New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் கூறும் உண்மைகள்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
திருக்குறள் கூறும் உண்மைகள்
Permalink  
 


நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்

 

பிப்ரவரி 7, 2008 திண்ணை இதழில் ஜெயமோகன் எழுதியிருக்கும் “நீதியும் நாட்டார் விவேகமும் ....“ என்ற கட்டுரை குறித்து சில விமரிசனங்கள்.

// ஜெ.மோ: இவற்றில் உச்சம் திருவள்ளுவர் என்றும் சமண மரபில் ஆச்சாரிய குந்தகுந்தர் என்றும் குறிப்பிடப்படும் சமண முனிவரால் எழுதப்பட்ட 'திருக்குறள்' //

திருவள்ளுவரின் சமயப் பார்வை பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் சைவம், வைணவம் இவற்றை உள்ளடக்கிய (இன்று இந்துமதம் என்றழைக்கப் படும்) வேத சமயத்தினர், சமணர் அல்லது பௌத்தர் ஆகிய மூன்று தரப்பிற்கும் பல்வேறு வலுவான ஆதாரங்கள் வைக்கப் படுகின்றன. இந்நிலையில் முடிந்த முடிபாக இவ்வாறு ஜெயமோகன் எழுதியிருப்பது சரியானதன்று. சமண மறுமலர்ச்சி பற்றி முழங்கும் தருண் சாகர் போன்ற ஜைன ஆசாரியர்கள் தான் தங்கள் பிரசார மேடைகளில் எல்லாம் “குந்தகுந்தர் தான் திருவள்ளுவர்” என்று பேசி வருகிறார்கள். சமீப காலங்களில் இந்த rhetoric அதிகமாகியுள்ளது என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் ஆய்வு நோக்குள்ள ஒரு எழுத்தாளரின் இத்தகைய நிலைப்பாடு வியப்பூட்டுகிறது.

tiruvalluvar.jpg

நீதி என்ற கருத்தியல் அடிப்படையை மட்டுமே கொண்டு திருவள்ளுவரின் “சமணத்” தன்மையை ஜெயமோகன் முன்னிறுத்துவதாகத் தெரிகிறது. ஆனால் திருவள்ளுவர் கண்டிப்பாக ஏன் சமணராகவும் (பௌத்தராகவும்) இருந்திருக்கவே முடியாது, அவர் இந்து/வேத சமயத்தினராக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் கருத்தியல் மட்டுல்ல, குறள் நேரிடையாகக் குறிப்பிடும் பருப்பொருள் உண்மைகள், உவமானங்கள், கூறுபொருள்கள் இவை அனைத்தின் மூலமும் உறுதி செய்யப் படுகின்றன.

இது குறித்து யுகமாயினி என்ற இலக்கிய சிற்றிதழில் ஜாவா குமார் என்பவர் எழுதிய கட்டுரையை இதன் இறுதியில் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன். இந்தக் கட்டுரை இத்தகைய முக்கிய ஆதாரங்களை சுருக்கமாகத் தொட்டுக் காண்பிக்கின்றது. .

// ஜெ.மோ: சமணர்களால் உருவாக்கப்பட்ட நீதி அதுவரை இந்திய சமூகத்தில் இல்லாதிருந்த பல முக்கியமான அம்சங்களைக் கொண்டிருந்தது. ஒன்று அதற்கு மானுடமளாவிய ஒரு நோக்கு இருந்தது. அடிப்படை விழுமியங்களையாவது அனைத்துமானுடருக்கும் சமமாக வைக்க அதனால் இயன்றது. இரண்டு, வன்முறை சாராமல் மனிதனின் கருணையையும் அகச்சான்றையும் நம்பியே பேசும் நீதியை அவை முன்வைத்தன. //

நீதி என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இட்டுச் செல்லுவது, வழிநடத்துவது என்று பொருள். அதனால் தான் நீதி நூல்கள் தத்துவ விவாதங்களாகவோ அல்லது தேடல்களாகவோ அல்லாமல் வெளிப்படையான அறவுரைகளாவும், இதைச் செய், இதைச் செய்யாதே என்று கட்டளையிடும் உபதேசங்களாகவும் உள்ளன. ஆனால், இந்த நீதியின் ஊற்றுக் கண்ணாக தர்மம் என்கிற கோட்பாடு (principle) உள்ளது. நீதிகளை (morals, ethics) உருவாக்குபவர்கள் அவற்றின் உண்மைத் தன்மையை தர்மம் என்ற உரைகல்லில் உரைத்தே உறுதி செய்ய வேண்டும். தர்மம் என்கிற மாறாத உண்மையின் கனி தான் நீதி என்பது.

இந்த தர்மம், மானுட அறம் என்கிற கோட்பாடு வேத ரிஷிகளாலேயே முதன்முதலில் எடுத்துரைக்கப் பட்டது. ரிக்வேத சம்ஹிதைகளிலேயே உலகின் மாறாத நியதி தர்மம் என்ற கருத்து உள்ளது. உபநிஷதங்கள் இதனை தங்கள் தத்துவப் பின்புலத்தில் வளர்த்தெடுக்கின்றன. உதாரணமாக, பிரகதாரண்ய உபநிஷத்தில் தர்மம் பற்றிய மிக விரிவான உரையாடல்கள் உள்ளன. பின்னர் இதிகாசங்கள் வாழ்க்கைச் சம்பவங்கள், கதைகள் மூலம் அறம் பற்றிய பல பரிமாணங்களை வெளிக் கொணர்கின்றன.

ந வை ராஜ்யம் ந ச ராஜா ஆஸீத், ந ச தண்டோ ந தாண்டிக:
தர்மேணைவ ப்ரஜா: ஸர்வே ரக்ஷந்தி ஸ்ம பரஸ்பரம் 


“அரசும் இல்லை அரசனும் இல்லை; தண்டனைகளும் இல்லை, தண்டிப்பவனும் இல்லை.
மனிதர்கள் அனைவரும் தர்மத்தினாலேயே தங்களை பரஸ்பரம் பாதுகாத்துக் கொண்டனர்”

என்கிற மகாபாரத சுலோகம் குறள் கூறும் “அறம்” என்ற கருத்துடன் முழுதும் ஒன்றுபடுகிறது. “என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்” என்று வள்ளுவர் கூறுவது நீதி என்ற கருத்தாக்கத்திற்கும் அப்பாற்பட்ட உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய இந்த தர்மம் பற்றியே, இதனையே, “ஜகத ஸ்திதி காரணம்” (உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய தர்மம்) என்று சங்கரர் தன் உரை ஒன்றில் கூறுகிறார்.


1176546492_vhp.jpg
தர்மோ ரக்ஷதி ரக்ஷித: (தர்மத்தைக் காப்பவரை தர்மம் காக்கும்) - விசுவ ஹிந்து பரிஷத் சின்னம்

இந்து மதம், பௌத்தம், சமணம் ஆகிய மூன்று மதங்களும் தர்மம் என்கிற இந்த அடிப்படைக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவை தான். அதனோடு கூட, ஒவ்வொரு மதத்தின் இறையியலிலும் இந்த சொல்லுக்கான சிறப்புப் பொருள்களும், விளக்கங்களும் அளிக்கப் படுகின்றன. அதனால் தான் இப்போது தலாய் லாமா உள்ளிட்ட பல சமயத் தலைவர்கள் இந்த மூன்று மதங்களையும் பொதுவாகக் குறிக்க கிழக்கத்திய மதங்கள் (eastern religions) என்பதற்குப் பதிலாக தர்ம மதங்கள் (Dharmic religions) என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

எனவே சமணம் தான் மானுடம் அளாவிய அறக் கோட்பாட்டையே “உருவாக்கியது” என்பது முற்றிலும் பிழைபட்ட புரிதல்.

// பேராரசுக்குரிய நீதி எப்போதும் தண்டனைகளால் அடிக்குறிப்பிடப்பட்டது. வாளால் பரப்பபடுவது, ரத்தத்தால் நிறுவப்படுவது.
வணிகநீதி இந்திய நிலப்பகுதியில் இரு பெரும் மதங்களின் குரலாக ஒலித்தது. பௌத்தம் சமணம் இரண்டுமே அடிப்படையில் வைசியர்களின் மதங்கள். பின்னர் தொழில்செய்யும் சூத்திரர்களின் மதங்களாக அவை வளர்ந்தன. பௌத்தமும் சமணமும் வணிகத்திற்கு இன்றியமையாத அடிப்படை நெறிகளை இந்திய நிலப்பகுதி முழுக்கக் கொண்டு சென்றன. //

“தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்” (அடக்குபவைகளில் தண்டனையாகவும், வெற்றியை நாடுபவர்களிடத்தில் நீதியாகவும் நான் இருக்கிறேன்) என்று கீதையில் (10.38) கிருஷ்ணன் கூறுகிறார்.

வணிக நெறி என்பது அரசிற்குக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அரசனால் நிர்வகிக்கப் பட்ட ஒன்றாகவே இருந்ததே அன்றி அதற்கு எதிரான, மாற்றான ஒன்றாக இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தங்கள் பயணங்களில் கொள்ளைக் காரர்களாலும், வழிப்பறிகளாலும் தாக்கப் பட்ட இந்திய வணிகர்கள் அவர்களை எதிர்த்துப் போராடவுமில்லை, கருணையினால் மன்னித்து விட்டுவிடவும் இல்லை. மாறாக தங்களைக் காக்க வேண்டி மன்னனிடமே சென்று முறையிட்டனர். சம்ஸ்கிருத நாடகங்களிலும், சங்க இலக்கியத்திலும் இதற்கான சான்றுகள் பல உள்ளன. சட்டமும், தண்டனைகளும் நீதியின் ஒரு முக்கியமான அங்கம் என்பதை அவர்கள் தெளிவாகவே உணர்ந்திருந்தனர்.

திருக்குறளில் வணிகம் என்று ஒரே ஒரு அதிகாரம் உள்ளது, ஆனால் மன்னனைப் பற்றியும் அரசாட்சி பற்றியும் பற்பல அதிகாரங்கள் உள்ளன. “ஒறுத்தல்” (தண்டனை) என்கிற சொல் பல இடங்களில் புழங்குகிறது - “கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்” என்பதில் உள்ளது போல.

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறை என்று வைக்கப் படும். 

வானோக்கி வாழும் பயிர் என்ப மன்னவன் 
கோல்நோக்கி வாழும் குடி.

அந்தணர் நூற்கும், *அறத்திற்கும்* ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.

இப்படி மன்னனே சமுதாய நலனுக்கு அச்சாணி என்று அறுதியிடும் குறட்பாக்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வகையில் குறள் மகாபாரதம் கூறும் அதே நீதிக் கருத்துக்களை, விவாதப் பின்புலங்கள் தவிர்த்து அவற்றின் சுருக்கமான வடிவில் வைக்கிறது என்பதே சரியான முடிவாக இருக்கும். அதன் பார்வை எந்த சமண நூலையும் விட மகாபாரதத்திற்குத் தான் மிக நெருக்கத்தில் உள்ளது.

“சொல்லக் கொடாத சுயோதனன் பின் ஏன்
கொல்லக் கொடுத்தான் குமரேசா - மெல்லவே
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்லப் பயன்படும் கீழ்”


என்பது குமரேச வெண்பா என்னும் நூலில் உள்ள ஒரு பாடல். முதல் இரண்டு அடிகளில் ஒரு உதாரணம், சம்பவம் அல்லது கதையையும் (இவை பெரும்பாலும் இதிகாச, புரானங்களில் இருந்தே இருக்கும்) அடுத்த இரண்டு அடிகளில் குறட்பாவின் மூல வடிவையும் கொண்டு அமைந்த நூல் இது. இதே போன்று சிவசிவ வெண்பா என்றும் ஒரு நூல் இருக்கிறது. குறட்கருத்துக்களுக்கு வாழும் உதாரணங்களாக இந்த நூலாசிரியர்கள் காட்டுவது இந்து புராணங்களையும், கதையாடல்களையும் தான், சமணத்தில் பல குறட்பாக்களுக்கு உதாரணமே கிடைத்திருக்காது.

மேலும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று வாழ்க்கைப் பயன்களையும் (த்ரிவர்கம்) ஒருங்கே பேசும் குறள் எப்படி வாழ்க்கையை நிராகரிக்கும் சமண அறவியலின், பொருளை மையமாகக் கொண்ட வணிக நீதியின் குரலாக மட்டும் இருக்க முடியும்? இந்தியப் பண்பாட்டின் முக்கிய அம்சமான இந்த பரந்து பட்ட அறக்கோட்பாட்டையும், அதனை எடுத்தோதும் திருக்குறளையும் இப்படிக் குறுக்குவதே செயற்கையானதும், ஒற்றைப் படை சிந்தனைப் போக்கும் ஆகும்.

பிற்சேர்க்கை: 
யுகமாயினி : டிசம்பர் 2007 இதழ் (பக்கங்கள் 20-24): ஜாவா குமார் எழுதியுள்ள கட்டுரை.

அன்புள்ள யுகமாயினி ஆசிரியருக்கு,
தங்களின் சமீபத்திய இதழில் திரு.இந்திராபார்த்தசாரதியின் கட்டுரை ஒன்றில் கீழ்க்காணும் இந்தப்பகுதி என் கவனத்தை ஈர்க்க இதை எழுதுகிறேன்.
" இன்னொரு வகையான வன்முறையும் உண்டு. புத்த ஜாதகத்தில் வழங்கிய ராமாயணக்கதை, ஹிந்து மதத்துப் புனித காவியம் ஆவதுபோல, சமணத் துறவியாக வள்ளுவருக்கு, ஜடா முடியை அணிவித்து, திருமேனி முழுவதும் திருநீற்றைப் பூசியிருப்பது போல், தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சீவக சிந்தாமணியும் பல நூல்களும் தப்பித்திருப்பது, அவை செய்த அதிர்ஷம் என்றுதான் சொல்லவேண்டும். இன்னொரு சமணராகிய தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தை வைதிக மதத்துச் சட்ட திட்டங்களுக்குள் கொண்டுவர உரையாசிரியர்கள் எவ்வாறு முயல்கிறார்கள் என்பது கருத்து வன்முறையின் வேறொரு முகம். "

மேலே திரு.இபா சொல்ல முனைவது 'வைதிகமதத்தினர் (அது என்ன மதம் என்று தெரியவில்லை) சமணரான திருவள்ளுவரை சைவராக வலிந்தேற்றித் திருநீற்றைப் பூசி விட்டனர்' என்று கொள்கிறேன்.

திருநீறுதான் திரு.இபாவின் பிரச்னை என்றால், வைணவமரபில் வந்த பரிமேலழகரே (இவரை காஞ்சி உலகளந்தபெருமாள் கோயில் பட்டரென்பர்) கடவுள்வாழ்த்துப் பகுதியில் வரும் 'எண்குணத்தான்' என்ற குறிப்புக்கு உரையெழுதுகையில் 'சிவாகமங்களில் குறிப்பிடப்படுவது போல' என்று சொல்வதால் வள்ளுவருக்குத் திருமண்ணைவிட திருநீறு பொருத்தமே. எனவே இங்கே வைணவமரபினர்தாம் வள்ளுவருக்குத் திருநீறு பூசினர் என்று திரு.இபா சொல்லியிருந்தால் தெளிவாயிருக்கும்.

அது கிடக்கட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.

திருக்குறளை வைத்து வள்ளுவரைச் சமணரென்பதற்கு யாதொரு அடிப்படையும் இல்லை. ஆய்ந்து நோக்கின் திருக்குறள் பெயரிலாப் பெருவழியான இந்துஞானமரபின் அறநூலே! இத்திறக்கில் அடியேன் கடந்த சில வருடங்களாக இணையத்தில் பல குழுமங்களில் பல சமண அறிஞர்களுடனும் வாதிட்டு இக்கருத்தை நிறுவியுள்ளேன். விரிவஞ்சி விடுத்து சாரமான சில சான்றுகளை மட்டும் கீழே தருகிறேன்.

1. அத்திநாத்தி வாதம் என்ற சமணர்தம் ஆதாரக் கோட்பாட்டினைச் சுட்டும் ஒரு பாவினைக் கூட திருக்குறள் நெடுகத் தேடினாலும் கிட்டாது. மேலும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் 'உளது இலது' என்று முரண்படும் இந்த ஆதார நம்பிக்கையைத் தாக்கினரே அன்றி சாதாரணச் சமணர்களை அல்ல.

2. பொதுவாய் சமணத்திற்குச் சான்றாய்ச் சுட்டப்படும் 'அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என்ற (குறள் 259) குறளில் வேட்டலை உயர்வுநவிர்ச்சியிலே குறிப்பிட்டிருக்கிறாரே அன்றி சமணர் ஏற்காத வேள்விகளைச் சாடவில்லை என்பது பிறிதோரிடம் (குறள் 413) 'செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றோரொடு ஒப்பர் நிலத்து' என்று சொல்வதன் மூலம் அறியலாம். 'அவியுணவின் ஆன்றோர்' (Havis consuming celestials) என்ற சொல்லாட்சியும் இங்கே உயர்வுநவிர்ச்சியிலே சொல்லப்பட்டிருப்பதன் மூலம் வள்ளுவர் வேதவேள்விகளுக்கு எதிரானவர் அல்ல என்றும் தெளியலாம்.

yagna.jpg

3. மேலும் சிறுதெய்வங்களுக்குப் படையல் வைப்பதும், மூதாதைகளுக்குப் படையல் வைப்பதும் (குறள் 43) சமணத்திற்கு ஏற்புடையது அல்ல.

4. குறள் 550 -ல் 'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்' என்று மரணதண்டனையை நியாயப்படுத்துவது எவ்வகையிலும் அஹிம்சை போற்றும் சமணத்திற்குப் பொருந்தாது. சமண அறநூல்களில் மரணதண்டனை தீர்ப்பாகச் சொல்லப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மன்னன் முறைதவறினால் அந்தணர் கடமைகளான வேட்டல் வேட்பித்தல், கற்றல், கற்பித்தல், இரத்தல், புரத்தல் ஆகிய அறுதொழில் நலியும் என்றும் அவர்தம் நூலையே மறப்பர் என்றும், வேள்விக்கும் ஆலயவழிபாட்டிற்கும் அவசியமான ஆபயன் (பஞ்சகவ்யம்) குன்றும் என்றும் (குறள் 134, 560) வள்ளுவர் வலியுறுத்துவதையும் நோக்கினால் வள்ளுவத்தின் அடிநாதம் சமணம் அல்ல என்று தெளியலாம்.

6. கடவுள் வாழ்த்திலே 'மலர்மிசை ஏகினான்' என்பதை சமணர்தம் ஆதிநாதர் மலரிலே நடந்தவர் என்பதால் சொல்கிறார் என்று சிலர் சொல்வதுபோல் பொருள் கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் அடிசேர்ந்தார் 'நிலமிசை நீடுவாழ்தல்' எவ்வகையிலும் பொருந்தாது. 'நிலமிசை நீடுவாழ்தல்' (மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சம்பந்தர் தேவாரம்) என்பதே சமணத்திற்குப் புறம்பானது. இது போலவே இதர கடவுள்வாழ்த்துப் பாக்களுக்கும் சமணர்தம் அத்திநாத்திய சியாத்வாதக் கோட்பாட்டிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

7. பல குறட்பாக்கள் பதஞ்சலி யோகசூத்திரம் மற்றும் திருமந்திரப் பாக்களை ஒத்திருப்பதைக் காணலாம். 'பகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தான்' போன்ற விளிகள் சமணருக்குச் சொந்தமானதல்ல. காட்டாய்:

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
*அறவாழி அந்தணன்* ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம் புகுந் தானே!
திருமந்திரம் - 1803

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்றவூழிகள்
செல்லூழி யண்டத்துச் சென்றவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ளொன்றிற் *பகவனே*.
திருமந்திரம் - 2533

கொல்லான் பொய்கூறான் களவிலன் *எண்குணம்*
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே.
திருமந்திரம் - 554

இங்கே சிவாகமங்கள் சுட்டும் எண்குணங்கள் ஆவன: தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை மற்றும் வரம்பில் இன்பமுடைமை.

'எட்டுகொலாம் அவர் ஈறில் பெருங்குணம்' என்று அப்பர் பெருமானும், 'எண்குணம் செய்த ஈசனே' என்று மாணிக்கவாசகரும் பாடுவர்.
அதனாற்றான் சிவாகமங்களில் சுட்டியபடி என்று பரிமேலகரும் உரையெழுதுகிறார்.

8. மேலும் எளிதில் பொருள்விளங்கா பல அதிநுட்பமான குறட்பாக்களுக்கு வேதாந்த சைவசித்தாந்த அடிப்படையில் மட்டுமே மெய்ப்பொருள் கொள்ளமுடியும். காட்டாய்:

'அல்லல் அருள் ஆள்வார்க்கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி' (குறள் 245)

என்ற குறளில், அருள் ஆள்பவர்க்கும் வளிக்கும் உள்ள தொடர்பை சித்தாந்தரீதியில் அணுகினால் ஒழிய பொருள் விளங்காது.
இதன் சூக்குமத்தை

'வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே'

என்ற திருமந்திரத்தின் துணை கொண்டும் தெளியலாம்.
அது போலவே

'குடம்பை தனித்தொழிய புள் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு'

என்ற குறளில் (338) ஆன்மாவின் இயல்பைச் சுட்டுவதும் அத்திநாத்தியத்திற்கு ஒவ்வாதது. இது வேதாந்தக் கோட்பாடு. அவ்வண்ணமே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுதலும்.

9. சைவசித்தாந்த சாத்திர நூல்களில் திருக்களிற்றுப்படியார் என்ற நூல் முதன்மையானது. இதில் இரண்டு குறட்பாக்கள் நேராகச் சுட்டப்பட்டுகின்றன:

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற்
சார்புணர்த றானே தியானமுமாஞ் - சார்பு
கெடவொழுகி னல்ல சமாதியுமாங் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று. (34)
* குறள்: மெய்யுணர்தல்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்
வேண்டின� தொன்றுமே வேண்டுவது - வேண்டினது
வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால். (40)
*குறள்: அவாவறுத்தல்

சமணக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு சைவசித்தாந்த சாத்திரநூல் பாடப்பட்டது என்பது நகைமுரணாகும்.

அவ்வண்ணமே சைவத்திருமுறையிலே சேரமான்பெருமாள் நாயனார் கயிலையில் சிவனார்தம் ஆசிகொண்டு பாடிய 'திருக்கயிலாய உலா' என்ற நூலில் திருக்குறள் ஒன்று தெளிவாய்க் குறிப்பிடப்படுகிறது:

'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர் கட்டுரையை..' (173/174)

10. இறுதியாய் ஒன்று. அஹிம்சை என்பது சமணர்க்கு மட்டுமே குறிக்கோள், ஆதாரக்கோட்பாடு என்பதும் பிழை. யோகமார்க்கத்தில் அஹிம்சையை இந்துசமய நூல்கள் அனைத்துமே வலியுறுத்துகின்றன. ஆயின் சமணத்தைப் போலன்றி அதை முக்திக்கு ஒரே வழியாக வைக்கவில்லை. 'யோகியர் பெறும் பேற்றினையே சாங்கியரும் பெறுவர்' என்ற கண்ணபிரானின் கீதைப்பேருரைக்குச் சான்றாய் வேடர் கண்ணப்பரையும், மீனவர் அதிபத்தரையும் அவர் போன்ற எண்ணற்ற மகான்களையும் காண்கிறோம். வள்ளுவரும் புலால் மறுத்தலை அனைவருக்கும் வலியுறுத்திச் சொல்ல்லவில்லை.

புலால் மறுத்தலை வலியுறுத்துவது யாரிடம்?

'துறவியலில்', யோகத்திலாழ்ந்து தவம் மேற்கொள்வோர்க்கு, நோற்பார்க்கு மட்டுமே. அது அமணர்க்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பொதுவானது. 'சமாதி'யில் (semedi) அமைய வேண்டி, ஒரு மண்டலம் நோன்பிருக்கும், மரக்கறி உணவே பழகாத ஜாவானியர் கூட அந்த நாற்பது நாள்களில் புலால் (முட்டை கூட) உண்பதில்லை.

புலால் மறுத்தலை வேறெங்காவது சொல்கிறாரா?
குடியியலில் ஓரிடத்தில் சுட்டுகிறார்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. (984)

ஆக, கொல்லாமை என்பது நோற்பார் மட்டுமே கொளத்தகும். ஆயின் அவர் பெரும்பான்மையினரா? என்றுமில்லை. அவரே சொல்கிறார்:

இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். (270)

வள்ளுவம் சமணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'கொல்லாவிரதம்' அனைத்துத் தரப்பினர்க்கும், 'துறவியல்' மட்டுமின்றி பிற அதிகாரங்களிலும் எங்காவது ஓரிடத்திலாவது வலியுறுத்தப் பட்டிருக்கும்.
அப்படி அமையவில்லை என்பதை ஓர்க!

பொதுவில் பெரும்பான்மைக்கு, குறிப்பாய் நட்பியலில், 'மருந்து' (அதிகாரம் 95) எது என்று குறிப்பிடுகையில், 'செரித்தது கண்டு, அளவறிந்து உண்க' என்று பல பாக்களில் சொல்லிப் போகிறாரே அன்றி ஓரிடத்திலும் 'புலால் மறுத்தலே சிறந்த மருந்து, உடல்நலத்திற்கு ஏற்றது' என்று சொல்வதில்லை.
தமிழர் உணவுப்பழக்கத்தில் புலால் தவிர்க்க முடியாத அம்சமாய் இருப்பதை தொன்றுதொட்டுக் காண்கிறோம்.

ஓரிடம் நிணத்தைத் தீயிலிட்டு வாட்டுவதைக் காண்கிறார் வள்ளுவர். கண்டிக்கவில்லை; கலங்கவுமில்லை. மாறாய் நின்று ரசிக்கிறார். புசித்துமிருக்கலாம். எப்படியோ, சமணராய் வெறுத்து ஒதுக்கி ஓடியிருந்தால் அதனை ஓர் உவமையாய்க் குறளில் (that too approvingly) அமைத்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.

காமத்தீயில் நிறையழிந்து நிற்கும் பெண்மைக்கு அதைச் சுட்டுகிறார் இங்கு:

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்? (1260)

அன்புடன், ஜாவா குமார்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மனுக்குறள்?

 

திருக்குறளை உலகப்பொதுமறை என்றும், தமிழர் அனைவருமே சமயச்சார்பின்றிப் பின்பற்றக்கூடிய ஒப்பற்ற அறநூல் என்றும் சொல்கிறோம். நுணுகி ஆராய்ந்து பார்த்தால் , இக்கருத்து எவ்வளவு பெரிய மாயை  என்பது விளங்கும்.  குறள் பக்தி கொண்ட யாரையும் புண்படுத்தும் நோக்கில் இதைச் சொல்லவில்லை. காரணம் இருக்கிறது.

அன்வர் செரிபு என்று எனக்கொரு நண்பர்.  என்போலவே மார்க்ஸீய சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டு, மதம் என்னும் பேய் பிடிக்காத, மதம் கடந்து சிந்திக்கும் அகண்ட பார்வை கொண்டவர். தொழிற்சங்கத் தோழர். பல எதிர்ப்புகளை மீறித் தன் மகளுக்குக் கேரளப் புரட்சி வீராங்கனையான அஜிதாவின் பெயரை வைத்தவர். தமிழில் மிக நல்ல புலமை கொண்டவர். என் திருமண அழைப்பிதழில் திருக்குறளை அச்சிட்டிருப்பதைப் பார்த்து இவர் ஆச்சரியப்பட்டுவிட்டுச் சொன்னார்.

‘எதைப் படித்தாலும் முழுசாய்ப் படிக்க வேண்டும். ஆழ அகலப் படிக்க வேண்டும். இங்கே அங்கே ஒரு பாட்டை உருவிப் பார்த்தால் இப்படித்தான். திருக்குறள் இன்றைக்கு இந்துத்வாவாதிகள் பரப்பிவரும் பிற்போக்கு மனுவாதக் கருத்துகளுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூசகமாய் வித்திட்ட ஒரு நூல். எத்தனை பெரியார் வந்தாலும் மீட்கமுடியாத, தமிழர்களுடைய மூடநம்பிக்கைகளுக்கு ஆதாரமான நூல் இதுதான்’ என்றார்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆத்திரம் பொங்கிவர,  ‘என்னப்பா இப்படிக் குண்டைத் தூக்கிப் போடுகிறாய்? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவத்தைச் சொல்லும் திருக்குறள் எங்கே, பிறப்பால் பேதம் கற்பிக்கும் வர்ணாஸ்ரமத்தைத் தூக்கிப் படிக்கும் ஆரிய மனுவாத நூல்கள் எங்கே?’ என்றேன்.

‘முதல் அடியைச் சொல்லிவிட்டு அடுத்த அடியை விட்டுவிட்டால் எப்படி? சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்று தொழில்ரீதியாக மனிதர்களைப் பிரிப்பதே மனு தர்மம்தானே’ என்ற நண்பர், மேலும், ‘வள்ளுவர் பிறப்பிலேயே உயர்ந்த பிறப்பு, இழிபிறப்பு, (மேல்பிறந்தார், கீழ்ப்பிறந்தார்) பிறப்பொழுக்கம், குலவொழுக்கம் போன்ற ஆதாரமான வர்ணாஸ்ரம நம்பிக்கை கொண்டவர்தான்; ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரமே இதற்கு உதாரணம்; ஒழுக்கம் என்றால் நன்னடத்தை (டிஸிப்லின்) என்ற பொருளில் இங்கே சொல்லவில்லை, அவனவன் ‘குலதர்ம’ப்படி, சாதிவழக்கப்படி ஒழுகுவதையே இங்கே ஒழுக்கம் என்கிறார். ‘ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்’ என்ற குறளுக்கு அடுத்து, பார்ப்பானின் பிறப்பொழுக்கம் குன்றக்கூடாது என்று அவர் சொல்வதிலிருந்து உயர்ந்த பிறப்பு, இழிந்த பிறப்பு என்ற கேடுகெட்ட நம்பிக்கையைத் தெரிந்து கொள்ளலாம்’ என்றார்.

’இப்படி ஆரிய வேதநூலுக்கு விளக்கம் சொல்லவந்த தமிழ்நூலே திருக்குறள்’ என்றும் சொன்னார். அவர் என்னை மேலும் ஆழ்ந்து படிக்கச்சொன்ன பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர், பரிதியார் முதலிய பலர் எழுதிய உரைகளையும், தொடர்புடைய பல நூல்களையும் தேடிப் படித்தேன்.

படிக்கப்படிக்க எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

அந்தணர் (பிராமணர்), அரசர் (சத்திரியர்), வணிகர் (வைசியர்), வேளாளர் (சூத்திரர்) ஆகிய நான்கு வர்ணத்தார்க்கும் உரிய கடமைகளைப் புகழ்ந்துபாடி அவர்கள் அவற்றை விட்டுவிடாமல், தொடர்ந்து செய்வதுதான் உத்தமமான செயல் என்று தெள்ளத் தெளிவாய்ச் சொல்வதோடு, அவர்ணாக்கள் (குலமிலர், பஞ்சமர்) என்போரைக் ‘குடியிலார்’ என்றும், ‘கீழ்’ என்றும் சொல்லும் இந்த நூலா உலகப்பொதுமறை என்று இத்தனை காலம்  சொல்லப்பட்டு வந்திருக்கிறது!

இதை ஓர் அபாண்டக் குற்றச்சாட்டாக பலர் நினைக்கலாம். ஆனால் ஆதாரங்கள் இருக்கிறதே.

மனுநூலின் தமிழ்வடிவே திருக்குறள்!

“எழுத்துமுதல இலக்கண வகையும்
வழுத்து வேதாகம வகையதன் பயனும்
தங்கிய குறட்பா தமிழ்மனுநூல்…”
(பெருந்தொகை – 1543 )

அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்ததைச் செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.

வழக்காவது ஒரு பொருளைத் தனித்தனியே எனது என்று இருப்பார் அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள்மேற் செல்வது. அது கடன் கோடல் முதலிய பதினெட்டு பதத்ததாம்.

தண்டமாவது அவ்வொழுக்க நெறியினும், வழக்க நெறியினும் வழீஇயனாரை அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்பநாடி அதற்குத்தக ஒறுத்தல்.

இவற்றுள் வழக்கமும் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதல்லது ஒழுக்கம் போல மக்கள் உயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பு இலவாகலானும், அவைதாம் நூலானேயன்றி உணர்வு மிகுதியானும், தேய இயற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதுதான் நால்வகை நிலைத்தாய் (நால்வகை நிலையாவன: பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நால்வகை ஆசிரமங்கள்) வருணந்தோறும் வேறுபாடு உடைமையாயின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலின் பெரும்பான்மையாகிய பொது இயல்பு பற்றி இல்லறம், துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது.

- இது திருக்குறள் உரையின் முன்னுரையில் (உரைப்பாயிரம்) பரிமேலழகர் சொல்வது. திருவள்ளுவரின் இதயம் கண்டவர் என்று தமிழ்ப்புலவர்களால் வானளாவப் புகழப்படும் பரிமேலழகர், சுற்றிவளைத்து இங்கே குறள் சொல்லும் அறம் என்பது மனு தர்மமே என்றும், அதனைப் பொது இயல்பு பற்றிப் பெரும்பான்மைக்குத் திறம்பட திணித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்.

ஏதோ பரிமேலழகர் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார் என்று கருதவேண்டியதில்லை. அவர் இந்த முடிவுக்கு வந்ததன் ஆதாரங்களை வள்ளுவர் வாய்மொழி மூலமே பார்க்கலாம்.

பிராமண தர்மத்தைப் போற்றிச் சொல்வது:

பல குறள்கள் இருந்தாலும் முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.

மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்

பரிமேலழகர் உரை:
ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தின் முன்னுரையிலேயே பரிமேலழகர் சொல்வது: அஃதாவது தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதல்.

(அதாவது அவரவர் வர்ணாஸ்ரம தர்மப்படி ஒழுகுவது)

ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின், பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக்கெடும்.

மறந்தவழி இழிகுலத்தனாம் ஆதலின் மறக்கலாகாது என்னும் கருத்தான், மறப்பினும் என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின் இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.

பரிதியார் உரை:

பிராமணன் வேதம் ஓதி மறந்தாலும் பின்பு சந்தத்தை விட்டு ஓதிக்கொள்ளலாம். ஒழுக்கம் கெட்டால் பிராயச்சித்தம் பண்ணினாலும் போகாது; செய்த தோஷம் அநுபவிக்க வேண்டும்.

அதாவது மற்றவன் எப்படிக் கெட்டாலும், பிராமணன் குலத்தொழிலை விட்டுவிடக்கூடாது என்று பார்ப்பன ஜாதிய பீடங்கள் கவலைப்படுவதைவிட இது மோசமாக அல்லவா இருக்கிறது!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தேவையில்லாத ஒரு வீண்வம்புக் கட்டுரை.

இந்து ஞான மரபில் சுருதி (என்றைக்குமான அறங்களை எடுத்தோதும் நூல்), ஸ்மிருதி (ஒரு காலகட்டத்திற்கான சமூக விதிகளையும், சட்டங்களையும் சொல்லும் நூல்) என்று இரு பகுப்பு உண்டு.

திருக்குறளை ஒரு அப்பழுக்கற்ற இந்து தர்ம அறநூலாக, சுருதியாகவே நான் பார்க்கிறேன். அதுவே திருக்குறளுக்கு செய்யும் உண்மையான மரியாதையும் கூட.

அதை விடுத்து சில குறள்களை உருவி, அதிலிருக்கும் ஒரு சில ஸ்மிருதி அம்சங்களை ஊதிப் பெரிதாக்குகிறது இந்தக் கட்டுரை. இது திருக்குறளை அவமதிக்கும் செயல்.

கீதையின் தத்துவத் தேடல், ஞான உபதேசம், வாழ்க்கை நெறி எல்லாவற்றையும் புறமொதுக்கி, அதில் வர்னாசிரமம் பற்றி வரும் ஒன்றிரண்டு சுலோகங்களுக்கும் பொருளைத் திரித்து கீதையே ஒரு சாதிய நூல் என்று இந்து-விரோத இடதுசாரிகள் வாதிடுவார்கள். அதையே தான் செய்கிறார் இந்த ஆசாமி.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திருவள்ளுவர், சத்திரிய தருமத்தையும் போற்றியிருக்கிறார் என்பது தெரியுமா?

இதற்கு உதாரணம் சொல்ல ஏராளமான குறள்கள் இருந்தாலும், அன்றிலிருந்து தமிழ்மக்களை அடிமையாக்கிய பார்ப்பன – சத்திரிய கூட்டுச் சதிக்கு ஆதாரமான சில குறள்களை மட்டும் பார்ப்போம்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

பரிமேலழகர் உரை:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது – அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது;

மன்னவன் கோல் – அரசனால் செலுத்தப்படுகின்ற செங்கோல்.

(வேதமானது) அரசர், வணிகர் என்னும் ஏனையோர்க்கும் உரித்தாயினும், தலைமை பற்றி, அந்தணர் நூல் என்றார். ‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்’ (மணிமேகலை 22: 208,9) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு அறம் என்பது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் (சநாதன தர்மம் என்று படிக்க) செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு ஆதி என்றும், அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிது இல்லை என்பார் நின்றது என்றும் கூறினார்.

காளிங்கர் உரை:
மற்றும் அறநூல் என்று இங்ஙனம் ஒன்று சொல்லாது அந்தணர் நூல் என்றது, அரசர் நெறியாகிய செங்கோலும் நால்வருணத்தார் நடையுள் ஒரு நடை ஆகலானும், அவை யாவையும் பிறவும் துறவுமாகிய அனைத்தினையும் பழுது அற உரைப்பது பார்ப்பார் ஓதியும் ஓதுவித்தும் இங்ஙனம் விளங்க நடைபெற்று வருகின்ற வேதம் ஆகலான்.

கவிராஜபண்டிதர் உரை:
அரசன் நீதியாய் நடத்தினால், வேதமும், சாஸ்திரமும், தருமமும் வர்த்திக்கும்.

அதாவது பார்ப்பனரின் வேதநூலே அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரே நீதிநூல்; அதைக் காப்பாற்ற வேண்டியது அரசனின் கடமை என்கிறார் வள்ளுவர். என்னே ஒரு கூட்டுச்சதி இது!

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

பரிமேலழகர் உரை:
காவலன் காவான் எனின் – காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவான் ஆயின்;

ஆபயன் குன்றும் – அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்;

அறுதொழிலோர் நூல் மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.

ஆபயன் – ஆவால் கொள்ளும் பயன்,

அறுதொழில்களாவன (வேதம்) ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.

பசுக்கள் பால் குன்றியவழி அவி இன்மையானும், அது கொடுத்தற்கு உரியார் மந்திரம், கற்பம் என்பன ஓதாமையினும், வேள்வி நடவாதாம்; ஆகவே வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று.

அடப்பாவிகளா! இங்கே அரசன் சரியாக ஆட்சி செய்யாவிட்டால் பொதுமக்களுக்கு நேரும் சிரமம் எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை வள்ளுவருக்கு. பார்ப்பனன் தொழில் நடக்காது என்பதுதான் பிரதானமாய் இருக்கிறது!

உலக நாடுகளில் எல்லாம் இன்று மரணதண்டனை தவறு என்றும் அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் விவாதம் எழுந்துள்ளது. ஆனால் கேள்வி ஏதும் கேட்காமல் ‘இவன் கொடியவன், இவன் தலையை வெட்டலாம்’ என்ற உரிமையை மன்னனுக்குக் கொடுத்தது மனு தர்மம். அதனால்தான் மதுரை பற்றி எரிந்தது. அது சத்திரியன் மனு, சத்தியர்களுக்காகவே உருவாக்கிய சிறப்புச்சலுகை.

வள்ளுவர்தான் மனுவாதி ஆயிற்றே! இங்கே அவர் பரிந்துரையும் மனுதர்மப்படியே இருக்கிறது.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

பரிமேலழகர்:
வேந்து கொடியாரை கொலையின் ஒறுத்தல் – அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்,

பைங்கூழ் களை கட்டதனொடு நேர் – உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனொடு ஒக்கும்.

கொடியவர் என்றது தீக்கொளுவார், நஞ்சிடுவார், கருவியில் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவாரென்று இவர் முதலாயினாரை. இவரை வடமொழியில் ஆததாயிகள் என்ப. இப் பெற்றியரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புல் களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ் போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதி தருமம் என்பதாயிற்று.

ஆக தன் விருப்பப்படி ஒருவனைக் கொல்வது இங்கே ஒருவன் சாதி தருமம் என்றாகிப் போனது. என்ன கொடுமை இது!

வள்ளுவராவது இதை  ‘மனுதர்மப்படி’ என்று சொல்லாமல் விட்டார். ஆனால், இந்த மனுதர்மத்தை நியாயப்படுத்தி ‘மாபெரும் தமிழ்த்துரோகி’ என்று பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட கம்பன் சொல்வதைப் பாருங்கள்.

நன்றி கொன்றரு நட்பினை நார் அறுத்
தொன்று மெய்ம்மை சிதைத்துரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்
சென்று மற்றவன் சிந்தையைத் தேர்குவாய்..
நஞ்சம் அன்னவரை நலிந்தாலது
வஞ்சம் அன்று மனுவழக்கு ஆதலால்..
(கம்பராமாயணம் – கிட்கிந்தை 3,5)

ஆகாதவனைப் போட்டுத்தள்ளுவது மனுதர்மம். இங்கே ஆரிய சத்திரியன் இராமன் இந்த நாட்டின் ஆதிகுடிகளைப் பிரித்தாள்வதற்கு, சகோதரர்களுக்கிடையேயான சண்டையைப் பெரிதுபடுத்தி அண்ணனைக் கொன்று, தம்பியின் ராஜியத்தைத் தன் ஆளுகைக்குக் கொண்டுவந்த குயுக்திக்கும் இதே மனுதர்மம் பயன்பட்டிருக்கிறது. அது எந்த வெட்கமும் இல்லாமல் கம்பன் வாயாலேயே இங்கே உறுதிப்பட்டுள்ளது.

திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் ஆய்ந்தறிந்த பெரியார் அன்றே தெள்ளெனச் சொன்னார்:

கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். இவன் முழுப் பொய்யன். முழுப் பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான்கூடச் சொல்லப் பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தரக் கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். தொல்காப்பியன், வள்ளுவன், கம்பன் இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் ஆவார்கள்.

வைசியரும், வேளாளரும், குடிப்பிறப்பால் அமையும் குணங்களும்:

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின் (குறள் – 120)

என்ற குறளிலே வைசியரைக் குலதர்மப்படி ஒழுகச் சொல்லும் வள்ளுவர், உழவு என்ற அதிகாரத்தில் (104) வைசியர் மற்றும் நான்காம் வர்ணத்தாரின் குலத்தொழிலை உயர்த்திப்பாடுகிறார்.

பரிமேலழகர்:
அஃதாவது சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கும் உரித்தாய உழுதல் தொழில். செய்விக்குங்கால் ஏனையோர்க்கு உரித்து. இது மேல்குடி உயர்வதற்கு ஏது என்ற ஆள்வினை வகையாகலின் குடிசெயல்வகையின் பின்வைக்கப்பட்டது.

உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றெல்லாம் இவரைப் புகழ்ந்து இவர்தம் குலதர்மப்படி ஒழுகச் சொல்வதை இந்த அதிகாரத்தில் காணலாம்.

இப்படி நால்வகை வர்ணத்தில் பிறக்கும் கொடுப்பினை பெற்றவரே குடிப்பிறந்தார். அப்படிப் பிறப்பதால் இயல்பாகவே அமையும் குணங்களை ‘குடிமை’ என்ற அதிகாரத்தில் (96) பட்டியல் போட்டே காட்டுகிறார் இந்த மனுவாதி.

பரிமேலழகர்:
அஃதாவது உயர்ந்த குடியின்கட் பிறந்தாரது தன்மை.

உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதாகலின், அச்சிறப்புப்பற்றி இது முன்வைக்கப்பட்டது.

மாதிரிக்கு இரண்டு குறள்கள்:

இற்பிறந்தார் கண்அல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. (951)

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். (952)

அதாவது நால்வருணத்திலே நல்ல குடியிலே பிறந்தவனுக்கு நடுவுநிலைமை, பழிபாவங்களுக்கு நாணுதல், நல்லொழுக்கம், வாய்மை இதெல்லாம் இயல்பாகவே அமையும் என்று சொல்கிறார்.

சிலர், குடிப்பிறப்பு என்றால் நல்ல குடும்பத்திலே நல்ல தாய் தகப்பனுக்குப் பிறப்பதைச் சொல்வதாகப் புரிந்துகொண்டு உரை எழுதி இருக்கிறார்கள். அது தவறான புரிதல். குடிமை என்ற அதிகாரத்திலேயே, குடி என்பதற்கு மாற்றாகக் குலம் என்றும் (குலம் பற்றி வாழ்தும் – 956, குலத்தின்கண் ஐயப்படும் – 958, குலத்தில் பிறந்தார் – 959) வள்ளுவர் சொல்வதிலிருந்தே அவர் சொல்வது வருணாசிரம அடிப்படையிலான பிறப்பைத்தான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

பிறப்பின் அடிப்படையில் அமைவதாக, அமைய வேண்டியதாக வள்ளுவர் தரும் சிறப்புக் குணங்களின் பட்டியல்:

குறள் எண்வாரியாக
951 – குடிப்பிறந்தாரே பண்பாளர்; தீயன செய்ய நாணமும், நடுவு நிலைமையும் (செப்பம்) உடையவர்
952 – ஒழுக்கமும் வாய்மையும் உடையவர்
953 – முகமலர்ச்சியும், ஈகையும் இன்சொல்லும் கொண்டவர்
954 – எத்தனை கோடி கொடுத்தாலும் மானத்தை விடாதவர்
956 – சிறுமையான செயல் செய்ய மாட்டார்
959 – வாய்ச்சொல்லே அவர் சாதி காட்டும்
963 – பெருக்கத்திலும் பணிவுடையவர்; சுருக்கத்திலும் பண்பு மாறாதவர்
992 – அன்பும் பண்பும் நிறைந்தவர்
794 – நட்பை மதித்து நடப்பவர் ஆகவே சாதிபார்த்து நட்பு கொள்ள வேண்டும்.

இந்த வள்ளுவரைத்தான் தமிழ்மக்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு, இத்தகைய பிதற்றல்களை உலகப்பொதுமறை என்று கொண்டாடி வருகின்றனர்.

அதுசரி, இப்படிப் பிறப்பு அமையக் கொடுத்து வைக்காத துரதிருஷ்டசாலிகளின் பாடு என்ன? அதை மட்டும் விட்டுவிடுவாரா இந்த மனுவாதி?

வருணாசிரமதருமத்தின் வழக்கப்படி நால்வருணத்தாரும் அவரவர் குலத்தொழிலை விடாமல் தொடர்ந்து அதன்படி ஒழுக வேண்டும். அதை விட்டுவிட்டால் சாதிவிலக்கு ஆகிவிடும். ஒருவன் சாதிவிலக்கம் ஆகிவிட்டால் குடியில்லாதவன் ஆகிவிடுவான். அப்புறம் அவனும் அவன் சந்ததியும் இழிந்த பிறவிகளாகத் தொடர வேண்டியதுதான். இப்படித்தான் பஞ்சமர் என்ற அவர்ணாக்கள் உருவானதும், அவர்கள் மிதியடியாய்ப் பயன்படுத்தப்பட்டதும்.

இதை மிகத்தெளிவாக வள்ளுவம் எடுத்து வைக்கிறது:

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும் – 133

பரிமேலழகர்:

ஒழுக்கம் உடைமை குடிமை – எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலன் உடைமையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் – அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.

இப்படி வருணத்தில் தாழ்ந்தானோ அல்லது விலக்கப்பட்டவனோ (நான்காம் வகுப்பில் இருப்பவன் அதற்குமேல் தாழ்ந்தால் அவர்ணா) அவன் கீழான இழிபிறவியாகிவிடுவான்.

இவர்களுக்குக் ‘கீழ்கள்’ என்று அடைமொழி கொடுத்து ஆண்டைகள் கொடுமைப்படுத்த வள்ளுவர் கொடுக்கும் அதிகாரத்தைப் பாருங்கள்.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது 1075

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் 1078

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ் 1079

கீழானவனை எப்போதும் அச்சுறுத்தி வை! கரும்புபோல் கசக்கிப்பிழி! நீ நன்றாக உடுத்தி, உண்டு, அதை அவன் கண்டு வயிற்றெரிச்சல் படுவான், அது விளங்காமல் போகும். ஆகவே அவனை விலக்கி வை!

இத்தனையும் சொல்பவர் வள்ளுவர்தான்.

இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுவோர் மனு ஸ்மிருதியை நேராகவே படித்து அதில் உள்ள எத்தனை பிற்போக்கான கருத்துக்கள் வள்ளுவரால் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன என்று தாமாகவே அறிந்து கொள்ளலாம்.

பல குறள்கள் மனுஸ்மிருதியிலிருந்து சொல்லுக்குச்சொல் மாறாமல் அப்படியே வள்ளுவரால் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பல குறள்கள் மனுஸ்மிருதியிலிருந்து சொல்லுக்குச்சொல் மாறாமல் அப்படியே வள்ளுவரால் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது பற்றி நேற்று கண்டோம். சில உதாரணங்களையும் காணலாம்.

Manusmriti II:218
http://www.hindubooks.org/scriptures/manusmriti/ch2/ch2_211_220.html
As the man who digs with a spade (into the ground) obtains water, even so an obedient (pupil) obtains the knowledge which lies (hidden) in his teacher.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத் தூறும் அறிவு – 396

Manusmriti III:78
http://www.hindubooks.org/scriptures/manusmriti/ch3/ch3_71_80.html
Because men of the three (other) orders are daily supported by the householder with (gifts of) sacred knowledge and food, therefore (the order of) householders is the most excellent order.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை – 41

Manusmriti IX:12
http://www.hindubooks.org/scriptures/manusmriti/ch9/ch9_11_20.html
Women, confined in the house under trustworthy and obedient servants, are not (well) guarded; but those who of their own accord keep guard over themselves, are well guarded.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை – 57

II வள்ளுவரின் வடமொழிப்பற்று

தமிழ் என்ற சொல்லையே ஓரிடத்திலும் பயன்படுத்தாமல் கவனமுடன் தவிர்த்திருக்கும் வள்ளுவர் அதே நேரத்தில் குறள் நெடுகிலும் ஏராளமான வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

எகா:
அமரர், அமிழ்து, அவி, ஆசாரம், ஆசை, ஆதி, இந்திரன், இலக்கம், கணம், கருமம், காமம், காமன், காரணம், காலம், சலம், சூது, சூதர், தண்டம், தவம், தானம், தூது, தேவர், நாகரிகம், நாமம், பகவன், பண்டம், பாக்கியம், பாகம், பாவம், பாவி, பூசனை, பூதம், மங்கலம், மந்திரி, மாயம், மனம், மானம், வரன், வாணிகம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதிலே பலவற்றிற்கும் இணையான தமிழ்ச்சொற்கள் இருந்தும் வலிந்து வடமொழியைப் பயன்படுத்தியிருப்பது வள்ளுவரின் வடமொழிப்பற்றைத் தெள்ளென விளக்கும். இதற்குப்போய் தமிழ்மறைநூல் என்று பெயரிட்டு அழைக்கும் கொடுமையை என்னென்பது!

III தவிர்க்கப்பட்ட தமிழர் வழிபாடு

ஆரிய மொழிப்பற்று ஒருபுறம் என்றால் காடன், மாடன் போன்ற நாட்டார் தெய்வங்களையும், தத்தம் குலதெய்வங்களையும், சித்தர், முனிகளையும் வணங்கும் தமிழ்மரபு வழிபாடு வள்ளுவரால் முற்றாய்ப் புறக்கணிக்கப்பட்டு, ஆரிய தெய்வங்களே பெருந்தெய்வங்களாக திறமையுடன் காட்டப்பட்டுள்ளன.

வள்ளுவர் குறளினூடே அடுக்கிப்போகும் ஆரியவழித் தெய்வங்களின் தொகுப்பு:

விஷ்ணுவும் ஸ்ரீதேவியும்: 84, 167, 179, 519, 617, 920, 1103
பூதேவி: 1040
ஸ்ரீதேவிக்கு மூத்தவள்: 167, 617, 936
இந்திரன்: 25, 899
பிரும்மா: 1062
மக்கள் உள்ளத்தே காமத்தை ஊட்டும் மன்மதன்: 1197
கூற்றுவன்: 269, 326, 765, 894, 1050, 1083, 1085

மேலும் லஜ்ஜா, தரா என்று வடமொழியார் பாணியில் நாணெணும் நல்லாள் (924) என்பதும் நிலமெனும் நல்லாள் (1040) என்பதும் குறிப்பிடத்தக்கன.

இப்படித் தான்கொண்ட ஆரியப்பற்றை எந்தவித ஐயத்துக்கும் இடமின்றித் தெளிவாகக் காட்டும் வள்ளுவரை, பெரியார் ஒருவரே மிகச்சரியாகப் புரிந்து கொண்டிருந்தார். பெரியார் அன்றே சொன்னார்:

திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றான்.

குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மதச் சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்.

IV பார்ப்பனரின் நீதிநூலே திருக்குறள்

பார்ப்பனரின் நீதிநூலே திருக்குறள் என்பதற்குச் சான்றாக திருவள்ளுவமாலையில் பல பாடல்கள் உள்ளன.

வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.
– செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந் திதனின்இது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
வேதம் உடைத்துத் தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து
– வண்ணக்கஞ் சாத்தனார்

ஆரியவேதம் சொல்வதற்கும் இதற்கும் வேறுபாடே இல்லை, ஒன்றுக்கு ஒன்று குறைவே இல்லை என்று ஆராய்ந்து பார்த்து மகிழ்கிறார் இவர்.

பரிமேலழகரும் சரி, இவர் போன்ற சங்கப்புலவர்களும் சரி, தத்தம் பின்னணியால் மூளைச்சலவை செய்யப்பட்டுத் திரித்துக் கூறுவதாகச் சொல்வார் சிலர். இந்த ஆய்வுக்கட்டுரை அவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.

திருக்குறள் அந்தணரின் சொந்த நூலே அன்றி அது உலகப்பொதுமறை அன்று என்பதற்கு மிக முக்கியமான சான்று கிபி.இரண்டாம் நூற்றாண்டு காலத்திய கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனால் இயற்றப்பட்ட மணிமேகலையில் இருக்கிறது.

இதிலே சிறைசெய் காதையில் கிளைக்கதையாக ஒரு காட்சி விரிகிறது.

‘அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின்
பரசுராமன் நின்பால் வந்து அணுகான்’
– என்ற குறிப்பால் அறியப்படும் பரசுராமன் காலத்திய புராதனமான புகாரை ஆண்ட ககந்தன் என்ற சோழமன்னன், மருதி என்ற பார்ப்பனப் பெண்ணைக் கண்டு காமுறுகிறான். ’கற்புநெறி தவறாத நான் இந்த மன்னன் உள்ளம் புகுந்தமை எங்ஙனம்’ என்று பார்ப்பனத்தியான மருதி கலங்கி நிற்கிறாள்.

பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
“நீ வா” என்ன நேர் இழை கலங்கி
“மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன்
முத் தீப் பேணும் முறை எனக்கு இல்” என
மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்

‘மழைவளமே எம்போன்ற பெண்களால் அன்றோ! இனி நான் எப்படி அகம் திரும்பி பூணூல் மார்பனான என் கணவனுக்காக முத்தீ பேணுவேன்!’ என்று வீடு திரும்பாமல் புகாரின் காவல்தெய்வமான சதுக்கபூதத்திடம் சென்று அழுகிறாள் மருதி.

அவளைத் தேற்றுவது போல் அந்த பூதம் சொல்கிறது:

மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்
“கொண்டோர் பிழைத்த குற்றம் தான் இலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன்
வான் தரு கற்பின் மனையறம் பட்டேன்
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன்
பொய்யினைகொல்லோ பூத சதுக்கத்துத்
தெய்வம் நீ” எனச் சேயிழை அரற்றலும்

மா பெரும் பூதம் தோன்றி “மடக்கொடி!
நீ கேள்” என்றே நேர் இழைக்கு உரைக்கும்
“தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் பெரு மழை” என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!

இங்கே இந்தச் சதுக்கபூதம் சொல்லும் அறிவுரையைக் கவனித்துப் பார்க்க வேண்டும். பார்ப்பனியான மருதிக்கு அது இருக்குமுதலான வேதத்தை எடுத்துச் சொல்லவில்லை. உபநிடத நூல்களையோ, மனுமுதலான சாத்திரநூல்களையோ எடுத்துச் சொல்லவில்லை. ஆனால் பெண்ணடிமைத்தனத்துக்கு ஊற்றுக்கண் போன்ற ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டி அறிவுரை சொல்கிறது.

“தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் பெரு மழை” என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!
– என்று சொல்லி “இனி நீ உன் கணவனையே கும்பிட்டு வா! இதர தேவதைகளுக்கான விழாக்களிலே மனதைச் செலுத்தாதே!” என்றும் சொல்லி அந்தப்பூதம் அவளை வழியனுப்புவதாய் போகும் இக்கதை.

மணிமேகலை பௌத்தகாவியம். பின்னாளில் நாகார்ச்சுனர் போன்ற சில பார்ப்பனர் புகுந்து குழப்பிய மகாயானம் போலன்றி, இது உண்மையான மூலபௌத்தமான ஹீனயானம் என்னும் தேராவாத பௌத்த நூல். பெண்விடுதலைக்கு வித்திட்டது பௌத்தம். ஆகவே சீத்தலைச்சாத்தன் எந்தச்சார்புமின்றி, ‘திருக்குறள் பார்ப்பனர் நூலே’ என்று வரும் தலைமுறைக்குக் காட்டவே இதை அமைத்திருக்கிறார்.

இதிலிருந்து தெரியவரும் மற்றொரு உண்மை என்னவென்றால் இரண்டாம் நூற்றாண்டுக்கு மிகவும் தொன்மையான புராண காலத்திலேயே திருக்குறள், மருதி போன்ற சாதாரணமான பார்ப்பன மக்களிடம் நீதிநூலாய் இருந்திருக்கிறது. எனவே, பின்னாளில் இயற்றப்பட்ட மனுநூல் போன்றவை திருக்குறளை அடியொற்றியே இயற்றப்பட்டிருக்கலாம் என்று கருதவும் வாய்ப்பிருக்கிறது.

இதைப்படிக்கும் தமிழ்மக்கள் இனியாவது குறள் மயக்கத்திலிருந்து மீளவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரகு says:

அருமையான ஆராய்ச்சி. தமிழுக்கு இது போல் புதிய விஷயங்களை சொல்பவர்கள் வேண்டும்.

திருக்குறள் சமண இலக்கியம் என்றால் உலகப் பொது மறை, பார்ப்பன இலக்கியம் என்றால் தூக்கி எறிய வேண்டும் என்பது அருமை.

‘எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்ப தறிவு’ என்று திருக்குறளில் இருப்பதை பகுத்தறிவுப் பட்டறைகள் கண்டு கொள்ளத் தேவையில்லை! அது தான் பார்ப்பன இலக்கியம் ஆயிற்றே?!

மேற்கத்திய இலக்கியங்களை மறந்தும் கூட படித்து விட வேண்டாம். பார்ப்பனர் வந்த ஆரியமல்லவா மேற்கு!

முக்கியமாக இணையத்தைப் பயன் படுத்தக் கூடாது. ஆரியர் கொணர்ந்த ஊடமல்லவா?!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வேங்கடசுப்ரமணியன் says:

இந்த மாதிரி எழுத்துக்கள் எல்லாம் வர காரணம், தமிழ் வெள்ளாளர்கள் தமக்கு என்று ஒரு தனி வரலாறு இருப்பதாக எண்ணிக் கொண்டு அதை இன்னும் தேடிக்கொண்டும் இருப்பது தான்.

திரும்பிய பக்கம் எல்லாம் சம்ஸ்கிருத வார்த்தைகள், வேதத்தைப் பற்றிய வார்த்தைகள் , பக்தி இலக்கியத்தின் பூரண வைதீகச் சாய்வு , தொல்காபியர் பிராம்மணர் என்ற உண்மை இது எல்லாம் வெள்ளாளன் மனத்தில் தீயை அல்லவா எழுப்பி வருகின்றது ?

சங்க காலப் பெண் கற்பு பேணக் கூடாதா ? இதற்காக குறள் மேற்கோள் காட்டக் கூடாதா ? ஆசிரியர் என்ன ஈ வே ரா மாதிரி கற்பு மறுக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவரா ? அப்படியே ஆயினும் அதைத் தன் குடும்ப அளவில் பேணி வரட்டும்.

இவருக்கு தன் குல தெய்வம் பற்றி சங்க இலக்கியத்தில் பாடல் வேண்டுமாம். குல தெய்வம் என்பது பறையன் முதல் பாப்பான் வரை உள்ளது. பொதுவாகவே அம்மன் தான். அதுவும் அவர்களின் மூதாதையரான பெண்டிரே. அவர்கள் மேல் ஏதாவது துதி வேண்டுமென்றால் ஆசிரியர் தமக்கு வேண்டியவற்றை எழுதிக் கொள்ளுதல் நலம். முக்தி விழைபவன் சிறு தெய்வங்களை தொழான். பின் ஏன் அனைத்து சாதியினரும் மாலோனும், சங்கரனும், அன்னையும் , ஐங்கரனும் குடிகொண்ட கோவிலுக்கு செல்கின்றனர் ? குல தெய்வத்தோடு நின்று விடுவது தானே ?

இதற்கெல்லாம் மனு இவருக்குக் கை கொடுக்க மாட்டார். மனு பிரம்மச்சரியம் பூணு என்றால் ஆசிரியர் ஒதுக்குவாரா ? அல்லது தமிழனின் வழக்கமான ‘பிரபல ‘ பத்திரிக்கைகளின் நடுப்பக்க அலங்கோலத்தில் தமிழனின் ஆண்மை ‘பிழியப்’படுவதை ரசிப்பாரா ? மனுவிடம் இந்தக் காலத்துக்கு ஒவ்வாததை விட்டு விட்டு வேண்டியதை எடுத்துக் கொள்ள வேண்டியது தானே ? அரசனுக்கு என்று கூறிய ஒன்றை இந்தக் காலத்தில் எடுத்துக் கொள்ள முடியுமா ?

இந்த ஆரியன் விஷயம் வெள்ளாளர்களுக்கு இடித்து சொன்னால் தான் புரியும். ஒவ்வொரு வெள்ளாள ஜாதியிலும் ஆரிய (உயர் ) சாதி உண்டு. வன்னியரில் ஆரியப் படையாச்சி என்ற உயர் குலம் உள்ளது. கவுண்டரில் எசமான் ஆரியப் பரம்பரை. மற்றவர் குடியானவர். தேவர் சாதியில் பண்பட்டவர் எல்லாம் “சைவ வெள்ளாளர் ” ஆக இருந்தனர். இன்று அவர்களை பிராக்கட் போட்டுத் தாக்கி அழித்தே விட்டனர் இந்த வெள்ளாளர்கள். கள்ளர் , அகமுடையார் மெல்ல மெல்ல பிள்ளை ஆனார் என்று பழமொழியே உண்டு.

இந்த வெள்ளாள கலகம் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தம் என்று நினைக்க வேண்டாம். பாரதம் முழுக்க உமட்ட வைக்கும் அரசியல் நடத்தி வரும் சிறு அரசியல் வாதிகள் அனைவரும் வெள்ளாளர்களே . தேவே கௌடா , சந்திரபாபு நாய்டு, மம்தா, முலாயம், லாலு, முக குடும்பம், சசிகலா குடும்பம், ராமதாஸ் குடும்பம், தேவி லாலின் மகன் சௌதாலா , பவார், மற்றும் இவர்களது கட்சி அனைத்துமே வெள்ளாளர் மயம தான். தலித்துகள் இவர்களுக்கு ஊறுகாய் மாதிரி.

உண்மையில் மனுவின் சந்தேகமான வரிகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பட்சத்தில், இவர்கள் பள்ளர் மற்றும் பறையர் இனத்தில் கலப்பு மணம செய்ய வேண்டும். மாரி ‘வெள்ளாள’ முத்து வின் வார்த்தைக்கு அப்போது தான் நல்ல பயன் இருக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திருவள்ளுவர்
 அண்ணா

பொதுமறை - புதுமறை

திருவள்ளுவர் - நமக்கு அளித்துள்ள திருக்குறள் இப்போது ஒவ்வொருவருடைய நாவிலும் - நெஞ்சிலும் - நினைவிலும் - இடம் பெற்றிருக்கிறது.

எல்லாரும் குறளை ஆதரிக்கிறார்கள்; போற்றுகிறார்கள்.

திருவள்ளுவர் தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கைக்கு உரிய நெறியைத் தந்திருக்கிறார்.

அதனை நாம் உலகத்தின் பொதுச்சொத்து என்று எண்ணத் தக்க விதத்தில் பொதுக் கருத்தைப் பரப்பவேண்டும்.

தமிழ் மக்கள் திருக்குறளைப் பொதுமறை என்றும், இன்றைய தமிழர்கள் பெற்ற புதுமறை என்றும் போற்றுகிறார்கள்.

இந்த நல்ல கருத்துக் கருவூலத்தை உலகத்தின் கவனத்திற்கு எடுத்துவைக்க நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு (1968) உலகத் தமிழ் மாநாடு சென்னை நகரத்திலே நடைபெறவிருக்கிறது.

தமிழ் ஆய்ந்த - தமிழ் அறிந்த - நல்லறிஞர்கள், பல நாடுகளிலிருந்தும் மாநாட்டுக்கு எனத் தமிழகத்துக்கு வர இருக்கிறார்கள்.

அப்போது திருக்குறளின் அருமை பெருமைகளை, ஏற்கெனவே தமிழறிஞர்கள் அறிந்திருந்தாலும், பத்து நாட்களோ எட்டு நாட்களோ மாநாடு நடைபெறும் நாட்களில், அவர்கள் எல்லாரும் கண்டுகளிக்கத்தக்க விதத்தில் திருக்குறளின் பெருமையை உலகு அறியச் செய்ய வேண்டும்.

திருக்குறளின் - தமிழ் இலக்கியங்களின் கருத்துக்களை, ஓவியங்களாக - வரி வடிவங்களாக - பாடல்களாக - கூத்தாக உருவாக்கி வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

எனக்குள்ள நீண்ட நாளைய ஆசை - சென்னை கடற்கரை ஓரத்தில் சிலப்பதிகாரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள காவிரிப்பூம்பட்டினக் கடற்கரையைப்போல் சித்திரித்துக் காட்டவேண்டும் - உருவாக்கிக் காட்டவேண்டும் என்பது!
(சென்னை - கோட்டை தலைமைச் செயலகத்தில் சூன் 9, 1967 நிகழ்ந்த திருவள்ளுவர் படத் திறப்பு விழாவில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை. (நம் நாடு நாளிதழ் - 10.06.1967))

உலக மொழிகளில் எல்லாம் திருக்குறள்
உலக மொழிகள் எல்லாவற்றிலும் திருக்குறளை மொழி பெயர்த்துப் பயன்படுத்துகிறார்கள்.

நாம் எல்லாரும் எதிர்பார்ப்பதை விட மேலாக வெளிநாட்டினர் திருக்குறளைப் பயன்படுத்த முனைந்துவிட்டனர்.

திருவள்ளுவருக்குக் கிடைக்கும் இந்தச் சிறப்பை நீண்ட காலத்திற்கு முன்பே நாம் செய்திருக்கவேண்டும்; தவறிவிட்டோம்.

இப்போது சோவியத்து நாட்டிலே உள்ளவர்கள் திருக்குறளைப் பயில்கிறார்கள். இங்கிலாந்து நாட்டில் உள்ளவர்கள் பயில்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் புதுச்சேரிக்குச் சென்றிருந்தபொழுது, பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை என்னிடம் தந்தார்கள். அதன் நல்லறிவுக் கருத்துகள் நாட்டு மக்கள் அனைவராலும் போற்றப்படுகின்றன.

திருவள்ளுவர் விழா ஏன்?
திருவள்ளுவர் விழாதான் நம் வாழ்வு செம்மைப்பட அமையும் விழாவாக அமைய வேண்டும்.

திருவள்ளுவரைப் போல, தமிழர்களிலே நிறையப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இளங்கோவின் சிலப்பதிகாரம் நாடு அறியாதது அல்ல; சிலப்பதிகாரத்தில் வரும் கனல் வரிக் கவிதை, உலகம் மறந்துவிடக் கூடியதும் அல்ல, இருந்தாலும் -இரண்டு வரிகளுக்குள் வாழ்வுக்குத் தேவையான கருத்துகளை எப்படி வாழ வேண்டும் என்ற முறையை வகுத்துக் கொடுத்த பெரியார் வள்ளுவர்தான்!

தமிழ் நாட்டில் இருந்த பெண்பாற் புலவர்களைப் போல் வெளிநாட்டில் எங்கும் நாம் கண்டதில்லை. இருந்தாலும் வள்ளுவரைப் போல் அவர்கள் சுவடி ஒன்றும் தரவில்லை.

ஆதலால் வள்ளுவர் விழாவினை மற்ற விழக்களைப் போல் எண்ணாது, தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அரிய விழாவாகக் கருத வேண்டும்.

இந்தக் குவலயத்திற்கே குறளைத் தந்த தமிழர் சமுதாயம், குறள் நெறியின்படி வாழ்கிறதா என்றால் - இல்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

என்று, உயர்வு பிறப்பிலே இல்லை; தான் செய்யும் தொழிலின் சிறப்பிலேதான் இருக்கிறது என்பதைத் திருவள்ளுவர் சொல்லியும் இந்தச் சமுதாயம் சாதிப் பிடிப்பிலிருந்து இன்னும் தன்னை விடுவித்துக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல; சாதி இருந்தால் என்ன? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆகையால் விழா நடைபெறும் இந்த நேரத்தில் திருவள்ளுவர் சொன்ன கருத்துகளை நடைமுறைக்குக் கொண்டுவர உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்

இரஷியாவோடு போட்டியிடும் தலையாய செல்வம்
இன்றைய தினம் செல்வத்திலே - சீரடைவதிலே - கல்வி முன்னேற்றத்திலே - தொழில் துறையிலே - மிகவும் பின்தங்கியுள்ளோம்.

தமிழ்ச் செல்வம் யாரும் பெற முடியாத செல்வமாக இருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டுச் செல்வம் யாருக்கும் எந்த நாட்டுக்கும் கிட்டாத அளவிற்குக் கிடைத்திருக்கிறது.

இரஷ்யாவோடு நாம் போர்க் கருவிகளிலே போட்டியிட முடியாது; விஞ்ஞான வளர்ச்சியிலே போட்டியிட முடியாது.

ஆனால் இலக்கியத்திலே போட்டியிட முடியும். அப்படிப்பட்ட இலக்கியச் செல்வம் நம்மிடத்திலே இருக்கிறது. அதில் தலையாய செல்வம் - திருக்குறள்.

அந்தக் குறள், வகுப்பறையில் மட்டும் அல்லாமல் - உங்கள் இல்லங்களில் மட்டும் அல்லாமல் - உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.

குறளைக் கற்றுக் கொள்வதால்,
நீங்கள் செம்மைப்பட்டு -
நீங்கள் செம்மைப்படுவதால்,
நாடு செம்மைப்பட்டு -
நாடு செம்மைப்படுவதால்,
உலகு செம்மைப்படச் செய்ய வேண்டும்.
(** சென்னை - இராணி மேரி கல்லூரியில் செப்டம்பர் 8, 1967 நிகழ்ந்த திருவள்ளுவர் விழாவில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை - ஆதாரம்: நம் நாடு நாளிதழ் 09.09.1967)

நிலத்தாய் சிரிக்கிறாள்
ஒரு நாட்டில் ஒன்று இருந்தால் மற்றொன்று இருப்பது இல்லை.

நம் தவத்திரு நாட்டிலோ எல்லாவற்றையும் பூமி தன் மடியில் அடக்கி வைத்திருக்கிறது.

தோண்டினால் உனக்கு வேண்டியதைத் தருகிறேன் என்று பூமி மாதா கூறுகிறாள்!
கொஞ்சம் தோண்டினால் ஊற்று நீர்!
இன்னும் கொஞ்சம் தோண்டினால் சுண்ணாம்புக் கல்!
மேலும் சிறிது தோண்டினால் செம்பு - அதற்குப் பிறகு தங்கம்!
அதற்கும் அடியிலே தோண்டினால், தங்கத்துக்கெல்லாம் மேலான கருப்புத் தங்கம் என்ற கொருளாதார வல்லுநர்கள் போற்றும் நிலக்கரி!
இத்தனையும் தருவதற்குத் தயாராக இருக்கிறது நம் நிலம்.

இதனைத்தான் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்; நிலத்தை மதிக்க வேண்டிய இன்றியமையாமையையும் வலியுறுத்தியிருக்கிறார்.

இலம் என்ற அசை இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லான் தகும்
என்னும் குறள் மூலம்!

எதுவும் இல்லையே!
என்று தலைகுனிவதைப் பார்த்துத்தான் பூமி மாதா (நிலத் தாய்) சிரிப்பாள்!

ஒரு பெண் தங்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தால் - தமிழர்கள் அதைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்.
இதை அறிந்துதான், பூமி மாதா சிரிப்பாள் என்று வள்ளுவர் எழுதியிருக்கிறார்.

நமது நிலத்திலே வளம் இருப்பது தெரிகிறது. ஆனால் அதனைத் தோண்டி எடுக்கும் அதிகாரம் நம்மிடத்திலே இல்லை! சேலத்திலே இரும்பு இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

வள்ளுவர் கூற்றுப்படி -
இரும்பைத் தன் மடியிலே அடக்கி வைத்திருக்கும் கஞ்சமலை, நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது!

தொழிற்சாலை வேண்டும் என்று துடிக்கிறாயே - இங்கே தோண்டி எடு இரும்பை
என்கிறது கஞ்சமலை!
(* சென்னை ஆகஸ்டு 15, 1967, விடுதலை நாள் விழாவில் முதல்வர் பேறிஞர் அண்ணா ஆற்றிய உரை - நம் நாடு, ஆகஸ்ட் 23, 1967)

இணையில்லா இலக்கிய வளம்
செழுமையான இலக்கிய வளம் நிறைந்த மொழி நமது மொழி - தமிழ் மொழி.
இதில் சிறிதும் ஐயப்பாடு கொள்ள தேவையில்லை.

உலகோர் முன் - அவர் எம்மொழியினராயினும் சரியே - எத்துணைக் கலையியல் வாய்ந்த எழுத்தாண்மைத் திறம் படைத்திட்ட நாட்டவரானும் சரியே - நாம் தலைநிமிர்ந்து கூறிடலாம் அவரிடம்:
எம்மொழி தமிழ் மொழி. மிகச் செழுமையான மொழி. கலைப் பண்பார்ந்த ஏட்டுக் கருவூல வளம் - காலக் கூறுக்கு ஏற்ற இலக்கியப் பகுதி ஏராளம் உண்டு எம்மிடம் - எமது செந்தமிழில்! - என்று.

இது வெறும் புகழ்ச்சியல்ல - உண்மை! தற்பெருமைக் குற்றத்தினைப் பொருட்படுத்திடவே கூடாத தன்மைத்தான் தற்பெருமிதமும் கூட!

இலக்கிய உலகில் - எழுத்தாண்மைத் துறையில் தமிழர் தம் சாதனை மிகவும் எடுப்பானது - ஈடும் இணையும் அற்றதும் கூட!

எடுத்துக்காட்டு வேண்டுமா?
இதோ ஒரு பாடல்:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.
- இந்த ஒரு பாடலில் மட்டும் எட்டு நூல்கள் குறிப்பிடப்படுகின்றன. எட்டுத் தொகை என்னும் ஒரு சிறப்புத் தொகுதியில் வருவன மட்டும் இவை - மெத்தச் சிறப்புடைத்தான நூல்கள் இவை.
மற்றத் தொகுதிகள் - தொகுப்புகள் பற்றிப் பேசிடலும் வேண்டுமோ!

உலகப் பேராசிரியர்
எல்லாவற்றையும் விட, திருக்குறள் குறித்து நாம் எவ்வளவு பெருமைப்பட்டுடக்கொண்டாலும் தகும். வலி ஏதும் இல்லை, நாமே பெருமிதப்பட்டுக் கொள்வதில்.

மானிடப் பண்பியல்புகளுக்கு ஓர் உறைவிடமாய் - வாழ்க்கை வழி, நெறி முறைகளுக்கான வழி காட்டியாய் - அமைந்துள்ளது திருக்குறள்.

காலக் கூறுக்கு ஏற்ற இலக்கியம் திருக்குறள் அன்றி வேறு ஏது?
- என்றும் நாம் கேட்டிடலாம், எவரைப் பார்த்தும்.
உலகெங்கணும் பறைசாற்றிடலாம்; அஞ்சிடத் தேவையில்லை.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட
தமிழ்நாடு
நமது நாடு.
எதனால் இப்படிக் கூறினார் சி.சுப்பிரமணிய பாரதியார்?

அந்த வள்ளுவர், திருக்குறள் என்ற பொய்யாமொழியினை வாழ்க்கை நெறிக் கோட்பாட்டு மறைதனைத் தீட்டியதால்தான்!

ஷெல்லி, பைரன், கீட்ஸ், கால்ரிட்ஜ், எமர்சன், பேக்கன் முதலிய ஆங்கிலப் பாவாணர்களும் பேரிலக்கிய நூலாசிரியர்களும் அளித்துள்ள நற்காவியங்களும், எழுத்தோவியங்களும் நமக்கு அந்நியம் ஆகுமா? அயலானவை தாமா?

அந்நியம் என்கிற சொல்லின் நேரிடையான பொருளில்தான் அவற்றையெல்லாம் கருதிடவேண்டுமா? ஒதுக்கிடவும் வேண்டுமா?

தமிழ் மறையாம் திருக்குறளைத் தீட்டிய திருவள்ளுவர், தமிழர் என்பதால் தமிழருக்கு மட்டுந்தான் வழிகாட்டியா? வள்ளுவன் தன்னை
உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட
தமிழ்நாடு
- என்று பாடிப் பூரித்து மகிழ்கின்றோமே, என்ன பொருள் அதற்கு?

ஷெல்லி போன்றோர் ஆங்கிலத்திற்கோ, ஆங்கில நாட்டாருக்கு மட்டுமோ உரியவர் ஆக மாட்டார்.

அவர்கள் அனைவரும் உலகினுக்கே சொந்தம்!
உலகப் பெருமக்கள் - குடி மக்கள் - அவர்கள்!
உலகப் பேராசிரியர்களும் ஆவார்கள் அவர்கள்!
(1967 - ல் பேரறிஞர் அண்ணா ஆற்றிய அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு பேருரை. ஆதாரம்:திரு.மு.நமசிவாயம் தொகுத்துள்ள சாமானியனின் சகாப்தம் நூல்)

பெருநெறி காட்டும் வழிகாட்டி நூல்
வள்ளுவர் தந்த திருக்குறள் தமிழர்க்கு மட்டும் அல்லாமல் பண்புடன் வாழ விரும்பும் அனைவர்க்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.

திருக்குறள் பூஜா மடத்துக்கு மட்டும் தயாரிக்கப்பட்ட ஏடு அன்று; புனைந்துரைகள் நெளியும் புராணம் அன்று; வாழ்விலே, தூய்மையை - அவரவரும், தத்தமது திறனைச் சரியாகப் பயன்படுத்தி, மற்றவர் வாழ்வின் மேம்பாட்டினையும் மதித்து ஒழுகுவதன் மூலம் பெறக்கூடியது என்ற பெருநெறியைக் காட்டும் நூலாகும்.

திருவிழாக்களையும், தீர்த்த மகிமைகளையும், திருப்பல்லாண்டுகளையும், திரு.அவதாரங்களையும் - இவற்றின் பிற பதிப்புகளான வெண்பொங்கல், இனிப்புச் சோறு எனும் இன்ன பிறவற்றினையும் மக்களுக்கு வழங்கும் அழுக்குக் கருத்துரைகள் கொண்ட ஏடுகளையே தமிழ்நாடு கொண்டாடி வருகிறது. காரணம் பலப்பல. விளைவோ - வாழ்வில் வேதனை; சமூகத்தில் சச்சரவு; நாட்டிலே நலிவு!

நாம் இதுகாறும் அத்தகு ஏடுகளின் பிடியிலிருந்து நாடு விடுபட வேண்டும் என்பதற்காகப் பணிபுரிந்து வந்தோம். அப்பணி தொடர்ந்தும் நடந்து வருகிறது.

அப்பணியுடனும் இப்போது நாம் வள்ளுவர் தந்த திருக்குறளை ஒவ்வோர் இல்லத்திலும் குடியேறச் செய்தாகவேண்டும்; ஒவ்வொருவர் மனத்திலும் அவருடைய அற உரைகள் பதியச் செய்யவேண்டும் என்ற சீரிய பணியினை மேற்கொண்டு உள்ளோம்.

குறள் ஏந்திச் செல்வோம்
நாம் - நாவலரும் பாவலரும் கூடிடும் நல் மணிமாடத்திலே அல்ல உலவுவது; உரையாடுவது! நாதனைக் கண்டோம்; நம் நாவில் அவர் சூலம் பட இம்மெய்யறிவு கொண்டோம் என்று இயம்புடும் அருள் விற்பனையாளர்களின் அணி மாடங்களை நாம் அணுகுவது இல்லை.

மக்கள் இத்தகையவர்களிடம், மறைந்து கிடக்கும் இம் மாணிக்கத்தை - திருக்குறளைக் காட்டும் மகத்தான பணியினை, நாம் மேற்கொண்டுள்ளோம்.

நமது பணி வெற்றி பெற்றால்தான், மக்களின் உடைமையாகும் - இந்தத் தமிழ் அறிவுக் களஞ்சியம்.

நமது பெரும் பணி மூலமே, மக்களுக்க, வாழ்க்கையுலே சந்தேகத்தை நீக்கவும், போக்கவும், நேர்மையை நிலைநாட்டவும் உதவும் இப்பெருநூலின் உண்மைப் பொருள் தெரிய முடியும்.

குறள் ஏந்திச் செல்வோம் - நாடு, நகரமெங்கும்; பட்டி, தொட்டிகளில் எல்லாம்! பண்பாடு - எது என்பதை மக்கள் அறியச் செய்வோம்!

அறம், பொருள், இன்பம் எனும் அரிய முப்பொருளை மக்கள் உணர மட்டுமல்ல; நுகரவும் பணியாற்ற வேண்டும்.

புதிய பணி இது; ஆனால் நமது பழைய பணியின் தொடர்ச்சிதான் - முற்றிலும் புதிதன்று!

அப்பணிக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கு - குறளின் அருமை, பெருமை பற்றி அறிஞர்கள் கூறியுள்ள கருத்துரைகளை எண்ணிப் பார்ப்பது முக்கியமான முதல் வேலையாகும்.

உள்ளுவரோ மநுவாதி?
பேராசிரியர் சுந்தரனார் பெரும்புலவர். அவர், வள்ளுவரின் திருக்குறளைப் பற்றிய அருமை பெருமையினை அறிவிக்கப் பல கூற வேண்டாம்; முக்கியமானதைச் சுட்டிக்காட்டினால் போதும் என்று எண்ணி வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி?

என்று பாடியுள்ளார்.
இந்த ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்னும் முறையினைக் காலம் கூடத் தகர்க்காதபடி, அவ்வப்போது உரம் ஊட்டி வருவனவே - புராண, இதிகாசங்கள். அவற்றை நம்பியதாலேயே நாடு நலிவுற்றது.

நாட்டின் நலிவு நீங்கி, மக்கள் நல்வாழ்வு பெறுவதற்காக, வள்ளுவர் குறளை, மறவற நன்கு உணர்ந்தார் ஆதல் வேண்டும் மக்கள்.

வள்ளுவர் அனைத்துப் பிரச்சினைகளையும் ஆராய்ந்து அரிய உண்மைகளை வெளியிட்டிருக்கிறார். கடவுள் கொள்கை, நாடு, அரசு, இல்வாழ்க்கை எனும் பல பகுதிகளாக உள்ள குறளின் முழு நோக்கம் - மக்கள் அற நெறியில் நிற்க வேண்டும் என்பதேயாகும். ஏனெனில், அவர் கூறியபடி அறத்தால் வருவதே இன்பம்.

இந்த அறநெறியைப் பரப்பும் பணியினை மேற்கொள்ளும் நமக்கு உறுதுணையாக, அறிஞரின் கருத்துரைகள் உதவுகின்றன.

வாழ்க வள்ளுவர்!
திருக்குறளின் ஆரமையினை எடுத்துரைத்த அறிஞர் பலர் பல மொழிகளிலே குறள் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் பெருமை கடல் கடந்தும் சென்று பரவியுள்ளது.

எனினும் தமிழர் மனைகளிலே குறள் உண்டோ? பஞ்சாங்கம் இருக்கும்; பாரதக் கதை இருக்கும்; அபிமன்யு வீரமும் இருக்கும்; அறநெறி கூறும் அருமைத் திருக்குறள் இருக்குமா? இல்லையே! ஏன்?

பண்புடைத் தமிழரின் மனப் புண்ணும் - பயனில் நூல்களை மட்டுமே அறிந்ததால் மக்கள் மனத்திலே மூண்டு கிடக்கும் மருளும் - போக்கப்பட வேண்டும்.
வாழ்க வள்ளுவர்! வளர்க குறள் நெறி!
(** திராவிடநாடு கிழமை இதழ் - சனவரி 14, 1949)

பட்டை தீட்டிய வைரம்
திருககுறள் இன்று பல்வேறு மொழிகளில் ஆக்கப்பட்டு உலக அரங்கில் உலா வருகிறது. இந்த அளவு வெற்றி, வேறு எந்தத் தமிழ் நூலுக்கும் கிடைத்தது இல்லை.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் தரணிக்கெல்லாம் நன்னெறி கூறும் நூல். நாளாக, நாளாக - சூழ்நிலை மாற மாற திருக்குறள், புதிய விளக்கங்களை, விரிவான கருத்துகளை நமக்குத் தரும் ஆற்றல் வாய்ந்தது! அதன் ஆழ்ந்த பொருளை அறிய ஆராய்ச்சி செய்வது இன்றியமையாதது.

வைரத்தைப் பட்டை தீட்டத் தீட்ட அதனுள் பல வண்ணங்கள் தெரிவது போல், திருக்குறளை ஆராய ஆராய அதில் பல புத்தம் புதிய அருமையான கருத்துக்கள் புலப்படும்.

இனித் திருக்குறளைப் பற்றி விரிவுரைகள் ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை. வள்ளுவர் கூறியுள்ள கருத்துக்களை எவ்வாறு பயன்படுத்துவது என்ற ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியதுதான் தேவை.

பல்கலைக் கழகத்தில் தனித்துறை
திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. அந்தக் காலத்தில் வேறு நாடுகளில் இயற்றப்பட்ட எந்த நூலிலும், குறளில் உள்ளதைப் போல் கருத்துக்கள் காணப்படவில்லை.

பிற நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்த அந்தக் காலத்திலேயே தமிழர்கள் நல்ல பண்பாடு மிகுந்தவர்களாகத் திகழ்ந்தனர் என்பதைத்தான் திருக்குறள் காட்டுகிறது.

திருக்குறளைப் பற்றிப் பெருமையாகப் பேசும் நம்மிடம் மூடப் பழக்க வழக்கங்கள் இருப்பதைப் பார்க்கும் வெளிநாட்டவர்கள் நம்மைப் பற்றி ஐயப்படுவார்கள். அதனால்தான் திருக்குறளுக்கு உலகில் கிடைக்கவேண்டிய அளவு பெருமை கிடைக்கவில்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை மான்
- என்ற குறளையும் போற்றிக்கொண்டு, சாதி முறைகளையும் கைவிடாமல் இருப்பது வாழ்க்கை நெறிக்குப் பொருத்தமாக இராது; குறளை நாம் உண்மையாகவே போற்றுவது ஆகாது!

சென்னைப் பல்கலைக் கழகத்தில் திருக்குறள் ஆராய்ச்சிக்கு என்றே ஒரு தனித் துறையை ஏற்படுத்தத் தமிழக அரசு முயற்சி செய்யும்.
(சென்னை, மயிலாப்பூரில் 1967 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15ஆம் நாள் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் முதலமைச்சர்  அண்ணா ஆற்றிய சிறப்புரை - நம் நாடு நாளிதழ் அக்டோபர் 16, 1967)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அந்தணர் யார்? திருக்குறள் மனுக்குரலா? சில கேள்விகளும் பதில்களும்


 

 

thiruvallu.jpg
சில காலமாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு வலைப்பதிவில் இந்து சமயம் பற்றியும் அதற்கான சூடான விவாதங்களையும் காண நேர்ந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால் நமக்கு தெரியாமலேயே நம் பெயரில் அங்கு சிலர் கருத்துக் கூறியிருப்பதும், அக்கருத்துக்களை விமர்சித்து இருப்பதுமே. யார் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. நமது தளத்தில் இக்பால் செல்வன் மட்டுமே விவாதங்களில் ஈடுபடுபவர். நான் பொதுவாக கருத்துக்களை பெரிய வலைப்பதிவர்களுக்கு இடுவதில்லை. ஆகையால எனது பெயரை அங்கு பயன்படுத்தி எமது பூர்விகத்தை தரக் குறைவு செய்துள்ளனர். இதில் நான் வருத்தப்படப் போவதில்லை. இருந்தாலும் சில நாள்களாக திருக்குறளைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். அவ்வாறு எழுதுபவர்கள் தம்மை முனைவர் என்றுக் காட்டிக் கொண்டாலும், அவர் எழுத்தின் தரம் அவர் கல்லூரிப் படிப்பையேனும் முடித்திருப்பாரா என்று ஐயம் எழுகிறது. அவரது முழுக் கட்டுரைக்கும் என்னால் விளக்கம் தர இயலாது, அதற்கான நேரமும் எம்மிடம் இல்லை. இருப்பினும் அந்தக் கட்டுரையில் யாரோ ஒருவர் இஸ்லாமிய இமாமையும் அந்தணர் எனக் கூறாலாம் எனக் கூறியுள்ளதும், அதை ஒரு விமர்சித்தும் இருந்தார். எனக்குள் சிறு பொறியைத் தட்டி விட்டது இது. அந்த திருக்குறள் கட்டுரை முழுதுமே அந்தணர் என்னும் சொல்லாடலுக்கு பொருள் தேடும் கட்டுரைத் தான் எனப் படித்தால் புரிகிறது. அதைப் பற்றி மேலும் விமர்சிக்க விரும்பவில்லை.
திருக்குறளில் அந்தணன்/அந்தணர் என்ற சொல் மூன்று இடங்களில் வருகின்றது. அவை முறையே கடவுள் வாழ்த்து அதிகாரம் எட்டாம் பாடல், நீத்தார் பெருமை அதிகாரம் முப்பதாம் பாடல், செங்கோன்மை அதிகாரம் 543ம் பாடல். அவற்றில் முதல் இரண்டு குறள் பாடலும் அறத்திலும், மூன்றாம் பாடல் பொருட்பாலிலும் உள்ளது. மூன்றுப் பாடலிலும் அண்தணன் என்ற சொல்லுக்கு வேறு வேறு பொருளாக இருப்பது ஆச்சரியம் ஊட்டுகிறது. அக்குறள்கள் இவையாவை
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. (8)
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543)
அந்தணன் என்றால் என்ன பொருள்?
அந்தணர்/ அந்தணன் என்ற சொல் மிகவும் அழகிய ஒரு சொல்லாகும். இதற்கு இணையான பொருள் தரக்கூடிய வேறு சொற்கள் வேறு மொழிகளில் உண்டா என தெரியவில்லை.
அந்தணர் = அம் + தண்மை + அர்/அன்
அதாவது அம் என்றால் நல்ல, தூய்மை என்று பொருள்படும். தண்மை என்றால் நீரினைப் போன்று, தண்மை என்பதற்கு இனிமையான அல்ல குளிரான என்றும் பொருள்படும். மலையாளத்தில் தணுக்கு என்றப் பதம் குளிரைக் குறிக்கிறது. யாழ்பாணத்திலும், சில தமிழக பகுதிகளிலும் இவன் தண்மையானவன் என்று சொல்வதுண்டு. அதாவது கோபப்படாமல், பழகுவதற்கு இனிமையானவர் என்று அர்த்தம். அர், ஆர் எனும் விகுதிகள் சேர்ந்து படர்க்கைப் பலர்பால் வினைமுற்றுகள் ஆகின்றது. அதாவது அது ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம்.
திருக்குறளில் வரும் அந்தணன் பிராமணரைக் குறிக்கிறதா?
அந்தணர் என்ற சொல் வேதம் படிக்கும் பிராமணரைத் தான் குறிக்க வேண்டுமா? வேதத்தில் பலித்தொழில் புரிகின்ற பிராமணர்கள் எவ்வாறு தண்மையானவர்களாக இருக்க முடியும். அந்தணர் என்ற சொல் பிற்கால பக்தி இலக்கியங்களில் எடுத்தாளப் படுகின்றது தான். ஆனால் திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அவர் ஏன் பிராமணர்களை அந்தணர் எனக் கூற வேண்டும்.
தமிழ் மொழியில் மறந்ததும், மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவு கடந்து உள்ளன. அத்தகைய சீரிய செய்திகளை வெளிக்கொணர்ந்து, வீரிய உணர்வுடன் வெளியிட்ட வித்தகப் பெரும்புலவர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார். அவர் அன்றே இதற்கான சரியான விளக்கத்தைக் கொடுத்துள்ளார், ஆனால் இன்றும் அரைவேற்காடுகள் இவற்றை கொஞ்சமேனும் படிக்காமல் பிதற்றிக் கொண்டு இருப்பது வேதனை தரும் விசயமாகும். அவர்கள் கூறும் விளக்கத்தை இங்கு தருகிறேன். அதாவது
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது -
திருக்குறளில் கூறப்பட்ட அறவாழி அந்தணன் யார். அவர் எந்தக் கடவுள் என்று ஆராய்ந்துப் பார்த்தால் தெரியும். பரிமேலழகர் அறவாழி என்பதற்கு அறக்கடவுள் என்று கூறுகிறார். பின்னர் இன்னொரு பொருளையும் குறிக்கிறார். அதாவது அறவாழி எனபதனைச் சுருக்கி தருமசக்கரமாக்கி அதனை அந்தணன் என்று சொல்வாரும் உள்ளார் என்றும், ஆகவே அறவாழி என்பதை அறக் கடல் என்பதனை தரும் சக்கரம் உடைய அந்தணன் என்று, அதாவது மகா விஷ்ணு என பரிமேலழகர் கூறுகிறார். ஆனால் அறவாழி என்று அருகனும், புத்தனும் குறிக்கப்படுகிறார்கள் நூல்களில். அதனால் அறவாழி அந்தணன் என்பது தர்ம சாகர மஹாவீரர் என்பது தெளிவாகின்றது என வித்தகப் பெரும்புலவர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுவதாதவது அப்படி என்றால் திருமால் அறவாழி அந்தணனா ? நிச்சயம் இல்லை. காரணம் ஆழ்வார்கள் எல்லாரும் திருமாலை அறவாழி என்று எங்கும் குறிப்பிட்டதே இல்லை. காரணம் திருமால் காக்கும் தெய்வமாக இருக்கின்றார், அவர் அசுரர்களைக் கொலை செய்கிறார். கொலை செப்வன தண்மையான அந்தணன் ஆக முடியுமா? இல்லை. ஆழ்வார் பாசுரங்களில்
திருமாலை “அடலாழி ஏந்தி அசுரர் வன்குலம் வேர் மறுங்கறுத்தாய்” என்றும்,
“அமர்கொள் ஆழி” என்றும்
“காய்சின ஆழி” என்றும்
“கொலை ஆழி” என்றும்
“கூர் ஆழி” என்றும்
“கனலாழிப் படையுடையவன்” என்றும்
“பேராழி கொண்ட பிரான்” என்றும்,
“ஊன் திகழ் நேமி” என்றும்,
“ஈர்க்கின்ற சக்கரத் தெம்மான்” என்றும் திருமாலின் ஆழி(சக்கரம்) மறவாழி என்றே ஆழ்வார்கள் கூறியிருப்பதை அவர்கள் பாடல்களிலே நெடுகக் காணலாம். ஆகவே, அறவாழி அந்தணன் என்னும் பெயர் திருமாலுக்கும் பொருந்தாது.
ஆனால் மாறாக சமண தமிழ் நூல்களில் அருகனையே அறவாழி அந்தணன் என கூறப்படுவதைக் காணலாம்.
“ஆதியங் கடவுள் அறவாழி அந்தணன்
அரியணைச் செல்வன் அருளாழி வேந்தன்..” என்பது திவாகரம்.
“அருகன் எண்குணன் நிச்சிந்தன்
அறவாழி வேந்தன் வாமன்..” என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது.
“அறவாழி வேந்தன் அரியணைச் செல்வன்” என்று பிங்கல நிகண்டு பேசுகிறது.
**”மறங்கொள் நேமி விட்டெறிந்து மன்னர் சென்னி சோறியில்
பிறங்க வென்ற வென்றியோர் அனேகபேர்; உலகெல்லாம்
இறைஞ்ச எங்கள் வல்வினைத் தெவ்வர் சிந்த வெந்துபேர்
அறங்கள் நேமி கொண்டு வென்ற சோதி எங்கள் ஆதியே”
(திருக்கலம்பகம், 25)
**:–> இப்பாடலை கவனமாகப் படித்தால் நன்கு புரியும்.
“மகரவா ருதிவயத் துலக மேழும்
வந்திறைஞ்ச அருளாழி வலங்கொண்டு ஏந்துஞ்
சிகரமா மணிநீல வண்ண வெற்பைத்
தேராதார் தாந்தம்மைத் தேராதாரே” (திருக்கலம்பகம் 31)
“ஆரருள் பயந்தனை ஆழ்துயர் அவித்தனை
ஓரருள் அழியை உலகுடை ஒருவனை
ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை
சீரருள் மொழிய நிந்திருவடி தொழுதனம்” (சூளாமணி, 98)
அறவாழியை யுடைய அருகக்கடவுளைச் சீவகச்சாமி தலையுற வணங்கின செய்தியைச் சீவக சிந்தாமணி கூறும் செய்யுள் இது.
“நிலவிலகி உயிரோம்பி நிமிர்ந்தொளிர்ந்து பசிபகைநோய்
உலகமிருள் கெடவிழிக்கும் ஒண்மணி அறவாழி
அலகையிலாக் குணக்கடலை அகன்நான வரம்பனை
விலையிலா முடியான் விண்வியப்ப இறைஞ்சினான்” (முத்தியிலம்பகம், 425)
மற்றும், “தண்மதி போல் நேமி”, “மலமறுதிகிரி”, “அறவாழி வேந்தன்” என்று சீவக சிந்தாமணியில் அருகக் கடவுளின் அறவாழி கூறப்படுகிறது. மேலும், ” அருட்சக்கரம் ஏந்திய சங்கரன்” என்றும், “பொருளாக என்னை ஆண்டு கொண்டாய் அறவாழி கொண்டேவென்ற அந்தணனே” என்றும் திருனூற்றந்தாதி
முழங்குகின்றது.
**”அந்தரத் துருளும் நின் அலர்கதிர் அறவாழி
இந்திரனும் பணிந்தேத்த இருவிசும்பில் திகழ்ந்தன்றே” என்பதும்,
ஆகிய அனைத்து சமண சமய நூல்களிலும் அறவாழி அந்தணன் என்னும் சொல் அருகனை குறிப்பிடுவதாகவே இருக்கின்றது. இதை விட வேறு சான்றுகள் வேண்டுமா. ஆகவே பிராமணர்கள் வணங்கும் திருமாலையோ, அல்லது பிராமணரையோ அந்தணர் எனத் திருவள்ளுவர் கூறவில்லை. அன்றை காலத்தில் பிராமணர்கள் யாகங்களிலும், வேள்விகளிலும் மிருகங்களைக் கொன்று யாகம் நடத்தி உள்ளனர். ஆகவே பிராமணர்கள் அறத்தை காக்கும் அந்தணர் எனக் கூறுவாரா வள்ளுவர். அதுவும் இல்லை. பிற்காலத்தில் பிராமணர்கள் யாகங்களில் விலங்குகளை தீயிலிட்டு படையல் ஆக்கும் முறையை கைவிட்டுவிட்டனர், இதற்கு பிறகால் சமய எழுச்சியே காரணம். அந்த காலக்கட்டத்தில் எழுந்த பக்தி இலக்கியங்கள் பிராமணரைத் தமிழில் அந்தணர் என அழைக்க தொடங்கினர்.
இன்றும் கிராமங்களில் கிறித்தவ பாதிரிமார்களை அய்யர் என அழைக்கின்றனர். ஐயர் என்ற சொல் சங்க காலத்தில் ‘தலைவர்’ என்ற பொருளில் தான் பயின்று வந்தது. ஒரு காலத்தில் அய்யர் என்றால் வணக்கத்துக்குரியவர் என்ற பொருளில் அழைக்கப்பட்டு பின்னர் அது வைதீக சமயப் பெரியவர்களை அழைக்கும் பெயராகி பின்னர் பிராமணர் அனைவரையும் ஐய்யர்/ஐய்யங்காரர் என்று அழைக்கப்பட்டனர். இதே முறையை கிறித்தவ சமய பெரியவர்களையும் மக்கள் அய்யர் என அழைக்க காரணமாகியது. அதனால் அய்யர் என்றாலே அது பிராமணரைத் தான் குறிக்க வேண்டியது இல்லையே.
இந்தக் குறள் உட்பட திருக்குறளுக்கு கருத்துரை எழுதிய சுஜாதா அவர்களும் இதே கருத்தை முன்வைக்கிறார். அவர் கூறுவதை இங்கு உங்களுக்காக,
” தமிழில் பல சொற்கள் காலப்போக்கில் பொருள் மாறுகின்றன. ஐயர் என்ற சொல் சங்க காலத்தில் ‘தலைவர்’ என்ற பொருளில் தான் பயின்று வந்தது. இன்று அது கேலி வார்த்தையாகிவிட்டது.
‘அந்தணன்’ என்ற சொல்லும் அப்படி காலப்போக்கில் பொருள் மாறி வந்துள்ளது. திருக்குறள் ‘அறவாழி அந்தணன்’ என்று கடவுளைக் குறிக்கிறது. மற்றொரு குறளில், ‘அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலால்’ என்று எல்லா உயிர்களின் மேலும் அன்பு செலுத்துபவர்களை அந்தணர் என்றது.
– சுஜாதா (வாரம் ஒரு பாசுரம்)” [ படிக்க: திருக்குறள் புதிய உரை சுஜாதா]
அந்தணர் என்ற சொல்லுக்கு வள்ளுவரே இன்னொரு குறளில் விளக்கம் தருவதைப் படித்தால் இந்த குழப்பமே வராது.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
அதாவது அந்தணர் என்போர் அறம் செய்பவர்கள் தர்மம் செயபவர்கள், எந்த உயிர்க்கும் தீமை செய்யாமல் இருப்பவர் அனைவருமே அந்தணர் தான். பிராமணர்கள் மட்டுமில்லை, காந்தியும் ஒரு அந்தணர் தான், கிறிஸ்துவும் ஒரு அந்தணன் தான், ஏன் உயிர்களுக்கு துன்பம் தராமல் அமைதியாக வாழும் எந்த ஒரு மனிதரும் அந்தணர் தான் என்பது வள்ளுவரின் உன்னதமான கருத்து. இப்படியான கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் எழுதியது பெருமைப் படக் கூடிய விசயமாகும். சரி மற்றக் குறளையும் கூறி இந்தக் கட்டுரையை முடிக்கின்றேன்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543)
அதாவது அந்தணர் நூற்கும் அறத்திற்கும் என்று கூறுவதில் உள்ள நூல் எதைக் குறிக்கிறது. அதற்கு தொடர்புடைய இன்னொரு குறளை விளக்கினால் இதன் அர்த்தம் புலப்படும்.
பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – திருக்குறள் (322)
இக்குறளில் “நூலோர்” என்பது யாரைக் குறிக்கிறது எந்த குறளின் கருத்தையும் அறியும் முன் அக்குறள் எந்த அதிகாரத்தில்
கூறப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இக்குறள் கொல்லாமை என்னும் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொள்க. இது நிற்க.
“பரஸ்பரப்கிரகோ ஜீவானாம்” – என்பது ஆச்சாரியார் உமாசுவாமி அருளிய “தத்வார்த்த சூத்திரம்”. இப்பாட்டின் பொருள்: பகிர்ந்து உண்டு, எல்லா உயிர்களையும் காத்தலே உயிரின் நோக்கம். இதன் எதிரொலியே குறளின் “பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல்” என்பது.
இன்னுமொரு எ.கா:
”பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம்
நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்பது மகாவீரர் காலத்திற்கு பிறகு, ஜைன ஆகமங்கள் தொகுக்கப்பட்டன. இருசாரார்க்கும் (இல்லறத்தார், துறவறத்தார்), பொதுவாக “கொல்லாமையே” தலையாய அறமாகக் கொள்ளப்பட்டது. “ஒன்றாக நல்லது கொல்லாமை” என்ற குறள் இங்கு கருதத்தக்கது.
இக்குறளுக்கு பரிமேலழகர், “அறநூலை உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம்” என்று உரை செய்திருக்கிறார். இது பொருந்தாதாம்! இங்கு துறவறத்தார்க்கு சொல்லப்பட்டதாக பொருள் படும்படி, வலிந்து பொருள் கூறுகிறார். இஃது சமணக் கொள்கையை மறைக்கவெனில் வேறில்லை!
இப்போது மேலே சொன்ன அந்தணார் நூலுக்கான பொருள் புரிகிறதா, சமணப் பெரியார்கள் தொகுத்த நூலுக்கும், இல்லறத்தார் செய்யும் தரும காரியங்களுக்கும் பாதுக்காப்பாய் விளங்க வேண்டியது ஒரு மன்னவனின் கடமை தானே. திருக்குறளை வெறும் கண்ணால் கண்டு அதனை இந்து சமயம் பூசி மக்களிடம் அதன் செல்வாக்கை குறைக்க நினைக்கும் சில ஜந்துகளுக்கு பதில் கூறவே பலர் எழுதிய கருத்துக்களை அடங்கிய இந்த கட்டுரையைத் தீட்டினேன்.
திருக்குறள் என்பது சமண நூலானாலும், அது நம் நாட்டு முன்னோரால் எழுதப்பட்டது. இருந்தாலும் அது அனைத்து சமயத்துக்கும் பொருந்தக் கூடிய கருத்துடைய ஒரு நூலாகும். குறிப்பாக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க கூடியது. அதைப் பற்றி அவதூறுப் பரப்பி புகழைடைய விரும்புவர்கள், அப்புகழ் நீடிக்காது.
அது மட்டுமின்றி திருக்குறளை உலகெலாம் பரவ செய்தவர்கள் கிறித்தவ பெரியார்களான வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவேல் போன்ற அறிஞர்களாலயே அவர்கள் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு எழுதப்படும் இம்மாதிரியான விசமப் பேச்சுகளுக்கும் நாம் எமது கண்டனத்தைப் பதிவு செய்வோம். இதனைப் படிக்கும் வாசகர்கள் தெளிவுப் பெற்றிருப்பார்கள் என நம்புகிறேன்.
இக்கட்டுரையில் பிழைகளோ, அல்லது குறிப்பிடத்தக்க கருத்துக்கள் விடுப்பட்டு இருந்தால் தயங்காமல் உதாரணத்துடன் கூறுங்கள்.
நன்றி : அங்கிதா வர்மா
உசாத்துணை:
* பரிமேலழகர் உரை
* சுஜாதா: திருக்குறள் புதிய உரை
* தமிழ் இணையப் பல்கலைக் கழகம்: http://www.tamilvu.o...ml/c0213406.htm
* தமிழ் பேப்பர்: மனுக்குறள்? – 2
* மயிலை சீனி. வேங்கடசாமி: அறவாழி அந்தணன் கட்டுரை
* இன்றும் வாழும் தமிழ் சமணர்: http://www.tamiljains.org/


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஒருச் சொல் எந்த காலதிதில் பயன்படுத்தப்பட்டதோ, அந்த காலத்தின் பொருளை அதுவும் அந்த மக்கள் புரிந்துக்கொண்டபொருளைதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இல்லை என்றால் அது நவீன மதப்பிரச்சாரர்கள் செய்யும் வார்த்தை விளையாட்டு போல் ஒவ்வொரு விஷயமும் ஆகிவிடும். ஒவ்வொரு வார்த்தைகும், ஆச்சரியப்படும் வகையில் அர்த்தம் கற்பிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

உங்கள் பதிவு ஒரு தெளிவான விளக்கம். குறளை வைத்து ஒரு சமுகச் சூழலை அறியமுடியும் என்பதை காட்டிருக்கிறீர்கள்.

திருக்குறளைப் பற்றி ஒரு முழமையான ஆய்வு இருந்தால் கூறுங்கள்.

எனக்கு தெரிந்து எல்லா மதமும் பகுத்தறிவுடம் ஒரிறை கொள்கையை சொல்கின்றன...ஹா..ஹா... (வார்த்தை விளையாட்டு)....என் மதம் தான் அப்படி இருக்கின்றது அதனால் அது மேன்மையானது என்பது டூபாக்கூர்...



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வள்ளுவமும் வைணவமும்

[1950களில் ஒரு பள்ளியில் மாணவனின் அனுபவம்]

th_thiruvalluvarவேனிற்கால ஆண்டு விடுமுறை  முடிந்து மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன. குத்தாலம் போர்டு ஹைஸ்கூலும் வழக்கம்போல் திறந்தாகிவிட்டது. ஆழ்வார் திருநகரியில் இருந்து விடுமுறை  நாட்களைக் கழித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பவே  மனம் வராமல் வேறு வழியின்றித் திரும்பிவந்தேன். அடுத்த வகுப்புதான் என்றாலும் தமிழ் ஆசிரியர் மட்டும எங்களுக்கு மாறவேயில்லை. திரு. ஞானசம்பந்தம்  அவர்களே ஐந்தாம் பாரத்திலும் தமிழ் ஆசிரியராக வந்தார்.

தமிழ்ப் புத்தகத்தை  ஆவலாகப் பிரித்த எனக்கு என்னவோ ஏமாற்றம்தான். ஒரு சிலம்பை  வைத்துக்கொண்டு வாதாடும் பாடல்கள்.  எனக்குப் புளித்துப்போய்விட்டது. முதல் பாரத்திலிருந்து தொடர்ந்து இதே கதைதான் வந்துகொண்டிருக்கிறது. ‘வாயிலோயே! வாயிலோயே!’  எத்தனை  தரம் கதவைத் தட்டினாலும், எங்கள் நிர்க்கதியைக் கேட்க யாருமில்லை!

திருக்குறளும் அப்படித்தான். வள்ளுவர் உலகிற்கு என்ன செய்தி சொல்கிறார் என்பதைவிட, குறட்களை  மனப்பாடம் செய்து எழுதுவதே திறமையென நிர்ணயிக்கப்பட்டிருந்த காலம் அது. ‘பிற’ என்று முடியும் குறளை எழுதுக, அல்லது ‘உலகு’ என்று முடியும் குறளை  எழுதுக என்று எல்லா  வினாத்தாள்களிலும் ஒரே  மாதிரியான கேள்விகளே  கேட்கப்படும். மிகவும் அலுத்துப்போய்விட்டது. ஒருவழியாகத் தைரியத்தை  வரவழைத்துக் கொண்டு ஆசிரியரிடம் போய்க் கேட்டுவிட்டேன்.

“ஐயா, திருக்குறளை  வேறு விதமாக அணுகிப் பயில முடியாதா?  ஏன் எப்போதும் ஈற்றுச் சொல்லை  வைத்தே  மனனம் செய்து கொண்டிருக்கவேண்டும்?” புதிதாக ஒரு ஜந்துவைப் பார்த்ததுபோல் என் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். சரியாக மாட்டிக் கொண்டோம் என்று நினைத்தேன்; நல்லவேஎளை  ஆசிரியரின் கைகள் பிரம்பினைத் தேடவில்லை. ‘யார்?  நீந்தான் அந்த மாவடுப் பையனா? ராஜகோபாலையங்கார் ஆத்துப் பையன்தானே  நீ? ஐந்தாம் பாரம் படிக்கும் உனக்கு இது போதாதா? இது என்ன வேறு அணுகுமுறை? ஒருவேளை  நீ பசுபதியாரின் கவிதை  இயற்றிக் கலக்கு என்கிற விஷயமெல்லாம் படிக்கிறயா?”  நான் போட்டிருந்த  நாமத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே, ” சரி, ஒண்ணு பண்ணு. வள்ளுவரை  சைவரென்றும் சமணரென்றும் சொல்வாருண்டு. நீ  ஏன் அவருடைய படைப்பில் வைணவக் கருத்துக்களைக் கண்டு தொகுத்து வள்ளுவமும் வைணவமும் என்று  ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை  ஒன்று எழுதிண்டு வா,  பாக்கலாம்”  என்றார். எனக்கு திக் என்றது. இது ஏதுடா  வம்பாப் போச்சே!  வள்ளுவருக்கு நாயனார் என்று கூடப் பெயருண்டே?   பேசாமே  குறட்களை  நெட்டுரு பண்ணிண்டு இருந்திருக்கலாம் என்று தோன்றியது.  என்னை  நானே  நொந்துகொண்டு வீட்டிற்குத் திரும்பினேன்.

திருவள்ளுவரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஒருவேளை  அதற்கு உரை  எழுதியவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் என்று பார்க்கலாம் என்று தோன்றியது. முதலில் பரிமேலழகர் பெயர்தான் நினைவுக்கு வந்தது. இந்தப்பெயரை  நினைத்தவுடன் ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளை  வேண்டிக்கொண்டேன். நீங்கள்தான் காப்பாத்தணும் என்று.

vishnu-lakshmi2

திருக்குறள் ஒருபொது நூல். இது எந்த சமயத்தையும் சார்ந்தது இல்லை. மாலுடன் சம்பந்தப் படுத்தவேண்டுமென்றால், மாலைத்தான் கேட்கவேண்டும், சரி,அது என்ன மாலை? அதுதான் திருவள்ளுவமாலை.

மாலும் குறளாய் வந்தான். இரண்டடியால் உலகை அளந்தான். எனவே  மாலும் வள்ளுவமும் ஒன்றாய் இருக்குமோ?  இந்த சந்தேகம் முன்னர் பரணர் என்ற தமிழ்ப்புலவருக்கும் வந்ததாம். அதை  அவர்அப்படியே  ஒரு வெண்பாவாகப் பாடிவைத்துள்ளார்.

மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான்-வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவஎல் லாம்அளந்தார் ஓர்ந்து 


இதே  கருத்தைப்   பொன்முடியார் என்ற புலவரும்

கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்ப-நூன்முறையால்
வானின்று மண்நின்று அளந்ததே வள்ளுவனார்
தாம்நின்று அளந்த குறள்

என்று பாடியுள்ளார். சரி, இந்த இரண்டு பாடல்களையும்  வைத்துக்கொண்டு ஆசிரியரிடம் சென்றால், அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார். சொந்த சரக்கு என்ன என்று கேட்பார்! நான் யோசித்துக் கொண்டேயிருந்தேன். முதலில் திருவள்ளுவருக்கு ஒரு நல்ல பெயர் வேண்டும். வள்ளுவர் என்பது அவரது இயற்பெயரா? புத்தகத்தைத் தேடினேன்;  நாயனார், தேவர், நான்முகனார் என்பன பல.  இவையாவும் எனது கட்டுரைக்கு ஏற்றதல்லவே!  என் செய்வது?

இப்படி நினைத்துக்  கொண்டிருக்கும்போதுதான்,  என் தம்பி முகுந்தமாலையை  உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தான்.” ஸ்ரீ  வல்லபேதி,வரதேதி,   தயாபரேதி . . “  அட. இது என்ன விசித்திரமாக இருக்கிறதே! ஸ்ரீவல்லபா (லட்சுமிக்குப் பிரியமானவனே) என்பதைத் தமிழ்ப்படுத்தினால் திருவல்லபா  அல்லது திருவள்ளுவா என்று திரிபுடன் சொல்லிவிடலாமே  என்று தோன்றியது. முதல் கட்டம் வெற்றி!  திருவள்ளுவரைத் திருமாலுடன் இணைத்தாகி விட்டது.  இனி அடுத்த கட்டம்.

முதல் குறளிலேயே  வெற்றி. அகர முதல எழுத்தெல்லாம்- ஆஹா  இது அப்படியே  கீதா வாக்கியம் – அக்ஷராணாம் அகாரோஸ்மி.  எழுத்துக்களில் நான் அகாரமாய் இருக்கிறேன்.
எனவே  வள்ளுவர் குறிப்பிடும் கடவுள் திருமால்தான்.

அடுத்த குறளிலே  வாலறிவன் என்கிறார். வாலறிவன் என்பதற்கு வடமொழியில் ‘சர்வக்ஞ:’ அல்லதுமுற்றுமுணர்ந்தவன் என்று பொருள் கொள்ளலாம். ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வருகின்ற ஒரு நாமம்.

vamana2

அடுத்து ஆறாம் குறளில் ‘ஐந்தவித்தான்’  என்று குறிப்பிடுமிடத்தே,  ஐம்புலன்களை  வென்றவன் அதாவது ஹ்ருஷீகேசன் என்ற திருநாமம் பொருந்துகிறது. இதுவும்திருமாலின் ஒரு திவ்யநாமம்.  ஹ்ருஷீகம் என்றால் இந்திரியங்கள். அவற்றுக்கு ஈசனாய் இருப்பவன் ஹ்ருஷீகேசன்.

ஏழாவது குறளிலே  தனக்கு உவமை  இல்லாதான் என்கிறார். அதாவது ஒப்பில்லாதவன்;  ஒப்பிலியப்பன். தன்னொப்பாரிலப்பன் (திருவாய்மொழி 6-3-9));  ஒப்பார்  மிக்காரை  இலையாய  மாமாயன் (திருவாய்மொழி 2-3-2); வடமொழியில் அதுல:  என்ற திருநாமத்திற்கு உரியவன்.

ஒன்பதாவது குறள். எண்குணத்தான் என்கிற தலைவன் யார்? வடமொழியில் குணப்ருத் என்கிற நாமத்திற்கு உரை  சொல்லிமிடத்தே எல்லாப் பொருள்களையும் தனது குணம் போல தரிப்பவன். இதுவும் சஹஸ்ரநாமத்தில் வருகின்ற திருநாமம்.

ஆமாம். இப்படியே  எல்லா காட்டுகளும் கடவுள் வாழ்த்து என்கிற அதிகாரத்திலிருந்து எடுத்துச் சொன்னால், தமிழ் ஆசிரியர் ஏற்றுக் கொள்வாரா?  நிச்சயம் இல்லை. சோம்பல் பார்க்காமல் எல்லா  அதிகாரங்களையும் படிக்க வேண்டும்,  சோம்பலை  வெறுக்கும் அதிகாரம் மடியின்மை. இங்கே போய் தேடினால்,  குறள்எண்610 பளிச்சென்று என்னைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறது.

மடியிலா  மன்னவன் எய்தும்; அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

இங்கே  அடியளந்தான் என்ற பதத்தால் திருமாலை  நேராகவே  குறிப்பிட்டு விடுகிறார் வள்ளுவர். திருவிக்கிரமன் என்பதும் திருமாலின் திவ்யநாமம்,

ஆஹா! நல்ல மேற்கோள்கள் கிடைத்தனவே. எனக்கு நிலை  கொள்ளவில்லை. பட்டென்று ஒரு சிந்தனை. உடனே  நிலையாமை என்கிற அதிகாரத்தைப் புரட்டினேன்.

vamana

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு. 
( குறள் எண் : 338 )

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
 (குறள் எண்: 339)

இறப்பு துக்கத்தையும், பிறப்பு தூங்கி விழிப்பதையும் போன்றவை.

இதைப் படித்தவுடன் பகவத் கீதையில் கண்ணன் சொல்வது இந்தக் குறட்களுக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா  விஹாய
. . நவானி க்ருஹ்ணாதி நரோபராணி
ததா  சரீராணி விஹாய ஜீர்ணானி
. . அன்யானி ஸன்யாதி நவானி தேஹி 
(2-22)

கடைசியாக,, குறள் எண்1103 புணர்ச்சி மகிழ்தல் எனப்படும் அதிகாரம்.

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்?
தாமரைக் கண்ணான் உலகு

தாம் காதலிக்கும் மாதரின் தோள்களைத்  தழுவிக்கொண்டு உறங்குவது போன்ற இன்பம் வைகுந்ததிலும் இல்லை என்று திருமால் வசிக்கும் வைகுந்தத்தைக் குறிப்பிடுகிறார்.  தாமரைக்கண்ணனாகிய அரவிந்தாக்ஷன், புண்டரீகாக்ஷன் என்பன ஸஹஸ்ரநாமத்தில் வரும் திருநாமங்கள்.

இந்த எடுத்துக் காட்டுகளை  வரிசைப் படுத்தி அதற்கு விளக்கமும் எழுதி, ஆசிரியரிடம் காண்பித்தேன்.  திருவள்ளுவருக்கு வழிபடு கடவுளும் குறளுக்கு ஏற்புடைக்கடவுளும் திருமால் என்பது பேரறிஞர் கண்ட பேருண்மை என்று அறுதியிட்டு முடித்திருந்தேன். படித்துப் பார்த்துவிட்டு, ‘கருத்தும் நடையும் மிக நன்று. அறவாழி அந்தணன் என்று வருவதைக் கொண்டு சமணர் என்பாருண்டு’. நீ  என்ன சொல்கிறாய்?  என்றார். ‘ஐயா!,  நம்மாழ்வார் திருவாய்மொழியில் திருமாலை,’அறவனை ஆழிப்படை அந்தணனை’ என்றுதானே சுட்டுகிறார். எனவே, இப்படிப்பார்த்தாலும், திருமாலைத்தான் குறிக்கிறது’.

பிறவித் துயரற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர்விளக் கம்தலைப் பெய்வார்
அறவனை யாழிப் படையந் தணனை
மறவியை யின்றி மனத்துவைப் பாரே

‘ஆங்!  அப்படியா?  இலக்குமியைப் பற்றிப் பல இடங்களிலே  சொல்கிறாரே, ஏன் எழுதவில்லை?;  போய் நாளைக்கு எழுதிண்டு வா!’ என்றார்.

****************

எங்கள் தமிழ் ஆசிரியர் பணித்திருந்த வண்ணம் திருக்குறளில் இலக்குமியைப் பற்றிக் குறிப்பிடும் கருத்துகளைத் தொகுக்கமுயன்றேன். ஸ்ரீ, பூ, நீளா  தேவி ஸமேத விஷ்ணுவான படியாலே, தேடுதல் இம்மூவரையும் பற்றியதாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

பூமாதேவியின் முக்கிய குணம் பொறுமை  அல்லவா? முதலில் இந்தக்குணம் தேவை. க்ஷமயா ப்ருதிவீ ஸம: என்று இராமனின் குணவிஷே சத்தை  வால்மீகி எடுத்துச் சொல்வதுபோல், பொறையுடைமை  அதிகாரத்தில், ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ என்று முதல் குறளில் தொடங்குகிறார். பின்னர் அடுத்துவரும் அழுக்காறாமையில், பொறாமையுள்ளவனைத் திருமகள் நீங்கிவிடுவாள் என்றும் நிலை  நாட்டுகிறார். இதுமட்டுமன்று. மூதேவி வந்து சேர்வாள் என்றும் எச்சரிக்கையும் விடுக்கிறார்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

இவ்வாறு நீங்கிய திருமகள் எங்கே குடியிருப்பாள் என்ற வினா  தொடர்ந்து வருவது நியாயந்தானே! அதற்கும் விடை தருகிறார்  ஸ்ரீ வல்லபர்.

vishnu-lakshmi

தருமம் இது என்று உணர்ந்து, பிறர்பொருளை  விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் அவர் தகுதியை  அறிந்து அவரிடம் சேர்வாள்.

அறனறிந்து வெஃகா  அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே  திரு


முயற்சி திருவினை  ஆக்குமே!  மேலும் தேடிப்பார்க்கலாம் என்று புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். முயற்சி இன்றிச் சோம்பி இருப்பாரையும் விட்டு விலகிவிடுவாள் இலக்குமி. மூதேவி குடிகொள்ளுவாள்.

மடியுளான் மாமுகடி என்ப, மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

அடுத்து நீளாதேவியைப் பற்றி எங்கே  குறிப்பிடுகிறார்? “குழல் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல்வனர்” ( திருவிருத்தம் – 3 ) என்கிறார் நம்மாழ்வார். நீளாதேவியான நப்பின்னை மற்ற இருவரோடு (திருமகள் , மண் மகள்)  இணைந்து,  இம்மூவரும், திருமாலின் நிழல் போல்வனர் என்பதால் இம்மூவருமே  ஒருவர்தான் என்றும் காட்டுகிறது. நிழல் ஒன்று தான் இருக்க முடியும். அந்த நிழலை மூன்று பெயர்களில், மூன்று குணங்களில் மூன்று தேவியராகப் பார்க்கிறோம் என்றும்  தெரிகிறது. இதனால்தானோ நீளாதேவியைப் பற்றிய செய்தி திருக்குறளில் இல்லாமல், நிழலாகத் திருவள்ளுவமாலையில் கிடைக்கிறது?

நீளாதேவியைப் பற்றி வள்ளுவத்தில் ஏதானும் கிடைக்காதா  என்று ஏங்கிக்கொண்டிருக்கையில், திருவள்ளுவமாலையில் ஒருபாடல் கிடைத்தது. இந்தத் தொகுப்பில் பல்வேறு காலக்கட்டத்தில், பல்வேறு புலவர்கள் திருவள்ளுவரைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களுள் ‘நல்கூர் வேள்வியார்’ என்னும் புலவர் கூறியுள்ள செய்தியில், நப்பின்னையின் இயற்பெயர் இடம் பெற்றுள்ளது.

உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப – இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு.

இதன் பொருள், ” உப்பக்கம் நோக்கி, அதாவது எருத்தின் முதுகு நோக்கி (உப்பக்கம் – முதுகு), உபகேசியை மணந்தவன் வட மதுரைக்கு ஆதாரம் போன்றவன். (கண்ணன்.) அதுபோல மாதானுபங்கி எனப்படுகின்ற குற்றமற்ற செந்நாப் போதார் எனப்படும் திருவள்ளுவர் தென் மதுரைக்கு ஆதாரமானவர்.”

வள்ளுவர் திருமாலையும், இலக்குமியையும் குறிப்பிட்டுச் சொல்வதால், கவிசாகரப் பெருந்தேவனார், திருக்குறளை மிக உயர்வாகப் பின்வருமாறு ஒப்பிடுகிறார்.

பூவில் சிறந்தது தாமரை; பொன்னில் சிறந்தது சாம்புனதம்;  பசுவில் சிறந்தது காமதேனு; ஆனையில் சிறந்தது ஐராவதம்; தேவர்களில் திருமால்; பாடல்களிலே  வள்ளுவரின் குறள் என்று முடிக்கிறார்.

பூவிற்குத் தாமரையே; பொன்னுக்குச் சாம்புனதம்
ஆவிற்கு அருமுனியா. ஆனைக்கு அமரரும்பல்
தேவில் திருமால், எனச்சிறந் தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா

காரிக்கண்ணனார் என்பார், வள்ளுவரை நான்முகனுக்குச் சமமாகச் சொல்கிறார். திருமாலையும், இலக்குமியையும் அருகிருந்து அறிந்தார் கொப்பூழ் எழுகமலத்தே  அமர்ந்த நான்முகனைத் தவிர வேறு யார் உளர்?

ஐயாறும்,  நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப்-பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தா  மரைமேல் அயன்

இந்தக் கட்டுரையைப் படித்த ஆசிரியருக்கு மிக்க மகிழ்ச்சி. மேல்முகட்டைப் பார்த்தவாறு, மோவாயைத் தடவி விட்டுக்கொண்டார். எனக்கு ஒரே உதறல். இன்னும் என்னவெல்லாம் எழுதச் சொல்வாரோ?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை 

1. அசரீரி

திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு
உருத்தகு நற்பலகை ஒக்க - இருக்க
உருத்திர சன்மர் எனஉரைத்து வானில்
ஒருக்கஓ என்றதுஓர் சொல்

2. நாமகள்

நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் - கூடாரை
எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு

3. இறையனார்

என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் - குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்

4. உக்கிரப் பெருவழுதியார்

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூல்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி

5. கபிலர்

தினையளவு போதாச் சிறுபுல் நீர்கண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி

6. பரணர்

மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான் - வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து

7. நக்கீரர்

தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோர்க்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என்ஆற்றும் மற்று

8. மாமூலனார்

அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின்
திறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார்

9. கல்லாடர்

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி

10. சீத்தலைச் சாத்தனார்

மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்

11. மருத்துவன் தாமோதரனார்

சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன்அளாய்
மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் - காந்தி
மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர் முப்பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு

12. நாகன் தேவனார்

தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை
வேளாது ஒழிதல் வியப்பன்று - வாளாதாம்
அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்'
முப்பால் மொழிமூழ்கு வார்

13. அரிசில்கிழார்

பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறும் சேரச் - சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால்

14. பொன்முடியார்

கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்ப - நூல்முறையான்
வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்
தாம்நின்று அளந்த குறள்

15. கோதமனார்

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று

16. நத்தத்தனார்

ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்
வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்

17. முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
தெள்ளுதல் அன்றே செயற்பால - வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்
எப்பா வலரினும் இல்

18. ஆசிரியர் நல்லந்துவனார்

சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள் எல்லாம் - தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினும் இல்

19. கீரந்தையார்

தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால்
முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் - எப்பாலும்
வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத்
தெய்வத் திருவள் ளுவர்

20. சிறுமேதாவியார்

வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் - கூடுபொருள்
எள்ளில் எழுபது இருபதிற்றைந் தின்பம்
வள்ளுவர் சொன்ன வகை

21. நல்கூர் வேள்வியார்

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்ப - இப்பக்கம்
மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கு அச்சு

22. தொடித்தலை விழுத்தண்டினார்

அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்
திறம்மூன்று எனப்பகுதி செய்து - பெறல்அறிய
நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலும் ஒழிந்த பொருள்

23. வெள்ளி வீதியார்

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே - செய்யா
அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்

24. மாங்குடி மருதனார்

ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்
உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு

25. எறிச்சலூர் மலாடனார்

பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே
தூய துறவறம்ஒன் றுஊழாக - ஆய
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து

26. போத்தியார்

அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து
உருவல் அரண்இரண்டு ஒன்றுஒண்கூழ் - இருவியல்
திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை

27. மோசிகீரனார்

ஆண்பால் ஏழ்ஆ றிரண்டுபெண்பால் அடுத்தன்பு
பூண்பால் இருபால்ஓர் ஆறாக - மாண்பாய
காமத்தின் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு

28. காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தாமரை மேல் அயன்

29. மதுரைத் தமிழ்நாகனார்

எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால்
பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்
சுரந்தபா வையத் துணை

30. பாரதம் பாடிய பெருந்தேவனார்

எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் - முப்பாற்குப்
பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்

31. உருத்திர சன்மகண்ணர்

மணற்கிளைக்க நீர்ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து
உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் - பிணக்குஇலா
வாய்மொழி வள்ளுவர் முப்பால்மதிப் புலவோர்க்கு
ஆய்தொறும் ஊறும் அறிவு

32. பெருஞ்சித்திரனார்

ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால்
ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்
தாதுஅவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன

33. நரிவெரூஉத் தலையார்

இன்பம் பொருள்அறம் வீடுஎன்னும் இந்நான்கும்
முன்பு அறியச்சொன்ன முதுமொழிநூல் - மன்பதைகட்கு
உள்ள அரிதென்று அவைவள் ளுவர்உலகம்
கொள்ள மொழிந்தார் குறள்

34. மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்

புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்
சிலவர் புலவர் எனச்செப்பல் - நிலவு
பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்குஇருள் மாலைக்கும் பெயர்

35. மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்

இன்பமும் துன்பமும் என்னும் இவைஇரண்டும்
மன்பதைக்கு எல்லாம் மனம்மகிழ - அன்பொழியாது
உள்ளி உணர உரைத்தாரே ஓதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து

36. கவிசாகரப் பெருந்தேவனார்

பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம்
ஆவிற்கு அருமுனியா ஆனைக்கு அகரும்பல்
தேவில் திருமால் எனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா

37. மதுரைப்பெருமருதனார்

அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது இன்பத்
திறம்இருபத் தைந்தால் தெளிய - முறைமையால்
வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதஅழக் கற்றது உலகு

38. கோவூர்க் கிழார்

அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்
திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே
முன்னை முதுவோர் மொழி

39. உறையூர் முதுகூற்றனார்

தேவிற் சிறந்ததிரு வள்ளுவர் குறள்வெண்
பாவிற் சிறந்திடும்முப் பால்பகரார் - நாவிற்கு
உயலில்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும்
செயலில்லை என்னும் திரு

40. இழிகண் பெருங்கண்ணனார்

இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும்
செம்மை நெறியின் தெளிவுபெற - மும்மையின்
வீடவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடினர் இன்குறள்வெண் பா

41. செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்

ஆவனவும் ஆகாதனவும் அறிவுடையார்
யாவரும் வல்லார் எடுத்தியம்பத் - தேவர்
திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார்
பொருவில் ஒழுக்கம் பூண்டார்

42. செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்

வேதப்பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் - ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு

43. வண்ணக்கஞ் சாத்தனார்

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
சீரியது என்றொன்றைச் செப்பரிதால் - ஆரியம்
வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
ஓதுகுறட் பாஉடைத் து

44. களத்தூர்க் கிழார்

ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
தர்மம் முதல்நான்கும் சாலும் - அருமறைகள்
ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்

45. நச்சுமனார்

எழுத்துஅசை சீரடி சொற்பொருள் யாப்பு
வழுக்கில் வனப்பு அணிவண்ணம் - இழுக்கின்றி
என்றெவர் செய்தன எல்லாம் இயம்பின
இன்றிவர் இன்குறள்வெண் பா

46. அக்காரக்கனி நச்சுமனார்

கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின்
நிலைநிரம்பும் நீர்மைய தேனும் - தொலைவுஇலா
வான்ஊர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்
பால்நூல் நயத்தின் பயன்

47. நப்பாலத்தனார்

அறம்தகளி ஆன்ற பொருள்திரி இன்பு
சிறந்தநெய் செஞ்சொல் தீதண்டு - குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு

48. குலபதி நயனார்

உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துஉள்ள
தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால் - வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும்எனக்
கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு

49. தேனிக்குடிக் கீரனார்

பொய்ப்பால பொய்யேயாய்ப் போயின பொய்அல்லா
மெயப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து

50. கொடிஞாழல் மாணிபூதனார்

அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
திறன்தெரிந்தேம் வீடு தெளிந்தேம் - மறன்எறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால்
கேளா தனவெல்லாம் கேட்டு

51. கவுணியனார்

சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய
நன்நெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய இன்குறள்வெண் பா

52. மதுரைப் பாலாசிரியனார்

வெள்ளி வியாழம் விளங்குஇரவி வெண்திங்கள்
பொள்என நீக்கும் புறஇருளை - தெள்ளிய
வள்ளுவர் இன்குறள் வெண்பா அகிலத்தோர்
உள்இருள் நீக்கும் ஒளி

53. ஆலங்குடி வங்கனார்

வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் - தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்
வண்தமிழின் முப்பால் மகிழ்ந்து

54. இடைக்காடர்

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்

55. அவ்வையார்

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 திருக்குறளும் திருஞானசம்பந்தர் தேவாரமும்-
திருமதி. கோமதி சூரியமூர்த்தி திருமதி. கோமதி சூரியமூர்த்தி


தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் உலகம் போற்றும் ஒப்பற்ற பொதுமறையாகும். திருஞானசம்பந்தரின் தேவாரம் சைவ உலகம் போற்றும் திருமறையாகும்.


திருக்குறளின் காலம் பற்றிச் சங்க இலக்கியங்கட்கு முன்னர்த் தோன்றியது என்றும், பின்னர்த் தோன்றியது என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. திருஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு. அவருடைய பாடல்கள் சைவத்திருமுறைகளுள் முதல்முன்று திருமுறையாகத் தொகுககப்பட்டது கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் ஆகும்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலியோர் அருளிச் செய்த பாடல்களைத் தேவாரம் என்ற பொதுப்பெயரால் அழைப்பர். இவர்களுடைய நூல்கள் மூவர் தமிழ் எனப் போற்றப்படுகின்றது. திருக்குறளும் மூவர்தமிழும் ஒத்த பொருளுடையன என ஒளவையார் தம் நீதிநூலில் கூறியுள்ளார்.


‘தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்”
என்பது ஒளவையார் வாக்கு. இவ்விரு நூல்கட்குமுள்ள ஒப்புமைப் பகுதிகள் பலவேறு நோக்கில் இவ் ஆய்வுக் கட்டுரையில் ஆராய்ந்து கூறப்படுகின்றன.


வேதம்
‘செய்யாமொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே” திருவள்ளுவமாலை, செய்யுள், 23)
என்று வெள்ளிவீதியார் கூறுகின்றார். இங்குச் ‘ செய்யாமொழி என்றது வேதத்தைக் குறிக்கும். வேதமும், திருக்குறளும் பொருளால் ஒன்றே என உணர்த்தப்படுவதால், ஆன்றோர்கள் திருக்குறளை ‘உத்தரவேதம்” என அழைக்கலாயினர். பின்தோன்றிய வேதம் எனப் பொருள் ( உத்தரம் – பின்).


சேக்கிழார் பெருமான் திருஞானசம்பந்தரை ‘வேதம் தமிழால் விரித்தார்” (திருஞானசம்பந்தர், செ. 289) எனப் போற்றுகிறார். எனவே திருஞானசம்பந்தர் தேவாரமும் ‘தமிழ்வேதம்” எனப் போற்றப்படும் சிறப்புடையது என்பது புலனாகும்.
எழுதுமறை எழுதுமறை வேதம் ஏட்டில் எழுதப்படாது வாய்மொழியாகவே ஒதப்பட்டு வந்த காரணத்தினால் அதனை ‘எழுதாக்கிளவி” என அழைப்பார். திருக்குறளைக் கோதமனார் என்னும் புலவர்,


‘ஆற்றல் அழியும் என்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்து எழுதார் – ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாரைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று”
(திருவள்ளுவமாலை, செ. 15)
என்று கூறுவதால் திருக்குறள் எழுதுமறை எனப் போற்றப் படுகின்றது.


சேக்;கிழாரும் திருஞானசம்பந்தரை, ‘வண்டமிழால் எழுதுமறை மொழிந்த பிரான்” (திருஞா. புராணம், செ. 260) என்று போற்றவதால் திருஞானசம்பந்தர் தேவாரமும் எழுதுமறை என ஆன்றோர்களால் போற்றப்பட்டு வருகின்றது.


சம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்கள் சம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்கள்::::அகரமுதல அகரமுதல அகரமுதல:::: திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்களாகப் பல இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.
முன்னோர் கூறிய பொருளை அவர்தம் சொல்லாமல் எடுத்துக் கூறுதலே மேற்கோள் எனப்படும்.
திருவள்ளுவர் இறைவனை அகர எழுத்துக்கு ஓப்பிட்டு,
‘அகர முதல எழுத்தெல்லாமல் ஆதி
பகவன் முதற்றே உலகு” (கடவுள் வாழ்த்து, 1)
என்று கூறுகிறார். திருஞானசம்பந்தர்,
‘அகரமுதலானை அணி ஆப்பனூரானை” (1:88:5) என்று கூறுகின்றார்.


எண்ணும் எழுத்தும் கண் எண்ணும் எழுத்தும் கண்
‘எண் என்ப ஏனை ஏழுத்தென்ப இவ்இரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு” (குறள், 392)
என்கின்றார் வள்ளுவர். திருஞானசம்பந்தரும்,
‘எண்ணும் ஒரெழுத்தும் இசையின் கிளவி தேர்வார்
கண்ணும் முதலாய கடவுள்” (2:170:4)
என்கின்றார்…. ஈத்துவக்கும் இன்பம ஈத்துவக்கும் இன்பம::::; அருளாளர்கள் தம் செல்வத்தை வறியவர்கட்குக் கொடுத்து, அதனால் 
அவர்கள் அனுபவிக்கும் இன்பத்தினைக் கண்டு தாமும் மகிழ்வர். இவ்வாறு ஈவதால் எய்தும் இன்பத்தினை ‘ஈத்துவக்கும் இன்பம்” என்பர்.


தமது செல்வத்தைச் சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து போகின்ற கொடியவர், வறியவர்க்குக் கொடுத்து அவர்கள் மகிழ்வதால் தமக்கு உண்டாகும் இன்பத்தை அறிய மாட்டார்கள்.
‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன் கணவர்” (குறள், 228) என்கின்றார் வள்ளுவர்.
ஈத்துவக்கும் இன்பத்தைத் திருஞானசம்பந்தர்
‘ இன்மையால் சென்றிரந்தார்க்கு இல்லை என்னாது ஈத்துவக்கும்
தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே” (2:178:9)
என்று ஆக்கூர் அருளாளர்களின் ஈகைச் சிறப்பைப் போற்றும்போது குறிப்பிடுகின்றார்.
சலத்தால் பொருள் செய்யாமை: சலத்தால் பொருள் செய்யாமை: குற்றமற்ற தம்குலத்து மரபோடு ஒத்து வாழக் கருதுபவர்கள் வறுமை வந்துற்றபோதும், தம் குலத்துக்குப் பொருந்தாத தொழில்களைச் செய்யார். இதனை வள்ளுவர்,
‘சலம் பற்றி சார்பில் செய்யார் மாசற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பார்” (குறள், 956)
என்கின்றார். தீயவழியில் பொருள் ஈட்டக்கூடாது என்பதை ஒமாம்ப+ர் சான்றோர் செயலால்,
‘ சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையால் மிக்க உலப்பில் பல்புகழார் ஓமாம்புவிய+ர்” (3:380:5)
என ஞானசம்பந்தர் அறிவுறுத்துகின்றார்.
சொல்லாட்சிகள் சொல்லாட்சிகள்: : : திருக்குறளில் காணப்படும் சொல்லாட்சிகள் சில, எப்பொருளில் திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளனவோ அப்பொருளிலேயே அச்சொற்கள் திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் பயிலப்பட்டுள்ளன. ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் இக்கட்டுரையில் காட்டப்படுகின்றன.
ஈரம் ஈரம் —- அன்பு அன்பு அன்பு:::: அன்போடு கலந்து வஞ்சனை இல்லாது அறத்தை உணர்ந்தாரது வாயினின்று வரும் சொற்களே இன்சொற்கள் எனப்படும்.
‘இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்
சொற்பொருள் கண்டார் வாய்ச்சொல்” (குறள். 91)
என்கிறார் வள்ளுவர். இங்கு ‘ஈரம்” என்பது அன்பு எனப் பொருள்படும்.
‘ஈரம் ஏதும் இலனாகி எழுந்த இராவணன் (2:141:8)
என்ற திருஞானசம்பந்தர் பாடலடியில் ‘ஈரம்” என்ற சொல் அன்பு என்ற பொருளில் பயிலப்பட்டுள்ளதைக் காண்க.
படிறு படிறு —- பொய் பொய் பொய்::::கள்ள மனமுடையானின் பொய் ஒழுக்கத்தைப் பிறர் அறியவில்லை என்றாலும். அவனது உடம்பில் கலந்துள்ள ஐந்து ப+தங்களும் கண்டு தம்முள்ளே ஏளனமாகச் சிரிக்கும்.
‘வஞ்சமனத்தான் படிற்று ஒழுக்கம் ப+தங்கள்
ஐந்தும் அகத்தே நகும்” (குறள்.271)
படிற்று ஒழுக்கம் என்பதில் ‘படிறு” என்றது பொய் எனப் பொருள்படும்.
படைக்கலங்களை ஏந்திய எட்டுத் திருக்கரங்களை உடைய பெருமான் பொய்யாகப் பலியேற்பதுபோலப் பிரமக பாலத்தைக் கையில் ஏந்தி வீடுகளின் வாயில்களில் சென்று பலியேற்றுண்ணும் கள்வன் என்ற பொருளில்.
‘படையிலங்கு கரம் எட்டுடையான் படிறாகக் கலனேந்திக்
கடையிலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன்” (1:3:2)
என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உலகமெல்லாவற்றையும் தமக்கு உடைமையாகக் கொண்ட இறைவன் பலி கொண்டு உண்டான் என்பது பொருந்தாது ஆதலின் அஃது அவருக்கு விளையாட்டு@ உண்மையன்று என்பது பொருள். இங்குப் ‘படிறு” என்றது பொய் எனப்பொருள்படும்.
உடுக்கை – ஆடை ஆடை:::: ‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள். 788)
என்ற குறளில் உடுக்கை என்பது ஆடையைக் குறிக்கும்.
உணவை உண்டு ஆடையைக் கைவிட்ட சமணர்களை. ‘உண்டு உடுக்கை விட்டார்கள்”
(3:295:9) என்று சம்பந்தர் குறிப்பிடுவதில் உடுக்கை என்பது ஆடை எனப்பொருள்படுதல் காண்க.
வெறி நாற்றம் வெறி நாற்றம் —- நறுமணம் நறுமணம் நறுமணம்
‘முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல் உண்கண் வேய்த்தோள் அவட்கு” ( குறள் 1113) மூங்கில் போலும் தோள்களை உடையளுக்கு உடல்நிறம். தளிர் நிறமாகும். பற்கள்
முத்தாகும். இயல்பான மணம் நறுமணமாய் இருக்கும். மையுண்ட கண்கள் வேற்படையாகும்
என்பது பொருள். இக்குறளில் ‘வெறிநாற்றம்” என்றது மணம் நறுமணத்தைக் குறித்தது.
‘வெறியார் மலர்த் தாமரையான்” (1:39:9)
‘நாற்றமலர் மிசை நான்முகன்” (1:116:9)
என்ற திருஞானசம்பந்தர் பாடலடிகளில் ‘வெறி, நாற்றம்” என்பன நறுமணம்
எனப்பொருள்படுதல் காண்க.
திருக்குறள் கருத்துகள் பொதிந்துள்ளமை திருக்குறள் கருத்துகள் பொதிந்துள்ளமை:::: ‘கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார்” (குறள்,
356) என்பதில் கற்று – என்றது மெய்நூல்களைக் கற்றலைக் குறிக்கும். கற்று என்பதற்கு அனுபவமுடைய தேசிகர்பால் கேட்டு என்று பரிமேலழகர் உரை கூறுவார்.
மெய்ந்நூல்களைக் கற்றும், கேட்டும், மெய்யுணர்வு பெற்றவர்களே பெரியார் என்பதைத் திருஞானசம்பந்தரும்,
‘கற்றல் கேட்டல் உடையார் பொரியார்” (1:1:1)
என்று கூறுகின்றார்.
கற்றலின் பயன் கற்றலின் பயன்:::: கற்றலின் பயன் கடவுளின் திருவடிகளை வழிபடுதலாகும்.
‘கற்றதனால் ஆய பயன்என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்” (கடவுள் வாழ்த்து,2)
என்ற கருத்தும்,
‘கற்றவர் தாம் தொழுதேத்த நின்றான்” (1:5:9)
‘கற்று முற்றினார் தொழும் கழுமலம்” (2:234:11)
என்ற திருஞானசம்பந்தர் தேவாரப் பாடலடியில் ‘பொய்யகத்து ஐயுணர்வு எய்தி” என்றது
பொய்ப் பொருட்கள் மீது நிலையில்லாத உலகப் பொருட்கள் மீது செல்லும் அவாவை அடக்கி எனப் பொருள். ‘மெய்தேறினார்” என்றது சிவனே பரம் பொருள் எனத்தெளியும்
மெய்யுணர்வை உணர்த்திற்று.
வேளாளர்கள் தாளாளர்கள் வேளாளர்கள் தாளாளர்கள்
‘தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு” (குறள், 613)
என்ற குறளும்,
‘வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர்” (2:178:3)
என்ற திருஞானசம்ந்தர் பாடலடியும் ஒப்பிட்டுக் காண இன்பம் உண்டாகும்.
அறக்கருத்துக்களில் ஒப்புமை அறக்கருத்துக்களில் ஒப்புமை::::திருக்குறள் அறநூல் என்பது உலகோர் அறிந்த உண்மை.
திருஞான சம்பந்தர் தேவாரம் பக்தி உணர்ச்சியை எழுப்பி இறைவனைப் போற்றும் தேத்திர நூலாகும். இப்பக்தி நூலிலும் திருக்குறளுக்கு ஒப்பான அறக்கருத்துக்கள் பல இடங்களில் ஊடுருவிச் செல்கின்றன.
புறங்கூறாமை புறங்கூறாமை:::: ஒருவன் அறத்தை போற்றாது தீய செயல்களைச் செய்தொழுகுபனானாலும்@ அவன் புறங்;கூறாதவன் என்று மற்றவர் சொல்லும்படி நடத்தல் நல்லது என்கின்றார் வள்ளுவர்
(குறள், 181). ஒருவன் பிறரால் பெருமதிப்புப் பெற வேண்டுமானால் மற்றவர்களின்
நற்செயலகளையே பிறரறியச் சொல்ல வேண்டும். அவர்களின் சிறுமையைப் பிறரிடம் சொல்லாது காக்க வேண்டும் என்று குமரகுருபரர் அறிவுறுத்துவார் (நீதிநெறிவிளக்கம், 19).
நல்லவர்கள் ஒருவனுடைய நற்செயல்களையே பேசுவர். பொல்லாதவர்’களே புறங்கூறுவர் என்பதையும், அறியாமையுடையவர்கள் அதனைப் பலரிடமும் பரப்பிப் பழி உண்டாக்குவதையும்,
‘நல்லார் அறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
அல்லார் அலர் தூற்ற” (1:84:10)
என திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இங்கு ‘அறம’ ; என்றது நற்செய்கைகளைக் குறித்தது. புறம்பேசுதல் எவ்வளவு தவறோh, அவ்வளவு தவறு புறம் கூறுதலைக் கேட்பதும். இதனைத் திருஞானசம்பந்தர், ‘செவித்தொகைகளால் யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள் தாமே” (2:251:4) என்பதால் குறிப்பாகப் புலப்படுத்துகிறார்
எனலாம்.
பயனில சொல்லாமை பயனில சொல்லாமை:::: பயனில்லாத சொற்களைப் பலமுறையும் பேசுகின்றவனை மனிதன் என்று சொல்லாதீர்கள. அவன் மக்களுள் பதர் எனக் குறிப்பிடுகின்றார். வள்ளுவர் (குறள்,
196).
‘பேச்சினால் உனக்கு ஆவது என் பேதைகாள்” (2:142:2) என்பதால், சிவசம்பந்தமில்லாத அவப்பேச்சால் ஒரு பயனுமில்லை. அவ்வாறு பேசுபவர்கள் அறிவிலிகள் என அறிவுறுத்துகின்றார் திருஞான சம்பந்தர்.
‘சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்” (குறள், 200) என்று வள்ளுவர் கூறுகிறார்.
‘பெற்றம் அமரும் பெருமானை அல்லால்
பேசுவது மற்றோர் பேச்சிலோமே” (1:5:9)
என்பதால் மெய்யுணர்வு பெற்றவர்கள் இறைவனைப் பற்றிய பேச்சு அல்லாமல் வேறு பயனில்லாத வீண்பேச்சுப் பேசமாட்டார் எனத் திருஞானசம்பந்தர் அறிவுறுத்துகிறார்.
சிவநெறிக் கொள்கைகளில் ஒப்புமை சிவநெறிக் கொள்கைகளில் ஒப்புமை:::: சிவநெறிக்கொள்கைகள் கூறும் இறைவன், உயிர்,
உலகம் என்ற முப்பொருட்கள் பற்றிய கருத்துக்களில் இவ்விருநூல்களுக்குமிடையேயான
ஒப்புமையான கருத்துக்கள் சில இப்பத்தியில் ஆராய்ந்து கூறப்படுகின்றன.
இறைவன் இறைவன்:::: வள்ளுவர் இறைவனை ‘ஆதிபகவன்” (கடவுள் வாழ்த்து,) எனக் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரும்,
‘ஆதி பாதமே ஓதி உய்ம்மினே”
‘பரமன் பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே” (1:67:4)
என இறைவனைக் குறிப்பிடுகின்றார்.
வள்ளுவர் இறைவனை ‘வாலறிவன்” (கடவுள் வாழ்த்து, 2) எனக் குறிப்பிடுகின்றார்.
வாலறிவன் என்றால் தூய அறிவினன், நிறைந்த ஞானமுடையவன் எனப் பொருள்.
திருஞானசம்பந்தரும், ‘ஞானத்திரளாய் நின்ற பெருமான்” (1:69:3) என இறைவனைப்
போற்றுகின்றார்.
திருவள்ளுவ் இறைவன் அன்பர்களின் நெஞ்சமாகிய தாமரைமலரில் வீற்றிருப்பவன் என ‘மலர்மிசை ஏகினான்” (குறள், 3) என குறிப்பிடுவதும், திருஞானசம்பந்தர் ‘மலர்மிசை யெழுதரு பொருள்” (1:21:5) என்று இறைவனப் போற்றுவதும் ஒப்புநொக்கத்தக்கது.
திருவள்ளுவர் இறைவனைப் ‘பொறிவாயில் ஐந்தவித்தான்” (குறள், 6) என்று குறிப்பிடுவது போலத் திருஞான சம்பந்தரும்,’புலன்கள் வென்றவன் எம் இறைவன்” (3:319:7) என இறைவனைப் போற்றுகின்றனர்.
இறைவனுக்கு ஒப்பாக எவரையும் கூற முடியாது ஆதலால் வள்ளுவர், ‘தனக்குவமை இல்லாதவன்” (குறள், 7) என்று குறிப்பிடுவது போலத் திருஞானசம்பந்தரும் ‘தன்னேர்
பிறரில்லான்” (2:198:3) எனப் போற்றுகின்றார்.
இறைவன் அறக்கடலாக விளங்குவதை வள்ளுவர் ‘அறவாழி” ((குறள், 8) என்கின்றார்.
திருஞானசம்பந்தரும் இறைவன் அறவடிவினன் என்பதை அறிவுறுத்துகின்றார் (1:9:2, 2:199:11).
இறைவனின் குணங்கள் இறைவனின் குணங்கள்:::: இறைவனை ‘எண்குணத்தான்” (குறள், 9) என வள்ளுவர்
குறிப்பிடுகின்றார். தன்வயத்தனாதல் (சுதந்தரமுடையவன்) தூயஉடம்பினனாதல்,
இயல்பாகவே பாசங்களை நீக்கியவன், இயற்கை உணர்வினன், முற்றுணர்வினன்,
பேரருளுடையவன், முடிவிலாற்றலுடையவன், வரம்பிலின்பமுடையவன் என எண்குணங்களைப்
பரிமேலழகர் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரும் இறைவன் எண்குணத்தினன் எனக்
குறிப்பிடுகின்றார் (1:131:1)
உயிர்கள் உயிர்கள் உயிர்கள்:::: இவ்விருநூல்கட்கும் உயரிகள் பல என்பதில் உடன்பாடு உண்டு (குறள், 322:
திருஞானசம்பந்தர் தேவாரம், 1: 53:2, 1:63:4). உயிர் இவ்வுடம்பிற்கு வேறாய் உள்ளது என்பதும், அது தான் செய்யும் வினைக்கீடாக வேறுவேறு பிறப்புக்களுள் புகுந்து உழன்று வரும் என்பது வள்ளுவர் கருத்து. அவர்,
‘குடம்பை தனித் தொழியப் புட்பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு” (குறள், 338) என்கிறார். இதனால் புள் (பறவை),
குடம்பையின் (முட்டை அல்லது கூடு) வேறாயினாற்போல உயிர் உடம்பின் வேறாயுள்ளது
என்பது பெறப்படும். திருஞானசம்பந்தரும் ‘உடல் வரையின் உயிர்” (3:363:1) என
உடல்வேறு, உயிர்வேறு என உணர்த்துகிறார்.
‘உறங்குவது போதும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” (குறள், 339)
என்பதால் உறக்கமும், விழிப்பும் மாறி மாறி வருதல் போல, உயிர்கட்கு இறப்பும், பிறப்பும்
மாறி மாறிவரும் என மறுபிறப்பு உண்மை பெறப்படும். திருஞான சம்பந்தரும் மறுபிறப்பு
பற்றிக் கூறுகின்றார் (2:182:1, 3:353:9).
பாசம் பாசம்::::ஆணவம், கன்மம், மாயை முதலியன பாசம் என்ற சொல்லால் சிவநெறிக்
கொள்கைகளில் குறிப்பிடப்படும். ‘யான எனது என்னும் செருக்கு” (குறள், 346) என்பதில்
‘செருக்கு” என்றது ஆணவத்தைக் குறிக்கும். இவ் ஆணவமே உயர்கள் இறைவனை உணரா வண்ணம் அவற்றின் அறிவை மறைக்கின்றது. இந்த மறைத்தல் சக்தி காரணமாக அஃது இருள் எனப்படும். ஆணவமலச் சேர்க்கை காரணமாக உயிர்கள் செய்யும்
செயல்களே வினை எனப்படும். இச்சிவநெறிக் கொள்கையை ‘இருள்;சேர் இருவினை” (குறள்,
5) என்ற தொடர் உணர்த்துவது காண்க. திருஞானசம்பந்தரும் ‘ஊனத்திருள்” (1:38:3) என ஆணவத்தையும், ‘நல்வினை” (2:207:11), தீவனை (2:207:11) என இருவினைகள் பற்றியும் குறிப்பிடுகின்றார். இறைவனை வணங்குதலின் இன்றியாமை இறைவனை வணங்குதலின் இன்றியாமை:::: ‘கோளில் பொறியில் குணமிலவே
எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை” (குறள், 9)
எனத் தலை முதலிய உறுப்புகள் இறைவனை வணங்காவிடில் காணாத கண்போல, கேளாத
செவிபோல, மற்றும் தம் தம் புலன்களைக் கொள்ளாத பிற பொறிகள் போலப்
பயனற்றவையாய்க் குற்றமுடையவனவாம் என வள்ளுவர் கூறுகிறார்.
‘ஆமாத்தூர் அ ‘ஆமாத்தூர் அ ‘ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே” (2:180:4) ம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே” (2:180:4) ம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே” (2:180:4)
‘ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே” (2:180:7) ‘ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே” (2:180:7) ‘ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே” (2:180:7)
; ‘ஆமாத்தூர் அம்மானைக் கேளாச் செவியெல்லாம் கேளாச் செவிகளே”
(2:180:8) என்ற திருஞானசம்பந்தரின் தேவார அடிகள் முற்கூறிய திருக்குறள் கருத்துடன் ஒப்புடையதாய் விளங்குவதைக் காண்க.
இறைவனைப் புகழ்வதால் உண்டாகும் நன்மை இறைவனைப் புகழ்வதால் உண்டாகும் நன்மை:::: இறைவனைப் புகழ்ந்து போற்றுபவர்களை
இருவினைகள் வந்தடையா.
‘இருள்சோ இருவினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (குறள்,5)
என்கிறார் வள்ளுவர்.திருஞானசம்பந்தரும்,
‘நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியார்கட்கு
அடையா பாவமே” (1:86:3) என்கின்றார்.
முடிவுரை
1. திருக்குறள் உத்தரவேதம் என்றும், திருஞானசம்பந்தர் தேவாரம் தமிழ்வேதம் என்றும் போற்றப்படுகின்றன.
2. இவ்விரு நூல்களையும் எழுதுமறை என் ஆன்றோர்கள் போற்றியுள்ளனர்.
3. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்களாகப் பல இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.
4. சில சொல்லாட்சிகள் திருக்குறளில் எப்பொருளில் வழங்கப்பட்டனவோ, அப்பொருளில்
அச்சொற்கள் திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் பயிலப்பட்டுள்ளன.
5. திருக்குறளனின் கருத்துக்களை உள்ளடக்கித் திருஞானசம்பந்தர் தேவார அடிகள் பல
விளங்குகின்றன.
6. ப+க்களால் தொடுக்கப்பட்ட மாலைக்குள் இழைநார் ஊடுருவிச் செல்வது போல, திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களில் மனிதனின் உள்ளத்தைப் பண்படுத்தும் உயரிய அறக்கருத்துக்கள் திருக்குறளின் அறக்கருத்துக்களுடன் இவ் ஆய்வில்ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
7. இவ்விரு நூல்கட்கிடையே சிவநெறிக் கொள்கைகளில் ஒப்புமைகள் பல உள்ளன. ஆயினும் இட எல்லை கருதி ஒரு சில ஒப்புமைகள் மட்டுமே இங்குச் சுட்டிக் காட்டப்பட்டன.
8. இவ்வாறு திருக்குறளுக்கும், திருஞானசம்பந்தர் தேவாரத்திற்கும் இடையே காணப்படும்
ஒப்புமைகள் பலவாகும். இவ்விரு நூல்களையும் ஊன்றிப் படித்து ஆராய்வோர்க்கு அவை உவப்பிலா ஆனந்தத்தை உண்டாகும்;.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திருக்குறள் போற்றும் சமயம் – அந்தணர் யார்?

திருக்குறளில் அந்தணன்/அந்தணர் என்ற சொல் மூன்று இடங்களில் வருகின்றது.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.                             (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.                  (30-நீத்தார் பெருமை)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.                          (543-செங்கோன்மை)

நாம் மேலே கண்ட குறட்பாக்களில் முதலாவது கடவுளையும் இரண்டாவ்து ஆசையை துறந்த முனிவர்களையும் வள்ளுவர் அழைகின்றார். எனவே நாம் நேரடி அந்தணர் என்பது அன்றி பிற பெயர்களாலும் அந்தணர் – வேள்வி தொடர்பான விஷயங்களிலும் வள்ளுவர் கூறியுள்ள குறட்பாக்களைப் பார்ப்போம். இறுதியில் மேலே உள்ள இரு குறட்பாக்களையும் காண்போம்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.                  (134ஒழுக்கமுடைமை)

 

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத் துண்ணாமை நன்று.                   ( 259 புலான்மறுத்தல்)

 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 

காவலன் காவான் எனின்.                           (560 கொடுங்கோன்மை)

பாரத நாட்டின் புகுந்த அன்னியர்கள் பிரித்தாளும் சூட்சியில் பல ஊகக் கோட்பாடுகளைப் பரப்பினர், அந்த மூடநம்பிக்கை புரளிகளுக்கு ஆதாரம் என முறையற்ற வகையில் மேலும் புரளிகளும் திரிபான விளக்கங்களும் கொண்ட ஆய்வுகள் என அடுக்கடுக்கான புத்தகங்கள் பரவியது. உண்மையரிந்த புலவர்கள் தங்கள் சுயநலத்திற்காக இவற்றை தீவீரமாக கண்டிக்கவில்லை. அடிமைப் படுத்த அன்னியர்கள் மததினையும் சாதியையும் தூண்டலாட, வெகுஜன அறிஞர்களும் உண்மையைக் கூற தயங்கினர். முக்கியமான ஊகக் கோட்பாடுகள் ஆரியர்- திராவிடர் என்னும் அன்னியர்கள் படையெடுப்பு, குமரிக்கண்டம் என்பவை முழுமையாக விஞ்ஞானம் மறுத்துள்ளது.

மேலும் வள்ளுவரே குறளின் உள்ளேயே வேறு குறளில் தொடர்புடைய அதிகாரத்தில் பயன்படுத்தும் போது அதெ பொருள்பட்டு விளக்கம் கொண்டபடியாக இயற்றியும் உள்ளார்.

திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் என்ற சொல்-தமிழரின் பழமையான இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், இதன் பின் தொல்கப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்கணக்கு நூல்கள், இதன் பின்னரான இரட்டை காப்பியங்கள் சிலப்பதிகாரம் மனிமேகலையும், பின் திருமந்திரம் தொடங்கி பக்தி இலக்கியங்கள் என அறிஞர்கள் குறித்துள்ளனர். இலக்கியங்களில் பயன்பட்ட அதே பொருளில் தான் வள்ளுவரும் பயன்படுத்தியுள்ளார்.

நூறுக்கும் அதிகமான  ஆதாரங்கள் உள்ளன, உதாரணத்திற்கு சில தரப்பட்டுள்ளது. உண்மைகளை அனுபவிப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆசிரியர் நல்லுவந்தனார் பரிபாடல் 11ம் பாடலில் வையை என வைகை ஆற்றின் சிறப்பைக் கூறுகையில்

பரிபாடல்2:

கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று வேதமோதும் அந்தணர்கள் சிவபெருமானிற்கு திருவிழா செய்யத் தொடங்கினர். முப்புரி நூல் அணிந்த அந்தணர் பொன்கலத்தை ஏந்தி சென்றனர். அம்பா ஆடல் செய்யும் கன்னிப் பெண்கள்- முதிய அந்தணப் பெண்கள் வழிகாட்ட அதிகாலையில் நீராடினர்.
அதிகாலையில் நீராடிய இளம்பெண்கள், மார்கழியின் குளிர் வாட்ட, கரையில் வேதமந்திரங்கள் கூறி வளர்த்த வேள்வி அக்னியின் அருகில் சென்று தங்கள் ஈர ஆடையை காயச் செய்தனர். அந்தணர் வேத வேள்விகளால் மழை தொடர வைகை நீ பெருகுகிறாய்.
இவை மார்கழி மாதத்தின் பாவை நோன்பின் தொன்மையையும் திருவாதிரை பண்டிகை கொண்டாடுதலின் வழமையையும் மெய்பிக்கின்றது.

பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் வையை என்ற தலைப்பில்
தலைவன் கூற்று
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்

தணிவின்று, வையைப் புனல். 50

தலைவன் கூற்று

‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,

எனலூழ் வகை எய்திற்று’ என்று ஏற்றுக்கொண்ட

புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,

நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,

கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55

ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.

என ஆங்கு-
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்

‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு’ எனப்

பார்ப்பார் ஒழிந்தார், படிவு.

‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று, 60

அந்தணர் தோயலர், ஆறு.

‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’

ஐயர், வாய்பூசுறார், ஆறு.

-பா¢பாடல்-திரட்டு 2:50-63
அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்எயே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப் புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.

மேலும் சங்க காலத்தில் தமிழகத்தின் பக்திநிலை பற்றியும் உறுதி செய்கிறது.

மதுரைக் காஞ்சி

பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியுஞ்
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து

நிலமமர் வையத் தொருதா மாகி . . .470

உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்
பெரியோர் மேஎ யினிதி னுறையுங்
குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை . . .480

“தாதுண் தும்பி போது முரன்றாங்கு

ஓதல் அந்தணர் வேதம் பாட” – மதுரை காஞ்சி 655, 656

திருமுருகாற்றுப்படை

2. திருச்சீர் அலைவாய்

மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்
,

 4. திரு ஏரகம்

அந்தணர்:
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை . . .180

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் 
பொழுதறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று,

பெரும்பாணாற்றுப்படை

செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கு           499

பெருநாள ளமையத்துப் பிணையினிர் கழிமின்
செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப்
பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை கோழியடு ஞமலி துன்னாது
வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
 . . . .300
மறைகாப் பாள ருறைபதிச் சேப்பிற்
பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ்

அந்தணர்கள் அவர்கள் வீடுகளில் ஓதும் மறையைக் கேட்டு கேட்டு அவர்கள் இல்லங்களில் வாழும் கிளிகளும் வேத ஒலிகளை எழுப்புகின்றனவாம்.

பதிற்றுப்பத்து

பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.

“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்

ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்

அறம் புரி அந்தணர்” – 24)

பாட்டு – 74

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது

வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்

அந்தணன், பார்ப்பான், நான்மறையாளன், முனிவன் என்று குறிப்பிடப்படுகின்றனர். வேதம் அறிந்தவர்கள். அதனைத் தினந்தோறும் ஓதுபவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

அந்தணர் – பார்ப்பான் அறுதொழிலார் என நேரடியாக குறளில் வள்ளுவர் பன்படுத்தியுள்ளார்.

நாம் மேலே சங்க இலக்கியத்தில் காட்டியதில் வேள்விகள் சிறப்பித்து கூறப்படுவதயும் காண்கிறோம்.

அனால் திருவள்ளுவரோ

குறள் 259: துறவறவியல் – புலான்மறுத்தல்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

நாமக்கல் கவிஞர் உரை     மு.வ உரை:

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

நாம் இந்தக் குறளோடு இதன் முந்தைய அடுத்த குறள்களையும் காண்போம்.

குறள் 258:

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் 
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

மு.வ உரை:

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

குறள் 260:

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிருந் தொழும்.

மு.வ உரை:

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர்- முனிவர்களை தான் வள்ளுவர் ஊணுண்வு மறுத்தலில் முக்கிய்ம் கொடுக்கிறார். ஆனாலும் அனவருக்கும் அவர் வற்புரித்தினார் என்று கொண்டாலும் ஒருவன் தெய்வமாக தொழப்படும் நிலைக்கு ஈடாகும் நிலைக்கு முன்னர் இறைவனிடம் அடையும்வழி வேள்விகள் செய்தல். ஒருவன் வேல்விகள் செய்து கொண்டு, இறைவனை அடைய முயன்று ஊன் உண்தல் தவிற்க வேள்விகளை சிறப்பித்து போற்றித் தான் வள்ளுவர் கூறுகிர்றார்.

வேள்விகள் பற்றி வள்ளுவர் கூறியுள்ளது

விருந்தோம்பல்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் 
துணைத்துணை வேள்விப் பயன்.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
வேள்வி தலைப்படா தார்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்வருந்து வானத் தவர்க்கு.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்.

விருந்தினரை உபசரித்தல் அதிதி யக்ஞம் எனப்படும் இது வேள்விக்கும் ஒப்பாகும், இவ்வேள்வி செய்வோர் வீட்டில் ல்க்ஷ்மி தேவீ வாசம் செய்வாள் என்கிறார்.

 குறள் 413: கேள்வி

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் 
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

கேள்வி என சத்சங்கங்கள் செய்வது தேவர்கள் உண்ணும் அவி உணவிற்கு ஈடானது

வள்ளுவர் வேள்விகளை மிகவும் உயர்வாகவே கருதியதைக் கண்டோம்.

வேத முறைப்படி மூன்று அக்னிகள் வளர்க்கப்படுகின்றன. அவை ஆகவனீயம், காருகபத்தியம், தட்சினாக்கினி என்பவை. இவை ரிக் வேதத்திலேயே கூறப்பட்டுள்ளன.  முத்தீ பண்டைத் தமிழர் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் பெருநற்கிள்ளியும் ஒற்றுமையாக இருப்பதை காண்கிறார் புறநானூற்று ஔவையார். பாடுகிறார்:

பார்ப்பு என்றால் பறவைக் குஞ்சு. பிரக்கும் போது முட்டை உடலில் வந்தது பின் முட்டை உடைய புது பிறப்பு எடுப்பது போலே பூனல் எனப்படும் உபநயந்துக்குப்பின் வேதம் படிக்க ஆசிரியரிடம் செல்கிறான், எனவே பார்ப்பான் என்றால் இருபிறப்பாளன். தாயின் வயிற்றினின்று பிறந்து வருவது ஒரு பிறவி. தன்னுடைய வாழ்க்கையை மேலான வாழ்க்கையாகத் திருத்தி அமைக்க ஆரம்பிக்கின்ற பொழுது மனிதன் ஆன்மிகத் துறையில் இன்னொரு பிறப்பெடுத்தவன் ஆகின்றான். ஆகையினால் அவன் துவிஜன் – இருபிறப்பாளன் என்று சொல்லப் படுகிறான்.

அந்தணர்- அந்தம் + அணர். உலகின் உறுதிப் பொருளான வேதங்களினை கொண்டு வழி காட்டுபவர் எனப் பொருள் படும்.

வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.

இறைவனை அந்தணர் என்றும் பார்ப்பான் என்றும் அழைப்பது சங்க இலக்கிய நடைமுறையே.

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய, – 25

மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப் 
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
 
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு - 30
(Paaaripādal, Chapter 5)

மண்மிசை—அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும் (Paripādal 8:1-5)

தொல்காப்பியம்-செய்யுளியல்480

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்1
மறைமொழி தானே
 2மந்திரம் என்ப.

என் – னின். மந்திரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைந்தசொல் மந்திரமாவ தென்றவாறு.

திருமுருகாற்றுப்படை2. திருச்சீர் அலைவாய்

மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,

உலகமே இருளில் முழ்கி கிடந்த போது ஆன்ம ஒளியில் திளைத்தது நம் நாடு.ரிஷிகள் சிந்தனையில் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.எப்போது இவை தோன்றியது என யாருக்கும் தெரியாது.”புவி ஈர்ப்பு விதிகள் நமக்கு முன்னும், நமக்கு பின்னும் எப்போதும் இருக்கும்.அது போல்தான் ஆன்மிக உலகின் விதிகளும் மாறாமல் இருக்கும்”அவ்வாறு ரிஷிகள் வெளிப் படுத்திய அந்த உண்மைகள், பின்னாளில் வியாசரால் நான்காகப் தொகுக்கப் பட்டன.ரிக்,யாகூர்,சாம மற்றும் அதர்வணம்.ஒவ்வொரு வேதமும் முக்கிய மூன்று பிரிவாக ,சம்ஹிதை(பல்வேறு தேவர்களின் பிரார்த்தனைகள்),பிராம்மணம்(யாக விவரங்கள்)ஆரண்யகம்(அறுதி உண்மை பற்றிய ஆராய்ச்சிகள்) பிரிக்கப் பட்டன.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக  வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.

சங்க காலத்தில் பலவகைகளிலும் மேன்மையுற்றிருந்த தமிழகம் 3ம் நூற்றாண்டு முதல் 6. வரை களப்பிரர் காலத்தில் பல இடர்பாடுகளுக்கு உள்ளானது. அக்காலத்தில் சமணம் தழைத்தோங்க ஆரம்பித்தது. காதல், களவு, கற்பு, வீரம் போன்றவற்றைப் பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மறைந்தன. நீதிக்கருத்துக்களை எடுத்துக்கூறும் நூல்கள் இயற்றப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்டவையே பதினென் கீழ்கணக்கு நூல்களாகும்

திருக்குறள் இக்காலத்தில் இயற்றப்பட்டதே- எனவே திருவள்ளுவர் தன் நூலை ஒரு பொது நூல் தோற்றம் தரும் வகையில் கடவுள் வாழ்த்தின் பத்து குறட்பாக்களில் ஒரு பெயர்சொல் கூட பயன்படுத்தவில்லை. இதை வெவெவேறு மதத்தினரும் தன் வகையில் பொருத்த முயற்சித்தல் இயல்பே. ஆனால் வள்ளுவர் மனதை அறிய நாம் மேலே கண்ட முறையில் அவர் சங்க கால நடைமுறையில் தான் எழுதியுள்ளார் என்பதை தெளிவாக உணறலாம்

சாங்கிய தரிசனத்தி ருந்து எழுந்த ஒரு தத்துவம் பின் பௌத்த சமண மதங்களாக மாறியது. இவ்விரு மதங்களும் பல வைதிக மதக் கோட்பாடுகளை சற்றே மாற்றி பயன்படுத்தியது மட்டுமின்றி இதிகாசங்கள் இரண்டையும் திரித்து தங்கள் மத நம்பிக்கைகேற்ப பிற்காலத்தில் புனைந்தனர். என்வே வள்ளுவர் காலத்திற்கு முன்பே இருந்த ஆதாரங்கள் வள்ளுவர் வைதீக நடைமுறையையெ கூறினார் எனத் தெளிவாக உண்மைகளை தெளிவாக்கும்.

Jainistm is a kind of religion based upon the acceptance of the Samkhya system, but venerating a limited group of noble selves, who have achieved perfection and bliss.  ( p-10 Coparative Religion ; A.C.Bouquet)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.                          (543-செங்கோன்மை)

நாமக்கல் கவிஞர் உரை

அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் செங்கோண்மை.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்  
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.                  (134ஒழுக்கமுடைமை)

 

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத் துண்ணாமை நன்று.                   ( 259 புலான்மறுத்தல்)

 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.                           (560 கொடுங்கோன்மை)

Translation:

Where guardian guardeth not, udder of kine grows dry, 
And Brahmans’ sacred lore will all forgotten lie.

Explanation:

If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

மு.வ உரை:

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

குறள் 1066:

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு 
இரவின் இளிவந்த தில்.

மு.வ உரை:

பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

“பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ‘பசுக்களும், பசுவின்  இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், முன்னோர்களுக்கு    விருப்பத்துடன்    ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்!
நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப்போகிறோம்’ என்று அறநெறியோடு அறிவுறுத்திப் பிறகே போர் செய்யத்  தொடங்கும் வலிமையும் மறமும் கொண்டவன். கொல்லுகின்ற  யானை மீது எடுக்கப்பட்ட கொடிகள் ஆகாயத்தை மறைக்கும்; அத்தகைய சிறப்புடையவன் எம்முடைய வேந்தன்.    புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல்   நோக்கத் தக்கது.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்……

என்ற அடிகள் அக்காலத் தமிழர் போர் நெறி காட்டுவன.

இப்புறநானுறு பாடல்படியான மரபில் தானே வள்ளுவர் இகுறளும் கூறுகின்றது.

பசுக்கள் தரும் பால்- அதன் உப பொருட்கள் தயிர், வெண்ணெய் நெய்- இவை அனைத்துமே கர்ப்பிணி பெண்கட்கும், சிறு குழந்தைகட்கும் அவசியம். வேள்விகளிலும் அவசியம். நாட்டின் பலத்திற்கு வருங்காலத் தலைமுறையும் கடவுள் ஆசியும் அவசியம் என்பதையே கூறியுள்ளார்.

 திருவள்ளுவர் சங்ககாலத் தமிழர் மரபுப்படிதான் திருக்குறளைத் தந்துள்ளார். அதில் அந்தணர் என்பது தொழில் வழியில் அந்தணர்களைத் தான்.

http://tamialrsamayam.blogspot.com/

http://tamialrsamayam.blogspot.com/2011/09/blog-post.html



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

எழுதியவர்astromaniam நாள் ஜனவரி 13, 2009 
நேரம் 8:20 மு.பகல் 
http://engaltamil.wordpress.com/2009/01/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1-2/

திருவள்ளுவர் பிறந்த ஆண்டை 1921 ல் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறையினர் கண்டு பிடித்ததாக சொல்லப்படுகிறது. திருக்குறளை வள்ளுவர் தமிழில் எழுதவில்லை. திருவள்ளுவர் என்பவர் தமது வாழ்க்கையில் அனுபவித்துணர்ந்து அவ்வப்போது ஒலைச்சுவடிகளில் டைரி போல் குறிப்பெடுத்து வைத்த சில பட்டறிவு யதார்த்த நிகழ்வுகளை மணக்குடவர் என்பவர் தொகுத்து எழுதியுள்ளார். கிராமங்களில் இருக்கும் வீட்டு ஒட்டுத் திண்ணைகள் அல்லது மேடை மேல் வந்து அமர்ந்து கேட்பவரை நோக்கி அவருக்கு நடக்க வேண்டியதை குறித்து சொல்பவர்களை குறி சொல்பவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மந்திர தந்திர மாயாஜால வித்தைகளையும் கற்று வேடிக்கை செய்து காட்டி பிழைத்து வந்தவர்களாக இருந்ததால் மக்கள் அவர்களை குறளி வித்தை காட்டிகள் என்று அழைத்தனர். வள்ளுவர் குறளிகள் இனத்தவர் என்பதை இச்செய்தி மூலம் அறியலாம். இப்படி ஒரு இனத்தினர் அந்த நாளில் இருந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. குறளி இனத்தில் இருந்து வந்தவர் எழுதியதால் குறளி என்ற வார்த்தை மருவி குறளாகி விட்டது. ஒன்றரை வரிகளில் குறுகி எழுதப்பட்டதால் உரை எழுத அதனை ஆய்ந்தவர்கள் திரு என்ற வார்த்தையை அதன் முன்னால் சேர்த்து திரு குறள் என அழைத்தார்கள். மணக்குடவர் திருவள்ளுவர் காலத்தவராக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் திருவள்ளுவரைப்பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். மணக்குடவர் எப்போதோ எழுதிய மூலத் தொகுப்பை கண்டு பிடித்து சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலில் அச்சில் ஏற்றியவர் தஞ்சையை சேர்ந்த ஞானப்பிரகாசன் என்பவர். திருவள்ளுவர் யார் மணக்குடவர் யார் இவர்களிருவரும் எந்த இருப்பிடத்தில் எந்த காலத்தில் இருந்தவர்கள் திருவள்ளுவருக்கும் மணக்குடவருக்கும் இடைப்பட்ட தொடர்பு நட்பா அல்லது தொப்புள் கொடி உறவா என்பன பற்றிய விவரங்களை தஞ்சை ஞானப்பிரகாசன் முதன் முதலாக அச்சில் ஏற்றிய திருக்குறள் முன்னுரைகளில் குறிப்பிட்டிருக்க வாய்ப்பு இல்லை. திருவள்ளுவர் பிறந்த ஆண்டை ஆராய்ந்து கண்டறிந்த பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறையினரும் இந்த அடிப்படை விவரங்களை குறிப்பிடவில்லை. காங்கிரஸிடமிருந்து தமிழக ஆட்சியை கைப்பற்றிய திராவிட கட்சி ஆட்சிகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை பெற்றவராக இருந்த அறிஞர் அண்ணா துரை அவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராக இருந்தவர் என்ற காரணத்தினால் 1971 ல் அரசு அலுவலகங்களில் கிறிஸ்து பிறந்த ஆண்டுக்கு போட்டியாக திருவள்ளுவர் பிறந்த ஆண்டும் பின்பற்றப்பட வேண்டு மென்ற ஆணையிட்டிருந்தும் 1981ல் புரட்சி தலைவர் ஆட்சியில் தான் முதன் முதலாக அரசு அலுவலகங்களிலும் நாட்காட்டிகளிலும் அது நடை முறைக்கு கொண்டுவரப்பட்டது. பிறகு தமிழக பஞ்சாங்கங்களில் சேர்க்கப்பட்டது. தமிழ் என்ற வார்த்தை திருக்குறளில் இல்லாத போது அது தமிழினத்தை சார்ந்த நூலாக கருத முடியாது. இதனை தெரிந்தே அதனை உலக பொது மறை என மாற்றி விட்டார்கள் போலும். ஆரம்பத்தில் இருந்து இன்று வரை இந்த உலக பொது மறை விளம்பரம் தமிழக ஆட்சியாளர்களிடமும் நாத்திக வாதிகளாக மாறிய தமிழ் புலவர்களிடமும் தமிழ் அறிஞர்களிடமும் சிக்கி படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது. திருக்குறளில் வள்ளுவர் மனித வாழ்க்கையில் கடை பிடித்த அல்லது கடை பிடித்துதுணர்ந்த யதார்த்த உலக அனுபவ அல்லது பட்டறிவு கோட்பாடுகளை படித்தறிந்த 45 பேர்கள் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர். திருக்குறளில் வட மொழி சொற்கள் விரவி எழுதப்பட்டுள்ளன. அதில் ஔ என்ற வார்த்தை இல்லை. திருக்குறளில் மூன்று ஒன்பது எண்களைத் தவிர மற்ற வரிசை எண்கள் 1 2 4 5 6 7 8 10 ஏராளமாக கையாளப்பட்டுள்ளன. கணித மேதை ராமனுஜம் கண்டு பிடித்த 1 முதல் 10 வரையுள்ள எண்கள் திருவள்ளுவர் காலத்திலோ அல்லது அவர் காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மணக்குடவர் காலத்திலோ பயன் பாட்டில் இல்லை. அது சென்ற நூற்றாண்டு நிகழ்வு என்பதால் முதலில் திருக்குறளை அச்சில் ஏற்றிய தஞ்சை ஞானபிரகாசன் என்பவரே எண் வரிசைகளை அதில் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும். திருக்குறளில் கூறப்பட்டுள்ள நல்ல செய்திகள் ஒரு பக்கம் இருந்தாலும் அதன் மூல கர்த்தாக்களின் முழு வரலாற்று விவரம் சரியான ஆதாரங்களுடன் தெரிய வில்லை. திருவள்ளுவர் பிறந்த ஆண்டை அரசு அலுவலகங்களில் பயன் படுத்த வேண்டு மென்று 1971ல் ஆணையிட்ட தமிழக அரசும் மேற்படி அடிப்படை ஆதாரங்களை முறையாக ஆய்ந்து மக்களிடம் வெளிப்படுத்த வில்லை. திருக்குறளில் கூறப்பட்டவைகள் அனைத்தும் உள்ளபடியே அப்படியே திருவள்ளுவர் கூறியது தானா என்பதை அவருக்குப் பின்னர் அதனை பல கால கட்டங்களில் பின்பற்றி எழுதியவர்கள் மொழி பெயர்த்தவர்கள் உரை எழுதியவர்கள் அச்சுக்கு கொண்டு சென்றவர்கள் எவரும் ஆராய்ந்து தெரிவிக்கவில்லை. அவர்கள் திருக்குறள் தமிழிலக்கண வரம்பிற்குட்பட்டதா என்பதையும் ஆராய்ந்து உரை நடை எழுதியதாக தெரியவில்லை. ஆனால் கால ஓட்டத்தில் அவர் அவர்களுக்கு தெரிந்த பல செய்திகளையும் சிறிது சிறிதாக உள்ளே நுழைத்து தொகுத்து திருக்குறளை உறுவாக்கி யிருக்க வேண்டும். திருக்குறள் மனிதவள மேம்பாட்டுக்கு தேவையான அறம் பொருள் காமம் என்ற மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை உணர்த்துவதுடன் அதில் உள்ள குறை நிறைகளை நிதானமாக சுட்டிக்காட்டி மனித இனத்தை திருத்த முற்படுவதால் மின்சாரம் ஆகாய விமானம் ரேடியோ போன்ற மனித வாழ்வு மேம்பாட்டுக்குத் தேவையான வெளிநாட்டவர்களின் கண்டு பிடிப்புகளைப் போன்று விஞ்ஞான அறிவியிலில் அக்கறையில்லாமல் தமிழக தெருக்கூத்துகளிலும் டிராமாக்களிலும் வட நாட்டு இதிகாசங்களையும் புராணங்களையும் மக்களிடம் பரப்பி விட்டுக் கொண்டிருந்த அப்போதைய தமிழினத்தவரில் ஞானப்பிரகாசன் போன்ற நல்லவர் ஒருவர் யாராலோ எழுதப்பட்டு யாராலோ தொகுக்கப்பட்டதனை அச்சில் ஏற்றி வெளி உலகுக்கு கொண்டு வந்து பின்னால் வரும் அரசியல் தலைவர்களுக்கு பேருதவி செய்துள்ளது மறக்க முடியாதது. அவருக்கும் ஒரு சிலை திருவள்ளுவர் சிலை அருகே அமைத்திருக்க வேண்டும். அவர் அச்சேற்றிய திருக்குறள் ஒரு நிரந்தர இலக்கிய நூலாகி திருவள்ளுவர் சிலைகளுடன் தமிழுலகில் தனித் தன்மையாக உலா வருவதும் உலக அந்தஸ்து பெற்று விட்டதும் தமிழுக்கு கிடைத்த பெருமை என்று சொல்லலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Tirukkuṛaḷ

From Wikipedia, the free encyclopedia
 
Thiruvalluvane.jpg

Tirukkuṛaḷ (Tamilதிருக்குறள் also known as the Kural), sometimes spelt 'Thirukkural, is a classic of couplets or Kurals (1330 rhyming Tamil couplets) oraphorisms [1] celebrated by Tamils.[2] It was authored by Thiruvalluvar, a poet who is said to have lived anytime between the 2nd and 6th centuries AD. It is undoubtedly one of the finest wisdom literatures India has ever produced. Although the exact period of its composition is still disputed, scholars agree that it was produced in the late Tamil Sangam period. The Thirukkural expounds on various aspects of life and is one of the most important works in the Tamil language. This is reflected in some of the other names by which the text is known: Tamil marai (Tamil Vedas); poyyamozhi (words that never fail); and Daivanool (divine text).[3] The book is considered to precede Manimekalai and Silapathikaram since they both acknowledge the Kural text.[4]

Thirukkural (or the Kural) is a collection of 1330 Tamil couplets organised into 133 chapters. Each chapter has a specific subject ranging from "ploughing a piece of land" to "ruling a country". According to the LIFCO Tamil-Tamil-English dictionary, the Tamil word Kural literally means "short verse", and is typified by the Venpa metre that consists of two lines. In the aspect of metre & brevity, and the profoundity of expression, it can be compared with the Sutra style ofSanskrit poetry. Thirukkural comes under one of the four categories of Venpas (Tamil verses) called Kural Venpa. The 1330 couplets are arranged into 3 main sections and 133 chapters. Each chapter contains 10 couplets. A couplet consists of seven cirs, with four cirs on the first line and three on the second. A ciris a single or a combination of more than one Tamil word. For example, Thirukkural is a cir formed by combining the two words Thiru and Kural, i.e. Thiru + Kural = Thirukkural. It has been translated to various other languages[5].

There are claims and counter claims as to the authorship of the book and to the exact number of couplets written by Thiruvalluvar. The first instance of the author's name mentioned as Thiruvalluvar is found to be several centuries later in a song of praise called Garland of Thiruvalluvar in Thiruvalluva Malai.[6]

Most of the Researchers and great Tamil Scholars like George Uglow Pope or G.U. Pope who had spent many years in Tamil Nadu and translated many Tamil texts into English, which includes Thirukkural.

Contents

 [hide]

[edit]Other names

Thirukural is praised with many names such as:[7]

  1. Uttravedam - the ultimate Veda or Creed
  2. Poyyamozhi - falseless word
  3. Vayurai vazhthu - truthful praise
  4. Teyvanul - the divine book
  5. Pothumarai - the common Veda or Creed
  6. Muppal - three fold path
  7. Tamil marai - Tamil Veda

[edit]Sections

Thirukkural is structured into 133 chapters, each containing 10 couplets, thus a total of 1330 couplets.[8] The 133 chapters are grouped into three sections:[8][9]

  • Aram - righteousness
  • Porul - wealth and
  • Inbam or Kamam - pleasure

Aram containes 380 verses, Porul with 700 and Inbam with 250.[8] While Aram and Inbam discuss about ethical living in private life, Porul deals with public matters Hariharan

[edit]Legend

Upon completion, Thiruvalluvar took the work (Thirukkural) to Madurai (Tamil Nadu, India) as per the prevailing practice of reading out new compositions in a public forum where critics and scholars would be present. The conceited scholars at Madurai, insisted on measuring the greatness of the work through a test where the manuscript would be placed with other works on a plank kept afloat in the tank of the Meenakshi temple and it was to be seen if the plank remained afloat. The significance of this is that the greatness of a work is realized on the basis of not the weight of its manuscript (written on Palm leaves) but the divine qualities of the work which forced the plank to stay afloat. It is said that to the amazement of the critics, the Sangam Plank shrunk itself in size to hold only the Kural manuscript and in the process throwing out the rest.

[edit]1330 Thirukkurals

For complete list of Thirukkural, see 1330 Thirukkurals at Wikisource



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்

 
தமிழர்கள் உலகிற்கு வழங்கிய இலக்கியக் கொடைகளுள் முதன்மையானது திருக்குறள் ஆகும்.இத் திருக்குறள் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாக உள்ளது.ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட திருக்குறளை, அதன் கருத்துகளை அறிஞர்கள் பலரும் காலந்தோறும் பலவகையில் பயன்படுத்தியுள்ளனர். 

சங்கநூல்களிலும், சிலம்பு, மேகலை,கம்பராமாயணம் போன்ற காப்பியங்களிலும் திருக்குறள் கருத்துகள் பரவலாக ஆளப்பட்டுள்ளன. இடைக்காலத்தில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள், பழந்தமிழ் நூல்களுக்கு உரைவரைந்த உரையாசிரியப் பெருமக்கள் திருக்குறளுக்கும் உரை கண்டு அந்நூலின் பயன்பாட்டுக்கு அரண்செய்தனர்.இவ்வாறு உரை கண்டவர்கள் தம் சமயம் சார்ந்தும், கொள்கை, இலக்கிய, இலக்கண பயிற்சிகளுக்கு அமையவும் உரை வரைந்துள்ளனர்.இவ்வாறு வரையப்பட்ட உரைகளுள் பரிமேலழகரின் உரை அனைவராலும் போற்றப்படுகிறது. சில உரைப்பகுதிகள் அறிஞர் உலகால் தூற்றப்படுகிறது. 

பரிமேலழகர் தம் அஃகி அகன்ற அறிவு முழுவதையும் பயன்படுத்தி உரை கண்டிருப்பினும் அவர்தம் வடமொழிச்சார்பு அவருக்குத் தமிழ் அறிஞர் உலகில் எதிர்ப்பைத் தேடித் தந்தது.சிவப்பிரகாசர் உள்ளிட்ட சமயவாணர்கள் பரிமேலழகரின் உரையைக் கண்டித்துள்ளனர். வடமொழிக் கருத்துகளை நீக்கிப் பார்க்கும்பொழுது குன்றின்மேல் இட்ட விளக்காக அவர்தம் உரை விளங்கும்.

ஒருவகையில் பரிமேலழகரின் உரை கற்றவர்களை மகிழ்ச்சி அடையச்செய்தது போலத் தமிழ்ப் பற்றாளர்களையும்,தமிழகத்தில் தோற்றம் பெற்ற திராவிட இயக்க உணர்வாளர்களையும் தன் பக்கம் இழுத்தது. அவ்வுரைக்கு விளக்கமாகவும், மறுப்பாகவும் உரை வரையவும்,திருக்குறளைத் தங்கள் அறிவுஅடையாளம் காட்டும் நூலாகவும் காட்டும் போக்கைத் தமிழகத்தில் உண்டாக்கியது.இதனால் திருக்குறள் தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்களால் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலும்,பிற்பகுதியிலும் புதுப்புது கருத்துகளை உருவாக்கும் களமானது.அக்கருத்து விளக்க உரைகளை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது. 

பழந்தமிழ்ப்புலவர்களிடம் இருந்த திருக்குறளை எளிய மக்களும் படிக்கும் வகையில் தெளிவுரை வழங்கியவர் அறிஞர் மு.வரதராசனார் ஆவார்.இவர்தம் திருக்குறள் தெளிவுரை கோடிக்கணக்கில் விற்பனை ஆனமை இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.திருக்குறளார் முனிசாமி அவர்கள் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் திருக்குறளை நகைச்சுவையுடன் கொண்டு சேர்த்தவர்.உரை வரைந்தும் பெருமை சேர்த்துள்ளார்.

மு.வ அவர்களின் உரை வெளிவந்த காலகட்டத்தில்(1949) தமிழகத்தில் தமிழ்,திராவிட இயக்க உணர்வு மேம்பட்டிருந்தது.தமிழர்கள் தங்களின் இலக்கியப் பரப்பையும்,இலக்கணப் பெருமையையும் பேசும்பொழுது சங்க நூல்கள்,திருக்குறளை அடையாளப்படுத்தினர். அதிலுலும் திருக்குறளைத் தம் மறையாக நிலைநாட்ட முயன்றனர்.தேசிய இலக்கியமாகவும், உலக இலக்கியமாகவும் அறிஞர்களால் முன்மொழியப்பட்டது. இக் காலகட்டத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புகளின் வழியாகத் திருக்குறள் அயல்நாட்டு அறிஞர்களால் அறியப்பட்டிருந்தது. 

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழகத்தில் அரசியல்,சமூகம், மொழி, இலக்கிய வளர்ச்சிக்குத் தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,பெருந்தலைவர் காமராசர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், மறைமலையடிகள்,பாவாணர்,பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழறிஞர்களும் பெரும் பங்காற்றியுள்ளனர். தந்தை பெரியாரின் அரசியல், சமூகப் போராட்டங்களால் தமிழக மக்கள் கல்வி,அறிவுநிலைகளில் மேன்மையுறத் தொடங்கினர். சமூக விழிப்புணர்ச்சியுடன் இலக்கிய,கல்விச்சூழலும் பல நிலைகளில் வளரத் தொடங்கின. 

காலந்தோறும் உயர் சாதியினரின் கையில் இருந்த இலக்கிய இலக்கண நூல்கள் அனைத்தும் மக்களின் கைக்குக் கிடைத்தன.இதனால் அவரவரும் தத்தம் வாழ்க்கை, அறிவு, கொள்கை வழிப்பட்ட இலக்கியங்களை ஆராய்ந்தனர்.புதுவகை இலக்கண,இலக்கிய உத்திகளை வகுத்தனர்.இதுநாள்வரை கேள்விக்கு உட்படுத்தப்படாமல் இருந்த நூல்கள், கருத்துகள், கொள்கைகள்,விளக்கங்கள் அடித்தட்டு மக்களால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன.கல்வியறிவு கிடைத்ததுடன் அரசியலில் விடுதலைபெற்று விடுதலையாகத் தங்கள் கருத்துகளை எழுதவும் பேசவும் சூழல் வாய்த்ததால் தங்கள் கருத்துகளை உலகிற்கு வெளிப்படுத்தினர். 

அரசியல்,சமூக மாற்றங்களால் மொழி சார்ந்த இயக்கங்களும்,இனம்சார்ந்த இயக்கங்களும் கட்டமைக்கப்பட்டன. மறைமலையடிகளால் உருவாக்கம்பெற்ற தனித்தமிழ் இயக்கம்(1916 அளவில்)பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்ற அறிஞர்களைத் தனித்தமிழ்க் காப்பு முயற்சிக்குப் பாடுபடத் தூண்டியது.

பாவாணர் தமிழே உலகின் முதன் மொழி எனவும்,மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டமே எனவும்,தமிழிலிருந்தே பிறமொழிகள் தோன்றின எனவும் பல்வேறு இன்னல்களுக்கு இடையே தம் ஆராய்ச்சி முடிவுகளை உறுதிப்படுத்தி வெளியிட்டார். ஆரியமொழியால் தமிழ் தமிழர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டனர் என்பதை வெளியிட்ட பிறகு தமிழகத்தில் இதுநாள் வரை மண்டிக்கிடந்த ஆரிய அடிமை உணர்வு ஆட்டம் காணத் தொடங்கியது.தமிழைப் பிறமொழி கலவாமல் எழுதவும் பேசவும் தொடங்கியதால் தமிழ் பண்டைய வளம்பெறத் தொடங்கியது. 

வழக்கிலிருந்த பிற சொற்களைத் தமிழ் அறிஞர்கள் எடுத்துரைக்க அதனைத் திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் மேடைப்பேச்சில்,எழுத்துரைகளில் பயன்படுத்தத் தொடங்கினர். இவ்வகையில் தமிழ் இலக்கணநூல்களில் இலக்கியங்களில் ஆரியக் கருத்துகள் அறிஞர்களால் அடையாளம் காணப்பட்டன. இதேபோல் அரசியல் சமூக நிலைகளில் பார்ப்பனர்களின் அதிகாரம், பதவிப் பெரும்பான்மை இருப்பதைக் கண்டு அரசியல் முனையில் விழிப்புணர்வு ஏற்பட்டது. மொழி அடிப்படையிலும்,அரசியல் அடிப்படையிலும் ஆரியத்தை, அதன் கொள்கைகளை, அடிப்படைக் கட்டமைப்பைக் குலைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. 

தமிழகத் தலைவர்கள் உயர்சாதியினரின் ஆதிக்கம் அரசியல்துறையில் இல்லாமல் செய்தது போல் மொழித்துறையில் வல்ல தமிழறிஞர்களும் திராவிட இயக்கம் சார்ந்தவர்களும் தமிழ் இலக்கியம் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டனர்.கம்பராமாயணம், பாரதம், பகவத்கீதை, பெரியபுராணம் உள்ளிட்ட நூல்களையும் நூல்களின் கருத்துகளையும் எதிர்த்தனர். 

மாற்றுக் கருத்துடைய நூல்களைக் கண்டித்த தந்தை பெரியார் திருக்குறள்,சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களைத் தொடக்கத்தில் எதிர்த்தார்.பின்னர் அதில் உள்ள பிற்போக்கான சிலபகுதிகளை மட்டும் கண்டித்துவிட்டு ஏற்கத் தகுந்த கருத்துகளை ஏற்கலாம் எனக் கருத்துச் சொன்னார். திருக்குறள் மாநாடுகள் நடத்தினார்.1948 இல் திருக்குறள் மாநாடு நடத்தி, ஐவர்குழு அமைத்து(நாவலர் பாரதியார்,புலவர் குழந்தை உள்ளிட்டவர்கள்) பகுத்தறிவு நோக்கில் திருக்குறளுக்கு உரைவரைய வேண்டியதையும் இதன் அடிப்படையில் 25 நாள்களில் புலவர் குழந்தை உரை உருவானதையும் இங்கு நினைவிற்கொள்ளவேண்டும். 

தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருநூல் திருக்குறள் எனும் போக்கு தமிழகத்தில் உருவானதும் திருக்குறளை மூலமாகவும்,உரையாகவும் பலர் பதிப்பித்தனர். அடக்கவிலையிலும், இலவயமாகவும் திருக்குறள் மக்களுக்கு வழங்கப்பட்டன. உரைகள், உரைக்கொத்துகள்,ஆராய்ச்சிக் குறிப்புகள், தெளிவுரை, விளக்கவுரை, பதவுரை, குறிப்புரை எனும் அமைப்பில் திருக்குறள் பல பதிப்புகளைக் கண்டது.ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது. ஒலிவட்டுகளிலும், குறுந்தட்டுகளிலும் பதியப் பெற்றுப் பரவின.உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் தங்களின் பிள்ளைகளுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்தும் பணியில் முன்னிற்கின்றனர். 

இவ்வாறு அனைவராலும் விரும்பப்படும் நூலாகத் திருக்குறள் மாறியதும் அறிஞர்களின் கடைசி விருப்பம் திருக்குறளுக்கு உரை வரைவது என்னும் கருத்தைத் தமிழகத்தில் உருவாக்கிவிட்டது.சமூகத்தில் தங்கள் பெயர் அனைவருக்கும் அறிமுகமானதும் அவர்கள் செய்யும் முதல் வேலையாகத் திருக்குறள் உரைவரையும் வேலை அமைந்துவிட்டது. திருக்குறளுக்கு எல்லாக் காலத்திலும் விற்பனை உள்ளதால் இதில் அனைவரும் தங்களின் தகுதிகளுக்கு ஏற்பச் செயல்படுகின்றனர்.பாவாணர்,பெருஞ்சித்திரனார் தங்களின் அறிவைப் பயன்படுத்தி இனமீட்புக்கு,மொழி மீட்புக்கு உரைகண்ட நிலைமாறி திருக்குறள்,திருவள்ளுவர் விருதுகளுக்கு இன்றைய உரைவரையும் போக்கையும் தமிழ்ச் சமூகத்தில் காணமுடிகின்றது. 

இன்று வெளிவரும் உரைகளைப் பார்க்கும்பொழுது பெரும்பாலான குறட்பாவிற்கு அனைவரும் ஒன்றுபட்ட உரையே கண்டுள்ளனர்(மு.வ.உரையின் மறுபதிப்பாகவே உள்ளன).சில குறட்பாக்களுக்கு மட்டும் உரை காண்பதில் வேறுபடுகின்றனர்.தமிழ்,திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டுள்ள அறிஞர்களின் உரைகளுக்கு இடையிலும் சில தனித்த போக்கினைக் காணமுடிகின்றது.தமிழ் இயக்க உணர்வாளர்கள் கண்டுள்ள உரைகளில் ஆரிய எதிர்ப்பு,மனுமுதலிய கொள்கைகள் எதிர்ப்பு, இவற்றைக் கைக்கொண்ட பரிமேலழகர் எதிர்ப்பு, தமிழ்மரபுகாட்டல் எனும் தன்மைகள் காணப்படுகின்றன.திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் கண்டுள்ள உரைகளில் கடவுள் மறுப்பு, பெண்ணடிமைக் குறிப்புகள், விதி(ஊழ்) மறுப்பு, பார்ப்பன அடையாளம் எதிர்ப்பு உள்ளிட்ட தன்மைகள் காணப்படுகின்றன. 

தமிழ்,திராவிட இயக்க உணர்வுடைய அறிஞர்கள் வரைந்துள்ள உரையில் திருவள்ளுவரின் உள்ளம் காட்டும் முயற்சியில் அவர் குறிப்பிடும் இறைவன்,ஊழ் பற்றிய சிந்தனைகளை ஏற்றும் உரை கண்டுள்ள தன்மையைப் பார்க்கமுடிகிறது.பொற்கோ அவர்களின் உரையில் வள்ளுவர் உள்ளத்தை மனத்தில்கொண்டு உரை காணப்பட்டுள்ளது.உரையில் இன்னும் உண்மைப்பொருள் விளங்காத இடங்களைப் பொற்கோ குறிப்பிட்டுச் செல்கின்றார்.இது ஒருவகை உரை வரையும் போக்காக உள்ளது.கலைஞர் உரையில் பகுத்தறிவு கண்கொண்டும், கற்பனைநயம் மிளிரவும் உரை உள்ளது.சில இடங்களில் கலைஞர் திருவள்ளுவர் கருத்துக்கு உடன்பட்டே செல்வதைக் காணமுடிகின்றது.பாவேந்தர் வரைந்த உரை(குயில் இதழில் வள்ளுவர் உள்ளம் என்ற பெயரில் 08.12.1961 -07.02.1961 வரை உரை வரைந்துள்ளார்.83 குறட்பாக்களுக்கு இவர்தம் உரை உள்ளது.)திருக்குறளின் உண்மை வடிவை மாற்றும் வகையில் அவர்தம் தமிழ்ப்பற்று மிகுந்து விடுகின்றது. 

திருக்குறளுக்கு உரைகாண வேண்டிய முறைகள் 

திருக்குறளின் குறட்பாக்கள் தவிர அதனை இயற்றிய திருவள்ளுவர் பற்றிய மெய்யான சான்றுகள் நமக்குக் குறைவாகவே கிடைக்கின்றன.எனவே நாம் வெளியிடும் கருத்துகளுக்குச் சான்றுகள் இல்லாததால் அறிஞர் உலகம் அவற்றை ஏற்கத் தயங்குகின்றது.எனவே நம் கொள்கை,நம் உணர்வு,நம் விருப்பம் இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு திருவள்ளுவர் காலச் சமூகத்தையும்,காலப் பழைமையையும் மனதில்கொண்டே உரை வரையவேண்டும்.விளக்கம் தரவேண்டும். 

அறிஞர் இரா.இளங்குமரனார் குறிப்பிடுவது போல் திருக்குறளுக்குத் திருக்குறளிலேயே பல இடங்களிலில் உரை உள்ளதை முதற்கண் மனத்தில் கொள்ளவேண்டும். அவர்காலத்தில் இல்லாத புராணச்செய்திகள் பிற்காலத்தில் எற்பட்டுள்ளன.பிற்காலச் செய்திகளின் அடிப்படையில் முற்கால வரலாற்றைத் திரிக்கக்கூடாது (ஐந்தவித்த இந்திரன் கதை).திருக்குறளில் ஆளப்பட்டுள்ள பல கருத்துகள்,சொற்கள் இன்றைய நிலையில் வைத்துப் பொருள் காணப்படுவதால் பல குழப்பங்களுக்கு வழி வகுக்கின்றன.திருக்குறளை உலகம் முழுவதும் பரப்பும்பணியில் திருவள்ளுவர் தவச்சாலை கண்டுள்ள இரா.இளங்குமரனாரின் வாழ்வியலுரையில் திருக்குறளுக்குப் பல இடங்களுக்குப் பொருத்தமான உரை கண்டுள்ளார். 

திருக்குறளுக்கு உரை காணும் அறிஞர்கள் திருக்குறளுக்குப் புது விளக்கம் தருவதுடன் அதிகாரத் தலைப்பு மாற்றம் செய்துள்ளமையும் காண முடிகின்றது.அதிகாரத் தலைப்புகள் தங்கள் கொள்கைகளுக்கு ஒத்துவராததால் மாற்றிய முறையை (கலைஞர். பாவேந்தர்)க்காணும் அதே நிலையில் இளங்குமரனார் இறைவணக்கம் எனத் தலைப்பு இட்டுள்ளதற்குக் காரணம் காட்டுகிறார்.திருக்குறளில் எந்த இடத்தும் கடவுள் என்னும் சொல்வரவில்லை எனவும் வாழ்த்து என்னும் சொல் எவ்விடத்தும் இல்லை எனவும் கூறி இறைவணக்கம் எனப் பெயரிடுகின்றார்.அதுபோலவே புதல்வரைப் பெறுதல்(7) என்னும் அதிகாரத் தலைப்பை மாற்றும்பொழுது இத்தொடர் நூலின் எவ்விடத்தும் இல்லை எனவும் மக்கட்பேறு என உள்ளதையும் குறிப்பிட்டு மக்கட்பேறு எனத் தலைப்பிட்டதைக் குறிப்பிடுகிறார். 

இரா.இளங்குமரனாரின் உரைக் குறிப்புகளில் அரிய விளக்கம் சில உள்ளன.திருக்குறள் குறட்பாவில் வரும் இறை என்னும் சொல் சாதி,மத உணர்வுகளைத் தூண்டும் நோக்குடையது அன்று.மெய்யுணர்தல்,அவா அறுத்தல்,பேரா இயற்கையாம் செம்பொருளைக் கண்டுகொள்ள வழி வகுப்பது அது என விளக்குகிறார்(தந்தை பெரியாரும் இதே கருத்தினர்.காண்க : பெரியார் சிந்தனைகள்,தொகுதி.2,பக்கம்1260-65) 

கடவுள் வணக்கத்திலும் உருவ வணக்கம் இல்லை எனவும்,1330 குறட்பாக்களில் ஓர் இடத்தில்கூட கடவுள் என்ற சொல் இல்லை எனவும்,கடவுள் பெயரில் நடைபெற்ற உயிர்க் கொலையைத் திருவள்ளுவர் கண்டிக்கிறார் எனவும் பெரியார் குறிப்பிடுகின்றார் (மேலது). மேலும் அந்தக் காலத்தில் இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் எனவும் இன்றைய நிலையில் திராவிடர்க்கு ஒழுக்க நூல் குறள்தான் எனவும் பெரியார் குறிப்பிட்டுள்ளார்(மேலது). 

இரா.இளங்குமரனார் திருக்குறளில் பொருள் காண அறிஞர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்தும் சிக்கலான சில இடங்களுக்குத் தெளிந்த பொருள் கிடைக்கச் செய்துள்ளார். அவ்வகையில் பின்வரும் கருத்தினை இளங்குமரனார் முன்வைத்துள்ளார்: 

புத்தேளிர் : தமிழகத்திற்குப் புதியதாக வந்தவர்கள்(58) 

இந்திரன் : ஐம்புல அடக்கத்திற்குச் சான்றானவன்(25) 

காமன்,வேள்வி,தவம்,நோன்பு,அந்தணர்,பார்ப்பான்,மறுமை,எழுமை, இருபிறப்பாளர், வீடு, நிரயம், பேய்,அலகை,ஊழ்,மறை எனும் சொற்கள் யாவும் தமிழ்மரபு சார்ந்து ஆளப்பட்டவை என்கிறார்.திருக்குறளின் துணைகொண்டே இவற்றை விளக்குகின்றார். 

தாமரையினாள்,செய்யாள்,திரு என்பன செல்வம்,நன்மை ஆகியவற்றின் உருவகம் என்கிறார்.முகடி(617),தவ்வை(937) என்பனவும் தொன்மக்கதை வழி பார்க்கும் பெயர்களன்று என்கிறார். 

பாவாணர் உரை 

பாவாணர் திருக்குறளை ஆழமாக நேசித்தவர்.குறடபாக்களைத் தம் ஆய்வுகளில் ஆங்காங்கு தக்க வகையில் பயன்படுத்தியுள்ளார்.குறளில் இருந்த பயிற்சி போலவே பரிமேலழகரின் உரையில் நல்ல விருப்பம் கொண்டவர்.பாவாணரின் உயிர்க்கொள்கை தமிழ்,தமிழர். இவற்றிற்கு எதிரான கருத்துகள், ஆரியச் சார்பாக்கித் திருக்குறளைக் காட்டியவற்றைப் பாவாணரால் பொறுத்துக்கொள்ள முடியாமல் தமிழ் மரபுரை செய்ய வைத்தது.தமிழ் மரபுகாட்டி இவர் செய்துள்ள உரை பரிமேலழகரையும் அவர் தம் ஆரியச் சார்பையும் தக்காங்கு மறுத்துள்ளது.

பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்களை உரை வரையத் தூண்டியது பாவாணர் உரை.பாவாணரின் உரை பெரும்பாலும் பரிமேலழகரின் வள்ளுவத்துக்கு மாறான கருத்துகளை மறுக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.பரிமேலழகர் வழுவியுள்ள இடங்களைப் பாவாணர் திறம்பட எடுத்துக்காட்டி நிறுவியுள்ளார். பரிமேலழகரின் உரை பற்றிப் பாவாணர் கருத்து : 


'பரிமேலழகருரையே தலைசிறந்ததெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாததெனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது.அது பெரும்பா£லும் ஏனை யுரைகளெல்லாவற்றினுஞ் சிறந்ததென்பதும்,சில குறள்கட்கு ஏனையுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும் உண்மையே.ஆயின் பெறுதற்கரிய அறுசுவை யரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ளதொப்ப,உண்மைக்கு மாறானதும்,தமிழுக்கும்,தமிழர்க்குங் கேடு பயப்பதுமான ஆரிய நஞ்சுக் கருத்துகளை,முதலும் இடையும் முடிவுமாக நெடுகலும் குறிக்கோளாகக் கொண்டு புகுத்தியிருப்பது, இவ்வுரையை நடுநிலையுடன் நோக்கும் எவர்க்கும் புலனாகாமற் போகாது.இனி சில குறள்கட்கு முழுத் தவறாகவும்,சில குறள்கட்கு அரைத் தவறாகவும் பொருள் காட்டியுள்ளார்.சில சொற்களை வடசொல்லாகக் காட்டியிருப்பதுடன் சில சொற்கட்குத் தவறான இலக்கண வழுவமைதியுங் கூறியுள்ளார்'.(திருக்குறள் தமிழ் மரபுரை தொகு.1. பக்.18). 

பாவாணர் திருக்குறளின்மேல் கொண்ட பற்றின் காரணமாக உரைகண்டார் என்பதை விடப் பரிமேலழகர் வழுவியுள்ள இடங்களை எடுத்துரைத்து அடையாளங் காட்டுவதும், பொருத்தமான தமிழ்மரபுகளை முன்வைப்பதும் நோக்கமாகத் தெரிகிறது. பரிமேலழகர் வழுவியுள்ள இடங்களாகப் பாவாணர் குறிப்பிடும் இடங்கள்: 


1.ஆரியவழி காட்டல்(குறள் 27,களவியல் முன்னுரை) 

2.பொருளிலக்கணத்திரிப்பு( '...வடநூலுட் போசராசனும்...களவியல்.) 

3.ஆரியவழிப்பொருள் கூறல்(குறள் 43 பிதிரராவர் -படைப்புக்காலத்து அயனாற் படைக்கப் பட்டதோர் கடவுட்சாதி இஃது வேதக்கருத்து) 

4.ஆரியக் கருத்தைப் புகுத்தல்(560 குறளுக்குப் 'பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும்,அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பமென்பன ஓதாமையானும்,வேள்வி நடவாதாம்' என்பது காண்க) 

5.தென்சொல்லை வடசொல் மொழிபெயர்ப்பு எனல் 

உழையிருந்தான் எனப்பெயர் கொடுத்தார்,அமாத்தியர் என்னும் வடமொழிப்பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின்( ) 

6.தென்சொற்கு வடமொழிப்பொருள் கூறல் 

அங்கணம் = முற்றம் 

7.சொற்பகுப்புத் தவறு 

பெற்றத்தால்- பெற்ற வென்பதனுள் அகரமும்,அதனானென்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தாற் றொக்கன(524,உரை) 

8.சொல் வரலாற்றுத் தவறு 

அழுக்காறென்னும் சொல்குறித்த விளக்கம். 

9.சொற்பொருள் தவறு 

இனிது =எளிது(103) 

10.அதிகாரப்பெயர் மாற்று 

மக்கட்பேறு = புதல்வரைப்பெறுதல் 

11.சுட்டு மரபறியாமை 

அஃதும் = ஏனைத்துறவறமோ வெனின்(குறள். 49) 

12.இரு குறளைச் செயற்கையாக இணைத்தல் 

குறட்பாக்கள் 631,632 

பாவாணரின் உரைச்சிறப்பு 

பாவாணர் உரை பரிமேலழகர் வழுவிய இடங்களை எடுத்துக் காட்டியுள்ளதுடன் தமிழ்மரபுக்கு உகந்த வகையிலும் தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை நினைவுகூரும் வகையிலும் பல இடங்களில் உள்ளன.வேர்ச்சொற்கள் பல விளக்கப்பட்டுள்ளன.புதுச்சொற்கள் பல படைக்கப்பட்டுள்ளன. ஊர்வனவற்றை ஊரி எனவும்,ஞானியார் என்பதை ஓதியார் எனவும்ஆடம்பரம் என்பதை ஒட்டோலக்கம் எனவும் யோகம் என்பதை ஓகம் எனவும், பிரமசரியம் என்பதை மாணிகம் எனவும்,வாதி என்பதை உறழி எனவும்,உபாயம் என்பதை ஆம்புடை எனவும்,பாவனை என்பதை உன்னம் எனவும் பாவாணர் ஆண்டுள்ளார். தமிழ்ச் சொற்களைத் தருவதுடன் 'பரிந்தோம்' என்பதில் வரும் வேள்வி ஆரியவழியிலான கொலை வேள்வி எனப்பரி. பல இடங்களில் விளக்கம் காணப்,பாவாணரோ வேள்வி என்னும் தூய தென்சொல் விரும்பு என்னும் பொருளில் தமிழ்,மலையாளம்,தெலுங்கு மொழிகளிலும் உள்ளதை எடுத்துக்காட்டுவார்(88). 

எழு பிறப்பு என்பதற்கு உரையாசிரியர்கள் ஒவ்வொரு விளக்கம் தரப் பாவாணர் ஏழு என்பது ஒரு நிறைவெண்;ஆதலால் நீண்ட காலத்தைக் குறிப்பது என்கிறார்(62). 

பொருத்தமான இடங்களில் பொருத்தமான தமிழ் இலக்கியச் செய்திகளையும் வரலாற்றையும் பாவாணர் உரையில் குறிப்பிட்டுச் செல்கின்றார்.ஒளவையார் தூது சென்றமை (அதி.69),வடநாட்டிற்குச் சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் சென்றபொழுது முப்பத்தி யிரண்டு மாதம் நீங்கியிருந்தும் நாட்டில் குழப்பமின்மைக்குக் காரணம் அவனது அனைத்திந்தியத் தலைமையைச் சுட்டுவது(குறள் 741),ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தன் செங்கோல் தவறியதால் உயிர் நீத்தமை(969),குமணவள்ளல் தன் உயிர் தர அணியமாய் இருந்தமை(குறள்.72)உள்ளிட்ட செய்திகள் இடம்பெற்றுள்ளமை பிற உரையாசிரியர்களிடம் காணப்படாத தன்மையாக உள்ளது. 

'கேட்ட தாய்' என்னும் தொடருக்கு உரைவரையும்பொழுது பரிமேலழகரின் கருத்தை எடுத்துக்காட்டி,சங்க காலத்தில் வாழ்ந்த 'ஒளவையார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், ...வெறிபாடிய காமக்கண்ணியார் முதலிய பண்டைப் புலத்தியரை அவரும் அறிந்திருந்தமையால்,அவர் கூற்று நெஞ்சார்ந்த பொய்யுமாம்'(குறள் 69 உரை) என்று எழுதும்பொழுது பாவாணர் பண்டைக்காலத்துப் பெண்பாற்புலவர்களை நினைவுகூர்வார். 

பாவாணர் தம் உரையில் தமிழ் 65,மலையாளம் 1,ஆங்கிலம் 4 என எழுபது பழமொழிகளைப் பயன்படுத்தியுள்ளமையை ஆ.முத்துராமலிங்கம் குறிப்பிடுவர்(2003,ஆ.கோ.3). பாவாணர் உரை வரைந்த பகுதிகளுள் மருந்து என்னும் அதிகாரத்திற்கு வரையும் உரைப்பகுதிகள் அறிஞர் உலகால் என்றும் போற்றப்படும் ஒன்றாக உள்ளது.நோய் வகை, நோய்நீக்கும் வகை,மருந்து வகை,மருந்து அதிகாரம் பெயர்பெற்றமை முதலியவற்றை விளக்கும் பாவாணர் எந்த எந்த உணவுப்பொருள் எந்த எந்த நோயைக் குணப்படுத்தும் என்பதைக் (குறள்.942இல்) குறிப்பிட்டுள்ளார்.திருக்குறளுக்கு உரை வரைந்துள்ள உரையாசிரியர்கள் பலராலும் காட்டமுடியாதபடியான இலக்கண,இலக்கியவழக்கு,மரபு,பிறமொழி சார்ந்த செய்திகள் பாவாணரின் உரையில் மிகுந்து காணப்படுகின்றன. 

பாவேந்தர் உரை 

'மதமிலார் நூற்கு மதமுளார் உரைசெயின் 

அமைவதாகுமோ? ஆய்தல் வேண்டும்' 

என்பார் பாவேந்தர். எனவே மதக் கருத்துகள் நீக்கித் திருக்குறளுக்கு உரைவரையப் பாவேந்தர் திட்டமிட்டுக் குயில் ஏட்டில் உரைவரைந்தார்(08.12.1959-07.02.1961 குயில்,வள்ளுவர் உள்ளம் என்னும் தலைப்பில்).இப்பணி தொடராமல் இடையில் நின்றுவிட்டது. பாவேந்தர் உரையை நோக்கும்பொழுது பரிமேலழகர் வழியை மாதிரியாகக் கொண்டு தமிழ் நெறி என்னும் அடையாளத்துடன் தம் உரையை வரைய முயற்சி செய்துள்ளார்.திருவாரூர் கபிலரால் நூலாக்கம் செய்யப்பெற்ற எண்ணூல் அடிப்படையில் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியதாகப் பாவேந்தர் குறிப்பிட்டுள்ளார். 

பாவேந்தர் அதிகாரத்தலைப்பு மாற்றம் செய்துள்ளமை,புதுப்பொருள் காண முயன்றமை,கடவுள் மறுப்பு,பெண்ணுரிமை பற்றிய தம் கொள்கைகளைத் தம் உரையில் பெய்து பார்த்துள்ளார்.கடவுள் வாழ்த்தை இறைவணக்கம் எனப் பிறர் எழுதப் பாவேந்தர் 'உலகின் தோற்றம்' என்று அதிகாரப்பெயர் மாற்றம் செய்கின்றார். பிற தமிழறிஞர்களைப் பின்பற்றிப் புதல்வரைப்பெறுதல் என்பதை மக்கட்பேறு என்கின்றார். எழு பிறப்பு என்பதை ஏழுதலைமுறை என்கிறார். 

'மலர்மிசை ஏகினான்' என்பதை விளக்குமிடத்து மலர் என்பதற்கு உலகம் என்னும் பொருள் உள்ளதை எண்ணூல் கருத்தின் துணையுடன் உலகம் என்றே குறிப்பிடுகிறார். (சமணச்சார்பில் எழுந்த உரையான சிறீ சந்திரனாரின் உரையில் 'மலரின்மேல் நடந்த அருகப்பெருமான்' என்று குறிப்பார்.பரிமேலழகர் இப்பகுதிக்கு எழுதும்பொழுது' இதனைப்பூமேல் நடந்தான் என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர்' என்பது பிறிதோர் கடவுள் இங்குச் சமண சமயக்கடவுளாகும்.சிவன் பூமேல் நடந்தவன் என அப்பர் பாடிய ஒருபாடலும்(தேவாரம்- தாளிடைச்செங்கமல...) அவரின் முன்னைய சமணச்சமய சார்பிலானது என்பர் மயிலை.சீனிவேங்கடசாமி(மேற்கோள்) திருக்குறள், வர்த்தமானன் வெளியீடு). 

பாவேந்தர் திருக்குறளுக்கு உரைவரைவதன் முன்பு உரைப்பாயிரம் வரைந்துள்ளார்.அவ்வுரைப் பாயிரப்பகுதி வருமாறு: ' இனி அகம் புறம் எனும் இரு பொருளும் பற்றிச் செய்யுள் செய்தார் ஆயின் அவற்றால் எய்தும் பயன்கள் எவை எனின் அறம்,பொருள்,இன்பம்,வீடு என்னும் நான்கு என்க.இவ்வாறு நூற்பயன் நான்காகக்கொள்வது வடவர்முறை அன்றோ எனின்,அன்று.....'என்று தம் உரைப் பாயிரத்தைத் தொடங்கி எழுதுகின்றார். முதற் குறட்பாவுக்கு உரை வரையும்பொழுது,' உலகும்,உயிர்களும் மற்றுமுள் ளவைகளும் ஆதி என்பதின்று தோன்றியவை.ஆயினும் உலகமக்கள் பெறத்தக்க பேறு மெய்யுணர்வு ஒன்றே.... 

ஆதி வடசொல் அன்று.தூய தமிழ்ச்சொல்லே.அஃது ஆதல் எனப்பொருள்படும் தொழிற்பெயர். 

பகவன் வடசொல் அன்று. பகல் எனப் பொருள்படும். பகவு ஆண்பால் இறுதிநிலை பெற்றது.பகல்-அறிவு' என்பது பாவேந்தரின் உரை. 

பாவேந்தர் உரையை நோக்கும் பொழுது அவர்தம் காலத்தில் அவருக்கு இருந்த கொள்கையீடுபாட்டுடன் அவர் உரை வரைய முனைந்துள்ளமை புலனாகின்றது.அவர் தம் உரை குறித்து எவரேனும் ஐயம் எழுப்பினால் அவர்களுக்கு விடைதரும் வகையில் வினாக்களை அவரே எழுப்பிக்கொண்டு ஆத்திகர் நாத்திகர் உரையாட்டாக அமைத்துத் தம் விளக்கத்தையும் பாவேந்தர் தந்துள்ளார்.'ஆய்விடுமானால் ஆய்விடட்டும்.அதனால் உமக்கென்ன முழுகிப்போகும்? 'என்று உணர்ச்சிவயப்பட்டு எழுதும் பாவேந்தரைப் பல இடங்களில் காணமுடிகின்றது.

பெருஞ்சித்திரனார் உரைச்சிறப்பு 

பரிமேலழகர் அவர் காலத்திற்கு முந்தைய உரைகளைக் கற்று உரை வரைந்துள்ளார்.133 இடங்களில் பிறர் உரை சுட்டுவதையும்,48 இடங்களில் பாட வேறுபாடு காட்டுவதையும்,230 மேற்கோள்கள் ஆளப்பட்டுள்ளதையும் 286 இடங்களில் அரும்பொருள் விளக்கம் தந்துள்ளதையும்,வடமொழி நூல்களில் நல்ல தோய்விருந்ததையும் கற்ற பேராசிரியர் அருளி வியப்படைவர்(திருக்குறள் மெய்ப்பொருளுரை, தொகு.1,பக்.19). இவ்வாறு பரிமேலழகர் மிகப்பெரும் திட்டமிடலுடன் உரை வரைந்தது போலப் பெருஞ்சித்திரனாரும் மிகப்பெரும் திட்டமிடலுடன் திருக்குறளுக்கு ஏறத்தாழ எட்டாயிரம் பக்கங்களில் உரை வரையத் திட்டமிட்டும் தமிழர்களின் போகூழ் குறைந்த அளவிலான குறட்பாக்களுக்கே உரை நமக்குக் கிடைக்கலாயிற்று.அவ்வாறு 240 குறட்பாக்களுக்கு நான்கு தொகுதிகளாக உரைநூல் வெளிவந்துள்ளன. 

முன்னுரைப் பகுதியே மிகப் பெரிய அறிவு ஆராய்ச்சிக் களமாகத் தெரிகின்றது.அதனை அடுத்து அவர் வரைந்துள்ள பகுதிகள் தமிழ் உரை வரலாற்றில் மிகப்பெரிய இடம்பெறத்தக்கன. 

பெருஞ்சித்திரனார் மெய்ப்பொருள் உணர்வுடையவர்.ஓரிறைக் கொள்கை உடையவர்.இவர்தம் மெய்ப்பொருள் உணர்வும்,இறைநெறி சார்ந்த கருத்துகளும் உரிய இடங்களில் பதிவாகியுள்ளன.இவர்தம் சொல்லாராய்ச்சியும், ஆழமான உலகியல் அறிவும்,யாப்பு ஆற்றலும்,பன்னூல் பயிற்சியும்,பல துறை அறிவும் கண்டு வியப்பே மேலிடுகின்றது. பெருஞ்சித்திரனார் தாம் உணர்ந்த மெய்ப்பொருள் உணர்வுகளைத் தம் உரையில் பொருத்தி எழுதியுள்ளார். 

பாவேந்தர் குயில் இதழில் உரை எழுதியபொழுது பரிமேலழகரின் ஆரியக் கருத்துகளை மட்டும் நீக்கி விட்டால் அவ்வுரையே போதும் எனவும்,பாவாணர் மரபுரை தந்த பிறகு வேறு எவரும் திருக்குறளுக்கு உரை வரைய வேண்டியதில்லை எனவும் கருதிய பெருஞ்சித்திரனார் பின்னர் காலத் தேவையறிந்து தாமே மிகப்பெரிய அளவில் உரை வரைய எண்ணினார்.இவர் சிறையில் இருந்தபொழுது இவ்வுரைத் தொகுதிகள் எழுதப்பெற்றன. 

திருக்குறளும் உரைகளும் குறிப்பிடும் பொருளின் துல்லியத்தை உரைப்பதே மெய்ப்பொருளுரையின் நோக்கமாகும் (ப.45). 

திருக்குறளுக்கு உரைவரையும்பொழுது தொல்காப்பியம், நன்னூல்,கழகநூல்கள், காப்பியங்கள், தனிப்பாடல்கள்,சமயப் பாடல்கள்,சாத்திர நூல்கள், தோத்திர நூல்கள் எனப் பல வகைப்பட்ட நூல்களையும், பிறமொழி நூல்களையும் பயன்படுத்துவதுடன் அறிஞர்களின் கருத்துகளைப் பொருத்தமான இடங்களில் போற்றுவதும் குறைபாடுடைய இடங்களில் சுட்டிச்செல்வதும் இவர்தம் இயல்புகளாக உள்ளன. மூலநூல்ஆசிரியரையும் தேவையான இடங்களில் அடையாளப்படுத்துவதும் இவர்தம் இயல்பாக உள்ளன.பிறமொழி, பிறமதம், பிற பண்பாட்டுச் செய்திகளையும் பெருஞ்சித்திரனார் விளக்கிச் செல்கிறார். 

முன்னுரை,பால்விளக்கம்,பாயிர விளக்கம்,அதிகாரவிளக்கம்,குறள் விளக்கம் என வகுத்து இவர் உரை வரைந்துள்ளார்.மேலும் குறள்,பொருள்கோள் முறை,பொழிப்புரை,சில விளக்கக்குறிப்புகள் என்னும் அமைப்பில் உரைநூல் அமைப்பு உள்ளது. 

பெருஞ்சித்திரனார் திருக்குறள் ஆரியக்கருத்துகளுக்கு எதிராக எழுதப்பட்ட நூல் எனப் பல சான்றுகளுடன் நிறுவுகிறார்.குறிப்பாக மனுநூலில் குறிப்பிடும் கருத்துகளை எடுத்துக்காட்டி விளக்கி,இவற்றை எதிர்க்கவே வள்ளுவர் தம் குறட்பாக்களைப் படைத்துள்ளார் என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்.குறிப்பாக உழவுத்தொழிலை இழிவான தொழிலாகக் குறிப்பிடும் மனுதரும கருத்துகளை எடுத்துக்காட்டி இவற்றுடன் வள்ளுவரின் கருத்துகள் எந்த அளவு உயர்வுடையனவாக விளங்குகின்றன என்பதை முறைப்படக் காட்டியுள்ளார். உயிர்க்கொலை பற்றி மனுவின் கருத்தும் வள்ளுவரின் கருத்தும் முரண்பட்டு நிற்கும் இடங்களையும் பெருஞ்சித்திரனார் விளக்கியுள்ளார்.மேலும் திருவள்ளுவரின் தமிழியல் பார்வையும் ஆரியவியல் எதிர்ப்பும் தவிர்ப்பும் என்னும் பகுதி(முதல்தொகுதி,பக்.123) பெருஞ்சித்திரனாரின் பன்னூல் பயிற்சிக்குக் கட்டியம் கூறி நிற்பன.(இவற்றின் சிறப்பை மூல நூலில் கண்டு மகிழ்க). 

விளக்கக் குறிப்புகளில் சொற்பொருள் வரைந்தும் சொல்நயம் சுட்டியும், பல பொருத்தமுடைய மேற்கோள்களை எடுத்துரைத்தும் இதுவரை யாரும் இதுபோல் உரை வரையவில்லை என முடிவுசெய்யும் பொறுப்பை நமக்கே வழங்கி விடுகின்றார். 

தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் உரைவரையும் பொழுது பெரிதும் மாறுபட்டு நிற்கும் இடங்களில் பெருஞ்சித்திரனார் பொருத்தமான விளக்கம் தர முயன்று இவரும் கருத்து வேறுபாடுகளுக்கு இடந் தந்து நிற்கிறார்.ஒலி,எழுத்து,சொல்,தொடர்களில் எல்லாம் மெய்ப்பொருள் உணமைகள் பொதிந்துள்ளதை நுட்பமாக ஆராய்ந்து எழுதியுள்ளார். 

'அகர எழுத்தே கூட,வரிவடிவில்,தொடக்கத்தில் இருந்த நிலைக்கும் இன்றுள்ள நிலைக்கும் எத்தனையோ மாறுதல்கள் அடைந்துள்ளன.ஆனால்,ஒலிவடிவம் ஒன்றுதான்.அதுபோல் இறையுணர்வு தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஒன்றுதான். வடிவங்கள் மாறுதல் அடைந்து வந்துள்ளன.(தொகு.2,பக்.61). 

'பிறப்பு' - எனும் சொல்லில் ப்+இ -பி -மெய்களோடு உயிர் சேர்ந்திருப்பதையும்,'இறப்பு' என்பதில் 'இ' - மெய்நீங்கிய உயிர்மட்டும் இருப்பதையும் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளதையும்(பக்.62) நோக்கும் பொழுது பெருஞ்சித்திரனாரின் இறையுணர்வு வெளிப்பட்டு நிற்கிறது. 

பெருஞ்சித்திரனார் திருக்குறள் மெய்ப்பொருளுரையில் பல சொற்களுக்கு விளக்கம் வரைந்துள்ளார் அவற்றுள் இறைவன்(மூலமாய்,முதலாய் நிற்கும் முதற்பொருள்), கடவுள்(அம்மூலப்பொருள் உயிர்களுடன் கலந்துநிற்கும் நிலை),தெய்வம் (உயிர்களுள் மேம்பாடுற்றுச் சிறந்த மீமிசை மாந்த உயிர்கள்,உலகத்து வாழ்ந்து மறைந்து,மீண்டும் உடற்பிறவியற்று உயிரொளியாய் இயங்கும் நிலை) இவற்றிற்கு வரையும் உரை இவர்தம் உரையால் உண்மைபோல் காட்டப்படுகின்றது(2,பக்.25). 

இறை,மதம் சமயம்,அகமனம்,புறமனம்,ஓகம்,ஊழ்கம் என இவர் தரும் விளக்கம் சமயவாதிகளை விட இத்துறையில் இவருக்கு இருக்கும் பேரறிவைக்காட்டி நிற்கின்றன.இவையெல்லாம் திருவள்ளுவர் சொல்ல நினைத்த கருத்துகளா என நடுநிலையுடன் நின்று நோக்குவர் கேட்கத்தோன்றும்.தம் அறிவையும் தம் கொள்கையும் திருவள்ளுவருக்கு அல்லது திருக்குறளைச் சார்பாக்கிப் பெருஞ்சித்திரனார் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிஞருலகம் விளங்கிக்கொள்ளும்.இவ்வவாறு பல மெய்ம்மவியல் கருத்துகளைக் குறிப்பிட்டிருந்தாலும் இவர்தம் சொற்பொருள் விளக்கம் பிறரால் தரமுடியாத ஒன்றாகும். 

பெருஞ்சித்திரனாரும் அதிகாரப்பெயர் மாற்றம், குறளை வகையுளி இல்லாமல் எழுத சிறு மாற்றங்களைக் குறித்துக் காட்டியுள்ளார்(குறள். 4). 

திருக்குறளின் முதல் அதிகாரத்தைக் கடவுள் வாழ்த்து எனப் பொதுப்பட குறிப்பிடுவதை உரையாசிரியர்கள் இறைநலம் (சி.இலக்குவனார்), இறைவாழ்த்து (அப்பாத்துரை), உலகின்தோற்றம்(பாவேந்தர்) முதற்பகவன் வழுத்து(பாவாணர்), வழிபாடு(கலைஞர்), இறைவணக்கம்(இரா.இளங்குமரனார்) எனக் குறிப்பிடுகின்றனர்.அதைப் போலப் பெருஞ்சித்திரனார் 'அறமுதல் உணர்தல்' என்று குறிப்பிட்டு உரை வரைந்துள்ளார். 

அறமுதல் உணர்தல் அதிகாரத்தில் உள்ள பத்துக்குறட்பாக்களுக்கும் மெய்ப்பொருள் நோக்கில் உரை வரையப்பட்டிருப்பினும் சில சொற்களுக்கு விளக்கம் வரையும்பொழுது தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் போல் வரைந்துள்ளது அவர்தம் பழுத்த பேரறிவுக்குச் சான்றாகும். ' வேண்டுதல்',வேண்டாமை' எனும் இரு சொற்களுக்கு விளக்கம் தரும்பொழுது பற்றாலும் ஆசையாலும் பாசத்தாலும் ஒன்றை விரும்புதல் வேண்டுதல்(விரும்புதல்) எனவும்,வெறுப்பாலும்,பொருந்தாமையாலும் பகையாலும் ஒன்றை விரும்பாமை வேண்டாமை எனவும் விளக்கம் தருகின்றமை பொருத்தமாக உள்ளது. 

இருவினை என்பதற்கு மறவினை(அறத்திற்கு எதிரானது),தீவினை(நன்மைக்கு எதிரானது) எனும் விளக்கம் நாம் அறியாத ஒன்றாக இருக்கின்றது. 

அமிழ்தம் என்னும் சொல்லுக்குப் பாற்கடல் அளவில் நம் அறிஞர்கள் விளக்கம் தர,'அம்''அம்' என்பது குழந்தை தாய்முலையில் பாலருந்தும் ஓர் ஒலிக்குறிப்பு.அம்மம் - தாய்முலை.அம்மு - முலைப்பால் - அமுது -அமுதம் - அமிழ்தம் எனக்காட்டி அமிழ்தம் முதலில் தாய்ப்பாலைக்குறித்துப் பின் பிற அருந்தும் பாலைக்குறித்தது என்கிறார் பெருஞ்சித்திரனார்(தொகு.1,பக்.86,87). 

'துப்பு' என்பது நுகர்வுப்பொருள் அனைத்தையும் குறிக்கும்.ஆனால் உணவை மட்டும் குறிப்பதாகப் பரிமேலழகர் முதல்,பாவாணர் வரை குறித்திருப்பதைப் பெருஞ்சித்திரனார் குறையுரை என்கிறார் 

'விரிநீர்' என்னும் சொற்கு உணவு ஆக்கத்திற்குக் கடல் நீர் நேரிடையாகப் பயன்படாமை பற்றி உயர்வு நவிற்சியாகக் கூறியது(தொகு.2,பக். 90). 

'தம்பொருள்' எனத்தொடங்கும் குறளுக்கு இதுவரை வந்துள்ள உரைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது பெருஞ்சித்திரனாரின் உரை மயக்கமற்று,மிகத்தெளிவாக,முழுமையான பொருளைக்காட்டி நிற்கின்றது. 

'(இவ்வுலகில்) தம்முடைய பொருள் என்று உரிமை கொண்டாடுவதற்கு உரியவர்கள் தாம் பெற்று உருவாக்கிய தம் மக்களே.மற்று,அவரவரும்(உடைமை நிலையில்)தம்தம் பொருள் என்று கூறிக்கொள்வன,அவரவர் உழைப்பால் ஈட்டி வருவனவே -என்று (உரிமையையும்,உடைமையையும் பிரித்து)உணர்ந்தவர் கூறுவர். ....இது தாய் தந்தை இருவருக்குமே பொது என்பதால் 'தம்' என்றார்.(இது பற்றிய பிற சுவைப்பகுதிகளை மூல நூலில் காண்க.தொகு.2,231). 

இனியவை கூறல் அதிகாரத்தில் உரைவரையும்பொழுது கூறுதல் ,சொல்லுதல் பலவகைப்படும் என்பதைத் திருவள்ளுவர் வழியில் நின்று ,அன்பாகச் சொல்லுதல் முதல் வெல்லும்படி சொல்லுதல் வரையில் 109 தொடர்களைக் காட்டித் திருவள்ளுவத்தில் கூறும் முறைகளைப் பெருஞ்சித்திரனார் காட்டியுள்ள பாங்கினை நோக்கும்பொழுது அவர்தம் திருக்குறள் புலம் நமக்குப் புலப்படுகிறது. 

அனிச்சமலர் பற்றி விளக்கும் பொழுது சங்கநூல்களில் கலித்தொகையில் மட்டும் ஒரிடத்தில் இம்மலர் பற்றி வருகிறது எனவும், திருக்குறளில் வரும் இடங்களில் மென்மைபேசுவது என்று குறித்துள்ளது இவர்தம் துல்லியம் நாடும் போக்கைக்குறிப்பிடுவது.(குறள் 90 விளக்கம்).பெருஞ்சித்திரனாரின் மெய்ப்பொருள் உரையில் சில இடங்கள் மிகைபடக்கூறலாகத் தெரிந்தாலும் அவற்றுள்ளும் பல உண்மைகள் உணர்த்தப்பட்டுள்ளதால் அதுவும் குற்றமில்லை என்க. 

பொற்கோ உரை 

திருக்குறளுக்குப் பொற்கோ வரைந்துள்ள உரை நான்கு தொகுதிகளாக வந்துள்ளன.இவ்வுரை நூலில் பால் விளக்கம்,பாயிர விளக்கம்,அதிகார விளக்கம்,குறள்,உரைத்தொடர்,உரைத்தொடர் விளக்கம்,பொருள் விளக்கமும் குறிப்பும் என்னும் அமைப்பில் செய்திகள் உள்ளன.பொற்கோ பகுத்தறிவுக் கருத்து கொண்டவர் எனினும் திருக்குறள் ஆசிரியர் கருத்தைத் தழுவி உரை வரைய நினைத்துள்ளார். 

கடவுள் வாழ்த்து என்னும் தலைப்பிலேயே கடவுள் கொள்கையை மறுக்காமல் எழுதியுள்ளது அவர்தம் பற்றற்ற, உண்மைகாணும் உள்ளத்தைக் காட்டி நிற்கின்றது.தமக்கு உரை வரையத் தெளிவு கிடைக்காத இடங்களில்'இது இப்போது விளங்கவில்லை' எனவும் 'இக்குறளுக்குப் பொருத்தமான உரை கிடைத்தால் வரவேற்கலாம்' எனவும்(1:8), குறிப்பிடுகிறார்.பிற உரையாசிரியர்களிடமிருந்து வேறுபடும்பொழுது பிறர் உரை பொருந்தாத் தன்மையைக் காட்டுகிறார்(1:6)பரிமேலழகரின் விளக்கம் சிறப்பாக உள்ள இடங்களைப் பாராட்டுகிறார்
(1:11). 

திருக்குறளுக்குத் தன் அனுபவ நிலையிலிருந்து பொற்கோ உரை வரைந்துள்ளாரேயன்றிப் பிற நூல்களிலிருந்து மேற்கோள் காட்டும் வழக்கத்தைக் கைக்கொள்ளவில்லை.அதுபோல் இலக்கணக்குறிப்பு வைத்தல், நயம்பாராட்டல் என்று இல்லாமல் முன்னுரையில் குறித்தாங்கு திருக்குறளை அனைவருக்கும் படிக்கும்படியான நூலாக வழங்கத் தம் உரையைப் பயன்படுத்தியுள்ளார். 

கலைஞர் உரை 

பகுத்தறிவுக்கொள்கையும்,கலையுள்ளமும் கொண்ட கலைஞர் குறளோவியம் கண்டவர்.திருக்குறளுக்கு உரையும் வரைந்துள்ளார்.திருவள்ளுவரின் கருத்துகளுக்கு ஒட்டியும் உறழ்ந்தும் கலைஞரின் உரை உள்ளது.அதிகாரத்தலைப்பு மாற்றம் கலைஞர் உரையில் உள்ளது.அதுபோல் வழக்கமான திராவிட இயக்க உணர்வாளர்கள் மாறுபடும் சில இடங்களில் புதிய முறையில் உரைகாண முயன்றுள்ளார்.கடவுள் வாழ்த்தை 'வழிபாடு' எனத் தலைப்பாக்குகிறார். 

வாலறிவன் என்பதற்கு அறிவில் மூத்த பெருந்தகையாளன் எனவும் 'மலர்மிசை ஏகினான்' மலர்போன்ற மனத்தில் நிறைந்தவன் இறைவன் எனவும்,அந்தணர் என்பதற்குச் 'சான்றோர்' எனவும்,தென்புலத்தார் என்பதற்கு வாழ்ந்துமறைந்தோர் எனவும்,புத்தேளிர் என்பதற்கு புதிய உலகம் எனவும்,எழுபிறப்பு என்பதற்கு ஏழேழு தலைமுறை எனவும் குறிப்பிடுகின்றார்.கலைஞர் உரை வரையும்பொழுது எமன்,தெய்வம் குறித்த நம்பிக்கைகளை மனத்தில்கொண்டே உரைவரைந்துள்ளார். 

'அறத்தாறு...' எனத்தொடங்கும் திருக்குறளுக்கு உரைவரையும்பொழுது 'அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள்.தீயவழிக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதிகொள்ளாமல்,துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள் என்கிறார்.காமத்துப்பாலுக்கு உரை வரையும்பொழுது கற்பனை ததும்பும் பல இடங்களைக் காணமுடிகின்றது. 

நிறைவுரை 

திருக்குறள் அனைவருக்கும் பொதுவானதாக அமைந்திருந்தாலும் ஒவ்வொருவரும் அதற்குத் தரும் விளக்கங்கள்,பொருள்கொள்ளும் முறைகள் சில இடங்களில் வேறுபாடு கொண்டு விளங்குகின்றன. சமயம் சார்ந்து தரும் விளக்கங்களும்,சமயமறுப்பாளர்கள் தரும் விளக்கங்களும் வேறாக உள்ளன. அவ்வாறு வரையப்பட்ட உரைகளில் அவ்வக்காலச் சமூகச்செல்வாக்கு தெரிகின்றது. 

தமிழ், திராவிட இயக்க உணர்வாளர்களின் விளக்கங்களை (உரைகளை) உற்றுநோக்கும் பொழுது திருக்குறளின் உண்மைப்பொருள் காணும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளமை புலனாகின்றது.மேலும் கருத்து அடிப்படையிலும்,கொள்கை அடிப்படையிலும் சில இடங்களில் மட்டும் மாறுபாடுகொண்டு எழுதும் இவர்கள் பெரும்பான் மையான இடங்களில் ஒன்றிச்செல்கின்றனர்.திருக்குறள் ஆராய்ச்சிக்கும், திருக்குறள் பரவலுக்கும் இவர்களின் உரைகள் பெரிதும் துணைசெய்கின்றன. 

பின்னிணைப்பு - 1 

தமிழ்,திராவிட இயக்க திருக்குறள் உரை நூல்களுள் சில: 

1.புலவர் குழந்தை (1949) 

2..கா.அப்பாத்துரை (1950-54) 

3.பாவேந்தர் (1956) 

4.சி.இலக்குவனார் (1959) 

5.சுந்தரசண்முகனார் (1959) 

6.பாவாணர் (1969) 

7.கு.ச.ஆனந்தன் (1986) 

8.இரா.இளங்குமரனார் (1990) 

9.வி.பொ.பழனிவேலனார் (1990) 

10.வ.சுப.மாணிக்கம் (1991) 

11.இரா.நெடுஞ்செழியன் (1991) 

12.அரிமதி தென்னகன் (1995) 

13.கலைஞர் மு.கருணாநிதி (1996) 

14.பெருஞ்சித்திரனார் (1997) 

15.தமிழண்ணல் (1999) 

16.கல்லாடன் (2000) 

17.ஆ.வே.இராமசாமி (2001) 

18.ச.வே.சு (2001) 

19.பொற்கோ (2004) 

20.பா.வளன்அரசு (2005) 

21.மா.அர்த்தநாரி (2005) 

22.அருளி(இன்பத்துப்பால் மட்டும்) (2006) 

23.தமிழமல்லன் (2006) 

24.கடவூர் மணிமாறன் (2006) 

25.க.ப.அறவாணன் (2007) 


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 28.03.2008 இல் பன்முக நோக்கில் திருக்குறள் என்னும் தேசியக்கருத்தரங்கில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அறிஞர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் படிக்கப்பெற்ற ஆய்வுரை.

நன்றி : திண்ணை இணையதளம், ஏப்ரல்3,ஏப்ரல் 17-2008


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

பிளாகர் Thamizhan கூறியது...

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய முனைவர் அவர்கட்கு,
தங்களது இந்த கட்டுரை எவ்வளவு நேர்மையாகப் பரிமேழளகரைப் புகழ்ந்து அவரது தனிக் கருத்துக்களைத் திணித்துள்ளதை எடுத்தியம்பியுள்ளார்கள் என்று வெளிக் கொண்டுந்திள்ளீர்கள்.
இது பொறுக்காதப் பார்ப்பனீயம் பேரறிஞர் கால்டு வெல்லை இகழ்ந்து தங்கள் தமிழ்ப் பற்றைக் காட்டியுள்ளது.
பெருஞ்சித்திரணார்,பாவாணர் இவர்களெல்லாம் இவர்கள் பார்வையில் தமிழறிஞர்கள் இல்லை.

தமிழ் என்று திராவிடர்கள் சொன்னாலே இவர்களுக்கு ஏன் தான் எரிகிறதோ?

கால்டுவெல் ஒப்பிலக்கணம் கண்டபின் தானே தமிழின் பெருமை தமிழர்களுக்கே தெரிந்தது.

தமிழில் என்ன இருக்கிறது என்று அன்று எல்லாமே திருத்தப்பட்ட மொழியிலிருந்துதான் வந்தது என்றார்கள்.

இன்று பக்தியால் தான் தமிழென்றும், திருக்குறளின் காலத்திலே இருந்த நிலையிலே திருவள்ளுவர் படைத்ததைத் தமிழறிஞர்கள் இன்று ஆய்ந்து எழுதினால் அவர்களை இகழுவதும் இன்னும் அந்த ஆரிய மோகந்தானே இவர்களிடம் உள்ளது என்று காட்டுகிறது.

இவர்கள் இன்னும் தமிழ் தமிழ் என்று யாரை ஏமாற்ற அலைகின்றனர்.

தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி.

26/4/08 20:21

 
பிளாகர் thiru கூறியது...

அன்புடையீர்
வணக்கம். பாவாணரின் திருக்குறள் தமிழ் மரபுரையை மீண்டும் படித்துப் பாருங்கள். மொழி ஞாயிறு அவர்கள வழங்கிய இவ்வுரைக்கு அப்பெயர் சற்றும் பொருந்தாது. பரிமேலழகரின் உரையை மு.வ. எளிமைப்படுத்தியது போல் பாவாணர் நற்றமிழ்ப்படுத்தியுள்ளார். சில இடங்களில் பரிமேலழகரின உரையை ஏற்றாலும் பல இடங்களில் அவரது உரைக்குச் சப்பை கட்டுகிறார்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

வள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்

சௌம்யநாராயணன் [பிரவாஹன்] 

திருக்குறள், பொருட்பால், ஒழிபியலில், பெருமை எனும் அதிகாரத்தில் வருகின்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (972) என்ற குறளுக்கு தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், பொருளதிகாரம், களவியல், நூற்பா எண். 90 – “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின்  ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோனாயினுங் கடிவரை இன்றே” என்ற நூற்பாவில் வருகின்ற ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்பதற்கு, ஒப்பு பத்துவகைப் படும் என்று கூறுகிறார். அதை  மெய்ப்பாட்டியல் சூத்திரம் (25) “பிறப்பே குடிமை ஆண்மை, ஆண்டோடு / உருவு நிறுத்த காம வாயில் / நிறையே அருளே உணர்வொடு திருவென / முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” என்பதைக் கூறி இதில் பிறப்பு என்பதற்கு “பிறப்பாவது அந்தணர், அரசர், வணிகர் . . . என்றாற்போல் வருங் குலம். குடிமையாவது, அக்குலத்திலுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் ‘குடிமை’ என்றார்” என்று சொல்கிறார்

ஆகவே ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான்” எனப் பிறரும் குலத்தின் கண்ணே சிறப்பென்பது ஒன்று உண்டென்று கூறினராகலின்” என்கிறார்.  குலம் என்பது பிறப்பினால் வரக்கூடியது எனில், “குலத்தின் கண்ணே சிறப்புண்டு” எனும்போது அது பிறப்பின் வழியே வந்த சிறப்பு என்றாகிறது. இப்படியான நிலையில் “பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதற்கு என்ன பொருள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.

நான்:   அதைப்பற்றி கீதை உரையில் எழுதியிருக்கிறேன்

சௌம்யநாராயணன்: சரி..பார்க்கிறேன்

நான்: சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஜ என்பதற்கும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்பதற்கும் வேறுபாடே இல்லை

இவர்கள் கீதையிலும் குறளிலும் முதல் வரியை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்

சௌம்யநாராயணன்: சரிதான்

நான்: நால் வருணங்களும் என்னால் படைக்கப்பட்டன, இயல்புகள் செயல்களின் அடிப்படையில் – கீதை [பிறப்பால் அல்ல]

பிறப்பு எல்லா உயிர்களுக்கும் சமம் .ஆனால் செய்யும் செயல்களால் சிறப்புகள் வேறுபடுகின்றன- குறள்

அதாவது உயிர்கள் சமம் அல்ல, செயல்மூலம் அவற்றின் தரம் மாறுபடுகிறது

சௌம்யநாராயணன்: இல்லை செய்தொழில் வேற்றுமையான் என்பதைக் கொண்டு அவ்வாறு சொல்லிவிட முடியாது… குறளைப் பொறுத்தவரையிலும் பிறப்பினால் ஒத்த அந்தணர்களுள் அல்லது அரசர்களுள் அல்லது வைசியர்களுள் தங்களின் செயலினால் மாறுபடுவோரைக் குறிப்பதாக நான் கருதுகிறேன்

காரணம், மறப்பினும் ஓத்துக் கொளலாகும் என்ற குறளையும் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது.

எனை வகையான் தேறிய பின்பும் வினைவகையான் வேறாகும் மாந்தர் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன்.

எடுத்துக்காட்டாக, ஒரு அந்தணர் அந்தணர்க்குரிய தொழில்கள் என வரையறுக்கப்பட்டவற்றையல்லாது வேறொன்றைச் செய்வாராயின் அவர் கீழாகவே கருதப்படுவார் என்பதுதான்.

நான்: அந்தக் குறளில், அல்லது அந்த அத்தியாயத்தில் அப்படி இல்லை. அது நீங்கள் கொள்ளும் பொருள். குறளுக்கு அது எழுதப்பட்டுக் குறைந்தது 500 வருடம் கழித்து பரிமேலழகர் அளித்த உரை அதற்கான முகாந்திரமாக அமையலாம். ஆனால் அது ஒருபோதும் கடைசிப்பொருள் அல்ல. வழிகாட்டுப்பொருளும் அல்ல.

சௌம்யநாராயணன்: பரிமேலழகர் அளித்த உரையில் நான் கூறியதெதுவும் இல்லை

நான்: இல்லை- பரிமேலழகர் அந்த குறளுக்குச் சம்பந்தமே இல்லாமல் வருணத்தை  எடுத்துகொண்டு வருகிறார்.  வருணந்தோறும் தொழிற்பாகுபாடுகள் வேறுபாடு பற்றி அந்த வரியில் சொல்கிறார்

சௌம்யநாராயணன்: அந்த வரிகளில் இல்லை என்பது இருக்கலாம்.. ஆனால், அவர் அதை மனதில் கொண்டிருந்தார் என்பதற்குத்தான், “மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” என்று சொல்லி இருப்பதாகத் தோன்றுகிறது.

நான்:  குறளின் அந்தவரிகளில் வருணம் பற்றி ஏதும் இல்லை.

சௌம்யநாராயணன்: மீண்டும் பார்க்கிறேன்..

நான் அதனால்தான் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரைக் குறிப்பிட்டிருந்தேன்

மேலும் வாராததனான் வந்தது உணர்தல் என்ற தொல்காப்பிய நூல் உத்தியை அடிப்படையாகக் கொண்டு குறளைப் பார்த்தேன்

நான்: பார்ப்பான் பிறப்பொழுக்கம் என்பது அக்காலத்தைய நம்பிக்கைகளில் ஒன்று. அது அவரவர் வர்ணத்து வேலையை அவரவர் செய்யாவிட்டால் தப்பு என்பதல்ல.

அன்றைய நோக்கில் பார்ப்பாருடையது தொழில் அல்ல, நெறி,தவம். ஒருவேளை உணவுண்டு, உறுதொழிலென ஏதும்செய்யாது, மூன்று தீ வளர்த்து மட்டுமே வாழவேண்டிய கடும் நெறி அது. அதைச் செய்யாதவர்கள் பிராமணர்களே அல்ல, அவர்களால் நாடு கெடும் என்ற நம்பிக்கையை சங்ககாலம் முதலே காணலாம். எங்கெல்லாம் பார்ப்பான் குறிப்பிடப்படுகிறானோ அங்கெல்லாம் அவனைத் தவசீலன், மெலிந்தவன், பசலை படிந்தவன், தீ கர்மம் செய்பவன் என்றே தமிழிலக்கியம் சொல்கிறது. அங்கே சொல்லப்படும் பிறப்பொழுக்கம் அதுவே.

சௌம்யநாராயணன்: அது சரிதான்…  வேளாப் பார்ப்பான் என்ற ஒரு குறிப்பும் உள்ளது.  அவர்கள் சற்று கீழாகவே கருதப்பட்டனர்

ஆனால், இதே பார்ப்பனர்கள் வாயில்களாகவும் இருந்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது

நான்: வள்ளுவரின் காலகட்டத்தில்- அதவாது சிலம்பின் காலகட்டத்தில் – வேள்விநெறியை நிராகரிக்கும் பார்ப்பார்கள் இருந்தனர். சிலம்பில் கோவலனின் மதுரைப் பயணத்தில் சந்திக்கிறான்.

குறள் வருண நெறியை இறுக்கமான ஒரு நியதியாக முன்வைக்கிறதென்பதற்கு ஆதாரங்களேதும் இல்லை. ஆனால் அது வருண சாதிக்கு நேர் எதிரான கலகக்குரலை எழுப்பவும் இல்லை.

சௌம்யநாராயணன்: வேள்வி நெறியை நிராகரிக்கும் என்று சொல்வதைவிட… பார்ப்பனர்களுக்கென்று ஒத்துக்கப்பட்டிருந்த தொழில் என்பதாகக் கொண்டு பார்க்கையில் கோயில் வழிபாடுகளில் பூசாரிகளாக இருந்தவர்களை எங்கே பொருத்துவது என்பது வினாவாகிவிடும்..

குறள் எந்த கலகக் குரலையும் எழுப்பவில்லை என்பது உண்மை..

ஆனால், அது சமத்துவத்தைப் போதிப்பதாக, அதுதான் தமிழ் நெறி என்பதாக ஒரு உருவேற்றம் நிகழ்ந்துள்ளது. அது சரியல்ல

அரச குலத்தவர்களில் மகுட தியாகிகள் என்றொரு பிரிவினர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.. அவர்களை அரச வர்ணத்தில் அல்லாது வேறிடத்தில் வைக்க முடியாது…

நான்: கோயில்களில் பார்ப்பார் பூஜைசெய்ய ஆரம்பித்ததெல்லாம் 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், பல்லவ சோழ காலகட்டத்தில். முற்காலத்தில் அவர்களுக்கும் கோயில்களுக்கும் சம்பந்தமில்லை. அவர்கள் வைதிகர்கள். வேத வேள்விசெய்பவர்கள்…ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னால் கோயில்களில் வள்ளுவர் [பறையர்ப்பிரிவினர்] கூடப் பூசை செய்துள்ளனர். உவச்சர்கள் பூசை செய்துள்ளனர். தென்னகக் கோயில்களில் 17 ஆம் நூற்றாண்டுவரைகூட அப்படித்தான்

வேதவேள்வியும் ஆலயவழிபாடும் ஆகமங்கள் மூலம் இணைக்கப்பட்ட காலகட்டம் மிக மிகப் பிந்தையது. அதுவே சைவ வைணவ பெருந்தெய்வ உருவாக்கக் காலகட்டம்…….. புராணங்கள் உருவான காலகட்டம்.

சௌம்யநாராயணன்: சங்ககாலத்தில் பறையர்கள் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர் என்பதுதான் பல்வேறு சான்றுகள் காட்டுகின்ற உண்மை.. இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்ப்பித்துள்ளோம்.

நான்: ஓ   அப்படியா? அனுப்ப முடியுமா?

சௌம்யநாராயணன்:   அனுப்புகிறேன்..

பெருந்தெய்வ உருவாக்கம் என்று சொல்லும்போது அது திட்டமிட்ட உருவாக்கம் போலதொனிக்கிறது..

தொல்காப்பியத்தில் சொல்லப்படுவனவற்றில் பெருந்தெய்வங்களும் உண்டு…

மாயோன்

முருகன்

நான்:  நான் உருவாக்கம் என்பதை ஒரு வரலாற்றுநிகழ்வு என்றே பொருள்கொள்கிறேன்

அது சுவாரசியமான ஒரு விஷயம்…பறையர்x பார்ப்பார் மோதல். அயோத்திதாசர் அதைப்பற்றிச் சொல்கிறார். பிராமணர்களை வேஷப்பார்ப்பார், அதாவது பூசைத்தொழிலை மோசடியாகக் கவர்ந்துகொண்டவர்கள் என்றே சொல்கிறார்.

இரு துருவ சாதிகள். ஆனால் பலவகையிலும் இணையானவை. தமிழ்ச்சாதிகளில் இரு ‘இண்டெலக்சுவல்’ சாதிகள் இவர்களே. இன்றுகூட தமிழிலக்கியத்தில் ஒரு தனிச்சாதி எனப் பார்த்தால் பறையர்சாதி எழுத்தாளர்களே அதிகம்

சௌம்யநாராயணன்: தங்கவேல், சிதம்பரநாதன் மற்றும் நான் சேர்ந்து சமர்ப்பித்தது..

நான்: ஓ

சௌம்யநாராயணன்: ஆம், அது உண்மை..

இடைக்காலத்தில் அவர்கள் பௌத்தத்தைத் தழுவியதால் சைவ, வைணவர்கள் அவர்களை ஒதுக்கியிருக்கலாம்..

பறையர்கள் இன்றைக்கும் உடலுழைப்புக்கு சற்று தயங்குபவர்கள் என்றே கூறலாம்..

குறிப்பாக, வட மாவட்டங்களில் வன்னியர்கள் கட்டுமானத் தொழிலாளர்களாக அதிக அளவில் ஈடுபட்டு ஒரு குறைந்தபட்ச கௌரவமான வாழ்க்கையை மேற்கொள்ளும்போது, பறையர் சமூகத்தவரில் குறைந்த எண்ணிக்கையிலேயே அத்தொழிலில் ஈடுபட முனைகின்றனர்.

விவசாயத் தொழிலுக்கு அவர்கள் வந்தது கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் என்பதாகக் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து தெரிகிறது..

நான்: அந்தக் கட்டுரையை அனுப்புங்கள்

சௌம்யநாராயணன்: இணையத்தில் இல்லை.. பின்னர் நகல் எடுத்து அனுப்புகிறேன்

நான்: பார்ப்போம்.   நன்றி

 

 



__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

One should travel 2000 years to study the history of Thirukkural and Thiruvalluvar...

The meaning of the words which we are using today may or may not be the same in 2000 years back....One should carefully analyze and conclude else it will become biased and politically motivated

One should visit the following places, also analyze the scripts / languages used in that period
1. Anai Malai (Elephant Hills) - Near Madurai
2. Kila Valavu - Near Madurai
3. Kalugu Malai (Between Kovilpatti and Sankarankoil)
4. Mahabalipuram
5. Ancient stone carving temples in Kanjipuram dist - Pallava period

Considering the Political power / situation in India during Thiruvalluvar period, one can understand that it is more likely biased towards Jaina / Buddhism...

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard