New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
Permalink  
 


 குறள் 560:

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.

மு.வ உரை:

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

சாலமன் பாப்பையா உரை:

காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.

Translation:

Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans’ sacred lore will all forgotten lie.

Explanation:

If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

பதிற்றுப்பத்து பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.

“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்

ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்

அறம் புரி அந்தணர்” – 24)

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது

வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்    பாட்டு - 74

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு 

இரவின் இளிவந்த தில்.

மு.வ உரை: பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை

விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

“பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ‘பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப்போகிறோம்’ என்று அறநெறியோடு அறிவுறுத்திப் பிறகே போர் செய்யத் தொடங்கும் வலிமையும் மறமும் கொண்டவன். கொல்லுகின்ற யானை மீது எடுக்கப்பட்ட கொடிகள் ஆகாயத்தை மறைக்கும்; அத்தகைய சிறப்புடையவன் எம்முடைய வேந்தன். புலவர் நெட்டிமையார்,முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல்நோக்கத் தக்கது.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன்

இறுக்கும் பொன்போற் புதல்வர்ப்

பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும்

நும்மரண் சேர்மின்…… என்ற அடிகள் அக்காலத் தமிழர் போர் நெறி காட்டுவன.

இப்புறநானுறு பாடல்படியான மரபில் தானே வள்ளுவர் இகுறளும் கூறுகின்றது.

பசுக்கள் தரும் பால்- அதன் உப பொருட்கள் தயிர், வெண்ணெய் நெய்- இவை அனைத்துமே கர்ப்பிணி பெண்கட்கும், சிறு குழந்தைகட்கும் அவசியம். வேள்விகளிலும் அவசியம். நாட்டின் பலத்திற்கு வருங்காலத் தலைமுறையும் கடவுள் ஆசியும் அவசியம் என்பதையே கூறியுள்ளார். திருவள்ளுவர் சங்ககாலத் தமிழர் மரபுப்படிதான் திருக்குறளைத் தந்துள்ளார். அதில் அந்தணர் என்பது தொழில் வழியில் அந்தணர்களைத் தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

திருக்குறள்-G.U.Pope உரை
543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
G.U.Pope 543
Learning and virtue of the sages spring,
From all-controlling sceptre of the king.
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein
described.

559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
G.U.Pope 559
Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.
If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withholdtheir showers.

560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
G.U.Pope 560Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans’ sacred lore will all forgotten lie.
If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.//



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard