New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 30. ஆரிய – தஸ்யு போராட்டம்.


Guru

Status: Offline
Posts: 24811
Date:
30. ஆரிய – தஸ்யு போராட்டம்.
Permalink  
 


30. ஆரிய – தஸ்யு போராட்டம்.

 


                                                                                                                                           
ரிக் வேதத்தில் மொத்தம் 85 இடங்களில் தஸ்யு என்னும் பதம் வருகிறது. இது ரிக் வேதப்பாடல்களின் மொத்த அளவில் 0.4% மட்டுமே என்று பார்த்தோம். ஆரியன் என்னும் பதம் இதை விடக் குறைவாகவே வருகிறது. மொத்தம் 36 இடங்களில், அதாவது, 0.2% க்கும்குறைவாகவே ஆரியன் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து ஆரியப் படையெடுப்பு அல்லது ஆரிய ஆக்கிரமிப்பு என்று சொல்லப்படும் கருத்துக்கு  ரிக் வேதத்தில் முக்கியத்துவம் இல்லை என்பது தெரிகிறது.
ஆரியன் என்றோ, தஸ்யு என்றோ குறிக்கப்பட்டு வரும் சொற்கள் சில குறிப்பிட்ட பெயர்களைக் குறிப்பதாகவும் வருகிறது. அந்தப் பெயர்களைக் கொண்டவர்கள் யார் என்று அறிந்து கொண்டால், ஆரியன் யார், தஸ்யு யார் என்று நமக்குத் தெரிந்துவிடும் அல்லவா? அந்தப் பெயர்களைப் பார்ப்போம்.
முன்பு நாம் ஆராய்ந்த சுதாஸின் எதிரிகளான தசராஜர்கள் தஸ்யூக்கள்என்று சொல்லப்பட்டனர். தத்துவ ரீதியாக தசராஜன் என்பதன் பொருளைக் கண்டோம். அந்தப் பெயரில் அரசர்கள் இருந்த்தார்கள் என்பதும் புராணங்கள் மூலம் தெரிகிறது.
சுதாஸ் மொத்தம் 30 பேரை வென்றான் என்றும் சொல்லப்படுகிறது. அவர்களுள் 13 முதல் 16 பெயர்கள் புரோஹிதர் பெயர்கள் என்று 14- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாயனர் என்னும் உரையாசியர் கூறுகிறார்.
அந்த 30 பெயர்களில் 5 பெயர்கள் ரிக் வேதத்தில் பிற இடங்களிலும் வருகின்றன.
அவை பஞ்ச-மானவர்கள் அல்லது ஐந்து வித மக்கள் என்று ரிக் வேதத்தில் சொல்லப்படுகின்றனர்.
அவர்களுக்கிடையே சண்டை நடந்தது.
அவர்களுக்கு ஆரியர்கள்  அல்லது தஸ்யுக்கள் என்ற குறியீடு வருகிறது.
அவர்கள் ஊர்-பேர் தெரியாத மக்கள் அல்லர்.
அவர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்லர்.
அவர்கள் யயாதி என்னும் மன்னனின்  ஐந்து பிள்ளைகளான,
யது, துர்வசு, த்ருஹ்யு, அநு, புரு என்பவர்கள்.
இவர்களுக்குள்ளேயே சண்டை நடந்தது.
இவர்களைப் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்தில் காணப்படுகிறது.
ஒரு சமயம் இவர்களில் சிலரை ஆரியன் என்றும், சிலரை தஸ்யு என்றும் ரிக் வேதம் அடைமொழியாக கூறுகிறது.
வேறு இடங்களில் இந்த அடைமொழி மாறிப்போய் விடுகிறது.
அதாவது ஆரியர்கள் என்று அழைக்கப்பட்ட இந்தப் பஞ்சமானவர்களுள் சிலர் தஸ்யூக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
தஸ்யூக்கள் என்றழைக்கப்பட்ட மானவர்கள் வேறு இடங்களில் ஆரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இப்படி மாறி மாறி வருவதால் ஆரியன், தஸ்யு என்பவை இனப் பெயர்கள் அல்ல, ஒருவரைச் சித்தரிக்கப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் என்று தெரிகிறது.
ஆரிய- தஸ்யு போராட்டம் என்பது ஒளிக்கும், இருளுக்கும் நடந்த போராட்டம் என்று தத்துவார்த்தமாகச் சொல்லலாம்.
இருளை விரட்டும் ‘விடியல்’ (உஷஸ்) பற்றிய பாடல்கள் ரிக் வேதத்தில் உள்ளன.
இதே போன்ற கருத்தை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் பாடலிலும் காணலாம். அகத்திய முனிவர், ராவணனுடன் போர் ஆரம்பிப்பதற்கு முன் ராமனுக்கு உபதேசிக்கும் மந்திரம் இருளை விரட்டும் ஆதித்ய ஹ்ருதயம் என்னும் பாடல் ஆகும். அதன் முடிவில் நடுநிசியின் தலைவனுக்குத் துன்பம் கொடுப்பவன் ஆதித்யன் என்று சூரியனைப் பற்றிச் சொல்லப்படுகிறது. அந்த உபதேசத்தைப் பெற்று, ஆதித்தன் என்னும் சூரிய பகவானை வேண்டி ராமன், ராவணனை அழித்தான்.
சூரியன், இருளை அழிப்பது போல, ராமன் ராவணனை அழித்தான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

எதிரியை வீழ்த்த நினைப்பவன் இன்றைக்கும் இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை நியமத்துடன் சொல்லி வந்தால், அந்த எதிரியை வீழ்த்தலாம்.
தனக்கு நேரிடும் துர்பலன்களையோ, கர்ம வினையையோ வீழ்த்த நினைப்பவன், ஆதித்ய ஹ்ருதயத்தைத் தியானத்தில் ஏற்றி வீழ்தத முடியும். 

சில பெயர்கள் இடம் பெற்றிருந்தாலும், 
 அவை குறிப்பிட்ட குணாதிசயங்களின் காரணமாக ரிக் வேதத்திலும், ஆதித்ய ஹ்ருதயம் போன்றவற்றிலும் வருகின்றன.
அவற்றிலுள்ள முடிவான பொருள் நல்லவை- தீயவை இவற்றுக்கிடையே இருக்கும் மோதல் என்பதே. 


ஆதித்ய ஹ்ருதயம் என்னும் சம்ஸ்க்ருதப் பாடலைத் தந்தவர் தமிழுக்கு முதன் முதலில் இலக்கணம் வகுத்த அகத்தியர் ஆவார்.
அவரிடம் இந்தப் பாடலை உபதேசமாகப் பெற்றவர் ஆரியன் என்று திராவிடவாதிகள் வெறுக்கும் ராமன்.
தமிழ் ஆசானாக அகத்தியர் இருந்ததால், அகத்தியர் என்னும் திராவிடனிடம், ஆரிய ராமன் உபதேசம் எடுத்துக் கொண்டான் என்று சொல்லலாமே!
ராமனையே இந்தத் திராவிடவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ரிக் வேதத்தில் வரும் தஸ்யூக்கள் யார் என்று இவர்கள் அறிந்து கொண்டால் என்ன செய்வார்கள்?
முக்காடு போட்டுக் கொண்டு ஓடி ஒளிந்து கொள்வார்களா?
ஏனென்றால், தஸ்யுக்கள் என்று மாற்றி மாற்றி சொல்லபப்டும் பஞ்சமானவர்களது தந்தை, ராமனது வம்சாவளியிலும் வருகிறார்.கிருஷ்ணனது வம்சாவளியிலும் வருகிறார்.
பகுதி 13-இல் கொடுக்கப்பட்ட ராமனது சூரிய வம்சாவளியில் ராமனது தந்தையான  தசரதனது கொள்ளுத்தாத்தா யயாதி என்பவர்.
அவரைப் பற்றி சுமந்திரன் என்னும் தன் தேரோட்டியிடம் தசரதன் பேசுவதையும் அந்தப் பகுதியில் கண்டோம்.
அதே யயாதி புரூரவஸ் வம்சமாகிய சந்திர வம்சத்திலும் வருகிறார்.
தாய், தந்தை வழியில் வேறு வேறு வம்சமாக இருக்க வேண்டும்.
அதனால் யயாதி இப்படி இரண்டு வம்சங்களிலும் சொல்லப்பட்டிருக்கலாம். அந்த யயாதியின் ஐந்து மகன்கள் பஞ்ச-மானவர்கள் என்று ரிக் வேதத்தில் அழைக்கப்படுகின்றனர்.
இதனால் ராமனது வம்சத் தொடர்பு கொண்ட மக்களிடமிருந்து தாங்கள் வந்தவர்கள் என்று திராவிடவாதிகள் ஒத்துக் கொள்கிறார்களா?


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 


இன்னொரு வகையில் கிருஷ்ணனது தொடர்பு வருகிறது.
பஞ்ச மானவர்களுள் ஒருவன் யது என்பவன். அவன் வம்சாவளியினர்யாதவர் எனப்பட்டனர்.
அந்த வம்சாவளியில் கிருஷ்ணர் பிறந்தார்.
இந்த யதுவையும் சேர்த்து ஐந்து சகோதரர்களையும் தஸ்யு என்று சுதாஸ் அழைக்கிறான்.
எனவே கிருஷ்ணர் பரம்பரைத் தொடர்பும் திராவிடர்களுக்கு இருக்கிறது என்று நம் தமிழ் நாட்டுப் பகுத்தறிவுவாதிகளான திராவிடப்பிரியர்கள் ஒத்துக் கொள்கிறார்களா?


தஸ்யு என்பவர்களே திராவிடர்கள் என்று இன்னும் இவர்கள் சொல்லிக் கொண்டால்,
சுத்தமான சம்ஸ்க்ருதம் பேசி,
சரஸ்வதி நதியில் குளித்து,
யாக வழிபாடுகளைச் செய்த மக்களது பரம்பரையில்
தாங்கள் வந்தவர்கள் என்று இவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்!

ஏனென்றால் இந்தப் பஞ்ச மானவர்களும், சரஸ்வதி நதிப் பகுதியைச் சுற்றியே தங்கள் அதிகாரத்தை நிலை நாட்ட முயன்றனர்.
இவர்கள் சிந்துவுக்கு அப்பால் ஐரோப்பாவிலிருந்து வரவில்லை.
இவர்களுள் யது என்பவன், யமுனைக் கரையில் உள்ள மதுராவில் ஆரம்பித்து, ராஜஸ்தான், மஹாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளை ஆண்டவன்.
துர்வசு என்பவன் சரஸ்வதி நதியின் தென் கிழக்குப் பகுதியில், வங்காள விரிகுடாப் பகுதியை ஒட்டியிருந்த இடங்களை ஆண்டவன்.
அநு என்பவன் பஞ்சாப் மாநிலத்துக்கு அப்பால் மேற்கே இருந்த பகுதிகளை ஆண்டவன்.
த்ருஹ்யு என்பவன் காந்தாரம் என்ப்படும், இன்றைய காந்தஹார் பகுதகளை உள்ளடக்கிய ஆஃப்கனிஸ்தானம், பாகிஸ்தான் பகுதிகளை ஆண்டவன்.
புரு என்பவன் சரஸ்வதி நதி தீரப்பகுதிகளை ஆண்டான். அவனே சந்திரவம்ச அரசனாக அங்கீகரிக்கப்பட்டான்.
மேலே கூறப்பட்ட பகுதிகள் எல்லாம், வட இந்தியப் பகுதிகள். பாகிஸ்தானும், ஆஃப்கனிஸ்தானும் பாரதத்தின் பகுதிகளாக சுதந்திரம் பெறும் வரை இருந்தன. இந்தப் பகுதிகளை ஆண்ட சகோதரர்களிடையே ஏற்பட்ட சண்டையைப் புராணங்களின் மூலம் அறிகிறோம்.
அந்தச் சண்டையை ஒட்டி ரிக் வேதப் பாடல்கள் அமைந்துள்ளன.
இந்த ஐவரில் எந்தெந்த அரசனுக்கு உறுதுணையாக எந்தெந்த ரிஷி இருந்தாரோ அவர் அதன் அடிப்படையில் தனது அரசனுக்கு வெற்றியை வேண்டிப் பாடியிருக்க வேண்டும்.
ரிக் வேதப் பாடல்கள் துதிப்பாடல்கள் ஆகும்.
இந்திரன், அக்னி, வருணன், மித்திரன் போன்ற பல தேவதைகளைத் துதித்து, தங்கள் அரசனுக்கு வெற்றியை வேண்டியிருக்கின்றனர்.
வெல்லப்பட வேண்டிய எதிராளியை தஸ்யு என்றார்கள்.
தனது அரசனை ஆரியன் என்றார்கள்.
இதுதான் வேதத்தில் காணப்படும் உள்கதை.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

இதை மொழி ஆராய்ச்சி என்ற பெயரில் திரித்து, தங்கள் கற்பனையை அவிழ்த்துவிட்டு, அதில் ஆதாயம் தேடிய மாக்ஸ் முல்லர், கால்டுவெல்போன்றவர்கள்தான் உண்மையிலேயே அன்னியச் சக்திகள்.
நம்மை அடிமைப்படுத்த வந்த சக்திகள்.
1866 ஆம் வருடம், ஏப்ரல் 10 ஆம் தேதி லண்டனில்
ஏஷியாடிக் சொசைட்டியின் அங்கத்தினர்கள் கூடி ஆலோசனை செய்தனர். இந்த சொசைட்டியின் அங்கத்தினர்கள் இண்டாலஜி என்ற பெயரில் நம் நூல்களை ‘ஆராய்ந்தனர்’.
இவர்களுள் ஒருவர் கூட இந்தியர் கிடையாது.
இந்தியாவின் உயிர்நாடியான ராமன், கிருஷ்ணன் கதைகளைப் பொருட்படுத்தியது கிடையாது.
முறையாக சமஸ்க்ருதம் பயின்றது கிடையாது.
ஹிந்து மதத்தை ஒரு பாமர மதமாகப் (primitive religionபார்த்தவர்கள் இவர்கள்.
இவர்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்த காலம், இந்தியாவில் சுதந்திர தாகம் எழும்பிக் கொண்டிருந்த காலம்.
இந்தியர்களை அடக்குவதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த காலம்.
இவர்களது ஆதிக்க அரசியலுக்கு எளிய வழி தேடிக் கொண்டிருந்த காலம். அந்த எளிய வழி ஆரியப் படையெடுப்புக் கதையைப் பரப்புவதில் இருக்கிறது என்று கருதினர்.
ஆரியப் படையெடுப்புக் கதையைப் பரப்பி, அதன் மூலம் தாங்கள் அன்னியர்கள் அல்லர். தாங்கள் இந்திய மக்களது முன்னோர்களது நாட்டைச் சேர்ந்தவர்கள் என்னும் கருத்தை விதைக்க வேண்டும் என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்தனர்.
அதன் முதல் படியாக, பாடப்புத்தகங்களில் ஆரியப் படையெடுப்புக் கதையைப் புகுத்த முடிவு செய்யப்பட்டது.
ஆக மொழி ஆராய்ச்சி என்று இவர்கள் ஆரம்பித்தது அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.
இவர்களது சூழ்ச்சிக்குத் தமிழன் பலியானது கேவலமானது.
அந்தக் கேவலத்திலிருந்து இன்னும் வெளி வராதது, வடி கட்டின முட்டாள்தனம்.
இனியாவது ஆரியன் யார், தஸ்யு யார் என்று ரிக் வேதம் சொல்வதைத் தமிழன் தெரிந்து கொள்ள வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

பஞ்சமானவர்கள் எனப்பட்ட ஆரிய  தஸ்யூக்களான அந்த ஐந்து சகோதர்களது கதையைத் தெரிந்து கொள்வோம்.
யயாதி என்னும் மன்னன் இருந்தான். அவனுக்கு ஆங்கிரஸ் என்னும் தேவகுரு ஆசிரியராக இருந்தார். இந்த விவரம் இங்கு தேவை. பாரதப் பாரம்பரியத்தில் தேவ  அசுர வேறுபாடுகள் கவனிக்கப்பட்டன. மனிதன் தேவனாக இருக்க முயல வேண்டும், அசுரனாக இருக்கக்கூடாது என்பது குறித்த விவரங்கள் முன்பே பார்த்தோம். யயாதியின் குரு ஆங்கிரஸ் என்றால், அவன் தேவப் பண்புகளைக் கொண்டிருந்தான் என்பது பொருள்.
ஆனால் அவன் அசுரர்களது குருவான சுக்கிராச்சாரியாரது மகளானதேவயானையை மணந்தான்.
அசுர அரசனான வ்ருஷபர்வன் என்பவது மகளான சர்மிஷ்டை என்பவள் தேவயானையின் நெருங்கிய தோழியாவாள்.
தேவயானையின் திருமணத்திற்க்குக் கொடுக்கப்பட்ட சீதனமாக அவள் தேவயானைக்குப் பணிவிடை செய்ய அனுப்பப்பட்டாள்.
அரசகுமாரியாக இருந்தாலும், குருவின் மகளுக்குப் பணிவிடை செய்ய அவள் அனுப்பப்பட்டதிலிருந்து, அந்நாளில் குருவுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.
யயாதி அவளிடம் மயங்கி விடக் கூடாது என்ற எண்ணம் காரணமாக சர்மிஷ்டை தனியாகவே வைக்கப்பட்டாள்.
அப்படியும் யயாதியும் சர்மிஷ்டையும் சந்தித்து, காதல் கொண்டு, ரகசியமாக மண வாழ்க்கை வாழ்ந்தனர்.
தேவயானைக்கு யது, துர்வசு என்னும் இரண்டு மகன்களும், சர்மிஷ்ட்டைக்கு த்ருஹ்யு, அனு, புரு என்னும் மூன்று மகன்களும் பிறந்தனர்.
பின்னாளில் தேவயானைக்கு, யயாதிக்கும் சர்மிஷ்ட்டைக்கும் உள்ள தொடர்பு தெரிய வந்தபோது கலவரம் வெடித்தது.
இருவரது மகன்களுக்கிடையே வெறுப்பு வளர்ந்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

தேவயானை தன் தந்தை வீட்டுக்குப் போய் விட்டாள்.
தன் மகளுக்கு யயாதி துரோகம் செய்ததை அறிந்த சுக்கிராச்சாரியார், யயாதி தன் இளமையை இழந்து, உடனடியாக முதுமை அடைய வேண்டும் என்று சாபம் இட்டார்.
ஆனால் யாராவது அவனுக்குத் தன் இளமையைக் கொடுத்து, முதுமையை வாங்கிக் கொண்டால் சாப நிவர்த்தி ஆகும் என்றும் சொன்னார். 
அதனால் யயாதி தன் மகன்களிடம் இளமையைத் தருமாறு வேண்டினான். முதல் நான்கு மகன்களும் தங்கள் இளமையைத் தர ஒப்புக் கொள்ளவில்லை. கடைசி மகனான புரு என்பவன் ஒப்புக் கொண்டான்.
அதன்படி யயாதி இளமையைப் பெற்றான்.
புரு இளம் வயதிலேயே முதுமைத் தோற்றம் அடைந்தான்.
முடிவில் யயாதி தான் பெற்ற இளமையைப் புருவுக்கே கொடுத்து, அவனையே அரசனாக்கினான். 
                  yayati.bmp
                      
கங்கைக்கும் யமுனைக்கும் இடையில் உள்ள சரஸ்வதி நதிதீரப் பகுதி அவனது நாடு.
அதன் அரசுரிமையைத் தன் கடைசி மகனான புருவுக்கே கொடுத்தான்.

 

இது யது முதலான மற்ற சகோதரர்களுக்குப் பிடிக்கவில்லை.
அவர்கள் சார்பாக ரிஷிகள் யயாதியிடம் பேசினர்.
என்ன விளைவாக இருந்தாலும், தந்தை சொல்லைத் தனயன் தட்டக் கூடாது, என் வேண்டுகோளை நிராகரித்த இவர்களுக்கு நாடு கிடையாது.
நாட்டை விட்டு இவர்கள் வெளியேறட்டும் என்றார்.
இதைப் பொறுக்காமல், இந்த ஐந்து சகோதரர்களும் தங்களுக்கென நாட்டுக்காகச் சண்டையிட்டனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

கடைசியில் இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று மஹாபாரத்த்தில்வைசம்பாயனர் கூறுகிறார். (1-85)
யதுவின் மகன்கள் யாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

துர்வசுவின் மகன்கள் யவனர்கள் என்றாயினர்.
த்ருஹ்யுவின் மகன்கள் போஜர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

அநுவின் மகன்கள் மிலேச்சர்கள் ஆயினர்.
விஷ்ணு புராணத்திலும் (4-17) இவர்களுக்கு என்ன ஆனது என்று சொல்லப்படுகிறது. பாகவத புராணம், வாயு புராணம், ப்ரம்மாண்ட புராணம், மத்ஸ்ய புராணம் போன்றவற்றிலும், இந்த சண்டையும், அதன் முடிவில், இந்த சகோதரர்கள் தாம் பிறந்த நாட்டை விட்டு வெளியேறி வெவ்வேறு இடங்களில் குடி பெயர நேரிட்ட விவரங்களையும் காணலாம்.
அப்படி அவர்கள் குடி பெயர்ந்த இடங்கள் அந்த நாளில் இருந்த பாரத வர்ஷம் என்னும் இந்த நாட்டின் பகுதிகளே.
ஆனால் அங்கு பொதுவாக வேத தரும வாழ்க்கையைக் கொண்ட மக்கள் வாழ விரும்பியதில்லை.
புண்ணிய நதிகள் பாயும் வட இந்தியச் சமவெளிப் பகுதியில் வாழவே அவர்கள் விரும்பினர்.
அவர்கள்  குடி பெயர்ந்த இடங்கள் வேத வாழ்க்கையை வாழாதவர்கள் குடியிருக்கும் இடமாகவும் இருந்தது.


த்ருஹ்யு, அநு ஆகிய இருவரும் மிலேச்சர்கள் என அழைக்கப்பட்டதால், அவர்கள் வேத தருமத்தை விட்டு விலகியவர்கள் என்றும் தெரிகிறது. அப்படிப்பட்டவர்களை தஸ்யு என்றும் அழைப்பார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

த்ருஹ்யூவின் மகன்கள் யவனர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்று மஹாபாரதம் கூறுவது ஒரு முக்கியக் கருத்து.
பொதுவாக கிரேக்கர்களை யவனர்கள் என்று அழைப்போம்.
தமிழ் நாட்டுக்கும் யவனர்கள் வந்து வியாபாரம் செய்திருக்கின்றனர்.
ஆனால் வியாபரம் செய்ய வந்த யவனர்கள் நாட்டுக்குள் தங்க அனுமதிக்கப்பட்டதில்லை.
அந்த யவனர்கள் வேத-தரும வாழ்க்கை வாழ்ந்தவர்கள் இல்லை.
அவர்கள் ஊருக்கு வெளியில்தான் தங்கினார்கள்.
ஊர்ப்புறத்தில் ஒதுக்கி வைத்தல், தீண்டாமை என்பது எப்படி ஆரம்பிக்கிறது என்பதைக் கவனிக்கவும்.
காலப்போக்கில் த்ருஹ்யு மற்றும் அநுவின் சந்ததியினர் உதீச்ய தேசம்அதாவது வட பகுதிகளுக்குக் குடி பெயர்ந்துவிட்டனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
த்ருஹ்யுவின் மகன்கள் காந்தார தேசத்திலும் குடி பெயர்ந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. இன்றுள்ள ஆஃப்கனிஸ்தானம், துருக்கி போன்ற பகுதிகளில் அவர்கள் பரவ ஆரம்பித்தனர்.
அந்த காந்தார வம்சத்தில் வந்தவன் சகுனி.
அவன் சகோதரியான காந்தாரி கௌரவர்களது தாய்.
சகுனிக்கு யது வம்சத்தில் வந்த கிருஷ்ணனைப் பிடிக்காததற்குக் காரணம், இந்தப் பழைய பகைமையைத் தெரிந்து கொண்டதால் நமக்குப் புரியும்.
அதுபோல காந்தாரி கிருஷ்ணனுக்கும் அவனது குலத்துக்கும் சாபமிடுகிறாள். கிருஷ்ணனைத் தெய்வமாகப் பலரும் அந்த நாளில் அறிந்திருந்த போதிலும், இவர்களைப் போன்ற சிலரால் கிருஷ்ணனுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை ஒத்துக் கொள்ள முடியவில்லை.
யார் யாரெல்லாம் அப்படி ஒத்துக் கொள்ளவில்லை என்று பார்த்தால் அங்கு ஒரு பழைய பகைமை இருப்பதைக் காணலாம்.
அவற்றுள் சிலவற்றை இந்தத் தொடரில் ஆங்காங்கே தெரிந்து கொள்வோம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

அதைப் போலவே அநுவின் சந்ததியரான மிலேச்சர்களும் வேத-தரும வாழ்க்கையை விட்டவர்கள்.
அவர்களுக்கு வேத வழியில் வாழ்ந்தவர்களிடையே அங்கீகாரம் கிடையாது. மஹாபாரத யுத்தத்தில், மிலேச்சர்களும், யவனர்களும், கிருஷ்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் எதிர்ப்புறத்தில் நின்று போரிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சகோதரர்களது வம்சாவளியை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் சில முக்கியக் கருத்துக்களைக்  கூறுகிறார்கள்.
அநு என்பது சுமேரிய நாகரிகம், ஈரான், ஈராக், பாரசீகம், அசிரியா போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளில் பிரசித்தமான தெய்வம் ஆகும்.
இந்த இடங்கள் மிலேச்சர் இடங்கள் என்று சொல்லப்படுபவை.
டேரியஸ் என்னும் பாரசீக மன்னன் தன்னை ஆரியன் என்று கூறிக்கொள்ளூம் ஒரு கல்வெட்டு உள்ளது.
இதையெல்லாம் பார்த்து ஜெர்மானியர்கள் உட்பட்ட ஐரோப்பியர்கள் தாங்களே ஆரியர்கள், தங்கள் மூதாதையரே இந்தியாவின் மீது படையெடுத்தனர் என்று நினைத்தனர்.
அது தவறு.
கிழக்கு ஆசியாவின் சுமேரிய நாகரிகம் மற்றும், ஐரோப்பாவின் மனித நாகரிகச் சுவடுகள் எல்லாம் கடந்த 5000 ஆண்டுகள் முன்னர்தான் தோன்றின.
ரிக்வேதமும், புராண, மஹாபாரதமும் சொல்லும் பஞ்ச-மானவ சண்டை நடந்த காலம் ராமனது காலத்துக்கு முற்பட்டது.
ராமனுக்கு மூன்று தலைமுறை முன்னால் யயாதி இருந்தான்.
ராமாயணத்தில் வரும் கிரக சூழ்நிலைகளின் அடிப்படையில், ராமன் கி-மு- 5114 இல் பிறந்தான் என்று பகுதி 14 இல் பார்த்தோம்.
ஒரு நூறு வருடங்களில் மூன்று தலைமுறை இருக்கமுடியும் என்று கணக்கிட்டால், ராமனுக்கு 100 வருடங்கள் முன்னால் இந்த சண்டைகள்
நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
அதாவது இன்றைக்கு 7,200 வருடங்களுக்கு முன்னால், பஞ்சமானவ சண்டை நடந்திருக்கிறது.
அதைக் குறிக்கும் ரிக் வேதப்படல்கள் எழுதப்பட்டு 7,200 வருடங்கள் ஆகிவிட்டன.
7,000 வருடங்களுக்கு முன்பே வட இந்தியப் பகுதியிலிருந்து இந்த மக்கள் வட மேற்கு, மேற்கு நோக்கி குடி பெயர்ந்திருக்கின்றனர்.
அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் விவரங்கள், இலக்கிய விவரங்கள் போன்றவை பாரத தெய்வங்கள், ஆரியன் போன்ற பாரதக் கருத்துக்களை ஒட்டியிருப்பதில் அதிசயமில்லை.
ஆனால் அந்தக் கருத்துக்களை மையமாகக் கொண்டு அங்கிருந்துதான் ஆரியன் இந்தியாவுக்கு வந்தான் என்றால் அது சரியில்லை.
பாரதத்தின் சரித்திரம் அவற்றைப் பொய் என்று நிரூபிக்கின்றன.
அந்த தேசங்கள் பாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை மாஹாபாரதம் மூலம் அறியலாம்.
பாரதப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னால், திருதராஷ்டிரனது தேரோட்டியான சஞ்சயனுக்கு, வியாச முனிவர் தூரதிருஷ்டிப் பார்வையைக் கொடுக்கிறார். அதன் மூலம் எங்கோ நடப்பதையும் காண முடியும்.
அந்தப் பார்வையின் மூலம், குருக்ஷேத்திரத்தில் நடக்கும் சண்டையை உடனுக்குடன் கண்டு, கண்பார்வை இழந்த திருதராஷ்டிரனுக்கு அவன் சொல்ல வேண்டும்.
அதற்கு முன் அவன் இந்த உலகில் உள்ள மற்ற தேசங்களையும், பாரத தேசத்தின் அமைப்பையும் கண்டு அரசனுக்குச் சொல்கிறான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

பாரத தேசத்தை விவரிக்கையில், அதன் வடக்குப் பகுதியில் உள்ள நாடுகளென மிலேச்சம், க்ரூரம், பாரசீகம், யவனம், சீனம் என்று இன்று நமது நாட்டைச் சேராத இடங்களையும் சொல்லுகிறான் சஞ்சயன்.
இவையெல்லாம் சேர்ந்த நாடாக பாரத வர்ஷம் இருந்திருக்கிறது.
(வர்ஷம் என்றால் வர்ஷித்தல், பொழிதல் என்று பொருள்.
உயிரினங்களுக்குத் தேவையான உணவு முதலியவற்றைப் பொழிவதால் நாடு என்பதற்கு வர்ஷம் என்ற பெயர் வந்தது)
ஸ்கந்த புராணத்திலும், யவன நாடு பாரத வர்ஷத்தின் ஒரு பகுதியாகச் சொல்லப்படுகிறது.
பகுதி 28- இல் விக்கிரமாதித்தன் வென்ற பாலிகா பகுதியை (மெக்கா இருக்கும் அராபியப்பகுதி) பாரத வர்ஷத்தின் ஒரு பகுதியாக ஸ்கந்த புராணம் பட்டியலிடுகிறது.
இப்படிப் பரந்த தேசமாக இருந்த பாரதத்தில் எந்தெந்தப் பகுதியில் உள்ள மக்கள் எந்தெந்த யுத்தத்தில் வல்லவர்கள் என்று பீஷ்மர், யுதிஷ்டிரரிடம்சாந்தி பர்வத்தில் (அத் 101) சொல்கிறார்.
காந்தாரம் மற்றும் சிந்து நதிப்பகுதியில் உள்ள மக்கள் உடல் பலத்தாலும், நகத்தாலும், ப்ராஸம் என்னும் ஆயுதத்தாலும் யுத்தம் செய்வதில் வல்லவர்கள்.
யவனர்கள் குதிரைச் சண்டையில் வல்லவர்கள்.
பாரதத்தின் தென் பகுதியில் உள்ளவர்கள் கத்தி, கேடயம் கொண்டு யுத்தம் செய்வதில் வல்லவர்கள் என்கிறார்.
தென் பகுதி என்பது தமிழ்நாட்டுப் பகுதிகளைக் குறிக்கும்.
தமிழ் நாட்டில் கத்தி- கேடயம் கொண்டு சண்டை போடுவது பிரசித்தம்.
போர்க் கருவிகள் செய்யும் கொல்லப் பட்டறைக்கு இடைவிடாத வேலை இருந்தது என்று பழந்தமிழ் நூல்கள் மூலம் அறிகிறோம்.
எனவே தமிழ் நாட்டானது யுத்தத் திறமை வேறு, சிந்து நாட்டானது யுத்தத் திறமை வேறு என்று மேற்சொன்ன பகுதி தெரிவிக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சிந்து நதிப் பகுதி, வட இந்தியப் பகுதி என ஆரிய- தஸ்யுப் பகுதிகளுக்கும், அங்கு அந்தச் சண்டை போட்ட மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
அதிலும் குறிப்பாக தஸ்யு என்பதைப் பிடித்துக் கொண்டு அவர்களே விரட்டப்பட்ட திராவிடர்கள் என்றால், அந்தத் திராவிடர்களே தமிழர்கள் என்றால், இந்தத் திராவிடவாதிகள் தாங்கள் வேத மரபில் வந்தவர்கள் என்று ஒத்துக் கொள்ள நேரிடும்!
ராமனும், கிருஷ்ணனும் வந்த பரம்பரையில் தாங்களும் வந்தவர்கள் என்று ஒத்துக் கொள்ள நேரிடும்!
அது மட்டுமல்ல, பல ஆயிரம் வருடங்களுக்கும் முன்பிருந்தே தேவர்கள் குலத்து சம்பந்தம் கொண்டவர்கள் என்பதையும் ஒத்துக் கொள்ள நேரிடும்!!
ஆம். தேவ குல சம்பந்தம் இருக்கிறது.
அதை அடுத்த பகுதியில் காண்போம்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard