்தான் திருவள்ளுவரும் இங்குச் செயல்படுகிறார். அநீதியை அரங்கேற்றிய பரசுராமரும் திருவள்ளுவரும் வேறல்லர்.
இதையும் தாண்டி மாபாதகச் செயலைத் திருவள்ளுவர் செய்யத் துணிகிறார். கல்வியறிவில்லா அப்பாவி மக்களைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுவது போன்று இருக்கிறது அவரது வாக்கு.
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.(420)

கேள்வியறிவு இல்லாத மக்களை இந்த உலகத்தில் வாழ்வதே வீண்; இருந்தாலும் ஒழிந்தாலும் ஒரே தன்மையதே என்று அறிவுறுத்துகிறார். இந்திய தேசத்தில் எத்தனை பேருக்குக் கேள்வி அறிவு வாய்த்திருக்கிறது? அறிவு பெறும் உரிமை எத்தனை பேருக்கு இருந்திருக்கிறது? திருவள்ளுவர் காலத்திலும் சரி. தற்காலத்திலும் சரி. கேள்வி அறிவு வாய்க்கப்பெற்றவர்கள் எத்தனை சதவிகிதம்? அவர் காலத்தில் குறைந்த பட்சம் 10 சதவிகிதம் கூட இருந்திருக்க முடியாது. மீதி இருக்கும் 90 விழுக்காட்டினர் இந்த உலகத்தில் வாழவே கூடாதா? கல்வி அறிவு பெற முடியாத சமூகத்தில் இந்த மக்கள் உயிர் வாழத் தகுதி அற்றவர்களா? அப்படி என்ன பாவம் செய்தார்கள் இவர்கள்? சமூகக் கட்டுப்பாடுகளை மீறி அறிவு பெற்றாலும் சூழ்ச்சியால் பழி வாங்கப்படுவார்கள். ஏகலைவனும் கர்ணனும் இப்படித்தானே பழிவாங்கப்பட்டார்கள்? உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் இதற்கெல்லாம் துணை போயிருக்க வேண்டாமே என்பதுதான் கட்டுரையாளரின் அவா.
ஒரு சமூகத்தில் இருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் சமமான உரிமையையும் சம அளவிலான வாழ்வாதாரத்தையும் நிலை நிறுத்தச் செய்வது ஆட்சியாளரின் கடமையாகும். அந்தக் காலத்தில் மக்களின் பிரதிநிதியான மன்னனது கடமையாகும். மக்கள் கல்வி அறிவு பெறச் செய்வதும் ஒரு மன்னனின் தலையாயக் கடமைகளில் ஒன்றாகும். அந்த உரிமையை நிலைநிறுத்தாத மன்னன் இருந்தாலும் இறந்தாலும் ஒன்றுதான் என்று கூற வேண்டிய வள்ளுவர் ஏன் தனி மனிதனை இப்படிச் சாடுகிறார்? அறிவு பெறும் உரிமை இல்லாத மக்களை சாகச் சொல்வதில் இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? இவர் எந்த மனோபாவத்தில் செயல்பட்டார்? எல்லா மக்களுக்கும் பொதுவான உரிமை இல்லாத அந்தச் சமூகத்தைச் சாட வேண்டிய பொறுப்புள்ள மனிதர் தனி மனிதனை ஏன் சாகடிக்க வேண்டும்? திருவள்ளுவர் இந்த இடத்திலும் ஒருதலைச் சார்பாகவே செயல்பட்டிருக்கிறார். அநீதிக்குத் துணைபோயிருக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிறது. நிற்கட்டும்.
அரசியல்
நாட்டார் வழக்காற்றில் (ஊணிடூடுடூணிணூஞு) “ஆண்டிக்கு ஒரு சட்டம் அம்பாரத்துக்கு ஒரு சட்டமா?’ என்று பேசுவதைக் கேட்டிருப்போம். ஆண்டி வேறு; அம்பாரம் வேறு அல்ல. இருவரும் சமமாக மதிக்கத் தக்கவர்களே; இருவரும் மனிதர்களே. இப்படி இருக்கும்பொழுது திருவள்ளுவர் பல இடங்களில் அரசனை இறைவன் என்றே குறிப்பிடுகிறார். அந்தக் காலத்தில் மக்களைக் காத்தவன் அரசன்தான். அதனால்தான் அரசன் இறைவனுக்கு நிகராக வைத்து மதிக்கப்பட்டான் என்று நாம் சமாதானம் செய்து கொள்ளலாம்.
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. (புறம்.312)

இந்தப் பாடலில் குலத்தொழில் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பாடலின் ஆசிரியர் பொன்முடியாரின் மூலமாக ஒரு பெண் குழந்தை பெறும் இயந்திரமாக மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறாள். மற்ற சமூகத்தினருக்கு அவரவர் குலத்தொழிலே கடமை. ஆனால் வேந்தர்க்கோ “நன்னடை நல்கல்’ கடனாக வைக்கப்பட்டுள்ளது. இதை இன்றைய கண்ணோட்டத்திலிருந்து நோக்கிப் பார்க்க வேண்டும். ஒரு பெண் நாடாளக் கூடாதா? அல்லது கொல்லன்தான் நாடாளக் கூடாதா? இதிலும் சமாதானம் செய்து கொள்ளலாம். கொல்லன் நாடாளும் பொழுது அவனும் அரசனாகிரானே… அப்பொழுது அவனுக்கும் நன்னடை நல்கல்தான் கடமையாக வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது இதில் என்ன குற்றத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று கேட்கலாம். ஆனால், கொல்லன் அரசனாக ஏற்றுக்கொள்ளப்படுவானா? இல்லை அரசன் வேல் வடிக்கச் செல்வானா? இந்த மனநிலைகளில்தான் திருவள்ளுவரும் அப்பட்டமாகச் செயல்பட்டிருக்கிறார். ஆண்டிக்கு ஒரு சட்டம்; அம்பாரத்துக்கு ஒரு சட்டம்தான் இருக்க வேண்டும் என்கிறார். இனக்குழுச் சமூகம் உருவான போது அரசன்/மன்னன் என்பவன் வானத்திலிருந்து புதிதாகக் குதித்தவன் அல்லன். மக்களோடு மக்களாக வேறுபாடு அற்று வாழ்ந்தவன்தான் இனக்குழுத் தலைவன். காலப்போக்கில் அவனே தன்னைக் இறைவனாக்கிக் கொண்டான். மக்களுக்காகத்தான் மன்னன் என்னும் நிலை மாறி மக்கள் மன்னனுக்காகவே என்று நடந்து கொண்டான். இல்லையெனில் மக்களோடு மக்களாக வாழ்ந்திருக்க மாட்டானா? எதற்குத் தனக்கு மட்டும் சுகபோக வாழ்க்கை?
பெண்வழிச் சேறல்
இன்றைய சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சரி நிகராக நோக்கப்பட வேண்டியவர்கள். “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்.’ “ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்ற கும்மியடி’ என்று பாரதியார் தாழ்வு மனப்பான்மையிலிருந்து நீங்கி வெளியுலகுக்கு அடியெடுத்து வைக்கும்படி பெண்களை வரவேற்கிறார்.
ஆனால், திருவள்ளுவர் பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தில் இருக்கும் பத்து குறளிலும் ஒரு ஆண் எந்தக் காரணம் கொண்டும் பெண்களின் பேச்சைக் கேட்டு நடக்கக்கூடாது என்று அறிவுரை புகட்டுகிறார். அப்படிக் கேட்டு நடந்தால் என்னென்ன அசம்பாவிதங்கள் நேரும் என்றும் ஒன்றன் பின் ஒன்றாகப் பட்டியலிடுகிறார். பெண்ணை இழிவுப் பொருளாகப் பார்க்கும் போகப் பொருளாகப் பார்க்கும் மனோபாவம் திருவள்ளுவர் மனத்திலும் இழையோடியிருக்கிறது என்பது இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் அத்தாட்சியாக நிற்கின்றன.
உண்டிச் சுருங்குதல் பெண்டிற்கழகு, தையல் சொல் கேளேல் என்று ஒரு தையலே கூறுகிறாள். அவள் பெயர் அவ்வையார் என்று பிற்காலத்தில் அறியப்பட்டது. ஆனால், தையல் சொல் கேட்டு உருப்படி இல்லாமல் போயிற்றா சங்க காலத்தில்? அதியமான் அவைக்களத்தில் அரசவைப் புலவராக அவ்வையார் அலங்கரிக்கவில்லையா? அரசாட்சியைச் செம்மாந்து நடத்த அவ்வையார் உறுதுணை புரியவில்லையா? கல்வி கற்று ஒரு ஆணுக்கு நிகராக அரசவையில் அமரவில்லையா? பெண் என்பவள் ஆணைவிடத் தாழ்ந்தவள் என்ற எண்ண ஓட்டம் திருவள்ளுவர் மனத்தில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இந்தக் குறள்களில் கொட்டிக் கிடக்கின்றன. பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்கள் தங்கள் பெயரை அவ்வையார் என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டனர். சங்க காலத்தில் இருந்த அவ்வையார் வேறு. தையல் சொல் கேளேல், உண்டிச் சுருங்குதல் பெண்டிற்கழகு என்று கூறும் அவ்வையார் வேறு என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
வரைவின் மகளிர்
எல்லாச் சமூகத்திலும் விலை மகளிர் தாழ்மையான கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறார்கள். அதே கண்ணோட்டத்தில்தான் திருக்குறளும் வரைவின் மகளிர் அதிகாரத்தில் வெளிப்பட்டிருக்கிறது கொஞ்சம் நாசூக்காக. ஆனால், திருவள்ளுவர் அவர்கள் அந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணத்தையும் ஆராய்ந்து அதற்கு விடிவும் சொல்லியிருக்கலாம்.
கால்பார் கோத்து ஞாலத் தியக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறின் றாகி ஆறினிது படுமே… (புறம்.185, புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே. (மேற்படி, புறம் . 187)

என்ற இரண்டு பாடல்களும் அரசனும் அவ்வந்நாட்டில் வாழும் ஆண்களும் தங்கள் ஒழுக்கத்தில் நேர்மையாகவமு நல்லவராகவும் இருந்தால் பெண்களும் ஒழுக்கத்துடனேயே நடந்து கொள்வார்கள். அவர்கள் முறை தவறி நடக்கும்பொழுது பெண்களும் தங்கள் ஒழுக்கம் கெட நேர்ந்து விடுகிறது எனப் பேசுகிறது. ஒரே ஒரு குறளிலாவது திருவள்ளுவர் இப்படிப் பேசியிருக்கலாம். வரைவின் மகளிர்கள் இருப்பதற்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. அந்த நாட்டு அரசனும் அவ்வந்நாட்டு மக்களுமே காரணமாக இருக்கிறார்கள். ஆனால், கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஏனெனில், எந்த அளவுக்குக் கேவலமாகப் பேச முடியுமோ அந்த அளவுக்குப் பெண்களைச் சித்தர்கள் பேசி விட்டார்கள். சித்தர்களோடு ஒப்பிடும்பொழுது திருவள்ளுவர் எவ்வளவோ மேம்பட்டவர்.

கொடிய மாதர்கள் இடையுறும் நரகக்
குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக்
கடிய வஞ்சனை யால்..

பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த
பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி
வாதை உற்றிட வைத்தனை ஐயோ.. ( திருவருட் பிரகாச வள்ளலார், பா. எண்:1008, 1009 இரண்டாம் திருமுறை)
மலம்சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்
இத்தை நீங்கள் இனிது என வேண்டா… (பட்டினத்தார், சித்தர் பாடல்கள், ப.205)

பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு (மேற்படி, ப.209)

இப்படியெல்லாம் ஏசாமல் நாசூக்காக உணர்ச்சியற்ற பிணம் என்பதோடு நிறுத்திக் கொண்டார் என்ற அளவில் கொஞ்சம் மகிழ்ச்சி அடையலாம்.

அவையஞ்சாமை

தற்காலத்தில் அரவாணி, திருநங்கை என்ற சொற்களால் குறிப்படப்படும் ஆணியல்பும் பெண்ணியல்பும் கலந்த நம்மிடையே வாழும் ஒரு இனத்தவரை இழிவு படுத்தும் நோக்கில் திருவள்ளுவர் அவையஞ்சாமை அதிகாரத்தில் எழுதியுள்ளார். சமீப காலங்களில் இவர்களும் சம மதிப்புடைய மூன்றாவது பாலினமாக நோக்குவது இங்குக் குறிப்பிடத்தக்கது.
பகையகத்துப் பேடிகை ஒள்வாள்; அவையகத்து
அஞ்சும் அவன்கற்ற நூல்.(727)

மேற்படி கட்டுரையில் நாம் கண்ட அனைத்தும் ஒரு அறிமுக நிலையிலேயே அமைகிறது. இக்கருத்துக்களில் குறைபாடுகள் காண்பவர்கள் உணர்த்தினால் நல்லது. இறுதியாக, சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. (118) என்று கூறிய திருவள்ளுவர் தன் மனதறிந்து இது வரை நாம் மேற்கண்ட அநீதிகளை எழுதியிருக்க மாட்டார் என்று நம்பலாம். காலத்திற்கு ஏற்றாற் போன்று சில கருத்துக்களில் மாற்றங்கள் எல்லாவற்றிலும் ஏற்படக்கூடும். அதில் தமிழின் மிக முக்கிய இலக்கியமான தமிழனைச் தலைநிமிரச் செய்த அற்பதப் படைப்பான திருக்குறளும் விதிவிலக்கல்ல.

“தமிழ் நூல்கள் எதற்கும் கிடைக்காத அங்கீகாரம் திருக்குறளுக்குக் கிடைத்தது. தமிழ்ச் சமூக வரலாற்றில் ஏற்பட்ட ஒவ்வொரு கட்ட மாற்றத்திலும் திருக்குறள் வேறு வேறு கண்ணோட்டத்தில் உள்வாங்கப்பட்டதை அறிகிறோம். இத்தன்மை இப்பனுவலுக்கு உருவான பின்புலம் குறித்துப் பல கோணங்களிலும் உரையாடுவதற்கு வாய்ப்பு உண்டு.’ (ப.148, திருக்குறள்: பன்முக வாசிப்பு) என்று கூறும் டாக்டர் வீ. அரசுவின் கருத்து இங்கே நினைவு கூறத்தக்கது. திருக்குறள் எந்தக் கண்ணோட்டத்தில் நோக்கினாலும் அந்தக் கண்ணோட்டத்திற்குத் தகுந்தபடி நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை கொண்டது. அந்த அளவுக்கு மிகச் சிறந்த இலக்கிம் திருக்குறள். இதை நினைத்து நாம் திருக்குறளை மேலும் சிறப்புறச் செய்வோமாக. அதே சமயம் மேற்படியான சில கருத்துக்களை வாழ்க்கையில் (திருக்குறளில் திருத்த முடியாது. அதற்கு உரிமையும் கிடையாது.) திருத்திக் கொள்வோமாக. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இம்மியளவு கூடப் பாகுபாடு இல்லாது வாழும் ஒரு சமூகத்தைப் படைப்போமாக.

உசாத்துணை நூல்கள்:
திருக்குறள்: பன்முக வாசிப்பு
பதிப்பாசிரியர்: வெ. பிரகாஷ்
வெளியீடு: மாற்று, 176, கி பிளாக், தொல்காப்பியர் தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி, சென்னை106.

சித்தர் பாடல்கள்
ஆசிரியர்: மானோஸ்
வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை4.

திருக்குறள்ஆராய்ச்சிப் பதிப்பு
பதிப்பாசிரியர்: கி.வா.ஜகந்நாதன்
வெளியீடு: இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம், பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர்641020.__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

கடவுள் வாழ்த்து பகுதியை எடுத்து விட்டால் திருக்குறள் சமணம் என்று வாதிடுவதற்கு ஒரு ஆதாரம் கூட அதில் கிடையாது ஏனென்றால் அது முழுதுமாக தன்னிலும் மாறுபட்ட கருத்துக்களை சொல்லிக்கொண்டே வருகிறது. 
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்'. என்று சொல்லும் அதே குறள் தான்

'மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு' என்று பிறப்பின் அடிப்படையில் மக்களை பிரிக்கிறது. செய்யும் தொழிலின் மேல் பிரிவை சொல்லும் வர்ண முறைமை தான் சமணத்தில் உண்டு அது பிறப்பினால் உண்டாகும் ஏற்றத்தாழ்வை கூறுவதில்லை என்பது தான் இவர்கள் கருத்து. ஆனால் இதே குறள் அதற்கு மாறுபாடான கருத்தையும் சொல்கிறது.

முன்னதை கொண்டு தான் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை கொண்டு வந்ததாக 20ஆம் நூற்றாண்டு அறிஞர்களால் குற்றம் சாட்டப்படும் ஹிந்து மதத்திற்கு மாற்றான சமண மதத்தை சேர்ந்தது அல்லது religious neutral என்று திருக்குறள் புகழப்பட்டது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் 'வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்" என்கிற பாடலின் நேரடியான குறள் வெண்பா தான் இந்த மேற்பிறந்தாராயினும் என்கிற பாடல்.

'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று' என்ற குறளை பிடித்துக்கொண்டு இது வேத வேள்விகளுக்கு எதிரானது என்று பேசுகிறார்கள் டெண்டுல்கரை விட கோலி சிறந்த மட்டையாளர் என்று சொன்னால் டெண்டுல்கருக்கு விளையாட தெரியாது என்பது அல்ல டெண்டுல்கர் மிகசிறந்த ஆட்டக்காரர் அவரை விட கோலி சிறப்பாக ஆடுவார் என்பதே பொருள் அது போலவே இருப்பதிலேயே உயர்ந்த சடங்கான வேத வேள்விகளை விட ஒரு உயிரை கொன்று தின்னாமல் இருப்பது பெரும் புண்ணியம் என்று தான் குறள் கூறுகிறது. வேத வேள்விகளையும் செய்து கொண்டு உயிரையும் கொன்று தின்னாதீர்கள் என்பதே இதன் அர்த்தம். இது நேரடியாக மன்னர்களை பார்த்து பாடுவது போல இருக்கிறது கொல்லாமை சமண கருத்தனாலும் அது திருக்குறளுக்கு ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது சமணம் போல வலியுறுத்தப்படவில்லை அவ்வளவு தான்.

பெரும்பாணாற்றுப்படையில் பாணனுக்கு தொண்டைமான் இளந்திரையன் அரண்மனைக்கு வழிசொல்லும் இடத்தில் இவர்கள் இல்லத்தில் வாளை மீன் கிடைக்கும் இன்னொருவர் இல்லத்தில் கோழி கிடைக்கும் அப்படியே சென்றால் ஒரு பார்ப்பனனின் இல்லம் வரும் அங்கு மாதுளங்காயை அறிந்து நெய்யில் வதக்கி மிளகு இட்ட சைவ கறி கிடைக்கும்,வடுமாங்காய் கிடைக்கும் என்று தான் வருகிறது ஆக சைவ உணவு பழக்கம் ஒன்றும் சமணத்தில் மட்டும் இல்லை அதை குறள் பெருமையாக சொல்லவும் இல்லை. பொதுவாக புலால் மறுப்பை சொல்கிறது அவ்வளவு தான்.

'ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்' 
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை என்று கூறுகிறது. தனக்கல்ல பசுவிற்கு நீர் என்று கேட்டாலும் கூட இரப்பதனால் அது இழிவானது என்று குறள் கூறுகிறது. இதில் பசுவிற்கு நீர் என்பது மிக உயர்ந்ததாக சொல்லப்படுகிறது குறளின் மொழி இப்படி தான் இருக்கிறது உயர்ந்த ஒன்றை சொல்லி அதனினும் உயர்ந்தது இது என்ற சொல்கிறது.
ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று; என்று கழைதின் யானையர் பாடிய புறநானூற்று பாடல் ஒன்று உண்டு அதற்கு நிகரானது தான் இந்த குறள்வெண்பா. ஆக இந்த முறையில் பாடல்கள் பாடுவது ஒன்றும் புதிதல்ல இது சங்க பாடல்களிலேயே இருக்கிறது.

'மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்' என்கிறது குறள் இதன் அர்த்தம் என்னவென்றால் உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டாம் என்றாகிறது. தன் மயிரை தானே பிடுங்கி முண்டனமாக இருப்பது சமண முனிவர்களின் நெறி, நீ யோக்கியமா இரு போதும் ஒரு மயிரையும் புடுங்க வேண்டாம் என்று நேரடியாகவே இந்த குறள் சொல்கிறது அப்படியானால் அது சமணத்திற்கு மாறானது சடை முடியும் வேண்டாம் அதனால் அது சைவத்திற்கு மாற்று ஆகவே குறள் வைணவம் என்றும் பேச முடியும்.

சங்க பாடல்கள், நீதி நூல்கள், தர்ம சாஸ்திரங்கள் ஆகியவற்றின் செய்திகளை சுருக்கி குறள் வெண்பாவாக எழுதப்பட்டது தான் இந்த நூல் இதை ஒருவருக்கு மேற்பட்டவர்கள் செய்திருக்கலாம் களப்பரர் காலத்தில் உருவான நூல் இது என்று கருதுகிறேன், பின்னாளில் இது தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். 'ஊழில் பெருவலி யாவுள' என்கிற ஆசீவக கருத்து அதில் உள்ளது ஆனால் அதை மறுக்கும் 'முயற்சிதான் மெய்வருத்த கூலி தரும்' என்கிற கருத்தும் அதே குறளில் இருக்கிறது. மறுபிறப்பு கொள்கை சமணம், பவுத்தம், ஆசீவகம், வைதீகம் அனைத்திற்கும் பொது ஆனால் ஏழு பிறவிகள் என்பது நேரடியான வைதீக கருத்து 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்று பல இடங்களில் ஏழு பிறவிகளை பற்றி குறள் கூறுகிறது இது மற்ற சமயங்களில் கிடையா. கடும் விரத முறைகளின் மூலமும், நற்செயல்கள் மூலமும் பிறப்பு இறப்பின் தளையை அறுக்கலாம் என்பது மட்டுமே அவை சொல்வது.

திருக்குறளை இன்னது இதன் சார்புடையது ஆகவே இதற்கு ஆதரவானது இதற்கு எதிரானது என்றெல்லாம் சொல்ல முடியாது அதுவு ஒரு பொது நூல் அதனில் அன்று பாரதவர்ஷத்தில் நிலவிய அனைத்து சமயம் சார்ந்த கருத்துக்களும் இருந்தன அது அன்றைய சமூக ஒற்றுமை முறையையும் மக்கள் பல சமயங்களை ஏற்றுக்கொண்டு அதோடு உறவாடிக்கொண்டு இயங்கிய முறையையும் ஒரு கண்ணாடி போல காட்டுகிறது. இன்று நாம் சொல்லும் 'எல்லாம் விதி' போன்ற வாக்கியங்கள் என்றோ ஹிந்து மதத்தில் கரைந்துவிட்ட ஆசீவகத்தின் அடிப்படை கருதுகோள் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

 வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர்
சாலும் அவைப்படிற் கல்லாதான் பாடிலன்
கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்

பேதையார் முன்னர்ப் படின். வால் இழையார் முன்னர் - ஒள்ளிய நகைகளை யணிந்த அழகிய பெண்மக்களுக்கு முன், வனப்பு இல்லார் -அழகில்லாத ஆடவர், பாடு இலர் - பெருமை இலர்; சாலும் - கல்வி கேள்விகளான் நிறைந்த, அவைப்படின் - அவையிற் புகுந்தால், கல்லாதான் - கல்வியறிவில்லாதவன், பாடு இலன் - பெருமையில்லாதவனாவன்; கற்றான் ஒருவனும் - கற்றறிவுடையானொருவனும், கல்லாதார் (முன்னர்ப் படின்) - படியாதவரிடஞ் சேர்ந்தால், பாடு இலனே - பெருமை இலனாவன்; பேதையார் முன்னர்ப் படின் - அறிவிலார்பாற் சேரினும்; பாடு இலனே -அறிஞன் பெருமையிலனேயாவன். //இது நான்மணிக்கடிகை பாடு இலன் என்றால் பெருமை இல்லாதவன் என்று பொருள்.//__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.


குறள் விளக்கம்
கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர். இது தான் உரை என்பது. நீ கொடுத்திருப்பது கலைஞர் உரை என்று நினைக்கிறேன் அது திராவிட அரசியலுக்கு உவப்ப திருக்குறளை திருத்த முயன்று தோல்வி அடைந்தது.

 

Gopinath R வாலறிவன், மலர்மிசை ஏகினான், ஆதி பகவன், அறவாழி அந்தணன் போன்றவற்றை மட்டுமே சமணம் என்று சொல்ல இயலும் அதுவும் கூட திரிக்கப்பட்டிருக்கலாம் உண்மைதான்.
 
LikeShow More Reactions
 · Reply · Yesterday at 16:51
Manage
ஆனந்தன் அமிர்தன்
ஆனந்தன் அமிர்தன் வாலறிவன் - இயற்கையான அழியா அறிவு நிறைந்தவன்.
மலமிசை ஏகினான் - மனத்தின்கண் நிறைந்தவன்.
அறவாழி அந்தணன் - அறமெனும் ஆழி

ஆதி பகவன் - முதற்மூலக் கடவுள்
என்று விளக்கம் கொடுக்கிறார் பரிமேலழகர்
 
LikeShow More Reactions
 · Reply · Yesterday at 16:56
Manage
Gopinath R
Gopinath R விளக்கமெல்லாம் சரி தான் அது சமணர்களின் மஹாவீரர், ரிஷபநாதர், ஆதிநாதர் போன்றவர்களுக்கானதா சிவனுக்கானதா என்று தான் பார்க்கவேண்டும். மலர்மிசை ஏகினான், எண்குணத்தான் போன்றவை சிவனுக்கானது என்று இலங்கை சைவர்கள் அடித்து கூறுகிறார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

'தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை' - குறள் 43.

தென்புலத்தார் என்பவர் காலம்சென்ற முன்னோர்கள் என்று பொருள் படும், தெய்வம், விருந்தினர், சுற்றம், தன்னுடைய குடும்பம் இவை அனைத்தையும் புறப்பது ஒரு மனிதனின் தலையாய கடமையாகும் என்று திருக்குறள் கூறுகிறது. இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தல், தர்ப்பணம் செய்தல் போன்றவற்றை வேறு எந்த மதம் சொல்கிறது என்று கூறினால் உதவியாய் இருக்கும். எந்த லட்சணத்தில் திருக்குறள் சமண நூல் என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. பித்ருக்கள் தென் திசையில் உறைவதாக ஐதீகம் தென்புலத்தார் என்று அதனால் தான் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள் இதை பல சங்க பாடல்களும் சொல்கின்றன. சமணத்தில் ஏது பித்ரு தர்ப்பணம். ' அதிதி தேவோ பவ' என்கிற தைத்ரிய உபநிஷத்தில் வரும் ஸ்லோகத்தை தான் விருந்தினரை ஓம்புதல் என்கிற முதன்மையான ஐந்து செயல்கள் என்று திருக்குறள் கூறுகிறது.

'ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென் புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்மின் ' -புறம் 9, பாடியவர் நெட்டிமையார், பாடப்பட்டோன் பல்யாக சாலை முதுகுடுமி பெருவழுதி.

பசுக்களும், பசு அனைய பார்ப்பனர்களும் , பெண்களும், நோய்வாய்பட்டவர்களும், தென்புலம் சேர்ந்த முன்னோர்களுக்கு பித்ருக்கடன் செய்ய பிள்ளைகள் பெறாதவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுக நான் அம்பு செலுத்த போகிறேன் என்கிற அடிப்படையில் அமைந்த சங்க பாடல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. ஆக தென்புலத்தார் என்பவர் வைதீகத்தில் குறிப்பிடப்படும் பித்ருலோகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெளிவு இந்த முன்னோர்களை புரக்க வேண்டிய குறிப்பு அவர்களுக்கான நீத்தார் கடன்களை செய்ய வேண்டிய கடமை ஆகியவற்றை இந்த குறள் தெளிவுபட சொல்கிறது. அதோடு தெய்வத்திற்கு செய்யவேண்டிய பூஜை புனஸ்கரங்களை தெளிவாக செய்யவேண்டும் என்றும் இந்த குறள் கூறுகிறது. இது எந்த சமண மார்க்கத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை.

'அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்'. - குறள் 167

மனத்தின்கண் மாசு உடையவனை விட்டு திருமகளான லட்சுமி நீங்கி விடுவாள் அவளுக்கு பதில் அவளின் தமக்கையான மூதேவி பற்றிக்கொள்ளுவாள் என்கிறது இந்த குறள். சமணத்தில் ஏது ஸ்ரீதேவி மூதேவி எல்லாம் இன்று லட்சுமி பூஜை மேற்கொள்ளும் சமண வணிகர் கூட அதை ஹிந்து மதத்தில் இருந்தே பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் அதுவும் சமீப காலங்களில் தான். பிறப்பு இறப்பு மீண்டும் பிறப்பு என்கிற இந்த சுழற்சி பாரதத்தில் தோன்றிய அனைத்து சமயங்களுக்கும் பொதுவாக இருந்தாலும் செயலூக்கம், பக்தி, சேவை போன்றவற்றால் அந்த தலையை அறுக்க முடியும் என்று இந்து மதம் தான் சொல்கிறது அதை குறள் தெளிவாகவே காட்டி விடுகிறது. வேறு எதையாவது வேறு சமயத்திலிருந்து எடுத்துக்கொண்டதா என்றால் மேலோர் கீழோர் என்கிற சமூக அடிப்படையில் அமைந்த பாகுபாட்டை வேண்டுமானால் சமணத்திலிருந்து திருக்குறள் கைக்கொண்டது என்று கூறலாம்.

''மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு'' -குறள் 409.

உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் ஒருவர் கல்வி கற்காதவராக இருந்தால் அவர் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே. இதை சாலமன் பாப்பையா தன் உரையில் 'படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும் அவர் கீழ்சாதியில் பிறந்த நன்றாக படித்தவர் அளவிற்கு பெருமை இல்லாதவரே' என்று பொட்டில் அடித்தாற்போல கூறி விடுகிறார்..__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

திருவள்ளுவர் என்று ஒருவர் வாழ்ந்தாகவோ அவர் திருக்குறளை இயற்றியதாகவோ நான் கருதவில்லை ஒரு தொகைநூலாகவே (compendium, anthology) திருக்குறளை நான் காண்கிறேன், பல வடமொழி நூல்களின் சாரம் அவற்றில் உள்ளது இதை பன்மொழி அறிஞர் வையாபுரி பிள்ளை தெளிவாகவே எடுத்து கூறியிருக்கிறார். நான் நினைப்பது என்னவென்றால் ஏற்கனவே இயற்றப்பட்டிருந்த வெண்பாக்கள் 5 ஆம் நூற்றாண்டில் களப்பரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கம் எடுப்பித்த வஜ்ரநந்தி தலைமையில் இருந்த சமணர்களால் தொகுக்கப்பட்டு அவர்களாலேயே கடவுள் வாழ்த்தும் இயற்றப்பட்டிருக்கலாம் அதனாலேயே அதை சமண நூல் என்று சில அரைவேக்காடுகள் கூவும்.

இதை உறுதி செய்யும் விதமாக பொயு 600 முதல் மதுரையில் ஒரு நிரந்தரமான சமண சங்கம் செயல்பட்டதாக பெர்க்லி பல்கலைக்கழக தமிழறிஞர் ஜார்ஜ் ஹார்ட் அறுதியிட்டு கூறுகிறார். திருக்குறள் போலவே இருக்கும் 400 பாடல்களை கொண்ட நாலடியார் கூட இந்த சங்கத்தை சேர்ந்தவர்களால் தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் அதுவும் ஒரு தொகைநூல் தான்..

புலால் மறுப்பு, கள்ளுண்ணாமை போன்ற சில அதிகாரங்கள் தவிர இதை சமண நூல் என்று சொல்ல ஒரு சான்றும் இல்லை அது கூட சுயகட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு வைணவன் எழுதியிருக்கக்கூடிய வாய்ப்புகளே அதிகம். குலச்சிறப்பு, குடிச்சிறப்பு, வேளாண்மையின் சிறப்பு போன்றவை ஒரு சமணன் எழுதியது போல தெரியவில்லை. சமணர்களுக்கு அதுவும் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர்களுக்கு வேளாண்மை மறுக்கப்பட்ட செயல் சரி அதை பிறகு பார்ப்போம் இப்போது இந்த குறள்களை பார்ப்போம்.

"ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்" - குறள் 133

மு.வ உரை:
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.
கலைஞர் உரை:
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.

கலைஞர்,சாலமன் பாப்பையா போன்றோர் உரைகளை சிறிது திரித்தே எழுதி இருக்கிறார்கள் பரிமேலழகர், நச்சினார்க்கினியர் போன்றோர் உரைகள் படிப்பவர்களுக்கு சிறிது கடினமாக இருக்கலாம் அதனால் இதையே அளிக்கிறேன். திரித்து எழுதியவர்களால் கூட இழி பிறப்பையும் இழிவான குடியையும் மறுக்க முடியவில்லை.

இடுகாட்டில் ஈமக்கிரியைகளை செய்யும் ஊழியனை இழி பிறப்பினன் என்கிறது புறநானூறு அது அவன் பிணத்தை எரிக்கும் இழிவான தொழிலை செய்வதனால் இருக்கலாம் எப்படியாகிலும் பிறப்பினால் அமையும் உயர்வு தாழ்வு சங்ககாலம் தொட்டே தமிழரிடம் இருக்கிறது. வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் என்கிற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் பாடலும் இதை உறுதி செய்கிறது, சரி இப்படி ஒழுக்கம் குன்றினால் என்ன ஆகும் அடுத்த குறள் இது.

"மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்" - குறள் 134

மு.வ உரை:
கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.
சாலமன் பாப்பையா உரை:
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
கலைஞர் உரை:
பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்

என்ன ஆகும் பார்ப்பானின் குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும். அதாவது வேதத்தை மறந்தால் கூட திரும்ப கற்றுக்கொள்ளலாம் அது குடிப்பிறப்பை அழிக்காது வேதம் தெரியாத, சாஸ்திரங்களை மறந்த பார்ப்பானும் பார்ப்பானே ஆனால் அவன் அடிப்படை மானுட அறம் என்னும் பிறப்பினால் உண்டாகும் ஒழுக்கத்தை காக்க தவறினால் பார்ப்பனன் என்னும் குடியின் சிறப்பை கெடுத்தவன் ஆகிறான்.

பார்ப்பானை எடுத்துக்காட்டி குடிசிறப்பை கூறும் இவரை தான் நாஞ்சில் நாட்டு வள்ளுவர் என்கிறார்கள், புலால் மறுத்த தவநோன்பை மேற்கொண்ட சமணன் என்கிறார்கள். கலைஞரும் அன்றைய திராவிடர் கழகத்தவரும் எதற்கு திருக்குறளை பிடித்துக் கொண்டு தொங்கினார்கள் என்பது தான் எனக்கு இன்றும் புரியாத புதிர். ஒரு 50 குறளை குறிப்பிட்டு எடுத்து வைத்திருக்கிறேன் அவ்வப்போது இனி பதிவிடுகிறேன் தெளிவான குறிப்புகளுடன்..__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

திருக்குறளும்_இந்துமதமும்:

//"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே." //

-என்று அப்பர் இறைவனின் திருவடி எப்படிபட்டது என்று விளக்குகிறார் சைவ நெறியிலும் சரி வைணவ நெறியிலும் சரி திருவடி சமர்ப்பணம் மிக முக்கியமானது.

அதே போல பிறவி என்பது ஒரு தொடர் செயல்பாடு வினையின் நீட்சி அது.பிறவியை பெரிய கடலாக ஒப்பிடும் தன்மையே இந்த மரபில் உள்ளது.அப்பர் இதை பாடுகிறார்.

//மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.//

மனம் என்கிற தோணியில் சினம் என்கிற பண்டத்தை ஏற்றி பெரிய கடலில் போகிறேன் அங்கே காமம் எனும் பாறை தாக்கி அந்த தோணி இடர்படும் போது உன்னை மறக்காமல் என் மனத்தை நீ பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.மிகத்தெளிவாக இறைவனின் திருவடியையும் பிறவிக்கடலையும் விரித்து பாடுகிறார் அப்பர் இதை ஒட்டியே எழுகிறது குறளும்,

"பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவ னடிசேரா தார்".

என்ற வரிகளின் வழியே முதலில் பிறவியை ஏற்றுக்கொண்டது வள்ளுவம் அதோடில்லாமல் அந்த பிறவியை கடலாகவும் அதில் நீந்தி வெற்றி பெறுபவரே இறைவனின் அடி சேர்பவர் என்றும் அடித்துக் கூறுகிறது.அந்த திருவடிகளை சேராதாராக ஆகிவிட கூடாது என்றே அப்பர் மேலே பாடுகிறார்.

பிறவி என்ற பொது சுட்டலோடும் குறள் நிற்கவில்லை அடுத்தது சொல்கிறது 
//எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு// -தன் துன்பத்தை நீக்கினவரது நட்பை ஏழ்பிறப்பும் மறக்க மாட்டார்கள் என்று ஏழு பிறவிகள் பற்றிய வைதீக கோட்பாட்டை முன்னிறுத்துகிறது வள்ளுவம்.பிறவியை பற்றி இதோடும் நிற்கவில்லை பிறாவாமை என்னும் முக்தி நிலையை பற்றியும் பேசுகிறது.அது பிறப்பினை பேதைமை என்கிறது இதையே காரைக்கால் அம்மையார் கேட்கிறார் பிறவாமை வேண்டும் பிறப்புண்டேல் உன்னை மறவாமை வேண்டும் என.

//பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.// என்கிற இந்த குறளில் காணும் செம்பொருள் எதுவென்று மாணிக்கவாசகர் சொல்கிறார் பாருங்கள் "வாழ்வற வாழ்வித்த மருந்தே!
செம்பொருட்டுணிவே! சீருடைக்கழலே!
செல்வமே! சிவபெருமானே!" செம்பொருள் துணிவே என்று இறைவனை அழைக்கிறார்.

சைவ சித்தாந்தம் "சதசத்து" என ஒரு தத்துவத்தை முன் வைக்கிறது எப்படியாயின் உயிர் தனித்தியங்காது இறை,தளை என்பதில் ஏதேனும் ஒன்றை பற்றியே நிற்கும்.சுத்த நிலையில் இறைவனை சார்ந்தும் கேவல நிலையில் மலங்களை சார்ந்தும் நிற்கும்.அது எதை சார்கிறதோ அதன் வண்ணமாகிவிடும் என்கிறது விதி "சார்ந்ததன் வண்ணமாதல்" என்பதே சதசத்து.பரம்பொருளான சத்து அசத்தை அனுபவிக்காது உயரிய இடத்தில் இருக்கும்.அசத்தோ அறிவின்மையால் சத்து(பரம்பொருளை) உணராது.இறைக்கும்-தளைக்கும் இடைப்பட்ட உயிரே இவ்விரண்டையும் உணரும்.சிவாஞானபோதம் ஒரு விதி சொல்கிறது "யாவையும் சூனியம் சத்தெதிர் ஆகலின் சத்தே யறியாது அசத்திலது அறியாது இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா" என்றுரைக்கிறது.இதை வள்ளுவம் நேரடியாக சொல்கிறது.

"சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின்
-மற்றழித்துச் 
சார்தரா சார்தரு நோய்"

எதை பற்றிக்கொள்ளவேண்டும் என்ற மெய்யுணர்ந்து தேவையற்ற பற்றுகளை அகற்றி நாம் நடந்தால் அந்தப்பற்றினால் வருந்துன்பம் நன்மைகளையழித்து நம்முடன் வராது.துல்லியமாக பதி/பசு/பாசத்தை பேசுகிறது.அடுத்து முத்தாய்பாக குரு மரபை பற்றியும் ஒரு குறள் சொல்கிறது யாதாயின்

"கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி."

பொருள்:பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

இப்படி குறள் முழுக்க பல உதாரணங்கள் தெளிவாக உள்ளது இது இந்து மதத்தின் ஆதார விதிகளை பேசுகிறது என்று. ஆனால் திருக்குறள் ஒரு சமணநூல் என்ற கருத்தாக்கம் திருக்குறளை கற்றறிந்து நாம் அடைந்ததல்ல விடாமல் நம் சிந்தனையில் ஏற்றி ஓடவிட்ட ஒரு செய்தி.நாம் சமணத்தையும் கற்கவில்லை வேறெந்த சித்தாந்தத்தையும் கற்கவில்லை இதை பெரும்பாலும் சொல்பவர்களுக்கும் எந்த சித்தாந்த பயிற்சியும் இருக்காது.தமிழிலக்கியத்தில் இந்து மதமில்லாமல் எதுவுமே இல்லை அப்படி இல்லையென்று சொல்பவர்கள் எதையுமே படிக்கவில்லை அல்லது வேண்டுமென்றே சிக்கியவர்கள் லாபம் என்ற நோக்கத்துடன் வலையை வீசுகிறார்கள் என்று அர்த்தம்.எனவே இதைப்பற்றி முக்கியமான விவாதத்தை துவக்கிய அண்ணன் திரு. Gopinath Rக்கு நன்றி.__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

 

Ramachandran
Ramachandran நல்ல தொடக்கம். அரைவேக்காடுகள் போன்ற சொல்லாட்சிகளைத்தவிர்த்தால் தரம்மிக்க விவாதத்திற்கு இடமளிக்க உதவிகரமாக இருக்கும். ஏனெனில் திருவள்ளுவர் என்ற தனிமனிதர்(சாதிப் பெயரால் அல்லது சாதிப்பட்டப் பெயரால் அல்லது குடிப் பெயரால் கம்பர்,காப்பியர் என அழைக்கப் பட்டமை போல)அழைக்கப்பட்டிருக்கலாம். சமணத்தின் உட்பிரிவாகிவிட்ட ஆசீவக சமயச் சார்புடையவராக இருந்திருக்க வாய்ப்புண்டு. தமிழகத்தில் கி. பி. 400அளவில் நிலவிய சமய-தத்துவ-வழிபாட்டு மரபுகள் குறித்த சித்திரம் தெளிவுபடவில்லை என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
 
LikeShow More Reactions
 · Reply · 
2
 · 25 September at 09:50
Manage
Gopinath R
Gopinath R 'ஊழில் பெருவலி யாவுள' என்று பேசுவது ஆசீவக கருத்து என்று சொன்னால். 
'தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.' என்பது நேர்மறையாக அல்லவா சொல்கிறது அது ஆசீவக கருத்து அல்லவே. தெய்வத்தால் அனைத்தும் முடியும் அத்தகைய வல்லமை படைத்த தெய்வத்த
...See more
 
Manage
Gopinath R
Gopinath R உலகை உருவாக்கிய இறைவன் பிச்சை எடுத்து தான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்தியிருந்தால் அவனும் பிச்சை எடுத்து வாழட்டும் என்கிற கருத்து சமணமோ ஆசீவகமோ அல்ல உலகை இறைவன் படைத்தான் அதை காக்கிறான் என்கிற கருத்துரு அவர்களுக்கு கிடையா.
Image may contain: text
 
Manage
Gopinath R
Gopinath R பசுவிற்கு நீர்வேண்டும் என்று கேட்டாலும் கூட ஒருவரிடம் இரப்பது இழிந்து தான் என்று கூறுகிறார். எனக்கு அல்ல என்னிலும் உயர்ந்த பசுவிற்கு என்னும் போது அவர் பசுவின் மதிப்பை தெளிவாகவே பேசுகிறார் இது நேரடியான அன்றைய ஹிந்து சமய கருத்துக்களை கொண்ட நூல் தான்.
Image may contain: text
 
Manage
Gopinath R
Gopinath R "ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்." மன்னன் தன் கடமையை மறந்தான் என்றால் பசுக்கள் பால் தராது அறுதொழிலான வேதம் ஓதுதல் ஓதுவித்தல், யாகம் செய்தல் செய்வித்தல், தானம் வழங்குதல் ஏற்றல் என்கிறவற்றை கொண்ட அந்தணர்கள் தங்கள் வேதத்தையும் 
சாஸ்திர நூல்களையும் மறந்து விடுவர் இது எந்த கருத்து. திருக்குறளை இன்னது என்று ஒரு குடுவையில் அடைக்க முடியாது அது தன்னிலும் மாறுபட்ட கருத்துக்களை சொல்லும் ஒரு தொகைநூல் தான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

 Dev Raj குறட்பா நடையில் வேறுபாடின்மை, உவமைகளில் சீர்மை; பல பாக்களின் தொகுப்பாக ஏற்க இயலாது

 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 10:24
Manage
Gopinath R
Gopinath R நீங்கள் சொல்வது நாலடியாருக்கும் பொருந்தும் அது தெளிவாகவே பல்வேறு மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று சொல்லிவிட்டது. நீங்கள் இலக்கண நடையை பற்றி பேசுகிறார்கள் வெண்பாவை ஒன்றாக தொகுத்தால் அப்படி தான் இருக்கும். குறள் பல இடங்களில் முரண்பட்ட கருத்துக்களை பேசுகிறது அது ஒருவர் எழுதியது அல்ல.
 
Manage
Ramachandran
Ramachandran 3இடங்களில் வள்ளுவர் தம் திகைப்பை வெளிப்படுத்தியுள்ளார். இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்;அறத்தாறிதுவென வேண்டா சிவி கை பொறுத்தா னோ
 
Manage
Ramachandran
Ramachandran பொறுத்தானோடூர்ந்தானிடை;அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்-போட்டுமுடிக்கப் பட்ட பாதையில் பயணம் செய்பவராக இல்லாமல் பாதையைச் செப்பனிடவும் மாற்றியமைக்கவும் செய்ததோடு நான் சொல்கிறேன் என்பதால் நம்பிவிட வேண்டாம்;நீயாக யோசித்துப் புரிந்து கொள்ளமுயல் என்றும்(புத்தர் சொன்னதைப் போல்) சொல்ல வருகிறார் போலும்
 
Manage
Gopinath R
Gopinath R "குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்." தன் நாட்டையும் குடிகளையும் உயர்த்துவேன் என்று முனைபவனுக்கு தெய்வம் ஆடையை இருக கட்டிக்கொண்டு உதவ முன் வந்து நிற்கும். இவை எந்த சிரமண மதத்தின் கருத்துக்களும் அல்ல. தெளிவாகவே வைதீக சார்புடைய கருத்தே.
 
Dev Raj குறள் ஒரு நீதிநூல், அது துதி நூலன்று. பெரிதாகக் கடவுளைக் கொண்டாட இடமில்லை.
 
Manage
Gopinath R
Gopinath R 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்' என்பதே திருக்குறளின் இறைசிறப்பை விளக்க போதுமானது.
'தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் 

தாமரைக் கண்ணான் உலகு.' தாமரை கண்ணனான திருமாலின் வைகுண்டத்தை விட என் காதலியின் மென்தோள்கள் இனிது என்கிறார் சிறந்த ஒன்றை இன்னோன்றுடன் ஒப்பிடுவது, இதை விட தாழ்ந்தது வேண்டாம் என்று வேறொன்றை ஒப்பிடுவதுமே குறளின் மொழி.


__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று

வள்ளுவர்பிரான் பெரும்பாலும் ஒரே வழிமுறையைத்தான் நூல் நெடுகிலும் கையாள்கிறார்; உயர் செயலை உயர்ந்தவற்றோடும், இழி செயல்களை மிக இழிந்தவற்றோடும் ஒப்பீடு செய்வது அவர் கையாளும் முறை. திருகலாகிய சிந்தை படைத்தோர் பொருளைச் சிதைத்துத் திரித்துத் திசை மாற்றும் போக்கு மிகவும் தவறானது, திருவள்ளுவ நாயனாரின் திருவுள்ளக் கருத்துக்கு முரணானது.

கோவையைச் சேர்ந்த திரு நடேசன் முத்துக்குமாரசுவாமி அவர்கள் தெளிவாக விளக்குகிறார்.

"அவிசொரிந்து ஆயிரம் வேடலின் ஒன்றன், 
உயிர்செகுத் துண்ணாமை நன்று" 
இந்தக் குறள் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் உள்ளது. இந்தத் திருக்குறளை வைத்துக் கொண்டு திருவள்ளுவர் அவிசொரியும் வேள்வியைக் கண்டித்தார் என்றும் அதனால் வேள்வியை மறுக்கும் அவைதிக சமணம் அல்லது பவுத்தத்தைச் சார்ந்தவர் திருவள்ளுவர் எனப் பெரிய மேதாவிகளான சீனி. வேங்கடசாமி போன்றவர்கள் சாதிப்பர்.

தெய்வப் புலவர் ஓர் அறத்தை வலியுறுத்த மற்றொரு அறத்தினொடு உறழ்ந்து கூறுவார். இங்கு அதிகாரப்பட்டது, புலால் மறுத்தல் என்னும் அறம். அது வேள்வி செயல் என்னும் அறத்தினொடு உறழ்ந்து காட்டி,இந்த அறத்தைக் காட்டிலும் இந்த அறம் உயர்ந்தது எனக் கூறியதே அன்றி வேள்வியைக் கண்டித்தது ஆகாது. வேள்வியும் ஒரு அறம், புலால் உண்ணாமையும் ஒரு அறம். இவ்விரண்டில் வேள்விகளான் வரும் பயனைக் காட்டிலும் புலால் உண்ணாமை என்னும் இவ்விரதமாகிய அறத்தினால் வரும் பயனே பெரிது என்பது இக்குறளின் கருத்தாம். வேள்வியை மறுத்தல் இக்குறளின் கருத்தன்று. பரிமேலழகரும் இவ்வாறே கூறினார்.
மேற்சுட்டிக் காட்டிய குறளைப் போன்றே அறங்களை ஒப்பிட்டுக் காட்டி அதிகாரப்பட்ட அறத்தை வலியுறுத்தும் ஏனைய குறட்பாக்களையும் ஒப்பு நோக்க வேண்டும் -
"ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க , 
சான்றோர் பழிக்கும் வினை" 
இந்தக் குறட்பா ’வினைத் தூய்மை’ எனும் அதிகாரத்தில் உள்ளது. இக்குறட்பாவில் இரண்டு பாவங்களை ஒப்பு நோக்கி இந்தப் பாவத்தைக் காட்டிலும் இந்தப் பாவம் கொடிது என வள்ளுவர் சுட்டிக் கூறுகின்றார். பெற்ற தாயின் பசியைப் போக்காதிருத்தல் பாவம். சான்றோர் பழிக்கும் வினையைச் செய்தலும் பாவம். இவ்விரண்டினையும் ஒப்பு நோக்கும்போது தாய் பசியோடிருப்பதைக் காண்பதைக் காட்டிலும் சான்றோர் பழிக்கும் வினை செய்வது கொடிய பாவம் என்பதே கருத்து.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலினும்' என்னும் குறளில் உடன்பாட்டில் சொன்ன வலியுறுத்தலை இந்தக் குறளில் எதிர்மறையில் வலியுறுத்துகின்றார். அங்கு வேள்வியை மறுத்தார் எனப் பொருள் கொண்டால் இங்கு தாயின் பசியோடு வைத்திருத்தல் அறம் எனக் கொண்டார் எனப் பொருள்படும்.

"ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின், 
நீரினும் நன்றதன் காப்பு" 
இந்தத் திருக்குறளில் உழவுத் தொழிலின் நான்கு நிலைகளைத் திருவள்ளுவர் ஒப்பிட்டுப் பேசுகின்றார். ஏர் உழுதல் ஒன்று. எருவிடுதல் மற்றொன்று. இந்த இரண்டில் ஏர் உழுதலைக் காட்டிலும் எருவிடுதல் நன்று எனக் கூறினார், ஏர் உழவேண்டா, எருவிடுதல் ஒன்றே போதும் என்பது அவர்கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று, நீர் பாய்ச்சல் மற்றொன்று. இங்கு நீர்பாய்ச்சலே போதும் களைகளைக் களைய வேண்டுவதில்லை என்பது அவர்தம் கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று காப்பிடுதல் மற்றொன்று. காப்பிடுதல் இன்றியமையாதது என வலியுறுத்தினாரேயன்றிக் களை கட்டல் தேவையில்லை எனக் கூறினாரல்லர்.

அவ்வாறே, ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை பேரறம் என வலியுறுத்தினாரேயன்றி, அவிசொரிந்து வேட்டலைத் தெய்வப்புலவர் மறுத்தார் எனக் கொள்ளக் கூடாது.

Natesan Muthukumaraswamy__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

 

"குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்."

’தன் குடியை உயர்த்துவேன் என்று முனைபவனுக்கு தெய்வம் ஆடையை இருகக் கட்டிக்கொண்டு உதவ முன் வந்து நிற்கும். ’

இது எந்த சிரமண மதத்தின் கருத்தும் அன்று. தெளிவாகவே வைதிகச் சார்புடைய கருத்தே.

Gopinath R

மிக அருமையான கருத்துக் கதைத்தார். முக்தி அடைந்த ஞானியரையே சமணம் தெய்வநிலைக்கு உயர்த்துகிறது; வேறு எல்லாம்வல்ல கடவுள் என்பது போன்ற கோட்பாடுகள் சமணத்தில் கிடையா. ஆக பூவுலகில் முயற்சியுடையவனுக்கு எந்த ஒரு சமணக் கடவுளரும் உதவார். மேலும் வரிந்து கட்டிக்கொள்வதற்கு துறவு மேற்கொண்டு முக்தி பெற்ற சுருத கேவலியர்க்கு எந்த ஆடையும் கிடையாது.

Devapriyaji

குடிசெய்வல் என்னும் ஒருவர் - 
இராமபிரானையும், கண்ணபிரானையும் 
‘குடிசெய்வல் என்னும் இருவர்’ எனக் கணக்கிடலாம்.

ராமோ ராஜ்யம் உபாஸித்வா - பல்லாயிரம் ஆண்டுகாலம் அரசாட்சியை இறைத்தொண்டாகவே செய்து முக்தி பெற்றதை இராமாயணம் சொல்லும்.

சிதறுண்டு கிடந்த வ்ருஷ்ணி, போஜர், அந்தகர் போன்ற பல குடியினரைக் கொண்ட யாதவ இனத்தவரை ஒன்று சேர்த்து அவர்களை துவாரகையில் வசதியான வாழ்வளித்துக் குடியமர்த்திய கண்ணபிரானை பாகவதம் சொல்லும்.__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

Ramachandran வழிபடு தெய்வம் நிற் புறங்காப்ப என்பது போன்ற பல வரிகள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. சமணமும் யக்ஷர்கள்,தேவர்களைஏற்கிறது. புண்ணியம் செய்தோர் தேவருலகத்தை அடைவர் பாவம் செய்தோர் நரககதியடைவர் என்பதைச் சமணம் ஏற்றது. இருள்சேர் இருவினையும் கடந்தவர் கடவுளர் என்பது சமண நம்பிக்கை. தீர்த்தங்கரர்களையே கடவுளராகக் கருதிற்று சமணம். பஞ்ச பரமேட்டிகள் வழிபடப் பெற்றனர்.
 
LikeShow More Reactions
 · Reply · 
4
 · 25 September at 15:35
Manage
Dev Raj
Dev Raj முத்தி பெற்ற தீர்த்தங்கரர் யாருக்கும் வரிந்துகட்டிக்கொண்டு உதவார், ஐயா. அது சமணக் கோட்பாட்டுக்கே முரணானது. அவர்களுக்கு எந்த விதத்திலும் நிலவுலகோடு தொடர்பு கிடையாது.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 15:37 · Edited
Manage
Ramachandran
Ramachandran ஆனால் தேவர்கள் உதவலாமே!
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 15:37
Manage
Dev Raj
Dev Raj Ramachandran சமணத்தின் தேவர்கள் அமரருலகில் ஸமவசரணம் அமைப்பதில் போதக ஞானியர்க்கு உதவுவர், அவ்வளவுதான்
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 15:39
Manage
Gopinath R
Gopinath R http://www.jaina.org/?page=ConceptofGod Jainism believes that universe and all its substances or entities are eternal. It has no beginning or end with respect to time. Universe runs own its own accord by its own cosmic laws. All the substances change o...See more
However Jainism does believe in God, not as a…
JAINA.ORG
 
 
LikeShow More Reactions
 · Reply · 
1
 · 25 September at 15:39
Manage
Dev Raj
Dev Raj Gopinath R இதைப் பலமுறை எழுதியுள்ளேன்; ‘மூவா முதலா உலகு’ பலருக்கும் புரிவதில்லை.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 15:40
Manage
Gopinath R
Gopinath R இறைவன் படைத்த உலகு என்பது திருக்குறள் கூறுவது.
 
LikeShow More Reactions
 · Reply · 
1
 · 25 September at 15:41
Manage
Gopinath R
Gopinath R http://www.huffingtonpost.com/.../a-jain-scholars... Some foolish men declare that a creator made the world. The doctrine that the world was created is ill-advised and should be rejected. If God created the world, where was he before the creation? If y...See more
By Dr. Sulekh C. Jain Some foolish men declare that a creator made the world. The doctrine that…
HUFFINGTONPOST.COM
 
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 15:49
Manage
Gopinath R
Gopinath R In Jainism, we only have the term “bhagwan,” which refers to arihantas (the divine in human form) and siddhas (the divine after leaving the human body). ''Neither arihantas nor siddhas are considered a creator, preserver, destroyer, operator, rewarder,...See more
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 15:50
Manage
Dev Raj
Dev Raj தெய்வ மூடம் தீர்த்த மூடம் எனும் சமண நம்பிக்கைகளை அறிதல் நன்று; இன்னலுற்ற நிலையிலும் சாவக அறத்தை மேற்கொண்ட கண்ணகி பாசண்டச் சாத்தன் போன்ற தெய்வங்களைத் தொழவில்லை; துறை படிந்து நீராடிப் பாவக்கறை போக்கிக் கொள்ளவில்லை. இவை சமணத்துக்குப் புறம்பானவை. வள்ளுவர் சமணராயின் தெய்வ வழிபாடியற்றச் சொல்வாரா?


__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

 Devapriyaji உலகைப் படைத்த கடவுள் என்பதும் பிறந்து இறந்த மனிதர்களை (தீர்த்தங்கரர்) ஒன்று ஆகாது என்பது எம் கருத்து, அதையே வள்ளுவரும் தனக்குவமை இல்லாதான் என்கிறார். சமணம் வழிபாடு சிறு தெய்வம் எனலாமே தவிர உலகியற்றியானில் சேர்க்க இயலாது
 
LikeShow More Reactions
 · Reply · 
1
 · 25 September at 15:38
Manage
Ananthakrishnan Pakshirajan
Ananthakrishnan Pakshirajan Jains don't believe in any God who will respond to prayer and interfere in the world. You do have a point.
 
LikeShow More Reactions
 · Reply · 
2
 · 25 September at 15:52
Manage
Gopinath R
Gopinath R அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்'. - குறள் 167 தமக்கை மூதேவி, தங்கை ஸ்ரீதேவி என்கிற லட்சுமி எல்லாம் சமணத்தில் கிடையாதய்யா. ஸ்ரீ என்கிற வடமொழி சொல்லின் தமிழ் மாற்றான திரு என்கிற வார்த்தையை பல இடங்களில் குறள் பயன்படுத்துகிறது. காலன், அந்தகன், யமன் என்று அழைக்கப்படும் தர்மதேவனை கூற்றுவன் என்று பல குறள்கள் சொல்கின்றன இது எந்த ஊர் சமணத்தில் உள்ளது.
 
LikeShow More Reactions
 · Reply · 
1
 · 25 September at 15:54
Manage
Ananthakrishnan Pakshirajan
Ananthakrishnan Pakshirajan But Kural is not a philosophical work. It also says that அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
 
Gopinath R செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. இதுவும் குறள் தானே.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:00
Manage
Gopinath R
Gopinath R அவிசொரியப்படும் வேள்வி சிறந்தது அதைவிட சிறந்தது புலால் உண்ணாமை வேள்வி செய்துகொண்டு புலாலையும் உண்ணுவது தவறானது அதற்கு இப்படி பொருள் கொள்ள வேண்டும்.
 
 
Gopinath R if its not a philosophical work u should not say its a jaina work thats what iam avering here. kural is in no way connected to jainas or their life styles. thats why i say its an anthology collected and enumerated at some later date.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:02
Manage
Ananthakrishnan Pakshirajan
Ananthakrishnan Pakshirajan In the same manner, we could say that the references to the Hindu gods are all poetic licences .
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:04
Manage
Ananthakrishnan Pakshirajan
Ananthakrishnan Pakshirajan There is definitely a possibility that Kural was an anthology.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:04
Manage
Gopinath R
Gopinath R புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து
மு.வ உரை:

நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.


__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

 
Ananthakrishnan Pakshirajan
Ananthakrishnan Pakshirajan It is certainly not a Jaina work. There is a possibility that many of the Kurals are written by a person who professed Jaina faith.
 
LikeShow More Reactions
 · Reply · 
1
 · 25 September at 16:05
Manage
Ananthakrishnan Pakshirajan
Ananthakrishnan Pakshirajan This is poetic hyperbole and the poem says there is no such world!
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:06
Manage
Gopinath R
Gopinath R yes that can be a later day addition. most of the kamathupal kurals resemble kurunthogai and other agam poems.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:06
Manage
Gopinath R
Gopinath R many of the kural says there is a nether world its not hyperbole.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:07
Manage
Gopinath R
Gopinath R தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
மு.வ உரை:

தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ.
சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:08
Manage
Gopinath R
Gopinath R here he says for certainity that there is another world out there which gives total bliss and its vaikunda.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:09
Manage
Ananthakrishnan Pakshirajan
Ananthakrishnan Pakshirajan Jaina religion does believe in nether worlds.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:09
 
Gopinath R
Gopinath R குறள் 560:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

மு.வ உரை:
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:10
Manage
Ananthakrishnan Pakshirajan
Ananthakrishnan Pakshirajan No. This can also be taken to mean that the Vaikunta is a fake world and the real pleasure is here!
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:10
Manage
Ananthakrishnan Pakshirajan
Ananthakrishnan Pakshirajan OK. He speaks about this world and the cows and brahmins who exist. There is nothing wrong in a Jain saying that.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:11
Manage
Gopinath R
Gopinath R how can u say so if i say mysore pak is tastier than jilebi will u attribute there is no jilebi and its a fake hyperbole. its a comparitive operator he used here and in most of other kurals.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:11
Manage


__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

 

Ananthakrishnan Pakshirajan
Ananthakrishnan Pakshirajan This is not a very intelligent argument.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:12
Manage
Gopinath R
Gopinath R averring cows and brahmins are the most important beings in a country is jain philosophy.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:12
Manage
Gopinath R
Gopinath R no its the same as avisorinthu ayiram vettalin. which doesnt say its not bad to do rituals.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:13
Manage
Gopinath R
Gopinath R its not a jaina work and not giving any preferences to jaina philosophy.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:14
Manage
Ananthakrishnan Pakshirajan
Ananthakrishnan Pakshirajan YOu are not logical at all. Tiruvalluvar is not taking to converts. He is talking to a clutch of persons who live in a world which believes in many potent gods who could intervene on their behalves.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:16 · Edited
Manage
Gopinath R
Gopinath R thats what i say with that how would u say its a jaina work. if its a jaina work it has to proselytize its principles isnt it and nothing more than it.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:16
Manage
Ananthakrishnan Pakshirajan
Ananthakrishnan Pakshirajan Where did I say it is a Jaina work? I am only saying that it is possible that Valluvar was a Jain.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:18
Manage
Gopinath R
 


__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

Gopinath R குறள் 43:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை
...See more
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:18
Manage
Gopinath R
Gopinath R i dont say thiruvalluvar is a jaina or anybody called thiruvalluvar ever lived its an anthology of later date by some samana sangha in madurai and they interpolated some of their own texts in there.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:19
Manage
Ananthakrishnan Pakshirajan
Ananthakrishnan Pakshirajan If that was the case, why should they include verses that are now being disputed. Yes, I agree that there could be interpolations in Kural and the core must be by a single person.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:22
Manage
Ananthakrishnan Pakshirajan
Ananthakrishnan Pakshirajan Jains do worship ancestors. there is no Shraddh that is about all.
 
 
LikeShow More Reactions
 · Reply · 
1
 · 25 September at 16:22
Manage
Gopinath R
Gopinath R குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
...See more
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:23
Manage
Ananthakrishnan Pakshirajan
Ananthakrishnan Pakshirajan You are gallivanting. I am saying clearly that there are several verses in Kural that don't agree with Jaina principles. But an overall picture gives an impression that many Kurals were written by a person professing Jaina faith.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:27 · Edited
Manage
Gopinath R
Gopinath R thats what i say too. it was collected and enumerated in a jaina sangha and they would have did so. iam not gallivanting by the way sir and iam only stating facts.
 
LikeShow More Reactions
 · Reply · 25 September at 16:28


__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

 7ba.jpg
7bbb.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

18_02_2018_006_031.jpg

18_02_2018_257_039.jpg__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

992f5155-2f07-451a-9e81-00774786765e.jpg

27867521_1679457075431493_46840644460924__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

18_02_2018_252_038.jpg__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard