End of the World” .

 மத்.28:20;  உலகத்தின் முடிவு பரியந்தம் .. நான் உங்களுடனே இருக்கிறேன். உலகத்தின் முடிவு என்றால் எரிந்து அழிந்துபோகும் என்று சாதாரணமாக அனைவரும் கூறுவர்.

முதல் உலகம் ஜலப்பிரளயம்:
ஆதி.6:11-13;  பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. நான் அவர்களை பூமியோடுங்    கூட அழித்துப்போடுவேன். 
ஆதி.6:17 ;  பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம். 
2பேது.2:5;  பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல் தேவன் அதை ஜலப்பிரளயத்தில் அழித்தார். 
2பேது.3:6;  துன்மார்க்க மனிதர்களும், அவர்களுடைய பொல்லாத ஏற்பாடுகளும் அழிக்கப்பட்டது. சொல்லர்த்தமான பூமி  அழிக்கப்படவில்லை.

ஏனெனில், 
ஆதி.8:13-17 ஜலப்பிரளயத்திற்கு பிறகு நோவாவின் குடும்பமும்,சகலஜுவஜந்துக்களும் ,
 இப்பூமியில், அரராத் என்னும் மலையின் மேல் இறங்கி பிறகு இப்பூமியில் ஜூவராசிகள் பெறுகினது. வேதாகம பாஷையின் படி “இவ்வுலக முடிவு” என்பது ஒரு சந்ததியோட அழிவு. (or) யுக ஏற்பாட்டின் முடிவைக் குறிக்கிறது. 
  
பூமி
ஏசா.45:18;   வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காக செய்து படைத்து ….
சங்  115:16;  வானங்கள் கர்த்தருடையவைகள், பூமியையோ மறுப்புத்திரருக்குக் கொடுத்தார்.
பிர.1:4;  ஒரு சந்ததி போகிறது; மறுசந்ததி வருகிறது. பூமியோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது. (சாலமேன் ஞானி) 
சங்.104:5;  பூமி ஒரு போதும் நிலைபேறாதபடி அதின் ஆதாரங்கள் மேல் அதை ஸ்தாபித்தார். 
சங்.119:90 ;  பூமியை உறுதிப்படுத்தினீர். அது நிலைத்திருக்கிறது. 
 

2வது உலகம்                    

துன்மார்க்க மனிதர்களும், அவர்களுடைய பொல்லாத ஏற்பாடுகளும் அழிக்கப்படும். சொல்லர்த்தமான பூமி  அழிக்கப்படாது.

எபி.1:10-12;  கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர். வானங்கள் உமது கரத்தின் கிரியைகளாயிருக்கிறது. அவைகள் அழிந்துபோம். நீரோ நிலைத்திருப்பீர். அவைகளெல்லாம் வஸ்திரம் போல் பழைமையாய்ப்போம். ஒரு சால்வையைப் போல் அவைகளை சுருட்டுவீர் . அப்பொழுது மாறிப்போம். 
சங்.102:25-27; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர். 
2பேது.3:10;  கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்.அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம். பூதங்கள் வெந்து உருகிப்போம்.பூமியும் அதில் உள்ள கிரியைகளும் எரிந்து  அழிந்துபோம்.
வெளி .7:14;  வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று. மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவ விட்டு அகன்று போயிற்று. 
வெளி.7:17;  இவைகள் எல்லாம் அவருடைய கோபாக்கினையின் நாளில் நடக்கும்.

அப்பொழுது இருந்த    இப்பொழுது இருக்கிற        புதிய வானமும் 
வானமும் பூமியும்      வானமும் பூமியும்              புதிய பூமியும்

முதல் உலகம்             2வது உலகம்                     3வது உலகம்

    ஜலம்                            அக்கினி                         அழியாதபூமி

----------------6000 வருடங்கள்------------------------------       1000 வருடங்கள்........

வானம் - வானத்தில் உள்ள ஏற்பாடுகள்; பூமி – பூமியிலுள்ள ஏற்பாடுகள்;
முதல் உலகத்தில் இருந்த வானமும் பூமியும் அழிந்தது போல, இப்பொழுது இருக்கிற வானமும் பூமியும் அழியும்.

உலக முடிவின் போது ( அதாவது இப்போதுள்ள சாத்தானின் யுகம் முடிவடையும்போது) என்ன நடக்கும்?
     “மகா உபத்திரவம்”
மத்.24:6 ;  முடிவு உடனே வராது. 
மத்.24:8 ; வேதனைகளுக்கு ஆரம்பம்.

மத்.24:21,22 ;  உலகம் உண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும் இனிமேல் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். (மாற் 13:19;) 
அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப் போவதில்லை. 
தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் நிமித்தமோ அந்நாட்கள் குறைக்கப்படும். (மாற் 13:20)
 

லூக்.21:26;  வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். ஆதலால் பூமியின் மேல் ஆபத்துக்குப் பயந்து எதிர்பார்த்து இருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம். (ஏசா.34:1-3,4)

லூக். 21:35; பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர் மேலும் அது ஒரு கண்ணியைப் போல வரும். (ஏசா 24:17)

                                                                      7வது கலசம்.  

 சத்தங்களும்,இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின. பூமி மகவும் அதிர்ந்தது. “பூமியின் மேல் மனுர்கள் உண்டான நாள் முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சி உண்டானதில்லை.” வெளி.16:17,18;
வெளி.16:21; அந்த கல் மழையினால் உண்டான வாதையின் நிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள். அந்த வாதை மகா கொடியதாயிருந்தது.

ஏசாயா.24-ஆம் அதிகாரம்; ஏசாயா.34-ஆம் அதிகாரம் 
எரே.25:31-38; 33- பூமியின் மேல் எருவாவார்கள். 
தானி.12:1 ; ஆபத்துக்காலம் வரும் 
செப்.1:18 . தேசமெல்லாம் அழியும் 
(செப்.1:15-18.) தேசத்தின் குடிகளெல்லாம் சடிதியாய் நிர்மூலம் பண்ணுவார். 
இவைகளிலிருந்து,யுத்த ஆயுதங்களாலும், அணு குண்டுகளினாலும்,அக்கினியினாலும் 
விவாயுவினாலும் பட்டணங்களெல்லாம் சுட்டெரிக்கப்பட்டு நாசமாக்கப்படும். தேசங்கள் பிரேதங்களால் நிறைந்து எருவாக்கப்படும்.

                                                                             ராஜாக்கள்

சங்கீதம்.2:10; ராஜாக்களை அழிப்பார். ராஜ்யங்களையம் அழிப்பார். 
                                                                  

                                                                      மதத் தலைவர்கள்

ஏரே 25:34-38 மதத் தலைவர்கள் . மத ஸ்தாபனங்கள் அழிப்பார். 
                                                               

                                                                      ஜசுவரியவான்கள் 

யாக்கோப்பு 5:1-5 ; ஜசுவரியவான்கள் . அவர்கள் ஆஸ்தியும் அழியும்.

                                               சாட்சியாகப் பிரசங்கிக்கப்பட வேண்டும்

மத் 24:14 ; ராஜ்யத்தினுடைய இந்த சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள 
சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். அப்பொழுது முடிவு வரும். ( முந்தி பிரசங்கிக்கப்பட வேண்டும். மாற் 13:10) 

                                                                பாழாக்குகிற  அருவருப்பு

மத் 24:15;பாழாக்குகிற  அருவருப்பைக் குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.

தானி 9:27; அருவருப்பானவன் செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான். தானி 12:6 ஆச்சரியமானவைகளின் முடிவு வர எவ்வளவு காலம் செல்லும்?
தானி 12:7  ஒரு காலமும்------------------ 1 வரும்       =    360 நாள்கள்
                           காலங்களும்------------  2 வரும்       =    760 நாள்கள்
                           அரைக் காலமும்----  3 ½ வரும்    =  1260 நாள்கள்
                                                             360 × 3 ½          =  1260 வருங்கள்.             பாழாக்குகிற  அருவருப்பு கி.பி.539-ல் தொடங்குவதாக வைத்து கொண்டால்  கி.பி.539 +கி.பி. 1260=கி.பி.1799  பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவு பெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறி தீரும் . 
தானி 12:9 ;  முத்தரிக்கப்பட்ட இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை முடிவு காலமாகிய கடைசி காலத்தில் உணர்ந்து கொள்ள கூடிய காலம். 
(தானி 12:10 ) ........வரைக்கும் காத்துயிருந்து சேருகிறவன் பாக்கியவான். (12:12)பாக்கியமான காலம்.
 

                     மகா வேசியாகிய R.C சபையை எப்பொழுது பழி வாங்குவார்?
வெளி 19:2 …. தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே. …
வெளி.17 ,18 அதிகாரத்தில் சொல்லப்பட்ட மகா வேசியாகிய R.C சபையை எப்பொழுது பழி வாங்குவார்.வெளி.6:9-10 ; எது வரைக்கும் பழி வாங்காமலும் இருப்பார்?
வெளி 6:11 ; அன்றியும் அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப் போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள்  சகோதருமானவர்களின் தொகை 1,44,000 நிறவாகுமளவும் இன்னும் கொஞ்ச காலம் இளைப்பாற வேண்டும். 
 இந்த வார்த்தைகளை உற்றுப் பார்க்கும் போது, கி.பி.1799-ல் பாப்பு பயஸ் VI-ஐ நெப்போலியன் சிறை பிடித்த போது R.C  சபையை தேவன் தம்முடைய ஊழியக்காரருக்காக பழி வாங்கி விட்டார் என்று கூறுவோமாகில்,
வெளி.6:11ன் படி 1,44,000 தொகை கி.பி. 1799 ல் நிறைவு பெற்றுயிருக்குமே.

இதே கருத்தை தானி 7:21,22 .                                                                                      
      1. நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும் 
      2. நியாவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்கு கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்யத்தை சுதந்தரித்து கொள்ளுமட்டுமாகவும்,
தானி 7:22. (இந்த கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம் பண்ணி, அவர்களை மேற்கொண்டது.)
 கி.பி.1799 ல் இந்த கொம்பு (R.C  சபை ) அழிக்கப்பட்டது எனில் 
1. நீண்ட ஆயுசுள்ளவர் வந்துவிட்டார்.
2. நியாய விசாரிப்பு செய்யும் அதிகாரம் பரிசுத்தவான்களுக்கு கொடுக்கப்பட்டது. 
3. பரிசுத்தவான்கள் ராஜ்யத்தை சுதந்தரித்து கொண்டார்கள். 
என்று பொருள்படும்.
இதை வெளி 20:4 ; கி.பி 1799-ல் நியாய விசாரிக்க அதிகாரம் கொடுக்கப்பட்டது என்றால்,அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனே 1000 வரும் அரசாண்டார்கள் என்ற வார்த்தை படி 1000 வருட அரசாட்சி ஆரம்பமாயிருக்குமே! மேலும் புதியவானமும் புதிய பூமியும் உண்டாகி மூன்றாம் உலகம் ஆரம்பமாயிருக்குமே!

 

மகா பாபிலோனுக்கு எப்படிப்பட்ட அழிவு ஏற்படவேண்டும்?                                       

மகா பாபிலோனுக்கு கி.பி. 1799 ல் அழிவு ஏற்பட்டது எனில் எப்படிப்பட்ட அழிவு ஏற்பட்டது ! எப்படிப்பட்ட அழிவு ஏற்படவேண்டும்? என்று சிந்திப்போமாகில் 
வெளி 18:21 இந்த மகா பாபிலோன், இனி ஒரு போதும் காணப்படாமற்போகும். 
வெளி  17:16 அவளை நெருப்பினால் சுட்டெரித்து போடுவார்கள். 
வெளி 18:8 அவள் அக்கினியாலே சுட்டெரிக்கப்படுவாள். 
வெளி 18:6 அவளுடைய கிரியைகளுக்கு தக்கதாய் அவளுக்கு இரட்டிப்பாய் கொடுத்து தீருங்கள்.”
 இப்படி அழிவு வந்த பின்,
 வெளி 18:22,23 எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதில்லை. மகா பாபிலோனுடைய சத்தமும், அவளுடைய குமாரத்திகளுடைய சத்தமும் இன்னும் முன்னிருந்ததைப் பார்க்கிலும் அதிகமாய் கேட்கப்படுகிறதே! இவர்கள் இருவரையும் இன்னும் காணுகிறோமே! மத் 24:24 ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற பாபிலோனின் குமாரத்தின் ஆதிக்கத்தை அதிகமாக காணுகிறோமே!

சகரி. 2:7 ல் சொல்லப்பட்டபடியே பாபிலோன் குமாரத்திகள் இன்னும் இருக்கும் வரையில் சியோனும் இன்னும் இருக்கும் என்று அறிகிறதினாலே. 
வெளிப்படுதலில் 18:21 ல் சொல்லப்பட்ட “ காணப்படாமற் போகும்” என்ற அழிவு இன்னும் ஏற்படவில்லை என அறியலாம்

இன்னும் ஒரு சாட்சி : 
 தானி 7:21 -ல் சொன்னபடி நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டுமாக, பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டது. 
 

                                                        அத்திமரம் உவமை (லூக்.21:29-31)

29. அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
 30. அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.
 31. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
 32. இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்.24:32-33, என்றபடி

(அத்திமரம்--இஸ்ரயேல் வம்சத்தார் ; அத்திமரம் துளிர்த்தது--கி.பி. 1948)
கி.பி. 1948-ல் தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்பதிலே எந்த மாற்றமும் இல்லை.
                                

                                     அர்மகெதோன் - 6வது கலசம் வெளி.16:16  
 அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களை கூட்டிச் சோர்த்தான். 
 (எசேக்கியேல் 38-39 அதிகாரங்களில் கூறப்பட்டுள்ளது. )
 38:18-23; கோகு, மாகோகு (ரஷ்யா) அவர்களோடு கூட (38: 5-6) திரளான சேனைகள் எருசலேமுக்கு விரோதமாக வரும்காலத்தில் (எருசலேமானது 
• சுகமாய் குடியிருக்கும்
• மதில்கள் அற்ற கிராமங்கள்
• தாழ்பாள்கள் இல்லை
• 38:12 கதவுகள் இல்லை ) 
சத்துருக்களை மகா பயங்கரமான தண்டனையோடு கூட தேவனே அழித்துப் போடுவார். இஸ்ரயேலருக்கு தேவனே பாதுகாப்பாக இருப்பார். 
சகரியா.14:12-15; 14:1-3எருசலேமுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறவர்களுக்கு வரும் அழிவு.சகரியா.12:1-6 சகரியா 12:5. தேவன் துணையால் பெலனானோம் யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்திலே  சொல்வார்கள்.
அநேகம் ஜாதிகள் …
எசே 38:23  .. அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள். 
எசே 39:21 என் மகிமையை நான் புறஜாதிகளுக்குள்ளே விளங்கப் பண்ணுவேன். …. எல்லா  ஜாதிகளும் காண்பார்கள். 
39:22 ; இஸ்ரயேல் வம்சத்தாரும் அறிந்து கொள்வார்கள். இப்படி இஸ்ரயேலர் நிமித்தமாக நடக்கப்போகும் அர்மகெதோன் என்னும் யுத்தமே, உலகிலுள்ள சகல ராஜ்யங்களையும் அழிக்கப்போகும். மகா  உபத்திரகாலமாய் தொடர்ந்து சாத்தானுடைய யுகமாகிய இந்த 2ஆம் உலகம் முடிவடையும். 

                                               2ஆம் உலகமுடிவு.

1. மாம்ச இஸ்ரயேலர் -------------விரோதமான ஜனங்களின் அழிவு.
2. ஆவிக்குரிய இஸ்ரயேலர்-----விரோதமான மகா பாபிலோன் அழிவு. 
                                       1 +2 = அழிவு உலக முடிவு.

மாமிச சரீரத்தில் ஆளுகை             ஆவிக்குரிய சரீரத்தில் ஆளுகை
செய்கிறவர்கள்                       +        செய்கிறவர்கள்                                 =  உலக முடிவு
தெரிந்து கொள்ளபடுதல்                  தெரிந்து கொள்ளபடுதல்   
முடிவடைதல்                                 முடிவடைதல்

     
                                        2ஆம் உலகம் அக்கினியால் அழியுமா?

 முதல் உலகம் சொல்லர்த்தமான ஜலத்தினாலே அழிந்தது போல இரண்டாவது உலகம் சொல்லர்த்தமான அக்கினியால் அழியுமா?
மத் 24:36 “ நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். “
2பேது,3:5-6 பூர்வ காலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும்…
3:7  இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு ….
  முதல் உலகத்தில் சொல்லப்பட்ட ஜலம் என்ற வார்த்தை சொல்லர்த்தமானது போல அந்த சொல்லர்த்தமான வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு …. 
                                      சோதோம் கொமோரா திருஷ்டாந்தம்

 
 2பேது.2:6 சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்து போட்டு, ஆக்கினைக்குள்ளாக தீர்த்து பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளை திருஷ்டாந்தமாய் வைத்து. …
2பேது.3:10 பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.
3:11 .  இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவ பக்தியும் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். 
3:17 …  இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால் அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி, விழுந்து போகாத படிக்கு எச்சரிக்கையாய் இருந்து … அவரை அறிகிற அறிவிலே வளருங்கள்.

லூக்.17:29 ; லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்டநாளிலே வானத்திலிருந்து அக்கினியும், கந்தகமும் வருஷித்து எல்லாரையும் அழித்துப் போட்டது. 
லூக்.17:30  ; மனுகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.