ஆகவே காபிர்களை தேற்றுவதற்காக இந்த பதிவு எழுதுகிறேன்.
மனம் வருந்த வேண்டாம். உங்களை மாதிரியே நிறைய உயிரினங்கள் காபிர்களாகத்தான் இருக்கின்றன.
காபிர்கள் என்று அல்லாஹ் ஏன் உங்களை திட்டுகிறான் என்று சிந்தித்து பாருங்கள். அல்லாஹ் ஆறு நாளில் இந்த வானம், பூமி, கடல், ஆறு மலை, விலங்குகள், செடிகொடிகள், ஆண் பெண் என்று எல்லாம் படைத்தான். பிறகு என்ன சொன்னான்? என்னை கும்பிடு என்று சொன்னான். அப்புறம் கொஞ்சம் ரூல்ஸ் போட்டான். கேட்டார்களா? இல்லையே. அல்லாஹ் சொன்னதை கேட்டிருந்தால் உங்களை ஏன் காபிர் என்று திட்டப்போகிறான்?
சரி கடைசி கடைசியாக ஒரு சான்ஸ் கொடுத்தான். அதற்காக அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் நபிஹள் நாயகம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் காதில் குசு குசு என்று சொன்னதை அவர் அப்படியே எறக்கினார். அந்த பேச்சையாவது கேட்கலாமில்லையா? இந்த காபிர்கள் என்ன செய்கிறார்கள்? அவர் காதில் அல்லாஹ் சொன்னதற்கு என்ன அத்தாட்சி என்கிறார்கள்? அவரை அல்லாஹ் இறைதூதராக நியமித்தார் என்பதற்கு என்ன அத்தாட்சி என்று கேட்கிறார்கள். அவர் எறக்கிய திருமறையில் எல்லாம் பொய் புளுகும் வன்முறையும், அறிவுக்கு பொருந்தாத உயிரியலும், வானவியலும் இருக்கிறதே என்று கேட்கிறார்கள். இதற்குத்தான் பகுத்தறிவு பகுத்தறிவு என்ற ஒன்றை அல்லாஹ்வின் அடியார்கள் வலியுறுத்துகிறார்கள். பகுத்தறிவு என்றால் என்ன என்பதை முஹம்மது ஆஷிக் உரையின் விளக்க உரையை பார்க்கவும். காபிர்களுக்கு மடத்தனம் அதிகமாக இருப்பதால் திரும்பச் சொல்கிறேன். ஒருவர் வந்து நான் தான் இறுதி இறைதூதர் என்று சொன்னால் கேள்வி கேட்காமல் நம்புவதன் பெயர்தான் பகுத்தறிவு.
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
அல்லாஹ் என்ன சொன்னான்? ரொம்ப சிம்பிளாக ஒரு விஷயம் சொன்னான். கலிமா சொல் என்று சொன்னான்.
(ம்ம்.. கலிமா சொல்லவேண்டும் என்று எந்த இடத்திலாவது அல்குரான் கூறுகிறதா என்று பிஜே விளக்கலாம். (3:18, 37:35 இல் மட்டுமே லா இலாஹா இல் அல்லாஹ் என்ற வார்த்தை வருகிறது. அது மட்டுமே கலிமா. எந்த இடத்திலும் முஹம்மதுல்லாஹ் ரஸூலல்லா என்ற வரியும் இதுவும் சேர்ந்து வருவதில்லை. லா இலாஹா இல் அல்லாஹ் சொன்னால் மட்டுமே போதுமானது என்று அல்குரானே பல இடங்களில் சொல்கிறது. கலிமா பற்றி தனி பதிவு எழுதி விளக்குகிறேன். சுன்னி கலிமா வேறு ஷியா கலிமா வேறு. ஷியா கலிமாவில் அலி(றலி)யை பற்றியும் ஒரு வார்த்தை சேர்த்துகொள்ளப்படும்)
ஓகே கலிமா சொல்லவேண்டும் என்று அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் நபிஹள் நாயகம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னார். அப்புறம் ஒரு பெரிய லிஸ்டு கொடுத்தார். அதையெல்லாம் பின்பற்றனும். அவ்வளவுதானே? ஓகே இன்னொரு பெரிய லிஸ்டு ஹதீஸ்ல இருக்கு, அதனையும் பின்பற்றணும். நீங்க ஷியாவா இருந்தா வேறொரு ஹதீஸ் லிஸ்டு இருக்கு. அதனை பின்பற்றணும். (புர்யுதா? இதனாலதான் ஷ்யாவுக்கு சுன்னி காபிர் சுன்னிக்கு ஷியா காபிர். அதே மாதிரி சுன்னத் வல் ஜமாத்துக்கு தவ்ஹீத் ஜமாத் காபிர். தவ்ஹீத் ஜமாத்துக்கு சுன்னத் வல் ஜமாத் காபிர். காபிர்னா கல்யாணம் பண்ணியிருந்தாலும் தலாக் சொல்லி பிரியணும்னு அர்த்தம்.)
உள்ள போயி காபிர்னு பெயர் வாங்குறதுக்கும், அங்க நடக்குற வெட்டு குத்து கொலைக்கும் பேசாம வெளியிலயே காபிராவே இருக்கலாம்னு எல்லா காபிர்களும் சில முஸ்லீம்களும் முடிவு பண்ணியிருக்கலாம். நம்ம ஈமான் தாரிகள் ஏன் மசூதியா பாத்து குண்டு வைக்கிறார்கள் என்று கூட ஒரு அசிங்கம் பிடித்த அழுக்கு நஜஸ் காபிர் ஒருத்தர் என்னை கேட்டார். அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் மூன்றாவது அருட்கொடையை பத்தி பதிவே எழுதியிருக்கேன். கேட்கற கேள்வியைப் பாரு!
ஸோ, அல்லாஹ் பேச்சை கேட்காதவன் காபிர். (தவ்ஹீத் அண்ணன் பேச்சை கேக்காதவனும் காபிர்தான். அத அப்பறம் பாப்பம்)
மனிதர்கள் மட்டுமா அல்லாஹ் பேச்சை கேட்பதில்லை? புல் பூண்டு, தாவரங்களிலிருந்து மரம் செடி கொடி, மலை பூமி சூரியன் என்று யாருமே கேட்பதில்லை. கேவலம் ஒரு தேனீ கூட கேட்பதில்லை. ஓகே..ஓகே. ஒரு தேனியும் கேட்பதில்லை.
மத்ததை அப்புறம் பாப்பம். இப்ப தேனியை பாப்பம்
பாருங்களேன்.
அல்லாஹ் தேனிக்கள் கிட்ட ரெண்டு சின்ன கட்டளைகள்தான் கொடுத்தார். கலிமா கொடுக்கலை, அல்குரான் மாதிரி எதுவும் அந்த தேனீ கூட்டத்து தலை மேல எறக்கலை. ஹஜ் யாத்திரை போகணும், கொள்ளையடிச்சதில ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வோட இறைதூதருக்கு கொடுக்கணும், அவுஹ பொண்டாட்டிமேல கண்ணு போடக்கூடாது, உக்காந்துகிட்டு உச்சா போகணும், நின்னுக்கிட்டு தண்ணீ குடிக்கணும், தாடி வளக்கணும், இடது பக்கம் துப்பணும் மாதிரி எந்த பெரிய லிஸ்டும் அந்த தேனீக்களுக்கு கொடுக்கலை. சும்மா ரெண்டு சின்ன கட்டளைகள்தான். (ஒருவேளை தேனீக்களுக்கும் இது மாதிரி இறைதூதர் அனுப்பி அனுப்பி எந்த தேனியும் கேக்கறமாதிரி தெரியலைன்னு அலுத்து போய் போங்கடான்னு உட்டுட்டாரோ தெரியலை. ஒருவேளை தேனீ இறைதூதர் நம்ம இறைதூதரை விட ரொம்ப அலும்பு பண்ணியிருப்பாரோ என்னவோ? அது கெடக்கட்டும். அங்க இறைதூதர் இல்லாததனால அங்க நல்ல வேளையா ஹதீஸும் இல்லை, அங்க நம்ம தவ்ஹீத் அண்ணன் மாதிரி தேனீக்கள் இல்லாததினால் அங்க, ஷியா, சுன்னி, இருநூறு தவ்ஹீத் ஜமாத்துகளோ சுன்னத் வல் ஜமாத்துகளோ இல்லை. கொடுத்து வைத்த தேனீக்கள்)
ஆமா இரண்டு சின்ன கட்டளைகள்தான் கொடுத்தான். அவை என்ன?
16:68 وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
16:68. உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),
16:69 ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
16:69. “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும்) உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
இந்த பக்கம் இப்படி மொழிபெயர்க்கிறது
மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் நீ கூடுகளை அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனி வர்கத்திலும் சாப்பிடு! உன் இறைவனின் பாதையில் எளிதாகச் செல் என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயறுகளிலிருந்த மாறபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:68,69)
(சிந்திக்கிற சமுதாயத்துக்கு இதில் என்ன சான்று இருக்கிறது என்றும் பார்ப்போம்)
நம் மக்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது அல்லாஹ்வுக்கே பிராக்கெட்டெல்லாம் போட்டு இதைத்தான் அல்லாஹ் சொல்லியிருக்கிறான் என்று அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையெல்லாம் அறிந்து விளையாடிவிடுவார்கள். கனிகள் என்பது மலர்கள் ஆகிவிடும். ”உள்ளுணர்வை அளித்தான்” என்பதெல்லாம் ஒரு உட்டாலக்கடி. ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்கள் revealed அதாவது தன் இறைதூதர்களுக்கு செய்திகளை கொடுப்பதற்கும் revealed தான். ஆகையால், இந்த தேனிக்களுக்கும் வஹிவஹியாக கொடுத்து இந்த ரூல்களை இறக்கியிருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும். (வஹி வந்தாலே ஜிகாத் தானோ என்னமோ? பக்கத்தில போனா குத்தி கொதறி புடுதுங்கள்).
ஆகையால் ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுத்திருக்கிறேன்.
Your Lord revealed to the bees: "Build dwellings in the mountains and the trees, and also in the structures which men erect. Then eat from every kind of fruit and travel the paths of your Lord, which have been made easy for you to follow." From inside them comes a drink of varying colours, containing healing for mankind. There is certainly a Sign in that for people who reflect. (Qur'an, 16:68-69)
”மலை, மரம் மற்றும் மனிதன் உருவாக்கும் கட்டடங்களில் கூடுகளை கட்டு” என்று ஒரு ரூல்.
“ஒவ்வொரு வகை கனியையும் புசித்து அல்லாஹ் சொல்லும் எளிதான பாதையில் செல்” இது இன்னொரு ரூல்.
முதல் ரூலை ஒன்னும் பண்ணமுடியாது. கூடுகளை கட்டினால், மலையில் கட்ட வேண்டும். இல்லையேல் மரத்தில் கட்டவேண்டும். இல்லையேல் மனிதன் கட்டிய கட்டடங்களில் கட்ட வேண்டும்.
http://www.harunyahya.com/miracles_of_the_quran_p1_08.php#9 என்ற ஹாரூன் யாஹ்யாதளத்தில் ந்த தேனீக்கள் பெண் தேனீக்கள் என்பதை இந்த அரபிய வசனம் குறிக்கிறது என்று கண்டபடி புல்லரிக்கிறார். நாமும் நன்றாக அரித்துகொள்வோம். இதோ இங்கே ஒருத்தர் கண்டபடி அரிக்கிறார். (ஆனால், இந்த விஷயத்தை அரிஸ்டாட்டில் ஏற்கெனவே சொல்லிவிட்டார் என்பதை நாம் காபிர்களிடம் சொல்லிவிடக்கூடாது. இந்த லிங்கை ரகசியமாக வைத்துகொள்ளவும். http://www.beeclass.com/DTS/aristotle_on_bees.htm)
மொத ரூலாவது ஓரளவுக்கு பரவாயில்லை. செடிகொடியில் கட்டினால்கூட, அல்லாவின் பார்வையில் இந்த செடி ஒரு மரம்தான் என்று ஒரேயடியாக சாதித்துவிடலாம்
ஆனால் இரண்டாவது ரூலைத்தான் சுத்தமாக கேட்பதே இல்லை இந்த தேனீக்கள். கனிகளிலிருந்து சாப்பிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டான். இதுவரை கனிகளிலிருந்து சாப்பிடும் ஒரு தேனீ கூட இல்லை. என்ன காபிர்தனம் பாருங்கள். அல்லாஹ் வேலைமினக்கெட்டு ரெண்டே ரெண்டு ரூல்ஸ் போடறான். அதில ஒரு ரூலை சுத்தமா கேட்பதே இல்லை இந்த தேனீக்கள். எப்போதுமே மலர்களில் உள்ள இனிப்பையும் மகரந்தத்தையுமே இந்த தேனீக்கள் சாப்பிடுகின்றன. அந்த இனிப்பைத்தான் தேனாக மாற்றி சேமிக்கின்றன. கனியை சாப்பிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டும் கனியை தொட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் இந்த தேனீக்களை காபிர் தேனிக்கள் என்று அழைக்காமல் எப்படி அழைப்பது?
(தேனீக்கள் கனிகளை சாப்பிடுவதில்லை. மலர்களிடம் உள்ள மகரந்தத்தையும் தேனையும்தான் சாப்பிடுகின்றன என்பதை வைத்து நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் அல்லாஹ் ஒன்றும் சொல்லவில்லை. எல்லாம் நபிஹள் நாயகம் அவர்களாக விடும் டுபாக்கூர் என்று காபிர்கள் சொல்லுகிறார்கள்.
wasp என்ற குளவியும் தேனீ மாதிரியே இருக்கும். அவற்றை பலர் தேனீ என்று நினைத்து ஏமாந்துவிடுகிறார்கள். ஆனால், குளவி பழத்தை சாப்பிடும். பூவில் இருக்கும் தேனையும் சாப்பிடும். ஆனால், கூடு கட்டி தேனை சேமிக்காது. குளவியை தேனீ என்று நினைத்து நமது அல்லாஹ் தப்பு தப்பாக எறக்கிவிட்டார் என்றும் காஃபிர்கள் சொல்லுவார்கள். ஆனால், மனிதர்களை போலவே தேனீக்களிலும் காபிர்கள் இருக்கலாம் என்பதை ஏனோ அவர்கள் கவனிப்பதில்லை. அல்லாஹ் தேனீக்களுக்குத்தான் ரூல்ஸ் போட்டார். அவை கேக்கலை. ஆகையால் அவை காபிர் தேனீக்கள்தான். எப்படி நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவசல்லத்தை தப்பிக்க வைச்சிட்டேன் பாத்தீயளா? இல்லன்னா ஒரு தேனீயை புடிச்சி அத ஒரு பழத்தை சாப்பிட வைச்சி அல்குரானை அல்லாஹ் எறக்கியது என்றும் நிரூபிக்கலாம். நமது இஸ்லாமிய அறிவியல்காரர்களால் முடியாதது எதுவுமில்லை. அல்லாஹ்வால் முடியாதது கூட நமது இஸ்லாமிய அறிவியல்காரர்களால் சாத்தியப்பட்டுவிடும்.)
மார்க்க சகோ சிட்டிஜன் இந்தபடத்தை போட்டு திராட்சை சாப்பிடும் தேனீ என்று விவரித்திருக்கிறார்.
இப்படித்தான் ஒரு மூமின் குளவி படத்தை போட்டு தேனீ என்று சொல்வதா? இதுவா மார்க்கத்தை பரப்பும் வழிமுறை?
ஒரு திராட்சை மீது ஒரு தேனி போட்டிருப்பதாக போட்டாஷாப் படத்தையாவது போட்டு நமது மார்க்கத்தை பரப்பவேண்டாமா?
கழுத்துக்கு பின்னால் கம்பளி ஜாக்கெட் போடாமல் கருப்பு தெரிவதை பாருங்கள்.
இது தேனீ, கம்பளி ஜாக்கெட் போட்டிருப்பதை பாருங்கள்
ஆகவே இந்த தேனீக்கள் அனைத்தும் அல்லாஹ்வின் வழியிலிருந்து விலகி காபிர்களாகிவிட்டன என்றுதான் குரான் ஒளியில் தெரிகிறது.
மேலும் ஆதாரத்துக்கு இந்த படத்தை பாருங்கள். ஒரு பர்தா போடாத அந்நிய பெண்ணோடு ஒரு தேனி பேசிக்கொண்டிருக்கிறது. இதுவே இந்த தேனீக்கள் எல்லாம் காபிர்கள் என்பதற்கு ஆதாரமாக இல்லையா?
ஆகவே நமது இஸ்லாமிய போராளிகள் ஒருவேளை இந்த காபிர் தேனீக்கள் மீதும் ஜிகாத் தொடுத்து வருகிறார்களோ என்ற சந்தேகமும் வருகிறது. சமீபகாலமாக பல தேனீ கூட்டங்களின் காலனிகள் அழிந்து வருகின்றன. இதனால் எதிர்கால தாவரஙகளின் உற்பத்தியே தடை பட்டுவிடுமோ என்று விஞ்ஞானிகள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். இதனால், மனிதர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக ஆகிவருகிறது என்றும் அஞ்சுகிறார்கள்.
http://en.wikipedia.org/wiki/Honey_bee#Colony_Collapse_Disorder_.28CCD.29
ஆனால் நாம் நன்றாக சாப்பிட்டு நன்றாக இருப்பது முக்கியமா? அல்லது அல்லாஹ்வின் சொல் பேச்சை கேட்காத காபிர் தேனீக்கூட்டம் அழிக்கப்படுவது முக்கியமா என்று சிந்திக்க வேண்டும்.
1400 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் ஒரு வேளை அல்லாஹ்வுக்கு நாம் சொன்ன பேச்சை இந்த தேனீக்கள் கேட்கவில்லை என்று தெரியவந்திருக்கலாம். அதனால் அல்லாஹ் இந்த தேனீக்களை அழிக்கவும் முடிவு செய்திருக்கலாம்.
என்ன லாம் ?
நமக்குத்தான் அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கை எல்லாம் அத்துப்படி ஆயிற்றே. ஒரே போடா போடுவோம். அல்லாஹ் இந்த தேனீக்களை அழிக்க முடிவு செய்துவிட்டான். டான் டான்.
உண்மையை அறியும் நோக்குடன் அல்லாஹ்வுடைய திருவேதத்தை ஒருவர் நாடுவாரேயானால் அங்கு நிச்சயமாக நிறைய சான்றுகளையும் அவனுடைய வல்லமையையும் அவர் காண்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. எவருடைய இதயத்தில் நோய் உள்ளதோ அவர்களோ இது பொய்யே தவிர வேறு இல்லை. இதை இவரே இட்டுக் கட்டிக் கொண்டார். மற்ற சமுதாயத்தினரும் இதற்காக இவருக்கு உதவினார்கள் என்று மறுப்போர் கூறுகின்றனர். அவர்கள் அநியாயத்தையும் பாவத்தையுமே கொண்டு வந்துள்ளார்கள். (அல்குர்ஆன் 25:04)
யா அல்லாஹ்
இன்ஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்