New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளில் சைவ சித்தாந்தம் -ஆர். கஸ்தூரி ராஜா


Guru

Status: Offline
Posts: 24765
Date:
திருக்குறளில் சைவ சித்தாந்தம் -ஆர். கஸ்தூரி ராஜா
Permalink  
 


திருக்குறளில் சைவ சித்தாந்தம்-ஆர். கஸ்தூரி ராஜா

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த வீடு.

மனைவி=கணவன். வசதி வாய்ப்புகள் ஆகியவற்றில் மனநிறைவு கொள்வதில்லைஏதோ ஒன்றினை மனிதன் தேடிக் கொண்டே இருக்கிறான். முடிவில் அவைகளை அடைந்தானா எனில் அது கேள்விக்குறியே. இந்நிலையில் வாழ்க்கையில் அவனுக்கு ஏற்படும் தடைகள், அவற்றைத் தாண்ட அவன்படும் துன்பங்கள் எண்ணிலடங்கா.

உலகில் வாழும் மக்களுக்கு வாழும் வகையினை உணர்த்த, வழிகாட்ட உதவும் ஒரே நூல் திருக்குறள் எனில் மிகையாகா. உலக உயிர்களை உய்வு பெற வைக்கும் சமயம் சைவமே என்பதும் சான்றோர் முடிவாம். எனவேதிருக்குறளில் சைவ சித்தாந்தம்என்ற தலைப்பில், சைவ சமயத்தின் மேன்மை, சித்தாந்தம் என்பதன் பொருள், திருக்குறளில், சைவ சித்தாந்தக் கருத்துக்கள் பொதிந்துள்ள பாங்கு ஆகியவைகளைப் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமெனலாம்.

சைவசித்தாந்தின் தொன்மை: “சைவம் வரலாற்றுக்கு முற்பட்ட சமயம். அஃது ஆரியர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முற்பட்ட  காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வந்திருக்கிறதுஎன்று ஜி.யு.போப் அவர்கள் குறிப்பிடுகிறார். கிறிஸ்த்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே சிவ வழிபாடு இருந்திருக்கிறது என்று சர்.ஜான்மார்ஷல் அவர்கள் கூறுகிறார். மேலும் யூதமதம் கி.மு. 1500-1200,ஷிண்டோமதம் கி.மு. 660, சமணம் கி.மு. 599, பௌத்தம் கி.மு. 560, கான்பூஷியஸ்கி.மு. 551, கிறித்துவம் கி.பி. 4, இசுலாமியம் கி.பி. 570, சீக்கியம் கி.பி. 1469 (1977– ஜீன் மாத திருக்கோயில் இதழ்) தோற்றுவிக்கப்பட்டது என்ற கூறுபவர்கள் சைவசமயம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது என்று வரையறுக்க முடியாத தொன்மையான மதம் என்கின்றனர்.

ங்ககாலசைவம் : கி.மு. 2500 – கி.; பி. 100 வரை, முச்ங்ம்  இருந்தமையை வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக் கொள்வர். இதுபோலவே சங்க நூல்களிலும் சிவனைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றனஎடுத்துக்காட்டாக.

ஈர்ஞ் சடை அந்தணன்” (கலி – 38)

முக்கண்ணான்” (கலி – 2)

கறை மிடற்று அண்ணல”; – (புறம ; 55.)

என்ற அடிகளைச் சுட்டலாம். மேலும் பரிபாடல் 8, புறம் 166, ஐங்குறுநூறு கடவுள்

வாழ்த்துப்பாடல், கலி 81, புறம் - 198, அகம் - 181 போன்ற பாடல்களிலும் சிவனைப்

பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. சிவபெருமான் செய்யும் ஐந்தொழில்களைச்

சைவசித்தாத்தம் குறிப்பிடுகிறது.

இதனையே,

எல்லா உயிர்க்கும் ஏமம்புறம். (கடவுள் வாழ்த்து)

கொடுகொட்டி ஆடும் கால”; கலி. (கடவுள் வாழ்த்து)

என்று குறிக்கிறது. மேலும் சிவபெருமானின் பண்புகளையும் சுட்டிக் செல்கிறது

தொல்காப்பியம்.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்

கண்டது முதல்நூல் ஆகும்” (பொருள். 640)

சங்கமருவிய கால இலக்கியமான சிலப்பதிகாரத்தில் (5-169) (11-128) (40-41)(23-91) மணிமேகலையில் (1-54) சிவபெருமானின் (சிவாயநாம) என்ற அஞ்செலுத்துமந்திரம் பற்றியும், சிவ வழிபாட்டினைப் பற்றியும் சுட்டிச் செல்வதைக் காணலாம். கி.பி.600 முதல் கி.பி. 1200 வரையுள்ள காலம் சைவ சமயத்தின் பொற்காலம் எனலாம்.

அவை பற்றி இயம்பின் விரியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
RE: திருக்குறளில் சைவ சித்தாந்தம்
Permalink  
 


 

சிவம்சிவம்என்றசொல்செம்மையடியாகப்பிறந்தது. செம்மைஎன்பது நன்மை, நேர்மை, சிறப்பு, மங்கலம், சுகம்என்கிறபண்பினையும்செந்நிறம்என்ற நிறத்தையும்குறிக்கும்ஒருசொல். ‘சிஎன்றஎழுத்துஇறைவனின்கடந்துநிற்கும்

இயல்பையும், ‘என்றஎழுத்துஇறைவனில்கலந்துநிற்கும். இயல்பையும் குறிப்பதால்கடவுள்என்றசொல்லுக்குச்சிவம்என்பதேபொருளாகும். என்றதிரு.கு.வைத்தியநாதன்அவர்களின்கருத்தைஇங்குஎண்ணுகிறோம். (சைவசமயவரலாறும்-பன்னிருதிருமறைவரலாறும்..10)

சிவனைவழிபடும்சமயம்சைவம்என்றும், அந்தசமயத்தின்அடிப்படையில் உருவானசாத்திரங்கள்நூல்கள்சைவசித்தாந்தசாத்திரங்கள்எனவும் வழங்கப்படுகிறது. “தொல்சமயநிலையிலிருந்துபடிப்படியாகப்பலவளர்ச்சி நிலைகளைப்பெற்றுவந்தசைவசமயமானதுஆகமங்களைஅடிப்படையாகக்

கொண்டு, மெய்யின்கோட்பாடாகவளர்த்தெடுக்கப்பட்டபோதுதோன்றியதேசைவசித்தாந்தம்என்கிறார்கலாநிதினு.யுமலர் (இரண்டாவதுஉலகஇந்துசமயமாநாட்டு மலர்.21). சித்தம் + அந்தம்ஸ்ரீசித்தாந்தம்என்றாகும். சித்தம்என்றசொல்நிலைநிறுத்தப்பெற்றஉண்மைஎன்றும், அந்தம்என்பதுமுடிவுஎன்றும்பொருள்தரும்.

இவ்விரண்டுசொற்களும்இணைந்துநின்றுமுற்றமுடிந்தமெய்யியல்கொள்கை என்னும்கருத்தினைக்குறிக்கும். இம்முடிபிற்குஒருமுடிபில்லை . இதுவேஏனைய தத்துவசிந்தனையின்இறுதிமுடிவிடம்”. (தமிழும்தத்துவமும். 305) என்கிறார் சோ.. கந்தசாமிஅவர்கள்.

சைவசித்த்தாந்த்தத்த்தின்சிறப்பு;பு: சிவபெருமானைப்பற்றியும். சிவனடிசேர்தற்குரியநெறியையும்குறிப்பதுசைவசித்தாந்தம்என்பர். இறைவனைஎளிதில் எய்துவதற்குஉரியநெறிசைவசித்தாந்தநெறிஒன்றேஆகும். இவ்வுண்மையைத்  திருமூலர்.

கற்பனகற்றுக்கலைமன்னும்மெய்யோகம்

முற்பதஞானம்முறைமுறைநண்ணியே

சொற்பதம்மேவித்துரிசற்றுமேலான

தற்பரம்கண்டுளோர்சைவசித்தாந்தமே

என்றுதிருமூலர்அருளிச்செய்திருப்பதிலிருந்துசைவசித்தாந்தத்தின்சிறப்பினை உணரலாம்.

சைவசித்த்தாநத்த்முப்n;பொருள்உண்i;மை: சைவசித்தாந்தஅடிப்படையில் முப்பொருள்களைபதி, பசு, பாசம்என்பர். பதி-கடவுள், பசு-உயிர், பாசம்உயிரைப் பிணைத்துள்ளகட்டு. அதாவதுஆணவம், கன்மம், மாயைஎன்பன. இதனை,

பலகலைஈகமவேதம்யாவையினுங்கருத்துப்

பதிபசுபாசந்தெரித்தல்” (சிவப்-3)

என்றநூற்பாவால்அறியாமல்சைவசமயத்தில்கடவுள்சிவம்என்றபெயரால் குறிப்பிடப்படுகிறது. தத்துவநிலையில்பதிஎன்றுஅழைக்கப்படுவதைச்சாத்திரங்கள் வழிஉணரலாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 

சிவன்எனும்நாமம்தனக்கேஉடைய

செம்மேனிஎம்மான”; (திருநாவுகக்ரசர் 1060)

என்றபாடலில்இறைவன்சிவன்என்றுஅழைக்கப்படுவதைஉணரலாம்.

இறைவனின்இயல்பு;பு: மறைகளைஅருளியஇறைவனின்இயல்பினை எளிமையாகக்காட்டலாம். இரவுநேரத்தில்சந்திரன்வருவதும்பகலில்சூரியன் தெரிவதும்இயற்கையாகும். ஆனால்பிறவிக்குருடருக்குஇருசுடர்களின்அழகினை உயர்த்துதல்கடினமானஒன்றாகும். என்றாலும்இருசுடர்ஒளிர்வதுஉண்மையே.

அதுபோலவேஅறியாமைநிறைந்தநெஞ்சினார்க்குஇறைவனைஉணர்த்தல் அரிதாகும். இதனை,

காணாதான்காட்டுவான்தான்காணான்காணாதான்

கண்டானாம்தான்கண்டவாறு” – (குறள் 849) –என்றகுறட்பாவால்அறியலாம்.

இதனையேகன்னிகைஒருத்திசிற்றின்பம்வேம்பெனினும்

கைக்கொள்வள்பக்குவத்தில்

கணவன்அருள்பெறின்முனேசொன்னவாறு

என்? எனக்கருதிநகையாவள்

என்றதாயுமானவரின்பாடலின்மூலம்இறைவனைஉணரும்பக்குவநிலையைநாம் அடையவேண்டும்என்பதுபெறப்படுகிறது. இறைஇயல்பினைப்பற்றித்திருவள்ளுவர்.

அகரமுதலஎழுத்தெல்லாம்ஆதி

பகவன்முதற்றேஉலகு” (குறள் 1)

என்றுவிளக்குகிறார். உலகில்உள்ளஎழுத்துக்கள்உல்லாம்ஒலிவடிவாய்உள்ள கரம்ஆகியமுதலினைஉடையனவாகும். அதுபோல்இந்தஉலகம்அனைத்தும் ஆதிபகவன்ஆகியமுதலினையுடையது. “அம்மைஅப்பரே, உலகுக்குஅம்மைஅப்பர் என்றுஅறிகஎன்றுதிருக்களிற்றுப்படியார் (எண்.1) இதேகருத்தைஉணர்த்துகிறார்.

இறைவன்தன்நிலையில்சிவமாகநிற்கின்றான். இதனையே, திருவள்ளுவர்பகவன் என்கிறார். இறைவன்உயிர்களின்பொருட்டுஉயிர்க்குஉதவும்அருளாற்றலையும்பகவன்என்றதுஅருளைவிட்டுஎன்றும்பிரியாதுதன்கூறாகக்கொண்டுள்ள

இறைவனையும்குறிக்குமெனலாம்.

போற்றிஅருளுகநின்ஆதியாம்பாதமலர்” – (திருவெம்பாவை)

அகரஉயிர்போல்அறிவாகிஎங்கும்

நிகரில்இறைநிற்கும்நிறைந்தது” – (திருவருட்பயன்)

கடந்தும், உள்ளும்இருப்பதால்தான்இறைவனைக்கடவுள்என்றுகுறிப்பர்.

கடவுளின்சிறப்பியல்பினைஎண்குணத்தான்என்றுவிளக்குகிறார்வள்ளுவர்.

ஆதிபகவன்:;:;: “உலகம்ஒருமுதல்வனைஉடையதுபிறருக்குக்கட்டுப்படாது:

தான்விரும்பியசெயலைவிரும்பியவாறுசெய்யும்இயல்புடையவனாலடஉலகம் கட்டுப்பட்டுஇயங்கும்.

வாலறிவன் : இயற்கைஉணர்வுஉடைமை. வால்என்னும்சொல் தூய்மையைக்குறிக்கும். மலக்கலப்புஇல்லாதஅறிவு. தானேஅனைத்தையும் உணரும்அறிவுடையவன்.

மலர்மிசைஏகினான்:;: “தூயஉடம்பின்ஆதல”; உலகஉயிர்களைப ; போல

(மாயைகாரியங்களால்ஆனது) அல்லாதுமலக்கலப்பற்றுத்தூயஉடம்பையுடைய திருமேனியாகவிளங்குவது.

வேண்டு;டுதல்வேண்ட்டாமைஇலான்:;:;: (வரம்பில்இன்பம்உடைமை) துன்பத்திற்குக் காரணம்ஆசை, என்றகூற்றின்படிஎந்தப்பொருளையும்விரும்பாமை, துன்ப அனுபவம்இல்லாமையால்இன்பஅனுபவமும்இல்லைஎனஅறியலாம்.

வேண்டாமைஅன்னவிழுச்செல்வம்” – குறள் : 363

இறைவன்இன்பத்தைஉடையவன். ஆனால்இன்பத்தைஅனுபவிப்பவன் அல்லன்.

இறைவன் : முற்றுணர்வுஉடைமை. எங்கும், எதிலும், எஞ்ஞான்றும்

தங்கியிருக்கும்இயல்பினன்.

பொறிவாயில்ஐந்து;துஅவித்த்தான் : “இயல்பாகவேபாசங்களின்நஙீ ;குதல்

உடைமைஉயிர்ஐம்பொறிகளின்வாயிலாகஅவாவினைநாடுகிறது. ஆனால் இறைவன்இயல்பாவேபாசங்களின்நீங்கினவனாகஇருக்கிறார்.

தனக்கு; வமைஇல்ல்லாதான்:;:;: முடிவில்ஆற்றல்உடைமை, இறைவன்முடிவு இல்லாதஆற்றல்உடையவனாகஇருக்கிறான். உயிர்வேறு, இறைவேறுஎன்னும் சைவசித்தாந்தக்கொள்கையைத்தனக்குவமைஇல்லாதான்என்றதொடர் தெளிவாக்குகிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 

அறஆழிஅந்த்தணன் : பேரருள ; உடைமை. அறங்கள ; எலல் hவறi; றயுமதனக்குவடிவாகஉடையான்என்பதைக்குறிக்கும். அறம் - அருள் : அந்தணன்இறைவன்கருணையேபேரருள்எனினும்ஒக்கும். இந்தக்கருணையைக்கொண்ட  இறைவன்ஐந்தொழில்ஆற்றகிறான்சிவாகமத்தில்சிவபெருமானின்எண்குணங்கள் இவை, இவைஎன்றுஅருளிச்செய்ததற்குபொருந்துவனவாகத்திருக்குறளில்உள்ள முதல்ஒன்பதுகுறட்பாக்களும்இறைவனைக்குறித்துஅமைந்துள்ளனஎன்பது இங்குஎண்ணுதற்குரியது. ““Thiruvalluvar bases his ethics on the grand Truths Tripathartha, Pathi, Pasu, Pasam, Infact his creed is not godless creed like that of Jains of Buddhists. It this respect, there is a disparity between “Naladi” and this work”

என்றுபோப்பையர்அவர்கள்குறள்நெறி (Ethics of Kural) என்னும்ஆங்கிலநூலில்  கூறியுள்ளகருத்துஆழ்ந்தசிந்தனைக்குரியது.

உயிர் : சைவசித்தாந்தம்உயிரைப்பற்றித்தெளிவாகவிளக்குகிறதுபொதுவாக, உயிர்என்பதுஒருசூன்யமென்றும், ஐந்துஇந்திரியங்களேஆன்மா என்றும்அந்தக்கரணங்களேஆன்மாஎன்றும், - பலர்பல்வேறுகருத்துகளை  வழங்குகின்றனர். எதுபிறப்புஇறப்புஉள்ளதோஅதுசீவன்எனவழங்கலாம்.

உயிர்என்பதுபசு. ஆன்மா, சீவன்என்றும், அவ்வுயிர்எண்ணற்றனஎன்பதும் தெளிவாகஉணரலாம். இதனை,

பிறந்தநாள்மேலும்பிறக்கும்நாள்போலும்

துறந்தேர்துறப்போர்தொகை.” (திருவட்பயன் -11) என்றுஉமாபதிசிவம் அருளுகின்றார்.

உயிர் - இயல்பு;பு : உயிர்தனித்துநிற்கும்இயல்புடையதன்று. ஏதேனும்ஒரு பொருளைப்பற்றிநிற்பதேஉயிர்க்குஇயல்பாகும். இறைவனைஅன்றி, வேறு பொருள்களைப்பற்றிநிற்பதேஉயிர்க்குப்பொதுஇயல்பாகும். கருவி கரணங்களுடன்நின்றுஐந்தவத்தைப்படுவது. உயிர்க்குப்பொதுஇயல்புஆகும்.

அறிவித்தாலன்றிஅறியமாட்டாததும்உயிர்க்குப்பொதுஇயல்புஆகும். “தனக்கென அறிவிலாதான்@ தான்இவைஅறிந்துசாரான்” (சிவப்பிரகாசம் : 64) என்றுஉயிர்க்கு இறைவன்பலஉடல்களைவழங்குவதற்குரியகாரணமும்நவில்கிறது. மேலும்,

ஆறிந்திடும்ஆன்மா, ஒன்றைஒன்றினால்அறிதலானும்

அறிந்தவைமறத்தலானும், அறிவிக்கஅறிதலாலும்,

அறிந்திடும்தன்மையும்தான்அறியாமையானும், தானே

அறிந்திடும்அறிவான்அன்றாம்அறிவிக்கஅறிவன்அன்றே

(சிவஞானசித்தியார் : 233)

என்றபாடலின்மூலம்உயிரின்தன்மையும்புலப்படுவதைஉணரலாம். அந்த உயிர்கள்விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர்என்றுமூன்றுவகைப்படும். உயிர் ஆவணவமலமறைப்புக்குஉட்பட்டுஇருக்கும்நிலையைக்கொண்டுஇவ்வாறு

பகுக்கப்பட்டுள்ளன. இவ்வுண்மையினைத்திருவட்பயனி;ல்.

திரிமலத்தார்ஒன்றுஅதனில்சென்றார்கள்அன்றி

ஒருமலத்தார்ஆயும்உளர்” (12) என்றுஉமாபதிசிவம்தெளிவுபடுத்துயுள்ளார்.

திருவள்ளுவர்உயிரின்இயல்பினை,

பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும்சிறப்பொவ்வா

செய்தொழில்வேற்றுமையான்.” (972)

என்றுநவில்கின்றார்



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

மேலும் இறைவன் ஒருவன்உயிர்கள் பலஎன்ற சைவ சித்தாந்தக் கொள்கையைத் திருவள்ளுவர் பலகுறட்பாக்களில் வலியுறுத்துகின்றார்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று” (22) இதனையே,

பிறந்தநாள் மேலும் பிறக்கும் நாள் போலும்

துறந்தோர் துறப்போர் தொகை” (திருவருட்பயன் : 11)

என்று உமாபதிசிவம் அவர்கள் அருளியுள்ளார்அதவாதுஆன்மாக்களுள் முத்தி அடைந்தவர்களின் எண்ணிக்கைஉயிர்கள் இதுவரை பிறந்து வாழ்ந்த நாட்கள் எத்தனையோ,அதற்குச் சமம் ஆகும்இன்னும் முத்தி அடைய இருக்கும்

உயிர்களின் எண்ணிக்கைஇனிப் பிறக்க இருக்கும் உயிர்களின்வாழ்நாட்கள் எத்தனையாக இருக்குமோஅந்தத் தொகைக்குச்சமம் ஆகும்ஆகவே உயிர்களின் எண்ணிக்கை இத்தனை என்றுஅறுதியிட்டுச் சொல்ல முடியாது இதனை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்” (972)

என்ற குறட்பாவில் வரும் “எல்லா உயிர்க்கும்” என்பதுஅனைத்து உயிரையும்,

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்

கினத்தியல்ப தாகும் அறிவு” (452)

என்ற குறட்பாவில் வரும் ‘மாந்தர்க்கு’ என்ற சொல்மனிதனையும் குறிக்கின்றதெனலாம். (அதாவது பசுகாளை,நாய்யானை போன்ற பயன்படுவனவை அடங்கும்இறைவன்எல்லா உயிர்கட்கும் ஒரே தன்மையதான நுண்ணுடலைத் தந்து,பின்பு அந்தந்த உயிரின் விருப்பு வெறுப்புக்கேற்ற  பருவுடலையும் இறைவனே தருவதால்தான் சைவசித்தாந்தம்இறைவனை அம்மையப்பராகக் கொள்கின்றது.

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்

கினத்தியல்ப தாகும் அறிவு” (452)

என்பது போல்அருளில் இருந்து கொண்டு அருளின் உதவியால்அருளின் தன்மையை உயிர் பெறும்இஃதே உயிரின் உண்மைஇயல்பாகும்.

பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்

தொகுத்தவற்று ளெல்லாந் தலை” (322)

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னயிர்க் கெல்லாம் இனிது” (68)

என்ற குறட்பாக்களின் மூலம் உயிரின் உண்மை புலனாகிறது.மேலும்உடல் வேறுஉயிர் வேறு என்பது சைவ சித்தாந்தக்கொள்கையாகும்இதனை ஓட்டை விட்டு விட்டுப் பறந்துபோனதைப் போல உடம்போடு இருந்த உயிர் உடலைவிட்டுச்  செல்லும் என்பதனை,

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே

உடம்போ டுயிரிடை நட்பு” (338) என்ற குறட்பாவால்அறியலாம்.

இறைவனை உயிர் அடையவிடாது தடுக்கின்ற பாசத்தைப் பற்றிஇனிப் பார்ப்போம்.

தளைஇநத் உயிர் இறைவனையாடையாது தடை செய்வதுதளை – ஆகும்அவை ஆணவம்கன்மம்மாயை என்னும்மூவகைப் பாசங்களாகும்இதனை,

விளையாததொர் பரிசில்வரு பசுபாச வேதனை ஒண்

தளையாயின தவிரவ்வருள் தலைவனது சார்பாம்

களையார்தரு கதிராயிரம் உடைய அவனோடு

முளையாமதி தவழும்உயர் முதுகுன்றடை வோமே” – (சம்பந்தர்என்ற பாடல் மூலம் அறியலாம்மும்மலங்களைதளை என்றும்பாசம் (கட்டுவதுஎனவும் சான்றோர்வழங்குபவர்

ஆணவமலத்த்தில் இயல்பு;புஉயிர்க்கு அறியாமையைச்செய்யும் பொருள்  ஆணவம் எனப்படும்இதனை, “அறியாமைஆணவம்” (உண்மை விளக்கம் -22)

என்னும் இரண்டே சொற்களால் திருவதிகை மனவாசங்கடந்தார்கூறியுள்ளார்.

ஆணவமலம் என்றொரு பொருள் இல்லாமலிருந்தால்,உயிர்க்குப் பிறவித் துன்பமே ஏற்படாதுஇதனை, “இருள்இன்றேல் துன்பு ஏன்?” (திருவட்பயன் : 27) என்ற

உமாபதி சிவம் அவர்களின் கூற்றால் அறியலாம்சிவஞானசுவாமிகள்கீழ்நோக்கிச் செலுத்தும் ஆற்றல் மோகம்மதம்,அராகம்கவலைதாபம்வாட்டம்விசித்திரம்என ஏழுவகைகளில் செயல்படும் என்பர்அருள்நந்தி சிவம் தமதுஇருபாஇருபஃதில்” மோகம்அஞர்மதம்நகைவிகற்பம்,கற்பம்குரோதம்கொலை எனஆணவமலத்தின் செயல்களைஎட்டாகக் குறப்பிட்டுள்ளார்ஆசிரியர் மெய்கண்டார் தமதுசிவஞான போதத்தின் முதல் நூற்பாவில், “ஓடுங்கிமலத்துளதாம்” எனவும்,நான்காம் நூற்பாலில் “சகசமலத்துணராது” எனவும் ஆணவ மலத்தின் இயல்பினைச்சுட்டிநனவுகனவுஉறக்கம்பேருறக்கம்உயிர்ப்படக்கம் என்னும்ஐந்தவத்தைஉறுதற்கு ஏதுவாக இருப்பது ஆணவமலம் எனநூல்கள் விளக்குவதை உணரலாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

சைவசித்தாந்தம்கூறும்ஆணவமலஇயல்புகளைத்திருவள்ளுவர்தௌ;ளிதின்விளக்குகிறார்.

இருள்சேர்இருவினையும்சேராஇறைவன்

பொருள்சேர்புகழ்புரிந்தார்மாட்டு” (குறள் 5)

என்றகுறட்பாவில்இருள்சேர்இருவினை” – ஆணவமலம்பற்றோடுகூடிச் செய்யும்நல்வினைகளும்தீவினைகளும்என்பதாகும். இதனையேஉமாபதிசிவம் அவர்களும், “இருள்இன்றேல்துன்புஏன்?” (27) என்றுதிருவருட்பயனில் விளக்குகிறார். ஆணவமலம்பற்றின்காரணமாகஉயிர்க்குள்ளஅறியாமையை,

அறிதோறுஅறியாமைகண்டற்று” (குறள் 1110) என்றதொடரில்வரும்அறியாமை

என்னும்சொல்உயிர்க்குள்ளஅறியாமையைக்குறிக்கும்எனலாம். ஆணவமலப்பற்று நீங்கப்பிறவித்துன்பம்நீங்கும்என்பதுசைவசித்தாந்தம்எனில்வள்ளுவரும், “இருள்

நஙீ ;கிஇன்பம்பயக்கும”; (352) என்கிறார். மேலும்எதைச்செய்தாலும், ஆணவமல மறைப்புக்குஉட்படாமல்செய்யவேண்டும்என்பதனை, “இருள்தீரஎண்ணிச்செயல”;

(675) என்றவள்ளுவர்வாய்மொழிஉணர்த்துவதைஉணரலாம். ஆணவமலத்தின் இயல்பினைபுல்லறிவாண்மைஎன்றுகூறி,

நில்லாதவற்றைநிலையினைஎன்றுணரும்

புல்லறிவாண்மைகடை” (331) என்றுவிளக்கமும்தருகிறார்பொய்யாமொழி.

திருக்கு;குறள-;-;-கனமம்:;:;: திருவள்ளுவர்வினைஉண்மையைப்பலகுறட்பாக்களில் சுட்டியுள்ளார்.

இருள்சேர்இருவினையும்சேராஇறைவன்

பொருள்சேர்புகழ்புரிந்தார்மாட்டு” (குறள்: 5)

என்றகுறட்பாவில்இருவினைஎன்றுசுட்டுகிறார். வினைமூவகைப்படும். அவை ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம்எனப்படும். அவற்றுள்ஆகாமியம்என்பது, நாமாக விரும்பிச்செய்யும்வினைஎன்பதைத்திருவள்ளுவர்,

அவாஎன்பஎல்லாஉயிர்க்கும்எஞ்ஞான்றும்

தவாஅப்பிறப்பீனும்வித்து” (குறள்: 361)

என்னும்குறட்பாவில்தெளிறுத்துகிறார். இதிலிருந்துஉயிரின்இச்சையேபிறப்பிற்க்கு காரணம்என்பதுபெறப்படும். மேலும்நாமாகவிரும்பிச்செய்யும்வினைஎன்பதும் உணரமுடிகிறது. இன்னும், “அவாஇல்லார்க்குஇல்லாகும்துன்பம்” (368) என்ற  கருத்தும்இங்குஎண்ணத்தக்கது. மேலும்ஆகாமியத்தைஉயிர்களின்விருப்பத்தால் வருகின்றவினையென்றுகூறலாம்.

மாயாமலதத்த்தின ; இயலபு;பு;பு: மாயைஎனறு; ; உளள்து. அஃதுஉருவம ; அறற்துமாயைஒரேபொருளாகஉள்ளது. உலகம்உண்டாவதற்குஅதுவேவித்தாக உள்ளது. மாயைசடம். அஃதுஎங்கும்வியாபித்துஉள்ளது. இறைவனுக்குப் பரிக்கிரகசத்தியாகஉள்ளது. உயிர்களுக்கானஉடலாகவும், அகக்  கருவியாகவும்உலகமாகவும், போகப்பொருள்களாகவும்விரியும்தன்மைஉடையதாகஉள்ளது.

ஆணவமலத்தோடுகூடியுள்ளஉயிர்க்குமாயாகாரியங்களோடுகூடும்போதுவிபரீத உணர்வுஏற்படுவதால்மலமாகநின்றுமயக்கம்தருவதாகவும்உள்ளது. பரிக்கிரக சத்திஎன்பதுஇறைவனின்வைப்புசத்திஆகும். சிவஞானசத்தியாரில்மாயையின் இயல்பினை

நித்தமாய், அருவாய், ஏகநிலையதாய், உலகத்திற்கஓர்

வித்துமாய், அசித்தாய், எங்கும்வியாப்பியாய், விமலனுக்குஓர்

சத்தியாய்ப்புவனபோகம்தனகரணமும்உயிர்க்காய்,

வைத்ததோர்மலமாய்மாயைமயக்கமும்செய்யும்அன்றே” (143)

என்றுஅருணந்திசிவம்அருளியுள்ளார். மும்மலங்களைப்பற்றிச்சிந்தித்துப்பார்ப்பின் மறுபிறப்பின்உண்மையைஉணர  முடிகிறது. வள்ளுவரும்எதனையும்

வேண்டாமையேபிறவாமைக்குவழிஎன்கிறார். (362, 363), இறைவனைவணங்க,  உயிரைப்பற்றியுள்ளஆணவம், கன்மம், மாயைஇம்மூன்றுமழிந்துஇறைவனடியை உயிர்சேரும், உயிருக்குமுக்திகிட்டும்.

முடிவுரை : இந்தஉலகைப்படைத்தஇறைவன்உயிர்களைஉலக இன்பங்களைத்துய்க்கஅருளினான். இந்தஉயிர்கள்ஆணவம், கன்மம், மாயை ஆகியமும்மலங்களில்உழன்றுஉண்மைஅறியாதுஇறைநோக்கிப்பயணம்செய்ய மறந்தது. அந்நிலையில்இறையருள்கிட்டஇறைவனுடையஅருளால்சரியை,  கிரியை, யோகம், ஞானம்ஆகியவழிகளில்உயிர்இறைவனைஅடையவழிபாட்டில் (உடலோடுகூடியசட்டையின்மூலம்) ஈடுபட்டது. மறுபிறப்புஉண்மையை  உணர்ந்தது. தளைகளைநீக்கிவிட்டு, மும்மலங்களைவிலக்கிஅழியாப்பேரருள் நிறைஇறைதங்கியவீடுபேற்றைப்பெறமுனைந்தது. முத்திபெற்றதுஇறையருளால்இறையுண்மையைஉணரஇவ்வுலகிலேயேஅழியாப்பேரின்பவீட்டைப்  பெறஇயலும்என்பதுமறக்கஇயலாஉண்மையெனலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

நீதியும், நாட்டார் விவேகமும் – பழமொழி நாநூறும்


 
 
Share7
 

ஒன்று  இந்திய சமூகத்தில் நீதி என்ற கருத்தாக்கம் எப்போது உருவாயிற்று என்று சொல்ல முடியுமா? மிகமிக அரசியல் சார்ந்த ஒரு வினாவாக பலதளங்களிலும் விரியக்கூடியது இது. காரணம் நாம் நீதி என்பது நம் முன்னோர்களால் நமக்கு அளிக்கப்பட்ட ஒரு பாரம்பரியச் சொத்து என்று எண்ணும்படி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். நீதி என்பது நம் முன்னோர் அவர்களின் இயல்பான விவேகத்தால் அடைந்த ஒரு மெய்ஞானம் என்று கருதுகிறோம். நீதி என்பது எந்நிலையிலும் மாறாத ஒரு கருதுகோள் என்ற எண்ணம் நம்மிடையே உள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் உண்மையில் நாம் நீதி என்று எதைச் சொல்கிறோம், நேற்றும் முன்தினமும் வரலாற்றில் அதுதான் உத்தேசிக்கப்பட்டதா என்றெல்லாம் சிந்தித்திருப்பதில்லை. சொல்லப்போனால் நீதி என்பதே நம்மிடையே ஒரு புகைமூட்டமான இலட்சியக்கனவுபோலத்தான் உள்ளது. ‘இன்று நீதியுணர்வு மங்கிவருகிறது, இன்று இலட்சியங்களுக்கு இடமில்லை, இது சீரழிவின் காலகட்டம்’ என்பதுபோன்ற வரிகளை நம்மில் பெரும்பாலானவ்ர்கள் சொல்லிக் கேட்கிறோம். எழுத்தாளர்கள் கூட அதை மீண்டும் மீண்டும் சொல்வதை வாசிக்கிறோம். உண்மையிலேயே நமது இறந்தகாலம் நீதியுள்ளதாகத்தான் இருந்ததா?இம்மண்ணில் வாழும் மக்களில் நேர் பாதிப்பங்கினர் இல்லை என்றே பதில் சொல்லக்கூடும். அவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்கள்.சுரண்டப்பட்டிருந்தார்கள். இழிவுபடுத்தப்பட்டிருந்தார்கள். இன்றைய காலகட்டமே வரலாற்றின் மிக அதிகமான நீதி கொண்ட காலகட்டமென அவர்கள் சொல்லக்கூடும். அப்படியென்றால் நீதி என்பதை எப்படி வரையறுத்துக் கொள்வது? நீதி என்பது ஒரு இலட்சியக் கனவு அல்ல. அது ஒரு சமூக அமைப்பு. அவ்வமைப்பு மெல்லமெல்ல ஆழ்படிமங்களாக ஆகி சமூக ஆழ்மனத்திற்குள் உறைகிறது. எந்த ஒரு சமூக அமைப்¨ப்பபோலவும் அதுவும் மெல்லமெல்ல பரிணாமம் கொண்டு உருவாகும் ஒன்றுதான். எந்த ஒரு சமூகத்திலும் நீதி என்ற கருத்தாக்கம் ஏதேனும் ஒரு வகையில் இருந்தே தீரும். வேட்டைக்குடிகள் சிலர் திரண்டு ஒரு பழங்குடிச்சமூகமாக மாறும்போது அவர்கள் தங்களுக்குள் ஒரு பொதுப்புரிதலை உருவாக்கிக் கொண்டாகவேண்டியுள்ளது. ஒரு குழுவாக அவர்கள் இயங்கும்பொருட்டு சில நெறிகள் தேவையாகின்றன. அந்த பொதுநெறிகளே நீதியின் தொடக்கம். பழங்குடிச் சமூகங்கள் வளர்ந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து மாபெரும் இனக்குழுத்தொகுப்பாக ஆகிறது.சமூகம் என்ற சொல் இங்குதான் உருவாகிறது. அந்நிலையில் பல்வேறு இனக்குழுக்கள் ஒன்றாகத்திரள்வதற்கான பொது நெறிமுறைகள் தேவையாகின்றன. இனக்குழுக்களுக்குள் தனியாக நெறிகள் புழங்கலாம். ஒட்டுமொத்த சமூகத்திற்காக அவற்றில் சில நெறிகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. பண்டைச்சமூகங்களில் நாம் காணும் ‘ நீதி ‘ என்பது மேற்குறிப்பிட்ட இரண்டுவகை நீதிகளில் ஒன்றாக இருக்கும் என்று தோராயமாக வகுக்கலாம். ஒன்று ‘பழங்குடிச்சமூகநீதி’. இன்னொன்று ‘இனக்குழுச்சமூகநீதி’. பழங்குடிச் சமூகத்தின் நீதி என்பது அச்சிறுகுழு சீராக செயல்படுவதற்கு அவசியமான விதிகள் மற்றும் நம்பிக்கைகள் அடங்கியது, அச்சமூக உறுப்பினர்களுக்குள் செயல்படுவது. இனக்குழுச்சமூக நீதி என்பது பல்வேறு பழங்குடிச்சமூக நீதிகள் ஒரு பொதுவான அமைப்பில் இணைந்திருப்பது. அனைத்துக்குலங்களுக்கும் பொதுவான சிலநீதிநெறிகள் உருவாகி வந்திருக்கும் காலம். இனக்குழுச் சமூகம் மேலும் விரிவான அடித்தளம் கொண்ட பெரும்சமூகமாக இரு காரணிகளால் உருவாக்கப்படுகிறது. ஒன்று பேராரசு. இன்னொன்று பெரு வணிகம். ஆகவே மேலும் விரிவான நீதி என்ற கருத்தாக்கமும் பேரரசுகளாலும் வணிகத்தாலுமே உருவாக்கப்படுகிறது. சொல்லப்போனால் மிக அதிகமான மக்களை உள்ளே கொள்ளும்தோறும் நீதி என்ற கருத்தாக்கம் விரிவு பெறுகிறது. ஒரு நிலப்பகுதியின் இனக்குழுச் சமூகங்களை ஒன்றாகத்திரட்டி ஒரு அமைப்புக்குள் கொண்டுவரும்போது அரசு உருவாகிறது. அவ்வரசு வலிமை பெறும்தோறும் அது பேரரசாகிறது. நமது மன்னர்கள் அனைவருமே ‘குலசேகரன்’ – குலங்களை தொகுப்பவன்-என்ற பட்டப்பெயருடன் விளங்கினார்கள். பிற்காலச் சோழர்களின் காலம் வரை தமிழக மன்னர்கள் தங்கள் அரசுக்குள் அடங்கிய பல்வேறு வேளிர்கள், கடற்சேர்ப்பர்கள், மலைக்குறத்தலைவர்கள் ஆகியோரை திரட்டி அவர்களின் பொதுச்சம்மதம் மூலமே தங்கள் பதவியை அடைந்திருக்கிறார்கள்.அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். வரம்பில்லா முடியாட்சி தமிழ்நாட்டில் மிகவும் பிற்காலத்தில் உருவான ஒன்றேயாகும். இவ்வாறு குலங்கள் திரண்டு பேரரசு உருவாகும்போது பேரரசு முழுக்க செல்லுபடியாகக்கூடிய பொது நீதி உருவாகவேண்டியுள்ளது. அது அச்சமூகத்தில் இருந்து நீதிநூல்கள் மூலம் திரட்டி முன்வைக்கப்பட்டு சட்டமாக செயல்முறைப்படுத்தப்படுகிறது. இரண்டாவது வகை பொதுநீதி வணிகம் மூலம் உருவாவது. இனக்குழுச் சமூகங்கள் ஒன்றுடன் ஒன்று வணிகத்தில் ஏற்படுகையில் அவர்கள் நடுவே பொதுவான நெறிகள் ஏற்கப்பட்டாகவேண்டிய தேவை உள்ளது. வணிகம் பெருகி பற்பல சமூகங்களை உள்ளடக்கி மேலும் மேலும் விரிகையில் அந்நெறிகள் பொதுவான நீதியாக ஏற்கப்படுகின்றன. இச்சூழலில் நாம் இந்திய மண்ணில் நீதி எவ்வாறு பரிணாமம் கொண்டது என்று தோராயமாகப் பார்க்கலாம். மாபெரும் இதிகாசமான மகாபாரதம் பல்வேறு நீதிகள் விவாதிக்கப்படும் ஒரு பெரும் களம். மகாபாரதம் பழங்குடி நீதியில் இருந்து படிப்படியாக பரிணாமம் பெற்று பேரரசநீதி உருவாகிவரும் பரிணாமத்தின் சித்திரத்தை அளிக்கிறது. பீஷ்மநீதி , விதுர நீதி போன்ற நூல்கள் பேரரசு சார்ந்த நீதியையே முன்வைக்கின்றன.’ராஜநீதி’ என்றே அவை குறிப்பிடவும் படுகின்றன ஸ்மிருதிகள் என்று சொல்லப்படும் புராதன நீதி நூல்கள் தொடக்கத்தில் பழங்குடிநீதியின் விளிம்பில் நின்றிருக்க வேண்டும். மெல்ல மெல்ல அவை பேரரசு சார்ந்த நீதியை உருவாக்கிக் கொண்டன. யம ஸ்மிருதி போன்ற நூல்கள் காலப்போக்கில் இல்லாமலானது இதனாலேயே. அதன் இறுதிப்படியே மனு ஸ்மிருதி. அது அரசமையத்தை நிறுவுவதையே நோக்கமாகக் கொண்ட நீதிநூல். தர்ம சாஸ்திரங்களை விரிவாக ஆராயும் பி.வி.காணே * 2 அவை அரசமைவுக்குரிய அடிப்படைகளாகச் செயல்பட்டமையை விளக்குகிறார். பேரரசுக்குரிய கனகச்சிதமான நீதி நூல் என கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தையே சொல்லவேண்டும். அது ஒரு பேராரசரின் அமைச்சரால் தன் காலத்து தர்ம சாஸ்திரங்களில் இருந்து எடுத்தாளப்பட்டு உருவாக்கப்படுகிறது. பழந்தமிழகத்தை எடுத்துக் கொண்டால் புறநாநூறின் ‘பொருண்மொழிக்காஞ்சி’ பகுதியில் நாம் நீதிவிளக்கங்களைக் காண்கிறோம். அவற்றை பழங்குடிநீதியும் இனக்குழு நீதியும் சார்ந்தவை என்றே வகுக்க வேண்டியுள்ளது. விதிவிலக்காக மானுடம் சார்ந்த குரலாக ஒலிக்கும் கணியன் பூங்குன்றனின் வரிகளை காலத்தால் பிற்பட்ட சமண-ஆஜீவக மரபின் குரலாகவே நான் காண்கிறேன். தமிழகத்தில் சரியான பொருளில் பேரரசுகள் உருவாவது பிற்காலச் சோழர் காலத்திலேயே. அப்போது பேராரசுக்குரிய நீதிநூலாகிய மனுஸ்மிருதியே இங்கே செயல்படுத்தப்பட்டது என்பது வெளிப்படையாகத்தெரிகிறது. பேராரசுக்குரிய நீதி எப்போதும் தண்டனைகளால் அடிக்குறிப்பிடப்பட்டது. வாளால் பரப்பபடுவது, ரத்தத்தால் நிறுவப்படுவது. வணிகநீதி இந்திய நிலப்பகுதியில் இரு பெரும் மதங்களின் குரலாக ஒலித்தது. பௌத்தம் சமணம் இரண்டுமே அடிப்படையில் வைசியர்களின் மதங்கள். பின்னர் தொழில்செய்யும் சூத்திரர்களின் மதங்களாக அவை வளர்ந்தன. பௌத்தமும் சமணமும் வணிகத்திற்கு இன்றியமையாத அடிப்படை நெறிகளை இந்திய நிலப்பகுதி முழுக்கக் கொண்டு சென்றன. ஆகவே அம்மதங்கள் பரவுவதற்கு வைசியர்கள் பொருளுதவிசெய்தனர். இவ்விரு மதங்களுமே பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, திருடாமை, பாலியல் ஒழுக்கம் என்னும் ஐந்து நெறிகளையே அடிப்படைகளாக இந்தியாவெங்கும் பரப்பின. அரசியல் கோட்பாட்டு ரீதியாக இம்மதங்கள் இரண்டு கொள்கைகளை முன்வைத்தன என்று ஆய்வாளரான ஆர்.எஸ்.சர்மா * 2 குறிப்பிடுகிறார். ஒன்று, வன்முறை இல்லாமல் சமரசம் மூலமே முரண்பாடுகளை நீக்கிக் கொண்டு வணிக உறவுகளைப் பேணி அரசு நடத்துதல் . இரண்டு, மக்களின் நலம் நாடும் அரசு. [Benevolent nepotism] இதன் விளைவாக இம்மதங்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவெங்கும் ஒரு பொது நீதியுணர்வை உருவாக்கி நிலைநிறுத்தின. முரண்பாடுகள் மண்டிய இந்திய நிலப்பகுதியில் சீரான வணிக பரிமாற்றத்தை இவை உருவாக்கி இந்தியவளர்ச்சிக்கு அளப்பரிய பங்கை ஆற்றின. பல்வேறு இந்திய மொழிகளில் முக்கியமான நீதிநூல்கள் இக்காலகட்டத்தில் பௌத்தர்களாலும் சமணர்களாலும் உருவாக்கப்பட்டன. இவற்றில் உச்சம் திருவள்ளுவர் என்றும் சமண மரபில் ஆச்சாரிய குந்தகுந்தர் என்றும் குறிப்பிடப்படும் சமண முனிவரால் எழுதப்பட்ட ‘திருக்குறள்’ இவர்களில் சமணர்களின் கொடையே மிக மிக முக்கியமானதும் போற்றத்தக்கதுமாகும். சமணர்கள் சம்ஸ்கிருத, பிராகிருத மொழிகளில் அடிப்படையான நீதி நூல்களை உருவாக்கினர். அந்நூல்களை ஒட்டி அவர்கள் இந்திய வட்டார மொழிகளில் ஏராளமான நீதிநூல்களை உருவாக்கினார்கள். தமிழ் நாட்டில் சமணர்கள் ஆண்டகாலகட்டம் களப்பிரர் காலம் என்று சொல்லப்படுகிறது. தமிழக வரலாற்றை ஆரம்பத்தில் எழுதிய சைவர்கள் காழ்ப்புணர்வால் இக்காலகட்டத்தை ‘இருண்ட காலம்’ என்று சொன்னார்கள். இக்காலகட்டத்தில்தான் தமிழின் நீதிநூல்களின் முன்னோடித்தொகுதியான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உருவாக்கப்பட்டன. சமணர்களின் மதச்செயல்பாட்டை பொதுவாக நோக்கினால் இந்நூல்களுக்கான தேவையை நாம் உணர முடியும். சமண முனிவர்கள் தங்குமிடம் பள்ளி எனப்பட்டது. பள்ளி கொள்ளுதல் என்பதில் இருந்து வந்த சொல். அங்கே கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவை பள்ளிக்கூடங்கள் ஆயின. மருத்துவமும் செய்யப்பட்டது. ஆகவே கல்விக்கும் மருத்துவத்திற்கும் அவர்கள் நூல்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவ்வாறு பள்ளிக்கூடங்களின் கற்பிக்கும் பொருட்டு இயற்றப்பட்ட நூல்கள் என்று சொல்லலாம். சமணர்களால் உருவாக்கப்பட்ட நீதி அதுவரை இந்திய சமூகத்தில் இல்லாதிருந்த பல முக்கியமான அம்சங்களைக் கொண்டிருந்தது. ஒன்று அதற்கு மானுடமளாவிய ஒரு நோக்கு இருந்தது. அடிப்படை விழுமியங்களையாவது அனைத்துமானுடருக்கும் சமமாக வைக்க அதனால் இயன்றது. இரண்டு, வன்முறை சாராமல் மனிதனின் கருணையையும் அகச்சான்றையும் நம்பியே பேசும் நீதியை அவை முன்வைத்தன. இந்த அடிப்படைகள் மேல் நூலில் மணிகளைக் கோர்ப்பதுபோல அந்தந்த பகுதியின் நெறிகளையும் விவேகங்களையும் இணைத்துக் கொண்டு தன் நீதி அடிப்படையை உருவாக்கிக் கொண்டது சமண நீதி மரபு. தமிழ்நாட்டில் களப்பிரர் காலத்துக்குப் பிறகு பேராரசுகள் உருவாயின. அதற்குரிய பெருமதங்களையும் பேராரசு நீதிகளையும் அவை உருவாக்கிக் கொண்டன. அவற்றை வாளால் நிலைநாட்டின. ஆனாலும் சமணர்கள் உருவாக்கிய அடிப்படை நீதி போதம் தமிழர் வாழ்க்கையில் உள்ளுறையாக நீடித்தது. ‘கொன்றைவேந்தன்’ ‘ஆத்திச்சூடி’ முதலிய பிற்காலத்து நீதி நூல்களிலும் நாம் காண்பது சமணநீதியின் எதிரொலிகளையே.  இரண்டு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய ‘பழமொழி நாநூறு’ முன்றுறையனார் என்ற சமண முனிவரால் பாடப்பட்டது. பல சமணமுனிவர்களுக்கும் அவர்கள் இருந்து பின் அடங்கிய இடமே பெயராக அமைதல் போல இவருக்கும் அமைந்திருக்கலாம். இந்நூல் பதிப்பிக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி பேசும்போது ஆய்வாளர் பொ.வேல்சாமி ஆரம்பகாலம் முதலே இந்நூல் பல்வேறு பாடபேதங்களுடன் பாடல்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்துதான் வெளிவந்துள்ளது என்று குறிப்பிட்டார். இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் எஸ்.வையாபுரிப்பிள்ளையும் இந்நூலின் பதிப்பு வரலாற்றில் உள்ள பல சிக்கல்களை சுட்டிக்காட்டுகிறார். இந்நூலுக்கு மூலச்சுவடிகள் கிடைத்ததில்லை. ஆகவே சரியான பாடபேதமும் இல்லை. நீதிநூல் என்ற முறையில் இது மிக எளியதுதான். பொதுவாக சமணநீதிநூல்களில் காணப்படும் பொதுநீதிகளே இதிலும் காணப்படுகின்றன. சமணசமயத்திற்குரிய மதநெறிகள் இதில் பேசப்படவில்லை. பொதுவாக இல்லறத்தாருக்குரியனவாக சமணம் வகுத்த நெறிகளைப்பற்றியே பேசப்படுகின்றது. சமணம் 12 நெறிகளைப்பற்றிப் பேசுகிறது. முதல் ஐந்தும் அனுவிரதங்கள். அவை அவைவருக்கும் உரியவை. மூன்று குணவிரதங்களும் நான்கு சிக்ஷா விரதங்களும் உள்ளன. அவை துறவிகளுக்குரியவை. பொறுமை, வாய்மை, ஈகை, ஆன்றோரை வழிபட்டு அவர் வழி நடத்தல் போன்றவையே பழமொழி நூல் முன்வைக்கும் நீதிகள். பழமொழியின் இயல்பில் ஒரு சிறப்பு உள்ளது. இந்நூல் ஏற்கனவே வழங்கிவந்த ஒரு பழமொழியை தன் ஈற்றடியாகக் கொண்டு அமைந்த வெண்பா வடிவில் உள்ளது. இவற்றில் பல வரிகள் பழமொழிகள் அல்ல. ‘நாய் பெற்ற தெங்கம்பழம்’ ‘தூங்கும் புலியை இடறியவாறு’ போன்ற பழமொழிகளும் , ‘குலவித்தை கல்லாமல் பாகம் படும்’ ‘கற்றலில் கேட்டலே நன்று’. போன்ற மூதுரைகள், அல்லது வழக்காறுகளும் இவற்றில் ஈரடியாக அமைந்துள்ளன. இந்நூலை திருக்குறளுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். பொதுவாக பதினெண்கீழ்க்கணக்குநூல்களை குறளுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது விரிவாகவே நடந்துள்ளது. குறளில் உள்ள நீதிகளே இந்நூலிலும் பெரும்பாலும் பயின்று வந்துள்ளன எனலாம். அது இயல்பே. இந்நூல்களில் உள்ள சமண நீதி நோக்கின் உச்சம் குறளில் வெளிப்படுவதுதான். ஒரு சமணக்கருத்து மூல சமண சூத்திரத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் இவ்வுலகில் தீயதை உணர்ந்துஅகற்றி ஒழுகுபவன் விண்ணவர்க்குரியவனாகிய முனிவன் ஆவான்[ He who, in the world, comprehends and renounces these causes of sin, is called a reward-knowing sage (muni). *3 ] இதை குறளில் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்பது போல காணலாம். சமண சூத்திரங்களுக்கும் குறளுக்கும் உள்ள வியப்பூட்டும் நெருக்கமான உறவை விரிவாகவே நாம் ஆராய வேண்டியிருக்கிறது ‘கறுத்தாற்றி நம்மை கடிய செய்தாரை பொறுத்தாற்றி சேறல் புகழால்’ என்று பழமொழி சொல்லும் வரியானது ‘ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு பொன்றும்துணையும் புகழ்’ என்ற குறள் வரியே. இக்கருத்து சமணநீதிநூல்களின் மைய ஊற்றான ஜைன சூத்ரங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருப்பதுதான். சமண மதத்தின் நீதியின் இயல்பை இதில் நாம் காணலாம். போரே வாழ்க்கை நெறியாக, மறமே பேரறமாக விளங்கிய அன்றைய இந்தியச்சூழலை நோக்கி இந்த வரி பேசப்படுகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சமணம் மீண்டும் மீண்டும் முன்வைத்த இரு அரசநீதிகளில் இது முதலாவது. பொறுமை மற்றும் கருணை மூலம் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருதல். எளியோர்க்கு நன்மைசெய்யும் நோக்கமுடைய வலிமையான அரசு என்பது அடுத்த கருத்து ஆயினும் குறள் ஆழமான கவித்துவத்துடன் இருக்கிறது. ஒரு நீதி நூலின் கவித்துவம் இரு வகையில் அனுபவப்படுகிறது. ஆழமான நீதிசார்ந்த உத்வேகம் நேரடியாகவே வெளிப்படும் இடம் கவித்துவமாக அமைகிறது ‘ இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றியான்’ என்பது போன்ற அறச்சீற்றமானாலும் சரி ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்’ என்ற கருணையானாலும் சரி அந்த மனஎழுச்சி கவித்துவமாகிறது. அதேபோல அருமையான அணிகள் கவித்துவத்தை உருவாக்குகின்றன. ‘அறத்தாறிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ போல. ஆம், குறள் கவிதையின் நீதி பழமொழியைப்பற்றி அப்படிக் கூறமுடிவதில்லை. அதன் வடிவமே அப்படி அமைந்துள்ளது. இறுதி வரியின் விளக்கமாக முதல் மூன்று வரிகள் அமைகின்றன. ஆகவே அம்மூன்று வரிகளும் சாதாரணமான மனநிலையில் நின்று விளக்கிச் சொல்வனவாக உள்ளன. கடைசி வரி ஏற்கனவே மரபில் இருந்துவந்துள்ள ஒன்றாகையால் அதன் கவித்துவம் இந்நூலுக்கு உரியதாகவும் இல்லை. ஆக இது ஒரு எளிய பாடநூலாகவே இருந்திருக்கிறது. குறிப்பிடத்தக்க மூலநூல் என இதை சொல முடியாது. இதற்கு தெளிவான நடைமுறைப்பயன்பாடு இருந்திருக்க வேண்டும். எடுத்துச் சொல்லவேண்டிய ஒரு சிறப்பே இந்நூலுக்கு உள்ளது என்று படுகிறது. இது தமிழகத்தில் சமண நீதி வந்த பரிணாமத்தின் பாதையை தெளிவாகக் காட்டும் ஒரு நூல் நீதியை ஒரு படிப்படியான பரிணாம வளர்ச்சி என்றேன். நீதி ஒரு சமூகத்தில் எந்நிலையிலும் ஓயாது விவாதிக்கப்பட்டபடித்தான் இருக்கும். இன்றைய நம் சமூகத்தில் ஒருநாளில் ஒரு கணத்தில் எத்தனை ஆயிரம் நீதிமன்ற அறைகளில் நீதி விவாதிக்கப்படுகிறது என்று பாருங்கள். அவ்விவாதங்கள் வழியாக நீதி ஒவ்வொரு கணமும் வளர்கிறது, உருமாறுகிறது. தராசின் முள்போல நீதி குறித்த சமூகஉருவகம் எப்போதும் ஆடிக் கொண்டே இருக்கிறது. சங்ககாலத்தைய பழங்குடி நீதி அப்படி பலநூறு விவாதங்கள் வழியாகவே இனக்குழு நீதியாக உருமாறியிருக்கவேண்டும். அவ்விவாதங்களில் புலவர்கள் ஆற்றிய பெரும் பங்கை நாம் புறநாநூறில் காண்கிறோம். சகமன்னனைக் கொன்று அவன் பற்களை கோட்டைச்சுவரில் பதித்துவைப்பதற்கும் சிறைப்பிடிக்கப்பட்டவனுக்கு நீர் கொடுக்காமல் சாகவிட்டமைக்கும் எதிராக புலவர்கள் பாடிய பாடல்கள் கிடைக்கின்றன. அதேசமயம் சக சிற்றரசுகள் மீது படையெடுத்துச் சென்று அவர்களை அழிப்பதும் கொன்றுகுவிப்பதும் எரிபரந்தெடுத்தல் என்ற பேரில் அவர்கள் ஊர்களை எரிப்பதும் நீர்நிலைகளை யானைகளை விட்டு கலக்குவதும் புலவர்களால் வீரம் என அங்கீகரிக்கப்பட்டு புகழப்படுவதையும் காண்கிறோம். அதேசமயம் பெண்கொலை புரிந்தான் [நன்னன்] என ஒருவன் மீண்டும் மீண்டும் பழிக்கட்டுவதையும் காண்கிறோம். அதாவது நாம் சங்ககாலத்தில் காண்பது சிறிய குடிமைச்சமூக அரசுகளை அழித்துத் தின்று இன்னும்பெரிய அரசுகள் உருவாகி வரும் காட்சியையே. அதை நிகழ்த்துவதற்குரிய குறைந்தபட்ச நீதிகளையே ‘பொருண்மொழிக்காஞ்சி’ பாடல்களில் பலவாறாக காண்கிறோம். இதை பேரா.ராஜ்கௌதமனின் முக்கியமான ஆய்வுநூலான ‘பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்’ என்றநூலில் *4 காண்கிறோம். அதை இனக்குழுச்சமன்பாட்டுக்கான போர் என்று இன்னொருவகையில் சொல்லலாம். அந்த நீதி இனக்குழுச்சமூக நீதியமைப்பு ஒன்றுக்கான போராட்டத்தின் ஒரு விளைவு. அந்தச் சூழலில்தான் சமணம் வந்தது.தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் பேரரசுகள் உருவாக ஆரம்பித்து கடும் போர்கள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் சமண மதம் இங்குவந்ததும் சமரசம் மற்றும் கொல்லாமை சார்ந்த ஒரு நீதியை நிலைநாட்டியதும் தமிழகத்தின் நல்லூழ் என்றே கொள்ளவேண்டும். அவ்வகையில் நோக்கினால் தமிழகத்தின் ஒளிமிக்க இறந்தகாலம் களப்பிரர் காலமே. அக்காலகட்டத்தின் அழிவில் உடனே பேரரசுகள் தோன்றி பெருமதங்களும் பெரும் சுரண்டலும் பெரும் வன்முறையும் நிலைநாட்டப்பட்டன. சமணம் கொல்லாமையையும் கருணையையும் வலியுறுத்தியது. நலம்நாடும் சமரச அரசாங்கம் குறித்த கருத்தை முன்வைத்தது. சமணத்தின் அந்த தரப்புக்கும் ஏற்கனவே இங்கிருந்த இனக்குழுச்சமூகத்து நீதிக்கும் இடையே நீண்ட ,தீர்க்கமான விவாதங்கள் நிகழ்ந்திருக்கவேண்டும். அவ்விவாதங்களின் விளைகனிகளே நீதிநூல்கள். [சமணர்காலம் இருண்டகாலம் என வாதிடும் சைவ அற்பர்கள் அக்காலத்தில் தமிழ்சமூகத்தில் ஏற்கனவே இருந்துவந்த ‘நீதி ‘ அழிந்து அநீதி ஓங்கியதனால்தான் இந்நீதிநூல்கள் உருவாயின என்று வாதிடுகிறார்கள். மூடத்தனத்தின் எல்லை!] அவ்வாறு உருவான நீதிநூல்களில் எஞ்சியவை நீண்டகாலம் கழித்து பதினெண் கீழ்க்கணக்கு என்ற பேரில் தொகுக்கப்பட்டன. இவ்விவாதங்களின் தடங்கள் நீதிநூல்களில் உள்ளன. அவற்றில் உள்ள நீதி ஒருபக்கம் சமண மெய்ஞானத்தில் வேரூன்றியிருக்கிறது. இன்னொருபக்கம் இங்கு ஏற்கனவே புழங்கும் நீதிகள் பலவற்றை தனக்குள் உள்வாங்கிக் கொண்டதாக இருக்கிறது. திருக்குறளே சிறந்த உருவகம். பொருண்மொழிக்காஞ்சி திணையில் வரும் பல வரிகளை திருக்குறளில் காணமுடியும் என்பதை அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய உரையாடல் அல்லது சமரசம் இன்னும் வெளிப்படையாகத் தெரியும் நூல் என்பதே பழமொழிநாநூறு நூலின் சிறப்பாகும். இதில் உள்ள பழமொழி என்பது தமிழகத்தில் விளங்கிய தொன்மையான விவேகத்தின் விளைவு. அதை தனது சமண நீதியுடன் கொண்டு சென்று இணைப்பதையே முன்றுறையார் செய்கிறார். விளைவாக ஒரு சமரசத்தை அல்லது முரணியக்கத்தை நிகழ்த்துகிறார். ஏற்கனவே இங்கு வேரூன்றியிருந்த நீதியின் சிறந்த கூறுகளுடன் சமணநீதியைக் கலக்கிறார். நெறியால் உணராது நீர்மையும் இன்றிசிறியார் எளியாரால் என்று பெரியாரைதங்கள் நேர்வைத்து தகவு அல கூறுதல்திங்களை நாய்குரைத்தற்று. நிலவை நாய் குரைப்பது போல என்ற பழமொழியானது உயர்ந்த விஷயங்களைக் கண்டு சிறியோர் கொள்ளும் சிறிய செயல்களைச் சொல்ல சுட்டப்பட்டு வந்திருக்கலாம். பழந்தமிழ் மரபைவைத்து பார்த்தால் ஒரு பெருவீரனை அல்லது செல்வனை எளிய சிலர் அலர் சொல்வதைச் சுட்டும் வரியாகக் கூட இருக்கலாம். ஆனால் இந்தப்பாடலில் அதை நுட்பமாக அடுத்த கட்டத்துக் கொண்டுசெல்கிறார் ஆசிரியர். சமணர் காலகட்டம் முற்றும் துறந்த சமண முனிவரை மண்ணில் பெரியவர்களாக முன்வைத்தது என நாம் அறிவோம். செங்கோல் ஏந்திய மன்னர்களை விட பலமடங்கு மதிப்பை உடலெங்கும் தூசு மூடி நிர்வாணமாக அலைந்து தெருக்களிலும் காடுகளிலும் வாழ்ந்த பெரியோர்களுக்கு அளித்தது. அறத்தின் சக்கரத்தை அவர்களே உருட்டுகிறார்கள் என்ற கருத்தை முன்வைத்தது. சென்றகாலத்தில் தமிழ்நாட்டில் முடிமன்னர்களுக்குமட்டுமே முதன்மை மதிப்பு இருந்தது. அவர்களை நயந்தும் பயந்தும் நந்னெறி சொல்பவர்களாகவே புலவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் சமணமரபு அவர்களுக்கும் மேலாக ‘நீத்தாரை’ முன்வைத்தது. ‘பெரியோரை’ மதித்தல் , அவர்சொல் கேட்டல் என்ற பொருளில் குறிப்பிடுவதெல்லாமே இந்த முனிவர்களுக்கு அளிக்கப்பட்ட முத்ன்மை மரியாதையைத்தான். சமண மத நூல்களில் இந்த கருத்து மிகமிக விரிவாக முன்வைக்கப்பட்டிருக்கக் காணலாம். சமணத்தின் அடிப்படையே இதுதான். பற்ற்யும் சினமும் இல்லாத அறவோர் சமூகத்தை வழிநடத்துதல். இந்தப்பாடலில் மரபான தமிழ் விவேகத்தை சமணர்களின் பெரியோர் நெறிசேரும் அறத்துடன் இணைத்துவிடுகிறார் முன்றிறையார். பெரியோர் எளியோர் போலவே இருப்பார்கள். அவர்களை நெறியாலேயே உணர இயலும். ஒன்று நம் நெறியால். அதைவிட அவர்களின் நெறியால். சிறியோர் அவர்களை அறியும் நீர்மை இல்லாமல் அவர்களையும் தங்களுக்கு நிகராக வைத்து தகுதியற்ற சொற்களைச் சொல்லிவிடுவார்கள் என்று எச்சரித்து அது நிலவை நாய்குரைப்பதுபோல என முடிக்கிறார் முன்றிறையார். ‘கற்றலில் கேட்டல் நன்று’ என்பது தமிழ் மூதுரை. பொதுவாக நூல்கற்கும் அமைப்புகள் அதிகம் இல்லாதிருந்த இனக்குழுச் சமூகம் என பண்டைத்தமிழகத்தைச் சொல்லலாம். பள்ளிச்சாலைகள் போன்ற அமைப்புகளைப்பற்றி சங்கப்பாடல்களில் நாம் கேள்விப்படுவதில்லை. ஆகவே பெரும்பாலும் ஆசிரியரைச் சார்ந்து வாழ்ந்து அவர்வாயால் கல்விகற்கும் குருகுல முறையே அதிகம் இருந்திருக்கலாம். ஆகவே சான்றோர் வாயால் நல்லவற்றை கேட்பதை முக்கியப்படுத்தி உருவாக்கிக் கொண்ட சொற்றொடர் இது. ஆனால் சமணர்கள் நூல்கல்வியை வலியுறுத்தி பரப்பியவர்கள். ஆகவே அதே பழமொழியை முன்றிறையார் முற்றிலும் தலைகீழாக பொருள்கொண்டு பாடலில் பொருத்துகிறார். ‘உணற்குஇனிய இந்நீர்பிறிதுழி இல் என்னும்கிணற்றகத்து தேரைபோல் ஆகார்- கணக்கினைமுற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக்கற்றலில் கேட்டல் நன்று ஒரேநூலை மட்டுமே பயின்று அதுவே சிறந்தது என்றிருப்பவர்கள் கிணற்றுத்தவளையைப்போன்றவர்கள். பலநூல்களைப்பற்றி பலர் சொல்லும் சொற்களைக் கேட்டு அந்நூல்களைக் கற்றல் நல்லது என்று முன்றிறையார் சொல்லும்போது நூல்கல்வியை மேலும் பரந்துபடச் செய்யவேண்டும், அதற்கு செவிவழிக்கல்வியை பயன்படுத்த வேண்டும் என்றே சொல்கிறார் தமிழ்மக்களின் வாழ்க்கையில் உள்ள சடங்குகள் ஆசாரங்கள் நம்பிக்கைகள் போன்றவற்றை சமணநீதியுடன் பொருத்துவதற்கு பழமொழி பலவகையிலும் முயல்வதைக் காணலாம். இந்நூலின் இலக்கே அதுதான். அத்துடன் தமிழ்நாட்டு வரலாற்று கதைகளையும் அது மறு ஆக்கம்செய்து முன்வைக்கிறது. குறிப்பாக கரிகால் பெருவளத்தான் குறித்த பழமொழி பாடல்கள் பெரும்புகழ்பெற்றவை. இந்நூல் சோழமண்ணில் உருவாகியிருக்கலாம் என்பது ஒரு காரணம். அதற்கு அப்பால் ஒரு காரணம் உண்டு சமணமதம் மக்களின் நலம் நாடும் அரசை முன்வைத்தது என்று சொன்னோம். பெரும் போர்க்கள வெற்றிகளை அடைந்த மன்னனை போற்றுதலுக்குப் பதிலாக அறம்சார்ந்து செயல்பட்ட மன்னனை போறி முன்வைத்தல் அதன் இயல்பு. கரிகாள் பெருவளத்தானின் நீதியுணர்வை போற்றும் பழமொழி பாடல்கள் சமண அரசநீதிக்கு தமிழின் தொல்மரபில் இருந்து ஓர் உதாரணத்தைக் கண்டு பிடித்து மக்கள் முன் நிறுத்துகின்றன. உரைமுடிவு காணான் இளமையோன் என்றுநரைமுது மக்கள் உவப்ப -நரைமுடித்துசொல்லால் முறைசெய்தான் சோழன் குலவித்தைகல்லாமல் பாகம் படும் இப்பாடலிலும் பழமொழி ஆசிரியரின் நுட்பமான மாற்றி அமைக்கும் திறன் தொழில் பட்டுள்ளது. குலங்களை அடிப்படையாகக் கொண்ட அச்சமூகத்தில் குலத்தொழில் கல்லாமலேயே வரும் என்ற எளிய பழங்குடி விவேகத்தை எடுத்துக் கொண்டு நலம்நாடும் அரசனைச் சித்தரிக்கும் ஒன்றாக மாற்றியமைத்திருக்கிறார் ஆசிரியர். பழமொழிநாநூறின் அடிப்படை இயல்பே இதுதான். மக்களிடையே வழங்கிவந்த எளிமையான நாட்டார் விவேகங்களை எடுத்துக் கொண்டு அவற்றின் மீது சமண நீதியை பொருத்திக் காட்டுதல். பெரும்பாலான நேரங்களில் அந்தச் சமணநீதிக்கும் அந்த அப்பழமொழிக்கும் நேரடியான உறவேதும் இல்லை என்பதைக் காணலாம். இருந்தாலும் மகக்ளுக்கு ‘இது ஒன்றும் புதிய விஷயமில்லை நம் முன்னோர் சொன்ன பழைய நீதியே’ என்ற எண்ணத்தை இதன் மூலம் உருவாக்கி நீதியை மனத்தில் நிறுத்த உதவுகிறது இந்த உத்தி சமணநீதிஎன்பது ஒரு செவ்வியல் நீதி. பலகாலம் பல நூல்கள் வழியாக திரண்டுவந்தது அது. உலகளாவிய, மானுடமளாவிய கற்பனை கொண்டது. பழமொழிகள் அதிகமும் பழங்குடிச் சமூகங்கள் சார்ந்தவை. இனக்குழு எல்லைகளை மீறாதவை. ஆகவே அவை அடிப்படையில் நாட்டார்த்தன்மை கொண்டவை. இவ்விரு எல்லைகளையும் இணைக்கிறது பழமொழி நாநூறு. இந்நூலின் சிறப்பே இதுதான். அக்காலகட்டத்தில் நடந்த மாபெரும் நீதிசார் உரையாடலின் இரு தரப்புகள் இவை. இருதரப்பினருமே இந்நூலுக்குள் ஒன்றாக இணைக்கபட்டிருக்கிறார்கள். இது ஒரு சாதனைதான் ======================================ஆர்.எஸ்.சர்மா, R.S.Sharma Perspectives in Social and Economic History of Early India பி.வி.காணே. P.V.Kane .History of Dharma Sastras ஹெர்மான் ஜெகோபியின் மொழியாக்கம். ஜைன சூத்திரங்கள் [Hermann Jacobi] முற்றிலும் இணையத்தில் கிடைக்கின்றன பேரா.ராஜ்கௌதமன். ‘பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்’. தமிழினி பிரசுரம்.  [27-12-07 அன்று நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் மைசூர் செம்மொழி உயராய்வு மையம் இணைந்து நடத்திய பதினெண் கீழ்கணக்கு நூல்கள் கருத்தரங்கில் பேசியது]



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்

 

பிப்ரவரி 7, 2008 திண்ணை இதழில் ஜெயமோகன் எழுதியிருக்கும் “நீதியும் நாட்டார் விவேகமும் ....“ என்ற கட்டுரை குறித்து சில விமரிசனங்கள்.

// ஜெ.மோ: இவற்றில் உச்சம் திருவள்ளுவர் என்றும் சமண மரபில் ஆச்சாரிய குந்தகுந்தர் என்றும் குறிப்பிடப்படும் சமண முனிவரால் எழுதப்பட்ட 'திருக்குறள்' //

திருவள்ளுவரின் சமயப் பார்வை பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் சைவம், வைணவம் இவற்றை உள்ளடக்கிய (இன்று இந்துமதம் என்றழைக்கப் படும்) வேத சமயத்தினர், சமணர் அல்லது பௌத்தர் ஆகிய மூன்று தரப்பிற்கும் பல்வேறு வலுவான ஆதாரங்கள் வைக்கப் படுகின்றன. இந்நிலையில் முடிந்த முடிபாக இவ்வாறு ஜெயமோகன் எழுதியிருப்பது சரியானதன்று. சமண மறுமலர்ச்சி பற்றி முழங்கும் தருண் சாகர் போன்ற ஜைன ஆசாரியர்கள் தான் தங்கள் பிரசார மேடைகளில் எல்லாம் “குந்தகுந்தர் தான் திருவள்ளுவர்” என்று பேசி வருகிறார்கள். சமீப காலங்களில் இந்த rhetoric அதிகமாகியுள்ளது என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் ஆய்வு நோக்குள்ள ஒரு எழுத்தாளரின் இத்தகைய நிலைப்பாடு வியப்பூட்டுகிறது.

tiruvalluvar.jpg

நீதி என்ற கருத்தியல் அடிப்படையை மட்டுமே கொண்டு திருவள்ளுவரின் “சமணத்” தன்மையை ஜெயமோகன் முன்னிறுத்துவதாகத் தெரிகிறது. ஆனால் திருவள்ளுவர் கண்டிப்பாக ஏன் சமணராகவும் (பௌத்தராகவும்) இருந்திருக்கவே முடியாது, அவர் இந்து/வேத சமயத்தினராக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் கருத்தியல் மட்டுல்ல, குறள் நேரிடையாகக் குறிப்பிடும் பருப்பொருள் உண்மைகள், உவமானங்கள், கூறுபொருள்கள் இவை அனைத்தின் மூலமும் உறுதி செய்யப் படுகின்றன.

இது குறித்து யுகமாயினி என்ற இலக்கிய சிற்றிதழில் ஜாவா குமார் என்பவர் எழுதிய கட்டுரையை இதன் இறுதியில் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன். இந்தக் கட்டுரை இத்தகைய முக்கிய ஆதாரங்களை சுருக்கமாகத் தொட்டுக் காண்பிக்கின்றது. .

// ஜெ.மோ: சமணர்களால் உருவாக்கப்பட்ட நீதி அதுவரை இந்திய சமூகத்தில் இல்லாதிருந்த பல முக்கியமான அம்சங்களைக் கொண்டிருந்தது. ஒன்று அதற்கு மானுடமளாவிய ஒரு நோக்கு இருந்தது. அடிப்படை விழுமியங்களையாவது அனைத்துமானுடருக்கும் சமமாக வைக்க அதனால் இயன்றது. இரண்டு, வன்முறை சாராமல் மனிதனின் கருணையையும் அகச்சான்றையும் நம்பியே பேசும் நீதியை அவை முன்வைத்தன. //

நீதி என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இட்டுச் செல்லுவது, வழிநடத்துவது என்று பொருள். அதனால் தான் நீதி நூல்கள் தத்துவ விவாதங்களாகவோ அல்லது தேடல்களாகவோ அல்லாமல் வெளிப்படையான அறவுரைகளாவும், இதைச் செய், இதைச் செய்யாதே என்று கட்டளையிடும் உபதேசங்களாகவும் உள்ளன. ஆனால், இந்த நீதியின் ஊற்றுக் கண்ணாக தர்மம் என்கிற கோட்பாடு (principle) உள்ளது. நீதிகளை (morals, ethics) உருவாக்குபவர்கள் அவற்றின் உண்மைத் தன்மையை தர்மம் என்ற உரைகல்லில் உரைத்தே உறுதி செய்ய வேண்டும். தர்மம் என்கிற மாறாத உண்மையின் கனி தான் நீதி என்பது.

இந்த தர்மம், மானுட அறம் என்கிற கோட்பாடு வேத ரிஷிகளாலேயே முதன்முதலில் எடுத்துரைக்கப் பட்டது. ரிக்வேத சம்ஹிதைகளிலேயே உலகின் மாறாத நியதி தர்மம் என்ற கருத்து உள்ளது. உபநிஷதங்கள் இதனை தங்கள் தத்துவப் பின்புலத்தில் வளர்த்தெடுக்கின்றன. உதாரணமாக, பிரகதாரண்ய உபநிஷத்தில் தர்மம் பற்றிய மிக விரிவான உரையாடல்கள் உள்ளன. பின்னர் இதிகாசங்கள் வாழ்க்கைச் சம்பவங்கள், கதைகள் மூலம் அறம் பற்றிய பல பரிமாணங்களை வெளிக் கொணர்கின்றன.

ந வை ராஜ்யம் ந ச ராஜா ஆஸீத், ந ச தண்டோ ந தாண்டிக:
தர்மேணைவ ப்ரஜா: ஸர்வே ரக்ஷந்தி ஸ்ம பரஸ்பரம் 


“அரசும் இல்லை அரசனும் இல்லை; தண்டனைகளும் இல்லை, தண்டிப்பவனும் இல்லை.
மனிதர்கள் அனைவரும் தர்மத்தினாலேயே தங்களை பரஸ்பரம் பாதுகாத்துக் கொண்டனர்”

என்கிற மகாபாரத சுலோகம் குறள் கூறும் “அறம்” என்ற கருத்துடன் முழுதும் ஒன்றுபடுகிறது. “என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்” என்று வள்ளுவர் கூறுவது நீதி என்ற கருத்தாக்கத்திற்கும் அப்பாற்பட்ட உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய இந்த தர்மம் பற்றியே, இதனையே, “ஜகத ஸ்திதி காரணம்” (உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய தர்மம்) என்று சங்கரர் தன் உரை ஒன்றில் கூறுகிறார்.


1176546492_vhp.jpg
தர்மோ ரக்ஷதி ரக்ஷித: (தர்மத்தைக் காப்பவரை தர்மம் காக்கும்) - விசுவ ஹிந்து பரிஷத் சின்னம்

இந்து மதம், பௌத்தம், சமணம் ஆகிய மூன்று மதங்களும் தர்மம் என்கிற இந்த அடிப்படைக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவை தான். அதனோடு கூட, ஒவ்வொரு மதத்தின் இறையியலிலும் இந்த சொல்லுக்கான சிறப்புப் பொருள்களும், விளக்கங்களும் அளிக்கப் படுகின்றன. அதனால் தான் இப்போது தலாய் லாமா உள்ளிட்ட பல சமயத் தலைவர்கள் இந்த மூன்று மதங்களையும் பொதுவாகக் குறிக்க கிழக்கத்திய மதங்கள் (eastern religions) என்பதற்குப் பதிலாக தர்ம மதங்கள் (Dharmic religions) என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

எனவே சமணம் தான் மானுடம் அளாவிய அறக் கோட்பாட்டையே “உருவாக்கியது” என்பது முற்றிலும் பிழைபட்ட புரிதல்.

// பேராரசுக்குரிய நீதி எப்போதும் தண்டனைகளால் அடிக்குறிப்பிடப்பட்டது. வாளால் பரப்பபடுவது, ரத்தத்தால் நிறுவப்படுவது.
வணிகநீதி இந்திய நிலப்பகுதியில் இரு பெரும் மதங்களின் குரலாக ஒலித்தது. பௌத்தம் சமணம் இரண்டுமே அடிப்படையில் வைசியர்களின் மதங்கள். பின்னர் தொழில்செய்யும் சூத்திரர்களின் மதங்களாக அவை வளர்ந்தன. பௌத்தமும் சமணமும் வணிகத்திற்கு இன்றியமையாத அடிப்படை நெறிகளை இந்திய நிலப்பகுதி முழுக்கக் கொண்டு சென்றன. //

“தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்” (அடக்குபவைகளில் தண்டனையாகவும், வெற்றியை நாடுபவர்களிடத்தில் நீதியாகவும் நான் இருக்கிறேன்) என்று கீதையில் (10.38) கிருஷ்ணன் கூறுகிறார்.

வணிக நெறி என்பது அரசிற்குக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அரசனால் நிர்வகிக்கப் பட்ட ஒன்றாகவே இருந்ததே அன்றி அதற்கு எதிரான, மாற்றான ஒன்றாக இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தங்கள் பயணங்களில் கொள்ளைக் காரர்களாலும், வழிப்பறிகளாலும் தாக்கப் பட்ட இந்திய வணிகர்கள் அவர்களை எதிர்த்துப் போராடவுமில்லை, கருணையினால் மன்னித்து விட்டுவிடவும் இல்லை. மாறாக தங்களைக் காக்க வேண்டி மன்னனிடமே சென்று முறையிட்டனர். சம்ஸ்கிருத நாடகங்களிலும், சங்க இலக்கியத்திலும் இதற்கான சான்றுகள் பல உள்ளன. சட்டமும், தண்டனைகளும் நீதியின் ஒரு முக்கியமான அங்கம் என்பதை அவர்கள் தெளிவாகவே உணர்ந்திருந்தனர்.

திருக்குறளில் வணிகம் என்று ஒரே ஒரு அதிகாரம் உள்ளது, ஆனால் மன்னனைப் பற்றியும் அரசாட்சி பற்றியும் பற்பல அதிகாரங்கள் உள்ளன. “ஒறுத்தல்” (தண்டனை) என்கிற சொல் பல இடங்களில் புழங்குகிறது - “கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்” என்பதில் உள்ளது போல.

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறை என்று வைக்கப் படும். 

வானோக்கி வாழும் பயிர் என்ப மன்னவன் 
கோல்நோக்கி வாழும் குடி.

அந்தணர் நூற்கும், *அறத்திற்கும்* ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.

இப்படி மன்னனே சமுதாய நலனுக்கு அச்சாணி என்று அறுதியிடும் குறட்பாக்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வகையில் குறள் மகாபாரதம் கூறும் அதே நீதிக் கருத்துக்களை, விவாதப் பின்புலங்கள் தவிர்த்து அவற்றின் சுருக்கமான வடிவில் வைக்கிறது என்பதே சரியான முடிவாக இருக்கும். அதன் பார்வை எந்த சமண நூலையும் விட மகாபாரதத்திற்குத் தான் மிக நெருக்கத்தில் உள்ளது.

“சொல்லக் கொடாத சுயோதனன் பின் ஏன்
கொல்லக் கொடுத்தான் குமரேசா - மெல்லவே
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்லப் பயன்படும் கீழ்”


என்பது குமரேச வெண்பா என்னும் நூலில் உள்ள ஒரு பாடல். முதல் இரண்டு அடிகளில் ஒரு உதாரணம், சம்பவம் அல்லது கதையையும் (இவை பெரும்பாலும் இதிகாச, புரானங்களில் இருந்தே இருக்கும்) அடுத்த இரண்டு அடிகளில் குறட்பாவின் மூல வடிவையும் கொண்டு அமைந்த நூல் இது. இதே போன்று சிவசிவ வெண்பா என்றும் ஒரு நூல் இருக்கிறது. குறட்கருத்துக்களுக்கு வாழும் உதாரணங்களாக இந்த நூலாசிரியர்கள் காட்டுவது இந்து புராணங்களையும், கதையாடல்களையும் தான், சமணத்தில் பல குறட்பாக்களுக்கு உதாரணமே கிடைத்திருக்காது.

மேலும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று வாழ்க்கைப் பயன்களையும் (த்ரிவர்கம்) ஒருங்கே பேசும் குறள் எப்படி வாழ்க்கையை நிராகரிக்கும் சமண அறவியலின், பொருளை மையமாகக் கொண்ட வணிக நீதியின் குரலாக மட்டும் இருக்க முடியும்? இந்தியப் பண்பாட்டின் முக்கிய அம்சமான இந்த பரந்து பட்ட அறக்கோட்பாட்டையும், அதனை எடுத்தோதும் திருக்குறளையும் இப்படிக் குறுக்குவதே செயற்கையானதும், ஒற்றைப் படை சிந்தனைப் போக்கும் ஆகும்.

பிற்சேர்க்கை: 
யுகமாயினி : டிசம்பர் 2007 இதழ் (பக்கங்கள் 20-24): ஜாவா குமார் எழுதியுள்ள கட்டுரை.

அன்புள்ள யுகமாயினி ஆசிரியருக்கு,
தங்களின் சமீபத்திய இதழில் திரு.இந்திராபார்த்தசாரதியின் கட்டுரை ஒன்றில் கீழ்க்காணும் இந்தப்பகுதி என் கவனத்தை ஈர்க்க இதை எழுதுகிறேன்.
" இன்னொரு வகையான வன்முறையும் உண்டு. புத்த ஜாதகத்தில் வழங்கிய ராமாயணக்கதை, ஹிந்து மதத்துப் புனித காவியம் ஆவதுபோல, சமணத் துறவியாக வள்ளுவருக்கு, ஜடா முடியை அணிவித்து, திருமேனி முழுவதும் திருநீற்றைப் பூசியிருப்பது போல், தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சீவக சிந்தாமணியும் பல நூல்களும் தப்பித்திருப்பது, அவை செய்த அதிர்ஷம் என்றுதான் சொல்லவேண்டும். இன்னொரு சமணராகிய தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தை வைதிக மதத்துச் சட்ட திட்டங்களுக்குள் கொண்டுவர உரையாசிரியர்கள் எவ்வாறு முயல்கிறார்கள் என்பது கருத்து வன்முறையின் வேறொரு முகம். "

மேலே திரு.இபா சொல்ல முனைவது 'வைதிகமதத்தினர் (அது என்ன மதம் என்று தெரியவில்லை) சமணரான திருவள்ளுவரை சைவராக வலிந்தேற்றித் திருநீற்றைப் பூசி விட்டனர்' என்று கொள்கிறேன்.

திருநீறுதான் திரு.இபாவின் பிரச்னை என்றால், வைணவமரபில் வந்த பரிமேலழகரே (இவரை காஞ்சி உலகளந்தபெருமாள் கோயில் பட்டரென்பர்) கடவுள்வாழ்த்துப் பகுதியில் வரும் 'எண்குணத்தான்' என்ற குறிப்புக்கு உரையெழுதுகையில் 'சிவாகமங்களில் குறிப்பிடப்படுவது போல' என்று சொல்வதால் வள்ளுவருக்குத் திருமண்ணைவிட திருநீறு பொருத்தமே. எனவே இங்கே வைணவமரபினர்தாம் வள்ளுவருக்குத் திருநீறு பூசினர் என்று திரு.இபா சொல்லியிருந்தால் தெளிவாயிருக்கும்.

அது கிடக்கட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.

திருக்குறளை வைத்து வள்ளுவரைச் சமணரென்பதற்கு யாதொரு அடிப்படையும் இல்லை. ஆய்ந்து நோக்கின் திருக்குறள் பெயரிலாப் பெருவழியான இந்துஞானமரபின் அறநூலே! இத்திறக்கில் அடியேன் கடந்த சில வருடங்களாக இணையத்தில் பல குழுமங்களில் பல சமண அறிஞர்களுடனும் வாதிட்டு இக்கருத்தை நிறுவியுள்ளேன். விரிவஞ்சி விடுத்து சாரமான சில சான்றுகளை மட்டும் கீழே தருகிறேன்.

1. அத்திநாத்தி வாதம் என்ற சமணர்தம் ஆதாரக் கோட்பாட்டினைச் சுட்டும் ஒரு பாவினைக் கூட திருக்குறள் நெடுகத் தேடினாலும் கிட்டாது. மேலும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் 'உளது இலது' என்று முரண்படும் இந்த ஆதார நம்பிக்கையைத் தாக்கினரே அன்றி சாதாரணச் சமணர்களை அல்ல.

2. பொதுவாய் சமணத்திற்குச் சான்றாய்ச் சுட்டப்படும் 'அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என்ற (குறள் 259) குறளில் வேட்டலை உயர்வுநவிர்ச்சியிலே குறிப்பிட்டிருக்கிறாரே அன்றி சமணர் ஏற்காத வேள்விகளைச் சாடவில்லை என்பது பிறிதோரிடம் (குறள் 413) 'செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றோரொடு ஒப்பர் நிலத்து' என்று சொல்வதன் மூலம் அறியலாம். 'அவியுணவின் ஆன்றோர்' (Havis consuming celestials) என்ற சொல்லாட்சியும் இங்கே உயர்வுநவிர்ச்சியிலே சொல்லப்பட்டிருப்பதன் மூலம் வள்ளுவர் வேதவேள்விகளுக்கு எதிரானவர் அல்ல என்றும் தெளியலாம்.

yagna.jpg

3. மேலும் சிறுதெய்வங்களுக்குப் படையல் வைப்பதும், மூதாதைகளுக்குப் படையல் வைப்பதும் (குறள் 43) சமணத்திற்கு ஏற்புடையது அல்ல.

4. குறள் 550 -ல் 'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்' என்று மரணதண்டனையை நியாயப்படுத்துவது எவ்வகையிலும் அஹிம்சை போற்றும் சமணத்திற்குப் பொருந்தாது. சமண அறநூல்களில் மரணதண்டனை தீர்ப்பாகச் சொல்லப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மன்னன் முறைதவறினால் அந்தணர் கடமைகளான வேட்டல் வேட்பித்தல், கற்றல், கற்பித்தல், இரத்தல், புரத்தல் ஆகிய அறுதொழில் நலியும் என்றும் அவர்தம் நூலையே மறப்பர் என்றும், வேள்விக்கும் ஆலயவழிபாட்டிற்கும் அவசியமான ஆபயன் (பஞ்சகவ்யம்) குன்றும் என்றும் (குறள் 134, 560) வள்ளுவர் வலியுறுத்துவதையும் நோக்கினால் வள்ளுவத்தின் அடிநாதம் சமணம் அல்ல என்று தெளியலாம்.

6. கடவுள் வாழ்த்திலே 'மலர்மிசை ஏகினான்' என்பதை சமணர்தம் ஆதிநாதர் மலரிலே நடந்தவர் என்பதால் சொல்கிறார் என்று சிலர் சொல்வதுபோல் பொருள் கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் அடிசேர்ந்தார் 'நிலமிசை நீடுவாழ்தல்' எவ்வகையிலும் பொருந்தாது. 'நிலமிசை நீடுவாழ்தல்' (மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சம்பந்தர் தேவாரம்) என்பதே சமணத்திற்குப் புறம்பானது. இது போலவே இதர கடவுள்வாழ்த்துப் பாக்களுக்கும் சமணர்தம் அத்திநாத்திய சியாத்வாதக் கோட்பாட்டிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

7. பல குறட்பாக்கள் பதஞ்சலி யோகசூத்திரம் மற்றும் திருமந்திரப் பாக்களை ஒத்திருப்பதைக் காணலாம். 'பகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தான்' போன்ற விளிகள் சமணருக்குச் சொந்தமானதல்ல. காட்டாய்:

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
*அறவாழி அந்தணன்* ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம் புகுந் தானே!
திருமந்திரம் - 1803

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்றவூழிகள்
செல்லூழி யண்டத்துச் சென்றவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ளொன்றிற் *பகவனே*.
திருமந்திரம் - 2533

கொல்லான் பொய்கூறான் களவிலன் *எண்குணம்*
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே.
திருமந்திரம் - 554

இங்கே சிவாகமங்கள் சுட்டும் எண்குணங்கள் ஆவன: தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை மற்றும் வரம்பில் இன்பமுடைமை.

'எட்டுகொலாம் அவர் ஈறில் பெருங்குணம்' என்று அப்பர் பெருமானும், 'எண்குணம் செய்த ஈசனே' என்று மாணிக்கவாசகரும் பாடுவர்.
அதனாற்றான் சிவாகமங்களில் சுட்டியபடி என்று பரிமேலகரும் உரையெழுதுகிறார்.

8. மேலும் எளிதில் பொருள்விளங்கா பல அதிநுட்பமான குறட்பாக்களுக்கு வேதாந்த சைவசித்தாந்த அடிப்படையில் மட்டுமே மெய்ப்பொருள் கொள்ளமுடியும். காட்டாய்:

'அல்லல் அருள் ஆள்வார்க்கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி' (குறள் 245)

என்ற குறளில், அருள் ஆள்பவர்க்கும் வளிக்கும் உள்ள தொடர்பை சித்தாந்தரீதியில் அணுகினால் ஒழிய பொருள் விளங்காது.
இதன் சூக்குமத்தை

'வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே'

என்ற திருமந்திரத்தின் துணை கொண்டும் தெளியலாம்.
அது போலவே

'குடம்பை தனித்தொழிய புள் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு'

என்ற குறளில் (338) ஆன்மாவின் இயல்பைச் சுட்டுவதும் அத்திநாத்தியத்திற்கு ஒவ்வாதது. இது வேதாந்தக் கோட்பாடு. அவ்வண்ணமே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுதலும்.

9. சைவசித்தாந்த சாத்திர நூல்களில் திருக்களிற்றுப்படியார் என்ற நூல் முதன்மையானது. இதில் இரண்டு குறட்பாக்கள் நேராகச் சுட்டப்பட்டுகின்றன:

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற்
சார்புணர்த றானே தியானமுமாஞ் - சார்பு
கெடவொழுகி னல்ல சமாதியுமாங் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று. (34)
* குறள்: மெய்யுணர்தல்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்
வேண்டின� தொன்றுமே வேண்டுவது - வேண்டினது
வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால். (40)
*குறள்: அவாவறுத்தல்

சமணக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு சைவசித்தாந்த சாத்திரநூல் பாடப்பட்டது என்பது நகைமுரணாகும்.

அவ்வண்ணமே சைவத்திருமுறையிலே சேரமான்பெருமாள் நாயனார் கயிலையில் சிவனார்தம் ஆசிகொண்டு பாடிய 'திருக்கயிலாய உலா' என்ற நூலில் திருக்குறள் ஒன்று தெளிவாய்க் குறிப்பிடப்படுகிறது:

'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர் கட்டுரையை..' (173/174)

10. இறுதியாய் ஒன்று. அஹிம்சை என்பது சமணர்க்கு மட்டுமே குறிக்கோள், ஆதாரக்கோட்பாடு என்பதும் பிழை. யோகமார்க்கத்தில் அஹிம்சையை இந்துசமய நூல்கள் அனைத்துமே வலியுறுத்துகின்றன. ஆயின் சமணத்தைப் போலன்றி அதை முக்திக்கு ஒரே வழியாக வைக்கவில்லை. 'யோகியர் பெறும் பேற்றினையே சாங்கியரும் பெறுவர்' என்ற கண்ணபிரானின் கீதைப்பேருரைக்குச் சான்றாய் வேடர் கண்ணப்பரையும், மீனவர் அதிபத்தரையும் அவர் போன்ற எண்ணற்ற மகான்களையும் காண்கிறோம். வள்ளுவரும் புலால் மறுத்தலை அனைவருக்கும் வலியுறுத்திச் சொல்ல்லவில்லை.

புலால் மறுத்தலை வலியுறுத்துவது யாரிடம்?

'துறவியலில்', யோகத்திலாழ்ந்து தவம் மேற்கொள்வோர்க்கு, நோற்பார்க்கு மட்டுமே. அது அமணர்க்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பொதுவானது. 'சமாதி'யில் (semedi) அமைய வேண்டி, ஒரு மண்டலம் நோன்பிருக்கும், மரக்கறி உணவே பழகாத ஜாவானியர் கூட அந்த நாற்பது நாள்களில் புலால் (முட்டை கூட) உண்பதில்லை.

புலால் மறுத்தலை வேறெங்காவது சொல்கிறாரா?
குடியியலில் ஓரிடத்தில் சுட்டுகிறார்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. (984)

ஆக, கொல்லாமை என்பது நோற்பார் மட்டுமே கொளத்தகும். ஆயின் அவர் பெரும்பான்மையினரா? என்றுமில்லை. அவரே சொல்கிறார்:

இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். (270)

வள்ளுவம் சமணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'கொல்லாவிரதம்' அனைத்துத் தரப்பினர்க்கும், 'துறவியல்' மட்டுமின்றி பிற அதிகாரங்களிலும் எங்காவது ஓரிடத்திலாவது வலியுறுத்தப் பட்டிருக்கும்.
அப்படி அமையவில்லை என்பதை ஓர்க!

பொதுவில் பெரும்பான்மைக்கு, குறிப்பாய் நட்பியலில், 'மருந்து' (அதிகாரம் 95) எது என்று குறிப்பிடுகையில், 'செரித்தது கண்டு, அளவறிந்து உண்க' என்று பல பாக்களில் சொல்லிப் போகிறாரே அன்றி ஓரிடத்திலும் 'புலால் மறுத்தலே சிறந்த மருந்து, உடல்நலத்திற்கு ஏற்றது' என்று சொல்வதில்லை.
தமிழர் உணவுப்பழக்கத்தில் புலால் தவிர்க்க முடியாத அம்சமாய் இருப்பதை தொன்றுதொட்டுக் காண்கிறோம்.

ஓரிடம் நிணத்தைத் தீயிலிட்டு வாட்டுவதைக் காண்கிறார் வள்ளுவர். கண்டிக்கவில்லை; கலங்கவுமில்லை. மாறாய் நின்று ரசிக்கிறார். புசித்துமிருக்கலாம். எப்படியோ, சமணராய் வெறுத்து ஒதுக்கி ஓடியிருந்தால் அதனை ஓர் உவமையாய்க் குறளில் (that too approvingly) அமைத்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.

காமத்தீயில் நிறையழிந்து நிற்கும் பெண்மைக்கு அதைச் சுட்டுகிறார் இங்கு:

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்? (1260)

அன்புடன், ஜாவா குமார்

 

 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard