New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.


Guru

Status: Offline
Posts: 24636
Date:
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.
Permalink  
 


 

குறள் 259: துறவறவியல் – புலான்மறுத்தல்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

 உயிர்செகுத் துண்ணாமை நன்று.

நாமக்கல் கவிஞர் உரை மு.வ உரை:

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

நாம் இந்தக் குறளோடு இதன் முந்தைய அடுத்த குறள்களையும் காண்போம்.

குறள் 258:

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் 
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

மு.வ உரை:

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

குறள் 260:

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிருந் தொழும்.

மு.வ உரை:

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர்- முனிவர்களை தான் வள்ளுவர் ஊணுண்வு மறுத்தலில் முக்கிய்ம் கொடுக்கிறார்.

ஆனாலும் அனவருக்கும் அவர் வற்புரித்தினார் என்று கொண்டாலும் ஒருவன் தெய்வமாக தொழப்படும் நிலைக்கு ஈடாகும் நிலைக்கு முன்னர் இறைவனிடம் அடையும்வழி வேள்விகள் செய்தல்.

ஒருவன் வேள்விகள்  செய்து கொண்டு, இறைவனை அடைய முயன்று ஊன் உண்தல் தவிற்க வேள்விகளை சிறப்பித்து போற்றித் தான் வள்ளுவர் கூறுகிறார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.
Permalink  
 


259. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.

நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

To abstain from the killing and eating of living beings is better than to perform a thousand sacrifices in the sacrificial fire.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்

 
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: புலான்மறுத்தல்
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259
தெய்வப் புலவர் திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறளில் 1330 குறட்பாவில் மிக அதிகமானமுறை பலப்பல தமிழ் அறிஞர்களால் தவறக பயன்படுத்தும் குறள், மேலுள்ளதே. நாம் இக்குறளின் பல்வேறு உரைகளைப் பார்ப்போம்.மு.வ உரை:நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
பரிமேலழகர் உரை:அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் – தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று – ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.).
மணக்குடவர் உரை:நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.
Translation: Than thousand rich oblations, with libations rare,
Better the flesh of slaughtered beings not to share.
Explanation: Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.
புலான் மறுத்தல் அதிகாரத்தில் இது வந்துள்ளது. ஆயிரம் வேள்விகளை செய்வதைவிட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்லது. இங்கு புலால் மறுத்தலை வலியுறுத்துகிறார்.
வள்ளுவப் பெருந்தகை, தான் ஏற்றுள்ள அதிகாரத்தின் கருப்பொருளை- சிறிய பொருள் கொண்டு ஆரம்பித்து உயர்ந்ததோடு முடிப்பார்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251
மு.வ உரை:தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. குறள் 255:
மு.வ உரை: உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். குறள் 260
மு.வ உரை:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
கடைசி குறட்பாவில், கொல்லாமை – புலால் மறுத்தவரை- தெய்வத்துக்கு சமமாக அனைவரும் வணங்குவர் என்கிறார்.
ஒருவன் கடவுள் அடைய வேளிவிகளை செய்ய வேண்டும், அது உயர்ந்த மேன்மையான ஒன்று, அதிலும் மேன்மையானது கொல்லாமை- புலால் மறுத்தல் என்பதை தெளிவாக சொல்ல இவ்வழியில் சொல்கிறார்.
மனுஸ்ம்ருதியில் இதே பொருளுடன் உள்ள ஒரு அறிவுரையை மேலும் மேன்மைப் படுத்தி திருவள்ளுவர் இங்கே தந்துள்ளார்.5.53. He who during a hundred years annually offers a horse-sacrifice, and he who entirely abstains from meat,obtain the same reward for their meritorious (conduct).
வேள்வியை உயர்த்தி தான் இங்கு சொல்கிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.
Permalink  
 


 இறைவனை அடையும் வழி - யாகங்கள் செய்வது, வேள்விகளை செய்து விட்டு, மாமிசம் சாப்பிட்டால் பயனில்லை என வலியுறுத்துகிறார்\

சங்க இலக்கியத்தில் பரத்தையர் தொடர்பு, மாமிசம் உண்ணல், சாராயம் குடித்தல் பல பாடல்களில் உள்ளது, இவற்றை வள்ளுவர் கண்டிக்கிறார், வள்ளுவர் தமிழர் மரபை மறுக்கிறார் எனலாமா.
வள்ளுவர் கூறியதை திரி்த்து வள்ளுவர் மொழியை மாற்றி சொல்வதெ தமிழ் பகைவர்களான திராவிட கூட்டத்தின் வேலையாய் உள்ளது.
வள்ளுவர் ஒரு இல்லறத்தான் கடமை எனச் சொல்வது 5 வேள்விகள் எனும் பஞ்ச மகா யக்ஞங்கள்.
பித்ருக்கள், கடவுள், விருந்தினர், குடும்பம், சுற்றத்தார் என்ற முறையில் கவனித்தல். மனு ஸ்மிருதியில் 3- 72 இவை கூறப் பட்டுள்ளது, மகாபாரதத்தில் சொல்லப் பட்டது.
இதில் பிதுருக்களுக்கான வேள்வி என்பது முதலானதாய் உள்ளதை கவனிக்க வேண்டும். தாய் - தந்தை இறந்தோர் ஒரு வருடம் கடவுள் வழிபாடு - கோவில் செல்ல மாட்டர்கள், இறை பண்டிகைகள் கிடையாது, வாழ்நாள் முழுது பிதுருக் கடன் நாட்களில் கோவில் செல்தல் தவிர்ப்பர்.
வள்ளுவர் - ஒரு அதிகாரத்தில் அத்தலைப்பின் அறத்தினை வலியுறுத்த கூறுவார். 1330 குறளின் மொத்த சாரம் பார்க்காது, ஒரே குறளை தன்னிச்சையாய் திரித்து உரை கண்டு; அதையே வள்ளுவர் கருத்து என்பது அறியாமையே; செங்கோண்மையில் வள்ளுவர் கூறுவது 
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் 
களைகட் டதனொடு நேர். குறள் 550: 
கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும். இங்கே அரச ஷத்திரியர் மரண தண்டனையை நியாயப் படுத்துவார்.



-- Edited by Admin on Tuesday 20th of February 2018 06:09:31 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.
Permalink  
 


 மறைவழி எழுதப்பட்ட அற நூல்கள் மன்னவன் கோல், அந்தணாளர்தம் அறம், வான் மழை இவற்றின் பிணைப்பைப் பலவாறாகக் கூறுகின்றன.

’யஜ்ஞாத் பவதி பர்ஜந்ய:’ [வேள்வியால் மழை ஏற்படும்] - கீதை

வள்ளுவமும் பல குறட்பாக்களால்
அதையே வலியுறுத்துகிறது.

தர்ம சாஸ்த்ர சுலோகங்களுக்கும், குறளுக்கும் உள்ள நெருங்கிய ஒற்றுமையை இங்கு காண்போம் -

देवतातिथिभृत्यानां पितॄणां आत्मनश्च यः ।
न निर्वपति पञ्चानां उच्छ्वसन्न स जीवति । ।

தேவதாதிதிப்ருத்யாநாம் பித்ரூணாம் ஆத்மநஸ்ச ய​: | 
ந நிர்வபதி பஞ்சாநாம் உச்ச்வஸந்ந ஸ ஜீவதி | | [3:72]

தேவதா - அதிதி - ப்ருத்யாநாம் பித்ரூணாம் ஆத்மநஸ்ச ய​:

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

தென்புலத்தார் - பித்ரூணாம்
தெய்வம் - தேவதா 
விருந்து - அதிதி
தான் - ஆத்மந:
ஒக்கல் - ப்ருத்யாநாம் [பணியாளர்]
----------------------------------------------------

யதா² க²நந் க²நித்ரேண நரோ வார்யதிக³ச்ச²தி | 
ததா² கு³ருக³தாம் வித்யாம் ஶுஶ்ரூஷுரதிக³ச்ச²தி || 
[2:218]

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத் தூறும் அறிவு. 
[396]
------------------------------------------------

அரக்ஷிதா க்ருʼஹே ருத்தா: புருஷேராப்தகாரிபி: | 
ஆத்மாநமாத்மநா யாஸ்து ரக்ஷேயுஸ்தா: ஸுரக்ஷிதா: ||
[9:12]

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. [57]
---------------------------------------

தூய்மை -

அத்பி: காத்ராணி ஶுத்யந்தி,
மந​: ஸத்யேந ஶுத்யதி | 
[தர்ம சாஸ்த்ரம்]

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
[அறத்துப்பால் :298]
-------------------------------------------------------------
மறை ஓத்தைக் காட்டிலும் ஒழுக்கமே உயர்ந்தது என மனுவும், வள்ளுவரும் ஒரே குரலில் பேசுவர் -

आचाराद्विच्युतो विप्रो न वेदफलं अश्नुते ।
आचारेण तु संयुक्तः सम्पूर्णफलभाग्भवेत् ।।

ஆசாராத்விச்யுதோ விப்ரோ ந வேதபலம் அஶ்நுதே | 
ஆசாரேண து ஸம்யுக்த​: ஸம்பூர்ணபலபாக்பவேத் | |

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

மணக்குடவர் உரை:
பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.
[மணக்குடவர் சமணர்]

---------------------------------------------------------------------------

कृषिगोरक्षं आस्थाय जीवेत् “
"க்ருஷி - கோரக்ஷம் ஆஸ்தாய ஜீவேத்” என்று மநு ஸ்ம்ருதி பத்தாம் அத்யாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. தர்ம சாஸ்த்ரம் வேளாண்மையை ஆதரித்துள்ளது;
குறளில் உழுதொழிலுக்கென்றே ஓர் அதிகாரம்.

-----------------------------------------------------------------------------
இன்று நம் தேசத்தை ஆள்வோர் கட்டாயம் செய்ய வேண்டியது -

यथोद्धरति निर्दाता कक्षं धान्यं च रक्षति ।
तथा रक्षेन्नृपो राष्ट्रं हन्याच्च परिपन्थिनः । । ७.११०

யதோத்தரதி நிர்தாதா கக்ஷம் தாந்யம் ச ரக்ஷதி | 
ததா ரக்ஷேந்ந்ருபோ ராஷ்ட்ரம் ஹந்யாச்ச பரிபந்திந : | | 7.110

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் 
களைகட் டதனொடு நேர்
[குறள் 550]

---------------------------------------------------------------------

वर्षे वर्षे अश्वमेधेन यो यजेत शतं समाः |
मांसानि च न खादेद् यस्तयोः पुण्यफलं समं ||

வர்ஷே வர்ஷே அஶ்வமேதே₄ந யோ யஜேத ஶதம் ஸமா​: | 
மாம்ஸாநி ச ந கா₂தே₃த்₃ யஸ்தயோ​: புண்யப₂லம் ஸமம் || 5:53

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

#திருக்குறள்



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 28168802_10156108839554719_5519085531587



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

திருக்குறளும் தரும சாஸ்திரங்களும் - வர்ணாஸ்ரம தருமம்

 
द्रविड ग्रन्थ (तिरुक्कुरळ्) च धर्म शास्त्राणि - वर्णस्रम धर्माणि 

தமிழ் மொழியிலே பிராம்மணர்களை மட்டுமே  துவிஜர் அல்லது பார்ப்பனர்கள் என்று கூறுவார். ஆனால் மனு, தம்முடைய தர்ம சாஸ்திரத்தில் முதல் மூன்று வருணங்களையுமே துவிஜர்  என்று சொல்லுகின்றார்- அதாவது பிரம்மோபதேசம் பெற்று, தம்முடைய உண்மையான ஆத்ம ஸ்வரூபம் அல்லது ஆன்ம ஞானம் பெறுபவர்கள் என்று பொருள் படும்.


१.८८ अध्यापनमध्ययनं  यजनं  याजनं  तथा  |
दानं  प्रतिग्रहं  चैव  ब्राह्मणानामकल्पयत्  ||
  1. தானம் அளித்தல் (ஈதல்)
  2. தானம் வாங்கி கொள்ளல் (ஏற்றல்)
  3. வேதங்களைக்  கற்றல், (ஓதல்)
  4. வேதங்களைக்  கற்றுவித்தல் (ஓதுவித்தல்)
  5. வேள்விகளை நிகழ்த்துதல் (வேட்டல்)
  6. வேள்விகளை நிகழ்த்துவித்தல் (வேட்பித்தல்)
ஆகிய 6 தொழில்களை உடையவர்கள் அந்தணர்கள்.
இதனையே திருமூலரும் தெள்ளிய தமிழில் சொல்லியிருக்கின்றார்:

5.1 அந்தணர் ஆவோர் அறு தொழில் பூண்டு உளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
நம்தவ நல் கருமத்து நின்று ஆங்கு இட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே.
 
१.८९ प्रजानां  रक्षणं  दानमिज्या अध्ययनमेव  च  |
विषयेष्वप्रसक्तिश्च  क्षत्रियस्य  समासतः  ||
 
அதே போல , க்ஷத்ரியர்கள் எனப்படும் அரசர்கள் - 
  1. நாட்டுப் மக்களைக் காத்தல்
  2. வேள்விகளை நடத்துதல்(அந்தணர்களைக் கொண்டு), 
  3. தானங்கள் கொடுத்தல், 
  4. வேதங்களைக் கற்றல் மற்றும் தம்முடைய (ஐவகை) 
  5. இந்திரியங்களை அடக்கிக்கொள்ளுதல் 
என்ற கடமைகளை செய்ய வேண்டும்.
 
 இதனைத்தான் நம் வள்ளுவரும்,
 
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
 
அதாவது அந்நிய மன்னர்களிடத்தில் இருந்து நாட்டைக் காத்தல், குடி மக்களைக் காத்தல் மற்றும் குற்றம் செய்தவர்களைத் தண்டித்தல் ஆகிய தோழிகளை செய்வது வேந்தர்க்கு அழகு என்கிறார் வள்ளுவர்.
 
மனு, ஒரு அரசன் இந்திரன், யமன், வருணன், சூரியன் சந்திரன், மற்றும் நிலம் ஆகிய அனைத்துமாய் தன்னுடைய பிரஜைகளைக் காக்க வேண்டும் என்கிறார். 
 
इन्द्रस्यार्कस्य  वायोश्च  यमस्य  वरुणस्य  च |
चन्द्रस्याग्नेः  पृथिव्याश्च  तेजोवृत्तं  नृपश्चरेत ||
 
  1. இந்திரன் மழைப் பொழிவிக்கும் கடவுள் - அவனைப் போல தன நாட்டு மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும்.
  2. சூரியன்   தண்ணீரை ஆவிக்குவான் - அதே போல, மக்களிடத்தில் நியாயமான வரிகளை பெற வேண்டும் 
  3. வாயு எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பான் -அதே  போல அரசன் உளவு  செய்து தன நாட்டு நடப்புகளைத் அறிந்து கொள்ள வேண்டும் 
  4. யமன் காலத்தை வைத்து எல்லோரையும் கண்டிப்பான் - அதே போல ஒரு வேந்தன், விருப்பு வெறுப்பு இல்லாமல் எல்லோரிடத்திலும் தன்னுடைய இராயன்ன்மையை நடத்த வேண்டும்.
  5. வருணன் தன பச்சக் கயிற்றால் தீயோர்களைப் பிடித்து இழுப்பந் - அதே போல் ஒரு அரசனும் தீமை இழப்பவர்களை தண்டிக்க வேண்டும்.
  6. முழு நிலவு எப்படி எல்லோராலும் வரவேற்கப் படுகின்றதோ,  அதே போல் ஒரு அரசனும் தன்னுடைய பிரஜைகளால் வரவேற்கப் பட வேண்டும். 
  7. குற்றம் புரிந்தவர்களையும், சூழ்ச்சி செய்பவர்களையும் அவன் தீயைப் போல அளிக்கட்டும்
  8. பூமித்தாய் எப்படி எல்லோரையும் சமமாகப் பார்க்கின்றாளோ, அதே போல் ஒரு அரசன் தன்னுடைய பிரஜைகள் எல்லோரையும் சமமாகப் பார்க்கட்டும் 
இதனைத்தான் வள்ளுவர் - 
 
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.
 
அதாவது வேத பராயணத்திற்கும் , தர்ம சாஸ்திரத்திற்கும், (அவற்றை அடிப்படையாகக் கொண்டு) துவக்கமாக இருப்பது அரசுனுடைய செங்கோல் என்று மேற்கூறிய ஸ்லோகத்தை அழகாக்க கூறுகின்றார் நம் வள்ளுவர்.
 
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.
 
வள்ளுவர் இங்கு  கொடுங்கோல் ஆட்சி செய்யும் அரசனுடைய நாட்டில், மாடுகள் பால் கரவாது, அதே போல பார்ப்பனர்கள் வேள்விகள் நடத்த மாட்டார்கள் - அதனால் மழை  இன்றி பஞ்சமும், பட்டினியும் சூழ்ந்து கொள்ளும் அவன் நாட்டில் என்று சொல்கின்றார்.

१.९० पशूनां  रक्षणं  दानमिज्या .अध्ययनमेव  च  |
वणिक्पथं  कुसीदं  च  वैश्यस्य  कृषिमेव  च ||

மூன்றாம் வர்ணமாகிய வைசியர்கள் -
  1. கால்நடைகளைக் காத்தல், 
  2. தானங்கள் அளித்தல்,  
  3. வேதங்களைக் கற்றல், 
  4. வேள்விகள் செய்தல், 
  5. வியாபாரம் செய்தல், 
  6. பணம் (கடன்) கொடுத்தல், 
  7. வேளாண்மை செய்தல் 
ஆகிய கடமைகளை செய்ய வேண்டும். இந்தக் கணக்கில் பார்த்தால் நம் தமிழ் நாட்டில் உள்ள பிரிவுகள் (90 %) மக்கள் எல்லோருமே வைசியர்கள் எனக் கொள்ளல் வேண்டும்.

அதாவது வணிகர் அல்லது வைசியர்களில் மூன்று வகை:

  1. கோ அல்லது பஷு வைசியர் ( கால் நடை பராமரிப்பவர்கள்)
  2. பூ வைசியர் (வேளாண்மை செய்ப்பவர்கள்)
  3. தன வைசியர் (வணிகம், மற்றும் வாங்கி, கடன் கொடுக்கும் செட்டியார்கள்)

நம் நாட்டிலே உள்ள வேளாளர், கால் நடை பராமரிப்பாளர், மற்றும் எல்லா வகையான செட்டியார்கள் எல்லோருமே வைசியர்கள் என்று கொள்ள வேண்டும்.சிரேஷ்டி என்ற வாடா மொழிச் சொல்லே செட்டி அல்லது செட்டியார் என்ற பதம் நம் தமிழிலே வழங்கப் படுகின்றது.
 
१.९१ एकमेव  तु  शूद्रस्य  प्रभुः  कर्म  समादिशत्  |
एतेषामेव  वर्णानां  शुश्रूषामनसूयया ||

நான்காம் வருணத்தவர்களாகிய சூத்திரர்கள் மேற்கூறிய மூன்று வருணங்களுக்கும் சேவைகள் செய்தல் அல்லது வேலை பார்த்தால் ஆகும். கடும் உழைப்பாளர்கள் ஆகிய படியினால் வேறு விசேஷமான கடமைகள் ஒன்றும் இந்த நான்காம் வருணத்தவர்களுக்குச் சொல்ல படவில்லை. 


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

Ramachandran வேந்தன் அரசுஐயா,வணிகர்களுக்குத் திருவள்ளுவர் பதிகம் (தனி அதிகாரம்)இயற்றவில்லை. உழவர்க்குத்தனி அதிகாரம் இயற்றியுள்ளார். பொருட்பாலில் விவசாயப் பொருளாதாரத்தையே வள்ளுவர் முதன்மைப்படுத்துகிறார். இறைமாட்சியில் கருவூலம் என்பதற்குச் சமமான சொல்லாகக் கூழ் (களஞ்சியத்தைக் குறிப்பது) என்பதைப் பயன்படுத்தியிருப்பது கவனத்துக்குரியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

Dev Raj updated his status.

வாழ்க வள்ளுவம் ! 
[தொடர்ச்சி]

வள்ளுவம் சமணச் சார்புள்ளது என்பதை நிறுவ விழைவோர் எப்போதும் முதலில் சுட்டிக்காட்டும் குறட்பா ஒன்று -
"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று"

உவமேயம், உவமை இரண்டினுள்ளும் உவமையே உயர்ந்ததாக விளங்க வேண்டும் என்பது இலக்கணம் காட்டும் வழி. தொல்காப்பிய உவமயியலின் நூற்பா ஒன்று- "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை"

தொல்காப்பிய நூற்பா குறிப்பது -
உவமைக்கு வைப்பது உயர்ந்த பொருளாக வேண்டும் என்பதே. கரிய நிறத்திற்கு உவமையாக ஓர் மலரையோ, முகிலையோ, யானையையோ காட்டலாம்; ஆனால் கரிய கழிவுநீரைக் காட்டலாகாது.

உயர்ந்த பொருளையே ஒப்புமைப்படுத்த வேண்டும் -

அரிமா அன்ன அணங்குடைத் துப்பு – வினை உவமம் (வலிமையில் அரிமா உயர்ந்தது)
மாரி அம்பின் மழைத்தோல் சோழர் – பயன் உவமம் (மாரி அம்பினும் உயர்ந்தது)
கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பு – வடிவு (கடல்பரப்பு உயர்ந்தது)
பொன்மேனி – வண்ணம் (பொன்னின் வண்ணம் மேனி வண்ணத்தினும் உயர்ந்தது)

உயர்ந்தவற்றின் மதிப்பைச் சொல்கையில் உலகோர் பார்வையில் மிக உயர்வானவற்றை இணைத்துப் பேசுவது வள்ளுவம் பேணும் மரபும்கூட; இழிவான செயல்களைக் கூறுகையில் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தையும் அதில் காண்கிறோம்.

ஆ காத்து ஓம்புதல் பேரறம் என்பதால் அதைச் சொல்கிறார்-
ஆவிற்கு நீர்என் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்.

ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு, 
அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்; 
இரவின் நாவிற்கு 'இளிவந்தது இல்' - அவ்விரவுபோல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை. 
(ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு நீரளித்தல்' என்று உவமை காட்டினார்)

வேள்வி மிக உயர்ந்தது என்பதால் ‘ அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்....’ என்றார்.

வள்ளுவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உவமைகள் .

நுட்பமான உண்மைகளை விளக்கப் பொருத்தமான உவமை -

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று"

"ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று"

உயர்வானவற்றுக்கு , ஏற்கத்தக்கனவற்றுக்கு உயர்ந்த உவமை; தாழ்ந்தவற்றைக் குறிக்க மிகவும் தாழ்ந்த பொருட்களோடு உவமை. இதுவே வள்ளுவம் பின்பற்றும் முறை -

கைம்மாறு கருதாமல் உதவும் பண்பாளர்களுக்கு மழை உவமையாகிறது.

காமத்துப்பாலில் இன்பத்துக்கு மாலவனின் உலகு தரும் பேரின்பம் உவமையாகிறது.

சில பாக்களில் மலர் கண்களுக்கு உவமையாகிறது.
(குறள் 112,119,1231, 1142)

பொருட்பெண்டிருக்குப் பிணமும், மக்கட் பண்பற்றவருக்கு மரமும், உலோபியின் செல்வத்துக்கு நச்சு மரமும் உவமைகளாயின -

"பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று"

"அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்."

"நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று"

உயிர்க்கொலை மறுக்கும் பேரறத்துக்கு உயர்ந்ததான வேள்வி எடுத்துக்காட்டப்படுகிறது, மிக உயர்ந்த கங்கையைக் காட்டிலும் புனிதமானது காவிரி [கங்கையிற் புனிதமாய காவிரி] என்பதுபோல -
"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று"

உவமையாயினும், ஒப்பீடாயினும் உயர்ந்த, உலகோர் அறிந்த பொருள் ஒன்று அடிப்படை அலகாக அமைகிறது.

'எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ' எனக் கம்ப ராமாயணம் பரதாழ்வானின் உயர் தகைமைகளைக் கோடி காட்டுவதற்குக் காப்பிய நாயகனான இராமபிரானையே எடுத்துக் கழிக்கிறது.

"செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து."

மிக உயர்ந்ததான செவியுணவுக்கு அவியுணவு உவமையாகிறது; கேள்விச்செல்வம் மிக்கோர்க்கு அவியுணவின் ஆன்றோராகிய அமரர் உவமையாகின்றனர்.

வள்ளுவர் வேள்வியை மறுக்கும் சமண சமயத்தவராக இருந்தால் இவ்வாறு கூறுவாரா ?

வேள்விகளை வள்ளுவம் ஏற்றுக்கொண்டுள்ளதா என்னும் ஐயம் தேவையற்றது; வேள்வியில் தரப்படும் அவியுணவு, மறை ஓத்து, வேள்விகளை மையமாகக்கொண்ட அறுதொழில் இவற்றை வள்ளுவம் மறுக்கவில்லையே !

மேலும் இன்னொன்று; மறைசார் இலக்கியங்களிலும் வேள்வி ஒப்பீட்டுக்காக எடுத்தாளப்பட்டுள்ளது, அது உலகோர் அறிந்த உயர்ந்த சடங்காக இருப்பதால்.’விடுதலை வேள்வி’ , ’தியாக வேள்வி’ எனும் சொற்பயன்பாடுகள் இன்றும் இருப்பவையே.

மஹாபாரதம் சாந்தி பர்வத்தின்கண் இருக்கும் பா ஒன்று - 
அஶ்வமேதஸஹஸ்ரம் ச ஸத்யம் ச துலயா த்ருதம் | 
அஶ்வமேதஸஹஸ்ராத்தி ஸத்யமேவ விஶிஷ்யதே||

[அசுவமேத வேள்வி ஆயிரத்தையும் , வாய்மையையும் துலாக்கோலில் நிறுத்துப்பார்க்குங்கால் வாய்மையே எடை மிகுந்ததாகிறது]

இதனால் மஹாபாரதம் வேள்விகளை விலக்கச் சொல்லும் சமணம் சார்ந்த நூல் என முடிவு செய்ய முடியாது. ஆக வள்ளுவமும் மஹாபாரதம் போன்ற ஒரு மறை சார்ந்த நூலே

பொன்முடி வடிவேல் B.r. Haran Khaanthan Balakrishna Sastri Boston Bala



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

Meenakshi Dasan உயர்ந்த உவமைக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு - " ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியம் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் "
3
Manage
 
LikeShow more reactions
 · Reply · 1y
Dev Raj
Dev Raj ஆகா, அருமை ;கருணையே வடிவான காரமர் மேனிக் கண்ணபிரானையே கார்முகிலுக்கு உவமையாக்கும் நாச்சியாரின் புலமையை என்னென்று சொல்வது !


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

வேள்வியில் மிருகவதை என்பது பல்வேறு நியமங்களுக்குட்பட்டது; ஏதோ கசாப்புக் கடையில் அறுப்பது போல அறுத்துப் பலவித மசாலாக்கள் சேர்த்துத் தீயில் வாட்டிச் சுடச்சுடப் பசிக்கு ருசியாக உள்ளே தள்ளுவது போலன்று.

வேதிக்குள் யார் யார் செல்லலாம், என்னென்ன பண்டங்கள் உட்புகலாம், வேள்வியின் பிரசாதமாக எந்த அளவு ஏற்கலாம் அனைத்துக்கும் விதிமுறைகள் உள்ளன. வேள்விச்சாலை சமையலறை அன்று. பூண்டும், வெங்காயமும் முற்றிலும் விலக்கப்பட்டவை.வேள்விக்கான காலமும் உண்டு. வேள்விக்கான உபகரணங்களுக்கு மட்டுமே அனுமதி. பசு பந்தம் முடிந்த பின் ஒரு துவரம்பருப்பளவு யக்ஞ சேஷம் புசிக்கலாம்; அல்லது முகர்ந்து பார்த்து ஒதுக்கலாம். லோபம் - குறைபாடு சிறிதே நேர்ந்தாலும் வேள்வி செய்வோனுக்கு [யஜமானனுக்கு] எண்ணற்ற பாவங்கள் சேரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

[யஜ் - வேரிலிருந்து பிறந்த ‘யஜமாந’ வேள்வியில் முனைபவனைச் சொல்கிறது; நாளடைவில் இச்சொல் உரிமையாளனை, தலைவனை, முதலாளியைச் சுட்டும் சொல்லாகிவிட்டது, இந்திய மொழிகளில்]

கலியில் விதி - நியமங்களைக் கடைப்பிடிப்பது கடினம் என்பதால் பல வேள்விகளை முனிவர்களே தடை செய்துள்ளனர் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

படிப்படியாக யஜமானனின் உடற்பற்றைக் குறைப்பதும், அவனது செல்வ மிகுதியைக் குறைப்பதுமே (spiritual communism) வேள்விகளின் நோக்கம்.

சாமானியமான ஹோமங்களிலேயே ‘இந்த்ராய ஸ்வாஹா, இந்த்ராய இதம் ந மம| விஷ்ணவே ஸ்வாஹா, விஷ்ணவே இதம் ந மம||’ என்றுகூறி ஹவநம் செய்வர். ‘ந மம’ எனக்கூறுவது மமகார மறுப்பாகும். படிப்படியாக மமகாரத்தைக்குறைத்து உபநிஷத் சுட்டும் உயர்ந்த நோக்கத்துக்கு [கர்ம காண்டத்திலிருந்து, ஞான காண்டத்துக்கு] ஒருவனைத் தயார் செய்து உயர்த்துவதே மறைகளின் நோக்கம்.

வேள்விக்காலம் முடியும்வரை ஊண் - உறக்கம் அனைத்திலும் கட்டுப்பாடுகள் உண்டு; உடலில் அரிப்புத் தோன்றி, நகத்தால் சொறிந்துகொண்டால் வேள்வி அனைத்தும் வீணாகும். மான் கொம்பை வைத்துக்கொள்ளலாம்.

வேள்விகள் ஆடம்பரத்துக்கானவை அல்ல; அந்தஸ்தைக் காட்டிக்கொள்வதற்காக ஏற்பட்டவை அல்ல; அவை பாவங்களுக்கான கழுவாயாக விதிக்கப்பட்டவை; அஹங்கார - மமகாரங்கள் நீங்குவதற்கானவை. பாவங்கள் தீருமாயின் செய்பவனின் மன ஆசைகள் நிறைவேற வாய்ப்பு ஏற்படும். வாழ்வின் மிக முக்கிய நிகழ்வான திருமணம் ஓர் ஆடம்பரச் சடங்காக மாறியுள்ளதுபோல் யுக மாற்றத்தால் வேள்வியும் ஆடம்பரமானது.

தக்ஷன், ராவணன் போன்றோர் செய்த வேள்விகள் செருக்கின் அடிப்படையில் அமைந்தவை; வீழ்ச்சிக்குக் காரணமாயின. ஆனாலும் அவர்கள் ஆஹித அக்னிகளே. இடையறாது நியமத்தோடு அழலோம்பி வந்துள்ளனர்; அத்தகையோரே வேள்வி செய்யத் தகுதி உடையவர்.சுவர்க்க போகங்களைப் பெறும்பொருட்டு வேள்வி செய்தோரும் இருந்துள்ளனர். ஞானியர் செய்யும் வேள்வி ஈசுவரார்ப்பணமாக அமையும்; அவர்களுக்கு வேறு குறிக்கோள் கிடையாது.

வேத: நித்யம் அதீயதாம்,
தத் உதிதம் கர்ம ஸு அநுஷ்டீயதாம்,
தேந ஈசஸ்ய விதீயதாம் || - ஸ்ரீ பகவத்பாதர்

வேத விதிப்படி ஈசனை ஆராதிக்க வேண்டும்
என்பதே சங்கர பகவத்பாதர் அவர்களின் அருளுரை.

வைதிக கர்மங்கள் அனைத்தும் பகவத் கைங்கர்ய வடிவானவை என்பதே ஸ்ரீ ராமாநுஜர்தம் கருதுகோளும். பூர்வ மீமாம்ஸை முழுவதையும் ஆராதன ரூபமாகவே உடையவர் நிர்த்தாரணம் செய்தார்.

மொத்தத்தில் வேத கர்மங்கள் ஈசுவர ஆராதன மாத்திரமே!

[மருத்துவர் பண்டுவத்துக்காக நோயாளியின் உடலைக் கீறுவதும்,போரில் எதிரிடும் பகைவரைக் கொல்வதும், கொலையிற் கொடியோரை வேந்து கொல்வதும், வேள்வியின் கொலையும் ஜீவஹிம்ஸை ஆகா]



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

Dev Raj செ. இரா. செல்வக்குமார் ஒரு துறையைப் பற்றிப் பேசும்போது அதில் உள்ளதைத் தான் சொல்ல முடியும்; மறுப்பதும் ஏற்பதும் அவரவர் விருப்பம். சமணம் குறித்துப்பேசுங்கால் நீராடாமை, ஆடையணியாமை, மிகக்குறைந்த அளவு நீர்ப்பயன்பாடு,மயிர் பறித்தல் இவற்றைச் சொல்லத்தான் வேண்டும். அவற்றுக்கான காரணங்களையும் அத்துறை சொல்கிறது. பலருக்கும் இவ்வழக்கங்கள் பிடிக்காமல் இருக்கலாம். அதற்கு என்ன செய்ய முடியும்? ஓரிரு நாளாவது திகம்பர சமணத் துறவியர்போல் ஒருவனால் இருக்க முடியுமா என்பது ஐயப்பாடே. தூய சமண நெறி உடலுறுதி தராவிட்டாலும் மன உறுதி தந்து விடுகிறது. சல்லேகனை இருந்து உயிர் துறக்குமளவு பலரிடம் மன உறுதி உள்ளது. இதைச் சொன்னால் சமணத்தை உயர்த்திப் பிடிப்பதாகாது. பவுத்தரின் நியாயம், நாகார்ஜுனரின் சிந்தனைகள் அறிஞர் பலரையும் ஈர்ப்பவை. வேள்வியில் உயிர்வதை கூடாது என்பதை மஹாபாரதமும் சொல்கிறது; அது உயிர்வதையன்று என்பதற்கும் நியாயம் கூறுவர்.

Krishna Kumar தமிழ் மரபு என்பது வேதநெறியிலிருந்து முற்றிலும் வேறான விஷயம் என்று சிரசாஸனமாவது செய்து நிர்த்தாரணம் செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் செல்வக்குமார் ஐயா அவர்கள் இருப்பதாகத் தெரிகிறது. 

கொல்லாமை என்பது தமிழ்மரபு என்றும் ஹிம்சை வேதநெறி என்றும் ஐயா அவர்க
ள் புரிந்து கொள்கிறாரோ என்று சம்சயம் வருகிறது.

தொல்தமிழ் நூற்களில் எந்த அளவு கொல்லாமை போதிக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்றே மாம்சாஹாரம் என்பது தமிழர் தம் வாழ்வில் ஒரு அங்கமாக விளங்கியிருக்கிறது என்றே கருதுகிறேன். திருக்குறளில் இதுபற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது என்று ப்ரக்யாதி வாய்ந்த மாம்ச பக்ஷகராகிய செல்வன் அவர்களிடம் வினவியுள்ளேன். சீக்ரமாக ஒரு வ்யாசம் இது சம்பந்தமாகச் சமர்ப்பிப்பார் என்று எண்ணுகிறேன். மாம்சாஹாரத்தைப் பற்றித் தமிழ் நூற்கள் சொல்லுகையிலேயே கொல்லாமையின் அவச்யத்தையும் அவை வலியுறுத்துகின்றன. இரண்டையும் நிச்சயம் சமன்வயம் செய்ய முடியும் என்று நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்.

வேதநெறியில் வேள்விகள் சொல்லப்பட்டிருக்கையில் அவ்வேள்விகளில் ம்ருகங்கள் ஆஹுதியின் அங்கமாக இருக்கும் போதிலும் வேதநெறி அஹிம்சையையும் போதிக்கிறது. அஹிம்சா பரமோ தர்ம: என்பது வேதநெறி. இரண்டிற்கும் சமன்வயமும் உண்டு. தேவ் ஐயா இது பற்றியும் விவரமாக எழுத வேண்டும்.

இந்த வ்யாசத்தின் கருப்பொருள் வேதநெறிப்படி செய்யும் க்ரதுக்களில் யக்ஞ சேஷமாக புஜிக்கப்படும் அல்லது நுகரப்படும் மாம்சத்தின் அளவு மிகவும் சொல்பம் என்பதும் அதுவும் கூட புஜிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்தமும் இல்லை என்பது முக்யமாக கவனிக்கத் தக்க விஷயம். நுகரப்பட்டாலும் போதும் என்பது நெறி என்று இந்த வ்யாசம் விளக்குகிறது. வேதநெறிப்படியான வேள்வி என்பதில் காணப்படும் மாம்சம் என்பது வாய்க்கு ருசியான மாம்சாஹாரத்தை உண்ணுவதற்கான ஒரு வழி என்று நினைப்பவர்களின் எண்ணப்பாங்கை மறுதலிப்பதே இந்த வ்யாசத்தின் லக்ஷ்யம்.

இதை விடுத்து நீங்கள் குறுக்குசால் ஓட்டி வேறொரு பொருளைப் பற்றிப் பேச விழைகிறீர்கள் எனப்புரிகிறது. நீங்கள் பேச வரும் பொருளைப் பற்றி நான் ப்ரஸ்தாபித்து விளக்கமளித்து விட்டேன் என்றே நினைக்கிறேன் ஐயா.

செ. இரா. செல்வக்குமார் திரு கிருட்டிண குமார், வேத நெறி மட்டுமன்று சமண, பௌத்த, கிறித்தவ, இசுலாமிய ஆகிய அனைத்து நெறிகளிலும் உள்ள நல்லனவற்றோடு இணக்கமான ஒன்றே தமிழ்மரபு. இவை அனைத்தும் தோன்றும் முன்பேயிருந்து இருந்துவருவது என்பதும் உண்மை. இது பெருமைக்காகச் சொல்லவில்லை. தமிழர்களில் மிகமிகப் பெரும்பாலோர் புலால் உண்பவர்கள்தாம். இந்தியாவிலும் உலகிலும் இப்படியே. புலால் உண்பவர்களும் புலால் உண்ணாமையை இயன்றவாறு போற்றி வந்துள்ளனர். சில கிழமைநாட்களிலோ சில நோன்பு நாட்களிலோ புலால் உண்ணாமையைப் பின்பற்றிவந்துள்ளனர். புலாலே உண்ணாது இருக்கும் தமிழர்கள் மிகமிகச்சிறிய எண்ணிக்கையர். வேத மரபிற்கு எதிரானது தமிழ்மரபு என்று காட்டுவதற்கல்ல என் பதிவுகள், வேதமரபில் வந்த இன்றும் புற்றுநோய் போல் இருக்கும் வருணாசிரம இனவேற்றுமையையும் (shameful and vile racism), எல்லாமே வேதத்திலிருந்து, சமற்கிருதத்திலிருந்து வந்தது (vedic-centric, Sanskrit-centric ' Arya supremacy) என்னும் பரப்புரையும் அவ்வப்பொழுது இயலும் வகையில் மறுத்துக்கூறுவது. இது அறியாமையால் நிகழும் பரப்புரை, தீய எண்ணங்களால் செய்யப்படும் பரப்புரை. வேதமரபை (அவற்றுள் இருந்த நல்லனவற்றை) தமிழர்களைப்போல் அறிந்துபோற்றி ஆக்கம் தந்தவர்கள் இல்லையென்றே கூறலாம். தமிழர்கள் வேதமரபுக்கு எதிரானவர்கள் அல்லர். மாறாகப் போற்றுபவர்கள். ஆக்கம் தந்தவர்கள். ஆனால் இடைவிடாது மேற்கூறியவாறு செய்யும் தீமைகளால், தமிழையும் தமிழ் மரபையும் கீழ்மைப்படுத்துவதாலும், தமிழருக்கு எதிராகவே, தமிழர்நலனுக்கு எதிராகவே இயங்குவதாலும், வருணாசிரம தீமையுள் ஒன்றாகக் காட்ட முற்படுவதாலும் எதிர்த்துக்கூறவேண்டியுள்ளது. தமிழர்மீது இருக்கும் வெறுப்பும், தமிழை யழிக்கவிருக்கும் துடிப்பும் தமிழரை அழிக்கவிருக்கும் துடிப்பும், தீரா நோய். நல்வழி ஆயிரம் இருந்தும் தீவழியையே கடைபிடிக்கும் இப்பேதைமைக்கு தீர்வு கிடைப்பது அரிதே.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

மணக்குடவர் உரை:
நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.

பரிமேலழகர் உரை:
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.).

---------------------------------------------

மணக்குடவர் உரை: 
செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர். 

பரிமேலழகர் உரை: 
செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர். (செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அவ்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. 
அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்', என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.). அவியுணவை வேள்வியோடும் அமரரோடும் தொடர்புடையதாகவே உரையாசிரியர்கள் காட்டுகின்றனர். ஐயா அவர்கள் புத்துரை வரையலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 
 
Dev Raj
6 hrs · 
 

”அவிசொரிந்தாயிரம் வேட்டல்”

வர்ஷே வர்ஷே(அ)ஶ்வமேதே₄ந 
யோ யஜேத ஶதம் ஸமா​: । 
மாம்ஸாநி ச ந கா₂தே₃த்₃யஸ்தயோ​: 
புண்யப₂லம் ஸமம் ॥ 
- மனு

உவமை கையாளும் வள்ளுவர்பிரான் பெரும்பாலும் ஒரே வழிமுறையைத்தான் நூல் நெடுகிலும் பின்பற்றுகிறார்; மிக மென்மையானவற்றை மென்மையான மலராகக் கருதப்படும் அனிச்ச மலரால் உவமை சொல்லுவார். பண்புடையாளர் தொடர்பு நூல் நய நேர்த்தியோடு ஒப்பீடாகும். பயனற்ற மொழி பேசுபவன் பதர் ஆகிறான். மக்கட் பண்பற்றவன் மரம் போன்றவன். பரத்தையர் நுகர்வுக்கு இருட்டறை இத்யாதி. வள்ளுவத்தின் உவமைகளையே நூலாக்கித் தந்துள்ளனர் அறிஞர்.

உயர் செயலை உயர்ந்தவற்றோடும், இழி செயல்களை மிக இழிந்தவற்றோடும் ஒப்பீடு செய்வது அவர் கையாளும் முறை. திருகலாகிய சிந்தை படைத்தோர் பொருளைச் சிதைத்துத் திரித்துத் திசை மாற்றும் போக்கு மிகவும் தவறானது, திருவள்ளுவ நாயனாரின் திருவுள்ளக் கருத்துக்கு முரணானது.

கோவையைச் சேர்ந்த திரு நடேசன் முத்துக்குமாரசுவாமி அவர்கள் தெளிவாக விளக்குகிறார்:

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன், 
உயிர்செகுத் துண்ணாமை நன்று" 
இந்தக் குறள் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் உள்ளது. இந்தத் திருக்குறளை வைத்துக் கொண்டு திருவள்ளுவர் அவிசொரியும் வேள்வியைக் கண்டித்தார் என்றும் அதனால் வேள்வியை மறுக்கும் அவைதிக சமணம் அல்லது பவுத்தத்தைச் சார்ந்தவர் திருவள்ளுவர் எனப் பெரிய மேதாவிகளான சீனி. வேங்கடசாமி போன்றவர்கள் சாதிப்பர்.

தெய்வப் புலவர் ஓர் அறத்தை வலியுறுத்த மற்றொரு அறத்தினொடு உறழ்ந்து கூறுவார். இங்கு அதிகாரப்பட்டது, புலால் மறுத்தல் என்னும் அறம். அது வேள்வி செயல் என்னும் அறத்தினொடு உறழ்ந்து காட்டி,இந்த அறத்தைக் காட்டிலும் இந்த அறம் உயர்ந்தது எனக் கூறியதே அன்றி வேள்வியைக் கண்டித்தது ஆகாது. வேள்வியும் ஒரு அறம், புலால் உண்ணாமையும் ஒரு அறம். இவ்விரண்டில் வேள்விகளான் வரும் பயனைக் காட்டிலும் புலால் உண்ணாமை என்னும் இவ்விரதமாகிய அறத்தினால் வரும் பயனே பெரிது என்பது இக்குறளின் கருத்தாம். வேள்வியை மறுத்தல் இக்குறளின் கருத்தன்று. பரிமேலழகரும் இவ்வாறே கூறினார்.

மேற்சுட்டிக் காட்டிய குறளைப் போன்றே அறங்களை ஒப்பிட்டுக் காட்டி, அதிகாரப்பட்ட அறத்தை வலியுறுத்தும் ஏனைய குறட்பாக்களையும் ஒப்பு நோக்க வேண்டும் -
"ஈன்றாள் பசிகாண்பா ளாயினும் செய்யற்க, 
சான்றோர் பழிக்கும் வினை" 
இந்தக் குறட்பா ’வினைத் தூய்மை’ எனும் அதிகாரத்தில் உள்ளது. இக்குறட்பாவில் இரண்டு பாவங்களை ஒப்பு நோக்கி இந்தப் பாவத்தைக் காட்டிலும் இந்தப் பாவம் கொடிது என வள்ளுவர் சுட்டிக் கூறுகின்றார். பெற்ற தாயின் பசியைப் போக்காதிருத்தல் பாவம். சான்றோர் பழிக்கும் வினையைச் செய்தலும் பாவம். இவ்விரண்டினையும் ஒப்பு நோக்கும்போது தாய் பசியோடிருப்பதைக் காண்பதைக் காட்டிலும் சான்றோர் பழிக்கும் வினை செய்வது கொடிய பாவம் என்பதே கருத்து.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலினும்' என்னும் குறளில் உடன்பாட்டில் சொன்ன வலியுறுத்தலை இந்தக் குறளில் எதிர்மறையில் வலியுறுத்துவார். அங்கு வேள்வியை மறுத்தார் எனப் பொருள் கொண்டால் இங்கு தாயின் பசியோடு வைத்திருத்தல் அறம் எனக் கொண்டார் எனப் பொருள்படும்.

"ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின், 
நீரினும் நன்றதன் காப்பு" 
இந்தத் திருக்குறளில் உழவுத் தொழிலின் நான்கு நிலைகளைத் திருவள்ளுவர் ஒப்பிட்டுப் பேசுகின்றார். ஏர் உழுதல் ஒன்று. எருவிடுதல் மற்றொன்று. இந்த இரண்டில் ஏர் உழுதலைக் காட்டிலும் எருவிடுதல் நன்று எனக் கூறினார், ஏர் உழவேண்டா, எருவிடுதல் ஒன்றே போதும் என்பது அவர்கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று, நீர் பாய்ச்சல் மற்றொன்று. இங்கு நீர்பாய்ச்சலே போதும் களைகளைக் களைய வேண்டுவதில்லை என்பது அவர்தம் கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று, காப்பிடுதல் மற்றொன்று. காப்பிடுதல் இன்றியமையாதது என வலியுறுத்தினாரேயன்றிக் களை கட்டல் தேவையில்லை எனக் கூறினாரல்லர்.

அவ்வாறே, ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை பேரறம் என வலியுறுத்தினாரேயன்றி, அவிசொரிந்து வேட்டலைத் தெய்வப்புலவர் மறுத்தார் எனக் கொள்ளக் கூடாது.

Natesan Muthukumaraswamy



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 வேள்வியை வள்ளுவர் மறுத்தாரா? : ஓர் ஆய்வு

அவ்வாறே, ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை பேரறம் என வலியுறுத்தினாரேயன்றி, அவிசொரிந்து வேட்டலைத் தெய்வப்புலவர் மறுத்தார் எனக் கொள்ளக் கூடாது.


திருக்குறளின் உட்கருத்து வேள்வி மறுப்பு எனும் வாதம்:

”அவிசொரிந்து ஆயிரம் வேடலின் ஒன்றன்,
உயிர்செகுத் துண்ணாமை நன்று”

வள்ளுவர் பிரான் பெரும்பாலும் ஒரே வழிமுறையைத்தான் நூல் நெடுகிலும் கையாள்கிறார்; உயர் செயலை உயர்ந்தவற்றோடும், இழி செயல்களை மிக இழிந்தவற்றோடும் ஒப்பீடு செய்வது அவர் கையாளும் முறை. திருகலாகிய சிந்தை படைத்தோர் பொருளைச் சிதைத்துத் திரித்துத் திசை மாற்றுகின்றனர். அது திருவள்ளுவ நாயனாரின் திருவுள்ளக் கருத்துக்கு முரணானது.

குறள் வேள்வியைக் கண்டிக்கிறது; ஆகவே அது மறைசார் நூலாக முடியாது எனும் கருத்தை மறுத்து விளக்குகிறார் திரு Natesan Muthukumaraswamy

“அவிசொரிந்து ஆயிரம் வேடலின் ஒன்றன்,
உயிர்செகுத் துண்ணாமை நன்று”

இந்தக் குறள் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் உள்ளது. இந்தத் திருக்குறளை வைத்துக் கொண்டு திருவள்ளுவர் அவிசொரியும் வேள்வியைக் கண்டித்தார் என்றும் அதனால் வேள்வியை மறுக்கும் அவைதிக சமணம் அல்லது பவுத்தத்தைச் சார்ந்தவர் திருவள்ளுவர் எனப் பெரிய மேதாவிகளான சீனி. வேங்கடசாமி போன்றவர்கள் சாதிப்பர்.

தெய்வப் புலவர் ஓர் அறத்தை வலியுறுத்த மற்றொரு அறத்தினொடு உறழ்ந்து கூறுவார். இங்கு அதிகாரப்பட்டது, புலால் மறுத்தல் என்னும் அறம். அது வேள்வி செயல் என்னும் அறத்தினொடு உறழ்ந்து காட்டி,இந்த அறத்தைக் காட்டிலும் இந்த அறம் உயர்ந்தது எனக் கூறியதே அன்றி வேள்வியைக் கண்டித்தது ஆகாது.

வேள்வியும் ஒரு அறம், புலால் உண்ணாமையும் ஒரு அறம். இவ்விரண்டில் வேள்விகளால் வரும் பயனைக் காட்டிலும் புலால் உண்ணாமை என்னும் இவ்விரதமாகிய அறத்தினால் வரும் பயனே பெரிது என்பது இக்குறளின் கருத்தாம். வேள்வியை மறுத்தல் இக்குறளின் கருத்தன்று. பரிமேலழகரும் இவ்வாறே கூறினார்.

மேற்சுட்டிக் காட்டிய குறளைப் போன்றே அறங்களை ஒப்பிட்டுக் காட்டி அதிகாரப்பட்ட அறத்தை வலியுறுத்தும் ஏனைய குறட்பாக்களையும் ஒப்பு நோக்க வேண்டும்.-

“ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க ,
சான்றோர் பழிக்கும் வினை”

இந்தக் குறட்பா ’வினைத் தூய்மை’ எனும் அதிகாரத்தில் உள்ளது. இக்குறட்பாவில் இரண்டு பாவங்களை ஒப்பு நோக்கி இந்தப் பாவத்தைக் காட்டிலும் இந்தப் பாவம் கொடிது என வள்ளுவர் சுட்டிக் கூறுகின்றார்.

பெற்ற தாயின் பசியைப் போக்காதிருத்தல் பாவம்; சான்றோர் பழிக்கும் வினையைச் செய்தலும் பாவம். இவ்விரண்டினையும் ஒப்பு நோக்கும்போது தாய் பசியோடிருப்பதைக் காண்பதைக் காட்டிலும் சான்றோர் பழிக்கும் வினை செய்வது கொடிய பாவம் என்பதே கருத்து.

“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலினும்’ என்னும் குறளில் உடன்பாட்டில் சொன்ன வலியுறுத்தலை இந்தக் குறளில் எதிர்மறையில் வலியுறுத்துகின்றார். அங்கு வேள்வியை மறுத்தார் எனப் பொருள் கொண்டால் இங்கு தாயின் பசியோடு வைத்திருத்தல் அறம் எனக் கொண்டார் எனப் பொருள்படும்.

“ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்,
நீரினும் நன்றதன் காப்பு”

இக்குறளில் உழுதொழிலின் நான்கு முக்கியச் செயல்களைத் திருவள்ளுவர் ஒப்பிட்டுப் பேசுகின்றார். ஏர் உழுதல் ஒன்று. எருவிடுதல் மற்றொன்று. இந்த இரண்டில் ஏர் உழுதலைக் காட்டிலும் எருவிடுதல் நன்று எனக் கூறினார், ஏர் உழவேண்டா, எருவிடுதல் ஒன்றே போதும் என்பது அவர் கருத்தன்று.

அதே போல் களை கட்டல் ஒன்று, நீர் பாய்ச்சல் மற்றொன்று. இங்கு நீர்பாய்ச்சலே போதும் களைகளைக் களைய வேண்டுவதில்லை என்பது அவர்தம் கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று காப்பிடுதல் மற்றொன்று. காப்பிடுதல் இன்றியமையாதது என வலியுறுத்தினாரேயன்றிக் களை கட்டல் தேவையில்லை எனக் கூறினாரல்லர்.

அவ்வாறே, ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை பேரறம் என வலியுறுத்தினாரேயன்றி, அவிசொரிந்து வேட்டலைத் தெய்வப்புலவர் மறுத்தார் எனக் கொள்ளக் கூடாது.

#திருக்குறள் திரு. தேவ்ராஜ்



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே
- வெள்ளி வீதியார்

Shriramana Sharma

*பெரியோரை முன்னிட்டு வித்யையை தர்மத்தை அறிவது குறித்து வேதம், வாக்யபதீயம் மற்றும் திருக்குறள்*

अथ यदि ते कर्मविचिकित्सा वा वृत्तविचिकित्सा वा स्यात् ये तत्र ब्राह्मणाः सम्मर्शिनः युक्ताः आयुक्ताः अलूक्षाः धर्मकामाः स्युः यथा ते तत्र वर्तेरन् तथा तत्र वर्तेथाः (तैत्तिरीयोपनिषत्)

ஒரு காரியத்தை எப்படிச் செய்வது என்றோ ஒரு சந்தர்பத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றோ உனக்கு ஐயம் ஏற்பட்டால் - அங்கு யார் விசாரித்து செய்யத்தக்கவர்களும், பிறரின் ஏவுதல் இன்றி தாமே நற்காரியங்களில் ஈடுபட்டவர்களும், க்ரூரமான தன்மையற்றவர்களும், தர்மத்திற்காக ஆசைப்படுபவர்களுமாகிய பெரியோர்களான அந்தணர்கள் இருப்பார்களோ, அவர்கள் அவ்விடத்தில் எப்படி நடந்துகொள்வார்களோ அப்படி அவ்விடத்தில் நடந்துகொள்வாயாக.

வாக்யபதீயம் (பர்த்ருஹரி என்ற பெரியவரால் இயற்றப்பட்ட இலக்கண நூல்) -

प्रज्ञा विवेकं लभते भिन्नैरागमदर्शनैः ।
कियद्वा शक्यम् उन्नेतुं स्वतर्कम् अनुधावता ॥ २.४८९ ॥

பலவிதமான சாஸ்த்ரங்களைக் கற்பதால் தான் புத்தி விவேகத்தைப் பெறும். தனது சொந்த யுக்திகளை மட்டும் அனுசரிப்பதால் எவ்வளவு தெரிந்துகொண்டு விடமுடியும்?

तत्तदुत्प्रेक्षमाणानां पुराणैरागमैर्विना ।
अनुपासितवृद्धानां विद्या नातिप्रसीदति ॥ २.४९० ॥

பெரியோர்களைத் துணைக்கோடாமலும் ப்ராசீனமான சாஸ்த்ரங்களின் ஆதாரங்களின்றி ஒவ்வொரு கருத்துகளைக் கல்பிப்பவர்கள்களுக்கு வித்யையில் பெரிய ஸித்தி ஏற்பட்டுவிடாது.

திருககுறள்: 441

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

தர்மத்தை அறிந்து முதிர்ச்சி பெற்ற அறிவுடையவர்களின் நெருக்கத்தால் அனைத்தின் தன்மையைத் தெரிந்து சரியானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.

(பெரியோரைத் துணைக்கோடல் என்னும் இவ்வதிகாரம் முழுவதும் பெரியோரை நாட வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.)



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 

நான்கு வகையான கர்மாக்கள் பேசப்படுகின்றன. நித்ய, நைமித்ய, காம்ய, நிஷித்த என்பன அவை.

நித்ய - தினமும் செய்ய வேண்டியது. சந்தியாவந்தனம், அந்தி மூன்று அனல் ஓம்பும் அக்நிஹோத்ரம் முதலியன.
நைமித்ய - ஒரு நிமித்தமாகச் செய்யப்படுவது. கிரகண தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் முதலியன.

காம்ய - ஒரு விருப்பத்தை முன்வைத்து செய்யப்படுவது. திருமணம் நடக்க, ஒரு நல்ல காரியம் நடக்க என்பனவற்றுக்காகச் செய்யப்படும் கர்மாக்கள்.

நிஷித்த - விலக்கப்பட்ட கர்மாக்கள் - சுராபானம், சோமபானம் முதலியனவற்றைப் பருகாதிருத்தல்.
நித்ய, நைமித்ய முதலியன செய்தே ஆக வேண்டியன. காம்ய தேவைப்படும் போது செய்துகொள்ளலாம்.

நித்ய நைமித்ய கர்மங்கள் சத் விஷயங்களை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். பிரம்மஞானம் அடைவதற்கு இவை உதவுகின்றன.

வைஷ்ணவர்களில் இடதுசாரிகள் அதிகமாக உள்ளதற்கு அவர்கள் நித்ய, நைமித்ய கர்மங்களை விட்டது தான் காரணமா என்பதைப் பின்நவீனத்துவர்கள் ஆராயலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 

பார்ப்பனர் வேர்ச்சொல் பார்த்தல் - பாவாணர் விளக்கம்

 

பார்ப்பனர் வேர்ச்சொல் பார்த்தல் - பாவாணர் விளக்கம்

புலவர், ஆசிரியர், பூசாரியர், ஓதுவார், கணக்கர் எனப் பல்வேறு பெயர் பெற்றுக் கல்வித் தொழில் புரியும் இல்லற வகுப்பார் பார்ப்பார் ஆவர்.

நூல்களைப் பார்ப்பவர் பார்ப்பார் , அல்லது பார்பனர்.

பார்ப்பனன் என்னும் சொல் பிராமணன் என்பதன் திரிபன்று.

பார்த்தனன் - பார்க்கின்றனன் - பார்ப்பனன் என்னும் ‘அனன் ‘ ஈற்றுச் சொற்கள்,
பார்த்தான் - பார்க்கின்றான் - பார்ப்பான் என்னும் ‘ ஆன் ‘ ஈற்றுச் சொற்களின் மறு வடிவங்களாகவேயிருத்தல் காண்க. 
(பக்கம் 174)
-------
குறித்த இடத்தில் போர் தொடங்குமுன் , அக்கம் பக்கத்துள்ள தனிப்பட்ட ஆக்களையும் ஆவைப்போல் அமைந்த இயல்புள்ள அறிஞரையும் ,பெண்டிரையும் நோயாளிகளையும் பிள்ளை பெறாத மகளிரையும் , அவ்விடத்தை விட்டகன்று பாதுகாப்பான இடத்திற் சேர்ந்துகொள்ளுமாறு முன்னறிவிப்பது மரபு.

”ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
என்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின் என
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின் ”
என்று புறநானூற்றுச் செய்யுள் (9) கூறுதல் காண்க.

பார்ப்பார் என்பது , ஆரியர் வருமுன் தமிழ்ப் பார்ப்பனரையும் , அவர் வந்தபின் பிராமணரையும் குறித்தது.
(பக்கம் 184)
------------
சான்று : பக்கம் 174 & 184.

”பண்டைத் தமிழ் நாகரீகமும்
பண்பாடும்”
ஞா.தேவநேயப்பாவாணர்



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் -வேதங்களைப் போற்றும் குறளே

 
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.              -குறள் 259  புலான்மறுத்தல்  ஆயிரம் வேள்விகளை செய்து கிடைக்கும் புண்ணியத்தை விட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்ல புண்ணிய தரும்.
5bn.jpg
தெய்வப் புலவர் திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறளில் 1330 குறட்பாவில் மிக அதிகமானமுறை பலப்பல தமிழ் அறிஞர்களால் தவறக பயன்படுத்தும் குறள், மேலுள்ளதே. நாம் இக்குறளின் பல்வேறு உரைகளைப் பார்ப்போம்.
புலான் மறுத்தல் அதிகாரத்தில் இது வந்துள்ளது. ஆயிரம் வேள்விகளை செய்து கிடைக்கும் புண்ணியத்தை விட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்ல புண்ணிய தரும். இங்கு புலால் மறுத்தலை வலியுறுத்துகிறார்.
வள்ளுவப் பெருந்தகை, தான் ஏற்றுள்ள அதிகாரத்தின் கருப்பொருளை- சிறிய பொருள் கொண்டு ஆரம்பித்து உயர்ந்ததோடு முடிப்பார்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251
மு.வ உரை:தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. குறள் 255:
மு.வ உரை: உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். குறள் 260
மு.வ உரை:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
கடைசி குறட்பாவில், கொல்லாமை – புலால் மறுத்தவரை- தெய்வத்துக்கு சமமாக அனைவரும் வணங்குவர் என்கிறார்.
ஒருவன் கடவுள் அடைய வேளிவிகளை செய்ய வேண்டும், அது உயர்ந்த மேன்மையான ஒன்று, அதிலும் மேன்மையானது கொல்லாமை- புலால் மறுத்தல் என்பதை தெளிவாக சொல்ல இவ்வழியில் சொல்கிறார்.
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்  -உவமேயம், உவமை இரண்டிலே உவமையே உயர்ந்தது என்பது இலக்கணம் காட்டும் வழி. தொல்காப்பிய உவமயியலின் நூற்பா ஒன்று- "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை"
தொல்காப்பிய நூற்பா குறிப்பது - உவமைக்கு வைப்பது உயர்ந்த பொருளாக வேண்டும் என்பதே. 
வேள்வி மிக உயர்ந்தது என்பதால் ‘ அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்....’ என்றார்.

உலகின் நாகரீகத் தொட்டில் - சிந்து சரஸ்வதி நாகரீகம் அதன் உச்சத்தில் 2 லட்சம் சதுர மைல்கள் பரவி இருந்தது, தொன்மை ஹரியானாவின் குருக்ஷேத்திரம் ஆருகிலுள்ள பிர்ரானாவில் கிடைத்த தொல்லியல் பொருட்களின்படி பொமு 7500 வரை செல்கிறது.
Daily_News_5367351770402.jpg
 
சிந்து சமவெளி நாகரீகம் 9,500 ஆண்டு பழமையானது
பொமு 4000 வாக்கிலேயே வேள்வி குண்டங்கள் என பலவும் தொல்லியல் அகழ்வில் கிடைத்துள்ளது. அதாவது பாகிஸ்தானில் உள்ள மொஹஞதாரோ ஹரப்பா என நம் பாடங்களில் கிடைத்தவை தாண்டி பல இடங்களில் மிகத் தெளிவான தரவுகள் கிடைத்துள்ளன.
FL17_Binjor__fire__2358944g.jpg
 k2.JPG
                                                         காளிபங்கன் (ராஜஸ்தன்)  யூப சாலை
 ஹரியானாவில் பிர்ரானா,  ராஹிகார்ஹி, மெஹெர்கர்   தோலாவிரா லோத்தல்( முக்கிய துறைமுகம்-குஜராத்) 
மற்றும் காளிபங்கன் (ராஜஸ்தன்)
செம்பு செய்வதற்க்கு தாமிரத்தை எங்கிருந்து பெற்றனர்? – கேத்ரி சுரங்கம் (ராஜஸ்தன்).
சங்க இலக்கியத்தில்  நால் வேதங்கள்படியான வேள்வி பற்றிய பாடல்.  
நல்பனுவல் நால் வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பல்மாண்
வீயாச் சிறப்பின் வேள்விமுற்றி
யூபம்நட்ட வியன்களம் பலகொல்     (புறம்:15)

ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் (அகம்:181)

இன்று உலகின் பெரும்பாலான ஆய்வுகள் அனைத்தும் ஆங்கிலத்திலே நடைபெறுகிறது, தாய் மொழியில் பயின்றாலும் உலகின் ஒரு முக்கிய இணைப்பு மொழியாய் ஆங்கிலம் உள்ளது போலே பண்டை பாரத நாட்டில் வடமொழி இருந்துள்ளது. வடமொழியின் பேச்சு மொழியை ப்ராகிருதம், பாலி எனவும், செய்யுள் மொழியை சம்ஸ்கிருதம் எனவும் அழைக்கப் படுகிறது.

அசோகரின் 24 கல்வெட்டு இந்தியா முழுமையும் உளது, அதில் மைசூர் கல்வெட்டு மட்டுமே தமிழில் மீதம் அனைத்தும் வடமொழி தான்.  அசோகர் கல்வெட்டு பிராமி எனும் எழுத்துரு கொண்டுள்ளது, முதலில் வடமொழிக்கு உருவாக்கப்பட்டது, பின் தமிழிற்கு பயன்படும்போது "ழ", 
"ள", "ற" &  " போன்ற தமிழின் தனி சிறப்பு ஒலி எழுத்துக்களுக்கு உரு தர தமிழ் பிராமி உருவானது, அது பின் வட்டெழுத்து ஆகி, பின் நகரி என மாறியது, இன்று அனைத்து வட இந்திய மொழிகளும் நகரியோடு நின்றது, தமிழ் மேலும் சில மாற்றம் பெற்று இன்றைய வடிவம் பெற்றது.

தமிழர் இறை வழிபாட்டில் உலகைப் படைத்த கடவுளை ஆதி முதல் வழிபடுபவர்கள்.  தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள். 
அந்தணர் என்றால் - இறுதிப் பொருளை அணவுபவர் எனப் பொருள், வேதங்கள் - இறைவனை உலகின் இறுதிப் பொருளை ஆராய்பவர்கள்.    தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள் என திருக்குறளும் சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் காட்டுகின்றன. தொல்காப்பியரும், திருவள்ளுவரும் அந்தணரே.   வேதநெறி தமிழர்களின் மெய்யியல் ஆகும் .
பார்ப்பான்- வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.

வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச்       80   
 செந்நிறம் புரிந்தோன் செல்லல்  நீக்கிப்
பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
 காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து
தேவந் திகையைத் தீவலஞ் செய்து                 சிலப்பதிகாரம் வரந்தரு காதை

5000 வருட சிந்து சரஸ்வதி நாகரீகத்தில் சம்ஸ்கிருதப் பங்கு உள்ளது என பேராசிரியர் அஸ்கோ பர்போலா பேட்டி

0%2BParboala%2B1.jpg


0%2BParboala%2B2.jpg


0%2BParboala%2B3.jpg


0%2BParboala%2B4.jpg
தமிழர் சமயத்தில் இறை வழிபாட்டின் முக்கிய வழிகாட்டிகள் அந்தணர்
 
அந்தம் + அணவுபவர் - இறைவனை அடைய  உலகின் இறுதிப் பொருளான  வேதங்களை அணவுபவர் எனப் பொருள்படும்

 தமிழர் சமயத்தின் ஆதி நூல் வேதங்கள், அவை ஏட்டில் எழுதாமல் குருவிடம் கேட்டு அறிதல் முறையிலே தான் கற்க இயலும், எழுதாமையால் அது மறை எனப் படும், ஒத்து கூறி ஓதுவதால் ஓத்து எனப் படும்.
 வேதங்கள் எழுதி வைத்துப்படிப்பதில்லை.  அதனாலேயே அதனை வடமொழியில் “ஸ்ருதி” என்று அழைப்பர். அது தமிழில் எழுதாக் கிளவி என்று அழைக்கப்படுகிறது.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 
எழுதாக் கற்பினின் சொலுள்ளும்   குறுந்தொகை 156. 5-6
  3-4. அந்தணர்க்குக் கரகமும் முக்கோலும் உரியவை (தொல். மரபு. 70, பேர்.)

திருவள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி உரைப்பார்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
நாமக்கல் கவிஞர் உரை
அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் செங்கோண்மை.


மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் வேதங்கள் - அறநூல்களை மறப்பர்


பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்” – 24 பதிற்றுப் பத்து
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்         பாட்டு – 74 
பல போலி தமிழ் பற்றாளர்கள் - பார்ப்பனர் வேறு அந்தணர் வேறு என அருவருப்பாய் பொய் கூறுவர், அவர்கள் கிறிஸ்துவ சர்ச் வழி திராவிடம் எனும்  தமிழ் பகைவர்கள் தமிழை காட்டு மிராண்டி பாஷை என்ற கயவர் வழி கூட்ட வழிமுறையினர்.  


பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் - 2:50-63
வையை என்ற தலைப்பில் தலைவன் கூற்று
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்
தணிவின்று, வையைப் புனல். 50
தலைவன் கூற்று
‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று’ என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.
என ஆங்கு-
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்
‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு’ எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று, 60
அந்தணர் தோயலர், ஆறு.
‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’
ஐயர், வாய்பூசுறார், ஆறு.

அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்எயே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப் புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.
மனுஸ்ம்ருதியில் இதே பொருளுடன் உள்ள ஒரு அறிவுரையை மேலும் மேன்மைப் படுத்தி திருவள்ளுவர் இங்கே தந்துள்ளார்.
5.53. He who during a hundred years annually offers a horse-sacrifice, and he who entirely abstains from meat,obtain the same reward for their meritorious (conduct).
வேள்வியை உயர்த்தி தான் இங்கு சொல்கிறார்.
 "செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து."

மிக உயர்ந்ததான செவியுணவுக்கு அவியுணவு உவமையாகிறது.

வள்ளுவர் வேள்வியை மறுக்கும் சமண சமயத்தவராக இருந்தால் இவ்வாறு கூறுவாரா ?  வேள்விகளை வள்ளுவம் ஏற்றுக்கொண்டுள்ளதா என்னும் ஐயம் தேவையற்றது; வேள்வியில் தரப்படும் அவியுணவு, மறை ஓத்து, வேள்விகளை மையமாகக்கொண்ட அறுதொழில் இவற்றை வள்ளுவம் மறுக்கவில்லையே !

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard