New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவை தேடி


Guru

Status: Offline
Posts: 24636
Date:
இயேசுவை தேடி
Permalink  
 


வரலாற்று இயேசுவை தேடி

 
j1.jpg
ஆங்கில நாட்காட்டிகள் உலக வரலாற்றையே இரு பிரிவாக கி.மு(கிறிஸ்துவுக்கு முன் ),கி.பி(கிறிஸ்துவுக்கு பின் )என்று பயன்படுத்தி வருவ்து அனைவரும் அறிந்ததே. இந்த கிறிஸ்து என்னும் சொல்லுக்கு அபிஷேகம் செய்யப்பட்டவர்,மீட்பர்(மேசியா) என்று பொருள்..
Christ is the English term for the Greek Χριστός (Khristós) meaning "the anointed one". It is a translation of the Hebrew מָשִׁיחַ (Māšîaḥ), usually transliterated into English as Messiah. In popular modern usage—even within secular circles—the term usually refers explicitly to Jesus of Nazareth.
இது ஜீஸஸ்,இயேசு,ஈசா என்று பலவாறாக அழைக்கப்படும் கிறித்தவ‌ மதத்தின் கடவுளாக(ம‌கன்) கருதப்படும் ஒருவரைக் குறிக்கிறது. இவரின் வாழ்க்கை வரலாறு கிறித்தவர்களின் வேதமான புதிய ஏற்பாட்டின் சுவிஷேசங்களான மத்தேயு,மாற்கு,லூக்கா மற்றும் யோவான்(ஜான்) ஆகியவற்றில் குறிப்பிடப்படுகிறது.
இவர் கன்னித்தாய்க்கு பிறந்த்தாகவும்,பல அற்புதங்கள் செய்ததாகவும் இந்த சுவிஷேசங்கள் கூறுகின்றன.யூதர்களால் சிலுவையில் அறைப்பட்டு இறந்தார்,ஆனால் மூன்று நாட்கள் கழித்து உயிரோடு திரும்பினார் என்றெல்லாம் கூறபடுகிறது.
இஸ்லாமியர்களின் வேதமான குரானிலும் இவர் ஈசா என்ற பெயரின் இறைத்தூதராக அறியப்படுகிறார்.கன்னித்தாயின் மகன்,அற்புதஙகள் இங்கும் கூறப்படுகிறது.ஆனால் இவர் ஒரு இறைத்தூதர் மட்டுமே.கடவுளின் அவதாரமில்லை.
கிறித்தவம்,இஸ்லாமின் ப்ல பிரிவினர் இவர் மீண்டும் மறுமை நாளில் வருவார் என்று நம்புகின்றனர்..இந்த விஷயங்களை வரலாற்றின் மூலம் உறுதி செய்ய முடியுமா?.இந்த குறிப்புகள் வரலாற்று ஆதாரம் உடையனவா என்பதை குறித்து சேகரித்த விவரங்களை இந்த தொடர் பதிவுகளில் எழுத இருக்கிறேன்.
இப்பதிவு ஏன் எழுதவேண்டுமெனில ஏற்கெனவே ஆங்கிலத்தில் இது குறித்து பல் கட்டுரைகள்,புத்தகங்கள் வெளிவந்துள்ளன.தமிழர்களுக்கும் அது குறித்து சில தகவல்கள் சொல்லவேண்டும்.தொடரின் உள்ள சந்தேகங்கள்,விளக்கங்கள் கூடுமானவரை எளிமை படுத்த முயற்சிக்கிறேன்.
 புதிய ஏற்பாடு புத்தகங்கள் பற்றி சில குறிப்புகள் 
பதிய ஏற்பாடு அல்லது கிரேக்க விவிலியம் என்பது கிறித்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதியாகும் . முதல் பகுதி பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது.
கிறித்துவின் காலத்திலும் அவர் இறந்த ஒரு நூற்றாண்டுக்குள்ளும் எழுதப்பட்ட புனித நூல்தொகுப்பு புதிய ஏற்பாடு என்று வழங்கப்படுகிறது.புதிய ஏற்பாடு பல நூல்கள் அடங்கிய தொகுப்பு ஆகும். இது பல எழுத்தாளர்களாலும் குழுமங்களாலும் கி.பி. 45க்குப் பின்னும் கி.பி. 140க்கு முன்னும் எழுதப்பட்டு சிறுக சிறுக சில நூற்றாண்டுகளாக ஒன்று சேர்க்கப்பட்டு, கிறித்தவ திருச்சபையால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. விவிலியத்தின் பகுதியாக இந்நூல்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டன. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) இவை விவிலியத் திருமுறை நூல்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டன..
புதிய ஏற்பாட்டின் மூல நூல் (செப்துவசிந்தா) ] என்னும் கிரேக்க விவிலியத்தில் உள்ளது. தொடக்க காலத்திலிருந்தே விவிலியம் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டது..கீறிதவத்தை விமர்சிக்கும் பல இஸ்லாமிய தளங்களில் புதிய ஏற்பாடு மூலம் அரமைக்(இயேசுவின் தாய்மொழி) மொழி என்று தவறாக குறிப்பிடுகிறார்கள்..
 
பொதுவாக கிறித்தவ மத சார்பு ஆய்வாளர்கள் ஜோசபஸ்(கி.பி 37_100) என்ற யூத வரலாற்று அறிஞர் இயேசுவை பற்றி குறிப்பிடுவதாக கூறுவர்.அடுத்த பதிவில்.இவர் என்ன கூறினார்,அதன் ஆதாரங்கள் பற்றி ஆய்ந்து,தொடர்ந்து தேடுவோம்.
http://en.wikipedia.org/wiki/Josephus_on_Jesus
(தொடரும்)


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

வரலாற்று இயேசுவை தேடி 2:யூத வரலாற்று அறிஞர் ஜோசஃபஸ

 
je1.jpg
முதலில் கிறித்தவர்களின் சுவிஷேஷங்களின் படி இயேசுவின் வரலாறை காலவரிசையுடன் தெரிந்து கொள்ளுவோம்
காலவரிசை (Timeline) 
6-4 BC •இயேசுவின் பிறப்பு 
5-4 BC • பெற்றோரால் எகிப்துக்கு கொண்டுசெல்லப்படுதல்,ஏரோது மன்னன் இயேசுவின் வயதுடைய குழந்தைகளை கொல்லுதல்.
4 BC    • ஏரோதின் மரணம். 
7-8 c • ஜெருந்சலமிற்கு பயணம். 
12 c    அகஸ்டஸ் சீசர் திபெரியஸை இளவரசனாக முடி சூட்டுகிறார்.. 
14 c • திபேரியஸ் ரோம பேரரசர் ஆகிறார்.
25 c • பிலாத்து பாலஸ்தீன அரசுபிரதிநிதியாகவும்,கைபா தலைமை மதகுருவாகவும் பதவியேற்றல். 
29 c • ஜான்(இஸ்லாமின் யாஹ்யா) ஊழியம் தொடங்குகிறார். 
29 c • இயேசுவும் ஊழியம் தொடங்குகிறார். 
31 c • திபெரியஸ் தன் தள்பதி செஜனஸுக்கு மரண தண்டனை அளிக்கிறார்.
33 c • இயேசுவின் மரணம் (வெள்ளி ,ஏப்ரல் 3, 3:00(பிற்பகல்).
36 c • பிலாத்து ,கைபா பதவி நீக்கம்.
37 c • திபெரியஸ் சீசரின் மரணம்
வரலாற்று அறிஞர் ஜோசஃபஸ்(c.37 – 100)
இவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்று அறிஞர் யூதர்களின் வரலாற்றை தொகுத்தளித்தவர்களில் மிக்கியமானாராக கருதப்படுகிறார்.
இவர் ரோம அரசுக்கு விசுவாசமாக இருந்தவர் என்று கூறப்பட்டாலும் இவர் எழுத்துக்கள் அதாரப்பூர்வமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஜோசஃபஸ் இயேசுவின் ச்கோதனாக ஜேம்ஸ் என்பவரை குறிப்பிட்டு,ஜேம்ஸ் ஒரு யூதக்குழுவிற்கு தலைவராக இருந்ததாக குறிப்பிடுகிறார்.இயேசு,அரச பிரதிநிதி பிலாத்து,மதகுரு கைபா, யோவான்(ஜான்) ஸ்நானகனாகியோரைபற்றியும் குறிப்பிடுகிறார்.
see chapter 3
*********
ஜோசஃபஸ் கூற்றுகளின் மொழியாக்கம்
3. Now there was about this time Jesus, a wise man, if it be lawful to call him a man; for he was a doer of wonderful works, a teacher of such men as receive the truth with pleasure. He drew over to him both many of the Jews and many of the Gentiles. He was [the] Christ. And when Pilate, at the suggestion of the principal men amongst us, had condemned him to the cross, (9) those that loved him at the first did not forsake him; for he appeared to them alive again the third day; (10) as the divine prophets had foretold these and ten thousand other wonderful things concerning him. And the tribe of Christians, so named from him, are not extinct at this day.
பிலாத்துவின் காலத்தில் இயேசு என்ற ஞானி(மனிதர் என்றே குறிப்பிடுவதில் தயக்கம் இருப்பதாக ஜோசஃபஸ் குறிப்பிடுகிறார்) ,போதகர் பல‌ யூதர்களுக்கும்,பிறருக்கும் சத்தியத்தை போதித்து வந்தார் .பிலாத்து சிலரின் குற்றச்சாட்டுகளின் பேரில் சிலுவையில் அறைய செய்தான் என்று குறிபிடுகிறார்.அவர் வணங்கியவர்களுக்கு உயிரிடன் தெரிந்ததாகவும்,அவரை வணங்குபவர்கள்,கிறித்தவர்கள் என்றழைக்கப்பட்டார்கள் என்றெல்லாம் கூறுகிறார்.
*************
பிறகென்ன ஜோசஃபஸின் கூற்று கிறித்தவர்களின் சுவிஷேசங்களுக்கு ஒத்து போகின்றது அல்லவா,பிறகென்ன பிரச்சினை என்று கூறலாம்.
ஜோசஃபஸின் புத்தகத்தில் பல இடைசெருகல்கள் பிற்கால (கிறித்தவ)ஆட்சியாளர்களால் செய்யப்பட்டதாகவும் கருத்து உண்டு.
நாம் நடுநிலைமையோடு இந்த வரலாற்று இயேசுவை தேடும் வரலாற்றாய்வாளர்கள்,அவர்களின் எழுத்துகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜோசஃபஸை பற்றி எழுதவே பல பதிவுகள் தேவைப்படும் என்பதால்,ஜோஸஃபஸ் புத்தகத்தில் இப்போதைய கிறித்தவ‌த்திற்கு ஆதரவான கருத்துகள் இருக்கின்ற்ன என்பதை மட்டும் அறிந்து கொள்ளுங்கள்.

இன்னும் கூறினால இவர் இன்னும் ஜீஸஸ் என்ற பெயருடைய வேறு சிலரையும் குறிபிடுகிறார்.இயேசு பற்றிய இவரின் கூற்று புத்தகத்தின் கடைசியில் இருப்பதால் அறுதியிட்டு கூறமுடியாது.தேடல் அதிகம் உள்ளவர்களுக்கு அவர் எழுதிய புத்தகத்தை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு வேண்டுகிறேன்.
ஆதரவான பக்கங்கள்
see page number 2030(2035 of 2609),2288(2293 of 2609),2318(2323 of 2609),2379(2384 of 2609),2525(2530 0f 2609)
குழப்பமான(எதிரான) பக்கங்கள்
2291(2296 of 2609),2296(2301 of 2609),2599_2600(2604_2605 of 2609)
இந்த பக்கங்களை பார்த்தால் ஜோசஃபஸை வைத்து மட்ட்டும் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது என்று புரியும். அடுட்த பதிவில் இயேசு பிறந்த போது இருந்த அரசியல் சூழ்நிலை பற்றி அலசுவோம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

வரலாற்று இயேசுவைத் தேடி 3

 
j3.jpg

இந்த ஆவணப் படத்தில் சில ஆதாரங்களை கூறி இயேசு என்பவர் உண்மை என்று கூறிகிறார்கள்.சில விஷயங்களை கருத்தில் கொள்வது நல்லது.
குரான்,புதிய ஏற்ற்பாட்டில் குறிப்பிடப் படும் திரு இயேசு என்பவர் உண்மையில் வராலாற்றில் வாழ்ந்தாரா என்றே ஆய்ந்து வருகிறோம்.
இந்த கீழ்க்காணும் 3விஷயங்களை நிரூபிக்க முடியாது ஏனெனில் அறிவியலுக்கு விரோதமான் விஷயங்களாக இருக்கிறது.
1.இந்த புதிய ஏற்பாடு,குரான் படி இவர் கன்னி மேரியிடம் பிறந்தார்.
இத்ற்கு சில பிரச்சாரகர்கள் இவர் க்ளோனிங் முறையில் பிறந்து இருக்கலாம் என்று விளக்கம் கூறுகிறார்கள். 
2. பல் அற்புதங்க்ள் செய்தார்.
3. புதிய ஏற்பாடு மட்டும் இவர் சிலுவையில் அறையப்பட்டு,இறந்து மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார் என்று கூறுகிறது.குரான் சிலுவையில் இறக்கவில்லை அவருக்கு பதிலாக வேறொருவர் கொல்லப் பட்டதாக் கூறுகிறது.
______________
4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
________________
இஸ்லாமியர்க்ளுக்கும் இயேசுஈஸா) ஒரு முக்கியமான இறைத்தூதர். கிறித்தவ நாடுகளில் கூட தடை செய்யப் படாத டாவின்சி கோட் திரைப் படம், இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாக் சொல்லவேண்டுமென்றால்
கிறித்தவம்+முகம்மது=இஸ்லாம்
இஸ்லாம்‍‍‍‍ ‍ - முகமது=கிறித்தவம்
இஸ்லாம் திரு பால் என்பவரே இயேசுவை இறைவனின் மகனென்ற கொள்கையாகம் செய்தாரென்று கூறுவதும்,கிறித்தவர்கள் குரானின் ஈஸா  புதிய ஏஎற்பாட்டின் கூறிவருவதையும் இம்மதங்களின் முரண்பாடுகளாக புரிந்து கொள்ளப் படவேண்டும்.
_________
மேற்கூறிய மூன்று விஷயங்கள் நிரூபிக்க முடியாது.
அப்படியென்றால் நம் என்ன செய்ய முயற்சிக்கிறோம்.
1.இயேசு என்பவர் அந்த கால கட்டத்தில்(கொஞ்சம் முன் பின் பரவாயில்லை) பிறந்தாரா? இது சமகால நிகழ்வுகளாக புதிய ஏற்பாட்டில் கூறப்படும் விஷயங்கள் அக்கால கட்டத்தில் சம்பவித்ததா?
2.இயேசுவின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பிற புத்தகங்களில் குறிப்பிடப் பட்டு உள்ளதா?அபோகிரிஃபா என்னும் பழைய,புதிய ஏற்பாட்டில் சேர்க்கப் படாத மத புத்தகங்களில் இவ்வரை பற்றி சில குறிப்புகள் உள்ள்ன.அவற்றை பற்றி வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.
3.உணைமையாக வாழ்ந்தவரென்றால் இயேசுவின் மரணம் எப்படி சம்பவித்தது?
4.உயிரோடு மீண்டும் வந்தாரென்று நம்பிக்கை எப்போது இருந்து வழக்கத்தில் இருக்கிறது?
5. கிறித்தவம் உண்மையில்,வரலாற்று ரீதியாக எப்போது ஆரம்பித்தது?
6. புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் எப்போது எழுதப் பட்டது? 
7.திரு பால் பற்றி வரலாற்றில் நன்றாக குறிப்பிடப் பட்டு உள்ளதால் இவர்
பற்றிய பல தகவல்களை ஆய்வு செய்தல்.ஒரு விஷயம் சொல்லியே ஆக வேண்டும் பாலின் கடிதங்கள் புதிய ஏற்பாட்டு புத்தகங்களுக்கு முந்தியது என்ற கருத்தே வலுப்பெற்று வருகின்றது. பாலின் கடிதங்களில் புதிய ஏற்பாட்டு ஆகமங்களில்(மத்தெயு,மாற்கு,லூக்கா மற்றும்,யோவான்) குறிப்பிடும் சம்பவங்களை பற்றி எதுவுமே எழுதவில்லையென்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்.
8.புதிய ஏற்பாட்டு ஆகமங்களில் சில சம்பவங்கள்,செயல்கள் பற்றிய முரண்பாடுகள்.
9. புதிய ஏற்பாடி இயேசுவை மனித குமாரன்(!) என்று கூறுவதும் குரான் மிர்யமின்(மேரி) மக்னே அழைப்பதும் முரண்பாடே.
10.புதிய ஏற்பாட்டில் இயேசு தனனை இறவைன் அவதாரம் என்று ஐயந்திரிபர கூறுகிறாரா? தனனை இரைவனின் மகன் என்று உண்மையிலேயே கூறுகிறாரா?அல்லது மொழி பெயர்ப்பு,கொள்கையாக விளக்கங்லில் மாற்றி விட்டார்களா?
காணொளி பாருங்கள்.இதில் நாம் மேற்கூறிய விஷயங்களை விவாதித்து உள்ளார்கள். இத்தொட பதிவில் இன்னும் ஒரு முன்னுரை பகுதியிலேயே இருக்கிறோம் என்பதை மட்டுமே இபோது சொல்ல‌ முடியும். இத்தொடர் குறித்த உங்களுடைய கருத்துகளை,தேடல்களை பதிவிட்டால்(அல்லது பின்னூட்டம்)  இத் தொடர் பதிவை மேம்படுத்த உதவியாக இருக்கும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

4.இயேசுவின் பிறந்த தேதி என்ன?

 

jb1.jpg
இத்தொடரின் கிறித்தவர்களால் இறைமகன் எனவும் ,இஸ்லாமின் ஒரு  இறைதூதராகவும் அறியப்படும் திரு இயேசு என்பவர் வரலாற்றில் வாழ்ந்தாரா,அதற்கான ஆதாரங்கள் பற்றியே விவாதித்து வருகிறோம். இப்பதிவில் இயேசுவின் பிறப்பு பற்றியும் அவர் பிறந்த தேதி ஆதாரபூர்வமாக கணக்கிட முடியுமா என்பதனை பார்ப்போம்.
அனைவருக்கும் ஆங்கில கால அளவு இரு பிரிவுக‌ளாக கி.மு(கிறிஸ்துக்கு முன்) ,கி.பி(கிறிஸ்துவுக்கு பின்) பிரிக்கப்ப்ட்டு பபயன்பாட்டில் இருப்பது தெரிந்ததே.அதுபோல் டிசம்பர் 25 கிறிஸ்மஸ்(கிறிஸ்துவின் பிறப்பு) என்பதும் தெரியும்..பிறகென்ன‌ கி.பி 0[கி.மு 1] வருடம்,டிசம்பர் 25ல் ,வால் நட்சத்திரத்தில் சுப‌யோக, சுப இலக்கினத்தில் அவதரித்தார் இறைவனின் திருமகன் என்று சொல்லிவிட்டு சென்றுவிடாமல் என்ன ஆராய்சி என்று கேட்கிறீர்களா
அது எப்படி ?ஒருவர் ஏதாவது சொன்னவுடன் அவர் சொல்வது சரியா என்று ஆதாரபூர்வமாக சரிபார்ப்பது என் இயல்பு.அத்தகைய தேடல்களையே பதிவிட்டு வருகிறேன்.சென்ற பதிவுகளை படித்தவர்களுக்கு திரு இயேசுவின் வரலற்றை ,புதிய ஏற்பாடு(1 to2 நூற்றாண்டு) தவிர சில வரலாற்று குறிப்புகள் மட்டுமே உள்ளன‌ என்பது தெரியும்.. அந்த் வரலாற்றுக் குறிப்புகள் கூட இயேசுவின் பிறப்பை புதிய ஏற்பாட்டின் அடிப்ப்டையிலேயே கூறுகின்றன.சமகால வரலாற்று அறிஞர் திரு ஜோசஃபஸ் பிறப்பு (தேதி) குறித்து எதுவும் கூறவிலை என்றாலும் சில வரலாற்று நிகழ்வுகளாக அவர் குறிப்பிடுவதை வைத்து,புதிய ஏற்பாட்டு ஆகமங்களுடன் ஒப்பிட்டு கண்டு பிடிக்க முயல்கிறேன்.
முதலில் புதிய ஏற்பாட்டு ஆகமங்களில் அவர் பிறப்பு எவ்வாறு கூறபட்டு உள்ள‌து என்பதை பார்ப்போம். மத்தேயு,லூக்க இருவரும் பிறப்பை பற்றி சில விஷயங்கள் கூறியுள்ளனர்.மாற்கு,யோவான் இருவரும் இதனை பற்றி ஒன்றும் கூறவில்லை.அவற்றை வாசியுங்கள்.
__________________________
மத்தேயு
1 அதிகாரம்
18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
25. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.
____________
2 அதிகாரம்
1. ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.
3. ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
*               * *********
லூக்கா
2 அதிகாரம்
1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.
6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
******
லூக்கா
3 அதிகாரம்
1. திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலேபொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,
2. அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.
இதில் இருந்து நமக்கு ஆய்வுக்கு உதவுவது சில வசன‌ங்கள் மட்டுமே அவையாவன.
___________________
மத்தேயு(2 அதிகாரம்)

1. ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
____________________
லூக்கா
2 அதிகாரம்

1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால்கட்டளை பிறந்தது.
2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
.....
16. அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலை செய்த
_____________________
லூக்கா(3 அதிகாரம்)
1. திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,
..........................
21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;

22. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்.
_______________
இதில் இருந்து இந்த வரலாற்று கூற்றுகளை கூறலாம்.

1.இயேசு பிறந்த போது இரோம அரசர் அகஸ்டஸ் சீசர்

[.பிறப்பு 3 September 63 BC (Roman calendar)_இறப்பு:19 August AD 14 (Julian calendar) (aged 75),அரசாட்சி:16 January 27 BC – 19 August C.E 14
(40 years, 215 days)]
2.கலிலேயா(அப்போதைய பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி)வின் அரசன் ஏரோது.
[பிறப்பு:73/74 BCE__இறப்பு:4 BCE (aged 70),அரசாட்சி:37BCE–4 BCE
3.சீரியா நாட்டிலே சிரேனியு[Cyrenius 51 BC - AD 21)] என்பவர் அரசாண்டார்.
4. திபேரியுஸ் சீசர் (அகஸ்டஸ் சீசரின் வாரிசு) அரசாட்சி ஏற்று 15 வருடங்களுக்கு பிறகு யோவான் தன் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.அப்போது இயேசுவிற்கு 30 வயது
[.பிறப்புNovember 16, 42 BC__ இறப்பு:March 16, C.E 37 (aged 77),அரசாட்சி :18 September 14 C.E,16 March  to 37 C.E(22 years, 183 days)]
___________
இதில் இருந்த நாம் விளங்குவது.

1.இயேசுவின் பிறந்த தேதி குறிப்பிட்டு சொல்ல முடியாது.டிசம்பர் 25 என்பது சூரிய கடவுளின் பிறப்பை கொண்டாடிய இரோம மக்கள் இயேசுவின் பிறந்த நாளாக மாற்றிவிட்டனர்.
2.அரசன் ஏரோது பொ.மு 4ல் இறந்து விடுகிறார்.இதனை ஜோசஃபசும் உறிதிப்படுத்துகிறார். இன்னும் இயேசு பிறந்த பின் அவ்வயது குழந்தைகளை கொல்ல ஆணையிட்டதாக (மத்தேயு 2.16)ல் படிக்கிறோம்.
ஆகவே குறைந்த பட்சம் இயேசு பொ.மு 4கு முன்பே பிறந்து இருக்க வேண்டும்.
3.திபெரியஸ் அரசு பொறுப்பேற்றது பொ.பி 14 ஆக 14+15=பொ.பி 29 என்றால் இயேசு குறைந்த  பட்சம் பொ.மு 2அல்லது 3 ல் பிறந்து இருக்கலாம்
.
முடிவாக திரு இயேசு என்பவர் பொ.மு(BCE)  4க்கு முன்னரே பிறந்து இருக்க வாய்ப்பு உள்ளது.ஜூலியஸ் சீசர் காலத்தில் இருந்தே நாள்காட்டி ,மக்கள் தொகை கணக்கிடும் வழக்கம் இருந்து வந்துள்ள‌து.பொ.மு 6ல் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடந்துள்ளது.முதலில் ஜூலியன் காலண்டர் எனவும் பிறகே ரோமன் காலண்டர் எனவும் நாள்காட்டி அழைக்கப்பட்டது.
போப் கிரிகாரியன் XIII ரோமன் காலண்டரை கிரிகாரியன்(கிறித்தவ) நாள்காட்டிகயாக மாற்றினார்.அதனாலேயே ரோம நாள்காட்டி கிறித்துவின் பெயரால் அழைக்கப்படுகிறது.
இயேசுவின் பிறப்பு (புதிய ஏற்பாட்டின் படி) சுமார் பொ.மு 6 ல் இருந்து பொ.மு 4க்குள் என்று அறுதியிட்டு கூறலாம்.தேதி கூற முடியாது,தேதி இதுவரை யாராலும் சரியாக கூற இயலவில்லை
__________
 
குறிப்பு
பொ.மு:பொது வருட‌த்திற்கு முன்:B.C.E: Before Common Era
பொ.பி:பொது வருட‌த்திற்கு பின் C.E:Common Era



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

வரலாற்று இயேசுவை தேடி 5 :இயேசு இந்தியாவில் வளர்ந்தாரா?

 

buddha-and-jesus1.jpg
இயேசுவின் வரலாற்றை கூறும் புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் அவர் வளரும் பிராயத்தில் நடந்த பல சம்பவங்களை சொலவதில்லை.அவர் தனது 30 வயதில் இறைவனின் ஊழியத்தை யோவானிடம் ஞானஸ்தானம் பெற்று சாத்தானால் சோதிக்கப் பட்டு பிறகு ஆரம்பித்தார் என்பதையே குறிப்பிடுகின்றன.
திரு இயேசுவின் கொள்கைளுக்கு முந்தைய மத்திய கிழக்கு மதங்கள் அனைத்துமே வன்முறை,இனவெறி என்பதை மதக்கோட்பாடுகள் மூலம் நியாயப் படுத்தின.யூதர்கள் மோசஸினால் எகிப்தில் இருந்து வழிநடத்த பட்டு அவர்களுக்கு அவர்கள் கடவுள் யாவே[yaveh] அளிப்பதாக கூறிய கானான் தேசத்திற்கு வருகிறார்கள்.அப்போது மோசஸிற்கு அளிக்கப்பட்ட பஞ்ச ஆகமங்கள்[ஆதியாகமம்,யாத்திராகமம்,லேவியராகாம்,எண்ணாகமம்,உபாகமம்] தோரா[torah] என்ரழக்கப்படுகின்றன. அதை பார்க்கும் போது அக்கடவுள் யூதர்களை மட்டுமே நேசிப்பது போலவும் அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களாக கூறப்படுகின்றது.
புதிய ஏற்பாட்டில் எப்போதுமே ஆச்சரியம் ஏற்படுத்தும் ஒரு விஷயம் இந்த இயேசுவின் போத்னைகள் மட்டும் வித்தியாசமாக அன்பை மையமாக வைத்து இருப்பது பற்றியே.யூத மதமும்,பழைய ஏற்பாட்டு போத்னைகள் அனைத்துமே யூதர்களுக்கு கடவுள் செய்யும் உதவிகளும் சோதனைகள் மட்டுமே. .தன்னை வணங்கும் போது உதவுவது,வணங்காத போது வதைப்பது.
.யூதர்கள் இரோம ஆட்சியின் கீழ் இருந்த போது இயேசு வாழ்ந்தாகவே புதிய ஏற்பாடு கூறுகின்றது[பொ.மு4 _பொ.ஆ 27].யூதர்கள் தங்களை மீட்ட்க ஒரு இரட்சகனை மோசஸ் போல் எஸ்ரா போல் எதிர் பார்த்திருந்தனர்.இவர் அன்பை போதித்ததும்,ஆன்மீக விடுதலையை பற்றி பேசியதுமே யூதர்கள் இவரை நிராகரிக்க காரணமாயிற்று.எந்த ஒரு விஷயமும் புதிதாக உடனே தோன்ற முடியாது.ஏற்கெனவே இருக்கும் விஷயங்களே கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலைகளுக்கேற்ப மாறுகின்றன.
ஆகவே இயேசு தனது  கொள்கைகளை யாரிடமிருந்தாவது கற்று இருக்க வாய்ப்பு உண்டு.
அவர் ஒரு மத்திய கிழக்கு பகுதியை சேர்ந்தவரா இல்லை அங்கேயே வாழ்நாள் முழுதும் வாழ்ந்தாரா  என்பதில் பலருக்கு ஐயம் உண்டு.இயேசுவின் கொள்கைகளான பகைவனை நேசித்தல்,விட்டு கொடுத்தல்  போன்ற்வை புத்த மதத்தில்(பொ.மு.600) முக்கிய கொள்கையாகும்.
நிகோலை நோட்டொவிட்ச் என்னும் இரஷ்ய அறிஞர் இந்தியாவில் இது குறித்து ஆய்வு செய்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இயேசு இந்தியாவிற்கு குழந்தையாக இருந்த போது வந்து புத்த மடாலயத்தில் வளர்ந்து ,அக்கொள்கைகளை கற்றுக் கொண்டு பாலஸ்தீனத்திற்கு சென்றதாக கூறுகின்ரார்.இதற்கு ஆதரங்களும் காட்டுகிறார்.அஹமதியா பிரிவு ஸ்தாபகரான மிர்சா குலாம் அஹமது கூட இயேசு இந்தியாவிற்கு வருகை தந்தார் என பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
பாருங்கள் கிரேக்க புராணக் கதைகள் ,இந்து மத புராண‌க் கதை போலவே இருக்கும்,புதிய ஏற்பாடு முதலில் கிரேக்க மொழியில் எழுதப் பட்டது.பொ.மு 300 அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு நடந்த போது புத்தரின் போதனைகள் மத்திய கிழக்கிற்கு சென்று அவை இயேசு என்ற மனிதராக உருவக படுத்தப் பட்டதா என்னும் சந்தேகம் எனக்கு உண்டு.புத்தர்,இயேசு, கிருஷ்னர் மூவரும் ஒருவரே என்ற கருத்தியலும் இதற்கு வலு சேர்க்கிறது.இப்பதிவில் சொல்வதை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கூட நான் சொலவது இயேசு வளரும் போது [30 வயதுக்கு முன்] எங்கே இருந்தார்,எப்படி வளர்ந்தார் என்பது பற்றி புதிய ஏற்பாடு எதுவும் சொல்லவில்லை என்பதை மட்டுமாவது மனிதில் வைக்க வேண்டுகிறேன்.
காணொளியிலும் இது விளக்க்ப் படுகின்றது.
அந்த புத்தகம் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 DevapriyaMar 25, 2012 06:37 AM

நல்ல பதிவு. பல நாளாக எழுத நினைத்து விட்டதை சிறுபதிலாகவும் பின் முழு பதிவாக போட உள்ளேன்.

எபிரேய மொழி யூத மதத்தின் பழைய ஏற்பாட்டில் இறைவன் பெயர் என்பதில் மிக முக்கியமானவை, எல்சடை, எல்லோ ஹிம் மற்றும் YHWH.

பைபிளியல் ஆயவாளர்கள் கூறும் உண்மை- மேலே உள்ள ஒரு சொல்லுக்குக் கூட உண்மையான பொருள் - வேர்சொல் தெரியாது, இவை ஊகத்தில் தான் தரப்படுகிறது.

எல் எனும் சொல் அனைத்து செமித்திய மொழிகளிலும் சிறு மாற்றத்தோடு பயன் படுகிறது.

இல், இலு, எல், அல் என- எம்மொழியென்பதோ நேர்மையான பொருளொ தெரியாது. 


பழைய ஏற்பாட்டில் -எல்சடை 35 முறை, எல்லோஹிம்௨500 முறை YHWH- 6500 முறை சொல்லப்படுகிறது.

எல்லோஹிம்- என்பது பன்மைச் சொல், செமித்திய மொழியில் பல அடிப்படையில் சமஸ்க்ருத மொழி இலக்கணத்தை பின் பற்றும். 
ஹி என்பது பெண்பால் விகுதி. 
எல் என்பது செமித்திய மொழியின் வேரில் இல்லை, தமிழ் மூலம் எனவும் ,எல் என்பது எல்லை இல்லாதவன், எழும்புதல் இல்லாதவன் எனவும் பொருள் படும்படியானது என்பர் தமிழ் அறிஞர்கள்.

எல்லோஹிம்- என்பது பன்மையில் அம்மையப்பர் எனக் குறிக்கும். எல்லோஹிம்- என்பது எபிரேயத்திலுர்ந்து அரபி சென்ற போது அல் அஹ்தும் என்றும் அல்லாஹ் என்றும் ஆனது. இதன் பொருள் அம்மையப்பர் ஆகும்.

அதே போல YHWH என பழைய ஏற்பாட்டில் உள்ள சொல்லை, 10 கற்பனைகளில் ஒன்றான என் பெயரை வீணில் சொல்லவேண்ட என்னும் கற்பனை சொல்லும் மூட நம்பிக்கையால், எஜமானரே என்னும் பொருள் படும் அடனாய்(Adanoi) எனப் படிப்பர்.

கிறிஸ்துவ மொழி பெயர்ப்பாளர்கள் சூழ்ச்சியில் YHWH போய் அடனாய் என்பதை வைத்து ஆங்கிலத்தில் லார்ட்-LORD எனவும் தமிழில் கர்த்தர் என்று மொழி பெயர்ப்பது பெரும் பித்தலாட்டம்.
YHWH என்பதற்கான மூல எபிரேய எழுத்துக்கழை சற்றே மாற்றீ அடுக்கினால் சிவலிங்கம் வரும், அப்பெயரின் ரகசியமே அது என்பார்- தியசாபிகல் சொசைட்டி நிறுவனர் ப்ளவட்ஸ்கி தன் நூலில் The Secret Doctrine.

தேவப்ரியா சாலமன்



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

வாருங்கள் தேவப்ரியா சாலமன் அவர்களே,
உங்கள் பின்னூட்டம் மிகவும் அருமை. இந்த பின்னூட்டம் என்னுடைய முந்தைய சிந்தனைக்கு உரமாக அமையும் என்று சொன்னால் அது மிகையாகாது. 
நீங்கள் கூறிய விளக்கங்களுடன் நான் ஒரு பதிவை வெளியிடுகிறேன். தொடர்ந்து உங்களது கருத்தை தாருங்கள். நீங்கள் ஏற்க்கனவே இது பற்றி எழுதியிருந்தாலும் அதையும் தாருங்கள்.
தங்கள் வருகைக்கும் தக்க நேரத்தில் சிறந்த உண்மையை கூறியமைக்கும் மிக்க நன்றி :)



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

Wednesday, January 26, 2011

படைப்பு ஆதியிலா?பாதியிலா? மீதியிலா?

 
elohim.jpg
ஆதியாகமத்தின் மூல மொழி ஹீப்ரு,அதில் இருந்தே பிற மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டது. நீங்கள் பார்க்கும் அனைத்து பைபிள்களிலும் இது மூல‌ மொழியாகிய ஹீப்ருவில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது என்று குறிப்பிட பட்டு இருக்கும். கிறித்தவர்க்ள் ஹீப்ரு மொழி கற்க வேண்டிய அவசியம் இருப்பதாக கருதுவது இல்லை ஆகவே மொழி பெயர்ப்புகளையும் அப்படியே புனித நூல்களாக கருதுகின்றனர்.ஆனால் மொழிபெயர்ப்புகளில் சில குழப்பங்கள் இருப்பதை மறைத்து மத கொள்கைகளுக்கு முரண்படாத வகையிலேயே மொழி பெயர்ப்பு செய்யப் படுகின்றது. இதனை விளக்க ஒரே ஒரு வசன‌த்தின் மொழிபெயர்ப்புகளை பற்றிய சிறு ஆய்வு.
.
கிறித்தவர்களின் வேதத்தின் முதல் வசனம் அனைவரும் அறிந்த ஒன்று
ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் ,பூமியையும் சிருஷ்டித்தார்.
இந்த வசனம் பற்றிய ஒரு கட்டுரையில் கூறப் பட்ட விவரங்களை இப்பதிவில் கூறுகிறேன்.
கட்டுரையின் ஆசிரியர் திரு டேனியல் பெர்ரி பற்றி சிறு குறிப்பு.
 டேனியல் பெர்ரி ஒரு கணிப்பொறி பேராசிரியர்.கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைகழகத்தில் க்ணிணி துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மத புத்தகங்களை ஆரார்வதிலும் ஈடுபாடு உண்டு.இவர் யூத இனத்தில் பிறந்தவர். ஹீப்ரு மொழியில் புலமை பெற்றவர். 
இபோது பதிவின் கருத்துக்கு வருவோம்.இந்த ஆதியாகமம் 1.1 வசனம் ஹீப்ரு மொழியின் ஆங்கில எழுத்துகளில் இவ்வாறு குறிப்பிட படுகிறது.
1:1, b're**** bara elohim et hashamayim v'et ha'aretz,
In the beginning, God created the heavens and the earth
இந்த முதல் வார்த்தையான ப்'ரேஷிட் என்கிற வார்த்தைக்கு ஆதியிலே என்பது அர்த்தமாக‌ அனைத்து தமிழ் பைபிள்களிலும் குறிப்பிட பட்டு ஊள்ளது.
b're**** -In the beginning-ஆதியிலே-ஆதி காலத்தில் 
திரு டேனியல் பெர்ரி இது சரியான அர்த்தம் அல்ல இந்த வார்த்தைக்கு சிறிது வேறுபட்ட அர்த்தம் என்கீறார். அதாவது
b're**** -In a beginning- ஒரு ஆதி காலத்தில் 
ஒரு ஆதி காலம் என்றால் பல ஆதி(தொடக்க) காலங்கள் இருந்ததாக பொருள் விளங்குகிறது. இதை இன்னும் எளிதான மொழிபெயர்ப்பாக முந்தி ஒரு காலத்தில் என்று கூறலாம்.
___________
elohim-God(s)-தேவன்‍தேவர்கள்
பிறகு மூன்றாவது வார்த்தையான ஏலோஹிம் எனபதை சிறிது ஆராய்வோம்.தேவன் என்ற அர்த்தம் கூறப்படுகிறது. இது ஒரு பன்மை வார்த்தை,இதன் ஒருமை ஏல் என்பதாகும்.இயேசு ஏலீ,ஏலீ,லாமா சபக்தானி என்று கடவுளை கூப்பிட்டார் என்பதும் அனைவரும் அறிந்ததே.கடவுளை மரியாதை நிமித்தம் பன்மையில் அழைப்பதாக கூறுவதும் மதவாதிகளின் விளக்கங்களுல் ஒன்று.
கர்த்தர் என்று வரும் இடங்களில் எல்லாம் இந்த ஏலோஹிம் என்றா வார்த்தையே பெரும்பாலும் வருகிற‌து
ஆகவே இந்த முதல் வசனத்திற்கு இவ்வாறு பொருள்கள் கொள்ள இயலும்.
.
1.ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.(இப்போது இருப்பது).

2.ஒரு ஆதி காலத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
(இறைவன் பல கால்ங்களில் படைத்தல்,காத்தல்,அழித்தல் செய்கிறார்)
3.ஆதியிலே தேவர்கள் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தனர்.
பல கட‌வுள்கள் சேர்ந்து ஒரே ஒரு முறை படைத்தனர். 

4..ஒரு ஆதி காலத்தில் தேவர்கள் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தனர்..
(பல கடவுள்கல் பல கால்ங்களில் படைத்தல்,காத்தல்,அழித்தல் செய்கிறார்கள்)
_____
இந்த வார்த்தை ஏல் என்பது ஹீப்ருவில் எழுதும்போது மாட்டின் தலை மற்றும்  கோல்(தடி,கலப்பை) போல் தோற்றம் அளிக்கிறது.
el.jpg
 இது ஏன் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.இப்பதிவின் ஆங்கில மூலக்கட்டுரையின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

பைபிளின் இரகசியங்கள்.

 

images?q=tbn:ANd9GcSCLhUAs-mF781cyYTcWr-_BjbF3utmYRxqZpiLZWJj7NlKT1uQ
பைபிள் அல்லது விவிலியம் பற்றி அகழ்வாராய்சியாளர் Dr Francesca Starakopoulou ( University of Exeter.) வழங்கும் காணொளிபார்க்கப் போகிறோம்.இதில் 12 ப்குதிகள் உல்ளன.ஒவ்வொரு நான்கு பகுதியும் ஒவ்வொன்றாக‌ மூன்று கேள்விகளுக்கு விடை தேடுகின்றன.
1.முதல் கேள்வி(1_4)அரசன் டேவிட்(தாவூத் அல்லது தாவீது)ன் சாம்ராஜ்யம் இருந்ததற்கான சான்றுகளை அகழ்வாராய்ச்சிகள் உறிதிப் படுத்துகின்றனவா?
பைபிளின் கதைகளில் அரசன் சாலமன்(சுலைமான்) கால்த்தில் இருந்து மட்டுமே ஒரு அளவிற்கு வரலாற்றுரீதியான சான்றுகள் உண்டு.அதற்கு முந்தைய கதைகளான ஆதம்,நோவா,ஆபிரஹாம்,மோசஸ் முதலிய   கதைகளுக்கு ஆதாரங்கள் இல்லை.டாக்டர்.ஃப்ளோரன்ஸ்கா சாலமனின் தந்தையாக் கூறப்படும் டேவிட்டின் காலத்திற்கு நம்மை அழைத‌து சென்று சான்றுகளை ஆய்கிறார்.
2.இரண்டாம் கேள்வி(5_8).பழைய ஏற்பாட்டு கடவுளுக்கு மனைவி உண்டா?.இக்கேள்வி கொஞ்சம் பிரச்சினைக்குறியதே என்றாலும் ,பட்சபாதமின்றி அகழ்வாய்வு முடிவுகளை வெளியிடுவது ஒரு நியாய‌மான ஆய்வாளரின் கடமை.அகழ்வாய்வுகளின் படி பழைய ஏற்பாட்டில் கூறப்படும் கடவுளுக்கு மனைவி உண்டா?இது பைபிளில் கூறப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு விடை தேடப் படுகிறது. நான் பைபிள் படித்தது உண்டு,அப்ப்டி இல்லை என்று துள்ளி எழும் நண்பர்களே,பொறுமை மொழி பெயர்ப்பதில் மதவாதிகள் பல் ஏமாற்று வேலைகளை செய்வார்கள்.அதில் ஆண் ,பெண் பால் வேறுபாடு,ஒருமை ,பனமை வித்தியாசம், தனமை,படர்க்கை,இலக்கணம், பல அர்த்தங்கள்  போன்றவற்றில் பல ஏமாற்று வேலைகள் உண்டு.கேட்டால் இப்படியும் சொல்லலாம் ,அப்படியும் சொல்லலாம் ஆனால் இப்படித்தான் அக்கால்த்தில் பொருள் கொள்ளப்பட்டது என்று பிடி கொடுக்காமல் பேசுவார்கள் என்பதும் நாம் அறிந்ததே. சந்தேகம் இருந்தால் இப்பதிவை படியுங்கள்.
இப்பொதைய அறிவியலே மத புத்தக்த்தில் புதிதாக முளைத்து வரும்போது இம்மாதிரி வேலைகள் சுலபமல்லவா?
3. மூன்றாம் கேள்வி(9_12) உண்மையிலேயே ஏதேன் தோட்டம் உண்டா? இருந்தால் எங்கே இருக்கலாம்?.ஆதம்&ஏவாள்(ஹவ்வா) முதலில் வசித்த இத்தோட்டம் எங்கே இருக்கலாம் என்ற அகழ்வாராய்சி மீதான ஆய்வு.ஆதம் கதைக்கு ஆதாரம் இல்லை என்று சொல்லிவிட்டு இது என்ன என்று கேட்கிறீர்களா?.பைபிளில் குறிப்பிடப் படும் சம்பவங்கள் அம்மாதிரியே நடக்க வாய்ப்பு உண்டா என்பதையே ஆய்வு செய்கிறோமே அன்றி வேறெந்த உணர்வு கொண்டு அல்ல.அதில் குறிப்பிட்ட பல சம்பவங்கள் அந்த கால வரிசையிலேயே நடந்திருக்கும் என்பதக் கூட ஏற்பதில் ஆய்வுகள் தடை போடுகின்றன.ஆகவே காணொளி பார்த்து தங்கள் கருத்துகளை வெளியிட வேண்டுகிறேன்.நன்றி.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

1 கொரி 1: 22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும்.

1 கொரி 7: 8 திருமணம் செய்யாதவர்களுக்காகவும், விதவைகளுக்காகவும் இப்போது இதனைக் கூறுகின்றேன். என்னைப்போல தனித்து வாழ்தல் அவர்களுக்கு நல்லது.

1 கொரி 7: 25 திருமணம் செய்துகொள்ளாதவர்களைப் பற்றி இப்போது எழுதுகின்றேன். கர்த்தரிடமிருந்து இது பற்றிய கட்டளை எதுவும் எனக்கு வரவில்லை. ஆனால், என் கருத்தைச் சொல்கிறேன். கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டுவதால் என்னை நீங்கள் நம்பலாம். 26 இது சச்சரவுகளின் காலம். எனவே நீங்கள் இருக்கிறபடியே வாழ்வது உங்களுக்கு நல்லது என நினைக்கிறேன்.29 சகோதர சகோதரிகளே, நான் கருதுவது இதுதான். நமக்கு அதிக காலம் தரப்படவில்லை. இப்போதிருந்தே மனைவியுள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப்போல தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும்.

 யோவான் 6: 49 நம்து மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப் போன்றே பூமியில் இறந்து னார்கள். 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் பூமியில் என்றென்றைக்கும் உயிர்வாழ்வான்.   51 என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். நான் என் சரீரத்தைத் தருவேன். உலகில் உள்ளவர்கள் மரணம் இல்லாத வாழ்வைப் பெறுவார்கள்” என்று இயேசு கூறினார்.

 உபாகமம் 12:10 ஆனால் நீங்கள் யோர்தான் நதியைக் கடந்துசென்று அந்த தேசத்தில் வாழலாம். அந்த சுதந்திர தேசத்தை கர்த்தர் உங்களுக்குத் தருவார். அங்கே உங்கள் எதிரிகள் அனைவரையும் விலக்கி கர்த்தர் உங்களை இளைப்பாறச் செய்வார். அங்கே நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். 11 பின் கர்த்தர் அவருக்கான சிறந்த வீட்டினை அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பார். அவ்விடத்திற்கு கர்த்தர் அவரது பெயரை வைப்பார். அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துப் பொருட்களையும், கொண்டுவர வேண்டும். நெருப்பினால் வேகவைத்த தகனபலிகளையும், உங்கள் காணிக்கைகளையும், உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும், ஆடு, மாடுகளையும், உங்கள் காணிக்கைகளையும், கர்த்தருக்கு வாக்குப் பண்ணின பொருட்களையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளின் தலைஈற்றுகளையும், கொண்டுவர வேண்டும். 12 கர்த்தருடைய ஆலயத்திற்கு நீங்களும், உங்கள…

2 மக்கபேயர் 6:  2 மேலும் ஜெருசலேமில் இருந்த யாகோவா ஆலயத்தை தீட்டுப்படுத்தி அதற்கு “ஒலிம்பு மலைச் சேயுவின் கோவில்” எனப் பெயரிடவும், கெரிசிமில் வாழ்ந்த மக்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க அங்கு இருந்த யாகோவா ஆலயத்தை , “அன்னியர்களின் நண்பர் சேயுவின் கோவில்” என அழைக்கவும் அவனைப் பணித்தான்

2 மக்கபேயர் 2:  13“இந்நிகழ்ச்சிகளெல்லாம் அரசு ஆவணங்களிலும் நெகமியாவுடைய வாழ்க்கைக் குறிப்புகளிலும் எழுதப்பட்டுள்ளன. மேலும் நெகேமியா ஒரு நூல்நிலையம் நிறுவி மன்னர்கள், இறைவாக்கினர்கள்பற்றிய நூல்களையும் தாவீது எழுதியவற்றையும் நேர்ச்சைப் படையல்கள் தொடர்பான மன்னர்களின் மடல்களையும் அதில் சேகரித்து வைத்தார். 14அதுபோன்று யூதாவும் எங்களிடையே ஏற்பட்ட போரினால் சிதறிப்போன நூல்களையெல்லாம் சேகரித்து வைத்தார். அவை இன்றும் எங்களிடம் உள்ளன. 15உங்களுக்குத் தேவைப்படுமாயின், அவற்றை எடுத்துச்செல்ல ஆளனுப்புங்கள்.”

உபாகமம் 11: 29 “உங்களின் சுதந்திர தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். நீங்கள் விரைவில் அந்த தேசத்தில் வாழ்ப்போகிறீர்கள். அந்த நேரத்தில் கெரிசீம் மலையின் உச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களைக் கூறுங்கள். பின்பு ஏபால் மலையின் உச்சிக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு சாபங்களைக் கூற வேண்டும்.

எண்ணாகமம் 36: 7 இதனால் இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு கோத்திரத்தில் உள்ள சொத்தானது இன்னொரு கோத்திரத்திற்குச் செல்லாமல் இருக்கும். எனவே ஒவ்வொரு இஸ்ரவேலனும் தன் முற்பிதாக்களுக்குரிய நிலங்களைப் பாதுகாத்துக்கொள்வான். 8 ஒரு பெண் தன் தந்தைக்குரிய நிலத்தைப் பெற்றால், பின்னர் அவள் தந்தையின் கோத்திரத்தில் உள்ளவர்களை மட்டுமே மணந்துகொள்ள வேண்டும். இந்த முறையில் ஒவ்வொரு இஸ்ரவேல் குடிமகனும் தங்கள் முற்பிதாக்களின் சொத்துக்களைத் தம் வசமே வைத்திருப்பார்கள். 9 எனவே, இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு கோத்திரத்தில் இருந்து இன்னொரு கோத்திரத்திற்கு நிலம் போகாமல் இருக்கும். ஒவ்வொரு இஸ்ரவேலனும் தன் முற்பிதாக்களுக்குரிய நிலத்தை பாதுகாத்துக்கொள்வான்.”

 2 இராஜாக்கள் 22:  8 செயலாளராகிய சாப்பானிடம் தலைமை ஆசாரியர் இல்க்கியா, “கர்த்தருடைய ஆலயத்தில் சட்டங்களின் புத்தகத்தை கண்டெடுத்தேன்!” என்று கூறினான். அவன் சாப்பானிடம் அதனைக் கொடுத்தான். சாப்பான் அதனை வாசித்தான்.. 10 பிறகு சாப்பான் அரசனிடம், “ஆசாரியனான இல்க்கியா என்னிடம் இந்த புத்தகத்தைக் கொடுத்தான்” என்று கூறி அரசனுக்கு அதனை வாசித்துக்காட்டினான்.11 அச் சட்ட புத்தகத்திலுள்ள வார்த்தைகளைக் கேட்டதும் (துக்கத்தின் மிகுதியால்) அரசன் தனது ஆடைகளைக் கிழித்துக் கொண்டான்.

உபாகமம் 31: 10 பிறகு, மோசே தலைவர்களிடம் பேசினான். அவன், “ஒவ்வொரு ஏழு ஆண்டின் முடிவிலும் விடுதலைக்கான ஆண்டில் அடைக்கல கூடாரப் பண்டிகையில், இந்தப் போதனைகளை ஜனங்களுக்கு வாசியுங்கள். 11 அப்பொழுது, இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் கூடி வருவார்கள். அவர்கள் உன் தேவனாகிய கர்த்தர் குறிப்பிடும் சிறப்பான இடத்தில் அவரைச் சந்திக்க வருவார்கள். பிறகு நீ ஜனங்களுக்கு போதனைகளை வாசிக்க வேண்டும். அப்பொழுது அவற்றை அவர்கள் கேட்க முடியும். 12 அனைத்து ஜனங்களையும் ஒன்று கூட்டு. ஆண்கள், பெண்கள், சிறுகுழந்தைகள், உங்கள் நகரங்களில் வாழும் அயல்நாட்டுக்குடிகள் என அனைவரையும் கூட்டு. போதனைகளை அவர்கள் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். போதனைகளில் உள்ளவற்றுக்குக் கீழ்ப்படிவார்கள்.

நெகேமியா 8:1 ஆண்டின் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அவர்கள் ஒன்றாயிருந்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டு தண்ணீர் வாசலுக்கு முன்னால் திறந்தவெளியில் அனைவரும் கூடினார்கள். அந்த ஜனங்கள் அனைவரும் எஸ்றா எனும் வேதபாரகனிடம் மோசேயின் சட்டப் புத்தகத்தைக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டார்கள். அதுதான் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்ட சட்டப் புத்தகம். 2 எனவே, ஆசாரியனான எஸ்றா அங்கே கூடியுள்ள ஜனங்களின் முன், சட்டப் புத்தகத்தைக் கொண்டுவந்தான். இதுவே அம்மாதத்தின் முதல் நாளாகும். இது அந்த ஆண்டின் ஏழாவது மாதமாகும். அக்கூட்டத்தில் ஆண்களும் பெண்களுமாகக் கவனித்துக்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தனர். 3 எஸ்றா அதிகாலையிலிருந்து மதியம்வரை சட்டப்புத்தகத்திலிருந்து உரத்த குரலில் வாசித்தான். அவன் ஆண்களும் பெண்களுமாய் கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தவர்களிடம் வாசித்தான். அனைத்து ஜனங்களும் கவனமாகக் கேட்டனர். சட்டப் புத்தகத்தில் கவனம் வைத்தனர். 4 எஸ்றா மரத்தால் ஆன மேடையின் மேல் நின்றான். அது இந்த சிறப்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்தது. எஸ்றாவின் வலது புறத்தில் மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், நின்றனர். அவனது இடது புறத்தில் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள். 5 எனவே எஸ்றா புத்தகத்தைத் திறந்தான். ஜனங்கள் எல்லோரும் அவனைப் பார்க்க முடிந்தது. ஏனென்றால் அவன் உயர்ந்த மேடையில் நின்றுக் கொண்டிருந்தான். எஸ்றா சட்ட புத்தகத்தைத் திறந்ததும் ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்றனர். 6 எஸ்றா உன்னத தேவனாகிய கர்த்தரைத் துதித்தான். ஜனங்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி அதற்கு மறுமொழியாக “ஆமென்! ஆமென்!” என்று சொன்னார்கள். பிறகு ஜனங்கள் அனைவரும் குனிந்து முகங்குப்புற விழுந்து கர்த்தரை தொழுது கொண்டார்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard