New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நிலமோசடி-பேராயர் சின்னப்பா


Guru

Status: Offline
Posts: 9863
Date:
நிலமோசடி-பேராயர் சின்னப்பா
Permalink  
 


எங்களை யாரும் மிரட்டவில்லை: பேராயர் சின்னப்பா

 

சென்னை- மயிலை கத்தோலிக்க பேராயர் சின்னப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது அவர்,   ‘’சென்னை- மயிலை உயர்மறை மாவட்டம் கத்தோலிக்க திருச்சபை சட்டத்தின்படியும், சிவில் சட்டத்தின் படியும் ஒரு வலுவான நிர்வாக அமைப்பை கொண்டுள்ளது.

 இது ஒரு பதிவு செய்யப்பட்ட சங்கம். இதன் நிர்வாகத்தில் ஆலோசனை குழு, குருக்கள் மாமன்றம், நிதிக்குழு, கல்விக் குழு போன்ற குழுக்கள் உள்ளன.
 
இது போலவே, மறைந்த டிமுன்தே என்பவர் விட்டுச் சென்ற அறக்கட்டளையை நான் நிர்வாகம் செய்து வருகிறேன்.
பயன்படுத்தி ஏழைகளின் கல்வி, மருத்துவ உதவி, ஆன்மீக பணிகள் செய்யப்படுகின்றன.

அறக்கட்டளை குழுவின் மூலம் இது நிறை வேற்றப்படுகிறது. பென்ஸ் தோட்டமும் டிமுன்தே காலணியும் பெருமளவு பயன் படுத்தப்படாமல் காலியாக உள்ளன.
 
இதில் எந்த சொத்து குறித்து முடிவு எடுப்பதாக இருந்தாலும் பேராயர் தனியாக முடிவு எடுப்பதில்லை. சொத்துக்களின் வருமானத்தை அதிகரிக்க பலரும் பல கருத்துக்களை கூறுகிறார்கள். இதில் நல்ல கருத்துக்களை வரவேற்கிறோம். என்றாலும் இறுதி முடிவை குழுதான் எடுக்கும்.
 
இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை சிலர் கூறுவதுபோல் வீடு கட்டிக் கொடுக்க பயன்படுத்த முடியாது. தொண்டு பணிகளுக்குதான் பயன்படுத்த முடியும்.

உண்மை இவ்வாறு இருக்க இந்த சொத்துக்களை வைத்து கோடி கோடியாக லாபம் சம்பாதிப்பதாக சிலர் தவறாக செய்திகளை பரப்பி உள்ளனர். இது ஒருதலை பட்சமானது. மறை மாவட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
 
நான் 2005-ல் பேராயராக பொறுப்பு ஏற்ற பிறகு “பென்ஸ்” தோட்டத்தை லீசுக்கு விட முயற்சி எடுக்கப்பட்டபோது, சிலர் குறைந்த தொகைக்கு கேட்டதால் லீசுக்கு விட முடியவில்லை. இதை ஏற்கனவே பராமரித்து வந்தவரே பாதுகாவலராக இருக்கிறார்.

இப்போது அவர் மீது சர்ச்சை கிளம்பி உள்ள தால், அவரும் அதை விட்டு விடுவதாக கூறி இருக்கிறார். யாரும் இடத்தை ஆக்கிர மிக்கவில்லை. ஏற்கனவே உள்ள லீஸ் முடியும் வரை இடத்தை பாதுகாப்பதாக கூறி இருந்தார். இதில் உள் நோக்கம் எதுவும் இல்லை.
 
எங்களை யாரும் மிரட்டவில்லை. இந்த அறக்கட்டளை அமைப்பில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. எங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தவறானவை. திருச்சபை அமைப்பு தன்னிச்சை யானது அல்ல. கட்டிடங்கள், அமைப்பு உள்ளது.

எங்களை கண்காணிக்க தூதர் உள்ளார். வாடிகனுக்கு ஆண்டு தோறும் கணக்கு அனுப்பப்படுகிறது. யார் வேண்டுமானாலும் முன் அறிவிப்பு கொடுத்து விட்டு சொத்துக்கள் குறித்து கருத்துக்களை பரிமாறலாம்’’என்று தெரிவித்தார்.










__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சென்னை- மயிலை மறை மாவட்ட “சொத்துக்களை பராமரிப்பதில் முறைகேடு நடக்கவில்லை” பேராயர் சின்னப்பா பேட்டி
 
சென்னை- மயிலை கத்தோலிக்க பேராயர் சின்னப்பா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
 
சென்னை- மயிலை உயர் மறை மாவட்டம் கத்தோலிக்க திருச்சபை சட்டத்தின்படியும், சிவில் சட்டத்தின்படியும் ஒரு வலுவான நிர்வாக அமைப்பை கொண்டுள்ளது. இது ஒரு பதிவு செய்யப்பட்ட சங்கம். இதன் நிர்வாகத்தில் ஆலோசனை குழு, குருக்கள் மாமன்றம், நிதிக்குழு, கல்விக் குழு போன்ற குழுக்கள் உள்ளன.
 
இதுபோலவே, மறைந்த டிமுன்தே என்பவர் விட்டுச் சென்ற அறக்கட்டளையை நான் நிர்வாகம் செய்து வருகிறேன். இந்த அறக்கட்டளையின் சொத்துக்களாக அடையாறு போர்ட் கிளப்பில் உள்ள பென்ஸ்தோட்டம், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, கோவளம் கல்வி நிறுவனங்கள், டி.டி.கே. சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளி, ஆழ்வார் பேட்டை டிமுன்தே குடியிருப்பு ஆகியவை உள்ளன.
 
இந்த சொத்துக்களை பயன்படுத்தி ஏழைகளின் கல்வி, மருத்துவ உதவி, ஆன்மீக பணிகள் செய்யப்படுகின்றன. அறக்கட்டளை குழுவின் மூலம் இது நிறை வேற்றப்படுகிறது. பென்ஸ் தோட்டமும் டிமுன்தே கலானியும் பெருமளவு பயன் படுத்தப்படாமல் காலியாக உள்ளன.
 
இதில் எந்த சொத்து குறித்து முடிவு எடுப்பதாக இருந்தாலும் பேராயர் தனியாக முடிவு எடுப்பதில்லை. சொத்துக்களின் வருமானத்தை அதிகரிக்க பலரும் பல கருத்துக்களை கூறுகிறார்கள். இதில் நல்ல கருத்துக்களை வரவேற்கிறோம். என்றாலும் இறுதி முடிவை குழுதான் எடுக்கும்.
 
இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை சிலர் கூறுவதுபோல் வீடு கட்டிக் கொடுக்க பயன்படுத்த முடியாது. தொண்டு பணிகளுக்குதான் பயன்படுத்த முடியும். உண்மை இவ்வாறு இருக்க இந்த சொத்துக்களை வைத்து கோடி கோடியாக லாபம் சம்பாதிப்பதாக சிலர் தவறாக செய்திகளை பரப்பி உள்ளனர். இது ஒருதலை பட்சமானது. மறை மாவட்டத்துக்கு களங்கம் ஏற்படுத் துவதாகவும் உள்ளது.
 
நான் 2005-ல் பேராயராக பொறுப்பு ஏற்ற பிறகு “பென்ஸ்” தோட்டத்தை லீசுக்கு விட முயற்சி எடுக்கப்பட்டபோது, சிலர் குறைந்த தொகைக்கு கேட்டதால் லீசுக்கு விட முடியவில்லை. இதை ஏற்கனவே பராமரித்து வந்தவரே பாதுகாவலராக இருக்கிறார். இப்போது அவர் மீது சர்ச்சை கிளம்பி உள்ள தால், அவரும் அதை விட்டு விடுவதாக கூறி இருக்கிறார். யாரும் இடத்தை ஆக்கிர மிக்கவில்லை. ஏற்கனவே உள்ள லீஸ் முடியும் வரை இடத்தை பாதுகாப்பதாக கூறி இருந்தார். இதில் உள் நோக்கம் எதுவும் இல்லை.
 
எங்களை யாரும் மிரட்டவில்லை. இந்த அறக்கட்டளை அமைப்பில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. எங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தவறானவை. திருச்சபை அமைப்பு தன்னிச்சை யானது அல்ல. கட்டிடங்கள், அமைப்பு உள்ளது. எங்களை கண்காணிக்க தூதர் உள்ளார். வாடிகனுக்கு ஆண்டு தோறும் கணக்கு அனுப்பப்படுகிறது. யார் வேண்டுமானாலும் முன் அறிவிப்பு கொடுத்து விட்டு சொத்துக்கள் குறித்து கருத்துக்களை பரிமாறலாம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
பேட்டியின்போது துணை ஆயர் லாரன்ஸ் பயஸ் மற்றும் ஜான் ஆண்ட்ரு, இனிகோ ஆகியோர் உடன் இருந்தனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


Monday, September 27,2010 08:31 PM, ராஜா திண்டுக்கல் said:
அய்யா ஆயரே, சொத்து இருந்தாலே பிரச்சினை தான். பேசாமல் இயேசு சொன்ன படி, இந்த சொத்துகளை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்து விடுங்க, பின்பு ஏசுவை பின்பற்றுங்க, என்ன நான் சொல்றது சரிதானே?


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 





Mediamen-detained-attacked-by-Church









__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

டிவி' குழுவினர் மீது தாக்குதல்; சாலை மறியல்

சென்னை: சென்னை சாந்தோம் சர்ச்சில் செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்கள் தாக்கப்பட்டதால், பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவரின் பெற்றோர் இடையே தகராறு நடந்தது. இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் சார்பில் ஆசிரியர் மீது மயிலை மறைமாவட்ட பேராயர் சின்னப்பாவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இதன்பேரில், பேராயர் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட ஆசிரியை, புகார் அனுப்பியவர் மீது எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியாக பேராயரும் சேர்க்கப்பட்டார். பேராயர் கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பேராயர் வழக்கு தொடர்ந்தார். சம்மன் அனுப்பியதற்கு தடை விதித்த ஐகோர்ட், வக்கீல்கள் குழு அமைத்து பேராயரை நேரில் சந்தித்து விசாரித்து அறிக்கை அளிக்க பரிந்துரைத்தது. வக்கீல் ஜான் தலைமையில் விசாரணை நடத்த எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது.


வக்கீல்கள் குழு நேற்று காலை சாந்தோம் சர்ச் வளாகத்தில் உள்ள பேராயர் வீட்டுக்குச் சென்றது. இதை படம் எடுக்க தனியார் "டிவி' நிறுவனத்தினர் உள்ளே நுழைந்தனர். "டிவி' குழுவினரை சில பாதிரியார்கள் தாக்கி, உள்ளே அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் அங்கு கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். பேராயர் சின்னப்பா, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தாக்குதல் சம்பவம் குறித்து தனியார் "டிவி' சார்பில் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டது. தாக்குதல் சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டிவி' குழுவினர் மீது தாக்குதல்; சாலை மறியல்









__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பேராயர் நிதி திட்டம்
large_94102.jpg
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010,00:00 IST

 

சென்னை: நலிந்த மாணவ, மாணவியருக்கு உயர் கல்வி வழங்க "பேராயர் நிதி திட்டம்' துவக்க விழா சென்னை அபிராமபுரம் புனித இளைப்பாற்றும் அன்னை ஆலயத்தில் நடந்தது. இத் திட்டத்தை மயிலை உயர்மறை வாவட்ட பேராயர் சின்னப்பா துவக்கி வைத்தார்.















__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கடவுள் புரோக்கர்கள்

ஏமாற்றிப்பிழைப்பதற்கு. எவ்வள-வோ வழிகள் உலகில் உண்டு.அது கால மாற்றத்திற்கேற்ப ஒவ்வொரு சீசனுக்கும் மாறுபடும். நாகரீகம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி போன்ற காரணிகளால் ஏமாற்றுப்-பேர்வழிகளும் தங்களது உத்திகளை மாற்றிக்-கொள்வார்கள். ஆனால், ஆதிகாலம் தொட்டு ஒரு பொருளை முன்வைத்து ஒரு கும்பல் ஏய்த்துப்பிழைப்பது ஒன்று உண்டென்றால் அதுதான் கடவுளை வைத்துப் பிழைக்கும் சாமியார் வகையறாக்-கள்.

Unmai-7.jpg

நிறுவனமயமாகப்பட்ட மதங்களில் இந்த சாமியார்கள் அதிகம். குறிப்பாக அர்த்த-முள்ள இந்து மதத்தில் சாமியார்-களை யாரும் கேள்வி-கேட்பது இல்லை. இதனாலேயே அவர்கள் தமது சுகபோக வாழ்வுக்கு எளிதாக சாமியார் வேடம் போடமுடிகிறது. பக்தர்கள் பலம்,அதிலும் அரசியல் மற்றும் அரசு நிருவாகத்தில் உள்ள அதிகாரிகள் ஆகிய பக்தர்கள் பலம் இந்த சாமியார்களுக்கு இருந்துவிட்டால் இவர்கள் மாட்டுவதில்லை. அறிவியல் வளார்ந்த இந்த காலக்-கட்டத்திலும் அதன் வசதிகளை எல்லாவிதத்திலும் பயன்-படுத்திக்கொண்டு மென்மேலும் தம்மை வளப்படுத்திக்-கொள்-கிறார்கள். ஆனால், அண்மையில் வளர்ந்துள்ள அறிவியல் தொழில்நுட்பம் இவர்களின் முகத்திரையைக் கிழித்து-விட்டது. இதில். இப்போது கடைசியாக மாட்டியவர் திருவண்ணாமலை ராஜசேகர் என்ற நித்யானந்தா.

இளம் வயதிலேயே சாமியார் வேடம் தரித்து ஒரு சில யோகாசன, தியான முறை-களைக் கற்றுக்கொண்டு அதனை மூலதன-மாக்கி மடம் அமைத்து கோடி கோடியாய் குவித்தவர் இந்த நித்யானந்தா. வெளியில் பிரம்மச்சரிய வேடமும், உள்ளே நடிகை-களுடன் கும்மாளமும் அடித்த இவரது ஆட்டத்தை ஒரு கேமரா படம்-பிடித்துவிட அது இந்திய துணைக்-கண்டத்-தையே உலுக்கிவிட்டது. ஆனால், இந்துத்து-வாக்கள் மட்டும் வாய்மூடியே இருந்தனர். அப்படி இருந்த-தோடு மட்டுமல்லாமல், அவரது சொத்துக்-களை காப்பாற்ற மறைமுக ஆலோ-சனைகளும் வழங்கியிருக்கிறார்கள். எப்படியும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவைத்-துவிடலாம் என்றுதான் அவர்கள் திட்டமிட்டு ஹரித்துவாருக்கு இந்த நித்தியானந்தாவை அனுப்-பிவைத்தார்கள். அது புண்ணிய-பூமியல்லவா? அங்கே கும்பமேளாவுக்காகக் குவிந்த காவி-களுடன் இந்த இளம் காவியும் இணைந்து மறைந்தும் திரிந்தது. வழக்கு கர்னாடகாவுக்கு மாற்றப்பட்டதுமே அது இந்த்துத்துவ பா.ஜ.க ஆளும் மாநில-மாதலால் நித்தியானந்தா எளிதாக தப்பிவிடுவார் என்றுதான் இதழ்க-ளெல்லாம் எழுதின. ஆயினும் முதலில் வெளியான பாலியல் முறைகேடு தவிர, நிதிமோசடி, கொலை-மிரட்டல், மத உணர்வை புண்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் இந்தியாவில் மட்டு-மல்லாமல், அமெரிக்காவில் உள்ள இவரது ஆசிரமம் தொடர்பாகவும் டக்ளஸ் மெக்கெல்லர் என்பவர் கலி-போர்னியா அட்டர்னி ஜெனரலிடம் புகார்கள் அளித்தது என குவிந்து கொண்-டேபோக வேறு-வழியில்லாமல் கர்நாடக காவல்துறை நித்யானந்தாவைத்தேடி இமாச்சலபிரதேசம் தேடி புறப்பட்டது. அங்கு உள்ள சோலன் மாவட்டம்,மாம்லிக் என்ற கிராமத்தில் கடந்த ஒன்றரை மாதமாக பதுங்கியிருந்த நித்யானந்தாவை காவலர்கள் ஏப்ரல் 21 அன்று கைது செய்தனர்.

இந்நிலையில், இவரது பிடதி ஆசிரமத்-திலும் சோதனையிடப்பட்டு அங்கிருந்து ஏராள-மான ஆவணங்களும் ,வீடியோ சி.டி.-க்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பெங்களூரு கொண்டுவரப்பட்டுள்ள நித்யானந்தா நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்-பட்டு போலிஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த இந்து மத சாமியாரின் நிலை இப்படி இருக்க இன்னொருபுறம் கிறித்துவ சாமியார்களான பாதிரியார்கள் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அய்ந்து வருடங்களாக ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த பிரச்சினை, அமெரிக்காவை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது. அதிர வைத்த சர்ச்சைகளின் நாயகன் தமிழக பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால். அமெரிக்காவில் உள்ள மினிசோட்டா நகரில் கிராக்ஸ்டன் தேவாலயத்தில் மூன்று வருட கான்ட்ராக்டில் (2004இல்) ஊழியம் செய்யச் சென்றவரே இந்த பாதிரியார்.

பெண்களிடம் இரக்கம் காட்டுவதுபோல் காட்டி, பின்பு சாதுரியமாக, அந்தப் பெண்களின் மகள்களைத் தன் வலையில் சிக்க வைத்திருக்கிறார். சில பாதிரியார்கள் எச்சரிக்கை செய்தபோது, அதனைக் கண்டு-கொள்ள வில்லையாம் ஜெயபால். 14,15 வயது பெண்களுடன் நெருக்கமாக இருந்ததாகவும், இரு பெண்களுடன் உல்லாசமாகச் சுற்றியதா-கவும் பேராய ஊழியர்களால் குற்றம் சாட்டப்-பட்டுள்ளாராம்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்கு விஷயம் தெரிந்து, பிரச்சினையாகியுள்ளது. அக் குழந்தைகளின் பெற்றோர் அமெரிக்க பேராயர் விக்டர் பால்கேயிடம் புகார் கொடுத்-தனராம். இந்நிலையில், ஜெயபால் தனது தாயாருக்கு உடல்நலம் சரியில்லை என்ற காரணம் கூறி, இந்தியாவுக்குத் திரும்பி-விட்டாராம் (2005இல்). ஆரம்பநிலை விசாரணை-யின் போதே ஜெயபாலை உடனடி-யாக திருச்சபையில் இருந்து நீக்குங்கள் என்று விக்டர் பால்கே தமிழக பேராயருக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்-தார்.

உதகை பேராயர் அந்தோணிசாமியோ, ஜெயபாலுக்கு, தக்க அறிவுரை கூறப்-பட்டுள்ளது. இனிமேல் யார் வம்புக்கும் போக-மாட்டார் என்று பதில் கடிதம் எழுதி அனுப்பினாராம். இதனால் கொதித்துப்-போன விக்டர் பால்கே, ரோம் மாநகரில் உள்ள வாடிகன் தலைமை-யகத்திற்கே கடிதம் ஒன்றினை அனுப்பி-னா. அக்கடிதத்தில், ஜெயபால் ஒரு பெண் பித்தர்; தேவாலயப் பணிகளுக்கே தகுதியற்றவர்; ஆசைக்கு இணங்காவிட்டால் உன் குடும்-பத்தையே அழித்துவிடுவேன்; நான் சொல்வ-தைச் செய்யாவிட்டால் தெய்வகுத்தம் என்றெல்லாம் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியதாகவும் விவரித்-துள்ளார்.

அமெரிக்க சட்டப்படி, மைனர் சிறுமியை பலாத்காரம் செய்தால் 35 வருட கடுங்காவல் தண்டனை உண்டு. தமிழகத்திலுள்ள கத்தோலிக்க திருச்சபையினர் உதவி செய்யத் தயங்கிய நிலையில், தாங்களாகவே முயற்சி-செய்து ஜெயபால் இருக்குமிடத்தைக் கண்டறிந்துள்ளது அமெரிக்க காவல்துறை. ஜெயபாலை நாடு கடத்தக் கோரி வாஷிங்டனிலுள்ள இந்திய தூதரகம், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், இந்திய வெளியுறவுத்துறை என்று எல்லோரும் ஒருமித்த குரல் கொடுக்க, தமிழகத்திலுள்ள பேராயர்களும் இதற்கு ஒப்புதல் அளித்-துள்ளார்கள்.

இப்படியொரு சூழ்நிலையில், -ஜயபால் தன் விவகாரத்தில் எல்லாம் வெறும் புகார்-களாகத்தானே இருக்கு. நான் தப்பு செய்திருந்-தால், அதற்கான ஆதாரங்களை அடிப்-படையாக வைத்து எஃப்.ஐ.ஆர், சம்மன் போன்ற விஷயங்கள் தயாராகி அவை-யெல்லாம் நம்ம நாட்டுக்கு வரட்டுமே. கோர்ட் சொல்லும்வரை நாம் நிரபராதி-தானே! என்று சாதாரணமாகக் கூறியுள்-ளாராம்!

மேலும் வேண்டுமென்றே பொய்ப்புகார்-களை எழுப்பி, தன் பெயரைக் கெடுப்பதாகக் கூறியதோடு இது பச்சை பிளாக்மெயில் என்றும் சொல்லியுள்ளாராம். ஜெயபாலுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதாகக் கூறப்படும் ஊட்டி ஆயர் அமல்ராஜ்க்கு, ஜெயபாலை விசாரணைக்காக அமெரிக்கா அனுப்பி-வைக்கும்-படி சென்னை பேராயர் சின்னப்பா உத்தரவிட்டுள்ளாராம்.

உட்கட்சிப் பூசல் என்பதைப் போல மத உட்பூசலே (ப்ராட்டஸ்டண்ட், கத்தோலிக்க சர்ச்சுகளுக்கு இடையேயுள்ள பிளவே) தன்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்குக் காரணம் என்று விளக்கமும் அளித்-துள்ளார். இப்போது நித்யானந்தா கைதாகியிருக்-கிறார். இந்த ஜெயபாலின் கதி என்ன என்பது இன்னும் சில காலத்தில் தெரியவரலாம். மனித இன இயல்புக்கு மாறாக பிரம்மச்சரியம் என்பதை புனிதப்படுத்தி அதனை முன்வைத்து பிரச்சாரம் செய்து தமது மதத்திற்கு ஆள்பிடிக்-கின்றனர் மதவாதிகள். ஆனால், எதையும் மீறி மனித இயல்பு வெளிப்பட்டுவிடவே மதங்களின் புனிதக்-கட்டு-கள் உடைந்து விடுகின்றன.

கல்வியின் வாயிலாகவும், கடவுள்,மதம் தொடர்பான உண்மைகளை ஊடகங்களும் கற்பிக்கவேண்டும். சட்டமும், நீதியும் முறையாகச்-செயல்பட்டு தண்டிக்கவேண்டும். இல்லை-யென்றால் இந்த மோசடிப்-பேர்வழிகள் உருவாகிக்கொண்டுதான் இருப்பார்கள்.










__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 









கிறிஸ்தவ தனி ஒதுக்கீடு ரத்து
Monday, 13 October , 2008, 14:43
சென்னை

கிறிஸ்தவ சமுதாயத்தினரின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு என அரசு 3.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கு என அறிவித்த ஆணையைத் திரும்பப் பெறுவது என்று அரசு முடிவெடுத்திருப்பதாக முதலமைச்சர் மு. கருணாநிதி அக்-13 அன்று அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டில் உயர் கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்பிலும் கிறிஸ்தவர்கள் பெற்ற வாய்ப்புகளைவிட இந்தத் தனி இடஒதுக்கீடு மூலம் மிகக் குறைவாகவே பெற முடிகிறது என்று கிறிஸ்தவ சமுதாயத்தினர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அந்தக் கோரிக்கையை மிகுந்த பரிவோடும் கனிவோடும் ஆய்வு செய்த முதலமைச்சர், இத்தகைய உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் அக்-13 அன்று கிறிஸ்தவ சமுதாயத்தின் பிரதிநிதிகளான சென்னை மயிலை பேராயர் சின்னப்பா, நாகர்கோயில் பேராயர் பீட்டர் ரெமிஜியஸ், சென்னை சிஎஸ்ஐ பேராயர் தேவசகாயம், நெல்லை சிஎஸ்ஐ பேராயர் ஜெயபால் டேவிட், நாகர்கோவில் சிஎஸ்ஐ பேராயர் தேவகடாட்சம் மற்றும் தனிஸ்லாஸ் கிளாட்சன் ஜெய்சிங், பெனி, பிரகாஷ் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கொரடா பீட்டர் அல்போன்ற சிறபானமையினர் நல ஆணையத்தின் தலைவர் வின்சன்ட் சின்னதுறை, பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் முதலமைச்சர் மு. கருணாநிதியை நேரில் சந்தித்து, பிற்படுத்தப்பட்ட கிறஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனி இடஒதுக்கீடு குறித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

மாநில அரசு பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைத் திரும்பப் பெற்று முன்பு இருந்தபடியே பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலேயே தாங்கள் தொடர்ந்து இருக்க வாய்ப்பு அளிக்கும்படி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு இந்த தனி ஒதுக்கீடு முன்பு அவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகளைக் குறைத்து இருப்பதை எண்ணிப் பார்த்து தனி ஒதுக்கீட்டைத் திரும்பப் பெறுவது என்றும், சட்டத்தில் இதற்கென தக்க திருத்தம் மேற்கொள்வது என்றும், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இந்தத் தனி ஒருக்கீட்டு ஆணையை நடைமுறைப்படுத்துவது என்றும் அரசு முடிவு எடுத்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, டாக்டர் பொன்முடி, சுரேஷ் ராஜன், கீதா ஜீவன் மாநில திட்டக் குழு துணைத் தலைவர் நாகநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்






__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜே‌ப்‌பியா‌ர் ‌நிறுவன‌ம் வெ‌ளியேற 1 வார‌ம் கெடு‌: பேராய‌ர் சி‌ப்ப‌ன்னா

டிமா‌ன்டி அற‌க்க‌ட்டளை ‌நில‌த்த‌ி‌ல் இரு‌ந்து ஜே‌ப்‌பியார் ‌நிறுவன‌ம் வெ‌ளியேற ஒரு வார‌ம் கெடு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக செ‌ன்னை மறை மாவ‌ட்ட பேராய‌ர் ஏ.எ‌ம்.‌‌சி‌ன்ன‌ப்பா கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சியபோது இதனை அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.


எ‌ம்.‌‌ஜி‌.எ‌ம் மாறனு‌க்கு எ‌திரான வழ‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌‌தில‌் ‌விசாரணை‌யி‌ல் உ‌ள்ளது எ‌ன்று கூ‌‌றிய ‌சி‌ன்ன‌ப்பா, எ‌ம்‌‌.ஜி.எ‌ம் மாறனை வெ‌‌ளியே‌ற்ற ஏ‌ற்கனவே வழ‌க்கு‌த் தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்றா‌ர்.

அற‌க்க‌ட்டளை ‌வி‌தியை ‌மீ‌றி 150 ஏ‌க்க‌ர் ‌நிலம‌் ஜே‌ப்‌பியா‌ர் ‌நிறுவன‌த்‌தி‌ற்கு ‌கொடு‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் ச‌ர்‌ச்சை எழு‌ந்தது. இ‌ந்த ச‌ர்‌ச்சை எழு‌ந்ததா‌ல் ஜே‌ப்‌பியா‌ர் ‌நிறுவன‌ம் வெ‌ளியேற ஒரு வார‌ம் கெடு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ‌சி‌ன்ன‌ப்பா கூ‌றினா‌ர்.
50 ‌‌கிரவு‌ண்‌ட் ‌நில‌ம் எ‌ம்.‌‌ஜி.எ‌ம் மாறனு‌க்கு வழ‌ங்க‌ப்ப‌ட்ட‌திலு‌ம் ச‌ர்‌ச்சை எழு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌‌த்த‌க்கது. டிமா‌ன்டி அற‌க்க‌ட்டளை ‌நில‌த்த‌ி‌ல் இரு‌ந்து ஜே‌ப்‌பியார் ‌நிறுவன‌ம் வெ‌ளியேற ஒரு வார‌ம் கெடு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக செ‌ன்னை மறை மாவ‌ட்ட பேராய‌ர் ஏ.எ‌ம்.‌‌சி‌ன்ன‌ப்பா கூ‌றியு‌‌ள்ளா‌ர்.செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சியபோது இதனை அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.எ‌ம்.‌‌ஜி‌.எ‌ம் மாறனு‌க்கு எ‌திரான வழ‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌‌தில‌் ‌விசாரணை‌யி‌ல் உ‌ள்ளது எ‌ன்று கூ‌‌றிய ‌சி‌ன்ன‌ப்பா, எ‌ம்‌‌.ஜி.எ‌ம் மாறனை வெ‌‌ளியே‌ற்ற ஏ‌ற்கனவே வழ‌க்கு‌த் தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்றா‌ர்.அற‌க்க‌ட்டளை ‌வி‌தியை ‌மீ‌றி 150 ஏ‌க்க‌ர் ‌நிலம‌் ஜே‌ப்‌பியா‌ர் ‌நிறுவன‌த்‌தி‌ற்கு ‌கொடு‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் ச‌ர்‌ச்சை எழு‌ந்தது. இ‌ந்த ச‌ர்‌ச்சை எழு‌ந்ததா‌ல் ஜே‌ப்‌பியா‌ர் ‌நிறுவன‌ம் வெ‌ளியேற ஒரு வார‌ம் கெடு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ‌சி‌ன்ன‌ப்பா கூ‌றினா‌ர்.50 ‌‌கிரவு‌ண்‌ட் ‌நில‌ம் எ‌ம்.‌‌ஜி.எ‌ம் மாறனு‌க்கு வழ‌ங்க‌ப்ப‌ட்ட‌திலு‌ம் ச‌ர்‌ச்சை எழு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌‌த்த‌க்கது.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard