New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழும் தனித்தமிழும்! : ஜெயகாந்தன்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
தமிழும் தனித்தமிழும்! : ஜெயகாந்தன்
Permalink  
 


தமிழும் தனித்தமிழும்! : ஜெயகாந்தன்

 

தமிழ் ஒரு மொழி. தனித் தமிழ் ஒரு முயற்சி. தனித் தமிழே தமிழ் மொழியல்ல.

இந்தத் தெளிவு எனக்கிருப்பதால் தனித்தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை. இந்தத் தெளிவு இல்லாததினால் தனித்தமிழ்ப் பிரியர்கள் தம்மை அறியாமலேயே தமிழை வெறுத்து வருகிறார்கள்.

தமிழனது சமுதாய வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கலப்புகள் நிகழ்ந்திருக்கிறதோ அப்பொழுதெல்லாம் தமிழ் மொழியில் கலப்பு நிகழ்ந்திருக்கிறது. இவ்விதக் கலப்பினாலேயே அவனது வாழ்க்கை வளமுற்றது போல - அவனது மொழியும் வளம் பெற்றிருக்கிறது.

தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் இத்தகைய கலப்புக்களையெல்லாம் தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொண்டுவிட்ட சிலர், மொழி மட்டும் தனித்திருக்க வேண்டுமென்று ஆசையுற்று அவ்வித முயற்சியில் இறங்குவது ரசனைக்குரியதே. ஒரு முயற்சி என்ற முறையில் அதிலிருக்கும் பலவீனமான அழகைக் கூட என்னால் ரசிக்க முடிகிறது. எனினும் அதுவே தமிழ் என்பதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்தத் தனித்தமிழ் முயற்சியில் சில வியாசங்கள் வரையலாம். நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதிக் கொள்ளலாம். மேடையில் மிகுந்த ஜாக்கிரதையோடு கூடிய ஒரு சமத்காரத்தோடு கூற வந்த விஷயத்தைக் கூற முடியாமலேயே - தமிழின் தனித்துவத்தைக் காப்பாற்றக் கூடிய முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ பெற்று ஒருவாறு பேசி முடிக்கலாம்.

என்னதான் செய்தாலும் இந்தத் தனித்தமிழில் ஒன்றை மட்டும் செய்ய முடியாது. இலக்கியம் சிருஷ்டிப்பது என்ற மகத்தான காரியத்தைக் கம்பியில் நடப்பது போன்ற இந்தத் தனித்தமிழ் என்கிற 'பாலன்ஸ்' கூத்தின் மூலம் நிறைவேற்றவே முடியாது.

ஒரு மொழியெனின் அதில் இலக்கியம் உருவாக வேண்டும். வாழ்க்கையைப் புறக்கணித்து இலக்கியங்கள் உருவாவதில்லை. இன்றைய தமிழ் இலக்கியம் என்பது - உலக அளவிற்கு உட்பட்ட துறைகளில் உருவாவது, உரைநடையில் நிறைவேறுதல் வேண்டும். உரை நடையென்று செய்யுளுக்கு வந்த உரைபோல அமைதல் கூடாது. எந்த அளவுகு நடைமுறை வாழ்க்கையோடு - அதன் பிரத்தியேக அழகுகளோடு வசனம் இசைந்து உருப்பெறுகிறதோ அந்த இசையையே வசனத்தின் வளர்ச்சியெனக் கொள்ளூதல் வேண்டும். அதற்குமேல் நவீன இலக்கியங்கள் நாம் சந்திக்கின்ற மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

பாத்திரப் படைப்பு என்பது ஒவ்வொன்றும் தனித்தன்மையோடு விளங்க - இது இந்தக் காலத்தை - இந்தச் சூழ்நிலையை - இந்தப் பிரதேசத்தை - இந்த வர்க்கத்தை என்றெல்லாம் சம்பாஷணைகளின் மூலமும் சிந்தனைகளின் மூலமும் ஆசிரியனின் விவரிப்பின் மூலமும் நிலை பெறுதல் வேண்டும்.



jeyakanthan.jpg


இந்தச் சாதனையைத் தனித்தமிழ் என்ற ஒரு சாதாரண முயற்சி சாதிப்பது துர்லபம். ஏனெனில் தனித்தமிழ் என்பது ஒரு வாழ்க்கை உண்மையில்லை; அது ஒரு மனமயக்கம்! அல்லது ஒரு குழுவின் விருப்பம். இதற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாதிருப்பதே இதன் சிறப்பு.

(எனவேதான் இதனை ஒரு முயற்சி என்று குறிப்பிட்டேன்.)


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இதில் ஒரு வெறியோடு சம்பந்தப்பட்ட சிலர் தங்களது சிந்தனைகளையெல்லாம் மனத்துள் மொழிபெயர்த்து நண்பர்களோடு உரையாடுகையில் பேசிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களது கையாலாகாத்தனம் வெளிப்படுகையில் கூட வெட்கப்பட்டு இதனைக் கைவிடுவதில்லை. இவர்கள் உண்மையின் ஒளியின்றி உதட்டால் பேசுவதைக் காணும்பொழுது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளக்கூடிய மாய்மாலக்காரர்களாகவே எனக்குத் தோன்றுகிறது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு இவர்களது அசட்டுத்தனம் மாறிப் போனதை நான் பார்க்கிறேன்.

இந்தத் தனித்தமிழ் இலக்கியம் சமைப்பதாக எண்ணிக் கொண்டு எழுதித் தள்ளிய பேராசிரியர்கள்கூட அந்த வழியினின்றும் இன்று மாறியிருக்கிறார்கள். இன்னும் இலக்கியம் இவர்கள் கையில் உருப்பெறாததற்குக் காரணம் இது ஒன்றுமட்டுமல்ல;தனித்தமிழ் ஒரே மாதிரிதான் இருக்கும். அதிலே பல்வேறுபட்ட நடைகளும் சாத்தியமில்லை.

ஒரு நடைதான் சாத்தியமெனில் அது ஒரு மொழியா?


வேறு மாதிரியான ஒரு நடையே சாத்தியமில்லையெனில் பல்வேறு தரப்பட்ட பாத்திரங்களை சிருஷ்டிப்பது சாத்தியமாகாது.

தனித் தமிழ்தான் தமிழ் எனில் இலக்கியம் படைக்க லாயக்கற்ற மொழி தமிழ் என்றாகும்.

தனித்தமிழ் என்பது ஒரு நினைப்புத்தான். தனித்தமிழ் என்று நினைத்துக் கொண்டிருப்பினும் இவர்களால்கூட அறியாமை காரணமாகப் பிறமொழிச் சொற்கள் உபயோகிக்காமல் இருக்க முடிவதில்லை.

ஆனால் பாவம், இவர்களுக்கு அது தெரியாது. தமிழ் தனியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கும் தனியாக இருக்கிறது என்று நம்புகிறவர்களுக்கும் கூடத் தெரியாமலேயே தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. தமிழ் பிறமொழிகளில் கலப்பதும் பிற மொழிகள் தமிழில் கலப்பதும் விஞ்ஞானப் பூர்வமான ஒரு விளைவு என்பதனால்தான் இதனை அவ்வளவு சீக்கிரம் பிரித்து விடவும் முடிவதில்லை.

திரு.வி.கே. சூரியநாராயண சாஸ்திரிகள் தமது பெயரைத் தனித்தமிழில் மாற்றிக் கொள்வதாக எண்ணி, சூரியன் - பரிதி, நாராயணன் - மால், சாஸ்திரி - கலைஞன் என, மொழிபெயர்ப்பதாக எண்ணி வேறு சமஸ்கிருதச் சொற்களில் மாற்றி 'பரிதிமாற்கலைஞன்' என்று வைத்துக் கொண்டார் என்பது ரொம்ப ரஸமான விஷயந்தான்.

பரிதி என்பதும், மால் என்பதும் சமஸ்கிருதச் சொற்களே!



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஒரு பொருளைக் குறிக்கப் பல வார்த்தைகளிருப்பது ஒரு மொழியின் செழுமை. அவ்விதம் இருக்கின்ற வார்த்தைகளை மொழி ஆராய்ச்சியாளர்கள் எந்தெந்த வார்த்தைகள், எந்தெந்தக் காலத்தில், எதனெதன் விளைவாய் எந்தெந்த மொழிகளில் இருந்து வந்திருக்கக் கூடுமென்பதை ஆராய்ந்து குறிக்கலாம். இதற்கு உதவுபவை அம்மொழியின் இலக்கியங்களேயாகும்.

அதாவது இத்தகைய கலப்புக்களை அவ்விலக்கியங்கள் பிரதிபலித்திருக்கக் கூடும் என்று கொள்ளுதல் வேண்டும்.

நாவாய் என்ற வார்த்தை தமிழர் நாகரிகம் கடல் கடந்து சென்ற காலத்திற்கு முன்பு தமிழக மண்ணில் யவனர்கள் வாணிகஞ் செய்யும் பொருட்டு வருவதற்கு முன்பு இருந்திருக்க முடியுமா என்பதை ஆராய வேண்டும்.

நாவாய் என்ற சொல் கப்பலைக் குறிக்கின்ற தனித் தமிழ் சொல்லெனக் கருதுதல் வேண்டா. அஃது கிரேக்க மொழியின் 'நோவே' என்ற கப்பலைக் குறிக்கின்ற சொல்லின் திரிபேயாகும்.

இவ்விதம் திரிந்து பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் இவ்வார்த்தை இருத்தல் கூடும். ஆங்கிலத்தில் 'நேவி' என்றிருப்பது போல.

தமிழ் இலக்கியங்களைப் பார்த்தால் ஒவ்வொரு காலத்து இலக்கியமும் அந்தந்தக் காலத்தைப் பிரதிபலிப்பனவையாயிருக்கின்றன. அவையாவும் ஒரே செய்யுள் வடிவில் இருப்பினும் ஒரே மாதிரியாக இல்லை.

தமிழுக்கு சிரஞ்சீவித் தன்மை தந்த தமது முற்காலத்துக் கவிஞர்கள் எல்லாம் வாழ்க்கையில் வந்து கலந்த பிறமொழிச் சொற்களைக் கைவிட முடியாமல் கையாண்டு நமது இலக்கியங்களூக்குச் செழுமை தந்திருக்கின்றனர். அதற்கு இடங்கொடுக்காத இலக்கணத்தை அவர்கள் இழுத்து வளைத்திருக்கிறார்கள். அவர்கள் இழுப்பிற்கு இலக்கணம் வளைந்து கொடுத்தும் இருக்கிறது. அதன் மூலம் அவர்கள் புதிய இலக்கணத்தை உருவாக்கியுமிருக்கிறார்கள்.

அன்று அவர்கள் இலக்கியம் சமைத்திருப்பது செய்யுள் உருவத்தில். அவர்களே இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என்றால் - அவர்கள் காலத்தைவிட எத்தனையோ மடங்கு வேகமானதும் விரைவானதுமான, அதிகக் கலப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கால வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நவீன இலக்கியத்தை உரைநடையின் மூலம் உருவாக்குகின்ற ஒருவன் தனித் தமிழைக் காப்பாற்றுவது எங்ஙனம்?

'அந்தோணி சைக்கிளில் போனான். டயர் பஞ்சராயிற்று' என்ற வாக்கியங்கள் தமிழ் இல்லையென்று யார் சொல்லுவது? இதனை எவ்விதம் தமிழாக்குவது? தனித் தமிழ்வாதிகளூக்கு இந்தச் சொற்றொடரில் இரண்டே வார்த்தைகள் தான் இருக்கின்றன. ஆயிற்று, போனான் என்பதே அவை. ஆவதும், போவதும் தமிழனின் எல்லாக் காலத்திலும் இருந்த ஒரு வினை. 

ஆனால் அந்தோணியும், சைக்கிளும், டயரும், பஞ்ச்சரும் ஒரு நவீன காலத்தைப் பிரதிபலிக்கின்ற உண்மைகள் அல்லவா?

இதனை மொழிபெயர்ப்பதன் மூலம் காலமும் இடமும் அற்ற ஒரு கனவு மயக்கத்திற்கு அல்லவா நாம் போய் விடுகிறோம்.

சைக்கிள் என்ற பொருள் நமக்கு வேண்டும். சைக்கிள் என்ற பெயர் நமக்கு வேண்டாம் என்று சிலர் விரும்புவதை வாழ்க்கை எவ்விதம் அனுமதிக்கும்?

எனவேதான் சொல்லுகிறேன்.

தமிழ் ஒரு மொழி.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தனித்தமிழ் ஒரு முயற்சி - ஒரு விளையாட்டு. அது சிருஷ்டிமேதை அவசியப்படாத சில வாத்தியார்களுக்கும், ஒரு தற்காலிகக் கவர்ச்சியை நாடும் சில மாணவர்களூக்கும் ஒரு வேளை உகந்ததாய் இருக்கலாம்.

மொழி என்பது சில வாத்தியார்களிடத்திலும் இல்லை; சில மாணவர்களிடத்திலும் இல்லை. அது வாழ்க்கையில் இருக்கிற்து.

எனவே இந்தத் தனித்தமிழ் யதார்த்தத்திற்கும் ஒத்துவராது; இலக்கியத்திற்கும் ஒத்துவராது; எழுதுபவனுக்கும் ஒத்துவராது.

எனினும் தனித்தமிழ் என்பது ஒரு ரசிக்கத்தக்க முயற்சிதான்!

இந்தத் தனித்தமிழ் மீது நம்பிக்கையில்லாமலேயே சில அரசியல்வாதிகள் இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்களே அதுதான் இதில் உள்ள மகத்தான ஹாஸ்யம்.!

(எழுதப்பட்ட காலம்: 1964)

ஜெயகாந்தன் ஒரு பார்வை - டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியன், முதல் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை - 600 017.

(நன்றி : இந்தக் கட்டுரையை Tab எழுத்துருவில் இட்டிருக்கும் எனி-இந்தியன் இணையதளத்திற்கு.http://www.anyindian.com/jayakanthan/tamil.htm )



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தனித்தமிழ் பற்றிய மேலும் சில அறிவுபூர்வமான சிந்தனைகள்:

பொருந்தாக் காமம் : பி.கே.சிவகுமார் ('திண்ணை') 

தலைப்பைப் பார்த்துவிட்டு, ஏதேதோ கற்பனை செய்தபடி இதைப் படிக்க ஆரம்பித்து முடிவில் ஏமாந்து போனால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனித்தமிழின்மீது ஒருசிலர் கொண்டுள்ள பிரேமையைப் 'பொருந்தாக் காமம் ' என்று அழைப்பதே பொருத்தமென எனக்குத் தோன்றுகிறது. தனித்தமிழ் என்பது காலத்திற்குப் பொருந்தாதது என்பது என் கருத்து. பொருந்தாத ஒன்றின் மீது பிறக்கும் மோகத்தைப் 'பொருந்தாக் காமம் ' என்று அழைக்கலாம்தானே! .......



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பொருந்தாக் காமம்

 

 

பி.கே.சிவகுமார்

தலைப்பைப் பார்த்துவிட்டு, ஏதேதோ கற்பனை செய்தபடி இதைப் படிக்க ஆரம்பித்து முடிவில் ஏமாந்து போனால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனித்தமிழின்மீது ஒருசிலர் கொண்டுள்ள பிரேமையைப் 'பொருந்தாக் காமம் ' என்று அழைப்பதே பொருத்தமென எனக்குத் தோன்றுகிறது. தனித்தமிழ் என்பது காலத்திற்குப் பொருந்தாதது என்பது என் கருத்து. பொருந்தாத ஒன்றின் மீது பிறக்கும் மோகத்தைப் 'பொருந்தாக் காமம் ' என்று அழைக்கலாம்தானே! எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்த வேண்டும் என்கிற தனித்தமிழ் தமிழைக் கடுந்தமிழாக்குகிறது என்பதும் என் எண்ணம். தனித்தமிழ் என்றதும் 'தமிழ் ஒரு மொழி; தனித்தமிழ் ஒரு முயற்சி; தனித்தமிழே தமிழ் மொழியல்ல ' என்று ஆரம்பித்த ஜெயகாந்தனின் கட்டுரை நினைவுக்கு வருகிறது. ஜெயகாந்தன் கூட உயர்வு நவிற்சியாகவும், சற்று மென்மையாகவுமே தனித்தமிழுக்கு 'முயற்சி ' என்கிற பெயர் கொடுத்திருக்கிறாரோ எனத் தோன்றுகிறது. தனித்தமிழ் குறித்து படிக்க வேண்டிய இன்னொரு கட்டுரை பெருமாள் முருகனின் 'கரித்தாள் தெரியவில்லையா தம்பீ... '. 'தனித்தமிழ்ப் பற்று தற்கொலைக்குச் சமமாகும் (திராவிடன் படிக்கும் நூல்) ' என்னும் தலைப்பில் டாக்டர். அருட்பிரகாச ஜெயராம் அடிகளார் எழுதிய, ஆர்வமூட்டுகிற ஒரு புத்தகமும் உண்டு. தனித்தமிழ் குறித்து இவர்கள் எல்லாம் சொல்லாத ஏதோ ஒன்றைப் புதிதாய் இங்கே நான் பதிவு செய்யப் போவதில்லை. தனித்தமிழ் பொருட்டு நான் கேட்ட, எனக்கு நேர்ந்த சில சுவாரசியங்களையும், முரண்பாடுகளையும் சொல்லவே இக்கட்டுரை.

 

ஏழ்கடல் சுற்றிலும் இசைபோல் வாழ்கின்ற தமிழர்கள் எல்லாம் வாழ்வில் அடிக்கடி காண நேருகிற காட்சி, தனித்தமிழை மட்டுமே சிலர் தமிழ் என்றும், தமிழ்ப்பற்று என்றும் நிறுவ முயற்சித்துக் கொண்டிருப்பதுதான். தமிழ்நாட்டிலேயே செல்லாக் காசாகிப் போன இத்தகைய சித்தாந்தங்களுக்கு, அவ்வப்போது இங்கெ உயிரூட்டுகிற முயற்சிகள் நடப்பதை நீங்கள் அறீந்திருப்பீர்கள். அப்படி முயல்வோர் காலச்சுழியில் சிக்கி அவர்கள் கடைந்தெடுத்த தனித்தமிழ் வார்த்தைகளுடன் காணாமல் போவதும் சாசுவதமாய் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது. தமிழ்ப்பற்று என்று சொல்பவர்களிடம் எல்லாம் நான் கிண்டலாக, வள்ளுவர் 'பற்றுக பற்று விடற்கு ' என்று சொல்லியிருக்கிறார் என்றும் முன்னர் சொல்வதுண்டு.

 

பலவருடங்களுக்கு முன்பு இப்படித்தான் - டான் ஏஜ் பருவம். என்னுடைய நண்பர் ஒருவர் தனித்தமிழிலே ஈடுபாடுடையவர். அவருக்கும் எனக்கும் இதுகுறித்து விவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆனாலும், அவர் தனித்தமிழிலேதான் பேசுவார். ஒருநாள் மாலை நண்பர்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்கும்போது, 'சரி, கொட்டைவடிநீர் சாப்பிட போகலாம் ' என்றார். உடன் இருந்த நண்பர் ஒருவர் திகைத்துப் போய் 'என்ன சொல்கிறீர்கள் ' என்று கேட்டார். 'காப்பி சாப்பிட போகலாம் என்று சொன்னேன் ' என்று விளக்கம் கொடுத்தார் நண்பர். (காப்பிக்கு குளம்பி என்கிற குழப்பம் எல்லாம் வராத மஹா குழப்பக் காலமது.) கொட்டைவடிநீர் என்கிற சொல், காப்பியைவிட விந்துவிற்குப் பொருத்தமாக இருக்கிறது. அதான் முதலில் திகைத்து விட்டேன் ' என்றார் திகைத்து நின்ற நண்பர். தனித்தமிழ் நண்பரின் முகம்போன போக்கைப் பார்க்க வேண்டுமே! சமீபத்தில் இப்படித்தான் 'செல்வி ' என்கிற சொல்லிருக்கத் 'திருவாட்டி ' என்கிற தனித்தமிழ்ச் சொல் பயன்படுத்தப்பட்டது பார்த்து சிரித்திருக்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இன்னொரு நண்பரை அமெரிக்கா வந்தபின் தான் தெரியும். தனித்தமிழில் டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்கிற அளவுக்குப் 'புலமை ' பெற்றவர். பெயர்ச்சொற்களைக் கூடத் தமிழ்ப்படுத்துவதில், கிரந்த எழுத்துக்கள் தவிர்த்து எழுதுவதில் எல்லாம் அவர் பெருஞ்சித்திரனார் வகை என்று சொல்லலாம். நியூ ஜெர்ஸியை 'நியூ செர்ஸி ' என்று எழுதுவார். பூஜ்யத்தைச் சூன்யம் என்று அழைப்பார். 'முன்னோர் ஒழியப் பின்னோர் பலரினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ ' என்னும் புகழ்நிலைக்க எழுதப்பட்ட இலக்கண நூலான நன்னூலில், அது எழுதப்பட்ட பதிமூன்றாம் நூற்றாண்டு காலத்திலேயே, வடமொழி (கிரந்த) எழுத்துக்கள் தமிழின் அங்கமாகக் கருதப்பட்டதும், அவற்றிற்கு புணர்ச்சி விதிகள் இருந்ததும் நண்பருக்குத் தெரியாது போலும். தெரிந்தால் ஒன்று நன்னூல் தமிழ் நூல் அல்ல என்று சொல்லக்கூடும். இல்லையென்றால், அவற்றையெல்லாம் ஆரியரின் இடைச்செருகல் என்று புலம்பக் கூடும். 'இயன்றவரை தமிழில் பேசவேண்டும் ' என்று மஹாகவி பாரதி சொன்னதைப் படித்தபின், நானும் அவருடன் இயன்ற அளவு தமிழிலேயே பேசுவது வாடிக்கை. ஒருநாள் அவரைத் தொலைபேசியில் அழைத்தேன். இந்த நண்பருடன் உரையாடும்போது மட்டும், நான் சற்று முனைப்புடன் தமிழ் பேசுகிறேனா (தனித்தமிழ் அல்ல) என்று கவனம் கொள்வது வழக்கம். அவர் மனைவி தொலைபேசியை எடுத்தார். 'நான் நியூஜெர்ஸியிலிருந்து சிவகுமார் பேசுகிறேன். (நண்பரின் பெயரைச் சொல்லி) அவருடன் பேச இயலுமா ? ' என்று கேட்டேன். வந்தது பதில் உடனேயே. 'Please Hold On. I will call him. (நண்பரின் பெயர் சொல்லி அழைத்து) Call for you from Sivakumar. ' நண்பர் தன் மனைவியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களுள் தனித்தமிழைக் கைவிடுவதும் ஒன்று என்று நான் நினைத்துக் கொண்டேன்.

 

தமிழையும் தனித்தமிழையும் ஒரு கோஷமாக முன்வைத்து ஆட்சிக்கு வந்த திராவிடத் தலைவர்களே, பின்னாளில் தெளிவு பெற்றோ, 'காலத்தின் கட்டாயத்தாலோ ', தனித்தமிழைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதைத் தனித்தமிழ்வாதிகள் வசதியாக மறந்து போகிறார்கள். 'பழகிப் போய்விட்ட சில சொற்களை மிகச் சிரமப்பட்டு மாற்றிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அதற்காக பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்வது தேவையற்ற ஒன்று என நான் வாதிடவும் இல்லை. கட்டுமரம் என்ற சொல்லை, ஆங்கிலத்தில் 'கட்டமரான் ' என எடுத்துக் கொள்ளவில்லையா ? அதுபோல காபி என்பது பிறமொழிச் சொல்லாக இருப்பினும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. 'காபி ' போன்ற சில சொற்களுக்கு விதிவிலக்கு தரலாம். தனித்தமிழ் என்பது, கோர்ட் நீதிமன்றம் ஆகலாம்! ஜட்ஜ் நடுவராகலாம். ஜட்ஜ்மெண்ட் தீர்ப்பு ஆகலாம். அதற்காக தீர்ப்பு எழுதப் பயன்படுத்தும் பேனா 'மூடியிட்ட எழுதுகோல் ' ஆகத் தேவையில்லை - இதுவே என் கருத்து. ' - சொன்னவர் தமிழின்பால் ஆழ்ந்த ஈடுபாடுடைய திரு.மு.கருணாநிதி.

 

எனக்குச் சொல்லப்பட்ட இன்னொரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. 'தனித்தமிழ் இல்லாவிட்டால், மெல்லத்தமிழ் இனிச் சாகும் ' என்று மெய்வருந்திய தனித்தமிழ்ப்பற்றாளர்கள் சிலர், அரசாங்கம் தமிழை எல்லா இடங்களிலும் கட்டாயமாக்க வேண்டும் என்று ஊர்வலம் போக நினைத்தார்கள். உடனே, தமிழில் உள்ள எழுத்தாளர்களையெல்லாம் துணைக்கு அழைப்பது என்றும் முடிவு செய்தார்கள்.ஜெயகாந்தனிடம் போய், 'தமிழைக் காப்பாற்ற ஊர்வலம் போகிறோம். தாங்களும் கலந்து கொள்ள வேண்டும் ' என்றார்கள். அவர் சிரித்தபடியே சொன்னாராம். 'Dont worry, Tamil will live forever ' என்று. இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் சாகாது நீடித்து நாளும் வளர்கிற தமிழை, எத்தனையோ நாகரீகங்களை, கலாச்சாரங்களை, மொழிகளை, ஆதிக்கங்களைச் சந்தித்து, அவற்றை உள்வாங்கி, அவற்றுக்கு மேலாக எழுந்து நிற்கிற தமிழை, ஊர்வலம் போவதன் மூலமும், தனித்தமிழ் மூலமுமே காக்க முடியும் என்பது எவ்வளவு பேதைமை!



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இன்னொரு நண்பர். இங்கே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். தமிழ்மீது ஆர்வமும் தனித்தமிழ் மீது பித்தும் உண்டு அவருக்கு. தமிழிலே மின்னச்சு செய்ய பலவகையான எழுத்துருக்கள் இருப்பதைப் பற்றி பெருமையுடன் பேசிக் கொண்டிருந்தோம். என்னைப் போன்ற தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்குப் 'phonetic typing ' எவ்வளவு சுலபம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார்: 'Phonetic Typing தமிழ் அல்ல. ' Phonetic Typing என்கிற வார்த்தைக்கு அவர் பயன்படுத்திய தனித்தமிழ்ச் சொல் எனக்கு மறந்து விட்டது. எனவே, தனித்தமிழ் ஆர்வலர்கள் என்னை மன்னிப்பார்களாக. நான் சொன்னேன் - 'ஏன் இல்லை, க் + இ = கி என்று எப்படி உயிர்மெய் எழுத்து பிறக்கிறதோ அப்படி எழுத்துக்களை தட்டச்சு செய்வது எவ்வளவு சுலபம் தெரியுமா ? '. அவர் சொன்னார். 'Phonetic Typing தமிழ் மரபல்ல. தமிழ் மரபு தட்டச்சு (Typewriter) முறையில் தட்டச்சு செய்வதுதான். ' 'அப்படியானால் தமிழ் மரபின் படி நாம் கம்ப்யூட்டர் எல்லாம் பயன்படுத்தாமல், ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் ' என்று எனக்குச் சொல்லத் தோன்றியது. சொல்லி என்ன பிரயோசனம் என்று நினைத்துச் சும்மா இருந்து விட்டேன்.

 

வெளிநாடுகளில் வாழ்கிற தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று விரும்புவதும், அதற்காக அவர்களைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்புவதும் நமக்கு இங்கே வாடிக்கையான, அவசியமான ஒன்று. தனித்தமிழையே தமிழ் என்று குழந்தைகளை பயமுறுத்தி, குழந்தைகளுக்குத் தமிழ்பால் பயமும் அவநம்பிக்கையும் ஏற்படச் செய்கிற அனுபவங்களிலிருந்து தமிழ்ப் பள்ளிக்குச் செல்கிற தம் குழந்தைகளைக் காப்பது பெற்றோரின் கடமையாகும். ஏனென்றால், தனித்தமிழ் மட்டுமே தமிழ் அல்ல, தமிழ் மரபல்ல, தமிழ்ப் பற்று அல்ல, தமிழன் என்பதற்கான அடையாளமும் அல்ல.

 

'எனக்கும் தமிழ்தான் மூச்சு; ஆனால் அதைப் பிறர்மேல் விட மாட்டேன் ' என்கிற ஞானக்கூத்தனின் வரிகளைத் தமிழின் முதல்பாடமாக்கி, வெளிநாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லித் தர ஆரம்பிக்கலாம்.

 

***

pksivakumar@att.net



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தனித்தமிழ் என்னும் போலி - (1) - பி.கே.சிவகுமார்
[மிஸ்.தமிழ்த்தாய்க்கு நமஸ்காரம் (நன்றி: சுஜாதா) சொல்லி அவளருள் வேண்டி இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.]
முன்னுரை:
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும்- கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்றவர் நம் மஹாகவி. அந்த மஹாகவியின் பார்வையில் பார்க்கும்போது, தமிழுக்கு கலைச்சொல்லாக்கம் (அறிவியல் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த சொற்களைத் தமிழ்ப்படுத்துவது) அவசியமான ஒன்று என்பதிலே யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. "நான் கெட்-அப் பண்ணி பிரஷ் பண்ணி பிரேக்ஃபாஸ்ட் பண்ணி அப்புறம் ஆபிஸுக்குக் கம் பண்ணேன்" என்பது போன்ற தொலைகாட்சிப் பதுமைகள் பேசுகிற தமிங்கலம் குறைக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. "இயன்ற வரை தமிழிலே பேச வேண்டும்" என்றும் மஹாகவி நமக்கு வழி காட்டியிருக்கிறார். எனவே, நல்ல தமிழில் பேசவோ பேச முயலவோ வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நல்ல தமிழ் என்பது தனித்தமிழ் இல்லை. தனித்தமிழ் நம் மரபும் இல்லை என்று எழுதினால், நம்மில் சிலர் அதை கலைச்சொல்லாக்கத்துக்கு எதிர்ப்பு என்றும், தமிங்கலத்திற்கு ஆதரவு என்றும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். எனவே முதலில் தனித்தமிழ் என்றால் என்னவென்று பார்ப்போம்.
தனித்தமிழின் தோற்றமும் வரையறையும்:
சூரிய நாராயண சாஸ்திரி என்கிற தன் பெயரைத் தனித்தமிழ்ப்படுத்திக் கொண்ட பரிதிமாற்கலைஞரும், சுவாமி வேதாசலம் என்கிற தன் பெயரைத் தனித்தமிழ்ப்படுத்திக் கொண்ட மறைமலையடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகள் எனலாம். தன் பெயரைத் தமிழ்ப்படுத்துவதாக எண்ணி சூரிய நாராயண சாஸ்திரியார் சூரிய= பரிதி, நாராயண= மால் என்று வேறு சமஸ்கிருதச் சொற்களில் அமைத்துக் கொண்டது ரஸமான விஷயம்தான் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்வதை இங்கு நினைவில் கொள்ளலாம். இவர்கள் இருவரும்தான் வடசொற்களே கலக்காமல் முதலில் தனித்தமிழில் எழுதத் தலைப்பட்டவர்கள். பரிதிமாற் கலைஞர் மறைந்த பிறகு- 1916 முதல் மறைமலையடிகள் தனித்தமிழில் பேசுவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் சென்றார். வடமொழிச் சொற்களைத் தவிர்க்கிற தனித்தமிழ் இயக்கத்தினர்- கிரந்த எழுத்துகளையும் (ஜ, ஷ, ஸ, முதலியன) வடமொழி எழுத்துகள் என்று சொல்லித் தவிர்க்க ஆரம்பித்தனர். இதிலே பெருஞ்சித்திரனார் போன்றவர்கள், பெயர்களைக் கூடத் தனித்தமிழ்ப்படுத்தத் தலைப்பட்டனர். எனவே, இதிலிருந்து தனித்தமிழ் என்பது- 'வடமொழிச் சொற்கள் என்று தனித்தமிழ் இயக்கத்தினர் நம்புவதையும், கிரந்த எழுத்துகளையும் நீக்கி எழுதுவது' என்று புரிந்து கொள்ளலாம். இந்தத் தனித்தமிழ் குறித்து நம் இலக்கண நூல்கள் என்ன சொல்கின்றன, தனித்தமிழ் ஆதிகாலம் தொட்டே நமது மரபா என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிப்பது இக்கட்டுரையின் நோக்கம் எனலாம்.
தொல்காப்பியம்:
தமிழில் நமக்குக் கிடைத்திருக்கிற மிகத் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் என்று அழைக்கப்படுகிறார். (நூலின் பெயரால் அல்லது பாட்டின் பெயராலேயே ஆசிரியரை அழைக்கிற மரபு தமிழில் இருந்திருக்கிறது என்பதைத் தொல்காப்பியர் என்கிற பெயரின் மூலமும், "செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" பாடல் புகழ் செம்புலப் பெயனீரார் மூலமும் அறிகிறோம். அவர்களின் இயற்பெயர் மறைந்துபோய் அவர்களின் இறவாத படைப்புகளின் பெயர்களால் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்று சொல்வோரும் உண்டு.) தமிழில் தொல்காப்பியத்திற்கு முன்னும் இலக்கண நூல்கள் இருந்ததை நாம் தொல்காப்பியம் மூலம் அறிகிறோம். ஆனால், அந்த இலக்கண நூல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. தமிழின் முதல் நூல் அகத்தியம் என்றும் அதன் வழி வந்த வழிநூல் தொல்காப்பியம் என்றும் கூறுவர். தொல்காப்பியத்தின் காலத்தை நிச்சயமாக அறுதியிட்டுக் கூற இயலாது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தொல்காப்பியத்தின் காலம் "கிறிஸ்து சகாப்தத்தின்" (Christian Era) ஆரம்பத்தை ஒட்டி இருக்கலாம் (early centuries of the christian era) என்று சொல்வது பெருந்தவறான கணிப்பாக இருக்க முடியாது என்கிற கூற்றைச் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி முன்வைக்கிறது. டாக்டர் மு.வ. போன்றவர்களோ தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று நிச்சயமாகக் கூறுகிறார்கள். இந்த விவரங்களிலிருந்து, இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டியது பின்வரும் விஷயங்கள் தான்: 1.நம் கையில் கிடைத்திருக்கிற தமிழின் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். 2.அது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. 3.அந்தத் தொல்காப்பியத்திலும் அதன்பின்னர் வந்த இலக்கண நூல்களிலும் தனித்தமிழ் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிவது தனித்தமிழ் நல்லதா, நம் மரபா என்று புரிந்துகொள்ள உதவும்.
திசைச்சொல்லும் வடசொல்லும் வளர்த்த தமிழ்:
வடமொழிச் சொற்களைத் தவிர்த்து தனித்தமிழில் எழுத வேண்டும் என்று சொல்கிறார்களே (கிரந்த எழுத்துகளைத் தவிர்க்கிற விஷயத்திற்குப் பின்னர் வருவோம்.), அதுதான் நல்ல தமிழ் என்று சொல்கிறார்களே- நமது மரபு அதுதானா, தொல்காப்பியக் காலத்தில் அப்படித்தான் இருந்ததா என்றெல்லாம் ஆர்வத்துடன் பார்க்கப் போனால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
தொல்காப்பியர் சொற்களை வகைப்படுத்தும்போது அவற்றை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்காகப் பிரிக்கிறார். இயற்சொல்லும் திரிசொல்லும் இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டவை. எனவே, அவற்றைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். பல திசைகளிலிருந்து (பல மொழிகளிலிருந்து) தமிழில் வந்து கலந்த சொற்களைத் திசைச்சொற்கள் எனலாம். தமிழ்நாட்டின் தெற்கிலிருக்கும் இந்துமா கடல் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது என்று நம்பப்படுகிறது. அங்கிருந்த பல நாடுகள் கொடுந்தமிழ் நாடுகள் என்று அழைக்கப்பட்டன. எனவே, திசைச்சொல் என்பது கொடுந்தமிழ் நாடுகளிலிருந்தும் பண்டைத்தமிழ் நாடு தொடர்பு கொண்டிருந்த பிற நாடுகளிலிருந்தும் தமிழுக்கு வந்து சேர்ந்த சொற்கள் எனலாம்.
உதாரணமாக, பின்வரும் பழம்பாடல் பண்டைத் தமிழ்நாடு தொடர்பு கொண்டிருந்த பதினேழு பிற நாடுகளைப் பற்றிச் சொல்கிறது:
சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம்வங்கம்
கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடும்குசலம்
தங்கும் புகழ்த் தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே.
(1. சிங்கள நாடு, 2. சோனக நாடு, 3. சாவக நாடு, 4. சீன நாடு, 5. துளுவ நாடு, 6. குடகு நாடு, 7. கொங்கண நாடு, 8. கன்னட நாடு, 9. கொல்ல நாடு, 10. தெலுங்கு நாடு, 11. கலிங்க நாடு, 12. வங்க நாடு, 13. கங்க நாடு, 14. மகத நாடு, 15. கடார நாடு, 16. கவுட நாடு, 17. கோசல நாடு)
பிற்காலத்தில் இஸ்லாமியர், ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர், டச்சு நாட்டவர், ஃபிரெஞ்சு நாட்டவர், யூதர்கள் என்று மேலும் பல நாட்டவர்கள் தமிழ்நாட்டுடன் கொண்ட வணிகத் தொடர்புகளாலும், பிறத் தொடர்புகளாலும் இன்னும் பல திசைச்சொற்கள் தமிழில் சேர்ந்தன. தமிழ் அவற்றை வரவேற்று அனுமதித்து தன் மொழியின் ஒரு பகுதியாக உவகையுடன் ஏற்றுக் கொண்டது. திசைச்சொற்கள் தொல்காப்பியத்திற்கு முன்பிருந்தே தமிழில் இருந்தன என்றும் அறிய வருகிறோம். உதாரணமாக, 'அந்தோ' என்ற வார்த்தை சிங்களத்தில் இருந்து வந்தது என்றும், சிக்கு ("சிக்கெனப் பிடித்தேன்" என்கிறது நம் பக்தி இலக்கியம்) என்பது கன்னடத்திலிருந்து வந்தது என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
எனவே, பிறமொழிக் கலப்பின்றி எழுத வேண்டும் என்று சொல்கிற வாதம் திசைச்சொற்களைத் தூக்கிப் போட வேண்டும் என்று சொல்வதற்கு ஒப்பானது. பொதுமக்களிடையே மிகவும் பிரபலமாகி நாள்தோறும் புழக்கத்தில் இருந்து வருவன இத்தகைய திசைச்சொற்கள். சினிமா, கவர்னர், பார்லிமெண்ட் ஆகியன ஆங்கிலத்திலிருந்து வந்த திசைச்சொற்களுக்கு சில உதாரணங்களாகும். அறிவியல், தொழில்நுட்ப, வணிக வார்த்தைகளுக்குக் கலைச்சொல்லாக்கம் செய்வது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் இலக்கண மரபின்படி நம்மிடையே ஊறிப்போன திசைச்சொற்களை தமிழின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்வதுமாகும். அப்படிச் செய்யாமல் திசைச்சொற்களையும் தமிழ்ப்படுத்தி நாம் உருவாக்குகிற தனித்தமிழ், பொதுமக்களிடமிருந்தும் அன்றாட வாழ்விலிருந்தும் அன்னியப்பட்டதாகும். கலைச்சொல்லாக்கம் என்று வரும்போதுகூட பெரிதும் பழக்கப்பட்டுப் போன திசைச்சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் சரியான மரபாகவும், மொழியை வாழவும் வளரவும் வைக்கிற அணுகுமுறையாகவும் இருக்கும். எனவே, பல ஆண்டுகளாகத் தமிழில் ஏற்கனவே புழங்கி பொதுமக்களிடையே பிரபலமான திசைச்சொற்களை தமிழ் என்கிற பெயரில் மாற்ற முயல்வது, தமிழின் இலக்கணமும் மரபும் அறியாதோர் செய்கிற அறிவுபூர்வமற்ற செயல் ஆகும்.
இலங்கைத் தமிழில் பன் என்பது (Bun) பான் என்றும், காப்பி என்பது கோப்பி என்றும், கோர்ட் என்பது கோட் என்றும், ஷர்ட் என்பது சேட் என்றும், டார்ச் என்பது ரோச் என்றும், டவல் என்பது துவாய் என்றும் திரித்து எழுதப்படுகிறது. இவையெல்லாம் திசைச்சொற்களின் திரிபுகளே என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகள் எல்லாம் தமிழ் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
இனி, வடசொல்லுக்கு வருவோம். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழில் வடசொற்கள் (சமஸ்கிருதம் வடமொழி என்றும், சமஸ்கிருதச் சொற்கள் வடசொற்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.) கலந்து புழங்கி வருகின்றன. தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களை இருவகையாகப் பிரிக்கின்றனர். அவை, தற்சமம் மற்றும் தற்பவம் ஆகும்.
தற்சமம் என்பது இரண்டு மொழிகளுக்கும் பொதுவான எழுத்துகளால் ஆன சொற்களைத் தமிழில் வரும்போது அப்படியே ஏற்றுக் கொள்வது. உதாரணமாக, அமலம், கமலம், காரணம், காரியம் என்று சில வார்த்தைகளைத் தமிழாசிரியர் சொல்வர் பாருங்கள், இவையெல்லாம் வடமொழி வார்த்தைகள் என்றே நம்மில் பெரும்பாலோர்க்குத் தெரியாது. இவற்றின் மூலம் சமஸ்கிருதமாக இருக்கலாம்; தமிழாகவும் இருக்கலாம். அதாவது, இத்தகைய வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கலாம். அல்லது, தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்குப் போய் இருக்கலாம். ஒரு சொல்லின் ஆரம்பத்தை (origin) ஆராய்கிற முறைக்கு "வேர்ச்சொல் ஆராய்ச்சி" (Etymology) என்று பெயர். தொல்காப்பியர் கூட சொற்களின் மூலத்தைத் தெளிவாகக் கண்டுபிடித்துவிட முடியாதென்று சொல்கிறார் என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி சொல்கிறது. டாக்டர் கால்டுவெல் போன்ற ஒரு சிலரின் முயற்சிகளைத் தவிர, தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியானது அனுமானத்தின் அடிப்படையிலும், கற்பனையின் அடிப்படையிலுமானவை என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சுருங்கச் சொன்னால் இத்தகைய ஆராய்ச்சிகளால் பெரிதும் பயனொன்றும் இல்லை. பிற மொழிகள் மீது வெறுப்பையும், தன் மொழியின் மீது அறிவுபூர்வமற்ற உணர்வுபூர்வமான பற்றையும் (இது பலநேரங்களில் மொழி வெறியாக மாறக்கூடிய ஆபத்துடையது) வளர்க்கவே இவை உதவும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

"ஹேஷ்யம்" என்கிற வார்த்தைக்குப் பொருள் கேட்ட நண்பர் ஒருவர், hypothesis என்பதை அச்சொல் குறிக்கிறதா என்று கேட்டிருந்தார். அச்சொல் hypothesis-ஐக் குறிக்குமானால், அதற்கு முன்னூகம் என்னும் அழகானச் சொல் இருப்பதாகவும் எழுதியிருந்தார். ஹேஷ்யம் என்கிற சொல்லுக்கு, ஊகம் என்றும் மேலோட்டமான கணிப்பு என்றும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பொருள் சொல்கிறது. ஆனால், பாருங்கள் முன்னூகம் என்ற சொல் பாதித் தமிழ் மட்டுமே என்றும் வாதிட முடியும். ஊஹனா (Uhana) என்கிற சொல் சமஸ்கிருதத்திலும் இதே பொருளில் வழங்கப்படுகிறது. சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி கூட "ஊகனம் (Ukanam) என்பதையே ஊகம்" என்று சொல்லி அதன் மூலம் (origin) தமிழ் இல்லை என்கிறது. எனவே, தனித்தமிழ் இலக்கணப்படிப் பார்க்கப் போனால், முன்னூகம் என்ற சொல் முழுத்தமிழ்ச்சொல் இல்லையென்று ஆகிவிடும். ஆனால், தமிழ் என்று பார்க்கப்போவோமேயானால், ஹேஷ்யம், முன்னூகம் என்ற இரண்டுச் சொற்களையுமே தமிழ் என்று எடுத்துக் கொள்ள முடியும். மேலும் ஊகம், ஹேஷ்யம் என்ற சொற்கள் முன்னூகம் என்ற சொல்லைவிட வெகுஜனப் புழக்கத்தில் அதிகம் இருந்திருப்பதால் எளியோரும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் அவற்றை முன்னூகத்திற்குப் பதில் பயன்படுத்துவது உபயோகமாக இருக்கலாம். இப்படித்தான், நாம் தனித்தமிழ் என்கிற பெயரில் எழுதுகிற பல சொற்களின் மூலம் தமிழாக இல்லாமலிருப்பதை நாம் பார்க்க முடியும். தனித்தமிழ் என்று போர்டு போட்டுக் கொண்டு, பிறமொழிச் சொற்களைத் தவிர்க்க இயலாது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருப்பதை விட, தமிழில் கலந்துவிட்ட திசைச்சொற்களையும் வடசொற்களையும் தமிழாக ஏற்றுக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்துகிற நல்ல தமிழில் எழுதுவது உத்தமம் என்று நான் நம்புகிறேன்
வடமொழிச் சொற்களின் இன்னொரு வகை தற்பவம் என்று அழைக்கப்படுகிறது. தமிழின் ஒலிக்கேற்பத் திரிந்து ஒலிக்கும் சொற்கள் தற்பவம் என்று சொல்வர். உதாரணமாக, ஹரன் பிரசன்னா என்பதைத் தமிழில் அரன் பிரசன்னா என்று எழுதுவது, ஹரி என்பதைத் தமிழில் அரி என்
வடமொழிச் சொற்களின் இன்னொரு வகை தற்பவம் என்று அழைக்கப்படுகிறது. தமிழின் ஒலிக்கேற்பத் திரிந்து ஒலிக்கும் சொற்கள் தற்பவம் என்று சொல்வர். உதாரணமாக, ஹரன் பிரசன்னா என்பதைத் தமிழில் அரன் பிரசன்னா என்று எழுதுவது, ஹரி என்பதைத் தமிழில் அரி என்று எழுதுவது என்று சொல்லலாம். எனவே, இதனுள் ஆழமாகச் செல்லாமல், மேலோட்டமாகக் கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுதுவது என்று பொருள் கொள்ளலாம். அதாவது, இச்சொற்களைத் தமிழ் என்று ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் எழுதும்போது கிரந்த எழுத்துகளை நீக்கியும் எழுதக்கூடிய சொற்கள் எனலாம். கிரந்த எழுத்துகளை நீக்கி எழுதுவதுதான் சரியா? அதைப் பின்வரும் பகுதியில் பார்ப்போம்.
கிரந்த எழுத்துகளும் தமிழ் எழுத்துகளே:
கல்வெட்டுகளின் மூலம் கிடைத்திருக்கும் வரலாற்றுப் பூர்வமானச் சான்றுகளைக் கொண்டு ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் பின்வரும் உண்மைகளை வெளிக்கொணருகின்றனர்:
1. தமிழ் பிராமி எழுத்துகள் அசோகன் காலத்தையொட்டிய பிராமி எழுத்துகள்தான். தமிழ் பிராமி எழுத்துகள் எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டபோது வளைவு சுழிவுகள் பெற்று பரிணாம வளர்ச்சியில் வட்டெழுத்தாக ஆனது.
2. பிராமி எழுத்துகளிலும் தமிழ் முற்காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஔவையார் தமிழ் பிராமி எழுத்துகளில்தான் எழுதியிருப்பார் என்ற முடிவுக்கு வரலாம்.
3. தமிழ் எழுத்துகள் வடநாட்டிலிருந்து வந்த (பிராமி) எழுத்துகளிலிருந்துதான் உருவானவை என்கிற உண்மை சிலத் தமிழறிஞர்களுக்குக் கசப்பாக இருப்பதால், இதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
4. தமிழ் எழுத்துகளிலிருந்து பிராமி எழுத்துகள் உருவானதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால், பிராமி எழுத்திலிருந்து தமிழ் வட்டெழுத்து உருவானதற்குச் சான்றுகள் இருக்கின்றன.
5. இப்போது இருக்கும் தமிழ் எழுத்துகள் கிரந்தத்தோடு தொடர்புடையன. கிரந்த எழுத்துகள் ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்பட்டவை. தென்பிராமியிலிருந்து கிரந்தம் மூலமாக வட்டெழுத்துகள் வந்தன. பிறகு வட்டெழுத்து தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப் பட்டது. ஆனால், பத்தாம் நூற்றாண்டிற்குப் பின் வட்டெழுத்து அழிந்து, கிரந்த எழுத்து பல்லவர் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரைக்கும் இருந்துள்ளது.
மேற்கண்ட வரலாற்று உண்மைகளை ஆராயவும் பொருள் காணவும் நாமும் கல்வெட்டியலாளராகவோ அறிஞராகவோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மேற்கண்டவற்றிலிருந்து, குன்சாக, தமிழ் எழுத்துகள் பிராமி எழுத்துகளிலிருந்து (வடமொழி எழுத்து) உருவானவை என்றும் கிரந்தத்துடன் ஏறக்குறைய ஆறாம் நூற்றாண்டு காலம் முதல் தொடர்புடையவை என்றும் சாதாரண I.Q. உள்ள எவரும் கூடப் புரிந்து கொள்ள முடியும். எனவே, கிரந்த எழுத்தைத் தமிழ் இல்லையென்று ஒதுக்கினால், மற்றெல்லா தமிழ் எழுத்துகளையும் கூட தென்பிராமி மற்றும் கிரந்தம் ஆகியவற்றின் வழியே வந்தவை என்று சொல்லித் தூக்கி எறிந்துவிட முடியும். ஆனால், தனித்தமிழ்ப் பிரியர்கள் அதைச் செய்யாமல், கிரந்த எழுத்துகளை மட்டும் வடமொழி என்று சொல்லி நீக்கிச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிரந்த எழுத்துகளை ஒதுக்கி எழுதுவதுதான் சரியான தமிழ் என்பதற்கு வரலாற்றுபூர்வமாக உண்மையும் இல்லை என்று இதன்மூலம் விளங்குகிறது. எனவே, எதற்காக கிரந்த எழுத்துகளை ஒதுக்க வேண்டும்.
தொல்காப்பியத்திற்குப் பிறகு பல இலக்கண நூல்கள் தமிழில் வந்திருக்கின்றன. அவற்றுள் திவாகரம் (9ஆம் நூற்றாண்டு), பிங்கலம் (10ஆம் நூற்றாண்டு), நன்னூல் (13ஆம் நூற்றாண்டு), உரிச்சொல் நிகண்டு (14ஆம் நூற்றாண்டு), சூடாமணி நிகண்டு (16ஆம் நூற்றாண்டு) ஆகியன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் பவணந்தி முனிவர் (பவணநந்தி என்ற பெயர் திரிந்து பவணந்தி ஆகியது என்பர்) என்னும் சமணத்துறவியால் பதிமூன்றாம் நூற்றாண்டின் முன்பகுதியில் எழுதப்பட்டதாக கணிக்கப்படும் நன்னூல் மிகவும் புகழ் பெற்றது. "முன்னோர் ஒழியப் பின்னோர் பலரினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ" என்கிற புகழ் பெற்றது நன்னூல். அதாவது, நன்னூல் எழுதப்படுவதற்கு முன்னிருந்த இலக்கண நூல்கள் நன்னூல் வந்தவுடன் முக்கியத்துவம் இழந்துவிட்டன என்னும் அளவிற்கும், நன்னூல் எழுதப்பட்டதற்குப் பின் வந்த இலக்கண நூல்கள் எதுவும் நன்னூலுக்கு இணையாக மாட்டா என்றும் சொல்லும் அளவிற்கும் நன்னூல் சிறப்பு மிக்கது என்று போற்றப்படுகிறது. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஔ என்பன வடமொழிக்கும் தமிழிக்கும் பொது உயிர் எழுத்துகள். வடமொழியில் மெய்யெழுத்து முப்பத்தேழு. அவற்றுள் க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள என்ற பதினைந்து மெய்கள் வடமொழிக்கும் தமிழுக்கும் பொது எழுத்துகள் என்று நன்னூல் சொல்கிறது. கிரந்த எழுத்துகளை வடமொழி என்று நாம் ஒதுக்குவது சரியென்றால், இருமொழிகளுக்கும் பொதுவான இந்த எழுத்துகளையும் வடமொழி என்று ஒதுக்கிப் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் சரியான "தனித்தமிழாக" இருக்க முடியும்.
அதுமட்டுமில்லை, சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி உட்படத் தமிழின் அகராதிகள் கிரந்த எழுத்துகள் கலந்த வார்த்தைகளைத் தமிழ் வார்த்தைகளாகவே கருதி, அவற்றைக் கிரந்த எழுத்துகளைக் கொண்டே பாவித்து, பொருள் தந்திருக்கின்றன. எனவே, கிரந்த எழுத்துகள் தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்தன என்று நாம் அறிய முடிகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தொகுப்புரை:
"தனித்தமிழ் என்பது தமிழ் இலக்கண நூல்கள் சொல்லுவது; அதுதான் சரியான தமிழ்" என்கிற மாயை நம்மில் பெரும்பாலோரிடையே நிலவுகிறது. எனவே, இக்கட்டுரையில் தமிழ்மொழியின் வரலாற்றுப் படியும், மரபுப் படியும், இலக்கணப்படியும், தனித்தமிழ் தமிழ் அல்ல என்று சான்றுகளுடன் நிறுவ முயன்றிருக்கிறேன். எனவே, இப்போது நமக்கு நல்ல தமிழ் என்பது திசைச்சொற்களும் வடசொற்களும் கலந்து வரக்கூடியதுதான் என்று புரிகிறது. தனித்தமிழ் என்பது வரலாற்று ரீதியாகவும், இலக்கண ரீதியாகவும் எங்கும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் புரிகிறது. சமஸ்கிருதம்- தமிழில் சொற்றொகுதியை (vocabulary) அதிகப்படுத்த உதவியது என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி சொல்வது போலவே, பிற மொழி திசைச்சொற்களும் சொற்றொகுதியை அதிகப்படுத்த உதவும் என்று நாம் புரிந்து கொண்டால், இத்தகைய வசதிகள் (more than one way to describe a word) மொழிக்கு எவ்வளவு செழுமை சேர்க்கும் என்பதைச் சுலபமாக உணர இயலும். அதுமட்டுமல்ல, சங்ககாலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கம் தோன்றுகிற வரை, தமிழர்கள் எல்லா மொழிகளிலும் உள்ள, வாழ்க்கைக்கு உதவுகிற வார்த்தைகளை வரவேற்கிற ஏற்றுக் கொள்கிற பெருந்தன்மையாளர்களாக இருந்து வந்திருப்பதைப் பார்க்கிறோம். தமிழ் இவ்வளவு காலம் உயிரோடு இருப்பதற்கும், தழைப்பதற்கும் தமிழ் பிறமொழி வார்த்தைகளை இப்படி ஏற்று அரவணைத்துக் கொள்வது ஒரு பெரிய காரணம் எனலாம்.
மேற்கண்டவாறு- இலக்கண ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும்தான் தனித்தமிழ் எவ்வளவு போலியானது என்று பார்த்தோம். நவீன வாழ்வில் வாழுகின்ற நாம், நடைமுறை வாழ்வில் பயன்படுத்துகிற பிற மதிப்பீடுகளின் சார்பில் தனித்தமிழை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று சுருக்கமாகப் பார்ப்போம். இதுபற்றி நெத்தியடியாக ஏற்கனவே பலர் எழுதியுள்ளனர். நாம் இரண்டு ஜாதிகளின் கலப்பு மணத்தை ஆதரிக்கிறோம். இரண்டு பொருளாதாரங்களின் கலப்பை (முதலாளித்துவம் + பொதுவுடைமை = சோஷலிஸம்) ஆதரிக்கிறோம். இரண்டு விதைகளைச் சேர்த்து அமோக விளைச்சலுக்கு வீரியமிக்க கலப்பு விதைகளைக் கண்டுபிடிக்கிறோம். கலப்பு உரங்கள் நமக்கு மகசூலில் சாதனை செய்ய உதவுகின்றன. பல கலாசாரங்கள் பயில்வோரிடமும், பல மொழிகள் பேசுவோரிடையேயும் புழங்குகிறோம். இப்படி நவீனத்துடன் தொடர்பு கொண்டு, தன்னை மாற்றிக் கொள்ளாத எதையும் பத்தாம் பசலி என்றும், வாழ்க்கைக்குதவாத பழமையானது என்றும் கூறுகிறோம். ஆனால் தமிழுடன் மட்டும் பிறமொழிச் சொற்கள் கலக்கக்கூடாது என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். தனித்தமிழ் பேசிக் கொண்டிருந்தால், தமிழையும் விரைவில் வாழ்க்கைக்குதவாதது என்று தூக்கி எறிந்துவிட வேண்டி வரலாம்.
இலக்கியத்திற்குத் தனித்தமிழ் உதவுமா? ஜெயகாந்தன் இதை ஏற்கனவே தன்னுடைய "தமிழும் தனித்தமிழும்" கட்டுரையில் "தனித்தமிழ்தான் தமிழ் எனில் இலக்கியம் படைக்க லாயக்கற்ற மொழி தமிழ் என்றாகும்" என்று சொல்லி விளக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன் இங்கே NPR-வில் (National Public Radio) ஓர் எழுத்தாளரின் நேர்காணல் கேட்கிற வாய்ப்புக் கிடைத்தது. அந்த எழுத்தாளர் "Spanglish" (Spanish + English) என்கிற மொழியில் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். இப்படி நவீன வாழ்வில் மொழியானது கருத்துப் பரிமாற்றத்திற்கான ஓர் ஊடகம் என்கிற அளவிலேயே மதிக்கப்படுகிறது. இனத்தூய்மை பேசுபவர்களை இனவெறியர்கள் (racist) என்று அழைக்கிற மானுட மதீப்பீடுகளை நாம் பின்பற்றுகிறோம். மொழித்தூய்மையைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னால், வரலாறு நம்மை மொழிவெறியர்கள் என்று பின்னாளில் அழைக்கக் கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல தமிழ் (திசைச்சொற்களும் வடமொழிச் சொற்களும் கலந்த தமிழ்) பேச, எழுத சொல்வதுதான் நடைமுறைக்கு உகந்ததாக இருக்க முடியுமே தவிர தனித்தமிழ் பயில வேண்டும் என்று சொல்வது எதற்கும் உதவாது.
எனவே, அறிவுபூர்வமாக சிந்திப்போர், எதன் அடிப்படையிலும் தனித்தமிழ் பேசுவோர் முன்வைக்கிற கூற்றுகளை ஏற்றுக் கொள்ளவும் பின்பற்றவும் நிறைய யோசிக்க வேண்டும்.
இக்கட்டுரையை எழுதப் பயன்பட்ட நூல்கள்:
1. ஐராவதம் மகாதேவன் நேர்காணல் - செப்டம்பர் 2003 குமுதம் தீராநதி இதழ்
2. Tamil Lexicon Volumes - University of Madras Publication
3. பிழையின்றி நல்ல தமிழ் எழுதுவது எப்படி - ஜெ.ஸ்ரீசந்திரன் - வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 17
4. நன்னூல் காண்டிகையுரை - அ.மாணிக்கம் - பூம்புகார் பதிப்பகம், சென்னை - 18.
5. தமிழும் தனித்தமிழும் - ஜெயகாந்தன் ---> (In TAB encoding) http://www.tamil.net/people/pksivakumar/tamil.htm
6. தமிழ்ப்படுத்துதலும் தமிழ் மனமும் - நாகூர் ரூமி --> http://www.tamiloviam.com/html/Exclusive50.asp
7. பொருந்தாக் காமம் - பி.கே.சிவகுமார் --> http://www.thinnai.com/pl07030310.html
8. தமிழ் இலக்கிய வரலாறு - டாக்டர் மு.வ. - சாகித்திய அக்காதெமி வெளியீடு
9. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - க்ரியா வெளியீடு
10. மண்டல புருடர் வழங்கிய சூடாமணி நிகண்டு (பதினொன்றாம் தொகுதி) - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

யார் தமிழ் எதிரி? எவர் தமிழ் உணர்வற்றவர்?

 

கலாம் சமஸ்கிருதம் பற்றிய பதிவில் தனித்தமிழ் நடை குறித்து நான் சொன்ன ஒரு கருத்தை வைத்துப் பலரும் கும்மியடிக்கக் காண்கிறேன். என் தமிழ் உணர்வும், தமிழ்ப்பற்றும் பற்றி எனது பதிவுகளையும், இதற்கு முன் திண்ணையில் எழுதிவந்தவற்றையும் படித்தவர்கள் நன்கு அறிவார்கள்.

முதலில் நான் தமிழில் நல்ல கலைச்சொற்களை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு எதிரானவனில்லை, ஆரவாரமில்லாமல் இத்தகைய சொற்களைப் பயன்படுத்தி வழிகாட்டி வருபவன். (உதாரணமாக, பத்ரியின் சம்ஸ்கிருதம் பற்றிய பதிவில் cryoptology என்பதற்கு நான் முதலில் பயன்படுத்தியிருந்த "குறியீட்டு இயல்" என்ற சொல்லே வந்தது கண்டு மகிழ்ந்தேன்). ஆனால் அதே நேரம் தமிழ்ப்படுத்துகிறேன் என்று பல பெயர்ச்சொற்களை தமிழில் படுத்தும் போக்கை ஏற்காதவன். ஸ்டாலின் என்ற பெயரை இசுடாலின் என்று இங்கே ஒருவர் எழுதுகிறார். இதே போக்கில் ஸ்விட்ஸர்லாண்ட் என்பதற்கு இசுவிச்சர்லந்து என்பதையும் ஸ்பெய்ன் என்பதற்கு இசுபெயின் என்பதையும் என்னால் (கொஞ்சமாவது பொதுப் புத்தியும், அழகியல் பற்றிய பிரக்ஞையும் உள்ள யாராலும்) ஏற்க முடியாது. நான் சொல்ல வந்தது இதைத்தான். தமிழைக் குறித்தோ அதன் தொன்மை குறித்தோ எந்த விமர்சனத்தையும் நான் வைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட 'புனிதப் பசு" பதிவர் ஒருவரது புரியாத நடையைக் கொடுந்தமிழ் நடை என்று சொன்னது மாத்திரம் தான் நான் செய்தது.

இதே அடிப்படையில் தமிழில் இயல்பாகப் புழங்கும் சம்ஸ்கிருதச் சொற்களை வேண்டுமென்றே நீக்கி, அபத்தமான “தனி”த் தமிழ் என்பதாக எழுதுவதையும் எதிர்க்கிறேன். திரு. பத்ரி அவர்களும் இதில் என்னுடன் உடன்படுகிறார்.

இன்றைய காலகட்டத்தில், இந்த வக்கிரமான தனித் தமிழ் கருத்தை தூக்கிப் பிடிக்கும் எண்ணத்தின் பின்னால் ஒளிந்திருப்பவை இந்தத் தவறான புரிதல்கள் தான் -


  • சம்ஸ்கிருதமும், தமிழும் ஒன்றுக்கொன்று எதிரிகள். அவற்றுக்கு இடையே வரலாற்று ரீதியான மோதல் உள்ளது.
  • வட இந்தியர்கள் மற்றும் சம்ஸ்கிருதத்தை எதிர்க்காத அல்லது உயர்வாக மதிக்கும் எல்லா சாதிகளையும் சேர்ந்த எல்லா இந்தியர்களும் பார்ப்பனர்கள். தமிழ் எதிரிகள், துரோகிகள், தமிழர்களை அடிமைப் படுத்தத் துடிப்பவர்கள். (இதன் ஆணிவேர் ஆரிய திராவிட இனவாதத்தில் உள்ளது).
  • சம்ஸ்கிருதம் பிராமணர்களின் மொழி. அதில் நல்லது என்று எதுவுமே இல்லை. அது தீயது. அது அரக்கன். அது பாம்பு.

இவை அனைத்தும் எவ்வளவு பெரிய அண்டப் புளுகுகள், இந்திய தேசிய சிந்தனைக்கு எதிரானவைகள், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கே எதிரானவைகள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மொழிப் பாதுகாப்பின்மை பற்றிய ஒரு கேவலமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி அதில் கொஞ்ச காலம் வெற்றிகரமாகக் குளிர் காய்ந்த அரசியல் கொள்கைகளின் எச்சங்கள் தான் இவை. இவற்றின் காலம் மலையேறிவிட்டது என்று எல்லாத் தமிழர்களும், குறிப்பாக ஒருங்கிணைந்த, வலுவான இந்திய தேசியத்தின் ஊக்கத்தால் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உயர்ந்த நிலை அடைந்திருக்கும் தமிழர்கள் உணர வேண்டும். உரத்துச் சொல்ல வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கியத்தின் பாரம்பரியத்திற்கே எதிரானது இந்த “தனித் தமிழ்” ஜல்லி. தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலம்பு, திருக்குறள், கம்பராமாயண காலத்திலிருந்து இந்த நூற்றாண்டு வரை ஒரு உயிர்த் துடிப்புள்ள மொழி செய்துவரும் அற்புதமான பரிசோதனைகளின் பரிமாணங்கள் தான் சம்ஸ்கிருத மற்றும் பிற மொழிச் சொற்களின் இயல்பான கலப்புகள். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாதவர்கள் குருட்டுத் தனமான மொழித் தீவிரவாதிகளே அன்றி மொழியை வளர்ப்பவர்கள் அல்லர்.

என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி வந்துள்ள பின்னூட்டங்களைப் புறக்கணித்து சில எதிர்க்கருத்துக்களுக்கு மட்டும் இங்கே பதில் சொல்கிறேன். இந்த அரிய தகவல்களில் சிலவற்றை எனக்கு அருளி உதவிய சான்றோர் ஒருவருக்கு நன்றியுடன் கடமைப் பட்டுள்ளேன்.

சம்பந்தர்:

தமிழன் என்பவர் எழுதுகிறார்:

"திருஞானசம்பந்தப் பெருமானே தமிழில் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான். தன்னைப் பல இடங்களில் தமிழ்ஞானசம்பந்தன் என்றே அழைத்துக் கொள்கின்றார்.தனக்கு பூணூல் அணிவித்தபோது கூட காயத்திரி மந்திரம் வேண்டாம் என்று தமிழிலே சைவ வாழ்த்து பாடச்சொல்கிறார்."



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இது எப்படி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய், திரிபுவேலை என்று பார்ப்போம். திருஞானசம்பந்தருக்குப் பூணூல் அணிவித்த சடங்கு முடிந்ததும் அங்கே வந்திருந்த வேத பண்டிதர்களுக்குப் பாடியதாகச் சொல்லப்படும் பஞ்சாக்கரப் பதிகத்தில் வரும் இந்தப்பாடல்:

மந்திரம் நான்மறை யாகி வானவர்

சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன

செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்கு

அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே

'நமசிவய' என்ற திருவைந்தெழுத்தே மந்திரங்கள் அனைத்திற்கும் மூலம் என்றும், தீ வளர்த்து ஓம்பியிருக்கும் வேதியர் முப்போதும் ஓதும் சந்தியாவந்தன மந்திரத்திலும் மூலமாயிருப்பது அதுவே என்கிறார். ஏனெனில் ஐந்துமுகம் கொண்ட வேதமாதாவான காயத்ரி தேவியே சதாசிவபத்னியான மனோன்மணி. காயத்ரி அஷ்டோத்திரத்திலே மனோன்மண்யை நம: என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரி தியான மந்திரத்தில் வரும் 'முக்தா, வித்ரும, ஹேம, நீல, தவளம்' என்ற இந்த ஐந்து வண்ணங்கள் பஞ்சபூதங்களையும் சதாசிவத்தையும் சுட்டுகின்றன. மாணிக்கவாசகர் சிவபுராணத்திலே 'நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்றதும் அதனால்தான். இதிலே காயத்ரி மந்திரம் வேண்டாம் என்று எங்கே சொல்கிறார்?


sambandhar_palani.jpg


மேலும் 'திருஞானசம்பந்தர் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான்' என்றொரு அடாத பொய்யைச் சொல்லி இருக்கிறார்.
இதையெல்லாம் மிசினரிமார்தான் இட்டுக்கட்டிச் சொல்வார்கள்.

பதிகத்துக்குப் பதிகம் இறைவனை வேத உருவாகக் கண்டவர் 'வேதநெறி தழைத்தோங்க' (சேக்கிழார் வாக்கு) வந்த திருஞானசம்பந்தர். வேதம் என்பதை “மெய்யறிவு” என்பதாக மட்டுமல்ல ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் என்ற பொருளிலேயே ஏராளமான பாடல்களில் பாடியுள்ளார் –

“வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக.. “
“வேதமொடு ஆறங்கம் ஆயினானை.. “
“சாகை ஆயிரம் உடையார்.. “ (ஆயிரம் கிளைகள் உள்ள “ஸஹஸ்ர சம்ஹிதா” என்று ரிக்வேதத்தை குறிப்பிடுவார்கள்)

திருமூலர்:

சம்ஸ்கிருத ஐம்பது எழுத்துக்கள் அடிப்படையில் ஒலிக்குறிப்புகளாகும். இவை பலவித சேர்க்கையில் (combination) அண்டசராசரங்களின் தோற்றத்திற்கும் அடிப்படையாகும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் ஐந்தெழுத்தின் சூட்சுமத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்று பாடுகிறார் திருமூலர்.

ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது எழுத்தும் ஐந்தெழுத் தாமே



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வள்ளலார்:

வள்ளலாரது திருவடிப் புகழ்ச்சியின் பாடல்களில் பல முழு சம்ஸ்கிருதத்தில் உள்ளன என்று சொல்லியும் சில மூடர்கள் அவர் சம்ஸ்கிருத வெறுப்பாளர் என்று இன்னும் வாதிடுகின்றனர். அந்த நூலின் முதற்பாடல் இதோ –

பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்

பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்

பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்

பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம்

பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்

பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்

படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்

பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்

பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம் பரம்பர மனந்தமசலம்

பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம் பரபதம் பரமசூக்ஷ்மம்

இதில் மெய் என்பது தவிர அத்தனையும் செஞ்சம்ஸ்கிருதச் சொற்கள். அற்புதமான ஞான, யோக தத்துவங்கள் அடங்கிய இந்த நூலை இங்கே படிக்கலாம்.


vallalar.jpg



சன்மார்க்கம், சமரசம், அத்துவிதம் போன்ற வடசொற்களைத் தவிர்த்து தனித்தமிழில் அமைக்குமாறு சிலர் சொல்ல 'நிறைமொழி மாந்தர் ஆணையிற்' பிறந்த எல்லாம் மறைமொழிகள்தாம். அதில் மொழி பேதமில்லை, மாற்ற முடியாது என்று வள்ளலார் சொன்னார் என்று படித்திருக்கிறேன்.

இப்போது வள்ளலாரே சமஸ்கிருதச் சொற்களின் கலப்பைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

சன்மார்க்கம் என்ற அடிப்படைக் கலைச்சொல் ஒன்று. அதனோடு இணைக்கும் சமரசம், சுத்தம் என்பனவாகிய சொற்கள். இத்தகைய சொற்களை வள்ளலார் உண்டாக்கவில்லை. இவைகளையெல்லாம் வடமொழி எனத் தள்ளிவிட்டு, பழகுதமிழில் இக்கொள்கையை அமைத்திருக்கலாமே என்பது சிலரின் ஆசை.

மெய்ப்பொருளியற் கலைச்சொற்கள் மக்களாலோ, ஒரு இனத்தாராலோ உண்டாக்கப் பெற்றவை அல்ல. பரநாதத் தலத்தே விளங்கும் பரநாதம், பரவிந்து என்ற இரண்டும் இணைய அவ்விணைப்பின் மூலம் (அனந்த தாத்பர்யங்களை உள்ளடக்கி) பல்வேறு பொருள் நிலைகளை உள்ளடக்கி எழுந்த சொற்களே அவை ஆதலின் அவைகளை மாற்றுதல் இயலாது என்று குறிப்பிடுகிறார். அவைகள் வடமொழிச் சொற்கள் அல்ல, வடலுறு சொற்கள் என்பது வள்ளலார் வழக்கு.

ஆதாரம்: சிதம்பரம் இராமலிங்கரின் சித்திவளாகம் - பக்கம் 26/27.

இந்தப்புத்தகம் வள்ளலாரின் வலைத்தளத்திலேயே இருக்கிறது.

வடலுறு சொற்கள்: வடக்குத் திசையிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டவை அல்ல; ஆலவிதை போன்ற பீஜமான சொற்கள். 
வடம் என்றால் ஆலமரம். 

தொழுவூர் வேலாயுத முதலியார்:

சமஸ்கிருதம் ஏதோ பிராமணர்களின் தனிச்சொத்து தனிமொழி என்றொரு பிம்பத்தை உருவாக்கி அதை அழித்துக் கொண்டிருப்பது சமீபத்தில்தான். 19' ம் நூற்றாண்டு வரை சமஸ்கிருதத்தை அனைத்து சாதியினரும் கற்றுத் தேர்ந்திருந்தனர். இதற்குச் சான்றாக சமீபத்தில் என் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த ஓர் அரிய புத்தகத்தைக் கீழே பாருங்கள்:



Sankar3.jpg



சங்கரவிஜயம் என்ற இந்தப் புத்தகத்தை 1879'ம் ஆண்டில் சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்திருப்பவர் தொழுவூர் வேலாயுத முதலியார். வெளியிட்டவர் தண்டலம் ஆறுமுக முதலியார். இந்த தொழுவூர் வேலாயுத முதலியார் சமரச சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர். வள்ளலாருக்கு மிக அணுக்கமானவர். சிதம்பரம் ராமலிங்கம் என்றே தம்மை அழைத்துக் கொண்டவரை வள்ளலார் என்று பெயரிட்டு அழைத்தவரும் இவர்தான்.

வெங்கட் சாமிநாதன் முன்பு சிஃபி.காமில் ஒரு கட்டுரையில் வருந்தியிருந்தார் – “தமிழ் இங்கு வளர்க்கப் படவில்லை, வெறுமனே தமிழ் கோஷப் படுத்தப் பட்டுள்ளது என்று”. ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் இந்த எதிர்வினைகள் அதை உண்மையென்று நிரூபிக்கின்றன.

தமிழ் கோஷப் படுத்தப் பட்டது மட்டுமல்ல, வேஷப் படுத்தவும் பட்டுள்ளது. அதனால் நாசப் படுத்தப் படுகிறது. அதைச் செய்பவர்கள் தான் தமிழ் எதிரிகள். தமிழ் உணர்வு இல்லாதவர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 


// "தனித்தமிழில் ஞானசம்பந்தர் பாடிய இந்த தேவாரமும், தமிழ் நாயன்மார்களும் ஆழ்வார்களும் அவர்கள் காதலால் கசிந்துருகிப் பாடிய தனித்தமிழ்ப் பாடல்களெல்லாம் ஜடாயுவின் காதுகளுக்குக் கொடுந்தமிழாக ஒலிக்கிறதா?" //

நான் ஸ்டாலினை இசுடாலின் என்றால், ஸ்விட்ஸர்லாண்டை இசுவிச்சர்லாந்து என்றால் கொடுந்தமிழாக ஒலிக்கிறது என்றேன். 
தேவாரத்தைப் பாடினால் கொடுந்தமிழாக இருக்கிறது என்று எங்காவது சொல்லி இருக்கிறேனா? இதற்குப் பெயர்தான் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பதா? 

அப்படியானால் "சாகை ஆயிரம் உடையார்" என்றெல்லாம் வரும் தேவாரப் பாடல்கள் எல்லாம் தனித் தமிழ் இல்லை என்று சொல்லி அதைப் பாடக் கூடாது என்று ஃபத்வா விடுவீரா? மிசநரி நீர், செய்தாலும் செய்வீர்! 

// "இந்த தேவாரத்தில் கூறப்படும் நான்மறை என்பது நான்கு ஆரிய வேதங்களையும் குறிக்கவில்லை, நாயன்மார்கள் காலத்தில் நான்மறை என்பது ஆரிய வேதங்களைக் குறிப்பிடவில்லை" //

இதென்ன புது உளறல்? வேதத்தில் ஆரிய வேதம் ஆராத வேதம் என்றெல்லாம் கிடையாது. மேலும் நான்மறை நால்வேதம் என்று பாடும் போது ஆறங்கம் (நால்வேதம் ஆறங்கம் ஆனாய் நீயே, வேதமோடு ஆறங்கம் ஆயினானை) என்று சேர்த்துப் பாடுகிறார்களே அதுவும் தமிழ் அங்கமா? 

ஷடாங்கம் என்றால் ஆயுர்வேதம், தனுர்வேதம் முதலிய வேதத்தின் உப அங்கங்கள். 

சம்பந்தர் இருக்குவேதியர். அதனால்தான் அவருக்கு இருக்குப்பிள்ளையார் என்று கூடப் பெயர் வந்தது. அவரை 'இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட வந்த வைதிக மாமணி' என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். தமிழ் வைதிகம் என்று புதிதாக ஏதாவது இருக்கிறதா? 

மதுரை மாநகரிலே சமணர்களுடன் வாது செய்வதற்கு முன் சோமசுந்தரப் பெருமானிடம் திருவுளம் வேண்டிப் பாடுகிறாரே, 'வேதவேள்வியை நிந்தனை செய்துழல்' என்று தொடங்கும் அந்தப் பதிகத்தைப் பொருளுடன் (உண்மையான தமிழறிஞர்கள் எழுதியது) இங்கே படியுங்கள்: 
http://www.thevaaram.org/03/3108.htm

தேவாரத்திலே வேதக்குறிப்புகளைப் பற்றி மேலும் இங்கே விரிவாகப் படிக்கலாம்:
http://tamilartsacademy.com/books/siva%20bhakti/chapter05.html

அப்புறம் தேவாரம் குறிப்பிடும் வேதத்திற்கு விளக்கம் சொல்ல வாருங்கள்.

// "எதற்காக 'ஸ்ரீ' சுப்பிரமணி சாஸ்திரியார் தொழுவூர் வேலாயுத முதலியாரைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யச் சொன்னார், சங்கராச்சாரியாரின் பக்தராகிய ஸ்ரீ சுப்பிரமணி சாஸ்திரியார், அவரே நீச பாசையான தமிழில் மொழிபெயர்த்தால் அவருக்குத் தீட்டுப் பட்டு விடுமென்று சங்கராச்சாரியார் சொல்லியிருப்பாரோ என்னவோ, அது ஜடாயுவுக்குத் தான் வெளிச்சம். :))" //

இதென்ன கிண்டலா? தமிழ் படிக்கத் தெரியும் அல்லவா? அந்தப் புத்தகத்தின் அட்டையிலேயே தெளிவாக இருக்கிறதே, சுப்பிரமணிய சாஸ்திரியார் பெங்களூரைச் சேர்ந்த கன்னடப் பண்டிதர் என்று. 

அவரிடமிருந்து மூலத்தை வாங்கி தொழுவூரார் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 

தீட்டுபடுவதெல்லாம் உங்களைப் போன்றவர் கண்டுபிடிப்பு.


// "ஞானசம்பந்தர் உயிருடன் இருந்தபோது அவர் கூடவே யாழ் வாசித்து வந்தவர் ஒரு தாழ்த்தப்பட்ட ஆனால் அவருக்கு மிக் நெருங்கிய நண்பராக நடத்தப்பட்டவர் என்பதற்காக பூணூல் கூட்டம் அவரை எப்படி நடத்தினார்கள் என்பது வேறுகதை"// 

அரவிந்தன் சொல்வதுபோல் உங்கள் பின்னூட்டங்கள் பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல எனக்கு ஒருவகையில் உதவியாக இருக்கின்றன தமிழன் அவர்களே!

அதுவும் சிவராத்திரி புனித நன்னாளில் பெரிய புராணம் மூலத்தின் சில பகுதிகளைப் பயில அமரும் முன் இந்த விதண்டாவாதக் கேள்வியைப் பார்த்தேன்.. இந்தப் புராணத்தை அன்று நான் படித்து எடுத்துரைக்க வேண்டும் என்பதும் சிவனருள் போலும்! 

இந்தக் கதையையும் பார்ப்போம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும், சம்பந்தருடன் யாழ் வாசித்து வந்தவரின் பெயர் திருநீலகண்ட பெரும்பாணர். இவரும் ஒரு நாயன்மார்தான். 

பாணரைப் போன்ற இசைவாணர்கள் சங்ககாலத்திலே தாழ்த்தப்பட்ட சாதியில்லை. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை போன்ற பாணர்களை ஆற்றுப்படுத்தப் பாடிய நூல்களிலிருந்து இதை அறியலாம். இடைக்காலத்திலே சமணரும் பௌத்தரும் கோலோச்சிய மூன்று நூற்றாண்டுகளிலே சில சாதியினர் 'தாழ்த்தப்பட்டவர்' ஆனார்கள். அவர்களில் இசையே வாழ்க்கையாய் வாழ்ந்த பாணர்களும் ஆவர். 

இன்னிசையால் தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தர் இவர்களைத்தான் முதலில் அந்நிலையிலிருந்து மீட்டார். அவரைப் 'பூணூல் கூட்டம்' எப்படி நடத்தியது என்று திருநீலநக்க நாயனார் புராணத்திலே பாருங்கள். திண்ணையிலே பா.சத்தியமோகன் பெரியபுராணத்தை எளிதாய்ப் புரியும் வகையில் எழுதி வருகிறார். 

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30512092&format=print&edition_id=20051209 

1854.
ஒழுக்கமுடைய மெய்த்திருத் தொண்டர்களுடன்
திரு அமுது செய்த பின்பு
உலகம் ஓங்கும் பொருட்டு
பெரிய நாயகி அம்மையாருடன்
தோணியப்பர் வெளிப்பட்டு அருளுமாறு
முன்பு அழுதவரான திருஞானசம்பந்தர் அழைக்க
திருநீலநக்கர் விரைவில் வந்து அடிவணங்கி நின்றார். 

1855.
அங்கு வந்து நின்ற அன்பரை
"நீலகண்ட யாழ்ப்பாணருக்கு இன்று 
இங்கு தங்குவதற்குரிய ஓரிடம் கொடுத்தருள்வீர்''
என திருஞானசம்பந்தர் கூறினார் 
பெரிதும் இன்புற்று 
நடுமனையில் 
வேதிகையின் பக்கத்தில்
மறையவரான திருநீலநக்கர் இடம் அமைத்துத் தந்தார்.
(வேதிகை - வேதம்
வளர்க்குமிடம்)

1856.
அங்கு அந்த வேதிகையில் 
என்றும் நீங்காமல்
வளர்க்கப்பட்ட செந்தீ 
வலமாகச் சுழித்து எழுந்து ஓங்கி
முன்னைவிட 
ஒருவிதமாய் அன்றிப்
பலவகையாய் விளக்கம் அடையவே
சகோட யாழ்த் தலைவரான திருநீலகண்டர்
தம் பக்கத்தில் அமரும் மதங்க சூளாமணியாருடன்
திருவருள் மயமாய் பள்ளி கொண்டார்.

சம்பந்தருடன் யாழிசைத்தபடி கூடச்சென்ற பெரும்பாணரையும் அவர் மனைவி மதங்கசூளாமணியாரையும் திருநீலநக்கர் என்ற அந்தணர் வரவேற்று, அமுது படைத்துப் பின், தன் இல்லத்திலே நடுமனையில், அதுவும் யாகசாலையிலே தங்கச்செய்கிறார்.

இதற்குப் பெயர்தான் தீண்டாமையா?

 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஆரூரன், 

பொய்களைத் திரும்பத் திரும்பப் பதிவாகப் போடும், பொய்ச்சைவ வேடம் போட்டு சைவத்தின் ஆணிவேரையே வெட்டப் பார்க்கும் உம்மிடம் என்ன பேசுவது? 

"பொய்யொடு மிடைந்தவை தோன்றின், மெய் யாண்டு உளதோ" என்ற அகநானூறு வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன!! 

ஒரு பழைய பதிவில் இதே பொய்யை நீர் சொல்ல அதற்கு வந்த பின்னூட்டத்திற்கு இன்று வரை பதில் சொல்லவில்லை நீர்! அதே பொய்யை மறுபடி இங்கு ஏற்றுகிறீரே? இது அடுக்குமா? 

----------

//திருஞான் சம்பந்தரின் தமிழ்ப்பற்றால் அவரை பதினாறு வய்தில் பார்ப்பனர்களால் உயிரோடெரிக்கப்பட்டார். //

அட அப்டிப் போடுங்க! பூனைக்குட்டி கடைசில வெளிய வந்துவிட்டது. ஞானசம்பந்தர் எரிக்கப்பட்டார் என்று எந்தச் சைவனும் கற்பனை கூட செய்ய மாட்டான். அப்படி அபாண்டமாய்ச் சொல்வது, பாம்பு கடித்து எப்போதோ மாண்ட ஒரு பெண்ணை, சாம்பலை வைத்து உயிருடன் எழுப்பிய அந்த தெய்வக்குழந்தையின் பெருமைக்கே இழுக்கு. அப்படி எங்குமே சொல்லப்படவில்லை. இது ஒரே அடியில் சைவத்தின் வேரையே வெட்டப் பார்க்கும் பொய்வீச்சு. சில வெளிநாட்டில் துட்டுவாங்கும் மதவெறிநாய்கள் இப்படித்தான் திரிக்கும். அவர்போலவே நீரும் சைவரும் அல்லர், பக்தரும் அல்லர். புரட்டர். உம் பின்னணியில் இருக்கும் சக்திகளும் தெரிந்தவைதான்.

//தமிழ்மொழி வழிபாட்டை எதிர்த்த பிராமணர்களை 'செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்" எனக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தார். //

My dear missionary boy, you seem to be very poor in homework. மேலே முழுப்பதிகமும் இருக்கிறது. அவர் யாரைச் சொல்கிறார் என்று விளங்கவில்லையா? ஆரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா அந்தகர் என்று திட்டுவது சமணர்களை, பிராமணர்களை இல்லை.

//திருஞானசம்பந்தர் பிறந்ததாகச் சொல்லப்படும் கவுணிய கோத்திரம் இன்று தமிழ்நாட்டிலோ அல்லது வேறெங்கிலுமோ இல்லை! இது அவரது சந்ததி பூண்டோடு அறுக்கப்பட்டதைக் காட்டுகிறது.//

என்னய்யா இது! பலபேர் இப்படி ஒரே மாதிரி பாடம் ஒப்பிக்கிறீர்கள்! யார் எடுத்த ட்யூசன் இது? அதுவும் தப்புத்தப்பாய்! kaundinya gotra என்று வலையில் துழாவிப் பாரும். எண்ணி மாளாது. இன்னும் எத்தனை பொய்களை அடுக்கப் போகிறீர்கள் பார்க்கலாம்.

- வன்றொண்டன்



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

//சாதி வெறி பிடித்த ஆதி சங்கரர் சம்பந்தரை திராவிட சிசு என அழைத்தார். அதன் பொருள் ஞானசம்பந்தர் சூத்திரன் என்பதாகும். //

ஹஹ்ஹஹாஹா!
சிசு என்றால் சூத்திரனா! நல்ல ஜோக்!
கேக்கறவன் கேணையன் எவனாவது இருந்தா இங்கேயும் படித்துக் கொள்ளட்டும்.

-------- 

//உண்மை, கற்பனை பண்ணக் கூடமுடியாத கொடுமை, பிராமணராகப் பிறந்து தமிழில் பற்று வைத்த ஒரே காரணத்துக்காக பதினாறு வயதில் உயிரோடு கொளுத்தப்பட்டது கொடுமை. //

'ஆரூரன்',

மதுரையில் அந்தக் குழந்தை தங்கியிருந்த மடத்திற்கு சமணர்களால் தீ வைக்கப்பட்டது. அதற்கு பாண்டிய மன்னனே பொறுப்பேற்க வேண்டும் என்று பையவே சென்று பாண்டியற்காகவே! என்று பாடி அந்த நெருப்புக்கே கட்டளையிட்டு அனுப்பி வைக்கிறார் ஞானசம்பந்தர். மன்னனை வெப்புநோய் சூழ்கிறது. அப்படிப்பட்ட அவரைத் தீ வைத்து எரித்து விட்டார்கள் என்று புதிதாய்க் கதை கண்டுபிடித்துச் சொன்னால், ஒன்று வக்கரித்த மடையனாய் இருக்க வேண்டும் அல்லது மாற்று மத அயோக்கியனாய் இருக்க வேண்டும். 

மேலும் அவர் வரலாற்றைப் பின்னால் வந்த சுந்தரர், நம்பியாண்டார்நம்பி, கூத்தர், சேக்கிழார், வள்ளலார், அருணகிரிநாதர் முதலிய பலர் பாடியிருக்கிறார்கள். இவர்களில் பலர் பிராமணர் அல்லாதவர். இவர்கள் யாருக்குமே தெரியாத ஒரு புதுக்கதையை வெறும் பிராமணத் துவேஷத்தால் (அதுவும் ஈழத்தமிழரிடையே கிடையாது) இட்டுக்கட்டி எழுதுவது என்பது தமிழ்நாட்டில் சில 'சைவப்பூனைகள்' செய்வது. உற்றுப்பார்த்தால்தான் அக்கமாலையில் சிலுவை தொங்குவது தெரியும்.



- வன்றொண்டன்
---------

9:00 AM



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Thamizhan said...

பின் வரும் வரிகளுக்கு விளக்கம் சொல்லிவிட்டுப் பின்னர் பதிவாளர் துள்ளிக் குதிக்கட்டும்.
நம்பாண்டார் நம்பியின் இல்லத்தில் திருமணம் நிகழ்ந்தது.திருமணச்சடங்குகளைத்திருநீல
நக்கர் நடத்திவைத்தார்.எரிவலம் வர எழுந்த சம்பந்தர் மணமகளாரின் கையைப் பற்றியவாறு எரியாவார் சிவபெருமானே யாதலின் அவரையே
வலம் வருவோம் என்று திருப்பெருமாணம் கோயிலைநோக்கிச் சென்றார்.
திருக்கோயில் மூலத்தானத்தில் ஒரு பெருஞ்சோதி எழுந்தது.நீயும் உன் பத்தினியும் உன் புண்ணிய மணத்திற்கு
வந்தார் யாவரும் இச்சோதியுள் வந்து
சேரும் என்று ஒரு அசரீரி எழ்ந்தது....
ஞானசம்பந்தர் ஒருவர்தான் ஒரு திருமணக்கூட்டத்திற்கே முத்திப் பேறு வழங்கினார்.
இவை சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகளின் வார்த்தைகள்.
இந்த விளக்கங்களே பதிவாளரின் வார்த்தைகளான திராவிடர்,வெறுப்பு,விசம் என்றெல்லாம் எழுதியதால் என்னுடைய மறுப்பைத் தெரிவித்துத் தனித்தமிழ் இயக்கம்,சம்பந்தர் பார்ப்பனராக இருந்தாலும் வடமொழி ஆதிக்கத்தைப் பொறுக்க முடியாமல் 
தமிழ்ப் புரட்சி செய்தார் என்பதில்தான்
தொடங்கியது.
நான் சைவனென்ற முகமூடி அணிந்தேனாம் அதை இவர் கிழிக்கிறாராம்.
நான் தமிழன்,என் தாய்மொழி தமிழ் .
பிழைப்புக்காகத் தமிழைப் பேசி எழுதி 
உள்ளத்திலே சமசுகிருதம்தான் சிறந்தது என்று எண்ணி எழுதும் வேடதாரிகளின் முகமூடிகளைத்தான்
கிழிக்க வேண்டும்.
ஏதாவது சொன்னால் உடனே ஏன் மிசனரி என்று பாய்கிறார்களோ தெரியவில்லை.நான் பெரியார் தொண்டன்.நான் காட்டும் ஆதாரங்கள் தமிழ்ப் பெரியோர் மதிக்கக் கூடியவையேத் தவிர மிசனரிகளின் வார்த்தை என்று தப்பிக்க முடியாது.

ஜடாயு said...

// “சாகை ஆயிரம் உடையார்.. “ (ஆயிரம் கிளைகள் உள்ள “ஸஹஸ்ர சம்ஹிதா” என்று ரிக்வேதத்தை குறிப்பிடுவார்கள்) //

ஆயிரம் சாகைகளையுடையது சாம வேதம் தான் என்று மின் அஞ்சல் மூலம் சுட்டிக் காட்டிய நண்பருக்கு மிக்க நன்றி. 

ரிக் வேதத்திற்கு 27 சாகைகளும் யஜுர் வேதத்திற்கு சுமார் 100 சாகைகளுமே இருப்பதாக அறிகிறேன்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 Anonymous said...

மேலே ஜெயமோகனின் கட்டுரையைப் படித்துவிட்டு ஏதோ தமிழ்நாட்டுப் 

பிராமணர்கள்தான் இன்றைய கேரளாவிலே தமிழ்கெட்டு மலையாளமொழி 

உருவானதற்குக் காரணமானவர்கள் என்று ஒரு தவறான புரிதலை ஏற்படுத்திக் 

கொண்டு சிலர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

அவர்கள் கேரளொத்பத்தி என்ற மலையாள சரித்திரப் புத்தகத்தையோ அல்லது மற்ற 

புராண ஆதாரங்களையோ அறியாதவர்கள்.

கேரளாவிலே ஆதியில் குடியேறிய சோழநாட்டுத் தமிழ்ப்பிராமணர்கள் பெரும்பான்மை 

அந்தப் பிரதேசத்தின் தட்பவெப்பம் பிடிக்காமல் திரும்பி வந்து விட்டார்கள். அவர்கள் 

ஊர்த்வசிகை என்ற முன்னுச்சிக்குடுமி வைத்திருந்த காரணத்தால்தான் சோழியன் 

சிண்டு சும்மா ஆடுமா என்ற பழமொழியே வந்தது. 

அதற்குப் பின்னால் போய் மேற்குக் கரையோரக் கன்னட தேசத்திலிருந்தும், வடுக 

(ஆந்திரா) தேசத்திலிருந்தும் பல பிராமணர்கள் போய் பின்னர் நிரந்தரமாகக் 

குடியேறினர். இன்றைய கேரள நம்பூதரிகள், துளு மற்றும் தெலுங்கைப் பூர்விகமாகக் 

கொண்டவர்கள். 

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலிலே போத்திமார் துளு நம்பூதரிகள். 

எர்ணாகுளத்திலே, வைக்கத்திலே துளுதான். சபரிமலை சர்ச்சையில் சிக்கிய கண்டனுரு 

மோகனரு தெலுங்கர். தமிழ்பேசப் பிடிக்காத இவர்களின் மூதாதையர் 

சமஸ்கிருதத்தைக் கலந்து உருவாக்கியதுதான் மலையாளமே அன்றி இதிலே தமிழ் 

அந்தணர்களுக்கு எந்த விதத்திலும் பங்கில்லை. 

இவ்வளவு ஏன், சுமார் 500 வருடங்களுக்கு முன் பாலக்காடு, திருவனந்தபுரம் போன்ற 

இடங்களுக்குக் குடிபெயர்ந்த தமிழ் அந்தணர்கள் இன்னும் மலையாளிகளோடு 

கலக்காமல், தங்கள் தனித்துவத்தை விடாமல், தமிழ் பேசிக் கொண்டு இருப்பதைப் 

பார்க்கலாம். தமிழ்நாட்டு அய்யர்களை நம்பூதரிகள் வெறுப்பதும், தங்களுக்குக் 

கீழானவர்களாய்ப் பார்ப்பதும் இதனால்தான். 

இதைப் போலவே தமிழகத்தில் தெலுங்கு நாயக்கர் ஆட்சிக்காலத்தில் புழுக்கத்திற்கு 

வந்தது மணிப்பிரவாள நடை. அதற்கும் தமிழ் அந்தணர்கள் காரணமில்லை. 

தமிழ் அந்தணர்கள் எந்தக்காலத்திலும் தமிழை விட்டுக் கொடுத்தவரில்லை. 60களில் 

திராவிடக்கழக அரசியலால் வெறுப்படைந்து குடிபெயர்ந்த சிலரின் - வெகுசிலரின் - இரண்டாம், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர் இன்று பல வெளிநாடுகளிலே 
குறிப்பாய் இங்கே அமெரிக்காவிலே தமிழ் அடையாளத்தையே வெறுப்பவர் போல் 
பேசலாம். ஆனால் இன்றும் 99% தமிழ் அந்தணர்கள் தங்கள் தமிழ் அடையாளத்தை 
எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்களில் பல முட்டாள்கள் 
பிற தமிழர்களைப் போலவே சாதி ஏற்றத்தாழ்வை நம்புபவர்களாய் இருக்கலாம். அவரையும் காலம் மாற்றும். ஆனால் அவர்கள் தமிழர்கள் என்பதை எந்தச் சும்பனாலும் 
மறுக்கவோ மாற்றவோ முடியாது. அதற்கான சான்றிதழை அவர்கள் பிறரிடம் எதிர்பார்க்கவும் இல்லை. 

- சுப்ரமண்யம் கோபாலகிருஷ்ணன்



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஜடாயு said...

பெரியாரின் தமிழ் பற்றிய கருத்துக்களை இங்கே இட்டிருக்கும் அனானி, நீர் சொல்ல வருவது என்ன? இதெல்லாம் ஏற்கனவே தெரிந்தது தானே? 

சுப்ரமண்யம் கோபாலகிருஷ்ணன், கேரள நம்பூதிரிகள் பற்றி உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரிந்திருக்கிறது ! 

// தமிழ்பேசப் பிடிக்காத இவர்களின் மூதாதையர் சமஸ்கிருதத்தைக் கலந்து உருவாக்கியதுதான் மலையாளமே அன்றி இதிலே தமிழ் அந்தணர்களுக்கு எந்த விதத்திலும் பங்கில்லை.//

மலையாளத்தில் சம்ஸ்கிருதச் சொற்கள் மிகுதியும் இருப்பது மற்ற தென்மொழிகளான தெலுங்கு, கன்னடத்தில் உள்ளது போன்றது தான் – பல பண்டிதத் தனமான சொற்கள் (உதாரணமாக மனைவி என்பதற்கு “பார்யா”) புழக்கத்தில் வந்ததற்கு வேண்டுமானால் பண்டிதர்களின் கைவண்ணம் என்று சொல்லலாம், அவ்வளவு தான். 

ஒரு குழுவினர் தமிழ் பேசப் பிடிக்காமல் இப்படி செய்தனர் என்பதற்கு என்ன வரலாற்று ஆதாரம் உள்ளது? அப்படி பார்த்தால் தெலுங்கிலும், கன்னடத்திலும் ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளனவே, அதற்கு என்ன காரணம்? 

// இதைப் போலவே தமிழகத்தில் தெலுங்கு நாயக்கர் ஆட்சிக்காலத்தில் புழுக்கத்திற்கு வந்தது மணிப்பிரவாள நடை. அதற்கும் தமிழ் அந்தணர்கள் காரணமில்லை. // 

தவறு. மணிப்பிரவாள நடையை உருவாக்கி செழுமையுறச் செய்தவர்கள் பெரியவாச்சான் பிள்ளை, நஞ்சீயர் போன்ற வைணவ ஆச்சாரியர்கள். நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு எழுதப் பட்ட உரைகள் தான் முதன்முதலில் பெரிய அளவில் இந்த நடையைக் கைக்கொண்டன. பின்னாளில் இது பல மாற்றங்கள் அடைந்து எல்லாரும் பயன்படுத்தக் கூடிய உரைநடைத் தமிழாகப் பரிணமித்தது. விவிலியத்தின் முதல் தமிழ் மொழிபெயர்ப்புகள் பரிசுத்தம், சுவிசேஷம் போன்ற பதங்களோடு தங்களுக்கு என்று ஒரு விதமான மணிப்பிரவாள நடையை உருவாக்கி “கிறித்துவத் தமிழ்” என்றே அடையாளம் சொல்லத் தக்க அளவு அதை வளர்த்தெடுத்தன.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பிராமணர்களின் தமிழ்த் தொண்டு- சில தமிழெதிரிகளுக்காக முழுச்சமூகத்தையும் வெறுப்பது முறையா?

தமிழ்த்தொண்டிலும், தமிழ்ப்பற்றிலும் பிராமணர்கள் எவருக்கும் சளைத்தவர்களல்ல. ஒரு சில அழுகிய பழங்களுக்காக, பழக் கூடை முழுவதையும் எறிவது சரியா? ஒரு சிலதமிழெதிரிப் பார்ப்பனர்களுக்காக நாம் முழுப்பிராமண சமூகத்தையும் வெறுப்பது முறையா? பெரியாருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிராமண எதிர்ப்பு அலையை எப்படி நிறுத்துவது, ஈழத்தில் இந்தப் பிராமண எதிர்ப்பு இல்லாது விட்டாலும் கூட, இணையத் தளங்களுக்கு அறிமுகமாகும் ஈழத்தமிழர்களும் இந்த அலையில் அடிபட்டுப் போகிறார்கள், அதற்கு நானே நல்ல உதாரணம், இதற்கு எங்களையும் குறை சொல்ல முடியாது, இணையத்தளங்களில் பல தமிழெதிரிப் பார்ப்பனர்கள் தமிழெதிர்ப்பு வெறியுடன், பெரியாரைப் பழிவாங்குவதற்காக உலகத்தமிழர்களனைவருக்கும் குழி பறிப்பதற்காக உலாவருகிறார்கள், அதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள ஆயுதம், ஈழவிடுதலை எதிர்ப்பு. 

உலகத்தமிழர்களுக்கு முன்னாலுள்ள பொறுப்பு என்னவென்றால், முழுப்பிராமண சமூகத்தையும் எதிரிகளாக்காமல், தமிழெதிரிகளை எந்தச் சாதியிலிருந்தாலும் எதிர்ப்பது தான், அதை எப்படிச் செய்வது? தமிழைத் தமிழர்களை, ஈழவிடுதலையை எதிர்ப்பவர்கள் பிராமணர்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழ் பேசும் முஸ்லீம்களிடையிலுமுண்டு, அவர்களை நாங்கள் ஓருவரும் கண்டிப்பதில்லை, ஈழத்தில் குழந்தைகள் தூக்கிலிடப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டாலும், மூச்சு விடாதவர்கள் பலஸ்தீனத்திலுள்ள குழந்தைக்குக் காயப்பட்டால் மட்டும் குய்யோ, முறையோ என ஒப்பாரி வைக்கவும், ஊரைக் கூட்டவும் இவர்கள் தயங்குவதில்லை, அது தான் அவர்களின் தமிழுணர்வு.

தமிழ்ச் சமூகத்தின் 3% பிராமணர்கள் செய்திலுள்ள தமிழ்த் தொண்டைப் பாருங்கள், சாதியடிப்படையில் தமிழர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதால், கல்வியில் முன்னணி வகித்த அவர்கள் இவ்வாறு செய்தார்கள் என வாதாடினாலும், அவர்களில் பலர் தமிழை இழித்து, சமஸ்கிருதத்தை மேம்படுத்தினாலும், அக்காலத்துப் பிராமணர்கள் அனைவரும் தமிழை வெறுத்தார்களெனக் கூற முடியாது, பிராமணர்கள் தமிழில் பலநூல்களை ஆக்கியது மட்டுமல்ல. பல மொழிகளிலிருந்து பல்வேறு நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துமுள்ளார்கள்.



QUOTE
1. சமஸ்கிருதக் கலப்பற்ற தூய்மையான தமிழில் எழுதியவர்கள் நாயன்மார்களும், தேவாரபதிகங்களுக்கு உரை எழுதிய பிராமணர்களும் தான். உதாரணமாகப் பரிமேலழகரின் தூயதமிழுரையை யாராலும் இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியாது.

2.உண்மை, பிராமணர்களும் தம்முடைய குறுகிய நோக்கங்களும், சுயநலமும், அரசியல் தந்திரமும் உடையவர்களாக இருந்தார்கள், பல சமூக அநீதிகளுக்கு அவர்களும் பொறுப்பாயிருந்தார்கள். ஆனால் தமிழர்களிடையிலுள்ள வேறு உயர்சாதியினர்களை விட எவ்வாறு அவர்கள் வேறுபட்டுள்ளார்கள்? பிராமணரல்லாத, உயர் சாதித்தமிழர்கள், தாழ்த்தப்பட்டவர்களைக் கொல்லுவதை நான் கேள்விப்பட்டேன். உண்மையிலேயே, மிக மிகக் கொடுமையான சாதிப்பாகுபாடு இருந்தது இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் தான், அங்கு பிராமண ஆதிக்கம் என்பது கிடையவே கிடையாது, 

3.தமிழைச் சமஸ்கிருதப்படுத்தியதற்காக பிராமணர்களைக் குற்றவாளியாக்குவது தவறு. தென்கலை அய்யங்கார்கள் சுத்த தமிழ் வார்த்தையைப் பாவிக்கும் போது பிராமணரல்லாத தமிழர்கள் சமஸ்கிருதச் சொல்லைப் பாவிப்பது வழக்கம். தமிழரான இராமலிங்க அடிகளாரின் பாடல்கள் பெருமளவு சமஸ்கிருதமயமாக்கப் பட்ட தமிழிலுள்ளன.

4. சமஸ்கிருதமும் தமிழும் ஒரே இலக்கிய, இலக்கண மரபைக் கொண்டவை. உண்மை என்னவென்றால் , சமஸ்கிருத இலக்கியங்கள் எல்லாம் பெருமளவில், தமிழ், திராவிட இலக்கிய மரபிடம் கடன் பட்டுள்ளன, பெருமளவில் இரவல் வாங்கியுள்ளன. உதாரணமாக சிறப்பான காளிதாசின் சமஸ்கிருதக் காவியங்களை எடுத்துக் கொண்டால், நிச்சயமாக அவை தமிழிலக்கிய மரபை ஒத்தவை என்பது தெளிவாகும்.

5.தமிழ் வளமானது, ஏனென்றால் தமிழில் பல நடைமுறைகளும், மரபுகளுமுண்டு. இந்திய மொழிகளிலேயே தமிழில் மட்டும் தான் சமஸ்கிருதமயமாக்கப் படாத, மரபுத் தமிழுண்டு.(தெலுங்கில் அச்சு தெலுங்கு, என சுத்த தெலுங்கு மரபிருந்தாலும், அதுவும் பிராமணர்கள் உருவாக்கியது தான். ஆனால் தமிழில் பல்வேறு நடைமுறைகளுண்டு. பல பேச்சு வழக்குகள், அதிகளவு சமஸ்கிருதமயமாக்கப் பட்ட தமிழ், ஆங்கிலம் கலந்த தமிழ், இவையெல்லாம் தமிழுக்கு அழகு சேர்ப்பவை, இவற்றை நீக்கி வளமான ஒரு மொழியை எதற்காக வறுமைப்படுத்த வேண்டும்.

6. ஒரு தமிழரல்லாத, அன்னியனாகிய என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் என்னவென்றால், தமிழ்க்கலாச்சாரம் அழிவதற்குக் காரணம் ஒரு சாதி அல்லது ஒரு பிரிவு மக்களல்ல, தமிழ்ப்பண்பாடு பாழ்பட்டதற்குக் காரணம் தமிழர்களுக்கிடையிலுள்ள சாதிப்பிரிவும், பெண்ணுரிமை மறுக்கப் படுவதும் தான்,( ஈழத்தில் காலத்தின் கட்டாயத்தால் நிலைமை மாறுகிறது). சாதிக் கலப்பு மணங்களை ஊக்குவியுங்கள், சீதனத்தை இல்லாதொழியுங்கள், பெண்களுக்குச் சுயமரியாதையையும், சுதந்திரத்தையும் அளியுங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் என்ற பச்சாத்தாபத்தையும், சுயவிரக்கத்தையும் விட்டொழியுங்கள், இது சில குறுகிய நோக்கம் கொண்டவர்கள், தமது அரசியல், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகத் தமிழர்களுக்கிடையிலுள்ள பிரிவுகளைத் தூண்டி விட்டு அதில் இலாபமடைவதற்கு இடமளிப்பதாகத் தான் முடியும்.

7. தயவு செய்து குறித்துக் கொள்ளுங்கள். நான் பிராமண ஆதரவோ அல்லது பிராமண எதிர்ப்பாளரோ அல்ல, சமஸ்கிருத மொழி எப்படியான எதிர்மறையான விளைவுகளை இந்தியாவில் மாநில மொழிகளின் வளச்சியில் ஏற்படுத்தியது என்பதை நான் நன்கறிவேன். உண்மையில், தென்னிந்தியாவுக்கு நடந்த மிகவும் விரும்பத்தகாத இரண்டு சம்பவங்கள் சமஸ்கிருதமும் ஆங்கிலமும் தானென A. K ராமானுஜன் என்னிடம் கூறினார், அவர் ஒரு பிராமணர். சமஸ்கிருதத்தின் மேல் கொண்ட அடிமைத் தனமான பக்தி எதிர்மறையான விரும்பத்தகாத விளைவை தமிழில் மட்டுமல்ல, தமிழை விட மேலாகப் பல தென்னிந்திய மொழிகளில் ஏற்படுத்தி விட்டதென்பது உண்மை. ஆனால் நாம் வரலாற்றை மாற்ற முடியாது. வேற்று மொழிச்சொல் ஏற்றுக் கொள்ளப்பட்டு குறிப்பிட்ட மொழியின் வளக்கத்தில் வந்த பின்பு, எந்த மொழிச் சொல்லிலும், நல்லது, கெட்டதென்பது இயற்கையில் கிடையாது.

8. உண்மையில் எது கொடுமை என்றால், எந்தக் கருத்தை நான் அருவருப்புடன் பார்க்கிறேனென்றால், சிலர் , கொஞ்சமும் சிந்திக்காமல் சமஸ்கிருதத்தை உயர்ந்த மொழியாக நினைப்பது தான். சமஸ்கிருதம் உயர்வான மொழியல்ல, உண்மையில் சமஸ்கிருதம் மட்டுப்பட்ட மொழி, ஏனென்றால் சமஸ்கிருதத்தில் பேச்சு வழக்குக் கிடையாது. ஆனால் சமஸ்கிருதச் சொற்கள், தென்னிந்திய மொழிகளின் பொதுப் பேச்சு வழக்கில் கலந்ததால், சமஸ்கிருதச் சொற்கள் வளம் பெற்று, சமஸ்கிருதச் சொற்களைக் கலந்த மொழியையும் வளமாக்கியது (ஆங்கிலத்தில் லத்தீன், ப்ரெஞ்ச் சொற்கள் கலந்திருப்பது போன்றது தான் இதுவும்.)


A Harvard B.A., M.A. and Ph.D., Professor Hart is a graduate of the Department of Sanskrit and Indian Studies, where his studies included both Tamil and Sanskrit. At Berkeley Professor Hart has developed the Tamil program of language, literature and cultural studies to be the most important of its kind in North America. Professor Hart is the author of textbooks for both Tamil and Sanskrit, and of translations of classical Tamil poetry, and the Tamil Ramayana of Kampan. . 

இவை தமிழறிஞரும், கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பீடத்தின் தலைவர், பேராசிரியர் ஜோர்ஜ் ஹாட் (Prof. George Hart) அவர்களின் கருத்தின் தமிழாக்கம்.

http://www.unarvukal.com/ipb/index.php?showtopic=2025



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வன்றொண்டன் அவர்கள் பல அருமையான ஆதாரங்களை எடுத்துக் கொடுத்திருக்கிறார். என் பங்கிற்கு நானும் தேடிப் பார்த்தேன்.

சேக்கிழாரும் இப்படிச் சொல்லவில்லை;
வள்ளலாரும் இப்படிச் சொல்லவில்லை.

(பெருமண நல்லூர்த் திருமணங் காணப் பெற்றவர் தமையெலாம் ஞான (39) 
உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த உயர்தனிக் கவுணிய மணியே (40) )

இதை ஆங்கிலத்திலும் படிக்கவும்.

ஆக இந்த மகான்கள் சொல்வதையெல்லாம் பொய் என்று ஒதுக்கிவிட்டு, நக்கீரன் போன்ற மஞ்சள் பத்திரிகைகளில் சில லோலாக்குலோல்டப்பிமாக்கள் எழுதுவதை உண்மை என்று 'பரப்புரை' செய்யும் இந்த ஆரூரன் 'அக்கமாலை சிலுவை' (நன்றி - வன்றொண்டன்) கேஸ்தான் என்பது நிரூபணம் ஆகிறது. ஈழத்துச்சைவன் என்பதெல்லாம் வெறும் கப்ஸா.
-சுப்ரா, புதரகம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard