பெயரில் இரண்டு பெயர்கள் உள்ளதில், இயேசு என்பது வ.கா. முதல் நூற்றாண்டில் ரோமன் ஏகாதிபத்திய கொடுங்கோல் அரசினால் இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நாடு அடிமைப்படுத்தப் பட்டிருந்தபோது, ரோமிற்கு எதிரான ஆயுதப் போராட்டக் கலகக்காரர்கட்கான மரணதண்டனையான துக்குமரத்தில் தொங்கவிடப்பட்டு மரணமடைந்தார் என மடம் பரப்பும் புராணக்கதை புத்தகமான புதிய ஏற்பாடு சுவிசேஷங்கள் புனைகின்றன.
நிகழ்வுகள் மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம் | நிகழ்வுகள் லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம் |
1. தாய் பெத்லஹேமில் வாழ்ந்த மேரி 2 தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப் 3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீதுபரம்பரை 4 தாவீது உறவு முறை தாவீது- மற்றும் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன் வரிசையில் ஏசு 5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 41வது தலைமுறை 6 பிறந்தது பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில் 7 ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் மன்னர் பெரிய ஏரோது- இவர் இறந்தது வ.கா.மு.4 இல். 8 சூழ்நிலை சோகம் 9 வரலாற்று சம்பவம் ஏரோது மன்னர் இரண்டு வயதுக்கு கீழான குழந்தைகளைக் கொலை செய்தல்10 கர்ப்ப அதிசயம் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப் கனவில் வந்ததான தேவதூதன் சொன்னதாக 11 அதிசயக் கதைகள் கிழக்கிலிருந்த நாட்டு ஜோசியர்கள் நட்சத்திரம் பார்த்து, யூதர்களின் ராஜா பிறப்பைக் கணித்து, குழந்தை காண ஜெருசலேம் வந்து ஏரோது மன்னரைப் பார்த்து, பின் பெத்லஹேம் செல்ல- மீண்டும் அதே நட்சத்திரம் தோன்றீ வழிகாட்ட ஏசு வீடி சென்று பின் நேராக தன் நாடு சென்றனர். 12 ஏசு பிறந்த பின்னர் கனவில் எச்சரிக்கப்பட ஏரோது மன்னர் குழந்தைகளைக் கொலை செய்தற்கு முன்பே அண்டைய நாடு எகிப்து ஓடல் 13 வாழ்வு -ஆரம்பம்-பின் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப் ஏரோது மன்னருக்கு பயந்து எகிப்து நாட்டில் ஏசு வாழ்வு ஆரம்பம்.ஏரோது மரணத்திற்குப் பின் யூதேயா வராமல் கலிலேயா சென்று நாசரேத்தில் வாழ்ந்தனர். | 1 தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி 2 தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்.3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீதுபரம்பரை
4 தாவீது உறவு முறை தாவீது வேறோரு வைப்பாட்டி மூலம் பெற்ற மகன் நாத்தன் வரிசையில் ஏசு 10 கர்ப்ப அதிசயம் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மேரியினிடம் நேரில் வந்ததான தேவதூதன் 12 ஏசு பிறந்த பின்னர் குடும்பத்தில் முதல் மகன் ஆண் மகன் என்பதற்காக ஜெருசலேம் யூதக் கடவுள் ஆலயத்தில் யூதப் புராண சட்டப்படி மிருகபலி கொலை செய்ய தம்பதிகள் சென்றனர் |
கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.
கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.
தங்கள் பிரித்தாளும் சூட்சிகளால் ஐரோப்பாவின் நாடுகள் உலகை அடிமைப் படுத்தியிருந்ததால், கி.பி., கி.மீ. என்று குறீயேடு பரவியது. ஆனால் இயேசு வாழ்விற்கு ஆதாரம் ஏதும் இல்லாததாலும், அப்படியே புதிய ஏற்பாடு சுவிசேஷக் கதைகள் அடிப்படையில் மத்தேயு சுவிப்படி பெரியஏரோது இரண்டு வயது குழந்தைகளைக் கொலை என்னும் பொ.கா.மு.4கிற்கு முன் அதாவது பொ.கா.மு6ல் பிறந்திருக்க வேண்டும். லூக்கா சுவிக் கதையில் சிரியா கவர்னர் கிரேனியு யூதேயாவை ஆட்சி செய்தபோது மக்கட் தொகை கணக்கீடு போது இயேசு பிறப்பு எனில், ஏரோது ஆர்சிலேயுவை நீக்கி பொ.கா.6ல் கிரேனியு யூதேயாவை ஆட்சி பெற்றபின் பொ.கா.8 வாக்கில் மக்கட் தொகை கணக்கீடு நடந்தது.
(பொ.கா.- பொது க் காலம்-பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிபிஆங்கிலத்தில் Common Era-CE பொ.கா.மு -பொதுக் காலத்திற்கு முந்தையது- பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிமு ஆங்கிலத்தில் BeforeCommon Era-CE)
இயேசு கதைகளை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவர்கள் எழுதியுள்ள சுவிசேஷங்கள் புனைகின்றன, இவை அடங்கிய புதிய ஏற்பாடு என்ற புராணக்கதை புத்தககமாகவும், இத்தோடு உள்ளடக்கிய பைபிள்) என்ற பெரிய புராணக்கதை புத்தககமாகவும் கிடைக்கின்றது.