New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இஸ்லாமிய அறிவியல்: ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கையை அன்றே அறிவித்த அல்லாஹ்


Guru

Status: Offline
Posts: 24788
Date:
இஸ்லாமிய அறிவியல்: ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கையை அன்றே அறிவித்த அல்லாஹ்
Permalink  
 



இஸ்லாமிய அறிவியல்: ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கையை அன்றே அறிவித்த அல்லாஹ்

  • TUESDAY, AUGUST 16, 2011
 
  • IBNU SHAKIR
 
 
நேற்று ஒரே நேரத்தில் ஹைசன்பர்க் ஐயப்பாட்டுகொள்கையையும் அல்குரானையும் படித்துவிட்டு தூங்கியதில் இரண்டும் கலந்து இஸ்லாமிய அறிவியல் பளிச்சிட்டுவிட்டது.

ஆஹா இதனைத்தான் அல்லாஹ் 1400 வருடங்களுக்கு முன்னால் நபி(ஸல்) அவர்களிடம் சொல்லியிருக்காரா என்று புல்லரித்ததில் என் மனைவி என்னை கூட்டிபோய் புல்லரித்த இடங்களிலெல்லாம் சாம்பலை தேய்த்து சரி செய்ய வேண்டியதாகிவிட்டது. அப்படியும் சரியாகாமல் கார்ட்டிசோன் அரிப்பு மருந்தை தேய்த்துவிட்டு படுக்கும் படி ஆகிவிட்டது.

சரி நாம் இஸ்லாமிய அறிவியல் கட்டுரை எழுதுவது எப்படி என்று சிந்தித்து பார்த்தேன்.  இதுவரை எழுதப்பட்டு உள்ள இஸ்லாமிய அறிவியல் கட்டுரைகளை எல்லாம் படித்து அதன் இலக்கணத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்தேன்.
(இஸ்லாமிய அறிவியல் என்றதும் உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லவேண்டும். இஸ்லாமிய அறிவியல் என்றால் எல்லா அறிவியலும் அதில் சேர்த்தி. ஆனால் உயிரியலும் வானவியலும் மட்டும் சேர்த்தி இல்லை. உயிரியல் பற்றி வரும் எல்லா அறிவியலும் காபிர் அறிவியல், அல்லது  யூத, இந்து கிறிஸ்துவர்கள் சாத்தானுடன் சேர்ந்து செய்யும் சதிவேலை. அதே போலத்தான் வானியலும், நட்சத்திரங்களின் வயது, அதன் தோற்றம் எல்லாம். கவனமாக இருக்கவும். டார்க் மேட்டர் எல்லாம் உபயோகப்படுத்தலாம். ஆனால், அல்குரானுக்கு மாறாக இருக்கக்கூடாது. அப்படி எழுதிவிட்டோமென்றால் அந்த பதிவுக்கு மட்டுறுத்தல் போட்டு நமக்கு உண்மை மூமீன்களின் சாதகமான கருத்துக்களை மட்டுமே பதிய வேண்டும். இது மிக முக்கியம். ஜாக்கிரதை! )


இதில் பல முன்னோடிகள் ஹாரூன் யாஹ்யா, இன்னும் இணையத்தில் ஆங்கிலத்தில் அறிவியல் மூலம் தாவா செய்யும் பலர் இருக்கிறார்கள். அவற்றை காப்பியடித்து ஏராளமான தமிழ் மூமீன்கள் தமிழில் மொழிபெயர்த்து அறிவியலுக்கே இஸ்லாமிய தண்ணி காட்டியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கற்றுகொண்டதை  உங்களுக்கும் அளிக்கிறேன்,. நீங்களும் இஸ்லாமிய அறிவியல் தாவா செய்ய வசதியாக அவற்றை வரிசைப்படுத்துகிறேன்

1) முதலில் எதாவது ஒரு அறிவியல் கட்டுரையை எழுத வேண்டும். இதில் விளக்க படங்கள் இருந்தால் ரொம்ப நல்லது. கீழே எங்கிருந்தெல்லாம் எடுத்திருக்கிறோம் என்று லிங்குகள் இருப்பது மிக அவசியம்

2) பிறகு ஒரு குரான் வசனத்தை எழுத வேண்டும்

3) இறுதியில் இரண்டையும் முடிச்சு போட்டு (இதில் தான் உங்கள் திறமையே இருக்கிறது) ஆஹா அல்லாஹ், இதனைத்தான்யா சொல்லியிருக்கார் என்று புல்லரிக்க வேண்டும்.

நான் கடைசியில் குறிப்பிட்ட புல்லரிப்பை இப்போது செய்யப்போவதில்லை. ஏற்கெனவே அரித்து உடம்பு புண்ணாகிவிட்டது. ஆகவே மெதுவாஹ ரெண்டு நாள் கழித்து புல்லரித்துகொள்கிறேன்.

சரி இப்போது இஸ்லாமிய அறிவியல் கட்டுரை.

இது ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கை Heisenberg uncertainty principle எவ்வாறு அல்லாஹ் நபி(சல்) மீது இறக்கிய அல்குரானில் உள்ளது என்பது பற்றி.


குவாண்டம் இயற்பியலில், ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கை Heisenberg uncertainty principle பின்வருமாறு கூறுகிறது: "ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது".

In quantum mechanics, the Heisenberg uncertainty principle states precise inequalities that constrain certain pairs of physical properties, such as measuring the present position while determining future momentum of a particle. Both cannot be simultaneously done to arbitrarily high precision. In other words, the more precisely one property is measured, the less precisely the other can be controlled, determined, or known.
unc2.gif

குவாண்டம் பொறிமுறையில், துகள்களின் உந்தத்துக்கும், அமைவிடத்துக்கும் துல்லியமான பெறுமானங்கள் கிடையா, ஆனால் நிகழ்தகவுப் பரம்பல் மட்டுமே உண்டு. ஒரு துகளின் நிச்சயமான இடமும், நிச்சயமான உந்தமும் கொண்ட நிலைகள் எதுவும் கிடையா. அமைவிடம் தொடர்பாகக் குறுகிய நிகழ்தகவுப் பரம்பல் இருக்கும்போது, உந்தம் தொடர்பான நிகழ்தவுப் பரம்பல் அகன்றதாக இருக்கும்.
heisenberg-uncertainty-principle.gif

ஒரு அணுவின் இடத்தை ஃபோட்டான் துகள் கொண்டு அளக்க முற்படும்போது, தெறிக்கும் ஃபோட்டான் அணுவின் உந்தத்தை குறித்துச் சொல்லமுடியாத அளவினால் மாற்றுகிறது. இந்த அளவு இட அளவையின் துல்லியத் தன்மைக்கு எதிர் விகிதசமமாகும். சோதனை ஒழுங்குகள் எப்படி இருப்பினும், இந்த ஐயப்பாட்டுத் தன்மையின் அளவை, இக் கொள்கையினால் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு அளவுக்குக் கீழ் குறைக்க முடியாது.
img338.png

அதாவது ஒரு துகளின் இடத்தையும் உந்தத்தையும் கணக்கிட விழைந்தால், ஒன்று இடத்தை கணக்கிடலாம், அல்லது உந்தத்தை கணக்கிடலாம். உந்தத்தை எவ்வளவு துல்லியமாக கணக்கிடுகிறோமோ அந்த அளவுக்கு இடத்தை கணக்கிடும் துல்லியத்திலிருந்து விலகுவோம், அதாவது இரண்டில் ஒன்றைத்தான் நம்மால் துல்லியமாக அளக்க முடியும்

இதனைத்தான் அல்லாஹ் தன் திருமறையில் வெளிப்படுத்துகிறான்.

8:7. (அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை(வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.

இரண்டு வியாபார கூட்டங்கள் வருகின்றன. இரண்டுமே அபு ஜஹலின் தலைமையில் வருகின்றன. இரண்டு கூட்டங்களில் ஒன்றைத்தான் நபி(சல்) அவர்களால் கொள்ளையடிக்க முடியும். இரண்டையும் கொள்ளையடிக்க முடியாது என்று அல்லாஹ் நபிபெருமானார்(ஸல்) அவர்களிடம் தெளிவு படுத்துகிறான். அபு ஜஹல் ஒரு துகள். அந்த துகளுக்கு இரண்டு வியாபார கூட்டங்கள். ஒன்று இடம், மற்றொன்று உந்தம். இரண்டையும் ஒரே நேரத்தில் அட்டாக் பண்ணமுடியாது. இரண்டில் ஒன்றைத்தான் அட்டாக் பண்ண முடியும்.

ஆஹா என்ன அழகாக ஹைசன்பர்க் uncertainty ப்ரின்ஸிபிளை விளக்கிவிட்டான்.

இபப்டிப்பட்ட அல்குரானை படித்துத்தான் ஹைசன்பர்க் போன்றோர் இயற்கை விதிகளை புரிந்துகொண்டுவிட்டார்கள். இதனை ஹைசன்பர்கே ஒரு டயரியில் எழுதி வைத்திருந்தார். அதனை ஒரு கிறிஸ்துவ காபிர் ஒருவர் அந்த டயரியை எரித்து  அல்லாஹ்வுக்கு வரவேண்டிய புகழை தடுத்துவிட்டார்.

மூமீன்களுக்காக அல்லாஹ் அனுப்பிய இயற்கை விதிகளை காபிர்கள் சுட்டுவிட்டார்கள் என்பது வருத்தத்துக்குரிய செய்தியாக இருந்தாலும், இப்போது அல்லாஹ் என் மூலமாக அதனை தெளிவு படுத்திவிட்டான்..


அல்லாஹ் காஃபிர்களை வேரறுக்க தன் திருவாக்குகளால் நாடுகிறான் என்பதிலும் அறிவியல் இருக்கிறது. காஃபிர்களுக்கு வேர் எங்கே இருக்கிறது. அறிவியலில்தான் இருக்கிறது. அந்த அறிவியலை தனது திருவாக்குகளால் வேரறுக்கிறான் என்று அல்லாஹ் திருமறையில் அறிவிக்கிறான்.

காபிர்களின் அறிவியலை வேரறுக்க  மூமீன்கள் கடுமையாக உழைத்துவருகிறார்கள். அதற்கு அல்லாஹ் தன் உதவியை தருகிறான். 


இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

உசாத்துணை இணைப்புகள் 
 (இது ரொம்ப முக்கியம். கவனிக்கவும். இப்போதுதான் நமக்கே ஒரு பெரிய இஸ்லாமிய அறிவியல் கட்டுரை எழுதிய திருப்தி வரும்.)
1) http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/uncer.html
2)  http://hendrix2.uoregon.edu/~imamura/123cs/lecture-6/planck.html
3) http://farside.ph.utexas.edu/teaching/qmech/lectures/node26.html


__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
RE: இஸ்லாமிய அறிவியல்: ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கையை அன்றே அறிவித்த அல்லாஹ்
Permalink  
 


சார்வாகன் said...
August 16, 2011 5:37 PM

ஆலிம் ஜனாஃப் இபின் ஷாகிர் அவர்களே,
உங்கள் தாவாவிற்கு பரம் இரசிகன் ஆகிவிட்டேன்.ஐயப்பாட்டு கொள்கையை ஐயமின்றி குரானின் துணை கொண்டு விளக்கிய அழகே அற்புதம்.
_________
நானும் தாவா செய்கிறேன்.இறைவன் நாடியவர்கள் மட்டுமே முமின்கள் ஆக முடியும் என்ற‌ படியாலும்,இறைவன் நாடி மாறினேன் என்று பொய் சொல்ல மனம் வராததாலும் பெரியார்தாசன் போல் ஆய்வு செய்து மாறினேன் என்று உளர முடியாததாலும் என்னால் முமின் ஆக முடியவில்லை. காஃபிரின் தாவாவை இறைவன் ஏஎற்றுக் கொள்வதில்லை என்றாலும் நரக சூடு பூமி நெருப்பை விட 70 மடங்கு என்பதால் எனக்கு பய்மாக் இருக்கிறது.,ஆகவே தாவா செய்யும் எனக்கு பூமி நெருப்பில் மட்டும் வாட்டுமாறு துவா செய்ய உங்களை கேட்டு கொள்கிறேன்.
________

3265. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே" என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்" என்றார்கள். 
Volume :3 Book :59
___________

இனி காஃபிர் தாவா

ஐசன்பர்க் அயப்பாட்டு கொள்கை=குரான் அர்த்தம் ஐயப்பாட்டு கொள்கை

"ஒரு குரானின் வசனம் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அதன் விளக்கம் இஸ்லாமுக்கு ஒத்துவராது.இஸ்லாமுக்கு ஒத்து வரும் வசனம் தெளிவாக இருக்காது".
________
பாருங்கள் அஜரத்,
(1) குரான் வசனம் தெளிவு விளக்கம் குழப்பம்
குரான் 3 நேரம் தொழுகை என்று தெளிவாக சொன்னாலும் அதற்கு அர்த்தம் 5 நேரம் என்று எப்படி குழப்புகிறார் பி.ஜே பாருங்கள்
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/71-natuth-thozukai-ethu/
.குரான் 3.81 முகமதுக்கு பிறகு தூதர்கள் உண்டு என்றால் அதற்கு விளக்கம் பாருங்கள்.
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/95-nabimarkalidam-sduththauruthi-mozi/
__________
(2) குரான் குழப்பம் விளக்கம் தெளிவு
குரான் 33.40 ஹாத்தமுன் நபி என்கிற‌து அதாவது தூதர்களுக்கு முத்திரை என்கிறது.ஹாத்தமுன் என்கிர வார்த்தை குரானில் வேறு எங்கும் இதே அர்த்தத்தில் இல்லை.(வார்த்தையே இல்லை)
ஹதிது அவர் தோளில் நபித்துவ முத்திரை இருந்தது என்கிற‌து. முத்திரையிடப்பட்ட நபியா, நபிமார்களுக்கெல்லாம் முத்திரையா என்று மண்டையை பிய்க்க வேண்டியதுதான் ஆனால்
முகம்து இறுதி தூதர் என்ற அடிப்படையில்தான் சுன்னி இஸ்லாமே ஓடிக் கொண்டு இருக்கிறது.
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/187-iruthi-nabi-muhamathu/

_________________
ஆக்வெ குரான விள்கத்தை ஐயப்பாடாக்கி ஐசன் பர்க்கின் குவாண்டம் மெகானிக்சை அன்றே கூறிய ஏக இறைவன் செயலை வியக்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

naren said...
August 16, 2011 11:21 PM

”திண்ணை” தோழர்களின் ..மன்னிக்கவும் சாஹாபிகளின் சுன்னத்தை பின்பற்று்ம், எங்கள் கண்ணியதிற்குரிய “திண்ணை” மெளலானா இப்னு சாகிர் அவர்களே,

உங்கள் தாவா பணியை மெச்சினோம்.

================================================
புகாரி

349. நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். 
================================================

என்ற அதிஸ் மூலம், இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே OPEN HEART SUGERY பற்றி சொல்லியுள்ள உண்மைதான், இஸ்லாம் மற்றும் காஃபீர் அறிவியலின் உச்சம் என்று எண்ணியிருந்தேன்.

ஆனால், உஙகள் தாவா பணி மூலம் QUANTAM MECHANICS யை பற்றியும் இஸ்லாம் முன்னரே முதல் முறையாக சொல்லியுள்ளது என்பதை அறிந்ததும், காபிர் ஆன நான் வெட்கி தலைகுனிந்தேன். இனிமேல் அறிவியலை அறியவேண்டும் என்றால் அல்குரானை கண்டிப்பாக படிப்பேன்.

================================================
புகாரி

68. 'எங்களுக்குச் சலிப்பேற்பட்டு விடக் கூடும் என்று அஞ்சிப் பல்வேறு நாள்களிலும் கவனித்து எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள்" என இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். 
Volume :1 Book :3

================================================

ஆகவே எங்களுக்கு சலிப்பு ஏற்படாமல், உங்களுக்கும் சலிப்பு ஏற்படாமல், உங்கள் தாவா பணி தொடரட்டும்.

ஆனால், உஙகள் தாவா மூலம் எனக்கு இன்னும் அருட்கொடைகள் வந்து சேரவில்லை, ஏன் என்று பாருங்கள்.


…………இப்படிக்கு,,,நரகத் தீயில் விழப்போகும் காபிர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

அல்லாஹ்வின் கிரகம் இருக்கும் இடத்தை அறிந்த கார்பன் கூட்டாளி

அல்லாஹ் எங்கே இருக்கிறான், காட்டு என்று கேட்டு ரொம்ப தொந்தரவு செய்யும் நாத்திக பதிவர்களுக்கு இதோ அல்லாஹ் இருக்கும் கிரகம் என்று அடையாளம் காட்டி,  சவுக்கடியும்  செருப்படியும் அளித்துள்ள நமது கார்பன் கூட்டாளி பதிவர் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். அல்லாஹ் உங்களுக்கு நன்றாக கூலி கொடுப்பானாக.

 

என்ன? முழிக்கிறீர்களா?

இப்போது அல்லாஹ்வே அப்படி முழித்துகொண்டிருப்பான் என்பதையும் அறியுங்கள். ஆகவே நீங்கள் மட்டுமே தனியாக முழிக்கவில்லை.

கார்பன் கூட்டாளி பதிவர்  தோண்ட தோண்ட அறிவியல் புதையல் – அல்குர்ஆன் என்ற பெயரில் அறிவியலை தோண்டோ தோண்டு என்று தோண்டி அல்லாஹ்வையே கண்டுபிடித்து விட்டார்.

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக)

இருக்கும். எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.

(அல் குர்ஆன் 70:4–7)

70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

70:4. The angels and the spirit ascend unto him in a Day the measure whereof is [as] fifty thousand years:

அதாவது அல்லாஹ் இருக்கும் இடத்துக்கு பூமியிலிருந்து வானவர்கள் (மலக்குகள்) மேலேறி செல்வார்கள். அதற்கு 50000 ஆண்டுகள் ஆகும்.

இப்போது மலக்குகளின் வேகம் என்ன என்ற கேள்வி வருகிறது இல்லையா? நமது இஸ்லாமிய அறிவியலாளரான கார்பன் கூட்டாளி ஒரு நெஞ்சம் நெகிழும் ஹதீஸை இங்கே ஆதாரத்துக்கு காட்டுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.  அறிவிப்பவர் : 
ஆயிஷா(ர­)

நூல் : முஸ்லிம் (5314)

நமது கார்பன் கூட்டாளி கூறுகிறார்

இறைவன் தான் விதிகளுக்கு அப்பாற்பட்டவன் ஆனால் அவனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் விதிகளுக்குட்பட்டவையே


அத்தோடு இன்னொன்றையும் நமது கார்பன் கூட்டாளி கண்டு அறிந்து கூறுகிறார். அதையும் கேட்போம்.

ஆக பயனிக்கவோ, செய்திகளை அனுப்பவோ அதிகபட்ச வேகம் 99.999999……%C (ஒளி வேகம்). குர்ஆன் வசனங்களில் மனிதன் அந்த வேகத்தில் சென்றதாக குறிப்பிடவில்லை, அதற்கு மாறாக செய்திகளும், வானவர்களும் பயணித்ததாக குறிப்பிடுகிறது.


இன்னொன்றும் கூறுகிறார்

அடுத்த வசனமாக 70:4 மலக்குகள் அந்த வேகத்தில் சென்றதாக கூறுகிறது, மலக்குகளுக்கு மட்டும் அந்த வேகத்தில் பயணிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்,வானவர்கள் என்பவர்கள் ஒளியால் படைக்க பட்டவர்கள் என்று     கூறியதால், ஒளியால் உருவான ஒன்று ஒளி வேகத்தில் செல்வது என்பது அதிசயமான ஒன்று அல்ல.


வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளதால் அவர்களது வேகம் ஒளிக்கு சமமானது!  ஆஹா! இதுவல்லவா, ஹதீஸ் ஒளியை வைத்து, ஒளிக்கே டார்ச் அடிப்பது என்பது! இப்போது தெரிகிறதா அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்பது?

ஆகவே நமது கார்பன் கூட்டாளி பதிவரின் கூற்றுப்படி, வானவர்களும் செய்தியும் ஒளிக்கு சற்று குறைவான வேகத்தில் சென்றதால், அவர்களது உணர்வில் ஒரு நாள் செலவழித்தமாதிரி உணர்வார்கள். ஆகவே அவர்களது அதிகபட்ச வேகம் ஒளியின் வேகம்தான். 

ஒளி ஒருவருடம் பிரயாணம் செய்யும் தூரத்தை ஒரு ஒளிவருடம் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.  அதாவது light year.

இது நம்ம சூரியனும், சுற்றிவரும் பூமியும். எதுக்குன்னு கேட்கக்கூடாது.. பாக்க அழகா இருக்குன்னு போட்டிருக்கேன்

 

சூரியனை சுற்றி வரும் மூன்றாவது கல்தான் நாம் வாழும் பூமி. இதுக்குத்தான் வானவர்களை(மலக்குகளை) அல்லாஹ் அனுப்பி வைக்கிறான்.

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள் என்று நபி(ஸல்) அவர்களும், அதனை வைத்து  ஒளி வேகத்தில் பயணம் செய்கிறார்கள் என்று  கார்பன் கூட்டாளியும் சொல்கிறார்கள். ஆகவே அவர்கள் செல்ல 50000 வருடங்கள் ஆகிறது என்றால், அல்லாஹ் இருக்குமிடம் 50000 ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கிறது என்று பொருள்!

ஆகவே, நமது பூமியிலிருந்து 50000 ஒளிவருடங்கள் தொலைவில் அல்லாஹ் இருக்கிறான்!

நமது பால்வீதி காலக்ஸி சுமார் 100000 ஒளிவருடங்கள் விட்டமுடையது.

அதாவது நமது பூமி சுற்றும் சூரியனை மையமாக வைத்துகொண்டு 50000 ஒளிவருடத்தை ஒரு ஆரமாக வைத்துகொண்டு வட்டம் வரைந்தால் அந்த வட்டத்தின் விளிம்பில்தான் அல்லாஹ் இருக்கிறான்!

நமது இஸ்லாமிய புனித பூமியான சவுதி அரேபியா உடனே நாஸாவுடன் ஒப்பந்தம் போட்டு உலக மகா டெலஸ்கோப்புகளை உருவாக்கி 50000 ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கும் கிரகங்களை எல்லாம் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால் கீழ்க்கண்ட வசனங்களில் பூமியிலிருந்து செய்திகள் அவனது கெரஹத்துக்கு செல்ல 1000 ஆண்டுகளாகிறது என்று அல்லாஹ் கூறுகிறான்.

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

32:5. He rules [all] affairs from the heavens to the earth: in the end will [all affairs] go up to Him, on a Day, the space whereof will be [as] a thousand years of your reckoning.

22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.

22:47. Yet they ask thee to hasten on the Punishment! But Allah will not fail in His Promise. Verily a Day in the sight of thy Lord is like a thousand years of your reckoning.

நமது இனிய இஸ்லாமிய அறிவியலாளர் கார்பன் கூட்டாளி, அல்லாஹ் காலம் வெளி டார்க் மேட்டருக்கெல்லாம் அப்பாற்பட்டவனாக இருந்தாலும், அவன் உருவாக்கிய பொருட்கள் எல்லாம் விதிப்படியே இயங்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆகையால் பூமியிலிருந்து செய்தியும் விதிப்படிதான் இயங்க வேண்டும். எந்த ஒரு செய்தியும் ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்லமுடியாது என்று ஈன்ஸ்டீனின் சார்வியல் விதி கூறுகிறதல்லவா?

ஆகையால் இந்த செய்திகளும் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் அல்லாஹ்வின் கெரஹத்தை அடைய 1000 ஆண்டுகளாகிறது என்று சொல்கிறது. ஆகவே அல்லாஹ் இருக்கும் கெரஹம் நமது பூமியிலிருந்து 1000 ஒளிவருட தொலைவில் இருக்கிறது என்று ஆகிறது.  இப்போது நமக்கு சிக்கல் இருப்பதை கவனித்திருக்கலாம்.

ஒளியால் உருவான வானவர்கள் ஒளிவேகத்தில் பயணம் செய்தால் அல்லாஹ்வின் கெரஹத்தை அடைய 50000 ஒளிவருட தொலைவு ஆகிறது.  ஆனால் செய்திகள் 1000 ஒளிவருடத்திலேயே இந்த கெரஹத்தை அடைந்துவிடுகின்றன. அப்படி அடைய வேண்டுமென்றால், அவை ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் பயணம் செய்தே ஆகவேண்டும்.  அல்லாஹ்வுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்றாலும், அல்லாஹ்வுக்கு மேல் அதிகமாக அறிந்த கார்பன் கூட்டாளி செய்திகளின் வேகம் அல்லாஹ் உருவாக்கிய இயற்கை விதிகள் படித்தான் இருக்க வேண்டும் என்று கடிவாளம் போட்டுவிட்டாரே என்று கவலையாக இருக்கிறது.

இருப்பினும் கார்பன் கூட்டாளிக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பது தெரியும். அவர் இதற்கு மேல் அங்கண இங்கண ரெண்டு படம் சுட்டு போட்டு, அங்கண இங்கண ரெண்டு ரெபரன்ஸ் போட்டு தலையாட்ட காத்திருக்கும் மூஃமின்களுக்கு “ஏதோ சொல்றான்யா.. ஏதோ நாத்திக காஃபிர்களை அடிக்கிறேன்னு  சொல்றான்.. சப்போட்டு பண்ணிவப்பம்” என்று சந்தோஷமாக சப்போட்டு பண்ண ஒரு பதிவு எழுதிவிடுவார். நம்பலாம்யா.

ஆகவே நம் உயிரினும் மேலான கண்ணின் மணி நபிஹள் நாயஹெத்தின் உயிரை கையில் வைத்திருக்கும் அல்லாஹ் நம்மோட லோக்கல் காலக்ஸியில்தான் இருக்கிறான்.

நம்மோட காலக்ஸி இக்கணூண்டு சின்னது. இந்த காலக்ஸியின் விட்டமே 100000 ஒளிவருடங்கள்தான். அது ஆயிரமோ ஐம்பதினாயிரமோ,  நம்ம காலக்ஸியிலதான் அல்லாஹ் இக்கான்.  நமது காலக்ஸியில் இருக்கும் நம் சூரியன் மாதிரியான நட்சத்திரங்கள் 200 பில்லியன் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். அதில் ஏதோ ஒரு சூரியனை சுற்றும் ஒரு கிரகத்தில்தான் அல்லாஹ் இருக்கிறான்.

அதுவும் எந்த மாதிரியான கெரஹம் என்பதற்கான க்ளூவையும் அல்லாஹ் தருகிறான். !

22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.

 மனிதர்கள் வாழும் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம் ஒரு நாள்.
மனிதர்களது பூமியின் கணக்கில் ஆயிரம் ஆண்டுகளை வைத்துகொள்ளுங்கள்.  அல்லாஹ் இருக்கும் கெரஹம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள மனிதர்களது கணக்கில் ஆயிரம் ஆண்டுகளாகிறது என்று பொருள்!

ஆஹா! இந்த மாதிரி ஒரு கெரஹத்தை கண்டுபிடிச்சா போதும்யா! அல்லாஹ்வை பிடிச்சிடலாம்!

இப்ப நமது பூமியை பற்றியும் அதன் இருப்பிடத்தையும் பற்றி கண்டுகொள்வோம்
நாம் இருக்கும் சூரியனை சுற்றி 12 ஒளிவருடங்கள் தொலைவுக்குள் கீழ்க்கண்ட நட்சத்திரங்கள் இருக்கின்றன.

நம் சூரியனை சுற்றி 250 ஒளிவருட சுற்றளவில் இந்த நட்சத்திரங்கள் (சூரியர்கள்) இருக்கின்றன

 

நமது சூரியனை சுற்றி 5000 ஒளிவருட சுற்றளவில் இந்த நட்சத்திர கூட்டங்கள் இருக்கின்றன

நம் கேலக்ஸி 100000 ஒளிவருடங்கள் விட்டமுடையது. இதில் நமது சூரியன் இருக்குமிடம்

நம்ம காலக்ஸியை சுற்றி பல கேலக்ஸிகள் இருக்கின்றன.  500,000 ஒளிவருடங்கள் தொலைவுக்குள்ளாகவே 13  கேலக்ஸிகள் இருக்கின்றன.  ஒவ்வொரு காலக்ஸியிலும் இதே மாதிரி 10 பில்லியனிலிருந்து 200 பில்லியன் வரைக்கும் நட்சத்திரங்கள் இருக்கின்றன.

 

ஐந்து மில்லியன் ஒளிவருடங்கள் சுற்றி பார்த்தால், 49 பெரிய காலக்ஸிகள் இருக்கின்றன. அதில் சுமார் 700 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன.

இந்த லோக்கல் குரூப் ஒரு பெரிய காலக்ஸி கூட்டத்தின் பகுதி அதன் பெயர் விர்கோலிஸ் க்ளஸ்டர்

இந்த விர்கோலிஸ் க்ளஸ்டர் ஒரு பெரிய கூட்டத்தின் ஒரு பகுதி

நடுவில் விர்கோலிஸ் க்ளஸ்டரை வைத்து நாமாக போட்ட ஒரு படம். இதுதான் விர்கோ க்ளஸ்டர் இருக்கும் சூப்பர் க்ளஸ்டர்

இந்த சூப்பர் க்ளஸ்டர் நம்மால் அறியக்கூடிய பிரபஞ்சத்தின் ஒரு பகுதி அவ்வளவுதான்.

அவ்வளவெல்லாம் தேட வேண்டாம் என்று நமது கேலக்ஸிக்குள்ளாகவே அல்லாஹ் இருக்கிறான் என்று கண்டுபிடித்து கூறியிருக்கும் கார்பன் கூட்டாளியின் தலை மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக!

22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

பூமி மேல வானம் விழ்ந்துடாம அல்லாஹ் தன்னோட கெரஹத்திலேர்ந்து உக்காந்துகிட்டே  புடிச்சிகிட்டிருக்கான்.  அப்பப்ப மலக்குகளும் (வானவர்கள்), ஜின்களும் அல்லாஹ்வோட கெரஹத்திலேர்ந்து நம்ம பூமி கெரஹம் வரைக்கும் வந்து போய்ட்டு இருக்காங்க.  அவங்க அல்லாஹ்  ஜிப்ரீலிடம் சொல்லி அனுப்பிச்சி அவர் இங்க வந்து சேர்ரதுக்கு ஆயிரம் வருடம் ஆகியிருக்குன்னு வேற கவனிக்கணும்.  அவங்க கிளம்பி 50000 வருடங்கள் கழித்துத்தான் பூமிக்கு வந்து சேர்வார்கள். ஆனால், இங்கே இருக்கும் செய்திகள் அல்லாஹ்விடம் போக 1000 வருடங்கள் ஆகும். உதாரணமாக, ஈஸா நபியை சாகடிக்க யூதர்கள் பிளான் பண்ணிகிட்டு இருந்தது அல்லாஹ்வுக்கு தெரியவேண்டுமென்றால், அந்த செய்தி அல்லாஹ்விடம் போவதற்கு அவரது ஒரு நாள், அதாவது மனிதர்களது 1000 வருடங்கள் ஆகும்.  அப்புறம் எப்படி அல்லாஹ் அந்த சதித்திட்டத்தை மறு சதித்திட்டம் போட்டு முடித்தார் என்று தெரியவில்லை. அல்லாஹ்வே அறிவான். அல்லது நம்ம கார்பன் கூட்டாளி அறிவார்.  ஆனால், நபிகளின் மனைவிமார்கள் ரவுசு பண்ணிகொண்டிருந்தால்,  நபிஹள் நாயஹெம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு  எச்சரிக்க வேண்டுமென்றால் உடனே வஹி எறங்கிடும். அதற்கெல்லாம் 1000 வருடங்கள் ஆகாது.  அதுவும் அல்லாஹ்வே அறிவான். அல்லாஹ் அறியாவிட்டாலும், கார்பன் கூட்டாளி பதிவர் அறிவார்.

இப்ப ஜிப்ரீல் வந்ததை ஆராய்வோம். நம்ம ஹிஜ்ரி (கிபி 622) ஆரம்பிச்சப்ப ஜிப்ரீல் வந்திருக்கார்னு வச்சா  இந்த வருஷம் 2011. அதாவது 2011-622 = 1389 வருடங்கள் ஆகிவிட்டன.

அதாவது அவர் அல்லாஹ்வோட கிரகத்திலேர்ந்து கிளம்புவது சுமார் 50000-622 என்று வைத்துகொண்டால், கிமு  49378 ஆம் ஆண்டிலேயே நமது ஜிப்ரீல் அல்லாஹ்வோட கெரஹத்திலேர்ந்து கிளம்பிட்டார். அவர் இங்க வந்து சேர்ரதுக்கு கிபி 622 ஆய்டிச்சி.  ஸோ..  நபிஹள் நாயஹம் சாவுற வரைக்கும் வஹி எறக்கி வஹி எறக்கி கிபி 632இல் தன்னோட 62ஆம் வயசிலேயே செத்தவுடனே அப்பாடான்னு ஜிப்ரீல் கிளம்பி அல்லாஹ்வோட கெரஹத்துக்கு கிளம்பி போயிருப்பார். அவர் போய் சேரதுக்கு இன்னும் 50000+632 = அதாவது கிபி. 50632இல்தான் போய் சேர்வார். நான் சொல்லலைன்ங்கண்ணா. கார்பன் கூட்டாளி சொல்றார். நான் அவர்  சொன்னதை கொஞ்சம் விலாவாரியாக மூஃமின்களுக்கு வெளக்குகிறேன். அவ்வளவுதான்.

இப்ப முகம்மது செத்தது அல்லாஹ்வுக்கு தெரியுமா? தெரியும். எப்படி?

நபிஹள் நாயஹெம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கிபி 632 இல் செத்தார். 632+1000 அதாவது கிபி 1632ஆம் வருடம் அல்லாஹ்வுக்கு இந்த செய்தி சென்றுவிட்டது என்று அறியவும்.  ”ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.”

ஓகேயா?

ஓகே இப்போது நபிஹெள் நாயஹெம்  மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்  கூறியதெல்லாம், அவராக வாய்க்கு வநதபடியெல்லாம் உளறியது இல்லை,  அல்லாஹ் உட்கார்ந்திருக்கும்  இந்த கெரஹத்திலிருந்து எறக்கியது என்று இஸ்லாமிய அறிவியல் மூலமாக நிரூபித்துவிட்டோம்,  ஆகவே இந்த அல்லாஹ்தான் காஃபிர்களின் தலையை வெட்டு என்று கூறியிருக்கிறான் என்பதை அப்படியே நம்பி காஃபிர்களின் தலையை வெட்ட கிளம்புவோம்.

இப்போ ரெபரன்ஸ்… ஏன் எதுக்கென்னு எல்லாம் கேட்கக்கூடாது. எவ்வளவு லிங்க் போடறமோ அவ்வளவுக்கு நாம நெறய படிச்சவங்கன்னு மூஃமின்கள் நினைப்பார்கள் இல்லையா?

References:
http://www.rediff.com/news/slide-show/slide-show-1-cornered-im-can-still-hit-back-with-a-vengeance/20110916.htm 
http://www.onlinepj.com/Test/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/293/http://senkodi.wordpress.com/2010/08/03/time-space/
http://senkodi.wordpress.com/2010/01/13/about-sky/
http://www.nidur.info/index.php?option=com_content&view;=article&id;=451:2009-01-26-03-53-15&catid;=37:2008-07-26-14-12-36&Itemid;=58
http://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/big-crunch3.htm
http://www.tamilquran.in/t293.php
http://ennamopo.blogsome.com/2005/12/09/61-janus-face-of-islamhttp://rajaghiri-online.blogspot.com/2011/06/blog-post.html
http://jahangeer.in/?p=63
http://www.atlasoftheuniverse.com/milkyway.html

 


__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

காஃபிர் Tamilian அவர்களே,//இதில் கார்பன்கூட்டாளி ஒன்றை சொல்ல மறந்துவிட்டார். இந்த 50000 , 1000 ஆண்டுகள் என்பது ஹிஜிரா வருடங்களா அல்லது காபிர் வருடங்களா என்று. ஏனென்றால். அல்லாவின் (இஸ்லாம்) வருடத்தில் 10-12 நாட்கள் காபிர் வருடத்தைவிட குறைவு? //அல்குர்ஆனிடம் சென்று பதிலை கண்டுபிடிக்க முயன்றேன்.9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.என்று அல்லாஹ் இறக்குகிறான். (அப்புறம் இந்த சங்கை மிக்க மாதங்களில் இணைவைப்பவர்களை கொல்லுவதும் சரிதான் என்று சொல்வான். அதனை முன்னரே எழுதியிருக்கிறேன்)இப்போது இஸ்லாமிய அறிவியலின் படி எப்படி மாதங்களின் எண்ணிக்கை 12 என்று சொல்வது என்று மண்டையை பிய்த்துகொண்டிருக்கிறேன். நம் இஸ்லாமிய அறிவியல் பதிவர்கள் தசமப்புள்ளி சகிதமாக அட்டாக் பண்ணுவதால் விக்கி பக்கம் பார்த்தேன்.சந்திரனின்Orbital period 27.321582 d (27 d 7 h 43.1 min[1])Synodic period 29.530589 d (29 d 12 h 44 min 2.9 s)இரண்டு எண்களை 12ஆல் பெருக்கினாலும் வருடக்கணக்கு வரவில்லை.orbital period படி கணக்கு போட்டால் வருடத்தின் அளவு 327.85 வருகிறதுsynodic period படி கணக்கு போட்டால் வருடத்தின் அளவு 354.36 நாட்கள் என்று வருகிறது.இதில் எதாவது தப்பிக்க வழி இருக்கும். கார்பன் கூட்டாளி, சிட்டிஜன் ஆகியோர் நான் கேட்டால் சொல்லமாட்டார்கள். நீங்களாவது கேட்டு சொல்லுங்கள்.http://en.wikipedia.org/wiki/Moonவானங்களையும்பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை 12 என்று சொன்னால் பயங்கர பிரச்னை.ஏனென்றால் வானங்கள் உருவாகி பல பில்லியன் ஆண்டுகள் சென்றுதான் பூமியே உருவாகிறது. அப்போது எப்படி சந்திரன் இருக்க முடியும்? பூமி உருவாகி பல கோடி ஆண்டுகள் கழித்துதான் சந்திரனே வருகிறது. அதுவும் ஆரம்பகாலம் முதலாகவே 12 மாதங்கள் என்பதெல்லாம் கொஞ்சம் கார்பன் பதிவர் மட்டுமே புரியக்கூடியதாக இருக்கிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 


  1. naren says:

    மார்க்க மேத(ஆவி) இ.சா அவர்களே,ஏன் same side goal போடுகிறீர்கள்.நீங்களே ஒரு கமெண்டில்//நபி மொழி 7424 அபுதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அறிவித்தார்:இறைத்துதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி (ஸல்) அவர்கள் அபுதர்ரே! இது (சூரியன்) எங்கு செல்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே நன்கறிந்தவர்கள் என்று சொன்னேன். அவர்கள் இது இறைவனுக்கு (அவனுடைய அரியாசனத்திற்கு கீழே) சிரவணக்கம் (ஸஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காக செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம் நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல் என்று சொல்லப்பட்டுவிட்டதைப் போன்றிருக்கும். உடனே அது மறைந்த இடத்தில் இருந்து (இறுதி நாளில்) உதயமாகும். என்று சொல்லிவிட்டு அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும். (தாலிக்க முஸ்தஹருல்லா) என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வுத் (ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி (திருக்குர்ஆன் 36:38வது வசனத்தை) ஓதினார்கள்.நபி மொழி 3199 அபுதர் (ரலி) அறிவித்தார்:நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்கு) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காக செல்கிறது. அங்கு அது (கிழக்கில் இருந்து உதயமாவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது//கடவுள்(கள்) சூரியனையே தாண்டவில்லை என்று நீங்க கூறிவிட்டு, இப்பொழுது, படம் போட்டு milky way பாதியில் கடவுளின் அரியாசன்ம் (அர்ஸ்) உள்ளது என்ற பிதற்றல் வருகிறது, நீங்கள் மாற்றி மாற்றி கூறுவது சரியா. காஃபீர்களுக்கு வெட்டு ஒன்று துண்டு இரண்டா, தாவா பணி செய்யுங்கள். தக்க்கியா செய்யாதீர்கள் இ.சா அவர்களே, உங்களை நீங்களே கண்ணியப்படுத்துங்கள்……குழம்பி போய்யுள்ள காஃபீர்.

    1. naren says:

      இஸ்லாமின் ஐண்ஸ்டீனே.ஆங்கில படத்தை பார்த்து தமிழ் படங்ளாக எப்படி உல்டா செய்து எடுக்கிறார்கள் என்பது அறிவியல் மூமின்களுக்கு தெரியும் போல.http://www.speed-light.info/speed_of_light_12000.htmநேர்த்தியாக உல்டா செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி

       
    2. naren says:

      சரியான ஆங்கிலப் படம்http://www.speed-light.info/miracles_of_quran/time_relative.htmஇதை பார்த்து எடுத்த, நோபல் பரிசு வாங்கப் போகும் தமிழ் படம்.http://carbonfriend.blogspot.com/2011/09/blog-post.html

       



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard