
shockan.blogspot.com
"கோயிலையே சுரண்டி சாப்பிட்டுக் கிட்டு இருக்கார் அந்த ’அகா சுகா’ முருகேசன். இவரை யாரும் தட்டிக்கேட்க மாட்டேங்கறாங்க. அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்'’என கொந்தளிக்கிறார்கள் வைத்தீஸ்வரன் கோயில் ஊர்மக்களும் பக்தர்களும்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே இருக்கும் வைத்தீஸ் வரன்கோயில்... நாடி ஜோதிடத்துக்கு பிரசித்தி பெற்ற ஊர். "புள்ளிருக்கும் வேளூர்' என இலக்கியங்களில் குறிக்கப்படும் இந்த ஊரில் எழுப்பப்பட்டுள்ள வைத்தியநாதசுவாமி திருக் கோயில் மிகத்தொன்மைச் சிறப்பைக் கொண்ட கோயிலாகும். இந்த கோயிலைத்தான் முருகேசன் என்கிற தனி நபர் சூறை யாடிவருவதாக கொந்தளிக்கிறார்கள் பலரும்.
என்ன நடந்தது?
பெரியார், அண்ணா, காமராஜர் கல்வி அறக்கட்டளையை நடத்திவரும் எம்.ஆர்.சுப்பிரமணியனே விவரிக்கிறார். “""இலக் கியங்களில் பாடப்பட்ட எங்கள் வைத்தீஸ்வரன்கோயில்... அங்கார கன் என்னும் செவ்வாய்க்கு உரிய தலம். இங்கு கோயில் கொண் டிருக்கும் சிவபெருமானான வைத்தியநாதரை முருகக்கடவுளே வந்து வழிபட்டதாக புராணங்கள் சொல்கிறது.. அதனால் எங்கள் வைத்தியநாதசுவாமி திருக்கோயிலைத் தேடி தினம் தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருகிறார்கள். இந்தக் கோயில் தருமை ஆதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இந்த கோயிலுக்கு வருமானம் அதிகம். அதோடு 1000 ஏக்க ருக்கு மேல் சொத்துக்கள் இருக்கு. இதையெல்லாம் குறிவைத்து இந்தக் கோயிலுக்குள் கிளர்க்காக 92-ல் அடியெடுத்து வைத் தார் முருகேசன். இவர் தருமை ஆதீனகர்த்தரின் அண்ணன் மகன். இவருக்கு மாத சம்பளம் வெறும் 1,695 ரூபாய்தான். சாதாரண நிலையில் கோயிலுக்குள் அடி யெடுத்து வைத்த முருகேசன்... கோயில் நிர்வாகத்தை கையிலெடுத்துக்கிட்டு... கோயில் சொத்துக்களை எல்லாம் இஷ்டத்துக்கும் விற்று பணத்தைச் சுருட்ட ஆரம்பிச்சார். இதன் விளைவு இப்ப... கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அவ ருக்கு சொத்துக்கள் சேர்ந்துவிட்டது. கோயில்தான் இப்ப ஓட்டாண்டியாகி விட்டது''’என்றார் காட்டமாய்.
""அப்படி என்னதான் கோயில் சொத்துக் களை இவர் இஷ்டத்துக்கு கையாண்டிருக்கிறார்? '' என்று அவரிடமே நாம் கேட்டபோது... கிறுகிறுக்க வைக் கும் அளவிற்கு ஒரு பட்டியலையே போட்டார் அவர்.
""அறநிலையத்துறையின் அனுமதியைப் பெறாமலே... பல கோயில் சொத்துக்களை வித்தி ருக்கார். உதாரணமா... சர்வே நம்பர் 2729-ஐக் கொண்ட கோயிலுக்கு 1 ஏக்கர் நிலத்தை சக்தி மரவாடி குமாருக்கு வித்துட்டார். அதே சர்வே நம்பர்ல இருந்த 7 ஏக்கரை சங்கர் பிள்ளைக்கிட்ட வித்துட்டார். இதேபோல் சர்வே எண் 20/1, 17/2, 17/3-ஐக் கொண்ட 12.3 ஏக்கரை ராஜி என் பவரிடம் வித்துட்டார். சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் இருக்கும் தருமை ஆதீன பிரச்சார நிலைய இடத்தை... தனியார் ஒருத்தருக்கு நட்சத்திர ஓட்டல் கட்ட குத்தகை என்னும் பெய ரில் தாரை வார்த்துட்டார். இங்க இருக்கும் சிவ சாமி ஜோதிடருக்கு 100 குழியையும் சிவா என் பருக்கு 80 செண்ட்டையும் வித்துட்டார். இப்படி கோயிலுக்கு சொந்தமான இடங் களையெல்லாம் வித்த முருகேசன்... இங்க எங்க ஊரைச் சேர்ந்த ஜட்ஜ் ஒருத்தர் ஐயனார் கோயில் கட்ட அனுப்பிய ஒன்றரை லட்ச ரூபா செக்கை (எண்: 448962)... இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் இருக்கும் தன் அக்கவுண்ட்டில் போட்டுக்கிட்டார். (அக்கவுண்ட் எண்:7949) இப்படி அவர் செய்த மோசடிகளை யெல்லாம் பட்டியல் போடணும்னா... தனியா ஒரு புத்தகமே போட் டாகனும். வறுமையில் ஒருகாலத்தில் உழன்ற முருகேச னுக்கு இப்ப கும்பகோணம் நால்ரோட்டில் ஒரு பங்களா, சொந்த ஊரான உக்கடையில் நிலபுலன், வீடுகள் இருக்கு. இப்படி பல இடங்களில் பல பினாமிப் பெயர் களில் சொத்துக்கள் இருக்கு. இதையெல்லாம் ஒரு தனி குழுவைப் போட்டு அறநிலையத்துறை விசாரிக்கணும்''’என்கிறார் எரிச்சலாய்.

கோயிலில் இருக் கும் துரை குருக்களோ..... “""இந்த கோயிலின் மாத உண்டியல் வருமானமே லட்சக்கணக்கில் இருக் கும். சித்திரையில் நகரத் தார் எனப்படும் செட்டி நாட்டுக்காரங்களும் பங்கு னியில் சேலத்தார்களும் ஆயிரக்கணக்கில் வருவாங்க. எல்லோரும் வசதியானவங்க. ஏகத்துக்கும் கோயிலுக்கு டொனேசனை அள்ளிக்கொடுப்பாங்க. இந்த நிதியெல்லாம் எங்க போகுதுன்னே தெரியலை. கேட்க நாதியில்லை''’என்கிறார் வருத்தமாய்.
தி.மு.க. பேரூராட்சித் தலைவரான மோகன்ராஜோ ""ஊரைச் சுத்தியிருக்கும் 28 குளங்களும் கோயில் நிர்வாகத் தின் கீழ்தான் இருக்கு. கோயில் கழிவுகளை அதில் கலக்க விட்டு ஊரை நாற வைக்கிறார் முருகேசன். கோயிலுக்குள்ளேயே இருக்கும் அழகான திருக்குளத்தில்.. மீன்களுக் குன்னு சொல்லி மாட்டு இறைச்சியையும் அழுகிய இறைச்சி களையும் போட்டு சுகாதாரக் கேட்டை உண்டுபண்றார். இவரை ஆதீனமும் கண்டுக்கலை. அறநிலையத் துறையும் கண்டுக் கலை. மக்கள் கொந்தளிப்பில் இருக்காங்க. அவங்களை நாங்க தான் சமாதானப்படுத்திக்கிட்டு இருக்கோம்''’என்றார் ஆதங்கமாய்.
கோயிலுக்கு வந்த பக்தர்களோ ""கோயில் நிர் வாகம் ஒரு விடுதி வசதியையோ... கழிவறை வசதியையோ வர்றவங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கலை. குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு தவிக்க வேண்டி யிருக்கு''’என்கிறார்கள் கொதிப்பாய்.
இந்தக் குற்றச்சாட்டுக் களுக்கெல்லாம் நாம் முருகேசனிடமே விளக்கம் கேட்ட போது “""நான் ரொம்ப பிஸியா இருக்கேன். இப்ப உங்களோட பேசமுடியாது. ஃபிரீயா இருக்கும்போது உங்களைக் கூப்பிடுறேன்''’என்று முடித்துக் கொண்டார்.
இந்தப் புகார்கள் குறித்து மயிலாடுதுறையில் இருக்கும் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் பொன்.செல்வராஜிடம் நாம் கேட்டபோது “""அந்த முருகேசன் மீது ஏகப்பட்ட புகார்கள் எங்களிடமும் வந்து குவிந்திருக்கிறது. இது தொடர்பாக அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே முரு கேசனை விசாரித்து... அதன் பேரில் உரிய நடவடிக்கையை விரைவில் எடுப்போம்''’என்றார் அழுத்தமாக.
பழமை வாய்ந்த ஒரு திருக்கோயிலை ஒரு தனி மனிதர் எப்படி இஷ்டத்துக்கும் ஆட்டிப் படைக்கிறார்? சுரண்டுகிறார்
பெங்களூரு : சிறையிலிருக்கும் நித்யானந்தாவுக்கு, கர்நாடக ஐகோர்ட், நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இன்றும், நாளையும் கோர்ட் விடுமுறை என்பதால், மேலும் இரண்டு நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நித்யானந்தா, திங்கட்கிழமை தான் வெளியில் வர வாய்ப்புள்ளது.
சென்னை : எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, மருத்துவ கவுன்சிலிங் வரும் 28ம் தேதிக்கு தள்ளிப் போகும் என தெரிகிறது.
விவாகரத்து நடவடிக்கையை எளிமையாக்கும் விதமாக இந்து திருமணச் சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தவிர ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் சமாதியை மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பொறுப்பில் விடப்படும். விவாகரத்து கோரும் போது இழுத்தடிக்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு புதிதாக சட்டம் கொண்டுவரும்.









நிபுணர் நாகசாமி செவ்வி













நேரு மற்றும் ராஜாஜி ஆகியோரின் புத்தகங்களை வெளியீடு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட 5 கோடி ரூபாய் சிறப்பு நிதி, காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாவைத் தலைவராகக் கொண்ட தனியார் அறக்கட்டளைக்கு சட்ட விரோதமாக திருப்பிவிடப்பட்டுள்ள தகவல் அம்பலமாகியுள்ளது. ஐம்பது ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்ட சாதாரண குமாஸ்தாவை வளைத்து வளைத்து செய்தி வெளியிடும் பத்திரிகைகள் ஆகட்டும், எங்கோ ஒரு மூலையில் வசதிபடைத்த வீட்டு பெண் கற்பழிக்கப்பட்டுவிட்டால் நாள் முழுக்க அதையே காட்டிய-படியே இருக்கும் டி.வி. சேனல்கள் ஆகட்டும், இந்தச் செய்தியை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
மியூசியத்தை நவீனமாக்கும் பணிக்காக ஜெய்மாலா ஐயர், சந்தனா டே என்ற இருவர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு பின்னர் மியூசியத்தின் ஆலோசகர்களாக ஆக்கப்பட்டு, இவர்களுக்கு மீண்டும் மீண்டும் 20 கோடி ரூபாய் பணம் தரப்பட்டுள்ளது. செய்து முடிக்கப்பட்ட வேலைகளுக்காக இவர்களுக்கு திரும்பத் திரும்ப பணம் அளிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. முழுக்க முழுக்க சட்டவிரோதமான வகையில் சோனியாவின் அறக்கட்டளைக்கு பணம் திசை திருப்பிவிடப்பட்டுள்ளதாக அந்த ஆடிட்டர்கள் தங்களது 43 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் புட்டு புட்டு வைத்துள்ளனர்.
பெண்களோ, தலையில் முக்காடு போட்டுக் கொண்டு தீக்கங்குகளை கொஞ்சம்கூட பயப்படாமல் எடுத்து தலையில் போட்டுக்கொண்டு, ‘லாவுசே மாவுசே’ எனத் துளியும் பதற்றமில்லாமல் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். ஆச்சர்ய திகைப்போடு இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நாம், கிராமப் பெரியவரான பாண்டியனிடம், ‘இதெல்லாம் சிலிர்க்க வைப்பதாக உள்ளதே?’ என கேட்க, அவரோ, இதற்குப் பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது என்றவர், அந்த சுவாரஸ்ய வரலாற்றை சுடச்சுட விவரிக்க ஆரம்பித்தார்.
மெல்லிய உடை உடுத்தியபடி, தலையில் தீக்கங்கு நேர்த்தி கடன் செய்த பொங்கல் செல்வி நம்மிடம் கூறும்போது, ‘‘நீங்களும் பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள். இவ்வளவு மெல்லிய உடையில்தான் முக்காடு போட்டுக்கிட்டு தீக்கங்குகளை தலையில் வாரிப்போட்டோம். எங்காவது கங்கு பட்டு உடையில் ஓட்டை விழுந்துச்சா? உடுத்திய உடைக்கு ஒரு சேதாரமுமில்லை. எல்லாமே அந்த மாமு நாச்சியம்மன் மகிமைதான்’’ எனச் சொல்லி மெய் சிலிர்த்தார்.
பட்டதாரி வாலிபர்களான கார்த்திக்கும், அன்பரசும் நம்மிடம், ‘‘மாமு நாச்சியம்மன் நினைவாக நடத்தப்படும் பூக்குழிக்காக வனத்துறைக்குச் சொந்தமான காட்டிலிருந்து மரக்கட்டைகளை வெட்டிக்கொண்டு வருவோம். அப்படித்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மரங்களை வெட்டிக் கொண்டு வந்தபோது, வெள்ளைக்கார போலீஸார் எங்க கிராமத்துக்கு வந்து கேமரா வைத்து விறகுகளை எல்லாம் படம் பிடித்துள்ளார்கள்.
“கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி வேறு யாருமில்லை, காமவெறி பிடிச்சு அலைஞ்சாளே.. மேரி அவளோட மகன்தான். மீனாட்சி நகர்லதான் வாடகை வீட்டுல குடியிருக்கிறாள். பாட்ஷாங்கிறவனுக்கும் இவளுக்கும் கள்ள உறவு. அடிக்கடி இங்கே வந்து மேரியோட வீட்டுல தங்கிட்டு போவான். மேரிக்கு பழங்காநத்தத்தில் இருக்கிற காதிகிராப்ட்ல வேலை. கைநிறைய சம்பளம். பாட்ஷாவுக்கு மேரி பணத்தை அள்ளி அள்ளி கொடுப்பாள். அந்தப் பணத்தை வைத்துதான் எலக்ட்ரீசியன் வேலை பார்த்த பாட்ஷா சொந்தமாகவே எலக்ட்ரிக்கல் கடையை ஆரம்பிச்சுருக்கான்.
நடந்த சம்பவத்தை லைவ்வாக விளக்கினார் திலகர் திடல் போலீஸ் உதவி கமிஷனர் கணேசன்.
மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்திருக்-கிறது திருப்பரங்குன்றம் மலை. இந்த மலையின் மேல் உச்சியில் காசி விஸ்வநாதர் கோயிலும், தர்காவும் அமைந்திருக்கிறது. இந்த மலையைச் சுற்றி குகைக் கோயில்கள், மண்டபங்கள், மிகவும் நேர்த்தியான கலைச் சிற்பங்கள், சமணர்களின் படுகைகள் என காண்போர் கண்களை கவர்ந்திழுக்கும். முருக-பெருமானின் அருளைப் பெறவும், கலைகளைக் கண்டு ரசிக்கவும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவு இங்கே வருவார்கள்.
இப்படிப்பட்ட காதலர்கள் நிறைய பேரு திருப்பரங்குன்றம், அழகர்கோயில் மலைக்கு மேலே போறாங்க. அங்கே சந்தோசமாக இருந்துட்டு போக முடியுங்கிற நம்பிக்கையில வர்றாங்க. மலை மேல போயிட்டு எங்கிட்டாவது ஒரு பக்கம் ஒதுங்கினா என்ன நடக்குதுன்னு யாருக்குமே தெரியாது. அந்த அளவிற்கு மரங்களும், பாறைகளும் இருக்கு. அழகான ஆம்பள பொம்பள பசங்க வந்தா அவுங்ககிட்ட இருக்குற பணம், நகை மற்றும் கற்பை கொள்ளையடிக்கிறதுக்குன்னு ஒரு கும்பல் மலை மேல உள்ள நெல்லிக்காய் தோப்புப் பகுதியில் சுத்துது.
தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பிற படிப்புகளை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளும், மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களும்தான் நடத்தமுடியும் என அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால் பல தனியார் நிறுவனங்களும், பல்கலைக்-கழகங்களும் தங்கள் விருப்பம்போல, ‘பாரா-மெடிக்கல்’ கோர்ஸ்களை நடத்தி வருகிறது.
தற்போது பெரிய பெரிய தனியார் மருத்துவ-மனைகள் இதுபோன்று நர்சிங் கல்லூரிகளை தங்கள் மருத்துவ-மனை-யிலேயே தொடங்கி வருவது வாடிக்கையாகி வருகிறது. அப்படித் தொடங்கி நடத்தி வரும்-போது, வேலைக்காக அதிக சம்பளம் கொடுத்து பயிற்சி பெற்ற சீனியர் நர்ஸுகளை பணியமர்த்தாமல் நர்சிங் கல்லூரி நடத்துவதாகக் கூறி பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்வதால், நர்ஸுகளுக்கான சம்பளப் பணம் மிச்சமாகிறது. மேற்-கொண்டு பயிற்சிக் கட்டணமும், சாப்பாடு கட்டண-மும் அவர்-களிடமிருந்து வசூலித்து விடுகிறார்கள். 
ஸ்ரீயை வாஞ்சித்து (மஹாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் ஸ்ரீவாஞ்சியம் என்று பெயர் பெற்றதாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பிரளயம் ஏற்பட்டு பூலோகமே அழிந்து போன போதுகூட, அழியாமல் நிமிர்ந்து நின்றது இக்கோயில் ஒன்றுதான் என்கிறார்கள். 


நெல்லைக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் முக்கிய பங்கு வகிப்பது அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருக்கோயில். திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட இந்தக் கோயில், சிவனின் ஐந்து சிவசபைகளில் தாமிர சபையாக புகழப்படும் தலம்.
கோயில்களின் அருகில் உயரும் கட்டடங்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஓய்வு பெற்ற மாவட்ட தொல்லியல்துறை அதிகாரி மா. செந்தில் செல்வகுமாரனிடம் கேட்டோம். “கோயில்களில் மிகப்பெரிய கோபுரங்களைக் கட்டும், கட்டடக்கலை முறையை உருவாக்கியவர்கள் சோழர்கள். கோயில்களைச் சுற்றி நான்கு வாயில்களை கட்டி பெயரிட்டு ராஜ கோபுரங்களை கட்டினார்கள்.
கோயில்களின் கோபுரங்கள் மீது முளைக்கும் செடிகளை, முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக மஞ்சனத்தி போன்ற தாவரங்களின் வேர்களை கவனிக்காமல் விட்டால் கோபுரங்-களுக்கு பேரழிவை உருவாக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் என்பது, கோயிலின் பராமரிப்பையும் உள்ளடக்கியதுதான். கோயில் கோபுரங்களில் விரிசல் ஏற்பட்டால் சிமென்ட் பூசி சரி செய்வது மிகவும் தவறானது. கோயில் கோபுரங்களை வெள்ளி, தங்கத் தகடுகளால் மூடுவதும் சரியான முறையல்ல. கோபுரங்களில் உள்ள சிலைகளுக்கு அதிக வேதியியல் பொருட்களை கொண்ட பெயின்ட்களை பயன்படுத்துவதும் தவிர்க்க வேண்டிய அம்சம்.
இது குறித்து பொதுநல வழக்குத் தொடர்ந்த நெல்லை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் சுடலை-கண்ணுவிடம் பேசினோம். “கோயிலுக்கு மிக அருகில் கட்டடம் கட்டிய அந்த ஜவுளி நிறுவனம் மீது மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதன் பிறகுதான் நெல்லை மாநகராட்சி, அந்த நிறுவனத்தின் மீது தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. பல நோட்டீஸ்களை அனுப்பியது. அதையே உயர்நீதிமன்றத்திலும் ஆதார-மாகக் காட்டியது. ஆனால், மாநகராட்சி தனிப்-பட்ட முறையில் அந்த ஜவுளி நிறு-வனத்தை எதிர்த்து வழக்கு நடத்தாததால், மதுரை உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து விட்டது” என்றார்.
நினைத்ததை நிறைவேற்றித் தரும் அற்புத மகான் பாம்பன் சுவாமிகள் என்கின்றனர் அவருடைய பக்தர்கள். ஆனால், கருவறை திறக்க வேண்டும்...கோயிலைப்போல வழிபாடு நடக்க வேண்டும்...என்ற பக்தர்களின் வேண்டுகோளுக்கு மட்டும் இன்றும் செவிசாய்க்காமல் இருக்கிறார் அவர். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. அதற்கு முன்பு
சமாதி என்று சொல்லிவிட்டால் அங்கிருந்து அரசு சென்றுவிடும், அதன்பின்னர் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று சிலர் நினைக்கின்றனர். சுவாமிகளின் பக்தர்களாகிய எங்களுக்கு ஒன்றே ஒன்றுதான் தேவை. கோயிலைக் கட்டி, திறந்துவிட வேண்டும். அங்குள்ள மயூரநாதர் மற்றும் 





