New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 31. மத்திய ஆசியாவில் "ராமன் விளைவு” (Raman Effect)


Guru

Status: Offline
Posts: 24765
Date:
31. மத்திய ஆசியாவில் "ராமன் விளைவு” (Raman Effect)
Permalink  
 


31. மத்திய ஆசியாவில் "ராமன் விளைவு” (Raman Effect)

 



யயாதியின் இரண்டு மகன்கள் தேசப்பிரஷ்டம் செய்ய்யப்பட்டவர்களைப் போல, பாரதவர்ஷத்திலிருந்த அவர்களது பிறந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று என்று சென்ற பகுதியில் பார்த்தோம். இவர்களது மூதாதையர் தேவலோக சம்பந்தம் பெற்றவர்கள் என்று தெரிவிக்கும் இலக்கிய ஆதாரங்களைப் பார்ப்பதற்கு முன், ஒதுக்கப்பட்ட இந்த மக்கள் என்ன செய்தார்கள் என்றும் கொஞ்சம் தேடுவோம். 
இவர்கள் சென்ற பகுதி, இன்றைய அரேபியா, மத்தியதரைக் கடல் பகுதி, வட மேற்கு ஐரோப்பியப் பகுதிகள் ஆகும். 

இவர்கள் இப்படிப் பிரிந்த காலக்கட்டத்தில், மக்களைத் தேவன், அசுரன்என்று குணத்தின் அடிப்படையில் பிரித்திருந்தனர். மிலேச்சர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட இவர்கள், வேத- தரும விதிகளை அலட்சியப்படுத்தியவர்களாக இருந்திருக்க வேண்டும். எனினும், இவரங்களது படை, இவர்களைச் சேர்ந்த மக்கள், இவரகளது குருவாக இருந்தவர்கள் என்று ஒரு கூட்டமாக இவர்கள் இந்தப் பகுதிகளில் குடியேறி இருக்க வேண்டும். 

மக்களது தொன்மையை ஆராயும் பலவித நுட்பங்கள் வந்துவிட்ட இந்த நாளில், நமக்கு இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்களைப் பற்றிப் பல விஷயங்கள் தெரிய வருகின்றன. அவை என்றோ வெளியேறின இந்த மக்களுடன் ஒத்துப் போகின்றன.

உதாரணமாக இந்தப் பகுதியில் உள்ள சிரியா  அசிரியா என்னும் நாடுகள். சம்ஸ்க்ருதத்தில் அ  என்னும் எழுத்தைக் கொண்டு ஒரு சொல்லின் எதிர்ப்பதம் அமையும். அசுர் என்ற சொல்லிலிருந்து அசிரியா வந்திருக்கிறது. சுரன்  அசுரன் என்னும் சம்ஸ்க்ருதச் சொற்களை நினைவூட்டும்படி இந்தப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. சூரியா அல்லது சுரன் என்பதன் திரிபாக சிரியா என்னும் பெயர் இருக்கலாம். இந்தப் பகுதிகளில் 5000 வருடங்களுக்கு முன்பே மக்கள் இருந்திருக்கின்றனர். 

இந்தப் பகுதியில் பல சமஸ்க்ருத அல்லது வேதச் சொற்களின் திரிபுகள் காணப்படுகின்றன. யஞ்ஞ என்பதைப் போல யஸ்னா என்ற பெயரில் வழிபாடு நடந்திருக்கிறது. அதைச் செய்பவர்கள் வேதம் ஒதுபவர்களப் போல மனப்பாடம் செய்து சொல்லியிருக்கின்றனர். எழுதி வைத்துப் படிக்கவில்லை. 

வேந்தித் என்னும் அவர்களது புத்தகத்தில் அவர்களது அரசனானஅஹுரா (அசுரன் என்பதன் திரிபு) என்பவன், மக்கள் வாழ 16 இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. 

http://www.avesta.org/vendidad/vd1sbe.htm

அந்த இடங்களில் பாலிகா அல்லது வாலிகா என்னும் இடமும் உண்டு. முன் பகுதியில் இந்த இடம் மஹாபாரதத்திலும், ஸ்கந்த புராணத்திலும் வருகிறது என்று பார்த்தோம். இந்த இடத்தை விக்கிரமாதித்ய அரசன்வென்றான் என்றும் பார்த்தோம். இங்கு மகேஷ்வரனுக்குக் கோவில் இருந்தது. மகேஷ்வர் என்னும் அந்த இடத்தின் பெயர் மெக்காவானது.இஸ்லாம் வருவதற்கு முன் அரேபியப் பகுதிகள் அனைத்திலும் உருவ வழிபாடு இருந்தது. பாரத மக்கள் அங்கு குடியேறினதால் பல ஆயிரம் வருடங்களாகவே வேத மதத் தெய்வங்களை ஒட்டிய அமைப்பில் வழிபாடு இருந்திருக்கின்றது. 

அஹுரன் ஸ்தாபனம் செய்த 16 இடங்களில் இரண்டு இடங்கள் சுதந்திரத்துக்கு முந்தின இந்தியப் பகுதிகளில் உள்ளது. 


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

அவற்றுள் ஒன்று வைகரேதம் என்பது. அது இன்று காபூல்என்றழைக்கப்படுகிறது. தற்போது ஆஃப்கனிஸ்தானத்தில் உள்ளது. 

மற்றொன்று ‘ஹப்த ஹிந்து எனப்பட்டது.
ஆம். 

சப்த சிந்து என்று அடிக்கடி ரிக் வேதத்தில் சொல்லப்படுகிறதே அந்த இடம்தான் இது. அங்கே மக்கள் வாழ நகரம் நிர்மாணித்தான் இந்த அஹுரன் என்னும் அரசன்! (இந்தப் பெயர் ஒற்றுமையைக் கொண்டே அஹுரன் வெளியேற்றப்பட்ட த்ருஹ்யு அல்லது அநுவின் பரம்பரையில் வந்தவனாக இருக்கலாம் என்று எண்ண வாய்ப்பிருக்கிறது)
சப்த சிந்துப் பகுதியில் அவர்கள் கடுமையாக சண்டை போட்டனர். சப்த சிந்துவே ஒரு எல்லையாக இருந்தது என்று நாம் முன்பு கூறியதை நினைவு படுத்திப் பார்க்கவும். சப்த சிந்துவுக்கு மேற்கே புண்ணிய பூமியும், புண்ணிய நதியும் இல்லை. அதனால் இந்த மக்கள் அங்கே விரட்டப்பட்டார்கள். எனினும் சிந்துவை ஒட்டிய பகுதியை அவர்கள் ஆக்கிரமித்து அந்த இடத்தை ஹப்த ஹிந்து என்று அழைத்து அங்கு குடியேறினார்கள்.



இது ராமனுக்கு முந்தின காலத்தில் நடந்தது. ஆனால் இதே பகுதியில்கிருஷ்ணன் காலம் முடிந்த பின், அப்பொழுது அங்கிருந்த மக்கள் பழி வாங்கினார்கள். கிருஷ்ணன் இறந்த பிறகு துவாரகையைக் கடல் கொண்டு விட்டது. எனவே அந்நாட்டு மக்களும், கிருஷ்ணனது அந்தப்புர மகளிரும், துவாரகையை விட்டி வெளியேறி, இந்தப் பகுதி வழியாக, அதாவது சிந்து நதி ஓரமாக வடக்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்த போது, மிலேச்சர்கள் அந்தப் பெண்களைக் கவர்ந்து சென்று விட்டனர் என்று மஹாபாரதம் கூறுகிறது.. 
இவற்றையெல்லாம் மெய்ப்பிக்கும்படி மரபணு ஆராய்ச்சி முடிவுகளும் வந்து கொண்டிருக்கின்றன. 

ஹப்த ஹிந்து என்பது அந்த நகரை நிர்மாணித்த அஹுரா இட்ட பெயர். இதுவே பழைய பாரசீக மொழியில் ஹிந்தவா’ என்றாகி, கிரேக்கத்தில்இந்தோய்’ என்றானது. கிரேக்கமும் இந்த மக்களில் மற்றொரு பிரிவினர் சென்றடைந்த இடம். அவர்களும் தங்களது பழைய தொடர்பைப் பல காலம் மறக்கவில்லை. 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

விரட்டப்பட்ட சில காலத்திலேயே அந்த மக்களுக்கு வசிஷ்டமஹரிஷியின் தொடர்பு கிடைத்திருக்கிறது
ராமன் காலக்கட்டத்தில் வாழ்ந்தவர் வசிஷ்ட ரிஷி. 
வால்மீகி ராமாயணத்தில் அவருக்கும் விஸ்வாமித்திரருக்கும் நடந்த போர் ஒன்று சொல்லப்படுகிறது. (1-55). வசிஷ்டரிடம் ஷபலா என்ற தெய்வீக பசு ஒன்று இருந்தது. அதைக் கவர விரும்பிய விஸ்வாமித்திரர்அவருடன் போர் புரிந்தார். வசிஷ்டர் தனக்குதவ மிலேச்சர்கள், யவனர்கள் மற்றும் அவர்களைப் போன்ற பிற மக்களை போரிடச் செய்தார் என்று ராமாயணம் சொல்கிறது. அவர்களது உதவியுடன் வசிஷ்டர் விஸ்வாமித்திரரை வென்றார்.

ஒதுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அவர்களுக்கு மீண்டும் பாரத நாட்டுடன் தொடர்பு பெற்றது இந்தச் சண்டையின் போதுதான். அவர்கள் குரூரமாக, அசுரத்தனமாகப் போரிடுவார்கள் என்று விவரிக்கப்படுகிறது. போரில் வெற்றியை ஈட்டுத்தரவே, வசிஷ்டர் கைம்மாறாக அவர்களுக்கு சில உபதேசங்களைச் செய்தார். அதில் முக்கியமானது யவன ஜோதிடம்எனபது. இதை யவனர்கள் நன்கு கற்றுத் தேர்ந்தனர். வழி வழியாக இந்த யவன ஜோதிடம் இருந்து வருகிறது. தற்போதும் யவன ஜோதிடம் என்னும் ஒரு நூல் இருக்கிறது. அதில் இந்த ஜோதிடத்தை முதன் முதலில் வசிஷ்டரிடமிருந்து பெற்றார்கள் என்னும் விவரம் தரப்பட்டுள்ளது. நம் நாட்டு வேத ஜோதிடத்துக்கு மறுபதிப்பாக இது விளங்குகிறது.. 
யவன ஜோதிடத்துக்கும், வேத ஜோதிடத்துக்கும் உள்ள வேறுபாடுகள்,மிலேச்ச ஜோதிடமான யவன ஜோதிடம், வேத ஜோதிடத்தின் மறு பதிப்பாக எப்படி விளங்கிகிறது, வசிஷ்டருக்கும் மிலேச்சர்களுக்கும் ஏற்பட்ட தொடர்பு போன்றவற்றை இந்த இணைப்பில் படிக்கலாம். 

http://www.scribd.com/doc/22717150/Roots-of-Mlechcha-Astrology

யூத, கிறிஸ்துவ, இஸ்லாமிய நம்பிக்கைகள் யவன / மிலேச்ச ஜோதிடத்துடன் தொடர்புடையவை என்பதையும் இக்கட்டுரையுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 

அடுத்த முக்கிய விவரத்துக்கு வருவோம். 
மிலேச்ச நாடுகளில் ராமன் பிரபலமாக் இருந்திருக்கிறான். பஞ்ச மானவர்கள் போர் முடிந்த நூறு வருடங்கள் கழித்து ராமன் என்னும் புருஷோத்தமன் அவதரித்தான். அவன் பெயர் இந்த மக்கள் வரையில் பரவியிருக்க வேண்டும். சப்த சிந்துவில் ஆரம்பித்து, எகிப்து வரை ஆங்காங்கே ராம என்னும் பெயரில் பல இடங்கள் இருப்பது கவனிக்கத்தக்கதுஇந்த இடங்கள் எல்லாம், யூத, கிறிஸ்துவ மதங்கள் தோன்றுவதற்கு முன்னாலேயே இருந்திருக்கின்ற



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

இந்தப் படத்தில் இருப்பது, கிறிஸ்துவர்களது மூலஸ்தானமாகிய போப்பண்டவர் வசிக்கும் வாடிகன் நகரில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம்

                                       vatican.bmp
வாடிகன் என்னும் பெயரே வாடிகா என்னும் சமஸ்க்ருதப் பெயரிலிருந்து வந்தது.
வாடிகா என்றால் நந்தவனச் சோலை.
இந்த லிங்கம் போல பல சிவ லிங்கங்கள் இத்தாலி, ரோம் நகரங்களில் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. 
ஒரு காலத்தில் ஹிந்து மதம் இங்கு வேரூன்றி இருந்ததற்கு இப்படிப் பல ஆதாரங்கள் உள்ளன. 
மேலும் இதைப் போன்ற பல ஆதாரங்களை இங்கே காணாலாம்.http://www.stephen-knapp.com/photographic_evidence_of_vedic_influence.htm



கீழ்க் காணும் தளம் பைபிளில் எங்கெங்கெல்லாம் ராம என்னும் பெயர் வருகிறது என்று பட்டியலிடுகிறது. 
http://www.biblegateway.com/quicksearch/?quicksearch=Ram&qs_version=31


ராமன் என்னும் பெயரில் அரசன் இருந்திருக்கிறான். 
எகிப்து நாட்டில் ராமசெஸ் என்னும் அரச பரம்பரை இருந்திருக்கிறது. 
எகிப்திய பாரோ மன்னர் பரம்பரை சூரிய வம்சத் தொடர்பை நினைவு படுத்துவது. ப்ர என்னும் வேர்ச் சொல்லிலிருந்து அது எழுந்தது. எகிப்திய மொழியில் பெரிய வீடு என்று அதற்குப் பொருள். சம்ஸ்க்ருதத்தில் புருஷன் என்னும் சொல்லின் வேர்ச் சொல்லான ‘புர்’ என்பதற்குச் சமமான சொல் அது. 

எகிப்து மன்னர் இறந்தவுடன், உடல் கெடாமல் இருக்க எண்ணை போன்றவற்றில் வைத்து பதப்படுத்தி பிறகு மம்மி என்று உருவாக்குவார்கள். ராமாயணத்தில் தசரதன் இறந்தவுடன் அவனுக்கு ஈமக் கிரியை செய்ய பரதன் வருவதற்கு  ஒரு வாரத்துக்கும் மேலானது. எனவே தசரதன் உடலை  அப்படி ஒரு பக்குவத்தில் வைத்துப் பாதுகாத்தனர் என்று வால்மீகி கூறுகிறார். பதப்படுத்தும் விவரங்கள் எகிப்தியருக்குத் தெரிந்ததற்கு முன்பே பாரத நாட்டில் தெரிந்திருக்கிறது என்று தெளிவாகிறது. இந்த நுட்பங்களை இங்கிருந்த மக்கள் அங்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. 
            
            எகிப்து மன்னனது உடலில் ஹிந்து மதச் சின்னங்கள்.
                 egyptian+monarch+with+tilak.bmp 
ஜெருசலம் அருகில் ராமல்லா என்னும் நகரம் இருந்திருக்கிறது. 

இஸ்ரேலில் ராமஹ் என்னும் பழைய நகரம் இருந்திருக்கிறது. 

ராம் என்றால் மலை போன்றவன், உயரம் என்னும் பொருளில் அவர்கள் அழைக்கிறார்கள். 
ரமத், ராம போன்ற பெயர்களில் வரும் ஊர்கள் பைபிளில் பல இடங்களில் வருகின்றன. இந்தப் பகுதியில்தான் யூத, கிறிஸ்துவ, இஸ்லாம் மதங்கள் தோன்றின. மிலேச்சர்களது வாழ்க்கை முறையை ஒட்டியே இவர்களது வாழ்க்கை முறையும் இருக்கிறதுயவன ஜோதிடம் அல்லது மிலேச்ச ஜோதிடம் என்றழைக்கப்படும் ஜோதிடத்தில், வரும் கால, வழிபாட்டு முறைகளை இவர்கள் அப்படியே பின்பற்றுகிறார்கள். 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

இஸ்லாமியர்களது ரமதான், ராம சம்பந்தம் கொண்டது. அவர்களது வருடம் சந்திர மாதக் கணக்கை அடிப்படையாகக் கொண்டது. பாரதத்தில் இருப்பது சூரிய மாத வழக்கு. எனினும், சூரிய  சந்திர வழக்குகளை இணைத்து நாம் பின்பற்றுகிறோம். ரமதான் மாதம் அவர்கள் வருடத்தின்ஒன்பதாம் மாதமாகும். நமக்கு ஒன்பதாம் மாதம் தனுர் மாதம் என்னும்மார்கழி மாதம். மாதங்களில் மார்கழியாக இருப்பதாக கிருஷ்ணன் கூறும் மாதம் அது. 
ஒன்பதாம் மததிற்கு அவர்களும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.வருடக் கணக்கு போன்ற பல வழக்கங்கள் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்தே இருந்தவை. அவற்றை சில மாற்றங்களுடன் பின் பற்றி இருக்கின்றார்கள். சந்திர வருடத்தில் ஒரு மாதம் அதிகம் வரும். அதை வேத மரபில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சரி செய்து, வருடத்தைச் சீராக வைத்திருக்கிறோம். மிலேச்சர்கள் அந்த விவரங்களை நாளடைவில் மறந்திருப்பார்கள். அதனால் அவர்கள் எப்படி கொண்டு வந்தார்களோ அதையே இந்தப் பர மதத்தவர் பின் பற்றி வருகிறார்கள். 

ரம்த் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து ரமதான் வருகிறது என்கிறார்கள். அ-ரம்த் என்பது உஷ்ணம் என்னும் பொருளில் வருகிறது. எனவே ரம்த் என்றால் குளூமை ஆகும். ராமன் குளிர்ச்சியான சந்திரன் போன்றவன்என்று ராமாயணம் பல இடங்களில் கூறுகிறது. 
இப்படி ராம என்னும் சொல்  பர மதங்கள் தோன்றுவதற்கு முன்பே மிலேச்ச தேசங்களில் வந்து விட்டது. அந்தப் பெயரை அந்த நாளில் அங்கிருந்த மக்கள் கொண்டாடியிருந்தால்தான் இப்படிப் பெயரிட்டிருக்க முடியும்.


இதைப் போல கிறிஸ்துவின் பெயரில் பண்டைக் காலத்தில் இடங்கள் கிடையாது. கிறிஸ்துவம் பரப்ப ஆரம்பித்த பிறகு கிறிஸ்துவின் பெயரை இட்டிருக்கிறார்கள்.

அலெக்ஸாண்ட்ரியா என்னும் நகரம் எகிப்தில் உள்ளது. அலெக்ஸாண்டர் படையெடுத்து அந்த இடத்தை வென்றான். அதனால் தன் பெயரை அந்த இடத்துக்கு வைத்தான். 

ரோம் நகரத்தின் பெயர் அதை ஸ்தாபித்த ரோமுலஸ், ரீமஸ் என்னும் சகோதர்கள் பெயரால் உண்டானது. (இவர்களது சரித்திரத்தையும் ஆராய்ந்தால், ராமன் தொடர்பு தெரிய வரும்) 

ஆக, ஓரிடத்தின் பெயர் காரணப் பெயராகத்தான் உண்டாகிறது. 


எனவே ராமன் என்னும் சரித்திர நாயகன் இருந்திருக்கவே அந்தப் பெயரைக் கொண்ட ஊர்ப் பெயர்கள் வந்திருக்க வேண்டும்.


ராமனது புகழ் மிலேச்சப் பகுதிகளில் பரவி இருக்க வேண்டும்.அங்கிருந்த மக்களில் பலருக்கு பாரதத்திலிருந்து ஒதுக்கப்பட்டு விட்டது  நிச்சயமாக வருத்தமாக இருந்திருக்கும். அதிலும் அவர்கள் வம்சத் தொடர்பில் ராமன் வந்தது நிச்சயம் பேசப்பட்டிருக்கும். வசிஷ்டர் தொடர்பால் புத்துயிர் பெற்ற அவர்கள் தாங்கள் நினைவு கூர்ந்த அனைத்து வேத தருமப் பண்புகளையும் நடை முறைப்படுத்தி ஆண்டிருப்பார்கள். ராமனது பெயரிலும் நகரங்களை நாட்டியிருப்பார்கள். 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

அது மட்டுமல்லாமல், ராமன் ஆட்சி செய்தபோதே நான்கு திசையிலும் ராமனது சகோதரர்கள் சென்று ராமனது ஆட்சியை நிறுவியிருக்கிறார்கள்.இந்தப் பகுதிகளிலும் அவர்கள் ராம ராஜ்ஜியத்தைக் கொண்டு வந்திருக்கலாம். அதன் காரணமாக ராமன் பெயரில் பல நகரங்கள் தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம். 

எனினும் அவை காலப்போக்கில் மறக்கப்பட்டிருக்கும். 

மிலேச்ச சுபாவத்தின் காரணமாக தரும சிந்தனை குறைந்திருக்கும். 


புண்ணிய பூமி, புண்ணிய நதி என்று சொல்லப்படும் பாரதச் சின்னங்கள் அந்த இடங்களில் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard