2ஜி விவகாரத்தில் தயாநிதியின் பங்கு குறித்தும் விசாரணை-உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
Connect with
புதன்கிழமை, ஜூலை 6, 2011, 16:13 [IST]
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் பங்கு குறித்தும் விசாரித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து மாறனுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
இந்த ஊழல் தொடர்பாக நடந்து வரும் விசாரணையின் விவரங்களை இனறு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. அதில், இந்த ஊழலில் நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணையை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடிப்போம். இந்த ஊழல் குறித்த முழு விசாரணையும் 3 மாதத்தில் முடிவடையும்.
2ஜி விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும் இப்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனின் பங்கு குறித்தும் விசாரித்து வருகிறோம்.
ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தராமல் தயாநிதி இழுத்தடித்தார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த ஆக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கியதும் தெரிய வந்துள்ளது. இதனால் 2ஜி விவகாரத்தில் அவரது பங்கு குறித்தும் விசாரித்து வருகிறோம் என்று சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் 2003-06ம் ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமம் வழங்க வேண்டுமென்றே காலதாமதம் செய்தார் என்று அவரது முன்னாள் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.
தனது அண்ணன் கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனம் பலன் அடைய வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி உரிமம் வழங்காமல் தயாநிதி இழுத்தடித்தார் என்று நிருபேந்திர மிஸ்ரா சிபிஐ விசாரணையில் கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தயாநிதியின் பெயரை 2ஜி விவகாரத்தில் சிபிஐ சேர்த்துள்ளதாகத் தெரிகிறது.
சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி அவர் விண்ணப்பித்தார். ஆனால் தயாநிதி மாறன் லைசென்ஸ் தரவில்லை. மாறாக அவரை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்தின் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்று விட்டார்.
ஏர்செல் நிர்வாகம் மாறிய உடனேயே அந்த நிறுவனத்துக்கு 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. மேலும் இந்த மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடும் செய்தது.
இந்த விவகாரம் குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் தயாநிதியின் முன்னாள் செயலாளரான நிருபேந்திர மிஸ்ரா முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இப்போது, தயாநிதியையும் 2ஜி விவகாரத்தில் சிபிஐ சேர்த்துவிட்டதால் அவர் பதவி விலகியே ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவராக விலகாவிட்டால், விரைவில் நடக்கவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது தயாநிதியை காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் நீக்கலாம் என்று தெரிகிறது.
தயாநிதி மாறனை பதவி நீக்க வேண்டும்-ஜெ:
இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, இதற்கு மேலும் தயாநிதி மாறன் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
முறைகேடான வகையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டைச் சுற்றி ஆப்டிகல் பைபர் கேபிள்கள் போடப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி வந்த ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தயாநிதி மாறன் வீட்டிலிருந்து ரகசிய கேபிள்கள் செல்வதாக டைம்ஸ் நௌ டிவியில் வெளியான செய்தியைப் பார்த்தேன். சென்னைக்கு திரும்பியவுடன் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
மாறன், தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது தனது வீட்டில் பி.எஸ்.என்.எல் இணைப்புகளை பெருமளவில் முறைகேடாக பயன்படுத்தி வந்ததாகவும், கிட்டத்தட்ட ஒரு ரகசிய எக்ஸ்சேஞ்ச் ஆக அது பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. நூற்றுக்கணக்கான இணைப்புகளை வாங்கி அதை தனது சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டிவி சானல்களுக்கு முறைகேடாக பயன்படுத்தினார் தயாநிதி மாறன் என்பது குற்றச்சாட்டாகும். இதுகுறித்து மத்திய அரசிடம் ஏற்கனவே சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது தயாநிதி மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகம் வரை ரகசிய கேபிள்கள் புதைக்கப்பட்டது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தயாநிதி மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகம் வரை கிட்டத்தட்ட6.4 கிமீ அளவுக்கு இந்த கேபிள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதை தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவியின் சேனல்களுக்காக தயாநிதி மாறன் பயன்படுத்தியுள்ளார் என்று டைம்ஸ் நெளவ் செய்தி கூறுகிறது.
தயாநிதி மாறனின் வீட்டிலிருந்து சன் டி்வியின் அலுவலகம் வரை இந்த கேபிள்கள் செல்வது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. கேபிள் பதிக்கும் பணிக்கான அனுமதியை கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் சென்னை மாநகராட்சி சன் டிவிக்குக் கொடுத்துள்ளது. தனது வீட்டில் ரகசிய எக்ஸ்சேஞ்ச் செயல்படவில்லை என்று தயாநிதி மாறன் கூறி வருகிறார். ஆனால், இந்த கேபிள் கட்டமைப்பு ஏன் என்பதை அவர் இதுவரை விளக்கவில்லை என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
மழைக்காலம், வெயில் காலம் என்பது போலவே இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது ஸ்பெக்ட்ரம் காலம். திமுகவின் ஆட்சியை காவு வாங்கிய காரணங்களில் ஒன்றாக இருந்த இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி நாளொரு மேனியும் புதுப்புது வண்ணத்துடன் செய்திகள் வந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு செய்திக்குள்ளும் ஓராயிரம் மர்ம முடிச்சுகள். முதலில் திஹாருக்கு தனியாக போன ராசா துணைக்கு ஒரு கூட்டத்தையே சேர்த்து அழைத்துக் கொண்டார்.
இப்போது ' மெல்லிய மலர் வாடுகின்றது' என்ற தத்துவத்தை கலைஞர் உதிர்க்கும் அளவிற்கு கனிமொழி பேசும் மொழி திஹார்மொழியாக மாறிப் போயுள்ளது. இன்னும் சில வாரங்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ உள்ளேயிருக்கும் அத்தனை பேர்களும் இந்த திஹார் மொழியை பேசித்தான் ஆக வேண்டும் போலிருக்கு. ஆனால் இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஜயின் வலையில் சிக்கியது அத்தனை கெண்டை கெளுவை மீன்கள் மட்டுமே. இன்னும் சுறா மீன்கள் சிக்கியபாடில்லை. ஆட்சியில் இருக்கும் வரைக்கும் சம்மந்தப்பட்ட காங்கிரஸ் தலைகளுக்கும் கவலையில்லை..
இதில் விட்டகுறை தொட்டகறை ஒன்று உள்ளது. அவர் தான் திருவாளர் தயாநிதி மாறன். தொலைக்காட்சி துறையில் தொழில் தொடங்கிய குறுகிய காலத்திற்குள் மாறன் குடும்பம் பெற்ற வளர்ச்சி அசாதரணமானது. 15 வருடங்களுக்குள் உலக பணக்காரர் வரிசையில் கோலோச்சியவர்கள் செய்த உள்ளூர் தாதாதனங்கள் இப்போது தான் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. தயாநிதி சோனியாவை ஆண்டி என்றாலும் அம்மா தாயே என்றாலும் கூட உச்சநீதி மன்றத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஆப்பை கழட்ட முடியாது போலிருக்கு. அவரின் அதளபாதாளம் கண்ணுக்குத் தெரிவதால் அண்ணாத்தே நீ என்றைக்கு? என்பது போல் நிலவரம் சூடாய் போய்க் கொண்டிருக்கிறது.
எல்லாப் புகழும் தெஹல்கா இணைய தளத்திற்கே.
நாம் இப்போது பார்க்கப் போவது காங்கிரஸ், திமுக, மாறன் வகையறாக்களைப் போல இதுவரைக்கும் வெளியே தெரியாத ஒரு நபரும் உண்டு. ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது அலைக்கற்றை மூலம் இந்தியாவின் கஜானாவிற்கு முறைப்படி சேர வேண்டிய பணத்தை திருடியவர்களின் காவிய கதை. ஆனால் சன் குழுமமத்தால் தொழில் ஒப்பந்தம் போட்டிருக்கும் மலேசிய நிறுவனமென்பது (ASTROI) ஒருங்கிணைந்த இந்தியாவை எதிர்காலத்தில் துண்டாக்கி விடக்கூடிய சீன உளவு நிறுவனத்தின் கைப்பாவையாகும். அதன் முதலாளி வெகுஜன ஊடகம் எதுவும் இதுவரையிலும் சுட்டிக்காட்டப்படாத மலேசிய தொழில் அதிபர் தமிழர் ஆனந்தகிருஷ்ணன். இவருடன் சன் தொலைக்காட்சி போடப்பட்ட ஒப்பந்தங்களுக்காக பலிகிடா ஆக்கப்பட்டவர் தான் இப்போது பரபரப்பாய் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சிவசங்கரன்.
யாரிந்த ஆனந்தகிருஷ்ணன்? .
இவருக்கும் ஈழத்தில் நடந்த கடைசி கட்ட போராட்ட நிகழ்வுக்கும் சம்மந்தம் உண்டென்றால் நம்பமுடியுமா?
இவரின் கைங்கர்யம் வெறுமனே தமிழ்நாடு, இந்தியா என்றில்லாமல் தெற்காசியா முழுக்க பரவியுள்ளது. குறிப்பாக ஈழம் சார்ந்த அத்தனை பொருளாதார உடன்படிக்கைகளுக்கும் சீன அரசு இவரை முன்னிறுத்தியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேம்போக்கான பார்வையில் இவர் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி. மலேசியாவின் அசைக்க முடியாத ஆளுமை. மலேசியாவின் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவரின் தயவும் வேண்டும். ஆனால் இவர் அடிப்படையில் சீனாவின் பொருளாதார அடியாள்.
இன்று வரையிலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த விமர்சனத்திறகு பஞ்சமில்லை. ஏன் விடுதலைப்புலிகள் இயக்கம் போரில் தோற்றது? எப்படி தோற்கடித்தார்கள்? ஏன் இத்தனை நாடுகளும் ஒன்றாக சேர்ந்து இலங்கைக்கு உதவி செய்தது? இந்தியாவுக்கு பிரபாகரன் மட்டும் தான் பிரச்சனையா? போன்ற ஏராளமான கேள்விகளுக்கு நாம் பதில் தேடினால் அதில் முக்கிய இடத்தை பிடிப்பவர் இந்த மலேசிய தொழில் அதிபர் ஆனந்த கிருஷ்ணன்.
மகிந்த ராஜபக்ஷே ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு நாடும் இலங்கையின் மேல் வைத்திருந்த கண்ணும், எதிர்பார்த்து காத்திருந்த தருணங்கள் போன்ற அத்தனையும் அனந்த கிருஷ்ணன் வாழ்க்கை வரலாற்றை நாம் தோண்டும் போது கப்பு வாடை நம் மூக்கை துளைக்கும். மனித உரிமை மீறல், அனாதை ஆக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், முகாமில் உள்ளவர்கள் என்று தேய்ந்து போன் வார்த்தைகளுக்குப் பின்னால் இருப்பது ஒவ்வொன்றும் சர்வதேச ஒப்பந்தங்களும் அதற்காக அடித்துக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளுமே ஆகும். 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஈழத்திற்குள் கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு சீன ஒப்பந்தங்களுக்குப் பினனாலும் அனந்த கிருஷ்ணனின் பங்களிப்பும் உண்டு. இவரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு துக்கடா வேடத்தில் துட்டுக்காக அடித்துக்கொண்டிருக்கும் இவர்களை பார்த்து விடலாம்.
மாறன் சகோதர்களின் சன் நெட்ஓர்க் நிறுவனத்திற்கும் இப்போது தயாநிதி மாறனின் அமைச்சர் பதவியை காவு வாங்க தயாராக இருக்கும் தொழில் அதிபர் சிவசங்கரன் யார்?
திருவண்ணாமலை பகுதியில் பிறந்த 54 வயதான பி.ஈ பட்டதாரி. தொடர்ச்சியாக எம்.பி.ஏ பட்டத்தை அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பெற்றவர். உலகம் முழுக்க பரவியிருக்கும் இவரின் இன்றைய சொத்து மதிப்பு ஏறக்குறைய 20 ஆயிரம் கோடி ரூபாய். இன்று உலகம் முழுக்க இரும்புத்தொழிலில் சக்ரவர்த்தியாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இந்தியரான சுனில் மிட்டலின் தொழில் தத்துவத்தைப் போலவே சிவசங்கரனும் நலிந்த நிறுவனங்களை வாங்கி, அதனை வளர்த்து, சந்தையில் நல்ல லாபத்திற்கு விற்றுவிட்டு அடுத்த தொழிலை நோக்கி நகர்ந்து போய் விடுவது என்ற கொள்கையை வைத்திருப்பவர்.
இவர் வைக்காத துறையே இல்லை என்கிற அளவிற்கு தொழில் மூளையைக் கொண்டவருக்கு தேடிக் கொண்ட தொழில் ரீதியான எதிரிகளும் அதிகம். கணினி, காற்றாலை முதல் பாமாயில், மின் திட்டங்கள் வரைக்கும் அத்தனை துறைகளிலும் ஆட்சி செலுத்திக் கொண்டிருப்பவர். பின்லாந்து முதல் இந்தோனேசியா வரைக்கும் இவரின் வேர்கள் பரவாத நாடுகளே இல்லை என்கிற அளவிற்கு மல்டி பில்லியனர். இவரின் மற்ற சுயதிறமைகளை பார்ப்பதை விட இவருக்கும் மாறன் சகோதர்களுக்கும் உருவான மோதலின் ஆணி வேரை பார்த்துவிடலாம். இவருக்கு வேறெங்கும் உருவாகத பிரச்சனைகள் இவருக்கு இந்தியாவில் மட்டும் உருவாகக் காரணம் என்ன?
சன் தொலைக்காட்சி சேட்டிலைட் துறையில் காலடி வைப்பதற்கு முன்பே இந்த துறையில் இருப்பவர்கள் ஜீ ( ZEE ) குழுமம். இந்த குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா. இவர்கள் தான் மாறன் சகோதரர்களுக்கு நேரிடையான போட்டியாளர்கள். ஆனால் இன்று வரைக்கும் தமிழ்நாட்டில் ஜீ தொலைக்காட்சி அரசாங்கம் நடத்தும் பொதிகை போலவே பெயருக்கென்று தான் ஓடிக் கொண்டிருக்கிறது. . காரணம் சன் நிறுவனத்தின் ஆதிக்கத்தை .தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நன்றாகவே தெரியும்.
ஜனவரி 5 2005 முதல் சிவசங்கரன் சுபாஷ் சந்திராவுடன் கைகோர்த்து டிஷ்நெட் நிறுவனத்தை நடத்த தங்களின் தொழில் எதிரியுடன் சேர்ந்த சிவசங்கரன் சன் நிறுவனத்திற்கு நிரந்தர எதிரியாக மாறிப்போனார். முரசொலி மாறனுக்கு நண்பராக இருந்த சிவசங்கரன் மகன்களுக்கு நிரந்தர எதிரியாக மாற மாறன் சகோதர்களின் அரசியல் செல்வாக்கு சிவசங்கரனை நாடு விட்டு ஓடும் அளவிற்கு உருவாக்கத் தொடங்கியது. சிவசங்கரன் இந்தியாவில் நடத்திக் கொண்டிருந்த தொழில்களுக்கு உண்டான பாதிப்புகள் ஒரு பக்கம். ஜீ குழுமத்துடன் தான் நடத்தி வந்த டிஷ்நெட் தொழிலுக்கு உருவான இடைஞ்சல்கள் என்று சன் குழுமத்தால் உருவாக தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறத் தொடங்கினர். இதைத்தான் இப்போது சிபிஜ வசம் சிவசங்கரன் வாக்குமூலமாக கொடுத்துள்ளார் என்று நம்பப்படுகின்றது.
தயாநிதி மாறன் மிரட்டலின் மூலம் சிவசங்கரனின் ஏர்டெல் நிறுவனத்தின பங்குகளைப் பெற்ற அஸ்ட்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்தகிருஷணன் பற்றியும், ஈழத்தில் ராஜபக்ஷே ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, வந்த பிறகு நடந்த சர்வதேச ஒப்பந்தங்களைப்பற்றியும் இனி பார்க்கலாம்.
இதன் தாக்கம் எதிர்கால இந்தியாவிற்கு எவ்விதமான அச்சுறுத்தல்களை உருவாக்கும்??? அதுவே நமக்கு இந்திய உளவுத்துறையின் "சிறப்பு" அம்சங்களையும் நமக்கு புரியவைக்கும்.
நன்றி - நான் ஈழம் தொடர் எழுதிக் கொண்டிருந்த போது தோழர் பாமரன் அவர்கள் முருகன் என்பவர் எழுதிய அழிவின் விளிம்பில் தமிழினம் (முற்றுகைக்குள் இந்தியா) என்ற கோப்பை எனக்கு அனுப்பியிருந்தார். அச்சுக்காக தயாராக இருந்த அந்த பிடிஎப் கோப்பு ஏராளமான அதிர்ச்சிகளை தந்தது. இலங்கையை முன்னிறுத்தி சீன செய்து வரும் அத்தனை தில்லாலங்கடி வேலைகளையும் ஆதாரப்பூர்வமாக பல்வேறு தகவல்களுடன், இணையதளங்கள் உதவியுடன் எழுதியிருந்தார். ஒரு வருடத்திற்கு மேலான போதும் இந்த புத்தகம் வெளிவந்துள்ளதா என்பது குறித்து தகவல் இல்லை. இனி வரும் பெரும்பான்மையான தகவல்கள் அவரின் கோப்பிலிருந்து எடுத்தாளப்படுகின்றது.
தயாநிதி மாறனையே தடுமாற வைத்த தொழிலதிபர் சிவசங்கரன். ஒர் அலசல்.
சி.பி.ஐ. துருப்புச் சீட்டுக்களில் ஒருவராக மாறி, இன்று தயாநிதி மாறனின் பதவிக்கு வேட்டு வைக்கும் மனிதராகி இருக்கிறார், ஏர்செல் சிவசங்கரன். ஒரு காலத்தில் கருணாநிதி, முரசொலி மாறன்... இருவரின் செல்லப்பிள்ளை. இன்று தயாநிதி மாறனுக்கு கடுமையான எதிரி!
'கடந்த 16 ஆண்டு காலப் பகையின் கதை’ என்று விவரம் அறிந்த வட்டாரங்களால் சொல்லப்படும் கரன்ஸி ஆட்டத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே...!
'என்னுடைய ஏர்செல் கம்பெனியை மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு விற்கச் சொல்லி தயாநிதி மாறன் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்!’ என்று சிவசங்கரன் சி.பி.ஐ-யிடம் புகார் சொன்னதாகத் தகவல் வெளியானது. மாறன் இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்து, ''சிவசங்கரன் மில்லியனர் இல்லை, அவர் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. அப்படியே மிரட்டப்பட்டு இருந்தாலும் அவர் நீதிமன்றத்துக்கு அப்போதே சென்று இருக்கலாம்'' என்று பதில் கூறி இருந்தார். ஆனாலும் இந்த சர்ச்சை அடங்குவதாக இல்லை!
யார் இந்த சிவசங்கரன்?
சென்னையில் வசிக்கும் 54 வயதாகும் சிவசங்கரன், திருவண்ணா மலைக்காரர். பி.இ. (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ. (ஹார்வர்டு பல்கலைக் கழகம்) படித்தவர். ஸ்டெர்லிங் குரூப் மற்றும் சிவா வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று ஆரம்பித்து, பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர். பின்லாந்து நாட்டில் காற்றாலை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்று கடந்த 30 வருடங்களில் பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டு வந்தாலும், உச்சகட்ட பெரிய டீல் என்றால், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனியிடம் 4,860 கோடிக்கு ஏர்செல் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை விற்று லாபம் பார்த்தது. பிறகு, நார்வே நாட்டில் ஷிப்பிங் கம்பெனி, மற்றொரு நாட்டில் மினரல் வாட்டர் பிசினஸிலும் இறங்கினார். மகாராஷ்டிர மாநிலத்தில் ரிசார்ட் பிசினஸ், சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்திலும், தனது பணத்தை முதலீடு செய்தார். லேட்டஸ்ட்டாக, வெளிநாட்டில் படிப்பு முடித்துத் திரும்பிய தனது மகனை ஷிப்பிங் பிசினஸைக் கவனிக்கும்படி பணித்திருக்கிறார்.
கம்ப்யூட்டர் உலகில் நுழைகிறார்!
அது 1983-ம் ஆண்டு. 'கம்ப்யூட்டர்’ என்ற வார்த் தையே பலரை மிரள வைக்கும். அது எப்படி இருக்கும் என்றுகூட அப்போது பலருக்குத் தெரியாது. இனி உலகத்தை இதுதான் ஆட்சி செய்யப் போகிறது என்று மற்ற அத்தனை பேரையும் முந்திக்கொண்டு இனம் கண்டுகொண்ட சிவசங்கரன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜின் அப்பா நடத்திவந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை சகாயமான விலைக்கு வாங்கி, அதற்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ் என்று புதிய பெயர் சூட்டினார்.
அந்தக் காலகட்டத்தில், கம்ப்யூட்டர் என்றாலே லட்சத்தில் விலை சொன் னார்கள். இவர் வெளிநாடுகளில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அதைவைத்து இங்கே கம்ப்யூட்டர் உருவாக்கி, ஒவ்வொன்றையும் சுமார் 33,000 என்று விற்பனை செய்தார். தொலைநோக்குப் பார்வை, கடுமையான உழைப்பு, தொழில்நுட்ப மூளை, வியாபார தகிடுதத்தங்கள் என்று அனைத்தையும் சரிவிகிதத்தில் பயன்படுத்தி, ஒரு சில ஆண்டுகளிலேயே மற்ற நிறுவனங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வளர்த்தார்.
அதன் பிறகு சென்னை டெலிபோன்ஸ் 'எல்லோ பேஜ்’ புத்தகத்தை பிரின்ட் பண்ணும் டெண்டரைக் கைப்பற்றினார். கம்ப்யூட் டரை அடுத்து இன்டர்நெட் அறிமுகமானபோது... 'வந்துவிட்டது, அடுத்த புரட்சி’ என்பதை உணர்ந்து கொண்ட சிவசங்கரன், 'டிஷ்நெட் டிஎஸ்எல்.’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன்களில் 'பாரீஸ்தா’ ரெஸ்டாரெண்டுகளை ஆரம்பித்தார்.
இன்னொரு பக்கத்தில் பிட்னெஸ் சென்டர்களும் நடத்தினார். செல்போன் அறிமுகமானதும், அதன் வீச்சு பலமாக இருக்கும் என்பதை எல்லோரையும்விட மிகமிக முன்னதாகவே மோப்பம் பிடித்த சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு துவக்கினார். வேகமாக வளர்ச்சியடைய ஏர்செல் என்ற ஒரு குதிரை போதாது என்பதை உணர்ந்த சிவசங்கரன், 210 கோடி கொடுத்து 'ஆர்பிஜி செல்லுலார்’ என்ற இன்னொரு செல்போன் நிறுவனத்தையும் வாங்கினார்.
சிவசங்கரனின் பாலிசி!
'வியாபாரத்தில் சென்டிமென்ட் பார்க்கக்கூடாது’ என்பது சிவசங்கரனின் தாரக மந்திரம். தான் ஆரம்பித்த டிஷ்நெட் நிறுவனம், எதிர்பார்த்த வளர்ச்சி அடையவில்லை என்றதும், சற்றும் தயங்காமல் 270 கோடிக்கு விற்றுவிட்டார். கோடிகளில் புரண்டாலும்... அவரின் எண்ண ஓட்டங்கள் எப்போதும் எளிமையானதுதான். தன் சகாக்களிடம் பேசும்போது விஷயத்தை எளிமையாக புரியவைக்க அவர் பல்வேறு உதாரணங்கள் சொல்வதுண்டு. ''என்னோட மனைவி, பிள்ளைகளைத் தவிர நான் போட்டிருக்கும் சட்டையைக் கூட விற்பேன்!'' என்று அடிக்கடி சொல்வார்.
''சரவணபவனுக்குப் போற எல்லோருமே இட்லியைத்தான் வாங்குறாங்க. சட்னி, சாம்பாரை வாங்குவதில்லை. ஆனால் சட்னியும் சாம்பாரும் கொடுக்கவில்லை என்றால் இட்லி விற்பனை ஆகாது. அதுபோல, நம்மிடம் கம்ப்யூட்டர் வாங்க வருபவர்களுக்கு நாம் பிரின்டரையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான் கம்ப்யூட்டர் விற்பனை அதிகமாகும்!'' என்பது அவரது பிரபலமான உதாரணம்.
''சிவசங்கரன் தொலைநோக்குப் பார்வை கொண்ட கலர்ஃபுல் தொழில் அதிபர்!'' என்று சொல்பவர்களும் உண்டு. ''ஒரு தொழில் இல்லாமல் பல்வேறு தொழில்களை ஆரம்பித்து நடத்தும் அவரை தொடர் தொழில் தொழிலதிபர்!'' என்றும் சொல்கிறார்கள். கம்ப்யூட்டரின் பயன்பாடு மெள்ளத் தொடங்க ஆரம்பித்ததுமே எழுத்தாளர் சுஜாதாவை தனக்கு ஆலோசகராக வைத்துக் கொண்டவர் சிவசங்கரன். அப்போது உடன்வேலை பார்க்க வந்தவர்தான் கனிமொழியின் கணவர் அரவிந்தன்!
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் சிறு கட்டடத் தில் அலுவலகம் வைத்திருந்தவர், 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் தேனாம்பேட்டை பகுதியில் 24 கோடி களைக் கொடுத்து, ஹரிகந்த் டவர் என்கிற கட்டத்தை விலைக்கு வாங்கி 'ஸ்டெர்லிங் டவர்’ என்று பெயர் மாற்றி னார். அதில் இருந்து அவரை 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் என்ற அடைமொழியுடன்தான் அழைப்பார்கள்.
சிவசங்கரனைப் பற்றி அவரது பிசினஸ் நண்பர்களிடம் கேட்டபோது, ''கடந்த 30 வருடங்களில் அவர் சுமார் 25 தொழில்களில் ஈடுபட்டு இருந்தார். எந்த பிசினஸையும் அவர் தொடர்ந்து நடத்தியது இல்லை. ஒரு தொழிலைத் துவக்குவார்; அதை நன்றாக வளர்ப்பார்; ஒரு லெவலுக்கு வந்ததும், அதைப் பல மடங்கு லாபம் வைத்து வேறு யாரிடமாவது விற்றுவிட்டு வேறு பிசினஸுக்குத் தாவிவிடுவார்.
உதாரணத்துக்கு, ரயில்வே ஸ்டேஷன்களில் காபி ஷாப்-களை பிரமாண்டமாகத் துவங்கி, பிறகு அதை அடுத்தவருக்குக் கைமாற்றிவிட்டார். இதுதான் சிவசங்கரனின் ஸ்டைல். ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு அடிக்கடி மாறியதால், பலத்தரப்பட்ட பிசினஸ் பிரமுகர்களுடன் மோதல், விரோதம் அதிகமானது. இதுவே அவருக்கு நிறைய தொழில்முறை எதிரிகளை உருவாக்கிவிட்டது!’' என்று சொல்கிறார்கள்.
கருணாநிதி, முரசொலி மாறன் அறிமுகம்!
1989-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, டிட்கோ நிறுவனம் சார்பாக பிரபல தொழில திபர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். திடீரென ஒரு பிரமுகர் எழுந்து, 'நான் ஒரு தொழில் அதிபர். பெயர் சிவசங்கரன். டிட்கோவில் போய்க் கடன் கேட்டால், முதலியாரா? ரெட்டியாரா? என்ன சாதி என்றுதான் கேட்கிறார்கள். தொழிற்சாலை துவங்குவது பற்றிக் கேட்காமல், இப்படிக் கேட்பது சரியா?’ என்று துணிச்சலாகக் கேட்க... முதல்வர் ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தார்.
'யாருப்பா நீ? உனக்கு என்ன உதவி வேணும்?’ என்று கேட்டு விசாரித்து, ஒன்றிரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழிவகை செய்தார். சென்னை டெலிபோன்ஸ் வெளியிடும் எல்லோ பேஜஸ் டெண்டரை பயங்கரப் போட்டியில் குதித்து வாங்கினார். சென்னையைச் சேர்ந்த பிசினஸ் நிருபர்கள் இதன் பிறகுதான், சிவசங்கரனை நெருக்கமாகக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.
தமிழகம் முழுக்க சிவசங்கரன் பிரபலம் ஆனது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை வாங்கியபோதுதான். நாடார் சமூகத்தினர் மத்தியில் பலத்த கொந்தளிப்பைக் கிளப்பியது. 'முரசொலி மாறனின் நண்பரான சிவசங்கரன்தான் இதை வாங்கி இருக்கிறார்’ என்று சொல்லி தி.மு.க-வுக்கு எதிரான பிரச்னையாக மாற்றினார்கள். மெர்க்கன்டைல் வங்கி மீட்புக் குழுவினர் ஜெயலலிதாவைப் பார்த்து, அவரது ஆதரவைக் கோரினார். அதன்பிறகு, கணிசமான பங்குகளை மட்டும் நாடார் சமூகத்தவர்களுக்கு கொடுத்தார்.
1995-ம் ஆண்டு தமிழகத்தில் தொலைத் தொடர்புத் துறை லைசென்ஸ் பெற சிவசங்கரன் முயற்சித்தார். 97-98-ல் சென்னையைத் தலைமையகமாகச் கொண்டு ஏர்செல் தொடங்கினார். அப்போது முரசொலி மாறனுக்கும் இவருக்குமான நட்பு அதிகமானது. ஆர்.பி.ஜி. செல் நிறுவனத்தின் பங்குகளை சிவசங்கரன் வாங்க முரசொலி மாறன் உதவி செய்ததாகவும் சொல் கிறார்கள். இந்த நட்பு முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு தொடரவில்லை.
சிவசங்கரனை விரட்டிய சம்பவம்!
2006-ம் வருடம் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில், ஈரோட்டைச் சேர்ந்த ஏ.என்.சண்முகம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் (பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கின் எண் சி.சி. 191/2006) கொடுத்தார். அதில், ''சென்னை அய்யப்பன்தாங்கலில் எனக்கு 2.43 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகளைக் கட்டி விற்கும் திட்டத்தைச் செயல் படுத்தலாம் என்று ஸ்டெர்லிங் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் என்னிடம் கேட்டார். அவர் பேச்சை நம்பி, 1.05 ஏக்கர் நிலத்தை மட்டும் பவர் எழுதித் தந்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது, அந்த நிலத்தை நான் சிவசங்கரனின் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப் பதிவு செய்துவிட்டார்!'' என்று சொல்லப்பட்டது.
இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார், ஸ்டெர்லிங் நிறுவன அலுவலர்கள் ஆறு பேர்களை கைது செய்தனர். நிறுவனத் தலைவர் சிவசங்கரனை விசாரணைக்காக போலீஸ் தேட... சிவசங்கரன் எங்கே போனார் என்று தெரியவில்லை. தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் படியேறினார் சிவசங்கரன். ஆனால், அங்கே இவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. ''இந்த வழக்கைப் பின்னணியில் இருந்து போட வைத்ததே தயாநிதி மாறன்தான்!'' என்று சிவசங்கரன் ஆட்கள் செய்தியைக் கிளப்பினார்கள்.
இரண்டு தனி மனிதர்களுக்கு மத்தியிலான மோதலாகத் தொடங்கி இன்று இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும் போதுதான் இந்தப் பகை யாரையெல்லாம் காவு வாங்கப் போகிறது என்பதும் தெரியும்!
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து அதிரடிகள். லேட்டஸ்ட்... சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவைக் கைது செய்திருக்கிறது போலீஸ்!
கடந்த 3-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார் சக்சேனா. விமானத்தில் இருந்து இறங்கியவரை, அசோக் நகர் உதவி கமிஷனர் குருசாமி தலைமையிலான போலீஸ் டீம் ஏர்போர்ட்டிலேயே கைது செய்தது.
'சக்சேனா மீது புகார் கொடுத்தது யார்... என்ன வழக்கு?’ என்ற எந்த விவரத்தையும் உடனடியாக மீடியாவுக்குத் தெரிவிக்கவில்லை. அவர் எங்கே வைக்கப்பட்டு இருக்கிறார் என்பதில்கூட போலீஸார் ரகசியம் காத்தனர். அதன் பிறகு, இரவு 9 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் சக்சேனாவை ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தது போலீஸ்.
சக்சேனா மீது புகார் கொடுத்தவர், சேலம் மாவட்டத் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் பொருளாளரும், கந்தன் ஃபிலிம்ஸ் உரிமையாளருமான செல்வராஜ். என்ன நடந்தது?
செல்வராஜ் தரப்பில் பேசினோம். ''விஷால் நடித்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத் தயாரிப்புக்காக அதன் தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணாவுக்கு ஃபைனான்ஸ் செஞ்சோம். அவங்க அந்தப் படத்தை மொத்தமாக சன் பிக்சர்ஸுக்கு வித்துட்டாங்க. படத்தின் சேலம் மாவட்ட உரிமத்தை இனியவேல் குரூப்புக்கு 1.25 கோடிக்குக் கொடுத்தாங்க. ஆனா, அவங்களால் சொன்ன நேரத்துக்கு பணத்தை செட்டில் பண்ண முடியலை. பட ரிலீஸுக்கு முன்பு சேலம் வந்த சன் பிக்சர்ஸ் ஆட்கள் செல்வராஜை அழைத்துப் பேசி, 'உங்களுக்குத் தயாரிப்பாளர் தரப்பில் தர வேண்டிய 1.25 கோடிக்குப் பதிலாக, சேலம் மாவட்ட உரிமத்தை எடுத்துக்கோங்க. படத்தோட வசூலில் உங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை எடுத்துட்டு, மீதியை எங்களுக்குக் கொடுங்க’ன்னு சொன்னாங்க.
ஆனா, படம் எதிர்பார்த்த மாதிரி போகலை. மொத்த வசூலே 43 லட்ச ரூபாய்க்குள்தான். செல்வராஜுக்கு தர வேண்டிய மீதி 82 லட்சத்தைக் கேட்டு, பல தடவை அவர்களது அலுவலகத்துக்கு நடந்தார். ஆரம்பத்தில் அமைதியாப் பேசிட்டு இருந்த சக்சேனா ஒரு கட்டத்தில், 'பணம் எல்லாம் தர முடியாது. உன்னால் என்ன முடியுமோ, அதை நீ பார்த்துக்கோ’ன்னு பேச ஆரம்பிச்சிட்டார். நாங்களும் பல தரப்புகளில் இருந்து பேசிப் பார்த்தோம். பணத்தைத் திருப்பிக் கொடுக்குற மாதிரி தெரியலை. அதோட, எங்களுக்கும் மிரட்டல் விடுத்துட்டே இருந்தாரு. வேறு வழி தெரியாமத்தான் போலீஸ் கமிஷனரிடம் புகார் செஞ்சோம்...'' என்று சொன்னார்கள்.
ஏற்கெனவே இதே சக்சேனா மீது, செக்கர்ஸ் ஹோட்டலைத் தாக்கியதாக ஒரு புகார் உள்ளது. விஜய் நடித்த 'காவலன்’ பட விவகாரம் தொடர்பாகவும் சக்சேனா மீது மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒரு புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சக்சேனாவை கஸ்டடி எடுத்து விசாரிக்க, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 4-ம் தேதி மனுத் தாக்கல் செய்தது போலீஸ் தரப்பு. அதே தினத்தில், சக்சேனாவும் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, '5-ம் தேதி சக்சேனாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
போலீஸ் கஸ்டடி கிடைக்கும்பட்சத்தில், சக்சேனா மீது உள்ள வேறு சில வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறதாம் காவல் துறைத் தரப்பு.
சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர் திரிபாதியிடம் பேசினோம். ''சேலத்தை சேர்ந்த சினிமா விநியோகஸ்தர் செல்வராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சன் பிக்சர்ஸின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது நம்பிக்கை மோசடி, வஞ்சித்து ஏமாற்றுதல், கொலை மிரட்டல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து இருக்கிறோம். விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும்!'' என்று சொன்னார்.
சக்சேனா தரப்பில் சைதை நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசனிடம் பேசினோம். ''இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. இரண்டே பக்க காகிதத்தில் அவசர அவசரமாக இந்த வழக்கை தயாரித்து உள்ளது தமிழக போலீஸ். இதைச் சொல்லி நாங்கள் ஜாமீன் கேட்டோம். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து புதிய வழக்குகள் போட்டுவிடக்கூடாது என்றும் சொல்லி இருக்கிறோம். மற்றபடி இது ஜாமீன் தரக்கூடிய சாதாரண வழக்குதான். போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கும் அளவுக்கு பெரிய வழக்கு அல்ல. எங்கள் தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தில் சொல்வோம்!'' என்று கூறினார்.
சக்சேனா கைது செய்யப்பட்ட அதே தினத்தன்று, அரசு கேபிள் டி.வி. அமைப்புக்கான தலைமை அதிகாரிகளை நியமித்து அரசின் அறிவிப்பும் வெளியானது. ஒரு புறம் அரசு கேபிள் டி.வி-யை துவங்குவதற்கான அதிரடி வேலைகள் ஆரம்பமாகும் நேரத்தில், குறைந்தபட்சம் சில நாட்களாவது கேபிள் ஆபரேட்டர்களிடம் யாரும் பேசி மனதைக் கலைத்துவிடக் கூடாது என்பதற்காகவே சக்சேனாவை சிறையில் அடைத்தார்களோ என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) 2004ஆம் ஆண்டில் மத்திய அரசில் அதிகாரத்துக்கு வந்ததும் திமுகவுக்கு வருவாய் வரும் துறைகளான கப்பல் போக்குவரத்து, தொலைத் தொடர்பு போன்றவற்றை வலியுறுத்திப் பெற்ற கருணாநிதி, அரசியலுக்கும் நாடாளுமன்றத்துக்கும் புதுமுகமான தம் பேரன் தயாநிதியை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக்கினார். தினகரன் நாளிதழில்,"வெளியிட வேண்டாம்" என்று கருணாநிதி இட்ட கட்டளையையும் மீறி, திமுக அமைச்சர்களுள் "யாருக்குச் செல்வாக்கு அதிகம்?" என்று வெளியான கருத்துக் கணிப்பால் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டுத் தீவைத்துக் கொளுத்தப்பட்டதில் மூன்று அப்பாவி உயிர்கள் கருகிப் போக, அவர்களின் குடும்பங்கள் உருக்குலைந்து போயின. அப்போது திமுகவுக்குள் ஏற்பட்ட குழப்பத்தில், "தயாநிதியைக் கட்சியை விட்டே தூக்க வேண்டும்" என்றுகூட திமுகவின் உயர்மட்டத்தில் பேசப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டு, தயாநிதி மத்திய அமைச்சரைவியில் இருந்து விலக, அவரின் இடத்துக்கு ஆண்டிமுத்து ராசா வந்தார்.
தாமிருந்த இடத்தில் மற்றொருவரா; எப்படிச் சகிப்பார் தயாநிதி? தயாநிதிக்குத்தான் தெரியும் இத்துறையில் எப்படியெல்லாம் முறைகேடு செய்ய முடியும் என்று! பதவியேற்ற சூட்டோடு, திமுக தலைமையைக் குஷிப்படுத்த, "தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ரூ. 10,000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருக்கிறது" எனக் குற்றம் சுமத்தினார் ஆ.ராசா. அவருக்கு - இல்லையில்லை கருணாநிதிக்கு - இல்லையில்லை திமுகவுக்கு எதிராக, "ரூ. 60,000 கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்" எனத் தமிழக மக்களின் வரவேற்பறைக்குக் கொண்டு சென்று அறிமுகப்படுத்தியது, கலாநிதி-தயாநிதி கூட்டணி. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தும் ராசாவின் முறைகேடான செயல்கள் குறித்தும் சன் டி.வி.யிலும் தினகரன் நாளிதழிலும் விலாவாரியாகச் செய்தி வெளியிட்டு நாறடித்தது.
ராசாவின் பதவிக் காலத்தில் ஓரிலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் அளவிலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு, உச்சநீதிமன்ற உத்தரவால் விசாரணைக்கு வந்தபோது இந்தியாவின் கடைக்கோடி மக்கள்வரை அதைக் கொண்டு சேர்த்த பெருமை, சன் குழுமம் போன்ற காட்சி ஊடகங்களைச் சாரும்.
குடும்பக் கலகத்தால் சன் டிவிக்குப் போட்டியாகப் போர்க்கால அடிப்படையில் அதிரடியாகக் கலைஞர் டிவி தொடங்கப் பட்டது. அதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்ற வினாவுக்கு விடையாகத்தான் இப்போது கனிமொழி திகார் சிறையில் இருக்கிறார்.
திமுகவுக்கு எதிராகத் தாம் பறித்த குழியில் தாமே விழ நேரிடும் என தயாநிதி எதிர்பார்த்திருக்க மாட்டார். tragedy of tragedy ஆக, "ஸ்பெக்ட்ரம் ஊழல்" என முழக்கிய தயாநிதி மீதே ஸ்பெக்ட்ரம் தொடர்பான அறுநூறுகோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு பூமராங்காகத் திரும்பி வந்து இப்போது தாக்குகின்றது. ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கத் தாமதப்படுத்திய தயாநிதி, அந்நிறுவனம் மலேஷியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்குக் கைமாறியவுடன் ஸ்பெக்ட்ரம் உரிமம் விரைந்து வழங்கப்பட்டதாகவும் அதற்கு விலையாக அந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களால் சன் குழுமத்தின் 'சன்டைரக்ட்' நிறுவனத்தில் அறுநூறு கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஸிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ப்ரஸாந் பூஷன், தயாநிதி மீதுள்ள குற்றசாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி வழக்கொன்றும் தொடுத்துள்ளார்.
"அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிர்" என்று கிராமப் பெருசுகள் சொல்வதுபோலவும் "தோண்டத் தோண்ட பூதம்" என்பது போலவும் மேலும் பல புகார்கள் தயாநிதி மீது எழுகின்றன. தயாநிதி தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது சன் டிவி தலைமை அலுவலகத்துக்கு அதாவது அறிவாலயத்துக்கு 323 பி எஸ்என்எல் இணைப்புகள் ரகசியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் அதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சுமார் 440 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது எனவும் புகார் எழுந்துள்ளது.
ஈழத்தில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டபோது கூட டெல்லிக்குச் செல்ல மனமில்லாத கருணாநிதி, ஆ.ராசாவுக்குத் தொலைத் தொடர்புத் துறையைப் பெற்றுத் தருவதில் குறியாக இருந்து, ஆறுகால்களில் டெல்லி சென்று, அனைத்து வகை மிரட்டல்களையும் ஆயுதங்களாக்கிப் போராடினார். ஆ.ராசாவின் திறமையால் ஸ்பெக்ட்ரம் வெடித்தது. இப்போதும் ஸ்பெக்ட்ரம் தொடர்புக்காகச் சிறையிருக்கும் கனிமொழியைப் பார்ப்பதற்காகவே டெல்லி சென்று வந்தார். கருணாநிதியின் டெல்லிப் பயணங்கள் எல்லாம் ஸ்பெக்ட்ரம் தொடர்பாகவே அமைந்து விட்டன. மொத்தத்தில் கருணாநிதியின் டெல்லிப் படையெடுப்பு, "மலையும் மலை சார்ந்ததும் வயலும் வயல் சார்ந்ததும்" என்பது போல "ஸ்பெக்ட்ரமும் ஸ்பெக்ட்ரம் சார்ந்ததும்" என்றாகிப் போனது அவரது அரசியல் வாழ்வில் கறுப்பு அத்தியாயமே!
ஆ.ராசா மீது ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டு எழுந்த போது, "ராசா குற்றமற்றவர்" என நற்சான்று வழங்கிய கருணாநிதி, ஆபத்துக்குக் கை கொடுக்கும் தம் 'தலித்' ஆயுதத்தைக் கையில் எடுத்தபோது அதன் முனை முறிக்கப்பட்டது. கனிமொழி மீது வழக்கு வந்தபோது, பெண் என்றும் தம் குடும்பத்தின் மீதான பழிவாங்கல் என்றும் கருணாநிதி புலம்பினார். கொஞ்ச காலம் ஊடலாக இருந்து, சன் டிவி இலாபத் தொகையில் தம் பங்காகக் கிடைத்த 100 கோடியைக் கையில் வாங்கிக் கொண்டு, கண்கள் பனிக்க இதயம் இனிக்க மீண்டும் சேர்த்துக் கொண்டதோடு, ஜவுளித் துறை அமைச்சராக்கிய பேரன் தயாநிதியையும் அதே ஸ்பெக்ட்ரம் சுற்றி வளைத்துள்ளது. இப்போது என்ன சொல்லப் போகிறாரோ கருணாநிதி.
வளம் கொழிக்கும் துறைகளுள் ஒன்றான தொலைத் தொடர்புத் துறையில் வெளியே தெரியாமல் கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கலாம்; அது காமதேனு, கற்பக விருட்சம்; விரும்பிய அளவு கறக்கலாம் என்பதை அறிந்து கொண்டதால்தானோ என்னவோ, அத்துறையைப் பெற அனைத்துக் கட்சிகளும் போட்டியிட்டுள்ளன. காங்கிரஸ் அமைச்சரான சுக்ராம் காலம் முதல் பா ஜ கட்சியைச் சேர்ந்த ஜக்மோகன், பாஜக கூட்டணியில் இருந்த ராம்விலாஸ் பாஸ்வான், பாஜகவைச் சேர்ந்த ப்ரமோத் மஹாஜன், அடுத்து வந்த அருண்ஷோரி என, அத்துறைக்கு அமைச்சராக வந்த யாரும் குற்றச்சாட்டிலிருந்து தப்பவில்லை.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2010, டிசம்பர் 8ஆம் தேதி இப்படிச் சொன்னது:
"இந்தப் பிரச்சனையில் இழப்பு 1 இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமன்று. இதைவிட அதிகமாகவும் இருக்கக் கூடும். விசாரணையின் தொடக்கத்திலேயே நாங்கள் தீர்ப்பளிக்க விரும்பவில்லை. ஆனால் 2001ஆம் ஆண்டு நடைபெற்றவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். சிபிஐதான் இதுகுறித்து விசாரணை செய்து உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும்."
ஆண்டி முத்து ராசாவுக்கு முன்னர் தொலைத் தொடர்பு அமைச்சராகப் பதவி வகித்த தயாநிதி, அதற்கு முன் பாஜக அரசில் இத்துறை அமைச்சர்களாக இருந்த ஜக்மோகன், ராம் விலாஸ் பஸ்வான், பிரமோத் மகாஜன், அருண்ஷோரி மற்றும் சில காலம் தொலைத் தொடர்பு அமைச்சகத்தை தன் பொறுப்பில் வைத்திருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இவர்களில் அருண்ஷோரியின் பதவிக்காலத்தில்தான், "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" என்ற கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளுக்கு வழிவகுத்ததே இந்தக் கொள்கைதான் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நடைமுறையைக் கொண்டு வர என்ன காரணம்?
ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மட்டுமின்றி அத்துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரையும் கட்சி வேறுபாடு பாராமல் நீதிமன்றத்தில் நிறுத்திச் சட்டப்படி உரிய தண்டனை வாங்கிக் கொடுப்பதில்தான் இந்திய ஜனநாயக மாண்பின் மேன்மையும் உயிர்ப்பும் இருக்கின்றன என்பதை அரசு மறக்க வேண்டாம்.
சர்வாதிகார சாம்ராச்சியம் நடத்திய சன்குழுமம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகப் புரிந்து விட்டது. சன் தொலைக்காட்சிகுழுமத்தின் அசுரமான ஊடக பலம் கழகவளர்ச்சிக்கு கைகொடுக்கும் என்பது கனவானது. அது கட்சியை கபளிகரம் செய்யத்துடிக்கிறது என்பது நிருபணமாகிவிட்டது. கருத்துகணிப்பு என்பதாக தினகரன் திணித்து வந்த கருத்தாக்கங்கள், தமிழ்நாட்டில் தயாநிதியை தனிப்பெரும் தலைமை சக்தியாக அடையாளப்படுத்த எடுக்கப்பட்ட சூட்சும திட்டங்கள் என்பது சுளீரென உரைத்தது கருணாநிதிக்கு!காலங் கடந்து இதை கண்டுணர்ந்தார் கருணாநிதி எனினும், 'தன் காலம் முடிந்து போகும் முன்பே சுதாரித்து கொண்டார்தலைவர்' என்பது தான் கழக உடன் பிறப்புகளிடம் மட்டுமல்ல குடும்ப உறவுகளிடமும் நிம்மதியை உருவாக்கியது. தமிழ் நாட்டிலிருந்து மத்திய அமைச்சர் ஆனவர்களில் சிறப்பாக செயல்படுபவர் யார்? என்ற கருத்துகணிப்பில் தயாநிதிக்கு 66 மதிப்பெண்ணும், ப.சிதம்பரத்திற்கு 24மதிப்பெண்ணும் , அன்புமணிக்கு 2மதிப்பெண்ணும் தந்து, கூட்டணிக்குள் குழப்பம் உண்டானாலும் பரவாயில்லை தம்பி தயாநிதியின் தகுதியை முன் நிறுத்த வேண்டும் என்று கலகத்திற்கு தயாரானார் கலாநிதி. தனக்குதானே கிரிடம் சூட்டிக்கொள்வது என்பது ரத்தவழியாக தாத்தா கருணாநிதியிடம் கண்டுணர்ந்த பால பாடம் அல்லவா? .ஆக, இன்னும் கூட புரிந்து கொள்ளதவர்களுக்கு இப்போதாவது உணர்த்த வேண்டாமா...? இன்னும் எத்தனை காலம் தான் அன்புப் பிள்ளை ஸ்டாலினை தூக்கி, கக்கத்தில் இருத்தி, 'இவன் தான் அடுத்தவாரிசு' என அறிவிக்க முடியாமல் அறிவுறுத்திக் கொண்டிருப்பார். அவரோ பாவம் முப்பது வருட பயிற்சிக்குப்பின் கருணாநிதியின் முழங்காலளவுக்குத்தான் வளர்ந்திருக்கிறார்.... ஆனால் மூன்றே ஆண்டுகளில் தயாநிதி கருணாநியின் கழுத்திற்குமேல் வளர்ந்து விட்டார். இந்தியாவே போற்றும்இளம் அமைச்சர் தமிழ்நாட்டிற்கு தலைமை தாங்கக் கூடாதா...? என்று 'கார்பரேட் தாதா' கலாநிதிபோட்ட அவசர கணக்கில் உருவான கருத்துகணிப்பு எல்லாவற்றையும் அலங்கோலமாக்கிவிட்டது. கருணாநிதியின் வாரிசாக மு.க ஸ்டாலினுக்கு 70 சதவிகிதமும் மு.க அழகிரி, கனிமொழிக்கு தலா 2 சதவிகிதமும், மற்றவர்கள் என்பதாக 20சதவிகிதமும் வழங்கப்பட்டிருந்த கருத்துகணிப்பில் அந்த மற்றவர்கள் என்ற பெயரில் மறைந்து கொண்டிருப்பது தயாநிதிமாறன் என்பதை தயக்கமின்றி புரிந்துகொண்டார்கருணாநிதி. இந்தப்பின்ணணியில் தான் அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் கொண்டு பத்திரிகைகளை எரித்து, பஸ்களை உடைத்து செயல்படும் செய்தி காலை 9.30க்கே மணிக்கே கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபின்பும், காவல் துறைக்கு தலைமைதாங்கும் அமைச்சரான அவர், காவல் துறையினருக்கு நிலைமைகளை கட்டுப்படுத்தும் கட்டளைகளை பிறப்பிக்கவில்லை, பிறகு 11மணியளவில் தான் தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டு, மூவர் மூச்சு திணறி இறந்தனர். கருணாநிதி உயிரோடு இருக்கும் போது அவரது அடுத்த வாரிசு குறித்த விவாதத்தை 'தினகரன்' மக்களிடம் நடத்தியது. அவரது நீண்ட ஆயுளை வேண்டி அவரது மனைவியும், துணைவியும் நித்தநித்தமும் பல பூஜை புனஸ்காரங்கள், யாகங்கள், வேள்விகள் நடத்தி கொண்டிருக்கும் சூழலில் குடும்பத்தினரிடம் கோப உணர்வே மேலோங்கியது. இந்த சூழலில் தான் மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் கொண்டு நர்த்தனமாடியதை அமைதியாக வேடிக்கை பார்த்தது காவல் துறை. மதுரையில் கலவரம் ஆரம்பித்தவுடன் முதல்வர் கருணாநிதி அழகிரியை தொடர்பு கொண்டு பேசினார் என்றும் பத்திரிக்கைகளில் செய்தி அடிப்பட்டது இதற்கு பிறகு தான் மீண்டும் தினகரன் அலுவலகத்திற்கு திரும்பிய தி.மு.க வினர் தீவைத்தனர். கலவரம் திசை மாறி போனது. ஆக காவல் துறையினரிடமும், அழகிரியிடமும் முதல்வர் தொடர்பு கொண்டபிறகே விபரிதங்கள் நடந்தேறின. இதனால் தான் அவ்வளவு அத்துமீறல்களுக்குபிறகும் அவமானப்பட ஏதுமின்றி அழகிரியை சிறப்புபாதுகாப்புடன் சென்னைக்கு வரவழைத்ததும், முதல்நாள் பிரதமர் நிகழ்ச்சியில் பிரதானமாக முன் வரிசையில் அமரவைத்ததும், அடுத்த நாள் சட்டமன்றத்திற்குள்ளேயே, அழகிரி சகஜமாக வந்து சென்றதும், நடைப்பட்டுகொண்டிருப்பது சன், தினகரன் குழுமத்திற்கும், அழகிரிக்குமான பிரச்சினையல்ல. இது கட்சிதலைவரான கருணாநிதிக்கும், ஊடக செல்வாக்கில் ஓங்கிநிற்கும் சன், தினகரன் குடும்பத்திற்குமான பிரச்சினை என்பதே பிரதியட்ச உண்மையாக வெளிப்பட்டது. கருணாநிதியின் கசப்புணர்வை புரிந்து கொள்ள வேண்டுமெனில் மாறன் குடும்பத்தின் பின்னணி, சன், தினகரன் குடும்பத்தின் அசுர பலத்திற்கு அச்சாணியாக விளங்கிய கருணாநிதியின் அரசியல் பலம் போன்றவைகளை பின்னோக்கிப் பார்க்க வேண்டும். நியாயங்களை புரிந்து கொள்ளலாம். *மணம் வீசாத பூமாலை* 1989-ஆம் ஆண்டு- 13வருட வனவாசத்திற்கு பிறகு மீண்டும் தி.மு.க அரியனை ஏறிய- அந்தகாலக்கட்டத்தில் தான் 'பூமாலை' என்ற வீடியோ இதழை விற்பனைக்கு கொண்டுவந்தனர் மாறன் சகோதரர்கள். இதற்கு முன்பு ஏக்நாத் என்பவரின் திரைபட செய்திகளை கூறும் வீடியோ இதழ் ஒன்று விற்பனையில் இருந்தது. பூமாலை இதழுக்கென்று புதிதாக யாரையும் வேலைக்கு அமர்த்தாமல் குங்குமம், முத்தாரம், வண்ணத்திரையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர்களையே சம்பளமில்லாத செய்தியாளர்களாக, பேட்டியாளர்களாக பயன்படுத்திக்கொண்டனர் மாறன் சகோதரர்கள். வீடியோ கடைகள் மற்றும் நூலகங்களின் வாயிலாக விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த வீடியோ இதழை விரும்பி பார்க்க ஆளில்லை. ஆனால் ஆட்சி அதிகாரம் தி.மு.க வசமிருந்த காரணத்தால் விற்க மறுத்த வீடியோ நூலகத்தினர், 'வில்லங்கத்தில் மாட்டநேரிடும், ரெய்டு நடத்தி ஆபாச கேசட்டுகள் இருந்ததாக வழக்குப்போட்டு லைசென்ஸ் ரத்தாகக் கூடும் ' என எச்சரிக்கப்பட்ட சம்பவங்களெல்லாம் நடந்தேறியது. 1991ல் கருணாநிதி அரசு கவிழ்ந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் மாறன் சகோதரர்கள் மௌனமானர்கள். மணம்வீசாத, யாரும் விரும்பிச்சூடாத இந்த பூமாலை பிணத்தின் மீது சாத்தப்பட்ட மாலையாக, மண்ணோடு மண்ணானது. காமாலைப்போல் கண்களை உறுத்திய - கலைநேர்த்தியற்ற- பூமாலை இதழ் உதிர்ந்தது கண்டு உள்ளப்படியே உள்ளம் மகிழ்ந்தனர் வீடியோ கடைக்காரர்கள்.அதன் பிறகு ஈராண்டுக்காலம் இருக்கும் இடம் தெரியாமல், செய்யக்கூடியத்தொழில் இன்னதென்று தெளிவில்லாமல் மாறன் சகோதரர்கள் சும்மயிருந்தனர். *சன் தொலைக்காட்சியின் தொடக்கம்* அக்டோபர் 1992ல் ஜூ தொலைக்காட்சி (Zee Tv) இந்திய தனியார் சேட்டிலைட் தொலைக்காட்சிகளின் முன்னோடியாக களத்திற்கு வந்தது. அது முதல் மாறன் சகோதரர்கள் தாங்களும் அதுபோல் தனியார் தொலைக்காட்சி ஆரம்பிக்க வேண்டுமென தந்தையை நச்சரிக்க தொடங்கினர். பத்திரிக்கையாளர் சசிகுமார் மேனன் என்பவர்தான் முதன் முதலில் தனியார் சேட்டிலைட் சேனல் பற்றிய அறிமுகத்தை முரசொலிமாறனுக்கு சொன்னவர். அவர் அரபு நாடுகளில் வாழும் மலையாளிகளுக்காக தினசரி நான்கு மணி நேரம் நிகழ்ச்சி தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றார் அதில் சுமார் அரை மணிநேரம் தமிழ் நிகழ்ச்சிகளை தயாரித்து தாருங்கள்' என மாறன் சகோதரர்களை அணுகினார். அப்போது அவரிடம்,'எப்படி இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது' என தோண்டித்துருவி விசாரித்த முரசொலி மாறன் அவரிமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு, சசிகுமார் மேனனுக்கே தெரியாமல் அவரை முந்தி சென்று, சம்பந்தபட்டவர்களிடம் பேசி நேரடி வாய்ப்பை உருவாக்கிக் கொண்டார். சசிகுமார் மேனன் 'ஏசியானெட்' என்ற மலையாளச் சேனலை ஆரம்பித்த அதே நேரத்தில் தான் - ஏப்ரல் 1993ல் -சன் தொலைக்காட்சியை தமிழகத்தில் தோற்றுவித்தார் முரசொலி மாறன். அப்போது மாதமாதம் சேட்டிலைட் ஒளிப்பரப்பிற்காக செலுத்த வேண்டிய பணம் ஒரு பெரும் சுமையாக இருந்தது. எனவே மாறன் மாற்று வழிகளை ஆராய்ந்தார். 'சன்' சேனலை நடத்த பெரும் பணம் தேவைப்பட்டநிலையில், அதற்காக இந்தியன் வங்கியை அணுகியபோது இணக்கமான பதில் கிடைக்கவில்லை இதனால் கட்சி சொத்தை -ஆயிரமாயிரம் உடன் பிறப்புகள் திரட்டி தந்த நிதியை- மந்தை வெளியிலுள்ள கும்பகோணம் சிட்டி யீனியன் வங்கியில் போட்டு, பெரியதொரு நிதி உதவி வங்கியிடமிருந்து வாங்கப்பட்டது . 1967 தொடங்கி தொடர்ந்து மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராகவும், அடுத்து வி.பி.சிங் ஆட்சியில் நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாகவுமிருந்த முரசொலிமாறன், தொழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை நிறைவேற்றித்தந்து நெருக்கமாக உறவுகொண்டிருந்தார். மேக்னம் டாட்டியா என்ற தொழிலதிபர் பல ரிசார்டுகளை நடத்திவந்தார். அவருக்கு உலகின் பெரும்செல்வந்தரான புருனே சுல்தான் ரஷ்ஷிய சேட்டிலைட் காரிஜான்டரின் டிரான்ஸ்பான்டர் ஒன்றை பரிசாகத் தந்திருந்தார். அதை எப்படி பயன் படுத்துவதென யோசித்து கொண்டிருந்த டாட்டியாவிடம், முரசொலிமாறன் தனக்கு தரும்படி கேட்க, அவரும் தந்துவிட்டார். இப்படியாக கிடைத்த சேட்டிலைட் ஒளிப்பரப்பு உதவியுடன் தான் மாறன் சகோதரர்கள் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பை சங்கடமின்றி சமாளித்தனர். முரசொலி வளாகத்தில் இயங்கிய சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாகிகளே சன் தொலைகாட்சிக்கும் பொறுப்பேற்றனர். அதன்படி சன் தொலைக்காட்சியை முரசொலிமாறனை சேர்மனாகவும், மல்லிகா மாறன் மற்றும் தயாளு அம்மாளை இயக்குநர்களாகவும் கொண்டு ஆரம்பித்தனர். மேலும் கலாநிதி மாறன், தயாநிதிமாறன், மு.க.ஸ்டாலின் போன்றோர் பங்குதாரர்களாகப்பட்டனர். அப்போது கோடம்பாக்கம் முரசொலி அலுவலக வளாகத்திலேயே சன்தொலைகாட்சி செயல்பட்டது. குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் பத்திரிகையாளர்கள் சிலரையே கூடுதலாக 500 ரூபாய் சம்பளம் தந்து சன் தொலைக்காட்சிக்கு பணிபுரியும் படி கட்டாயப்படுத்தினர். *பிரகாசிக்கமுடியாத 'சன்*' நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சன் தொலைக்காட்சியை நிமிர்ந்தும் பார்க்காத- விளம்பரத்தாரர்கள் பொருட்ப்டுத்தாத- அந்த நேரம் தூர்தர்ஷன் மட்டுமே தூள்கிளப்பிக் கொண்டிருந்தது.மாறன் சகோதர்களுக்கு படைப்பற்றல் கிடையாது. நிர்வாகத் திறமையும் இல்லை. பார்வையாளர்களை கவரமுடியவில்லை எவ்வளவோ அனுகூலங்கள் அமைந்தும் முதலிரண்டு ஆண்டுகள் மூச்சுத் திணறி நஷ்டப்பட்டது சன் தொலைக்காட்சி. *அதிகாரத்தால் அமைந்த வளர்ச்சி* மீண்டும் 1996-ல் கருணாநிதி ஆட்சிக்குவந்தார். உதயசூரியனின் அதிகாரச் சுடர் சன் தொலைக்காட்சியின் சாம்ராஜ்ஜியத்திற்கு வழிகோலியது. அப்போதைய தூர்தர்ஷன் இயக்குநராயிருந்த நடராஜன் கருணாநிதிக்கு உதவியாக பல கைங்கரியங்களைச் செய்து அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவலத்திற்கு ஆளாக்கினார். மத்திய அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு மாறன் மகன்களுக்கு மதியூகியாகச் செயல்பட்டார். அப்போது ஒவ்வொரு பண்டிகை நாளிலும் தூர்தர்ஷன் ஒளிபரப்பில் சிக்கல் வரும். பார்வையாளர்கள் வீட்டிலிருந்தபடியே தொலைப்பேசி வழியாக பங்கேற்கும் பல பிரபலநிகழ்ச்சிகளின் போது தொலைப்பேசி வயர்கள் துண்டிக்கப்படும். இப்படியாக சன் தொலைக்காட்சி பக்கம் மக்களை திருப்ப பல சதிதிட்டங்கள் அரங்கேறின. தூர்தர்ஷன் விளம்பரதாரர்களுக்கு தூண்டில் விரிக்கப்பட்டது. ஆட்சி அதிகாரமும் பல அனுகூலங்களை தந்தது. மத்தியில் வாஜ்பாய் அமைச்சரவையில் மாறனுக்கு தொழில், வர்த்தகத் துறை கிடைத்ததும் சன் தொலைக்காட்சிக்கு யோகம் அடித்தது. அப்பாவின் அதிகாரப் பலத்தால் மிகப்பெரிய தொழில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் சரசரவென வந்தது. சன் தொலைக்காட்சிக்கு! மளமளவென்று வெவ்வெறு மொழிகளில் சேனல்களைத் துவங்கினர். 2000ஆவது ஆண்டில் தி.மு,க ஆட்சியிலிருக்கும் போது, 'சுமங்கலி கேபிள் விஷன்' என்ற கேபிள் நெட்வொர்க் தொழிலை தயாநிதிமாறன் ஆரம்பித்தார். அது நாள் வரை சென்னையில் கேபிள் நெட்வொர்க்கின் 60சதவிகித்தை 'ஹாத்வே' என்ற வட இந்திய நிறுவனம் தன்வசப்படுத்தியிருந்தது. 40சதவிகிதம் ஆங்காங்கே சிறிய கேபிள் உரிமையாளர்கள் வசமிருந்தது. தயாநிதிமாறன் தடாலடியாக சென்னைகேபிள் ஆபரேட்டர்களை அழைத்து சொந்த முயற்சிகளை, ஒளிபரப்புகளை அப்படியே கைவிட்டு, சுமங்கலி கேபிள் விஷனின் கமிஷன் ஏஜென்டாகும் படி நிர்பந்தித்தார். மறுத்த கேபிள் ஆபரேட்ட்ர்கள் மிரட்டப்பட்டனர். சென்னை மாநகராட்சி ஸ்டாலின் வசமிருந்த காரணத்தால் கேபிள் ஆபரேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தந்த தொல்லைகள் அவர்களை மண்டியிடச் செய்தன மாறன் சகோதரர்களிடம்! 'ஹாத்வே'யின்கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே அறுத்தெறியப் பட்டன. இந்நிறுவனம் பைபர் கேபிள் நெட்வொர்க் சிஸ்டத்திற்கு பலமான ஏற்பாடுகள் செய்துவிட்ட நிலையில் மாநகராட்சி அனுமதி மறுத்தது. மறுபுறம் தயாநிதி தந்த நெருக்கடிகளால் ஹாத்வேயின் கீழ் இருந்த கேபிள் ஆபரேட்டர்களில் 90சதவிகிதத்தினர் எஸ்.சி.வி வசம் மாறினர். *இந்தியாவில் வேறெங்கும் இல்லை* இந்தியாவில் மும்பை, டெல்லி, ஹைதராபாத், கல்கத்தா உள்ளிட்ட எந்த நகரத்திலுமே இதுபோல் ஒட்டுமொத்த கேபிள் ஆபரேட்டர்களும் ஓரே குடையின் கீழ் சென்றதில்லை. குறைந்தது மூன்று,நான்கு நிறுவனங்களாவது ஒவ்வொரு நகரத்திலும் செயல்பட்டன. ஆனால் தனது அதிகாரபலத்தால் போட்டியாளர்களை அழித்தொழிக்கும் வேலையை அசராமல் செய்தது சன் குழுமம். தமிழகத்தின் பிரதான நகரங்கள் அனைத்திலும் இன்று எஸ்.சி.வியை எதிர்க்கவே ஆளில்லை . இதனால் தான் தமிழன் தொலைக்காட்சி, விண்தொலைக்காட்சி, தினத்தந்தியின் ஏ.எம்.என். நியூஸ் சேனல் உள்ளிட்ட தமிழ் சேனல்கள் தரக்குறைவான அலைவரிசைகளில் ஒளிப்பரப்பட்டு ஓரம்கட்டப்பட்டன. கேரளாவில் பிரபலமான 'ஏசியாநெட்' தொலைக்காட்சி தமிழில் 'பாரதி' தொலைக்காட்சியைத்தொடங்கி பற்பல தொல்லைக்களுக்காளாகி சன் குழுமத்தால் சவக்குழிக்குள் தள்ளப்பட்டது. இந்தியா டுடே குழுமத்திலிருந்து வெளிவரும் 'ஆஜ்தக்'சேனலை தமிழ்நாட்டிற்குள் ஒளிப்பரப்ப மறுத்துவந்தார் கலாநிதிமாறன். கருணாநிதி கைதான சம்பவத்தை மீண்டும் மீண்டும் வட இந்தியாவில் ஒளிப்பரப்பி மாறன் சகோதரர்களின் மனதில் இடம்பிடித்தது 'ஆஜ்தக்'. இதனால் உடனே 'ஆஜ்தக்' சேனல் தமிழ்நாட்டில் ஒளிப்பரப்ப ஒப்பந்தமானது . இதற்கு பிரதியுபகாரமாக இந்திய முதலமைச்சர்களின் நிர்வாகத்திறமை வரிசையில் ஜெயலலிதா ஆகக்கடைசியில் இருப்பதாக ஒவ்வொரு ஆண்டும் கருத்துகணிப்பு வெளியிட்டது இந்தியாடுடே. இப்படியாக கேபிள் வலைப்பின்னல் மூலமாக தாங்கள் விரும்புவதை மட்டுமே- தங்கள் நலன் களுக்கு அனுகூலமானதை மட்டுமே-மக்கள் பார்வைக்கு கொண்டுச்செல்லும் சர்வாதிகாரம் மாறன் சகோதரர்கள் வசம்போனது. வியாபாரத்தில் கிடைத்த வெற்றி அரசியல் ஆசைக்கு அடித்தளமிட்டது. இந்த நிலையில் தான் தாத்தா கருணாநிதியிடம் முரசொலிமாறனுக்குப் பிறகான ஒரு அரசியல் முக்கியத்துவம் கருதி கலாநிதியும், தயாநிதியும் காய்நகர்த்தினார்கள். அரசியல் அதிகாரம் என்பது வியாபார எதிரிகளைவீழ்த்துவதற்கு எவ்வளவு உறுதுணையானது என்பதை அவர்கள் அனுபவ பூர்வமாக அறிந்திருந்தனர். அப்பாவின் அதிகாரபலத்தால் தானே முதலில் டிரான்ஸ்பாண்டரும், பிறகு மிக சுலபமாக வெளிநாடுகளிலிருந்து கருவிகளை இறக்குமதிச்செய்யும் TRAI லைசென்சும், இந்தியாவிலிருந்து நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதற்கான WPC கிளியரன்ஸும் கிடைத்தது. ஆனால் ஜெ.ஜெ.தொலைக்காட்சியினர் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுப்பட்டு முடியாமல் போய், வழக்கம்போல் அத்துமீறி செயல்படமுயன்ற போது அன்னியசெலவானி மோசடியில் அகப்பட்டு அடங்கிப்போனர்கள். கருணாநிதியின் உடன் பிறந்த அக்கா சண்முகசுந்தரத்தம்மாளின் மகன் தான் முரசொலி மாறன்.'1967ல் தி மு க சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வர நேரிட்ட போது முதலமைச்சர்பொறுப்பு ஏற்கவேண்டி பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பை அறிஞர்அண்ணா ராஜூனாமா செய்தபோது, அந்த சீட்டை அண்ணாவிடம் மன்றாடி மாறனுக்கு பெற்றதந்தவரல்லவா கலைஞர். அந்த கலைஞர் இன்று கழகத் தலைவர். மாறனுக்கு தந்த முக்கியத்துவத்தை மகனும் கேட்டுப்பெற்றால் என்ன?" என்று குடும்பத்தினர் தந்த தைரியத்தில் தயாநிதியும் தயாரானார். ஏ.என். கல்யாண சுந்தர ஐயரின் மகள் தான் முரசொலிமாறனின் மனைவி மல்லிகா மாறன். தயாநிதியின் மனைவி பிரியா, ஹிந்து ரமேஷ் ரங்கராஜனின் குடும்பத்திலிருந்து வந்தவர். ஆண்டாண்டு காலமாக கட்சிக்கு ஊனும், உயிரும் தந்து உழைத்த உடன் பிறப்புகள் ஆயிரமாயிரமாய் இருக்க, அவர்களிலும் அறிவிற்சிறந்த. அரசியல் அறிந்தவர்கள் பலர் இருக்க, H.F.O எனப்படும் இரவுநேர விடுதி நடத்தி கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த தயாநிதி மாறனை அவரது குடும்பத்தினர் அரசியலுக்கு ஆயத்தப்படுத்தினர். *தயாநிதிக்கு தரப்பட்ட முக்கியத்துவங்கள்* அரசியலில் அடிஎடுத்து வைத்தவுடனேயே தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தாரை வார்க்கப்பட்டது. முதன்முதலாக பாராளுமன்றத்தில் கால் பதிக்கும் போதே 'காபினெட்' அந்தஸ்த்து அமைச்சரானார் தயாநிதிமாறன். ஸ்டாலினை அரசியலில் முன்நிறுத்தும் போதெல்லாம் கருணாநிதி வாரிசு அரசியல் செய்கிறார் என்று வரிந்து கட்டிய ஊடகங்கள் தயாநிதியை முன்நிறுத்தியபோது பெரியளவு விமர்சனக்கணைகளை வீசவில்லை. அதே சமயம் தொலைப்பேசியில் ஒரு ரூபாய் கட்டணத்தில் இந்தியா முழுவதிலும் பேசலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்தது, ரோமிங் கட்டணத்தை சமச்சீராக்கியது, ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் - குறிப்பாக தமிழ்நாட்டில் செய்யதூண்டியது, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டியது... போன்றவற்றால் படித்தவர்கள் மத்தியில் பிரபலமானார் தயாநிதி மாறன். திஹிந்துவும், தினமலரும், விகடன் குழும இதழ்களும் தயாநிதியை தாங்கிப்பிடித்து, தனிப்பெரும் திறமையாளராக அடையாப்படுத்தினர். மு.க.ஸ்டாலினைக்காட்டிலும் தயாநிதி மாறன் தமிழகத்திற்கு தலைமை தாங்க பொறுத்தமானவர் என்று மிக வெளிப்படையாக தினமலர் வாசகர் கடிதப்பகுதியில் விலாவாரியான கடிதங்கள் வெளியாகின. *தயாநிதிமாறன் தனிபெரும் திறமையாளரா...?* புதுப்புது அறிவிப்புகள் மூலம் நாளும் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் தயாநிதி. ஆனால் அவரது செயல்பாடுகளால் BSNL எனப்படும் தொலைத்தொடர்பு துறை வளர்ந்ததா? பலன் பெற்றதா என பார்க்கவேண்டும் . 'தனியார் தொலைப்பேசிகள் புழக்த்திற்கு வந்து விட்ட பிறகு அதற்கு ஈடாக BSNLஐ வளர்ப்பதற்கு மாறாக வாட்டி வதக்கினார் தயாநிதி' என BSNLன் உயர் அதிகாரிகளும், ஊழியர்சங்கங்களும் பல முறை குற்றசாட்டியுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனம் அத்துமீறல் மூலமாக BSNLக்கு சுமார் 7,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியது. ஆனால் ரிலையன்ஸுக்கு ஆதரவாக இந்த விஷயத்தை தயாநிதி மூடிமறைக்க முயன்றார். இது போன்ற நடவடிக்கைகளால் இடது சாரி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தயாநிதி மாறனை எச்சரிக்கும் சூழலும் ஏற்பட்டது. சர்வதேச நிறுவனங்கள் ஜி.எஸ்.எம் நெட்வொர்க் அமைப்பதற்கான சாதனங்களை வழங்குதல் மற்றம் ஜி.எஸ்.எம் இணைப்புகள் அமைப்பதற்காக வழக்கமான சந்தை மதிப்பைவிடவும் கூடுதல் தொகையை BSNL லாபம் பெற்று கொள்ளையடித்து வந்துள்ளனர் என இப்போது அம்பலமாகி யுள்ளது புதிய தகவல் தொழில் நுட்ப துறை அஅமைச்சராக வந்த ஆ.ராசா சமீபத்தில் இதை கண்டுபிடித்து ஒரு டெண்டரை நிறுத்தி வைத்ததன் மூலம் BSNL இழக்கவிருந்த ரூ 1, 800காடி காப்பாற்றப்பட்டது. ஆனால் இதற்கு முன் நிகழ்ந்த இழப்புகள் எவ்வளவோ? மற்றொரு சிறிய புள்ளி விவரத்தை பார்ப்போம் BSNL வலுவான கூட்டமைப்பும், மிகப்பெரிய ஊழியர் பலமும் சுமார் 50000கோடிக்குமேல் கையிருப்புமுள்ள மிகப்பெரிய நிறுவனம் ஆனால் கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் தனியார் நிறுவனங்கள் 8,82,000 புதிய இணைப்புகளை தந்துள்ள நிலையில் BSNLவெறும் 5,006 இணைப்புகள் மட்டுமே தந்துள்ளது இப்படிப்பட்ட திறமையுடன் துறையை நிர்வகித்த தயாநிதிமாறனின் பதவி பறிப்பின் போது சில ஊடகங்கள், "ஐயோ ஒரு நல்ல திறமை யாளரை இழந்துவிட்டோமோ....." என புலம்பி தீர்த்ததை நினைத்தால் வியப்பாக இருக்கிறது *போட்டியாளர்களை பொசுக்குவேன்* 'தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் தான் வேண்டும்' என தாத்தாவிடம் வாதாடி பதவிப் பெற்ற தயாநிதிமாறன் செய்த அதிகார அத்துமீறல்கள் அளவற்றவை. தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழில் சேனல் ஆரம்பிக்க வேண்டி வந்த விண்ணப்பங்களை அலட்சியம் காட்டினார். TRAI லைசென்சும், W.P.C கிளியரன்சும் இல்லையென்றால் தொலைக்காட்சி ஆரம்பிக்க முடியாது. இவை இரண்டையும் அனுமதிக்கும் அதிகாரம் தம்பி தயாநிதியின் கையிலிருந்தது. அண்ணன் கலாநிதியின் கட்டளைப்படி காட்சி ஊடகங்கள் எதையும் கால் பதிக்க விடாமல் தடுத்தாண்டார் தயாநிதி.'மலர் தொலைக்காட்சி' என்பதாக தினமலர் குழுமத்திலிருந்து திட்டமிட்ட சேனல் முயற்சிகளுக்கு மூன்றாண்டுகள் முட்டுக்கட்டை. இதே நிலை ஜெ. தொலைக்காட்சியிலிருந்து திட்டமிட்ட 24மணிநேர நியூஸ் சேனலுக்கும் ஏற்ப்பட்டது. (ஜெயா தொலைக்காட்சி நீதி மன்றம் சென்று போராடியும், அரசியல் பலத்திலும் உரிமம் பெற்று விட்டது) 'தமிழ்த்திரை' தடம் தெரியாமல் மறைந்தது. 'லைசென்சை' புதுப்பிக்க காலதாமதமானதை காரணங்காட்டி 'ராஜ் ப்ளஸ்' சேனல் ஒளிப்பரப்பு ரத்துச்செயப்பட்டது. இப்படியாக சுமார் 60சேனல்களுக்கு அணைப்போட்டு தடுத்து அண்ணன் கலாநிதிக்கு அனுசரனையாக அதிகாரத்தை கையாண்டார் தயாநிதி. ராஜ் தொலைக்காட்சியிலும், விஜய் தொலைக்காட்சியிலும் செய்திகள் ஒளிப்பரப்பு தடைசெய்யப்பட்டது விஜய் தொலைக்காட்சியில் 'மக்கள் யார் பக்கம்' என்ற பிரபல அரசியல் நிகழ்ச்சியை 'உடனே நிறுத்தாவிட்டால் விளைவுகள் விபரிதமாகும்' என தயாநிதியே தொலைபேசியில் மிரட்டி நிறுத்தினார். 'சன் தொலைக்காட்சி பார்வையாளர்களை திசை திருப்பும் எந்த ஒரு ஊடக செயல்பாட்டையும் சகித்து கொள்ளமுடியாது' என்பதே தயாநிதி அமைச்சகத்தின் எழுதப்படாத தாரக மந்திரமாயிருந்தது. *கதிகலங்கிய கருணாநிதி* இப்படியாக எவ்வளவு வில்லங்கங்கள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்தியபோதும் கருணாநிதி கண்டு கொண்டாரில்லை. உலகப்பெரும் பணக்காரரான பில்கேட்ஸை தமிழகம் அழைத்து வந்து கலாநிதி வீட்டில் விருந்துண்ண வைத்தார் தயாநிதி. ரிலையன்ஸ் குழுமத்துடன் நெருங்கிச் சென்று வியாபார பரிவர்தனைகளை விருப்பம் போல் ஏற்படுத்திக் கொண்டார். பரம்பரை பணக்காரான ரத்தன் டாட்டாவிடம் வியாபார உறவு வேண்டி நிர்பந்தித்த போது, ' இது வில்லங்க கூட்டம்' என அவர் விலகிச் சென்றார்.'விட்டேனா பார் உன்னை' என தயாநிதி தடாலடியாக ரத்தன் டாட்டாவை மிரட்டிய போது கூட, கருணநிதி, பேரனை அழைத்து கண்டித்ததாகச் செய்தி இல்லை. கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை, மற்ற அமைச்சர்களை கடுகளவும் மதிக்காமல், தானடித்த மூப்பாக தயாநிதி டெல்லியில் வலம் வந்தபோதும் கருணாநிதி இதையெல்லாம் கவனித்தாக காட்டிக் கொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக திராவிடஇயக்கச் சித்தாந்தங்களுக்கு எதிரான, பழைமைவாத, மூடநம்ப்பிக்கையை பரப்பும் பத்தாம் பசலித்தனமான கருத்துகளை மீட்ருவாக்கம் செய்வதில் சன்தொலைகாட்சி சளைக்காமல் சாதனை புரிந்த போதும், கருணாநிதி வேதனை கொண்டாவராகக் தன்னை வெளிக்காட்டவில்லை. கூட்டணிகட்சிகளுக்கிகிடையே குளறுபடி உருவாக்கும் செய்திகளை பரப்பிய போதும் கருணாநிதி கோபப்பட்டு எழுந்தாரில்லை. ஆனால், 'தனக்கு பிறகு கட்சித் தலைமையைக் கைப்பற்ற கணக்கு போட்டுவிட்டனர்' என அறிய வந்த போது தான் கதிகலங்கிப் போனார். கட்சியையும், ஆட்சியையும் கபளிகரம் செய்யத்துடிப்பவர்களை வெட்டிவிடுவது தான் விவேகம் என வேகமாக முடிவெடுத்தார். *எப்போது முதல் இந்தப் பிளவு ?* ** 1993-ல் கட்சியின் சொத்தை வங்கி அடமானம் வைத்து பெரும் தொகை தந்து சன் குழுமத்திற்கு வித்திட்டவர் கருணாநிதி. இன்று சன் குழுமத்திற்கு14 தொலைகாட்சி சேனல்கள், 2 பிரபல நாளிதழ்கள், 3 பருவ இதழ்கள், 4 வானொலி நிலையங்கள், 2 ஜெட் விமானங்கள் சொந்தம். சன்தொலைகாட்சி பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக 2005 முதல் அறிவித்து கொண்டு களத்திற்கு வந்து விட்டதால் இன்று அதன் மொத்த ஷேர்கள், அவற்றின் மதிப்பு போன்றவற்றை கணக்கிட்டு இந்தியாவின் முதல் 20 பணக்காரர்களில் ஒருவராக கலாநிதி மாறன் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டார். அதன் படி , சன் தொலைகாட்சியில் கலாநிதி மாறனின் 90சதவிகித பங்குகளின் மதிப்பு இன்றைய பங்குமார்க்கெட் நிலவரப்படி, கலாநிதியின் சொத்து மதிப்பு சுமார் 9,000கோடி..! அதாவது இது அதிகாரப்புர்வமான, சட்டப்படியான சன் தொலைகாட்சி மூலமான சொத்துமதிப்பு மட்டும் தான்! இதை கணக்கிட்டுத்தான் இந்தியாவின் இருபதாவது பணக்காராக கலாநிதிமாறன் அறிவிக்கப்பட்டார். ஆனால் சன்குழுமம் தவிர்த்த 25 நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார். ஜெமினி தொலைகாட்சி , உதயா தொலைகாட்சி, தினகரன்ன்ன் குழுமம், குங்குமம் உள்ளிட்ட பருவ இதழ்கள் , எப்.எம் வானொலி நிலையங்கள் கால் கேபிள்ஸ் , கால் கம்யூனிகேஷன்ஸ், DMS எண்டர் டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடேட், D.K. எண்டர் பிரைசஸ் போன்ற 25 நிறுவனங்களிலும் அவர் தான் மிகப் பிரதான பங்குதாரர்கவும், மனைவி, அம்மா மல்லிகா, தம்பி தயாநிதி... உள்ளிட்ட குடும்ப உறவுகளை சிறிய பங்கு தாரர்களாகவும் கொண்டு நடத்திவருகிறார்.இவை அனைத்தையும் கணக்கிலெடுத்தால் கலாநிதிமாறன் குறைந்த பட்சம் 40,000 கோடி ரூபாய்க்கு அதிபதியாகிறார். கலாநிதியின் எந்த ஒரு நிறுவனத்திலும் கருணாநிதியின் ரத்த உறவுகள் பங்குதாரர்களாக அனுமதிக்கப்படவில்லை என்பது கவனத்திற்குரியது. தனது சித்தப்பா முரசொலி செல்வத்திற்கும் அவருடைய மனைவியாகவுள்ளதால் செல்விக்கும் ஓரிரு நிறுவனங்களில் மிகச்சில பங்குகளை அனுமதித்துள்ளார். (ஆகவே தான் முரசொலி செல்வம் மாறன் சகோதரார்களை தீவிரமாக ஆதரிக்கிறார்) ஆரம்பத்தில் சன்தொலைகாட்சியில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் பிரதான பங்குதாராக இருந்தார். மற்ற சிலரும் இருந்தனர். ஆனால் காலப்போக்கில் இவர்கள் எப்படி கழட்டி விடப்பட்டனர் என்ற சூட்சுமம் தெரியவில்லை. ஆனால் நவம்பர் 2005-ல் அதிகார பூர்வமாக தயாளு அம்மாள் தனது20சதவிகித பங்குகளை விட்டுக்கொடுத்து விட்டு விலகினார் என செய்தி வெளியானது. அதில் ஒரு பகுதியாக பத்துகோடியை தனக்கு தந்தார் என கூறிய கருணாநிதி, அதில் ஐந்துகோடியை தன் பெயரிலான அறக்கட்டளை அமைத்து தமிழறிஞர்களுக்கு உதவப்போவதாக அறிவித்தார். ஆனால் 20 சதவிகித பங்கின் மூலமாக மொத்தம் சிலநூறு கோடி ருபாய் தயாளு அம்மாளுக்கு தரப்பட்டிருக்க வேண்டும். தயாயாளு அம்மாள் தொடர்ந்திருந்தால் இன்றைய பங்குசந்தை நிலவரப்படி (ஒரு பங்கின் மதிப்பு ரூ 1400) அவர் பங்கிற்கு கிடைக்க வேண்டிய தொகை இருமடங்காகியிருக்கும். வேகமாக விஸ்வரூபமெடுத்து வளரும் நிறுவனத்திலிருந்த தனது பங்குகள் முழுவதையும் தயாளு அம்மாள் விருப்பப்பட்டு விலக்கி கொண்டாரா? அல்லது வெறுப்புற்று வெளியேற நிர்பந்திக்கப் பட்டாரா என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. ஆனால் சன் குழுமம் ஆக்டோபஸ் மிருகமாய் விஸ்தரித்துக கொண்டு போகும் தருவாயில் ஆணிவேராய் தங்களுக்கு ஆரம்பத்தில் உதவிய கருணாநிதியின் குடும்ப உறவுகளுக்கு எந்த பலனுமில்லாமல் பார்த்துக் கொண்டனர் மாறன் சகோதரர்கள்! *தொடர்ந்து செய்த துரோகங்கள்* ஆனால் மாறன் சகோதரர்களால் ஏற்பட்ட மனகசப்புகளை எந்த நிலையிலும் வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் விவேகமாகவும், பல நேரங்களில் பெருந்தன்மையாகவுமிருந்தார் கருணாநிதி. தனது கலையுலக அனுபவங்களை தொடராக எழுத விரும்பினார் கருணாநிதி. அதை குங்குமம் இதழுக்கு சில ஆரம்ப அத்தியாயங்களை எழுதித்தந்தார். ஆனால் அதை பல மாதங்களாக பிரசுரிக்காமல் அலட்சியப் படுத்தினார் கலாநிதி. கலாநிதியின் கட்டளையால் தான் தனது கட்டுரைகள் பிரசுரமாகவில்லை. என்பதை அறிந்த கருணாநிதி அதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைக்க, அது விகடனில் வாராவாரம் வெளியாகி வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டது. பல நேரங்களில் கருணாநிதியின் முக்கிய அறிக்கைகள் போதுமான முக்கியத்துவமின்றி சுருக்கி சொல்லப்படுவது, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சிலவற்றை ஓளிபரப்பாதது, பேராசிரியர் அன்பழகன், மு.க. ஸ்டாலின் போன்றவர்களின் நிகழ்ச்சிகளையும்,அறிக்கைகளையும் கூடுமானவரை தவிர்த்தது, நாடறிந்த கவிஞரான கனிமொழி 'கருத்து' என்ற அமைப்பை தோற்றுவித்த போதும், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய போதும் இயன்றவரை இருட்டடிப்பு செய்தது... போன்ற பல சம்பவங்கள் கருணாந்ிதியை பலமாக பாதித்த போதும் வெளிப்படையான மோதலை அவர் விரும்பவில்லை.கருணாநிதிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டதால் மாலன், கலாநிதிமாறனால் அவமானப் படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். கருணாநிதி சிபாரிசு செய்யும் யாரையும் சன் செய்தி பிரிவிலோ அல்லது வேறுபிரிவிலோ சேர்ப்பதில்லை என்பதை அறிவிக்கப்படாத கொள்கையாக கடைபிடித்தார் கலாநிதி . *சன் டிவியின் சமூக சேவை* பெரியார், அண்ணா கொள்கை வழி வந்த குடும்பத்தின் வாரிசுகளல்லவா... பகுத்தறிவு கருத்துகளை பரப்ப வேண்டாமா? அன்று அண்ணாவின் வேலைக்காரி, ரங்கோன்ராதா, கருணாநிதியின் பராசக்தி, மனோகரா, கலைவாணரின் கருத்தான நகைச்சுவைகள் போன்றவை சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியை சவக்குழிக்குள் தள்ளுவதற்காகவே அவதார மெடுத்து 'சன் தொலைகாட்சி ' வேப்பிலைக்காரி, கோட்டை மாரியம்மன், விக்கிரமாதித்தன், சொர்க்கம்...... போன்ற தொடர்கள் மூலமாக 'சன்' சமூகத்திற்குத் தந்த விழிப்புணர்ச்சி கொஞ்சமா,நஞ்சமா? ஜோசியதை மதிக்காதவங்க நாசாமப் போயிடுவாங்க... சூனியவாதிங்க, மந்திரவாதிங்க கோபத்துக்கு ஆளானால் அதோகதிதான்! சாமியார்கள் நினைத்தால் எந்த அதிசயத்தையும் சாத்தியப்படுத்தலாம்... அடடா, எவ்வளவு மகத்தான கருத்துகள்......... இவையெல்லாம் விஷத்தையே வெட்கப்படவைக்கும் வீரிய நச்சல்லவோ! தமிழ் தெரியாதவர்கள் தான் நிகழ்ச்சி அறிவிப்பாளர்களாக இருக்கமுடியும் என்ற போக்குகள். இவை மட்டுமின்றி குடும்பங்களின் அமைதியைக்குலைக்கும் குரோதச் சிந்தனைகளின் குவியல்களாக எண்ணற்ற தொடர்கள், அவற்றில் விதவிதமாக வெளிப்படும் பாலியல் பிறழ்வுகள், பழிவாங்கும் போக்குகள், கொலை,கற்பழிப்பு,வன்முறை.... என்ன பாவம் செய்தார்களோ.... தமிழக மக்கள்! சன் தொலைக்காட்சியோடு நிற்கவில்லை இவர்களின் சமூகசேவை. "எந்நேரமும் மக்கள் சினிமா பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அவர்களின் சிந்தனை மழுங்கவேண்டும்" என்ற கருணை உணர்வில் 'கே' சேனல், 'நாட்டின் வளர்ச்சிக்கு அடிபடையாக உள்ள இளம் தலை முறையினர் எப்போதும் இன்பம் எனும் சினிமா இசை வெள்ளத்தில் மூழ்கிச் சீரழிய வேண்டும்' என்ற சீரிய முயற்சியில் 'சன் மியூசிக் சேனல்' , 'தங்கள் அரசியலுக்கு உகந்த செய்தியை மட்டுமே மக்கள் எப்போதும் அறிந்து கொள்ள வேண்டும்' என்ற பெருந்தன்மையோடு 'சன் நியூஸ் சேனல்', இப்போது குழந்தைகளையும் குட்டிச்சுவராக்கிவிட 'சுட்டி சேனல்' இவற்றை பார்க்காவிட்டால் மக்களின் பகுத்தறிவு மங்கிவிடும்' என்று தான் இலவச தொலைக்காட்சியை அறிவித்தாரோ..... என்னவோ கருணாநிதி. *யாருக்கு யாரால் நன்மை :* 1996 தொடங்கி ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் தி.மு.க வின் வெற்றிக்கு சன் தொலைகாட்சியின் பலம் பிரதானமாகக் கருதப்பட்டது. பெருவாரியான பார்வையாளர்களை தன் வசம் வென்றெடுத்திருந்த சன் குழுமத்தின் செய்திகள், நேர்காணல்கள், விவாதங்கள், கருத்துகணிப்புகள் போன்றவை தி.மு.கவின் வெற்றிக்கு கணிசமான பங்காற்றியது. கருணாநிதி 100 கூட்டங்களில் பேசினாலும் ஏற்படுத்தமுடியாத தாக்கத்தை சன் தொலைகாட்சியின் பத்து நிமிட ஒளிபரப்பு ஏற்படுத்துகிறது.... அவரது காலடி தடம் படமுடியாத குக்கிராமங்களுக்கெல்லாம் தங்கள் சேனல் தான் அவரது கருத்துகளை கொண்டு சேர்க்கிறது... என்றும், சன் குழுமத்தின் பிரச்சார பலமில்லாமல் தி.மு.க வால் தேர்தலை எதிர்கொள்வது இயலாததென்றும் மாறன் சகோதரர்கள் மனக்கணக்கு போட்டனர். ஆக, எப்படியாயினும் தங்களை அனுசரித்து போவதை தவிர கருணாநிதிக்கு வேறுவழியில்லை என்றமுடிவுக்கு வந்தனர். அதுவும் சமீபத்திய தேர்தல்களில் போட்டியிட்ட குறிப்பிடத்தக்க வேட்பாளர்களுக்கு சன் குழுமத்திலிருந்து நிறைய பண உதவியும் தரப்பட்டுள்ளது. திமு.க தலைமை கஞ்சத்தனமானது என்ற பெயரை மாற்றி தராளமாக கட்சிக் கரார்களுக்கு பணம் தந்தனர் மாறன் சகோதரர்கள். திமு.க தலைமையகத்தை 'கார்ப்பரேட்' அலுவலகமாக ஆக்கியதுபோல் மாவட்ட கட்சி அலுவலகங்களையும் மாற்ற திட்டமிட்டனர் மாறன் சகோதரர்கள். பிரச்சாரம் செய்ய கருணாநிதிக்கு சொசுகு கார் தந்ததுபோல் மாவட்ட செயலாளர்களுக்கும் கார்கள் தரவும் அவர்களுக்கு அந்த அந்த மாவட்டத்து கேபிள்நெட் வோர்க் தொழில் வாய்ப்பை தரவும் திட்டமிட்டனர் மாறன் சகோதரர்கள். இந்த சூழலில் தான் கருணாநிதியின் அடுத்த வாரிசு பற்றிய கருத்துகணிப்பை நடத்தியது தினகரன் நாளிதழ். 'சோழியன் குடுமி சும்மா ஆடுமா...' என கருணாநிதி உசாரானார். *தயாநிதியின் தணியாத பேராசை* மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பதவியை தங்கள் வியாபார விஸ்தரிப்பிற்கும், பாதுக்காப்பிற்கும் போட்டியாளர்களை பொசுக்குவதற்கும் தயாநிதி தயங்காமல் பயன்படுத்தினார். அதே சமயம் மிகப்பெரும் தொழில் அதிபர்களிடம்-அவர்களது நிறுவனங்களில்- அண்ணன் கலாநிதியையும் பங்குதாராக சேர்க்கும் படி பகிங்கமாகக் கேட்டார். ஏர்டெல் நிறுவனத்திலிருந்து 500 செல்போன்களை இலவசமாக சன் குழுமத்திற்கு பெற்றுத்தந்தார். ஸடார், விஜய், ராஜ் தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகள். அதற்கான கட்டணங்களை எஸ்.சி.வி. வாடிக்கையாளர்களிடம் வசூலித்த போதும் மேற்படி நிறுவனங்களுக்குத் தருவதில்லை. எஸ்.சி.வி.யே விருப்பப்பட்டு எப்போதாகிலும் கொடுத்தால் தான் உண்டு. அமைச்சரின் கோபத்திற்கு ஆளாவது தொழிலுக்கே ஆபத்து என அவர்களும் அடங்கிப் போனார்கள். மன்னராட்சி மனோபாவம் மாறன் சகோதரர்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. கருணாநிதியின் அடுத்த தகுதியான வாரிசாக தயாநிதி இருக்க , அதற்கு தடைக்கற்களாக ஸ்டாலினும், அழகிரியும், கனிமொழியும் இருப்பது தங்கள் லட்சியத்திற்கு இடையூராகக் கருதினார்கள். ஓரணியில் ஒன்றாக இருக்கும் ஸ்டாலினையும், அழகிரியையும் பிரிப்பது, இருவரையும் ஒருவருக்கொருவர் எதிரியாய் மாற்றுவது, கருத்துக்கணிப்பின் விளைவாய் அழகிரி ஆதரவாளர்கள் செய்யும் அராஜகங்களை அடிப்படையாக வைத்து அவரது அரசியல் செல்வாக்கை அழிப்பது...... போன்றவையே மாறன் சகோதரர்களின் திட்டம். மதுரை மாவட்டத்தில் எஸ்.சி.வியின் ஏகபோகத்தை தடுத்து, சிறுகேபிள் ஆபரேட்டர்களின் தொழிலுக்கு அரணாக அழகிரி செயல்படுவதும் மாறன் சகோதரர்களின் மட்டற்ற கோபத்திற்கு மற்றொரு காரணமாயிருந்தது. மதுரை தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டு, மூவர் உயிர் பலியான பிறகு அழகிரியை சட்டத்திற்கு மீறிய அதிகாரமையமாய் செயல்படுகிறார் என்று மீண்டும், மீண்டும் ஒலமிட்ட சன் தொலைக்காட்சியும், தினகரனும், இத்தனை ஆண்டுகளில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக அழகிரி செயல்ப்பட்டு வந்த போது அதை ஒருநாளும் சுட்டிக் காட்டியதில்லை என்பது கவனத்திற்குரியதாகும். அரசியலில் லாபமும், நஷ்டமும் சகஜமே ஆனால் கருணாநிதி தயவால் லாபத்தை மட்டுமே அனுபவித்து வந்த மாறன் சகோதரர்கள், நஷ்டத்தை கண்டு கதிகலங்கி குமுறி தீர்த்தனர். "அழகிரியை சிறைக்குள்தள்ளாமல் நாங்கள் ஓயப்போவதில்லை....." என மார்த்தட்டினார்கள்.அழகிரி ஆதரவாளர்கள் செய்தது அக்கிரமாக இருக்கலாம் ஆனால் அதை எதிர்த்து தர்மாவேஷம் கொள்வற்கு மாறன் சகோதரர்களுக்கு தார்மீக தகுதி இல்லாமல் போய்விட்டது. தன்னால் உருவாக்கப்பட்டவர்கள் தன்னை கடந்து சென்று தன் மகன் அழகிரியை அழித்தொழிக்க நினைப்பதை தனது ஆளுமைக்கு விடப்பட்ட அறை கூவலாகத்தான் கருணாநிதி எதிர்க்கொண்டார். பொது மக்கள் மத்தியிலேயே பட்டப்பகலில் பகிங்கரமாக தனது கட்சிக்காரர்களால் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு கொளுத்தப்பட்டதையும், அதில் அப்பாவிகள் மூவர் உயிரிழிந்த அவலத்தையும், அதை தடுக்கத்தவறி காவல் துறையினர் செயலற்று வேடிக்கை பார்ததால் தன் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரையும் சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட்ட தன் மூலம் சீர்படுத்தி விட்டதாக மக்களை நம்ப வைக்க முயற்சித்தார். அவர் அழகிரியை அரவணைப்பதால் அழகிரியின் அராஜகங்களை அங்கிகரித் துள்ளதாக மக்கள் கருதினார்கள். துரோகம் செய்தவர்களைத் தூக்கி எறியவேண்டும் என்ற கோப உணர்ச்சி தான் அவரிடம் மேலோங்கி நின்றது.தன்னை தவிர தாங்கிப்பிடிக்க ஆளில்லாத தயாநிதிமாறனை அமைச்சர் பதவியிலிருந்து அகற்ற அவருக்கு சிறிதளவும் சிரமம் ஏற்படவில்லை. கட்சியின் அனைத்து மட்டத்தினரிடையேயும் மாறன் சகோதரர்கள் குறித்த மனக்கசப்பு மண்டிக்கிடந்தது. அது அவர்களை, கருணாநிதியே கைவிட்டபின்பு பொது குழுவில் பொங்கி பிரவகித்தது. மாறன் சகோதரர்களின் வளர்ச்சி கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து என தி.மு.க திட்டவட்டமாக தீர்மானித்தது. மாறன் சகோதரர்களின், பேராசை பெருநஷ்டத்தில் முடிந்தது. *கலாநிதியின் கணக்கற்ற தில்லுமுல்லுகள் * ஜெமினி தொலைக்காட்சியில் ரவிபிரசாத், மனோகர்பிரசாத் என்ற சகோதரர்கள் பங்கு தாரர்கள். இவர்கள் இருவரும் இந்தியன் வங்கியில் ரூ700கோடி கடன் பெற்று இன்று வரை வட்டி உட்பட கட்டவில்லை. இதை இந்தியன் வங்கி தமிழ் தினசரியில் விளம்பரமாகவே வெளியிட்டது. ஜெமினியில் கலாநிதி மாறனின் பங்கு
சதவிகிதமாகும். ஜெமினி நல்ல லாபகரமாகவே தொழில் செய்து பணம் ஈட்டுகிறது.இன்று வரை பிரசாத் சகோதரர்கள் இதன் இயக்குநர்களாகதான் இருக்கிறார்கள். மாறன் சகோதரர்களின் அதிகார செல்வாக்கின் முன்பு சட்டம் தன் கைகளை கட்டிக் கொண்டு விட்டது. இதே ஜெமினியில் மற்றொரு பங்குதாரராக சேர்ந்து பெரும் பணத்தை முதலீடு செய்து, கடுமையாகப் பாடுபட்டு சேனலை தூக்கி நிறுத்திய சரத் என்ற கலாநிதியின் நண்பர் ஏமாற்றப்பட்டு வெளியேற்றப்பட்டார். பங்குசந்தையில் சன் குழுமத்தை முக்கியப்படுத்துவதற்காக, உண்மைக்கு மாறான தகவல்களையும், கணக்குகளையும் கலாநிதி காண்பித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசின் SEBI அமைப்பையும், மக்களையும் முட்டாளாக்கி சன் குழுமத்தின் சந்தை மதிப்பை பிரம்மாண்டமாக உயர்த்திக்கொண்டார்.1993ல் தொடங்கிய சன் குழுமத்தை 1985லிருந்து செயல்படுவதுபோல் அவரால் எப்படிதான் கணக்கு காட்ட முடிந்ததோ..... தெரியவில்லை. சன் குழுமத்தின் கேபிள் ஆபரேஷன் கணக்குகளில் இது வரை பாதிக்கும் குறைவான வாடிக்கையாளர் கணக்கே வருமான வரித்துறைக்கு காட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி வருமானவரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். புதிதாக வரும் திரைப்படங்கள் சன் தொலைக்காட்சிக்குதான் விற்க்கப்படவேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். இந்த நிர்பந்தங்களுக்கு உடன் படாதா திரைப்படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் சன் தொலைக்காட்சியின் 'டாப் 10 மூவிஸ்' திரை விமர்சனத்தில் கடைசி எண் தந்து கண்டபடி தாக்கி விடுகின்றனர்..! போதாகுறைக்கு தினகரன், குங்குமம் இதழ்களும் குதறி தீர்த்து விடுகின்றன சம்மந்தப்பட்ட திரைப்படத்தை ! இந்த ஊடகப் பலத்தை கண்டு மிரலும் தயாரிப்பாளர்கள் சன் குழுமத்திடம் சரணாகதியாகிவிடுகின்றனர். போட்கிளப்பில் 36கிரவுண்ட் பரப்பளவில் கலாநிதி மாறனின் 25,000சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான பங்களா உள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போல் அமெரிக்கா மற்றும் லண்டனிலிருந்து தருவிக்கப்பட்ட பைபர் மற்றும் விலை உயர்ந்த மரப்பொருட்களைக் கொண்டு அழகூட்டப்பட்டு சொர்க்கபுரியிலிருக்கும் சொகுசு மாளிகைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையே தண்ணீர் பஞ்சத்தில் வாடினாலும் இந்த பஙுகளாவில் உள்ள நீச்சல் குளத்தில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். இந்த ஆடம்பர பங்களாவை விவரிக்க ஆரம்பிப்பது பக்கங்களை வீணாக்கிவிடும் என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன். ஆனால் ஒரு காலத்தில் காமராஜர் வாழ்ந்த திருமலை பிள்ளை சாலை இல்லத்தை புகைப்படமெடுத்து, 'ஏழைபங்காளன் வாழும் பங்களா பார்த்தீர்களா....? என்று ஏளனம் செய்தவர்களின் நினைப்பு ஏனோ வந்து தொலைகிறது. சுமார் 40,000கோடிக்கு அதிபதியான கலாநிதி மாறன் தன் தந்தை முரசொலி மாறனின் மருத்துவ செலவுக்காக மத்திய அரசு செலவிட்ட ரூபாய் 40கோடியை இன்று வரை திருப்பிதர மனமில்லாதவராய் இருக்கிறார். *வாரிசுபோட்டி வந்தது எதனால்?* அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்ற கழகத்தை ஒரு ஜனநாயக இயக்கமாக தொடங்கி நடத்தினார். அவர் தனிப்பெரும் தலைவராக அறியபட்டநிலையிலும் என்.வி.நடராஜன், இரா.நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன் போன்றவற்கு சம மதிப்பளித்து அவர்களை அடுத்து தலைதாங்க தக்கவருகளாக ஆயத்தப் படுத்தினார். கருணாநிதியின் திறமைகளையும், ஆற்றல்களையும் அறிந்த அண்ணா அவர் உட்பட எவரையுமே தன தலைமைக்கு ஆபத்தான தம்பியாக கருதவில்லை. எம்.ஜி.ஆரின் செல்வாக்கு தனக்கு ஆபத்தாகி விடுமோ என அவரை புறக்கணித்தார் கருணாநிதி. கட்சி இரண்டானது.கருணாநிதியின் தலைமையை ஏற்றுக்கொண்டபிறகும் நாவலர் நெடுஞ்செழியனை நல்ல முறையில் நடத்தவில்லை அதனால் அவரும் 1977ல் வெளியேறினார். வைகோவின் வளர்ச்சி தன் வாரிசுகளுக்கு ஆபத்துஎன்று அவரையும் அகற்றினார். இப்படி கருணாநியின் குடும்ப உறவுகள் கட்சியில் கோலோச்சமுடியும் என்ற நிலை ஏற்பட்டதால் தான் தயாநிதி மாறன் போன்றவர்கள் தான்தோன்றிதனமாக உயர் நிலைக்கு வரமுடிந்தது. கொள்கை அடிப்படையில் ஒரு இயக்கம் செயல் பட்டால் அங்கே குடும்ப ஆதிக்கம் வராது. அதுவே கொள்ளை அடிப்படையில் செயல் பட்டால் உடைமை உணர்வும், உறவுமனப்போக்கும் மேலோங்கி விடுகின்றது. இப்போது கலைஞர் தொலைக்காட்சி ஆகஸட் 15லிருந்து ஒளிப்பரப்பாகும் என கருணாநிதி அறிவித்துள்ளார். சுமார் 60 சேனல்கள் மூன்றாண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நிலையில், கருணாநிதி நினைத்தவுடன் ஒரு தொலைக்காட்சியை தொடங்க முடிகிறது. ஜெயலலிதா ஆட்சியில் கேபிள் டி.வி.நெட்வொர்க்கை தமிழக ஆரசு பொறுப்பில் எடுத்துக்கொள்ளும் என்று அவசரச் சட்டம் கொண்டுவந்தபோது அதை அடுத்த நாளே கவர்னரை சந்தித்து ஒப்புதல் அளிக்கவேண்டாம் என்று கேட்டவர் கருணாநிதி. அது எவ்வளவு பெரிய தவறு என இன்று அவர் உணர்ந்திருக்ககூடும். ஒரு வேளை அதே சட்டத்தை கருணாநிதியே இப்போது அமல் படுத்த முனைந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. மேலைநாடுகளில், அமெரிக்கா, ஐரோப்பாவில், ஒரே குடும்பத்திலுள்ளவர்கள் அரசியல், ஊடகம் இரண்டிலும் மேலாதிக்கம் செய்வதை தடுக்கும் சட்டம் ஒன்று உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் ஊடகத்துறையில் தனியொரு நிறுவனமே ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கபளிகரம் செய்வது மாதிரியான போக்குகளுக்கு தடை ஏற்படுத்தும் சட்டங்கள் உள்ளன. குறிப்பாக ஒரேநிறுவனம், ஒரேபிரதேசத்தில் பல சேனல்களை ஆரம்பிப்பது, காட்சி ஊடகம், அச்சு ஊடகம், வானொலி போன்ற அனைத்திலுமே ஒரே குடும்ப நிறுவனம் தனி மேலாதிக்கம் (Monopoliy) செய்வதை தடுப்பது மாதிரியான சட்டங்கள் 1980,1990களிலிருந்து அமலில் உள்ளது. இது போன்ற சட்டத்தை இந்தியாவிலும் அமல்படுத்த வேண்டி சில ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு எல்லா தரப்பிலும் வலுவான ஆதரவு வெளிப்படவேண்டும்.
Fallout of 2G scam has led to realignment of equations within various factions of DMK clan
KARUNANIDHI:
After Kanimozhis arrest,the patriarch has grown colder towards Dayanidhi.He was the one who gave Maran Junior a ticket to contest LS elections in 2004 and also picked him to be a Union minister.Sources now say it was Karunanidhi who urged son Stalin to get Maran to tender his resignation
Wife DAYALU AMMAL,Mother of Alagiri and Stalin:
She maintains a neutral stand,not letting the personal mix with the political, especially since her daughter Selvi is married into the Maran family
SELVI,Karunanidhis eldest daughter and married to Selvam,brother of late Murasoli Maran:
Brought the families together after a rift in 2007.On Tuesday,Selvi along with Kaveri,Kalanithis wife,walked 18km from Tiruvarur to pray for the Marans before the family deity in their home village Tirukuvalai
Wife RAJATHI AMMAL,Mother of Kanimozhi:
She was among those who accepted a laddoo from Raja when he distributed sweets in the Patiala Court House this morning after news of Marans resignation broke out
Heir-apparent M K STALIN:
Has always drawn support from Marans be it TV time or financial muscle.When DMK leaders met to discuss CBI submission,Stalin made an emotional case to back Dayanidhi
M K ALAGIRI,Karunanidhis elder son:
Once hostile to the Marans,they patched up the night Raja tendered his resignation.The occasion ostensibly was a pre-wedding toast to Alagiris son.But grapevine now says Alagiri and wife Kanthi have distanced themselves from Dayanidhi
Senior DMK leadership (Messrs T R Baalu,Jagathrakshakan,Durai Murugan):
Most or all of them have distanced themselves from the Marans.Some of them are even hoping to replace Dayanidhi in the cabinet
Malaysian businessman of Tamil origin nicknamed TAK Estimated net worth of $9.6 billion Shuns the limelight,maintains a low profile Born in 1938 in Brickfields,Kuala Lumpur to Tamil parents who immigrated from Sri Lanka Graduated from an Australian university,masters in business administration from Harvard in 1964 Set up Exoil Trading,which purchased oil drilling concessions in various countries In the early 1990s,he diversified into multimedia Has interests in media,satellites,oil and gas,telecommunications (Maxis,Aircel) First came into prominence by helping to organize Live Aid concert with Bob Geldof in the mid-1980 s Maxis has acquired Aircel,Tamil Nadus largest cellular phone company and has spread to rest of the country It has also been alleged that Maxis Communication,through its subsidiary Astro,invested Rs 600 crore in Marans familycontrolled Sun DTH
SERIAL ENTREPRENEUR Sivasankaran
Born in Chennai Chairman of Sterling Group and Siva Ventures Ltd Bought Sterling Computers (now Siva Group) from Robert Amritraj,father of Vijay Amritraj,in 1985 Has a net worth of more than $4 billion Heralded PC revolution in India in the 80s,launched PCs for Rs 33,000,a third of prevailing cost in the 1980s Was the first to introduce DSL and Wi-Max broadband in India Owns a private jet
1995 |
applied for Tamil Nadu telecom licence
1997-98 |
Launched Aircel out of Chennai
March 1998 |
Incorporated Dishnet DSL,the countrys first DSL internet provider
April 2004 |
Bought 65.4% stake in Barista coffee chain
2005 |
Bought out RPG Cellular Ltd for Rs 208 cr and renamed it Aircel Cellular
December |
Sold 100% stake to Maxis for $1.08bn giving Maxis access to 628 million subscribers in India
No minutes of PC-Raja meetings on spectrum pricing: DEA
Rajeev Deshpande | TNN
New Delhi: There are no formal recorded minutes of meetings between jailed former telecom minister A Raja and then finance minister P Chidambaram relating to consultations that led the two ministries to report concurrence on spectrum pricing issues to Prime Minister Manmohan Singh. In its presentation on Thursday to the Joint Parliamentary Committee on telecom matters,the department of economic affairs noted that meetings between Chidambaram and Raja took place around May 29,2008 and an agreed position was reported to the PM. Though this was well after the controversial 2G licences had been allotted,the finance and telecom consultations have been quoted by the government as evidence of convergence in government over pricing of spectrum that was allegedly undervalued. The DEA,which is part of the finance ministry,found itself under intense scrutiny from Opposition members of the JPC with MPs asking how could there be no record of meetings that in effect placed a seal of approval on licences worth thousands of crores of rupees. The department said the PM was informed of enhancement of usage charges by 1% of adjusted gross revenue (AGR) and pricing of spectrum based in indexing the base price and compounding prime lending rate for existing allotees beyond 6.2Mhz. The DEAs unusually frank account also said that an internal note put up to Chidambaram on January 9,2008,recommending both revision of entry fee fixed in 2003 as well as adoption of an auction methodology for determination of spectrum usage charges. A meeting of telecom commission slated for that day was put off till January 15 and the note finally sent by Chidambaram to the PM on the basis of the concept note said an auction based mechanism was recommended for future allocation (beyond start up) with spectrum allocations have been made in the past to be treated as a closed chapter. Chidambaram,who now holds the home portfolio,has clarified in the context of the Public Accounts Committee report,that he had referred to payments in the past for additional spectrum and this may be treated as closed. BJP members Yashwant Sinha,Jaswant Singh and Ravi Shankar Prasad joined by CPIs Gurudas Dasgupta and BSPs S C Mishra as well as the Trinamool representative Kalyan Banerjee questioned DEA closely and the officers said they will get back with more detail on decisions relating to the 2G scam.
சென்னை,ஜூலை 8:ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதையடுத்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறன் ராஜினாமா செய்த செய்தி பரவியதும் பாட்டியாலா நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் உள்பட அங்கு இருந்தவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
.
இதே போல சென்னையில் கலைஞர் டிவியிலும், திமுக தலைமை அலுவலகத்திலும் மாறன் ராஜினாமா குறித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் முதன் முதலாக மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்ட போது, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்கள் தங்களது நண்பர்களுக்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்து அளித்ததாக செய்திகள் வெளிவந்தன.
ராசா, கனிமொழி ஆகியோர் கைதான விவகாரத்தில் திமுகவில் உள்ள தயாநிதி மாறன் சகோதரர்களை குற்றம் சாட்டி வந்தனர். கட்சியில் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில் அவர்கள் இதனை வெளிப்படையாக தெரிவித்திருந்தனர். கனிமொழி கைது செய்யப்பட்ட பிறகு திமுக தலைவர் கருணா நிதியும் மாறனுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த கட்சியின் தலைவர்களும் தயாநிதி மாறனுடனான தொடர்புகளை துண்டித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் கருணாநிதி குடும்பத்தில் அவரது மகள் செல்வி, மகன் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மட்டும் மாறன் சகோதரர்களிடம் எப்போதும் போல் உறவு வைத்துள்ளனர்.
அண்மையில்திமுக தலைவர் கருணாநிதி கனிமொழியை சந்திக்க திகார் சிறைக்கு சென்றபோது தயாநிதி மாறனும் உடன் சென்றிருக்கிறார். கனிமொழியை சந்தித்த பின்னர் ராசாவையும் கருணாநிதி சந்தித்தார். அந்த சமயத்தில் தயாநிதி மாறனை பார்த்த ராசா அங்கிருந்தவர்களிடம் இவர் எப்போது உள்ளே வரப் போகிறார்? என்று கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2ஜி வழக்கில் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம் சாட்டியதையடுத்து அவர் நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த செய்தி வெளியான போது பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ஆ.ராசா, அங்கு இருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டார்.
அப்போது நீதிமன்றத்தில் இருந்த கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளும் ராசா வழங்கிய லட்டை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அறிவாலய வளாகத்தில் நேற்று மாலையில் திரண்டிருந்த திமுகவினரும் மாறன் கைது செய்தியை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர். கலைஞர் டிவியிலும் ஊழியர்கள் இதனை வரவேற்று மகிழ்ந்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆட்சியில் தி.மு.க. குடும்பத்தினரிடம் சிக்கித் தவித்த திரைப்படத்துறை ஆட்சி மாற்றத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மீளத் தொடங்கியிருக்கிறது. நடிகர்கள், இயக்கு நர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்த, சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட, பட்டாசு வெடி த்துக் கொண்டாடி இருக்கிறார்கள் திரைப்படத் துறையினர். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் நடிகர் ராதாரவியை சந்தித்து தமிழ்த் திரைப்படத்துறையின் இப்போதைய நிலை குறித்துக் கேட்டோம்.
சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா கைது செய்யப்பட்டிருக்கிறாரே? ‘‘தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று புரிகிறது. கடந்த ஆட்சியில் தவறுகள் கண்டும், காணாமலும் விடப்பட்டதைப் போல் இந்த ஆட்சியிலும் நடக்கலாம் என எதிர்பார்க்கிறவர்களுக்கு இந்தக் கைது ஒரு எச்சரிக்கை. மிரட்டல்கள் காலமெல்லாம் துணைக்கு வருமா? அந்த டி.வி.யின் படங்களுக்கு சங்கத்தின் விதிகள், கட்டுப்பாடுகளை மீறி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.’’
இந்தத் தவறுகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கமும் துணை நின்றிருக்கிறது என்று சொல்லலாம் தானே? ‘‘தவறு நடந்து விட்டதாக இப்போது பேசுகிறவர்கள் அப்போது சரி செய்திருக்க வேண்டும். அரசியல் நுழைந்து விட்டதாகச் சொல்கிறவர்கள் அப்போதே கேட்டிருக்கலாமே! உதாரணமாக ஒரு சம்பவம். அப்போதைய ஆளும் கட்சியைச் சேர்ந்தவரின் ஒரு படத்திற்கு பெயர் பிரச்னை வந்தது. அது தமிழ்ப் பெயர் இல்லை என்று நான் சொன்னேன். ஆனால் மெஜாரிட்டி உறுப்பினர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பத்திரிகைகளில் ஒரு பக்கத்திற்கு விளம்பரம் கொடுக்கக்கூடாது என்கிற தீர்மானத்தை மீறி பலர் அன்றைய முதல்வர் படத்திற்காக விளம்பரம் போட்டார்கள். விதியை மீறிய செயல் என்று சொன்னேன். இப்படி அன்றைய ஆளும் கட்சிக்கு ஆதரவாக திரைப்படத் துறையினர் நடந்து கொண்ட பல சம்பவங்கள் உண்டு!’’
நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்றைய ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்த சிலர் வற்புறுத்தினார்கள் என்று சொல்லப்பட்டது. அதற்கான பஞ்சாயத்தில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். என்னதான் நடந்தது? ‘‘எந்த விழாவாக இருந்தாலும் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் என்று நடிகர் அஜித் அப்போதைய முதல்வர் கருணாநிதி முன் னிலையிலேயே ஒரு விழாவில் சொன்னார். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார். ரஜினி எப்படி முதல்வர் கலந்து கொண்ட விழாவில் அப்படி நடந் துகொள்ளலாம் என்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் தூண்டி விட்டார்கள். ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று ஃபெப்சி அடம் பிடித்தது. இயக்குநர் கே.ஆர்.செல்வராஜ், நடேசன் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோரோடு நானும் அந்த பஞ்சாயத்திற்குப் போயிருந்தேன்.
இன்று ரஜினி பற்றி புகழ்ந்து தள்ளும் சிலர், அன்று அவரை அவ்வளவு மரியாதைக் குறைவாகப் பேசினார்கள். அவர் மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும் என்று சொன்னார்கள். நான் தான் ‘ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார்’ என வாதாடினேன். எனக்கு ரஜினி போன் பண்ணி நன்றி சொன்னார்.’’
கடந்த ஆட்சியில் நிறைய திரைப்படங்கள் வந்தன. அடிக்கடி சினிமா தொடர்பான விழாக்கள் நடைபெற்றன. சினிமா நன்றாக இருந்ததுபோல் தோற்றம் இருந்ததே?
‘‘அடிக்கடி விழா நடந்தால் சினிமா நன்றாக இருந்ததாக அர்த்தமா? இதே மாதிரி சினிமா போகுமேயானால் கடைசியில் ஆறு பேர்தான் படம் எடுப்பார்கள் என்று கடந்த ஆட்சியில் நடிகர்களை எச்சரித்தேன். நடிகர்களுக்கு பெரிய சம்பளம் கொடுப்பார்கள். ஆனால் சில நடிகர்கள் மட்டுமே நிற்க முடியும். புதிய, வளரும் நடிகர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும் என்றேன். அந்த ‘குரூப்’ தொலைக்காட்சி தயாரிக்கிற படங்களின் பிரமோஷன்களுக்காக நடிகர், நடிகைகளை பேட்டி எடுப்பார்கள். அந்த பிரமோஷன் பேட்டிகளில் கூட இடையிடையே விளம்பரங்களைப் போட்டு காசு பார்த்து விடுவார்கள்.
அவர்களது காமெடி சேனல்களில் புதிய படங்களின் காமெடி காட்சிகளை அடிக்கடி போடுவார்கள். இதனால் அந்தக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போய்விடும். ‘காமெடி காட்சிகள் போட்டால் காசு கொடு, பேட்டி எடுத்தால் பணம் கொடு’ என்று கேட்கிறோம். அவர்களின் தயாரிப்புப் படங்களின் விளம்பரங்களை மெயின் சேனலில் பிரைம் டைமில் போட்டுக் கொண்டு மற்றவர்களின் படங்களை சைடு சேனலில் போட்டு விடுவார்கள். .இப்படி எல்லாம் இம்சைகளைக் கொடுத்ததால்தான் கைது என்ற செய்தி கேட்டதுமே பட்டாசு வெடித்தும், ஸ்வீட்ஸ் கொடுத்தும் கொண்டாடுகிறார்கள்.
அப்படியானால் எவ்வளவு பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்? அந்த ‘குரூப்’ சொன்ன நேரத்தில்தான் படம் போட வேண்டும்.அவர்கள் படம் எடுக்கச் சொன்னால் எடுக்க வேண்டும் என்றால் எப்படி? நல்ல வேளை, ஆட்சி மாற்றம் வந்ததால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம்.’’
முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரைப்படத்துறை சார்பில் எப்போது பாராட்டு விழா நடத்தப் போகிறீர்கள்?
‘‘அதுபற்றி முதல்வரிடம் கேட்டோம். ‘எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நீங்கள் உங்கள் சினிமா தொழிலைப் பாருங்கள்’ என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.’’
தி.மு.க. அரசு கொடுத்த பையனூர் நிலத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டீர்களாமே? ‘‘வேண்டாம் என்று சொல்லவில்லை. 99 வருட குத்தகை நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை எங்களுக்கு இலவசமாகக் கொடுங்கள். அந்த இடத்தில் நலிந்த வயதான நடிகர்களுக்கு நாங்களே வீடு கட்டிக் கொடுத்து அவர்களை நாங்களே பராமரித்துக் கொள்கிறோம் என்றுதான் அம்மாவிடம் சொன்னோம். பையனூர் நிலத்தில் யாரும் இன்வெஸ்ட் பண்ண விரும்பவில்லை.’’
ஆனால் அந்த இடத்தில் ஸ்டுடியோ கட்டப் பட்டிருக்கிறதே? ‘‘பெர்மிஷன் வாங்கிக் கட்டப்பட்டிருக்கிறதா என்பது தெரியுமா? நாலாயிரம் சதுர அடிக்கு மேல் கட்டுவது என்றால் காஞ்சிபுரம் போய் அனுமதி வாங்க வேண்டும். ஸ்டு டியோ கட்டியவருக்கு ஃபெப்சியிலிருந்து 55 லட்சம் தரவேண்டும். ஆனால் ஃபெப்சிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள். சையத்கான், சின் கான் ப்ரைவேட் நிறுவனம் மூலம் இதுவரை இரண்டேகால் கோடி செலவு செய்து கட்டி இருக்கிறது என்கிறார்கள். அவசரம் அவசரமாக பெர்மிஷன் வாங்காமல் கட்டப்பட்டிருக்கிறது எ ன்றும் சொல்கிறார்கள்’’ என்று நிதானமாக முடித்தார் ராதாரவி.
போலீஸ் விசாரணையில் கலாநிதி மாறனை போட்டுக் கொடுத்த சக்சேனா.
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சன் பிக்சர்ஸ் தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா, போலீஸ் காவலில் சொன்ன பல உண்மைகள் பலரது தூக்கத்தைக் கெடு த்துவிட்டது. ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ படத்தின் விநியோகஸ்தர் செல்வராஜை ஏமாற்றியது, கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக சன் பிக்சர்ஸ் தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜாமீன் கோரி கடந்த 4-ம் தேதி சக்சேனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சக்சேனாவை நீதிமன்றத்துக்கு போலீஸார் அழைத்து வராததால் அடுத் தநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சக்சேனா ஜாமீன் மனு மீது விசாரணையில் அரசுத் தரப்பில் ஏ.பி.பி. ஜெயந்திஆனந்த் ஆஜராக இருந்தார்.
இவர் சன் டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். சக்சேனாவிற்கு எதிரான வழக்கில் ஆஜரானால் சரியாக இருக்காது என்ற கருத்தை அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் கவனத்திற்கு அ.தி.மு.க.வினர் கொண்டு சென்றனர். இதன் அடிப்படையில் அரசுத் தரப்பில் வேறொரு வழக்கறிஞரை மாற்றம் செய்யவே, கால தாமதம் ஏற்ப ட்டது.
மறுநாள் 5-ம் தேதி காலை 11.20 மணிக்கு சக்சேனாவை சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். சக்சேனாவை அவரது தந்தை கலங்கிய கண்களுடன் பார் த்துப் பேசினார். சன் குழுமத்தின் முக்கிய நபர்கள் எல்லாம் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அவர்களை போலீஸ் போட்டோகிராபர்கள் படம் எடுத்தனர். அவர்களின் பெயர் விவரங்களை நிறுவன ஊழியர்களிடமே போலீஸார் கேட்டு வாங்கினர்.
அரசுத் தரப்பில் வழக்கறிஞர் கோபிநாத் ஆஜராகி சக்சேனாவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டார். இதற்கு, சக்சேனா வழக்கறிஞர் தினகரன் எதிர்ப்புத் தெரிவித்தார். பிற்பகலுக்குப் பிறகு சக்சேனாவுக்கு 2 நாள் போலீஸ் காவல் கொடுக்கப்பட்டது. அவர் கலங்கிப் போனார்.
சக்சேனாவுக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டது. அந்த உணவை காரில் வைத்துச் சாப்பிட விரும்பினார் சக்சேனா. இதற்கு போலீஸார் அனுமதி மறுக்கவே, சாப்பிட மறுத்துவிட்டார்.
அப்போது, சன் நெட்வொர்க் முக்கிய நிர்வாகிகளின் செல்போன்கள் ஒவ்வொன்றாக சிணுங்க ஆரம்பித்தன. ‘‘ ‘எதையும் போலீஸாரிடம் சொல்ல வேண்டாம், தைரியமாக இருக்கவும்’ என்று சொல்லிவிட்டோம்’’ என மற்றொரு முனையில் பேசியவரிடம் அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது, கண்கலங்கிய முகத்துடன் நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்த சக்சேனாவின் மனைவியைப் பார்த்து சன் குழும நிர்வாகி ஒருவர் ‘டென்ஷன்’ ஆனார். ‘‘உங்களையெல்லாம் வரவேண்டாம் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறோம்...’’ என்று மிரட்டலாகப் பேசி, மீடியாவின் கண்களில் படாமல் அவரை காருக்குள் உட் கார வைத்தார்.
இதன்பின்னர், போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு செல்லப்பட்ட சக்சேனாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
முதல் நாள் விசாரணையில் அசோக் நகர் காவல் நிலையம், கோட்டூர்புரம் காவல் நிலையம், தனியார் கெஸ்ட் ஹவுஸில் வைத்து விசாரணை நடத்தினர். முதல் கட்டத் தில் போலீஸார் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மௌனமாக இருப்பதும், ‘ஆமாம், இல்லை, எனக்குத் தெரியாது’ என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்து வந்துள்ளார் சக்சேனா.
பொறுமை இழந்த போலீஸார், தங்கள் ‘ஸ்டைலில்’ கொஞ்சம் கடுமையாக நடந்துகொள்ள... ஓரளவுக்குப் பேச ஆரம்பித்திருக்கிறார் சக்சேனா.
சக்சேனா போலீஸ் விசாரணையில் கொடுத்த வாக்குமூலம் இதுதான்...
‘‘சன் பிக்சர்ஸ் சார்பில் படம் வாங்குவதும், பரிவர்த்தனை செய்வதும் நான்தான். ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ படம் எங்களுக்கு எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்கவில்லை. சன் பிக்சர்ஸ் படம் வெற்றிப் படம் என்று மக்கள் மத்தியில் கருத்து நிலவவேண்டும் என்பதற்காகவே, முக்கிய திரையரங்குகளில் கூட்டம் இல்லாவிட்டாலும் படத்தை ஓட்ட வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தினோம்.
எங்களுக்கு 11 லட்சம் நஷ¢டமாகியுள்ளது. சேலம் விநியோகஸ்தர் செல்வராஜுக்கு குறைவான தொகைதான் தர வேண்டியிருக்கும்’’ என்று மளமளவென்று தகவல்களைக் கொட்டினார்.
போலீஸாரின் பல கேள்விகளுக்கு ‘‘ஐயய்யோ.... கலாநிதி மாறனுக்குத் தெரியாமல் நானாக முடிவெடுக்க மாட்டேன். முக்கிய முடிவுகளெல்லாம் கலாநிதி மாறன்தான் எடு ப்பார்’’ என்று கூறினாராம் சக்சேனா.
போலீஸ் காவலில் எடுத்து சக்சேனாவை விசாரித்துவரும் நிலையில், அவரது இடதுகரமாக செயல்பட்ட தம்பிதுரை மற்றும் ஐயப்பன் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சக்சேனா கைது செய்யப்பட்ட அன்று, செக்கர்ஸ் ஹோட்டல் நிர்வாகிகளை அழைத்து போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். சினிமா தயாரிப்பாளர்கள் உள்பட இவர்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் வாங்கி வருகின்றனர். எனவே, தொடர்ந்து சக்சேனா மீது வழக்குகள் பாயக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தப்போவது யார்? டெல்லியில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, ‘மாறன் வீட்டிலிருந்து அலுவலகம்வரை கேபிள் பதித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதுகுறித்து விசாரித்தபோது, மாநகராட்சி அனுமதி இல்லாமல் சாலைகள் வெட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியாக வழக்குத் தொடர உத்தரவு போடப்பட்டுள்ளதாம். ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. வழக்குத் தொடர உள்ள நிலையில், தமிழக போலீஸும் வழக்குத் தொடர உள்ளது. கைது செய்வதில் யார் முந்தப் போகிறார்கள் என்பதுதான் இப்போதைய பரபரப்பு டாக்.
எப்படி இத்தனை நாட்கள் விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை!? இதோ... இந்திய அரசியலையே ஆட்டிப்படைக்கும் ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ தமிழ்த் திரைப் படமாகவுள்ளது. சௌந்தர்யா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில், ஜான்மனோகர் டைரக்ஷனில் உருவாகும் 2ஜி ஸ்பெக்ட்ரம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் வரும் 10-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
இதுகுறித்து 2ஜி ஸ்பெக்ட்ரம் படத்தின் டைரக்டர் ஜான்மனோகரிடம் பேசினோம்.
‘‘ஆரம்பத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் என்றாலே அது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ. ராசா மட்டும் செய்த ஊழல் என்பதுபோல் ஒரு தோற்றம் உருவாகியது. ஆனால், அதை சி.பி.ஐ. தோண்டத் தோண்ட பல்வேறு அரசியல் பூதங்கள் கிளம்பின. இந்த விவகாரத்தில் ராசாவும், கலைஞரின் மகள் கனிமொழியும் எப்படியெல்லாம் விளையாடினார்கள் என்பதும், இவர்களுக்குள் நீரா ராடியா என்ற பெண் புரோக்கர் நடத்திய டெலிபோன் உரையாடல்களும் ஒட்டு மொத்த இந்தியாவையே சந்தி சிரிக்க வைத்தது.
இவ்வளவு பட்டவர்த்தமான, வெளிப்படையான, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் உலகத்திலேயே இங்குதான் நடந்துள்ளது என்று நினைக்கிறேன். உலகையே அதிர வைத்த ‘இந்த ஊழல் விவகாரத்தை ஏன் திரைப்படமாக எடுக்கக் கூடாது?’ என்று எனக்குள் கேள்வி எழுந்தது.
எனவே, ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ என்ற தலைப்பிலேயே படம் எடுக்க முடிவு செய்தேன். அந்தத் தலைப்பை பதிவு செய்ய முயன்றபோது, சில அரசியல்வாதிகள் தடுக்க முயன் றார்கள். இருந்தாலும் அந்தத் தடைகளை முறியடித்து அந்த டைட்டிலை வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளேன்.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ராஜ்யசபா எம்.பி.யும் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, புரோக்கராக செயல்பட்ட நீரா ராடியா ஆகியோரின் கேரக்டர்களும் திரைக்கதையில் உயிரோட்டமாக வைக்கப்படும். ராசாவின் கேரக்டருக்கு முக்கியமான ஒரு நடிகரை நடிக்கவைக்க முயற்சி செய்து வருகிறோம்.
கனிமொழி, நீரா ராடியா ஆகியோரின் கேரக்டருக்கு சில நடிகைகளை நாங்கள் தேர்வு செய்து அவர்களை அணுகியிருக்கிறோம். ஆனால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிலர் அந்த நடிகைகளை மிரட்டியிருக்கிறார்கள். அதோடு, என்னுடைய மொபைல் போனில் யார், யாரோ தொடர்பு கொண்டு ‘உங்களுக்கு நாங்கள் ஃபைனான்ஸ் செய்கிறோம். உங்களை எங்கு பார்க்கலாம்?’ என்றெல்லாம் மறைமுகமாக என்னைக் கண்காணிப்பதும் நடக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கியதும் ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்ஷா மர்மமான முறையில் இறந்து போனார். அந்த மரணத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளும் படத்தில் முக்கிய காட்சிகளாக இடம்பெறும். அதுமட்டுமல்ல, தத்ரூபமான திஹார் சிறை காட்சிகள், கருணாநிதி, ராஜாத்தியம்மாள் ஆகியோர் கனிமொழியைச் சந்திக்கும் உருக்கமான காட்சிகள் என திரைக்கதையில் பல உயிரோட்டமான பதிவுகள் இடம் பெறப்போகின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலை ஜனநாயக முறையில் நடத்தி ‘ஜனநாயகம் பணநாயகத்துக்கு விலை போகவில்லை’ என்பதை தனது அதிகார பலத்தால் நிரூபித்த தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், ‘மாற்றம் வேண்டும்’ என்ற வார்த்தை புகழ்பெறக் காரணமாக இருந்த மதுரை கலெக்டர் சகாயம் ஆகியோரின் நேர்மையைப் பாராட்டும் விதமாகவும் சில காட்சிகள் இடம் பெறப்போகின்றன. பிரவீன்குமார் கேரக்டருக்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வும் நடிகருமான அருண்பாண்டியனை அணுகியி ருக்கிறோம். சகாயம் கேரக்டருக்கும் ஒரு நடிகர் தயாராக இருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலை ஆரம்பத்திலிருந்தே வெளிச்சம் போட்டுக் காட்டியவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். அது தொடர்பான சில காட்சிகளையும் திரைவடிவில் சேர்க்க இருக்கிறோம். 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருப்பதால் அந்த வழக்குக்குள் நுழையாமல் சினிமா பாணியில் எப்படிச் சொல்ல முடியுமோ அப்படி இந்தப் படத்தில் சொல்லப்போகிறோம். முக்கியமாக 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சில பஞ்ச் டயலாக்குகளும் இடம் பெறும். அது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பேசப்படும்...’’ என்று சொல்லிமுடித்தார் ஜான்மனோகர்.
இப்படத்தின் தயாரிப்பாளர் ஈரோடு ரவிச்சந்திரன், ‘‘மொரீஷியஸ் தீவு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும், மும்பை, டெல்லி போன்ற முக்கிய இடங்களிலும் இந்தப் படத்திற்கான ஷூட்டிங் நடத்த உள்ளோம்...’’ என்றதோடு முடித்துக் கொண்டார்.
விரைவில் கைது செய்யப்படும் நிலையில் தயாநிதி,கலாநிதி. அதிர்ச்சியில் சகோதரர்கள்.
Posted
உடகங்களை தன் கையில் வைத்துக் கொண்டு, உலகமே தன் பக்கம் என்று நினைத்த மாறன் சகோதரர்களின் கனவை ஸ்பெக்ட்ரம் வழக்கு தகர்த்திருக்கிறது. தயாநிதி மாறனோடு, கலாநிதி மாறனும் கைது செய்யப்படுவார் என்கிற செய்திகளால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் சகோதரர்கள். 2ஜி விசாரணையை நேரடியாகக் கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றத்தின் ஏ.கே.கங்குலி, ஜி.எஸ்.சிங்வி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பாக ஸ்பெக்ட்ரம் விசாரணையின் தற்போதைய நிலை குறித்த தன்னுடைய 71 பக்க அறிக்கையை புதனன்று சி.பி.ஐ. தாக்கல் செய்தது. சி.பி.ஐ. சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘தயாநிதி மாறன் மீதான புகார்களை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. ஏர்செல் நிறுவனத்தை விற்கச் சொல்லி சிவசங்கரனை தயாநிதி மாறன் நிர்ப்பந்தித்துள்ளார்’’ என்று சொன்னபோது, அதிர்ந்துதான் போனார் தயாநிதி.
ஆ.ராசா கைதுக்குப் பிறகும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு 2 ஜி வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை என்றே நம்பப்பட்டது. தங்கள் ஊடக பலத்தால் மாறன் சகோதரர்கள் அப்படி நம்ப வைத்தார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். சிவசங்கரனின் வருகைக்குப் பிறகுதான் அலைக்கற்றை வழங்கியதில் தயாநிதி எவ்வளவு ஊழல் செய்திருக்கிறார் என்பது வெளியில் தெரியவந்தது.
‘‘எனக்கு முன்பு இருந்தவர்கள் எடுத்த முடிவுகளைத் தான் நானும் பின்பற்றினேன்’’ என்று ஆ.ராசா அதிரடி வாக்குமூலம் கொடுத்தார். அப்போதும் பாரதிய ஜனதா ஆட் சிக் காலத்தில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்த பிரமோத் மஹாஜனையும், அருண் ஷோரியையும் குறிப்பிடுகிறார் என்றே பத்திரிகைகளும் பொது மக்களும் நினைத்தார்கள். காரணம், ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்திகளை அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்ததே சன் டி.வி.தான்.
பிரஷாந்த் பூஷண் தொடர்ந்த பொதுநல வழக்கில் ‘1999 முதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டது. எக்னாமிக்ஸ் டைம்ஸ், தெகல்ஹா இதழ்கள் தயாநிதி மாறனுக்கு ஊழலில் பெரும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியிட்டன.
இதையடுத்து, சி.பி.ஐ. தரப்பு தயாநிதி மாறனுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்ள தொடர்பு குறித்து விசாரணையை முழுவீச்சில் முடுக்கி விட்டது. முதல் தகவல் அறிக்கைக்கு முந்தைய காலகட்டமான பூர்வாங்க விசாரணையைத் தொடங்கி தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானவையா, அதற்காக ஆதாயம் பெற்றுள்ளாரா என்று விசாரணையின் போக்கை மாற்றியது. இந்த நேரத்தில் சரியாக சிவசங்கரனும் வந்து சேர, மாட்டிக்கொண்டார்கள் சகோதரர்கள்.
2004 மே 23 முதல் 2007 மே 14 வரை தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். அந்த நேரத்தில், சிவசங்கரனுக்குச் சொந்தமான ஏர்செல் நிறுவனம் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கொல்கத்தா, கேரளா, பஞ்சாப், ஹரியானா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்தது.
ஆனால் தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யாமல் தொடர்ந்து தாமதித்துக் கொண்டிருந்தார். மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத் தின் அனந்தகிருஷ்ணனுக்கு, ஏர்செல் நிறுவனத்தை விற்க வேண்டும் என்று சிவசங்கரனுக்கு தொடர்ந்து பிரஷர் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் பணியாற்றிய ப்ரஹலாத் ஷாந்திகிராம் மற்றும் ராகுல் கோஸ்வாமி ஆகிய இருவரும், இது தொடர்பாக சிவசங்கரனுக்கு தொடர்ந்து நெ ருக்கடி கொடுத்து வந்துள்ளார்கள்.
அனந்தகிருஷ்ணனுக்கும் மாறன் சகோதரர்களுக்குமான தொடர்பு 1997 ஜனவரியில் மேக்சிஸ் நிறுவனத்துடன், டி.டி.எச். ஒளிபரப்பு தொடர்பாக ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத் தில் தொடங்குகிறது.
சிவசங்கரனுக்கு மறைமுகமாகக் கொடுக்கப்பட்டு வந்த நெருக்கடி, நவம்பர் 2005-ல் சென்னையில் உள்ள சன் டி.வி. அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலாநிதி மாறன் மூலமாக நேரடியாகவே கொடுக்கப்பட்டது. தயாநிதி மாறனும் இது தொடர்பாக சிவசங்கரனிடம் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளார்.
இந்த தொடர்ந்த நெருக்கடிகளை அடுத்து, சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தில் உள்ள தன் பங்குகளை தயாநிதி மாறனின் சொல்படி, அனந்தகிருஷ்ணனுக்கு விற்கிறார். இது மட்டுமே நடந்திருந்தால், தயாநிதி மாறன் சிக்கியிருக்க மாட்டார். இதற்குப் பிறகு நடந்தவைதான் தயாநிதி மாறனை வசமாகச் சிக்க வைத்திருக்கிறது என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.
பங்கு விற்பனை முடிந்த உடன் அனந்த கிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் சன் குழுமத்தில் முதலீடு செய்யப் போவதாக அறிவிக்கிறது. இதற்கான மத்திய அரசின் அனுமதி மார்ச் 2007-ல் வழங்கப்படுகிறது. அப்போது தயாநிதி மத்திய அமைச்சராக இருக்கிறார். சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ.600 கோடியும், மாறன்களுக்குச் சொந் தமான மற்றொரு நிறுவனமான சவுத் ஏஷியா எஃப்.எம். நிறுவனத்தில் 111 கோடி ரூபாயும் முதலீடு செய்கிறார் அனந்தகிருஷ்ணன். இந்த முதலீடே மாறன் சகோதரர்களை வசமாகச் சிக்க வைத்துள்ளது. அதோடு ஏர்செல் நிறுவனத்துக்கு மேலும் 14 சர்க்கிளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்கிறார் தயாநிதி.
தொலைத்தொடர்புத் துறையில் நேரடி அன்னிய முதலீடு 74 சதவிகிதத்தை தாண்டக் கூடாது என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு வளைந்து கொடுக்கப்பட்டதை தயாநிதி மாறன் கண்டுகொள்ளாமல் இருந்தது அவருக்குத் தெரிந்தே எல்லாம் நடந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம் என்கிறார்கள்.
அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் 74 சதவிகிதத்தை வைத்திருந்தாலும், அப்பல்லோ மருத்துவமனையின் சிந்தியா செக்யூரிட்டீஸ் மூலமாக ஏர்செல் நிறுவனத்தில் 99.3 சதவிகித பங்குகளை அனந்தகிருஷ்ணன் வாங்கினார். இதற்கு ஆதாரமாக, மலேசிய பங்குச் சந்தையில் மார்ச் 2006-ல் அனந்த கிருஷ்ணன் தாக்கல் செய்த காலாண்டு அறிக்கையில் ஏர்செல் நிறுவனத்தில் 99.3 சதவிகித பங்குகளை வைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறார்கள்.
இந்த விதிமீறலை மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருக்கும் போது, அவரது கவனத்துக்கு ஒரு தன்னார்வ அமைப்பு கொண்டு வந்தும், வட இந்திய ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டும், மாறன் அமைதி காத்ததையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கவனமாக விசாரித்து வருகிறார்கள்.
மாறன் குறித்த தங்களது விசாரணையில் முக்கிய கட்டத்தை எட்டிய சி.பி.ஐ., தனது 71 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் கடந்த புதன் அன்று தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், “ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு விற்குமாறு சென்னையைச் சேர்ந்த தொலைத்தொடர்பு மேம்பாட்டாளர் சிவசங்கரன் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் ஒருங்கிணைந்த சேவை உரிமங்கள் கோரி சிவசங்கரன் விண்ணப்பித்தார். ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி அந்த உரிமங்கள் 2 ஆண்டுகள்வரை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.
உரிமங்களைப் பெறுவதற்காக சிவசங்கரன் பல்வேறு வழிகளில் முயன்றார். இறுதியில் மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு பங்குகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. 2006-ம் ஆண்டில் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை சிவசங்கரனிடம் இருந்து பெற்ற மலேசிய நிறுவனத்துக்கு குறிப்பிட்ட உரிமங்களை ஆறே மாதங்களில் வழங்குவதற்கு தயாநிதி மாறன் உதவினார்’’ என்று சி.பி.ஐ. தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த அறிக்கை தயாநிதி மாறனுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சி.பி.ஐ. திரட்டியுள்ளது என்பதையே காட்டுகிறது. சி.பி.ஐ. பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தயாநிதி மாறன் டெல்லியில் செய்த ‘லாபி’ எதுவும் எடுபடவில்லை என்பதையும் காட்டுகிறது.
தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, அத்துறையில் செயலாளராக இருந்த உத்தரப்பிரதேச கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான நிருபேந்திர மிஷ்ரா என்பவரை சி.பி.ஐ. விசாரித்துள்ளது. இவர், சி.பி.ஐ.க்கு அளித்த சாட்சியத்தில், சிவசங்கரன் தனது புகாரில் கூறியவை அனைத்தையும் உறுதி செய்துள் ளதாகத் தெரிகிறது.
மாறன் அமைச்சராக இருந்த போது, தொலைத் தொடர்புத் துறை செயலாளராக இருந்த இவரின் சாட்சியம், மாறனுக்கு பெரும் சிக்கலாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவரைத் தவிரவும், அப்போது, தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றிய மூத்த அதிகாரிகள் பி.கே.மிட்டல் மற்றும் ஆர்.ஜே.எஸ். குஷவாஹா ஆகியோரையும் சி.பி.ஐ. விசாரித்துள்ளது.
ஏற்கெனவே, சிவசங்கரன் புகார் தொடர்பாக லண்டனில் உள்ள வங்கியில் பணியாற்றும் இருவரை, சி.பி.ஐ. விசாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அமைச்சராக இருக்கும் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை மட்டுமல்ல, அவர் தனது பழைய அமைச்சரவை சகாவான ஆ. ராசாவுக்குத் துணையாக போகக் கூடும் என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில். இந்த ஊழல் விவகாரங்களில் கலாநிதிக்கும் தொடர்பு இரு ப்பதால் கலாநிதி மாறனும் கைது செய்யப்படுவார் என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன.
ஆ.ராசா கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவரது கைது பற்றி பத்திரிகைகள் பரபரப்பாக எழுதின. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான ஆவணங்கள் திட்டமிட்டு மீடியாக்களுக்கு கசியவிடப்பட்டது. அவரது கைது பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றான பிறகு, அவர் கைது செய்யப்பட்டு திகார் அனுப்பப்பட்டார். கனிமொழி கைதிலும் இதுவே நடந்தது. இப்போது மாறன் சகோதரர்களின் ஸ்பெக்ட்ரம் தொடர்பு பற்றி கோர்ட்டில் வெளிப்படையாக சொல்லப்பட்டுவிட்டது. இனி இருவ ருக்கும் சம்மன் கொடுப்பது, விசாரணை என்று வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படும். எனவே, விரைவில் அவர்களது கைது இருக்கலாம் எனத் தெரிகிறது.
ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் விசாரணை முழுமையாக முடிக்கப்பட்டு விடும் என்று சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருக்கிறது. இந்நிலையில், வியாழனன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவர் ராஜினாமா செய்தார்.
கடைசியாக அந்தக் குரல், நீதி மன்றத்தில் பதிவாகி தயாநிதி மாற னின் மத்திய அமைச்சர் பதவியை பறித்தேவிட்டது. 2ஜி ஸ்பெக்ட் ரம் பற்றிய சி.பி.ஐ.யின் விசாரணையில்...
ஆ.ராசா, கனிமொழி இருவருடன் இது முடிந்துவிடும்... என்று நினைத்து இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அதிர்ச்சியின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தயாநிதியின் பெயரை சி.பி.ஐ. தனது அறிக்கையில் தாக்கல் செய்ததுமே டெல்லி காங்கிரஸ் பிரமுகர் அடித்த கமென்ட், 'தி.மு.க-வின் கரன்சி ஆக்ஸிஜன் இதன் மூலம் அடைக்கப்பட்டுவிட்டது!’ என்பதுதான். அந்த அளவுக்கு, சென்னையையும் டெல்லியையும் அதிரவைத்துள்ளது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை!
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு, டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னால் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதில் ஆ.ராசா நீங்கலாகக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். யாருக்கும் கிடைக்கவில்லை என்பதால், திகார் சிறையிலேயே இருக்கிறார்கள்.
ஜூன் 3-ம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்கி, ஜூலை 4-ம் தேதி மீண்டும் கோர்ட் நடவடிக்கைகள் தொடங்கியது. கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ-யைப் பார்த்து நீதிபதி சைனி சீறினார் - ''குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும், ஏன் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? தொடர்ந்து அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பது உங்களது விருப்பமா? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தர வேண்டிய ஆவணங்களை இதுவரை ஏன் தரவில்லை? இனியும் தாமதம் செய்தால், சி.பி.ஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டி வரும்!'' என்றதும், சி.பி.ஐ. தரப்பு கொஞ்சம் ஆடிப்போனது.
ஆனால், மறு நாள் உச்ச நீதிமன்றத்தில் சிலிர்த்துக் கிளம்பியது சி.பி.ஐ. ''இந்த வழக்கு, இதுவரை கைதான 14 பேருடன் முடியப்போகும் சமாசாரம் அல்ல. இதோ வருகிறது அடுத்த அஸ்திரம்!'' என்று சி.பி.ஐ. வைத்த வெடிகுண்டுதான்... முதல்கட்டமாக தயாநிதி மாறனின் மந்திரி பதவிக்கு வேட்டுவைத்துள்ளது. ஆ.ராசா, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த விவகாரங்களை மட்டும் அல்ல... அதற்கு முன்னால் தயாநிதி மாறன் பதவியில் இருந்த காலத்தையும் சி.பி.ஐ. தோண்ட ஆரம்பித்து உள்ளது.
தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தநேரத்தில் நடந்ததாக சில விஷயங்களை, மத்திய அரசு அமைத்த ஒரு நபர் கமிஷன் முன்னால் அருண் ஷோரி வரிசையாக எடுத்து வைத்தார். அவர் அளித்த மனுவை அப்படியே சி.பி.ஐ-க்கு, விசாரணை அதிகாரியான நீதிபதி சிவராஜ் பாட்டீல் அனுப்பிவைத்தார். உடனடியாக, சி.பி.ஐ. இதனை விசாரிக்க ஆரம்பித்தது. இதன் மையப் புள்ளியாக 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரனை, சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசியமாக விசாரிக்கத் தொடங்கினார்கள். இதுபற்றி, ஜூன் 8, 15, 16 தேதியிட்ட ஜூ.வி. இதழ்களில் தொடர்ந்து விவரங்கள் வெளியாகின.
இதுதொடர்பான குற்றச்சாட்டை 'பொது நல வழக்கு தொடர்பான சமூக சேவை அமைப்பு’ உச்ச நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்தது. வக்கீல் பிரசாந்த் பூஷண் நடத்தி வரும் அமைப்பு இது.
சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தைக் கையில் எடுக்கும் என்று தெரிந்ததுமே, சிவசங்கரனை அதிகாரபூர்வமாக அழைத்து ஜூன் 6-ம் தேதி வாக்குமூலம் வாங்கியது சி.பி.ஐ. அவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்துதான், கடந்த 6-ம் தேதி சி.பி.ஐ. ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி இருவரும்தான், 2ஜி வழக்கை வைத்துக் கலக்கி வரும் நீதிபதிகள். இவர்களிடம் சி.பி.ஐ. சார்பில் மூடிய கவர் ஒன்றை சி.பி.ஐ. வக்கீல் கே.கே.வேணுகோபால் கொடுத்தார். மொத்தம் 71 பக்கங்களைக்கொண்ட அந்த அறிக்கையின் சாராம்சத்தை வேணுகோபால் சொல்லச் சொல்ல... அதிர்வலைகள் பலமாகின.
இந்த அறிக்கையில் தயாநிதி மாறனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்ததாக சில விஷயங்களை அவர் பெயரைச் சொல்லாமல் குறிப்பிட்டார் வேணுகோபால். ''2004 - 2007 காலகட்டத்தில் ஏர்செல் நிறுவனம் தனது சேவையை விரிவாக்கம் செய்ய முயற்சித்தது. ஆனால், கிடைக்கவில்லை. ஏர்செல் நிறுவனத்திடம் தேவை இல்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. அவசியமற்ற விசாரணைகள் நடத்தப்பட்டன. ஏர்செல்லைப் போலவே வேறு இரண்டு நிறுவனங்களும் இதே போன்று விண்ணப்பம் செய்திருந்தன. அந்த நிறுவனங்களிடம் இது மாதிரியான கெடுபிடிகள் காட்டப்படவில்லை. உடனடியாக அந்த இரண்டு நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கிடைத்தது.
தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தவர் ஏதோ ஒரு நிர்பந்தத்தை ஏர்செல் நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கிறார் என்பது சி.பி.ஐ-யின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் அனந்தகிருஷ்ணன் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளைத் தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளார்கள். சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சிவசங்கரன் தனது கம்பெனிப் பங்குகளை விற்பதைத் தவிர வேறு வழி இல்லை. அதன் பிறகு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கிறது. இந்தப் பரிமாற்றத்தில் என்ன நடந்து இருக்கிறது என்பது குறித்துத்தான் சி.பி.ஐ. இப்போது விசாரித்து வருகிறது. பணப் பரிமாற்றம் குறித்தும் விசாரித்து வருகிறோம்!'' என்று சொன்னார் கே.கே. வேணுகோபால்.
அதாவது, இந்த விவகாரத்தில் இறங்கி சி.பி.ஐ. விசாரிப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதிகளிடம் சொன்னார் வேணுகோபால். சிவசங்கரன் பற்றிக் குறிப்பிடும்போதும், 'திஸ் ஜென்டில்மேன்’ என்று மட்டும் சொன்னார். ''பணப் பரிமாற்றம் குறித்து சி.பி.ஐ. தனது விசாரணைகளை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூரில் இருக்கும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி மூலமாகத்தான் இதற்கான பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன என்று சந்தேகப்படுகிறோம். சிங்கப்பூரில் உள்ள அதன் அதிகாரியை ஜூலை 13-ம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைத்து உள்ளோம். மேக்சிஸ், ஆஸ்ட்ரோ, சன் டைரக்ட் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மத்தியிலும் இந்தக் கால கட்டங்களில் நடந்துள்ள டீலிங்குகளை வைத்து, என்ன நடந்துள்ளது என்பதை முழுமையாக அறிய முடியும். அந்த அதிகாரி எங்கள் முன்பு ஆஜராகி விவரங்களை கூறியபிறகு எங்கள் விசாரணை வேகம் பிடிக்கும்!'' என்று சி.பி.ஐ. வட்டாரத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிந்துவிடும். 2001 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான லைசென்ஸ் முறைகேடுகள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிந்துவிடும்!'' என்று வக்கீல் கே.கே.வேணுகோபால் சொல்லியதை வைத்துப் பார்க்கும்போது, தயாநிதி மாறன் மீது முழுமையான குற்றப் பத்திரிகை செப்டம்பர் மாதத்துக்குள் தாக்கல் ஆகிவிடும் போலிருக்கிறது!'' என்கிறார்கள் டெல்லி நீதித் துறை வட்டாரங்களில்.
''ராசா அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்தவை குறித்து அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்டன. ராசாவின் சொத்துகள் மற்றும் பண முதலீடுகள் குறித்து வெளிநாட்டு வங்கிகளில் தகவல்கள் திரட்டுவது மட்டுமே பாக்கி. அது தொடர்பாக பல குளுகுளு தீவுகளுக்கெல்லாம் கடிதப் பரிமாற்றங்களைத் தொடங்கி உள்ளோம். எங்களில் சில அதிகாரிகளும் நேரடியாகப் போய் அங்குள்ள முதலீடுகள் பற்றி தகவல்கள் சேர்த்துக் கொண்டு வந்துள்ளனர். அந்த வேலைகள் இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் முடியும். தயாநிதி மாறன் தொடர்பான விவரங்களுக்குள் இப்போதுதான் நுழைய ஆரம்பித்துள்ளோம். அதில் மேக்சிஸ் நிறுவனம், சன் டைரக்ட் நிறுவனம் ஆகியவற்றையும் இனி மேல்தான் விசாரிக்க வேண்டி உள்ளது. தயாநிதி மாறனை முதல் கட்டமாக விசாரிப்போம். அவரது ஒத்துழைப்பைப் பொறுத்தே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வோம்!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள்.
சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கை தொடர்பாக எந்தக் கருத்தையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொல்லவில்லை. ''இந்த அறிக்கை பற்றிய விசாரணை வரும் 11-ம் தேதி நடக்கும்!'' என்று மட்டும் கூறினார்கள். இதனால், 11-ம் தேதிக்குள் சி.பி.ஐ. தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ''தயாநிதி மாறனை 11-ம் தேதிக்குள் விசாரிக்க வாய்ப்பு இல்லை. 13-ம் தேதி சிங்கப்பூர் வங்கி அதிகாரிகள் சி.பி.ஐ. முன்னால் ஆஜராக இருக்கிறார்கள். அவர்களது வாக்குமூலங்களையும் வாங்கி வைத்துக்கொண்டுதான், சி.பி.ஐ. தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்கும். அதே சமயம், நீதிபதிகள் 11-ம் தேதி என்ன உத்தரவிடுகிறார்கள் என்பதையும் வைத்தே சி.பி.ஐ. செயல்படும்...'' என்று டெல்லியில் ஒரு தரப்பினர் சொல்ல...
''அதற்கு முன்பேகூட சி.பி.ஐ. தன் செயல்பாட்டை தொடங்கிவிடும். அதைப் புரிந்துகொண்டுதான், பிரதமர் தரப்பிலிருந்து தயாநிதி மாறனின் மந்திரி பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பேசினார்கள். 'ஆ.ராசா விஷயத்தில் நடந்ததுபோல் இதில் அடம் பிடிக்க வேண்டாம். ராஜினாமாவை ஒத்திப் போடுவது காங்கிரஸ் - தி.மு.க. ஆகிய இரு தரப்புகளுக்குமே மேலும் மேலும் சங்கடங்களை ஏற்படுத்தும் என்று எடுத்துச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்தே ராஜினாமா கடிதத்தை தயாநிதி மாறன் ஒப்படைத்தார். மந்திரி பதவியிலிருந்து விலகிய பிறகுதான் ஆ.ராசா தொடர்பாக சி.பி.ஐ-யின் நேரடி நடவடிக்கைகள் தொடங்கின. அதுபோலவே இதிலும் ஆக்ஷன்கள் வேகம் பெறும்'' என்றும் கூறப்படுகிறது.''இந்த நிகழ்வுகள் சூடு பிடித்த சமயத்தில் டெல்லியில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 'பிரதமர் இனியும் சும்மா இருக்கக்கூடாது' என்ற பாணியில் உசுப்பிக் கொண்டே இருந்ததை சுட்டிக் காட்டும் சிலர்,
''மந்திரி பதவியிலிருந்து தயாநிதி மாறன் விலகிய பிறகு தமிழக அரசு தரப்பிலிருந்து சில நடவடிக்கைகளை எடுப்பதே ஜெயலலிதாவின் நோக்கம்!'' என்றும் கூறத் தொடங்கியுள்ளனர்.''தயாநிதி தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் சன் டைரக்ட்டில் முதலீடு செய்யவில்லை. ஆஸ்ட்ரோ நிறுவனம், சன் டைரக்டில் முதலீடு செய்தபோது தயாநிதி அமைச்சராகவே இல்லை. இந்த நிறுவனங்களில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை!'' என்று தயாநிதிமாறன் தரப்பு தனது விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்துள்ளது.
ஜூலை 13க்குப் பிறகு விவகாரம் இன்னும் சூடுபிடிக்கும்!
சென்னை: ஏர்செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரனை சன் டிவி அலுவலகத்திற்கு வரவழைத்து கலாநிதி மாறன் மிரட்டியதாகவும், அங்கிருந்து சிவசங்கரன் சென்ற பின்னர் தொலைபேசி மூலம் தயாநிதி மாறன் மிரட்டியதாகவும் சிவசங்கரன் அளித்துள்ள வாக்குமூலம் தொடர்பான முக்கிய ஆதாரத்தை சிபிஐ திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆதாரம் உண்மையானதாக இருக்கும் பட்சத்தில் இருவர் மீதும் உடனடியாக வழக்கு தொடரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இருவரும் கைது செய்யப்படுவதற்கான சூழல்களும் அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது. இந்த முறை இந்தியாவின் பிரபலமான சகோதரர்களில் ஒருவரான கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகிய இருவரும் கூட்டாக பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர். ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் மூலம் இவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏர்செல் தலைவராக சிவசங்கரன் இருந்தபோது அவர் கோரிய 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வழங்காமல் தாமதம் செய்து வந்தார் தயாநிதி மாறன். மேலும், மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல்லை விற்று விட்டுப் போய் விடுமாறும் தயாநிதி மாறன் மிரட்டினார் என்பது சிவசங்கரனின் முக்கியக் குற்றச்சாட்டு. இதற்காக தன்னை சன் டிவி அலுவலகத்திற்கு வரவழைத்து கலாநிதி மாறன் மிரட்டியதாக சிபிஐயிடம் தெரிவித்துள்ளார் சிவசங்கரன். மேலும், தான் அங்கிருந்து கிளம்பியவுடன் தயாநிதி மாறன் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல்லை விற்று விடுமாறு கூறி அவரும் மிரட்டினார் என்று சிவசங்கரன் சிபிஐயிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் 2005ம் ஆண்டு நடந்ததாக சிவசங்கரன் கூறியுள்ளார். அப்போது தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார் தயாநிதி மாறன். இந்த புகாரை முக்கியமாக பதிவு செய்துள்ள சிபிஐ, இதுதொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இதுதொடர்பாக முக்கிய ஆதாரம் சிபிஐ வசம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த ஆதாரத்தைப் பரிசீலித்து வரும் சிபிஐ, அதில் உண்மை இருப்பது உறுதியானால், கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் மீது வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்யவும் சிபிஐ தயாராகி வருவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் மலேசியாவில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் அதிகாரிகள் சிலருக்கும், ஏர்செல் விற்பனை விவகாரத்தில் தொடர்பு இருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. அதுதொடர்பாகவும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சிபிஐ தனது விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் விரைவில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்த சிபிஐ தயாராகி வருகிறது.
ஸ்பைஸ்ஜெட் பங்குகளை ரூ 800 கோடிக்கு வாங்கியது கலாநிதி மாறனின் கல் ஏர்வேஸ்!
மும்பை: இந்திய மீடியா உலகின் புதிய ஜாம்பவனாகத் திகழும் கலாநிதி மாறன், தனது கல் ஏர்வேஸ் நிறுவனத்தின் சார்பில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 37 சதவீதப் பங்குகளை ரூ 800 கோடிக்கு வாங்கியுள்ளார்.
இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதனை ஸ்பைஸ்ஜெட் புரமோட்டர்களான வில்பர் ரோஸ் மற்றும் புபேந்திர கன்ஸங்கரா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். "மாறனுக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கும் இடையே இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பங்குகள் பரிவர்த்தனை அடுத்த சில மாதங்களுக்குள் முழுமை பெற்று விடும்" என்று புபேந்திர கன்ஸங்கரா தெரிவித்தார். பங்கொன்றுக்கு ரூ 47 வீதம் 37 சதவீத பங்குகளை கல் ஏர்வேஸ் வாங்கியுள்ளது.
பெங்களூர்: பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டது.
ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.4 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்து வெளியிட்டது.
உலகலவில் சுமார் ஆயிரம் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 49 இந்தியர்கள் உள்ளனர். சன் டிவி கலாநிதி மாறன், 342வது இடத்தைப் பெற்று பில்லியனர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நாட்டுக்காரர் ஆகியுள்ளார்.
இந்தியாவில் உள்ள இந்த 49 பில்லியனர்களின் சொத்து மதிப்பையும் போர்ப்ஸ் தனித்தனியே கணக்கிட்டு கூறியுள்ளது.
இதன் அடிப்படையில் இந்த 49 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்களை சேர்த்து மதிப்பிட்டால் 222.1 பில்லியன் அமெரிக்க டாலர் என கணிக்கப்படுகிறது.
அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சத்து 43 ஆயிரத்து 870 கோடி!
இந்திய அரசாங்கத்தின் 2010-11ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியல்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு ரூ.8 லட்சத்து 94 ஆயிரத்து 769 என பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் வரி வருமானத்தை விட, 49 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் அதிகம்.
கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 251.4 பில்லியன் டாலர்.
இந்திய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகையில் சுமார் 88.34 சதவீதம்.
அந்த 49 பெருங்கோடீஸ்வரர்கள்...!
உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் இருப்பவர் முகேஷ் அம்பானி. சொத்து மதிப்பு 2,900 கோடி டாலர்.
அம்பானிக்கு அடுத்தபடியாக உலக வரிசையில் 5ம் இடத்தை பிடித்து இந்தியாவில் இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ஆர்சிலர் மிட்டல் லட்சுமி மிட்டல் (2870 கோடி டாலர்).
இந்தியாவின் 3வது பெரிய பணக்காரர் விப்ரோ அசிம் பிரேம்ஜி (1700 கோடி டாலர்). அம்பானி சகோதரர்களில் ஒருவர் உலக வரிசையில் 4வதும், மற்றொருவர் இந்திய வரிசையில் 4வது இடத்தையும் பிடித்துவிட்டனர்.
1370 கோடி டாலருடன் உலக பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார் அனில் அம்பானி.
இவர்களைத் தொடர்ந்து எஸ்ஸார் குரூப்ஸ் ஷாஷி அண்ட் ரவி ரூஜா சகோதரர்கள், சாவித்திரி ஜிண்டால், டிஎல்எஃப் குஷால் பால் சிங், ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் பிர்லா, பாரதி ஏர்டெல்லின் சுனில் மிட்டல், வேதாந்தா அணில் அகர்வால் உள்ளனர்.
இந்தியாவில் 11வது இடத்தில் கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ்ஜும் அவரைத் தொடர்ந்து, கவுதம் அதானி, சன் பார்மாவின் திலிப் சங்க்வி, எச்சிஎல் ஷிவ் நாடார், ஜிஎம்ஆர் ஜி.எம்.ராவ், ரான்பாக்ஸியின் மால்விந்தர் அண்ட் ஷிவிந்தர் சிங் சகோதரர்கள், கோடக் மஹிந்தரா உதய் கோடக் உள்ளனர்.
தமிழகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் கலாநிதி மாறன்
தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார்.
44 வயதான கலாநிதி மாறனின் சொத்து 2.9 பில்லியன் என ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. அதாவது சுமார் ரூ.13 ஆயிரத்து 630 கோடி.
தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் (ரூ.63,091.74 கோடி) 21.6 சதவீதம் கலாநிதி மாறனின் சொத்து. தமிழக அரசின் கடன் தொகையுடன் ஒப்பிட்டால் (ரூ.74,858 கோடி) 19 சதவீதம்.
மாநிலம் முழுவதும் வீடில்லாதோருக்கு 21 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு செலவழிக்கும் தொகையை விட கூடுதலானது கலாநிதியின் இந்த சொத்து மதிப்பு.
சன் நெட்வொர்க்கின் 77 சதவீத பங்குகளை இவர் தன் வசம் வைத்துள்ளார். சன் டிவி நெட்வொர்க்கின் கீழ் 20 டிவி சேனல்கள், 46 எஃப் எம் ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறார்.
அதோடு சன் டைரக்ட் டிடிஎச் சேவைகளை மலேசிய பெருங்கோடீஸ்வரர் அனந்த கிருஷ்ணனின் அஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து நடத்தி வருகிறார். இதில் 45 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சன் பிக்சர்ஸ் மூலம் மெகா பட்ஜெட் படங்களையும் எடுத்து வருகிறார். இவை அல்லாமல் பல்வேறு தொழிலகங்களில் முதலீடு செய்திருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்துத் துறையில் கால் பதிக்க உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக எஸ்ஸெல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா (ஜீ என்டெர்டெயின்மென்ட்), பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் இந்து ஜெயின், 'லேண்ட்மார்க்' மிக்கி ஜக்தியானி, டோரென்ட் பவர் நிறுவனத்தின் சுதிர் சமீர் மேத்தா சகோதரர்கள் போன்றவர்கள் உள்ளனர்.
பெருகும் பணக்காரர்கள்...
இந்தியாவில் கடந்த பத்தாண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வந்திருப்பதாக பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி நிறுவனம் தெரிவிக்கிறது.
அந்நிறுவனம் நடத்திய ஆய்வில், 2000ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
ஆனால் இந்திய மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தினசரி 50 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.
பணக்காரர்கள் தாங்கள் சிரமப்பட்டு சேர்த்த பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க தயாராக இருப்பதில்லை.
இயற்கை பேரிடர் போன்ற சிக்கலான தருணங்களில் சக மக்களுக்கு உதவுவதில் இந்தியாவில், அரசாங்கங்கள் தான் முன்னணியில் உள்ளன.
இதுபோன்ற சமயங்களில் மத்திய, மாநில அரசுகள் மூலம் 65 சதவீதத்துக்கும் மேல் நிதி திரட்டப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மூலம் எஞ்சிய தொகை திரட்டப்படுகிறது. மிகவும் சொற்ப அளவுக்கே பணக்காரர்கள் மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் தனிப்பட்ட பங்களிப்பு இருப்பதாக பெயின் அண்ட் கோ நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற பேரிடர் நிவாரண நிதிகளில் தனி நபர்கள், கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் 75 சதவீத நிதி திரட்டப்படுகிறது.
துவைக்காத சாக்ஸ் என்று சவுக்கில் எழுதப் பட்ட ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்பவர் கைது செய்யப் பட்டு இன்று சிறையில் உள்ளார்.
எப்படி இருந்த நான்....
சக்சேனா கைது செய்யப் பட்டதை சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். சன் டிவியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களைக் கேட்டால், அத்தனை பேரும் “அவன் வெளியிலேயே வரக் கூடாது சார்” என்கிறார்கள். இத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதிக்க சக்சேனா அப்படி என்னதான் செய்தார் ?
இப்படி ஆயிட்டேனே...
அவரின் நடத்தை அப்படி….. அவர் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல. பேசிய பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சன் டிவி ஊழியர்களானாலும் சரி… சன் பிக்சர்சிடம் திரைப்படத்தை விற்க வரும் தயாரிப்பாளர்களானாலும் சரி… அவ்வளவு மோசமாக தரக்குறைவாக பேசியுள்ளார்.
கலைஞர் டிவி தொடங்கப் பட்ட காலத்தில், ஏறக்குறைய 150க்கும் அதிகமான ஊழியர்கள் கலைஞர் டிவிக்கு சன் டிவியிலிருந்து இடம் பெயர்ந்தனர். அவ்வாறு இடம் பெயர்ந்த ஊழியர்களை அவ்வளவு மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார்.
கேடி சகோதரர்கள் நடத்தும் எந்தத் தொழிலும் அவர்கள் நேர்மையைக் கடைபிடித்ததில்லை என்பது ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ளது. தங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதற்கெடுத்தாலும், அடாவடி செய்தே தொழில் செய்து பழகியுள்ளனர். இதற்கு அடியாளாக இருந்து மாறன்கள் இட்ட காரியத்தை செய்து பழகியவர்தான் இந்த சக்சேனா…
நேற்று வரை சக்சேனா வாழ்ந்த வாழ்க்கை எப்படிப் பட்ட வாழ்க்கை தெரியுமா ?
லா வாட்டரினா பார், காஸ்மாபாலிட்டன் கிளப், கொட்டிவாக்கம் ரிசார்ட் என்று ராஜபோக வாழ்க்கை தான். சென்னை நகரின் விலை உயர்ந்த நட்சத்திர விடுதிகளின் பளபளக்கும் பார்களில் இரவு முழுக்க கண்ணாடிக் குவளைகளில் சரக்கு ஊற்றி அவற்றில் ஐஸ் க்யூபை போடும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர், இன்று புழல் சிறையில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதற்கு அவர் முற்பகல் செய்ததே ஒழிய வேறல்ல…. கைது செய்யப் பட்ட ஞாயிற்றுக் கிழமைக்கு முதல் நாள் இரவு, ஐதராபாத்தில், ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா... அதை சன் டிவியில் ஒளிபரப்பு செய்ய உரிமம் பெற்றிருந்தார்கள். அந்த விழாவில் கலந்து கொண்டு, சினிமா நட்சத்திரங்களோடு, சனிக்கிழமை இரவு முழுக்க சக்சேனா ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம். ஞாயிறு பிற்பகல் சென்னை திரும்பினால் ஆட்டம் கண்டது சக்சேனாவின் 'பாட்டம்'.
இந்த சக்சேனாவின் திமிருக்கு திரைப்படத் துறையில் ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்கிறார்கள். சன் பிக்சர்ஸின் தலைமைச் செயல் அதிகாரி என்ற முறையில் எந்திரன் படத்தின் தயாரிப்பாளர் சாக்ஸ் தான். அந்தப் படத்தின் ஷுட்டிங் நடந்து கொண்டிருந்த போது, அப்படத்தின் இயக்குநர் ஷங்கருக்கு போன் செய்திருக்கிறார் சாக்ஸ். ஷுட்டிங் வேலையில் பிசியாக இருந்ததால் ஷங்கரால் அந்த அழைப்பை உடனடியாக அட்டென்ட் செய்ய முடியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த சாக்ஸ், மூன்று நாள் ஷுட்டிங்கை கேன்சல் செய்ததாக கூறுகிறார்கள். யோசித்துப் பாருங்கள். சூப்பர் ஸ்டார் படத்துக்கே இந்த கதி என்றால் சாக்ஸின் செல்வாக்கை.
இது போன்ற மற்றொரு நிகழ்வு தான், செக்கர்ஸ் ஹோட்டல் மீது நடத்தப் பட்ட தாக்குதல். ஒரு பெண்ணோடு ஏற்பட்ட வாய்த் தகராறு காரணமாக, ஒரு ரவுடிக் கும்பலை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலை அடித்து நொறுக்கும் அளவுக்கு சாக்ஸுக்கு செல்வாக்கு இருந்தது. இன்று உளவுத்துறையில் கூடுதல் டிஜிபியாக இருக்கும் கண்ணாயிரம் அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர்.
நேர்மையாக இருந்தால் கண்ணாயிரம் என்ன செய்திருக்க வேண்டும் ? சக்சேனாவை கைது செய்திருக்க வேண்டுமா இல்லையா ? கைது செய்யப் பட்ட பிறகு குண்டர் சட்டத்தில் அல்லவா அடைக்கப் பட்டிருக்க வேண்டும் ?
எம் மீனவன் தாக்கப் பட்டால், சிங்கள மாணவன் நடமாட முடியாது என்று மேடையில் பேசிய ஒரு பேச்சுக்காகத் தானே சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது ? சீமான் மீது வழக்கு பதிந்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது இதே கண்ணாயிரம் தானே ? செக்கர்ஸ் ஹோட்டலை அடித்து நொறுக்கிய ரவுடிக்கு பாதுகாப்பு அளித்து விட்டு, மேடையில் பேசியவரை சிறையில் தள்ளியவர்தானே இந்தக் கண்ணாயிரம் ?
இன்று கைது செய்யப் பட்டுள்ள இந்த சக்சேனாவை அன்றே கைது செய்திருக்க வேண்டாமா இந்தக் கண்ணாயிரம் ? இப்படி கடமை தவறிய கண்ணாயிரம், இன்றும் அதிகாரம் உள்ள பதவியில் அமர்ந்து கொண்டிருப்பது வேதனையான விஷயமே…
இத்தனை அயோக்கியத்தனங்களையும் அரங்கேற்றியுள்ள சக்சேனா என்பவர் யார் ? பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருப்பவரா ? திமுக மாவட்டச் செயலாளரா ? மந்திரியாக இருந்தவரா ? கருணாநிதியின் பெரிய்ய்ய்ய குடும்பத்தில் ஒருவரா ?
இது போல அடாவடி செய்யும் துணிச்சலை சாக்சுக்கு அளித்தது கலாநிதி என்ற ஷு அல்லவா ? அந்த ஷு கொடுத்த துணிச்சலில் தானே, இந்த துவைக்காத சாக்ஸ் இந்த ஆட்டம் போட்டது ?
ஆ.ராசா, கனிமொழி இருவருடன் இது முடிந்துவிடும்... என்று நினைத்து இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அதிர்ச்சியின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தயாநிதியின் பெயரை சி.பி.ஐ. தனது அறிக்கையில் தாக்கல் செய்ததுமே டெல்லி காங்கிரஸ் பிரமுகர் அடித்த கமென்ட், 'தி.மு.க-வின் கரன்சி ஆக்ஸிஜன் இதன் மூலம் அடைக்கப்பட்டுவிட்டது!’ என்பதுதான். அந்த அளவுக்கு, சென்னையையும் டெல்லியையும் அதிரவைத்துள்ளது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை!
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு, டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னால் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதில் ஆ.ராசா நீங்கலாகக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். யாருக்கும் கிடைக்கவில்லை என்பதால், திகார் சிறையிலேயே இருக்கிறார்கள்.
ஜூன் 3-ம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்கி, ஜூலை 4-ம் தேதி மீண்டும் கோர்ட் நடவடிக்கைகள் தொடங்கியது. கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ-யைப் பார்த்து நீதிபதி சைனி சீறினார் - ''குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும், ஏன் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? தொடர்ந்து அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பது உங்களது விருப்பமா? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தர வேண்டிய ஆவணங்களை இதுவரை ஏன் தரவில்லை? இனியும் தாமதம் செய்தால், சி.பி.ஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டி வரும்!'' என்றதும், சி.பி.ஐ. தரப்பு கொஞ்சம் ஆடிப்போனது.
ஆனால், மறு நாள் உச்ச நீதிமன்றத்தில் சிலிர்த்துக் கிளம்பியது சி.பி.ஐ. ''இந்த வழக்கு, இதுவரை கைதான 14 பேருடன் முடியப்போகும் சமாசாரம் அல்ல. இதோ வருகிறது அடுத்த அஸ்திரம்!'' என்று சி.பி.ஐ. வைத்த வெடிகுண்டுதான்... முதல்கட்டமாக தயாநிதி மாறனின் மந்திரி பதவிக்கு வேட்டுவைத்துள்ளது. ஆ.ராசா, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த விவகாரங்களை மட்டும் அல்ல... அதற்கு முன்னால் தயாநிதி மாறன் பதவியில் இருந்த காலத்தையும் சி.பி.ஐ. தோண்ட ஆரம்பித்து உள்ளது.
தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தநேரத்தில் நடந்ததாக சில விஷயங்களை, மத்திய அரசு அமைத்த ஒரு நபர் கமிஷன் முன்னால் அருண் ஷோரி வரிசையாக எடுத்து வைத்தார். அவர் அளித்த மனுவை அப்படியே சி.பி.ஐ-க்கு, விசாரணை அதிகாரியான நீதிபதி சிவராஜ் பாட்டீல் அனுப்பிவைத்தார். உடனடியாக, சி.பி.ஐ. இதனை விசாரிக்க ஆரம்பித்தது. இதன் மையப் புள்ளியாக 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரனை, சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசியமாக விசாரிக்கத் தொடங்கினார்கள். இதுபற்றி, ஜூன் 8, 15, 16 தேதியிட்ட ஜூ.வி. இதழ்களில் தொடர்ந்து விவரங்கள் வெளியாகின.
இதுதொடர்பான குற்றச்சாட்டை 'பொது நல வழக்கு தொடர்பான சமூக சேவை அமைப்பு’ உச்ச நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்தது. வக்கீல் பிரசாந்த் பூஷண் நடத்தி வரும் அமைப்பு இது.
சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தைக் கையில் எடுக்கும் என்று தெரிந்ததுமே, சிவசங்கரனை அதிகாரபூர்வமாக அழைத்து ஜூன் 6-ம் தேதி வாக்குமூலம் வாங்கியது சி.பி.ஐ. அவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்துதான், கடந்த 6-ம் தேதி சி.பி.ஐ. ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி இருவரும்தான், 2ஜி வழக்கை வைத்துக் கலக்கி வரும் நீதிபதிகள். இவர்களிடம் சி.பி.ஐ. சார்பில் மூடிய கவர் ஒன்றை சி.பி.ஐ. வக்கீல் கே.கே.வேணுகோபால் கொடுத்தார். மொத்தம் 71 பக்கங்களைக்கொண்ட அந்த அறிக்கையின் சாராம்சத்தை வேணுகோபால் சொல்லச் சொல்ல... அதிர்வலைகள் பலமாகின.
இந்த அறிக்கையில் தயாநிதி மாறனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்ததாக சில விஷயங்களை அவர் பெயரைச் சொல்லாமல் குறிப்பிட்டார் வேணுகோபால். ''2004 - 2007 காலகட்டத்தில் ஏர்செல் நிறுவனம் தனது சேவையை விரிவாக்கம் செய்ய முயற்சித்தது. ஆனால், கிடைக்கவில்லை. ஏர்செல் நிறுவனத்திடம் தேவை இல்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. அவசியமற்ற விசாரணைகள் நடத்தப்பட்டன. ஏர்செல்லைப் போலவே வேறு இரண்டு நிறுவனங்களும் இதே போன்று விண்ணப்பம் செய்திருந்தன. அந்த நிறுவனங்களிடம் இது மாதிரியான கெடுபிடிகள் காட்டப்படவில்லை. உடனடியாக அந்த இரண்டு நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கிடைத்தது.
தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தவர் ஏதோ ஒரு நிர்பந்தத்தை ஏர்செல் நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கிறார் என்பது சி.பி.ஐ-யின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் அனந்தகிருஷ்ணன் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளைத் தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளார்கள். சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சிவசங்கரன் தனது கம்பெனிப் பங்குகளை விற்பதைத் தவிர வேறு வழி இல்லை. அதன் பிறகு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கிறது. இந்தப் பரிமாற்றத்தில் என்ன நடந்து இருக்கிறது என்பது குறித்துத்தான் சி.பி.ஐ. இப்போது விசாரித்து வருகிறது. பணப் பரிமாற்றம் குறித்தும் விசாரித்து வருகிறோம்!'' என்று சொன்னார் கே.கே. வேணுகோபால்.
அதாவது, இந்த விவகாரத்தில் இறங்கி சி.பி.ஐ. விசாரிப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதிகளிடம் சொன்னார் வேணுகோபால். சிவசங்கரன் பற்றிக் குறிப்பிடும்போதும், 'திஸ் ஜென்டில்மேன்’ என்று மட்டும் சொன்னார். ''பணப் பரிமாற்றம் குறித்து சி.பி.ஐ. தனது விசாரணைகளை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூரில் இருக்கும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி மூலமாகத்தான் இதற்கான பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன என்று சந்தேகப்படுகிறோம். சிங்கப்பூரில் உள்ள அதன் அதிகாரியை ஜூலை 13-ம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைத்து உள்ளோம். மேக்சிஸ், ஆஸ்ட்ரோ, சன் டைரக்ட் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மத்தியிலும் இந்தக் கால கட்டங்களில் நடந்துள்ள டீலிங்குகளை வைத்து, என்ன நடந்துள்ளது என்பதை முழுமையாக அறிய முடியும். அந்த அதிகாரி எங்கள் முன்பு ஆஜராகி விவரங்களை கூறியபிறகு எங்கள் விசாரணை வேகம் பிடிக்கும்!'' என்று சி.பி.ஐ. வட்டாரத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிந்துவிடும். 2001 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான லைசென்ஸ் முறைகேடுகள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிந்துவிடும்!'' என்று வக்கீல் கே.கே.வேணுகோபால் சொல்லியதை வைத்துப் பார்க்கும்போது, தயாநிதி மாறன் மீது முழுமையான குற்றப் பத்திரிகை செப்டம்பர் மாதத்துக்குள் தாக்கல் ஆகிவிடும் போலிருக்கிறது!'' என்கிறார்கள் டெல்லி நீதித் துறை வட்டாரங்களில்.
''ராசா அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்தவை குறித்து அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்டன. ராசாவின் சொத்துகள் மற்றும் பண முதலீடுகள் குறித்து வெளிநாட்டு வங்கிகளில் தகவல்கள் திரட்டுவது மட்டுமே பாக்கி. அது தொடர்பாக பல குளுகுளு தீவுகளுக்கெல்லாம் கடிதப் பரிமாற்றங்களைத் தொடங்கி உள்ளோம். எங்களில் சில அதிகாரிகளும் நேரடியாகப் போய் அங்குள்ள முதலீடுகள் பற்றி தகவல்கள் சேர்த்துக் கொண்டு வந்துள்ளனர். அந்த வேலைகள் இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் முடியும். தயாநிதி மாறன் தொடர்பான விவரங்களுக்குள் இப்போதுதான் நுழைய ஆரம்பித்துள்ளோம். அதில் மேக்சிஸ் நிறுவனம், சன் டைரக்ட் நிறுவனம் ஆகியவற்றையும் இனி மேல்தான் விசாரிக்க வேண்டி உள்ளது. தயாநிதி மாறனை முதல் கட்டமாக விசாரிப்போம். அவரது ஒத்துழைப்பைப் பொறுத்தே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வோம்!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள்.
சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கை தொடர்பாக எந்தக் கருத்தையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொல்லவில்லை. ''இந்த அறிக்கை பற்றிய விசாரணை வரும் 11-ம் தேதி நடக்கும்!'' என்று மட்டும் கூறினார்கள். இதனால், 11-ம் தேதிக்குள் சி.பி.ஐ. தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ''தயாநிதி மாறனை 11-ம் தேதிக்குள் விசாரிக்க வாய்ப்பு இல்லை. 13-ம் தேதி சிங்கப்பூர் வங்கி அதிகாரிகள் சி.பி.ஐ. முன்னால் ஆஜராக இருக்கிறார்கள். அவர்களது வாக்குமூலங்களையும் வாங்கி வைத்துக்கொண்டுதான், சி.பி.ஐ. தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்கும். அதே சமயம், நீதிபதிகள் 11-ம் தேதி என்ன உத்தரவிடுகிறார்கள் என்பதையும் வைத்தே சி.பி.ஐ. செயல்படும்...'' என்று டெல்லியில் ஒரு தரப்பினர் சொல்ல...
''அதற்கு முன்பேகூட சி.பி.ஐ. தன் செயல்பாட்டை தொடங்கிவிடும். அதைப் புரிந்துகொண்டுதான், பிரதமர் தரப்பிலிருந்து தயாநிதி மாறனின் மந்திரி பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பேசினார்கள். 'ஆ.ராசா விஷயத்தில் நடந்ததுபோல் இதில் அடம் பிடிக்க வேண்டாம். ராஜினாமாவை ஒத்திப் போடுவது காங்கிரஸ் - தி.மு.க. ஆகிய இரு தரப்புகளுக்குமே மேலும் மேலும் சங்கடங்களை ஏற்படுத்தும் என்று எடுத்துச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்தே ராஜினாமா கடிதத்தை தயாநிதி மாறன் ஒப்படைத்தார். மந்திரி பதவியிலிருந்து விலகிய பிறகுதான் ஆ.ராசா தொடர்பாக சி.பி.ஐ-யின் நேரடி நடவடிக்கைகள் தொடங்கின. அதுபோலவே இதிலும் ஆக்ஷன்கள் வேகம் பெறும்'' என்றும் கூறப்படுகிறது.''இந்த நிகழ்வுகள் சூடு பிடித்த சமயத்தில் டெல்லியில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 'பிரதமர் இனியும் சும்மா இருக்கக்கூடாது' என்ற பாணியில் உசுப்பிக் கொண்டே இருந்ததை சுட்டிக் காட்டும் சிலர்,
''மந்திரி பதவியிலிருந்து தயாநிதி மாறன் விலகிய பிறகு தமிழக அரசு தரப்பிலிருந்து சில நடவடிக்கைகளை எடுப்பதே ஜெயலலிதாவின் நோக்கம்!'' என்றும் கூறத் தொடங்கியுள்ளனர்.''தயாநிதி தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் சன் டைரக்ட்டில் முதலீடு செய்யவில்லை. ஆஸ்ட்ரோ நிறுவனம், சன் டைரக்டில் முதலீடு செய்தபோது தயாநிதி அமைச்சராகவே இல்லை. இந்த நிறுவனங்களில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை!'' என்று தயாநிதிமாறன் தரப்பு தனது விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்துள்ளது.
ஜூலை 13க்குப் பிறகு விவகாரம் இன்னும் சூடுபிடிக்கும்!
சென்னை திரும்பினார் தயாநிதி மாறன்- கருணாநிதி வீட்டுக்குள் புறவாசல் வழியாக சென்றார்
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறன் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. அதேபோல திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு வந்தபோதும் அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. மாறாக கருணாநிதி வீட்டின் பின்வாசல் வழியாக உள்ளே சென்றார்.
2ஜி ஊழலில் சிக்கிய தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நேற்று அவர் சென்னை திரும்பினார். நேற்று இரவு அவர் சென்னை வந்து சேர்ந்தார். இதையடுத்து விமான நிலையத்தில் பெரும் திரளான பத்திரிக்கையாளர்கள், டிவி கேமராமேன்கள் உள்ளிட்டோர் குழுமியிருந்தனர்.
ஆனால் அந்த வழியாக தயாநிதி மாறன் வரவில்லை. மாறாக விமானம் ஏற வருவோர் நுழையும் பகுதி வழியாக வெளியேறினார். இதைப் பார்த்த செய்தியாளர்கள் அங்கு ஓடினர். ஆனால் தயாநிதி மாறனுடன் திரளாக வந்திருந்த தனியார் பாதுகாப்புப் படையினர், செய்தியாளர்களையும், கேமராமேன்களையும் பிடித்துத் தள்ளி விட்டு தயாநிதி மாறனை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
இதனால் செய்தியாளர்கள் கடும் கோபமடைந்தனர். அந்த இடத்தில் இருந்த விமான நிலைய காவல் நிலைய இன்ஸ்பெக்டரை அணுகி, விமான நிலையத்திற்குள் எப்படி தனியார் பாதுகாவலர்களை அனுமதிக்கலாம் என்று முறையிட்டனர். ஆனால் அவராலோ பதில் சொல்ல முடியவில்லை.
இந்த நிலையில், இரவு எட்டரை மணியளவில் கோபாலபுரம் வந்தார் தயாநிதி மாறன். அங்கும் செய்தியாளர்கள் பெருமளவில் கூடியிருந்தனர். இதைப் பார்த்த தயாநிதி மாறன், முன் வாசல் வழியாக செல்லாமல் புற வாசல் வழியாக கருணாநிதி வீட்டுக்குள் நுழைந்தார். அதேபோல கிளம்பும்போதும் அதே போலவே சென்றார்.
மொத்தத்தில் செய்தியாளர்களை சந்திப்பதை முற்றிலும் தவிர்த்தார் தயாநிதி மாறன்.
எந்திரனால் பெரும் நஷ்டம்- சன் பிக்சர்ஸ் மீது குவியும் புகார்கள்!
மிகப் பெரிய வசூலை எட்டியதாக கூறப்பட்ட எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறத் தொடங்கியுள்ளது திரையுலகினரை மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்க உருவாகிய படம் எந்திரன். முதலில் இப்படத்தைத் தயாரிப்பதாக இருந்தது ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம்தான். ஆனால் திடீரென படத்தை சன் டிவி பக்கம் கொண்டு போனார் ஷங்கர். ஐங்கரன் பட நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் ஒத்துப் போகவில்லை என்று அப்போது பேசப்பட்டது.
சன் டிவி பக்கம் எந்திரன் வந்ததும் மிகப் பெரிய பொருட் செலவில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பணத்தை வாரியிறைத்து படத்தை உருவாக்கி வெளியிட்டனர்.
இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இப்படம் வசூலை வாரிக் கொட்டியதாக கூறப்பட்டது. சன் டிவியிலும் படத்திற்கு மிகப் பெரிய பில்ட்டப் கொடுத்து விளம்பரப்படுத்தி வந்தனர்.
இப்படத்தால் அனைத்துத் தரப்பினரும் மிககப் பெரிய பலனையும், லாபத்தையும் அடைந்ததாகவும், தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு வசூல் வந்ததே இல்லை என்றும் கூறி வந்தனர்.
ஆனால் இப்போது எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கூறத் தொடங்கியுள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த 6 தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் படத்தால் ரூ. 1.55 கோடி அளவுக்கு தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி புகார் கொடுத்துள்ளனர். புகாரில், சன் பிக்சர்ஸ் தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளனர்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த ஏடிஎஸ்சி திரையரங்கம், திருப்பூரைச் சேர்ந்த கே.எஸ். மற்றும் கஜலட்சுமி திரையரங்குகள், ராமநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ் தியேட்டர், ராஜபாளையம் ஆனந்த், பழனி சினிவள்ளுவர் ஆகிய திரையரங்குகளின் உரிமையாளர்கள் தனித்தனியே புகாரை அளித்துள்ளனர்.
அதில்,
எந்திரன் திரைப்படத்தை சதவீத அடிப்படையில் ஒப்பந்தம் செய்து பணத்தை டெபாசிட் செய்து படத்தை பெற்று எங்களது தியேட்டர்களில் வெளியிட்டோம். இந்த படத்தின் மூலம் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை கழித்துக் கொண்டு டெபாசிட் பணத்தில் பாக்கியை தர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகினோம்.
ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பல முறை கேட்டும் முறையான பதிலையும் சொல்லவில்லை. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் கேட்டபோது இதோ தருகிறோம், அதோ தருகிறோம் என கூறி வேண்டுமென்றே அலைக்கழித்து வந்தனர்.
இதனால் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் நாங்கள் தனிப்பட்ட முறையில் புகார் தெரிவித்துள்ளோம். எங்களுக்கு தர வேண்டிய 1கோடியே 55 லட்சத்து 16,431 ரூபாயை பெற்றுத்தர வேண்டும் என கோருகிறோம்.
சன் டிவி அலுவலகத்திற்கு அழைத்து சிவசங்கரனை மிரட்டினார் கலாநிதி- ஆதாரம் திரட்டும் சிபிஐ
சென்னை: ஏர்செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரனை சன் டிவி அலுவலகத்திற்கு வரவழைத்து கலாநிதி மாறன் மிரட்டியதாகவும், அங்கிருந்து சிவசங்கரன் சென்ற பின்னர் தொலைபேசி மூலம் தயாநிதி மாறன் மிரட்டியதாகவும் சிவசங்கரன் அளித்துள்ள வாக்குமூலம் தொடர்பான முக்கிய ஆதாரத்தை சிபிஐ திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆதாரம் உண்மையானதாக இருக்கும் பட்சத்தில் இருவர் மீதும் உடனடியாக வழக்கு தொடரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இருவரும் கைது செய்யப்படுவதற்கான சூழல்களும் அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது. இந்த முறை இந்தியாவின் பிரபலமான சகோதரர்களில் ஒருவரான கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகிய இருவரும் கூட்டாக பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர்.
ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் மூலம் இவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏர்செல் தலைவராக சிவசங்கரன் இருந்தபோது அவர் கோரிய 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வழங்காமல் தாமதம் செய்து வந்தார் தயாநிதி மாறன். மேலும், மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல்லை விற்று விட்டுப் போய் விடுமாறும் தயாநிதி மாறன் மிரட்டினார் என்பது சிவசங்கரனின் முக்கியக் குற்றச்சாட்டு.
இதற்காக தன்னை சன் டிவி அலுவலகத்திற்கு வரவழைத்து கலாநிதி மாறன் மிரட்டியதாக சிபிஐயிடம் தெரிவித்துள்ளார் சிவசங்கரன். மேலும், தான் அங்கிருந்து கிளம்பியவுடன் தயாநிதி மாறன் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல்லை விற்று விடுமாறு கூறி அவரும் மிரட்டினார் என்று சிவசங்கரன் சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் 2005ம் ஆண்டு நடந்ததாக சிவசங்கரன் கூறியுள்ளார். அப்போது தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார் தயாநிதி மாறன்.
இந்த புகாரை முக்கியமாக பதிவு செய்துள்ள சிபிஐ, இதுதொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இதுதொடர்பாக முக்கிய ஆதாரம் சிபிஐ வசம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த ஆதாரத்தைப் பரிசீலித்து வரும் சிபிஐ, அதில் உண்மை இருப்பது உறுதியானால், கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் மீது வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்யவும் சிபிஐ தயாராகி வருவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த நிலையில் மலேசியாவில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் அதிகாரிகள் சிலருக்கும், ஏர்செல் விற்பனை விவகாரத்தில் தொடர்பு இருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. அதுதொடர்பாகவும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சிபிஐ தனது விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் விரைவில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்த சிபிஐ தயாராகி வருகிறது.
தயாநிதி அமைச்சராக இருக்கும் வரை லைசென்ஸ் கிடைக்காது எனத் தெரிந்ததால்
09-07-2011
கடைசியாக அந்தக் குரல், நீதி மன்றத்தில் பதிவாகி தயாநிதி மாற னின் மத்திய அமைச்சர் பதவியை பறித்தேவிட்டது. 2ஜி ஸ்பெக்ட் ரம் பற்றிய சி.பி.ஐ.யின் விசாரணையில் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தில் அழுத்தமாகப் பதிவு செய்தார் சி.பி.ஐ. சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால்.
ஏர்செல் கம்பெனியை மலேசிய டெலிகாம் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வலியுறுத்தியதில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சருக்கு (தயா நிதிமாறன்) தொடர்பிருக்கிறது என்பதற்கு முகாந்திர மான விஷயங்கள் கிடைத்துள்ளன என்பதுதான் மூத்த வழக்கறிஞரின் முக்கியமான பதிவாகும். டெல்லியில் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டெக்சிங் அலுவாலியாவை ஜெ சந்தித்த ஜூலை 6-ந் தேதியன்று, நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இப்படிப் பதிவு செய்ததையடுத்து, தயாநிதிமாறனை பிரதமர் பதவிநீக்கம் செய்யவேண்டும் என வலியுறுத்தினார் ஜெயலலிதா. தயாநிதி மீதான நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே டெல்லி வட்டாரத்தில் கடும் விவாதங்கள் நடந்துவரும் நிலையில், சி.பி.ஐ.யின் இந்த வாதம், தயாநிதியின் பதவியையே பறித்துவிட்டது.
இதற்குக் காரணம், தொழிலதிபர் சிவசங்கரன் அளித்த வாக்குமூலம்தான். உரிய ஆவணங்களுடன் சுமார் 1000 பக்கம் அளவுக்கு தன்னுடைய வாக்குமூலத்தைக் கொடுத்திருக்கிறார் சிவசங்கரன். அதிலுள்ள முக்கிய அம் சங்கள் குறித்து, சி.பி.ஐ. தரப்பிடமிருந்து மிகுந்த சிரமத்திற் கிடையே நாம் சேகரித்தவற்றை அப்படியே தருகிறோம்.
தனது வாக்குமூலத்தில் சிவசங்கரன் சொல்லியிருப் பது அவரது குரலிலேயே இங்கே பதிவு செய்யப்படுகிறது.
"சென்னையில் ஆர்.பி.ஜி. செல்லுலார் நிறுவனம் லைசென்ஸ் வாங்கி தன்னுடைய சேவையை மேற்கொண்டு வந்தது. சென்னையைத் தவிர்த்து, தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்போன் சேவையை என்னுடைய கம்பெனி தந்தது. ஒரு கம்பெனிக்கு அதன் முன்னேற்றம் தான் முக்கியம். அதனால், 2003-ல் ஆர்.பி.ஜி. நிறுவனம் விலைக்கு வந்தபோது அதனை வாங்கி, ஏர்செல் என பெயர் மாற்றி , மற்ற மாநிலங்களிலும் அதன் சேவையை விரிவாக்குவதற்காக 12 லைசென்ஸ்கள் கேட்டு அப்ளை செய்திருந்தேன். லைசென்ஸ் வழங்குவது குறித்த ஆலோசனைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் பொறுப்பேற்றார்.
என்னுடைய கம்பெனியைத் தவிர்த்துவிட்டு, மற்ற 2 கம்பெனிகளுக்கு லைசென்ஸ் க்ளியர் செய்யப்பட்டது. டெலிகம்யூனிகேஷன் துறையில் இருந்த அனைத்து அதிகாரிகளும் என் கம்பெனியின் பேப்பர்கள் சரியாக இருக்கிறது என்று க்ளியர் செய்த போதும், அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், லைசென்சுக்கு சம் பந்தமேயில்லாத பல கேள்விகளைக் கேட்டு லேட் பண்ணினார். இந்த நேரத்தில் கலாநிதியும் தயாநிதியும் சேர்ந்து கடும் நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். "கம்பெனியை விற்று விடு, இல்லைன்னா லைசென்ஸ் கிடையாது' என்று மிரட்டினார்கள்.
தயாநிதி அமைச்சராக இருக்கும் வரை லைசென்ஸ் கிடைக்காது எனத் தெரிந்ததால், என் கம்பெனியின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திப்பதைத் தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை. மனசே இல்லாமல், இவர்களின் மிரட்டலுக்குப் பயந்து கம்பெனியை விற்பதற்கு ஒத்துக்கிட்டேன். கம்பெனி விற்பனை தொடர்பாக மலேசியாவில் நான், அந்நாட்டில் உள்ள மேக்ஸிஸ் நிறுவனத்தின் ஓனர் அனந்தகிருஷ்ணன், சன் டி.வி. கலா நிதி மாறன், அப்பல்லோ ஹாஸ்பிடல் சேர்மன் பிரதாப் ரெட்டியின் மகள் சுனிதா ரெட்டி ஆகியோர் டிஸ்கஸ் செய்தோம். ஏர்செல் கம்பெனியின் அப்போதைய மதிப்பு 7000 கோடி ரூபாய். அதனை மேக்ஸிஸ் கம்பெனி யிடம் விற்க ஒப்புக்கொண்டேன். வெளிநாட்டுக் கம்பெனி என்பதால் 100% ஷேரையும் அப்படியே வாங்க முடியாது. அதனால் எஃப்.டி.ஐ. (அந்நிய நேரடி முதலீடு) விதிகளின்படி 74% பங்குகளை மேக் ஸிஸ் நிறுவனம் வாங் கியது. மீதமுள்ள 26% பங்குகளையும் வாங்குவதற்காக சுனிதா ரெட்டியின் டெக்கான் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் லிமிடெட் என்ற கம்பெனி பெயரில், அந்தப் பங்குகளை வாங்கிக்கொண்டார்கள். சன் டி.வி. நெட்வொர்க்கின் நேரடி கம்பெனி என்றால் வெளியே தெரிந்துவிடும் என்றுதான் இந்த ஏற்பாடு.
இதையடுத்து, எஃப்.டி.ஐ. விதிகளில் zero coupon redeamable preferercial share என்ற முறை இருந்தது. இந்தமுறையின்படி வழக்கறிஞரின் ஒப்பீனியனையும் சீக்ரெட்டாக வாங்கினார்கள். இதன்பிறகு, மொரீஷியஸ் தீவிலிருந்து 900 கோடி ரூபாய் பணம், சுனிதா ரெட்டியின் கம்பெனிக்கு முதலீடாக வந்தது. வெறும் 34 கோடி ரூபாய் மட்டுமே ஷேராகக் கொண்ட சுனிதா ரெட்டி நிறுவனத் திற்கு முதலீடாக 900 கோடி ரூபாய் வந்தது எப்படி?
இந்த பணப்பரிவர்த்தனை நடந்த 90-வது நாளில் ஏர்செல் நிறுவனத்திற்கான லைசென்ஸ் க்ளியரானது. இதே லைசென்சுக்காக என்னை ஒன்றரை வருடம் இழுத் தடித்தவர்கள்தான், நிறுவனம் கைமாறியதும் வேகமாக லைசென்ஸ் கொடுத்தார்கள். அதேநேரத்தில், எஃப்.டி.ஐ.யில் இப்படியொரு தப்பு நடந்தது தெரியவரவே, 30-வது நாளிலேயே விதிமாறுதல் செய்யப்பட்டது. ஆனால், அதற்குள் அவசர அவசரமாக பணப்பரிவர்த்தனை நடந்தது எப்படி? சுனிதா பெயரிலான அந்த 900 கோடி ரூபாயை யார் அனுப்பியது? இந்தக் கேள்விக்கு நீங்கள்தான் (சி.பி.ஐ.) பதில் கண்டுபிடிக்க வேண்டும்.
மேக்ஸிஸ் அனந்தகிருஷ்ணனின் இன்னொரு நிறுவனம் ஆஸ்ட்ரோ. இது சன் நெட்வொர்க்கின் சன் டி.டி.ஹெச் நிறுவனத்தில் 20% ஈக்விட்டியை வாங்குகிறது. அதற்காக 600 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. சன் டி.டி.ஹெச்சின் மதிப்பு 3000 கோடி ரூபாயாக இருந்தால்தான் 20% ஈக்விட்டியின் மதிப்பு 600 கோடி ரூபாயாகும். இந்திய அளவில் டி.டி.ஹெச் தொழிலில் ஈடுபடும் டாடா ஸ்கை நிறுவனமே 6 வருடங்கள் கழித்துதான் முதல் லாபத்தைப் பார்த்தது. அப்படியிருக் கும்போது, டி.டி.ஹெச் தொழிலில் குறிப்பிட்ட மாநிலங் களில் மட்டும் இறங்கும்போதே சன் டி.டி.ஹெச்சின் மதிப்பு 3000 கோடி ரூபாய்க்கு வந்தது எப்படி?
ஏர்செல்லுக்கு லைசென்ஸ் கொடுத்த பிறகு, இந்த முதலீடுகள் வந்திருப்பதன் பின்னணி என்ன? உடனடியாக லாபமே வராத டி.டி.ஹெச் நிறு வனத்துக்கு இவ்வளவு பணம் எப்படி முதலீடாகக் கிடைத்தது? அதுபோல, தமிழகத்தில் யாருமே எஃப்.எம். கேட்காத மாவட்டங்களில் சன் நெட்வொர்க்கின் எஃப்.எம்மின் ஷேர்களுக்காக ஆஸ்ட்ரோ நிறுவனம் 75 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இது எதற்காக? முதலில் 900, அப்புறம் 600, அப்புறம் 75 என 1575 கோடி ரூபாய் வந்த வழி என்ன?
2ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரிக்க மத்தியஅரசு நியமித்த நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிஷன், ஒன்றரை வருடமாக ஏர்செல் நிறுவனத்திற்கு லைசென்ஸ் தரப்படவில்லை என்பதை தனது ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளது. லைசென்ஸ், பணப்பரிவர்த்தனை இந்த விவகாரங்கள் அனைத்தையும் அறிந்த சிங்கப்பூர் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு பேங்க்கில் பணிபுரியும் நபரின் பெயரையும் செல் நம்பரையும் கொடுக்கிறேன். அதுபோல, மலேசியாவில் இதற்கான ஏற்பாடு களைச் செய்த வக்கீலின் நம்பரையும் பெயரையும் தருகிறேன்.
அதுமட்டுமில்லை... மேக்ஸிஸ் கம்பெனி மலேசியாவில் தன்னுடைய நிறுவனம் பற்றிய அறிக்கையை வெளிப்படையாகத் தெரிவித்துள் ளது. அதில், ஏர்செல் நிறுவனத்தில் 98% ஷேர் தன்னுடையது என்றும், 2% மட்டுமே சுனிதா ரெட்டியினுடையது என்றும் தெரிவித்துள்ளது. அதாவது, சுனிதா ரெட்டி முதலீடு செய்த 34 கோடி ரூபாய் என்பது 2% மட்டும்தான். இத்தனை வெளிப்படையாக மேக்ஸிஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கும்போது, மொரீஷியஸ் நாட்டிலிருந்து வந்த பணத்திற்கான கணக்கு விவரம் என்ன?
நான் கம்பெனியை மேக்ஸிஸ் நிறு வனத்திடம் விற்கும்போது, ஒப்பந்தத்தில் ஒரு விதி போடப்பட்டிருந்தது. மேக்ஸிஸ் வாங்கும் 74 % ஷேர் போக, மீதமுள்ள 26% ஷேரில் மூன் றாண்டுகள் கழித்து, அப்போதைய ஷேர் விலை என்னவோ அந்தத் தொகையை எனக்குத் தரவேண்டும் என்பது ஒப்பந்தம். இது பற்றி நான் கேட்க ஆரம்பித்தவுடன், இந்தியாவுக்கே நான் வரக்கூடாது என்று சொல்லி என் மீது பொய் வழக்குப் போட்டு 2 வருடம் இந்தியாவிற்கே வரவிடாமல் தடுத்தார்கள்.
அதன்பிறகு நான், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்போட்டு, சிங்கப்பூரில் ஆர்பிட்டேட்டரை வைத்து கம்பெனி விவகாரங்களை முடிவு செய்வது என உத்தரவு வாங்கி, அதன்படியே எல்லா வேலைகளும் நடந்தவந்தன. 2007-ல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சரை மாற்றியதும், ஏர்செல் நிறுவனத்தை விற்கும்போது போட்ட ஒப் பந்தப்படி பணம் வாங்கிக் கொடுங்கள் என ஆ.ராசாவை சந்தித்துக் கேட்டேன். அவராலும் முடியவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. முழுமையான விசாரணை நடத்தும் என தெரியவந்ததால், இனி என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்றுதான் வாக்குமூலம் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்'
-என்று சொல்லி, கம்பெனி ஒப்பந்தங்கள், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சி.பி.ஐ.யிடம் கொடுத் திருக்கிறார் சிவசங்கரன். அந்த ஆவணங்களும் வாக்குமூலமும்தான் 1000 பக்கங்களைத் தாண்டுகிறது என்கிறது சி.பி.ஐ. தரப்பு.
உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், "இந்த ஜென்டில்மேன் (சிவசங்கரன்) தன்னுடைய பங்குகள் அனைத் தையும் மலேசிய கம்பெனிக்கு விற்கும்படி நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார். இந்த மாற்றம் நடந்த பிறகுதான் மார்ச் 2006-ல், லைசென் சுக்காக ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்ட அத்தனை மனுக்களும் எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கின்றன. டிசம்பர் 2006-ல் அனைத்து லைசென்ஸ்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த லைசென்ஸ்களுக்குப் பிரதிபலனாக என்ன நடந்துள்ளது என்பது பற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.
ஆ.ராசா பதவிக் காலத்தில் நடந்த விஷயங்கள் தொடர்பான முழு விசாரணை, இறுதிக்கட்ட எஃப்.ஐ.ஆர். தாக்கல் ஆகிய வற்றை ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் முடித்து விடுவோம் என உச்சநீதிமன்றத்தில் உறுதியளித் துள்ளது சி.பி.ஐ. அதைத் தொடர்ந்து, தயாநிதி மாறன் பதவி வகித்த காலத்தில் நடந்த முறை கேடுகள் தொடர்பாக விசாரித்து, அதற்குரிய எஃப்.ஐ.ஆர். உள்ளிட்ட அனைத்தும் செப்டம் பர் 30-க்குள் முடிந்துவிடும் என உச்சநீதிமன் றத்தில் சி.பி.ஐ. தெரிவித்திருப்பதால், பதவி யிழந்த தயாநிதிமாறனைச் சுற்றியுள்ள விசா ரணை வளையம் மேலும் இறுகத் தொடங்கி யுள்ளது.
சன் டி.வி.யின் சீஃப் எக்ஸிகியூடிவ் ஆபீஸரும், சன் பிக் ஸர்ஸின் நிர்வாக அதிகாரியுமாக இருப்பவர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா. அதற்கும் மேலாக சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறனின் நெருங்கிய நண்பர் என்பது சக்ஸேனாவின் பிரமாதமான அடையாளம். சேனல் வட்டாரங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் சன் டி.வி. சாக்ஸ் என அழைக்கப்பட்டு பவர்ஃபுல் மனிதராக விளங்கி வரும் சக்ஸேனா கடந்த 04-ந் தேதி ஹைதராபாத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்துகொண்டு விட்டு சென்னை திரும்பிய போது சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீ ஸாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலத்தைச் சேர்ந்த சினிமா விநியோகஸ்தர் செல்வராஜ் கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில்... நடிகர் விஷால் நடித்த ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் சேலம் விநியோக விவாகரத்தில் எனக்கு தர வேண்டிய 83 லட்ச ரூபாயை தரவில்லை சன் பிக்ஸர்ஸ் நிர்வாகி சக்ஸேனா. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது "பணம் தரமுடியாது’ எனச்சொல்லி எனக்கு மிரட்டல் விடுத்தார்'’என சொல்லியிருந்தார். இந்த புகாரின் மீது எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்த கே.கே.நகர் போலீஸார், சக்ஸேனாவை கைது செய்திருக்கிறார்கள்.
செல்வராஜிடம் இது குறித்து கேட் டோம்.
""நடிகர் விஷாலும் அவரின் அண்ணனும் தயாரித்து வந்த ‘"தீராத விளையாட்டுப் பிள்ளை'’ படப்பிடிப்பு நடந்த சமயம் என்னிடம் ஒரு கோடி ரூபாய் ஃபைனான்ஸ் வாங்கினார்கள். அந்தப் பணத்தை திருப்பிக் கேட்டு பலமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷாலை சந்தித்துப் பேசினேன். அதன்படி படத்தின் சேலம் ஏரியா டிஸ்ட்ரிபூஷனை எனக்கு அளிப்பதாகச் சொன்னார்கள். நானும் ஏற்றுக் கொண்டேன். ஆனால் படம் தயாரானதுமே படத்தின் முழு உரிமையையும் சன் பிக்ஸர்ஸ்ஸிடம் விற்றுவிட்டனர். நான் விஷாலிடம் கேட்டபோது... "உங்களுக்கு தரவேண்டிய பணத்தை சன் பிக்ஸர்ஸ் தரும்' என்று சொல்லி அதற்காக அதி காரப்பூர்வ ஒப்புதலும் தந்தார். படத்தின் சேலம் உரிமையை வேறு ஒரு நபருக்கு சன் பிக்ஸர்ஸ் அதிகாரி சக்ஸேனா கொடுத்துவிட்டார். ஆனால் ஏதோ சூழ் நிலையால் படத்தை அந்த நபரால் வெளியிட முடியவில்லை. இதையடுத்தே... "நீங்களே படத்தை வெளியிடுங்கள். பணம் வசூலானதும் உங்களுடைய தொகை திருப்பித் தரப்படும்' எனச் சொன்னார்கள். அதன்படி படத்தை வெளியிட்டேன். எனக்கு சிறு தொகை மட்டுமே கொடுத்து விட்டு 83 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயை தராமல் இழுத்தடித்தார் சக்ஸேனா. திரும்பவும் பணத்தைக் கேட்ட என்னை கடுமையாக மிரட்டினார்கள். அந்தச் சமயம் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதனால்தான் இப்போது புகார் கொடுத்தேன்''’என்றார்.
சக்ஸேனா கைது குறித்து சன் நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் தராத நிலையில்... சக்ஸேனா நண்பர்கள் மற்றும் சன் டி.வி. வட்டாரங் களில் விசாரித்தோம்.
""இது சாதாரண பிசினஸ் தக ராறுதான். நாங்கள் யாரையும் மிரட்ட வில்லை. ஆனால் செல்வராஜ் கொடுத் திருந்த பொய் புகாரை ரகசியமாக வைத்திருந்து சக்ஸேனாவை அரெஸ்ட் பண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறது போலீஸ். செல்வராஜுக்கு கொடுக்க வேண்டிய தொகையின் அளவு குறைவானதுதான். அவர் அதிகப்படியாக சொன்னதால் செட்டில்மெண்ட் இழுபறியில் இருந்தது. இருந்தும் செட்டில்மெண்ட்டுக்காக பணத்துடன் சேலத்துக்கு ஆளனுப்பிய பிறகும் நடிகர் விஜய் தூண்டுதலில் அவர் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் சொன்னபடி ’சென்னையில் வைத்து வாங்கிக் கொள்கிறேன் என இழுத்தடித்தார் செல்வராஜ். இந்த கேப்பில் சாக்ஸ் கைது செய்யப் பட்டிருக்கிறார். இது கலாநிதி மாறனுக்கு மறைமுகமாக வைக்கப்பட்ட செக்''’என்றார்கள். போலீஸ் தரப்பில் விசாரித்தோம்.
"விசாரணைக்கு வரணும் எனச் சொன்னதும் சக்ஸேனா மறுப்பு தெரிவிக்கவில்லை. விமான நிலையத்திலிருந்து அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தோம். செல்வராஜ் கொடுத்திருந்த டாக்குமென்ட்ஸ் மற்றும் செல்வராஜுக்கு செல்போன் மூலம் சக்ஸேனா கொலை மிரட்டல்விடுத்த பேச்சுகளின் பதிவுகள் அடிப்படையில் அவரிடம் விசாரித்தோம். "அவருக்கு பணம் தரவேண்டியது உண்மைதான். ஆனால் வெறும் 13 லட்ச ரூபாய்தான் தரவேண்டும்'னு சக்ஸேனா சொன்னார். உங்களை அரெஸ்ட் பண்றோம்’னு சொன்னபோது அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. சைதை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளோம்''’என்றனர்.
புகார் தந்துள்ள செல்வராஜுக்கு சென்னையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் ரூம் போடப்பட்டிருந்தாலும் அந்த ஹோட்டலில் அவர் இல்லை. கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு இடத்திலும், சாலிகிராமத்தில் ஒரு இடத்திலும் மாறி மாறி தங்க வைக்கப்பட்டுள்ளார். சாக்ஸ் மீது இன்னும் சில புகார்கள் வாங்கி குண்டாஸுக்கு திட்டமிட ஒரு குரூப் வேலை செய்கிறது. இதன் பின்னணியில் நடிகர் விஜய்யும் எஸ்.ஏ.சந்திரசேகரும் மிகப்பெரிய பிளானோடு ஜெயலலிதாவுடன் பேசிக்கொண்டிருப்பதாகவும் பரபரக்கிறார்கள்.
சக்ஸேனா கைது குறித்து சினிமா உலகினரின் மனநிலையை அறிய தற்செயலாக தயாரிப்பாளர் சங்கம் இருக்கும் ஃபிலிம் சேம்பர் வளாகத்திற்கு நாம் போனபோது....
தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களாக உள்ள சின்ன பட்ஜெட் படத்தயாரிப்பாளர்கள் சுமார் இருபதுபேர்கள் கூடியிருந்தனர். அவர்களில் பழைய "பாலைவனச் சோலை'’ படத்தை தயாரித்த வடிவேல், புதிய பாலைவனச் சோலை படத்தைத் தயாரித்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் சக்ஸேனா கைதுக்கு மகிழ்ச்சி தெரிவித்து பத்தாயிரம் வாலா பட்டாசு வெடித்து, இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
'தீராத விளையாட்டுப் பிள்ளை' சினிமா விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை, தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்காக போலீஸார் தாக்கல் செய்த மனு, கடந்த 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
சக்சேனாவை நேரில் அழைத்து வர வேண்டும் என்று முந்தைய நாளே நீதிபதி கூறி இருந்த காரணத்தால், காலை 10 மணி முதலே சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம் முழுவதும் மீடியா கூட்டம். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 11.10-க்கு உள்ளே நுழைந்தது ஒரு டெம்போ டிராவலர் வேன். போலீஸாருக்கு மத்தியில் இருந்த வேனில் அமர்ந்து இருந்த சக்சேனாவின் முகத்தில், சோகம், விரக்தி, களைப்பு. வேன் நின்றதும் சக்சேனாவின் தந்தை தர்மராஜ், ஜன்னலுக்கு அருகே போய் மகனைப் பார்த்து கண் கலங்க, 'நீங்க தைரியமா இருங்கப்பா... நான் சீக்கிரம் வெளியே வந்துருவேன்’ என்று தைரியம் சொன்னார். சன் குழும ஊழியர்கள் தவிர சில திரைப்படப் பிரமுகர்களும் சக்சேனாவுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் தலைகாட்டியதால், உளவுப் பிரிவு போலீஸார் அவர்களைப் பற்றிய விவரங்களை மேலிடத்துக்கு பாஸ் செய்தபடி இருந்தனர். குறிப்பாக, சக்சேனாவுக்கும் காமெடி நடிகர் கருணாஸுக்கும் உள்ள நட்பு குறித்தும் தகவல் அனுப்பி வைத்தார்களாம்.
சரியாக 12 மணிக்கு நீதிபதி சௌம்யா ஷாலினி முன்னிலையில் விசாரணை ஆரம்பமானது.
''என் மீது புகார் கொடுத்துள்ள செல்வராஜ் என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. எனக்கும் அவருக்கும் நேரடியாக எந்த ஒப்பந்தமும் கிடையாது. நான் அவரை மிரட்டியதற்கான ஆதாரம் இருந்தால், கொடுக்கச் சொல்லுங்கள். எனக்கு நீண்ட நாட்களாகக் கழுத்து வலி இருக்கிறது. நீண்ட நேரமாக வாகனத்தில் வைத்தபடியே சிட்டியை சுற்றிச் சுற்றி வந்தனர். ஏதோ திட்டமிட்டு உள்நோக்கத்துடன் என்னை கைது செய்து இருக்கிறார்கள். எனவே, போலீஸ் கஸ்டடிக்கு என்னை அனுப்பக் கூடாது!'' என்று நீதிபதியைப் பார்த்துச் சொன்னார் சக்சேனா.
சக்சேனாவுக்காக ஆஜரான சீனியர் அட்வகேட் தினகரன், ''திரைப்பட விநியோகத் தொழில் என்பது லாபம், நட்டம் இரண்டும் கலந்தது. வியாபார ரீதியிலான தொடர்பு என்பதால், இது ஒரு சிவில் வழக்கு. ரஜினி நடித்த 'சிவாஜி’ படம் சரியாக ஓடவில்லை. அதற்காக, அவரிடம் பணத்தைத் திருப்பித் தாருங்கள் என்று கேட்க முடியுமா? நீதிபதி சொல்லும் பணத்தை இந்த நீதிமன்றத்தில் கட்டத் தயாராக இருக்கிறோம். ஆனால், இந்த சிவில் வழக்கு ஒரு கிரிமினல் வழக்காக ஜோடிக்கப்பட்டு உள்ளது. மொத்தத்தில் 'க்ரைம்' பிராஞ்ச் என்று இந்த போலீஸ் பிரிவுக்கு சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்!'' என்று போலீஸை ஏகத்துக்கும் வாரியவர், ''சக்சேனாவை போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பக் கூடாது!'' என்றார்.
அரசு வழக்கறிஞரான கோபிநாத், ''இந்த வழக்கில் தியேட்டர்கள், விநியோகஸ்தர்கள், சன் பிக்சர்ஸ் இடையே நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். எனவே, சக்சேனாவை ஐந்து நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம்!'' என்று வலியுறுத்த, இறுதியில் இரண்டு நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி அளித்தார் நீதிபதி.
மேலும் பல வழக்குகளை அடுத்தடுத்து சக்சேனா மீது போட்டு, எளிதில் வெளியில் வர முடியாத வண்ணம் சிக்கலை உண்டாக்க ஆளும் தரப்பு விரும்புகிறதாம். அதைத் தொடர்ந்து, உயர் மட்ட காக்கிகள் பலரும் இப்போது சக்சேனா சம்பந்தப்பட்ட பழைய விவகாரங்களைக் கிளற ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள செக்கர்ஸ் ஹோட்டல் உரிமையாளரை தொடர்புகொண்டு, ஹோட்டல் தாக்குதல் தொடர்பாக புகார் கொடுக்கச் சொல்லி சில காக்கிகள் வற்புறுத்த, 'ஏற்கெனவே நாங்கள் பேசி செட்டில் செய்துகொண்டோம். தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்’ என்று ஒதுங்கிக்கொண்டாராம். ஆனாலும் வேகம் குறையாத போலீஸார் செக்கர்ஸ் ஹோட்டல் தாக்குதலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களை அள்ளிக் கொண்டுபோய், உலுக்க ஆரம்பித்துள்ளார்களாம். ஆட்டோ டிரைவர்கள் வாயிலிருந்து போலீஸ் வரவழைத்த பெயர் - ஐயப்பன்!
''சன் பிக்சர்ஸுக்காக சக்சேனா வாங்க முனையும் திரைப் படங்கள், தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர்கள் வசம் விற்பனைக்குப் போகும்போது, யோகேஷ் பிக்சர்ஸ் என்ற பெயரில் சிலர் அணுகுவார்கள். அந்த யோகேஷ் பிக்சர்ஸின் உரிமையாளராக இருப்பவர்தான் ஐயப்பன். படம் சரியாகப் போகவில்லை என்று யாராவது திரும்ப வந்து பணம் கேட்டால், ஐயப்பன்தான் அவர்களுக்குப் பதில் சொல்லுவார்! அர்ச்சனையும் பிரசாதமும் அவரிடமிருந்து போதும் போதும் என்கிற அளவுக்குக் கிடைக்கும். இன்னொரு பக்கம், தி.மு.க. முக்கியப் புள்ளியான ஜெ.அன்பழகனின் மிக நெருங்கிய உறவினரும் ஐயப்பனின் நெருங்கிய உறவினரும் ரியல் எஸ்டேட் பிசினஸ் பார்ட்னர்கள். இந்த வகையிலும் கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க-வின் துணையோடு படு பந்தாவாக வலம் வந்தார் இந்த ஐயப்பன்!'' என்று போலீஸிடம் கூறியிருக்கிறார்களாம் கோடம்பாக்கம் வட்டாரத்தில்.
'ஆடுகளம்’ படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு ஜெமினி லேப் வாசலில் வைத்துக் கிடைத்த பலமான பகீர் அனுபவம்... 'பொண்ணு பார்க்கப் போறோம்’ படத்தின் தயாரிப்பாளர் முத்துபாரதிக்கு கவுன்சில் கூட்டத்திலேயே கிடைத்த சுளீர் டிரீட்மென்ட் என்று ஐயப்பன் மீது அடுக்கடுக்கான புகார்களை சொன்னார்களாம் கோடம்பாக்க பிரமுகர்கள் சிலர். 'இதை எல்லாம் சக்சேனா சொல்லித்தான் செய்தேன்!’ என்று ஐயப்பனிடம் வாக்குமூலம் வாங்கி, சக்சேனாவை மேலும் சிக்கலில் ஆழ்த்துவதுதான் போலீஸின் மாஸ்டர் பிளான் என்கிறார்கள் சிலர்.
இதனிடையே சில மீடியேட்டர்கள், 'படிக்காதவன்’, 'வல்லக்கோட்டை’, 'மாப்பிள்ளை’, 'முத்துக்கு முத்தாக’ போன்ற படங்களின் தயாரிப்பாளர்களைத் தொடர்புகொண்டு, 'எங்களுக்கு எதிராக போலீஸிடம் எதுவும் சொல்ல வேண்டாம். உங்களுக்கு சேர வேண்டிய பாக்கியை கண்டிப்பாகக் கொடுத்துவிடுவோம்’ என்று திடீர்ப் பாசம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
சக்சேனா கைதில் நடுங்கிப் போன இன்னொரு பிரபலம், மதுரை இளவல். நக்கலும் நையாண்டியுமாக அவர் தயாரித்த முதல் படத்தின் நிஜத் தயாரிப்பாளருக்கு, சத்தம் இல்லாமல் இப்போது பணத்தை செட்டில் செய்திருப்பதைச் சொல்லி, குலுங்கிச் சிரிக்கிறது கோடம்பாக்கம்!
- தி.கோபிவிஜய், படங்கள்: கே.கார்த்திகேயன்
''ஆட்சியைப் பற்றிக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்?''
போலீஸ் கஸ்டடி முடிந்து 7-ம் தேதி மாலை சைதை கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார் சக்சேனா. அப்போது, ''போன ஆட்சியில நடந்ததைப் பற்றி எல்லாம் என்னிடம் கேட்கிறார்கள். அரசாங்கம் செய்தது எல்லாம் எனக்கு என்ன தெரியும்?'' என்று தன் அருகில் இருந்த வக்கீல்களிடம் கொந்தளித்தாராம் சக்சேனா. ''இந்த நாட்டில் சதாம் உசேன் ஆட்சிதான் நடக்கிறது'' என்று வக்கீல் ஒருவர், நீதிமன்ற வளாகத்துக்குள் நின்று குரல் கொடுத்துக் கொண்டு இருந்தார்!
நவக்கிரக மூர்த்திகள்:
சக்சேனாவோடு தொடர்புபடுத்தி போலீஸ் குறி வைப்பதாகக் கூறப்படும் ஒன்பது பேர் தற்போது கவலையில் ஆழ்ந்துள்ளார்களாம். ''எங்கே, என்ன பிரச்னை என்றாலும், தங்கள் அடிப்பொடிகளை அனுப்பிவைத்து விசுவாசம் காட்டுவதோடு, தேவைப்பட்டால் தாங்களே நேரிலும் ஆஜர் ஆகியுள்ளனர் இவர்கள். ஐயப்பன், தம்பிதுரை, சாதிக், சசி, தி.மு.க. தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், ஜெ. அன்பழகன் தம்பி கருணாநிதி, தி.நகர் இளைஞர் அணி உதயசூரியன், சேப்பாக்கம் காமராஜ், சேப்பாக்கம் திருநா ஆகியோர்தான் இந்த நவக்கிரக மூர்த்திகள்'' என்று கூறும் சில போலீஸ் அதிகாரிகள்...
''செக்கர்ஸ் ஹோட்டல் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஜெ.அன்பழகனையும் கொண்டு வருவோம்''என்கிறது..
ஆனால் ஜெ.அன்பழகன், ''எனக்கும் செக்கர்ஸ் ஹோட்டல் தாக்குதல் விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது முடிந்துபோன விவகாரம். அதில் என்னை சம்பந்தப்படுத்தி இந்த அரசு கைது செய்ய நினைத்தால், துணிவுடன் எதிர்கொள்வேன்!'' என்கிறார்.
கஸ்டடியில் சக்சேனா!
கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில்தான் இரண்டுநாட்களும் சக்சேனா தங்கவைக்கப்பட்டிருந்தார். போலீஸாரின் பெரும்பாலான கேள்விகளுக்கு 'ஆம் - இல்லை' என்றுதான் பதில் சொன்னாராம். நேரத்துக்கு உணவு வழங்கினார்கள். முதல்நாள் மாலை அவரது குடும்ப உறவினர்கள் பார்த்து பேச அனுமதித்தனர். போகிற போக்கில் போலீஸார் சக்சேனா காதில் விழும்படியாக, 'எல்லாத்தையும் செய்யச் சொன்னது யாருன்னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருக்காலாம்ல' என்று அடிக்கடி சொன்னார்களாம். 'ஒ...இதுக்காகத்தான் இந்த பில்டப்-பா? அதெல்லாம் என்னால் முடியாது' என்று சத்தம்போட்டு கத்தினாராம் சக்சேனா. அத்தோடு, இந்தக் கைதுப் படலத்துக்கு காரணமாக வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
சென்னையில் பிரபலமான கிளப் ஒன்றில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறாராம் சக்சேனா. விரைவில் அந்த கிளப்புக்கு தேர்தல் வரப்போகிறது. தேர்தலில் மீண்டும் சக்சேனா போட்டியிட இருந்தாராம். இந்த கிளப்பின் போட்டி கோஷ்டியினர் திட்டமிட்டேதான் வழக்கு விவகாரங்களை தூபம் போட்டுவிட்டார்களாம். போலீஸ் புகாரில் பெயர் இருந்தால், அந்தப் பதவிக்கு போட்டியிட முடியாதாம். கடந்த முறை இதே பாணியில் சக்சேனா தரப்பினர் வேறு ஒருவரை போட்டியிடமுடியாமல் செய்தார்களாம். தற்போது அதே பாணியில் சக்சேனாவை பழிவாங்கிவிட்டார்களாம்!
உடகங்களை தன் கையில் வைத்துக் கொண்டு, உலகமே தன் பக்கம் என்று நினைத்த மாறன் சகோதரர்களின் கனவை ஸ்பெக்ட்ரம் வழக்கு தகர்த்திருக்கிறது. தயாநிதி மாறனோடு, கலாநிதி மாறனும் கைது செய்யப்படுவார் என்கிற செய்திகளால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் சகோதரர்கள்.
2ஜி விசாரணையை நேரடியாகக் கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றத்தின் ஏ.கே.கங்குலி, ஜி.எஸ்.சிங்வி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பாக ஸ்பெக்ட்ரம் விசாரணையின் தற்போதைய நிலை குறித்த தன்னுடைய 71 பக்க அறிக்கையை புதனன்று சி.பி.ஐ. தாக்கல் செய்தது. சி.பி.ஐ. சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘தயாநிதி மாறன் மீதான புகார்களை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. ஏர்செல் நிறுவனத்தை விற்கச் சொல்லி சிவசங்கரனை தயாநிதி மாறன் நிர்ப்பந்தித்துள்ளார்’’ என்று சொன்னபோது, அதிர்ந்துதான் போனார் தயாநிதி.
ஆ.ராசா கைதுக்குப் பிறகும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு 2 ஜி வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை என்றே நம்பப்பட்டது. தங்கள் ஊடக பலத்தால் மாறன் சகோதரர்கள் அப்படி நம்ப வைத்தார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். சிவசங்கரனின் வருகைக்குப் பிறகுதான் அலைக்கற்றை வழங்கியதில் தயாநிதி எவ்வளவு ஊழல் செய்திருக்கிறார் என்பது வெளியில் தெரியவந்தது.
‘‘எனக்கு முன்பு இருந்தவர்கள் எடுத்த முடிவுகளைத் தான் நானும் பின்பற்றினேன்’’ என்று ஆ.ராசா அதிரடி வாக்குமூலம் கொடுத்தார். அப்போதும் பாரதிய ஜனதா ஆட் சிக் காலத்தில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்த பிரமோத் மஹாஜனையும், அருண் ஷோரியையும் குறிப்பிடுகிறார் என்றே பத்திரிகைகளும் பொது மக்களும் நினைத்தார்கள். காரணம், ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்திகளை அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்ததே சன் டி.வி.தான்.
பிரஷாந்த் பூஷண் தொடர்ந்த பொதுநல வழக்கில் ‘1999 முதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டது. எக்னாமிக்ஸ் டைம்ஸ், தெகல்ஹா இதழ்கள் தயாநிதி மாறனுக்கு ஊழலில் பெரும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியிட்டன.
இதையடுத்து, சி.பி.ஐ. தரப்பு தயாநிதி மாறனுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்ள தொடர்பு குறித்து விசாரணையை முழுவீச்சில் முடுக்கி விட்டது. முதல் தகவல் அறிக்கைக்கு முந்தைய காலகட்டமான பூர்வாங்க விசாரணையைத் தொடங்கி தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானவையா, அதற்காக ஆதாயம் பெற்றுள்ளாரா என்று விசாரணையின் போக்கை மாற்றியது. இந்த நேரத்தில் சரியாக சிவசங்கரனும் வந்து சேர, மாட்டிக்கொண்டார்கள் சகோதரர்கள்.
2004 மே 23 முதல் 2007 மே 14 வரை தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். அந்த நேரத்தில், சிவசங்கரனுக்குச் சொந்தமான ஏர்செல் நிறுவனம் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கொல்கத்தா, கேரளா, பஞ்சாப், ஹரியானா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்தது.
ஆனால் தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யாமல் தொடர்ந்து தாமதித்துக் கொண்டிருந்தார். மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத் தின் அனந்தகிருஷ்ணனுக்கு, ஏர்செல் நிறுவனத்தை விற்க வேண்டும் என்று சிவசங்கரனுக்கு தொடர்ந்து பிரஷர் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் பணியாற்றிய ப்ரஹலாத் ஷாந்திகிராம் மற்றும் ராகுல் கோஸ்வாமி ஆகிய இருவரும், இது தொடர்பாக சிவசங்கரனுக்கு தொடர்ந்து நெ ருக்கடி கொடுத்து வந்துள்ளார்கள்.
அனந்தகிருஷ்ணனுக்கும் மாறன் சகோதரர்களுக்குமான தொடர்பு 1997 ஜனவரியில் மேக்சிஸ் நிறுவனத்துடன், டி.டி.எச். ஒளிபரப்பு தொடர்பாக ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத் தில் தொடங்குகிறது.
சிவசங்கரனுக்கு மறைமுகமாகக் கொடுக்கப்பட்டு வந்த நெருக்கடி, நவம்பர் 2005-ல் சென்னையில் உள்ள சன் டி.வி. அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலாநிதி மாறன் மூலமாக நேரடியாகவே கொடுக்கப்பட்டது. தயாநிதி மாறனும் இது தொடர்பாக சிவசங்கரனிடம் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளார்.
இந்த தொடர்ந்த நெருக்கடிகளை அடுத்து, சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தில் உள்ள தன் பங்குகளை தயாநிதி மாறனின் சொல்படி, அனந்தகிருஷ்ணனுக்கு விற்கிறார். இது மட்டுமே நடந்திருந்தால், தயாநிதி மாறன் சிக்கியிருக்க மாட்டார். இதற்குப் பிறகு நடந்தவைதான் தயாநிதி மாறனை வசமாகச் சிக்க வைத்திருக்கிறது என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.
பங்கு விற்பனை முடிந்த உடன் அனந்த கிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் சன் குழுமத்தில் முதலீடு செய்யப் போவதாக அறிவிக்கிறது. இதற்கான மத்திய அரசின் அனுமதி மார்ச் 2007-ல் வழங்கப்படுகிறது. அப்போது தயாநிதி மத்திய அமைச்சராக இருக்கிறார். சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ.600 கோடியும், மாறன்களுக்குச் சொந் தமான மற்றொரு நிறுவனமான சவுத் ஏஷியா எஃப்.எம். நிறுவனத்தில் 111 கோடி ரூபாயும் முதலீடு செய்கிறார் அனந்தகிருஷ்ணன். இந்த முதலீடே மாறன் சகோதரர்களை வசமாகச் சிக்க வைத்துள்ளது. அதோடு ஏர்செல் நிறுவனத்துக்கு மேலும் 14 சர்க்கிளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்கிறார் தயாநிதி.
தொலைத்தொடர்புத் துறையில் நேரடி அன்னிய முதலீடு 74 சதவிகிதத்தை தாண்டக் கூடாது என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு வளைந்து கொடுக்கப்பட்டதை தயாநிதி மாறன் கண்டுகொள்ளாமல் இருந்தது அவருக்குத் தெரிந்தே எல்லாம் நடந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம் என்கிறார்கள்.
அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் 74 சதவிகிதத்தை வைத்திருந்தாலும், அப்பல்லோ மருத்துவமனையின் சிந்தியா செக்யூரிட்டீஸ் மூலமாக ஏர்செல் நிறுவனத்தில் 99.3 சதவிகித பங்குகளை அனந்தகிருஷ்ணன் வாங்கினார். இதற்கு ஆதாரமாக, மலேசிய பங்குச் சந்தையில் மார்ச் 2006-ல் அனந்த கிருஷ்ணன் தாக்கல் செய்த காலாண்டு அறிக்கையில் ஏர்செல் நிறுவனத்தில் 99.3 சதவிகித பங்குகளை வைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறார்கள்.
இந்த விதிமீறலை மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருக்கும் போது, அவரது கவனத்துக்கு ஒரு தன்னார்வ அமைப்பு கொண்டு வந்தும், வட இந்திய ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டும், மாறன் அமைதி காத்ததையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கவனமாக விசாரித்து வருகிறார்கள்.
மாறன் குறித்த தங்களது விசாரணையில் முக்கிய கட்டத்தை எட்டிய சி.பி.ஐ., தனது 71 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் கடந்த புதன் அன்று தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், “ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு விற்குமாறு சென்னையைச் சேர்ந்த தொலைத்தொடர்பு மேம்பாட்டாளர் சிவசங்கரன் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் ஒருங்கிணைந்த சேவை உரிமங்கள் கோரி சிவசங்கரன் விண்ணப்பித்தார். ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி அந்த உரிமங்கள் 2 ஆண்டுகள்வரை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.
உரிமங்களைப் பெறுவதற்காக சிவசங்கரன் பல்வேறு வழிகளில் முயன்றார். இறுதியில் மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு பங்குகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. 2006-ம் ஆண்டில் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை சிவசங்கரனிடம் இருந்து பெற்ற மலேசிய நிறுவனத்துக்கு குறிப்பிட்ட உரிமங்களை ஆறே மாதங்களில் வழங்குவதற்கு தயாநிதி மாறன் உதவினார்’’ என்று சி.பி.ஐ. தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த அறிக்கை தயாநிதி மாறனுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சி.பி.ஐ. திரட்டியுள்ளது என்பதையே காட்டுகிறது. சி.பி.ஐ. பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தயாநிதி மாறன் டெல்லியில் செய்த ‘லாபி’ எதுவும் எடுபடவில்லை என்பதையும் காட்டுகிறது.
தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, அத்துறையில் செயலாளராக இருந்த உத்தரப்பிரதேச கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான நிருபேந்திர மிஷ்ரா என்பவரை சி.பி.ஐ. விசாரித்துள்ளது. இவர், சி.பி.ஐ.க்கு அளித்த சாட்சியத்தில், சிவசங்கரன் தனது புகாரில் கூறியவை அனைத்தையும் உறுதி செய்துள் ளதாகத் தெரிகிறது.
மாறன் அமைச்சராக இருந்த போது, தொலைத் தொடர்புத் துறை செயலாளராக இருந்த இவரின் சாட்சியம், மாறனுக்கு பெரும் சிக்கலாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவரைத் தவிரவும், அப்போது, தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றிய மூத்த அதிகாரிகள் பி.கே.மிட்டல் மற்றும் ஆர்.ஜே.எஸ். குஷவாஹா ஆகியோரையும் சி.பி.ஐ. விசாரித்துள்ளது.
ஏற்கெனவே, சிவசங்கரன் புகார் தொடர்பாக லண்டனில் உள்ள வங்கியில் பணியாற்றும் இருவரை, சி.பி.ஐ. விசாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அமைச்சராக இருக்கும் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை மட்டுமல்ல, அவர் தனது பழைய அமைச்சரவை சகாவான ஆ. ராசாவுக்குத் துணையாக போகக் கூடும் என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில். இந்த ஊழல் விவகாரங்களில் கலாநிதிக்கும் தொடர்பு இரு ப்பதால் கலாநிதி மாறனும் கைது செய்யப்படுவார் என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன.
ஆ.ராசா கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவரது கைது பற்றி பத்திரிகைகள் பரபரப்பாக எழுதின. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான ஆவணங்கள் திட்டமிட்டு மீடியாக்களுக்கு கசியவிடப்பட்டது. அவரது கைது பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றான பிறகு, அவர் கைது செய்யப்பட்டு திகார் அனுப்பப்பட்டார். கனிமொழி கைதிலும் இதுவே நடந்தது. இப்போது மாறன் சகோதரர்களின் ஸ்பெக்ட்ரம் தொடர்பு பற்றி கோர்ட்டில் வெளிப்படையாக சொல்லப்பட்டுவிட்டது. இனி இருவ ருக்கும் சம்மன் கொடுப்பது, விசாரணை என்று வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படும். எனவே, விரைவில் அவர்களது கைது இருக்கலாம் எனத் தெரிகிறது.
ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் விசாரணை முழுமையாக முடிக்கப்பட்டு விடும் என்று சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருக்கிறது. இந்நிலையில், வியாழனன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவர் ராஜினாமா செய்தார்.
எதற்குமே லாயிக்கில்லை. கருணாநிதியிடம் திட்டு வாங்கிய தயாநிதி மாறன்.
தயாநிதி மாறன் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றதும் இளம் அமைச்சர், நிர்வாகத் திறன் மிக்கவர் என்றெல்லாம் அவரது ஊடகங்கள் மாநில வாரியாக அவரைப் பற்றி புகழாரம் சூட்டின. இப்போது 2ஜி ஊழலில் சிக்கி தன் பதவியை இழந்திருக்கிறார் தயாநிதி. அவரது கடந்த காலங்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், அவரது ‘திறமை’ தெரிய வரும். தயாநிதி மாறனின் இத்தனை வளர்ச்சிக்கும் அவர் முரசொலி மாறனின் மகன் என்பதையும், கருணாநிதியின் பேரன் என்பதையும் தவிர எந்தத் தகுதியும் இல்லை. சென் னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரத்தில் பட்டப் படிப்பை முடித்தவர் தயாநிதி மாறன்.
ஆனால் எந்த வேலைக்கும் செல்லவில்லை. மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் என்கிற செல்வாக்கை வைத்துக் கொண்டு நண்பர்களோடு சுற்றித் திரிந்தார். குடும்பத்தினரே அவருக்கு ‘அன்பு லெதர் கார்மென்ட்ஸ்’ என்கிற பெயரில் அறிவாலயத்தில் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
தயாநிதியால் தன் சொந்த நிறுவனத்தை எட்டு மாதங்கள் மட்டுமே நடத்த முடிந்தது. நஷ்டத்தால் நிறுவனத்தை இழுத்து மூடிய தயாநிதி, மறுபடியும் நண்பர்களோடு ஊர் சுற்ற ஆரம்பித்தார். இந்த நேரத்தில் கலாநிதி மாறன் சன் டி.வி. ஆரம்பித்திருந்தார்.
ஆகவே தானும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆசை தயாநிதிக்கு ஏற்படுகிறது. ‘டிஸ்கொதே கிளப்’ என்கிற பெயரில் நடன பார்கள் சென்னையில் அறிமுகமான நேரம் அது. தானும் அப்படி ஆரம்பித்தால் என்ன எனத் தோன்ற, கலாநிதியிடம் ஐடியா கேட்கிறார். அவரும் சம்மதிக்க, குவாலிட்டி இன் அருணா ஓட் டல் மாடியில் டிஸ்கொதே கிளப்பை ஆரம்பித்தார். 2000-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசியல் செல்வாக்கு மூலம் ரஜினியை வரவழைத்தார் தயாநிதி மாறன்.
அந்த வருடம் மற்ற ஓட்டல் புத்தாண்டு கொண்டாட்டங்களை விட இவர்களது கிளப் அமர்க்களப்பட்டது. 2001-ல் ஆட்சி மாற்றம் வந்ததும் டிஸ்கொதே கிளப்புகளில் ரெய்டு நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட, தயாநிதியின் கிளப் இழுத்து மூடப்பட்டது.
அந்த நேரத்தில் கலாநிதி மாறன் தான் முரசொலி நிர்வாக இயக்குனராக இருந்தார். சன் டி.வி. வேலைகளில் அவர் பிஸியாக இருந்ததால் முரசொலி பொறுப்பில் இருந்து அவர் விலகினார். இதையடுத்து முரசொலி நிர்வாக இயக்குனரானார் தயாநிதி மாறன். அதன்பிறகும் இரவில் கேளிக்கை விடுதிகளுக்குப் போவது, நண்பர்களுடன் சுற்றுவது என்றே இருந்ததால், ‘‘அண்ணன் அளவுக்கு நீ எதுவுமே செய்வதில்லை’’ என்ற திட்டு கருணாநிதியிடம் இருந்து கிடைத்தது.
வேறு வழியில்லாமல் முரசொலி நிர்வாகத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். வண்ண அச்சகத்தைக் கொண்டு வந்தார். அலுவலகத்தை நவீனமயமாக்கினார். பிற பத்திரிகை நிறுவனங்களோடு போட்டி போட்டுக் கொண்டு முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக குங்குமம் வார இதழிலும் தீபாவளி மலரைக் கொண்டு வந்தார். மலரோடு இலவசங்களை வாரியிறைத்தார் தயாநிதி. இது குறித்து பொதுநல வழக்குத் தொடரப்பட்டு, மொத்தமாக தீபாவளி மலருக்கே கொஞ்ச காலம் தடை விழுந்தது. இப்போதும் தீபாவளி மலரோடு இலவசங்கள் கொடுக்கத் தடை உள்ளது.
முரசொலியில் உட்கார்ந்து கொண்டே செய்தி கொடுக்க வரும் கட்சிக்காரர்களோடு நெருங்கிப் பழகினார். அப்பா முரசொலி மாறன் உடல்நிலை சரியில்லாமல் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்ணன், தம்பி இருவருமே சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டனர். ஆனால், மற்ற கேளிக்கைகளுக்குப் பஞ்சமிருக்காது.
இந்நிலையில், முரசொலி மாறனும் இறந்து விட, தம்பிக்குச் சொந்தமாக ஏதாவது தொழில் இருக்க வேண்டும் என நினைத்தார் கலாநிதி மாறன்.
ஆனால் முன்னரே தயாநிதியின் தொழில் நிர்வாகத் திறன்(?) பற்றி தெரியும் என்பதால், குடும்பத்தினர் அவருக்காக ரிஸ்க் எடுக்கவும் முன்வரவில்லை. இந்த நிலையில்தான் அவரை அரசியலுக்குக் கொண்டு வந்தால் என்ன என்கிற யோசனை வருகிறது. இதைச் செயல்படுத்த கனிமொழி மூலமாக முயற்சி செய்தார்கள். அவர் அப்பாவிடம் சொல்ல, 2004-ல் மத்திய சென்னை எம்.பி.யானார். இப்படித்தான் அரசியலுக்கு வந்தார் தயாநிதி மாறன்.
2004-ல் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். உடனடியாக அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது. அதற்கும், அப்போதே கட் சியில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. எப்போதும் சிரித்த முகத்துடன், எளிதாகப் பேசி கட்சிக்காரர்களுடன் நெருங்கினார். இலவச இணைப்பு போல எப்போதும் கரு ணாநிதியின் நிழலாக ஒட்டிக் கொண்டிருந்ததால் கட்சியின் மூத்த தலைவர்கள் முகம் சுளித்தனர். அந்தக் காலகட்டங்களில் முதல்வர் கலந்து கொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளிலும் சிரித்த முகத்துடன் தயாநிதியின் புகைப்படத்தைப் பார்க்கலாம்.
மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட விவகாரத்தை அடுத்து, குடும்பத் தகராறு ஏற்பட்டு தயாநிதியின் மத்திய அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டது. தனது அரசியல் எதிர்காலத்தை காப்பாற்றிக் கொள்ள, தனது ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு ‘மாறன் பேரவை’ ஆரம்பிக்கத் திட்டமிட்டார்.
குடும்பம் மறுபடியும் இணைந்ததால் மாறன் பேரவைக் கனவு கலைந்தது. 2009-ல் மறுபடியும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்தமுறை மத்திய ஜவுளித்துறை தயாநிதிக்குக் கொடுக்கப்பட்டது. தான் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை ஆ.ராசாவுக்குக் கொடுக்கப்பட்டதில் தயாநிதிக்கு எரிச்சல் இருந்ததாகச் சொல்லப்பட்டது. அந்த எரிச்சல் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிரொலித்தது. தமிழ்நாட்டில் பெரிதும் அறியப்படாமல் இருந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை தெளிவான ஆதாரங்களுடன் பட் டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்த பெருமை சன் டி.வி.யையும், தயாநிதி மாறனையுமே சாரும்.
இப்போது அதே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறது சி.பி.ஐ. விளைவு, மத்திய அமைச்சர் பதவியை இழந்திருக்கும் தயாநிதி, விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தெரிகிறது. சிறிய தொழிலில் ஆரம்பித்து அரசியல் வாழ்க்கை எல்லாமே பாதியில் முடிந்து போனது. இதுதான் தயாநிதியின் ராசி என்கிறார்கள்.
தயாநிதி அரசியலுக்கு வந்த பிறகு, மாறன் சகோதரர்களின் வளர்ச்சி கற்பனை செய்ய முடியாதது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கட்டுப்பாட்டையும் மீறி விஸ்வரூபம் எடுத்தார்கள். தி.மு.க.வின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு ஊடகங்களிலும், அரசியலிலும் இவர்கள் செய்த அட்டகாசங்களை கருணாநிதியால் கூட கண்டிக்க முடியவி ல்லை என்பதுதான் உண்மை. மிக உச்சகட்டமாக, கனிமொழி கைது செய்யப்பட்டதற்குப் பின்னணியில் தயாநிதி இருக்கிறார் என்கிற செய்திகள் கருணாநிதியை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
தன்னால் கட்டுப்படுத்த முடியாத தன் பேரன்கள் இன்று 2ஜியில் சிக்கி வதைபடுவதை கருணாநிதி உள்ளுக்குள் ரசிக்கக் கூடும். ஏனெனில், அறுபது ஆண்டுகள் பாரம்பரியமிக்க தி.மு.க.வின் இன்றைய வீழ்ச்சிக்கு தயாநிதி மாறன் முக்கிய காரணம் என்பதை கருணாநிதி மறுக்க முடியாது.
1 ராம.நாராயணன் 2 சிவசக்தி பாண்டியன் அடங்காத கோடம்பாக்க அமர்க்களம்! சக்சேனா, அய்யப்பன் கைதுகளுக்குப் பிறகு, அடுத்தது யார் என்கிற பரபரப்பு கிளம்பிவிட்டது. போலீஸ் தரப்பும் கோடம்பாக்கப் புள்ளிகளும் ஒரு சேரக் கை நீட்டுவது, தயாரிப்பாளர்கள் ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியனை நோக்கித்தான்! ''ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன் இருவரும் கடந்த ஆட்சியில் திரைத் துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்களின் பஞ்சாயத்துகளால் பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் புகார் கொடுங்கள். கைது செய்யச் சொல்லி, மேலிடமே சொல்லிவிட்டது!'' எனத் தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டு அழைக்கிறது போலீஸ். தயாரிப்பாளர்கள் ஐங்கரன் கருணா, அபிராமி ராமநாதன், தனஞ்செயன், 'ஸ்டுடியோ க்ரீன்’ ஞானவேல், மன்னன், 'மகிழ்ச்சி’ மணிவண்ணன், தயாரிப்பாளர் சகா என அதிருப்திப் புள்ளிகள் பலரையும் வளைத்து புகார்கள் வாங்கும் விறுவிறுப்பில் இருக்கிறது போலீஸ். இயக்குநர்கள் சங்கப் பொதுச் செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட அமீரும் இந்தப் பட்டியலில் அடக்கம். இது குறித்து தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசினோம். ''கடந்த ஆட்சியில் ராம.நாராயணன் வைத்ததுதான் சட்டம். சிவசக்தி செய்வதுதான் செயல். சன் டி.வி-க்கு சக்சேனா எப்படியோ, அதேபோல்தான், கலைஞர் டி.வி-க்கு ராம.நாராயணன். சிறு பிரச்னையாக இருந்தாலும், உடனே கவுன்சிலுக்கு வரவழைத்து பஞ்சாயத்துப் பேசுவதாகச் சொல்லி, ஏதாவது ஒரு ஏரியாவுக்கு விநியோக உரிமையை வாங்கிக்கொள்வார்கள். கலைஞர் டி.வி-யில் சாட்டிலைட் உரிமைக்காக ஒரு தொகை பேசிவிட்டு, அதில் பாதியை அவர்களே அமுக்கிக்கொண்டு தயாரிப்பாளர்களைத் தவிக்கவிடுவார்கள். ராம.நாராயணன் நினைப்பதைச் செய்துகொடுப்பதுதான் சிவசக்தி பாண்டியனின் வேலை. 'பருத்திவீரன்’, 'ரேனிகுண்டா’, 'மகிழ்ச்சி’, 'வாரணம் ஆயிரம்’, 'வல்லக்கோட்டை’, 'தம்பிக்கோட்டை’ என 50-க்கும் மேற்பட்ட படங்களின் விநியோக உரிமைகளில், இவர்கள் வில்லங்கத்தை உருவாக்கினார்கள். யார் எதிர்த்துக் கேட்டாலும், 'கோபாலபுரத்திலேயே சொல்லிட்டாங்க...’ என்று வாயை அடைத்துவிடுவார்கள். தயாரிப்பாளர்களை மட்டும் அல்ல... சில சேனல்களையே மிரட்டிப் பணம் பறிக்கும் வேலையும் நடந்தது. 'சூரியன் சட்டக் கல்லூரி’ என்ற படத்தை எடுத்த சிவசக்தி பாண்டியன், அதைச் சொல்லியே பல இடங்களில் பணம் கறந்தார். 'அர்ஜுனன் காதலி’ என்ற படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்துத் தருவதாகச் சொல்லி, ஐங்கரன் நிறுவனத்திடம் 3 கோடி வாங்கினார். படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிட்டதாகச் சொல்லி பாண்டியன் கை விரிக்க, அபிமானத் தயாரிப்பாளர் ஒருவரும் இரண்டு எழுத்து சேனல் தரப்பினரும் தலா 50 லட்சத்தை பாண்டியனுக்குக் கொடுத்தார்கள். இன்று வரை கொடுத்த பணத்தையோ, படத்தையோ வாங்க முடியாமல் தவிக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். பிரமாண்டத்தில் சாதிக்கக்கூடிய ஒரு தயாரிப்பாளரை கவுன்சிலில் நிறுத்தி மன்னிப்பு கேட்கவைத்தார்கள். 'பருத்திவீரன்’ படத்தில் அமீருக்கும் ஞானவேலுக்கும் பிரச்னை உருவானது. ஆனால், இப்போது இந்த இருவருமே ராம.நாராயணன் மீது புகார் கொடுக்கும் முடிவில் இருக்கிறார்கள். அமீரிடம் இருந்து பஞ்சாயத்து நடத்தி 'பருத்திவீரன்’ படத்தை ஞானவேலுக்கு பிடுங்கிக் கொடுத்த ராம.நாராயணன் அதற்கு நன்றிக்கடனாக சில ஏரியாக்களின் விநியோக உரிமையை வாங்கிக்கொண்டார். அதற்கான பணத்தை ஞானவேலுக்கு சரிவரக் கொடுக்கவில்லை. அதே நேரம் ஞானவேல், அமீருக்கு கொடுக்கவேண்டும் என கவுன்சில் தீர்மானித்த 80 லட்சத்தை அமீருக்கும் வாங்கித் தரவில்லை. பல படங்களுக்கு இதேபோல் பஞ்சாயத்து பேசி இரு தரப்பிலும் ஆதாயத்தைப் பறிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்தன. கேபிள் டி.வி-க்கு படத்தின் புரமோஷன் காட்சிகளை வழங்குவதற்கான தொகையை, வருடத்துக்கு ஒரு முறை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால், முதல் வருடத்தைத் தவிர, கடந்த நான்கு ஆண்டுகளாக அந்தப் பணத்தை ராம.நாராயணன் வழங்கவில்லை. முதல் புகாரை யார் கொடுப்பது என்கிற தயக்கம்தான் இப்போது நீடிக்கிறது. முதல் புகார் போய்விட்டால், வரிசையாக நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள்கூட ராம.நாராயணன், பாண்டியன் இருவர் மீதும் பாயும்!'' என்கிறார்கள் அதிரடியாக. இது குறித்து ராம.நாராயணனிடம் கேட்டால், ''இதுவரைக்கும் என் மீது யாரும் புகார் கொடுக்கவில்லை. புகார் கொடுக்கிற அளவுக்கு நான் நடந்துகொள்பவனும் இல்லை. என் கவனத்துக்கு வந்த பிரச்னைகளை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து தீர்த்துவைத்தேனே தவிர, ஆதாயத்துக்காக எதையும் செய்தது கிடையாது!'' என்றார். சிவசக்தி பாண்டியனோ, ''தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு வந்த பஞ்சாயத்துக்களைத்தான் தீர்த்துவைத்தோமே தவிர, நாங்களாக பஞ்சாயத்தை உருவாக்கவில்லை. யாரிடமும் எதைச் சொல்லியும் பணம் பெறவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மற்றபடி வழக்குவந்தால் சந்திக்கத் தயார்!'' என்கிறார் தெளிவாக. இதற்கிடையில், போலீஸ் அமீரை அணுக, ''அவர்களின் மீது வழக்குப்போட்டுவிட்டு பிறகு வந்து பாருங்கள்... அவர்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் சொல்கிறேன்!'' என்றாராம். அடுத்தபடியாய் உதயநிதியின் வலது கரமாகத் திரைத் துறையைக் கலக்கிய வாசனைப் புள்ளி,, மூன்று எழுத்து சேனலின் பிரதிநிதி எனக் கைதுப் பட்டியலின் நீளம் நீண்டுகொண்டே போகிறது! - இரா.சரவணன்
தமிழ்த் திரையுலகைப் புரட்டிப் போட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் இனிமேல் எழ முடியாது என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத நிறுவனங்கள் எத்தனையோ. ஏவிஎம், ஜெமினி என பல நிறுவனங்கள் சகாப்தங்களைக் கண்ட திரையுலகம் தமிழ். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இவை எதுவுமே தமிழில் படமெடுக்க முடியாத நிலை. இவர்களை விட மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் சிறு படத் தயாரிப்பாளர்கள்தான். சிறிய அளவிலான முதலீட்டில் படம் எடுத்து அதில் வரும் லாபத்தை வைத்து பிழைத்து வந்தவர்கள் இவர்கள்.
இப்படி அத்தனை பேரின் பிழைப்பிலும் கிட்டத்தட்ட மண்ணைப் போட்டு மூடிய நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்கிறார்கள் அதனால் பாதிக்கப்பட்ட திரையுலகினர்.
எங்கிருந்தோ வந்த டைனசோர் போல தடாலடியாக வந்து திரையுலகத்தையே வளைத்துப் போட்டு விட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது திரையுலகினரின் கருத்து.
ஆரம்பத்தி்ல விநியோகத்தில் இறங்கியது சன் பிக்சர்ஸ். அதாவது படத்தை எடுத்து முடித்து விட்டு அதை வெளியிட்டால் லாபம் கிடைக்குமா, நஷ்டம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களை அணுகி, அவர்களது தயாரிப்புச் செல்வை முழுமையாக கையில் கொடுத்து படத்தை அப்படியே வாங்கியது சன் பிக்சர்ஸ்.
இது ரிஸ்க் எடுக்கும் வாய்ப்பைக் குறைத்து, லாபத்தையும் கொடுத்ததால் பல தயாரிப்பாளர்கள் சன் பிக்சர்ஸிடம் படத்தைக் கொடுக்க முண்டியடித்தனர். ஆனால் அது நாளடைவில் சன் பிக்சர்ஸிடம்தான் படத்தைக் கொடுத்தாக வேண்டும் என்ற கஷ்ட காலத்திற்கு தயாரிப்பாளர்களைத் தள்ளி விட்டது.
ஆரம்பத்தில் சன் பிக்சர்ஸ் காட்டிய வழி சிறப்பாக இருப்பதாக கருதிய தயாரிப்பாளர்களுக்கு, பின்னர்தான் அது திரும்பி வரவே முடியாத ஒத்தையடிப் பாதை என்பது தெரிய வந்து திடுக்கிட்டனர்.
ஆனால் அவர்கள் விழித்து எழுவதற்குள் ரெட் ஜெயன்ட் மூவிஸ், கிளவுட் நைன் மூவிஸ் என்று கருணாநிதி குடும்பத்தினர் படையெடுத்து வந்து விட்டனர். இதனால் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ், தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என முக்கோணச் சிக்கலில் மாட்டிக் கொண்டனர் தமிழ்த் திரையுலகினர். எப்படி 'பெர்முடா' முக்கோணத்தில் சிக்கினால் அதோ கதியோ, அதே நிலைதான் தமிழ்ச் சினிமாக்காரர்களுக்கும் ஏற்பட்டது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்தனை காலத்தில் வாங்கி விநியோகித்த படங்களின் எண்ணிக்கை 18 ஆகும். அவர்கள் வாங்கி விநியோகித்த முதல் படம் காதலில் விழுந்தேன். கடைசியாக விநியோகித்த படம் எங்கேயும் காதல்.
சன் பிக்சர்ஸ் இதுவரை ஒரே ஒரு படத்தை மட்டுமே தயாரித்துள்ளது. அது ரஜினிகாந்த் நடித்த எந்திரன். இப்படத்தின் மூலம் ரூ. 179 கோடி அளவுக்கு சன் பிக்சர்ஸ் லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸால், சன் டிவிக்கு கிடைத்து வந்த லாபம் கிட்டத்தட்ட 11.5 சதவீதமாகும்.
சன் பிக்சர்ஸ் மீது தற்போது பெருமளவில் மோசடிப் புகார்களும், பண முறைகேடு புகார்களும் குவி்ந்து வருவதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவிலேயே முடங்கி விடும் என்று திரையுலகில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.