வேதம் ‘செய்யாமொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே” திருவள்ளுவமாலை, செய்யுள், 23) என்று வெள்ளிவீதியார் கூறுகின்றார். இங்குச் ‘ செய்யாமொழி என்றது வேதத்தைக் குறிக்கும். வேதமும், திருக்குறளும் பொருளால் ஒன்றே என உணர்த்தப்படுவதால், ஆன்றோர்கள் திருக்குறளை ‘உத்தரவேதம்” என அழைக்கலாயினர். பின்தோன்றிய வேதம் எனப் பொருள் ( உத்தரம் – பின்). சேக்கிழார் பெருமான் திருஞானசம்பந்தரை ‘வேதம் தமிழால் விரித்தார்” (திருஞானசம்பந்தர், செ. 289) எனப் போற்றுகிறார். எனவே திருஞானசம்பந்தர் தேவாரமும் ‘தமிழ்வேதம்” எனப் போற்றப்படும் சிறப்புடையது என்பது புலனாகும். எழுதுமறை எழுதுமறை வேதம் ஏட்டில் எழுதப்படாது வாய்மொழியாகவே ஒதப்பட்டு வந்த காரணத்தினால் அதனை ‘எழுதாக்கிளவி” என அழைப்பார். திருக்குறளைக் கோதமனார் என்னும் புலவர், ‘ஆற்றல் அழியும் என்று அந்தணர்கள் நான்மறையைப் போற்றி உரைத்து ஏட்டின் புறத்து எழுதார் – ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாரைச் சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று” (திருவள்ளுவமாலை, செ. 15) என்று கூறுவதால் திருக்குறள் எழுதுமறை எனப் போற்றப் படுகின்றது. சேக்;கிழாரும் திருஞானசம்பந்தரை, ‘வண்டமிழால் எழுதுமறை மொழிந்த பிரான்” (திருஞா. புராணம், செ. 260) என்று போற்றவதால் திருஞானசம்பந்தர் தேவாரமும் எழுதுமறை என ஆன்றோர்களால் போற்றப்பட்டு வருகின்றது. சம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்கள் சம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்கள்::::அகரமுதல அகரமுதல அகரமுதல:::: திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்களாகப் பல இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன. முன்னோர் கூறிய பொருளை அவர்தம் சொல்லாமல் எடுத்துக் கூறுதலே மேற்கோள் எனப்படும்.
திருவள்ளுவர் இறைவனை அகர எழுத்துக்கு ஓப்பிட்டு, ‘அகர முதல எழுத்தெல்லாமல் ஆதி பகவன் முதற்றே உலகு” (கடவுள் வாழ்த்து, 1) என்று கூறுகிறார். திருஞானசம்பந்தர், ‘அகரமுதலானை அணி ஆப்பனூரானை” (1:88:5) என்று கூறுகின்றார். எண்ணும் எழுத்தும் கண் எண்ணும் எழுத்தும் கண் ‘எண் என்ப ஏனை ஏழுத்தென்ப இவ்இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” (குறள், 392) என்கின்றார் வள்ளுவர். திருஞானசம்பந்தரும், ‘எண்ணும் ஒரெழுத்தும் இசையின் கிளவி தேர்வார் கண்ணும் முதலாய கடவுள்” (2:170:4) என்கின்றார்…. ஈத்துவக்கும் இன்பம ஈத்துவக்கும் இன்பம::::; அருளாளர்கள் தம் செல்வத்தை வறியவர்கட்குக் கொடுத்து, அதனால் அவர்கள் அனுபவிக்கும் இன்பத்தினைக் கண்டு தாமும் மகிழ்வர். இவ்வாறு ஈவதால் எய்தும் இன்பத்தினை ‘ஈத்துவக்கும் இன்பம்” என்பர். தமது செல்வத்தைச் சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து போகின்ற கொடியவர், வறியவர்க்குக் கொடுத்து அவர்கள் மகிழ்வதால் தமக்கு உண்டாகும் இன்பத்தை அறிய மாட்டார்கள். ‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன் கணவர்” (குறள், 228) என்கின்றார் வள்ளுவர். ஈத்துவக்கும் இன்பத்தைத் திருஞானசம்பந்தர் ‘ இன்மையால் சென்றிரந்தார்க்கு இல்லை என்னாது ஈத்துவக்கும் தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே” (2:178:9) என்று ஆக்கூர் அருளாளர்களின் ஈகைச் சிறப்பைப் போற்றும்போது குறிப்பிடுகின்றார்.
சலத்தால் பொருள் செய்யாமை: சலத்தால் பொருள் செய்யாமை: குற்றமற்ற தம்குலத்து மரபோடு ஒத்து வாழக் கருதுபவர்கள் வறுமை வந்துற்றபோதும், தம் குலத்துக்குப் பொருந்தாத தொழில்களைச் செய்யார். இதனை வள்ளுவர், ‘சலம் பற்றி சார்பில் செய்யார் மாசற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார்” (குறள், 956) என்கின்றார். தீயவழியில் பொருள் ஈட்டக்கூடாது என்பதை ஒமாம்ப+ர் சான்றோர் செயலால், ‘ சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையால் மிக்க உலப்பில் பல்புகழார் ஓமாம்புவிய+ர்” (3:380:5) என ஞானசம்பந்தர் அறிவுறுத்துகின்றார். சொல்லாட்சிகள் சொல்லாட்சிகள்: : : திருக்குறளில் காணப்படும் சொல்லாட்சிகள் சில, எப்பொருளில் திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளனவோ அப்பொருளிலேயே அச்சொற்கள் திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் பயிலப்பட்டுள்ளன. ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் இக்கட்டுரையில் காட்டப்படுகின்றன. ஈரம் ஈரம் —- அன்பு அன்பு அன்பு:::: அன்போடு கலந்து வஞ்சனை இல்லாது அறத்தை உணர்ந்தாரது வாயினின்று வரும் சொற்களே இன்சொற்கள் எனப்படும். ‘இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம் சொற்பொருள் கண்டார் வாய்ச்சொல்” (குறள். 91) என்கிறார் வள்ளுவர். இங்கு ‘ஈரம்” என்பது அன்பு எனப் பொருள்படும். ‘ஈரம் ஏதும் இலனாகி எழுந்த இராவணன் (2:141:8) என்ற திருஞானசம்பந்தர் பாடலடியில் ‘ஈரம்” என்ற சொல் அன்பு என்ற பொருளில் பயிலப்பட்டுள்ளதைக் காண்க. படிறு படிறு —- பொய் பொய் பொய்::::கள்ள மனமுடையானின் பொய் ஒழுக்கத்தைப் பிறர் அறியவில்லை என்றாலும். அவனது உடம்பில் கலந்துள்ள ஐந்து ப+தங்களும் கண்டு தம்முள்ளே ஏளனமாகச் சிரிக்கும். ‘வஞ்சமனத்தான் படிற்று ஒழுக்கம் ப+தங்கள் ஐந்தும் அகத்தே நகும்” (குறள்.271) படிற்று ஒழுக்கம் என்பதில் ‘படிறு” என்றது பொய் எனப் பொருள்படும். படைக்கலங்களை ஏந்திய எட்டுத் திருக்கரங்களை உடைய பெருமான் பொய்யாகப் பலியேற்பதுபோலப் பிரமக பாலத்தைக் கையில் ஏந்தி வீடுகளின் வாயில்களில் சென்று பலியேற்றுண்ணும் கள்வன் என்ற பொருளில். ‘படையிலங்கு கரம் எட்டுடையான் படிறாகக் கலனேந்திக் கடையிலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன்” (1:3:2) என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உலகமெல்லாவற்றையும் தமக்கு உடைமையாகக் கொண்ட இறைவன் பலி கொண்டு உண்டான் என்பது பொருந்தாது ஆதலின் அஃது அவருக்கு விளையாட்டு@ உண்மையன்று என்பது பொருள். இங்குப் ‘படிறு” என்றது பொய் எனப்பொருள்படும். உடுக்கை – ஆடை ஆடை:::: ‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள். 788) என்ற குறளில் உடுக்கை என்பது ஆடையைக் குறிக்கும். உணவை உண்டு ஆடையைக் கைவிட்ட சமணர்களை. ‘உண்டு உடுக்கை விட்டார்கள்” (3:295:9) என்று சம்பந்தர் குறிப்பிடுவதில் உடுக்கை என்பது ஆடை எனப்பொருள்படுதல் காண்க. வெறி நாற்றம் வெறி நாற்றம் —- நறுமணம் நறுமணம் நறுமணம் ‘முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல் உண்கண் வேய்த்தோள் அவட்கு” ( குறள் 1113) மூங்கில் போலும் தோள்களை உடையளுக்கு உடல்நிறம். தளிர் நிறமாகும். பற்கள் முத்தாகும். இயல்பான மணம் நறுமணமாய் இருக்கும். மையுண்ட கண்கள் வேற்படையாகும் என்பது பொருள். இக்குறளில் ‘வெறிநாற்றம்” என்றது மணம் நறுமணத்தைக் குறித்தது. ‘வெறியார் மலர்த் தாமரையான்” (1:39:9) ‘நாற்றமலர் மிசை நான்முகன்” (1:116:9) என்ற திருஞானசம்பந்தர் பாடலடிகளில் ‘வெறி, நாற்றம்” என்பன நறுமணம் எனப்பொருள்படுதல் காண்க.
திருக்குறள் கருத்துகள் பொதிந்துள்ளமை:::: ‘கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார்” (குறள், 356) என்பதில் கற்று – என்றது மெய்நூல்களைக் கற்றலைக் குறிக்கும். கற்று என்பதற்கு அனுபவமுடைய தேசிகர்பால் கேட்டு என்று பரிமேலழகர் உரை கூறுவார். மெய்ந்நூல்களைக் கற்றும், கேட்டும், மெய்யுணர்வு பெற்றவர்களே பெரியார் என்பதைத் திருஞானசம்பந்தரும், ‘கற்றல் கேட்டல் உடையார் பொரியார்” (1:1:1) என்று கூறுகின்றார். கற்றலின் பயன் கற்றலின் பயன்:::: கற்றலின் பயன் கடவுளின் திருவடிகளை வழிபடுதலாகும். ‘கற்றதனால் ஆய பயன்என் கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்” (கடவுள் வாழ்த்து,2) என்ற கருத்தும், ‘கற்றவர் தாம் தொழுதேத்த நின்றான்” (1:5:9) ‘கற்று முற்றினார் தொழும் கழுமலம்” (2:234:11) என்ற திருஞானசம்பந்தர் தேவாரப் பாடலடியில் ‘பொய்யகத்து ஐயுணர்வு எய்தி” என்றது பொய்ப் பொருட்கள் மீது நிலையில்லாத உலகப் பொருட்கள் மீது செல்லும் அவாவை அடக்கி எனப் பொருள். ‘மெய்தேறினார்” என்றது சிவனே பரம் பொருள் எனத்தெளியும் மெய்யுணர்வை உணர்த்திற்று. வேளாளர்கள் தாளாளர்கள் வேளாளர்கள் தாளாளர்கள் ‘தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு” (குறள், 613) என்ற குறளும், ‘வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர்” (2:178:3) என்ற திருஞானசம்ந்தர் பாடலடியும் ஒப்பிட்டுக் காண இன்பம் உண்டாகும். அறக்கருத்துக்களில் ஒப்புமை அறக்கருத்துக்களில் ஒப்புமை::::திருக்குறள் அறநூல் என்பது உலகோர் அறிந்த உண்மை. திருஞான சம்பந்தர் தேவாரம் பக்தி உணர்ச்சியை எழுப்பி இறைவனைப் போற்றும் தேத்திர நூலாகும். இப்பக்தி நூலிலும் திருக்குறளுக்கு ஒப்பான அறக்கருத்துக்கள் பல இடங்களில் ஊடுருவிச் செல்கின்றன. புறங்கூறாமை புறங்கூறாமை:::: ஒருவன் அறத்தை போற்றாது தீய செயல்களைச் செய்தொழுகுபனானாலும்@ அவன் புறங்;கூறாதவன் என்று மற்றவர் சொல்லும்படி நடத்தல் நல்லது என்கின்றார் வள்ளுவர் (குறள், 181). ஒருவன் பிறரால் பெருமதிப்புப் பெற வேண்டுமானால் மற்றவர்களின் நற்செயலகளையே பிறரறியச் சொல்ல வேண்டும். அவர்களின் சிறுமையைப் பிறரிடம் சொல்லாது காக்க வேண்டும் என்று குமரகுருபரர் அறிவுறுத்துவார் (நீதிநெறிவிளக்கம், 19). நல்லவர்கள் ஒருவனுடைய நற்செயல்களையே பேசுவர். பொல்லாதவர்’களே புறங்கூறுவர் என்பதையும், அறியாமையுடையவர்கள் அதனைப் பலரிடமும் பரப்பிப் பழி உண்டாக்குவதையும், ‘நல்லார் அறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற அல்லார் அலர் தூற்ற” (1:84:10) என திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இங்கு ‘அறம’ ; என்றது நற்செய்கைகளைக் குறித்தது. புறம்பேசுதல் எவ்வளவு தவறோh, அவ்வளவு தவறு புறம் கூறுதலைக் கேட்பதும். இதனைத் திருஞானசம்பந்தர், ‘செவித்தொகைகளால் யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள் தாமே” (2:251:4) என்பதால் குறிப்பாகப் புலப்படுத்துகிறார் எனலாம்.
பயனில சொல்லாமை பயனில சொல்லாமை:::: பயனில்லாத சொற்களைப் பலமுறையும் பேசுகின்றவனை மனிதன் என்று சொல்லாதீர்கள. அவன் மக்களுள் பதர் எனக் குறிப்பிடுகின்றார். வள்ளுவர் (குறள், 196). ‘பேச்சினால் உனக்கு ஆவது என் பேதைகாள்” (2:142:2) என்பதால், சிவசம்பந்தமில்லாத அவப்பேச்சால் ஒரு பயனுமில்லை. அவ்வாறு பேசுபவர்கள் அறிவிலிகள் என அறிவுறுத்துகின்றார் திருஞான சம்பந்தர். ‘சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்” (குறள், 200) என்று வள்ளுவர் கூறுகிறார். ‘பெற்றம் அமரும் பெருமானை அல்லால் பேசுவது மற்றோர் பேச்சிலோமே” (1:5:9) என்பதால் மெய்யுணர்வு பெற்றவர்கள் இறைவனைப் பற்றிய பேச்சு அல்லாமல் வேறு பயனில்லாத வீண்பேச்சுப் பேசமாட்டார் எனத் திருஞானசம்பந்தர் அறிவுறுத்துகிறார். சிவநெறிக் கொள்கைகளில் ஒப்புமை சிவநெறிக் கொள்கைகளில் ஒப்புமை:::: சிவநெறிக்கொள்கைகள் கூறும் இறைவன், உயிர், உலகம் என்ற முப்பொருட்கள் பற்றிய கருத்துக்களில் இவ்விருநூல்களுக்குமிடையேயான ஒப்புமையான கருத்துக்கள் சில இப்பத்தியில் ஆராய்ந்து கூறப்படுகின்றன. இறைவன் இறைவன்:::: வள்ளுவர் இறைவனை ‘ஆதிபகவன்” (கடவுள் வாழ்த்து,) எனக் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரும், ‘ஆதி பாதமே ஓதி உய்ம்மினே” ‘பரமன் பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே” (1:67:4) என இறைவனைக் குறிப்பிடுகின்றார். வள்ளுவர் இறைவனை ‘வாலறிவன்” (கடவுள் வாழ்த்து, 2) எனக் குறிப்பிடுகின்றார். வாலறிவன் என்றால் தூய அறிவினன், நிறைந்த ஞானமுடையவன் எனப் பொருள். திருஞானசம்பந்தரும், ‘ஞானத்திரளாய் நின்ற பெருமான்” (1:69:3) என இறைவனைப் போற்றுகின்றார். திருவள்ளுவ் இறைவன் அன்பர்களின் நெஞ்சமாகிய தாமரைமலரில் வீற்றிருப்பவன் என ‘மலர்மிசை ஏகினான்” (குறள், 3) என குறிப்பிடுவதும், திருஞானசம்பந்தர் ‘மலர்மிசை யெழுதரு பொருள்” (1:21:5) என்று இறைவனப் போற்றுவதும் ஒப்புநொக்கத்தக்கது. திருவள்ளுவர் இறைவனைப் ‘பொறிவாயில் ஐந்தவித்தான்” (குறள், 6) என்று குறிப்பிடுவது போலத் திருஞான சம்பந்தரும்,’புலன்கள் வென்றவன் எம் இறைவன்” (3:319:7) என இறைவனைப் போற்றுகின்றனர். இறைவனுக்கு ஒப்பாக எவரையும் கூற முடியாது ஆதலால் வள்ளுவர், ‘தனக்குவமை இல்லாதவன்” (குறள், 7) என்று குறிப்பிடுவது போலத் திருஞானசம்பந்தரும் ‘தன்னேர் பிறரில்லான்” (2:198:3) எனப் போற்றுகின்றார். இறைவன் அறக்கடலாக விளங்குவதை வள்ளுவர் ‘அறவாழி” ((குறள், என்கின்றார். திருஞானசம்பந்தரும் இறைவன் அறவடிவினன் என்பதை அறிவுறுத்துகின்றார் (1:9:2, 2:199:11). இறைவனின் குணங்கள் இறைவனின் குணங்கள்:::: இறைவனை ‘எண்குணத்தான்” (குறள், 9) என வள்ளுவர் குறிப்பிடுகின்றார். தன்வயத்தனாதல் (சுதந்தரமுடையவன்) தூயஉடம்பினனாதல், இயல்பாகவே பாசங்களை நீக்கியவன், இயற்கை உணர்வினன், முற்றுணர்வினன், பேரருளுடையவன், முடிவிலாற்றலுடையவன், வரம்பிலின்பமுடையவன் என எண்குணங்களைப் பரிமேலழகர் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரும் இறைவன் எண்குணத்தினன் எனக் குறிப்பிடுகின்றார் (1:131:1) உயிர்கள் உயிர்கள் உயிர்கள்:::: இவ்விருநூல்கட்கும் உயரிகள் பல என்பதில் உடன்பாடு உண்டு (குறள், 322: திருஞானசம்பந்தர் தேவாரம், 1: 53:2, 1:63:4). உயிர் இவ்வுடம்பிற்கு வேறாய் உள்ளது என்பதும், அது தான் செய்யும் வினைக்கீடாக வேறுவேறு பிறப்புக்களுள் புகுந்து உழன்று வரும் என்பது வள்ளுவர் கருத்து. அவர், ‘குடம்பை தனித் தொழியப் புட்பறந்தற்றே உடம்போடு உயிரிடை நட்பு” (குறள், 338) என்கிறார். இதனால் புள் (பறவை), குடம்பையின் (முட்டை அல்லது கூடு) வேறாயினாற்போல உயிர் உடம்பின் வேறாயுள்ளது என்பது பெறப்படும். திருஞானசம்பந்தரும் ‘உடல் வரையின் உயிர்” (3:363:1) என உடல்வேறு, உயிர்வேறு என உணர்த்துகிறார். ‘உறங்குவது போதும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” (குறள், 339) என்பதால் உறக்கமும், விழிப்பும் மாறி மாறி வருதல் போல, உயிர்கட்கு இறப்பும், பிறப்பும் மாறி மாறிவரும் என மறுபிறப்பு உண்மை பெறப்படும். திருஞான சம்பந்தரும் மறுபிறப்பு பற்றிக் கூறுகின்றார் (2:182:1, 3:353:9). பாசம் பாசம்::::ஆணவம், கன்மம், மாயை முதலியன பாசம் என்ற சொல்லால் சிவநெறிக் கொள்கைகளில் குறிப்பிடப்படும். ‘யான எனது என்னும் செருக்கு” (குறள், 346) என்பதில் ‘செருக்கு” என்றது ஆணவத்தைக் குறிக்கும். இவ் ஆணவமே உயர்கள் இறைவனை உணரா வண்ணம் அவற்றின் அறிவை மறைக்கின்றது. இந்த மறைத்தல் சக்தி காரணமாக அஃது இருள் எனப்படும். ஆணவமலச் சேர்க்கை காரணமாக உயிர்கள் செய்யும் செயல்களே வினை எனப்படும். இச்சிவநெறிக் கொள்கையை ‘இருள்;சேர் இருவினை” (குறள், 5) என்ற தொடர் உணர்த்துவது காண்க. திருஞானசம்பந்தரும் ‘ஊனத்திருள்” (1:38:3) என ஆணவத்தையும், ‘நல்வினை” (2:207:11), தீவனை (2:207:11) என இருவினைகள் பற்றியும் குறிப்பிடுகின்றார். இறைவனை வணங்குதலின் இன்றியாமை இறைவனை வணங்குதலின் இன்றியாமை:::: ‘கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” (குறள், 9) எனத் தலை முதலிய உறுப்புகள் இறைவனை வணங்காவிடில் காணாத கண்போல, கேளாத செவிபோல, மற்றும் தம் தம் புலன்களைக் கொள்ளாத பிற பொறிகள் போலப் பயனற்றவையாய்க் குற்றமுடையவனவாம் என வள்ளுவர் கூறுகிறார். ‘ஆமாத்தூர் அ ‘ஆமாத்தூர் அ ‘ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே” (2:180:4) ம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே” (2:180:4) ம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே” (2:180:4) ‘ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே” (2:180:7) ‘ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே” (2:180:7) ‘ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே” (2:180:7) ; ‘ஆமாத்தூர் அம்மானைக் கேளாச் செவியெல்லாம் கேளாச் செவிகளே” (2:180:8) என்ற திருஞானசம்பந்தரின் தேவார அடிகள் முற்கூறிய திருக்குறள் கருத்துடன் ஒப்புடையதாய் விளங்குவதைக் காண்க. இறைவனைப் புகழ்வதால் உண்டாகும் நன்மை இறைவனைப் புகழ்வதால் உண்டாகும் நன்மை:::: இறைவனைப் புகழ்ந்து போற்றுபவர்களை இருவினைகள் வந்தடையா. ‘இருள்சோ இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (குறள்,5) என்கிறார் வள்ளுவர்.திருஞானசம்பந்தரும், ‘நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியார்கட்கு அடையா பாவமே” (1:86:3) என்கின்றார்.
முடிவுரை 1. திருக்குறள் உத்தரவேதம் என்றும், திருஞானசம்பந்தர் தேவாரம் தமிழ்வேதம் என்றும் போற்றப்படுகின்றன. 2. இவ்விரு நூல்களையும் எழுதுமறை என் ஆன்றோர்கள் போற்றியுள்ளனர். 3. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்களாகப் பல இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன. 4. சில சொல்லாட்சிகள் திருக்குறளில் எப்பொருளில் வழங்கப்பட்டனவோ, அப்பொருளில் அச்சொற்கள் திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் பயிலப்பட்டுள்ளன. 5. திருக்குறளனின் கருத்துக்களை உள்ளடக்கித் திருஞானசம்பந்தர் தேவார அடிகள் பல விளங்குகின்றன. 6. ப+க்களால் தொடுக்கப்பட்ட மாலைக்குள் இழைநார் ஊடுருவிச் செல்வது போல, திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களில் மனிதனின் உள்ளத்தைப் பண்படுத்தும் உயரிய அறக்கருத்துக்கள் திருக்குறளின் அறக்கருத்துக்களுடன் இவ் ஆய்வில்ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. 7. இவ்விரு நூல்கட்கிடையே சிவநெறிக் கொள்கைகளில் ஒப்புமைகள் பல உள்ளன. ஆயினும் இட எல்லை கருதி ஒரு சில ஒப்புமைகள் மட்டுமே இங்குச் சுட்டிக் காட்டப்பட்டன. 8. இவ்வாறு திருக்குறளுக்கும், திருஞானசம்பந்தர் தேவாரத்திற்கும் இடையே காணப்படும் ஒப்புமைகள் பலவாகும். இவ்விரு நூல்களையும் ஊன்றிப் படித்து ஆராய்வோர்க்கு அவை உவப்பிலா ஆனந்தத்தை உண்டாகும்;.