"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து // // நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்." (08) // // மறை மொழி காட்டி விடும்.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) நிறைமொழிமாந்தர் பெருமை = நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை;
நிலத்து மறைமொழி காட்டி விடும் = நிலவுலகத்தின் கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும்.
பரிமேலழகர் உரை விளக்கம்:
'நிறைமொழி' என்பது அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தேவிடும் மொழி.
'காட்டுதல்', பயனான் உணர்த்துதல்
கலைஞர் உரை:
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
மு.வ உரை:
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.
பரிமேலழகர் உரை:
நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். ('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்! பயனான் உணர்த்துதல்.).
உலகமே இருளில் முழ்கி கிடந்த போது ஆன்ம ஒளியில் திளைத்தது நம் நாடு.ரிஷிகள் சிந்தனையில் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.எப்போது இவை தோன்றியது என யாருக்கும் தெரியாது."புவி ஈர்ப்பு விதிகள் நமக்கு முன்னும், நமக்கு பின்னும் எப்போதும் இருக்கும்.அது போல்தான் ஆன்மிக உலகின் விதிகளும் மாறாமல் இருக்கும்"அவ்வாறு ரிஷிகள் வெளிப் படுத்திய அந்த உண்மைகள், பின்னாளில் வியாசரால் நான்காகப் தொகுக்கப் பட்டன.ரிக்,யாகூர்,சாம மற்றும் அதர்வணம்.ஒவ்வொரு வேதமும் முக்கிய மூன்று பிரிவாக ,சம்ஹிதை(பல்வேறு தேவர்களின் பிரார்த்தனைகள்),பிராம்மணம்(யாக விவரங்கள்)ஆரண்யகம்(அறுதி உண்மை பற்றிய ஆராய்ச்சிகள்) பிரிக்கப் பட்டன.