சங்ககாலநாணயபெயரில்மோசடி 7 பேர்கைது: டாக்டர்மீதுவழக்கு[1]: தமிழகத்தில் போலியாக என்னெவெல்லாம் கிடைக்கும் என்ற விவஸ்தையேயில்லை. முன்பு போலி தங்க்காசுகள் தயாருத்து விற்று மோசடி[2] என்றெல்லாம் செய்திகள் வந்தன. நாணயவியல் சங்கத்தின் மாநாடுகளில் மூட்டையைத் தூக்கிக் கொண்டு நாண்யங்களை விற்க்கவருவர். இதில் பெரும்பாலான நாணயங்கள் போலியாகத்தான் இருக்கும். ஈ-பே என்ற தளத்தில் கூட அத்தகைய போலி நாணய மோசடிகள் நடைபெறுகின்றன. இதுமட்டுமல்லாது, அந்நிய நாடுகளில் இருந்து வரும் ஆராய்ச்சியாளர்கள், இங்குள்ள உண்மையான நாணயங்களைக் கிளப்பி/திருடிக் கொண்டு சென்று விடுகிறார்கள்[3]. அதற்கு உதவுவது நம்முடைய பேராசிரியர்கள், சரித்திர ஆசிரியர்கள் முதலியோர்தாம். இதற்காக போலிநாணயங்களை தயாரித்து அவற்றை வைத்துவிட்டு, உண்மையான நாணயங்களைக் கிள்ப்பைக் கொண்டு சென்றுவிடுவர்[4].
சங்கக்கால நாணயங்கள் என்று தயாரிக்கப் பட்டுவருவது புதிய நிகழ்ச்சியன்று: கருர் பகுதிகளில் இவ்வேலை ஜோராக நடந்து வருகிறது. இப்படியொரு நாணயம் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்தால் போலும், தயாரித்துக் கொடுத்துவிடுவார்கள். முடிந்த வரைக்கும், அவர்கள் மிகவும் வேண்டியவர்கள், தெரிந்தவர்களிடம்தான் தமது வியாபாரத்தை வைத்துக் கொள்வார்கள்.
இப்பொழுதைய சங்ககாலநாணய மோசடி: பழநி:பழநியில் சங்க கால நாணயம் இருப்பதாக கூறி, திருப்பூர் வியாபாரியிடம் மோசடியாக பணம் பறித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் முருகேசன் (48). வியாபாரியான இவர், பழநியை சேர்ந்த சித்தா டாக்டர் பாக்கியநாதனிடம் விலைமதிப்பற்ற சங்ககால நாணயம் இருப்பதாகவும், வெளிநாட்டில் விற்றால் அதிக பணம் கிடைக்கும் என இவரிடம் இவரது நண்பர் சுலைமான் கூறியுள்ளார். இதைநம்பி முருகேசன், சுலைமான் உட்பட7 பேரும் பழநி வந்தனர். பாக்கியநாதனை பார்த்தனர். சங்க கால நாணயம் என நாணயம் ஒன்றை காட்டப்பட்டுள்ளது. ரூ. பல லட்சம் பேரம் பேசப்பட்டது. அட்வான்சாக ரூ. 5 ஆயிரம் தந்த முருகேசன் முழு தொகையையும் தர அவகாசம் கேட்டுள்ளார். அதற்கு ஒத்துக்கொள்ளாமல் அவரிடம் இருந்த ஒன்றரை பவுன் மோதிரத்தை இவர்கள் வாங்கியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முருகேசன், பழநி போலீசில் புகார் செய்தார். டாக்டர் மீது வழக்கு: எஸ்.ஐ., சீமான் தலைமையிலான போலீசார் சுலைமான், துரைசாமி, மாணிக்கவாசகம், செல்வம், தனிக்கோடி, ராஜகோபால் மற்றும் பாபுவை கைது செய்தனர். பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது. டாக்டர் பாக்கியநாதன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
[1] தினமலர், சங்ககால நாணயபெயரில் மோசடி 7 பேர்கைது:டாக்டர் மீது வழக்கு, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=24845
[2] தினமலர், போலி தங்ககாசுகள் தயாரித்து விற்பனை 11 பேர் கைது: நகை, இயந்திரம் பறிமுதல்
நவம்பர் 16,2009,00:00 IST,http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14060
[3] வி. ஜே. ஏ. ஃபிளின் (Dr. V.J.A. Flynn) என்ற ஆராய்ச்சியாளர் பலமுறை இந்தியாவிற்கு வந்து சென்றுள்ளார். ஒவ்வொருமுறையும், அவர் பலர் விலைமதிக்கமுடியாத நாணயங்கள், கலைப்பொருட்கள் என்று திருடிச் சென்றுள்ளார்.
[4] On 21st June, 1994, the petitioner V.J.A. Flynn, holding an Australian passport and one Sadasivan Mudaliar, holder of a Fiji Passport were intercepted by Air Customs Preventive Officers at IGI Airport when they were trying to board a flight for Hongkong along with a large quantity of various types of coins of gold, silver, copper etc. The coins were suspected to be antiquities, export of which was prohibited under Section 3 of the Antiquities and Art Treasure Act, 1972 (in short the Antiquities Act). Therefore, at request of Customs, the Director General of the Archaeological Survey of India (in short ASI) deputed Mr. D.V. Sharma, Superintending Archaeologist, who examined the coins and prima facie found them to be antiquities. The coins along with other bags and suitcases were seized under Section 110 of the Customs Act, 1962 on the reasonable belief that the export of the same was prohibited under the Antiquities Act. Some Indian currency was also seized under Section 110 of the Customs Act, 1962 read with FERA, 1973. The statement of Flynn and Mudaliar was recorded under Section 108 of the Customs Act. The petitioner Flynn stated that the coins recovered from Sadasivan actually belonged to him and were handed over to him only to save excess freight. In his voluntary statement under Section 108 of the Customs Act, Flynn also revealed that he had been collecting gold, silver, brass and copper coins, both Roman and Indian and had purchased a huge quantity from Bangalore and after sorting out the same at his friend Shyam Sunder Rastogi’s house at B-9, Pamposh Enclave, New Delhi was taking some with him, whereas leaving a large quantity with Rastogi. A search was conducted at the house of Rastogi on the same date which resulted in the recovery of 34149 old metallic coins. Rastogi along with the coins was brought to IGI Airport. Even the coins recovered from the house of Rastogi were certified to be antiquities. The statement of Shyam Sunder Rastogi, under Section 108 of the Customs Act, was recorded. From this it appeared that he was actually involved in smuggling of the antiquities along with Flynn. The petitioner Flynn had been staying with Rastogi, during his visits to India, for the last about 30 years. Both the petitioners were arrested on 21st June, 1994 and criminal complaints under the Customs Act were lodged against them on 28th August, 1994. The detention order under Section 3 of COFEPOSA, 1974 was also passed against both the petitioners on 7th September, 1994. Vide orders dated 4th March, 1996 in Crl. M (M) No. 244/95, this Court quashed the criminal complaint against both the petitioners and Sadasivan Mudaliar. Declaration under Section 9 of the COFEPOSA was set aside by the High Court vide orders dated 19th September, 1995. The detention orders were also set aside by the Hon’ble Supreme Court of India vide order dated 18th December, 1996. The orders quashing the complaint and setting aside the detention orders were acted upon and the petitioners were released. Flynn is reported to have already left the country.