New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Why Quran Burning


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Why Quran Burning
Permalink  
 


From Dove World Outreach Center’s website states the 10 REASONS why burn a Koran

TEN REASON WHY BURN A KORAN according to TERRY JONES


  1. Koran denies that JESUS CHRIST is a SON of GOD. Which the bible teaches a lot.
  2. Koran doesnt have its eternal origin. Its not Godly Writings are human in origin.
  3. Koran teaching includes Arabian paganism and idolatry, rites and rituals.
  4. Writings of Muslim’s prophet Mohammad were recorded 120 years after his death. May be Mohammad never existed.
  5. Mohammad’s life is not good. His first Meccan period of leadership have been religiously motivated but the 2nd Medina period was corrupted by power and wordly ambitions. These attitude is what GOD hates.
  6. The Islamic law is totalitarian in nature. Theres no separation between state and the church. Its totally Irrational.
  7. Islam is not compatible with democracy and human rights. The notion of a moral individual capable of making decisions and taking responsibility for them does not exist in Islam. The attitude towards women in Islam as inferior possessions of men has led to countless cases of mistreatment and abuse for which Moslem men receive little or no punishment, and in many cases are encouraged to commit such acts, and are even praised for them. This is a direct fruit of the teachings of the Koran.
  8. A Muslim does not have the right to change his religion. Apostasy is punishable by death.
  9. Deep in the Islamic teaching and culture is the irrational fear and loathing of the West.
  10. Islam is a weapon of Arab imperialism and Islamic colonialism. Wherever Islam has or gains political power, Christians, Jews and all non-Moslems receive persecution, discrimination, are forced to convert. There are massacres and churches, synagogues, temples and other places of worship are destroyed.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Australian burns Quran and Bible

13 Sep 2010 12:05:24 PM IST

MELBOURNE: An Australian has posted a video of himself burning the Quran and the Bible on video sharing website YouTube, drawing widespread criticism, a media report said Monday.

 

Queensland University of Technology's Alex Stewart has taken leave from his non-academic position as a commercial contracts lawyer and now expects to be sacked, brisbanetimes.com.au reported Monday.

 

The university is now probing the 12-minute homemade video, put on YouTube Friday.

 

The Islamic Association of Australia Monday morning called on Muslims to remain calm following widespread criticism of the act.

 

The Catholic Church, QUT and the Queensland Law Society have also condemned the video clip.

 

Sheik Muhammad Wahid, president of The Islamic Association of Australia, urged "hurt" Muslims not to retaliate.

 

"Of course we're hurt ... but I would urge my Muslim fellow men to respond with caution and with responsibility," he was quoted as saying.

 

"They should be careful when they respond upon these issues. We are a community of tolerance (and) understanding.

 

"Of course people will be angry but I urge they should not take the law into their own hands and they should show their response in a positive way to explain (to) the whole Australian public that we must live in a way that we respect each other's faith and practices."

 

Bishop Michael Putney, a spokesman for the Catholic Church, said Stewart had caused pain.

 

"I think some will get a bit cross with him and others will say what a silly fellow he is," Bishop Putney, who chairs the Australian Catholic Church's committee for ecumenism and inter-religious relations, was quoted as saying.

 

"(Stewart) has caused pain in people and may incite anger in people and I don't think that's ever acceptable. I would think his behaviour gives atheism a bad name and I suspect the university will be a little bit embarrassed by what he's done."

 

Stewart, who is an atheist, seems to be smoking marijuana that is rolled in pages from the religious texts. He then rates which "burns better".

 

Stewart's video comes close on the heels of a US pastor threatening to burn the Quran to mark the 9/11 anniversary. The pastor's threat sparked global outrage.

 

On Monday morning, Stewart met the varsity management and agreed to take leave, a university spokesperson said.

 

He fears that won't be permitted to return to the Brisbane campus.

 

"I'm screwed. I think I will lose my job over this. Damn it," he wrote on a website for Brisbane Atheists.

 

He clarified that that the substance shown in the video was lawn clippings, the media report said.

 

In the video, he indicated the substance of being marijuana and pre-empted a police probe.

 

"I probably won't appear on webcam again after the police come and arrest me."

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜெ.எம், http://www.jeyamohan.in/?p=11930

இந்து மதம் சார்ந்த குறிப்பிட்ட ஏதோ ஒரு சாதியில் பிறந்து விட்டாலும் – மதம்,சாதி ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டதாகவே என் பெற்றோர் காலத்திலிருந்து எங்கள் குடும்பச் சூழல் இருந்து வந்திருக்கிறது.கோயில்களுக்குச் சென்றாலும்,விழாக்கள் பண்டிகைகள் கொண்டாடினாலும் -மத , சாதி முத்திரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் வெளியில் இருந்து அவற்றைப் பார்க்கும் நோக்கும் , சடங்குகளுக்கு முதலிடம் தராத மனப்போக்கும் இயல்பானதொரு நடப்பாகவே எங்கள் வீட்டில் இருந்து வந்தது.

பள்ளித் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிய என் அம்மாவுக்கு நெருக்கமான ஒரு கிறித்தவத் தோழி இருந்தார்.இன்றும் கூட ‘சித்தி’ என்ற உறவில் என்உணர்வுகளுக்குள் உறைந்து நிற்பவர் அவரே.
அம்மாவும் சித்தியும் எத்தனை நெருக்கம் கொண்டாடினாலும் , சித்தி வீட்டுக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நாங்கள் பங்கேற்றாலும் அந்தச் சித்தி எதையும் வலுவில் என்னுள் திணித்ததில்லை;பிரச்சினையோ நோய்களோ வந்தபோது’ஜெபம்’செய்கிறேன் என்று தொடங்கியதுமில்லை.இத்தனைக்கும் அம்மாவும் அவர்களும் ஒன்றாகச் சில ஆண்டுகள் ஒரு கிறித்தவப் பள்ளியில் பணி புரிந்தவர்கள்.

என் அம்மாவும் பைபிளை நன்கு கற்றுத் தேர்ந்தவர்;வீட்டிலேயே ஒரு வடமொழி ஆசானை ஏற்பாடு செய்து கொண்டு சுலோகங்களையும் பொருளோடு கற்றுத் தேர்ந்தவர்.அவரும் என்னை என் போக்கில் விட்டாரேயன்றி எதையும் என் மீது வலிந்து புகட்டியிருக்கவில்லை.

ஆனாலும் ஒரு சிற்றூரில் – நான் படித்த தமிழ்வழிப்பள்ளி மற்றும் கல்லூரிகளின் சூழலும், எங்கள் சுற்றுப்புறம் மற்றும் ஊர்க் கோயில்களின் சூழலும்,நான் பெற்ற தமிழ் இலக்கியக் கல்வியும் என்னைக் கிறித்தவத்தின் பால் பெரிதும் வசீகரிக்கவில்லை.
பிறகு என் வாழ்நாளின் செம்பாதி ஒருகிறித்தவ நிறுவனத்திலேயே – பணி நிமித்தம் கழிந்திருந்தாலும், அங்கும் ’தோழிகள்’ வழி சில மாயத் தூண்டில்கள் சாஸ்வதமாக வந்து கொண்டே இருந்தாலும் (அது என் தாயின் தலைமுறையில் இல்லை) என் இலக்கிய வாசிப்புக்களும், அதனால் நானடைந்திருந்த விசாலமான கண்ணோட்டங்களும் எதற்குள்ளும் எல்லை குறுக்கிக் கொள்ளாதவளாகவும்,உறுதியான நிலைப்பாட்டுடனும் என்னைக் கட்டமைத்தன.வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் என்னை வழி நடத்தி வருவது இலக்கியம் மட்டுமே என நம்பி அதற்குமட்டுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் நான். .

வீட்டுச் சூழலில் எதைப் பற்றியும் எப்படியும் பேசலாம்,விவாதிக்கலாம் என , நானும் என் தாயும் வகுத்திருந்த தாராள மனப்போக்குக்கு என் மகள் வடிவில் சோதனை வரும் வரை – இப்படியொரு விஷயம் பிரச்சினையாகும் என நான் எண்ணிப் பார்த்ததே இல்லை.

நான் பணி புரிந்த ஏழாம் நாள் அட்வெண்டிஸ்ட் பள்ளியில் பள்ளிக் கல்வியும் , ஒரு சி.எஸ்.ஐ கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பும் (நான் வேலை புரிந்தது,ஒரு கத்தோலிக்கக் கல்விநிறுவனத்தில்) பயின்றாள் என் மகள்.
பள்ளி நாட்களில் தரப்படும் பைபிள் வாசகங்களைக்கூட என் அம்மா கல்மிஷமின்றி – மிகுந்த ஈடுபாட்டோடு கற்பித்த நாட்களின்நினைவுகள் இன்னும் பசுமையாக என்னுள்.
எந்தக் கணம் அந்த மாற்றம் நிகழ்ந்ததோ…..அல்லது படிப்படியான மூளைச் சலவைக்கு அவள் சூழலும் நட்பும் அவளை ஆளாக்கியதோ தெரியாது…

கிறிஸ்து ஒருவரே உண்மையான கடவுள் என்றும் – பிற எதையும் அறிந்து கொள்ள விருப்பமில்லை – வேறு எதிலும் எந்தச் சாரமும் இல்லை -எதைப் பற்றி அறியும் நாட்டமும் இல்லை என்று கூறும் எல்லைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் சென்று விட்டாள்.
(பிறவற்றைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் தீர்ப்புச் சொல்வது எப்படிச் சாத்தியம்?எனப் பல முறை விவாதித்தபோதெல்லாம் எனக்கு எஞ்சியது கசப்பே)
நானும் பலவகைத் தத்துவங்கள்பற்றிப் பேசிப் பார்த்தேன்;நூல்கள் தந்தேன்.எதற்கும் செவி கொடுக்கக் கூட அவள் ஆயத்தமாக இல்லை.

நான் ஏசுவையோ அவரது கோட்பாடுகளையோ அவரது அன்பு வழியையோ என்றும் மறுதலித்தவளில்லை.‘எந்தரு மகானுபாவோ..’
ஆனால் எல்லாவற்றைப் பற்றியும்- நாங்கள் நிகழ்த்திக்கொண்டிருந்த அறிவு பூர்வமான விவாதங்களுக்கான திறந்தவழி ,ஒரு காலத்தில் என் நெருக்கமான தோழியுமாக இருந்த அவளிடம் – என் ஒரே மகளிடம்- முழுக்க முழுக்க – முற்றிலுமாய் அடைத்துப் போய்விட்டது.இனி அது அடையா நெடுங்கதவு மட்டுமே. ஒரு முட்டுச் சந்து!

20 வயது வரை படங்களை உற்சாகமாக விரும்பிப் பார்ப்பவள்..பாடல்களை ஆசையாய்க் கேட்பவள், கதைகளை விருப்பமாய் வாசிப்பவள்- பைபிள் வாசிப்பைத் தவிர – , பார்க்கும் வேலை சார்ந்த வாசிப்புக்களைத் தவிர- வேறு எந்த ஆர்வமும் அற்ற நிலைக்கு – மற்ற எல்லாம் ’பாவம்’ என எண்ணும் நிலைக்கு ஆட்பட்டு விட்டாள்.

கல்லூரிச் சூழலிலிருந்து விலகிப் பணிச் சூழலுக்கு மாறி அங்கே காதல் வயப்பட்டு விரும்பியவரையே மணந்த பின்னும் கூட (அவர் என்னைப் போலப் பிறப்பால் மட்டும் இந்து ,மற்றபடி குறுகிய கண்ணோட்டங்களிலிருந்து விடுபட்டவர்) நாளுக்கு நாள் அவளது only God பிடிப்பு இறுகிக் கொண்டுதான் போகிறதே தவிரப் பொதுவான அறிவு சால் நிலைப்பாட்டுக்கு அவள் வருவதாக இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நல்ல காலமாக அவள் கொண்ட காதல் என்னைக் கொஞ்சம் காத்தது;மருமகன் இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனங்களுக்கு அப்பாற்பட்டவர்;ஏதோ தன் காதலால் , நல் உள்ளத்தால் அவளது கிறுக்குத்தனங்களைச் சற்றே பொறுத்தாலும் குழந்தைகள் வளரும் சூழல் -மருமகன்,நான் என எங்கள் இருவருக்குமே சற்றுக் கவலை அளிப்பதாகத்தான் இருக்கிறது.

குழந்தைகள் மீது எதுவும் திணிக்கப்படக் கூடாது என்ற எங்கள் ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் ஏதோ அரைமனதோடு அவள் ஏற்றுக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது.
அதுவும் எனக்கு சற்று பயம்தான்.
அறிவுக்கான வழிகள் அந்தப்பிஞ்சுகளுக்கு அடைபட்டுப் போனால் அது எத்தனை பெரிய கொடுமை..அது நிகழாமல் பாதுகாப்பதே எனக்குப் பெரும் பதட்டமளிப்பதாய் இருக்கிறது.

அன்பு ஜெ.எம்,மீண்டும் சொல்கிறேன்.நான் இளமையிலிருந்து அறிந்த ஏசு…,உங்கள் எழுத்துக்கள் வழி உறுதிப்பட்ட ஏசு..only God போன்ற இப்படிப்பட்ட மூடத்தனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு பெருமகனல்லவா.. அவள் ஏசு மீதும்,பைபிள் மீதும் வைத்திருக்கும் பற்றுக்கும் பிடிப்புக்கும் நான் எதிரியில்லை…அது மட்டும் புத்தியின் பாற்பட்டதாக இருந்திருந்தால்..!.

அவற்றைக் காரணம் சொல்லிக் கொண்டு ஞானம் வருவதற்கான எல்லா வாயில்களையும் இறுக அடைத்தபடி -வேறு எதையுமே படிக்காமல்…எதுகுறித்தும் தர்க்க பூர்வமாகச் சிந்திக்காமல் இப்படி அவள் இருப்பது உண்மையில் எனக்குத் திகிலூட்டவே செய்கிறது ஜெ.எம்.

தற்செயலாக ஒரு சிறிய நல்லது நடந்தாலும் – அது அவர் நிகழ்த்தும் அற்புதம் எனச் சொல்லிச் சொல்லி அவள் மாய்ந்து போகும்போது , அவள் படித்த விஞ்ஞானமெல்லாம் எங்கே போய் ஒளிந்து கொண்டது என்று எனக்குள் கூச்சமெடுக்கிறது.
இயல்பில் அவள் உல்லாசமானவள்,வேடிக்கையும் விளையாட்டுமாக இருக்க ஆசைப்படுபவள்;இப்போதும் அப்படிப்பட்ட இயல்புகள் அவளிடம் தலை தூக்காமல் இல்லை;ஆனால் வலிந்து அவற்றை அடக்கப் பார்க்கும் அவள் முயற்சி எனக்கு வேதனை தருகிறது. .
ஒரு கதையில் selling soaps and selling prayers என்று சுஜாதா சொல்வார்

கூவிக் கூவி யாரோ எதையோ விற்று விட்டுப் போனதால் என் மகள் அறிவின் மீது இப்போது அடர்த்தியான புழுதி படிந்து கிடக்கிறதே..இதைக் கழுவ எந்த அற்புதத்துக்காக நான் காத்திருக்க வேண்டும்?

நெடுநாளாக இதைத் தங்களிடம் பேச எண்ணியிருந்தேன்.
தங்கள் அண்மைப்பதிவான மெய்ஞ்ஞானம் சில்லறை விற்பனை..
இதைப் பகிரும் எழுச்சியைக் கிளர்த்தியதால் உடன் எழுதியிருக்கிறேன்.

இது என் தனி நபர் சோகமல்ல. இன்று பல சமயங்களும் சார்ந்ததாய் அறிவுத் துறை மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அராஜகத் தாக்குதல் இது என எண்ணியபடி என் சொந்த வருத்தத்தைச் சமூகம் சார்ந்த அறிவின் இழப்பாய் மடை மாற்றிக் கொள்கிறேன்.
இச்சூழலில் இதனை எதிர்கொள்வதற்கான என் நிலைப்பாடு பற்றியும்,பொதுவான நிலைப்பாடுகள் பற்றியும் நீங்கள் சில கருத்துப்பகிர்வுகள் அளித்தால் மனம் சற்று இதம் பெறும்.

எஸ்

****



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அன்புள்ள எஸ்,

முதலில் நான் உங்களிடம் ஏற்கனவே சொன்னதையே திரும்பச் சொல்ல விழைகிறேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் அடுத்த தலைமுறைகளின் – மக்கள், பேரர்கள்- விஷயங்களில் அதீதமாக ஈடுபடுவது என்பது ஆழமான வருத்தத்தையே கொடுக்கும். உங்களுக்கு புரிந்த உலகம் போய்விட்டது. புதிய உலகின் கட்டாயங்களும் சிக்கல்களும் உங்களுக்கு தெரியாது. அதன் மதிப்பீடுகள் புரியாது. அந்நிலையில் அதில் ஈடுபடுவதும் சரிசெய்ய முனைவதும் தோல்விகளையும் கசப்புகளையும் மட்டுமே அளிக்கும். அதனால் ஆவது ஒன்றும் இல்லை.

ஆகவே ஒரு கட்டத்தில் முடிந்தவரை விலகிக்கொள்வதும், ஒட்டாமலிருப்பதும், ஆன்மீகமான நிறைவு அளிக்கும் விஷயங்களில் மட்டுமே ஈடுபடுவதும் மட்டுமே வழியாகும். உங்கள் லௌகீகக் கடமைகளைச் செய்துவிட்டீர்கள். அங்கே இனி உங்களுக்கு வரவுசெலவுகள் இல்லை. அங்கே நிகழக்கூடிய எதற்கும் நீங்கள் பொறுப்பு இல்லை. அடுத்த ஐம்பது, நூறு வருடங்களில் நடக்கப்போகும் அனைத்தையும் நீங்கள் சரிசெய்துவைத்துவிட்டுச் செல்ல முடியாது. உங்கள் மகளின் வாழ்க்கையை நீங்கள் முழுக்க வரையறைசெய்து கொள்ள முடியாது.

கடுமையாகவே சொல்கிறேன், சிலவருடங்களுக்கு பின் நீங்கள் இறந்துவிட்ட பின்னர் இதெல்லாம் நிகழ்ந்தால் என்ன செய்ய முடியும்? எதிர்காலத்தையும் நீங்கள் சுமக்க முடியுமா என்ன? அந்தவகையான ஒரு மனவிலக்கம் உங்களுக்கு இருந்தாலொழிய நிறைவான ஓய்வுவாழ்க்கை அமையாது.

*

அந்த மனவிலக்கத்துடன் பிற ஒருவரின் பிரச்சினையாக, ஒரு சமூகப்பிரச்சினையாக மட்டுமே இதைப்பார்ப்பீர்கள் என்றால் என் எண்ணங்கள் சிலவற்றைச் சொல்கிறேன்.

ஒருமனிதர் அவருக்கு விருப்பமான மதத்தை தேர்வுசெய்ய, அதில் நிறைவைத் தேட முழு உரிமை உள்ளவர். அதில் பிறிதொருவர் தலையிட்டு அவர்மேல் அழுத்தம் கொடுப்பது தார்மீகமானதல்ல. ஆன்மீகமான முழுமை நோக்கிச்செல்ல ஒவ்வொருவருக்கும் முழு உரிமை உண்டு.

ஆனால் இது பொதுவாக மதங்களுக்கு பொருந்தும் அளவுக்கு மதக்குழுமங்களுக்கு [கல்ட்டுகள்] பொருந்தாது என்றே நினைக்கிறேன். கிறிஸ்தவம் இஸ்லாம் போன்றவை மதங்கள். கத்தோலிக்கசபை, தென்னிந்திய திருச்சபை, இரட்சணியசேனை, லுத்தரன் சபை போன்றவை அதன் கிளைகள்.

பெந்தேகொஸ்தே சபைகள், யொகோவா சாட்சி , செவெந்த் டே அட்வெண்டிஸ்டுகள் போன்றவை மதங்கள் அல்ல, வழிபாட்டுக்குறுங்குழுக்கள். இவை ஒருவகை மனநோய் வட்டங்கள் என்றே நான் நினைக்கிறேன்.

நான் வாழும் சூழலில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நிறைய உண்டு. என் அண்டைவீட்டார்கூட அவர்கள்தான். இந்த அமைப்புகள் இவற்றின் உறுப்பினர்களை மூளைச்சலவை செய்கின்றன. அவர்களை மீளமுடியாத ஒரு சுழலில் சிக்க வைத்துவிடுகின்றன. அவற்றின் வழிமுறைகள் தீவிரமானவை, ஆபத்தானவையும்கூட.

முதலில், அவை அவர்களை பிறரிடமிருந்து விலக்குகின்றன. சமூக வாழ்க்கையை முற்றாக தடைசெய்கின்றன. பிறரைச் சாத்தானின் படைகளாகச் சித்தரிக்கின்றன. என் அண்டைவீட்டில் பத்து வருடங்களாகக் குடியிருக்கும் பெண்மணியின் குழந்தைகள் இன்று வரை என் குழந்தைகளுடன் ஒரு சொல் கூடப் பேசியதில்லை. விளையாடியதில்லை. பேசுவது பாவம். பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் மாலை பாவமன்னிப்பு கோரவேண்டும். பத்துவருடம் முன் என் மகன் ஒரு சொல் பேசியதற்கு அந்த அம்மையார் வந்து மனறாடினார் ‘என் மகனை பாவத்தில் ஆழ்த்தவேண்டாம் என்று உங்கள் மகனிடம் சொல்லுங்கள்’ என்று.

அந்த மதக்குழுமத்தின் நூல்கள் தவிர பிற எதையும் வாசிப்பது தடை செய்யப்படுகிறது. பிற கருத்துக்களில் இருந்து முற்றாக அவர்கள் விலக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் மூடிய கருத்துச்சூழல் ஒன்றில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் ஒற்றை நோக்கை உடைக்கும் எதையுமே அவர்கள் அறிவதில்லை.

மேலும், சாத்தான் என்ற கருதுகோள் அவர்களை அனைத்தில் இருந்தும் விலக்குகிறது. அவர்களின் தரப்பு அல்லாத எதுவும் சாத்தானே. சாத்தான் தர்க்கத்தின் அதிபன். அழகிய வாதங்கள் கொண்டவன். ஆகவே அவர்களிடம் பிறர் விவாதிக்கமுடியாது. ஏனென்றால் நமது தரப்பு எந்த அளவுக்கு நியாயமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்கள் அதை சந்தேகப்படுவார்கள். சாத்தானுக்கு ஆயிரம் முகங்கள்!

சாத்தான் உணர்ச்சிகளை பயன்படுத்துபவன். மனதைக் கரைப்பவன். ஆகவே அவர்களிடம் நாம் கெஞ்ச முடியாது, மன்றாடமுடியாது. உணர்ச்சிகளை காட்டமுடியாது. தாயோ தகப்பனோ கணவனோ மகளோ பேச முடியாது. அவற்றையும் அவர்கள் சந்தேகப்படுவார்கள். ஆம், அவர்கள் சாத்தானின் குரலில் பேசுகிறார்கள்!

அவர்களிடம் அவர்களின் மதத்தைப்பற்றிக்கூட விவாதிக்கமுடியாது. ஏனென்றால் சாத்தானுக்குத்தான் பைபிள் மிக நன்றாக தெரியும். அவன் பைபிளைத் திரிப்பதில் நிபுணன். பைபிளைப்பற்றி வேறுஎவர் பேசினாலும் அவர்கள் சாத்தானே.

இவ்வாறு எல்லா வாசல்களையும் அடைத்துவிடுகிறார்கள். உள்ளே சென்றவர்கள் மீள்வதற்கான வழிகள் மிகமிகக் குறைவு.

*



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இதன்பின்னர் இவர்கள் மனித மனங்களை மெல்ல மெல்ல மழுங்கடித்து அடிமைப்படுத்த ஆரம்பிக்கிறார்கள். இந்த வழிமுறைகள் உலகமெங்கும் நெடுநாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு, நுணுக்கமாகப் பயிலப்பட்டு, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டவை. மேலைநாடுகளில் இவர்களை கண்காணிக்கவும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் வழிகள் உள்ளன. இங்கே இந்தியாவில் சிறுபான்மைச் சட்டங்களால் இவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

உள்ளே செல்பவர்களுக்கு இவர்கள் சொல்லும் கருத்துக்களில் முதன்மையானது இன்ப மறுப்பு. எல்லாவகையான கேளிக்கைகளும், கலைகளும், பிற இன்பங்களும் பாவத்தால் ஆனவை என்கிறார்கள். எந்த அளவுக்கு இன்பத்தை மறுக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் தூய்மையாகிறார்கள். எந்த அளவுக்கு துயரத்தை அனுபவிக்கிறார்களோ அந்த அளவுக்கு மேம்படுத்தப்படுகிறார்கள்

ஆகவே இன்பங்கள் சார்ந்த குற்ற உணர்ச்சியை ஆழமாக உருவாக்குகிறார்கள். உடைகள் அணிவது, நகைகள் அணிவது , உண்பது , காதலிப்பது, புணர்வது எல்லாமே பாவமாக ஆக்கப்படுகின்றன. சொல்லப்போனால் பிரார்த்தனை செய்வதும் மதத்தை பரப்புவதும் மட்டுமே பாவமல்லாத செயல்கள். பிற அனைத்துமே பாவங்கள், தூயமைப்படுத்திக்கொள்ள வேண்டியவை.

இந்த பாவ உணர்வில் இருந்து ஒருபோதும் நீங்காத குற்ற உணர்ச்சி உருவாக்கப்படுகிறது. ஏனென்றால் எந்த மானுட மனத்துக்கும் இன்பம் தேவையாகிறது. அது ரகசியமாகவாவது இன்பத்தை அனுபவிக்கிறது. இல்லையேல் ஏங்குகிறது. ஆகவே இவர்களுக்கு குற்ற உணர்ச்சி நீங்குவதே இல்லை.

அந்தக்குற்றவுணர்ச்சியையே இவர்கள் பெரும் சங்கிலியாக மாற்றுகிறார்கள். பாவத்தைக் களைவதற்காகப் பிரர்த்தனையும் பிராயச்சித்தமும் செய்யச் சொல்கிறார்கள். அவர்களின் அமைப்புகளுக்கு கப்பம் கட்டச் சொல்கிறார்கள். பிரார்த்தனை செய்யும்தோறும் குற்றவுணர்ச்சியின் வேகம் அதிகரிக்கிறது. இந்த விஷ வட்டத்தைவிட்டு அவர்களின் உறுப்பினர்கள் வெளிவருவது அனேகமாக சாத்தியமல்ல.

வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு சிறிய இழப்பும், சரிவும், துக்கமும் கடவுள் கொடுத்த தண்டனை என்கிறார்கள். இவர்களின் கடவுள் கருணையே உருவான ஏசுவோ மாதாவோ அல்ல. யெகோவா போன்ற பழிவாங்கும் கோபம் மிக்க பாலைவனத்தெய்வம்தான்.

ஆரம்பத்தில் கடவுளின் கருணையைப்பற்றி, அருள் பற்றி, அந்த பரவசம் பற்றித்தான் இவர்கள் பேசுவார்கள். ஆழமாக உள்ளே சென்றுவிட்டால் பின்னர் கடவுளின் தண்டனை பற்றிய பேச்சே அதிகமாக இருக்கும். ஒரு சிறிய சபலத்தைக்கூட , ஒரு சிறிய ஐயத்தைக்கூட அறிந்து உடனடியாக தண்டிக்கக்கூடிய கடவுளை ஒவ்வொரு கணமும் அஞ்சியபடியே இவர்கள் வாழ நேர்கிறது.அந்த அச்சத்தில் இருந்து மீட்பே இல்லை. ஏனென்றால் மீட்பு என்று எண்ணுவதே கடவுளின் தண்டனைக்குரியது!

இவர்களின் வழிபாட்டுமுறை மிக ஆபத்தான மூளைச்சலவை. அது சர்ச்சுகளில் வழக்கமாக நிகழும் சொற்பொழிவு, கூட்டுப்பாடல், பிரார்த்தனை மற்றும் சில சடங்குகள் என்ற வடிவில் நிகழ்வதில்லை. கொடூரமான ஒரு கூட்டு மனவசியம் அது. அவர்கள் ஒவ்வொருவரும் அதை பிறருக்குச் செய்யக்கூடியவர்களாக ஆகிவிடுகிறார்கள். அந்த குழுவில் சேரும் புதிய ஒருவர் மிக எளிதில் அந்த மனவசியத்துக்கு ஆளாகிறார்.

மானுடக் கூட்டுமனம் என்றுமே பலவீனமானது. அதைப்பற்றி விரிவான ஆய்வுகள் உள்ளன. அதற்கு தர்க்க உணர்ச்சி இல்லை. குறியீடுகளுக்கு எளிதில் ஆட்படக்கூடியது. பெரும்பான்மையின் உணர்ச்சி அனைவருடைய உணர்ச்சியாக ஆகிவிடக்கூடியது. இவர்களின் கூட்டு வழிபாட்டுமுறை தனிமனித மனத்தை கும்பலில் கரைக்கிறது.

இவர்களின் வழிபாட்டுமுறை சமன்குலைக்கக்கூடிய உச்சகட்ட ஒலிகளால் ஆன இசையுடன் கூடியது. பெரிய நிகழ்ச்சிகளில் கண்ணைப்பறிக்கும் ஒளி அமைப்புகள் கையாளப்படுகின்றன. சீரான தாளமும் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் ஒரேவகையான சொற்களும் சேர்ந்து எளிதில் கூட்டு மனவசியத்தை உருவாக்குகின்றன. உச்சகட்ட உணர்ச்சிகளைச் செயற்கையாக உருவாக்கும் கூச்சல்களும் அழுகையொலிகளும் ஆவேசக்கூத்தாட்டங்களும் சேர்ந்து எளிய மனங்களை ஆட்கொள்கின்றன.

’அற்புத’ங்கள் ஒவ்வொரு நாளும் நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொருவரும் அற்புதங்களை அறிக்கையிடவேண்டியிருக்கிறது. அற்புதங்களை அறிக்கையிடாதவர்கள் கடவுளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்ற நிலை உருவாவதால் அனைவருமே சொல்ல ஆரம்பிக்கிறார்கள். இது ஒவ்வொருவரையும் பாதிக்கிறது.

கூட்டுவழிபாடுகளின் தூபங்களில் பலவகையான பிரமையூட்டும் மருந்துகளை இவர்கள் பயன்படுத்துவதாக அமெரிக்க கத்தோலிக்க சபை பலமுறை குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் அது இல்லாமலேயே குறுகலான மனவெளியில் நெடுநேரம் அழுத்தமாகச் செய்யப்படும் தீவிரமான பிரச்சாரம் மூலம் மனம் உருவெளித்தோற்றங்களை அடைகிறது.

இந்தப் பிரமைகளை உருவாக்கிக்கொள்ளும் அளவுக்கு மூளையை பலவீனப்படுத்துவதற்காக தூக்கம் கடுமையாக குறைக்கப்படுகிறது. கடுமையான பட்டினி விரதங்கள் முன்வைக்கப்படுகின்றன முழு இரவு விழித்திருக்கும் ஜெபங்கள், உபவாச ஜெபங்கள் இதற்காக உருவாக்கப்பட்டு மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகின்றன

விளைவாக சிலர் கடவுளை காண்கிறார்கள். அதைவிட பலமடங்கு பேர் சாத்தானையும், பேய்களையும் காண்கிறார்கள். காரணம் இவர்களிடம் அதிகமாக செலுத்தப்படும் நம்பிக்கை என்பது அதுதான். எங்கும் எதிலும் பேய்கள். அச்சமும் அருவருப்பும் கலந்த நிரந்தர மனநிலை உருவாகிறது. மனநோய்வட்டம் பூர்த்தியாகிறது.

இவர்களின் சமூகப்பங்களிப்பென்பது மிக ஆபத்தான ஒன்று. முக்கியமாக இவர்கள் சகமனிதர்களுடன் பழகுவதில்லை. அவர்களை வெறுக்கிறார்கள். அத்துடன் இவர்களின் மதக்குழுமம் ஒழுக்க, அற நெறிகளை இவர்களுக்குள் மட்டுமே பேணச்சொல்கிறது. வருமானத்தில் பத்தில் ஒன்றை [தசமபாகம்] சர்ச்சுக்கு கொடுத்துவிட்டால் ’பிற’ மனிதர்களிடம் இவர்கள் செய்யும் எதுவும் சரியே என கற்பிக்கிறது

பிற கிறித்தவ அமைப்புகள் போல இவர்கள் சேவைகளில் ஈடுபடுவதில்லை. மானுட துயரங்கள் எல்லாமே கடவுளின் தண்டனைகள் என்றே நினைக்கிறார்கள். சுனாமி வந்தபோது அது கத்தோலிக்கர்களுக்கு கடவுள் அளித்த தண்டனை என்று ஆயிரக்கணக்கில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டார்கள். இவர்கள் கல்வி நிறுவனங்கள் நடத்துவதுண்டு, அது சிறுபான்மையினருக்கான சலுகைகளுக்காக. அதன்மூலம் மதப்பரப்புக்காக மட்டுமே. அவை பெரும்பாலும் செலவேறிய கல்வி அமைப்புகளாக இருக்கும்.

*



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இவர்களின் மதப்பரப்புப்பணி மிகவும் திட்டமிடப்பட்டது. இவர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் பிறரை மதமாற்றம் செய்யக் கடமைப்பட்டவர் என்பதனால் ஒவ்வொருவருமே இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் அதிதீவிர பிரச்சாரத்துக்கு தடையாக இருப்பது இரண்டு அம்சங்கள். ஒன்று, இவர்களின் வெறுப்புவேகம் சாமானிய இந்தியனை அச்சுறுத்துகிறது. இரண்டு, இங்குள்ள சாதிமுறை மதமாற்றத்துக்கு தடையாக இருக்கிறது. மதம் மாறினால் சாதியில் இருந்து விலகவேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாக ஒரு சாதியே மாறினால்தான் உண்டு.

இரைகளைக் கவனமாக தேர்வு செய்கிறார்கள். அதிகமும் இவர்கள் மருத்துவமனைகளில்தான் தென்படுவார்கள். மனம் உடைந்து ஆதரவு தேடும் நிலையில் இருக்கும் நோயாளிகளை அணுகி உங்களுக்காக பிரார்த்தனைசெய்யலாமா என்பார்கள். ஓரிரு தடவை பிரார்த்தனை செய்து நெருக்கமான பின்னர் நோயாளியிடம் ’ஓர் அற்புதம் நிகழவிருக்கிறது, நீங்கள் மனம் திரும்பினால் போதும்’ என்பார்கள். காரணம் அந்த நோயாளிகளே அற்புதத்தைத்தான் உள்ளூர எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் நோயாளிகளின் உறவினர்களிடம் ’ஒரு மரணம் நிகழப்போகிறது’ என்பார்கள். காரணம் அவர்கள் அதைத்தான் உள்ளூர அஞ்சிக் கொண்டிருப்பார்கள். மிக நுட்பமாக மென்மையாக வலை விரியும். ’நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம், நாங்களே பிரார்த்தனை செய்கிறோம்’ என்பார்கள். பின்னர் ’நீங்களும் செய்யுங்கள்’ என்பார்கள். ’நீங்கள் நம்பாததனால் கடவுள் கோபம் கொண்டிருக்கிறா’ர் என்பார்கள். ’உங்களுடைய தயக்கத்தால் ஒரு மரணம் நிகழவிருக்கிறது’ என்பார்கள். ’உங்களுக்கு வேண்டியவரின் மரணத்துக்கு நீங்களே காரணம்’ என்பார்கள். படிப்படியாக இந்த உணர்வுத் தாக்குதல் நிகழும்.

அவர்களின் அச்சத்தை நம் தர்க்கம் எவ்வளவு நிராகரித்தாலும் ஆழ்மனம் அதை பற்றிக்கொண்டு அதிலேயே ஒட்டியிருக்கும். அந்த அச்சம் நிறைந்த மனநிலையில் எதிர்மறையாக எது நிகழ்ந்தாலும் மனம் அதை பற்றிக்கொள்ளும். அது கடவுளின் தண்டனையா என்று பீதிகொள்ளும். அந்த பீதியை முகத்திலேயே வாசித்து ’இன்னும் பெரிய தண்டனை வரப்போகிறது’ என்பார்கள். ஓர் எல்லையில் அந்த மனம் முறியும். பறவை வலையில் சிறகற்று விழும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் இவர்களின் இன்னொரு இலக்கு. என் வீட்டுக்கு முன்னால் உள்ள ஒரு கத்தோலிக்கரின் வீட்டுக்கு வந்த சிலர் தனிமையில் இருந்த அந்த அம்மையாரின் மகன்களில் ஒருவர் சீக்கிரம் ஒரு விபத்தில் சாகவிருக்கிறார், கடவுள் சொல்லி நாங்கள் தேடி வந்தோம் என்றார்கள். அவர் ஆடிப்போய்விட்டார். உங்கள் கணவருக்குச் சொல்லவேண்டாம், அவர் கடவுளை பழித்தால் இன்னும் பாவம் சேரும். நீங்களே பிராயச்சித்தம் செய்யுங்கள் என்றார்கள்.

தினமும் வந்து பிரார்த்தனை செய்தார்கள். அந்த அம்மையாரை மேலும் மேலும் அச்சுறுத்தி உள்ளே இழுத்தார்கள். நாள்போகப்போக மனைவி நலிவதைக் கண்ட கணவர் பொறிவைத்து அவர்களை பிடித்து மூர்க்கமாக அடித்து துரத்திவிட்டு அந்த அம்மையாரை சொந்த ஊருக்கே கொண்டுசென்று கொஞ்சநாள் வைத்திருந்தார். அவர் மீண்டு விட்டார்.

பதின்பருவத்தில் இருக்கும் குழந்தைகள், குறிப்பாக பெண்குழந்தைகளையும் இவர்கள் இலக்காக்குகிறார்கள். அவர்களின் உணர்ச்சிகள் சிக்கலானவை என்பதனால் எளிதில் அவர்களை வீழ்த்தமுடிகிறது.

பொதுவாக இவர்களின் இரைகள் கத்தோலிக்கர்களும் சிஎஸ்ஐ சபையினரும்தான். ஏற்கனவே அவர்கள் அடிப்படை நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். சமீப காலமாக அவர்கள் விழித்துக்கொண்டு எதிர்பிரச்சாரத்தை அவர்களின் சபைகளில் முடுக்கி விட்டிருக்கிறார்கள். பல ஊர்களில் இந்த மதக்குழுமங்களின் பிரச்சாரகர்கள் நுழைவதற்கே தடை இருக்கிறது.

இஸ்லாமியர்கள், சொல்லவே வேண்டாம். அவர்களை இவர்கள் அணுகுவதே இல்லை. இவர்களால் வன்முறையை எதிர்கொள்ள முடியாது.

ஆனால் இந்துக்கள் இதைப்பற்றிய விழிப்புணர்வே அற்றவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளை இவர்களின் பள்ளிகளில் சேர்ப்பது பற்றி யோசிப்பதில்லை. அதில் உள்ள அபாயம் இவர்களுக்கு தெரியாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒன்றும் நிகழ்வதில்லை, நம் குழந்தைகள் வேறு வகையான பண்பாட்டுப்பயிற்சிக்குள் இருக்கிறார்கள். ஆனால் அபூர்வமாக அது திருப்பித்தாக்குகிறது

இந்த ஒருவருடத்திலேயே எனக்கு தெரிந்த நான்கு குடும்பங்களில் பெண்கள் இந்த மனவசிய விஷவட்டத்திற்குள் சிக்கி குடும்பம் சிதைந்து குழந்தைகளின் வாழ்க்கை பெரும் துன்பத்தில் முடிந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் மட்டுமே மீள முடிந்தது. மீண்ட பின் அந்த பெண் சொன்ன அனுபவங்கள் அச்சுறுத்தின. கிட்டத்தட்ட ஒருவருடம் குற்றவுணர்ச்சியும் அச்சமும் சுயஒடுக்குதலும் தனிமையுமாக மாபெரும் உள வதை. அந்த உள வதைமூலம் எங்கோ மேலே சென்று கொண்டிருப்பதாக ஒரு பிரமை. வெளியே வந்தது ஓர் அற்புதம் என்றார்

*



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இதை எப்படி எதிர்கொள்வது? இன்று நாகரீகமான சமூகத்தில் இந்த மனநோய் பரப்புநர்கள் மிகப்பெரிய சவால் என்றே நினைக்கிறேன். சட்டபூர்வமாகவே இவர்கள் எதிர்கொள்ளப்படவேண்டும். ஆனால் அது இங்கு எளிதல்ல

முதல் விஷயம், நம்மை இவர்களிடமிருந்து விலக்கிக் கொள்வதே. இந்த வகை பிரச்சாரகர்களை எவ்வகையிலும் நம்முடன் பேச, நமக்காக பிரார்த்திக்க நாம் அனுமதிக்கவே கூடாது. இதில் சாதாரண மரியாதையை பார்ப்பதென்பது மிக அபாயகரமானது. இவர்களுக்கு அவ்வகையான எந்த மரியாதையுமில்லை என்பதை நாம் யோசிக்க வேண்டும். முழுமையாகவே இவர்களை நம் வாழ்க்கையின் எல்லா பக்கங்களில் இருந்தும் தவிர்த்து விட வேண்டும். இவர்களைப்பற்றி பெண்களிடமும் குழந்தைகளிடமும் சொல்லி வைக்க வேண்டும்.

இரண்டாவதாக, நம்முடைய ஆன்மீகப் , பண்பாட்டுப் பயிற்சியை நாம் முறையாக செய்திருக்க வேண்டும். நம்மைப்பற்றி நமக்கே ஒரு தெளிவு இருக்க வேண்டும்.

ஆனால் இது அவ்வளவு எளிதல்ல. என்னதான் பண்பாட்டுப் பயிற்சி இருந்தாலும் பலவீனமான மனம் கொண்டவர்களுக்கு அது உதவுவதில்லை. இந்தவகையான குழுமங்களில் நாம் சென்று மாட்டுவதற்கு நம்முடைய பாதுகாப்பின்மை, ஆழ்மனச்சிக்கல்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஆகவே தவிர்த்துக்கொள்வதே சிறந்த வழியாகும்.

என்னதான் கிறித்தவ சபைகளில் இவர்களுக்கெதிரான பிரச்சாரம் இருந்தாலும் கிறித்தவ நண்பர்களின் குடும்பங்களே இந்த வலையில் அதிகமாக விழுந்து பெரும் சிக்கல்களைச் சந்திக்கின்றன. அவர்களையே அதிகமாக எச்சரிக்க விழைகிறேன்.

*

இந்த குழுமங்களின் அமைப்பும் சாரமும் கிறித்தவம் சார்ந்தது அல்ல என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும். நாஸ்டிக் மரபுகள் [Gnosticism] என்ற பேரில் கிறிஸ்துவுக்கு முன்னரே இருந்து வந்த சில சிறுவழிபாட்டுமுறைகள் கிறிஸ்தவத்துக்குள்ளும் நுழைந்து வேற்றுரு கொண்டன. இவை நாஸ்டிக் கிறித்தவ மரபுகள் எனப்படுகின்றன. இவற்றை பலகாலம் கிறித்தவ சபை வெறுத்து ஒதுக்கி வேட்டையாடியது. ஆனால் காலப்போக்கில் இவற்றின் பல சடங்குகளையும் வழிமுறைகளையும் அது தானும் ஏற்றுக்கொண்டது.

இவற்றில் பல போக்குகள் உள்ளன. பொதுவான கூறு என்னவென்றால் இறைஞானம் என்பது மறைவானது, அதை அனைவரும் பெறமுடியாது என்ற நம்பிக்கை. அதற்காக ஒருவர் கடுமையான சுயதண்டனைகள் மூலம் தன்னை தயாரித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம். பட்டினி, தனிமை, உடல்வதை எல்லாமே இவர்களின் வழிபாட்டுமுறைகளாக இருந்தன.

கிறித்தவத்தின் மெய்யியல் இவர்களுக்கு உவப்பானதல்ல. இவர்கள் கிறிஸ்துவில் இருந்து தொடங்குவதில்லை. இவர்களுக்கு ஏசுவோ மாதாவோ முக்கியமான தெய்வமாக படவில்லை. யெகோவாவும் பரிசுத்த ஆவியும் மட்டுமே கடவுளாக இவர்களால் நம்பப்பட்டன.

உண்மையில் கிறிஸ்தவத்திற்கு முன்னரே நாஸ்டிக் மதங்களால் வழிபடப்பட்ட ஆவித்தெய்வமும், போர்த்தெய்வமும் பரிசுத்த ஆவியாகவும், யெகோவா ஆகவும் உருவம் மாற்றிக்கொள்ளப்பட்டன. இந்த மதக்குழுமங்கள் நெடுநாட்களாக கிறித்தவத்தால் ஒடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டமையால் இவை ஒருவகையான ரகசியக்குழுக்களாக மாறிக்கொண்டன. குழுவாகச்செயல்படுவதில் நெடுங்கால பயிற்சி பெற்றன.மூளைச்சலவையில் தேர்ந்தன.

ஆனால் இந்த ஒடுங்குதல் காரணமாக இவை பிற மதங்களுடன் உரையாடவில்லை. காலமாற்றத்தை உணரவில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட உறைநிலையில் இவை உள்ளன. மனிதனை அவன் வாழும் காலத்தில் இருந்து பிரித்து ஒரு புராதன இருட்டறைக்குள் அடைத்துப் போடுகின்றன இவை.

கிறித்தவத்தின் சொல்லாடல்ளை பயன்படுத்திக்கொண்டு அதன் உள்ளிருந்தே விரியும் இந்த நாஸ்டிக் மதக்குழுக்கள் கிறிஸ்தவத்தை பாதித்த வைரஸ் என்றால் அது மிகையல்ல. [பார்க்க, விவிலியத்தின் முகங்கள்.நாஸ்டிசிசம்]

*

இன்றைய சூழலில் நீங்கள் உங்கள் மகள் விஷயத்தில் என்ன செய்யலாம்?

அவர் ஒரு மனநோய் வட்டத்தில் இருக்கிறார், மதநம்பிக்கையில் அல்ல என்பதை அவருக்குச் சொல்லி புரியவைப்பது எளிதல்ல. அவரது கணவர்தான் இந்த உண்மையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவரது குழந்தையின் எதிர்காலத்துடன் அவர் விளையாட முடியாது. அவரது மனைவியின் மனம் ஆபத்தான ஒரு சுழலில் சிக்கி இருக்கிறது. மதநம்பிக்கை என்ற பேரில் மனச்சிதைவு அனுமதிக்கப்படக்கூடாது.

உங்கள் மகளுக்கு இந்த உலகை நோக்கிய ஈர்ப்பு உருவாவதற்கான காரணமாக ஆழமான மன இறுக்கம் அல்லது நிலையின்மை உணர்வு அல்லது பதற்றம் இருக்கக் கூடும். அவரிடம் ஒரு மனநிபுணர்தான் பேசமுடியும். அவர் ஒருவேளை அந்த மன இறுக்கத்தை அடையாளம் காணமுடியும். அதை அவரே காணச்செய்ய முடியும்.

உங்கள் மகளிடம் அவர் அவரது மகளுக்கு மிகப்பெரிய அநீதி ஒன்றை இழைக்கிறார் என்பதைச் சொல்லி புரியவைத்தால் நல்லது. ஒரு குழந்தை உலகை திறந்த கண்களுடன் விரிந்த கைகளுடன் எதிர்கொள்வதே அவசியமானது. அச்சமும் குற்றவுணர்வும் அதன் மனதில் ஏற்றப்பட்டால் அது ஆழமான மனச்சிதைவை அடையும். அதன் வாழ்க்கையின் அனைத்து இன்பங்களும் பறிக்கப்பட்டுவிடும். அதற்கான உரிமை எவருக்கும் இல்லை

உங்கள் மகள் சந்திக்கும் நபர்களிடமிருந்து அவரை பிரிப்பதும், அவர் அவர்களின் கூட்டு வழிபாடுகளில் கலந்துகொண்டால் அதிலிருந்து வெளியே கொண்டுவருவதும், முடிந்தால் முற்றிலும் புதிய இடமொன்றுக்கு பெயர்வதும் உதவியாக இருக்கக் கூடும்

ஆன்மீகம் என்பது எதற்கும் அடிமையாக்குவதாக இருக்காது. இந்த பூமி கோடானுகோடி உயிர்களின் வாசஸ்தலம். அதில் ஒன்றே மனிதன். இந்த பிரபஞ்சத்துக்கு அதற்கான ஒரு இலக்கும் செயல்முறையும் உண்டு. அதன் ஒரு துளியான பூமிக்கும் அதற்கான இலக்கும் வழிமுறைகளும் உண்டு. அதன் ஒரு துளியான நமக்கும் நம்முடைய இலக்கும் வழிமுறைகளும் உண்டு.

அதை நாம் நம்மை கூர்ந்து நோக்கினாலே அறியலாம். நம்முடைய சொந்த ஆசைகளாலும் அச்சங்களாலும் நாம் அதிலிருந்து நம்மை விலக்கிக்கொள்வதனாலேயே துயரங்களை அடைகிறோம்

மனிதனின் ஆகப்பெரிய ஆன்மீகம் என்பது இப்பிரபஞ்சத்துடன் முழுமையாக இணைவதில், தன்னிச்சையாக தனக்குரிய ஆற்றலை வெளிப்படுத்திக்கொள்வதில் உள்ளது. அவன் இயல்பாக இருந்தால் முழுமையுடன் இருக்கிறான். முழுமையுடன் இருந்தால் மகிழ்ச்சியுடன் இருக்கிறான்.

உங்கள் மகளுக்கு முறையான தியானப் பயிற்சி உதவக்கூடும். தியானத்தின் அடிப்படைகள் கற்பிக்கப்பட்டு அவர் தியானம் செய்தால் அதுவே பல விஷயங்களை தெளிவாக்கும்

கொந்தளிப்பில்லாமல் , ஒரு சாதாரண கடமையைச் செய்வதுபோல இயல்பாக இதைச் செய்ய முயலுங்கள். எது நிகழ்ந்தாலும் அது உங்களை பாதிக்காமல் செயல்படுங்கள்.

நல்லது நிகழட்டும். வாழ்த்துக்கள்.

ஜெ

சாமர்வெல் ஒரு விவாதம்

கிறிச்தவப்பாடல்கள் கடிதங்கள்

கிறித்தவப்பாடல்கள்

சிலுவையின் பெய்ரால் கடிதம்

இரு காதலியர்

சிலுவையின் பெயரால் கிறிஸ்து குறித்து

இருவர்

காமமும் கிறித்தவமும் ஒரு கடிதம்

மிஷனரிவரலாறு- கடிதம்

பாபமௌனம்

விவிலியம் புதிய மொழியாக்கம்


வலியின் தேவதை



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 

கிறித்தவர்களால் தங்கள் மூலநூலாக ‘புனித பைபிள்’ என்று கொண்டாடப்பட்டு உலகமெங்கும் கொண்டுசெல்லப்படும் விவிலியம் உண்மையில் மிக நீண்ட வரலாறும், சீரற்ற வளர்ச்சிப்போகும் கொண்ட ஒரு சிந்தனை ஓட்டத்தை பதிவுசெய்துள்ள நூல்களின் தொகுப்பு ஆகும். இந்த நூல்கள் உருவாகி மொழியாக்கம் செய்யப்பட்டு பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பலவாறாக தொகுக்கப்பட்டு. சுருக்கப்பட்டு. சேர்க்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. இன்று நமக்கு கிடைக்கும் விவிலியமேகூட பல வடிவங்கள் கொண்டது. கிறித்தவ மதம் மிக வலிமையான நிறுவன அமைப்பு கொண்டது. கிறித்தவ தேவாலயங்கள் [church] அரசியலில் நேரடியாக பங்கெடுத்துக் கொண்டவை. நீண்ட நெடுங்காலம் புனித ரோமப்பேரரசு உலகின் பெரும்பகுதியை ஆண்டது. ஆகவே பைபிளுக்கு ஒரு மத நூல் என்பதற்கும் மேலாக ஒரு அரசியல் மூலநூல் என்ற மதிப்பும் உண்டு. அது நேரடியாகவே சட்டநூலாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆகவே அந்நூல் அரசியல் சமூகவியல் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான மாற்றங்களை அடைந்தது இயல்பே.

விவிலியம்.

விவிலியம் என்னும் சொல் பைபிள் என்ற சொல்லின் தமிழாக்கம். யூத மரபு மற்றும் கிறித்தவ மதத்தின் அடிப்படைக் கூறுகளைக் கொண்ட எழுத்துக்களின் பெருந்தொகையே பைபிள் எனப்படுகிறது. பைபிள் என்ற பெயர் பிப்லியா [biblia]என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது. நூல்கள் என்று அதற்குப் பொருள். தாள் என்று பொருள்வரும் பாப்பிரஸ் என்ற சொல்லின் திரிபு அது. பாப்பிரஸ் புல்லில்தான் ஆரம்பகாலத்தில் நூல்கள் எழுதப்பட்டன.

யூத பைபிள் கிறித்தவ பைபிள் இரண்டும் சற்றே வேறுபட்டவை. யூத பைபிள் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட 39 நூல்களின் தொகை ஆகும். சிறிதளவு அராமிக் மொழியிலும் இது உள்ளது. கிறித்தவ பைபிள் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடு 27 நூல்கள் கொண்டது. கிறித்தவ மதத்தில் உள்ள இரு பெரும் பிரிவினரால் பழைய ஏற்பாடு இரண்டு வேறுபட்ட வடிவங்களில் முதனூலாகக் கொள்ளப்பட்டுள்ளது. ரோமாபுரிக் கத்தோலிக்க மதம் யூதர்களின் பைபிளுடன் ஏழு வேறு நூல்களையும் சேர்த்துக் கொண்டுள்ளது. அவற்றில் சில நூல்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் கடிதங்கள். புரட்டஸ்டாண்டுகளின் பழைய ஏற்பாட்டில் யூத பைபிளில் உள்ள 39 நூல்கள் மட்டுமே உள்ளன. கத்தோலிக்க சபையால் சேர்க்கப்பட்ட நூல்கள் அபோகிரி·பா [பிற்சேர்க்கை] என்று புரட்டஸ்டாண்டுகளால் சொல்லப்படுகின்றன. ரோமாபுரிக் கத்தோலிக்கர்கள் அவற்றை மூலநூல்சேர்க்கை[ ட்யூட்டரோ கானனிகல் ] என்கிறார்கள்.

யூத பைபிள் மூன்று தனிப்பெரும் பிரிவுகள் கொண்டது. முதல்பகுதி தோரா[Torah] அல்லது சட்டம். இது மோஸஸின் புத்தகம் என்று சொல்லப்படுகிறது. நீபியம் [Nebiim] அல்லது வருநலமுரைப்போர் [தீர்க்கதரிசிகள்] என்ற பகுதி இரு பகுதிகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகால வருநலமுரைப்போர் முதல் பகுதியிலும் பிற்கால வருநலமுரைப்போர் இரண்டாம்பகுதியிலும் சொல்லப்பட்டுள்ளனர். கீடுபியம் [Ketubim ]அல்லது மறைமொழிகள் பகுதியில் பாடல்கள், வருநலமுரைகள், மற்றும் சிறு நூல்கள் உள்ளன.

கிறித்தவ பழைய ஏற்பாடு உள்ளடக்க அடிபடையில் நூல்களை தொகுத்துள்ளது. முதலில் வரலாற்று உள்ளடக்கம் கொண்ட நூல்கள்.பெரும்பாலும் தோராவை சேர்ந்தவை. இரண்டாம் பகுதியில் அறிவுறுத்தும் நூல்கள் மற்றும் வழிபாட்டு நூல்கள். மூன்றாம் பகுதியில் வருநலமுரை நூல்கள். முறையே சென்றகாலம் நிகழ்காலம் மற்றும் வருங்காலத்துக்கான நூல்களாக இவை அமைக்கப்பட்டிருக்கலாம். புரட்டஸ்டாண்ட் பழைய ஏற்பாடு இதே அடுக்குமுறை கொண்டதே. ஆனால் யூத பைபிளில் உள்ள உட்கூறுகள் மட்டுமே இதில் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய ஏற்பாடு பைபிள் முக்கியமாக நான்கு இறைச்செய்திகள் [சுவிசேஷங்கள்] அடங்கியது. கிறித்தவத்தின் வரலாறும் அறக்கூற்றுகளும் புனித பவுல் முதலியோரின் கடிதங்களும் வருநலமுரைகளும் சேர்க்கப்பட்டது. பைபிளுக்கு உலகமெங்கும் மொழியாக்கங்கள் உண்டு, தொடர்ந்து புதிய மொழியாக்கங்கள் வந்தபடியும் உள்ளன.

மூலநூலும் சேர்க்கைகளும்

பைபிளின் மூலநூல் கேனன் [Canon]எனப்படுகிறது. எது மூலநூல், எந்த அடிப்படையில், என்பது எப்போதும் மாறுபாடுகள் கொண்டதாகவே உள்ளது. தேவாலய அமைப்பினால் உறுதிசெய்யப்பட்ட பகுதிகளே மூலநூல்கள் என்று அந்தந்த சபையினர் நம்புகிறார்கள். நீண்டகாலமாக கிரேக்க, லத்தீன் வடிவங்களை மூலநூல்களாக கருதும் போக்கு இருந்தது. அவையெல்லாம் மொழிபெயர்ப்புகளும் மறு ஆக்கங்களும் ஆகும். அராமிக் வடிவம்கூட மொழிபெயர்ப்பேயாகும். உண்மையில் இந்நூல்கள் எழுதப்பட்ட வடிவில் இன்று இல்லை. இவை எல்லா மொழிகளிலும் எளிய மக்களுக்கான ‘முச்சந்தி’ மொழியிலேயே மொழியாக்கம் செய்யப்பட்டன. பைபிளின் பலமொழிகளில் எழுதப்பட்ட பல்லாயிரம் தொல் கைப்பிரதிகள் இன்று கிடைக்கின்றன. இவற்றில் முக்கியமானவை ஏறத்தாழ 5000 இருக்குமென ஆய்வாளர் சொல்கிறார்கள்.இவற்றில் மூல ஆசிரியரின் கைப்பிரதியாகக் கிடைப்பவை ஏதுமில்லை. கிபி 120-140 காலகட்டத்தைச் சேர்ந்த புனித யோவானால் எழுதப்பட்ட சுவிசேஷத்தின் கைப்பிரதியே ஆகப்பழைமையானது. எப்போது முதன்முதலாக கிறித்தவ மூலநூல் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவில்லை. புனித பவுல் தன் கடிதங்களையும் சில விவிலியப்பகுதிகளையும் மக்கள் கூடும் தேவாலய /வழிபாட்டிடங்களில் உரக்க வாசிக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார் என்று தெரிகிறது. ஆக பைபிளின் ஒருவடிவம் பவுல் அவர்களின் காலத்திலேயே முறைப்படுத்தப்பட்டுவிட்டது .

மூலநூல் சாராது எழுதப்பட்டு பைபிளுடன் இணைத்து வாசிக்கப்படும் பகுதிகளை அபாகிரி·பா[Apocrypha] என்பது மரபு. பிற்சேர்க்கைகள் மீண்டும் மீண்டும் உருவாகியுள்ளன. இதற்குக் காரணம் கிறித்தவத்தின் இறுக்கமான தேவாலய அமைப்புக்கு எதிராக உருவான பிற கிறித்தவ வழிபாட்டு முறைகளும் கோட்பாடுகளுமே. கிறித்தவத்தின் வரலாற்றில் இத்தகைய மீறல் மற்றும் முரண் போக்குகள் இல்லாத காலமே இருந்தது இல்லை. நிகழ்காலத்திலும் ஏராளமான கிறித்தவ தனிமதங்கள் உள்ளன.

இறைச்செய்திகள் [சுவிசேஷங்கள்]

சுவிசேஷம் என்ற சொல் சு+விசேஷம் என்ற வடமொழி சொல்லாகும். நல்ல செய்தி என்று பொருள். காஸ்பல் [Gospel]என்ற சொல்லின் தமிழாக்கம் இது. இது என்பது இயேசுவின் கூற்றுக்கள் மற்றும் வரலாறு குறித்து எழுதப்பட்ட குறிப்புகளின் தொகை. பொதுவானதாக அங்கீகரிக்கப்பட்ட சுவிசேஷங்கள் நான்கு. மத்தேயு, மார்க்கு, லூக்கா, யோவான் ஆகியோரால் எழுதப்பட்டவை அவை. அவையே புதிய ஏற்பாடு என்று சொல்லப்படுகின்றன. ஆங்கிலச் சொல்லான காஸ்பல் என்பது கிரேக்க சொல்லான நற்செய்தி என்பதை ஒட்டி உருவாக்கப்பட்ட பழைய ஆங்கிலச்சொல்லான காட் ஸ்பெல்[godspel] என்பதன் மரூஉ.

அடிப்படை இறைச்செய்திகள் [ Synoptic Gospels]

மத்தேயு, மார்க்கு, லூக்கா ஆகியோரால் இயற்றப்பட்ட முதல் மூன்று இறைச்செய்திகள் சினாப்டிக் சுவிசேஷங்கள் என்று சொல்லப்படுகின்றன. காரணம் அவை மூன்றும் கிட்டத்தட்ட ஒரே நோக்கில் இயேசுவின் செய்தியையும் வாழ்க்கையையும் கூறுகின்றன. ஏறத்தாழ சொற்களும் ஒரேபோல உள்ளன. இவையே அடிப்படை இறைச்செய்திகளாகச் சொல்லப்படுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை பெரும்பாலான இறையியலாளார்கள் மத்தேயுதான் முதல் இறைச்செய்தியாளர் என்று நம்பினார்கள். மார்க்கின் இறைச்செய்தி மத்தேயு லூக்கா ஆகியோரின் இரு இறைச்செய்திகளின் சுருக்கப்பட்ட வடிவம் என்று எண்ணப்பட்டது. இன்றைய முடிவுகளின்படி மார்க்குதான் தொடக்க கால இறைச்செய்தியாளர். அவரே முதல்முதலாக இயேசு குறித்து எழுதியவர். மார்க்கின் இறைச்செய்தியே உண்மையில் பிற இறைச்செய்திகளுக்கான அடிப்படைக் கட்டுமானத்தையும் அளித்துள்ளது. அத்துடன் அராமிக் மொழியில் எழுதப்பட்ட பிற அவணங்களையும் மத்தேயு லூக்கா ஆகியோர் பயன்படுத்தியிருக்கலாம். இந்த மறைந்து போன மூலநூல் அல்லது மூலநூல்கள் Q என்று சொல்லப்படுகின்றன. ஜெர்மானிய மொழியில் மூலம் என்று பொருள் படும் Quelle என்ற சொல்லின் சுருக்கம் இது. அல்லது கிரேக்க மொழியில் கூற்று என்று பொருள்படும் லோஜியா Logia என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது

புனித யோவானால் எழுதப்பட்ட இறைச்செய்தி முதல் மூன்றிலிருந்தும் பலபடியாக வேறுபடுகிறது. சினாப்டிக் இறைச்செய்திகளில் சொல்லப்பட்ட பல நிகழ்வுகள் முந்தைய இறைச்செய்திகளில் இல்லை. அவற்றில் உள்ள பல கூற்றுகள் இதிலும் இல்லை. முக்கியமான வேறுபாடு இயேசுவின் இறைக்கூற்றுளை முன்வைக்கும் முறையில்தான் உள்ளது. சினாப்டிக் இறைச்செய்திகள் நீதிக்கதைகள் மற்றும் நன்மொழிகளின் வடிவில் இயேசுவின் கூற்றுகளை முன்வைக்கின்றன. ஆனால் யோவானின் இறைச்செய்தி நீளமான குறியீட்டுத்தன்மையும் ஆழமும் கொண்ட உரையாடல் மற்றும் விவாதங்களாக இயேசுவின் கூற்றுக்களை சொல்கிறது. யோவான் இயேசுவை ஒரு புனிதராகவும் இறையுறவு கொண்ட மானுடராகவும் காட்டுகிறார். ஆனால் சினாப்டிக் இறைச்செய்திகள் அவரை இறைவனின் நேரடி தூதராக காட்டுகின்றன. ஏசு அதிகமும் உலகியல் அறங்களில் நெறிகளை கச்சிதமான சொற்களில் முன்வைப்பவராக சினாப்டிக் இறைச்செய்திகளில் காணப்படுகையில் யோவானின் இறைச்செய்தி மேலும் ஆன்மீகமானதாக உள்ளது. சினாப்டிக் இறைச்செய்திகளின்படி இயேசுக்கு அவரது வருகையின் நோக்கம் பின்னர்தான் அறிவிக்கப்பட்டது, விண்ணரசை நிறுவுதல். யோவான் கிறிஸ்து அதை முன்னரே சொல்வதாகக் காட்டுகிறார். யோவானின் இறைச்செய்தியை எழுதியவர் முந்தைய மூன்று இறைச்செய்திகளை அறிந்திருந்தாரா இல்லையா என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

இந்நான்கு இறைச்செய்தியாளர்களைத்தவிர வேறு இறைச்செய்தியாளர்கள் இருந்திருக்க வாய்ப்புண்டா? கண்டிப்பாக இருந்திருக்கலாம். இயேசுவின் மாணாக்கர்களில் பிறர் எழுதியிருக்கலாம், விளக்கியிருக்கலாம். அவை தொகுக்கப்படாமல் மறைந்து போயின என்று கொள்வதே முறை. தேவாலயம் நான்கு இறைச்செய்திகளை அடிப்படைச் செய்தியாகக் கொண்ட பிறகு பிற செய்திகள் புறனடைகளாகக் கருதப்பட்டிருக்கலாம். அவை தனி கோட்பாடுகளாக அல்லது வழிபாட்டு முறைகளாக புழங்கியிருந்திருக்கலாம். கிறித்தவத்துக்குள் இவ்வாறு புழங்கிய தனி போக்குகள் அல்லது மைய எதிர்ப்புப் போக்குகள் நாஸ்டிக் போக்குகள் என்று சொல்லப்பட்டன.

நாஸ்டிசிஸம்[Gnosticism]

கிறித்தவ மதத்துக்குள் உருவான மைய எதிர்ப்பு போக்குகள் ஒட்டுமொத்தமாக இவ்வாறு சொல்லப்படுகின்றன. பொதுவான சில அடிபப்டைகள் கொண்ட பலவிதமான மறைச்சமய இயக்கங்கள் இப்பெயரில் சுட்டப்படுகின்றன. கிபி 2 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளில் இப்போக்கு வலிமையாக இருந்தது. கிறித்தவ மைய மரபுக்கு முக்கியமான சவாலாக விளங்கியது. இச்சொல் கிரேக்க சொல்லான gnosis இல் இருந்து உருவானது. அதற்குப்பொருள் வெளிப்படுத்தப்பட்ட மறை. மண்ணுலகம் முற்றிலும் தீமைகளினால் ஆனது என்று சொன்ன இம்மதக்கோட்பாடு விண்ணிலிருந்து தூய அறிதல் மண்ணுக்கு ஒரு பொறியாக விழுந்தது என்றும் அதை உரியவர்கள் மறைவாக பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும் சொன்னது. மறையறிவு என்பது அனைவருக்கும் உரியதல்ல, அதன்பொருட்டு பிற அனைத்தையும் உதறிவிட்டு மீள்பவர்களுக்கு மட்டுமே உரியது என்றனர் இவர்கள்.

இவர்களின் பிரபஞ்ச உருவாக்க கற்பனையானது சிக்கலானது. அரேபியா வழியாகக் கிடைத்த கீழை தேயத்து மெய்யியல்கூறுகளையும் கிரேக்க மரபின் அறிதல்களையும் ஒரு குறிப்பிட்ட வகையில் மறு ஆக்கம் செய்து உருவாக்கப்பட்டது. அறியமுடியாத மையவல்லமையான கடவுளில் இருந்து பற்பல சிறு தெய்வங்கள் பிறந்தன. அதில் இருந்துதான் அறிதலுக்கான அன்னைதெய்வமான சோ·பியா பிறந்தாள். இவள்மூலம் முழுமுற்றான இறைவனை அறியவேண்டுமென்ற ஆவல் மண்ணில் உருவானது. இந்த தீய விருப்பின் காரணமாக தீமையின் தெய்வங்கள் உருவாயின. அத்தீய தெய்வங்களே பிரபஞ்சத்தை உருவாக்கின. அவையே மனிதர்களையும் படைத்தன. அவை மண்ணில் காமத்தையும் பகைமையையும் உருவாக்கி மனிதர்களை ஆண்டன. மண்ணில் இருள் சூழ்ந்திருந்தது.

இதை அறிந்த இறைச்சக்தியால் புனித அறிதலின் ஒளி மானுட மனங்களுக்கு இறக்கியருளப்பட்டது. பழைய ஏற்பாட்டில் உள்ள யகோவா என்ற கோபம் கொண்ட இறைவனை நாஸ்டிக் மதத்தவர் அந்த தீய தெய்வமாக எண்ணினார்கள். பாவத்தில் ஆழ்ந்து கிடந்த மானுடர்களை தண்டிக்கும்பொருட்டே அவர் இறைவனால் உருவாக்கப்பட்டார். இதன் அடிப்படையிலேயே இவர்கள் ஆதாம் ஏவாள் ஆகியோர் சுவர்க்க நீக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளை விளக்கினர். இறைச்சக்தியின் மறைச்செய்தியை பெற்ற மானுடர் உலக வாழ்வில் இருந்து முற்றாக விலகி தனிமை நோன்பு மூலம் தங்கள் அகத்தை தூய்மைசெய்துகொண்டு இறைவனின் அருளைப்பெற வேண்டும்.

நாஸ்டிக் நம்பிக்கையாளர்களை கிறித்தவ தேவாலயம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் தங்களை கிறித்தவர்கள் என்றே எண்ணினார்கள். பைபிளுக்கு அவர்கள் தங்கள் நோக்கில் விளக்கங்களையும் தனி பைபிள்களையும் எழுதிக் கொண்டனர். தோமையரின் இறைச்செய்தி இவர்களால் எழுதபப்ட்டது என்ற நம்பிக்கை உள்ளது. மக்தலேனா மரியை எழுதிய இறைச்செய்தி என்ற நூலும் இவர்களால் எழுதப்பட்டுள்ளது என்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல.

பொதுவாக நாஸ்டிக் நம்பிக்கையாளர்கள் சடங்குகள் சார்ந்த மரபான கிறித்தவ மதத்தை வெறுத்தார்கள். உண்ணா நோன்புகள் தனிமை நெறி தியானம் போன்றவற்றை முன்வைத்தார்கள். சிலர் உள்ளறிவை எழுப்பும் சடங்கு என்ற முறையில் புனித நீராட்டு சடங்கை மட்டும் செய்ததாகவும் தெரிகிறது. அன்றாட வாழ்க்கையை உதறி சமூகத்திலிருந்து பிரிந்து வாழ்வதென்பது இவர்களின் மத நம்பிக்கையில் மிகமிக முக்கியமானதாக இருந்தது. பிற்காலத்தில் பாடல்களை பாடி வழிபடுவது மற்றும் மந்திரச் சடங்குகள் ஆகியவை இவர்களிடம் குடியேறின. இவர்களில் இருந்து கிளைத்து வளர்ந்த பலநூறு வழிபாட்டுக்குழுக்களும் நம்பிக்கைமுறைகளும் உண்டு. கிறித்தவத்துக்குள் இத்தகைய மறைசமயக் குழுக்கள் என்றும் இருந்துள்ளன. இப்போதும் உள்ளன.

பிற்பாடு ரோமாபுரி கத்தோலிக்க கிறித்தவம் வலிமைபெற்றபோது நாஸ்டிக் மரபுகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டன. இம்மரபின் நூல்கள் நமக்கு இன்று கிடைப்பதில்லை. கத்தோலிக்க இறையியல் நூல்களில் நாஸ்டிக் நம்பிக்கைகளை எதிர்க்கும் பொருட்டு எடுத்து தரப்பட்டுள்ள ஏராளமான மேற்கொள்கள் மூலமே நாம் இவர்களைப்பற்றி அறிகிறோம். காலப்போக்கில் இவை சிறு ரகசியக் குழுக்களாக மாறி மறைந்தன. இன்று கிடைக்கும் முக்கியமான நாஸ்டிக் நூல்கள் காப்டிக் தேவாலயத்தைச் சேர்ந்தவை. காப்டிக் மொழியில் எழுதப்பட்டு எகிப்தின் நாக் ஹம்மாதி ஊரில் கிடைத்தவை.

கிடைத்துள்ள நாஸ்டிக் நூல்களில் இருந்து நாம் இம்மரபின் தோற்றம் குறித்தோ அல்லது இம்மரபின் மூல ஆசிரியர்களைப்பற்றியோ ஏதும் தெரிந்துகொள்ள இயல்வதில்லை. புறச்சமயத்தின் கோட்பாடுகள் கிறித்தவத்தில் ஊடுருவி இது உருவாயிற்று என்று பொதுவாக சொல்லலாம். பாரசீக துவைத மதங்களான மித்ரைஸம், ஜராதுஷ்டிரனிஸம் ஆகியவற்றினால் பாதிப்பு கொண்டு உருவான ஆரம்பகட்ட யூத நம்பிக்கைகள் சிரியா வழியாக ஐரோப்பாவில் ஊடுருவி நாஸ்டிக் நம்பிக்கைகளை உருவாக்கின என்றும் சொல்லபப்டுகிறது. இவர்களின் மதப்படிமங்களில் இச்செல்வாக்கு வெளிபப்டையாகவே உள்ளது. கிபி இரண்டாம் நூற்றண்டில் நாஸ்டிக் அறிஞர்கள் பிளேட்டோவின் இலட்சியக் கருத்துமுதல்வாத நோக்குகளை ஆரம்பகட்ட கிறித்தவ மதக் கொட்பாடுகளுடன் இணைத்து தங்கள் கொள்கைகளை விரிவாக்கம் செய்ததாக தெரிகிறது. இதில் இரண்டாம் நூற்றண்டு நாஸ்டிக் அறிஞர்களான வாலண்டினியஸ் மற்றும் அவரது மாணவரான டாலமீனியஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் கோட்பாடுகள் தனி மத அமைப்புகளாக மாறின. இரண்டாம் நூற்றாண்டில் ரோமாபுரி கத்தோலிக்க மதத்தில்கூட இவர்களின் செல்வாக்கு இருந்திருக்கிறது.

இரண்டாம் நூற்றாண்டில் சிரியாவில் நாஸ்டிக் நம்பிக்கையின் புதிய வளர்ச்சிநிலை உருவாயிற்று. இவர்கள் கிறித்தவ மதத்திற்குள் தியான முறையை உருவாக்க முயன்றனர். இருநிலைகளில் கத்தோலிக்க மதம் இச்சவாலை எதிர்கொண்டது. அது தன் கோட்பாடுகளை மேலுமேலும் தர்க்கபூர்வமாக ஆக்கிக்கொண்டது. மண்ணுலகமே தீமை மிக்கது என்ற நாஸ்டிக் நம்பிக்கையை அது வலிமையாக தாக்கி மானுடர் இறைவனின் வடிவில் உருவாக்கப்பட்டவர்கள் என்ற கோட்பாட்டை வலிமையாக முன்வைத்தது. அது மக்களைக் கவர்ந்தது. மேலும் பிஷப்கள் என்ற மத அதிகாரிகளை உருவாக்கி கிறித்தவ உலகை சீரான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து தேவாலயத்தை வலிமைப்படுத்தினர். அவ்வாறாக உதிரி பிரச்சாரகர்களாக இருந்த நாஸ்டிக் மதத்தவர் அடக்கி ஒடுக்கி அழிக்கப்பட்டனர்.மூன்றாம் நூற்றாண்டில் நாஸ்டிக் மதம் இல்லாமலாயிற்று

இப்போதும் நாஸ்டிக் மரபைச்சேர்ந்த சிறிய ஒரு மத அமைப்பு ஈரானிலும் ஈராக்கிலும் உள்ளது. மண்டாயென்கள் [Mandaean]எனப்படும் இவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள்.

இந்நூல்

தாமையர் எழுதிய சுவிஸேஷம் என்ற இந்நூல் கண்டெடுக்கபப்ட்ட வரலாறு சுவையானது. 1845 டிசம்பர் மாதத்தில் எகிப்தில் நாக் ஹம்மாதி என்ற கிராமத்தைச் சேர்ந்த அல்-ஸமான் என்ற இனக்குழுவினரான முகம்மது அலி மற்றும் கலீ·பா அலி என்ற சகோதரர்கள் ஜபால் அல் டரிப் அன்ற மலைமுகடருகே இயற்கை எருவை மண்ணிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். இது நாக் ஹம்மாதியில் இருந்து 11 கிலோமீட்டர் வடகிழக்காக அமைந்துள்ளது. அவர்கள் தோண்டும்போது சிவந்த மண்ணாலான ஒரு ஜாடியைக் கண்டடைந்தார்கள். கிட்டத்தட்ட 60 செ.மீ உயரமுள்ள பெரிய ஜாடி அது. அதற்குள் புராதனமான பாப்பிரஸ் சுவடிகள் இருந்தன

அதிலிருந்த நூல்கள் அப்போது அங்கு இருந்த ஏழுபேரால் பங்கிடப்பட்டு எடுத்துக் கொள்ளப்பட்டன. சிலர் அவற்றை தொலைத்தாலும் முகமது அலி அவற்றை வீட்டுக்குக் கொண்டுவந்துசேர்த்தார். அவர் அதை உள்ளூரில் இருந்த காப்டிக் பாஸிலியஸ் அப்த் அல்-மஸியா என்பவருக்கு கொடுத்தார். காப்டிக் தேவாலய மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க அங்கே தங்கியிருந்த ரகிப் அன்டிரவஸ் [Raghib Andrawus] என்பவர் அச்சுவடிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். அவர் அதை கெய்ரோவுக்குக் கொண்டுவந்தார். ரகிப் வந்தப் பின்னர் அவை ஆய்வாளர் கைக்கு வந்துசேர்ந்தன. 1946ல் அவை கெய்ரோ அருங்காட்சியகத்துக்குக் கொண்டுவரப்பட்டன

ஜாடியில் இருந்த நூல்களில் பெரும்பகுதியை முகமது அலியின் தாய் கணப்புக்காக எரித்துவவிட்டதாக தெரிகிறது. நெடுங்காலம் நாக் ஹம்மாதியில் கிடைத்த பல சுவடிகள் கெய்ரோவில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டிருக்கின்றன. கெய்ரோவிலிருந்து அவை ஐரோப்பாவுக்குக் கொண்டுசெல்லபப்ட்டு யுங் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயூரிச்சில் வைக்கப்பட்டிருந்தன. பிற்பாடு அவை அச்சிட்டு வெளியிடப்பட்டபின் கெய்ரோ அருங்காட்சியகத்துக்கே கொடுக்கபப்ட்டன. எகிப்தில் அதிபர் நாஸர் அதிகாரத்துக்கு வந்தபோது அவை தேசிய உடைமையாக்கப்பட்டன. இப்போது அவை கெய்ரோ காப்டிக் அருங்காட்சியகத்தில் உள்ளன.

இணையத்தில் இச்சுவடிகளைப்பற்றி ஏராளமான ஆராய்ச்சிகளும் விவாதங்களும் கிடைக்கின்றன. இன்று ஆய்வாளர்களின் ஆர்வத்தை மேன்மேலும் தூண்டும் ஒரு தளமாக இவை விளங்குகின்றன. செங்கடல் பகுதியில் கிடைத்த இதேபோன்ற சுவடிகளும் இந்நூல்களுடன்
இணைத்து ஆராய வேண்டியவை. இவை செஙக்கடல் சுவடிகள் [Red Sea Scrolls] எனபப்டுகின்றன

இவை கிபி நாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் சுவடிகள் என நிரூபிக்கபப்ட்டுள்ளன. மொத்தம் 52 நூல்கள். பல நூல்கள் முதலில் கிரேக்க மொழியில் இருந்து காப்டிக் மொழிக்கு மொழியாக்கம் செய்யபப்ட்டவை. இவற்றைப்பற்றிய தகவல்களை அறியhttp://www.tertullian.org/rpearse/manuscripts/nag_hammadi.htm என்ற இணையப்பக்கத்தை வாசித்துப்பார்க்கலாம்.

எகிப்தில் அலக்ஸாண்டிரியாவை மையமாக்கி இருந்த கத்தோலிக்க தேவாலயம் காப்டிக் தேவாலயம் எனப்படுகிறது. இது பின்னர் ரோமாபுரி கத்தோலிக்க தேவாலயத்துடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தது. ஆனால் ஆரம்பத்தில் இது புனித தோமையரால் நிறுவப்பட்டு சுதந்திரமாக இயங்கியதாகச் சொல்லப்படுகிறது. காப்டிக் என்றால் கிரேக்க மொழியில் ‘எகிப்திய’ என்றுதான் பொருள்.

எகிப்து இஸ்லாமிய மயமானபோது காப்டிக் தேவாலயத்தின் வலிமை குன்றி அதன் தனித்தன்மை மறைந்தது. இந்திய சிரியன் கிறித்தவர்களும், மார்த்தோமா கிறித்தவர்களும் அலக்ஸாண்டிரியாவில் இருந்த காப்டிக் தேவாலயத்தையே நெடுநாள் தங்கள் தலைமையிடமாக கொண்டிருந்தார்கள். இப்போதுகூட ரோமாபுரிக் கத்தோலிக்க மதத்துடன் தொடர்பில்லாத தனித்த கத்தோலிக்க அமைப்புகளாகவே அவை இயங்குகின்றன. ரோமாபுரி கத்தோலிக்க தேவாலயத்தின் அங்கீகாரம் இல்லாவிட்டாலும் கூட தோமையரின் சுவிசேஷம் நெடுங்காலம் காப்டிக் தேவாலயத்தால் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

வரலாற்று ரீதியாக மிக விரிவான ஆய்வுகளும் விவாதங்களும் நிகழ்ந்துள்ளன. அவற்றை இணையம் மூலமே ஆழமாக பின் தொடர முடிகிறது. நாஸ்டிக் பைபிள்களில் தோமையரின் சுவிசேஷத்தை மட்டும் தத்துவ ஆய்வாளர்கள் கூர்ந்து ஆராய்கிறார்கள். வைது காட்டும் கிறிஸ்து கத்தோலிக்க மதமும் புரட்டஸ்டாண்டு மதமும் காட்டும் கிறிஸ்துவிலிருந்து தெளிவாகவே மாறுபட்டிருக்கிறார். இவர் இறந்தபின் அடையப்பெறும் விண்ணுலகைப் பற்றி பேசவில்லை. மண்ணிலேயே அது எப்போதும் உள்ளது என்கிறார். அதைக் கண்டடைபவனே வீடுபேறு அடைபவன் என்கிறார். ” நீங்கள் வரக்காத்திருப்பது எதுவோ அது ஏற்கனவே வந்துவிட்டது .ஆனால் நீங்கள்தான் அதை அடையாளம் காணவில்லை ”

[கலைக்களஞ்சியங்களில் இருந்து] http://www.jeyamohan.in/?p=207



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 

 

 ஜெ,

 காமம் என வந்துவிட்டாலே நம்மால் தெளிவாக உரையாடவும் சிந்திக்கவும் இயலாமல் போய்விடுகிறதோ என சந்தேகிக்கிறேன். காந்தியும் காமமும் கட்டுரைகள் பல தரப்புகளையும் தொட்டுச் செல்கின்றன. கிறீத்துவம் சமணத்தில் துவங்கியபோது ஒரு கோணத்தில் பயணித்த கட்டுரை விக்டோரியன் ஒழுக்கவியலுக்குள் புகுந்து பின்னர் தாந்திரீக மரபிலும், ஞானிகளின் கிறுக்குத்தனத்திலும் வந்து நிற்கும்போது மிகுந்த கவனத்துடனேயே இதை அணுகியிருக்கிறீர்களோ எனத் தோன்றுகிறது.

 

காந்தியின் காம சோதனைகளை கிறுக்குத்தனம் என்றும், நடைமுறைக்கப்பாற்பட்டதென்றும் சொல்ல நாம் விக்டோரியன் ஒழுக்கவியலுக்குள் செல்ல அவசியமே இல்லை என நினைக்கிறேன். ஒருவர் தன் பேத்தியுடன் இயல்பாக நிர்வாணமாகப் படுத்திருப்பதை நம் சமூகம் 1946ல் மட்டுமல்ல அதற்கும் யுகங்களுக்கும் முன்பே அனுமதித்திருக்காது என்றே நம்புகிறேன். தாந்த்ரீக மரபுகள் சிலரால் பின்பற்றப்பட்டிருந்தாலும் அவை இந்திய  பொது வாழ்க்கையில் ஒன்றிப்போய்விடவில்லை. இன்னொன்று கட்டுப்பாடற்ற பாலியலை அனுமதிக்கும் சமூகங்களில் பெண்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாகவே இருந்திருக்கிறது. அந்த முறைக்குள் அந்தப் பெண் விருப்பப்பட்டே இருந்தால் கூட. தற்போதைய சட்டங்களில் மைனர் பெண்களின் சம்மதத்தோடேயே ஒருவர் உறவுகொண்டாலும் அது வன்புணர்வுக் குற்றமாகக் கருதப்படுவது இந்த அடிப்படைகளில்தான்.

 

விக்டோரிய ஒழுக்கவியல் காமத்தை ஒடுக்கிவைத்த வெறும் வறட்டு ஒழுக்கவியல் அல்ல அது இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நவீன உலகத்தின் பல அடிப்படைகளை உருவாக்கியது. அது இன்றைய சமூகங்களில் இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிரது. இந்தியாவிலும் அது அவ்வாறே இயல்பாகவே ஏற்றுக்கொ ள்ளப்பட்டிருக்கும் என நம்புகிரேன். அல்லது நம் இந்திய மரபிலும் அத்தகைய ஒழுக்க விதிகள் இருந்திருக்கும். அவற்றின் அடிப்படைகளிலும் காந்தியின் காம பரிசோதனைகள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். திருமணத்திற்கப்பாற்பட்ட காம நடவடிக்கைகளை நம் இலக்கியங்கள் ‘கள்ள ஒழுக்கங்கங்கள்’ என்ருதான் குறிப்பிடுகின்றன. ‘கற்பு’ நம் மரபின் பிரிக்க முடியாத ஒழுக்கக் கூறில்லையா?

 

“காந்தி கிறித்தவத்தில் இருந்து தன் புலனடக்கமுறைகளை எடுத்துக்கொண்டார். குற்றவுணர்ச்சியையே புலனடக்கத்துக்கான முக்கியமான கருவியாக அவர்கள் நினைக்கிறார்கள்”

 

கிறீத்துவத்தில் புலன் ஒடுக்கம் இருக்கிறது , ஆனால் புலனடக்க ‘முறை’ என்று ஒன்றிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதென்பது ஒரு முறையாகுமா? அது விதிகளை மீறும்போது தாமாகவே வந்துவிடுகிறது. மேலும் புலனடக்கத்தை மீறும்போது மட்டுமே குற்ற உணர்ச்சி ஏற்படுவதில்லை. ஆக அது ஒரு புலனட்டக்க ‘முறை’ அல்ல.

 

கிறீத்துவ இறைப்பணியாளர்களுக்கு கிறீத்துவம் சொல்லும் புலனடக்கம் இயேசுவையும் இறை பணியையும் முன்வைத்ததே. ஒரு அதி உன்னத சேவையை செய்ய முனைபவன் அதில் முழு கவனத்தையும் செயல்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் அது உருவாகியது. இதையே காந்தியும் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஏன் திருப்பணியாளர்கள் ‘ உலகக்’ கவலைகளிலிருந்து விடுபட்டு இறை பணியில் ஈடுபடுவது அவசியம் என்பதை புனித பால் முதன் முதலில் குறிப்பிடுகிறார் (1 கொரிந்தியர் 7:7 – 8 , 32 – 35). இதுதான் கிறீத்துவ பணியாளர்கள் பிரம்மச்சரியம் ஏற்பதன் அடிப்படை.

 

 

“காமத்தை  ஆதிபாவம் என்று விலக்கும் கிறித்தவம் அதை சாத்தானின் ஆயுதம் என்கிறது.”

 

முதலில் ஆதி பாவம் என்பதே காமம்தான் என கிறீத்துவம் நம்பவில்லை. ஆதிபாவத்தின் விளைவாக மனிதன் காமம் எனும் ‘சக்தியின் ‘ வயப்பட்டான் என ஒரு சிந்தனை இருந்தது. ஆதி பாவம் ஒரு உடல் ரீதியான பாவம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை எனலாம். அது காமம்தான் என நம்பிக்கை இல்லை. குறிப்பாக புனித அகஸ்டினின் இறையியல் இதைச் சொல்கிறது.

 

அகஸ்டின் ஆன்மாவையும் உடலையும் இருவேறாகப் பார்க்கிறார். ஆன்மாவும் உடலும் இணைந்து செயல்படும்போது அது பாவம் இல்லை. ஆனால் ஆன்மாவுக்கு எதிரான, வெறும் உடலை மகிழ்விக்கும் செயல்களையே பாவம் என வரயறுக்கிறார் அகஸ்டின். விலக்கப்பட்ட கனியை ‘உண்பது’ என்பது ஆன்மாவுக்கு எதிரான உடல் இச்சையைத் தேடிய நிகழ்வாக அகஸ்டின் கருதுகிறார். இன்றைய கிறீத்துவத்தின் பல அடிப்படை இறையியல் கோட்பாடுகளை உருவாக்கியவர் அகஸ்டின் என்பது குறிப்பிடத் தக்கது. ஆன்மாவின் இசைவோடு செய்யப்படுகிற காமம் தவறானதல்ல எனும் ‘வாதத்தை’அகஸ்டின் முன்வைத்தார். அகஸ்டினின் காலத்தில் (4ஆம் நூற்றாண்டு) இதுபோன்ற விவாதங்கள் பல தரப்பிலிருந்தும் கிறீத்துவத்திற்குள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சொல்லப்போனால் இன்றுவரை அவை தொடர்கின்றன.

 

கிறீத்துவம் காமத்தை எங்கே அங்கீகரிக்கிறதென்றால், திருமணத்தின் வழியாக. திருமணத்தின் வழியாக மட்டும். ஒரு ஆணும் பெண்ணுக்குமிடையேயான திருமணத்திற்குள்ளால் மட்டும். இதையும் புனித அகஸ்டினே வரையறுத்திருக்கிறார். அவர் திருமணத்தின் ஆசீர்வாதங்களாக மூன்றைச் சொல்கிறார். ஒன்று “மக்கட் பேறு, பரஸ்பர நம்பிக்கை, பிரிக்கமுடியாத ஒன்றிப்பு. திருமணத்தில் இணைய விரும்புபவனுக்கு இந்தக் கொடைகள் வழங்கப்படுவதாக”

 

இதில் மக்கட்பேறு என்பது காமம் இல்லாமல் சாத்தியமில்லை. மக்கட் பேறு என்பது கடவுளால் மனிதனுக்கு வழங்கப்பட்ட கொடை மட்டுமல்ல கட்டளையுமாகும். பலுகிப் பெருகி இந்த பூமியின் பரப்பை நிரப்புங்கள் என்பது மனிதனைப் படைத்த உடனேயே கடவுள் அளித்த கட்டளையும் , வாக்குறுதியும்.

 

அப்படியானால் கணவனும் மனைவியும் குழந்தை பேறுக்கன்றி வெறும் இன்பத்துக்காக உடலுறவு கொள்ளக் கூடாதா? எனும் கேள்வி எழுகிறது. அதற்கான பதில் மூன்றாவது கொடையான ‘நிரந்தர ஒன்றிப்பில்’ உள்ளது. ஆணும் பெண்ணும் நிரந்தர இணைப்பில் நிலைக்க அவர்களுக்குள் அந்தரங்க காம உறவு தேவைப்படுவதை, அது நிரதர ஒன்றிப்பின் அடையாளமாகவும் கருவியாகவும் திகழ்வதை திருச்சபை ஏற்றுக்கொள்கிறது. இதை திருமணத்துக்கு முன்பான வகுப்பில் கத்தோலிக்க இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் பாடமாக சொல்லித் தருகிறார்கள்.

 

கிறீத்துவம் குருத்குவத்தையும் திருமணத்தையும் ஒரே தட்டில் வைத்துதான் பார்க்கிறது. இரண்டுமே அருட்சாதனங்களாகவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதில் ஒன்றைவிட இன்னொன்று உயர்ந்ததல்ல.

 

மிகத் தெளிவாக கிரீத்துவம் ‘முறையான’, திருமணத்துக்குட்பட்ட காமத்துக்கு எதிரானதல்ல என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் திருச்சபை திருப்பணியாலர்களுக்கு பிரம்மச்சர்யத்தை பரிந்துரைப்பது அவர்களின் பணியின் முக்கியத்துவம் கருதியேயன்றி காமத்தின் இழிவால் அல்ல. கத்தோலிக்க திருச்சபைக்குள் சில கிளைகளில் குருக்கள் திருமணம் செய்ய அனுமதி உள்ளது. அண்மையில் சர்ச்சைக்குள்ளாகிய வத்திக்கானின் அறிவிப்பில் ஆங்கிலிக்கன் திருச்சபையிலிருந்து வந்து கத்தோலிக்கத்தில் இணைபவர்களுக்கு அவர்கள் வழக்கப்படியே திருமணத்துடனான குருத்துவம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

அகஸ்டினின் இறையியல் மற்ற பிற தத்துவங்காளையும் இறையியலைப் போலவே பலவிதமான உரையாடல்களையும் சாதகமான பாதகமான விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. ஆனால் நான் விளக்கியிருப்பது பரவலான கிறீத்துவ நம்பிக்கை என கருதுகிறேன்.

 

என் தனிப்பட்ட அனுபவத்தில் காமத்தை ஒரு மாபெரும் சக்தியாகக் காண்கிறேன். அது இந்த பிரபஞ்சத்தை இயக்கும் சக்திகளில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. காமத்தை ஒடுக்குவது ஒரு மகத்தான தியாகமாக தென்படலாம் ஆனால் அது இயற்கைக்கு, அதன் சக்திகளுக்கு எதிரான ஒரு மாபெரும் போர். அதனாலேயே அது மாபெரும் தியாகமாகவும் கருதப்படலாம்.  ஒருவகையில் தன் குறிக்கோளை அடைய விடாமல் தடுக்கும் தடையாகவே காமம் வந்து முடியலாம். தன் வாழ்நாள் முழுவதுமே ஒருவர் அதனோடு சண்டை போட்டுக்கொண்டே செலவழித்துவிடலாம். நான் அந்த முயற்சியில் ஈடுபட்டு தோற்றுப்போயிருக்கிறேன். அதுவும் அந்த இளம் வயதில் . ஆனால் அது சிறந்த அனுபவமாக அமைந்தது என்பதில் சந்தேகமேயில்லை.



Regards,
Cyril Alex
http://www.cyrilalex.com

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிறில் அலெக்ஸ்

 

அன்புள்ள சிறில்,

 

முதலில் விக்டோரிய அணுகுமுறைக்கும் இந்தியாவில் இருந்த பொது ஒழுக்க நெறிக்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சொல்லிவிடுகிறேன். இந்தியாவில் பொது ஒழுக்க நெறி என்பது இங்கிருந்த ஏராளமான பழங்குடிப்பண்பாடுகளில் இருந்து கிளைத்தது. ஆகவே அது சாதிக்கு ஒன்றாகவும் பிராந்தியத்திற்கு ஒன்றாகவும் இருந்தது. பின்னர் இந்தியாவின் ஆன்மீக- வழிபாட்டு நம்பிக்கைகளை இணைத்த வைதிக மதம் அவற்றுக்கு ஒரு பொதுத்தன்மையை உருவாக்கியது. அவ்வாறாக இந்தியசமூகம் என்ற உருவம் திரண்டுவர ஆரம்பித்தது. இவ்வாறுதான் இந்து தர்ம சாஸ்திரங்கள் உருவாயின. தர்மசாஸ்திரங்கள் நூற்றுக்கணக்கில் உருவாயின. பின் அவை ஒன்றுடன் ஒன்று உரையாடி அவற்றுக்கிடையே பொது நெறிகள் கண்டடையப்பட்டன.

 

பின்னர் பௌத்த, சமண மதங்கள் உருவாகி வந்தன. அவை இந்தியாவெங்கும் சீரான அற நெறிகளை உருவாக்கின. இந்தியாவிலுள்ள முக்கியமான நீதிநூல்கள் பௌத்த,சமண மதப்பின்புலம் கொண்டவை. வைதீக நெறிகள் அரசாங்கம் வழியாகவும் ஆலயம் வழியாகவும் நிறுவப்பட்டபோது இவை கல்விச்சாலைகள் வழியாக நிறுவப்பட்டன.  இன்று நாம் இந்தியாவில் காணும் ஒழுக்க நெறிகள் என்பவை இவ்வாறாக படிப்படியாக திரண்டு வந்தவையே . தர்ம சாஸ்திரங்களின் பரிணாமத்தை பி.வி.காணே அவரது புகழ்பெற்ற நூலில் விரிவாகபேசியிருக்கிறார்.

 

இந்த ஒழுக்க நெறிகளுக்கும் விக்டோரிய நெறிகளுக்கும் இடையே என்ன வேறுபாடு? விக்டோரிய ஒழுக்க நெறி முழுமுற்றான ஒழுக்க விதிகளை உருவாக்கியது. அதில் காமம் இடக்கரடக்கலாகவே இருக்க வேண்டும் என்றால் எந்நிலையிலும் அது அப்படித்தான். ஆனால் இந்திய ஒழுக்க நெறி அப்படிபப்ட்டதல்ல. சாமானியம் – விசேஷம் [நடைமுறை, சிறப்புத்தளம்]  என அது தன்னை இரண்டாகப் பிரித்துக்கொண்டது. சாமானியதளத்தில், அன்றாட தளத்தில் ஒன்று ஒழுக்கக் கேடாக, தடைசெய்யப்பட்டதாக இருக்கலாம். ஆனால் விசேஷ தளத்தில் அதற்கு சமூக அனுமதி உண்டு. கறாரான ஒழுக்கநெறி புழங்கிய சமூகங்களில் தாந்த்ரீகம் அனுமதிக்கப்பட்டது இவ்வாறுதான். கோயிலில் நிர்வாணச்சிலைகள் அங்கீகரிக்கப்பட்டது இவ்வாறுதான். காவியங்களில் காமம் அனுமதிக்கப்பட்டதும் இவ்வாறுதான்.

 

அதாவது விதிவிலக்குகளுக்கு, மீறல்களுக்கு ஓர் இடம்விட்டுத்தான் இந்திய நடைமுறை ஒழுக்கம் இருந்திருக்கிறது. மீறல்கள் என்பவை ஒரு சமூகத்தின் தீவிரமான சில தளங்களில் நடைபெறுகின்றன என்றும் அவற்றை தடைசெய்யமுடியாது என்றும்  இந்திய ஒழுக்க மரபு கருதியது. இந்தியாவில் பல இடங்களில் தாந்த்ரீகர்களிடமிருந்து ஆலயங்கள் பக்திமார்க்கத்தினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் எங்குமே தாந்த்ரீக மார்க்கிகள் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்டதில்லை. ஒருவேளை உதிரிச்சம்பவங்கள் சில இருக்கலாம். அதைத்தான் சிலப்பதிகாரம் முதல் நான் உதாரணம் காட்டியிருக்கிறேன். இப்போதுதான் இந்துத்துவர்கள் விக்டோரிய ஒழுக்க நெறிகளுடன் கிளம்பியிருக்கிறார்கள். 

 

விக்டோரிய ஒழுக்கவியல் தரப்படுத்தப்பட்ட ஒழுக்கநெறிக்கு எதிரான அனைத்தையுமே முற்றிலும் பிழையானதாகக் கண்டது. சமூக விலக்கு மூலம் அதை ஒடுக்க முயன்றது, அழிக்க முயன்றது. பிரிட்டனின் நிலத்தில் இருந்த எல்லா பாகன் சடங்குகளும் கோயில்களும் சிலைகளும் நூல்களும் மிச்சமே இல்லாமல் அழிக்கப்பட்டன. கிறித்தவ மரபில் கத்தோலிக்கர்களே அந்த அழிவுகளைச் செய்திருக்கிறார்கள் என்பது வரலாறு. ஆனால் கத்தோலிக்கமதம் அதன் பிரம்மாண்டம் காரணமாகவே பல்வேறு மீறல்களை அங்கீகரிக்கவும் சுவீகரிக்கவும் செய்தது. ஆனால் பிரிட்டனின் சீர்திருத்தக் கிறித்தவத்தின் அதி தூய்மைவாதம் கத்தோலிக்கம் அனுமதித்த விதிவிலக்குகளையே தடைசெய்யும் அளவுக்குச் சென்றது. கத்தோலிக்க தேவாலயத்துச் செரூபிக் சிலைகளையே அது உடைத்தது.

 

விக்டோரிய ஒழுக்கவியல்தான் டி.எச்.லாரன்ஸை சிறைக்கனுப்பியது. ஜேம்ஸ் ஜாய்ஸை பகிஷ்கரித்தது. ஐரோப்பாவின் கலை வளர்ச்சிக்கே அது எதிரானதாக ஆனபோது நூற்றாண்டுக்காலம் அதற்கு எதிராக மாபெரும் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் போராடியிருக்கிறார்கள்

மெல்ல மெல்ல அது பின்வாங்கி இன்று சில தூய்மைவாதக் குழுக்களுக்குள் ஒலிப்பதாக உள்ளது. அதன் பங்களிப்பை விட அதன் அழிவுகளே அதிகம் என்றே நான் நினைக்கிறேன். அதற்கு டி.எச்.லாரன்ஸ் முதல் ரஸ்ஸல் வரை நான் நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் சிந்தனையாளார்களை மேற்கோள் காட்ட முடியும். அது பிரிட்டனின் பண்பாட்டில் இருந்த பன்மைத்தன்மையை முற்றாகவே அழித்தது என்பதே வரலாறு காட்டுவது.

 

இந்தியாவில் விக்டோரிய ஒழுக்கவியல் கல்வி மூலம் புகட்டப்பட்டபோது இந்தியாவின் பன்மைத்தன்மையை மறுக்கும் போக்கு இங்கும் உருவாகியது. ஜெயதேவரின் அஷ்டபதியும் மீராபஜனும் ஆபாசம் என்று சொல்பவர்கள் உருவானார்கள். கஜுராகோ சிற்பங்களை களிமண் வைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சங்க இலக்கியங்கள் எல்லாம் ஆபாசக்குப்பை என்று புதுமைப்பித்தன் சொல்லியிருக்கிறார். கம்பன் ஆபாச இலக்கியம் என்றார் சி.என்.அண்ணாத்துரை. அதாவது நடைமுறை ஒழுக்கநெறியையே அனைத்துக்கும் உரியதாகச் சொல்லும் ஒரு மனநிலை இங்கே பரவியது. நம்முடைய கல்வியாளர்களில்  அது மிக வலுவாக இருந்தது. காந்தியின் சோதனைகளை சாமானிய மனம் கொண்டவர்கள் தாங்களும் செய்வார்களா என்றால் செய்யமாட்டார்கள். ஆனால் அதை அருவருப்பூட்டும் ஆபாசமான ஒரு செயல்பாடாக எண்ண மாட்டார்கள்.  அவர்கள் ராமகிருஷ்ணரையோ அரவிந்தரையோ அப்படி எண்ணவுமில்லை. விக்டோரிய ஒழுக்கவியல் கொண்ட கல்வியாளர்களே அதைச் செய்தார்கள்.

 

கத்தோலிக்க அமைப்புக்குள் காமம் எவ்வாறு அணுகப்பட்டது என்பதை நான் வாசித்தறிந்ததை ஒட்டியே எழுதினேன். குறிப்பாக ரஸ்ஸல் விரிவாக எழுதியிருக்கிறார். காமம் சார்ந்த கத்தோலிக்கமதத்தின் கருத்துக்கள் பரிணாமம் அடைந்து வந்ததை ஹாவ்லக் எல்லிஸ் எழுதியிருக்கிறார். கத்தோலிக்க மதத்தில் ஒருகட்டத்தில் பாலின்பம் என்பது கூடுமானவரை தவிர்க்கப்படவேண்டிய பாவம் என்ற கருத்து அதிகாரபூர்வமாகவே இருந்திருக்கிறது. குழந்தைகளுக்காக அன்றி இன்பத்திற்காக உடலுறவு கொள்வது பாவம் என்றே நெடுங்காலம் கத்தோலிக்க மதம் சொன்னது. அந்த அடிப்படையிலேயே மிஷனரி பொசிஷன் என்று சொல்லப்படும் ஆண் மேலிருந்து உறவுகொள்ளும் முறை மட்டுமே கிறித்தவர்களுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஏன் மறைந்த போப்பாண்டவர் ஜான்பால் இன்பத்திற்காக உடலுறவு கொள்வது பிழை என்பதனாலேயே கருத்தடையை அங்கீகரிக்க மறுப்பதாகச் சொல்லியிருக்கிறார். நினைவிலிருந்து சொல்கிறேன். விவரங்களை நான் திரட்டிவிடமுடியும்.

 

ஏசுவை மணமகனாகவும் தன்னை மணமகளாகவும் முன்வைத்த ஸ்பெயினின் புனித ஜான் ஆ·ப் கிராஸ் போன்றவர்கள் கத்தோலிக்க சபையால் சிறையிடப்பட்டு வதைக்கப்பட்டு பின் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மெல்ல மெல்ல கிறித்தவமதம் அவர்களையும் உள் வாங்கவேண்டியிருந்தது. கத்தோலிக்க மதத்தில் உறுதியான தூய்மைவாத கருத்து இல்லாமலிருந்திருக்கலாம். நெகிழ்தன்மையுடன் பலவற்றை அது உள்ளிழுத்திருக்கலாம். ஆனால் அதன் நீண்ட ஆயிரமாண்டு வரலாற்றில் காமம் ஒரு பாவம் என்ற கருத்துதான் முக்கியமான மையக்கருத்தாக இருந்திருக்கிறது. அது மெல்லமெல்ல பிற கருத்துக்களால் பின்னகர்த்தப்பட்டிருக்கிறது.

 இவ்விஷயங்களை ஒரு பொது வாசகனின் புரிதலை ஒட்டியே சொல்கிறேன். இத்தளத்தில் முறையான கல்வி கொண்டவர் என்ற நிலையில் நீங்கள் திருத்தலாம்

 ஜெ



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard