New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Tamilnadu Politics


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Tamilnadu Politics
Permalink  
 


""காங்கிரஸில் வாசனுக்கு வலிமை அதிகம் என்பது தவறு'' -பாயும் கார்த்தி சிதம்பரம்!

1.jpg
தமிழக காங்கிரஸில் எந்த ஒரு முக்கிய பதவியிலும் இல்லாத கார்த்தி சிதம்பரம், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தனது தந்தைக்கென (ப.சிதம் பரம்) ஒரு வலிமையான ஆதரவு தளத்தை காங்கிரஸில் உருவாக்குவதே இவரது நோக்கம். சமீபகாலமாக இவர் பேசும் பேச்சுக்கள் சர்ச்சைகளை உருவாக்கி வருவதுடன், இளைஞர் காங்கிரஸில் அதிகம் தலையிடுவதாகவும் கோஷ்டி அரசியலை வளர்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன. இந்தச் சூழலில் அவரைச் சந்தித்தோம்.

தமிழகத்திற்கு உகந்த கட்சியாக காங்கிரஸ் இல்லை என்று உங்கள் கட்சி மீதே குற்றச்சாட்டு வைக்கிறீர்களே?

ஆமாம்... உண்மைதான். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என 2 பிரதான கட்சிகள் மட்டும்தான் இருக்கின்றன. ஏன், இவை இரண்டு மட்டும்தான் இருக்க வேண்டுமா? அந்த ஸ்தானத்திற்கு காங்கிரஸ் வரக்கூடாதா? என்பது என் கேள்வி. பிரதான அந்தஸ்து தவிர, அந்த இரண்டு கட்சிகளுக்கும் பத்திரி கை, தொலைக்காட்சி என மீடியா பவர் இருக்கிறது. இவைகள் அனைத்தும் இருந்தும்கூட அந்த கட்சிகள் பொதுக்கூட்டங் கள் போட்டு மேடைகளில் முழங்குகிறார்கள். போட்டிக் கூட்டம் நடத்துகின்றனர். இது கட்சியை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. ஆனால் காங்கிரஸில் அந்த நிலை இல்லை. திராவிட கட்சி களின் ஸ்டைலை காங்கிரஸ் பின்பற்ற வேண்டும். திராவிட கட்சிகளைப்போல மக்களை நெருங்க பொதுக்கூட்டங்கள் போடவேண்டும். அதனைப் போடுவதற்கு கட்சி தவறினால் காங்கிரஸ் எப்படி வளர்ச்சி அடையும்? அதனால்தான் தமி ழகத்திற்கு உகந்த கட்சியாக காங் கிரஸ் இல்லை என்று பேசு கிறேன். இதில் தவறு இருப்ப தாக நான் நினைக்கவில்லை. 

கூட்டணி உறவை உரசிப் பார்க்கும் சர்ச்சைக்குரிய நாயக னாக நீங்களும் இருக்கிறீர்களே?

அரசியலில் மௌனம் ஒரு யுக்தி அல்ல. கட்சியின் அபிலாசைகளை தலைவர்களும் தொண்டர்களும் வெளிப்படுத்த வேண்டும். அப்பொதுதான் கட்சி வலிமை அடையும். ஒரு பாராளு மன்றத் தொகுதிக்கு 2 சட்ட மன்ற தொகுதி என 78 இடங் களை காங்கிரஸ் பெறவேண் டும் என்றும் மத்திய அரசின் நிதிகளில்தான் மாநில அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படு கிறது என்றும் நான் பேசு கிறேன். இது சர்ச்சையாகிறது. ஆனால் இப்படி நான் பேசு வது எந்த வகையில் அநியா யம்? அநாகரிகம்? எங்கள் கட்சியின் விருப்பத்தை தெரி விப்பது எப்படி உறவை உரசிப்பார்ப்பதாக நினைக்க முடியும்? என்னைப் பொ றுத்தவரை சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை பேசவேண் டும், அப்போதுதான் அந்த சர்ச்சைகள் விவாதமாக மாறும். அப்படி விவாதிக்கும் போதுதான் தெளிவு பிறக்கும். அந்த வகையில் சர்ச்சைக் குரிய நாயகன்தான் நான்.

நீங்கள் பேசும் சர்ச் சைக்குரிய பேச்சுக்களில் உங்கள் தந்தை ப.சிதம்பரத் திற்கு உடன்பாடு உண்டா? அவர் சொல்லித்தான் நீங் கள் பேசுகிறீர்களா?

மத்திய உள்துறை அமைச்சர் என்கிற மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறார் அவர். அவரிடம் ஆலோசித்துவிட்டுப் பேசுவதற்கு நான் ஒன்றும் அவரது ஸ்போக்ஸ் மேன் கிடையாது. 

இளைஞர் காங்கிரசில் கோஷ்டி அர சியல் கூடாதுங் கிறது ராகுல் காந்தியின் கட் டளை. அந்த கட்டளையை மீறுகிற வகையில் கோஷ்டி அரசிய லை நீங்கள் புகுத்துவ தாக இளைஞர் காங் கிரசின் மாநில தலைவர் யுவராஜ் குற்றம் சாட்டியிருக்கிறாரே?

ராகுல்காந்தியின் கட்டளையை எந்த விதத்திலும் நான் மீறவில்லை. இளைஞர் காங்கிரசில் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அழைக்கிற கூட்டங்களில் நான் கலந்து கொள்கிறேன். அது பேரண்ட் பாடி மீட்டிங்காக இருந்தாலும் சரி... இளைஞர் காங்கிரஸ் மீட்டிங்காக இருந்தாலும் சரி..! அவ்வளவுதான். மற்றபடி யுவராஜ் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் சொல்ல நான் தயாரில்லை.

காங்கிரசில் 85 சதவீத ஆதரவும் வலிமையும் உள்ள வாசன் இளைஞர் காங்கிரசில் தலையிடுவதில்லை. ஆனால் ப.சி.யின் மகன் என்பதை தவிர வேறு எதுவும் இல்லாத இவர் அதிகம் தலையிடுகிறார் என்று உங்கள் மீது விமர்சனம் வருகிறதே?

வலிமை அதிகம் என்று சொல்வதெல்லாம் தவறானது. வலிமை இருப்பதாக சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். யார், யாருக்கு என்ன வலிமை என்பதை ஆராய்ந்து பாருங்களேன். அடுத்து ப.சி.யின் மகன் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்வதே அபத்தம். ஏன்னா... நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். விமர்சிப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்... என்னை அழைக்கும் கூட்டங்களில் கலந்து கொள்கிறேனே தவிர இளைஞர் காங்கிரஸ் விவகாரங்களில் தலையிடுவதில்லை.

தி.மு.க.வைப்பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் விமர்சனங்களில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

தனி மனித விமர்சனத்தைத் தவிர மற்றபடி அவரது விமர்சனங்களில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. காங்கிரஸ் வளர்ச்சிக்கு அவரது விமர்சனம் சரியானதுதான். அதில் உண்மை இருக்கிறது. 

காங்கிரசில் தலைவர்கள் இருக்கிறார்கள்; தொண்டர் கள் இல்லை என்பதால்தான் தமிழகத்தில் 43 ஆண்டுகாலமாக காங்கிரஸ் வளர்ச்சி அடையாமைக்கு காரணம் என்கிறார்களே?

திராவிட கட்சிகளுக்கு இல்லாத இளைஞர்கள் வலிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு.எங்கள் கட்சியில் 13 லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள்.இந்த பட்டியலை ஆதாரபூர்வமாக வெளியிட தயார். திராவிட கட்சிகளுக்கு சவால் விடுகிறேன்... காங்கிரஸைப் போல தங்களின் இளைஞர்கள் பட்டியலை திராவிட கட்சிகள் வெளியிட தயாரா? தொண் டர்கள் இல்லை என்பதெல் லாம் திராவிட கட்சிகளின் கற்பனை


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

விஜயகாந்த் கோட்டையில் ஓட்டை!

1.jpg
கடந்த 6-ந் தேதி காலை.. அரைநாள் சூட்டிங் விசிட்டாக விருத்தாசலத்துக்கு வந்தார் விஜயகாந்த். பத்தரை டூ பன்னண்டு ராவுகாலம் என்பதால்... கெஸ்ட் ஹவுஸுக்குள்ளேயே இருந்தார். சரியாக 12.05-க்கு புறப்பட்டு விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு அவர் வர... படப்பிடிப்பு டீம் ரெடியாக இருந்தது. விஜயகாந்த் இயக்கத்தில் உருவாகும் "விருத்தகிரி'’ படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக தொடங்கியது. கோயிலின் வடக்கு கோபுரவாசல் வழியாக... தன் சினிமா ஜோடியுடன் கோயிலுக்குள் விஜயகாந்த் நுழைய... கேமரா அந்தக் காட்சிகளை விழுங்கியது. சாதாரணமாக கோயிலுக்குள் நுழைந்த விஜயகாந்த்... வெளியே வரும்போது அரசவேடத்தில் வெளியே வருகிறார். இதையும் கேமரா படம்பிடிக்க.. பேக்கப் சொல்லிவிட்டு... அங்கிருந்து மதியம் 2 மணிக்கே சென்னைக்குக் கிளம்பிவிட்டார்.

""கேப்டனை இந்த விருத்தகிரீஸ்வரர்தான் இப்ப எம்.எல்.ஏ.வா ஆக்கியிருக்கார். நாளை அவரை இதே கடவுள் முதல்வராக்கப் போகிறார் என்பதை சிம்பாளிக்காகக் காட்டும் காட்சிதான் இப்ப படமாக்கப்பட்டிருக்கு''’ என்றார் படப் பிடிப்புக் குழுவில் இருந்த ஒரு துணை இயக்குநர். 

லோக்கல் தே.மு.தி.க. பிரமுகர் ஒருவரோ ""தொகுதி முழுக்க சீர்கெட்டுக் கிடக்குது. பொது மக்கள் எங்கக்கிட்ட... எம்.எல்.ஏ. என்ன பண்றார்னு கோபமாக் கேட்கறாங்க. என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. இப்ப சூட் டிங்கிற்கு வந்தவர் கட்சிக்காரங்களைக் கூட சந்திக்காமக் கிளம்பிட்டாரு'' என்றார் ஆதங்க ஆதங்கமாய்.
1.jpg

பொதுமக்கள் அவர் மீது கோபப் பட என்ன காரணம்? களமிறங்கினோம்.

நெய்வேலி கவிதா சொல்கிறார் : ""தன் சொந்த செலவிலும் எம்.எல்.ஏ. நிதியிலும் அரசுக் கல்லூரிக்கும் அரசு மருத்துவமனைக்கும் கட்டிடங்கள் கட்டிக்கொடுத்த விஜயகாந்த்தைப் பாராட்டணும். அதே சமயம் என்.எல்.சி.க்கு நிலம்கொடுத்த பலருக்கு அதற்கான தொகைவரலை. அதைப் போராடி வாங்கிக் கொடுப்பேன்னு சொன்னார் விஜயகாந்த். சொன்ன தோட சரி. மணிமுத்தாறு ஆற்றில் தரைப்பாலம் கட்ட ஏற்பாடு பண்றேன்னார். அதுவும் நடக்கலை. அதேபோல் இங்க பெண்கள் கல்லூரி, வேளாண்மை கல்லூரியெல்லாம் கேட்டோம். முயற்சி பண்றேன்னார். அதையும் பண்ணலை. முதனை கிராமத்தில் இருக்கும் சம்பையா கோயிலுக்கு தன் மனைவியோட அவர் வந்தபோது... அவரை ஜனங்க மகிழ்ச்சியா வரவேற்றாங்க அப்ப அந்தக் கோயிலை அழகா கட்டிக்கொடுப்பேன்னு சொன்னார். அதையும் செய்யலை'' என்றார்.

கட்சியின் ஒ.செ.வாக இருந்த பட்டி லெனின் என்பவர் கட்சிப்பணியாக டூவீலரில் போனபோது விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். பிறகு?

""எங்க எம்.எல்.ஏ. விஜயகாந்த் அந்த லெனின் வீட்டுக்கே வந்து ஆறுதல் சொன்னார். லெனின் மனைவி சந்திரலேகாவிடம்.. "கவலைப்படாதே.. உன் இரண்டு பிள்ளைகளின் படிப்பு செலவு உட்பட எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்'னு சொல்லிட்டுப் போனார். ஆனா ஒரு சின்ன உதவிகூட லெனின் குடும் பத்துக்குக் கிடைக்கலை. அந்தப் பிள்ளைகள் ஸ்கூலுக்கு பீஸ் கட்டமுடியாம தவிக்குதுங்க'' என்றார்கள் பட்டி கிராமத்தினர்.

கவனை கிராமத்தைச் சேர்ந்தவர்களோ ‘""தே.மு.தி.க. கட்சிக்காரர் பாலகிருஷ்ணனின் மனைவி விஜயலட்சுமி கொல்லப்பட... அவரது இரண்டு பிள்ளைகளும் அனாதரவானது. இதை அறிந்த விஜயகாந்த் அந்தப் பிள்ளைகளை தத்து எடுத்துக்கொள்வதாக அறிவிச்சார்.. அந்தப் பிள்ளைகளுக்கும் சரியான அரவணைப்பு அவர் தரப்புக்கிட்ட இருந்து கிடைக்கவில்லை'' என்கிறார்கள்..

வழக்கறிஞரான பூமாலை குமாரசாமியோ ""தொகுதிக்கு அதைச் செய்வேன்.. இதைச் செய்வேன்னு பொய் வாக்குறுதிகளை வழங்கி ஓட்டுவாங்கி ஜெயித்த விஜயகாந்த் பெரிதா எதையும் செஞ்சிக் கிழிக்கலை. . அவங்க ஆளுங்களோ.... கேப்டன் வைக்கும் கோரிக்கை களை இந்த அரசு காது கொடுத்துக் கேட்கறதில்லைன்னு கதை விடறாங்க. மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விஜயகாந்த் போராட்டம் நடத்த வேண்டியதுதானே. சட்ட மன்றத்தில் குரல்கொடுக்க வேண்டியதுதானே? அவரைப் பொறுத்தவரை நடிப்புதான் பிரதான தொழில். சூட்டிங் இல்லாதபோதுதான் மத்த தைப் பத்தி யோசிப்பார். ஊழலை ஒழிக்கிறதுதான் தன்னோட லட்சியம்னு வீரமுழக்கம் செய்த விஜய காந்த் வாழ்க்கையில் எப்படி நடந்துக்குறார்? எம்.எல்.ஏ. நிதியில் நடக்கும் அத்தனை வேலைகளுக்கும் கமிஷன் அவருக்குப் போகுதா இல் லையா? இல்லைன்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்''’ என்கிறார் காட்டமாய்.

சரி.. தொகுதியில் தே.மு. தி.க.வின் நிலவரம் எப்படி?

""அதை ஏன் கேக்கறீங்க. அந்தப் போஸ்டரைப் பாருங்க. அந்தக் கட்சியின் நிலவரம் புரியும்'' என அந்த விருத்தாசலப் பிரமுகர் சொல்ல... போஸ்டரைக் கவனித்தோம்.

’"சாதிவெறி பிடித்தும்.. தே.மு.தி.க. தலித் பொறுப்பாளர்களை நீக்கியும்.. .தொகுதியைச் சீரழித்துவரும் ஒ.செ. முத்துக் குமாரை வன்மையாகக் கண்டிக்கிறோம் -இப்படிக்கு... காமராஜ், (ஒ.து.செ. ராசேந்திரப்பட்டினம்.)'’ என்றிருந்தது.

விஜயகாந்த்தின் சொந்தத் தொகுதியிலேயே தே.மு.தி.க.வின் நிலை இப்படியா? என திகைத்த நாம்..
1.jpg

விருத்தாசலத்தில் இருக்கும் விஜயகாந்த்தின் எம்.எல்.ஏ.அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கிருந்த அலுவலக உதவியாளர் சுந்தர்ராஜன் “""கட்சிக்குள்ள இருக்கும் சலசலப்பெல்லாம் கேப்டன் வந்தா சரியாயிடும். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை உடனுக்குடன் எங்க கேப்டனுக்கு அனுப்பிடறோம். இந்த ஒன்றிய செயலாளர் லெனினின் பசங்களுக்கு இன்னும் படிப்புச் செலவுக்கு பணம் போகலைங்கிற விசயம் நீங்க சொல்லித்தான் தெரியுது. உடனே அதைக் கொடுத்துடறோம். சம்பையா கோயிலைக் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கு. விரைவில் அது கட்டப்படும். மற்றபடி ஆகவேண்டிய வேலைகள் நடந்துக்கிட்டுதான் இருக்கு'' என்றார் நம்மிடம் பொத்தாம் பொதுவாய்.

கூட்டணி எதுவுமில்லாமல் நின்று வென்று, விருத்தாசலம் தொகுதி என் கோட்டை என்றார் விஜயகாந்த். அங்கு ஓட்டைகள் பெருசாகிக்கொண்டே இருக்கின்றன


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பணம் சர்ச்சையில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.!

1.jpg

""இருபது லட்ச ரூபாய் கேட்டு மிரட்டினார் குடியாத்தம் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் லதா!'' என்று ரியல் எஸ்டேட் அதிபர் மொசைக் செல்வம் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரை போலீசாரிடம் கொடுத்த மாவட்ட ஆட்சியர் ""புகாரைப் பதிவு செய்யுங்கள். விசாரியுங்கள். உண்மை என்றால் நடவடிக்கை எடுங்கள்!'' என்றார்.

கும்பல் சேர்த்தார், பணம் கேட்டார், மிரட்டினார் என 5 பிரிவுகளில் 13.8.10 அன்று, எம்.எல்.ஏ. லதா மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது போலீஸ்.

எம்.எல்.ஏ. மீது புகார் கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் கேட்டோம். ""ஜோதிமடம் ஏரியாவில் 3.29 ஏக்கர் நிலத்தை 2007-ல் வாங்கினேன். அந்த இடத்தில் 36 குடும்பத்தினர் குடியிருந்தனர். அவர்களைக் காலி செய்யச் சொன்னேன். அவர்கள் அ.தி.மு.க. கவுன்சிலர் பார்த்திபன் மூலம் என்னிடம் வந்தார்கள். அந்த 36 பேருக்கும், காலியார் கிராமத்தில் குடிசைகள் போட்டு, எல்லா வசதிகளும் செய்து கொடுத்தேன். இவர்களில் 7 பேர் மட்டும் எங்களுக்கு இடம் வேண்டாம். ரொக்கமாக கொடுங்கள் என்றார்கள். தலா 40 ஆயிரம் கொடுத்தேன். என்னிடம் பணம் வாங்கிய இந்த 7 பேரும் எம்.எல்.ஏ. லதாவை போய்ப் பார்த்திருக்கிறார்கள். எம்.எல்.ஏ. தூண்டுதலால் கலெக்டரிடம் "எங்கள் வீடுகளை இடித் துத் தரைமட்டமாக்கி, எங்களைத் துரத்தி விட்டார் கள்' என்று பெட்டிஷன் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு எம்.எல்.ஏ.வின் ஆட்கள் என் நிலத்தில் வந்து தகராறு செய்தார்கள். ஏரியா கவுன்சிலர் பார்த் திபன் போய் எம்.எல்.ஏ.வைப் பார்த்து முடிந்த ஒரு விஷயத்தை ஏன் பிரச் சினை ஆக்குகிறீர் கள் என்று கேட்டதற்கு, "எனக்கு 20 லட்சம் வாங்கிக் கொடு, நான் சைலண்ட் ஆகிவிடுகிறேன்' என்றாராம் எம்.எல்.ஏ. அதனால்தான் புகார் கொடுத்தேன். பார்த்திபனும் புகார் கொடுத்திருக் கிறார்!'' என்றார் மொசைக் செல்வம்.

இந்தப் பிரச்சினைகள் நடந்து கொண்டிருந்த போதுதான், காலி செய்யப்பட்ட மக்களை, அதே நிலத்தில் குடியமர்த்த வேண்டுமென்று, 12.8.10 அன்று குடியாத்தம் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியது மார்க்சிஸ்ட் கட்சி. பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான எம்.எல்.ஏ. லதா, நெஞ்சு வலியென மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டிருக்கிறார். எம்.எல்.ஏ. மீதான புகார் பற்றி மார்க் சிஸ்ட்1.jpgமா.செ.நாராயணனிடம் கேட்டோம்.

""நகராட்சியின் பாட்டைப் புறம்போக்கில் குடியிருந்த மக்க ளை ரவுடிகளை ஏவி காலிசெய்ய வைத்திருக்கிறார்கள். வீடுகளை புல்டோசர் வைத்து இடித்திருக் கிறார்கள். இந்தப் பிரச்சினைக்காக 3 முறை போராட்டம் நடத்தினோம். பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கப் போன எம்.எல்.ஏ. லதாவை மிரட்டியிருக்கிறார் கவுன்சிலர் பார்த்திபன். நாங்கள் புகார் கொடுத்தோம். நடவடிக்கை இல்லை. சி.எஸ்.ஆர். கூட போடவில்லை. ஆனால் செல்வம் புகார் கொடுத்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். இதற்காக செல்வத்தின் மீது மான நஷ்ட வழக்குத் தாக்கல் செய்வார் எம்.எல்.ஏ. லதா!'' என்றார் மா.செ. நாராயணன்.

கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் உள்ள எம்.எல்.ஏ. லதாவைச் சந்தித்து விட்டு வந்த மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் ராமகிருஷ்ணன் ""இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற் காக ஆளும் கட்சி செய்யும் சதி. இதைக் கண்டித்து, தமிழகம் முழு வதும் போராட்டம் நடத்தவுள் ளோம்'' என்கிறார். இருந்தாலும் எம். எல்.ஏ. லதா மீதும் அவர் கணவர் மீதும் தொகுதியில் புகார்கள் எழுந்து கொண்டேதான் உள்ளது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அன்பு அட்டாக்! வீரபாண்டி பஞ்ச்!

1.jpg
பா.ம.க.வை கூட்டணியில் இணைத்துக் கொள்வது என தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட தையும்... இதைத் தொடர்ந்து கோ.க.மணி தலைû மயிலான பா.ம.க.வின் ஐவர் குழு கலைஞரை இரு முறை நேரில் சந்தித்ததையும் நக்கீரனில் ஏற்கனவே பதிவுசெய்திருக்கிறோம்.

இந்த நிலையில்.. இந்த கூட்டணி முடிவை திசைமாற்றுவதுபோல்.... சேலத்தில் டாக்டர் அன்பு மணியின் பேச்சு அமைய... தி.மு.க., பா.ம.க. இடையே பரபரப்புத்தீ பற்ற ஆரம்பித்திருக்கிறது.

சேலம்-நாமக்கல் மாவட்ட பா.ம.க. பொதுக் குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மைக் பிடித்த அன்புமணி தடாலடியாகவே பேச்சைத் தொடங்கினார்.“""இங்கே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வருவதற்கு காரண மானவனே நான்தான். ஆனால் இங்குள்ள ஒரு அமைச்சர்(வீரபாண்டியார்) இதைத் தான் கொண்டு வந்ததாகத் தமுக்கடிக்கிறார். பென்னாகரம் இடைத்தேர்தலின்போது நம் கட்சிப்பிள்ளைகளிடம் பார்த்துக்கங்கப்பான்னு ஒரு வார்த்தைதான் சொன்னேன். அதற்கே அவர்கள்... "அண்ணே.. 4 பேர் மாட்டியிருக்கானுங்க. அப்படியே கொளுத்திட லாமா'ன்னு கேட்டாங்க. நான்தான் வேண்டாம்னு சொன்னேன். உள்ளூர் அமைச்சர் 100 பேரை அனுப்பினார். அவனுங்களை நம்ம பிள்ளைங்க அடிச்சே ஓடவிட்டானுங்க.. இதைப் புரிஞ்சிக்கங்க. நான் வாயைத் திறந்தா தமிழகமே தாங் காது''’என்றெல்லாம் ’காடுவெட்டி ரேஞ்சுக்கு’ அவர் பேச... உ.பி.க்கள் தரப்பில் அனலான அனல்.

நாம் அமைச்சர் வீரபாண்டியாரிடம் "சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை... சேலத்துக்கு கொண்டுவந்தவர் அன்புமணியாமே?' என்றோம். இதைக்கேட்டதும் காட்டமான வீரபாண்டியார், ""2004-ல் ஆ.ராசா மத்திய சுகா தார அமைச்சராக இருந்தபோது... எய்ம்ஸ் மருத்துவமனையைப் போல சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை 5 இடங்களில் கொண்டுவர முயற்சியெடுத்தார். காபினட்டிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த 5-ல் ஒன்று திருச்சியில் அமைக்கப்பட இருந்தது. பின்னர் அன்புமணி பொறுப்புக்கு வந்தபோது... "ஏம்ப்பா... அந்த மருத்துவமனையை சேலத் துக்கு கொடுத்தா சிறப்பா இருக்குமே'ன்னு கேட்டேன். சரிங்க அங்கிள்ன்னார். ஆனா திருச்சியில் உள்ளதை இங்க மாற்றாமல்... திருச்சிக்கு வாங்கிய அப்ரூவலையும் பிரதமர்ட்ட சொல்லாமல்... சேலத்துக்குன்னு தனியா ஒரு அப்ரூவலை வாங்கினார் அன்புமணி. இது தவறு என்ப தால் ராசா... டெல்லியில் புகார் கொடுத்தார். உடனே பதறிப்போன அன்புமணி... என்னிடம் புலம்ப.. நான் தலை வரிடம் சொல்லி ராசாவின் புகாரை வாபஸ் பெறவைத் தேன். அப்ப "மாநில நிதியை வேணும்னா ஒதுக்குறேன். அதில் திருச்சியில் அப்படியொரு மருத்துவமனையைக் கட்டிக்க'ன்னு சொல்லித்தான் ராசாவை கலைஞர் சமா தானப்படுத்தினார். இதுதான் உண்மை. இதை மறைத்து மட்டமான அரசியல் பண்ணப்பாக்குறார் அன்புமணி. அவருக்கு ராஜ்யசபா சீட்டை வாங்கிக் கொடுத்தவனே நான்தான். பதவி கிடைக்காதுன்னு அவர் டெல்லியில் சோகமா மூட்டை முடிச்சைக் கட்டியபோது கலைஞர்தான்.. "மந்திரி பதவி உடனே கிடைச்சிடுமா? பொறுமையா இரு. வாங்கித் தர்றேன்'னு சொல்லி வாங்கிக்கொடுத்தார். யாராக இருந்தாலும் நாவடக்கம் வேண்டும்''’ என்றார் சூடாக.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இளங்கோவனின் தடாலடிக்கு காங்கிரஸ் பதிலடி!

1.jpg
தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் அதிரடிப் பேச்சுக்களால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில், "தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவு எப்படி இருக்கிறது?' என்று காங்கிரஸுக் குள் ஒரு ரவுண்ட் வந்தோம்.

மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கொறடாவுமான பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ.விடம் பேசியபோது, ""2004 பாராளுமன்ற தேர்தலின் போது தி.மு.க.-காங்கிரஸ் உறவு ஆத்மார்த்தமாக உருவானது. அந்த உறவின் பிணைப்புகள் தளர்ந்து போவதற்கோ, அந்த கூட்டணி உறவு ஏற்பட்ட அன்றிருந்த அரசியல் அவசியங்கள் இன்று நீர்த்து போவதற்கோ எவ்வித காரணமும் இல்லாத சூழலில், இந்த கூட்டணி பலவீன மடையும் என்று எதிர்பார்ப்பது அறிவின்மை.

அரசியல் தோழமை என்பதும் தேர்தல் கூட்டணி என்பதும் அதிகாரத்தையும் ஆட்சியையும் பங்கு வைத்துக் கொள்வதற்காக மட்டுமே உருவாக்கப்படுபவை அல்ல. மேலும் சில தனிநபர்களை அமைச்சராக்கப்படுவ தற்காகவும் இந்த கூட்டணி உரு வாக்கப்படவில்லை. மதசார்பற்ற அரசியல் சக்திகளை தேசம் முழுவதும் ஒருங்கிணைப் பதற்கும் ஜன நாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்களை நாடு முழுவதும் இணைப்பதற்கும் இந்தியாவையும் பல மாநிலங்களை யும் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய அரசியல் சவால்களை முறியடித்து வெற்றி பெறுவதற்கும்தான் இந்த கூட்டணி உருவானது.

இந்த கூட்டணியின் அடித் தளத்தை பற்றி எடுக்கப்படும் சந்தேகங்கள்... இந்த கூட்டணியின் அரசியல் விரோதிகளால் கிளப்பி விடப்படுகிற வதந்திகளைத் தவிர வேறில்லை!'' என்கிறார் ஆணித்தரமாக.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்க பாலு, ""ஆட்சி வழியிலும் கூட்டணி ரீதியாகவும் ஒற்றுமையாக இருப்பதுதான் இந்த கூட்டணி. பரஸ்பர நல்லுறவுகளுடன் அன்னை சோனியா காந்திக்கும் கலைஞருக்கும் இருக்கும் அன்பின் வெளிப்பாடு கூட்டணியை வலிமைப்படுத்திக் கொண்டுதானிருக்கிறது. கூட்டணிக்குள் சிக்கல் என்கிற மாதிரியான எதுவும் டெல்லியில் எதிரொலிக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முக்கிய பிரச்சினைகள் எழும்போதெல்லாம்... முதல் ஃபோன் செய்து விவாதிப்பது கலைஞரிடம்தான் என்று வெளிப்படையாக தெரிவித்தவர் அன்னை சோனியாகாந்தி. அந்த செயல்களில் தற்போது வரை எவ்வித மாற்றமும் இல்லாதபோது... கூட்டணிக்குள் விரி சலா? என்கிற கேள்வியே அர்த்த மற்றது!'' என் கிறார் அழுத்த மாக.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப் பினரான கார்த்தி சிதம்பரம், ""தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது. இந்த கூட்டணி உறவு எதிர்காலத்தில் இன்னும் வலிமையாகவும் சமமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!'' என்கின்றார்.

அகில இந்திய மகிளா காங்கிரஸின் பொதுச் செய லாளர்களில் ஒருவரும் எம்.எல். ஏ.வுமான டாக்டர் காயத்ரி தேவி, ""2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானபோது, யார் பிரதமர் என்ற கேள்வி எழுந்தது. சோனியாதான் பிரதமர் என்று இந்திய அளவில் முதலில் குரல் கொடுத்தவர் கலைஞர். இதனை அன்னை சோனியாகாந்தி மறக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. நான் டெல்லி செல் கிறபோது கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது படேல், குலாம் நபி ஆசாத், வயலார் ரவி ஆகியோர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். அப்போது அவர்கள் கலைஞரின் அரசியல் ஆளுமையையும் மத்திய அரசுக்கு அவர் கொடுத்து வரும் ஒத்துழைப்பையும் விவரிப் பார்கள். தி.மு.க.-காங்கிரஸ் உறவு வலிமையாக இருப்பதை அப்போது உணர முடியும். அதேபோல, ராகுல்காந்தியை நான் சந்தித்தபோது கூட மகிளா காங்கிரஸின் நிலை குறித்து நிறைய விவாதித்தாரே தவிர... கூட்டணி உறவு மாறும்ங்கிற மாதிரியான எந்த சமிக்ஞையும் அவரிடமிருந்து வெளிப்படவே இல்லை. ஜெய லலிதாவின் ஆசையை நிறை வேற்ற ஓரிருவர் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர... கூட்டணிக்குள் எந்த சிக்கலும் இல்லை என்பதே இங்கும் டெல்லியிலும் எதிரொலிக்கும் நிதர்சனம்'' என்கிறார்.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் நம்பிக்கைக்குரியவரும் பள்ளிப்பட்டு எம்.எல்.ஏ.வுமான இ.எஸ்.ராமன், ""மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி... உறவு முறிவுக்கான சம்பவங்களும் காரணங்களும் இல்லாதபோது... இப்படிப்பட்ட பேச்சுக்களே ஒரு ஹம்பக்தான். சோனியாகாந்தி-கலைஞர் நட்பில் எவ்வித விரிசலும் எப்படி இல்லையோ அதேபோலத்தான் கூட்டணியிலும். மக்கள் பிரச்சினைக் காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைக்கிற கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருகிறார் கலைஞர். உதாரணமாக, கைத்தறி நெச வாளர்களுக்காக சிட்டா நூலின் விற்பனை வரி 2 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டுமென்றேன். அதனை ஏற்று ரத்து செய்தார் கலைஞர். இப்படி நிறைய விஷயங்களை விவரிக்க முடியும். ஆக, ஆட்சி ரீதியாகவும் இப்படி உறவு கள் சுமுகமாக இருக்கும்போது... கூட்டணி உறவில் எங்கிருந்து சிக்கல் எழும்? அதனால், சோனியா உருவாக்கிய கூட்டணி உறுதியாகவே இருக்கிறது'' என்கின்றார்.

காங்கிரஸின் பொதுச் செயலாளர் கோபண்ணா, ""மத்திய அரசின் சாதனைகளுக்கு பின்புலமாகவும், உறுதுணையாகவும் இருப்பவர் கலைஞர். அதனால்தான் "ஐ.மு.கூட்டணியின் சிற்பி' என கலைஞரை புகழ்ந்துரைத்தார் சோனியா. அந்த நிலை இன்றளவும் நீடிக்கிறது. அதனால் கூட்டணியில் சிக்கல் என்பதெல்லாம் அபத்தம். தனி நபர் ஒருவரின் சுயநலன்களுக்காக பேசப்படுகிற பேச்சுக்களை வைத்தெல்லாம் கூட்டணி முறியும் என்கிற அளவுக்கு தி.மு.க.-காங்கிரஸ் உறவு பலகீனமானதல்ல. "தமக்கு முக்கியத்துவம் இல்லாத கூட்டணியை உடைத்துவிட வேண்டும்' என்று பகல் கனவு காண்பவர்களின் எண்ணம் நிறைவேறாது!'' என்கிறார் சூடாக.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தேமுதிக இல்லாமல் ஆட்சி இல்லை: நடிகர் விஜயகாந்த்

First Published : 23 Aug 2010 03:48:57 AM IST

22vijayaka.jpg
இலவச திருமண மண்டபத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
மதுராந்தகம், ஆக.22:  தேமுதிக இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

 

÷மதுராந்தகம் அருகே மாமண்டூரில் ஸ்ரீஆண்டாள் அழகர் அறக்கட்டளையின் சார்பில் | 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தை ஞாயிற்றுக்கிழமை நடிகர் விஜயகாந்த் திறந்து வைத்து, பொதுமக்களுக்காக அர்ப்பணித்தார்.

 

÷அதைத் தொடர்ந்து 6 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணத்தை நடத்தி வைத்தார். திருமண ஜோடிகளுக்கான சீர் வரிசைப் பொருள்களும், ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கி அவர் பேசியது:

 

÷ஏழை, எளிய மக்களுக்காக திருமண மண்டபம் இலவசமாக கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவும், காங்கிரஸýம் சேர்ந்துக் கொண்டுதான் இலங்கைத் தமிழர்களை அழித்தன. இலங்கைத் தமிழர்களுக்காக முதலில் குரல் கொடுத்தது தேமுதிகதான்.

 

÷அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட டாஸ்மாக் கடைகளை திமுக அரசு குறை கூறியது. தற்போதைய திமுக அரசு, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு அளித்துள்ளது.

 

÷திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால், 65 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். தேமுதிக அந்த கட்சியுடன் கூட்டணி, இந்த கட்சியுடன் கூட்டணி என்று பலர் கூறி வருகிறார்கள். இதிலிருந்து, தேமுதிக இல்லாமல் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது என்பது தெரிகிறது. யாருடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியும்.

 

÷திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் ஊழல் கட்சிகள். தேமுதிக தலைமையிலான கூட்டணி அமைத்தால், கூட்டணி அமைக்க தயார் என்றார் விஜயகாந்த்.

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அனைத்து மக்களவைத் தொகுதியிலும் 2 எம்.எல்.ஏ. தொகுதி காங்கிரஸýக்கு வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

First Published : 23 Aug 2010 02:53:48 AM IST

22pck.jpg
கோவை, ஆக. 22: தமிழகத்தில் அடுத்து நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலின்போது, அனைத்து மக்களவைத் தொகுதியிலும் தலா 2 எம்.எல்.ஏ. தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 

கோவையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது:

 

மத்திய அரசின் சாதனைகளையும், மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியையும் மக்களிடம் பிரசாரம் செய்தால்தான், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உயரும். இதை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரசார இயக்கமாக மேற்கொள்ள வேண்டும்.

 

வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக பிரதிநிதித்துவம் தேவை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கட்சி பரவலாக உள்ளது. எனவே, தமிழகத்தில் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 2 பேரவைத் தொகுதிகளாவது காங்கிரஸ் கட்சிக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இளைஞர் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் 10 பேருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார் அவர்.

 

பேட்டியின்போது, தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., எம்.என்.கந்தசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தலையங்கம்: பொய் முகங்கள்!

First Published : 04 Aug 2010 12:45:00 AM IST

Last Updated : 04 Aug 2010 11:49:57 PM IST
edits.jpg
திங்கள்கிழமை கோவையில், முதல்வர் கலந்துகொண்ட மாபெரும் திமுக பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. விலைவாசி உயர்வுக்கு எதிராகச் சில நாள்கள் முன்பு அதே கோவையில், அதே வ.உ.சி. திடலில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் கண்டனக் கூட்டத்தின் வெற்றி, முதல்வரை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை முதல்வரின் பேச்சு தெளிவுபடுத்தி இருக்கிறது.

 

முதல்வரின் கோவை வ.உ.சி. திடல் உரையில் காணப்படும் ஆத்திரமும், ஆதங்கமும் தேவைதானா என்று கேட்கத் தோன்றுகிறது. தனக்கு முன்னால் பேசிய அமைச்சர்களை வழியொற்றி, எதிர்கட்சித் தலைவி ஜெயலலிதா தன்னைக் கருணாநிதி என்று குறிப்பிடுவதை இவரும் குறிப்பிட்டு மாய்ந்து போனது வியப்பைத் தருகிறது.

 

""நான் அண்ணாவிடத்திலே பண்பாடு கற்றவன். பெரியாரிடத்திலே அரசியல் நாகரிகம் கற்றவன். அதனால் கருணாநிதி, கருணாநிதி என்று சொல்லட்டும். கருணாநிதி என்பது ஒன்றும் தவறான வார்த்தை அல்ல. கருணை மிகுந்த நிதி. அப்படி எடுத்துக் கொள்கிறேன். எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும்'', என்றெல்லாம் இவர் மனக்குறையைக் கொட்டித் தீர்ப்பானேன். ஜெயலலிதா, கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைப்பது இவரைப் பாதிக்கவில்லை என்றால், அதை இவர் ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?

 

""நீ, நான் என்று ஒருமையில் பேசிக் கொள்வதாகக் கருதிக் கொள்ளாதே. ஏன் என்றால் உன் வயது என்ன? என் வயது என்ன? சிறு வயதிலிருந்தே உன்னைத் தெரியும் என்ற காரணத்தால், அந்த மரியாதையுடன் நீ, நான் என்று பேசுவதாக எண்ணிக் கொள். உன் வயதுக்கு 87 வயதான ஒரு முதியவரைப் பார்த்து, நான் அதிகம் படிக்காதவனாக இருக்கலாம், உன்னைப்போல பெரிய அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம். அந்த வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா? நான் மரியாதையைத் தேடி அலைகிறேன் என்று யாராவது தயவுசெய்து எண்ணிக் கொள்ளாதீர்கள்'' - இதுவும் கோவையில் முதல்வர் கருணாநிதி பேசியிருக்கும் பேச்சுதான்.

 

ஜெயலலிதா, முதல்வரைக் கருணாநிதி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?  கட்சிக்காரர்கள் அவரைக் "கலைஞர்' என்று அழைப்பது அவர்கள் இஷ்டம். ஆனால், மற்றவர்களும் அவரைக் "கலைஞர்' என்று அழைக்க வேண்டும் என்று  முதல்வர் ஏன் ஆசைப்படுகிறார் என்பது தெரியவில்லை. முதல்வரின் உறவினர்கள் நடத்தும் தொலைக்காட்சி சேனலிலும், பத்திரிகைகளிலும்கூடக் கருணாநிதி என்றுதானே குறிப்பிடுகிறார்கள். அப்படி இருக்க எதிர்க்கட்சித் தலைவி மட்டும் அவரைக் "கலைஞர்' என்று அழைக்க வேண்டிய அவசியம் என்ன?

 

முதலில் தமிழக அரசியலில் உள்ள அடைமொழிக் கலாசாரமே வயிற்றைக் குமட்டுகிறது. வெளிமாநிலத்தவர் நம்மிடம் இதைப்பற்றி கிண்டலும் கேலியுமாகக் கேள்வி கேட்கும்போது, தமிழகத்துக்கு ஏற்படும் தலைக்குனிவு பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? இந்த அடைமொழிகள் அர்த்தமில்லாதவை என்பதை யார் இவர்களுக்கு எடுத்துரைப்பது?

 

ஜவாஹர்லால் நேருவுக்கும், இந்திரா காந்திக்கும், சர்வதேச அளவில் வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்கள் எண்ணிலடங்காது. அவர்கள் யாரும் தங்களது பெயருக்கு முன்னால் "டாக்டர்' பட்டம் போட்டுத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது நாகரிகமில்லை என்பதுகூட நமது தமிழக அரசியல்வாதிகளுக்குத் தெரிவதில்லை. இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று யாருமே விதிவிலக்கல்ல.

 

பொதுவாழ்க்கையில் வந்தபிறகு அவர்கள் வகிக்கும் பதவிக்கும், அவர்களது தொண்டிற்கும்தான் மக்கள் மன்றம் தலைவணங்குமே தவிர, அவரவர் வைத்துக் கொள்ளும் அல்லது கட்சிக்காரர்களால் தரப்படும் அடைமொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

 

உயிருடன் வாழும்வரை, காமராஜை பெருந்தலைவர் என்றோ, அண்ணாதுரையை "அறிஞர்' என்றோ யாரும் அழைக்கவில்லை. அவர்களும் அழைக்க வேண்டும் என்று விரும்பவுமில்லை. காமராஜ் என்று அழைத்தவர்களும், அண்ணாதுரை என்று அழைத்தவர்களும், அவர்கள் மறைந்த பின்னர் பெருந்தலைவர் என்றும் அறிஞர் என்றும் அழைக்க முற்பட்டனர் என்றால், அது அந்த மாமனிதர்களின் சமுதாயப் பங்களிப்புக்கு மக்கள் மன்றம் அளிக்கும் மரியாதை.

 

"கலைஞர்' என்று கருணாநிதியையும், "அம்மா' என்று ஜெயலலிதாவையும் அழைக்கும் அருவருப்பான அடைமொழிக் கலாசாரம், தமிழகத்திலுள்ள ஏனைய மாநிலக் கட்சிகளையும் தொற்றிக் கொண்டிருக்கிறது. அரசியல் கலாசாரத்தை, மாற்றிக் காட்டுகிறோம் என்று கூறி கட்சி தொடங்கியவர்கள் டாக்டர் ராமதாஸýம், விஜயகாந்தும்.

 

""நானோ எனது உறவினர்களோ பதவி எதுவும் பெற மாட்டோம். அப்படி பதவி பெற்றால் என்னை நாற்சந்தியில் நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்'' என்று சவால்விட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றதெல்லாம் போகட்டும். தன்னை "மருத்துவர் அய்யா' என்றும் தனது மகனை "சின்ன அய்யா' என்றும் கட்சிக்காரர்கள் அழைப்பதைக் காதுகுளிரக் கேட்டு மகிழ்வதுதான் இவர் செய்து காட்டியிருக்கும் கலாசார மாற்றம்.

 

விஜயகாந்தும் இதேபாணியில், கட்சி சின்னம் பொறித்த மோதிரத்தை அணிந்து கொள்வது, கரை வேட்டி கட்டிக் கொள்வது என்று இயங்குவதுடன் நின்றுவிட்டால்கூடப் பரவாயில்லை. தன்னை "கேப்டன்' என்று அழைக்கச் சொல்கிறாரே, அதுதான் வேடிக்கை.

 

விஜயகாந்த் ராணுவத்தில் எந்தப் பிரிவில் கேப்டனாக இருந்தார்? இல்லை, இவர் மதுரையில் ஏதாவது கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக் குழுவின் கேப்டனாக இருந்தாரா? அவர் நடித்த நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் ஒன்றான கேப்டன் பிரபாகரன் படத்தில்  நடித்தவர் என்பதால் "கேப்டன்' அடைமொழியா? என்ன கேலிக்கூத்து இது.

 

கேட்டால் கட்சித் தொண்டர்கள் மரியாதைக்காக எங்களை இப்படி அழைக்கிறார்கள் என்று கருணாநிதியும், ஜெயலலிதாவும், ராமதாஸýம், விஜயகாந்தும் அதற்கு விளக்கம் கூறுவார்கள். அப்படி அழைக்கக் கூடாது என்று சொன்னால் தொண்டர்கள் அழைக்கப் போகிறார்களா? இவர்கள் விரும்புகிறார்கள் } அவர்கள் அழைக்கிறார்கள். அதுதானே நிஜம்?

 

பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் மக்கள் மனதில் இடம்பெற அவர்களது செயல்பாடுகள்தான் உதவுமே தவிர, பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் அடைமொழிகள் உதவாது. பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் தங்களைப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவு என்று கருதும் திராவிடக் கலாசார எதிர்பார்ப்பு எந்த பகுத்தறிவு வாதத்தைச் சேர்ந்தது என்பதைப் பெரியாரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு வயதைக் காரணம் காட்டி மரியாதை தேடிக் கொள்வதோ, பெயரைக் குறிப்பிடுவது மரியாதைக் குறைவு என்று கருதுவதோ ஏற்புடையதல்ல. இது முதல்வர் கருணாநிதிக்கு மட்டுமல்ல, அடைமொழிகளால் புளகாங்கிதப்படும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸýக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் பொருந்தும்.

 

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இதில் எத்தனை பெயர்களைச் சரித்திரம் நினைவில் நிறுத்தப் போகிறது என்பதே சந்தேகம். பிறகல்லவா இந்த அடைமொழிகள்!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரித்தீஷால் முடிந்தது, சிதம்பரத்தால் முடியாதா?
-ஆதங்கப்படும் சிவகங்கை

Kishore%208.jpg



நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமே இருக்கும் ரித்தீஷால் முடிகிற காரியம், பலம் வாய்ந்த உள்துறை அமைச்சர் என்ற பதவியில் இருக்கும் ப.சிதம்பரத்தால் முடியவில்லையே...’’

-இந்த டயலாக்தான் இப்போது சிவகங்கை சீமை முழுதும் பரபரத்து பேசப்படுகிறது. 

Kishore%201.jpgஇதன் பின்னணியை விசாரிக்க முனைந்தபோது, ரயில் மேட்டரை சொல்லி தடதடக்கின்றனர் சிவகங்கை நகர பிரமுகர்கள். 

சிவகங்கை நகர வர்த்தகர் சங்கத் தலைவரான கருணாநிதி நம்மிடம், ‘‘கடந்த ஒரு மாதமாக வாரணாசி & -ராமேஸ்வரம், புவனேஸ்வர் & ராமேஸ்வரம் என்ற இரு வாராந்திர ரயில்கள் சிவகங்கை வழியாக இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்திலிருந்து போகும்போதும் சரி, ராமேஸ்வரத்துக்கு வரும்போதும் சரி... இந்த ரயில்கள் மாவட்ட தலைநகரங்களான சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தில் நிற்பதே இல்லை. இதனால் இந்த ரயில்களை இயக்கியும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு எந்த பயனுமே இல்லை.

இதை ராமநாதபுரம் மாவட்ட மக்கள் தங்கள் தொகுதி எம்.பி.யான ரித்தீஷ் கவனத்துக்கு கொண்டு போனார்கள். அவர் உடனடியாக மத்திய ரயில்வே மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து விஷயத்தை எடுத்துக் கூற, அந்த ரயில்களை ராமநாதபுரத்தில் மட்டுமின்றி பரமக்குடியிலும் நின்று செல்ல ஏற்பாடு செய்துவிட்டார் ரித்தீஷ். 

இப்படி எம்.பி. பதவியில் இருந்து ரித்திஷால் சாதிக்க முடிந்ததை, உயர்ந்த பொறுப்பில் உள்துறை அமைச்சராக இருக்கும் எங்க சீனாதானாவால் (ப.சி.யை இப்படித்தான் லோக்கல் பாஷையில் அழைக்கிறார்கள்) சாதிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் தொகுதி மக்களுக்காக அவர் முழு முயற்சியோடு, இந்த விஷயத்தில் இறங்கி செயல்படவில்லை என்றே கருதுகிறோம்.

இனிமேல் பொறுத்துப் பார்ப்பதில் பயனில்லை என்றவுடன்தான் கடந்த வாரம் சிவகங்கை எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் இவ்விரு ரயில்களை சிவகங்கையில் நின்று செல்ல உத்தரவிடக்கோரி வர்த்தகர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம்.

நாங்கள் உண்ணாவிரதம் இருந்த உடனேயே இது ஏதோ ‘சீனாதானாவுக்கு’ எதிராக நடத்தப்பட்ட உண்ணாவிரதம் போல காங்கிரஸ்காரர்கள் நினைத்துக் கொண்டு இதை அரசியல் ஆக்குகிறார்கள்’’ என்றார் வேதனையாக. 

போராட்டத்தை முன்னின்று நடத்திய சிவகங்கை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளரான எம்.அர்ச்சுனன் இதுபற்றி நம்மிடம், 

Kishore%205.jpg‘‘நாங்கள் நியாயம் கேட்டு நடத்திய உண்ணாவிரதத்தை ஜீரணித்துக்கொள்ள முடியாத காங்கிரஸ் மாவட்டத் தலைவரான ராஜரத்தினம், இவ்விரு ரயில்களையும் சிவகங்கையில் நின்று செல்ல உத்தரவிடக்கோரி தென்கை ரெயில்வே பொது மேலாளருக்கு கடந்த 29.06.2010&-ல் சிதம்பரம் கடிதம் எழுதியதாக கூறி ஒரு கடிதத்தை வெளியிட்டார்.

கடிதம் வெளியிட்டதோடு நில்லாமல், உண்ணாவிரதம் இருந்த எங்களையும், மக்களையும் சுய நல அரசியல் நடத்துவதாகவும் வம்புக்கு இழுத்தார் ராஜரத்தினம். பிரதமருக்கு அடுத்த பொறுப்பு வகிக்கும் ப.சி. எழுதிய கடிதத்துக்கே ஒன்றரை மாதமாக ஒரு ஜி.எம். லெவல் அதிகாரி பதில் தரவில்லையென்றால், நம் அமைச்சரின் அதிகாரமே நமக்கு கேள்விக்குறியாகிறது. மேலும், அந்தக் கடிதத்தை ஒரு மாதமாக வெளியிடாமல் உண்ணாவிரதம் இருந்தவுடனேயே வெளியிட வேண்டிய அவசியம் என்ன? சாதாரண பாமர அடித்தட்டு மக்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அதிகாரிகளைப் பார்த்து மனு கொடுப்பார்கள்.உள்துறை அமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்பு வகிக்கும் ப.சி. ரெயில்வே அமைச்சரான மம்தாவிடம் ஒரு போன் செய்து பேசினாலே காரியத்தை சாதித்திருக்கலாமே..? கடிதம் எழுதும் காரியம் எல்லாம் சிவகங்கை மாவட்ட மக்களின் காதில் பூவைச் சுற்றுகிற வேலை’’ என்றார் சீறியபடியே.

Kishore.jpgரயில்களை நிறுத்தும் விஷயத்தில் ப.சிதம்பரத்தால் ஒன்றும் ஆகாது என முடிவு செய்தார்களோ என்னவோ, சிவகங்கை காங்கிரஸ்காரர்கள் சிலரே இந்த விஷயத்தை சிவகங்கை மண்ணின் மைந்தரான விருதுநகர் எம்.பி. மாணிக்க தாகூர் காதில் போட்டிருக்கிறார்கள்.

இதைக் கேட்டு வியப்-படைந்த மாணிக்கதாகூர், ‘நான் தலையிட்டால் ப.சி. கோபித்துக்கொள்வாரே’ என்ற தயக்கத்தோடு தனது லெட்டர் பேடிலேயே தென்னக ரயில்வே மேலாளர் மற்றும் மம்தா பானர்ஜிக்கு கடிதங்களை அனுப்பியிருக்கிறார். இது தெரிந்தவுடன், ப.சி. ஆதரவாளர்கள் மேலும் உஷ்ணமாகிவிட்டார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு தமிழாசிரியர் கழக மாநில துணைத் தலைவரான இளங்கோ, ‘‘ரயில்கள் நின்று செல்வதை ஒரு மக்கள் பிரச்னையாகப் பார்க்காமல் அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகுவதாலேயே இப்படி அனுமார்வால் கணக்காக ரயில் பிரச்சினை நீண்டு கொண்டு போகிறது’’ என வருத்தப்பட்டார்.

இதற்கெல்லாம் ப.சி. தரப்பினர் என்ன சொல்கிறார்கள்? மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரான ராஜரத்தினத்திடம் பேசினோம். 

Kishore%202.jpg‘‘மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எந்த ஒரு விஷயத்தையும் மதிநுட்பத்-தோடுதான் கையாண்டு காரியம் சாதிப்பார். அந்த வகையில்தான் இந்த விஷயத்தையும் உரியமுறையில் கடிதம் மூலமாக கையாண்டு வருகிறார். தேவைப்பட்டால் மம்தாவிடமும் நேரிலேயே வலியுறுத்துவார். சிலர் நினைப்பது மாதிரியெல்லாம் ‘ஜீ பூம்பா’ வேலை செய்தெல்லாம் ரெயிலை நிறுத்திவிட முடியாது. ப.சி.யின் கடிதத்துக்குக்கான பவர் இவ்விரு ரயில்களும் விரைவில் சிவகங்கையில் நிற்கும் போது தெரியும்’’ என்றார்.

ஆனால் இன்றுவரை இவ்விரு ரயில்களும் சிவகங்கையில் நிற்கவில்லை. கூடவே, ‘சிதம்பரத்தால் முடியாததை எப்படித்தான் செய்தாரோ ரித்தீஷ்...’ என்ற சிவகங்கை மக்களின் பேச்சும் இன்னும் நிற்கவில்லை!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஒழுங்கு நடவடிக்கை: இள‌ங்கோவனு‌க்கு கா‌ங். மே‌லிட‌ம் எ‌ச்ச‌ரி‌க்கைபுதுடெல்லி, செவ்வாய், 24 ஆகஸ்ட் 2010( 11:00 IST )தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும், மத்திய அமை‌ச்சருமான குலாம்நபி ஆசாத், ஈ.‌வி.கே.எ‌‌ஸ்.இள‌ங்கோவனு‌க்கு மறைமுகமாக எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌‌ள்ளா‌ர்.

டெல்லியில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவர்,தமிழ் நாட்டில் சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைமையை தவிர வேறு எவருக்கும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க அதிகாரம் இல்லை. தற்போது உள்ள தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தொடரும்.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க ஒரு போதும் வேறு யாருக்கும் காங்கிரஸ் தலைமை அதிகாரம் அளிக்க வில்லை. இதை மீறி, கூட்டணிக்கு எதிராக செயல்படுகிறவர்கள் மீது, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மூத்த தலைவர்களுக்கோ, தொண்டர்களுக்கோ ஏதும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில், தக்க இடத்தில், தக்க சமயத்தில் தெரிவித்து தீர்வு காணவேண்டும். அதை விடுத்து, பொது இடங்களில், பொது மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக கூட்டணி குறித்து கருத்து தெரிவிப்பதை அனுமதிக்க முடியாது. அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

எனவே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இது போன்ற அறிவிப்புகளை, கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் எ‌ன்று குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.

கட‌‌ந்த ‌சில மாத‌‌ங்களாக ‌தி.மு.க.வையு‌ம், த‌மிழக அரசையு‌ம் ஈ.‌வி.கே.எ‌ஸ்.இள‌ங்கோவ‌ன் கடுமையாக ‌விம‌ர்‌சி‌த்து வ‌ந்த‌ா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. இதை‌த் தொட‌ர்‌ந்தே குலா‌ம்ந‌பி ஆசா‌‌த் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உத்தப்புரத்தில் மோதல் சூழ்நிலையை மார்க்சிஸ்ட் ஏற்படுத்துகிறது : ஐகோர்ட்டில் ஊராட்சி தலைவர் மனு

மதுரை : மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் ஜாதி மோதல் ஏற்படும் சூழ்நிலையை, மார்க்சிஸ்ட் உருவாக்குவதாக, ஊராட்சி தலைவர் புஷ்பம் உட்பட ஐந்து பேர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.


உத்தப்புரத்தை சேர்ந்த ராஜம்மாள் உட்பட ஆறு பேர் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், உத்தப்புரத்தில் நடந்த மோதல் வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும், என கோரினர். முருகன் உட்பட சிலர் தாக்கல் செய்த மனுக்களில், அரசமரத்தை வழிபட அனுமதிக்க வேண்டும், என கோரினர். இம்மனுக்கள் ஐகோர்ட் கிளையில் நிலுவையில் உள்ளன. இதில் தங்களையும் ஒரு தரப்பாகசேர்க்க கோரி உத்தப்புரம் ஊராட்சி தலைவர் புஷ்பம் உட்பட ஐவர் தாக்கல் செய்த மனுவில், உத்தப்புரத்தில் 1980ல் ஜாதி கலவரம் நடந்தது. பின், 1990 முதல் 2008 வரை எந்த மோதல்களும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தடுப்பு சுவர் இடிக்கப்பட்டதில் இருந்து ஜாதி மோதல்கள் அடிக்கடி நடக்கின்றன. மார்க்சிஸ்ட் மற்றும் அதை சார்ந்த அமைப்புகள் இப்பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றன, என குறிப்பிட்டனர். இதன் விசாரணையை செப்., 1க்கு நீதிபதி எம்.ஜெயபால் தள்ளிவைத்தார்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அரசு "டிவி' க்களை திருடியவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசு அலுவலகங்களில் "டிவி' திருடியவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


விழுப்புரம் அடுத்த மோட்சகுளம் ஊராட்சி தலைவர் ரங்கப்பன். இவரது வீட்டின் ஒரு பகுதியை பட்டு நெசவு மற்றும் விற்பனை செய்வதற்காக ஆறுமுகம் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். கடந்த 1999ம் ஆண்டு பிப்.,10ம் தேதி இரவு ஆறுமுகம் பட்டு நெசவு கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டார். அப்போது காரில் வந்த மர்ம நபர் ஒருவர் பட்டு விற்பனை கடையின் பூட்டை உடைத்துள்ளார். அப்போது சத்தம் கேட்டதால் வீட்டிலிருந்த ரங்கப்பன் சத்தம் போடவே மர்ம நபர் காரில் தப்பிச் சென்றார். தகவலறிந்த வளவனூர் போலீசார் வாகன சோதனை செய்து கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த குமார்(42) என்பவரை பிடித்து கைது செய்து விசாரணை செய்தனர். இதில் கோலியனூர், டி.குச்சிப்பாளையம் மற்றும் புதுக்குப்பம் ஊராட்சி அலுவலகங்களில் வைத்திருந்த அரசு "டிவி'க்களை குமார் திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து குமாரை கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர், குற்றம்சாட்டப்பட்ட குமாருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

என் மீது வழக்கு போடுங்கள்!
கலைஞருக்கு ராமதாஸ் சவால்

pmk%201.jpg



மதில் மேல் பூனை என்பதற்கு அரசியலில் பா.ம.க.வைச் சொல்வார்கள். இப்போது, ‘எந்த கூட்டணியிலும் இல்லை’ என்ற மதிலில் இருக்கும் பா.ம.க. எந்தப் பக்கம் தாவுமோ என்ற நிலையில்தான்... வழக்கம்போல கூட்டணி பற்றி முடிவு செய்வதற்கான அதிகாரத்தை ‘அய்யா’வுக்கு அளித்தது பா.ம.க.வின் நிர்வாகக் குழுக் கூட்டம்.

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மீது வழக்குகள் பாய, மீண்டும் தி.மு.க. மீதான பாய்ச்சலின் விகிதத்தை அதிகரித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். 

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிற நிலையில், இதற்காக பாடுபட்ட ராமதாஸ், அன்புமணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு விழா சென்னை வன்னிய தேனாம்பேட்டையில் ஆகஸ்ட் 16&ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில்தான் தி.மு.க. மீதான பாய்ச்சலை அதிகப்படுத்தியிருக்கிறார் ராமதாஸ்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முதலில் மறுத்திருக்கிறார் ராமதாஸ். சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு நடைபெறும் முதல் பாராட்டுக் கூட்டம் என்று மூர்த்தி வற்புறுத்தவே சம்மதித்தாராம்.

pmk%203.jpgகாடுவெட்டி குரு மீது சமீபத்தில் வழக்கு போடப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதாலும் இந்தக் கூட்டத்துக்கு முக்கியத்துவம் அதிகமானது. ஆனால், கடைசிவரை காடுவெட்டி குரு வரவே இல்லை.

இதில் பேசிய ராமதாஸ், ‘‘இதை எங்களுக்கான பாராட்டுக் கூட்டம் என்று சொல்வதைவிட கலைஞருக்கு வேண்டுகோள் விடும் கூட்டம் என்று சொல்வதே சரி. மத்திய அரசின் சாதி வாரிக் கணக்கெடுப்பில் முடிவுகள் தெரிய 15 ஆண்டுகள் வரை ஆகும். அதனால் தமிழக அரசே தனியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

சாதி வாரி கணக்கெடுப்பிற்கு இப்போது எல்லோரும் அறிக்கை விடுகிறார்களே... இதற்காக அவர்கள் என்ன செய்தார்கள்? அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி ஆகியோர் பி.ஜே.பி., காங்கிரஸ் உள்ளிட்ட 174 எம்.பி.க்களின் கையெழுத்தை வாங்கிக் கொண்டு போய் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் கொடுத்தார்கள். அவர் அதைவாங்கி குப்பைத் தொட்டியில் போட்டது வேறுகதை.

அதில் இன்னொரு வேடிக்கை. இவ்வளவு நாளாக நான் இதைச் சொல்லவில்லை. அதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி கையெழுத்து போட்ட 174 பேரில் தமிழ்நாட்டில் பா.ம.க. எம்.பி.க்களைத் தவிர வேறு யாரும் கையெழுத்து போடவில்லை. ஏன், அதென்ன பஞ்சமா பாதகங்களில் ஒன்றா? அ.தி.மு.க. சார்பில் அப்போது எம்.பி.க்கள் இல்லை. ஒரு வேளை இருந்திருந்தால் கையெழுத்து போட்டிருப்பார்களோ என்னவோ! ஆனால், ‘நான் மிக பிற்படுத்தப்பட்டவன். எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொல்பவர் யார்? அவர் என்ன செய்தார்? என்று உங்களுக்கே தெரியும். தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற ஒரு நல்ல தீர்ப்பு சுதந்திரத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் இருந்து இதுவரை வந்ததில்லை. இந்தத் தீர்ப்பு வந்ததும் அரசு சந்தோஷப்பட்டு, மறுநாளே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஒரு கமிஷனை நியமிக்கிறேன் என்று அறிவித்திருக்க வேண்டாமா? அது எவ்வளவு பெரிய செய்தி. நான் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்தேன். ஆனால் சொல்லவேயில்லை.

இதற்காக தமிழ் நாட்டில் இருந்து பா.ம.க.வைத் தவிர ஒரு குரல் எழுந்ததா? ஒரு கட்சி, ஒரு தனிநபர், ஒரு அமைப்பு ஏதாவது மகிழ்ச்சி தெரிவித்ததா? சமூக நீதிக்காக அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று சொல்கிறீர்களே... என்ன செய்தீர்கள் சொல்லுங்கள் பார்ப்போம்? தந்தை பெரியார் இருந்தால் இந்த மாதிரி பொதுக்கூட்டம் போட்டே திட்டியிருப்பார்.

‘பயலுக எல்லாம் என்ன பண்றீங்க. உச்சநீதிமன்றம் எப்போதும் தப்பான தீர்ப்பு சொல்லிட்டிருந்தான். இப்ப ஒரு நல்ல தீர்ப்பு சொல்லியிருக்கான். நடவடிக்கை எடுங்க’ என தனது தடியாலேயே அடித்திருப்பார். இந்த ராமதாஸ் கேட்கிறேன்... நீங்க சமூக நீதிக்காக என்ன செய்தீர்கள்? இதுக்கு மேலும் சமூக நீதிக்காக அதைச் செய்தோம்... இதைச் செய்தோம் என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தால்... இதுக்கு மேலே எனக்கு வேறு வார்த்தை வந்துவிடும்’’ என்று கோபமாக நிறுத்திய ராமதாஸ் தொடர்ந்தார்.

‘‘இந்தியாவுல நடக்குதோ இல்லையோ... தமிழ் நாட்டில் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடக்க வேண்டும். இல்லையெனில் இந்தியாவிலேயே முதல் கட்ட போராட்டம் தமிழ் நாட்டில் நடக்கும். கடுமையான போராட்டம் செய்வோம். என்மீது வழக்கு போடட்டும்! குரு மீது போட்டீர்களே. வன்னியர்களை தூண்டிவிட்டதாக, என்ன நடந்தது தமிழ்நாட்டில்? அவர் மீது நிறைய பிரிவுகளில் வழக்கு போட்டிருக்கிறீர்கள். என் மீது போடுங்கள்... சந்திக்கத் தயாராக இருக்கிறேன்’’ என்று கலைஞருக்கு சவால் விட்டார் ராமதாஸ்!

இந்தக் கூட்டத்தில் கலைஞரையும், மத்திய அரசையும் கடுமையாக தாக்கி பேசி சவால் விட்ட ராமதாஸ், மருந்துக்கு கூட அ.தி.மு.க.வை தாக்கி பேசவில்லை என்பதால், ராமதாஸ் அ.தி.மு.க.வை நெருங்கி வருகிறாரோ என்ற ஆருடமும் மேடை அருகிலேயே விவாதிக்கப்பட்டது. 

அரசியலில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங் சாரி டீலிங்! தேர்தல் வந்தால் எல்லாம் தெளிவாகப் போகிறது என்கிறீர்களா? அதுவும் சரிதான்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘ராகுலுக்கு நெருக்கம்; தொகுதிக்கு தூரம்!’’
-மாணிக்க தாகூரை காய்ச்சும் காங்கிரஸார்

Viruthunagar.jpg



ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்னு எங்க எம்.பி.யை சொல்றாங்க. ஆனா எங்க தொகுதிக்கு ரொம்ப தூரமாப் போயிட்டாரே..?’’

Viruthunagar1.jpgஇப்படி விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்க தாகூரைப் பற்றி காங்கிரஸ் கட்சியினரே பேச ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு காங்கிரஸார் சொல்லும் காரணம் அதைவிட ஆச்சரியம்... 

‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவுக்கு அதிகப்படியான ஓட்டுப் போட்ட காரணத்துக்காகவும், அ.தி.மு.க.வின் தொகுதி என்ற காரணத்துக்காகவும்... விருதுநகர் எம்.பி. தொகுதியின் கீழ் வரும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியைப் புறக்கணிக்கிறார்’’ என்பதுதான் அவர்கள் சொல்லும் காரணம்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டு விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்க தாகூர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். 

ஒட்டு மொத்த விருதுநகர் தொகுதிக்கும் எம்.பி.யானபோதும் அதில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியை மட்டும் மாணிக்க தாகூர் திரும்பிப் பார்ப்பதில்லை. காரணம், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் மாணிக்க தாகூருக்கு குறைவான ஓட்டு விழுந்தது.

இதுபற்றி நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த பேச்சாளர் பொன்.மனோகரன், ‘‘நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஒரு வருஷம் தாண்டியாச்சு. இதுவரைக்கும் நன்றி சொல்லக்கூட மாணிக்க தாகூர் தொகுதிக்கு வரல. ஆனால், ‘மாணிக்க தாகூர் டெல்லியை விட்டு தொகுதிக்குள்ள வரப்போறாரு, விருதுநகர்ல நலத்திட்ட உதவிகள் வழங்கப்போறார்’னு செல்லுல எஸ்.எம்.எஸ். மட்டும் வரும். அதை பார்த்துட்டு... எம்.பி.யைப் பார்க்கலாம்னு போனா கண்டுக்காம போயிடுவாரு. ஏன் இப்படி நடந்துகிறார்னு எம்.பி.யோட உதவியாளர்கிட்ட கேட்டா அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டு வாங்கன்னு சொல்றாங்க. 

நாடாளுமன்றத் தேர்தல் நடந்தப்ப, ‘திருப்பரங்-குன்றம், திருமங்கலம் சட்டசபை தொகுதியில தேவர் சமுதாய ஓட்டுக்கள் அதிகம். நானும் தேவர் சமுதாயத்தைச் சார்ந்தவன்தான். என்னை எதிர்த்து போட்டி போடுவது வைகோ. அவரைவிட அதிகமான ஓட்டுவாங்கி வெற்றிபெற வைக்கணும்’னு பேசினார் மாணிக்க தாகூர். ஆனால், மாணிக்கதாகூரை விட வைகோ திருப்பரங்குன்றம் தொகுதியில அதிகமாக ஓட்டு வாங்கியதால, கடுப்பாயிட்டாரு. அந்த கோபமோ என்னமோ, இதுவரைக்கும் திருப்-பரங்-குன்றத்தை எட்டிப் பார்த்ததுகூட இல்ல. 

விருதுநகருல எப்படி எம்.பி. ஆபீஸ் போட்டிருக்காரோ அதுமாதிரி திருப்பரங்குன்றம் பக்கத்துல திருநகருல ஆபீஸ் போட்டிருக்காரு. அதில் தொகுதிக்காரங்க பயன-டையுறாங்களோ இல்லையோ, சிவகங்கை-காரங்கதான் தங்கிப் பயனடை-யுறாங்க. காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகளை அழைச்சு கூட்டம் போட்டு தொகுதிக்கு என்னென்ன நலத்திட்டம் செய்யனும்னு ஆலோசனை கூட கேட்பதில்லை’’ என்றார் வேதனையோடு.

Viruthunagar2.jpgஇதுபற்றி மாணிக்க தாகூர் எம்.பி.யுடன் பேசினோம்.

‘‘காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் இருப்பது சகஜம்தான். அதற்காக வைகோ அதிகமா ஓட்டு வாங்கினார், நான் குறைவா ஓட்டு வாங்கினேன் என்பதற்காகவும், அ.தி.மு.க. தொகுதி என்பதாலும் திருப்பரங்குன்றம் தொகுதி மக்களை நான் பாரபட்சமாகப் பார்க்கவில்லை.

வெற்றி பெற்றதுக்கு நான் நன்றி சொல்ல வரவில்லைதான். வைகோவும், தே.மு.தி.க. மாபா.பாண்டியராஜனும் வந்தார்களா? விருதுநகரில் எம்.பி. ஆபீஸ் திறந்துவைத்து மனு வாங்குவதைப் போலத்தான் திருப்பரங்குன்றத்திலும் ஆபீஸை திறந்து மனுக்கள் வாங்குகிறோம். திருப்பரங்குன்றம் தொகுதி மதுரை மாவட்டத்தில் இருக்கிறது. இதனால் மதுரை காங்கிரஸ்காரர்கள் பேச்சைக் கேட்டுகொண்டு என்னை இழிவுபடுத்தும் முயற்சியில் சில காங்கிரஸ்காரர்கள் ஈடுபட்டிருகிறார்கள். இந்த கோஷ்டி அரசியலில் நான் இறங்கத் தயாராக இல்லை’’ என்றார் வேகவேகமாக.

வைகோ விருதுநகர் தொகுதியில் தோல்வியுற்றபோதும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல கிராமம் கிராமமாக சென்றார். அதேபோல தோல்வியுற்ற மாபா. பாண்டியராஜனும் நன்றி சொல்லச் சென்றார். ஆனால், இவற்றை வசதியாகவோ, அசதியாகவோ மறந்துவிட்டார் மாணிக்க தாகூர். ஒருவேளை தொகுதிக்குள் வந்திருந்தால் தெரிந்திருக்குமோ?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கன்னியாகுமரியில் குடைச்சல்:
குளச்சலுக்கு மாறுகிறார் சுரேஷ்ராஜன்?

Janani.jpg



கன்னியாகுமரி தொகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜனும், முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரமும் மூன்றாவது முறையாக மோதுவார்களா என்ற பேச்சுக்களை விட, அமைச்சர் சுரேஷ்ராஜன் தொகுதி மாறுகிறார் என்பதே குமரி மாவட்ட தி.மு.க.வினரின் ஹாட் டாக்காக இருக்கிறது. 

Janani2.jpgகுமரி மேற்கு மாவட்டத்தில் இன்றும் கூட காங்கிரசும், கம்யூனிஸ்டுகளுமே கோலோச்சி வருகிற சூழ்நிலையில், வெற்றிக் கனியைப் பறிக்க அமைச்சர் சுரேஷ்ராஜன் தொகுதி மாறுகிறார் என மாவட்ட தி.மு.க.வின் சீனியர்களும் படபடக்கிறார்கள். ஏன்? 

‘‘தொகுதி சீரமைப்புப்படி 7 சட்டசபை தொகுதிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டம், 6 சட்டசபை தொகுதியை உள்ளடக்கியதாக மாற்றப்பட்டிருக்கிறது. இதன்படி கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு சாதகமான நிலை நிலவுகிறது. மேலும் கன்னியாகுமரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஏரியா மக்கள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு சுரேஷ்ராஜனைப் பார்க்கவே முடியவில்லை என்பது அவர்களது முக்கியமான கோபம். அதே சமயம் பதவியில் இல்லாவிட்டாலும் கூட முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் மக்களோடு மக்களாக இறங்கிவந்து வேலை செய்துகொண்டிருப்பதால் அவரது செல்வாக்கு அதிகரித்து வருகிறது. பி.ஜே.பி.யும் தனித்து நிற்கும் அளவுக்கு பலத்தோடு இருக்கிறது. தவிர தே.மு.தி.க.வைச் சேர்ந்த ஆஸ்டினுக்கு கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் அதிக செல்வாக்கு உள்ளது. இதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்த சுரேஷ்ராஜன் தனது கடைக்கண்பார்வையை இப்போது குளச்சல் தொகுதி மீது திருப்பியிருக்கிறார்’’ என சுரேஷ்ராஜனின் முடிவுக்குக் காரணமும் சொல்கிறார்கள் குமரி அரசியல் வட்டாரத்தில். 

Janani1.jpgஇதுபற்றி தி.மு.க. பிரமுகர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த குளச்சல் எம்.எல்.ஏ., ஜெயபால் மரணமடைந்த பிறகு, மாவட்டத் தலைவர் பதவிக்கு காங்கிரஸின் அனைத்து கோஷ்டிகளும் உச்சகட்ட குடுமிப்பிடி சண்டையில் இறங்கியுள்ளன. இதனால் காங்கிரஸ் சார்பில் அங்கு யார் போட்டியிட்டாலும் எதிர்கோஷ்டிகள் எதிர்த்து வேலை பார்ப்பது உறுதியாகிவிட்டது. காங்கிரஸின் இந்த கோஷ்டிச் சண்டையைப் பயன்படுத்தி குளச்சலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பார்க்கிறார் சுரேஷ்ராஜன். 

குளச்சல் மட்டுமல்ல.. அமைச்சருக்கு நாகர்கோவில் தொகுதி மீதும் ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அழகிரியின் ஆதரவாளரான எம்.எல்.ஏ., ராஜன் நாகர்கோவிலை தன் ‘கஸ்டடி’யில் வைத்திருப்பதால் யோசிக்கிறார் சுரேஷ்ராஜன். மேலும், நாகர்கோவிலில் அழகிரியின் மகள் கயல்விழியும் நிற்கக்கூடும் என்கிற பரவலான பேச்சு உள்ளது. அதனால் சுரேஷ்ராஜனின் பார்வை குளச்சல் மீதுதான் ’’ என்கிறார்கள். இதுபற்றி அமைச்சர் தரப்பிடம் கேட்டால், ‘‘இதுக்கு இப்ப என்ன அவசரம்?’’ என எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். ஆனால், தொகுதி மாற்றும் வேலைகளை சுரேஷ்ராஜன் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார் என்பது தி.மு.க.வினரும் ஒப்புக்கொள்ளும் நிஜம்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தாக்கப்பட்ட துணைவேந்தர் ஜெ.வை சந்தித்தது ஏன்?
பின்னணி தகவல்கள்

Jawagar.jpg



தி.மு.க. எம்.எல்.ஏ. மாலைராஜாவால் தாக்கப்பட்டதாக பரபரக்கப்பட்ட நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளியப்பன், திடீரென ஜெயலலிதாவை சந்தித்ததால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஆகஸ்ட் 7-ம் தேதியன்று நடந்த நெல்லை அண்ணா பல்கலைக்கழக பட்ட-மளிப்பு தினத்தன்று, துணைவேந்தருடன் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் பல்கலைக் கழக உடற்கல்வி இயக்குநர் தேவதாஸ், மாலைராஜா எம்.எல்.ஏ. மீது போலீஸில் புகார் கொடுத்தார். அது கிடப்பில் போடப்பட்டது. துணை வேந்தர் காளியப்பன் புகார் கொடுக்காததோடு, தாக்குதல் சம்பவம் பற்றி வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில், தலித் அமைப்புகள் மட்டுமின்றி, அ.தி.மு.க., கம்யூனிஸ்ட்டுகள் என பல தரப்பினரும்... ‘துணைவேந்தரைத் தாக்கிய மாலைராஜா எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும், அவரது சிண்டிகேட் உறுப்பினர் பதவியை பிடுங்க வேண்டும்’ என்று குரல் கொடுத்தனர். ஆனால், மாலைராஜா மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை தி.மு.க. தலைமை. அழகிரியின் ஆதரவாளர் என்பதால் மாலைராஜா மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என தி.மு.க.வினர் வெளிப்படையாகவே விவாதித்தனர்.

Jawagar1.jpgஇந்த நிலையில்தான் துணைவேந்தர் காளியப்பன் கடந்த ஞாயிறன்று, ஜெயலலிதாவை ‘மரியாதை நிமித்தம்’ தனது மனைவியுடன் சந்தித்ததாக புகைப்படத்துடன் செய்தி வந்தது.

இதுபற்றி துணைவேந்தர் காளியப்பனிடம் பேச முயன்றோம். அவர் மறுத்துவிட, பல்கலை வட்டாரங்களில் பேசினோம். 

“காளியப்பன் தி.மு.க. ஆதரவாளராக செயல்பட்டவர்தான். அதனால்தான் அவருக்கு துணை வேந்தர் பதவி கிடைத்தது. மாலைராஜா மோதல் விவகாரத்தில் தி.மு.க. தலைமை தனது குரலுக்கு செவி சாய்க்கும் என்று நம்பி ஏமாந்துவிட்டார். துணை வேந்தருக்கு ஆதரவாக தலித் அமைப்புகள் இறங்கியதால் தி.மு.க. தலைமை எரிச்சலடைந்தது. தி.மு.க. தலைமைக்கும், துணை வேந்தர் தரப்புக்கும் இடையில் திரை விழுந்ததும், தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டார் துணைவேந்தர். ஓய்வு பெற 20 -தினங்களே இருக்க, இனி பதவி நீடிப்பும் உறுதியாக இல்லை என்ற நிலையில், ஜெயலலிதாவை சந்தித்து தன் மனக்குமுறல்களை கொட்டினார் காளியப்பன்’’ என்றனர். இந்த மரியாதை நிமித்த சந்திப்பை வைத்து பெரும் அரசியல் பேச்சும் நெல்லையில் கிளம்பிவிட்டது. ‘‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பி.ஹெச். பாண்டியனின் மனைவியும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்தவருமான சிந்தியா பாண்டியனுக்கு சீட் வழங்கியவர் ஜெயலலிதா. அதுபோல, வரும் சட்டமன்ற தேர்தலில் காளியப்பனுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம்” என்பதுதான் அது. இதற்கு பதிலடியாக காளியப்பன் துணை வேந்தராக இருந்த கால கட்டத்தில், அண்ணா பல்கலைக் கழகத்தில் அவரது செயல்பாடுகளை துருவ ஆரம்பித்துவிட்டதாம் தி.மு.க. 

ஓய்வு பெற்ற பிறகே மீடியாக்களிடம் பேசுவதாக துணை வேந்தர் காளியப்பன் தரப்பு, கூறி வருவதால், இன்னும் இருபது தினங்கள் பொறுத்திருக்கவேண்டும் அடுத்த பரபரப்புக்கு!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிதான்!’’
அடித்துச் சொல்லும் ப.சிதம்பரம் 

Kovai%202.jpg



சென்னையை அடுத்து கோவை தற்போது முக்கியமான அரசியல் களமாக மாறி வருகிறது. இரு கழகங்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும் தனது பலத்தைக் காட்ட கோவையில் கடந்த 28-ம் தேதி சனிக்கிழமை பொதுக்கூட்டத்தை கூட்டியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான சி.சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு விழாவும் காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா பொதுக்கூட்டமும், கோவை ஜெயில் மைதானத்தில் நடந்தது. 

Kovai%203.jpgநேருவின் அமைச்சரவையில் பங்குபெற்றவர், காமராஜர் ஆட்சியில் பங்கு-பெற்றிருந்தவர்,பசுமை புரட்சியை முதலில் ஏற்படுத்தியவர், நேருவின் நெருங்கிய நண்பர், என்று பல பெருமைகளுக்கு உரியவர் சி.எஸ்.

அப்படிப்பட்டவருக்கு நடந்த விழாவைக் கூட காங்கிரஸ் கட்சிக்-காரர்கள் புறக்கணித்திருப்பது தான் உண்மையான காங்கிரஸ்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கோவையில் சி.எஸ். க்கு விழா எடுப்பதோடு பொதுக்-கூட்டமும் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்தவுடன்,அதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக மேடை ஏறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

Kovai%205.jpgஆனால் இந்த விழாவிலும், பொதுக்-கூட்டத்திலும் கலந்துகொள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.கே.வாசன் போன்றவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து கூட்டத்திற்கு இரண்டு நாட்கள் முன்னர், கோவை மாணவர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் யுவராஜ் என்பவர் கோவை வருகை தரும் தங்கபாலுவிற்கு கறுப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அவரும் மற்றும் ஐந்து காங்கிரஸ் தொண்டர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். 

இதனால் இளங்கோவன் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக கூட்டத்தை புறக்கணித்தனர். அதே போல் கோவை தங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட வாசன் ஆதரவாளர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தங்கபாலு ஆதரவாளர்களும், மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்களும் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய அரசின் நிதியில்தான் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்ட தங்கபாலு மத்தியிலும் மாநிலத்திலும் தி.மு.க.&காங்கிரஸ் உறவு சிறப்பாக உள்ளதாகவும், இதே நிலை தொடரவேண்டும் என்றுதான் காங்கிரஸ் தலைமையும் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சி.எஸ். எந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சியை வளர்க்க பாடுபட்டார் என்பதை குறிப்பிட்டுவிட்டு, மத்திய அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார். அதோடு, மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் எந்த மாநில அரசுகளும் திட்டங்களை நிறைவேற்றமுடியாது. அதனால் அனைத்து பெருமைகளும் மத்திய அரசையே சேரும் என்று பேசினார். மேலும் ‘1967&ல் இழந்த ஆட்சியை மீண்டும் பெற வேண்டும். மீண்டும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும். அதற்கு தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும்’ என்று சுருக்கமாக பேசிவிட்டு விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.

Kovai%201.jpgபின்னர் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ‘‘எந்தக் கட்சியில் பூசல்கள், கோஷ்டிகள் இல்லை? காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்தே கோஷ்டிப் பூசல்கள் இருந்து தான் வருகிறது. காமராஜர் முதல்வரான போது, சி.சுப்பிரமணியம் இருந்தால் தான் அமைச்சரவைக்கு அழகு என்று கூறி ராஜாஜி அணியில் இருந்த சி.எஸ். க்கு அமைச்சர் பதவியை கொடுத்து அழகு பார்த்தார். அன்று காமராஜர் கோஷ்டிகளைப் பற்றி கவலைப்படாமல், அனைவரையும் அரவணைத்துச் சென்றார். ஆனால் அந்த நிலை இன்று இல்லை. நானும் காங்கிரசில் இந்த கோஷ்டி வளர வேண்டும்... அந்த கோஷ்டி தேய வேண்டும் என்று என்றைக்கும் நினைத்ததில்லை.

இந்தியாவை காங்கிரஸ் ஆளும்போது தமிழகத்தை ஆள முடியாதா? இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது, ஆனால் தமிழகத்தில் முடியவில்லையே என்ற ஆதங்கம் அனைத்து காங்கிரஸ் தொண்டர்கள் மனதிலும் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். 1969ல் இளைஞர் காங்கிரசில் சேர்ந்ததிலிருந்தே எனக்கும் இந்த ஆதங்கம் இருக்கிறது. 40 ஆண்டுகளாக இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

தமிழக மக்களுக்கு தற்போது தனியொரு கட்சி மீது நம்பிக்கை இல்லை. கூட்டணியைத் தான் நம்புகிறார்கள். மத்தியில் உள்ளது போல் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சியைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், அதுவும் நம்மோடு தான்’’ என்று பேசி முடித்தார் சிதம்பரம்.

Kovai%204.jpgகூட்டத்தில் தலைவர்கள் பேசியது குறித்து காங்கிரஸ் தொண்டர்கள் சிலரிடம் பேசினோம், ‘தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என உண்மையான காங்கிரஸ் தொண்டன் ஒவ்வொருவரும் விரும்பும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மட்டும் இன்றும் தி.மு.க.வின் வாலை பிடித்துக்கொண்டே திரிகிறார்கள். தேர்தலில் வெற்றிபெற்றவுடன் எந்த தொண்டனையும் தி.மு.க.வினர் மதிப்பதில்லை. ஆட்சியில் பங்கு கேட்டாலும் வாயைத் திறப்பதில்லை. எத்தனை காலம் தான் இவர்கள் பின்னாலேயே செல்வது என்று தெரியவில்லை’ என்றனர்.

இளங்கோவன் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘இளங்கோவன் தற்போது தமிழக அரசின் குறைகளையும், செயல்பாடுகளையும் சுட்டிகாட்டி வருகிறார். இது தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை, அதனால் தான் எங்களுக்கு எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுப்பதில்லை. அவர்கள் எங்களை புறக்கணிக்க திட்டமிட்டதால் நாங்களே ஒதுங்கிகொண்டோம். நாங்களும் இதில் கலந்துகொண்டிருந்தால் நல்ல கூட்டம் கூடியிருக்கும்’’ என்றதோடு முடித்துகொண்டனர்.

மூத்த தலைவர் ஒருவருக்காக நடந்த விழாவிலும், காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்திலும் கூட காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோஷ்டி பூசலை பதிவு செய்யத் தவறவில்லை. அடையாளத்தை மறைக்க முடியுமா?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மதுவிலக்கு அறிவிப்பு:
காத்திருக்கும் காந்தியவாதிகள்!

Nellai%203.jpg



நான் ஒருமணி நேரம் இந்த நாட்டின் சர்வாதிகாரியானால் எனது முதல் வேலை இந்த நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் எந்த நஷ்டஈடும் தராமல் மூடி விடுவேன்”என்றார் காந்திஜி. 

Nellai%201.jpgஆனால் தமிழ்நாடு உட்பட நாட்டின் பல மாநிலங்களில் மது வியாபாரம்தான் பட்ஜெட்டையே நிர்ணயம் செய்கிறது. குறிப்பாக தமிழகத்தில் மதுபானங்கள் தரும் வருட வருவாய் 15,000 கோடி ரூபாயை நெருங்குகிற நிலையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல் செய்ய வேண்டும் என உண்ணாநோன்பு மேற்கொண்டுள்ளனர் காந்தி-யவாதிகள். 

சமீபத்தில் தமிழக முதல்வர் கலைஞர், தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமுல் செய்யப்படும் என்றார். முதல்வரின் இந்த வார்த்தைகளுக்கு பல பின்னணிகளும் அலசப்பட்டன. 

பா.ம.க.வின் பாய்ச்சலை சற்று பின் தள்ளவே முதல்வரின் குரல் ஒலிக்கிறது என்றனர் சிலர். டாஸ்மாக் ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தீவிரமாக குரல் கொடுத்து, வேலைநிறுத்த அறிவிப்பையும் வெளியிட்டனர். அவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாகவும் முதல்வரின் குரல் ஒலித்திருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, சில மதுபான ஆலை பெரு முதலாளிகள் உள்ளதாகவும், அவர்களை தங்கள் பக்கம் சாய வைப்பதற்காக எச்சரிக்கை செய்யும் விதமாகவும் முதல்வரின் குரல் ஒலித்திருக்கலாம் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.

இந்த நிலையில் மதுவிலக்கு பற்றி மீண்டும் கருத்து தெரிவித்த கலைஞர், ‘‘மதுவிலக்கு அமலாகும் என்றுதான் சொன்னேனே தவிர என்று அமலாகும் என்று சொல்லவில்லையே...’’ என மிக சீரியஸான இந்த விஷயத்தை உப்புசப்பில்லாத வார்த்தைகளால் கையாண்டார்.

இன்று தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 600 மதுக்கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் 2009-10 ம் ஆண்டில் கிடைத்த மொத்த வருவாய் 12 ஆயிரத்து 491 கோடி ரூபாய். இந்த நிதி அடுத்த ஆண்டில் -15 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று அரசே எதிர்பார்க்கிறது. இது தமிழக பட்ஜெட்டில் 25 சதவிகிதம். 

மக்களை அழித்து அதன் மூலமாகத்தான் 25 சதவிகிதம் வருவாயை அரசு பெறுகிறது என்ற நிலையில்தான்... இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும், காந்திய தொண்டர்கள் ஒன்று திரண்டு பூரண மதுவிலக்கை வலியுறுத்தி நெல்லையில் உண்ணாநோன்பு மேற்கொண்டனர். 

Nellai%202.jpgஇதில் பங்கேற்ற அகில இந்திய சர்வோதய மண்டல தலைவர் சுகன் பரந்த்ஜியிடம் பேசினோம்.

“தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும். பெண்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பீரதீபா பாட்டில், மீராகுமார், சோனியா காந்தி, சுஷ்மா சுவ்ராஜ் போன்ற பெண்கள் உயர் பொறுப்புகளில் இருக்கின்றனர். இவர்கள் நம் நாட்டின் ஏழை, எளிய பெண்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள முன்வர வேண்டும். மகாராஷ்ரா மாநிலத்தில், காந்திய அமைப்புகள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளினால், அங்கு சில மாவட்டங்களில், மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு நினைத்தால் செய்ய முடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம். படிப்படியாக மதுக்கடைகளை அரசு குறைக்க வேண்டும். முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அஜெண்டாவில் மதுவிலக்கைச் சேர்க்க நாங்கள் குரல் கொடுப்போம்” என்றார்.

உண்ணாநோன்பில் பங்கேற்ற தமிழ்நாடு சர்வோதய மண்டல செயலாளர் அண்ணாமலையிடம் பேசியபோது,

“இன்று தமிழகம் முழுதும் குடியால் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கையும், தகப்பனை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும். மூதறிஞர் ராஜாஜி காலத்தில் அரசின் வருவாயைக் கூட்ட 1 சதவிகிதம் என்று அறிமுகம் செய்யப்பட்ட விற்பனை வரி இன்று, 12.5 சதவிகிதம் என்ற அளவில் வந்து நிற்கிறது. இதைப்போல அரசு வரி வருவாய் மூலம் மாற்று வழிகளை சிந்திக்க வேண்டும். எனவே, பூரண மதுவிலக்கை அரசு உடனடியாக அமுல்படுத்த வேண்டும்” என்றார்.

இந்தக் கூட்டத்தினை முன்நின்று ஏற்பாடு செய்த மகாத்மா காந்தி சேவா மைய தலைவர் விவேகானந்தனிடம் பேசினோம்.

Nellai.jpg“எங்களுடைய நோக்கம் பூரணமான மதுவிலக்குதான். மதுவிலக்கு அரசுக்கு வருமான இழப்பு என்று சொல்லப்படுகிறது. இலவசங்களையும், ஆடம்பரச் செலவுகளையும் குறைத்தாலே, பல ஆயிரம் கோடி பணம் மிச்சப்படும். வருமானவரித்துறை, விற்பனை வரித்துறை, உற்பத்தி வரித்துறை, சேவை வரித்துறையிலுள்ள ஊழல்களை களைந்தாலே, அரசின் வருமானம் கூடும். தமிழகத்தில் மட்டும் மதுவை நிறுத்தினால், பக்கத்து மாநிலங்-களிலிருந்து மது இங்கே வந்து விடும் என்கிறார் தமிழக முதல்வர். நீங்கள் நிறுத்தினால் உங்களை முன் உதாரணமாக கொண்டு அவர்களும் நிறுத்தக் கூடுமல்லவா? 15 ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் என்று சொன்னாலும், 9 ஆயிரம் கோடி வரை மதுவால் மக்களுக்கு இழப்பு என்றும் புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன.

இன்று குஜராத் அரசு மதுவிலக்கினை அமல்-படுத்தி, சிறப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. கள்ளுக்கடை மறியலுக்காக தனது தோப்பில் இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியவர் பெரியார். மது விற்பனையில் அரசுக்கு லாபம் என்று சொன்னபோது, அதை உறுதிபட மறுத்தவர் அண்ணா. மதுவிலக்கை அமல்படுத்துவதே அவர்களுக்கு இந்த அரசு செய்யும் மரியாதை’’ என்றார்.

ஆகஸ்ட் 15&ல் மதுவிலக்கை விலக்கி வைத்த கலைஞர், காந்தியாரின் பிறந்தநாளான அக்டோபர் இரண்டாம் நாளாவது மதுவிலக்கு பற்றி அறிவிப்பாரா என்று காத்திருக்கின்றனர் காந்திய சிந்தனையாளர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உள்ளாட்சிகளை ஊனமாக்கும் புதுச்சேரி அரசு!
இதுவா ராஜீவ் காட்டிய வழி?

Pondy%203.jpg



கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிக அதிகாரம் அளிப்பதற்காக பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கொண்டுவந்தார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. 

அவர் பெயரை சொல்லி ஆட்சி நடத்தும் புதுச்சேரி காங்கிரஸ் அரசால், 98 பஞ்சாயத்துத் தலைவர்கள் கைது செய்யப்பட... ‘எங்களின் ஒட்டு மொத்த உரிமையும் பறிக்கப்படுகிறது’ என போராட்டம் நடத்திவருகிறார்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள். 

போராட்டக் குழுத் தலைவரும் புதுச்சேரி மாநில உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டமைப்புத் தலைவருமான கோ.ஜெகநாதனிடம் இது குறித்து பேசினோம். 

“ஒரு தலைமுறையே காணாத உள்ளாட்சித் தேர்தலை, போராடி நீதி-மன்றத்தின் உத்தரவின் பேரில் நடத்தினோம். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரத்து 138 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான அதிகாரத்-தையோ, உரிமையையோ, நிதி ஒதுக்கீடுகளையோ இதுவரை புதுச்சேரி அரசு செய்யவில்லை. 

Pondy%201.jpgஎனவே, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உரிமையையும், அதிகாரத்தையும் வழங்க வேண்டும் என்று புதுவையில் உள்ள அனைத்து பஞ்சாயத்து மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதை அடையாளப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கூட்டப்படும் சுதந்திர தின பஞ்சாயத்து கூட்டத்தைக் கூட்டாமல், கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். உடனே, இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று சொல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கைது செய்தனர். இதையடுத்து, உள்ளாட்சித் துறை அமைச்சரான நமச்சிவாயத்தை முதல்வர் கடிந்துகொள்ள... ஆத்திரம் கொண்ட அமைச்சர் ‘கிராம பஞ்சாயத்து கூட்டத்தைக் கூட்டாத அனைத்து பஞ்சாயத்துகளையும் கலைத்துவிடுவேன்’ என்று அதிரடியாக அறிவித்தார். பஞ்சாயத்துகளைக் கலைப்பதற்கு இவர் யார்? 

மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் அடிமட்ட மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத ஊனமான உள்ளாட்சி பிரதிநிதிகளாக நாங்கள் உள்ளோம். புதுச்சேரியில் சமூக பொருளாதார கணக்கீட்டின் படி நகராட்சிகளை விட கிராம பஞ்சாயத்துகள் 16 ஆண்டுகள் பின்தங்கி உள்ளன. காரணம் நிதிப் பற்றாக்குறை. இது சம்மந்தமாக பல முறை அரசுக்கு புகார் மூலமாகவும், போராட்டங்கள் மூலமாகவும் தெரியப்படுத்தினோம். இதன் பேரில் வெறும் 2 லட்சம் ரூபாய் மட்டும் நிதியாக ஒதுக்கியுள்ளது இந்த அரசு. உள்ளாட்சி தலைவருக்கான அலுவலகமோ, ஊழியர்களோ இதை செயல்படுத்த செயல் அலுவலரோ யாருமே இல்லை. எங்கே இவர்களுக்கு அதிகாரத்தையும், உரிமையையும் கொடுத்துவிட்டால் நாம் செல்லா காசாகிவிடுவோமோ என்ற சுயநல எண்ணத்தில் எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் சேர்ந்து செய்யும் சூழ்ச்சிதான் இது. இதற்கு முதல்வரும் உடந்தையாக உள்ளார். 

செப்டம்பர் இறுதிக்குள் எங்களுக்கான அதிகாரத்தையும் முறையான நிதி ஒதுக்கீடுகளையும் செய்ய வேண்டும் அல்லது கிராம பஞ்சாயத்து மூலமாகவோ கொம்யூன் மூலமாகவோ மக்களிடமிருந்து வரிவசூல் செய்ய எங்களுக்கு அதிகாரத்தை அளிக்கவேண்டும். இல்லையென்றால் 98 கிராம பஞ்சாயத்து தலைவர்களும் சாகும்வரை உண்ணாநிலை ஏற்க உள்ளோம். குடியரசுத் தலைவரை சந்தித்து எங்களது பதவியை ராஜினாமா செய்யும் கடிதங்களை அளிக்க உள்ளோம்’’ என்றார் ஆத்திரம் கொப்பளிக்க. 

இது குறித்து புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த முக்கிய காரணமாக இருந்தவரும் முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியர் ராமதாசிடம் பேசினோம். “அரசின் திட்டங்கள் நல்லமுறையில் மக்களை சென்ற-டைய மூன்று அடுக்கு மக்கள் பிரதிநிதிகளை அரசு தேர்ந்தெடுத்தது. இந்த அடிப்படையில்தான் புதுச்சேரியிலும் முதல்வரையே எதிர்த்து உள்ளாட்சித் தேர்தலை கொண்டுவந்தேன். ஆனால் இன்று அது முடக்கப்பட்டு விட்டது. 

ஓர் ஆண்டில் மே தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நான்கு நாட்கள் கண்டிப்பாக கிராமப் பஞ்சாயத்து கூட்டத்தை கூட்ட வேண்டும். ஆனால், கடந்த சுதந்திர தினத்துக்கு இவர்கள் இந்த பஞ்சாயத்து கூட்டத்தை கூட்டாதது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். எனவே இவர்கள் உரிமையை கேட்க போராடுவது அவசியம்தான். அதே நேரத்தில் தங்களது கடமையையும் சரியாக செய்ய வேண்டும்’’ என்றார். 

Pondy.jpgஇது குறித்து உள்ளாட்சி இயக்குநர் பாலசுப்ர-மணியத்திடம் பேசினோம். 

“அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டியது எங்கள் கடமை. அதை சரியாக செய்து வருகிறோம். மேலும் முதலில் இரண்டு லட்சம் ரூபாயும் பிறகு 1.5 லட்ச ரூபாயும் ஆக மொத்தம் 3.5 லட்சம் ரூபாய் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அளித்துள்ளோம். மேற்கொண்டு எந்த விபரத்தையும் அளிக்க எனக்கு அதிகாரம் இல்லை” என்று முடித்துக்கொண்டார். 

இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது, ‘‘உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான உரிமையையும் அதிகாரத்தையும் வழங்குவது நான் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த அரசு சம்பந்தப்பட்டது. இதுபற்றி பேச்சுவார்ததைகள் நடத்தி வருகிறோம். அதற்காக இவர்கள் தங்கள் கடமையைச் செய்யாமல் தேசிய கொடியை ஏற்றாமல், கூட்டத்தையும் கூட்டாமல் அரசை உதாசீனப்படுத்துவது தண்டிக்கத்தக்கது. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் என்ற முறையில் எனக்கு அதிகாரம் உள்ளது’’ என்றார் காட்டமாக. 

ராஜீவ் காந்தியின் பஞ்சாயத்து ராஜ் கொள்கையையே குழிதோண்டி புதைத்து, அதன் மேல் நின்றுகொண்டு சிரிக்கிறது புதுச்சேரி காங்கிரஸ் அரசு. 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘கொலைகாரனாகத்தான் இந்தியா செயல்பட முடியுமா?’’
டி.ஆர்.பாலுவைக் கேட்கிறார் தாமரை

TR%20balu.jpg



‘இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த அளவிற்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும். 

இத்தகைய நிலையில் இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொண்ட மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையையும் கண்டறிய இந்திய அரசு சிறப்பு தூதரை இலங்கைக்கு அனுப்பி கண்காணிக்க வேண்டும்’’ 

இப்படி ஒரு கோரிக்கையை வைத்து கடந்த ஜூலை 17-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் கலைஞர்.

TR%20balu1.jpgஇதன்பேரில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்...கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி தமிழ் இதழுக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்துள்ள பேட்டியில்,

‘‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்தியா தனது உதவிகளைத் தொடரும். ஆனால், அந்த உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடை-கின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரன் வேலையை இந்தியாவால் செய்ய முடியாது’’ என தனது தலைவர் கலைஞருக்கே பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஆயிரக்கணக்கான கோடிகளை இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கைக்கு வாரியிறைத்திருக்கும் நிலையில்... ‘அந்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் சிங்களன் செலவழிக்கட்டும். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை’ என்கிற ரீதியில் பாலு சொன்னது ஈழத் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

டி.ஆர்.பாலுவின் இந்த பேட்டி பற்றி நம்மிடம் பேசிய கவிஞர் தாமரை, ‘‘தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தமிழரா, இந்தியரா என்ற குழப்பம் அவருக்கே இருக்கும். இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. அவர் தமிழரோ, இந்தியரோ அல்லர், அசல் சிங்களர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரனாக இந்தியா செயல்பட முடியாது என்றும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சிங்கள ராணுவ குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக ஆதாரமில்லாமல் குறைசொல்ல முடியாது என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

TR%20balu2.jpgஅவரது இந்த பேட்டி நமக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் தி.மு.க. தலைமைக்கே வியப்பை அளித்திருக்கக் கூடும். அப்படி இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். இந்திய உதவிகளை கண்காணிக்க சிறப்பு தூதரை அனுப்பவேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்துகிறார். ஆனால் இது போலீஸ்காரன் வேலை என டி.ஆர்.பாலு சொல்கிறார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் ராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை நடுநிலையாளர்கள் பலரும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழர் பகுதிகளில் புதிய புதிய ராணுவ பாசறைகள் அமைக்கப்பட்டு வருவதையோ, பழைய உயர் பாதுகாப்பு வளையங்கள் நீடித்து வருவதையோ சிங்கள அரசே மறுக்கவில்லை. ஆனால் டி.ஆர்.பாலு இதற்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்கிறார். இவரும் இவரது குழுவினரும் ராஜபக்ஷேவின் விருந்தாளிகளாக இலங்கை சென்றபோது போய்ப் பார்த்திருந்தால் ஆதாரங்கள் கிடைத்திருக்குமே?

இப்போதும் கூட சுயேச்சையான ஒரு ஊடகவியலாளர் குழுவை எவ்வித தடையும், தணிக்கையுமின்றி தமிழர் பகுதிகளை சுற்றிப் பார்க்க அனுமதி வாங்கித் தரட்டுமே... அப்படி அனுமதி வாங்கித் தந்தால், நானே நேரில் சென்று உண்மைகளைக் கண்டறிந்து மக்களுக்கு சொல்ல தயாராக இருக்கிறேன். 

டி.ஆர்.பாலுவின் கூற்றுப்படி இந்தியாவால் போலீஸ்காரனாக செயல்பட முடியாது என்றால், கொலைகாரனாக மட்டும்தான் செயல்-பட முடியுமா?’’ என்று காட்டமாகக் கேட்டார் தாமரை. 

அதே பேட்டியில், டி.ஆர்.பாலு தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து ஈழ உணர்வாளர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷேவை சந்தித்துப் பேசினீர்களா?’ என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள டி.ஆர்.பாலு, 

‘‘ஆம். சந்தித்துப் பேசினோம். அவர்தானே இன்று ‘கிங்’ ஆக உள்ளார். அவருடன் பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம். அது நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது’’ என கூறியிருக்கிறார்.

‘‘ஈவிரக்கமின்றி தமிழர்களை கொன்று குவித்த ராஜ-பக்ஷேவின் சகோதரர் பசிலை ‘கிங்’ என அழைக்கிறார் என்றால், டி.ஆர்.பாலுவின் உண்மை-யான மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக அறிய-முடிகிறது. ஆக ராஜபக்ஷே குடும்பத்தினருடனும் அவர் நல்லுறவு கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த பதில் வெளிப்-படுத்துகிறது’’ என்கிறார்கள் தமிழுணர்வாளர்கள்! 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உறுதி செய்யப்பட்ட தூக்கு தண்டனை:
என்ன சொல்கிறார்கள் தர்மபுரி வாசிகள்?

Dharmapuri%205.jpg



வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் எத்தனையோ சோக நிகழ்வுகள் பதிந்துதான் கிடக்கிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் 2000-மாவது ஆண்டு பிப்ரவரி 2-ம் நாளுக்கு அப்படியொரு இடம் உண்டு. 

Dharmapuri%204.jpgமூன்று உயிர்களை உயிரோடு கொளுத்திய நிகழ்வு... தமிழர்களின் நெஞ்சங்களில் மாறாத சோகச்சுவட்டை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், வழக்குத் தொடர்பான இறுதித் தீர்ப்பு வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பில், சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட மூவருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கீழ்கோர்ட்களில் உறுதி செய்யப்பட்ட இந்தத் தீர்ப்பை மாற்றி எழுத குற்றம்சாட்டப்பட்டவர்களும் நிறையவே முயற்சித்தார்கள். இருந்தாலும், தலையெழுத்தை அவர்களால் மாற்றி எழுத முடியவில்லை. 

கல்விச் சுற்றுலாவுக்குச் சென்ற கோவை வேளாண் கல்லூரி மாணவிகளான கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று பேரையும்தான், அவர்கள் சென்ற பஸ்ஸிலேயே வைத்து கொளுத்தினார்கள் பாதகர்கள். 

கூடவே பஸ்ஸில் பயணம் செய்த சக மாணவ-மாணவிகள் 42 பேரும் சாட்சியாக நிற்க, ‘இது ஒரு கொடூரமான சம்பவம். எதற்காகவும் இதை மன்னிக்க முடியாது...’ என்று சொல்லி, கீழ் கோர்ட் தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

‘ப்ளஸன்ட் ஸ்டே’ ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக கீழ் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தான், பஸ் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றினார்கள் அ.தி.மு.க.வினர். மனம் பதைபதைக்க வைக்கும் இந்த கொடூர சம்பவத்தில் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனையும் மற்றவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

Dharmapuri%202.jpgசம்பவம் நடந்து பத்தாண்டுகளை கடந்து விட்டாலும், பஸ்ஸிலேயே கருகிய மூன்று உயிர்களின் ஆன்மாவும் இன்னும் தர்மபுரியிலேயே உலா வருவது போன்ற ஒரு பிரம்மை அந்த பகுதி மக்களுக்கு இருக்கிறது. தீர்ப்புக்கு பின்னர் ஏதோ ஒருவித அமானுஷ்ய அமைதி அந்தப் பகுதியில் நிலவுகிறது. 

கிட்டத்தட்ட சம்பவம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் முடிந்து தீர்ப்பு வந்துவிட்ட சூழ்நிலையில், தர்மபுரி பகுதி மக்களின் எண்ண ஓட்டம் என்னவாகத்தான் இருக்கிறது? 

‘‘போட்டோவைத் தவிர்க்க முடியுமா?’’ என்று கேட்டபடியே, கருத்துச் சொல்ல முன்வந்தார் பெரியவர் முருகன்.

‘‘ஈவு இரக்கமே இல்லாம நடந்த கொலைகள் அது. அதுக்கான தண்டனைதான் தூக்கு. இதுல அனுதாபப்படறதுக்கு எதுவுமே இல்லை. அராஜகத்துக்கும், அட்டூழியத்துக்கும் ஒரு எல்லை உண்டு. அதை அ.தி.மு.க.வைச் சேர்ந்தவங்க மீறிட்டாங்க. அதுக்கான தண்டனை அவங்களுக்கு கிடைச்சிருக்கு. 

Dharmapuri%201.jpgகுடிபோதையில செஞ்சிட்டாங்கன்னு சப்பையா காரணம் சொல்லி, சிலபேரு அ.தி.மு.க.காரங்களுக்காக ஆதரவு தேடப் பார்க்குறாங்க. அதையெல்லாம் ஏத்துக்க முடியாது. உப்புத் திண்ணவங்க யாரா இருந்தாலும் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும். என்னைப் பொறுத்த வரையில், வழக்கம் போல காலம் கடத்தாம உடனே தண்டனையை நிறைவேத்தணும். அப்பத்தான் இனிமேல இந்த மாதிரி தவறுகள் நடக்காது’’ என்றார்.

அடுத்து, செம்மணஹள்ளியைச் சேர்ந்த ராஜா கருத்துச் சொல்லும்போது, ‘‘அரசியல்ல இருக்கிறவங்க நாகரிகமாக நடந்துக்கணும். பொதுமக்களுக்கு இடைஞ்சலா இருக்கக்கூடாது. மோசமா நடந்துக்கிட்டா யாரா இருந்தாலும் இப்படி கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். இதுபோல அசம்பாவிதம் இனிமே நடக்கக்கூடாதுங்கறதுக்கு இதுமாதிரியான தீர்ப்புகள் ரொம்ப அவசியம். அதுக்கு 3 பேருக்கும் விதிச்ச தண்டனை ஒரு பாடமா இருந்து, இனிமேல இப்படியொரு சம்பவம் நடக்காம இருக்கும்னா, அதுவே இந்த தீர்ப்புக்கு கிடைத்த வெற்றி!’’ என்றார்.

தூக்கு உறுதி செய்யப்பட்ட ரவீந்திரனின் வீட்டருகே சுமார் 200 வீடுகள் இருக்கிறது. அவருடைய உறவினர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். 

யாரை அணுகிக் கருத்துக் கேட்டாலும், ‘‘என்ன செய்யறது, நடந்த சம்பவத்துக்கு நாங்க ஒரு காலத்துலயும் வக்காலத்து வாங்க மாட்டோம்...’’ என்று ஒரே பதிலைச் சொன்னார்கள். 

அவர்களில் ஒருவரான வழக்கறிஞர் ரமேஷிடம் தனியாகப் பேசினோம்.

‘‘ரவீந்திரனுக்கு இப்படியொரு தண்டனை விதிக்கப்பட்டதுல எங்களுக்கெல்லாம் பெரிய வருத்தம்தான். கட்சியில விசுவாசத்தோடு இருக்கிறோம் என்பதை காட்டுறதுக்காக யாரோ கூப்பிட்டாங்கன்னு போய் பலிகடா ஆயிட்டாரு. 

எங்க பகுதியில இருக்குறவங்களுக்கு நிறைய உதவிகளைச் செஞ்சிருக்காரு. போர்வெல் போடுறது, விதவை பென்சன் வாங்கி தர்றது, வருஷத்துக்கு ஒருதரம் இலவசமா வேட்டி-சேலை கொடுக்கிறதுன்னு நிறைய நல்லது பண்ணியிருக்காரு. இப்படி நல்லது பண்ணிகிட்டு இருந்த ஒருத்தரோட நிலைமை இப்படி ஆகும்னு யாரும் எதிர்பார்க்கலை.

Dharmapuri%203.jpgமகாராஷ்டிர மாநிலம் நொய்டாவுல பல குழந்தைகள கற்பழிச்சு கொன்னு மண்ணுல புதைச்சவனையெல்லாம் ஜாமீனில் விட்டுட்டாங்க. ஆனா, இவங்களுக்கு மட்டும் இத்தனை பெரிய தண்டனை கொடுக்கணுமாங்கற கேள்வி எழுந்திருக்கு. இருந்தாலும், தீர்ப்பை நாங்க விமர்சிக்க முடியாது...’’என்றார் ஆதங்கத்தோடும் இயலாமையோடும்.

அதே பகுதியில் எலக்ட்ரிஷியனாக வேலைப்பார்த்துக் கொண்டிருக்கும் மனோகரனிடம் கருத்துக் கேட்டோம்.

Dharmapuri.jpg‘‘விரோதியா இருந்தாக் கூட உதவின்னு வந்துட்டா, தலையை அடமானம் வெச்சாவது உதவி செஞ்சுடுவாரு ரவீந்திரன். வம்பு, தும்புக்குப் போக மாட்டாரு. ரவீந்திரனை வலுக்கட்டாயமாக இழுத்துட்டு போனாங்க. அவருக்கு இப்படியொரு சிக்கல் ஏற்பட்ட பிறகு, கோயில் திருவிழாவைக்கூட எடுத்துச் செய்ய ஆளில்லாம போயிடுச்சு. இனிமே எல்லாம் கடவுள் விட்ட வழிதான்...’’ என்றார்.

காமாட்சி-யம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன், தீர்ப்பு குறித்துச் சொல்லும்போது, ‘‘சாதுவா இருந்த முனியப்பனின் டூ-வீலரை இரவல் கேட்கு-றாங்க நெடுஞ்செழியனும், ரவீந்திரனும். குடிபோதையில் இருந்த அவங்க, வண்டியை எடுத்துட்டுப் போய் ஏதாவது ஏடாகூடமாயிடக் கூடாதுன்னு, வண்டியில அவங்களையும் ஏத்திகிட்டுப் போனாரு முனியப்பன். அதுக்குப் பின்னாலதான் சம்பவம் நடந்துடுச்சு. தூக்குத் தண்டனைக்கு பதிலா ஆயுள் தண்டனை கொடுத்திருக்கலாம்.’’ என்றார்.

இறுதியாக மதிகோன்பாளையத்தைச் சேர்ந்த வெற்றியை சந்தித்தோம். ‘‘நடந்தது பெரிய குற்றம்தான். இருந்-தாலும், தண்டனையை குறைச்சிருக்-கலாம். ஜனாதிபதி அவங்களோட கருணை மனுவை பரிசீலிச்சு, நல்ல முடிவு எடுக்-கணும். அவங்க செஞ்ச தப்பை நினைச்சு வருத்தப்படுற மாதிரி தண்டனையை குறைச்சு, அவங்க திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்...’’ என்றார்.

இப்படி மாறுபட்ட மனநிலையோடுதான் இந்த விஷயத்தை அணுகுகிறது தர்மபுரி!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிவகங்கை தொகுதியில்...
எல்லோர் பார்வையும் இவர் மேல்!

Kishore%201.jpg


சிவகங்கை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சியிலுள்ள பிரபலங்களெல்லாம் இப்போதே பல்வேறு சேனல்களைப் பிடித்து, துண்டு போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆனால், மூன்று கட்சி தலைமையும் ‘இவரை வேட்பாளராக்கினால், வெற்றி நிச்சயம்’ என்று ஒருவரை நினைத்து கணக்குப் போடுவதாக ஏரியாவில் தகவல் பரவி பரபரப்பை உண்டுபண்ணியிருக்கிறது.

‘கட்சிகள் கணக்குப் போடும் அளவுக்கான அந்த மனிதர் யாராக இருக்கும்?’ - மண்டையைக் குடைகிறதுதானே? இப்படித்தானே நமக்கும் குடைந்தது. விசாரித்தோம். ‘அவர் & மல்லிகா கண்ணன்’ என்று சொன்னார்கள். யார் அவர்? 

Kishore.jpgசிவகங்கை தொகுதிக்குட்பட்ட காளையார்கோயில் யூனியனில் ஆ.கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர்தான் மல்லிகா கண்ணன். வித்தியாசமான மக்கள் பணி மூலமாக தொகுதிக்குள் நன்கு அறிமுகமாகி இருக்கிறார். 

மல்லிகாவின் செயல்பாடுகள்தான் அவரை இந்த அளவுக்கு, அனைத்து கட்சிகளும் வேட்பாளராக்க ஆவல் கொண்டிருக்கும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. ஆ.கருங்குளம் பஞ்சாயத்தில் கிராவல் ரோடு, தார்ச்சாலை, பள்ளிக்கூட கூடுதல் கட்டடம், வாட்டர் டேங்க் கட்டடம், கோவில் கும்பாபிஷேகம் என அனைத்து தேவைகளையும் தன்னுடைய செலவிலேயே பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறார். 

‘‘பெரிய பெரிய திட்டங்கள் என்றால் மட்டும்தான் அவர், கலெக்டர் அலுவலகம் பக்கமே போவார். இவருடைய சேவைக்கு ஜனாதிபதியால் வழங்கப்படும் நிர்மல் புரஷ்கர் விருது கூட வழங்கப்பட்டிருக்கிறது.’’ என்று, மல்லிகா கண்ணனின் செயல்பாடுகள் குறித்து ஊருக்குள் பெருமை பொங்கப் பேசுகிறார்கள்.

மல்லிகா கண்ணனை சந்தித்தோம். ‘‘ஆ.கருங்குளம் பஞ்சாயத்து தலைவியாக நான் இருந்தாலும், இந்த பஞ்சாயத்து எல்லாவகையிலும் தலைநிமிர்ந்து நிற்க உறுதுணையாக இருப்பவர் கணவர் கண்ணன்தான். 

அவர் தொழிலதிபராக இருந்து நிறைய சம்பாதிக்கிறார். பிறந்த மண்ணுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் என்னை பஞ்சாயத்து தலைவியாக்கினார். நிறைய செலவு செய்யறோம். எல்லா கட்சிக்காரங்களும் பாராட்டுறாங்க.

தொகுதிக்குள்ள எங்களுக்கு இருக்குற நல்ல பேரைத் தொடர்ந்து, பல கட்சி சார்புலயும் என்னையோ அல்லது கணவரையோ வேட்பாளராக்கும் எண்ணத்தோடு எங்களை அணுகுகிறார்கள்’’ என்றார்.

அடுத்து கண்ணன் நம்மிடம் பேசினார். ‘‘ஆ.கருங்குளம் பஞ்சாயத்தை எல்லா வகையிலும் தலைநிமிர வைக்கணுங்கிறதுதான் எண்ணம். அதை ஓரளவுக்கு செஞ்சிருக்கோம். ஒருவேளை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடறதுன்னு முடிவெடுத்தா, சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுப்-போம்...’’ என்றார் சஸ்பென்ஸ் வைத்து.

நாம் மேலும் விசாரித்த வரை, கண்ணன் அடிப்படையில் அ.தி.மு.க. அனுதாபி என்பதால் அந்தப்பக்கம் வீசும் வலையில் இவர்கள் சிக்க வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

1.jpg
இளங்கோவன் இப்போதைக்குஅடங்கு வதாகத் தெரியவில்லை. கூட்டணியைப் 

பற்றி யாரும் பேசக் கூடாது என்று குலாம்நபி ஆசாத் சொன்னதற்குப் பிறகாவது இளங்கோவன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தி.மு.க. தலைமை எதிர்பார்த்தது. ஆனால், அதற்குப் பிறகு இளங்கோவன் இன்னும் கூடுதலாகத்தான் பாய்ந்து வருகிறார். 'அப்படியானால் இளங்கோவனை இயக்குவது யார்?' என்ற சந்தேகம் தி.மு.க. தரப்பினருக்கு இயல்பாகவே எழத் துவங்கியுள்ளது. 

தி.மு.க-வையும் கருணாநிதியையும் இளங்கோவன் விமர்சிப்பது புதிதல்ல. 'கருணாநிதிதான் எதையும் ஊதி ஊதிப் பெரிதாக்கிவிடுவாரே?'' என்று காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் இளங்கோவன் சொல்லி யதை 'தலைவரின் சாதியைக் குறிப் பிட்டுப் பேசிவிட்டார்' என்று அக்கட்சியின் மேலிடத்துக்குப் புகார் செய்தது தி.மு.க. அதைத் தொடர்ந்து கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கே போய் வருத்தம் தெரிவிக்க வைக்கப்பட்டார் இளங்கோவன். அதைப்போலத்தான் இந்த முறையும் இளங்கோவனை காங்கிரஸ் தலைமை கண்டித்து அனுப்பிவைத்து, தலைவரிடம் வருத்தம் தெரிவிக்கவைக்கும் என்று தி.மு.க. தரப்பு எதிர்பார்த்ததாம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதில் அறிவாலய புருவங்கள் நெறிபட்டு நிற்கின்றன! 
1.jpg



வருத்தம் தெரிவிக்கா விட்டாலும் போகிறது... மீண்டும் மீண்டும் தாக்கிப் பேசாமலாவது இருந்தால் பரவாயில்லை என்று நினைத்தார்கள். அதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில், 'இளங்கோவனை காங்கிரஸ் மேலிடத்தில் உள்ள சிலரே வேண்டுமென்று பேசத் தூண்டுகிறார்கள். இது விஜயகாந்த்துடன் பேசி வைத்துக்கொண்டு அரங்கேற்றப்படும் நாடகம்' என்று தமிழக அமைச்சர்கள் மட்டத்தில் ஒரு சந்தேகம் கிளம்பி உள்ளது. ''இளங்கோவனைத் தூண்டிவிட்டுப் பேசவைப்பதும், அதன் மூலமாக தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுப்பதும், அதனால் கிடைக்கும் அரசியல் லாபத்தை அறுவடை செய்வதும் இவர்களது நோக்கம் போலிருக்கிறது!'' என்கிறார் தி.மு.க. பிரமுகர் ஒருவர்.

இளங்கோவன் கடந்த 11-ம் தேதி தூத்துக்குடி அருகே ஒரு மாந்தோட்டத்தில் ரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் சில ரகசிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. புதிய அணியை அமைப்போம், காங்கிரஸ் ஆட்சியை உருவாக்குபோம் என்று இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் பேசினர்.

''நாமெல்லாம் ஒண்ணு கூடிப் பேசுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. காங்கிரஸ் ஆட்சி அமையும்ன்னு எனக்கு ரொம்பவும் நம்பிக்கை இருக்கிறது. தனித்து நின்றால் நம்முடன் வருவதற்கு நிறையக் கட்சியினர் தயாராக இருக்கிறார்கள். மூன்றாவதுஅணி தேர்தலில் களம் இறங்க வேண்டும் அப்போதுதான் நாம் ஆட்சி அமைக்க முடியும். அந்த வாய்ப்பை விட்டுவிட்டால், இப்போது உள்ள சூழ்நிலையில் தே.மு.தி.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி அமைத்துக் கொண்டால் எத்தனை லட்சம் கொடுத்தாலும் தி.மு.க-கூட்டணி ஜெயிக்கவே முடியாது!'' என்றும் இளங்கோவன் அப்போது சொன்னாராம்!

இளங்கோவனின் அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், ''எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேசி வரும் இளங்கோவன், தனது விருப்பத்துக்கு மாறாக தி.மு.க. கூட்டணி தொடர்ந்தால் தனியாகப் பிரிந்து போய் புதுக் கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தில் இருக்கிறார். அவரே ஓர் அணியில் ஐக்கியமாகி ஓரளவு எம்.எல்.ஏ-க்களுடன் வெற்றி பெற்று வந்தால், 'இணைப்பு விழா' நடத்தி மறுபடி சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் கட்சி மறுக்காது அல்லவா? காங்கிரஸில் விலகுவதும் சேர்வதும் இயல்பான விஷயங்கள்தானே! அதுவும் தேர்தலுக்கு முன்னதாக உடைவதும் தேர்தல் முடிந்ததும் சேர்த்துக்கொள்வதும் சர்வசாதாரணமாக நடக்கும். பிரிந்து போய் விஜயகாந்த்துடன் கூட்டணி போட்டு, தி.மு.க-வுக்கு எதிரான காங்கிரஸ§க்கு ஆதரவான ஓட்டுகளை அறுவடை செய்ய இளங்கோவன் தயாராகிறார் போலிருக்கிறது'' என்று ஒரு கோணம் பார்க்கிறார் இந்த பிரமுகர்.

தி.மு.க-வின் இந்த மில்லியன் டாலர் சந்தேகத்தில் துளியாவது அர்த்தம் இருக்குமா என்பது காங்கிரஸ் மேலிடத்தின் 'மூவ்'களைப் பொறுத்தே வெளியில் தெரியும்!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

""அமைச்சரைத் தோற்கடிக்க உள்கட்சி சதி!''

1.jpg

எப்போதும் உற்சாகமாக சிறகடிப்பவர் என உ.பி.க்களால் வர்ணிக்கப் படும் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு... சமீ பத்தில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பாதாள சாக்கடைத் திட்ட ஆய்வுக் கூட்டத்தில்... வழக்கத்திற்கு மாறாக...

""வரும் சட்டமன்றத் தேர்தலில் என்னைத் தோற் கடிக்காம ஓயமாட்டீங்க போலிருக்கு'' என மனம் நொந்து போய் பேச... அமைச்சருக்கு என்னாச்சு? என உ.பி.க்கள் மத்தியிலேயே பரபர டாக் பரவியது.

அமைச்சரின் மனக்கிலே சத்துக்கு காரணம் என்ன? 1.jpg


அவரின் மனதைப் படித்த சிலர் நம்மிடம்...

""ரொம்ப நாளாவே நடக்கும் கோஷ்டி சண்டையின் வெளிப்பாடு இது. பிச்சாண்டி எம்.எல்.ஏ. விவ காரத்தில் எப்பவுமே அமைச்சர் தலையிட்டதில்லை. இவங்க இரண்டு பேருக்கும் தனித்தனி கோஷ்டி இருந்தாலும் ஒத்துமையாதான் இருப்பாங்க. அமைச்சரோட தண்டராம்பட்டு தொகுதி கலைக்கப்பட்டு அந்த பகுதிகள் செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் தொகுதிகளோட இணைஞ் சிடுச்சி. அதனால வரும் தேர் தல்ல எங்க நிக்கலாம்னு யோசிச்சாரு. செங் கம் ரிசர்வ்ங்கிற தால அங்க நிற்க முடியாது. திரு வண்ணாமலையை யோசிச்சப்ப அது பிச்சாண்டி 5 முறை நின்று 4 முறை வென்ற தொகுதி. அதனால அது வேணாம்னு கலசபாக்கம் அல்லது புது தொகுதியான கீழ்பென்னாத்தூர் இதுல எது சரி வரும்னு விசாரிச்சிக்கிட்டிருந்தாரு.
1.jpg
இதனால் அமைச்சர் கலசபாக்கத்தில் நிக்கப்போறாருன்னு தகவல் பரவுச்சு. இதை ஸ்டாலின் ஆதரவாளரான மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும் திருவண்ணா மலை நகர்மன்றத் தலைவராகவும் இருக்கிற ஸ்ரீதர் என்கிற திருமகன் எதிர்பார்க்கலை. காரணம் இந்தத் தொகுதியை இந்தமுறை எப்படியும் வாங்கிடணும்னு தீவிரமா மேல்மட்டத்துல ஆதரவு திரட்டிக்கிட்டிருந்தாரு. அந்தத் தொகுதியில் அமைச்சர் வேலு நிக்கப்போறாருன்னு வந்த தகவலால், பிச்சாண்டியோட ஆதரவாளர்கள் அதிகமிருக்கிற கீழ்பென்னாத்தூரை வாங்கி அவர் மூலமா ஜெயிச்சிடலாம்ங்கிற எண்ணத்துலதான் அவர் பக்கம் போனாரு. ஆனா வேடிக்கை என்னன்னா... பிச்சாண்டி தரப்பு இனி திருவண்ணாமலை சரி வராது, புது தொகுதியான கீழ்பென்னாத்தூர்தான் ஒத்துவரும்னு பலமா ஆய்வுபண்ணி அங்க களப்பணியையும் ஆரம்பிச்சிடிச்சி...'' என மூச்சு வாங்கியவர்கள் மேற்கொண்டு விவரிக்க ஆரம்பித்தனர்.

""பிச்சாண்டி கீழ்பென்னாத்தூர் போனதால அமைச்சர் வேலு திருவண்ணாமலை பக்கம் பார்வையைத் திருப்பினாரு. இதுல விரக்தியான திருமகன், இரண்டு நாயுடுகளும் சேர்ந்து முதலியாரான என்னை ஓரம் கட்டுறாங்க. வளரவிடாம ஒழிக்கப் பார்க்கிறாங்கன்னு வெளிப்படையாவே எல்லார்கிட்டயும் சொல்ல ஆரம்பிச் சாரு. இது அவங்க இரண்டு பேர் காதுக்கும் போய் கடுப்பாயிட்டாங்க. அதனால இரண்டுபேரும் இப்ப அவரை ஒதுக்கி வச்சிருக்காங்க.

திருவண்ணாமலையில களப் பணியை ஆரம்பிச்ச அமைச்சர், முதல் கட்டமா பிச்சாண்டி யோட ஆதரவாளர்களை தன் பக்கம் இழுத்தாரு. இதுல பிச்சாண்டி சிபாரிசுல ந.செ. பதவிக்கு வந்த கார்த்தி வேல்மாறன் வேலு ஆதரவாளரா மாறினாரு. அடுத்து அண்ணாமலை ஊராட்சி மன்ற தலைவர் பாபு, ஆடையூர் ரவின்னு பலரை தன் பக்கம் இழுத்தாரு. பிச்சாண்டி மச்சான் நகர்மன்றத் துணைத்தலைவர் செல்வத்துக்கு குடைச்சல் தரும் தணிகைவேலை தன் பக்கம் சேர்த்துக்கிட்டு சில இடங்கள்ல முக்கியத்துவம் தந்தாரு. தன் ஆதரவாளர்களை இழுத்தவரு இப்ப நமக்கு வேண்டாதவங்களை வளர்த்து விடறது எந்த விதத்துல நியாயம்னு இப்ப பிச் சாண்டி தரப்பு முணுமுணுக்க ஆரம்பிச்சிருக்கு. அதோடு மறைமுகமாக அமைச்சருக்கு தனது எதிர்ப்பைக் காட்ட தொடங்கினாரு பிச்சாண்டி. தனி ஆவர்த்தனம் செய்யும் திருமகனும் அமைச்ச ருக்கு தன் ஒத்துழையாமையைக் காட்டத் தொடங்கிவிட்டார். இந்த ஒத்துழையாமை இயக்கத்துல இரண்டுபேரும் கைகோர்த்திருக் காங்க'' என்றார்கள் பூடகமாக.

""எப்படி?'' என்று மேலும் அவர்களின் வாயைக் கிளறி னோம்.

""தேர்தல் நெருங்கி வருது. சட்டமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்து அதற்கான லிஸ்டை தரச் சொன்னாரு அமைச்சர். பிச்சாண்டி, திருமகன் இரண்டுபேர்கிட்ட இருந்து மட்டும் வரல. அதோட அமைச்சர் சொல்றது எதையும் சேர்மன் திருமகன் சுத்தமா கேட்கறதேயில்ல. நகராட்சிப் பள்ளிகள் உள்ள 6 இடங்களில் பள்ளிச் சுவர்கள், சில வகுப்பறைகளை இடித்துவிட்டு கடை கட்டுது நகராட்சி. இது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி, ஆட்சி மீதான அதிருப்தியா உருவாகியிருக்கு. இதை சிலர் அமைச்சரிடம் தெரிவித்தனர். அமைச்சர் சேர்மன்கிட்ட பசங்க படிக்கிற இடம் அங்கேயெல்லாம் கடை கட்டாதீங்கப் பான்னாரு. அத திருமகன் கேட்கல. அதோட கோயிலைச் சுத்தியிருக்கிற கடைகளை இடிச்சி பக்தர்களுக்கு வசதி செய்து தாங்கன்னாரு. அதையும் அவர் செய்யல.

கடைசியா பாதாள சாக்கடைத் திட்டம். திருவண்ணாமலை மக்களை இம்சைக்குள் ளாக்கி வருது. அதில் ஏகப்பட்ட குழப்படி. ரோட்ட தோண்டறது, மூடறது, திரும்பவும் தோண்டறது, திரும்பவும் மூடறதுன்னு இதுவரை 3 முறை செய்துட்டாங்க. இது வெளியூர் பக்தர்கள்ட்டயும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கு. இதை ஏன் இப்படி செய்றீங்க, சரி செய்பான்னாரு. அதையும் சேர்மன் கண்டுக்கல. தேர்தலுக்கு முன்னாடி தோண்டப்பட்ட ரோடுகளை சரிபண்ணி புது ரோடு போட அமைச்சர் விரும்புறாரு. புது ரோடு போடணும்னா பணி முடிஞ்சிடுச்சின்னு சர்டிஃபிகேட் பண்ணாதான் புது ரோடு போட பணம் ஒதுக்க முடியும். ஆனா பணி முடியல. அது தாமதமாக காரணம் திருமகன்தான்ங்கிறத தெரிஞ்சிதான் அவர் அப்படி பேசியிருப்பாரு'' என்கிறார்கள் எங்கெங்கோ போய்.

ஒத்துழையாமை பற்றி முன்னாள் அமைச்சரான பிச்சாண்டி எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது... ""அவர் கூட்டம் நடத்துனது சாதாரணமானது தான். அதுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களுக்குள்ள தொகுதி பிரச்சினை எதுவும் கிடை யாது. தலைமை எங்க நிக்கச் சொல்லுதோ அங்க நிக்கப் போறோம். இதுல என்ன யிருக்கு. நானும் அவரும் ஒத்துமையாத்தான் இருக் கோம். எங்களுக்குள்ள எந்தப் பிரச்சினையும் கிடையாது. நான் தேர்தல் பணிக்குழு பட்டியல் தந்தாச்சு. அதுல எதுவும் பிரச்சினை கிடை யாது'' என்கிறார் கூலாகவே.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான சேர்மன் திருமகனிடம் இது குறித்து கேட்டபோது... லைனை கட் செய்தபடியே இருந்தார்.

இது குறித்து அமைச்சர் எ.வ.வேலு தரப்பு நம்மிடம், ""பாதாள சாக்கடை வேலைகள் இழுபறியா நடக்கிற ஆதங்கத்தில்தான் அமைச்சர் இப்படி அந்தக் கூட்டத்தில் பேசினார். மற்றபடி லோக்கல் அரசியலில் அமைச்சருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை'' என்கிறது கூலாய்.

எனினும் மாவட்டம் முழுக்க உண்டான பரபரப்பு அடங்கவில்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19_09_2010_002_007-sonia-tn.jpg?w=260&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

1.jpg
தி.மு.க.வை தாக்கிப் பேசும் தனது சுருதியை சமீபகாலமாக அதி கப்படுத்திக் கொண்டிருக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். இதுகுறித்தும், நடப்பு அரசியல் குறித்தும் தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரும் சட்டத்துறை அமைச்சருமான துரைமுருகனை சந்தித்து கேட்டபோது நக்கலாகவும், சீரியஸாகவும் பதில் தந்தார் துரைமுருகன்.

* தி.மு.க.வை ஆட்சியிலிருந்து இறக்குவதுதான் என் லட்சியம்’என்று விஜயகாந்த் சபதம் போட்டிருக்கிறாரே?

முதலில் இப்படி ஒரு கேள்வியை நான் எதிர்கொள்வதற்காக வருத்தப்படுகிறேன். ஏன்னா... தலைவர் கலைஞருக்கு நிகரான ஒரு தலைவர் கருத்து சொல்லியிருந்தால் அதற்கு நான் பதில் சொல்லலாம் அல்லது தி.மு. கழகத்திற்கு இணையான ஒரு கட்சி கருத்துச் சொல்லியிருந்தால் அதற்கு பதில் சொல்வது பொருத்தமாக இருக்கும். ஆனால் விஜயகாந்த்.... கலைஞருக்கோ கழகத்திற்கோ நிகரான இணையானவரா? அதனால்தான் வருத்தப் படுவதாகச் சொன்னேன். சரி.... கேள்விக்கு வருவோம்.... பாவம் விஜயகாந்த்... தேர்தலுக்கு தேர்தல் தலையைத் தூக்கி நான் இருக்கிறேன் என காட்டுபவராக இருக்கிறார். இதைத் தவிர அவரிடம் என்ன இருக்கிறது? 

1.jpg
ஒவ்வொரு வருஷமும் பொங்கல் சமயத்தில் வண்டிமாடுகள் மஞ்சுவிரட்டுக்காக அலங்கரிக்கப்பட்டு ஓடும். இதற் காகவே அந்த சமயத்தில் மாடுகள் தலையைத் தூக்கும். அது போல தேர்தலுக்கு தேர்தல் தலையைத் தூக்குகிற விஜயகாந்த், தி.மு.க. வை ஆட்சியில் இருந்து இறக்கு வேன் என சபதம் போடுகிறாரா? நல்ல கதை. ஒவ்வொரு நாளும் பொழுது விடியும், அவருக்கு தெளியும். யாராவது பக்கத்தில் இருப்பவர்கள் தேர்தல் வருவதைப் பற்றி அவருக்குச் சொல்லுவார்கள். இவரும் ஒரு நாளைக்கு மக்களோட கூட் டணி என்பார். மறு நாளைக்கு நான் இல்லாம யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பார், இன்னொரு நாளைக்கு அவரை விட மாட்டேன், இவரை விடமாட்டேன் என்று கதறுவார். சில நேரங்களில் அரசியலில் இவரைப்போல ஜோக் அடிக்கிற போர்வழிகள் தேவைப்படு கிறார்கள். அந்த வரிசையில் அவர் இருந்துவிட்டுப் போகட்டும். 

தேர்தல் நேரத்தில் ஒரு அப்பாவியை அழைத்து அவர் பாக் கெட்டில் இருக்கிற பணத்தை எடுத்து டெபாஸிட் கட்டவைத்து தேர்தலில் நிற்கவைப்பார். அவருக்கு டெபாஸிட் போய்விடும். அடுத்த தேர்தலில் இன்னொரு அப்பாவி மாட்டுவார். அவருக்கும் டெபாஸிட் போய்விடும். தேர்தலில் டெபாஸிட் இழப்பதையே தொழிலாக கொண்ட ஒரு கட்சியை நடத்தும் விஜயகாந்த், தி.மு.க.வை விமர்சிப்பதா? தி.மு.க. ஒரு அகன்ற ஆறு. விஜயகாந்த் ஒரு வாய்க்கால் கூட இல்லை. அப்படிப் பட்டவருக்கு சவால் விடவும் சபதம் போடவும் தகுதியுமில்லை, மக்கள் செல்வாக்கும் இல்லை.

* ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் தேர்தல் கூட்டணிக்காக நெருங்கி விட்டதால்தான் தி.மு.க.வை விஜயகாந்த் தாக்குகிறார் என்கிறார்களே?

தேர்தல் காலத்தில் யாரும் யாரோடும் கூட்டணி சேரலாம் அல்லது சேராமல் போகலாம். ஆனால் யார் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை யாரும் தடுத்து விட முடியாது. ஜெயலலிதா-விஜயகாந்த் கூட்டணி எல்லாம் ஓட்டப் பந்தயத்திற்கு உதவாத கூட்டணி.

* அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சிகளின் அடிப்படையில் அந்த கூட்டணிக்கு 35 சதவீத வாக்கு பலம் இருக்கிறது. அந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் 8 சதவீத வாக்குபலம் கொண்ட விஜயகாந்த்தின் தே.மு.தி.க. கூட்டணி வைக்கும் பட்சத்தில் அ.தி.மு.க. கூட்டணியின் பலம் 43 சதவீதமாக அதிகரித்துவிடும். இது தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கி றார்களே?

அ.தி.மு.க. கூட் டணியில் கட்சிகளின் எண்ணிக்கை கூடலாமே தவிர அவர்களின் வாக்கு எண்ணிக்கை கூடப் போவதில்லை. அவர்கள் போடும் வாக்கு சதவீத மனக்கணக்குகளை யெல்லாம் மாற்றி அமைக்கும் வல்லமையும் ராஜதந்திரமும் கலைஞருக்குத் தெரியும். அதனால் இந்த சதவீத கணக்குகளைச் சொல்லியெல்லாம் எங்களை பயமுறுத்த முடியாது. 

* தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருப்பதாக சொல்கிறீர்கள். ஆனால், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கடுமையான விமர்சனங்களால் தி.மு.க. கூட்டணி பலகீனமடைந்துள்ளதாக காங்கிரஸ்காரர்களிடமே எதிரொலிக்கிறதே?

காங்கிரஸ் கட்சி தி.மு.க.வோடு இருக்கிறபோதும் சரி... அ.தி.மு.க.வோடு இருக்கிற போதும் சரி... இரண்டு கட்சிகளுக்கிடையே குறுக்குசால் ஓட்டுகிறவர்கள் இருப்பது உண்டு. அப்படி குறுக்குசால் ஓட்டுபவர்கள் ஒரு கட்டத் துக்குப் பிறகு அடிபட்டு போவதும் உண்டு. அப்படிப் பட்டவர்களின் விமர்சனங்களால் எல்லாம் கூட்டணி பலவீனமாகிவிடாது. இதுபோன்ற சலசலப்புகள் எல்லாம் இந்த கூட்டணியின் பயணத்தின் வேகத்தைக் குறைத்து விடவும் முடியாது. அதனால், இதையெல்லாம் நாங்கள் பெரிதுபடுத்துவது இல்லை.

* தி.மு.க. கூட்டணிக்குள் மீண்டும் நுழைவதற்கு பா.ம.க. முயற்சிக்கிறது. இது தொடர்பாக ஜி.கே.மணி உங்களை அடிக்கடி சந்திக்கிறார். ஆனால், டாக்டர் ராமதாஸோ தி.மு.க.வை விமர்சிக்கிறார். இந்த நிலையில் பா.ம.க.வைப் பற்றி தி.மு.க.வின் நிலைப்பாடுதான் என்ன?

ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க. குழுவினர் ஒருமுறை கலைஞரை சந்தித்து ஆலோசித்து விட்டுப் போனார்கள். அதன்பிறகு, அவர்களிடத்திலிருந்து எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களின் கட்சி நலன் சார்ந்து எந்த முடிவும் எடுக்கலாம். என்ன முடிவு எடுப்பார்கள்ங்கிறது எனக்குத் தெரியாது. ஆனால், யேசுநாதர் சொன்னதுபோல, "இதய சுத்தியுடன் என்னிடத்தில் வருவோரை புறம் தள்ளுவதில்லை' என்பது எங்கள் சித்தாந்தம்.

* தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிகள் எப்படி அமையும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

கூட்டணிகள் எப்படி அமையும் என்று அனுமானிக்கக் கூடிய கட்டம் இன்னும் வரவில்லை என்பதுதான் என் கணிப்பு. ஒரு கட்சி கூட இன்னும் தேர்தல் கிரவுண்ட்டுக்கு வரவில்லை. எல்லா கட்சிகளுமே தனித்தனியாக மரத்தடியில் நின்றுகொண்டு எக்ஸர் சைஸ்தான் பண்ணிக் கொண்டிருக்கின்றன. 

ஆனால், ஒன்றை மட்டும் என்னால் கணிக்க முடியும். அது... தி.மு.க. -காங்கிரஸ் -விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி நிலை யானது என்பதுதான். எங்கள் கூட்டணிக்குள் மேலும் சிலர் இணையலாம். ஆனால், இணையத் துடிப்பவர்கள் ரெண்டு, மூணு சீட்டுகளை அதிகம் பெற வெளியில் பிகு செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த விறைப்பும் முறைப்பும் தேர்தலில் நாமினேசன் காலம் நெருங்க நெருங்க வெயிலில் உருகும் பனிக்கட்டிபோல கரைந்து விடும். இதனை பல தேர்தல்களில் பார்த்தவன் நான்.

* பிகு பண்ணுகிறார்கள் என்று நீங்கள் சொல்வது பா.ம.க. வைத்தானே?

தனிப்பட்ட எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு நான் சொல்லவில்லை. பொது வாகத்தான் சொல்கிறேன். அதேசமயம் யார், யார் பிகு காட்டுகிறார்கள் என்பது எங்களைவிட நக்கீரனுக்கு நன்றாகவே தெரியும்.

* எம்.ஜி.ஆர். காலத்திலும் அரசியல் செய்திருக்கிறீர்கள். ஜெயலலிதா காலத்திலும் அரசியல் செய்கிறீர்கள். இப்போது புதிதாக விஜயகாந்த். இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தி.மு.க.வால் உருவாக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு அவர் பிரிந்த பிறகும் பகையான பிறகும்கூட சில அரசியல் மரபுகளை மீறியதில்லை. முறித்ததும் இல்லை. உதாரணமாக.... சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் ஒருமுறை, சட்டமன்றத்தை விட்டு வெளியேறி... எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் இருந்த தி.மு.க. கட்சி ஆபீசுக்கு வந்துவிட்டார். ஆனால், கலைஞர் சட்டசபைக்கு வரவேண்டுமென விரும்பினார் எம்.ஜி.ஆர். உடனே க.ராசாராம் தலைமையில் அமைச்சர்கள் சிலரை அனுப்பி கலைஞரை அழைத்துவரச் செய்தார். அரசியல் பண்பாடும் நாகரிகமும் எம்.ஜி.ஆரிடத்தில் பட்டுப்போகவிலை என்பதற்கு இது உதாரணம்.

அதேபோல, ஒருமுறை சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆரை எதிர்த்துப் பேசி அங்கேயே மயங்கி விழுந்துவிட்டேன் நான். பதறிப்போன எம்.ஜி.ஆர்., தனது இருக்கையிலிருந்து எழுந்து எதிர்க்கட்சி லாபிக்கு ஓடிவந்து என்னைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு முதலுதவி சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடு செய்தார். வீட்டுக்கு அனுப்பி வைத்ததோடு அல்லாமல் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை "துரைமுருகன் நல்லா இருக்கிறாரா?' என்று விசாரித்துக்கொண்டே இருந்தார். தி.மு.க.வில் இப்போது இணையவரும் எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க. விசுவாசிகள், "கலைஞர் பெயரை கருணாநிதி என்று யார் சொன்னாலும் அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார் எம்.ஜி.ஆர்.' என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

ஒரு முறை கலைஞரை சிறையில் வைத்தார் எம்.ஜி.ஆர். அதேசமயம் சட்டத்துறை அமைச் சர் நாராயணசாமி முதலியாரை சிறைக்குச் சென்று கலைஞரின் நலன் விசாரித்துவிட்டு வரச் சொன்னார் எம்.ஜி.ஆர். இப்படி நிறைய சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆக எம்.ஜி.ஆர்., அண்ணாவிட மும் தி.மு.க.விடமும் பெற்ற பண்பாட்டு உணர்வுகளை மதித்தவர். அதனை பாதுகாத்தவர். அரசியல் பண்பாடும், நாகரிகமும் எம்.ஜி. ஆரிடத்தில் பட்டுப்போகவே இல்லை. ஆனால் ஜெயலலிதாவிடம் தி.மு.க.வின் அரசியல் பண்பாடும், அண்ணாவின் அரசியல் நாகரிகமும் ஏன்... குறைந்தபட்சம் எம்.ஜி.ஆரின் மனித உணர்வும் கூட இருப்பதில்லை. ஜெயலலிதாவைப் பற்றி ஒரு வரியில் சொல்வதானால், அண்ணாவின் வார்த்தைகளால் சொல்லலாம். அது... "விளைந்த காட்டில் திரிந்த குருவி' ஜெயலலிதா. அதனால், இவரிடம் அரசியல் பண்பாட்டை எதிர்பார்க்கக் கூடாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு ஒப்பிட்டுப் பேசக்கூடியவர் அல்ல விஜயகாந்த் என்பதால்... இதுவெல்லாம் அவருக்குத் தெரியாது. பாவம் விஜயகாந்த் அவரை விட்டு விடுங்கள்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_09_2010_001_005.jpg?w=300&h=233

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_09_2010_015_006-pmk.jpg?w=300&h=73

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நிலமோசடிப் புகாரில் மரியம்பிச்சை!
-திருச்சி அ.தி.மு.க.வில் சலசலப்பு

Trichy%201.jpg



தி.மு.க.காரர்களைப் பார்த்து ‘நிலமோசடி மன்னர்கள்’ என்று திருச்சி பொதுக்-கூட்டத்தில் வர்ணித்தார் ஜெயலலிதா. ஆனால், தனது கட்சியிலேயே உள்ள நிலமோசடி மன்னர்களை என்ன சொல்லி அழைப்பார்?

- திருச்-சி மாநகர அ.தி.மு.க. பிரமுகர்களே இப்படி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். 

Trichy%204.jpgதிருச்சி தீன்நகர் மக்கள் பாதுகாப்பு நலக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் இதுபற்றி நம்மிடம் பேசினார்.

“1982-84-ம் வருடங்களில் திருச்சி நகரில் உள்ள ஆழ்வார்தோப்பு, குத்பிசாநகர், ஒத்தமினார் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஏராளமான குடிசைகள் எரிந்தன. இதில் அங்கு வசித்த பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டிருந்த ஏழைமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

இவர்களுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி 1984-ம் ஆண்டு 185 பேர் ஒன்று சேர்ந்து திருச்சி வரகனேரி பகுதியில் இடம் வாங்கி தீன்நகர் என்ற பெயரில் ஆளுக்கு 600 சதுர அடி என்ற அளவில் இடம் எடுத்துக்கொள்ள முடிவு செய்தோம். அந்த காலகட்டத்தில் வீடு கட்ட யாருக்கும் வசதி இல்லாததால் அவரவர்க்குரிய இடத்தை பத்திரப்பதிவு செய்த-தோடு விட்டுவிட்டோம்.

26 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய இடத்தில் வீடு கட்டலாம் என்று பலரும் விரும்பியதால் தீன்நகர் பகுதியை பிளாட்டுகளாக பிரித்து சொந்தக்காரர்களிடம் தருவதற்காக, கற்கல் நட்டு தயார் செய்தோம். வார்டு கவுன்சிலரை முன்னிலைப்படுத்தி விழா நடத்தி இதை ஒப்படைத்தால், தீன்நகரில் சாலை, குடிநீர்-வடிகால் மற்றும் தெருவிளக்கு வசதிகள் எளிதில் கிடைக்கும் என்று நம்பி... அந்த பகுதியின் கவுன்சிலரும் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் மாவட்டச் செயலாளருமான மரியம்பிச்சை தலைமையில் இடம் ஒப்படைப்பு விழாவை நடத்த முடிவு செய்தோம்.

அவரிடம் சென்று தீன்நகர் என்று பேச ஆரம்பித்ததுமே, ‘யார் இடத்துக்கு யாருடா உரிமை கொண்டாடுறது? அது என்னோட இடம்டா...’ என்று அநாகரிகமாக பேச ஆரம்பித்தார். நாங்கள் பயந்து போய், ‘என்ன பாய் இப்படி சொல்றீங்க? யார்கிட்ட வாங்கினீங்க?’ என கேட்டோம். அதெல்லாம் உனக்கு எதுக்கு அந்த இடம் முழுசும் நான் வாங்கிட்டேன், தீன்நகரை பத்தி பேசாதீங்க. எழுந்து போங்கன்னு சொல்லிட்டார்’’ என்று விக்கித்தபடியே கூறினார்.

தீன்நகர் மக்கள் பாதுகாப்பு நலக் குழுமத்தின் நிர்வாகி அப்துல் சலாம்பாபு தொடர்ந்து கூறுகையில், 

Trichy%202.jpg‘‘அந்த இடத்தை பிளாட் போட்டு விற்றது நான்தான். 1984&-ம் வருடம் சதுரஅடி ரூ.5 என்ற விலையில் ரூ. 3 ஆயிரத்துக்கு ஒரு பிளாட்டை விற்றேன். இடம் வாங்கிய பலரும் ரூ.100, 200 என்ற அளவிலேயே சிறுக, சிறுக கொடுத்து வாங்கினார்கள். இதனால் அங்கு இடம் வாங்கியவர்கள் அனைவரையும் எனக்கு நன்கு தெரியும். எனவே, யாரிடம் நீங்கள் இடம் வாங்கினீர்கள் என்று மரியம்பிச்சையிடம் கேட்டபோது, ‘நான் யாரிடமோ வாங்கினேன். அது உனக்கு எதுக்கு? தீன்நகர் முழுவதும் என் இடம், விட்டுவிட்டுப் போ’ என்று கோபப்பட்டார். 

பிறகு விசாரித்தபோதுதான், சமீபத்தில் அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளில் வீடுகட்ட அனுமதி மறுக்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார் என்று செய்தி வெளிவந்திருந்தது. இந்த சட்டத்தை மரியம்பிச்சையின் புரோக்கர்கள் இடம் வாங்கிய ஏழைகளிடம் காட்டி, ‘நீங்க இந்த இடத்துல வீடு கட்ட அரசாங்கமே தடைவிதிச்சிருக்கு’ என்று சொல்லி பயமுறுத்தியுள்ளனர். மேலும், அவர்களது வறுமையை பயன்படுத்தி சுமார் ரூ.40ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை கொடுத்து 8 பிளாட்டுக்களுக்கு மரியம்பிச்சை பவர் வாங்கியுள்ளார். 

இந்த இடத்தில் தர்கா, இடுகாடு ஆகியவற்றுக்கு இடம் ஒதுக்கி முழுமையான நகராக வரைபடம் தயாரித்திருந்தோம். இந்த இடத்துக்கு பின்புறம் சுமார் 5 ஆயிரம் சதுரஅடி அளவில் புறம்போக்கு இடம் உள்ளது. தீன்நகரின் தற்போதைய சந்தை விலை சதுரஅடி ரூ.1000. சாலை வசதி மட்டும் கிடைத்துவிட்டால் ஒரு வருடத்தில் ரூ.2 ஆயிரம் என்று உயரும். எனவே, ஏழைகளிடம் இருந்து மிரட்டியோ, பயமுறுத்தியோ இடத்தை பெற்று அதிகவிலைக்கு விற்க ஆசைப்பட்டு மரியம்பிச்சை இந்த வேலைகளில் ஈடுபடுகிறார். இதை தொடர்ந்து நாங்கள் கலெக்டரிடம் புகார் கொடுத்தோம்.

கலெக்டரின் உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினர் எங்களுக்கு நிலத்தை அளந்து பட்டா தரும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையிலும் மரியம்பிச்சை தொடர்ந்து தீன்நகரில் இடம் வைத்திருப்பவர்களை மிரட்டி வருகிறார். நானும் அ.தி.மு.க. காரன்தான். ஜெயலலிதா, திருச்சியில் பேசிய கூட்டத்தில் தி.மு.க.வினரை நிலமோசடி மன்னர்கள் என்று கூறினார். அப்படி என்றால் இந்த மரியம்பிச்சை யார்? இப்போது மரியம்பிச்சையின் பொறுப்பில் தான் கட்சிக்காக எம்.ஜி.ஆர். வாங்கிய பங்களாவை பராமரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த பங்களா என்ன கதி ஆகப்போகிறதோ?’’ என்கிறார் பயம் விலகாத கண்களோடு.

Trichy%203.jpgதீன்நகரின் நிலை குறித்து வருவாய்த்துறையில் விசாரித்தபோது, ‘‘இந்த இடம் முழுக்க கூட்டுப் பட்டாவாக உள்ளது. தீன்நகர் மக்கள் பாதுகாப்பு நலக்குழும உறுப்பினர்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம். இவர்களுக்கு பட்டா வழங்கும் வேலைகள் நடந்து வருகிறது’’ என்றனர்.

இவர்களின் புகார் குறித்து அ.தி.மு.க. கவுன்சிலர் மரியம்-பிச்சையிடம் கேட்டோம். ‘‘உனக்குத் தெரியுமா அது அவங்க இடம்னு?’’ என்று ஏகவசனத்தில் கேட்டார். வருவாய்த்துறையினர் ஆவணங்களை சரிபார்த்து அவர்களின் இடம்தான் என்று கூறுகின்றனரே என்று கேட்டபோது, ‘‘அப்ப நீயும் அவங்களோடவே சேர்ந்துக்க” என்று சொல்லி தொடர்பை துண்டித்தார்.

மன்னிக்கமுடியாத பாவங்களில் முதன்மை-யானது ஏழைகளின் சொத்தை அபகரித்தல் என்று குரான் சொல்கிறதாம். அது மரியம்பிச்சைக்கு பொருந்தாதா? என்று தீன்நகரின் உண்மையான உரிமையாளர்கள் கேட்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கட்சியை அழிக்கிறார் மாவட்டச் செயலாளர்!
மதுரை தே.மு.தி.க.வில் மல்யுத்தம்

Madurai%203.jpg



மாவட்டச் செயலாளர் அரவிந்தன் தி.மு.க.விடம் விலை போய்விட்டார்’’ & இது மதுரை தே.மு.தி.க.வினரின் பகீர் குற்றச்சாட்டு!

மதுரை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் அரவிந்தனுக்கும் அக்கட்சியினருக்கும் நடக்கும் உள்குத்து விவகாரங்கள் ஊர் முழுக்க தண்டோரா போட்டாகிவிட்டது. சென்னையில் தலைமை கழக அலுவலகத்தை திறந்ததுமே, அரவிந்தனைப் பற்றிய புகார் கடிதம் கீழே கிடக்கும் அளவுக்கு நிலைமை இருக்கிறதாம்.

Madurai%201.jpgஇது தொடர்பாக ரகசியமாக ஒரு குழுவை மதுரைக்கு அனுப்பி விசாரணை அறிக்கையும் பெற்று விட்டார் விஜயகாந்த். இதையடுத்து மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அரவிந்தன் எந்த நேரத்திலும் கழற்றிவிடப்படுவார் என்ற பரபரப்பு உருவாகியுள்ளது. 

மதுரை தே.மு.தி.க.வினர் சிலரிடம் ‘என்னதாங்க பிரச்னை?’ என்று கேட்டதுதான் தாமதம். அரை மணி நேரத்தில் நாம் இருக்கும் இடம் தேடி வந்து அடை மழையாக கொட்டித் தீர்த்தார்கள்.

‘‘மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் நேரத்தில்தான் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி வந்து தே.மு.தி.க.வில் சேர்ந்தார் அரவிந்தன். கட்சியில் சேர்ந்தவுடன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர், பிறகு மாவட்ட துணைச் செயலாளர் என இரண்டு பதவிகள் கிடைத்தும், கட்சிப் பணி என்றாலே சுணங்கிவிடுவார்.

இரண்டு மாதம் நல்லாதான் வேலை பார்த்தார். அதுக்கு பிறகுதான் மாறிப் போயிட்டார். இப்போது கரை வேஷ்டி கட்டாத தி.மு.க.காரர் போலவே செயல்படுகிறார் அரவிந்தன். கடந்த மாதம் முப்பத்தைந்து தெருமுனை பிரசாரம் நடந்தது. அதில் ஒரு இடத்தில் கூட மாவட்டச் செயலாளர் மைக் பிடித்து பேசவில்லை. ஆளும் தி.மு.க.வை எதிர்த்து பேச பயப்படுகிறாரா? பதுங்குகிறாரா? மிரட்டப்படுகிறாரா? இல்லை தி.மு.க.விற்கு விலை போயிட்டாரா? என்பது தெரியவில்லை. எல்லாவற்றையும் விட மிக மோசமான நிலை என்ன தெரியுமா? மாநில கழக பேச்சாளர்கள், பொதுக் கூட்டங்களில் பேசும்போது, அழகிரி மற்றும் கலைஞர் பற்றிப் பேச ஆரம்பித்தாலே உடனே பேச்சாளருக்கு ஒரு துண்டுச் சீட்டை அனுப்புவார். ‘இதோடு பேச்சை முடித்துக் கொள்ளவும்’ என்று அதில் எழுதப்பட்டிருக்கும். 

அதையும் மீறி பேசினால் பேச்சாளர் சட்டையை பின்னால் இருந்து இழுத்து உட்கார வைக்கும் சம்பவங்-களும் நடக்கிறது. சட்டையை பிடித்து இழுத்தாலும் பேச்சை தொடர்ந்து பேசினால் மாவட்டச் செயலாளர் மேடையை விட்டு எழுந்து போய் விடுகிறார். 

தே.மு.தி.க.வின் மாமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் இருக்கிறார்கள். எந்தக் கூட்டமாக இருந்தாலும் கட்சியின் அறிவிப்பாக இருந்தாலும், அந்த எட்டு பேருக்கும் தகவல் சொல்லுவதே கிடையாது. ஒரு நாள் கூட கட்சி வளர்ச்சி பணி குறித்து இவர் ஆலோசனைக் கூட்டம் போட்டது கிடையாது.

Madurai.jpgசெப்-&15 அண்ணா பிறந்த நாள் விழா நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கேப்டன் உத்தரவு போட்டார். ஆனால், மதுரையில் ஒரு நிகழ்ச்சி கூட விமரிசையாக நடக்கவில்லை. அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கக் கூட மாவட்டச் செயலாளர் பத்து பேரோடு தான் போனார். போட்டோவுக்கு கூட்டம் காட்ட கார் டிரைவர்களையும் அழைத்து போட்டோ எடுத்தார்கள். 

முறையாக நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்திருந்தால் கூட்டம் திரண்டு நிற்கும். இது தெரிந்த பிறகு, மாநிலப் பொருளாளர் சுந்தரராஜனிடம், பெரியார் பிறந்த நாளை கொண்டாட சொன்னார் கேப்டன். அவர் எல்லா நிர்வாகிகளுக்கும் முறையாக தகவல் கொடுத்தார். மதுரையில் கூட்டம் அலை மோதியது. 

வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. பெரும் அளவில் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் அரவிந்தனிடம் இருக்கும் பதவியை பறிக்க வேண்டும். இல்லையேல் மதுரை மாநகரில் உள்ள ஐந்து தொகுதிகளில் தொண்டர்களும் கட்சி மாறி போவார்கள்’’ என்று கொட்டித்தீர்த்தார்கள் தே.மு.தி.க.-வினர். 

இந்தப் புகார்களை அப்படியே தே.மு.தி.க.வின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் அரவிந்தன் முன் வைத்தோம்.

‘‘தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்வதற்காகவே தீப்பொறி செல்வராஜை வைத்து கூட்டம் நடத்தியிருக்கிறேன். அதற்காக மதுரை போலீஸ் என் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள். தி.மு.க.விடம் நான் விலை போகவில்லை. அந்த கட்சிக்கும எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என் மீது புகார் கொடுப்பவர்கள் தான் இந்தக் கட்சியை அழிக்க நினைக்கிறார்கள். என் மீது எழுப்பப்படும் புகார்கள் தி.மு.க.வின் சதிவேலையாகக் கூட இருக்கலாம். 

ஜெயலலிதா கூட விமர்சனம் செய்ய முடியாத சில குற்றச்சாட்டுகளை வெளியிட்டு, மதுரையில் அழகிரியை ஆட்டம் காண வைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறேன். நான் வந்த பிறகு கட்சியில் உள்ள பழைய நிர்வாகிகள் யாரையும் எடுக்கவில்லை. தனி நபர் விமர்சனம் செய்யக் கூடாது என்பதற்காகத் தான் பேச்சாளர்களிடம் சொன்னேனே தவிர மற்ற உள்நோக்கம் எதுவும் கிடையாது.

அண்ணா பிறந்த நாளன்று அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு பத்து பேர் தான் வந்தார்கள் என்பது தி.மு.க.வும் போலீசாரும் சேர்ந்து செய்த சதி. அதுதான் காரணமே ஒழிய வேறு காரணம் இல்லை. பெரியார் சிலைக்கு மாலை போடும் போது பெரும் கூட்டத்தை கூட்டி தி.மு.க.வினரை மிரள வைத்தோமே... அதற்கு என்ன சொல்கிறார்கள்..?’’ என்று ஆவேசப்பட்டார் அரவிந்தன்.

ஆக மொத்தம்... யாரோ ஒரு சிலர், சிலரிடம் விலைபோனது தெளிவாகிறது. கேப்டன் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தால்தான் கட்சி சேதாரம் ஆகாமல் தடுக்க முடியும் என்கிறார்கள் மதுரை தே.மு.தி.க.வில்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மத விழிப்புணர்வா? பிளவு முயற்சியா?
மீனவர் வாழ்வுரிமை மாநாட்டின் அதிர்வலைகள்

Tuticorin%203.jpg



மீனவர்களின் வாழ்வுரிமை மாநாட்டை முதன் முதலாக தூத்துக்குடியில் வரும் 26, 27 தேதிகளில் நடத்துகிறது இந்து மக்கள் கட்சி. பழ. நெடுமாறன், எம்.நடராசன் ஆகியோர் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில் மீனவர்களின் மதம் பற்றி சில பிரச்னைகளை கிளப்பப் போவதாக சலசலப்புகள் கிளம்பியுள்ளன. 

இதை உறுதிப்படுத்துவது போல, ‘‘மீனவர்களுக்கே தெரியாத அவர்களின் பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளவும், அவர்களின் வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசை வலியுறுத்தியே இந்த மாநாடு நடத்துகிறோம்’’ என அறிவித்திருக்கிறார்கள் இந்து மக்கள் கட்சியினர்.

Tuticorin.jpgமீனவர்களில் கணிசமானோர் கிறிஸ்தவர்களாக இருக்கும் நிலையில், இந்த மாநாடு ஏற்படுத்தியிருக்கும் சலசலப்புகள் குறித்து இந்து மக்கள் கட்சியின் பொது தொழிற்சங்க மாநில அமைப்பாளர் திருப்பதியிடம் பேசினோம். 

‘‘ஆதியிலே தமிழக மீனவர்கள் அனைவரும் இந்துக்கள்தான். காலப்போக்கில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிவிட்டனர்’’ என எடுத்த எடுப்பிலேயே உஷ்ணமானவர் தொடர்ந்தார்...

‘‘400 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுக்காரர்களின் ஆட்சிக்காலத்தில் மீனவர்கள் தங்களது உயிரையும் உடமைகளையும் பாதுகாத்திட கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர். சிவனுக்கு தொண்டு செய்யும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்தி நாயனார் ஒரு மீனவர். இவரது வலையில் தங்கமீன் சிக்கிய போதும் சிவனுக்கு காணிக்கையாக அதை படைத்துள்ளார். இதனை ஒரு திருவிழாவாக இன்றும் நாகை மாவட்டத்தில் கொண்டாடி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழாவின் போது மீனவர்-களுக்கென்று ஒருநாள் மண்டகப்படியே உண்டு. இவர்களுக்கென்று அங்கு தனி வாயிலே உள்ளது. ஆனால் இன்று அது அடைக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலில் திருவிழாவின் போது ஒருநாள் மலையில் தங்கி விழா கொண்டாட மீனவர்களுக்கு மட்டும் அனுமதி உண்டு அது இன்றும் நடைபெற்று வருகிறது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழாவின் போது தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைப்பது மீனவர்கள் தான். ஆனால் இன்று அந்த உரிமைகள் மறைக்கப்பட்டு, மறுக்கப்படுகின்றது. கன்னியா-குமரி பகவதி அம்மன் கோயில் திருவிழாவின் போது கொடியேற்ற கயிறை இன்றும் மீனவர்கள்தான் கொடுத்து வருகின்றனர். ஆனால் தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதி-களில்தான் ஏராளமான மீனவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர்’’ என மீனவர்களுக்கும் இந்து மதத்-துக்குமான தொடர்-புகளைப் பட்டியலிட்ட திருப்பதி....

‘‘இன்று தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டது. இந்திய கடல் எல்லைக்குள் வரும் சிங்கள மீனவர்களை இந்திய ராணுவம் கைது செய்தாலும் ராஜ உபசரிப்பு, ராஜகவனிப்பு செய்து மீண்டும் அவர்கள் நாட்டுக்கு மரியாதையுடன் அனுப்பி வைக்கிறது. ஆனால் நம்ம மீனவர்கள் தெரியாமல் அங்கு போனால், நிர்வாணப்படுத்தி சித்திரவதைப்படுத்தி கொலை செய்யப்படுகின்றனர். 

Tuticorin%202.jpgநம் மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை ராணுவத்தினரை ஐ.நா. சபை குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்தியாவின் இறையாண்மைக்கும் தமிழர் நலனுக்கும் எதிரான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மீனவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்படவுள்ள சுனாமி வீடுகள் தரமற்றதாக உள்ளது. தமிழகத்தின் மீனவளத்துறை செயல்படாமல் முடங்கிவிட்டது.

இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், மீனவர்களுக்கு இந்து கோயில்களில் மறுக்கப்படும் உரிமைகளை மீட்கவும்தான் இந்த மாநாடு’’ என முடித்தார்.

இந்த மாநாடு பற்றி அகில இந்திய மீனவ சங்கத் தலைவர் அண்டன் கோமஸிடம் பேசி-னோம். ‘‘தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்-படுவதை எதிர்த்து குரல் கொடுக்க-வேண்டியது அனைவரின் கடமை. அந்த வகையில் இந்து மக்கள் கட்சி மீனவர்களுக்காக குரல் கொடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஜாதி மத பேதமின்றி மீனவர்கள் இருக்கிற நிலையில், அவர்கள் இந்துக்களா, கிறிஸ்தவர்களா என்று விவாதிப்பதோ, கருத்துக்கள் தெரிவிப்பதோ மீனவர்கள் நலனுக்கு ஏற்ற-வகையில் இருக்காது. மத மாற்றம் என்பது மனமாற்றத்தால் வரக்கூடியது. எனவே இதில் செலுத்தும் கவனத்தை மீனவர்கள் வாழ்வாதார பிரச்னையில் அழுத்தம் காட்ட வேண்டும்’’ என்றார்.

மீனவர்களிடையே மத விழிப்-புணர்வை ஏற்படுத்துகிறோம் என இந்து மக்கள் கட்சி கூற.... மத பிளவை ஏற்படுத்துகிறார்கள் என சில மீனவ அமைப்புகள் கங்கணம் கட்ட, மீனவர்கள் மத்தியில் பரபரப்பு அலையடிக்க ஆரம்பித்திருக்கிறது. 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கூவி விற்கப்படும் அரசுப் பணி:
கேள்விக்குறியாகும் இளைஞர்கள் எதிர்காலம்!
இது புதுச்சேரி சோகம்

Pondy%207.jpg


‘‘கையெழுத்து மட்டும் போடத் தெரியுமா? கவலையை விடு. இந்தா பிடி கவர்மென்ட் வேலை. எடு 3 லட்சம்’’ என கூவி விற்காத நிலைதான் புதுச்சேரியில். 

புதுச்சேரி இளைஞர்களுக்கு இப்படித்தான் அரசாங்க வேலை வழங்கப்பட்டுக் கொண்டி-ருக்கிறது. ஆனால், அப்படி வழங்கப்படும் வேலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதுதான் வேதனை. இருந்தாலும் அந்தரத்தில் எதிர்-காலத்தை வைத்து ரிஸ்க் எடுக்கும் இளைஞர்கள் புதுச்-சேரியில் அதிகமாக இருப்பதாலோ, என்னவோ இப்படி லட்சங்களை கொட்டிக் கொடுத்து, லட்சியங்-களைத் தொலைத்துக் கொண்-டிருக்-கிறார்கள் இளைஞர்கள் பலரும். 

Pondy%201.jpgஇப்படி உத்தரவாதம் இல்லாமல் பணிக்கு அமர்த்தப்-பட்ட இளைஞர்களின் எண்-ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டும் என்கிற அதிர்ச்சித் தகவல் கிடைக்க, அதுபற்றி மேலும் விசாரிக்க ஆரம்பித்தோம். 

‘‘இப்படி பணிக்கு அமர்த்தப்-பட்ட இளைஞர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்-படுவதில்லை. காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்து எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் இருபதாயிரம் இளைஞர்களுக்கு மத்தியில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுசெய்து காத்திருக்கும் இரண்டு லட்சம் இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி நிற்கிறது’’ என்று அரசுக்கு எதிராக போராட்ட களத்துக்கு வந்திருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

புதுச்சேரி அரசு தலைமைச் செயலக அதிகாரிகள் சிலரிடம் இதுகுறித்துக் கேட்டோம். பெயரை மறைத்துத் தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

“புதுச்சேரியைப் பொறுத்த வரையில் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் நிர்வாகம் இல்லை. அமைச்சர்களும், அவர்களின் ஆதரவாளர்களும்தான் நடத்துகிறார்கள். யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னரின் கட்டுப்பாட்டில் தான் செயல்படணும். ஆனால், இங்கே அப்படியில்லை. 

ரங்கசாமி முதல்வராக இருந்தபோது எந்தவித உத்தரவாதம் இல்லாமல் தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் தொகுதி-வாசிகளுக்கும் அரசுப் பணி வாய்ப்பை வழங்கினார். சுமார் ஏழாயிரம் பேர் இப்படி பணியமர்த்-தப்-பட்டார்கள். ஆனால், அவர்களுக்கு இதுநாள் வரையில் முறையான சம்பளம் எதுவும் வழங்கப்-படவில்லை. முதல்வர் மாற்றப்பட்ட பிறகு கேட்கவே வேண்டாம். அப்படி நியமிக்கப்பட்ட பலரையும் இப்போது வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இதை எதிர்த்து பலரும் நீதிமன்றத்தை நாடி வருகிறார்கள். 

Pondy%203.jpgஆனால், அதே பார்முலாவைப் பயன்படுத்தி இப்போதும் இளைஞர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள் என்பதுதான் வேதனை. ஷாஜஹான், கந்தசாமி, நமசிவாயம் உள்ளிட்ட பல அமைச்சர்களும் இப்படி இளைஞர்களை பணியமர்த்தி-யிருக்கிறார்கள். ஆனால், அரசாங்கத்தில் அவர்களுக்கு எந்தத் துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது? என்ன வேலை கொடுக்கப்படும்? என்கிற எந்த விவரமும் கிடையாது. வருகைப்பதிவும் கிடையாது. கேட்டால், முதுநிலை பட்டப்படிப்பு முடித்த நபர் ஒருவரையே ஏரியை தூர்வாரும் மஸ்தூர் பணிக்கு அமர்த்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஒவ்வொருவரிடமிருந்து 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று இருக்கிறார்கள். இதில் ஏதேனும் பிரச்னை என்றால், அதிகாரிகள் தலையை உருட்ட ஆரம்பித்து விடுவார்கள் அமைச்சர்கள். பாவம், இளைஞர்கள்.

இதுசம்பந்தமாக வழக்கு ஒன்று நடந்து வருகிறது. அதன்மீதான தீர்ப்பு ஓரிரு நாளில் வந்துவிடும் என்கிறார்கள். நாங்கள் அறிந்த வரையில், இளைஞர்-களுக்கு எதிராகவே தீர்ப்பு இருக்கும் என்கிறார்கள். அப்படி நடந்தால் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பணிக்கு வந்த இளைஞர்கள் பலர் தற்கொலை முடிவுக்குப் போகலாம். அதுதான் கவலையாக இருக்கிறது...’’ என்று வேதனையோடு, இளைஞர்களின் சோகக் கதையை சொல்லி முடித்தார்கள். 

புதுச்சேரியில் செயல்படும், வேலையற்றோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் அமைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறுகையில், ‘‘ஓட்டு வங்கியைப் பெருக்கிக் கொள்வதற்காக இப்படி பணி உத்தரவாதமில்லாமல் பணிக்கு அமர்த்துகிறார்கள். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 2 லட்சத்து 20 ஆயிரம் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து யாரும் கவலைப்படவில்லை. 

அதனால்தான் 2005-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்-தோம். புதிய ஆட்களையும், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் நியமிக்க கூடாது’ என்று நீதிமன்றம் தன்னுடைய இடைக்கால உத்தரவில் தெரிவித்திருந்தது. இருந்தும், அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமலேயே ஆட்களை பணிக்கு நியமித்திருக்கிறார்கள். இது பெரும் சிக்கலில் போய் முடியப்போகிறது...’’ என்றார்.

Pondy%204.jpgஇதுகுறித்து சமூக ஆர்வலரும், பஞ்சாயத்து கூட்ட-மைப்பு தலைவருமான ஜெகனாதனிடம் பேசினோம். “புதுச்சேரி அரசுக்கு என்று எந்த கொள்கை முடிவும் கிடையாது. புதுவையில் 6975 தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் உள்ளூர் இளைஞர்களுக்கு பணிவாய்ப்பு வழங்கப்-படுவதில்லை. அரசாங்கம் முறையாக ஏற்பாடு செய்தாலே, 72 சதவீத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடும். மாறாக, குறுக்கு வழியில் வேலைவாய்ப்பை வழங்கி, முறைகேட்டுக்கும் வழிவகுக்க வேண்டியதில்லை” என்றார்.

இதுகுறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெருமாள் நம்மிடம், “பிரச்னை எங்க கவனத்துக்கும் வந்திருக்கிறது. இதற்காக மிகப்பெரிய அளவில் போராடப் போகிறோம்...’’ என்றார்.

முதல்வர் வைத்திலிங்கத்திடம் பேசினோம். “அரசின் மூலம் நியமிக்கப்படும் பணி-யாளர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூல-மாகத்தான் நியமிக்கப்-படுகிறார்கள். தவறு எதுவும் நடக்கவில்லை. என் பொறுப்பில் இருக்கும் மின்வாரியத்தில் முறையாக நியமனம் நடக்கிறது...’’ என்றவரிடம், ‘‘மின்வாரியம் சரி... மற்ற துறைகளில்?’’ என்றதும், வழக்க-மான சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்தார்.

முதல்வர் சிரிக்கலாம். ஆயிரக் கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை சிரித்துவிட்டால்?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கூட்டணிகளை மாற்றப் போகும் பீகார் தேர்தல் முடிவு!

Sureshkrishan%203.jpg



சில விஷயங்கள் எங்கேயோ ஓர் இடத்தில் நடந்து கொண்-டிருக்கும். ஆனால் அது வேறு எங்கோ ஓர் இடத்தில் விளைவுகளை ஏற்படுத்த காத்திருக்கும். இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ.. அரசியல் வித்தகர்களுக்கும் அதன் இலக்கணம் படித்த பண்டிதர்-களுக்கும் கண்டிப்பாக புரியும். ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவு இன்ன பிற முக்கிய மாநிலங்களின் தேர்தல் கூட்டணியை நிர்ணயிக்கப் போகிறது என்றால் நம்ப முடிகிறதா?

Sureshkrishan.jpgஆம். அப்படியொரு சட்டசபைத் தேர்தல் நடக்கப் போகிறது. எங்கு? பீகாரில். அங்கு அடுத்த மாதம் தேர்தல். இதன் முடிவுகள்தான் பல்வேறு அதிர்வுகளையும் ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தப் போகிறது.

ஆளும் கூட்டணியான ஜனதா தளமும் (யு), பி.ஜே.பி.யும் ஓர் அணி... லல்லுவும் பஸ்வானும் மற்றொரு அணி... காங்கிரஸ் தனி அணி என அங்கு முக்கோண மோதல் நடக்கப்போகிறது. முக்கோணம் என்று கூறினாலும் நிஜமான போட்டி என்னவோ முதல் இரண்டு அணிக்குத்தான். நிதீஷா அல்லது லல்லுவா என்பதுதான் மக்கள் முன்பு வைக்கப்பட்டிருக்கும் கேள்வி. 

பீகார் மக்கள் என்ன தீர்ப்பை அளிக்கப்-போகி-றார்கள், யார் வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போகின்றனர் என்பது அம்மாநில அரசியலைச் சார்ந்தது. அது நமக்குத் தேவையில்லை. ஆனால் அங்கு காங்கிரஸ் வெற்றி பெறப்போகும் இடங்களின் எண்ணிக்கை என்பது இருக்கிறதே... அதில்தான் அத்தனை ஜாலங்களும் உள்ளன. அந்த எண்ணிக்கையை அகில இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத இடைவெளி இருக்கும் நிலையில், அங்கிருந்து வரும் கருத்துக்கணிப்புகள் எல்லாம் நிதிஷுக்கு ஓரளவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கலாம் என்கின்றன. அப்படியானால் லல்லு ப்ளஸ் பஸ்வான் கூட்டணி? ஓரளவுக்கு சீட்டுகள் கிடைக்கும். சரி. இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இப்போது 9 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வைத்திருக்கும் காங்கிரஸ் எத்தனை இடங்களை வெல்லும்?

காங்கிரஸ் ஒன்றும், அங்கு ஆட்சியைப் பிடிக்க போட்டிபோடும் கட்சி இல்லை. லல்லுவும் பஸ்வானும் எப்படியும் தங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என பிரயத்தனம் செய்தனர். ஆனால் தனது கட்சியை பலப்படுத்த ஊர் ஊராக சென்று கொண்டிருக்கும் ராகுல் இதற்கு தடைக்-கல்லாக மாறியதால் காங்கிரஸ் அங்கு தனித்து போட்டியிடுகிறது.

Sureshkrishan%201.jpgபீகார் தேர்தலுக்கு பிறகுதான் வெகு-சீக்கிரத்தில் தமிழ்நாடும், மேற்குவங்கமும் தேர்தலை சந்திக்கப் போகின்றன. இந்த இரு மாநிலங்களிலுமே காங்கிரஸ் ஜுனியர் பார்ட்னராக உள்ளது. பெரியண்ணன்களாக இருக்கும் தி.மு.க.வையும், திரிணாமுல் காங்கிரஸையும் மீறி இம்மாநில சட்டசபை தேர்தல் பேச்சுவார்த்தையின்போது திமிறி எழலாமா? வேண்டமா? என்பதை பீகார் தேர்தல் முடிந்த பிறகுதான் காங்கிரஸ் முடிவு செய்யப்போகிறது. அந்த வகையில் மத்திய ஆட்சியின் கூட்டணிகளான திரிணாமுலுக்கும் தி.மு.க.வுக்கும் மிக மிக முக்கியமான தேர்தல் இது என்பதே உண்மை. இந்த இரு கட்சிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான எதிர்கால தேர்தல் உறவை இந்த பீகார் தேர்தலே நிர்ணயிக்கப்போகிறது.

பீகாரில் ஒற்றை இலக்கத்தோடு தனது கணக்கை முடித்துக் கொண்டால் கருணாநிதியும், மம்தாவும் கொடுக்கப் போகும் சீட்டுகளை மறுபேச்சு பேசாமல் காங்கிரஸ் வாங்கிக் கொள்ளும். அதிலும் கருணாநிதியாவது, தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளாக மந்திரி பதவிகள் தராமல் இருந்துவிட்டோமே என்றும் காங்கிரசை விட்டால் நட்டாற்றில் நிற்க நேரிடும் என்ற யோசனையில் சற்று பெருந்-தன்மையாக நடந்து கொள்ள வாய்ப்புண்டு. மம்தாவோ, மேற்கு வங்கத்தில் ‘ஐந்து’ என்றுதான் ஆரம்பிக்கவே செய்வார். திக்கித் திணறி இரட்டை இலக்க சீட்டுகளை மம்தாவிடம் பெறுவதற்குள் காங்கிரசுக்கு தாவு தீர்ந்துவிட அதிகவாய்ப்புள்ளது.

ஆனால்.... பீகாரில் தப்பித் தவறி முப்பது நாற்பது சீட்டுகளை பெற்றுவிட்டால் கதையே மாறும். காங்கிரஸ் தனக்கே உரிய தோரணையை காட்டப்போவது நிச்சயம். இப்போது நாடாளுமன்றத்தில் 206 இடங்களை காங்கிரஸ் சுயமாக வைத்திருந்தாலும் தி.மு.க., திரிணாமுல் உள்ளிட்ட கூட்டணிகளை கூட்டினாலுமே கூட 255 ஐ தாண்ட முடியாமல் தள்ளாடுகிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி. நாடாளுமன்றத்தில், ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சிகள் பேதி மருந்து கொடுக்கும் போதெல்லாம் மாயாவதி, முலாயம் போன்றவர்களை வைத்தும், முடியாத பட்சத்துக்கு ஓட்டெடுப்-பின்போது சிலரை ஆப்-சென்ட் ஆக செய்வதுமான சித்து வேலைகளை காட்டி தப்பிப் பிழைத்துக் கொண்டே வருகிறது.

Sureshkrishan%202.jpgதி.மு.க.வின் 18 எம்.பி.க்-களின் தயவு இல்லையெனில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசின் அச்சாணி கழன்றுவிடும். இந்த ‘18’ தான் இரு கட்சிகளுக்கும் இடையிலான பெவிகால். இதற்கு மாற்று கிடைத்துவிட்டால் தி.மு.க.விடம் இருந்து புட்டுக் கொள்ள காங்கிரஸ் தயாராவது நிச்சயம். அந்த ‘மாற்றாக’ பீகாரில் நிதீஷ் கிடைக்க வாய்ப்புள்ளது.

எப்படி? நிதீஷ், தேசிய ஜனநாய கூட்டணியில் முக்கியமான கட்சியாக இருந்தாலும் பி.ஜே.பி.யுடன் சுமுகமாக இல்லை. பி.ஜே.பி.யுடன் இருப்பதால் செக்யூலர் வேடம் எடுபடுவதில்லை. முஸ்லிம்களின் ஆதரவு மிஸ் ஆகுமோ என்ற பயத்தில் பிரசாரத்துக்கு நரேந்திர மோடி வரக்கூடாது என ஒற்றைக்காலில் நிற்கிறார் நிதீஷ்.

ஆக பீகாரில் தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி மாற்றம் வரலாம். அங்கு பி.ஜே.பி. யிடம் இருந்து எப்படா பிய்த்துக் கொள்ளலாம் என இருக்கும் நிதீஷுக்கு காங்கிரஸ் வலைவீசும். பற்றாக்குறைக்கு பஸ்வானையும் வளைக்கும். புதிய கூட்டணி மலர்ந்தால் நிதீஷிடம் இருக்கும் 20 எம்.பி.க்களின் ஆதரவு மத்திய ஆட்சிக்கு கிடைக்கும். அந்த சூழ்நிலையில் தி.மு.க.வின் 18 க்கு மதிப்பு சற்று குறையும். ஆக பீகாரில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் தி.மு.க. வுக்கும் திரிணாமுலுக்கும் சிக்கல் நிச்சயம். தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் காங்கிரஸ் கைகட்டிக் கொண்டிருக்கும் நிலைமைகள் நிச்சயம் மாறி, சம்மணம் போட்டு ஜம்மென்று உட்கார்ந்து கொண்டு காங்கிரஸ் சீட் பேரம் பேசும்.

ஆக... விஜயகாந்த் வருவாரா... மாட்டாரா, 60க்கு மேல் சீட் கேட்டால் என்ன செய்வது என தி.மு.க.வும், தனியாக போட்டியிட நேரிடுமோ? மெஜாரிட்டி கிடைக்காமல் போகுமோ என திரிணாமுலும் வெட்டியாக கவலைப்படுவதைக் காட்டிலும், பீகாரில் காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தை தாண்டாது செய்வதற்கு, லாலு & பஸ்வான் கூட்டணி அதிக இடங்களை பெற வைக்கும் வகையில், பேசாமல் அக்கட்சிகளின் தேர்தல் செலவுக்கு தி.மு.க.வும் திரிணாமுலும் உதவுவதே பெஸ்ட். காரணம் பண முடையில் உள்ளாராம் லாலு!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘உங்களுக்கு இருப்பது எதையும் தாங்கும் இதயமா?’’ 
கலைஞருக்கு எதிராக கனல் கக்கும் விஜயகாந்த்

Vijayakanth%201.jpg



‘வீணர்கள்...’

இப்போதைக்கு விஜயகாந்துக்கு பிடிக்காத வார்த்தை இதுதான். ‘தி.மு.க. ஆட்சியை அகற்றாமல் ஓயப்போவதில்லை’ என சமீபத்தில் விஜயகாந்த் ஒரு பொதுக்கூட்டத்தில் ஆவேசம் கொட்ட... இதை மிக சீரியஸாக எடுத்துக்கொண்ட தி.மு.க., விஜயகாந்தின் பேச்சுக்கு ரெஸ்பான்ஸ் கொடுத்து வழக்கத்துக்கு மாறாக... ‘வெறிக்கூச்சல் வீணர்கள்...’ என கட்சி சார்பில் விளம்பர அறிக்கையே வெளியிட்டிருந்தது. 

இதைப் பார்த்ததும் மேலும் டென்ஷனான விஜய-காந்த், உடனடியாக சென்னை புளியந்தோப்பு பகுதியில் இதற்காகவே ஒரு கண்டனப் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அதில் கலைஞரை கிழி-கிழியென கிழித்து எடுத்துவிட்டார் விஜயகாந்த். அவரது பேச்சின் எழுத்துப் பெயர்ப்பு இதோ... 

Vijayakanth.jpg‘உங்களை விமர்சித்தேன் என்பதற்காக எங்களை வீணர்கள்... வெறிக் கூச்சல் போடுகிறோம்... என்று பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறீர்கள். கலைஞரே உங்களுக்கு தைரியம் இருந்தால் தே.மு.தி.க. என்று சொல்ல வேண்டியதுதானே? ‘காமராஜர் அண்ணாச்சி கருப்பட்டி விலை என்னாச்சி? பக்தவத்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி? கக்கன்ஜி அண்ணாச்சி கடலை விலை என்னாச்சி?’ என்று நீங்கள் மட்டும் கேட்கலாம். ஆனால், இந்த விஜயகாந்த் கேட்டால் தப்பா? ‘எதையும் தாங்கும் இதயம் உண்டு’ என்று அண்ணா சொன்னார். நான் சொன்ன சொல்லைக்கூட தாங்க முடியாமல் என்னைத் திட்டித் தீர்க்கிறீங்களே, இதற்கு பெயரா எதையும் தாங்கும் இதயம்? அண்ணா இதயத்தை இரவலா கொடுத்ததா சொல்றீங்க, அப்படி கொடுத்திருந்தா... இந்த விஜயகாந்த் சொன்னதுக்கு சரியா பதில் சொல்லியிருப்பீங்க. அண்ணா எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு பதில் சொல்வாரு. ஏன் உங்களுக்கு ஆத்திரம் வருது? 

கலைஞருக்கு அண்ணா மாலை போடுவது -போல ஒரு போட்டோ. என்ன மாதிரி அண்ணாவை கேவலப்படுத்துகிறார்... அண்ணன் எப்போது எழுந்திருப்பார், திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருந்து, அப்படி உட்கார்ந்தவர்தான் இந்த கலைஞர். பெரியார், அண்ணா , எம்.ஜி.ஆர். ஆகியோர் அரசியல் கட்சி என்ற வீட்டைக் கட்டினர். ஆனால், கட்டிய வீட்டில் குடி புகுந்தவர் கலைஞர். கரையான் புற்றுக்குள் புகுந்த கருநாகம்தான் கலைஞர்.

பெரியார் வழியில் வந்ததாகச் சொல்லும் கலைஞர் கழுத்தில் ஒரு மஞ்சள் துண்டு, கையில் ஒரு சிகப்பு கல் மோதிரம். அவர் சுண்டு விரலை பிடித்து கொண்டு வந்தேன் என்று பொய் சொல்வார். அதற்காக செத்தவர்களைத்தான் எப்போதும் அவர் சாட்சிக்கு அழைப்பார். 

எம்.ஜி.ஆர். ஒரு படத்தில், ‘ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமை தந்தார். தன் இனிய குடும்பம் ஒன்றுக்குதான் வறுமையை தந்தார்’ என்று அண்ணாவைக் காட்டிப் பாடுவார். ஆனால் அண்ணா வழி வந்த நீங்கள் இன்று விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களில் ஒருவர். மந்திரி குமாரி, பராசக்தி என்று இரண்டே இரண்டு படத்தை வைத்து இவ்வளவு நாட்கள் ஓட்டிக் கொண்டிருக்கிறார் கலைஞர். அதன் பிறகு என்ன செய்தார்? இவர் எழுதிய வசனத்திற்கு 50 லட்ச ரூபாய் எந்த பைத்தியக்காரனாவது தருவானா?

நாட்டுல கொலை நடக்குது, கொள்ளை நடக்குது... குண்டு எவன் போடறான்னு பார்க்காமல், கூட்டணியை உடைக்க வேண்டும்... விஜயகாந்த் தனித்து போட்டியிட வேண்டும் என்று புரளி கிளப்புகிறார். நான் அடங்குவேனா என்று பார்க்கிறார். என்னய்யா விஜயகாந்த்துக்கு ‘8 காலம்’ செய்தியா? வேறு பக்கம் தள்ளிப்போடுங்கய்யா என்று சொல்வார். ஆனால் தான் பேசவில்லை என்றும் சொல்வார். திருடன் எப்போதாவது தன்னை திருடன் என்று சொல்லிக் கொள்வானா? மாணவர்களுக்கு ஐந்து முட்டைபோட்டேன்னு சொல்றீங்க. இன்னும் ஒரு வருஷத்துல மக்கள் உங்களுக்கு முட்டை போடப்போறாங்க.

Vijayakanth%202.jpgவிஜய-காந்த்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறார் அழகிரி. உங்களையும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் மதுரைக்கு வந்தவர்கள். நான் மதுரை மண்ணில் பிறந்தவன் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கலைஞரே... உங்களுக்கு இத்தனை பிள்ளைகள், பேரன்கள், இத்தனை உறவினர்கள் என்பதைக் காட்டவா செம்மொழி மாநாட்டில் முதல் வரிசையில் உட்கார வைத்தீர்கள்? எல்லா மந்திரி-களும் வாயில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்கள். அதைச் சுட்டிக்காட்டி, ‘இதுவா சுயமரியாதை?’ என்று என்னைப் பார்த்து மலேசி-யாவில் கேட்கிறார்கள்.

‘என் பேரன்கள் சினிமாவில் நடிக்கக் கூடாதா... படம் எடுக்கக் கூடாதா... சிவாஜி மகன் பிரபு நடிக்கவில்லையா? ரஜினி மருமகன் தனுஷ் நடிக்க-வில்லையா?’ என்று கேட்கிறார். உங்கள் மகன் மு.க.முத்து நடிக்க வந்தததை நாங்கள் கேட்க-வில்லையே? ஸ்டாலின் அரசியலுக்கு வந்ததை கேட்கவில்லையே?

‘ரெட்ஜெயன்ட் மூவிஸ்’, ‘க்ளவுட் நைன்’ என்ற பெயர்களில் பேரன்கள் மாதம் ஒரு படம் எடுக்-கின்றனர். கேட்டால் அது அவர்களுக்கான பாக்கெட் மணியில் எடுத்தது என்கிறார்கள். ஒரு படம் எடுப்பது சாதாரண விஷயமா? அவர்கள் பெரிய நிறுவனங்களின் முதலாளிகளாக இருந்தவர்களா? அப்படி உரிமையாளர்களாக இருந்து அதில் வந்த வருமானத்தில் படம் எடுத்திருந்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். பாக்கெட் மணியில் படம் எடுத்ததால்தான் கேள்வி எழுகிறது. இன்று பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம், பெரிய பட நிறுவனங்கள் எல்லாம் பயந்து கிடக்கிறார்கள். கலைஞரின் குடும்பத்தின் பிடியில்தான் தியேட்டர்கள் இருக்கின்றன. என் ‘விருத்தகிரி’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கிறீர்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என் ‘தர்மபுரி’ படத்தை ஓட-விடாமல் தடுத்தீர்களே? மே மாசத்துக்குப் பிறகு பாருங்கள். அவர்களை துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட வைப்பேன். நான் படத்தை ரிலீஸ் பண்ணுவேன். சும்மா கூட தெருவுல போட்டு மக்களுக்கு காண்பிப்பேன். 

தே.மு.தி.க. ஒரு சுயம்பு. தொண்டர்களால், மக்களால், அன்புச் சகோதரர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. செயின், வாட்ச், நகைகளை அடமானம் வைத்து வளர்ந்து வரும் கட்சி. அப்படிப்பட்ட தியாகம் கொண்ட என் கட்சித் தொண்டர்களை சீண்டிப் பாக்காதீங்க’’ என்று ஆவேச உரை நிகழ்த்திவிட்டு நலத் திட்ட உதவிகளை வழங்கத் தொடங்கினார் விஜயகாந்த். அவரது பேச்சுக்கு, கூட்டத்தில் ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


நானா துரோகி? -படபடக்கும் எஸ்.வீ.சேகர்!
1.jpg
அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. எஸ்.வீ.சேகர், கடந்த 2 வருடகாலமாக தி.மு.க. ஆதரவாளர் என்கிற அடையாளத்துடன் இயங்கிவந்தார். எப்போது வேண்டுமானாலும் தி.மு.க.வில் இணைந்துவிடுவார் என்கிற பேச்சும் இருந்தது. இந்தச் சூழலில், காங்கிரஸில் இணைவதற்கான ஒரு முயற்சியில்... ராகுல்காந்தியை தற்போது சந்தித்திருக்கிறார். இதுகுறித்து டெல்லியில் இருந்த அவரை தொடர்புகொண்டு பேசினோம்.

* நாடக மற்றும் சினிமா நடிகராக இருக்கும் உங்களை எம்.எல்.ஏ.வாக்கி பெரிய அளவில் முக்கியத்துவம் தந்த ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துவிட்டுப் போனவர் என்று உங்களை குற்றம் சாட்டும் அ.தி.மு.க.வினர், காங்கிரஸ் கட்சிக்காவது அவர் உண்மை யானவராக இருக்க வேண் டும் என்கிறார்களே?

அ.தி.மு.க.வில் சேரவேண்டும் என்று நான் முயற்சிக்கவில்லை. வீட்டுக்கு வாருங்கள் என்று ஜெயலலிதா என்னை அழைத்தார். அவரை சந்தித்தேன். கட்சியில் சேர்ந்து பணி செய்யுங்கள் என்றார். ஏற்றுக்கொண்டேன். அப்போது, ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? என்று ஜெயலலிதா கேட்டபோது,’ "ஒரு தலைமையின் கீழ் வேலை செய்வதைத்தான் நான் விரும்புகிறேன். ஆனால் அ.தி.மு.க.விற்கு ரெண்டு தலைமை இருக்கிறதாக சொல்லுகிறார்கள். அதான் யோசனை. மற்றபடி ஒன்றுமில்லை மேடம்'’என்றேன். "அதெல்லாம் தப்பான நியூஸ். அதப்பத்தியெல்லாம் யோசிக்காதீங்க. எதுவாக இருந்தாலும் நீங்க என்னிடமே பேசலாம். வேறு யாரிடமும் பேசத் தேவையில்லை' என்றார் ஜெயலலிதா. அதன்படிதான் நான் நடந்துகொண்டேன். அது சிலருக்குப் பிடிக்கவில்லை. 1.jpg


தேர்தல் செலவுக்காக பணம் கொடுத்து அனுப்பியிருந்தார்கள். தேர்தல் முடிந்ததும் அந்த பணத்துக்கான கணக்கையும் கூடுதலாக நான் செலவு செய்த 3 லட்சத்துக்குமான கணக்கையும் ஆதாரங்களுடன் ஜெயலலிதாவிடம் தந்தேன். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அவர். காரணம், தேர்தல் செலவிற்காக அவர் கொடுத்தனுப்பிய தொகைக்கும் எனக்கு தரப்பட்ட தொகைக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. உடனே சம்பந்தப்பட்டவர்களிடம் கோபப்பட்டார் ஜெயலலிதா. அன்றையிலிருந்து அ.தி.மு.க.வின் ரெண்டாவது தலைமைக்கு நான் எதிரியாகிப் போனேன். அவர்கள் செய்த சதியால்தான் நான் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டேனே தவிர... துரோகம் செய்ததற்காக அல்ல. எந்த மாதிரி துரோகம் செய்தேன் என்பதை அ.தி.மு.க.வினரை பட்டியலிடச் சொல்லுங்களேன். பார்ப்போம். 

* அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட உங்களை அரவணைத்து, பாதுகாத்து, எல்லாவகையான முக்கியத்துவமும் தி.மு.க. தந்தது. நீங்களும் அதனை ஏற்றுக்கொண்டீர்கள். ஆனால் தி.மு.க.வில் உங்களுக்காக நீங்கள் ராஜ்யசபா சீட் கேட்க... அதனை தி.மு.க.மறுத்தது. அந்த கோபம்தான் சமீபகாலமாக நீங்கள் தி.மு.க.மீது கசப்பாக இருப்பதற்கும் தற்போது காங்கிரஸில் இணைய முயற்சிப்பதற்கும் காரணங்களாக இருக்கின்றன என்கிறார்கள். ஆக உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசியல் செய்வதுதான் ஆரோக்கியமானது என்று நினைக்கிறீர்களா?

நான் எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். சட்டமன்றத்திலும் வெளியேயும் என்னை பாதுகாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. அ.தி.மு.க.விலிருந்து கொள்ளையடித்துவிட்டோ, கொலைப்பழி ஏற்றுக்கொண்டோ நான் வரவில்லையே.... என்னை தமிழக அரசு அரவணைப்பதற்கு? இல்லை... ஊழல் புகார்களோடு நான் அங்கிருந்து நீக்கப்பட்டேனா? அதுவும் கிடையாதே. அ.தி.மு.க.விலிருந்த போதே அரசியல் நாகரீகத்தை கடைப் பிடித்தேன். அதாவது தி.மு.க.வை சட்டமன்றத்தில் பாராட்டினேன். தயாநிதிமாறனின் விழாவில் கலந்துகொண்டேன். உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்தேன். இந்த மாதிரி அரசியல் நாகரீகத்தை கடைப் பிடித்ததால் மட்டும்தான் நான் நீக்கப்பட்டேன். என்னுடைய அரசியல் நாகரீகம் தி.மு.க.விற்கு பிடித்தது. என்னை நண்பராக முதல்வர் கலைஞரும் துணைமுதல்வர் ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டார்கள். அந்த நட்பிற்காகத்தான் சட்டமன்றத்தில் தி.மு.க.வை ஆதரித்தேன். மேலவையை ஆதரித்து ஓட்டும் போட்டேன். இன் றைக்கும் நான் நட்பாகத்தான் இருக்கிறேன். ஆக, இதில் என்னை அரவணைப்பதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

அதேபோல ராஜ்யசபா சீட் கேட்டேன் என்பது தவறானது. நான் எம்.பி. சீட் கேட்டால் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவேண்டும். ஆனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதை தி.மு.க.வே விரும்பவில்லை. அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டபோது அந்த விழாவிற்கு நானும் போயிருந்தேன். பதவி ஏற்பு முடிந்ததும் எல்லோரும் பேசிக்கொண்டே வெளியே வந்தபோது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துடலாம்னு இருக்கேன்’என்று நான் சொல்ல... அப்போ ஒரு மூத்த அமைச்சர்,’ "சேகர் அப்படி எதுவும் செய்துடாதீங்க. மீண்டும் ஒரு இடைத் தேர்தலை எங்களால சமாளிக்க முடியாது. யாரு பணம் செலவு பண்றது?'ன்னு சொன்னார். அப்படிப்பட்ட நிலையிருக்க நான் எப்படி எம்.பி.சீட் கேட்பேன்? 

* காங்கிரஸில் இணைய விரும்புகிற நீங்கள் பா.ஜ.க. முதல்வர் நரேந்திரமோடியை சிலாகித்துப் புகழ்ந்து எழுதி யிருக்கிறீர்களே?

நரேந்திரமோடிக்கு நான் நல்ல நண்பன். அந்த வகையில் அவரை பற்றி, அவரது ஆட்சியை பற்றி உண்மையை எழுதியிருக் கிறேன் அவ்வளவுதான். இதில் என்ன தப்பு? நரேந்திர மோடியை நான் சந்தித்தது, அவர் எனக்கு புத்தகம் பரிசு தந்தது எல்லாத்தையும் ராகுல்காந்தியிடம் பகிர்ந்துகொண்டி ருக்கிறேன். அரசியலில் இதுபோன்று இயல்பான நட்புகள் அவசியம் என்றார் அப்போது ராகுல்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

போட்டியிடத் தயங்கும் விஜயகாந்த்..

1.jpg
சினிமா பிஸியாலும் தொகுதியில் இருக்கும் அதிருப்தி அலையாலும் தனக்கு பதில்... தன் திருமதியை தே.மு.தி.க. சிட்டிங் விஜயகாந்த் நிறுத்தலாம் என அந்தத் தரப்பிலேயே டாக் அடிபட்டுக்கொண்டிருக்க... ’கேப்டன் குடும்பம் நிக்காட்டி எனக்குத்தான் சீட்’ என ஒ.செ.முத்துக்குமார் வரிந்துகட்டுகிறார்.. சூரியத் தரப்பிலோ மாஜி எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசன், கம்மாபுரம் ஒ.செ.ஞானமுத்து, தொ.மு.ச. தங்க ஆனந்த் போன்றோர் சீட் கனவோடு சிற கடிக்கிறார்கள். இவர்களில் அமைச்சருக்கு எதிர்முனையில் நின்றுகொண்டிருந்த குழந்தை தமிழரசன்... அமைச்சரின் பிறந்தநாளுக்கு சால்வை போர்த்தி சமாதானக் கொடியைப் பறக்கவிட்டிருக்கிறார். இலைத் தரப்பில் எக்ஸ் எம்.எல்.ஏ. காசிநாதன், ஜெ.பேரவை அரங்கநாதன், ரவிச்சந்திரன், எக்ஸ் சேர்மன் பொன்.ஜெயகணபதி ஆகியோர் முண்டியடிக்க...

கதர்த் தரப்பில் எக்ஸ் எம்.எல்.ஏ. தியாகராஜன் மகன் இளையராஜா எம்.பி.யான அழகிரி மூலம் சீட்டுக்கு முட்டி மோதிக்கொண்டிருக்கிறார். பாட்டாளி களின் தலைமை... டாக்டர் கோவிந்த சாமியையே இந்தமுறையும் களமிறக்கப் போவதாக சொல்லிக்கொண்டிருக்க... கோவிந்தசாமியோ ‘கடந்தமுறை ரத்தத்தை யெல்லாம் வியர்வையா சிந்தியும்.... வெற்றி மகசூல் இல்லையே’என தயங்கினாலும் அவரே வேட்பாளர் என்கிறது பாட்டாளி கள் தரப்பு. இந்திய ஜனநாயக கட்சி பச்சமுத்துவோ... ’வரும் தேர்தலில் இங்கே.. எங்கள் இளைஞரணி புதூர் கிருஷ்ண மூர்த்திதான் வேட்பாளர்’ என அதிரடியாக அறிவித்து.... அவரை முதல் வேட்பாள ராக்கிவிட்டார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_09_2010_007_017-chidam.jpg?w=300&h=282

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கயல்விழிக்கு சீட்! -பரபரக்கும் உ.பி.க்கள்!

1.jpg


தமிழகத்தின் எல்லை மாவட்டமான கன்னியாகுமரியில் மும்பெரும் விழாவிற்குப் பிறகு சீட் யுத்தம்களை கட்டியுள்ளது. விறுவிறுப்பாய் அங்கு களமாடும் கட்சிப் பிரபலங்களைத் தொகுதிவாரியாய்ப் பார்ப்போம்.

கன்னியாகுமரி :

சிட்டிங் தி.மு.க. அமைச்சர் சுரேஷ்ராஜன், 4-வது முறையாய் அன்னப் போஸ்ட்டாய் சீட் ரேஸில் குதித்துள்ள நிலையில்... இலைத்தரப்பில் மாஜி தளவாய் சுந்தரம் சீட் கோதாவில் இருக்க, டாக்டர் தானப்பன், 96-ல் வெற்றிவாய்ப்பை இழந்த தாணுப்பிள்ளை, தளவாயால் பதவியிறக்கம் செய்யப்பட்ட வடிவை மகாதேவன் ஆகியோரும்வாள் சுழற்றிட பொறி பறக்கிறது. இவர்களுக்கிடையே "மாவட்டத்தில் ரிசர்வ் தொகுதியே இல்லை. எனவே இத்தொகுதி யில் இருக்கும் தலித் வாக்குகளை அறுவடை செய்ய எனக்கு சீட் கொடுங்கள்' என்று கார்டனிடம் விண்ணப் பிக்கும் மூவில் நெல்லை அண்ணா பொறியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் காளியப்பனும் குதித்துள்ளார்.
1.jpg
தங்களுக்கு சாதகமான தொகுதி என பா.ஜ.க. கருதுவதால் இந்தத் தரப்பிலும் சீட்டுப் பிடியுத்தம் சீரியசாய் நடக்கிறது. எனினும் பெண் வேட் பாளராய் இருந்தால் வாக்காளர்களை வசீகரிக்க முடியும் என்ற நினைப்பில் எக்ஸ் நகர்மன்ற தலைவி மீனாதேவ்வை நிறுத்த தாமரை தரப்பு முடி வெடுத்திருப்பதாக காவி வட் டாரங்கள் கதைக்கிறது.

நாகர்கோவில் :

தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜனுக்கும் மாவட்ட மந்திரி சுரேஷ்ராஜனுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால் இந்த முறை மந்திரி தரப்பு... ராஜனுக்கு செக் வைக்கும் என்கிறது உ.பி.க்களில் ஒரு தரப்பு. இதனால் அழகிரி கருணைக்குக் காத்திருக்கிறார் ராஜன். அதுபோல் மந்திரி துணையோடு நகர செயலாளர் மகேஷ், சி.எஸ்.ஐ. டயோசிஸின் ஆதரவு இருப்பதாகச் சொல்லும் மாஜி நகரசபை தலைவர் தர்மராஜ் ஆகியோரும் சீட்டைக் கேட்ச் பண்ணத் துடிக்க... தொகுதியின் மருமகளான "அ' வாரிசு கயல்விழியை நிறுத்த வேண்டுமென்று உ.பி.க்களில் ஒரு தரப்பு கொடிபிடிக்கிறது.

இலைத் தரப்பில் மாவட்ட செயலாளர் பச்சைமால், குளச்சல் தொகுதியைக் கை கழுவிவிட்டு இங்கு இலையை பறிக்க ஆசைப்பட...

தளவாய் சுந்தரமோ தனது ஃபைனான்சியரும் ரியல் எஸ்டேட் அதிபருமான ஜெ. பேரவை முருகேசனுக்கே காட்டி வருகிறார் பச்சைக் கொடி. இவர்களோடு இளைஞ ரணி அசோகனும், மாணவரணி மனோகரனும், பொருளாளர் ஞானசேகரும் அடிக்கடி படையெடுக்கிறார்கள் கார்டன் நோக்கி.1.jpg

முரசு தரப்பில் மாநில துணைச் செயலாளர் ஆஸ் டினோ இலைக் கூட்டணி அமைந்தால் மட்டுமே சீட்டை வாங்கலாம் என கூட்டணி மூவ்களை கவனிக்க... தாமரை தரப்பில் ஒரே அன்னபோஸ்ட் வேட்பாளர் பொன்.ராதா கிருஷ்ணன்தான். ம.தி. மு.க.வில் தில்லை செல்வ மும், மா.செ. ரத்தினராஜின் மகன் கண்ணனும் சீட்டை பெற சுழலுகிறார்கள் பம்பர மாய்.

"காமராஜரை ஜெயிக்க வைத்த இந்தத் தொகுதி எங்களுக்கே சொந்தம்' என்று கதர்த் தரப்பு பரபரக்க... நகர்மன்றத் தலைவர் அசோக் சாலமனும் கஸ்டம்ஸ் லேடி கிளாடிஸ் லில்லியும், டாக்டர் மோசசும் சீட் கனவோடு காத்திருக்கிறார்கள் வாசன் பார்வைக்காய்.

பத்மனாபபுரம் :

திடீர் அதிர்ஷ்ட ஜாக்பாட் டால் எம்.எல்.ஏ. ஆன ரெஜி னால்டு மீண்டும் பரபரக்க... அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு தாவிய மாஜி லாரன்ஸ் தனது வாரிசின் கல்லூரி ரூம்மெட்டான தளபதியின் வாரிசு மூலம் "சீட்' ரேஸில் இருக்க... மந்திரி சுரேஷ்ராஜனை நம்பி அ.தி.மு.க.வில் இருந்து வந்த கரன்சிப் பார்ட்டி கேட்சனும் நம்பிக்கையோடு போராடு கிறார். இவர்களுக்கிடையே எக்ஸ் எம்.எல்.ஏ. ராஜரத்தினம், டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் ஆகியோரும் முட்டி மோதுகிறார்கள்.

இலைத்தரப்பில் தளவாய் சுந்தரம் போட்ட முட்டுக்கட்டையால் காணாமல் போயிருந்த மாஜி ராஜேந்திரபிரசாத் திடீரென்று தொகுதிக்கு தரிசனம் தந்து சீட்டை கேட்ச் பண்ணும் முயற்சியில் குதிக்க... ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மத்தியாசும், சிவ.குற்றாலம் போன் றோரும் சிக்கியிருக்கிறார்கள். சீட் காத லில். பா.ஜ.க. தரப்பில் ரமேஷ் சீட் கேட்க... தே.மு.தி.க.வில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதனும் முண்டுகிறார் முரசடிக்க.

1.jpg
சி.பி.எம்.மில் எக்ஸ் எம்.எல்.ஏ. நூர்முகம்மது, திருவட்டார் எம்.எல்.ஏ. லீமாரோஸ் போன்றோர் விறுவிறு சிறகடிக்கிறார்கள் சீட்டை நோக்கி.

குளச்சல் :

சிட்டிங் காங். எம்.எல்.ஏ. ஜெயபால் சமீபத்தில் மறைந்துவிட்டதால் அனுதாப அலை கை கொடுக்கலாம் என ஜெயபாலின் மகனான சிவபிரபு வாசனின் கையை நம்பிக்கையோடு பற்றிக்கொண்டிருக் கிறார்.

தொகுதி அ.தி.மு.க. கூட்டணியான ம.தி.மு.க.வுக்குத் தான் போகிறது. சம்பத் சந்திராதான் வேட்பாளர் என்று பலமாக டாக் அடிபடுவதாலும் இந்த தொகுதியில் உள்ள பல்க் இந்து நாடார் ஓட்டுக்களைக் கொண்ட ராஜாக்க மங்கலம் யூனியன் தொகுதி சீரமைப்பில் கன்னியாகுமரி, நாகர்கோயில் தொகுதிக்குப் போனதாலும் இலைத்தரப்பினர் சீட்டுக்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

கதர்ச்சட்டைத் தரப்பிலோ தங்கபாலு ஆதரவு சி.எஸ்.ஐ. டயோசிஸன் வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ், பொறியியல் கல்லூரிகளின் அதிபர் தயாபரன் ஆகியோர் மிதக்கிறார்கள் எம்.எல்.ஏ. கனவில். ஆளும் சூரியத் தரப்பில் மாஜி எம்.எல்.ஏ. பெர்னார்டு, ஜோசப்ராஜ் போன்றோர் தொகுதி மீது கண் வைத்து தொடங்கிவிட்டார்கள் சீட் யுத்தத்தை.

கிள்ளியூர் :

சிட்டிங் காங்கிரஸ் ஜான் ஜேக்கப் சீட்டை தக்க வைக்க வாசனை துரத்த... ப.சி. மீது நம்பிக்கை வைத்து மாஜி எம்.எல்.ஏ. குமாரதாஸும், மாஜி எம்.எல்.ஏ. பொன்.விஜய ராகவனும், இளைஞர் காங்கிரஸ் ராஜேஸ்குமாரும் குதித்திருக்கிறார்கள் சீட் ரேஸில். சூரியத் தரப்பில் மா.செ. தேர்தலில் தன்னை எதிர்த்த ஒன்றிய செயலாளர் மனோ தங்கராஜுக்கு ஆப்பு வைக்க அமைச்சர் தரப்பு காத்திருக்க... இதை முறியடித்து சீட்டைக் கேட்ச்பண்ணும் வியூகத்தில் இருக்கிறார் மனோதங்கராஜ். அரசு வழக்கறிஞர் சிங்கரராயனும் தொகுதி மீது வைத்திருக்கிறார் குறி. இலைத்தரப்பில் ஒன்றிய செயலாளர் ஜார்ஜும் ஸ்டீபனும் சீட் பைட்டைத் தொடங்க.... கிளம்பிவிட்டது புழுதிப் புயல்.

விளவங்கோடு :

சிட்டிங் சி.பி.எம். ஜான்ஜோசப் இந்த முறையும் சீட் ரேஸில் குதித்திருக்க... இலைத்தரப்பிலோ "மார்க்சிஸ்ட்டி டம் இருந்து தொகுதியைப் பறிப்பது எளிதான காரியமல்ல' என்றாலும்... தொகுதி பக்கம் பார்வையைப் பதித்து உதயகுமாரும் பிராங்ளினும் பரபரப்பாய் சுழற்றுகின்றனர் வாளை. சூரியத் தரப்பிலோ ஒ.செ.ரவிச்சந்திரனும், குழித் துறை நகரசபைத் தலைவர் ஆசைதம்பியும், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் சகாயமும் சீறிப் பாய்கிறார்கள் சீட் மஞ்சு விரட்டில்.

கதர்த்தரப்பும் தொகுதி மீது காதல் வைக்க... ரமேஷ் குமாரும், மேற்கு மா.த. பிரின்சும் அடிக்கடி படையெடுக்கிறார்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_10_2010_002_003-rakul.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

1.jpgதவமாய் தவமிருந்து பெற்ற தன் குழந்தை ஊமையாக இருப்பதைக் கண்டு ’என் குழந்தை பேசாதா?’ என்று தெய்வங் களிடம் முறையிட்டாள் ஒரு தாய். அவள் முறையீட்டிற்கு பலன் கிடைத்தது. வாய் திறந்து பேசிய அந்த குழந்தை,’"எப்பம்மா நீ தாலி அறுப்பே?'’’என்றதாம். இதற்காகவா தெய்வங்களிடம் வேண் டினோம் என நொந்து போனாளாம் அந்த தாய். அது போல இருக் கிறது காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் நிலை. கட்சிக் கூட்டமே நடத்தாமல் இருந்த தங்கபாலு, சோனியாவின் திருச்சி வருகையை சிறப்பிப்பதற்காக தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்துகிறார். ஆனால் எந்த ஒரு கூட்டமும் அவர் கட்டுப்பாட்டில் இல்லாமல்.. எல்லா கூட்டங்களிலும் கலவரத்தை ஏற்படுத்துகின்றனர் கதர்சட்டையினர். குழந்தை பேசாதா என்று ஏங்கி தவித்த அந்த தாயின் நிலையில் தற்போது இருக்கிறார் தங்கபாலு.

ஈரோட்டில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் தங்கபாலு பேசி முடித்ததும், ப.சிதம்பரம் கோஷ்டியை சேர்ந்த மக்கள்ராஜா தலைமையில் எழுந்த இளைஞர் காங்கிரஸார் ஹாலை விட்டு வெளியேறினர். அப்போது தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று ஆவேசமாக முழக்கம் எழுந்தது. இதனை கண்டிக்க முடியாமல் கிளம்பினார் தங்கபாலு.

தி.மு.க. கூட்டணி வேண்டாமா? என்று நாம் மக்கள் ராஜா விடம் கேட்ட போது,’’""அய்யா சாமி... அந்த கோஷத்தை நாங்க போடவே இல்லைங்க. ஆனா பாவம் ஓரிடம்... பழி ஓரிடம்ங்கிற மாதிரி.. எங்க மேல பழி விழுது''’’என்கிறார். இளங்கோவன் ஆட்கள்தான் அந்த கோஷத்தை போட்டனர் என்கிறது தங்கபாலு தரப்பு. இதே போலத்தான் கடந்த 2 வாரங்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தங்கபாலு நடத்திய கூட்டங் களில் ஏகத்துக்கும் ரகளை நடந்து முடிந்திருக்கிறது. தமிழக காங்கிரஸ் கூட்டங்களில் இப்படி நடக்கும் ரகளைக்கு பிள்ளை யார் சுழி போட்டது தென் சென்னை இளைஞர் காங்கிரஸ் கூட்டம்தான் என்கிறார்கள் கதர் சட்டையினர்.

1.jpgசைதை தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் கார்டு வழங்கும் நிகழ்ச்சியை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர் வாசன் ஆதரவாளர்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் புகுந்து சேர், நாற்காலிகளை அடித்து உடைத்து வாசன் ஆட்களை விரட்டியடித்தார் ப.சிதம்பரம் கோஷ்டி யாளரும் சைதை தொகுதி தலைவருமான முத்தமிழன். இதனை யடுத்து முத்தமிழ் உள்ளிட்ட ப.சிதம்பரம் கோஷ்டி மீது சைதை போலீஸில் புகார் கொடுத்தனர் வாசன் ஆதரவாளர்களான சைதை ரவியும் இல.பாஸ்கரனும். முத்தமிழை கைது செய்த போலீஸ் நள்ளிரவில் அவரை ரிலீஸும் செய்து விட.. இதனை அறிந்த வாசன் தரப்பு செம டென்ஷன் ஆனது, உடனே ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் மற்றும் கராத்தே தியாகராஜன் ஆகியோர் போலீஸில் தலையிட்டு முத்தமிழை விடுவித்திருக்கிறார்கள் என போலீஸ் கமிஷனரிடம் புகார் தந்தனர். இதனால் கொதிப்படைந்த ப.சி. ஆதரவாளர்கள் சத்யமூர்த்திபவனிலும் சென்னை மாநகராட்சி யிலும் ரகளையில் ஈடுபட... வாசன் அணியோ சைதை காவல் நிலையத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த... காங்கிரஸில் ஒரே களேபரம். இதில் துவங்கிய ரகளைதான்.... இன்னமும் நின்றபாடில்லை.

பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்ட முத்தமிழனிடம் கேட்டபோது,’’""இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சிக்கு, பேரண்ட் பாடியை (கட்சி நிர்வாகிகள்) சேர்ந்தவர்களை அழைக்க கூடாதுங்கிறது ராகுல்காந்தியின் ஸ்ட்ரிக்டான உத்தரவு. அதனை மீறுகிற வகையில் பேரண்ட் பாடியை சேர்ந்த சைதை ரவியை அழைத்து நிகழ்ச்சியை நடத்த போஸ்டர் அடித்தனர். அதுவு மில்லாம போஸ்டரில் ராகுல் காந்தி படத்தை சிறியதாகவும் வாசன் படத்தை பெரியதாகவும் போட்டனர் வாசன் ஆட்கள். ராகுலை விட வாசன் பெரியவரா? இதை கேட்கத்தான் நான் போனேன். ஆனா வாசன் ஆட்கள்,’"ஆமாண்டா அப்படித்தான் போடுவோம்'’என்று திமிறாக பேசி நெஞ்சில் கை வைத்து தள்ளினர்''’’என்கிறார் முத்தமிழ்.

இதுகுறித்து இல.பாஸ்கரனிடம் பேசிய போது,’’""30-க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் வந்து ரகளை செய்திருக்கிறார் முத்தமிழ். அதனால்தான் அவர் மீது நாண்-பெயிலபிள் செக்ஷனில் எஃப்.ஐ.ஆர். போட்டது போலீஸ். கார்த்தி சிதம்பரமும் கராத்தே தியாகராஜனும் தலையிட்டதனால்தான் முத்தமிழ் விடுவிக்கப் பட்டார்னு எங்களுக்கு தகவல். அதனால்தான் அவர்கள் மீது கம்ப்ளைண்ட் கொடுத்தோம்''’’என்கிறார். சைதை ரவியிடம் பேசியபோது,’’""ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத் திற்கு சென்றுதான் கட்சி நிர்வாகிகள் இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது. ஆனால் சொந்த மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். அதன் பேரில்தான் சைதையில் நடந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தனர். இது எப்படி தவறாகும்? அதே சமயம் நான் கலந்துகொள்ள வும் இல்லை. திட்டமிட்டே வன்முறை யை நடத்தியிருக்கிறார்கள் சிதம் பரம் கோஷ்டியினர்'' என்கிறார்.

மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவரும் வாசன் அணியை சேர்ந்தவருமான யுவராஜிடம் இப்பிரச்சனை குறித்து கேட்ட போது,’’""பேரண்ட்பாடி நிர்வாகி கள் கலந்து கொள்வதைத் தான் அவர்கள் (சிதம்பரம் அணி) எதிர்க் கிறார்கள் என்பதுதான் உண்மை யென்றால்... பேரண்ட்பாடி நிர் வாகிகள் யாருமே கலந்து கொள் ளாத நிலையிலும் வன்முறையில் அவர்கள் ஈடுபட்டது ஏன்? இப் படிப்பட்ட ரவுடியிஸத்தை பார்த் துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. அதனால்தான் முத்தமிழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்''’’என்கிறார்.

முத்தமிழ் நடத்திய ரகளை யின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டப்படுபவரான கராத்தே தியாகராஜனிடம் விசாரித்த போது,’’""இளைஞர் காங்கிரசில் நடந்த பிரச்சனை அவர்களுக்குள் நடந்த ஒன்று. அதில் எனக்கோ கார்த்தி சிதம்பரத்திற்கோ கொஞ்சமும் சம்பந்தமில்லை. தூண்டிவிடவும் இல்லை. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது''’’என்கிறார் அதிரடியாக.

தென்சென்னை இளைஞர் காங்கிரஸார் துவக்கி வைத்த இந்த மோதலில் வாசன் தரப்பும் சிதம்பரம் தரப்பும் இனி அமைதி யாக இருக்க வேணாம். பதிலுக்கு பதில் கொடுத்தாக வேண்டும். வாசனா? சிதம்பரமா? யார் பெரிய ஆள்? பார்த்திடுவோம்’என்று கச்சைக்கட்டுகிறது. இந்த வன்மம்... சோனியாவின் திருச்சி வருகை யின்போதும் எதிரொலிக்குமோ என யோசித்த டெல்லி மேலி டம் இரு தரப்பையும் எச்சரித்தது. ஆனாலும் தங்கபாலு போகு மிடமெல்லாம் டென்ஷன் நீடிக்கிறது.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

10_10_2010_012_007-mathupaanam.jpg?w=300&h=47

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

10_10_2010_009_003-mettur.jpg?w=300&h=174

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 

‘‘ அன்புமணியின் மாமன் மகன் மாநிலச் செயலாளரா?’’‘
புதுவை பா.ம.க.வில் புயல்

Pondy%202.jpg



சாதிக் கட்சி, மகனுக்கான கட்சி என்றெல்லாம் பா.ம.க. மீது விமர்சனக் கணைகள் பாய்ந்துவரும் நிலையில்... இந்த விமர்சனங்களுக்கு மீண்டும் ஒரு முகாந்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது டாக்டர் ராமதாஸின் புதிய நியமனம் ஒன்று. புதுச்சேரி பா.ம.க.வின் மாநிலச் செயலாளராக தனது மகன் அன்புமணியின் மாமன் மகனான அனந்தராமன் எம்.எல்.ஏ.வை நியமித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். இது, புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், பா.ம.க.வுக்குள்ளும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

‘வரும் தேர்தலில் புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிப்போம்’ என 2001 தேர்தல் வரை தீவிரமாக முழங்கிவந்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், புதுவையில் கிடைத்த தேர்தல் தோல்வி காரணமாக அந்த முழக்கத்தை மூட்டை கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில், வரும் தேர்தலில் புதுச்சேரியில் 15 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறவேண்டும் என்ற அஜெண்டாவோடுதான், அனந்தராமனை மாநிலச் செயலாளராக நியமித்துள்ளாராம்.

Pondy%201.jpgஇதற்கு பா.ம.க.வினரின் ரியாக்ஷன் கடந்த வாரம் புதுச்சேரியில் நடந்த பா.ம.க.வின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படையாகத் தெரியவந்தது. பொதுக்குழு என்றால் கட்சி நிர்வாகிகள் தவிர மற்றவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், இந்த பொதுக் குழுவோ பெரியார் திடலில் பொதுக் கூட்ட ரேஞ்சுக்கு நடந்தது.

இதில் கலந்துகொண்டு அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “பா.ம.க. சாதிக் கட்சியல்ல, சாதிக்கப் பிறந்த கட்சி. பென்னாகரத்தில் விஞ் ஞான முறையில் செயல்பட்டு அதிக வாக்குகள் வாங்கினோம். அது பென்னாகரம் பார்முலா. அதேபோல புதுச்சேரிக்கு ‘புதுவை பார்முலா’ அமல்படுத்த உள்ளோம். அதாவது தலித், வன்னியர், மீனவர் சமுதாயங்களை ஒன்று திரட்டி தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவது. இந்த மூன்று இனத்து மக்களும் சுழற்சி முறையில் முதல்வராவது. இதுதான் புதுவை பார்முலா.

இது புதுவையின் அனைத்துப் பகுதிக்கும், அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று அடைய இளைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் கிளை அமைத்து தீவிரமாக செயல்படவேண்டும். இப்போது உள்ள இளைஞர்கள் சினிமா மோகத்தில் உள்ளனர். திரைப்படத்தின் கதாநாயகன் டூப் போட்டுதான் சண்டை போடுகிறான். ஆனால், டூப் இல்லாமல் என்னிடம் சண்டை போடச் சொல்லுங்கள்... உழைப்பு தான் நிஜம். அந்த வகையில் பா.ம.க.தான் சமூக நீதிக்காக போராடியது. பா.ம.க. தான் நிஜம். மருத்துவர் அய்யா தான் கதா நாயகன்” என்று உற்சாகத்தோடு பேச்சை முடித்தார்.

அன்புமணி பேசிக் கொண்டிருக்கும்போதே... ‘‘நிர்வாகிகளை அரவணைக்கத் தெரியாத நபர்களுக்கு மாநிலச் செயலாளர் பதவியை கொடுத்தால் கட்சி எப்படி வளரும்?’’ என்று வெளிப்படையாக வெடித்தார்கள் பலர்.

அவர்களில் சிலரிடம் அங்கேயே பேசினோம்.

“தற்போது புதிதாக மாநிலச் செயலாளர் பதவியேற்றிருக்கும் அனந்தராமன் கட்சியில் உள்ள நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லத் தெரியாதவர். மேலும் இவர் இதே புதுவையில் உள்ள சக பா.ம.க., எம்.எல்.ஏ.க்களான பன்னீர்செல்வம், அருள்முருகன் ஆகியோரை ஓரங்கட்டிவிட்டு தனி அரசியல் லாபி செய்கிறார். பொதுக்குழுவுக்கு ஆங்காங்கே வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் சக எம்.எல்.ஏ.க்களான பன்னீர்-செல்வம், அருள்முருகன் படத்தை வைக்க வேண்டாம் என்று ரகசிய உத்தரவிட்டுள்ளார் அனந்தராமன். சக கட்சியினரை இவரே மதிக்கவில்லை என்றால் எங்கிருந்து மாற்று கட்சியினர் மதிக்கப் போகிறார்கள்?

மேலும், இவர் பா.ம.க.வினரைத் தவிர்த்து மாற்றுக் கட்சியினருடன் தொடர்பு வைத்துக்கொண்டு, தொழிலும் செய்து வருகிறார். இவர் எப்படி கட்சியை பலப்படுத்தப் போகிறார்? ஒரு மாதத்துக்கு முன்பு, வன்னியர் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக பல பேரிடம் நன்கொடை வசூல் செய்துள்ளார். ஆனால், எதற்கும் சரியான கணக்கு இல்லை. இப்படி இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு பொதுக்குழுவைக் கூட்டினால் நிர்வாகிகள் எங்கே நம்மை கேள்வி கேட்டு விடுவார்களோ என்று பயந்துதான் பொதுக்கூட்ட ரேஞ்சுக்கு நடத்தியிருக்கிறார்’’ என்று அனந்தராமன் மீது புகார்களை அடுக்கினர்.

Pondy.jpgஇதற்கெல்லாம் அனந்தராமனிடமே விளக்கம் கேட்டோம்.

“பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நான் ஆளாக முடியாது. அனைவரையும் அரவணைத்துதான் செல்கிறேன். மேலும் பொதுக்குழுவுக்கும், சிறப்பு பொதுக்குழுவுக்கும் வித்தியாசம் உள்ளது. உறுப்பினர்களை மட்டும் கூட்டி நடத்துவது பொதுக்குழு, கட்சியினர் அனைவரையும் ஒரு திடலில் அழைத்து கட்சியின் எதிர்கால திட்டங்கள் மக்களைச் சென்றடையும் வகையில் நடத்துவது சிறப்பு பொதுக்குழு கூட்டம்’’ என அசராமல் விளக்கம் கொடுத்தார்.




 

மு.குகன்






__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


அயோத்தி தீர்ப்பு:
சேது சமுத்திர திட்டத்துக்கு சிக்கல்!

Suresh%207.jpg



அயோத்தியில் உள்ள நிலம் ‘யாருக்கு சொந்தம்’ என்ற 65 ஆண்டு பழமையான கேள்விக்கு ‘இன்னாருக்குத்தான் சொந்தம்’ என்று வந்திருப்பதற்கு பதிலாக ‘எல்லாருக்கும் சொந்தம்’ என்று தீர்ப்பு வந்துள்ளது. ஆளாளுக்கு மூன்று பேர் தங்களுக்கு நிலம் வேண்டுமென்று கோர்ட்டில் கேட்டனர். மூன்று பேருக்குமே ‘இதற்குதானே ஆசைப்பட்டாய்? இந்தா பிடி நிலத்தை’ என்று ரொம்பவும் தாராளமாக பகிர்ந்து கொடுத்துவிட்டது அலகாபாத் ஐகோர்ட்

.Suresh%205.jpgSuresh%201.jpgஅரசியல் அரங்கில் ஒவ்வொரு கட்சிகளும் இந்தத் தீர்ப்புக்கு பிறகு புதிதாக நெளிவு சுளிவுகளுடன் ஆட துவங்கிருப்பதுதான் ‘அய்யோ பாவம்’ என உச்சு கொட்ட வைக்கிறது. முக்கால்வாசி கிணறு தாண்டிவிட்டாலும், அரசியல் எதிர்காலம் கருதி சர்வ ஜாக்கிரதையாக அடக்கிவாசிக்கிறது பி.ஜே.பி.

தீர்ப்புக்கு பிறகு முஸ்லிம் சமூகம் மிகுந்த மௌனமாக இருப்பதால் முக்கிய கட்சிகள் குழப்பமடைந்துள்ளன. முஸ்லிம்கள் கோபம் அடைவார்கள், அந்த கோபத்தில் லாபம் பார்க்கலாம் என நினைத்தனர். ஆனால், கோர்ட்டில் மேல்முறையீடு என்பதை தவிர வீதியில் இறங்கவோ வன்முறையில் ஈடுபடவோ அந்த சமூகம் தயார் இல்லை. அதற்காக இந்த நாடே அவர்களுக்கு சல்யூட் அடித்துக் கொண்டிருந்தாலும், இந்த சமூகத்து ஓட்டு வங்கியை கவனத்தில் கொண்டு அரசியல் நடத்தும் முலாயம்சிங், லாலு பிரசாத் போன்றவர்களுக்கு பெரும் குழப்பம்.

அதைவிட ஆளும்கட்சியான காங்கிரசுக்குதான் மகா குழப்பம். 1949 டிசம்பர் 22-ம் தேதி மசூதிக்குள் சிலைகள் திடீரென வைக்கப்பட்டபோது மாநிலத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி. ஷாபானு வழக்கில் சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பை வலுவிழக்கச் செய்ததை சமன்படுத்த, பூட்டியிருந்த மசூதி கதவுகள் 1986 பிப்ரவரி 1-ல் திறந்துவிடப்பட்டபோதும் மாநிலத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி. பொதுத்-தேர்தலுக்காக மசூதி வளாகத்திற்குள் பூஜைகள் நடைபெற்றபோதும் காங்கிரஸ் ஆட்சிதான். அந்த 1989-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்காக அயோத்தியின் பைசாபாத் நகரில் ‘ராம ராஜ்யம் அமைப்பேன்’ என்ற முழக்கத்தோடு தேர்தல் பிரசாரத்தை துவக்கியதும் ராஜீவ்காந்திதான்.

Suresh%202.jpgமசூதி இடிக்கப்பட்ட 1992-லும் மத்தியில் ஆண்டது காங்கிரஸ் ஆட்சி. ‘பாகப்பிரிவினை தீர்ப்பு’ வரும் நிகழ்காலமான இப்போதும் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருக்கிறது. ஆனாலும் எதையுமே தடுக்க முடியவில்லையே என முஸ்லிம்கள் நினைத்து தங்களை கைகழுவ ஆரம்பித்தால்? அதனால் ‘இப்போது வந்துள்ள தீர்ப்பால், மசூதியை இடித்த குற்றம் நியாயமாகிவிடாது. அது மன்னிக்க முடியாத குற்றம். அதை செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்’ என்று காரியக் கமிட்டியில் தீர்மானத்தை போட்டுவிட்டு கவலையில் உட்கார்ந்-துள்ளது காங்கிரஸ்.

Suresh%204.jpg2007-ம் ஆண்டு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ரொம்பவும் மும்முரமாக இருந்த சமயம். சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், ‘வரலாற்றுப் பூர்வமாகவோ அல்லது விஞ்ஞானப் பூர்வமாகவோ ராமர் மற்றும் ராமர் பாலம் ஆகியவற்றுக்கு ஆதாரங்கள் இல்லை. ராமர் பாலம் என கூறப்படும் அது மனிதனால் கட்டப்பட்ட பாலம் அல்ல; இயற்கையாகவே ஏற்பட்ட மணற்படிமானம் அது என தொல்பொருள் ஆய்வு துறையான ஏ.எஸ்.ஐ. கூறுகிறது’ என்றிருந்தது. இது பெரும் அரசியல் புயலை கிளப்பவே, ஏ.எஸ்.ஐ.யின் இரு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். கலாசாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, தனது பதவியை ராஜினாமா செய்யப்போகும் அளவுக்கு நிலைமை இருந்தது. கடைசியில் மன்னிப்புக் கோரிய மத்திய அரசு, சுப்ரீம்கோர்ட்டில் வேறொரு புதிய மனுவை தாக்கல் செய்யுமளவுக்கு நிலைமை மாறியது.

சட்ட அமைச்சரான பரத்வாஜ், ‘ராமர் ஒரு வரலாற்று நாயகர், அதில் துளிகூட சந்தேகம் இல்லை’ என்று அடித்தார் ஒரு பல்டி. ஆக அப்போதே ராமரின் இருப்பை காங்கிரஸ் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுவிட்டது. இப்போது மீண்டும் ராமபிரானின் இருப்பும் அவரது பிறந்த இடமும்கூட அலகாபாத் கோர்ட் மூலம் உறுதிப்படுத்தப்-பட்டுள்ளது. ராமபிரானின் பிறப்பை அலகாபாத் ஐகோர்ட் அங்கீகரித்துள்ளது. இது சாத்தியமெனில், இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள சேது சமுத்திர திட்ட வழக்கில், ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற இந்து அமைப்புகளின் வாதம் பலம்பெரும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த முடியாது என்று அப்போது அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சேது சமுத்திர திட்டத்தை இப்போதுள்ள நிலையில் நிறைவேற்றுவது குதிரை கொம்புதான்.

இந்த சிக்கலான நேரத்தில் தான் கப்பல் போக்குவரத்து அமைச்சராக இல்லாததற்காக டி.ஆர்.பாலு மகிழ்ச்சி கொள்ளலாம்!














__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘அரசு கான்ட்ராக்டரை அடித்தேன்!’’
தி.மு.க. எம்.எல்.ஏ.வின் அண்ணன் ஒப்புதல்

Kishore.jpg



தி.மு.க. எம்.எல்.ஏ.வின் அண்ணனால் தாக்கப்பட்ட அ.தி.மு.க. கான்ட்ராக்டர் உள்துறை செயலாளர் வரை புகார் கொடுத்திருப்பதால் பதற்றம் தொற்றிக் கிடக்கிறது முதுகுளத்தூர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளரான ராஜமாணிக்கம், அரசு கான்ட்ராக்டரும் கூட! கையில் மாவுக் கட்டுடன் வீட்டில் அமர்ந்திருந்த ராஜமாணிக்கத்தை சந்தித்தோம்.

‘‘கடந்த வாரம் நெடுஞ்சாலைத் துறையின் ராமநாதபுரம் கோட்டத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 வேலைகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளுக்கு விண்ணப்பம் கேட்டிருந்தது அரசு. நான் போய் படிவம் கேட்டபோது கொடுக்க மறுத்துவிட்டனர். ஏற்கனவே இதை எதிர்பார்த்த நான், ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்துவிட்டேன். இது தெரிந்ததும், அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தரப்பு, அடுத்த கட்டமாக 9.9.10. அன்று ஒப்பந்தப் புள்ளிகளை திறப்பதாக அறிவித்துவிட்டு திறக்கவில்லை. அவர்கள் இழுத்-தடிக்கக் காரணம், நான் தி.மு.க.வினரை விட மேற்கண்ட 4 வேலைகளுக்கும் 45 லட்ச ரூபாய் குறைவாகப் போட்டிருந்ததுதான். அதாவது, அரசுக்கு என் மூலமாக 45 லட்ச ரூபாய் லாபம் வருவது தி.மு.க.வினருக்கும், அதிகாரிகளுக்கும் பிடிக்கவில்லை.

Kishore%201.jpg எனது தொடர் முயற்சிகளால், கடந்த செப். 24-ம் தேதி ஒப்பந்தப் புள்ளிகளை மதுரை நெடுஞ்சாலைத் துறை தலைமை அலுவலகத்தில் திறப்பதாக அறிவிப்பு செய்தார்கள். அன்று நானும் போனேன். அப்போதும், கண்காணிப்புப் பொறியாளர் நமச்சிவாயமும் கோட்டப் பொறியாளர் மீனாட்சி சுந்தரமும், ‘ஆளுங்-கட்சியைப் பகைச்சுக்காதே... பேசாம ஒப்பந்தப் புள்ளிகளை வாபஸ் வாங்கிடு’ என்று என்னை மிரட்டினார்கள்.

Kishore%202.jpgஅப்போது திடீரென்று அந்த அலுவலகத்துக்குள் நுழைந்த முது-குளத்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ., முருக-வேலின் அண்ணன் மோகன்தாஸ், அவருடைய டிரைவர் மற்றும் சிலர் எடுத்த எடுப்பிலேயே, ‘கொசப் பயலான (குயவர்) உனக்கெல்லாம் கான்ட்ராக்ட் வேணுமாக்கும்?’ எனக் கேட்டு சரமாரியாக என் முகத்தில் குத்த ஆரம்பித்தார்கள். வாசலில் நின்ற போலீஸாரும் பார்த்துக்கொண்டே நின்றதால் உயிர்பிழைத்தால் போதுமென்று ஓடி வந்துவிட்டேன்.

நான் தப்பித்து வந்த பிறகு தி.மு.க.வினரின் ஒப்பந்தப் புள்ளிகளை பிரித்து, நான் குறிப்பிட்டிருந்த தொகையைவிட சற்றே குறைவாக திருத்திப் போட்டு தி.மு.க.வினருக்கே அந்த 4 வேலைகளையும் கொடுத்துவிட்டார்கள். இந்த அநியாயத்தை உடனடியாக நான் அம்மாவின் கவனத்துக்கும், உள்துறை செயலாளரின் கவனத்துக்கும் கொண்டு போய்விட்டேன். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் போட்டுள்ளேன். என்னைத் தாக்கிய மோகன்தாஸை கைது செய்யவேண்டும்’’ என ஆவேசமாக முடித்தார் ராஜமாணிக்கம்.

இந்த புகார்கள் பற்றி மோகன்தாஸிடமே கேட்டோம். ‘‘பிரச்னையே வேறு. கடந்த வருடம் ஒரு ரோடு போடும் வேலை சம்பந்தமான கான்ட்ராக்ட் எனக்கு கிடைத்தது. அதை 5 லட்சம் ரூபாய் கமிஷனுக்கு ராஜமாணிக்கத்துக்கு விற்றேன். அவரோ, கமிஷனை கொடுக்காமல் இழுத்தடித்தார். அன்று மதுரை நெடுஞ்சாலைத் துறை தலைமை அலுவலகத்தில் என்னிடம் வசமாக சிக்கினார். தன்னந்தனி ஆளாக நான் மட்டுமே போட்டுத் தாக்கினேன்’’ என்றார் அசராமல். கோட்ட பொறியாளரான மீனாட்சி சுந்தரத்தை தொடர்பு கொண்டபோது, ‘‘கண்காணிப்பு பொறியாளரான நமச்சிவாயத்தைக் கேளுங்க’’ என்றார். நமச்சிவாயமோ 20 முறைக்கும் மேல் தொடர்பு கொண்டும் நம்மிடம் பேசுவதையே தவிர்த்தார். அக்டோபர் 18-ம் தேதி மதுரை கண்டனப் பொதுக் கூட்டத்தில் இந்த பிரச்னையையும் வைத்து அனலைக் கிளப்ப இருக்கிறாராம் ஜெ.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


நயினார் vs பாப்புலர்:
நெல்லை அ.தி.மு.க.வில் வெடித்த மோதல்!

Nellai%20ADMK%204.jpg



நெல்லை என்றாலே தொல்லைதான்’’ - அரசியல் தலைவர்கள் பலரும் இந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த முறை அது அ.தி.மு.க.வுக்கு ரொம்பவே பொருந்திப் போயிருக்கிறது.

நெல்லை மாவட்ட அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் என்று பட்டியலிட்டால் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜா செந்தூர் பாண்டியன், முன்னாள் எம்.பி.யான பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன், மாநகர் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா என்ற வரிசையில் நீளும்.

Nellai%20ADMK%202.jpg இதில் ராஜா செந்தூர் பாண்டியன், பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், பாப்புலர் முத்தையா அனைவரும் நயினாரின் தீவிர எதிர்ப்பாளார்களாகவே செயல்பட்டு வருகிறார்கள். மாநகர் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, ஒரு காலத்தில் நயினாரின் ஆதரவாளராக இருந்து இப்போது தீவிர எதிர்ப்பாளராக மாறியவர்.

அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள, கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தொண்டர்களை உசுப்பேற்றி, அணி திரட்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், தம்பிதுரை, ராஜகண்ணப்பன், நத்தம் விசுவநாதன் போன்ற முன்னாள் அமைச்சர்கள் ஊர் ஊராய் போய் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி வருகிறார்கள்.

Nellai%20AMDK%201.jpgஅதே போன்ற கூட்டம் நெல்லையிலும் அக்.2 ம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்தில் அனைவரையும் வரவேற்று பேசிய பாப்புலர் முத்தையா, முன்னாள் அமைச்சர்களின் பெயர்களை வரிசையாகச் சொன்னவர், நயினாரின் பெயரைச் சொல்லாமல் விட்டுவிட, நயினாரின் ஆதரவாளர்கள் மேடையில் ஏறி, நயினார் நாகேந்திரனின் பெயரை ஏன் சொல்லவில்லை? என்று சண்டையிட... ஏக பரபரப்பு. மேடையில் இருந்தவர்கள் சமாதானம் செய்ய பாப்புலர் முத்தையா, ‘நயினாரின் பெயரை கடைசியில் சொல்லலாம் என்றிருந்தேன்’ என்று சமாளிக்க, கூட்டம் தொடர்ந்தது.

மேடையில் ஏறி, பாப்புலர் முத்தையாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த, தாழையூத்து மீரான் என்பவரிடம் பேசினோம்.

“நெல்லைக்கு முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் வருகிறார்கள். எவ்வளவு பெரிய கூட்டம் அது? அதுல ஒரு ப்ளக்ஸ் போர்டுல கூட நயினார் நாகேந்திரன் பெயர் இல்லை. இத்தனைக்கும் அவரும் ஒரு முன்னாள் அமைச்சர், மாநில ஜெ. பேரவை செயலாளர், மாநகர அ.தி.மு.க.வின் பொறுப்பாளரும் கூட. அவருடைய பெயரை திட்டமிட்டே புறக்கணிக்கிறார் பாப்புலர் முத்தையா.

நயினார் நாகேந்திரன் இம்முறை நெல்லை சட்டமன்ற தொகுதியில் நின்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று மீண்டும் அமைச்சராகப் போவது உறுதி என்ற நிலை உள்ளது . இதனால் அவரை எப்படியாவது தோற்கடித்து விட வேண்டும் என்று தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து, உள் குத்தில் ஈடுபடுகிறார்களோ என்ற நினைக்க தோன்றுகிறது.

நெல்லையில் நடைபெறும் எந்த கூட்டத்திற்கும், நயினார் நாகேந்திரனை கூப்பிடுவது கிடையாது. தூத்துக்குடி சரவணபெருமாளை அழைத்து கூட்டம் போடுகிறார்கள். மதம், இனம் தாண்டி அனைவரையும் அரவணைத்து செல்பவர். நயினார் நாகேந்திரன். அவரை புறக்கணிப்பது பெரிய தவறு” என்றார்.

இது குறித்து நெல்லை மாநகர், மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையாவிடம் பேசினோம். “வரவேற்புரையில் அவர் பெயரை முதலில் சொல்லவில்லை என்பது உண்மைதான். காரணம் எனது முடிவுரையில் மதுரை கண்டன பொதுகூட்டத்திற்கு வாகன ஏற்பாடுகள் குறித்து பேசி, அதில் அவர் பங்களிப்பையும் பேசி, நன்றியுரை ஆற்ற நினைத்திருந்தேன். அதற்குள் அவசரப்பட்டு, சிலர் மேடையேறி சர்ச்சையாக்கி விட்டார்கள்.

Nellai%20ADMK%203.jpgகழகம் ஒரு குடும்பம். நயினார் நாகேந்தினும் நெல்லை அ.தி.மு.க.வின் குடும்ப உறுப்பினர் என்று நினைக்கிறோம். அதனால்தான் நெல்லைக்கு வருகை தந்த விருந்தினர்ளை மட்டும் வரவேற்று ப்ளக்ஸ் போர்டுகளை வைத்திருக்கிறோம். தொடர்ச்சியாக 178 தெருமுனை கூட்டம் நடத்தியுள்ளேன். சிரமத்தில் இருந்த ஒன்றியச் செயலாளர் ஒருவருக்கு டூ வீலர் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளுக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. எத்தனையோ நல்ல விஷயங்களை செய்துதான் வருகிறேன். ஆனால் தேவையில்லாமல் என் மீது சிலர் அவதூறு கிளப்பி வருகிறார்கள். நெல்லை மாநகர பகுதியில் நடைபெறும் பல கூட்டங்களுக்கு எனக்கு அழைப்பில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது’’ என்று தன் பங்குக்கு புலம்பித் தள்ளினார்.

இத்தனை களேபரம் நடந்திருந்தாலும் நெல்லைக் கூட்டத்தில் கடைசியில் நயினாருக்குதான் ஏக கைத்தட்டல். காரணம், கடைசியாக அவர் பேசிய பேச்சுத்தான்.

கட்சி செயல்பாடுகளை பற்றி பேசிக்-கொண்டிருந்தவர் தடாலடியாக, ‘‘பாப்புலரை நோக்கி, நான் என்னய்யா தப்பு செய்தேன். தப்புன்னு சொன்னா திருத்திக்கிறேன். உங்கள் வீட்டில் வந்து பேசவா? நமக்கு அம்மாவும், கட்சியும் தான் முக்கியம்’’ என்று ஏகத்தும் உருக, கூட்ட அரங்கமே அதிரும் வகையில் கைத்தட்டல் ஒலித்தது. இது பாப்புலர் ஆதரவாளர்களுக்கே ஷாக்.

கூட்டம் ஒரு வழியாக, சுமுகமாக நடந்து முடிந்தாலும் இரு தரப்புமே, தலைமைக் கழகத்திற்கு, பெயரிட்ட, பெயரிடப்படாத (மொட்டை) புகார் கடிதங்களையும், தந்திகளையும், தொடர்ச்சியாய் அனுப்பி வருகின்றனர். விரைவில் தலைமை கழகத்தில் பஞ்சாயத்து நடக்கலாம்.

தேர்தல் வரும் வேளையில் அ.தி.மு.க.வினரின் கோஷ்டிப் பூசலை பார்த்து தி.மு.க.வினர் பட்டாசு வெடிக்காததுதான் குறை. காரணம், அதிருப்தி கோஷ்டியில் யாரையாவது இழுத்துவிடலாம் என்ற நப்பாசைதான்!












__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_10_2010_002_010-elamgovan.jpg?w=300&h=129

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19_10_2010_001_006jj.jpg?w=300&h=198

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Congress cadre unhappy with DMK alliance

Former TNCC president Elangovan Speaks His Mind On Family Politics And Govts Performance 


You could call him the loose cannon of Tamil Nadu politics or the lone firebrand Congressman in the state.For,former TNCC president EVKS Elangovan has been consistently embarrassing the DMK government,firing sharp salvos against its performance and some of its ministers.If the Congress-DMK ties in Tamil Nadu appear to be under strain,Elangovans caustic statements have been the sole contributor.Now,with the assembly elections a few months away in Tamil Nadu,the political air is thick with speculation that the Congress high command may reappoint Elangovan as the TNCC chief to pressure the DMK for a greater share of seats and power.In a pull-nopunches interview with Radha Venkatesan,he charges that the law and order in Tamil Nadu has deteriorated and people are losing faith in the DMK regime.

You have been criticising family politics in Tamil Nadu,without naming any family 


After Chera,Chola and Pandya kingdoms,another dynastic rule appears to be emerging in Tamil Nadu.And people are not happy with it.

You are known to be bold.So,tell us which family are you referring to


Iam bold but also tactful.

You have been highly critical of the DMK government in the last six months,why


I am not critical,but only pointing out the lapses.The law and order is deteriorating in Tamil Nadu.An entire family is murdered over a land dispute.And a minister in the DMK government drives in an official car with a national flag fluttering and visits the accused in the jail.It is complete abuse of power and will negatively influence the course of the police investigation in the case.And everyday,there are murders,daylight robberies and dacoities in Tamil Nadu.Is it not enough proof that under the DMK regime,law and order is deteriorating 

Are you suggesting that the public mood is turning against the government


Definitely,the public mood is going against the government.If the law and order situation deteriorates further,I fear that this government will completely lose public faith.

Chief minister holds the home portfolio.So,are you pointing an accusing finger at him


No,I am not.As an alliance partner,I am only pointing out the lapses in the government to help them correct them.I am requesting the government to see that the law and order is restored.For instance,the central government is offering Rs 6.50 per kg subsidy for the one rupee rice scheme in Tamil Nadu.But the ration rice is being smuggled to Kerala.

If the public mood is turning against the government,do you think the Congress high command will snap ties with the DMK


The high command is aware of what is happening in Tamil Nadu.But I am not making these statements to break the alliance,but for the government to correct its mistakes.

But your party MLAs and senior Congress leaders are silent on these lapses


I dont know about them.But I can tell you my partymen share my views.And they are not happy with the alliance.

The state Congress president KV Thangkabalu has said that disciplinary action would be initiated against you for violating alliance dharma


We will know who will face action in a fortnight.He (Thangkabalu ) is acting like a PRO of the DMK.Under his leadership,the Congress in Tamil Nadu is unable to function the way it should and highlight the grievances of the people and the achievements of the Congressled government at the Centre.

But you are critical of the DMK regime only after having been defeated in the parliamentary election There is a widespread perception that you have been instigated by the AIADMK


It is not true.I have been pointing out the lapses of the government for the last five years.If it were true that I pointed out the lapses of the AIADMK regime at the instance of DMK during 1996-2001,this allegation that I am being instigated by the AIADMK to make charges against the DMK should also be true.


Chief minister M Karunanidhi has said none 
can break the Congress-DMK ties 


People live on hopes.

Pc0170800.jpg





__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_11_2010_011_015-tn-cong.jpg?w=300&h=141

__________________
« First  <  Page 17  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard