New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வடக்கிலிருந்து வந்தவர்கள் சோழர்கள்!


Guru

Status: Offline
Posts: 24603
Date:
வடக்கிலிருந்து வந்தவர்கள் சோழர்கள்!
Permalink  
 


11. வடக்கிலிருந்து வந்தவர்கள் சோழர்கள்!

 


இந்திர விழா காண்பதற்குவட சேடியிலிருந்து வித்யாதரத் தம்பதியர்வந்தனர் என்று பார்த்தோம். புகார் நகரில் நடக்கும் இந்திர விழாவில்என்னவெல்லாம் காணலாம் என்று வித்யாதரன் தன் காதலிக்குச் சொல்லிக் கொண்டு வருகிறான். அப்படி அவன் சொல்லும் ஒரு இடம்நாளங்காடி என்னும் ஒரு கடைத்தெரு. அந்தக் கடைத் தெருவில்நாளங்காடிப் பூதம் என்னும் பூதம் குடி கொண்டுள்ளது. பூதம் என்றால் ஏதோ பேய்பிசாசு என்றோஅதனால் அது ஒரு மூட நம்பிக்கை என்றோ நினைக்க வேண்டாம். வழி வழியாக சோழநாட்டு மக்கள் அதனை வணங்கி வந்துள்ளனர். தெய்வ சக்தி கொண்ட ஒன்றாக அது இருக்கவேஅதற்கு மக்கள் பொங்கலிட்டுபூஜை செய்து வணங்கி வந்தனர். இதனைஇளங்கோவடிகள் இந்திர விழாவூரெடுத்த காதையில்  விவரித்துள்ளார். அந்தப் பூதம் அங்கு வந்த  கதையைவித்யாதர இளைஞன் தன்  காதலிக்கு விவரிக்கிறான். அந்தக் கதையில் இந்திரன் தொடர்பு வருகிறது.


ஒரு முறை தேவலோகத்திலிருந்த அமிர்தம் கவர்ந்து செல்லப்பட்டது. அதை மீட்டுக் கொண்டு வர தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் செல்கிறான். அவன் இல்லாத நேரத்தில் அவனது ஊரான அமராபதியை,அசுரர்கள் தாக்கக்கூடும் என்று கருதிபாதுகாப்புக்கு யாரை வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, முசுகுந்தன்  என்னும் அரசன்,தான் காப்பதாகக் கூறினான். அவனைக்  காவலுக்கு வைத்த போது,கூடவேஅவனுக்குப் பக்கபலமாக ஒரு பூதத்தை நிறுவினான் இந்திரன். 

எதிர்பார்த்தது   போல அசுரர்கள் அமராபதியைத் தாக்கினார்கள்.அவர்களால் அந்த நகரம் இருள் அடைந்தது. அப்பொழுது அந்தப் பூதம் இருள் நீக்க உதவியது. அதனால் முசுகுந்தன் அசுரர்களை வெல்ல முடிந்தது. திரும்பி வந்த இந்திரன் நடந்ததைக் கேள்விப்பட்டான். பூதம் முசுகுந்தனுக்கு உதவியதை அறிந்து மகிழ்ந்துஅந்தப் பூதத்தை முசுகுந்தனுக்கே அளித்து விட்டான். அப்படி பெறப்பட்ட பூதத்தைப் புகார் நகரில் நிறுவினான். அந்தப் பூதமே நாளங்காடிப் பூதம் எனப்பட்டது.  


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இங்கு சில  கேள்விகள்  வருகின்றன. தான் பெற்ற பூதத்தைப் புகார் நகரத்தில் நிறுவினதால்முசுகுந்தனுக்கும்புகாருக்கும் என்ன தொடர்பு?முசுகுந்தன் யார் 
சோழன் நகரமான புகாரில் அவனுக்கு என்ன வேலை

முசுகுந்தனைப் பற்றி மகாபாரதத்தில் விவரங்கள் இருக்கின்றன. அவன் ராஜ ரிஷியாகவும்பல நாடுகளைத் தன் கீழ் கொண்டு வந்த சக்கரவர்த்தியாகவும் போற்றப்படுகிறான். அவனுடன் சம்பந்தப்பட்ட இடங்கள் எல்லாம் கங்கைக் கரையில் இருக்கின்றன. அவனுக்கும் புகார் நகருக்கும் என்ன தொடர்பு  என்று பார்த்தால், நாளங்காடிப் பூதத்தைப் பெற்ற விதத்தை 'அமரனிற் பெற்றுதமரில் தந்து" என்கிறது சிலப்பதிகாரம். அதாவதுஅமரன் என்று சொல்லபப்டும் இந்திரனிடமிருந்து பெற்றதைமுசுகுந்தன் தன் தமருக்குஅதாவது தன்னைச்சேர்ந்தோருக்குத் தந்தான் என்று பொருள் அமைகிறது. அதாவது சோழர்கள் முசுகுந்தனுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிகிறது. அந்தத் தொடர்பு என்ன என்பது 
1905 -ஆம் வருடம் திருவாலங்காடு  என்னும் இடத்தில்கண்டெடுக்கப்பட்டுள்ள செப்புத் தகடுகளின் மூலம் தெரிகிறது. 


சமீபத்தில் விழாக் கண்ட தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜ ராஜ சோழனின் மகனான முதலாம் ராஜேந்திர சோழன்  ஆட்சிக் கட்டில் ஏறியஆறாம் ஆண்டு எழுதப்பட்டவை அவை.  பல கோவில்களுக்குக் கொடுக்கப்பட்ட தானங்களைக்  குறிக்கும் அந்தத் தகடுகளில்சோழர் வம்சாவளி எழுதப்பட்டுள்ளது. இன்றைக்கு நாம் அறிந்த சோழர்கள் பிற்காலச் சோழர்கள். சிலப்பதிகாரம் நடந்த காலத்துக்குப் பிறகு வந்தவர்கள். ஆனால் சோழர் வம்சம்பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் முன்னால் எங்கோ நீண்டு கொண்டே போகிறது. அப்படிச் செல்லும் வம்சத்தில்முசுகுந்தனைப் பற்றியும் அந்த ஏடுகளில் எழுதப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் விட அரிய செய்தி 
எந்த மனு தர்மத்தை இன்று திராவிட விரும்பிகள் சாடுகிறார்களோஅந்த மனுவின் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்!



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

செப்பேடுகளில் கொடுக்கப்பட்டுள்ள வம்சாவளியைப் பார்க்கலாம். (1) 
சூரியன்
மனு
இக்ஷ்வாகு
விகுக்ஷி
புரஞ்சயன்
இக்ஷ்வாகு
ககுஸ்தன்
அர்யமன்
அனலப்ரதாபன்
வேணன்
ப்ரித்து
துந்துமாரன்
யுவனாச்வன்
மாந்தாதா

முசுகுந்தன் (இவனே நாளங்காடிப் பூதத்தைஇந்திரனிடமிருந்து பெற்றவன்
வல்லபன் 
ப்ரிதுலக்ஷன் 
பார்திவசூடாமணி 
தீர்கபாஹு 
சந்த்ரஜீத் 
சங்க்ருதி 
பஞ்சபன் 
சத்யவ்ரதன்  (ருத்ரஜீத் எனப்பட்டான்இந்தப்பெயர்களுக்கெல்லாம் காரணம் இருக்கிறது )
உசீனரன் 
சிபி (இவனே புறாவுக்காகத் தன் தசையை அரிந்துகொடுத்தவன்இவனை முன்னிட்டே , சோழர்கள் தங்களைச்'செம்பியன்என்றழைத்துக் கொண்டனர்.)
மருத்தன் 
துஷ்யந்தன் 
பரதன் 
சோழவர்மன்  (இவன்தான் தமிழகத்தில் சோழ நாட்டைஸ்தாபித்துசோழர்கள் ஆட்சியை ஆரம்பித்து வைத்தான்.)

 

ராஜகேசரிவர்மன் 
பரகேசரி 
சித்ரரதன் 
சித்ரச்வன்
சித்ரதன்வன் (இவன் காவேரி ஆற்றைக் கொண்டு வந்தவன்என்கிறது செப்பேடு )
சுரகுரு 
வ்யக்ரகேது  (த்ரேதா யுகத்தின் கடைசி மன்னன்.இவன்தான் புலிச் சின்னத்தை சோழர்கள் கொடியில் பொறித்தவன்.)
இது வரை வரும் வம்சாவளியில், நாம் கவனிக்க வேண்டிய விவரங்கள்:-

 

  • சோழ நாடு ஸ்தாபிக்கப்படட் போது  காவேரி என்னும் நதியே நாட்டில் ஓடவில்லை என்று தெரிகிறது. அப்படி என்றால் சோழ நாட்டின் தொன்மை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்! கி-மு- 1.500 -வந்ததாகச் சொல்லப்படும் சிந்து சமவெளி மனிதன் எங்கே, மலை தோன்றியும், நதி தோன்றாத காலத்திலேயே நகரம் நிர்மாணித்த சோழ வர்மன் எங்கே! எது  தொன்மை வாய்ந்தது? 
  •  மனு, இக்ஷ்வாகு போன்றவர்கள் வம்சத்தில், மிக மிக முற்காலத்தில்  முசுகுந்தன் வந்திருக்கிறான். அப்பொழுது அவன் பெற்ற பூதத்தை அப்போழுதேயோ அல்லது, பிற்காலத்தில் அவன் சந்ததியர் தமிழகப் பகுதியில் சோழ நாட்டை நிர்மாணித்த போதோ , புகார் நகரில் நாளங்காடிப் பூதம் என்று ஸ்தாபித்திருக்கின்றனர். அதைதான் இளங்கோவடிகள் 'அமரனில் பெற்று, தமரிற் தந்து' என்றிருக்கிறார். தெய்வமும், வழிபாடும் பகுத்தறிவல்ல என்னும் திராவிட விரும்பிகள் என்ன சொல்லப்போகிறார்கள்? சோழ நாடு ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னமேயே, அங்கே வணங்கப்போகும்  தெய்வம் வந்து விட்டது. முசுகுந்தச் சகக்ரவ்ர்த்தி முதல், புகார் மக்களையும் சேர்த்து, இன்று வரை கோடானுகோடி தமிழர்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இத்தனைக் கோடி மக்களும் முட்டாள்களா? அல்லது அவர்களது தெய்வ நம்பிக்கையை இழித்தும் பழித்தும் பேசியும் வந்தது மட்டுமல்லாமல், தொன்மை வாய்ந்த தமிழனின் மூலத்தையே  சந்தேஹப் பட்டு, சிந்து சமவெளியில் அந்த மூலத்தைத் தேடும் இந்த திராவிட விரும்பிகள் முட்டாள்களா? 
  • இது வரை சொன்னது த்ரேதா யுகம் வரை வந்த வம்சாவளி என்று செப்பேடுகள் சொல்கின்றன. நிச்சயமாக இவர்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தவர்கள் இல்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் எனலாம். யுகக் கணக்கு என்பது வேறானது என்றும் தெரிகிறது. அந்தக் கணக்கு என்ன என்பதை இந்தத் தொடரில் பிறகு பார்க்கலாம். இது வரை சொல்லப்பட்ட செய்திகளைக் கொண்டு, காவேரி நதி ஆரம்பித்த காலத்தை அறிவியல் முறைகள் மூலம் நிர்ணயம் செய்தால், மிகச் சரியாக சோழர்களது ஆரம்பமும்,. அதன் மூலம் தமிழனது தொன்மையையும் கணக்கிடலாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இனி அந்தச் செப்பேடுகள் தொடர்ந்து சொல்லும் வம்சாவளியைப் பார்ப்போம். 
த்ரேதா யுகம் முடிந்ததும் நரேந்த்ரபதி என்னும் மன்னன் ஆட்சிக்கு வந்தான். அப்பொழுது நடந்த யுகம் த்வாபர யுகம். அந்த யுகத்தின் முடிவில்தான் கிருஷ்ணன் அவதரித்தான். மகாபாரத யுத்தம் நடந்தது. 


இந்தச் செப்பேடுகளும் சோழ பரம்பரையைப் பற்றி இந்த யுகத்தில் அதிகம் சொல்லவில்லை. ஆனால், நாம் ஆச்சரியப்படும் வண்ணம், போன கட்டுரையில் பார்த்தோமே, வட சேடியை ஆண்ட உபரிசர வஸு என்னும் மன்னன் - அவனைச் சோழன் மன்னன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்பேடுகள் தரும் இந்த செய்தி சில முடிச்சுகளை அவிழ்க்கிறது. 

மனுவின் பரம்பரையில் வந்த மன்னர்கள் இமயம் முதல், புகார் வரை, ஏன் அதையும் தாண்டி, இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் அண்ணன் தம்பிகளாக இருந்திருக்கலாம். அவர்கள் ஆங்காங்கே திக் விஜயம் சென்று புது இடங்களைத் தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்து இருக்க வேண்டும்அப்படி தமிழகப் பகுதிக்கு வந்து தனக்கென நாட்டை ஸ்தாபித்தவன் சோழவர்மன். அவன் பெயரை ஒட்டி சோழ நாடு என்னும் பெயர் வந்திருக்கிறது. 


துவாபர யுகத்திலும், சோழ நாட்டை சோழ மன்னர்கள் ஆண்டிருக்க வேண்டும். அல்லது, சேர. பாண்டிய மன்னர்கள் ஆக்கிரமிப்பால், சோழர்கள் பலம் குன்றியிருக்க வேண்டும். மகாபாரதத்தில் வரும் சில விவரங்கள் மற்றும் மகாபாரதக் காலத்தில் தமிழ் நாட்டை ஆண்ட சேர மன்னன் பற்றிய புறநானூற்றுச் செய்யுள்  ஆகிய இவற்றை வைத்துப் பார்க்கும் போது, துவாபர யுகத்தில் சோழர்கள் பலம் குன்றி இருந்தனர் என்று தெரிகிறது. அது செப்பேடுகள் சொல்லும் வம்சாவளியிலும் பிரதிபலிக்கிறது. 


சோழர்கள் சகோதர வழி வம்சாவளியாக வட சேடி மன்னர் பரம்பரை இருந்திருக்கக்கூடும். அதனால் உபரிசர வசுவை தங்கள் வம்சாவளியிலும் குறிப்பிட்டிருப்பார். அந்தக் காலக் கட்டத்தில், சோழர்கள் குன்றி இருந்த காரணத்தால், அந்த நேர் வம்சாவளிச் சொல்லாமல், சகோதர வழி வம்சாவளியில் பெயர் பெற்ற மன்னனான உபரி சர வஸுவைப் பற்றி எழுதி உள்ளனர். அந்தத் தொடர்பு மக்கள் வரையிலும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான், சிலப்பதிகார காலக்கட்டத்தில், அதாவது, இரண்டாயிரம் வருடங்கள் முன்னும்கூட, வட சேடியில் இருந்து மக்கள் புகார் நகருக்கு வந்திருக்கின்றனர். புகார் பற்றிய எல்லாச் செய்திகளும்   அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. உபரி சர வஸு பெற்ற இந்திரக் கொடி, மற்றும் இந்திர விழா போன்றவை சோழ நாட்டின் சொத்துக்களாக ஆகியிருக்கின்றன.

இதிலிருந்து,  வடக்கிலிருந்து வந்தவர்கள் சோழர்கள் என்று தெரிகிறது. தண்டமிழ்ப் பாவை காவேரி என்று அகத்திய முனிவரால் போற்றப்பட்ட காவேரி ஆறு பாய்வதற்கு முன்னாலேயே சோழர் ஆட்சி, தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இந்தத் திராவிட விரும்பிகள் வெறுக்கும் மனுவின் வழி வந்தவர்கள் சோழர்களே என்பதற்கு இவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்?
மனுவின் நீதியைக் காத்தவன் என்பதாலேயே சோழ அரசன் ஒருவன் மனு நீதிச் சோழன் என்ற அழைக்கப்பட்டான். .
அவன் இயற் பெயர் தெரியவில்லை.
ஆனால் மனுநீதிப்படி வாழ்ந்தான்.
அப்படி என்ன மனு நீதி அது?
அரசன் எனபப்டுபவன், தன் நாட்டில் வாழும் ஒவ்வொரு உயிரையும் காக்க வேண்டும். உயிருக்குத் தீங்கு இழைப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
அந்த அரசனது மகன், அதாவது வருங்கால அரசன் ஒரு கன்றுக் குட்டியின் மீது தன் தேரினை ஒட்டி விட்டான். தெரியாமல்தான் செய்தான். ஆனால் அந்தக் கன்றுக் குட்டி இறந்து விட்டது.
அதற்கு அந்த அரசன் தந்த தண்டனை என்ன தெரியுமா?
அந்தக் கன்றுக் குட்டி இறந்ததற்குக் காரணமான, தன் மகன் மீது தேரினைச் செலுத்தி கொலைத் தண்டனை வழங்கினான்.
கன்றுக்குட்டியாக இருந்தாலும் அரசனது கடமை அதைக் காப்பாற்ற வேண்டியது.
மாறாக, அந்த அரசனே அதற்கு யமனாக வந்தால், அவனை மன்னிக்க முடியாது.

இந்த நீதியை அவன் கடை பிடித்ததால் அவன் மனு நீதிச் சோழன் எனப்பட்டான்.
சோழன் என்று மட்டுமல்ல, கோவலனை ஆராயாமால் கொலை செய்ததற்குத் தான் காரணமானதைப் பொறுக்க முடியாமல் உயிர் விட்ட பாண்டியன் நெடுஞ்செழியனும் மனு நீதிக்கு உதாரணமாக  இருந்தவனே.

இந்த நீதி திராவிட விரும்பிகள் சொல்வது போல ஆரியர்கள் கொண்டு வந்து புகுத்தியது அல்ல.
சோழ வம்சத்திலேயே இருந்திருக்கிறது.

கண்ணகியின் காலக்கட்டத்தில், இந்திர விழா நடந்த சமயத்தில் ஒரு விவரம் இளங்கோவடிகளால் சொல்லப்படுகிறது.
விழா நடந்த புகார் நகரில் பண்ட சாலை என்ற சந்தை இருந்தது.
அங்கே, வெளி நாட்டு வணிகர்களும், உள் நாட்டு வணிகர்களும், விற்பனைக்குக் கொண்டு வந்த பொதிகளை இறக்கியிருப்பார்கள். இன்னும்  பிரிக்கப்படாமல், மூட்டை மூட்டையாக அவை அங்கே குவிக்கப்பட்டிருந்ததாம்.
அந்த இடத்துக்கு பாதுகாப்பாக சுவரோ அல்லது காவலோ கிடையாதாம். யாராவது திருடி விட மாட்டார்களா என்றால், திருடுவதற்குப் பயமாம்.
திருடன் மாட்டிக் கொண்டால், அவன் கழுத்து முறியும் வரை அவன் தலையில் அந்தப்  பொதி மூட்டைகளை ஏற்றுவார்களாம்.
அந்தத் தண்டனையை நினைத்து நடுங்கியே, யாரும் அந்தப் பொதிகளைத் தொட  மாட்டார்களாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அது மனு நீதி.
சோழன் சொன்ன நீதி.
அதை அபத்தக் களஞ்சியமாக வருணித்தவன் வில்லியம் ஜோன்ஸ் என்னும் ஆங்கிலேயன்.
அவன் சொன்னவற்றைப் பிடித்துக் கொண்டனர் திராவிட விரும்பிகள்.  
ஆங்கிலேயர்கள் அடி வருடிகளான இந்தத் திராவிட விரும்பிகள்,
நம் தமிழனின் சரித்திரத்தை - அவன் நீதியை மறந்தார்கள்.
மக்கள் மனதில் விஷம் ஏற்றினார்கள்.
கயமையின் மொத்த உருவாக சுயநலவாதிகளாக, ஊழல்வாதிகளாக இன்று காட்சி அளிக்கிறார்கள்.
இன்று மனு நீதிச் சோழன் இருந்தால் அவர்களுக்கு என்ன நீதி வழங்குவான் என்று நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது!  



(1) செப்பேடுகளில் உள்ள செய்திகளின் ஆங்கில மொழி பெயர்ப்பை  இங்கே காணலாம் 



 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சோழ வம்சத்தை ஆரம்பித்தது சோழவர்மன். அவனுக்கு முன்னாலும் புகார் நகரம், சம்பாபதி என்னும் பெயரில் இருந்திருக்கிறது. 11,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட அமைப்பு பூம்புகாருக்கு அருகில் உள்ள கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (பார்க்க 16 ஆவது கட்டுரை). 

அப்படிப்பட்ட முந்தைய காலக் கட்டத்தில் முசுகுந்தனது தொடர்பு புகாருக்கு இருந்திருக்கிறது. நாளாங்காடி பூதத்தை அவன்தான் புகாரில் நிறுவியதாக அடியார்க்கு நல்லார் உரை கூறுகிறது. அப்பொழுது சோழ வம்சம் என்ற வம்சம் ஆரம்பிக்கவில்லை. 
அப்பொழுது சோழர் ஆட்சி ஆரம்பிக்கவில்லை. 

சோழ வம்சம் சோழவர்மனிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. சிபியின் மரபில் வந்த இவனது முன்னோனான சிபி, இந்தியாவின் வட மேற்கில், இன்றைய பாகிஸ்தானில், இந்திய எல்லைக்கருகே வாழ்ந்திருக்கிறான். சிபி என்னும் பெயரில் ஊரும், சிபி என்னும் மக்களும் இன்றும் அங்கு இருக்கின்றனர். அங்கு பேசப்படும் ப்ரோஹி மொழியில் தமிழ் மொழி சாயல் (15 %) இருக்கிறது. அதைக் கொண்டுதான் அங்கிருந்து திராவிடன் வந்தான் என்று 100 வருடங்களுக்கு முன் நினத்தார்கள். ஆனால் இன்று பன்முனை ஆய்வுகள் பலவும் வந்து விட்டன. அவற்றின் மூலம் திராவிடன் என்ற இனம் இல்லை என்றும் ஆரிய திராவிடப் போர் நடக்கவில்லை என்றும் தெரிய வருகின்றன. 

சிபி என்னும் அந்த இடத்துக்கு அருகில் இன்றும் சோளிஸ்தான் என்னும் பெயரில் ஒரு இடம் இருக்கிறது. ஆனால் இந்த இடங்கள் பாரத நாட்டைச் சேர்ந்தவை. பாரத நாட்டின் பல லகுதிகள், இக்ஷ்வாகு குல மன்னர்களாலும், அவர்கள் தாயாதி, பங்காளிகளாலும் ஆளப்பட்டிருக்கிறது. இக்ஷ்வாகு பட்டத்தில் ஒரு அரசன் இருந்தாலும், அவனது சகோதரர்கள், உறவினர்கள் என பலரும், ஆங்காங்கே சென்று, புதிய இடங்களை வென்றோ, ஆக்கிரமித்தோ, தங்கள் பெயரில் வம்சத்தையும், நாடுகளையும் ஸ்தாபித்திருக்கின்றனர். சோழ வர்மனும் தென் திசை வந்து அவ்வாறாக சோழ நாட்டை ஸ்தாபித்திருக்கிறான். அவன் ஸ்தாபித்த போது பூம்புகார் நகரம் சம்பாபதி என்னும் பெயரில் இருந்தது. அங்கு நாளங்காடி பூதம் இருந்த்து. அப்பொழுது காவிரி நதி பாயவில்லை. 

அவனுக்குப் பின்னால் வந்த அரசன், குடகிலிருந்து காவிரியைக் கொண்டு வந்திருக்கிறான். காவிரி நதியானது சம்பாபதியை அடைந்து கடலில் கலக்கவே, அந்த இடத்துக்குப் பழைய பெயரான சம்பாபதி என்னும் பெயர் ஒழிந்து, காவிரிப் பூம் பட்டினம் என்ற பெயர் ஏற்பட்டது.

சிபியைக் கொஞ்சம் பார்ப்போம். சிபி என்னும் இடத்தில் கௌரவர்களது மாப்பிள்ளையான ஜெயத்ரதன் ஆட்சி செய்திருக்கிறான். அவன் சிபியின் வம்சத்தவன். பாரதப் போரில் அவனை வென்ற பிறகு, அந்த இடம் பாண்டவர்கள் வசம் வருகிறது. அப்பொழுது அங்கு குடியேறிய மக்களது நாகரிகத்தையே சிந்து சமவெளி நாகரிகம் என்கிறோம் என்பதை இந்தத் தொடரில் காணலாம்.

மேற்காணும் கட்டுரையின் முடிவில் ஒரு இணைய முகவரி கொடுத்திருக்கிறேன். திருவாலங்காடு செப்பேடுகளில் காணப்படும் விவரங்களது ஆங்கில மொழி பெயர்ப்பு அதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்ட விவரத்தைப் படியுங்கள். சோழ வர்மன் வந்த விவரமும், அவனுக்கு முன் முசுகுந்தன் இருந்த்தும் தெரிய வரும். சிலப்பதிகாரத்திலும், அடியார்க்கு நல்லார் உரையிலும் சொன்னபடியே, முசுகுந்தன் தேவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தான் என்ற விவரமும் வருகிறது. 

இந்தத்தொடரை ஆரம்ப முதல் வரிசையாகப் படியுங்கள். பல விவரங்கள் விளங்கும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard