New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கலாநிதி தயாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் வெற்றிகள்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
கலாநிதி தயாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் வெற்றிகள்
Permalink  
 


25734937-pranab-dayanithi.jpg?w=640&h=391



-- Edited by Admin on Friday 10th of February 2012 09:05:30 AM



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: சன் பிக்சர்ஸ் மாறன்களின் மஹா வெற்றிகள் லீலைகள்
Permalink  
 


சன் குழுமத்திலிருந்து விலகினார் சக்சேனா!!

 
சென்னை: சன் பிக்சர்ஸ் மற்றும் சன் குழுமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டதாக தனது வழக்கறிஞர் மூலம் ஹன்ஸ்ராஜ் சக்சேனா அறிவித்துள்ளார்.

சன் குழுமத்தில் மிகவும் பலம் வாய்ந்த மனிதராக உலா வந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. சன் குழுமம், தனியாக சன் பிக்சர்ஸ் என்ற திரைப்பட வர்த்தகப் பிரிவை தொடங்கியபோது, அதன் தலைமைப் பொறுப்பேற்றார். சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படத்ன் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தார் சக்சேனா.

ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பல்வேறு மோசடி, மிரட்டல் வழக்குகளில் சக்சேனாவைக் கைது செய்தது அதிமுக அரசு.

கடந்த மூன்று மாத காலமாக ஏராளமான வழக்குகளில் அடுத்தடுத்து கைதாகி, நீதிமன்ற காவல், போலீஸ் காவல் என தொடர் சிறைவாசம் அனுபவித்து வந்தார் சக்சேனா. 

இந்த நிலையில், அனைத்து வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் பெற்று இப்போது வெளியில் வந்துள்ளார். இனி அவர் சன் குழுமத்தில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் நீடித்திருக்குமா என்றும் கேள்வி எழுப்பினர்.

சன் பிக்சர்ஸ் ஏற்கெனவே சக்சேனாவின் இடத்தில் தற்காலிகமாக செம்பியன் என்பவரை சிஇஓவாக நியமித்தது. அதன் பிறகுதான் மங்காத்தா படத்தை வெளியிட்டு வசூலை அள்ளியது. தொடர்ந்து வெடி, நண்பன், ஏழாம் அறிவு என மெகா பட்ஜெட் படங்களை கைவசம் வைத்துள்ளது.

ஆனால் சக்ஸேனாவின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் சன் குழும தலைவர் கலாநிதி மாறனைத் தொடர்பு கொண்ட சக்சேனா, தன் மீதுள்ள வழக்குகளால் நிறுவனத்துக்கு தேவையற்ற கெட்ட பெயர் வரக்கூடாது என்பதால், சன் குழுமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்வதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தையும் அவர் கலாநிதி மாறனுக்கு அனுப்பி வைத்தார். அக்கடிதத்தை கலாநிதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இத்தகவல்களை சக்சேனாவின் வழக்கறிஞர் இன்று தெரிவித்தார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தயா உள்ளே!..கனி வெளியே

 
rang.jpg


             ""ஹலோ தலைவரே… …2 ஜி பூதம்  மறுபடியும்  தயாநிதி மாறனை வளைச்சுப் பிடிச் சிருக்கே… மீடியாக்களில் இதுதான் இப்ப ஹாட் நியூஸ்.''

""சி.பி.ஐ. இது சம்பந்தமா தயாநிதிகிட்டே முதல்கட்ட விசாரணையை நடத்தியது. அவர் மத்திய மந்திரியா இருந்தப்ப யார் யார் வந்து பார்த்தாங்கன்னு விசிட்டர்ஸ் புத்தகத்தை எடுத்து நோட் பண்ணியது. அவரோட துறையில் வேலை பார்த்தவங்ககிட்டே வாக்கு மூலம் வாங்குச்சி. அப்பவே இது பரபரப்பா பேசப்பட்டது. ஆனா, தயாநிதி தரப்பு இந்த விஷயம் இதோடு முடிஞ்சிடணும்னு பெரிய லாபிகூட செஞ்சுதே..''

""ஆமாங்க தலைவரே…  … 2 ஜி லைசென்ஸில் சம்பந்தப்பட்ட மேக்ஸிஸ் அனந்தகிருஷ்ணன், மலேசியாவில் பெரிய தொழி லதிபர்ங்கிறதால அந்த நாட்டு அரசாங்கத்தை  தயாநிதி தரப்பு காண்டாக்ட் பண்ணி பேசுன வரைக்கும் நம்ம நக்கீரன் ஏற்கனவே அம்பலப்படுத்தியிருக்கே.. அனந்தகிருஷ்ணனுக்கு நெருக்கடி ஏற்பட்டா, மலேசியாவின் பொருளாதாரமே வீழ்ச்சியடையும்னு அந்த நாட்டு அரசாங்கம் நம்ம நாட்டு அரசாங்கத்தோடு பேசி, ஃபைலை க்ளோஸ் பண்ணுற முயற்சியும் நடந்தது. இனி  ஒண்ணும் நடக்காதுன்னு தயாநிதி மாறன் நம்பிக்கையோடு இருந்த நேரத்தில்தான், அவரை 2ஜி பூதம் மறுபடியும் வளைச்சுப் பிடிச்சிருக்கு.''

""சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டேட்ஸ் ரிப்போர்ட் தாக்கல் செஞ்ச சி.பி.ஐ. வக்கீல் கே.கே.வேணுகோபால், ஆரம்பகட்ட விசாரணையை முதல் தகவல் அறிக்கையா மாற்றுகிற வேலையில் சி.பி.ஐ. ஈடுபட்டிருக்குன்னும் ஓரிரு நாட்களில் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்படும்னும்  சட்டத்துக்குப் புறம்பான சலுகைகள் அளித்தது- அதற்கான பிரதிபலன்களைப் பெற்றது தொடர்பா தயாநிதி மாறன் மீதும் மற்றவர்கள் மீதும் எஃப்.ஐ.ஆரில் இடம்பெறும்னு சொல்லியிருக்கிறார். அதுபோல, எஸ்ஸார் குரூப் கண்ட்ரோலில் உள்ள லூப் டெலிகாம் சம்பந்தமான  எஃப்.ஐ.ஆரும் 3 வாரத்தில்  தாக்கல் செய்யப்படும்னு கோர்ட்டில் சி.பி.ஐ. சொல்லியிருக்கு.'' 

""தயாநிதிக்கு நெருக்கடிகள் அதிகரிக்குதே.. எஃப்.ஐ.ஆருக்கு அடுத்தடுத்த கட்டங்களில் என்ன  நடக்கும்?''

""ஆ.ராசா விஷயத்தில் என்ன நடந்ததுன்னு ஞாபகமிருக்குங்களா தலைவரே.… அவரை விசா ரணைக்குன்னு சி.பி.ஐ. அழைத்தது. நான்கைந்து நாட்கள் விசாரணை நடத்திட்டு, பழைய எஃப்.ஐ.ஆர்-ல் சேர்த்து கைது செய்து சிறையில் அடைச்சிடிச்சி. கனிமொழியும் கோர்ட் சம்மனுக்கு ஆஜராகப்போனார். அவரையும் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க. இந்த இரண்டும் தன்னோட விஷயத்தில் நடந் திடக்கூடாதுன்னு  தயாநிதி பலவிதமான லாபிகளை பண்ணிக்கிட்டிருக்காரு. ஆனால், சி.பி.ஐ. வளையம் இறுகிக்கிட்டே இருக்கு. அக்டோபர் மாதம்ங்கிறது கனிமொழி வெளியே வரும் மாதம்னும், தயாநிதி உள்ளே போகும் மாதம்னும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பா பேசப்படுது.''

""சி.பி.ஐ. கோர்ட்டில் ஏதோ பரபரப்பு உண்டாச் சாமே!''

""சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், ட்ராய் ரிப்போர்ட்டைத் தனக்கு தராமல் சி.பி.ஐ. லேட் பண்ணுவது பற்றி ஆ.ராசாவே நேரடியா வாதாடினார். அவரோட ஆர்க்யூமெண்ட் பலமா இருந்ததா கோர்ட்டில் இருந்த வழக்கறிஞர்கள் சொல்றாங்க. ராசா வாதாடிக்கிட்டிருந்தப்ப கோர்ட் ஹாலில் இருந்த டி.ஆர்.பாலு, ட்ரையலில் பேசவேண்டியதையெல்லாம் இப்ப பேசுறதால கனிமொழி பெயில் லேட் டாகுதுன்னு ரொம்ப சத்தமா சொன்னதால லேசா பரபரப்பு. ஆ.ராசா எதுவும் சொல்லலை.''


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சென்னைக்குள் ரவுண்ட் வரும் சி.பி.ஐ.!

 


1.jpg

சாணக்கியபுரியாம் டெல்லியின் சதிராட்டத்தில் இப்போது சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள். சிக்கலில் இருந்து சிதம்பரம் விடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதும், தயாநிதி மாறனை நோக்கியும் சி.பி.ஐ. பார்வை வலுக்கிறது என்பதும்தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தகிக்கும் நிலவரம்! 

2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன் நடந்து வந்தாலும்... அந்த வழக்கின் வெளி விவகாரங்கள் அதிகமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்தான் இந்த வழக்கின் தட்ப வெப்ப நிலையைத் தீர்மானித்து வருகிறது. வழக்கின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். 'ஏலம் எடுக்கும் முறை வேண்டாம், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற விதிமுறையைத் தொலைத் தொடர்புத் துறை பின்பற்றியபோது, நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நினைத்து இருந்தால் அதனைத் தடுத்திருக்க முடியும்!’ என்று நிதி அமைச்சகத்தின் ரகசியக் கடிதம் ஒன்றைத் தனது மனுவுக்கான ஆதாரமாக சுவாமி கொண்டுவந்தார். ''மத்திய நிதி அமைச்சக அதிகாரியே ஒப்புக்கொண்டதைவைத்துப் பார்த்தால்... சிதம்பரத்துக்குத் தெரியாமல் எதுவும் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை. எனவே, இந்த வழக்கில் சிதம்பரத்தையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்!'' என்று சுவாமி சொன்னார். இதை மத்திய அரசு வழக்கறிஞர் பி.பி.ராவ் கடுமையாக எதிர்த்தார். ''எப்போது பாட்டியாலா கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கிவிட்டதோ... அப்போதே சுப்ரீம் கோர்ட்டுக்கு இது தொடர்பாக மேற்கொண்டு விசாரிக்க உரிமை இல்லை!'' என்று அவர் வாதிட்டார். ஆனால், இதை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை. எனவே, மேற்கொண்டு அனல்பறக்கும் விவாதங்கள் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடந்தன.

2.jpg

இதில் சிதம்பரம், தயாநிதி மாறன் ஆகிய இருவரது தலைகளும் அதிகமாக உருட்டப்பட்டன. சுவாமியின் மனுவுடன் தனது மனுவையும் இணைத்துக் கொண்டார் பிரசாந்த் பூஷண். ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான வழக்குகளைத் தொடர்ந்து போட்டு வருபவர் இவர்தான். ''முறையான பாதையில் சி.பி.ஐ. விசாரணை செல்லவில்லை. குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டிய பலரிடம் இன்னமும் விசாரணையே செய்யப்படவில்லை. இதில் இருந்து சி.பி.ஐ. விசாரணையில் நேர்மை இல்லை என்று தெரிகிறது. இந்த ஊழல் நடந்த காலகட்டத்தில் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறையை கவனித்து வந்தார். அவர் தனக்கு வசதியாக எந்தெந்த விதிமுறைகளை மாற்றினாரோ, அதை நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஏற்றுக்கொண்டுள்ளார். இது உண்மைதான் என்பது நிதி அமைச்சகத்தின் குறிப்பில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. இன்னொரு முக்கியமான தவறையும் சிதம்பரம் செய்துள்ளார்.உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்களது சேவையைத் தொடங்குவதற்கு முன்பே, தங்களது பங்குகளை விற்பனை செய்வதற்கு சிதம்பரம் அனுமதி வழங்கி உள்ளார். ஆனாலும் அவர் மீது சி.பி.ஐ. இன்னமும் விசாரணையைத் தொடங்கவில்லை. அவரது சாட்சியம்கூடப் பதிவு செய்யப்படவில்லை. சி.பி.ஐ. அமைப்பின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் இதற்குக் காரணம்!'' என்று பொரிந்து தள்ளினார் பிரசாந்த் பூஷண்.இதை கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்த சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மெது வாக எழுந்து சீல் இட்ட ஒரு கவரை நீதிபதியிடம் கொடுத்தார். தயாநிதி மாறனின் தலைவிதி அதில் இருந்தது.

அதை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வீ, ஏ.கே. கங்குலி ஆகிய இருவரும் படித்துக் கொண்டு இருக்கும்போதே வக்கீல் வேணுகோபால் தனது வாதங்களை வைக்கத் தொடங்கினார்.

''இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு உள்ள தொடர்பு குறித்த முதல் நிலை விசாரணை முடிந்துவிட்டது. அடுத்த சில நாட்களில் வழக்கு பதிவு செய்யப்படும். இதே வழக்கில் எஸ்ஸார் நிறுவனத்தின் மீது விசாரணை நடந்து வருகிறது. இது முடிய இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும். வழக்கில் தொடர்புடைய ஒவ்வொருவர் மீதும் வரிசையாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வோம்...'' என்று சொன்னார். இது புதன்கிழமை நடந்த அதிரடித் திருப்பமாக ஆகிப் போனது.சிதம்பரம் கதை என்ன ஆகும் என்று தீராத படபடப்பில் இருந்த மீடியாக்களுக்கு தயாநிதி மாறன் இரையை எடுத்துப் போட்டது சி.பி.ஐ...''பிரசாந்த் பூஷண், சி.பி.ஐ-யின் நடவடிக்கைகள் தொடர்பாக பலத்த சந்தேகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததும், தங்களது நடவடிக்கையில் எந்த விதமான ஒளிவு மறைவும் இல்லை என்பதை விளக்கியாக வேண்டிய நெருக்கடி சி.பி.ஐ-க்கு வந்தது. தயாநிதி மாறன் மீது விரைவிலேயே எஃப்.ஐ.ஆர். போடப் போகிறோம் என்பதைச் சொல்வதன் மூலமாக, சுப்ரீம் கோர்ட் கோபத்தைக் கொஞ்சம் தணிக்கலாம் என்றும் சி.பி.ஐ. நினைத்து இருக்கலாம்...'' என்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இன்னும் நான்கைந்து நாட்களுக்குள் தயாநிதி மாறன் மீது முழுமையான எஃப்.ஐ.ஆரை சி.பி.ஐ. பதிவு செய்துவிடும் என்றே டெல்லியில் பேசப்படுகிறது.ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு கைமாற்றிவிடுவதில் தயாநிதி மாறனின் பங்கு என்ன என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம். ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த சிவசங்கரன், மேக்ஸிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வாக்குமூலங்களை வாங்கிவிட்டது. தயாநிதி மாறனிடமும் முதல் கட்ட விசாரணை நடந்து முடிந்துவிட்டது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த பிறகு அதிகாரப்பூர்வமாக தயாநிதி மாறனிடம் வாக்குமூலங்களை சி.பி.ஐ. வாங்கப்போகிறது. எனவே, அடுத்த பத்து நாட்களில் கிடுகிடு திருப்பங்கள் அரங்கேறலாம் என்பதே டெல்லி வட்டாரம் தரும் தகவல்!
 
இந்த விவாதங்கள் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கும் போது டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் ஆறு பேரைக் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு வந்தது. 'எப்போதும் தயார் நிலையில் இருங்கள்’ என்று அவர்களுக்கு சி.பி.ஐ. மேலிடம் உத்தரவு இட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.தயாநிதி மாறன் விஷயத்தில் சி.பி.ஐ. இப்போது திடீர் வேகம் எடுத்திருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ப.சிதம்பரத்தைக் குறிவைத்து எதிர்க் கட்சிகளும் மீடியாக்களும் தாக்குதலைத் தொடங்கி உள்ளன. இது சோனியா, பிரதமர் மற்றும் மத்திய ஆட்சிக்கே பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது. இதைத் திசை திருப்புவதற்கு தயாநிதி அஸ்திரத்தை சி.பி.ஐ. விட்டிருக்கலாம் என்கிறார்கள். தயாநிதி மீது எஃப்.ஐ.ஆர்., விசாரணை, கைது என்று காட்சிகள் மாறினால், பிரதமர், சிதம்பரம் ஆகியோரைப்பற்றிப் பேசுவது குறையும் என்று நினைக்கிறார்கள்.
 
''தயாநிதி மாறன், ப.சிதம்பரம் ஆகிய தனி மனிதர்கள் எங்களுக்கு முக்கியம் அல்ல. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து சக்திகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம்!'' என்று சுப்பிரமணியன் சுவாமியும் பிரசாந்த் பூஷணும் சொல்வதைப் பார்த்தால்... ப.சி-க்கும் தயாநிதி மாறனுக்கும் வந்திருப்பது சாதாரண சிக்கல் அல்ல!
 
விகடன்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அக் 10-க்குள் தயாநிதி, கலாநிதி மாறன்கள் மீது எப்ஐஆர்!- சிபிஐ

 
01-daya-kala-maran-300.jpg
டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு - ஏர்செல் விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என சிபிஐ உறுதி கூறியுள்ளது. 

தயாநிதிமாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில் நடந்த முறைகேடு பற்றியும் விசாரணை நடத்தி வருகிறது. 

இது தொடர்பாக ஏர்செல் முன்னாள் இயக்குனர் சிவசங்கரன் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில், "ஏர்செல் நிறுவனத்துக்கு கூடுதல் ஏரியாவுக்கு லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தபோது அதன் மீது முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தினார். ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட பிறகுதான் லைசென்ஸ் வழங்கினார். இதற்கு பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட்டில் முதலீடு செய்தது," என்று குற்றம்சாட்டினார்.

இந்த பிரச்சினையில் தனக்கு தயாநிதிமாறனும், அவரது சகோதரர் கலாநிதி மாறனும் கொலை மிரட்டல்கள் விடுத்தனர் என்றும் சிவசங்கரன் சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார்.

இந்த புகார்களை தொடர்ந்து தயாநிதி மாறன் பதவி விலகினார். அவரிடமும், கலாநிதி மாறன் மற்றும் மேக்சிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆஸ்ட்ரோ நிறுவன சேர்மன் ரால்ப் மார்ஷல் ஆகியோரிடமும் சி.பி.ஐ. பல மணி நேரம் விசாரணை நடத்தியது.

இந்த வழக்கில் சி.பி.ஐ. பல்வேறு ஆதாரங்களை திரட்டியது. கடந்த வியாழக்கிழமை ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஏர்செல்- மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சாதாரண வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் 30-ந்தேதி (நேற்று) முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்படும் என்றும் சிபிஐ தெரிவித்தது. 

ஆனால் பல்வேறு ஆதாரங்களை இணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நேற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட வில்லை. 

வருகிற 10-ந்தேதி அல்லது அதற்கு முன் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதல் தகவல் அறிக்கையில் தயாநிதிமாறன், கலாநிதி மாறன், ஆஸ்ட்ரோ சேர்மன் ரால்ப் மார்ஷல் மற்றும் சிலரது பெயர்கள் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.

மேக்சிஸ் நிறுவனத்தை இலங்கை தொழில் அதிபர் அனந்தகிருஷ்ணன் நடத்தி வருகிறார். இவர் ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளையும், சிந்தியா செக்யூரிட்டிஸ் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் 24 சதவீத பங்குகளையும் வாங்கியது. 

தயாநிதிமாறன் நிர்ப்பந்தத்தின் பேரில் ஏர்செல் பங்குகள் கைமாறிய தாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. ஏர்செல் நிறுவனம் கைமாறியதும் அதற்கு கூடுதலாக 14 ஏரியாக்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களையும் சி.பி.ஐ. திரட்டி உள்ளது.

எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதும், அதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கும் எனத் தெரிகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிதம்பரம்,பிரதமர் மீதுள்ள நெருக்கடியை சமாளிக்கவே தயாநிதி மீது திடீர் வேகம் காட்டும் சிபிஐ?

சாணக்கியபுரியாம் டெல்லியின் சதிராட்டத்தில் இப்போது சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள். சிக்கலில் இருந்து சிதம்பரம் விடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதும், தயாநிதி மாறனை நோக்கியும் சி.பி.ஐ. பார்வை வலுக்கிறது என்பதும்தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தகிக்கும் நிலவரம்! 

 

2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன் நடந்து வந்தாலும்... அந்த வழக்கின் வெளி விவகாரங்கள் அதிகமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்தான் இந்த வழக்கின் தட்ப வெப்ப நிலையைத் தீர்மானித்து வருகிறது. வழக்கின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்து வருகிறது.

 

இந்த நிலையில் கடந்த வாரம், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். 'ஏலம் எடுக்கும் முறை வேண்டாம், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற விதிமுறையைத் தொலைத் தொடர்புத் துறை பின்பற்றியபோது, நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நினைத்து இருந்தால் அதனைத் தடுத்திருக்க முடியும்!’ என்று நிதி அமைச்சகத்தின் ரகசியக் கடிதம் ஒன்றைத் தனது மனுவுக்கான ஆதாரமாக சுவாமி கொண்டுவந்தார். ''மத்திய நிதி அமைச்சக அதிகாரியே ஒப்புக்கொண்டதைவைத்துப் பார்த்தால்... சிதம்பரத்துக்குத் தெரியாமல் எதுவும் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை. எனவே, இந்த வழக்கில் சிதம்பரத்தையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்!'' என்று சுவாமி சொன்னார். இதை மத்திய அரசு வழக்கறிஞர் பி.பி.ராவ் கடுமையாக எதிர்த்தார். ''எப்போது பாட்டியாலா கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கிவிட்டதோ... அப்போதே சுப்ரீம் கோர்ட்டுக்கு இது தொடர்பாக மேற்கொண்டு விசாரிக்க உரிமை இல்லை!'' என்று அவர் வாதிட்டார். ஆனால், இதை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை. எனவே, மேற்கொண்டு அனல்பறக்கும் விவாதங்கள் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடந்தன.

 

இதில் சிதம்பரம், தயாநிதி மாறன் ஆகிய இருவரது தலைகளும் அதிகமாக உருட்டப்பட்டன. சுவாமியின் மனுவுடன் தனது மனுவையும் இணைத்துக் கொண்டார் பிரசாந்த் பூஷண். ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான வழக்குகளைத் தொடர்ந்து போட்டு வருபவர் இவர்தான். ''முறையான பாதையில் சி.பி.ஐ. விசாரணை செல்லவில்லை. குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டிய பலரிடம் இன்னமும் விசாரணையே செய்யப்படவில்லை. இதில் இருந்து சி.பி.ஐ. விசாரணையில் நேர்மை இல்லை என்று தெரிகிறது. இந்த ஊழல் நடந்த காலகட்டத்தில் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறையை கவனித்து வந்தார். அவர் தனக்கு வசதியாக எந்தெந்த விதிமுறைகளை மாற்றினாரோ, அதை நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஏற்றுக்கொண்டுள்ளார். இது உண்மைதான் என்பது நிதி அமைச்சகத்தின் குறிப்பில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. இன்னொரு முக்கியமான தவறையும் சிதம்பரம் செய்துள்ளார்.

 

உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்களது சேவையைத் தொடங்குவதற்கு முன்பே, தங்களது பங்குகளை விற்பனை செய்வதற்கு சிதம்பரம் அனுமதி வழங்கி உள்ளார். ஆனாலும் அவர் மீது சி.பி.ஐ. இன்னமும் விசாரணையைத் தொடங்கவில்லை. அவரது சாட்சியம்கூடப் பதிவு செய்யப்படவில்லை. சி.பி.ஐ. அமைப்பின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் இதற்குக் காரணம்!'' என்று பொரிந்து தள்ளினார் பிரசாந்த் பூஷண்.

 

இதை கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்த சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மெது வாக எழுந்து சீல் இட்ட ஒரு கவரை நீதிபதியிடம் கொடுத்தார். தயாநிதி மாறனின் தலைவிதி அதில் இருந்தது.

 

அதை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வீ, ஏ.கே. கங்குலி ஆகிய இருவரும் படித்துக் கொண்டு இருக்கும்போதே வக்கீல் வேணுகோபால் தனது வாதங்களை வைக்கத் தொடங்கினார்.

 

''இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு உள்ள தொடர்பு குறித்த முதல் நிலை விசாரணை முடிந்துவிட்டது. அடுத்த சில நாட்களில் வழக்கு பதிவு செய்யப்படும். இதே வழக்கில் எஸ்ஸார் நிறுவனத்தின் மீது விசாரணை நடந்து வருகிறது. இது முடிய இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும். வழக்கில் தொடர்புடைய ஒவ்வொருவர் மீதும் வரிசையாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வோம்...'' என்று சொன்னார். இது புதன்கிழமை நடந்த அதிரடித் திருப்பமாக ஆகிப் போனது.

 

சிதம்பரம் கதை என்ன ஆகும் என்று தீராத படபடப்பில் இருந்த மீடியாக்களுக்கு தயாநிதி மாறன் இரையை எடுத்துப் போட்டது சி.பி.ஐ...

 

''பிரசாந்த் பூஷண், சி.பி.ஐ-யின் நடவடிக்கைகள் தொடர்பாக பலத்த சந்தேகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததும், தங்களது நடவடிக்கையில் எந்த விதமான ஒளிவு மறைவும் இல்லை என்பதை விளக்கியாக வேண்டிய நெருக்கடி சி.பி.ஐ-க்கு வந்தது. தயாநிதி மாறன் மீது விரைவிலேயே எஃப்.ஐ.ஆர். போடப் போகிறோம் என்பதைச் சொல்வதன் மூலமாக, சுப்ரீம் கோர்ட் கோபத்தைக் கொஞ்சம் தணிக்கலாம் என்றும் சி.பி.ஐ. நினைத்து இருக்கலாம்...'' என்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இன்னும் நான்கைந்து நாட்களுக்குள் தயாநிதி மாறன் மீது முழுமையான எஃப்.ஐ.ஆரை சி.பி.ஐ. பதிவு செய்துவிடும் என்றே டெல்லியில் பேசப்படுகிறது.

 

ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு கைமாற்றிவிடுவதில் தயாநிதி மாறனின் பங்கு என்ன என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம். ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த சிவசங்கரன், மேக்ஸிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வாக்குமூலங்களை வாங்கிவிட்டது. தயாநிதி மாறனிடமும் முதல் கட்ட விசாரணை நடந்து முடிந்துவிட்டது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த பிறகு அதிகாரப்பூர்வமாக தயாநிதி மாறனிடம் வாக்குமூலங்களை சி.பி.ஐ. வாங்கப்போகிறது. எனவே, அடுத்த பத்து நாட்களில் கிடுகிடு திருப்பங்கள் அரங்கேறலாம் என்பதே டெல்லி வட்டாரம் தரும் தகவல்!

 

இந்த விவாதங்கள் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கும் போது டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் ஆறு பேரைக் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு வந்தது. 'எப்போதும் தயார் நிலையில் இருங்கள்’ என்று அவர்களுக்கு சி.பி.ஐ. மேலிடம் உத்தரவு இட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

தயாநிதி மாறன் விஷயத்தில் சி.பி.ஐ. இப்போது திடீர் வேகம் எடுத்திருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ப.சிதம்பரத்தைக் குறிவைத்து எதிர்க் கட்சிகளும் மீடியாக்களும் தாக்குதலைத் தொடங்கி உள்ளன. இது சோனியா, பிரதமர் மற்றும் மத்திய ஆட்சிக்கே பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது. இதைத் திசை திருப்புவதற்கு தயாநிதி அஸ்திரத்தை சி.பி.ஐ. விட்டிருக்கலாம் என்கிறார்கள். தயாநிதி மீது எஃப்.ஐ.ஆர்., விசாரணை, கைது என்று காட்சிகள் மாறினால், பிரதமர், சிதம்பரம் ஆகியோரைப்பற்றிப் பேசுவது குறையும் என்று நினைக்கிறார்கள்.

 

''தயாநிதி மாறன், ப.சிதம்பரம் ஆகிய தனி மனிதர்கள் எங்களுக்கு முக்கியம் அல்ல. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து சக்திகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம்!'' என்று சுப்பிரமணியன் சுவாமியும் பிரசாந்த் பூஷணும் சொல்வதைப் பார்த்தால்... ப.சி-க்கும் தயாநிதி மாறனுக்கும் வந்திருப்பது சாதாரண சிக்கல் அல்ல!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22656296-kalanithi-in-delhi.jpg?w=640&h=658



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_10_2011_001_019-maran-raids.jpg?w=640&h=669



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_10_2011_003_002-daya-in-net.jpg?w=640&h=179



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_10_2011_003_014-raids.jpg?w=640&h=350



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_10_2011_005_003-patil-note.jpg?w=503&h=500



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_10_2011_005_021-dmk-on-raids.jpg?w=640&h=261



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_10_2011_005_035-sun-gag.jpg?w=501&h=659



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_10_2011_005_022-sivasankaran-airce.jpg?w=165&h=864



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23646359-maran-raids.jpg?w=640&h=619



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25917296-pac.jpg?w=640&h=1049



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_10_2011_015_002-dayanithi.jpg?w=640&h=269



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

12_10_2011_001_024-marans-kani.jpg?w=392&h=520



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

12_10_2011_007_005-mk-justice-wins.jpg?w=545&h=603



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23318703-marans.jpg?w=640&h=1347



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திகார் ஜெயிலில் கருணாநிதி குடும்பத்தின் அடுத்த வாரிசு?

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கருணாநிதி குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசு சிக்கிக் கொண்டிருக்கிறார். இதோ அதோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாறன்  சகோதரர்களின் வீடுகளில் ஒரு வழியாக ரெய்டு நடந்தே விட்டது.  

2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவும், கனிமொழியும் கைது செய்யப்பட்டதில் இருந்தே, தயாநிதி மாறன் சிக்குவாரா? மாட்டாரா? என்று ஊடகங்கள் பல்வேறு ஊகங்களை எழுப்பிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனர் அனந்தகிருஷ்ணன் மற்றும் ஆஸ்ட்ரோ நிறுவன சி.இ.ஓ.  ரால்ப் மார்ஷல் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ. 

இந்த வழக்கின் தொடர்ச்சியாக கடந்த திங்களன்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரின் வீடுகள், சன் டி.வி. அலுவலகம், டெல்லியில் உள்ள தயாநிதி மாறன்  வீடு, அப்பல்லோ மருத்துவமனை, டாக்டர் சுனிதா ரெட்டியின் வீடு என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை போட் கிளப்பில் உள்ள தயாநிதி மாறன் வீட்டிற்கு திங்கட்கிழமை காலை சி.பி.ஐ.  அதிகாரிகள் ஏழு பேர் சோதனை நடத்துவதற்காக வந்தனர். ஆனால்  அவர்களை காவலாளிகள் உள்ளே விட மறுத்தனர். இருபது நிமிடம் காத்திருந்துதான் அவர்கள் உள்ளே நுழைய முடிந்தது. வீட்டில் தயாநிதியின் அம்மா மல்லிகா மாறன்  மட்டுமே இருந்தார். தயாநிதியின் குழந்தைகள் இருவரும் அன்று காலைதான் டெல்லியில் இருந்து வந்து பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விட, கதவுகளை உட்புறமாக தாழிட்டுக் கொண்ட அதிகாரிகள், தங்கள் சோதனையை ஆரம்பித்தனர். தயாநிதி மாறனின் உதவியாளர்  கௌதமுடன் தயாநிதி மாறனின் அலுவலக ஊழியர்கள் இருவரும் வீட்டிற்குள் இருந்தனர். கூடவே வீட்டில் வேலை செய்யும் நான்கு பெண்கள், டிரைவர்கள் என  அனைவருக்கும் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தயாநிதி மாறனின் நண்பர் வீனஸ், வீட்டின் வெளியே நின்று கொண்டு கட்சிக்காரர்களுக்கு போன் செய்து  தயாநிதி மாறனின் வீட்டிற்கு வரச்சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தார். ஆனால், கட்சிக்காரர்கள் சிலரைத் தவிர யாரும் அங்கு வரவில்லை.

பத்தரை மணியளவில் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு தயாநிதி மாறன் வீட்டிற்கு வந்தார். சி.பி.ஐ. அதிகாரி ஒருவரிடம், ‘‘நான்தான் சி.எம். மகன்’’ என ஆங்கிலத்தில்  அவர் அறிமுகப்படுத்த, பதறிய தயாநிதியின் நண்பர் வீனஸ், ‘‘தலைவர் கருணாநிதியின் மகன்’’ என திருத்தினார். தான் உள்ளே செல்ல விரும்புவதாக தமிழரசு தெரிவிக்க,  ‘‘உள்ளே வந்தால் ரெய்டு முடியும் வரை வெளியே செல்ல முடியாது. தேவைப்பட்டால் ஆவணங்களில் கையெழுத்துப் போட வேண்டியிருக்கும்’’ என அதிகாரிகள்  தெரிவிக்க, அதற்கு ஒப்புக்கொண்டு வீட்டிற்குள் சென்றார் தமிழரசு. கொஞ்ச நேரத்திலேயே சன் நிறுவன அதிகாரிகள் தயாநிதியின் வீட்டிற்கு வந்தனர். ஆனால் அவர்கள்  உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில்,  அந்த வீட்டின் பின்னால் இருந்த கலாநிதி மாறனின் வீட்டிலும் சி.பி.ஐ.  அதிகாரிகள் சோதனை நடத்தினர். கூடவே சன் டி.வி. அலுவலகத்திலும், டெல்லியில் உள்ள தயாநிதி மாறனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. கடந்த ஒரு வாரமாக  டெல்லியில் ‘லீலா பேலஸ்’ என்ற ஹோட்டலில் மனைவியுடன் தங்கியிருந்த கலாநிதி மாறன், தயாநிதி மாறன் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் ஹோட்டல்  அறையை காலி செய்துள்ளனர். ரெய்டு நடந்தபோது, இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்கிற விவரம் தெரியவில்லை.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய மேக்சிஸ் நிறுவனத்தில் டாக்டர் சுனிதா ரெட்டியும் ஒரு பங்குதாரர். இவர் அப்பல்லோ மருத்துவமனையின் இயக்குனர்களில் ஒருவர்.  எனவே, சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள சுனிதாவின் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். பகல் 12 மணியளவில்  பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சிலர் தயாநிதி மாறன் வீட்டுக்குள் சென்றனர்.


தயாநிதி மாறன் மீதான இந்த நடவடிக்கைகள் மிகவும் தாமதமானவை என்பது ஸ்பெக்ட்ரம் வழக்கை கூர்ந்து கவனிப்பவர்களுக்குப் புரியும். தயாநிதி மாறன் 2ஜி விவகார த்தில் சிக்கியதே,  உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகுதான்.  2ஜி விவகாரத்தில் மாறன் சகோதரர்களின் பங்கு குறித்து ஆரம்பத்தில் இருந்தே, உச்ச நீதிமன்றத்தில்  முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்துக் கொண்டிருந்தது சி.பி.ஐ.  

இந்த வழக்கில் மாறன் சகோதரர்களின் பங்கு குறித்து ஊடகங்கள் ஆதாரத்தோடு கதறிக் கொண்டிருந்த நேரத்தில், ‘‘மாறன் சகோதரர்கள் சிவசங்கரனை மிரட்டி ஏர்செல்  நிறுவனத்தை விற்க வைத்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை’’ என்று சொன்னது சி.பி.ஐ. இதை எதிர்த்து பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்ததும் அந்தர்பல்டி  அடித்து, எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. தெரிவித்தது. 

2ஜி ஊழல் குறித்து தகவல்கள் வெளிவரத் தொடங்கியதுமே, கடந்த பத்து வருடங்களில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்தவர்களையும் சேர்த்தே விசாரிக்க  வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. 1999 முதல் 2008 வரை தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் மொத்தம் நான்கு பேர். பிரமோத் மஹாஜன்  இறந்து விட, அமைச்சராக இருந்த அருண்ஷோரியை சி.பி.ஐ. விசாரித்து விட்டது.   நான்காவது நபரான ஆ.ராசா திஹாரில் இருக்கிறார்.  மூன்றாவது நபரான தயாநிதி  மாறன்தான் தற்போது சிக்கியிருக்கிறார்.  

டிசம்பர் 2006-ல் ஏர்செல் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான டிஷ்நெட் வயர்லெஸ்ஸுக்கு தயாநிதி 14 புதிய லைசென்ஸுகளை ஒதுக்குகிறார். ஸ்பெக்ட்ரம்  கேட்டு ஏர்செல் நிறுவனம் அளித்த விண்ணப்பத்தை, எவ்வித காரணங்களும் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் தாமதித்தார். பல்வேறு சமயங்களில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கு மாறு, தயாநிதி மாறனுக்கு கடிதம் எழுதியுள்ளார் சிவசங்கரன். ஆனாலும் பிடிவாதமாக தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யவில்லை. 

ஏர்செல் நிறுவனத்தை,  மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸுக்கு விற்க வேண்டுமென ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனுக்கு தயாநிதி கடும் நெருக்கடி  கொடுத்துள்ளார். விற்காவிட்டால் தொழிலே நடத்த முடியாது என்ற நெருக்கடியில் சிவசங்கரனும் தனது நிறுவனத்தை விற்று விட்டார். இதற்குப் பிறகு, ஏர்செல் நிறுவனத் துக்கு 14 சர்க்கிள்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும் நேரத்தில், ஐடியா மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்களின்  விண்ணப்பங்கள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படாமல் நிலுவையில் இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்த நான்கு மாதங்கள் கழித்து, மேக்சிஸ் நிறுவனம், மொரீஷியஸைச் சேர்ந்த தனது துணை நிறுவனம் ‘ஆஸ்ட்ரோ ஆல் ஏஷியா  நெட்வொர்க்ஸ்’ மூலமாக சன் டைரக்ட் நிறுவனத்தில் 830 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.  

சன் டைரக்ட் நிறுவனத்தில் ஏப்ரல் 2007-ல் 830 கோடியை ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீடு செய்யும் போது, சன் டைரக்ட் நிறுவனம் தன் செயல்பாடுகளைத்  தொடங்கவேயில்லை.   மேலும், சன் டைரக்ட் தொடங்கி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நஷ்டம் என்றும், ஆறாவது ஆண்டு முதல்தான் லாபம் கிடைக்கும் என்றும், சன்  குழுமத்தாலேயே தீர்மானிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் தான், ஆஸ்ட்ரோ நிறுவனம் 830 கோடியை அங்கு முதலீடு செய்கிறது.  

சன் டைரக்ட் நிறுவனத்தின் ஒரு பங்கு எழுபது ரூபாய் என்கிற கணக்கில் 20 சதவிகித பங்குகளை 830 கோடி ரூபாய் கொடுத்து வாங்குகிறது ஆஸ்ட்ரோ. மீதம் உள்ள  80 சதவிகித பங்குகளை கலாநிதி மற்றும் காவேரி கலாநிதி இருவரும் வைத்திருக்கின்றனர். இவர்கள் வாங்குகையில் ஒரு பங்கு 10 ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என்பது கு றிப்பிடத்தக்கது. இதனால் ஆஸ்ட்ரோ நிறுவனம் சன் குழுமத்தில் முதலீடு செய்த 830 கோடி ரூபாய் லஞ்சம்தான் என்று சி.பி.ஐ. கருதுகிறது. 

பங்குகளை வாங்கும்போது, சன் டைரக்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 3320 கோடி ரூபாய் என்று நிர்ணயம் செய்கிறது ஆஸ்ட்ரோ. இந்த டீல் முடிந்த மறுநாள், ஸீ கு ழுமத்தின் டி.டி.எச். நிறுவனமான டிஷ் நெட்டின் ஒரு பங்கின் விலை மும்பை பங்குச் சந்தையில் ரூ.61.25.   டிஷ் நெட்டின் மொத்த மதிப்பு ரூ.2622 கோடி.  இந்த  மதிப்பு டிஷ் நெட் தனது சேவையைத் தொடங்கிய பிறகு நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 

இந்த நிலையில் எதற்காக ஆஸ்ட்ரோ நிறுவனம் இவ்வளவு அதிக தொகை கொடுத்து பங்குகளை வாங்க வேண்டும்? இது சிவசங்கரனை மிரட்டி ஏர்செல் நிறுவனத்தை  விற்க வைத்ததற்காக அனந்தகிருஷ்ணன் கொடுத்த கைம்மாறு என்று சி.பி.ஐ. கருதுகிறது. 

இது மட்டுமல்லாமல், ஆஸ்ட்ரோவின் அனந்த கிருஷ்ணன், மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சவுத் ஏஷியா எஃப்.எம். என்ற நிறுவனத்தில் 2009 ஆகஸ்ட் மாதம்  20 சதவிகித பங்குகளுக்கு  ஈடான தொகையாக 450 கோடியை முதலீடு செய்கிறார். இந்தியாவில் 45 நகரங்களில் எஃப்.எம். சேவையை நடத்திக் கொண்டிருக்கும்  ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிக் எஃப்.எம். நிறுவனத்தின் மொத்த மதிப்பீடே 300 கோடி ரூபாய்தான். ஆனால்  20 சதவிகித பங்குகளுக்காக எதற்கு 450 கோடி ரூபாயை  ஆஸ்ட்ரோ நிறுவனம் மாறன் சகோதரர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேள்விகளை எழுப்புகிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். 

இந்த விவகாரத்தில் சிக்கும் மற்றொரு வி.ஐ.பி. அப்பல்லோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டி.  பிரதாப் ரெட்டியின் மருமகன் ஏர்செல் நிறுவனத்தில் 25 சதவிகித பங்கு களை வைத்திருக்கிறார்.  மேக்சிஸ் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால், இந்திய சட்டங்களின்படி 74 சதவிகிதத்திற்கு மேல் அந்நிறுவனம் இந்திய தொலைத்  தொடர்பு நிறுவனத்தில் முதலீடு செய்ய முடியாது.  இதை தவிர்ப்பதற்காக, அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனமான சிந்தியா செக்யூரிட்டீஸ் நிறுவனம், 34.17 கோடிக்கு  ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. 

எப்படியோ, தாமதமானாலும் மாறன் சகோதரர்கள் சரியாகவே சிக்கிக் கொண்டுள்ளார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் கருணாநிதி குடும்பத்தில் முதலில் கனிமொழி சிறைக்குச்  சென்றார். அடுத்து தயாநிதி மாறன் விரைவில் சிறை செல்வார் எனத் தெரிகிறது. ஷாகித் பல்வாவுடன் கருணாநிதியின் வாரிசு ஒருவர் ஆறுமுறை நடத்திய சந்திப்பு  விவரங்களும் சி.பி.ஐ. வசம் இருக்கிறதாம். கூடவே, ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெருமளவு பணம் கருணாநிதி கையில்தான் இருக்கிறது என சுப்பிரமணியன் சுவாமி வேறு கி ளப்புகிறார். இவர்களில் யாரை அடுத்து சி.பி.ஐ. வளைக்கும் என்பது தெரியவில்லை.

எனவே, இப்போதைக்கு இந்த விவகாரங்கள் கருணாநிதி குடும்பத்தை அமைதியாக இருக்க விடும் எனத் தோன்றவில்லை!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_11_2011_005_008-bsnl-workers-harasssed.jpg?w=640&h=419



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 

2ஜி வழக்கில் மாறன் சகோதரர்கள் எப்போது வேண்டுமானாலும் திஹார் சிறையில் அடைக்கப்படலாம் என்ற பேச்சு நிலவி வரும் வேளையில், ‘சென்னை பி.எஸ்.என்.எல்.  அலுவலகத்தில் தயாநிதிக்கு எதிரான ஆவணங்களை அழிக்கும் முயற்சியைத் தட்டிக் கேட்டதற்காக அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு பி.எஸ்.எ ன்.எல். நிர்வாகத்தை அலற வைத்திருக்கிறது.  

ஏர்செல் சிவசங்கரனை மிரட்டி அவரது கம்பெனியை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்றதில் சன் டி.வி. நிறுவனம் 750 கோடி ரூபாய் ஆதாயம் அடைந்தது என்பதுதான்  மாறன் சகோதரர்களுக்கு எதிராக சி.பி.ஐ. வைக்கும் பிரதான குற்றச்சாட்டு. இதைத் தவிர தேர்தலுக்கு முன்பே முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய  அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி தனது ‘போட் கிளப்’ வீட்டில் மினி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அமைத்திருக்கிறார் தயாநிதி. உயர்நவீன 323 தொலைபேசி இணைப்புகள்  பொருத்தப்பட்டதில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது’ என சரவெடியைக் கொளுத்திப் போட்டார். 

சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், உயர்நவீன ஐ.எஸ்.டி.என். இணைப்புகளை ‘போட் கிளப்’ வீட்டில் இருந்து தேனாம்பேட்டை சன் டி.வி. அலுவலகத்திற்கு ஆப்டிகல்  ஃபைபர் மூலம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் 400 கோடி ரூபாய் அரசுக்கு உத்தேச இழப்பு ஏற்பட்டதையும் சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவித்தி ருக்கிறது. 

இந்த ஐ.எஸ்.டி.என். இணைப்புகள் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள்தான் தற்போது அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழும்பியிருக்கிறது. இதுபற்றி நம்மிடம்  விரிவாகப் பேசினார் பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவர்.   

“2004-ம் ஆண்டு தொலைத் தொடர்புத்துறைக்கு அமைச்சரானார் தயாநிதி. அந்த நேரத்தில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு நெருக்கமான வேலுச்சாமி என்பவர் பி.எஸ்.எ ன்.எல். நிறுவனத்தில் பொறுப்பில் இருந்தார். வீரபாண்டியார் ஆதரவில் சி.ஜி.எம். ஆக்கினார் தயாநிதி. அதற்கு நன்றி விசுவாசமாகத்தான் ‘போட் கிளப்’ வீட்டில் 323  இணைப்புகளைப் பொருத்திக் கொள்ள அனுமதி வழங்கினார் வேலுச்சாமி. 

இந்த இணைப்புகள் மூலம் சன் டி.வி. அலுவலகத்தில் இருந்து வீடியோ, ஆடியோ ஆகியவற்றை மிகத் துல்லியமாகவும், வேகமாகவும் அனுப்பலாம். இதை சன் டி.வி.  முழுமையாகப் பயன்படுத்தி லாபம் அடைந்தது. 2007-ல் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறைக்கு வந்ததும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலைப் பெரிதுபடுத்தியது சன்  டி.வி. இதனால் கடுப்பான ராசா, ‘தயாநிதி முறைகேடாகப் பயன்படுத்தும் 323 இணைப்புகள் மீது சி.பி.ஐ. விசாரணை வேண்டும்’ என உத்தரவிட்டார். சி.பி.ஐ.யும் அறிக்கை  அளித்தது. வேலுச்சாமிக்குப் பிறகு புதிய சி.ஜி.எம்.மாக சுப்ரமணியம் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் வந்த பிறகு முழுக்க முழுக்க தயாநிதியின் கைக்கூலியாகவே  செயல்படுகிறார்’’ என அதிர வைத்தார். 

“கடந்த சில வாரங்களாக புரசைவாக்கத்தில் உள்ள சி.ஜி.எம். அலுவலகத்திலேயே இருக்கிறார் பழைய சி.ஜி.எம். வேலுச்சாமி. 323 இணைப்புகளுக்கான ஆவணங்களை  அழிக்கும் இவரது முயற்சிக்கு புது சி.ஜி.எம். எல்லா வகையிலும் துணை நிற்கிறார். சி.ஜி.எம். ஆதரவில் பி.எஸ்.என்.எல். காரைப் பயன்படுத்துகிறார் வேலுச்சாமி.  சி.ஜி.எம்.இல்லாத நேரத்தில் அவரது டேபிளில் அமர்ந்து ஃபைல் பார்ப்பது, பி.எஸ்.என்.எல். விஜிலென்ஸ் இயக்குனரிடம் பல மணி நேரம் உட்கார்ந்து பேசுவது என  வேலுச்சாமி பிஸியாக இருக்கிறார். இந்தத் தகவல் எங்களுக்குக் கிடைத்ததும், ‘சன் டி.வி.யில் இருந்து வர வேண்டிய 400 கோடி ரூபாயை வசூல் செய்யாமல் வே லுச்சாமியை அனுமதிப்பது நியாயமா?’ என்று கேட்டோம். அதனால் எங்கள் மீது சி.ஜி.எம் கோபத்தில் இருந்தார். 

இதையெல்லாம் வலியுறுத்தி 20-ம் தேதி பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்குள் தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம்  நடத்தியது. ஆனால் முற்றுகைப் போராட்டம் நடத்தியதாக போலீஸை வரவழைத்தார் சி.ஜி.எம். போலீஸ் அதிகாரிகள் பார்த்துவிட்டு, ‘ஒன்றுமில்லை’ எனக் கிளம்பி விட் டனர். இதன்பின்னர் சி.ஜி.எம். அறைக்குப் போய் வேலுச்சாமி வருவது பற்றிக் கேள்வி கேட்டோம். எங்கள் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்’’ என  ஆதங்கப்பட்டார்.

தொடர்ந்த மற்றொரு அதிகாரி, “அலுவலக வாசலில் உள்ள கேமரா மூலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரங்களைச் சேகரித்தவர், அனைவருக்கும்  ‘எஃப்.ஆர்.(17) என்ற சேவை முறிவு சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸ் நூறுக்கும் மேற்ப ட்ட ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எதிர்ப்பாளர்களை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை இது. சன் டி.வி.க்கு ஆதரவான நடவடிக்கையாகவே  நாங்கள் இதைப் பார்க்கிறோம். இந்த ஏழு ஆண்டுகளில் தி.மு.க. வசம் தொலைத் தொடர்புத் துறை வந்ததால் ஆறாயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் பி.எஸ்.என்.எல்.  இயங்குகிறது. இதையெல்லாம் மேடையில் பேசினால் நடவடிக்கையா?’’ எனக் குமுறினார் அந்த அதிகாரி. 

பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் தேசிய துணைப் பொதுச் செயலாளர் மதிவாணனிடம் பேசியபோது, “1.10.2000-ம் ஆண்டில் மத்திய அரசில்  இருந்து பி.எஸ்.என்.எல். கம்பெனியாக மாறிவிட்டது. அதில் இருந்தே நாங்கள் மத்திய அரசு ஊழியர்கள் அல்ல.  எங்களுக்கு எஃப்.ஆர்.(17) சட்டம் பொருந்தாது. எங்கள்  மீது நடவடிக்கையும் எடுக்க முடியாது. போராட்டம் நடந்த அன்று விடுப்பு எடுத்துவிட்டு வந்துதான் போராடினோம். 

நாங்கள் தொழிற்சங்க ரீதியாகப் போராடினால் நிர்வாகரீதியாக எங்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.  இங்கு ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறது. எங்கள் கோரிக்கைகளைப்  பரிசீலிக்காமல் இருப்பது ஆரோக்கியமான விஷயம் அல்ல. என் மீது விசாரணைக் குழு அமைக்கப்படும் என நோட்டீஸ் வந்திருக்கிறது. எதையும் அமைப்புரீதியாக  நாங்கள் எதிர்கொள்வோம்’’ என்றார் ஆவேசத்தோடு. 

இதுகுறித்து சென்னை பி.எஸ்.என்.எல். தலைமைப் பொதுமேலாளர் சுப்ரமணியத்தைத் தொடர்பு கொண்ட போது, ‘இதுகுறித்துப் பேச விரும்பவில்லை’ என்ற தகவலே  கிடைத்தது. மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, “எஃப்.ஆர்.(17) நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருப்பது உண்மைதான். விசாரணை நடந்து கொண்டி ருக்கிறது’’ என்றார். 

இதற்கிடையில், ‘சன் டி.வி. நிறுவனத்திடம் இருந்து பணத்தை வசூலிக்காமல் ஊழலுக்குத் துணை போகாதே என்றால் உனக்கேன் கோபம்?’ என்ற ஆக்ரோஷ வரிகளைக்  கொண்ட போஸ்டர்கள் சென்னை முழுவதும் ஒட்டப்பட, ஏக டென்ஷனில் இருக்கிறார்கள் மாறன் சகோதரர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19_11_2011_002_006.jpg dayanithi scam bsnl staff



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_11_2011_006_031.jpg dth tax stayed



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_12_2011_002_014.jpg bsnl



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

SC admits Prashant Bhushan's plea to arrest Maran brothers

 
Maran and Ananda Krishnan in trouble: SC admits Prashant Bhushan’s plea seeking arrest of accused in Aircel Maxis case 
TT Correspondent | | 16 Dec 2011 

In a major development the Supreme Court on Friday admitted the Prashant Bhushan’s bail plea seeking arrest of the accused in Aircel Maxis case. This could spell trouble for former telecom minister Dayanidhi Maran and Malaysian business tycoon and head of Maxis Communications T Ananda Krishnan Ananada Krishna.

The CBI had investigated the matter related to corruption and misuse of official position by Mr Dyanidhi Maran when he was Telecom Minister. Over 4-5 months of investigations, the CBI found the involvement of seven persons/entities.

The CBI then filed an FIR on October 9, 2011 and searched the premises of the accused on October 10, 2011. Since then over two months have passed, the CBI is deliberately going slow in the case and has not made any arrests in the case.

Petitioners submit that this was the most clear-cut case of corruption and quid pro quo, and is being made weak by the CBI. Chargesheet should have been filed in this case several months back.”

http://www.telecomtiger.com/PolicyNRegulation_fullstory.aspx?storyid=13114§ion=S174


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

01_01_2012_001_037.jpg dayanithi maran



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

23445968.JPG Maarans

06_01_2012_001_046.jpg Marans

23445968.JPG Maarans



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

20120106a_012101006.jpg sun 29 channels



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சிபிஐ விசாரணையில் தொய்வு..மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு:

 
புது தில்லி, ஜன. 19:÷வெளிநாடுகளிலிருந்து தகவல்களைத் திரட்டுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டிவி நெட்வொர்க் உரிமையாளர் கலாநிதி மாறன் ஆகியோர் மீதான வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, மலேசியாவின் மாக்ஸிஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான குளோபல் கம்யூனிகேஷன்ஸ் சர்வீசஸ் ஹோல்டிங் லிமிடெட் மூலமாக ஏர்செல்லின் (ரூ. 7,880 கோடி மதிப்புள்ள) 99.3 சதவீத பங்குகள் வாங்கப்பட்டன.  இது தொடர்பாக புகார் தெரிவித்த ஏர்செல் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன், தனது நிறுவனத்தை மாக்ஸிஸýக்கு விற்பனை செய்யுமாறு மாறன் சகோதரர்கள் மிரட்டிக் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்தார். மேலும், அதைத் தொடர்ந்து மாக்ஸிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணன், கலாநிதி மாறனுக்குச் சொந்தமான நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.  அனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமான ஆஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சுமார் ரு. 700 கோடி வரை சன் டிவி நெட்வொர்க்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  ÷இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அனந்த கிருஷ்ணன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.  இந்த வழக்குத் தொடர்பாக மலேசியாவிலும், மோரீஷசிலும் தகவல்களைத் திரட்டுவதிலும், ஆவணங்களைப் பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  ÷இதையடுத்து பணம் முதலீடு செய்யப்பட்டது தொடர்பான தகவல்களைத் தூதரகம் வழியாக பெற சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

23944765.JPG Maarans



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

20120121a_012101004.jpg sundirect



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: சன் பிக்சர்ஸ் மாறன் வெற்றிகள்
Permalink  
 


25_01_2012_012_004.jpg scv threaten cable opeerators



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

28_01_2012_016_009.jpg scv



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

23225640.JPG suntv

02_02_2012_001_038.jpg sun tv



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

03_02_2012_003_002.jpg sun kuzumam



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்க தயாநிதியே காரணம்:BJP

 
imageshjhjhhj.jpg
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்ததற்கு, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதியே மிக முக்கிய காரணம். இந்தியாவின் மிகப்பெரிய "2ஜி' ஊழலுக்கு காரணமான, தயாநிதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவும் பரிந்துரை செய்துள்ளது. ஆனாலும், சி.பி.ஐ., அவர் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது என, தெரியவில்லை என்று, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார்.

டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், முரளி மனோகர் ஜோஷி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 
நடைமுறையில் மாற்றம்: மத்திய அரசில் எந்த ஒரு கொள்கை முடிவையும், அமைச்சரவை கூடித்தான் எடுக்கும். இந்த நடைமுறையைத்தான், எல்லா அரசுகளும் கடைப்பிடித்தன. ஆனால், முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், தொலைத் தொடர்பு அமைச்சராக பதவி வகித்த தயாநிதி, இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தினார். "அமைச்சகம் சார்ந்த கொள்கை முடிவுகளை, அந்த துறையின் அமைச்சர் தான் எடுக்கவேண்டும். அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் நடைமுறையை மாற்றவேண்டும்' என்று தெரிவித்தார். தயாநிதியின் இந்தக் கோரிக்கையை, பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏற்றுகொண்டார்.

மிகப்பெரிய ஊழல்: அதன்படிதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தயாநிதி முடிவுகளையும் எடுத்தார். அவருக்கு பின் தொலைத் தொடர்பு அமைச்சராக ராஜா பொறுப்பேற்றார். அவரும் அவ்வாறே செய்தார். மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என, தயாநிதி வலியுறுத்திய காரணத்தினால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மிகப் பெரிய ஊழல் நடந்திருக்கிறது. எனவே, தயாநிதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவும் இதையே பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு ஜோஷி கூறினார். அப்போது பத்திரிகையாளர்கள், "தயாநிதி மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு ஜோஷி, "அவர் மீது சி.பி.ஐ., எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. இதுபற்றி சி.பி.ஐ., யிடம்தான் கேட்கவேண்டும்' என்றார்.

- நமது டில்லி நிருபர்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

08_02_2012_002_017.jpg spicejet



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: மாறன் சகோதரர்கள் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு !

 
Dayanidhi Maran and Kalanithi Maranடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்தம் மூலம் இவர்கள் முறைகேடாக ரூ.550 கோடி அளவிற்கு பணம் ஈட்டியதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று அமலாக்கப் பிரிவினர் இந்த வழக்கை பதிவு செய்து எப்ஐஆரும் பதிந்துள்ளனர்.

சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act-PMLA), அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் (Foreign Exchange Management Act-FEMA) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் மிக மிகக் கடுமையானதாகும். இதன் கீழ் சன் டிவி மற்றும் மாறன் சகோதரர்களின் சொத்துக்களைக் கூட முடக்கும் அதிகாரம் அமலாக்கப் பிரிவுக்கு உண்டு.

2ஜி லைசென்ஸ் பெற சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனம் விண்ணப்பித்தபோது அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் இழுத்தடித்ததாகவும், பின்னர் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு நிர்பந்தப்படுத்தியதாகவும், இந்த நெருக்குதலால் ஏர்செல் நிறுவனத்தை சிவசங்கரன் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதாகவும், இதன் பிறகு ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி லைசென்ஸை தயாநிதி மாறன் ஒதுக்கித் தந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சன் டைரக்ட் நிறுவனத்தில் அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமான அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் நிறுவனம் ரூ. 550 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. செளத் ஏசியா எண்டர்டெயின்மெண்ட் ஹோல்டிங்ஸ் என்ற துணை நிறுவனம் மூலமாக இந்தப் பணத்தை முதலீடு செய்தார் அனந்தகிருஷ்ணன்.

இதன்மூலம் மாறன் சகோதரர்கள் ரூ. 550 கோடி அளவுக்கு முறைகேடாக லாபம் அடைந்ததாக அமலாக்கப் பிரிவு கூறியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டையடுத்து கடந்த ஆண்டு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவிலியிருந்து விலக நேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் மறுத்து வந்தாலும், இது தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

15251453.JPG Maarans

15251453.JPG Maarans09_02_2012_001_005.jpg Maarans



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

2533234.JPG Maran Pranab Mukerji



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

10_02_2012_013_015.jpg Marans



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

maran



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: கலாநிதி தயாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் வெற்றிகள்
Permalink  
 


தனியாய்த் தவிக்கும் மாறன்கள்!
ஏர்செல் நிறுவன பங்குகள் விற்பனை தொடர்பாக சிவசங்கரன் கொடுத்த புகாரில் கூடுதல் ஆவணங்கள் கிடைத்துள்ளது என்று கடந்த இதழில் குறிப்பிட்டு இருந்தோம். மொரீஷியஸ் தீவில் இருந்து சன் டி.டி.எச். நிறுவனத்துக்கு பெரும் தொகை வந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தெரிவித்து இருந்தோம். 
இந்நிலையில் மாறன் சகோதரர்கள் மீது அமலாக்கப்பிரிவு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது. முறைகேடாக ரூ.550 கோடிக்கு பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி வழக்குப் போட்டிருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட ஹவாலா மோசடி போன்றது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும், தவறு நடந்துள்ளது என்பதை அமலாக்கத்துறை உறுதி செய்துவிட்டது. இனி மாறன்கள் தப்பிக்க வாய்ப்புகள் குறைவு என்று சொல்கிறார்கள். இந்த வழக்கில் அவர்கள் ஷாமீனில் வருவதும் முடியாது என்று சொல்கிறார்கள். 

ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றப்பத்திரிகையில் மாறன்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. விரைவில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை வழங்கப் போகிறதாம். அதற்கு முன்னதாக அவர்களைக் கைது செய்யவும் சி.பி.ஐ. தீவிரமாக இருப்பதாக சொல்கிறார்கள். அமலாக்கத்துறையும் புதிய வழக்கில் கைது செய்யக் கூடும் என்றும் செய்திகள் வருகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்த அதே நாளில், டெல்லியில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை மாறன்கள் சந்தித்துப் பேசியி ருக்கிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

புதிய வழக்குகள் குறித்து மாறன் தரப்பில், ‘‘தி.மு.க.வை மிரட்டுவதற்காகவே காங்கிரஸ் தொடர்ந்து வழக்குகளைப் போட்டு வருகிறது. தேர்தலுக்கு முன்பு ராசா, கனிமொழியைக் கைது செய்தார்கள். கடந்த பொதுக்குழுவில் காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று சிலர் பேசியதால், தி.மு.க.வை மிரட்டும் வகை யில் அமலாக்கப்பிரிவை வைத்து வழக்குப் போட வைத்துள்ளனர். டெல்லியில் உள்ள தலைவர்களுக்கு கருணாநிதி குடும்பத்தோடு, மாறன்கள் நல்ல டேர்ம்ஸில் இல்லை என்பது சொன்னாலும் புரியவில்லை. சி.பி.ஐ. வழக்கை தனியாக சந்தித்தது போல இந்த வழக்கையும் சந்திப்போம்’’ என்கிறார்கள்.
thanks kumudam



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தனி விமானத்தில் வெளிநாடு கிளம்பினார் கலாநிதி !

 
சென்னை: 2 ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்க துறையினர் சட்ட நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வரும் வேளையில் சன்குழும தலைவர் கலாநிதி தனது மனைவியுடன் இத்தாலி புறப்பட்டு சென்றார். 



ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஆதாயம் பெற்ற மாக்ஸிஸ் நிறுவனம் சன் குழுமத்தில் ரூ. 550 கோடியை முதலீடு செய்தது. இந்த பணம் பெற்றதன் நோக்கம் என்ன என்பதும், இது சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்தும் மத்திய அமலாக்க இயக்குனரகம் விசாரித்து கடந்த 7ம் தேதி வழக்கை பதிவு செய்தது. மாஜி அமைச்சர் தயாநிதி மற்றும் கலாநிதி குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சி.பி.ஐ.,தாக்கல் செய்த வழக்கும் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் நிலுவையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் நேற்று ( வெள்ளிக்கிழமை) மதியம் 2. 20., க்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சன் குழும சிறப்பு விமானம் மூலம் கலாநிதி இத்தாலிக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் மனைவி காவேரி கலாநிதி, சன்குழும தலைமை அலுவலர் விஜயகுமார், இவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் சென்றனர். இதனை ஏர்போர்ட் அலுவலக வட்டாரம் மற்றும் உளவு பிரிவு போலீசார் உறுதி செய்தனர். 

இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் நகருக்கு சென்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்க துறையின் வழக்கு பதிவிற்கு பின்னர் விசாரணைக்கு அழைப்பர். இந்நிலையில் கலாநிதி இத்தாலி பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எப்போது திரும்புவார் என்ற விவரம் வெளியே அறியப்படவில்லை. 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

16_02_2012_018_013.jpg dayanithi for cottion prices



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

திமுக உள்கட்சி மோதல்-தங்கள் பங்குக்கு உள்குத்து குத்திய மாறன் சகோதரர்கள்!

 
சென்னை: தி.மு.க.வில் நடக்கும் யுத்தத்தில் தங்கள் பங்குக்கும் ஒரு உள்குத்து போட்டிருக்கின்றனர் சன் குழுமத்தின் மாறன் பிரதர்ஸ். அழகிரியை காட்டமாக கடுப்பேற்றிய நேரு இல்ல திருமணத்தை வைத்துத்தான் இந்த சீரியலை காட்டியுள்ளனர்.



தி.மு.க. பிரமுகர்களின் இல்ல திருமணங்கள் சென்னையிலும் சரி வெளியூர்களிலும் சரி.. சென்னை என்றால் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் வெளியூர் என்றால் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்வது வழக்கமான ஒன்று.

இத்தகைய திருமண நிகழ்ச்சிகளில் கருணாநிதி எத்தனையோ சர்ச்சைக்குரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை பகிரங்கமாகவோ மறைமுகமாகவோ சொல்வது உண்டு.

கருணாநிதி என்ன சொன்னாலும் சரி, திருமண வீட்டு நிகழ்ச்சியில் பேசியது என்பதாலேயே சன் குழுமத்தின் சன் டிவி செய்தியிலோ அல்லது சன் நியூஸ் சேனலிலோ ஒளிபரப்ப மாட்டார்கள்.

ஏனென்றால் எந்த ஒரு அரசியல் திருமண நிகழ்ச்சிக்கும் சன் குழுமத்தினர் செய்தியாளர்களையோ கேமராமேன்களையோ அனுப்பமாட்டார்கள். வெளியூர் செய்தியாளர்கள் அப்படி அனுப்பினாலும் பதிவு செய்யமாட்டார்கள்.

ஆனால் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது நேரு இல்லத் திருமண நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியதை மட்டுமல்ல.. ஸ்டாலின் பேசியதையும் ஒரு செய்தியாக்கி ஒளிபரப்பியது.

திருமண நிகழ்ச்சி செய்திகளையே ஒளிபரப்பாக சன் குழுமம், உள்குத்து உச்சகட்டத்தில் இருக்கும்போது, அழகிரியை அப்செட் ஆக்கும் வகையில் நேரு ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த திருமண நிகழ்வை செய்தியாக்கி ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதில் தங்களுக்கு இருக்கும் முனைப்பை இப்படி வெளிப்படுத்தி தங்கள் பங்குக்கு ஒரு உள்குத்து அடித்திருக்கின்றனர் என்றே கூறப்படுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

2ஜி விலை நிர்ணயம் தொடர்பாக பிடிவாதம் காட்டினார் தயாநிதி-மாஜி டெலிகாம் செயலாளர்

 
டெல்லி: 2ஜி அலைக்கற்றைக்கு விலை நிர்ணயிக்கும் விவகாரத்தை மத்திய அமைச்சர் குழுவின் பரிசீலனைக்கு விட வேண்டாம் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் எழுதியதாகக் கூறப்படும் கடிதங்கள் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பார்வையில் உள்ளது.



தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, அமைச்சர் குழு கவனிக்கும் விவகாரங்களின் பட்டியலில் அலைக்கற்றைக்கான விலை நிர்ணயம் செய்வதும் ஒரு அம்சமாக இடம்பெற்றிருந்தது. இதற்கான அறிவிக்கை 2006 பிப்ரவரி 23-ல் வெளியிடப்பட்டது.

பின்னர் அது திருத்தி அமைக்கப்பட்டு அதே ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டது. திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் அலைக்கற்றை நிர்ணயம் இடம்பெறவில்லை.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரித்து வரும் காங்கிரஸ் எம்.பி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு, இந்த அறிவிக்கை தொடர்பாகவும் ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு இப்போதைய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத் தலைவரும், அந்தக் காலகட்டத்தில் தொலைத் தொடர்புத் துறை செயலாளராக இருந்தவருமான ஜே.எஸ்.சர்மா புதன்கிழமை ஆஜரானார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சாக்கோ கூறியதாவது:

அமைச்சர் குழுவின் பரிசீலனைப் பட்டியலில் இருந்து அலைக்கற்றை விலை நிர்ணயம் செய்யும் விவகாரத்தை நீக்குவது தொடர்பாக பிரதமருக்கு அமைச்சர் தயாநிதி மாறன் எழுதிய 3 கடிதங்களை சர்மாவிடம் ஜே.பி.சி. சுட்டிக் காட்டியது.

இந்த விஷயத்தில் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை செயலாளர் என்கிற முறையில் அவரது நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அது உயர் நிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால், சொந்தமாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியவில்லை அவர் தெரிவித்தார்.

அலைக்கற்றை விலை நிர்ணயம் செய்வது தொலைத் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று தயாநிதி மாறன் விரும்பினார் என்றும் சர்மா தெரிவித்தார் என்றார் சாக்கோ.

இதனிடையே, சர்மா அளித்திருக்கும் தகவல்கள் சரிதானா, மாறன் தன்னிச்சையாகக் கடிதம் எழுதினாரா என்பவற்றை ஆய்வு செய்வதற்காக, இது தொடர்பான அசல் கோப்புகளை தருமாறு தொலைத் தொடர்புத் துறையிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு கோரியிருக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Sun tv 20120225a_007101007



__________________
«First  <  1 2 3 4 5 6  >  Last»  | Page of 6  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard