New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நோவா கப்பல் கதை உண்மையா?


Guru

Status: Offline
Posts: 24603
Date:
நோவா கப்பல் கதை உண்மையா?
Permalink  
 


நோவா கப்பல் கதை உண்மையா?

 

இப்பதிவு நோவா காலத்தின் வெள்ளப் பெருக்கு நட்ந்ததா என்று அலசுகிறது.யூத,கிறித்தவ மத புத்தகங்களின் படி உல்க முழுவதும் இறைவன் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி நோவாவின் குடும்பம் தவிர அனைவரையும் அழிக்கிறார்.அவர்கள் மட்டும் ஒரு கப்பல் கட்டி ,அனைத்து விலங்குகளையும் ஒவ்வொரு ஜோடி கப்பலில் ஏற்றி தப்பித்ததாக கூறப்படுகின்றது.இஸ்லாமிய மத அறிவியலின் தந்தை மௌரிஸ் புகைல் இது உலக முழுவதும் ஏற்படவில்லை அப்பகுதியில் மட்டும் ஏற்பட்டது என்று கூறுகிறார்.

ஜாகிர் நாயக்கின் காணொளியிலும் அவர் அப்ப்குதியில் மட்டுமே ஏற்பட்டது என்று கூறுவதை பாருங்கள்.நல்லவேளை குரானில் கால அளவு குறிப்பிடவில்லை என்று குறிப்பிடுவது அருமையான‌ நகைச்சுவை. ஒரு இடத்தில் நட்ந்தால் எதற்கு கப்பல்? அதில் ஒவொரு பிராணியும் எதற்கு ஏற்ற வேண்டும்?.உண்மை என்னவெனில் குரான் வழக்கம் போல் இந்த விஷய்த்தையும் பொத்தாம் பொதுவாக கூறிவிட்டது.

அகழ்வாராய்ச்சி முடிவுகள் மாறு படுவதால் எப்படியாவது தப்பிக்க வேண்டுமல்லவா?.அதற்கு இப்படி கூறித் தபிக்க முயற்சி.அப்போது பழைய குரான் விளக்கங்களில் இப்படி கூறப்பட்டிருக்கிறதா?.

இத்னை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால் இப்படி பல விளக்கங்கள் எப்படியாவது அறிவியலுக்கு முரண்படாமல் அளிக்க வேண்டும் என்பதே ஜாகிர் நாயக்கின் கொள்கை.

இப்படி அவர்கள் கூறுவது அப்ப்குதியில்(எங்கே?) மட்டும் நடந்தது என்றால்  இத்னை அகழ்வாராய்சி ஏதாவது நிரூபிக்குமா? அப்படி ஏதாவது ஆய்வு நடை பெற்று உள்ளதா? என்று கேட்க கூடாது.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=b8w-5CH6l7E
சொன்னது சரியா?
***********************
குரான் 11:40. இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி:) “உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.
********************
11:44. பின்னர்: “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.
********************

71:26அப்பால் நூஹ் கூறினார்: “என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.
71:27“நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.
*****************************************

இப்போது 


பூமி=நோவாவின் நாடு மட்டும்


வானம்=நோவாவின் நாட்டின் மேல் உள்ள மேகங்கள்

உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

மிக சிறந்த குரான் விளக்கங்களை எழுதிய இபின் கதிர் (C.E 1301–1373) என்ன கூறுகிறார்.

http://www.islamawareness.net/Prophets/nuh.html

இபின் கதிர் உலக முழுவதும் வெள்ளப் பெருக்கு என்றே கூறுகிறார்.இது குறித்த இன்னொரு கட்டுரை.

http://answering-islam.org/Shamoun/flood.htm

*************************************************************

சரி கிறித்தவர்களின் மத புத்தக்த்தின் தெளிவான கூற்றான உலகளாவிய வெள்ளம் என்பதை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.. படைப்புக் கொள்கையாளர்கள் பரிணாம்த்திற்கு ஆதாரமாக காட்டப் ப‌டும் படிமங்கள்(fossils) நோவாவின் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்டது என்று சமாளிப்பது உண்டு. இவை அனைத்தும் இக்காணொளியில் ஆய்வு செய்கின்றனர்.
கண்டு களியுங்கள்.
http://www.youtube.com/watch?v=_sD_7rxYoZY&feature=player_embedded
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=FfSvktyxVYA



-- Edited by Admin on Friday 16th of March 2012 09:22:41 AM



-- Edited by Admin on Friday 16th of March 2012 09:24:36 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்


 

குரானை, அது இறை வேதம்தான் என மெய்ப்பிக்கும் மற்றொரு திட ஆதாரமாக இஸ்லாமியர்களும் மதவாதிகளும், பிர் அவ்னின் சடலத்தைப்போலவே ஆயுதமாக கையாளும் மற்றொன்றுதான் நூஹின் கப்பல். நூஹ் என்பவர் மக்களை திருத்துவதற்காக இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர்களில் ஒருவர். இவரின் போதனைகளை மக்கள் ஏற்க மறுக்கவே அவர்களை அளித்துவிடுமாறு இறைவனை வேண்டுகிறார், இறைவனும் கருணை உள்ளங்கொண்டு நூஹையும் அவரின் சீடர்களையும் ஒரு கப்பலைக்கட்டி அதில் உலகின் விலங்குவகைகளை சதை சதையாகவும் (ஜோடி ஜோடியாகவும்) நம்பிக்கை கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளுமாறு பணிக்க அதன் பின் வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் நீர் பெருக்கெடுக்க உலகம் மூழ்கியது. நூஹுவையும் அவரது இறைவனையும் நம்பியவர்கள் காப்பாற்றப்பட்டனர், ஏனைய அனைவரும் நீரில் அழிந்தனர். பின்னர் அந்தக்கப்பல் ஜூதி எனும் மலையின் மீது தங்குகிறது. பின்னர் அதிலிருந்து வெளிவந்து தான் மக்கள் உலகம் முழுவதும் பரவினர். இது தான் குரானில் சொல்லப்பட்டிருக்கும் நூஹின் கப்பல் குறித்த கதை. இந்த கதையில் வரும் நூஹின் கப்பல் துருக்கியின் கிழக்குப் பகுதியிலுள்ள அராராத் என்னும் மலையின் மீதி பரவியிருக்கும் பனிப்படிவங்களுக்கிடையே புதைந்து கிடப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துச்சொல்ல குரான் இறைவேதம் தான் என்பது மற்றுமொருமுறை மெய்ப்பிக்கப்பட்டிருப்பதாக கூறிக்கொள்வதற்கு மதவாதிகளுக்கு ஏதுவாகியது.

 

இது குறித்த குரான் வசனங்கள் “நாம் அவரையும் கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம், மேலும் அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்” குரான் 29:15. இதை இன்னும் விரிவாக 11:44; 54:10-17 வசனங்களும் குறிப்பிடுகின்றன. இங்கு உலக மக்களுக்கு அத்தாட்சியாகவும் ஆக்கினோம் எனும் சொற்களில் தான் இதன் முக்கியத்துவமே தங்கியிருக்கிறது. அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முகம்மதுவுக்கு பின்னர் இப்படி ஒரு கப்பல் கண்டுபிடிக்கப்படும் என்பது எப்படி தெரியும்? பின்னர் நடக்கப்போவதை முன்னமே அறிந்த இறைவனால் தானே பின்னர் வெளிப்படுத்தப்படும் என்பதை அறிந்து அத்தாட்சியாய் ஆக்கினோம் என பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறமுடியும் என வியக்கிறார்கள். ஆனால் இந்தக்கதை குரானில் மட்டும் இடம்பெற்ற ஒன்றல்ல. நூஹ் என்பவர் மூசாவிற்கும் காலத்தால் முற்பட்டவர் எனவே யூதர்களின் தோராவிலும், கிருஸ்தவர்களின் பைபிளிலும் கூறப்பட்டிருக்கும் கதைதான். அந்தக்கப்பல் பின்னர் கண்டுபிடிக்கப்படும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை அதைத்தான் முகம்மதுவும் தன்னுடைய குரானில் வசனமாக்கியிருக்கிறார்.

 

இது ஆபிரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மட்டும் கூறப்படும் கதையல்ல. சுமேரிய மரபுப்படி சுயூசுத்ரா எனும் மன்னன் என்கி எனும் கடவுளால் இது போன்ற ஊழிப் பெருவெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறான். பாபிலோனிய மரபுகளில் இது கில்காமோஸ் ஐ உட்னபிசிதம் எனும் கடவுள் இதுபோன்ற ஊழிப் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுகிறார். இந்துப்புராணங்களில் மன்னன் மனுவை மச்சாவதாரம் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுவதாக மச்சபுராணம் குறிப்பிடுகிறது. உலகம் முழுவதிலும் பண்டைய புராணங்கள் அனைத்திலும் இது போன்ற ஊழிப் பெருவெள்ளக் காட்சிகளும் கடவுளால் காப்பாற்றப்படுதலும் எதோ ஒரு வகையில் இருக்கின்றன. ஆனால் கடவுளோடும் மதங்களோடும் தொடர்புபடுத்தப்படாத ஊழிப்பெருவெள்ளக் காட்சிகள் தமிழ் இலக்கியங்களில் கிடைக்கின்றன. தமிழர்களின் தலை நிலம் அடுத்தடுத்த கடல்கோளால் அளிக்கப்பட்ட விதம் குறித்து தமிழ் இலக்கியங்கள் விரிவாகவே விளக்குகின்றன. கபாடபுரம், மதுரை, துவாரை என்று அழிந்து போன நகரங்களும் மக்களின் நகர்வும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி கடவுளோடு தொடர்புகொண்ட காட்சிகளெல்லாம் காப்பாற்றப்பட்டவர்களின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்க, தமிழ் இலக்கியங்களில் அழிந்துபோன மக்களின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது.

 

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி என்று தமிழில் ஒரு சொலவடை நீண்ட நெடுங்காலமாக வழக்கில் இருக்கிறது. இதற்கு புறப்பொருள் வெண்பாமாலையில்  ஐயனாரிதனார் எனும் புலவர் அளிக்கும் விளக்கம், கடல்கோளிலிருந்து தப்பிப் பிழைக்க மக்கள் மலைகளில் ஏறுகின்றனர். மலை உச்சிக்கு சென்றவர்களைதவிர ஏனையவர்கள் அழிந்துவிட வெள்ளம் வடிந்தபின் தரை தெரியாமல் அதாவது மண் தெரியாமல் மலைகளின் பாறைகளில் தப்பிப் பிழைத்த மக்களிலிருந்து தோன்றியது தான் தமிழ்க்குடி என்பது. தமிழில் பெருங்கப்பல்களை குறிப்பிட நாவாய் என்ற சொல் ஆளப்படுகிறது. இந்த நாவாய் எனும் சொல்தான் கப்பலோடு தொடர்புடைய கதை நாயகனுக்கான பெயராய் நோவா என்று மருவியது. அதுவே பின்னர் நூஹ் என்று திரிந்திருக்க கூடுமோ

 

இந்த நூஹ் 950 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்திருந்ததாக குரான் குறிப்பிடுகிறது. இவ்வளவு காலம் வாழும் அளவுக்கு மனிதன் இருந்தானா? மனிதனின் செல் அமைப்புகள் எலும்புகளின் ஆர்கானிக் பொருட்கள் இவ்வளவு காலம் தாங்கி நிற்கும் அளவுக்கு திறனுடன் மனிதனிடம் இருந்ததா? மனிதனின் வாழ்நாள் இப்போது இருப்பது தான் அதிகம், தோராயமாக எழாயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மக்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழும் அளவிற்கு வலுவுடன் இருந்தார்கள் என்பதை எந்த அடிப்படையில் புரிந்து கொள்வது, புராணக்குப்பைகள் என்பதல்லாது.


நூஹ்வின் கப்பலுக்கு திரும்புவோம், 1959ல் லிஹான் துரிப்பினார் எனும் ராணுவ அதிகாரி ராணுவ நில அளவை குறித்த பணியில் ஈடுபட்டிருந்த போது விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட நிலைப்படம் ஒன்றிலிருந்து அராராத் மலையின் ஒருபகுதியில் கப்பல் போன்ற வடிவமுள்ள ஒன்று தெரிவதை கண்டுபிடித்தார். அதிலிருந்து அந்த பகுதி மிகவும் புகழ்பெற்ற இடமாகியது. நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி பரவியது.(ஆம் நூஹ்வின் கப்பலாக அல்ல நோவாவின் கப்பலாகவே கண்டுபிடிக்கப்பட்டது) இன்றும் அந்தப்பகுதி துரிப்பினாரின் பெயராலேயே அழைக்கப்பட்டுவருகிறது. 1960ல் ஜார்ஜ் வன்டேமன், டான் லாவரிட்ஜ் எனும் இரு அறிவியலாளர்கள் ராணுவ அனுமதியுடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர். கப்பல் வடிவிலான அந்த இடத்தை தோண்டியும், டைனமேட்கள் கொண்டு வெடித்தும் பார்த்துவிட்டு, அந்த இடத்தின் வடிவம் கப்பல் போல இருக்கிறதேயன்றி கப்பல் ஒன்றுமில்லை என்று அறிவித்தனர். பின்னர் எண்பதுகளின் தொடக்கத்தில் ரான் யாட் என்பவரும் டேவிட் ஃபசோல்டு என்பவரும் இணைந்து துரிப்பினார் பகுதியில் பல சோதனைகளை மேற்கொண்டு நோவாவின் கப்பலை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்ததோடு “இழந்த நோவாவின் கப்பல்” எனும் நூலையும் எழுதினர். இது தான் இறைவனின் அத்தாட்சியாக கூறப்படும் நூஹ்வின் அல்லது நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு. ஆனால் கப்பலை கண்டு பிடித்தவர்களில் ஒருவரான  டேவிட் ஃபசோல்டு பின்னர் அதில் தமக்கு ஐயமிருப்பதாக கூறி மிண்டும் ஆய்வுகளை தொடர்ந்தார். இறுதியில் அது நோவாவின் கப்பலல்ல என்று கூறி அதை நோவாவின் கப்பல் என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டார்.

 

அந்த இடத்தில் நோவாவின் கப்பல் புதைந்து கிடக்கிறது என்பதற்கு காட்டபப்படும் ஆதாரங்கள் என்ன? கப்பல் வடிவமுள்ள அந்த இடத்தின் நீளம் பைபிளில் குறிப்பிடும் நீளத்தோடு ஒத்திருக்கிறது என்பதும், கப்பலில் பயன்படுத்தப்பட்ட நங்கூரம் போன்ற கல் கண்டெடுக்கப்பட்டதும் தான். இந்த இரண்டும் தவறு என்று நிரூபித்துவிட்டனர் இருந்தாலும் நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பரவிய வதந்தி மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறது. அந்த கப்பல் வடிவின் அகலம் 138 அடியாக இருக்கிறது. கடல் மிதவை அளவீடுகளின் படி அந்தக்கப்பல் சீராக மிதந்திருக்கவேண்டுமென்றால் அதன் நீளத்துடன் ஒப்பிடும் போது 86 அடியாக இருந்திருக்கவேண்டும். அதாவது நீளத்தோடு ஒப்பிடும் போது அதன் அகலம் சற்றேறக்குறைய ஒருமடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அளவீடுகளின் படி ஒரு கப்பல் பல நாட்கள் சீறாக மிதந்திருக்க முடியாது என்கிறார் ஜான் டி மோரிஸ். அராராத் மலை ஒரு எரிமலையாகும், கடைசியாக அது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக வெடித்திருக்க வேண்டும் என்கிறார்கள், அப்படி வெடித்து வெளிவந்த லாவா குளம்பு ஒரு கப்பல் வடிவில் படிந்திருக்கிறது என்பதை தவிர அதில் ஒன்றுமில்லை.

 

அடுத்த ஆதாரமான நங்கூர கற்பலகை என்பதும் திட்டமிட்டு திணிக்கப்பட்டது தான். கப்பல் வடிவிலான அந்தப்பகுதியிலிருந்து 14 மைல் தூரத்தில் தான் நங்கூர கற்பலகை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வலவு தூரம் கப்பலைவிட்டு நங்கூரம் நகர்ந்தது எப்படி என்பதற்கு ஒரு விளக்கமும் இல்லை. பழங்காலத்தில் அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்களால் நடப்பட்ட ஒரு நடுகல்தான் அது என்பதும் கயிறு கட்டும் ஓட்டை என்று குறிப்பிடப்பட்டது விளக்கு ஏற்றுவதற்கானது என்பதாகவும் இருக்கலாம். அதோடு ஒரு கப்பலின் நங்கூரம் என்றால் கப்பல் புறப்பட்ட இடத்தில் கிடைக்கும் கல்லாகத்தான் இருக்கவேண்டும் ஆனால் இந்தக் கல் கப்பல் தரை தட்டி நின்ற இடத்திலுள்ள கல்லாக இருக்கிறது. எப்படியென்றால் அராராத் மலை எரிமலைக் குளம்புகளால் ஆனது. அதில் பசால்ட் வகை கற்களே காணப்படுகிறது. நங்கூரமாக காட்டப்படும் கற்பலகையும் பசால்ட் வகை கல்லே. அதாவது ஒருகாலத்தில் அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அந்தப்ப்குதியில் கிடைத்த கல்லைக்கொண்டு நடுகல்லாக செய்துவைத்து வணங்கியிருக்கவேண்டும், அதைத்தான் நங்கூரமாக காட்டி நம் மனதில் அவர்களின் கருத்தை நங்கூரமாக இறக்க முயல்கிறார்கள்.

 

தொல்லியலாளர்கள் நிலத்தை அகளும் போது முக்கியமான காலங்காட்டியாக டோபா எரிமலை படிவுகளை கொள்கிறார்கள். அதாவது இன்றைக்கு 74,000 ஆண்டுகளுக்கு முன்னர் சுமத்திரா தீபகற்பத்திலுள்ள கோட்டா டம்பான் பகுதியில் இருக்கும் எரிமலை இரண்டு வாரங்களுக்கு குமுறி வெடித்தது. இதன் படிவுகள் ஆசியப்பகுதிகளைத்தாண்டி ஐரோப்பாவரை பரவியது. இந்தப்படிவுகள் ஒரு முக்கியமான காலங்காட்டியாக பயன்படுகிறது. இதேபோல் பண்டைய டெதிஸ் கடலின் படிவுகள் இயமமலையின் பாறைகளில் காணப்படுகின்றன. இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான நிகழ்வுகளெல்லாம் காலங்காட்டியாக பதிந்திருக்கும் போது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட உலகம் முழுவதையும் சூழ்ந்த இந்த வெள்ளம் பற்றிய தயங்களோ பதிவுகளோ எதுவும் காணப்படவில்லையே ஏன்? ஆக அப்படி ஒரு பிரளயம் ஏற்படவே இல்லை என்பதுதான் உண்மை.

 

ஆதாரம் என்ற பெயரில் எதையாவது காட்டி என்னவாவது செய்து தங்கள் இறைவனின் இருப்பை தக்கவைப்பதற்கு கடும் முயற்சிகளைச் செய்யும் மதவாதிகளிடமிருந்து நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதைத்தான் இவைகளெல்லாம் நமக்கு உணர்த்துகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அல்பல்சபியா,
இந்த இப்ராஹீம் என்ற இஸ்லாமிய ஆதரவாளருக்கு இஸ்லாமும் தெரியாது , அடிப்படை அறிவியலும் தெரியாது.
இவர் கண் கட்டி நம்புவது போலவே உலகமும் நம்ப வேண்டும் என்று சொல்லும் கிறுக்கர் !
போலார் கரடிகள் துருவ பகுதிகளில் மட்டுமே காணப்படும் உயிரினம், சில வகை பண்டா கரடிகள் ஆஸ்திரேலியாவில் மலை பகுதிகளில் மட்டுமே காண கிடைக்கும், இந்த இருவகை கரடி இனமும் எப்படி மத்திய கிழக்கு அராபிய பிரதேசத்தில் இருந்து அது தற்போது வாழும் பகுதிக்கு செல்ல முடியும் .
இல்லை அல்லாஹ் “குன்”னுன்னு சொன்ன அதான் போய்ட போகுது, அப்டின்னா அத நம்ப நாங்கள் தயாராக இல்லை .

உலகில் மொத்தம்
5490 வகை பாலூட்டிகள்,
9998 பறவையினங்கள்,
9084 வகை ஊர்வன , 6433 இருவாழ்விகள் , 31300 வகை மீன்கள்.
ஆக இந்த மொத்த உயிரின வகைகளும் நோவாவின் கப்பலில் ஒவ்வொரு ஜோடி இருந்ததா?

மனிதனை முட்டாளாக்கும் மூடத்தனம் !!!

Reference :
***************

http://purpleslinky.com/trivia/science/15-amazing-animals-from-around-the-world/

http://www.currentresults.com/Environment-Facts/Plants-Animals/number-species.php



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

நண்பர் செங்கொடி,

ஆதாரங்கள் எதுவுமில்லாவிட்டாலும் எதையாவது சொல்லி உங்கள் வாதத்தை நிலைநிறுத்த நீங்கள் மேற்கொள்ளும் விடாமுயற்சிகளை பாராட்டத்தான் வேண்டும்.

அராராத் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட படிவங்கள் நூஹ் நபி அவர்களின் கப்பல் அல்ல என்றே நீங்கள் நிரூபித்துவிட்டதாக வைத்துக் கொள்வோமே..! இப்போது என்ன, குர்ஆனில் உள்ள நூஹ் நபி சம்பந்தப்பட்ட அனைத்து வசனங்களும் பொய் என்று ஆகிவிடுமா? அல்லது, ‘இறைவனே இல்லை’ என்று நிரூபணமாகி விடுமா?

//அதிலிருந்து அந்த பகுதி மிகவும் புகழ்பெற்ற இடமாகியது. நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி பரவியது.(ஆம் நூஹ்வின் கப்பலாக அல்ல நோவாவின் கப்பலாகவே கண்டுபிடிக்கப்பட்டது) //

அதாவது, நோவாவும் நூஹ்வும் வேறு வேறு நபர்கள் என்கிறீர்களா?

//எண்பதுகளின் தொடக்கத்தில் ரான் யாட் என்பவரும் டேவிட் ஃபசோல்டு என்பவரும் இணைந்து துரிப்பினார் பகுதியில் பல சோதனைகளை மேற்கொண்டு நோவாவின் கப்பலை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்ததோடு “இழந்த நோவாவின் கப்பல்” எனும் நூலையும் எழுதினர். ஆனால் கப்பலை கண்டு பிடித்தவர்களில் ஒருவரான டேவிட் ஃபசோல்டு பின்னர் அதில் தமக்கு ஐயமிருப்பதாக கூறி மிண்டும் ஆய்வுகளை தொடர்ந்தார். இறுதியில் அது நோவாவின் கப்பலல்ல என்று கூறி அதை நோவாவின் கப்பல் என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டார்.//

ஆய்வு நடத்திய இருவரில் ஒருவர் அது நோவாவின் கப்பலல்ல என்று கூறி விட்டார். சரி.. அந்த இன்னொருவர் ‘அது நோவாவின் கப்பல்தான்’ என்பதில் இன்னும் உறுதியாக இருக்கிறார் அல்லவா? மாறுபட்ட கருத்துக்களை உடைய இருவரி்ல் ஏன் ரான் யாடின் கருத்துக்கள் உண்மையானதாக இருக்கக் கூடாது?

//அந்த இடத்தில் நோவாவின் கப்பல் புதைந்து கிடக்கிறது என்பதற்கு காட்டபப்படும் ஆதாரங்கள் என்ன? கப்பல் வடிவமுள்ள அந்த இடத்தின் நீளம் பைபிளில் குறிப்பிடும் நீளத்தோடு ஒத்திருக்கிறது என்பதும், கப்பலில் பயன்படுத்தப்பட்ட நங்கூரம் போன்ற கல் கண்டெடுக்கப்பட்டதும் தான். இந்த இரண்டும் தவறு என்று நிரூபித்துவிட்டனர்//

இரண்டு ஆதாரங்கள் மட்டுமல்ல நண்பரே.. ஒரு கிருஸ்துவ இனையத்தளத்தில் 14 ஆதாரங்கள் கொடுத்திருக்கிறார்கள். அவற்றையும் தவறு என்று நிரூபியுங்களேன்.

The Real Noah’s Ark!
Top Points to Consider

1. It is in the shape of a boat, with a pointed bow and rounded stern.

2. Exact length as noted in biblical description, 515 feet or 300 Egyptian cubits. (Egyptian not Hebrew cubit would have been known to Moses who studied in Egypt then wrote Genesis.)

3. It rests on a mountain in Eastern Turkey, matching the biblical account, “The ark rested . . . upon the mountains of Ararat” Genesis 8:4. (Ararat being the name of the ancient country Urartu which covered this region.)

4. Contains petrified wood, as proven by lab analysis.

5. Contains high-tech metal alloy fittings, as proven by separate lab analyses paid for by Ron Wyatt, then performed later by Kevin Fisher of this web site. Aluminum metal and titanium metal was found in the fittings which are MAN-MADE metals!

6. Vertical rib timbers on its sides, comprising the skeletal superstructure of a boat. Regular patterns of horizontal and vertical deck support beams are also seen on the deck of the ark.

7. Occupied ancient village at the ark site at 6,500 ft. elevation matching Flavius Josephus’ statement “Its remains are shown there by the inhabitants to this day.”

8. Dr. Bill Shea, archaeologist found an ancient pottery sherd within 20 yards of the ark which has a carving on it that depicts a bird, a fish, and a man with a hammer wearing a headdress that has the name “Noah” on it. In ancient times these items were created by the locals in the village to sell to visitors of the ark. The ark was a tourist attraction in ancient times and today.

9. Recognized by Turkish Government as Noah’s Ark National Park and a National Treasure. Official notice of its discovery appeared in the largest Turkish newspaper in 1987.

10. Visitors’ center built by the government to accommodate tourists further confirms the importance of the site.

11. Huge anchor stones were found near the ark and in the village Kazan, 15 miles away, which hung off the rear of the ark to steady its ride.

12. The ark rests upon Cesnakidag (or Cudi Dagi) Mountain, which is translated as “Doomsday” Mountain.

13. Dr. Salih Bayraktutan of Ataturk University stated, “It is a man made structure, and for sure it’s Noah’s Ark” Common Sense. This same article also states “The site is immediately below the mountain of Al Judi, named in the Qur’an as the resting place of the Ark.” Houd Sura 11:44

14. Radar scans show a regular pattern of timbers inside the ark formation, revealing keels, keelsons, gunnels, bulkheads, animal chambers, ramp system, door in right front, two large barrels in the front 14′ x 24′, and an open center area for air flow to all three levels.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கப்பலை கண்டுபிடித்த ரான் யாட், டேவிட் ஃபசோல்டு இருவரில் டேவிட் ஃபசோல்டு பின்னர் அது நோவாவின் கப்பல் இல்லை என்று கூறிவிட்டார். ரான் யாட்டோ முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமாக இதை நிரூபிப்பது கடினமான பணி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இனி நீங்கள் குறிப்பிட்டுள்ள 14 ஆதாரங்களுக்கு(!) வருவோம்.

1) கப்பலின் வடிவில் இருப்பதால் மட்டுமே அது நூஹின் கப்பலாகிவிடுமா?
2) கப்பலின் அளவு குறித்து கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.
4) அனேக கிருஸ்தவ தளங்களில் மரப்பலகையும் ஆணியும் கண்டுபிடித்ததாக அளந்திருக்கிறார்கள். ஆனால் அங்கு பலகையோ ஆணியோ அல்லது உலோகங்களோ காணப்படவில்லை என்பதே உண்மை. அப்படி கண்டுபிடிக்கப்பட்டதாக நீங்களும் நம்பினால் அந்த கிருஸ்தவ தளங்களில் ஆதாரங்களை கேட்டுப் பாருங்கள், அப்போது உண்மை உங்களுக்கே புரியவரும்.
5) அலுமினியமும், டைட்டானியமும் காணப்பட்டதாக இவர்கள் கூறுவது ஒன்றே போதும் அதை பொய் என்று நிரூபிக்க, காரணம், டைட்டானியம் 1791ல் வில்லியம் கிரிகோரால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம். அலுமினியமோ ஹான்ஸ் கிரிஸ்டியன் என்பவரால் 1825ல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.
6) கப்பலின் தளங்கள் ஏதும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னும் சில கிருஸ்தவ தளங்களில் தேடிப்பாருங்கள், அவைகளில் அங்கு கப்பலின் வடிவில் இருப்பது கல்லாகவே இருந்தாலும் கல்லாய்போன மரம் என்று நாம் கேள்விப்பட்டதில்லையா? என்று கேட்டு கிலியூட்டுகிறார்கள்.
7) இது எந்த விதத்தில் அந்த கப்பலோடு தொடர்புடையது என்பது புரியவில்லை.
8) கட்டுரையில் நான் இதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும், விடுபட்டுவிட்டது. கண்டெடுக்கப்பட்ட அந்த மட்பாண்டத்தில் ஒருவன் சுத்தியலால் வேலை செய்வது போலவும், ஒரு மீனும், ஒரு புறாவும் அல்லது பறவை பொறிக்கப்பட்டிருந்தது. கிருஸ்தவ தொன்மங்களின்படி, மீன் என்பது வெள்ளத்தையும் புறா என்பது வெள்ளம் வடிந்துவிட்டதா என்பதை அறிந்துகொள்ள நோவா வெளியில் பறக்கவிட்டு அது ஒலிவ இலையுடன் திரும்பி வந்ததால் வெள்ளம் வடியத்தொடங்கிவிட்டதாக அறிந்ததையும் குறிக்கும். எனவே அந்த மட்பாண்டம் அந்தப்பகுதியில் வசித்த மக்களின் சடங்குகளுக்கு பயன்பட்டதாகவே இருக்கவேண்டும் ஏனென்றால் இந்தக்கதை காலங்காலமாக அந்தப் பகுதியில் நிலவிவருவதுதான். அதோடு அந்த மட்பாண்டம் காலநிர்ணயம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
3) நான் குறிப்பிட மறந்த இன்னொரு செய்தியும் இருக்கிறது. பைபிளில் கப்பல் தங்கிய இடம் அராராத் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது, குரானில் ஜூதிமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அராராத் மலையும் ஜூதி மலையும் வேறு வேறு மலைகள். ஜூதி மலை அர்மீனிய எல்லையில் இருக்கிறது. இப்போது கப்பல் தங்கிய இடமாக எதை கருதுவது? அராராத்தா? ஜூதியா?
9,10,12,13) இவை ஆதாரங்கள் இல்லை என்பதால் குறிப்பிட ஒன்றுமில்லை.
11) நங்கூரக் கற்கள் பற்றி எற்கனவே கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
14) ஆணிகள், மூட்டுகள், அறைகள் அறைக்கதவு இவைகளெல்லாம் எந்த ரேடார் ஸ்கேன் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டன? யார் செய்த ஆய்வு? எப்பொழுது? விபரம் தரமுடியுமா?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard