New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!
Permalink  
 


‘‘பேசிப் பேசியே நொந்து போனோம்..!’’
-கலைஞரையே காய்ச்சிய தி.மு.க. பேச்சாளர்கள்

DMK%202.jpg‘எதைப் பேசினால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம்’ என்று தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளரான கலைஞரே வகுப்பெடுக்க... அவர் முன்னிலையிலேயே பேச்சாளர்கள் ஆட்சியை பிடிப்பது பற்றி பேசாமல், தங்கள் கஷ்ட நஷ்டங்களை பற்றிப் பேசி அவரை டென்ஷனாக்கிவிட்டனர். 

சென்னை அண்ணா அறிவாலயம் ஆகஸ்ட் 8-ம் தேதி சொற்பொழிவாளர்களின் சரணாலயமாக மாறிவிட்டிருந்தது. பலர் காலில் செருப்பு இல்லாமலும், சிலர் சொகுசு காரிலும் அறிவாலயத்திற்கு வந்திருந்தனர்.

DMK.jpgமேடையில் பேச விரும்பும் பேச்சாளர்கள் வரலாம் என்று அறிவிக்கப்பட்டும், கூட்டத்தில் இருந்து சிறு மூச்சு கூட வரவில்லை. காரணம், கலைஞர் முன்னிலையில் எதைப்பேசுவது? எப்படி பேசுவது, பாராட்டி பேசுவதா? தங்கள் பிரச்னைகளை எடுத்துப் பேசுவதா? என்று இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தனர்.

அப்போது மேடையேறிய கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, ‘‘தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. தி.மு.க. அரசு பல்வேறு சாதனைத் திட்டங்களை தீட்டி வருகிறது. அதை பொதுமக்கள் மத்தியில் நாம் கொண்டு செல்ல வேண்டும். ஜெயலலிதா தினந்தோறும் ஒரு அறிக்கையை விட்டு கொண்டிருக்கிறார். அதற்கு நாம் பதிலடி தரவேண்டும். தேர்தல் வருவதால் நமது மனமாச்சர்யங்களை மறந்துவிட்டு கட்சி மேடையில் மக்களை கவரும் வகையில் நாம் பேச வேண்டும்’’ என்று பேசிவிட்டு உட்கார்ந்தார். 

தி.மு.க. மேடைகளில் எதிர்க்கட்சிகளை வறுத்தெடுக்கும் புதுக்கோட்டை விஜயா ‘‘தி.மு.க. பேச்சாளர்களை அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மதிப்பதே இல்லை. முரசொலியில் நாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து போடப்பட்டிருந்தால், அந்த மாவட்ட செயலாளருக்கு போன் செய்து, ‘அண்ணே, எப்போ நிகழ்ச்சி?’ என்று கேட்டால், ‘அப்பறம் பேசலாம்’ என்று சொல்லி போனை வைத்துவிடுகிறார்கள். பொதுக் கூட்ட மேடையில் நிகழ்ச்சி நடக்கும்போதே பல மாவட்டச் செயலாளர்கள் வீட்டுக்குச் சென்றுவிடுகின்றனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட நாங்கள் பணம் கேட்டால் வட்டம், வார்டு, ஒன்றியம், நகரம் என்று மற்றொருவரை கைகாட்டி விடுகின்றனர். அவர்களும் மாவட்ட செயலாளரை கைகாட்டி விடுகின்றனர். அவருக்கு போன் செய்தால், அவர் தூங்கிக் கொண்டு இருப்பதாக உதவியாளர்கள் சொல்கின்றனர். குடிக்க டீ கூட வாங்கித் தருவதில்லை’’ என்று பொரிந்து தள்ளிவிட்டு போனார். 

இந்த வரிசையில் பேச அழைக்கப்பட்டார் சொற்பொழிவாளர்(?) குஷ்பு. 

‘‘கலைஞர், துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கடுமையாக உழைத்துதான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளனர். கட்சியில் நாமும் உழைத்தால் அதேபோன்ற உயர்ந்த நிலையை அடையலாம். கலைஞர் காப்பீட்டு திட்டம், ‘108’ ஆம்புலன்ஸ் என்று பல்வேறு திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்துள்ளார். அதை மக்கள் மத்தியில் நாம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்’’ என்று பேசிவிட்டு உட்கார்ந்தார் அவர்.

திருச்சி செல்வேந்திரன் தன் பேச்சில், ‘‘கழக அரசு ஏழைகளுக்கு இலவச நிலம், டி.வி. உள்ளிட்டபல வற்றை வழங்குகிறது. அதேபோல தி.மு.க. பேச்சாளர்களுக்கும் வழங்க வேண்டும்’’ என்று கொளுத்திவிட்டுபோனார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களை குறைகூறி புதுக்கோட்டை விஜயா, சுப்பு, திருச்சி செல்வேந்திரன் உள்ளிட்ட 8 பேர் பேசும்போது கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது. 

அதேநேரம், கலைஞரை சாந்தப்படுத்தும் வகையில் இருந்த திருச்சி சிவா, குஷ்பு, பாக்யராஜ் போன்றவர்களின் பேச்சுக்கு பேச்சாளர்கள் மத்தியில் எதிர்ப்பும் முணுமுணுப்பும் காணப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சில பேச்சாளர்களிடம் தனியாக பேசினோம். 
DMK%201.jpg
‘‘பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவங்க தி.மு.க.காரனுங்கன்னு சொல்லுவாங்க. ஆனால் இன்று பேசிப் பேசியே நாங்க வாழ்க்கையை தொலைச்சிட்டு நொந்துபோயி நிற்கிறோம்னு தோணுது. காரணம் கலைஞர் ஆட்சியில கோடிக்கணக்கில் நடந்த நலத்திட்ட உதவிகளை நாங்க சொல்றோம். ஆனால் எங்க வீட்டுல அடுப்பு எரியறதே கஷ்டம். எங்களுக்கு தேவை என்ன? அழைக்கிற கூட்டத்துக்கு உரிய பணம். அதைக் கொடுத்தா நாங்க ஏன் கூட்டத்துக்கு போகாம இருக்கிறோம்? இந்த கூட்டத்துல இந்த பேச்சாளர் பேசறாங்கன்னு முரசொலியில் கட்டம் கட்டி போடறாங்க. ஆனால், என் உடல் நிலைமை என்ன? பணம் இருக்கா இல்லையான்னு விசாரிக்கலாம் இல்லையா? பல பேச்சாளருங்களுக்கு பஸ்ல போக பணம் இல்லாம நிகழ்ச்சிக்கே போறது இல்லை. அதுதான் உண்மை’’ என்று தன் மனக்குமுறலை கொட்டினார் நம்மிடம்.

கலைஞர் பேசியபோது, ‘‘பேச்சாளர்கள் ஒரு சாதி, நிர்வாகிகள் ஒரு சாதி என்று தி.மு.க.வில் இல்லை. அவர்கள் பேச்சாளராக இருந்தாலும், நிர்வாகிகளாக இருந்தாலும் எல்லோரும் ஒரே சாதிதான். எல்லோரும் தி.மு.க. என்ற இந்த சாதிதான். இதிலே இருக்கின்ற மனக்குறையை ஒரு பொது இடத்திலே, அதுவும் இதுபோன்ற முக்கியமான, எப்படி கட்சியை நடத்துவதற்கு நம்முடையை பேச்சாற்றலை பயன்படுத்தப்போகிறோம் என்று யோசிக்கின்ற இடத்தில் பேதங்களோடு நாம் திரும்பிச் செல்லக் கூடாது. அந்த பேத உணர்வுகள் நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்களிடம் ஏற்பட்டுவிடக் கூடாது’’ என்றார்.

தன் முன்னாலேயே தி.மு.க. பேச்சாளர்களிடம் கைத்தட்டலை பெற்ற புதுக்கோட்டை விஜயா, திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை தன் பேச்சில் வறுத்தெடுத்துவிட்டார் கலைஞர். என்னதான் முதல்வராக இருந்தாலும் அவரும் ஒரு பேச்சாளர்தானே!__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘கலைஞரின் பெற்றோர் சிலைகளை அகற்ற வேண்டும்!’’
- ராதாபுரத்தில் அடுத்த சர்ச்சை ஆரம்பம்

Radhapuram%201.jpgஒருவழியாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டியிருக்கிறார் முதல்வர். ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு ராதாபுரம் எம்.எல்.ஏ.வான அப்பாவு, தமிழக முதல்வரின் பெற்றோர் முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் பெயரை சூட்ட முயற்சித்து, பேருந்து நிலையம் முன்பு முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் சிலைகளையும் நிறுவினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்ப... பேருந்து நிலையத் திறப்பு விழாவுக்காக கடந்த வருடம் துணை முதல்வர் ஸ்டாலின் பெயரிடப்படாத பேருந்து நிலையத்தை திறந்து வைத்து விட்டு, சிலைகளைத் திறக்காமல் திரும்பினார்.

இதற்கிடையில் ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்டியே தீர வேண்டும் என்று கோரி, சுடலைமுத்து நாடார் என்ற தியாகி தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டு வந்தார். மேலும், ‘‘கலைஞரின் பெற்றோர் என்ன தியாகிகளா?’’ என்று கேட்டு ஜெயலலிதாவும் அறிக்கை விட்டார். ஆனாலும், ராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் சிவக்குமாரை வைத்து கலைஞரின் பெற்றோரின் சிலைகளை திறந்து விட்டார் அப்பாவு.

இந்நிலையில் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதிக்கு முதல்நாள், தியாகி சுடலைமுத்துவும், சிவாஜி முத்துக்குமார் என்பவரும், சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கே சென்று, ‘ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்’ என வலியுறுத்தி கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் தொடங்கினர். அவர்கள் மீது காங்கிரஸ் நிர்வாகி ஒருவரே புகார் கொடுக்க, கைது செய்யப்பட்டனர்.

Radhapuram.jpgஆனால், இ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற சிலரின் எதிர்ப்புக் குரல் கேட்கவே, ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்டியதோடு, தியாகி சுடலைமுத்து நாடார், சிவாஜி முத்துக்குமார் ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டிருக்கிறார் கலைஞர்.

விடுதலையான சிவாஜி முத்துகுமாரிடம் பேசினோம். “காமராஜர் பெயரை பேருந்து நிலையத்துக்கு வைப்பதற்காக போராடும் நிலை ஏற்பட்டதே தமிழ்நாட்டுக்கு அவமானம். அதே பேருந்து நிலைய வளாகத்தில், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் கக்கன் சிலைகளை வைக்க வேண்டும்’’ என்றார்.

87 வயதான தியாகி சுடலைமுத்து நாடாரிடம் பேசியபோது, “நான் உண்ணாவிரதம் இருந்த நோக்கம் நிறைவேறியுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கும், பத்திரிகைகளுக்கும் நன்றி’’ என்றார்.

இந்நிலையில் காமராஜர் பெயர் சூட்டப்-பட்டதை அடுத்து ராதாபுரம் பேருந்து நிலையத்-திலிருந்து முத்துவேலர் & அஞ்சுகத்தம்மாள் சிலைகளை அகற்றவேண்டும் என்று கோரிக்கை-கள் எழுந்துள்ளன.

தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் இதுபற்றி நம்மிடம், “வரும் தேர்தலில் இந்தப் பகுதியில் உள்ள நாடார் சமுதாய ஓட்டு வங்கியில் சேதாரம் வந்து விடக் கூடாது என்றுதான் காமராஜர் பெயரை சூட்டியிருக்கிறார் கலைஞர். அவருக்கு காமராஜர் மீது உண்மையிலேயே மதிப்பு இருந்தால் ஏன் இத்தனை கால தாமதம்? கலைஞரின் பெற்றோர் சிலைகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Allow demo in support of IAS man: HC

You Cant Ban Agitations But Can Only Regulate Them,Court Tells Police 

Pc0051500.jpgTIMES NEWS NETWORK

Chennai: In a small victory for suspended IAS officer C Umashankar,the Madras high court has rapped the city police for denying permission to the state unit of Bahujan Samaj Party (BSP) to hold a demonstration in his support.The court asked the authorities to give permission for a demonstration.
Justice V Dhanapalan,relying on a host of judicial pronouncements on the freedom of expression and the right to hold demonstrations,said the authorities cannot impose blanket ban on demonstrations.At best,they can regulate the agitations,by deploying police personnel at the venue,the judge said.
After Umashankar was placed under suspension last month,the state unit of the BSP approached the city police on July 24 for permission to hold a demonstration at Memorial Hall,which is the scheduled place for such demonstrations.The petitioner was called to appear for an inquiry on July 26,which he complied with.The city police refused permission on July 28.
Advocate P Vijendran filed the present petition on behalf of C Sakthivel,district secretary of the BSP,stating that the police had no authority to prohibit a democratic activity.
The demonstration was against a particular action of the government,and not in support of an individual,counsel argued.
N Senthilkumar,additional government pleader,however,argued that condemning the governments administrative action against an individual officer would create unrest and would affect its administrative functioning.It would amount to an indirect threat to the government officials who initiate disciplinary proceedings against errant and delinquent officials,he said.
Justice Dhanapalan,rejecting the governments stand,cited the Supreme Courts ruling in the famous S Rangarajans case,which said: Open criticism of government policies and operations is not a ground for restricting expression.We must practice tolerance to the views of others.Intolerance is as much dangerous to democracy as to the person himself. 
Justice Dhanapalan also said the Constitution had specifically mandated that no authority can prohibit a democratic activity,unless it is prohibited under Article 19(2) of the Constitution,which imposes certain reasonable restrictions.
Referring to an earlier judgment of the Madras high court,Justice Dhanapalan said the Madras City Police Act was a pre-Constitution enactment,and the powers were conferred on the authorities at a time when the country was under the colonial regime and when suppression of dissent was considered to be a legitimate policy of the state.Such powers cannot be exercised in the same manner after the enactment of the Constitution.
Justice Dhanapalan also pointed out that the earlier orders of the court made it clear that a mere apprehension that some disturbance may be caused in the meeting place would not be sufficient (to deny permission for the meeting ).If,at the meeting,police officers find anything illegal being done,it will be open to them to take necessary action,the judge said.
__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வில்லிவாக்கத்தை குறி வைப்பது...
கலைஞரா? ஸ்டாலினா?

Villivakkam%203.jpg


திடீர் சுறுசுறுப்பாகி இருக்கிறது சென்னை வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க.! ஏரியாவின் பல இடங்களிலும் தி.மு.க.வினர் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, ‘உங்கள் வீட்டுக்கு ரேஷன் பொருட்கள் ஒழுங்காகக் கிடைக்கிறதா? இலவச டி.வி. வாங்கி விட்டீர்களா? இலவச கேஸ் அடுப்பு வாங்கி விட்டீர்களா?’ என்றெல்லாம் அரசின் திட்டங்கள் குறித்து கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

எந்த வீட்டிலாவது சிறிய முணுமுணுப்பு கேட்டாலும்... அடுத்ததடுத்த நாட்களிலேயே அந்த வீடு நோக்கி இலவசங்களை இழுத்துச் சென்று கொடுக்கிறார்கள். 

Villivakkam%206.jpgவில்லிவாக்கம் பகுதி மக்கள் மீது மட்டும் தி.மு.க.காரர்களுக்கு ஏன் இந்த திடீர் பாசம்? தொகுதியில் இருக்கும் தி.மு.க. தலைகளிடம் விசாரித்தோம்.

‘‘என்ன ஏதுன்னு தெரியாதுங்க. ஒரு வாரத்துக்கு முன்னால, எங்களையெல்லாம் கூப்பிட்டாரு மாவட்டச் செயலாளரு. ‘நம்ம வில்லிவாக்கம் தொகுதியில இந்த முறை ஒரு முக்கிய வி.ஐ.பி., போட்டிப் போடப் போறாரு. அதுக்காக தொகுதியை தயார்படுத்துங்கன்னு கட்சி மேலிடத்துல இருந்து உத்தரவு வந்திருக்கு. அதுனால, வார்டுக்கு எட்டு எட்டு பேரா பிரிச்சுக்கங்க. தொகுதி முழுக்க போங்க. மக்களுக்கு முதல்ல இலவசங்கள் வந்து சேர்ந்துடுச்சான்னு கேளுங்க. அரசு தரப்பு மீது அவங்களுக்கு ஏதும் சங்கடங்கள் இருந்தாலும் கேளுங்க. அதெல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு, குறைகளை நிவர்த்தி பண்ண முடியும்னா செஞ்சிடலாம். இல்லைன்னா, அதிகாரிங்களை விட்டு செய்யச் சொல்லிடலாம். அதிகாரிங்களுக்கெல்லாம் ஏற்கனவே உத்தரவு போயிடுச்சு’னு சொன்னாரு.

அதனாலதான் களத்துல இறங்கிட்டோம். டி.வி., கேஸ் ஸ்டவ் கூட சமாளிச்சிடறோம். பட்டா இல்லைன்னு கேக்கறவங்களைப் பத்தி வருவாய்த் துறை அதிகாரிங்க கிட்ட சொன்னா மட்டும் கண்டுக்கமாட்டேங்குறாங்க’’ என்றவர்கள், ‘‘அனேகமாக தலைவர் கலைஞருக்காக தொகுதி தயார் பண்ணப்படுதுன்னுதான் நாங்க நினைக்கிறோம்... இல்லைன்னா, தளபதி மு.க.ஸ்டாலின்கூட இந்த முறை தொகுதி மாறி வந்து இங்க போட்டியிடலாம்...’’ என ஹாட் பிட்டையும் போட்டார்கள்.

கள நிலவரத்தை அறிந்தபடி தி.மு.க.வின் சில பிரமுகர்களைப் பிடித்தோம்.

Villivakkam%205.jpg ‘கடந்த மூன்று தேர்தல்களாக வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க. கூட்டணிதான் ஜெயித்து-வருகிறது. அந்த வகையில் இந்தத் தொகுதி தி.மு.க. தலைவர்கள் போட்டி போட பாதுகாப்பான தொகுதிதான். கடந்த தேர்தல் வரையில் இந்தத் தொகுதிதான் தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. ஆனால், தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் இந்தத் தொகுதியிலிருந்து சில ஏரியாக்களைப் பிரித்து, அம்பத்தூர் என்ற புதுத் தொகுதியை உருவாக்கிவிட்டனர். அதனால், கிட்டத்தட்ட ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களை உள்ளடக்கி இருந்த இந்தத் தொகுதியின் இப்போதைய வாக்களர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர்தான். ஆக, குறைந்த அளவுள்ள வாக்காளர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்களை தங்கள் பக்கம் அரவணைத்துக் கொண்டுவிட்டால், எளிதாக ஜெயித்துவிடலாம் அல்லவா? 

இங்கே மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபு ஒரு கோஷ்டியாகவும், இப்போது வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ரங்கநாதன் ஒரு கோஷ்டியுமாக செயல்படுகிறார்கள். ஆனால், முதல்வரோ, துணை முதல்வரோ போட்டியிடுவார்கள் எனத் தெரிந்தால் அடுத்த நொடியே கோஷ்டிகளை மறந்து ஒன்றாகிவிடுவார்கள். வழக்கம்போல புரசை-வாக்கம் தொகுதியில வி.எஸ்.பாபு போட்டிபோட... வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து பிரிந்த அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரங்கநாதன் நிறுத்தப்படலாம். 

ரங்கநாதனுக்கு அம்பத்தூர் ஏரியாவில் செல்வாக்கு உண்டு. ஆனால் இந்த முறை வில்லிவாக்கம் தொகுதியை காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஜவஹர்பாபு, டாக்டர் செல்லக்குமார், எஸ்.ஜி.விநாயக-மூர்த்தி என நிறையபேர் தொகுதி மேல கண் வைத்திருக்கிறார்கள். முதல்வரே போட்டியிட விரும்பினால், அவர்கள் என்ன செய்ய முடியும்?’’ என்கிறார்கள்.

முதல்வரோ, துணை முதல்வரோ போட்டியிடும் அளவுக்கு தி.மு.க.வுக்கு பாதுகாப்பானதுதானா வில்லிவாக்கம் தொகுதி?

‘‘தொகுதி சின்னத் தொகுதியா மாறிடுச்சுன்னு இந்தத் தொகுதியை பாதுகாப்பானதா நினைக்கலாம். ஆனா, அடிப்படை வசதிகள் எதுவுமே இந்தத் தொகுதியில் இல்லை. ரோட்டை விட ஒண்ணரை அடி பள்ளத்துல இருக்கு பஸ் ஸ்டாண்ட். மழை பெஞ்சா போதும், பஸ் ஸ்டாண்ட் வெள்ளக்-காடாயிடும். பக்கத்துலயே இருக்குற பால மாரியம்மன் கோயில் பகுதி பொதுக் கழிவறை ரேஞ்சுக்கு ஆயிடுச்சு. சாக்கடை நீர் வெளியேற்றப் பிரச்னை தொகுதி முழுக்க எதிரொலிப்பதால், துர்நாற்றம் இந்தத் தொகுதிக்கு அடையாளமாக இருக்கு. 

Villivakkam%204.jpgகொசுக்களும் மனிதர்களோடு போட்டிப்போட்டு வாழ்ந்துகிட்டு இருக்கு. புழல் ஏரியில் இருந்து நியூ ஆவடி ரோடு டேங்க்கிற்கு குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. அந்த குழாயின் இரண்டு பக்கமும் குடியிருக்கும் மக்கள் குழாய்க்குள்ளேயே எல்லாக் கடன்களையும் முடிக்கிறார்கள். சுகாதாரமில்லாமல் இருப்பதால், அந்த குழாய் பக்கத்தில் வாழும் பனிரெண்டாயிரம் குடும்பங்களை அகற்ற அரசு முயற்சித்து வருகிறது. அது பெரும் பிரச்னையாக இருக்கிறது. தொகுதிக்குள் ரவுடிகள் ராஜ்யம், கட்டுப்படுத்த முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. இப்படி மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இதையெல்லாம் ஆறுமாத இடைவெளிக்குள் தீர்த்து விட முடியுமா?’’ என்கிறார்கள் லோக்கல் சமூக ஆர்வலர்கள்.

தி.மு.க.வின் இந்த மூவ் அ.தி.மு.க.வுக்குத் தெரியுமா?

‘‘நாங்களும் கேள்விப்பட்டோம். எங்க கட்சிக்குள் சேகர்பாபு, நீலகண்டன் ஆகிய இருவர் கோஷ்டிக்கும் இருக்கும் பிரச்னைகளை மீறி, இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுமா என்பது தெரியவில்லை. அனேகமாக தொகுதி, கம்யூனிஸ்ட்களுக்குத்தான் ஒதுக்கப்படும்’’ என்று சுருதி குறைவாகவே பேசுகிறார்கள்.

முதல்வர் பார்வை வில்லிவாக்கத்தில் இருக்கிறதோ இல்லையோ... தி.மு.க.வினர் திடுமென தொகுதிக்குள் புகுந்து அள்ளிக் கொடுப்பதால், வாக்காளர்களுக்கு சந்தோஷம்தான்!
__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மீண்டும் ஓ !

7 votes

Gnani-inner.jpg
http://idlyvadai.blogspot.com/2010/08/blog-post_1252.html

தமிழ்நாட்டில் நிலவும் விசித்திரமான சமூக, அரசியல், பத்திரிகைச் சூழல் என் ‘ஓ’பக்கங்கள் பகுதிக்கு இதழியல் வரலாற்றில் இடம் தேடிக் கொடுத்திருக்கிறது. ஓர் எழுத்தாளரின் ‘பத்தி’ தொடர்ந்து வெவ்வேறு பத்திரிகைகளில் வருடக்கணக்காக வெளியாவது இதுவே முதல் முறை. கடந்த ஏழாண்டுகளில் இரண்டு பத்திரிகைகளில் இடம் மாறி இப்போது மூன்றாவதாக ‘கல்கி’ இதழுக்கு வந்திருக்கிறது. காரணங்கள் விமர்சனங்களைச் சகிக்காத அரசியல் சூழலும், கருத்துச் சுதந்திரத்தைவிட வணிகத்தை முதன்மைப்படுத்துகிற பத்திரிகைச் சூழலும் தான்.

கல்கி இதழில் நான் எழுதும் முதல் தொடர் பகுதி இதுவேயாகும். என்னுடைய இரண்டு சிறுகதைகள் எழுபதுகளில் கல்கியில் வெளிவந்திருக்கின்றன. அதில் ஒரு கதை ‘டெலிவிஷன்’. நேரடி ஒளிபரப்பில் பங்கேற்கும் ஒரு வேலையற்ற பட்டதாரி இளைஞன், யாரும் எதிர்பாராதபோது லஞ்சம் ஊழல் பற்றிப் பகிரங்கமாகப் பேசி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதைப் பற்றிய கதை. இது வெளியானதும் அப்போது தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்புகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டார்கள். வெவ்வேறு தேர்தல் சமயங்களில் சிறப்பு நிருபராக கல்கி சார்பில் சென்று தொகுதி நிலவரங்கள் பற்றி சில கட்டுரைகள் எழுதி யிருக்கிறேன். 1978-இல் நாங்கள் பரீக்‌ஷா நாடகக் குழு தொடங்கியபோது. முதல் நாடகம் பற்றி எழுதிய ஒரே வார இதழ் ‘கல்கி’தான்.

லஞ்சம் ஊழல் இல்லாத நேர்மையான அரசு நிர்வாகம் வேண்டும்; சக மனிதர்களிடம் அன்பும் சமத்துவமும் பேணும் வாழ்க்கை நெறி குழந்தையிலிருந்தே ஊட்டு விக்கப்படவேண்டும்; ஆபாசமும் வக்கிரமும் வன்முறையும் ஆதிக்கம் செலுத்தாத கலை இலக்கியச் சூழல் வேண்டும்... என்ற பார்வைகள்தான் நானும் ‘கல்கி’ இதழும் சந்திக்கும் புள்ளிகள். என்னை ‘ஓ’ போடவைக்கும் ஆச்சரியமான, அதிர்ச்சியான, அவலமான, அக்கறைக்குரிய விஷயங்களைப் பற்றி இங்கே வாசகர்களுடன் பகிர்வதே இந்தப் பகுதியின் நோக்கம். பல விஷயங்களைப் பற்றி நம் கருத்து உடன்படலாம்; மாறுபடலாம். ஆனால் எல்லாவற்றைப் பற்றியும் விவாதிப்பதற்கும் சிந்திப் பதற்குமான ஒரு கருத்துச் சுதந்திரச் சூழல் தேவை என்பதே நம்மை இணைக்கும் ஒற்றைப் பார்வை.


பொதுவாக நடிகர்களுக்குக் கூச்சம் இருக்கக்கூடாது என்பது நடிப்பின் தேவைகளில் ஒன்று. எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிக்க அப்போதுதான் முடியும். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, வசனகர்த்தாவாக நாடகத்திலும்

சினிமாவிலும் பெயர் வாங்கியவர்; நடிகராக அல்ல. ஆரம்ப நாட்களில் ஒரு சில நாடகங்களில் நடித்திருக்கிறார். அப்போதுதான் அவருக்குக் கூச்சம் விட்டுப் போயிருக்க வேண்டும்.

இன்று தமிழ்நாட்டில் எதைப் பற்றியும் எந்தக் கூச்சமும் இல்லாத அரசியல்வாதிகளில் முதன்மையானவர் அவர் ஒருவர்தான்.

அரசு திட்டங்களுக்கும் கட்டடங்களுக்கும் தலைவர்களின் பெயர் சூட்டும் வழக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அபூர்வ மாக இருந்ததை, எழுபதுகளில் தாம் ஆட்சிக்கு வந்தபிறகு மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியவர் கலைஞர் கருணாநிதி.

இதற்கு முன்பெல்லாம் அரசு திட்டங்களுக்கு பெரியார், அண்ணா பெயரையோ அஞ்சுகம் அம்மையார் பெயரையோ முத்துவேலர், முத்துலட்சுமி பெயர்களையோ சூட்டிக்கொண்டிருந்தவர், இப்போதெல்லாம் தம் பெயரையே சூட்டிக் கொண்டிருக்கிறார். கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம், கலைஞர் மாளிகை என்று பெயர்கள் சூட்டப்படுகின்றன.

அரசாங்கத்தின் ராணி மேரி மகளிர் கல்லூரியில் புதிய கட்டடத்துக்குத் தம் பெயரைச் சூட்டிவிட்டு தானே அதைத் திறந்தும் வைத்திருக்கிறார். ஒப்புக்காக அதைத் திறக்கப் பேராசிரியர் அன்பழகனாரைக் கூட அழைக்கவில்லை. இன்னும் பாக்கியிருப்பது தமக்கான சிலை, தம் உருவப்படம், தம் பெயரில் அருங் காட்சியகம்... இவற்றையும் அவரே திறந்து வைப்பதுதான்.

கலைஞர் பெயர் சூட்டப்பட்ட வீட்டு வசதி திட்டம், மத்திய அரசின் நிதி உதவியுடன் நடக்கிறது என்று கூட்டணியை ‘வலி’க்கச் செய்யும் ஒரு பேச்சை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதும், அதற்கு கருணாநிதி ஒரு விரிவான பதில் அறிக்கை வெளியிட்டார். கலைஞர் வீட்டு வசதி திட்டம் முழுக்க மாநில நிதியில் நடக்கிறது. மத்திய அரசின் இந்திரா காந்தி திட்டத்துடன் அதை இளங்கோவன் குழப்பிக்கொண்டு விட்டார் என்பதுதான் அறிக்கையின் சாராம்சம். ஆனால் மாநில அரசு நிதியில் நடப்பதால், அதற்கு தம் பெயரை ஏன் சூட்ட வேண்டும் என்பது பற்றி பதிலே கிடையாது.

இதில் இன்னொரு பிரச்னை என்ன வென்றால் கலைஞர் என்பதை தம் பெயர் என்று கலைஞர் கருணாநிதியே நம்பத் தொடங்கிவிட்டார் என்பதுதான். அதனால் தான் ஜெயலலிதா தன்னைக் கருணாநிதி என்று குறிப்பிட்டுப் பேசுவதைக் கண்டித்து ஒரு பொதுக் கூட்டத்தில் பொரிந்து தள்ளியிருக்கிறார். ‘என் வயது என்ன, உன் வயது என்ன’ என்றெல்லாம் ஏகவசனம் வேறு. கூடவே ‘நான் வயதில் பெரியவன் என்பதால் உன்னைக் குழந்தையிலிருந்தே எனக்குத் தெரியும் என்பதால் ஏகவசனத்தில் கூப்பிடும் உரிமை எனக்கு உண்டு’ என்று சமாதானம் வேறு.

ஒருவரை அவர் பெயர் சொல்லி அழைப் பது தவறு என்ற விசித்திரமான பண்பாடு தமிழக அரசியலில் மட்டும்தான் இருக்கிறது. இதில் இடதுசாரிக் கட்சிகளைத் தவிர மீதி எல்லா கட்சிகளும் தங்கள் தலைவர்களுக்கு அடைமொழி சூட்டும் கலாசாரத்தில் விழுந்திருக்கின்றன.

தமிழ்நாட்டுக்கு வெளியே பத்திரிகையாளர்கள் பிரதமரை ‘மிஸ்டர் மன்மோகன் சிங்’ என்றோ மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர் என்றோ முகத்துக்கு நேரே கூப்பிடுகிறார்கள். இங்கே அப்படிப் பேசினால் உதை விழும். அலுவலகத்துக்கு ஃபோன் செய்து நிருபரைப் பற்றிப் புகார் செய்வார்கள்.

ஜெயலலிதா தம்மைக் கருணாநிதி என்று அழைப்பது பண்பாட்டுக் குறைவு என்று அறிக்கை விடுத்திருக்கும் இதே கருணாநிதி தான், தொடர்ந்து தம் ஆட்சியை மைனாரிட்டி தி.மு.க அரசு என்று ஜெயலலிதா பேசினால், அவரை திருமதி ஜெயலலிதா என்று அழைப்பேன் என்று பண்பாடு பொங்கித் ததும்பும் ஓர் எச்சரிக்கையை வெளியிட்டார். ஜெயலலிதா திருமதியா இல்லையா என்பதற்கும் தி.மு.க. மைனாரிட்டி அரசா இல்லையா என்பதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

உலகத்தில் எந்த நாட்டிலும் இங் குள்ளது போல அரசியல்வாதிகளின் பெயர் சூட்டும் கலாசாரம் இல்லை. மிகப் பெரும் தலைவர்களின் பெயர்களை விமான நிலை யத்துக்கோ நூலகத்துக்கோ சூட்டும் போதுகூட அவர் இறந்த பிறகே சூட்டுகிறார்கள். சிலைகள் வைப்பதும் அப்படித்தான்.

ஜாதிச் சண்டைகள் வருகின்றன என்பதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மாவட்டங்கள் பெயர்களில் இருந்த தலைவர்கள் பெயர்களையெல்லாம் நீக்கி உத்தரவிட்டவர் கலைஞர் கருணாநிதி. தம் நெஞ்சறிவது பொய்யற்க என்ற கூச்சம் இன்னும் கொஞ்சமேனும் அவருக்கு மீதம் இருக்குமானால், உடனடியாக அரசு திட்டங்கள், கட்டடங்கள் பெயர்களிலிருந்து தம் பெயரை நீக்க அவர் உத்தரவிட முன்வரவேண்டும். இல்லாவிட்டாலும் பின்னாளில் ஆட்சி கைமாறும்போது, இந்தப் பெயர்களெல்லாம் அடுத்த ஆட்சியாளரால் நீக்கப்படும் என்ற உண்மையாவது அவருக்கு உறைக்க வேண்டும்.

இன்னும் நூறு வருடம் கழித்து வரும் தமிழ்க் குழந்தைகள் இப்படித் தம் பெயரை தாமே சூட்டி மகிழ்ந்த தலைவர்கள் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தயவுசெய்து கற்பனை செய்து பாருங்கள். கூச்சமாக இருக்கும்.
கல்கி, ஞாநிக்கு வாழ்த்துகள்__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மக்கள் பணத்துல இப்படியா திம்பானுங்க ?


எவ்வளவுதான் திட்டினாலும் நம்ம அரசியல்வியாதிகளுக்கு உரைக்கவே மாட்டேங்குது.. எருமை மாட்டு மேல கல்லெறிஞ்ச மாதிரி.. “நீ என்ன வேண்ணாலும் செஞ்சுக்க.. சொல்லிக்க.. திட்டிக்க.. நாங்க அப்படித்தான் ஊர்க் காசுலதான் ஊர் மேய்வோம்” என்கிறார்கள் இவர்கள்.

எதுல, எதுலதான் திருடுறதுன்னு விவஸ்தையே இல்லாம போயிருச்சு இவனுகளுக்கு.. சுதந்திர தினம், குடியரசு தினத்துல நமக்கு ஒரு நாள் லீவை கொடுத்திட்டு, நம்ம காசுல இவனுக விருந்து வைச்சு கொண்டாடுறானுக பாருங்க..

இன்னிக்கு வந்த ஜூனியர் விகடன்ல இந்தக் கட்டுரையைப் படிச்சவுடனேயே பி.பி. உச்சத்துக்குப் போயிருச்சு.. ஒரு குவார்ட்டரை வாங்கி ராவா அடிச்சுத்தான் பி.பி.யை குறைச்சேன்.. நீங்களும் படிச்சுப் பாருங்க..

இனி ஜூனியர் விகடன் கட்டுரை..

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றன. இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியும் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சிகள், சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தில் அரசின் சார்பில் நடத்தப்படுவது வழக்கம். இந்த தினங்களில் மத்திய அரசில் ஜனாதிபதியும், மாநில அரசுகளில் கவர்னரும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள்.

எப்போது இந்த நடைமுறை அமலுக்கு வந்தது என்பது தெரியவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலில் இந்த விருந்து நிகழ்ச்சிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இந்த தேநீர் விருந்துகளை கூட்ட “இது எதற்கு? இதனால் என்ன பயம்..? இதற்காக எவ்வளவு செலவு?” என்ற கேள்விகளுடன் கவர்னர் மாளிகையையும், கோட்டையையும் ஆராய்ந்தோம்.

தமிழகத்தில் பரந்து விரிந்து கிடக்கும் கவர்னர் மாளிகையின் பெரிய புல்வெளியில் தேநீர் விருந்து. இதற்காக கவர்னர் மாளிகையை மலர் மற்றும் அலங்கார விளக்குகளால் ஜொலிக்க வைத்தார்கள். புல்வெளியில் வட்ட வடிவில் போடப்பட்ட மேஜைகளில் விருந்து நிகழ்ச்சி நடைபெற.. நடுநாயகமாக கவர்னரும், முதல்வரும் பங்கேற்பார்கள்.

மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், துணைவேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், பிரபலங்கள் என்று 48 பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விருந்துக்கான அழைப்பு போகும்.

தேநீர் விருந்து என்றதும் வெறும் டீ, காபி என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. குளிர்பானம், காஜர் அல்வா, சாக்லேட் பிரெளனி, ஜிலேபி, பிஸ்தா கேசரி போன்ற இனிப்பு வகைகளும், டால் கச்சோரி, வெங்காயம் மற்றும் தக்காளி சட்னியுடன் கூடிய ச்சீஸ் க்ராய்சன்ட், புளிச் சட்னியுடன் கூடிய சமூசா, மின்ட் சட்னியுடன் கூடிய டோக்லா போன்ற கார வகைகளோடு வெண்ணிலா ஐஸ்கிரீம், டீ, காபி போன்ற அயிட்டங்கள் அனைத்தும் பரிமாறப்படும். இந்த அயிட்டங்கள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ஆர்டர் செய்யப்படும். 3000 பேருக்கு விருந்து ஆர்டர் செய்வார்கள்.

இந்த விருந்துக்கான செலவுகளை தமிழக அரசின் பொதுத்துறைதான் பொறுப்பேற்றுச் செய்கிறது. அழைப்பிதழ் அச்சடித்தல் தொடங்கி, விருந்து முடியும்வரையில் உள்ள எல்லா ஏற்பாடுகளும் இவர்கள் பொறுப்புதான். நடனக் கலைஞர்களுக்குப் பொன்னாடை, பரிசுப் பொருட்கள், மேடை அலங்காரம், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு ஊதியம், போக்குவரத்துச் செலவு, ஊக்கத் தொகை, தற்காலிகப் பணியாளர்களுக்குத் தினக்கூலி என்று விருந்துக்காக நிறைய செலவாகும்.

கடந்தாண்டுக்கான சுதந்திரம் மற்றும் குடியரசு தின விருந்துக்காக தலா 3000 அழைப்பிதழ்கள் அச்சாயின. அரசு அச்சகத்தில் அச்சானாலும் இதற்காக 34 ஆயிரத்து 503 ரூபாய் செலவானது. இவற்றை விநியோகம் செய்வதற்காக 10,836 ரூபாய் செலவாகியிருக்கிறது.

கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளை தஞ்சாவூரில் இருக்கும் தென்னகப் பண்பாட்டு மையம் செய்யும். கடந்தாண்டு இந்த நிகழ்ச்சிகளுக்காக மட்டும் 1,72,960 ரூபாய் ஒதுக்கப்பட்டது. அப்போது தேநீர் விருந்துக்காக ஜி.ஆர்.டி.கிராண்ட் ஹோட்டலில் உணவுப் பொருட்கள் ஆர்டர் தரப்பட்டது.

இப்படி கடந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு 4,92,225 ரூபாயும், குடியரசு தினத்துக்கு 5,98,619 ரூபாயும் செலவாகியிருக்கிறது.

1994 முதல் 2009-ம் ஆண்டு வரை ஒவ்வொரு வருட சுதந்திர தின தேநீர் விருந்துக்காகவும் செலவழிக்கப்பட்ட ஒட்டு மொத்தத் தொகை 75,93,000 ரூபாய்.

இதே போல குடியரசு தின விருந்து செலவு 75,75,000 ரூபாய். இரண்டையும் சேர்த்தால் கடந்த 16 ஆண்டுகளில் 1,51,71,265 ரூபாய் செலவாகியுள்ளது.

ஆண்டு வாரியாக செலவழிக்கப்பட்ட தொகையைப் பாருங்கள்..

ஆண்டு – சுதந்திர தினச் செலவு – குடியரசு தினச் செலவு

1994 – 1,05,702 – 97,660

1995 – 1,98,609 – 1,28,359

1996 – 6,29,643 – 4,70,115

1997 – 6,85,866 – 6,01,452

1998 – 7,71,003 – 6,06,399

1999 – 6,08,732 – 7,43,266

2000 – 6,94,306 – 7,72,607

2001 – 5,35,712 – 8,61,075

2002 – 4,39,712 – 5,47,154

2003 – 4,33,274 – 5,03,654

2004 – – 1,87,563

2005 – 4,22,648 -

2006 – 3,52,441 – 4,96,621

2007 – 5,38,026 – 5,74,887

2008 – 6,86,005 – 5,87,230

2009 – 4,92,225 – 5,98,919

இனி நான்..

யாரோ ஒரு புண்ணியவான் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் இந்த விவரங்களைப் பெற்றிருக்கிறார் போலிருக்கிறது..

பாருங்க.. இந்த அரசியல் வியாதிகளுக்கு மூணு மணி நேரம் உக்காந்து டீ சாப்பிடுற செலவு 7 லட்சம் ரூபாய்ன்னா நாடு என்னங்க ஆகுறது..?

இவனுக சொந்தக் காசுன்னு இப்படி செலவு செய்வானுகளா..? கொஞ்சமாவது யோசிக்க மாட்டானுங்களா இந்தக் கஸ்மாலங்க..? டீ, காபி, பிஸ்கட்ன்னு முடிச்சிட்டுப் போறதை விட்டுட்டு பிஸ்தா கேசரி வேணுமாம்ல இந்த அயோக்கிய ராஸ்கல்களுக்கு..?

ஊனமுற்றவர்களுக்கு உதவித் தொகையாக கொடுப்பது மாதம் வெறும் 300 ரூபாய்.. ஆதரவற்ற விதவைகளுக்கு உதவித் தொகையாக வழங்குவது மாதம் வெறும் 400 ரூபாய்.. வேலையற்ற இளைஞர்களுக்குக் கொடுக்கும் உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்று ‘அள்ளி’ வழங்குகின்ற இந்த அயோக்கியர்கள்தான், ஒரு நாளில் முழுங்குவதற்கு மட்டும் லட்சக்கணக்கில் மக்கள் பணத்தில் செலவு செய்கிறார்கள்.

வேலையற்ற இளைஞர்கள் 200 ரூபாயை வைத்து ஒரு மாதத்தில் என்ன செலவு செய்துவிடுவார்கள்..? ஆதரவற்ற விதவைகள் 400 ரூபாயில் குடும்பம் நடத்தி விடுவார்களா..? உடல் ஊனமுற்றவர்கள் 300 ரூபாயில் தங்களுடைய உடல் உபாதைகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொள்வார்களா..? இதையெல்லாம் இந்த அரசியல்வியாதிகள் யோசிக்க மாட்டார்களா..?

சொந்த வீட்டில் இருந்தாலும் அதற்காக வாடகைப் படியையும், வெள்ளையடிக்க.. வீட்டின் பரமாரிப்பு, சோபா செட்டுக்களை வாங்கிப் போட என்று மக்கள் பணத்தில் கை வைத்து சுரண்டியெடுக்கும் இந்தக் கேடு கெட்டவர்களை என்னவென்றுதான் சொல்வது..?

3000 பேரை கூப்பிடுறோம்.. அதுனால.. என்று இழுக்காதீங்கடா பரதேசிகளா.. பன்னாடைகளா..? உங்களை எவன்டா இப்போ பார்ட்டி வைச்சு கொண்டாடச் சொன்னான்..?

இந்தியால அரசியல்வியாதிகளுக்கு மட்டும்தான் சுதந்திரம்.. மக்களுக்கு இல்லைன்றதுதான் உலகத்துக்கே நல்லாத் தெரியுமே.. அதான் காலைல ஊர்வலம் நடத்தி, கொடியேத்தி நீங்களே கொண்டாடிக்கிறீங்களே.. அந்தச் செலவு பத்தாதா..? வட்டமா உக்காந்து தின்னு வேற எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கணுமா?

நாசமாப் போகப் போறீங்கடா..

Read more: http://truetamilans.blogspot.com/2010/08/blog-post_19.html#ixzz0y3BKTpIL__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_09_2010_014_002-saxsena.jpg?w=300&h=90

இளம் பெண்ணை தாக்கிய வழக்கில் சன் டிவி சக்சேனா

நேற்றைய இரவு ஜெயா டிவி நியூசில் தீபா என்ற பெண்ணின் பேட்டியையும், இவரின் அம்மாவின் பேட்டியையும் காண நேர்ந்தது.

சன் டிவியின் மேலாளர் சக்‌ஷேனாவுக்கும், தீபாவின் தம்பிக்கும் பிரச்சினையானதாகவும், அதன் காரணமாய் நாற்பது ஆட்டோக்களில் ரவுடிகள் வந்து, தீபா குடும்பத்திற்கு உதவ வந்தவர்களின் ஹோட்டலைத் தாக்கியதாகவும், தீபா மற்றும் அவரின் தம்பியை அடித்து உதைத்ததாகவும் சொன்னார் தீபா.

தீபாவின் கையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இது பற்றிய எந்த ஒரு செய்தியும் எந்த நாளிதழிலும் வரவில்லை. ப்ளாக்கர்ஸ் யாரும் எழுதவும் இல்லை. ஜெயா டிவியில் மட்டுமே செய்தி வெளியானது.

“ எந்த டிவியும் வராது, ஜெயா டிவி மட்டும் தான் வருவார்கள் என்று சக்‌ஷேனா சொன்னார்” என்று தீபா பேட்டியில் சொன்னார்.

இதுபற்றிய செய்தியை கீழே இருக்கும் லிங்கில் படித்துப் பார்க்கவும்.

http://www.jayanews.co.in/detailpagenew.aspx?NEWS=c4a5b9bf-a246-4bcc-99d2-7b336a293be7__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ராஜா vs ராஜேந்திரன்!

1.jpg

ராஜாவா? ராஜேந்திரனா? கிங் ஆஃப் சேலம் யார்? -இதுதான் இப்போ தைக்கு சேலம் உ.பி.க்கள் எழுப்பும் கேள்வி. அந்தளவு இருதரப்பும் கோஷ்டி பூசலால் முட்டிக் கொண்டு நிற்க இது சமீபத்தில் சேலம் வந்த ஸ்டாலின் வரவேற்பில் பூதாகரமாய் வெடித்து உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஈரோடு கூட்டத்திற்கு செல்ல சேலம் கமலாபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஸ்டாலினை வரவேற்க பனைமரத்துப்பட்டி எம்.எல்.ஏ. ராஜேந்திரன் செல்ல, "நீங்க போகக்கூடாது' என வீரபாண்டி எம்.எல்.ஏ. ராஜா பார்வையாளர் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினார். "என்னை தடுக்க நீங்க யார்?' என ராஜேந்திரன் திருப்பிக் கேட்க ராஜா மீண்டும் தடுக்க இவர்களின் நீயா? நானா? சண்டையால் விமான நிலையமே பரபரப்பானது.

என்ன நடந்தது? அங்கிருந்த உ.பி.க்களிடம் கேட்டோம்.

""ராஜா தன்னோட ஆதரவாளர்களுடன் வெயிட்டிங் ரூம்கிட்ட இருந்தாரு அப்போ ராஜேந்திரன் தன்னோட ஆதரவாளர்களோட வந்தாரு. உடனே ராஜா, ராஜேந்திரனை "போகக் கூடாதுன்னு' தடுக்க இவர் மீறிப் போனாரு. நான் சொல்ல சொல்ல போறாங்களானு ராஜா சத்தம் போட, கடுப்பான ராஜேந்திரன் "யார்கிட்ட சத்தம் போ டுறீங்க'ன்னு முறைச்சுக்கிட்டே திரும்பி வந்தாரு. அங்க இருந்த வங்க மட்டும் சமாதானம் செய்ய லேன்னா ஸ்டாலின் முன்னாடியே அடிதடி வரைக்கும் போயிருக்கும்' என்றனர் பீதியோடு.
1.jpg
இது உண்மையா? என அறிய பனைமரத்துப்பட்டி எம்.எல்.ஏ. ராஜேந்திரனிடம் பேசினோம். ""அஞ்சு பேருதான் ஓடுதளம் வரை செல்ல ஏர்போர்ட் அனுமதி தந் திருக்குனு' ராஜா சொன்னாரு. நான் ஏர்போர்ட் அத்தாரிடிகிட்ட கேட்டப்போ அப்படிலாம் இல் லைன்னு சொன்னாங்க. இருந் தாலும் நான் அங்க அமைதி யாத்தான் இருந்தேன். திடீர்னு பார்த்தா ராஜா கூட 50 பேருக்கு மேல திபுதிபுன்னு உள்ளே போனாங்க. கட்சி யில் உறுப்பினரா இல்லா தவங்க கூட உள்ள போ னாங்க. அப்புறம்தான் நம்மள வேணுமின்னே அவாய்ட் பண்றாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு நானும் தடா லடியா துணை முதல்வரை வரவேற்க உள்ளே போ னேன். அவ்வளவுதான்' என மேற்கொண்டு விரிவாய் பேச தயங்க அவரின் ஆதரவாளர் களிடம் கேட்டோம்.

"ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மட்டுமல்ல, மாநில இளைஞரணி துணை செயலாளர் துணை முதல் வர் வரும்போது அண்ணன் அங்க வரவேற்க இல்லாம போனா ஸ்டாலின்கிட்டே கெட்ட பேரு வரும்னுதான் ராஜா தடுத்து இருக்காரு. இதேபோலதான் ஒரு மாசத்துக்கு முன்னாடி ராஜேந் திரன் தன்னோட பனைமரத்துப் பட்டி தொகுதியில் உள்ள குமார கிரி கோயிலுக்கு. நமக்கு நாமே திட்டத்தில் தார்ச்சாலை போடும் வேலையை தொடங்கி வைத்து விட்டு போனாரு. "நான் இருக்கும் போது அவரெப்படி தொடங்கி வைக்கலாம்னு' சொல்லி மறுபடி யும் ஒரு பூஜை போட்டாரு ராஜா. முதல்வர் சேலம் வருகையப்போ அஸ்தம்பட்டியில் ராஜேந்திரன் பேர் போட்டு வச்சு இருந்த வளைவு பேனரை அமைச்சர் வீர பாண்டியார் சொல்லி ராஜா ஆளுங்க அதை கிழிச்சாங்க. முதல்வர் வரும்போது பிரச்சினை வேணாம்னு தான் இன்னும் இருபது இடத்துல வைக்க இருந்த பேனரை கூட வைக்காம அஸ்தம்பட்டி காவல்நிலையத்துல புகார் மட்டும் குடுத்துட்டு நிறுத் திக்கிட்டோம். ஆனா தன்னை தாண்டி ராஜேந்திரனுக்கு செல் வாக்கு பெருகிறத பொறுக்காமத் தான் ராஜா இப்படிப் பண்ணி னாரு'னு குமுறியவர்கள் தொ டர்ந்து "ராஜேந்திரன் ஸ்டாலின் ஆதரவாளர் என்பதால் எங்கே பிரச்சனை பெருசாகிடுமோனு ஏர் போர்ட் உள்ளே வந்த ராஜா "நான் வேணும்னு உங்கள தடுக்கல கூட் டம் அதிகம் வேணாம்னு நினைச்சு தான் சொன்னேன்'னு காம்ப்ர மைஸ் பேசுறாரு'' என்றனர்.

""ஸ்டாலினிடம் கெட்ட பெயர் வாங்கணும்னு தான் நீங்கள் ராஜேந்திரனை தடுத்த தாக கூறுகிறார்களே?'' என்றோம் வீரபாண்டி ராஜாவிடம்.

""அந்த அவசியம் எனக்கில்லை'' கோபத் தோடு பேசத் தொடங் கிய ராஜா, ""ஏர்போர்ட்ல தடுத்தா சென்னையில் போயி இவங்க துணை முதல்வரை பாக்குறது இல்லையா இல்ல தனியா அவரை ரூம்ல போயி தான் பாக்காம இருக்காங் களா? நாங்க யார்கிட்ட யாவது ராஜேந்திரனுக்கு முக்கியத்துவம் குடுக்கா தீங்க'னு சொல்றமா? இல்லையே நாங்க யாரையுமே ஏர்போர்ட்ல தடுக்க கிடையாது'' என்றவர் தொடர்ந்து "இவர் கூட தான் என் படம் கூட இல்லாம பேனர் வைக்கிறாரு. அத நான் பெருசா எடுத்துக்கலையே. இவர் பேனர் வச்சுதான் எனக்கு அடையாளம் கிடைக்கணும்னு இல்லை. இந்த ராஜாவ சேலம் மக்களுக்கு அடையாளம் தெரியும். மாவட்ட மாநகர ஒன்றிய கூட்டத்தில் பேசி முதல்வர் வரப்போ யார் யாருக்கு எந்த எந்த இடத்துல கட் அவுட் பேனர் வைக்கணும்னு ஏரியா பிக்ஸ் பண்ணி தந்துட்டாங்க. அதன்படி கட்சித் தொண்டர்கள் இரவு பகல் பாக்காம வேலை செய்யும் போது இவர் பாட்டுக்கும் போயி இன்னொருத்தர் ஏரியால "வளைவு' வச்சா யார்தான் ஏத் துக்குவாங்க. ஒரு மொராலிட்டி வேணாமா? இவரு தொழிற்சங்கத்துல. இளைஞ ரணியில பொறுப்புல இருக்கலாம். ஆனாலும் கட்சி மாவட்ட நிர்வாகத்துல எடுக்கிற முடிவுக்கு கட்டுப்படணும் அதைத்தாண்டி இவர் பிரியப்பட்டாருனா எங்ககிட்ட வந்து இடம் ஒதுக்கிதாங்கன்னு கேட்டா ஒதுக்கி தந்துருப்போம் எல்லாமே தலைவருக்காக (கலைஞர்) தானே. வாய்தாராணி ஆர்ப்பாட்டத்துலகூட தனியா நின்னுகிட்டு இருந்தாரு. நான்தான் கூப்பிட்டு மேடையில மைக் தந்து பேசச் சொன்னேன். மற்றபடி அவரு தான் (ராஜேந்திரன்) பெரிய மனுசனாக ணும்னு என்னென்னமோ சொல்லிக் கிட்டு இருக்காரு. அதையெல்லாம் நான் பெரிசா எடுத்துக்கல'' என்றார் கூலாக.

சேலம் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை விழாவில் ""அனை வரும் ஒற்றுமையாய் இருந்தால் தமிழகத்திற்கு பல நன்மைகள் உண்டு'' என கலைஞர் பேசினார். இது கட்சிக்குள்ளும் தான் என புரிந்து கொள்வார்களா உரசிக் கொள்ளும் எம்.எல்.ஏ.க்கள்?

அப்படியா!

அந்த முன்னாள் முதல் குடிமகனை மேடம் சேனலுக்காக பேட்டியெடுக்க பகீரத முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின் றன. தனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக் காமல் போனதற்கு தமிழகத்தின் ஆட்சித் தலைமைதான் காரணம் என்றும், மொழி மாநாட்டிற்கு அழைக்காததற்கும் அதே கார ணம்தான் என்றும் அவர் வாயால் சொல்ல வைக்க வேண்டும் என்பதுதான் பேட்டியின் நோக்கமாம். அப்படியெல்லாம் பொய்சொல்ல மாட்டேன் என மறுத்துவிட்டாராம் முன்னாள் முதல் குடிமகன்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

viewer?pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxpZGx5dmFkYWkyMDA3fGd4OjY4OTEzMzM1OGRiNDM2ZDk&docid=06ce4f770a72f701d44ced3159fad8af%7Cb848ee963d0300b980781408d765a991&a=bi&pagenumber=1&w=789
viewer?pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxpZGx5dmFkYWkyMDA3fGd4OjY4OTEzMzM1OGRiNDM2ZDk&docid=06ce4f770a72f701d44ced3159fad8af%7Cb848ee963d0300b980781408d765a991&a=bi&pagenumber=2&w=789


-- Edited by devapriyaji on Sunday 5th of September 2010 06:43:10 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

viewer?pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxpZGx5dmFkYWkyMDA3fGd4OjY4OTEzMzM1OGRiNDM2ZDk&docid=06ce4f770a72f701d44ced3159fad8af%7Cb848ee963d0300b980781408d765a991&a=bi&pagenumber=3&w=789

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

viewer?pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxpZGx5dmFkYWkyMDA3fGd4OjY4OTEzMzM1OGRiNDM2ZDk&docid=06ce4f770a72f701d44ced3159fad8af%7Cb848ee963d0300b980781408d765a991&a=bi&pagenumber=4&w=789

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

viewer?pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxpZGx5dmFkYWkyMDA3fGd4OjY4OTEzMzM1OGRiNDM2ZDk&docid=06ce4f770a72f701d44ced3159fad8af%7Cb848ee963d0300b980781408d765a991&a=bi&pagenumber=5&w=789

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

viewer?pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxpZGx5dmFkYWkyMDA3fGd4OjY4OTEzMzM1OGRiNDM2ZDk&docid=06ce4f770a72f701d44ced3159fad8af%7Cb848ee963d0300b980781408d765a991&a=bi&pagenumber=6&w=789

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

viewer?pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxpZGx5dmFkYWkyMDA3fGd4OjY4OTEzMzM1OGRiNDM2ZDk&docid=06ce4f770a72f701d44ced3159fad8af%7Cb848ee963d0300b980781408d765a991&a=bi&pagenumber=7&w=789

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜன்னல் வழியே 
கருணாநிதி காமராஜுமல்ல, கர்ண மகாப் பிரபுவுமல்ல ! – துர்வாசர்

கருணாநிதிக்கு அடிக்கடி தன்னை ‘நேர்மையின் திருவுருவம்’ என்று உலகத்துக்கு காட்டிக் கொள்ளும் அடங்காத ஆசை ஏற்படுகிறது. ஒருவன் தனக்குத்தானே ‘நேர்மையாளன்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்துக் கொண்டால், அவனைப் பார்த்து உலகம் எள்ளி நகையாடும். 
மகாத்மா காந்தி தன்னைத்தானே ‘மகாத்மா’ என்று சொல்லிக் கொள்ளவில்லை. ‘மகாத்மா’ என்ற பட்டம் உலகம் கொடுத்தது. ‘காமராஜ் ஊழலில்லாத ஆட்சியைத் தந்தார்’ என்று இன்றும் ஜனங்கள் காமராஜை நினைவு கூர்கிறார்கள். ஒருநாளும் காமராஜ், தன்னைத்தானே ‘நான் நேர்மையாளன்’ என்று கொட்டடித்துக் கொண்டு திரிந்தது கிடையாது. ‘நேர்மையானவர்’ என்பதை ஜனங்கள் சொல்ல வேண்டும். 

கட்சிக்காரர்களைத் தவிர வேறு யாரும் கருணாநிதியைப் புகழ மாட்டேன் என்கிறார்கள். அதனால் கருணாநிதி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார். 

கருணாநிதிக்குத் தன்னைப் பற்றிப் பல தவறான உயர் மதிப்பீடுகள் உண்டு. தான் ஒரு மிகச் சிறந்த இலக்கியவாதி, நேர்மையாளன், மிகச் சிறந்த கவிஞர், மிகச் சிறந்த முதலமைச்சர் என்று தன்னைப் பற்றி, அளவுக்கதிகமான மதிப்பீடுகளை வைத்துக் கொண்டு, படாதபாடுபடுகிறார். 

‘நேர்மையான முதல்வர்’ என்றால் காமராஜும், பக்தவத்சலமும்தான் ஜனங்களுக்கு ஞாபகத்துக்கு வருவார்கள். கருணாநிதி மிகச் சிறந்த கதை – வசனகர்த்தாவாக இருந்தது பராசக்தி, மனோகரா காலத்தில். பராசக்தி, மனோகராவைப் போல் அவரது உளியின் ஓசையோ, மண்ணின் மைந்தனோ, கண்ணம்மாவோ வசனத்துக்காக ஓடவில்லை. இந்தத் திரைப்படங்கள் பராசக்தி, மனோகரா அளவுக்கு வெற்றிகரமான படங்களல்ல. வந்த சுவடு தெரியாமல் ஓடிவிட்ட படங்கள் இவை. இவர் முதல்வராகவோ, ஒரு கட்சியின் தலைவராகவோ இல்லாவிட்டால், இவரது கதை – வசனத்துக்கு எவனாவது 50 லட்சம், 70 லட்சம் என்று அள்ளிக் கொடுப்பானா? 

மிகச் சிறந்த எழுத்தாளன் என்று பெருமை கொண்டாட புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி, கு. அழகிரிசாமி... என்று இலக்கியத்துக்காகப் பாடுபட்ட பலர் இருக்கிறார்கள். வெகுஜன எழுத்தாளர்கள் வரிசையில் கூட கருணாநிதியின் எழுத்து வராது. கல்கி, ஜெயகாந்தன், அகிலன், நா.பார்த்தசாரதி, பாலகுமாரன்... என்று ஒரு பெரிய வரிசையே இருக்கிறது. இதற்காகவும் கருணாநிதி பெருமைப்பட முடியாது.
பேச்சாளர்கள் என்றால், இதிலும் கருணாநிதிக்கு முதலிடத்தையோ, நான்காவது இடத்தையோ கூட தூக்கித் தந்துவிட முடியாது. தி.மு.க.வில் அந்தக் காலத்திலேயே அண்ணாதுரை, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன் இவர்களைத்தான் சிறந்த பேச்சாளர்கள் என்பார்கள். காங்கிரஸில் சின்ன அண்ணாமலையை நல்ல பேச்சாளர் என்பார்கள். அரசியலுக்கு அப்பால் கி.வா.ஜ., திருக்குறள் முனுசாமி என்றுதான் பட்டியலிட முடியும். 

கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் மாறி மாறி முதல்வர்களாக வருகிறபோது, அவர்களுக்கு விழா எடுப்பதையும், ‘அவர்களை விட்டால் தமிழ்நாட்டை ஆள வேறு ஆளே இல்லை’ என்கிற மாதிரி விழுந்து விழுந்து பாராட்டுவதையும் தங்களுடைய மேடை தர்மமாகவே சினிமா உலகினர் வரித்துக் கொண்டு விட்டார்கள். இந்த ரகமான சினிமா உலக ஜால்ராக்களின் வீடு கட்டும் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய டாக்டர், கலைஞர், முத்தமிழ் வித்தகரான கருணாநிதி, தனது குடும்பத்தினர் சினிமா துறையில் ஈடுபடுவதை விமர்சிப்பவர்களைப் பார்த்து, பிருதிவிராஜ் கபூர் குடும்பம் சினிமாவில் ஈடுபடவில்லையா, ரஜினிகாந்தின் குடும்பம் சினிமாவில் ஈடுபடவில்லையா என்றெல்லாம் பேசியிருக்கிறார். 

பிருதிவிராஜ் கபூர் ஒரு காலத்திலும் முதல்வராக இருந்ததில்லை. அவர் முதல்வராக இருந்து, அந்தச் செல்வாக்கை வைத்துக் கொண்டு ராஜ்கபூர், ஷம்மிகபூர், சசிகபூர் இவர்களெல்லாம் சினிமாவுக்கு வரவில்லை. பிருதிவிராஜ் கபூரும், அவரது மகன்களும் நடிகர்கள். அவ்வளவுதான். 

ரஜினிகாந்த் மகளைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே தனுஷ் நடிகராகி விட்டார். தமிழர்கள் அறிந்த நடிகராகி விட்டார். ‘நான் ரஜினிகாந்தின் மருமகன்’ என்று சொல்லிக் கொண்டு தனுஷ் யாரிடமும் தனது சினிமா செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவில்லை. அந்தத் தேவையும் தனுஷுக்கு ஏற்படவில்லை. 

ஆனால், சன் டி.வி. தமிழ்நாட்டிலும், இதர மாநிலங்களிலும் எப்படி வேரூன்றியது? இதற்கு கருணாநிதி, முரசொலி மாறனின் அரசியல் செல்வாக்கும், அதிகாரமும் எப்படிப் பயன்பட்டது என்பதைப் பிறந்த குழந்தை கூட அறியும். கருணாநிதி குடும்பத்தில் உள்ள ஏகப்பட்ட நிதிகள் இப்போது சினிமா துறையில் ஈடுபட்டுப் படங்களைத் தயாரிக்கிறார்கள், வாங்கித் திரையிடுகிறார்கள். இவர்கள் எல்லாம் 2006-க்கு முன்னால், கருணாநிதி மீண்டும் முதல்வராவதற்கு முன்னால் எங்கே இருந்தார்கள்? 2006-க்கு முன்னால் இந்த உதயநிதி, கலாநிதி, துரை. தயாநிதி, அருள்நிதி முதலான நிதிகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இப்போது எப்படி சினிமாவுலகில் தனிக்காட்டு ராஜாக்களாக வலம் வருகிறார்கள் என்பதெல்லாம் ஊர் உலகத்துக்கே தெரியும்.

ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்கிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு கருணாநிதி ‘என் குடும்பத்தினர் சினிமாத் துறையில் ஈடுபடக் கூடாதா’ என்று சமூகத்தைப் பார்த்துக் கேட்கிறார். காமராஜ் தன் தாயார் இருந்த தெருவுக்கு தண்ணீர் குழாய் போட்டுத் தரும் சலுகையைக் கூட காட்டவில்லை. அப்படிப்பட்ட காமராஜை உலகம் நேர்மையாளர் என்று சொல்லுமா, தனது மகன், மகள், பேரன், பேத்தி, பூட்டன் என்று சகலரையும் அரசியலிலும், சினிமாவிலும் நுழைக்கிற கருணாநிதியை நேர்மையானவர் என்று உலகம் சொல்லுமா? மக்களை சர்வ மடையர்கள் என்று கருணாநிதி நினைத்து விட்டார். கருணாநிதியை நேர்மையானவர் என்று சொன்னால், ‘நேர்மை’ என்ற சொல்லே தன்னை மாய்த்துக் கொண்டு விடும். 

நமது முத்தமிழ் வித்தகர், டாக்டர், கலைஞர் கருணாநிதிக்கு, தான் கர்ணன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் என்றும் நினைப்பு. தி.மு.க.வை ‘ஊழல் கட்சி’ என்று விஜயகாந்த் சொன்னதற்குப் பதில் சொல்ல, தான் வழக்கமாக எழுதி எழுதி மாயும் முரசொலி கேள்வி – பதில் பகுதியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். தனது தான தர்மங்களைப் பெரிய பட்டியலே இட்டுள்ளார். ‘திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதில் கிடைத்த பணத்தை எது எதற்கெல்லாம் தானமாகக் கொடுத்தேன், எத்தனை பேருக்குப் பொற்கிழி கொடுத்தேன், வீட்டை ஆஸ்பத்திரிக்கு எழுதி வைத்தேன், இப்படிப்பட்ட கர்ணப் பிரபுவான என்னைப் போயா, ஊழல்வாதி என்பது? என்று விஜயகாந்திடம் சீறியிருக்கிறார்
கர்ணன், வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் கொடுத்த மாமனிதன். கருணாநிதியை யாரும் வள்ளல், கொடையாளி என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள். வழக்கமாக மேடைக்கு மேடை புகழ்ந்து தள்ளும் அவரது ஜால்ரா கூட்டம் கூட, கருணாநிதியை கடையேழு வள்ளல்களுக்குப் பின் வந்த எட்டாவது வள்ளல் என்று சொல்ல மாட்டேன் என்கிறது. 

பாவம், முத்தமிழ்காரர். பார்த்தார். தானே அவ்வப்போது ‘நான் கொடுத்தேன், நான் கொடுத்தேன்’என்று கொட்டடிக்கிறார். ரோட்டோரம் இருக்கிற பிள்ளையார் கோவிலில் நாற்பது ரூபாய்க்கு ஒரு டியூப் லைட்டை வாங்கிப் போட்டு விட்டு, அதில் ‘உபயம் : ஆத.கணபதி. ஆத.பழ. கந்தசாமி’ என்று சிலர் தங்கள் பெயர்களைப் போட்டுக் கொள்வதற்கும், கருணாநிதி மேடைக்கு மேடை சமயம் கிடைக்கிறபோதெல்லாம் ‘நான் வீட்டைத் தானமாகக் கொடுத்தேன், நான் பொற்கிழி கொடுத்தேன், அதைக் கொடுத்தேன், இதைக் கொடுத்தேன்’ என்று தம்பட்டம் அடிப்பதற்கும் என்ன வித்தியாசம்? கருணாநிதி ஒரு காலத்திலும் கர்ணனாக முடியாது. அவரிடம் கைநீட்டி வாங்கியவர்கள், ஐயோ பாவம்...! 

‘நான் உனக்குப் பணம் கொடுத்தேனே, பணம் கொடுத்தேனே’ என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கிற ரகத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. கருணாநிதி காமராஜுமல்ல. கர்ண மகாப் பிரபுவுமல்ல. 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘கலைஞர் சாமி கும்பிட்டதை நானே பார்த்தேன்!’’
‘விட்னஸ்’ விஜயகாந்த்

Raja%201.jpgதனது 58-வது பிறந்தநாளை வீட்டிலேயே கொண்டாடிவிட்டு 27-ம் தேதி அதிகாலை திண்டிவனம் புறப்பட்டார் விஜயகாந்த். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தே.மு.தி.க. கழக நகரச்செயலாளர் வெங்கடேசன் - கலைப்பிரதா திருமணத்தை நடத்தி வைப்பதற்குத்தான் இந்த அதிகாலை பயணம். 

செல்லும் வழியில் பாதரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ‘வண்டியை விட்டு இறங்குங்க தலைவரே’ என்று விஜயகாந்த்தை வழிமறிக்க சற்றே யோசனையுடன்தான் இறங்கினார் விஜயகாந்த். 

திடீரென கிராம மக்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து விஜயகாந்த் மீது தண்ணீர் மாதிரி எதையோ தெளிக்க... மேலும் குழப்பம் அவருக்கு. பிறகுதான், ‘தலைவரே... இது முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக புனிதநீர். உங்க மேல தெளிக்கறதுக்காக விடிகாலைலேர்ந்து காத்துக் கெடக்கோம்’ என சொல்லியவாறே, விஜயகாந்த் மீது தெளித்து பூரண கும்ப மரியாதை செலுத்தி ஆரத்தி எடுத்து பூசணிக்காய் உடைத்து திருஷ்டியை கழித்தார்கள். 

மக்களின் இந்த எதிர்பாராத தெய்வீகமான வரவேற்பால் குஷியான விஜயகாந்துக்கு ஒலக்கூரில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். திண்டிவனத்திற்கு வந்து அடைவதற்குள்ளே 4 கிலோ மீட்டர் தூரம் டிராபிக் ஜாமில் சென்னை தேசிய நெடுஞ்சாலை திக்குமுக்காடியது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் சொந்த ஊர் என்பதால் திண்டிவனத்தில் எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டத்தைத் திரட்ட முனைப்பு காட்டுவார்கள். இதற்கு தே.மு.தி.க.வும் விதிவிலக்கா என்ன? திருமண விழாவை பொதுக்கூட்டம் போல பிரமாண்டமாய் ஏற்பாடு செய்திருந்தனர். 

Raja.jpgகாலை 9.50 மணிக்கு வெற்றி முரசு ஒலிக்க விஜயகாந்த் கார் திருமணப் பந்தலுக்குள் நுழைந்தது. தாம்பூலத் தட்டில் இருந்த மாங்கல்யத்தை எடுத்து மணமகன் கையில் கொடுத்தார் விஜயகாந்த். கட்டி முடித்ததும் ஆசீர்வதித்துவிட்டு, மணமக்களை கையோடு கூப்பிட்டு வந்து மண்டபத்துக்கு வெளியே பொதுக்கூட்ட மேடையில் உட்காரவைத்தார்.

திருமணப் பொதுக்கூட்டத்தை தலைமை தாங்கி முதலில் பேச ஆரம்பித்த விழுப்புரம் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், 

‘‘அமைச்சர் பொன்முடி இதற்கு முன்னால் பேராசிரியராக இருந்தவர். சாதாரண ஸ்கூட்டரில் போனவர். இன்றைக்கு கோடிகளில் புரளுகிறார். இவையெல்லாம் எப்படி வந்தது? ஊழல் செய்கிறார் என்று தி.மு.க.வை, எங்கள் தலைவர் குறைசொன்னால் நாங்கள் கருப்பு பணம் வைத்திருக்கிறோம் என்று குற்றம்சாட்டுகிறார்’’ என கலைஞர் பற்றியும் பேசிவிட்டு ஜெயலலிதா பற்றி பேச வாயை எடுத்தார். அதற்குள், நேரம் போதவில்லை என சொல்லப்பட்டதால் பேச்சை முடித்துவிட்டார்

. மணமக்களை வாழ்த்திய பின் மேட்டருக்கு வந்தார் விஜயகாந்த். 

‘‘ ‘விருத்தகிரி’ படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றேன். இதற்கிடையில் அரசியல்வாதிகள் ஏதேதோ பேசியதற்கு பதில் சொல்லும் வாய்ப்பு இந்த திண்டிவனம் கூட்டத்தில் அமைந்துவிட்டது. 

எம்.ஜி.ஆருக்குப் பின் வந்தவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள். இவர்கள் எந்த வகையில் மக்களுக்கு நன்மை செய்கிறார்கள். கேட்டால் இலவச டி.வி., கேஸ் அடுப்பு, ஒரு ரூபாய் அரிசி வழங்குகிறோம் என்று கூறுகிறார். அண்ணா ஆட்சி அமைக்கும்போது, ‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என அறிவித்ததை 40 ஆண்டுகளுக்குப் பின் அறிவித்தீர்களே? இவ்வளவு ஆண்டுகளாக செய்யாமல் இப்போது அறிவித்தது ஏன்? மக்களை இவ்வளவு காலமாக ஏமாற்றி வந்தீங்களா? ரோடு போட்டேன் என்று சொல்றீங்களே? வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவர்தான் தங்க நாற்கரச் சாலை போடும் திட்டத்தை ஆரம்பித்தார். இதை நான் மட்டும் சொல்லவில்லை, காங்கிரஸ் தலைவர்களும் இதை சொல்கிறார்கள். மத்திய அரசின் திட்டமான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டத்தை, இவர் ஏதோ தானே ஆரம்பித்ததைப் போல கூறுகிறார். 

இன்று தமிழ்நாட்டில் 62 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் தனது ஆட்சியில் நாலரை லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளதாக கலைஞர் கூறியுள்ளார். என்னைக் கண்டு பயப்படுகிறார்கள். நான் உங்களிடம் கூட்டணி சேர தூதுவிட்டேனா? நான் கூட்டணி குறித்து பேசவும் இல்லை. நான் ஊழல் செய்து படம் தயாரிக்கவில்லை, உழைத்து சம்பாதிக்கிறேன். கொடை வள்ளல் என்று என்றைக்காவது உங்களுக்கு பட்டம் கொடுத்திருக்கிறார்களா? இந்த பட்டம் எம்.ஜி.ஆரை மட்டுமே சேரும். 

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்று தெரிவித்தேன். அதற்கு நான் கருப்பு பணம் வைத்திருக்கிறேன் என்று கலைஞர் சொல்கிறார். நான் கருப்புப் பணம் வைத்திருக்கிறேன் என்று உறுதி செய்யுங்களேன் பார்ப்போம். இதெல்லாம் சொல்லப்போனால் மின்வெட்டு வீராசாமிக்கு கோபம் வரும்.ஒப்புக்கு சப்பானி ஊருக்கு மாங்கொட்டையா இருக்கிற நீங்க அறிக்கை விடுறீங்களா? 

ஊழல் ஆட்சி செய்கிறது என்று சொன்னால், நான் மனுநீதி சோழன் ஆட்சி செய்கிறேன் என்று சொல்கிறார். மனுநீதி சோழன் மாட்டுக்கு நீதிகிடைக்கணும்னு தன் பிள்ளையையே தேர்க்காலில் இட்டார். ஆனால் இவர் ஆட்சியில் நீதியே செத்துப்போச்சு. கடவுள் பக்தி இல்லையென்று சொல்றீங்களே உங்கள் வீட்டுக்கு முன்னாலே கிருஷ்ணர் கோயில் இருக்கு. நான் ஒருநாள் அதை கண்குளிர பார்த்தேன் ஒரு போலீஸ்காரர் ஓடி போய் முதல்வர் கையில் ஒரு எலுமிச்சை பழம் கொடுத்தார். வாங்கிக்கொண்டு அவர் கிருஷ்ணர் கோயிலை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். அப்பதான் கலைஞரின் மறுபக்கம் தெரியவந்தது. கடவுளே இல்லையென சொல்றீங்களே. மஞ்ச துண்டையும், சிவப்புக்கல் பவள மோதிரத்தை கழற்றி எறியுங்களேன் பார்ப்போம்? 

30 பேரை எம்.எல்.ஏ.வாக ஆக்கவும், 10 பேரை எம்.பி.யாக்கவும் நான் கட்சி நடத்தவில்லை ஏழைகளுக்காக கட்சி நடத்துகிறேன். மக்கள் விரும்புகிற கட்சியுடன்தான் கூட்டணி அமைப்போம். அனைவருக்கும் விடிவுகாலம் வரும்’’ என பேசி முடித்தார் விஜயகாந்த்.

கோவையில் பேசிய ஜெயலலிதா, ‘மக்கள் விரும்பும் கூட்டணி அமையும்’ என்றார். அதேபோல விஜயகாந்த் பேசியதையும் ஒப்பிட்டுக்காட்டும் சில தே.மு.தி.க.வினர் மக்கள் விரும்புவதை இந்த இருவரும் விரும்புகிறார்கள் போலிருக்கிறது என்கிறார்கள் சூசகமாய். __________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Jaya summoned in case filed by Stalins son-in-law

TIMES NEWS NETWORK

Chennai: A magistrate court here has issued summons to former chief minister Jayalalithaa in connection with a defamation complaint lodged by deputy chief minister MK Stalins sonin-law,V Sabareesan,on Tuesday.
Chief metropolitan magistrate (CMM) R Killivalavan issued the summons,and directed the AIADMK supremo to be present in court on October 15.The magistrate had earlier recorded the sworn statement of Sabareesan and took cognizance of the matter.Sabareesan said Jayalalithaa had made a baseless statement against him during her speech at Coimbatore on July 13,alleging that he had accepted a costly imported car as gift from persons,who are accused in the expired drugs scam that rocked the state a few weeks ago.Noting that he was in no way connected with such persons,Sabareesan said he had nothing to do with drugs trade and industry.He said he was a chief executive officer of a private research company,and that he was managing a team of scientists and engineers working in cutting-edge semi-conductor technology offering IT solutions.He said the false and malicious statements made by Jayalalithaa were published in print and visual media,bringing down his reputation.He wanted the court to punish the AIADMK chief for criminal defamation.

Pc0031500.jpg
IN THE DOCK


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Karunanidhi criticises Hindu practice of sporting 'tilaks'

CHENNAI: Flaying the Hindu practice of smearing ash or saffron or sporting a 'tilak' on the forehead for yet another time, Tamil Nadu Chief Minister M Karunanidhi on Wednesday questioned the need for "such things in a country which preached equality of all religions." 

Karunanidhi also questioned the rationale behind Brahmins wearing sacred thread. 

"What is the need for these things in a country that has accepted all religions and preached equality of the same," he asked in a poem penned by him in the wake of caste-related violence in Madurai yesterday in which one person was killed in police firing. 

He had on earlier occasions also ridiculed the practice of smearing ash or saffron on the forehead. 

The DMK chief had made similar remarks on certain other Hindu customs earlier and described Hindus as "robbers". But later he clarified that he meant Hindus were robbers "who stole hearts". 

In the height of the Sethusamudram controversy, he had described Lord Ram as a "drunkard" and wondered whether he was a qualified engineer to have built the Ramasethu. 

In the poem, Karunanidhi described truth as God, adding that all people were equal before God and described as "ignorance" those who were not aware of it. 

"Caste differences are the offshoot of the branches called differences based on religion... lets chop off not only the branches but also uproot the tree to witness the emergence of a beautiful concept called equality," he said. 

He also described as useless the face-off between believers and non-believers on the concept of God and said there was no point fighting over which faith was supreme.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Karunanidhi-criticises-Hindu-practice-of-sporting-tilaks/articleshow/3677616.cms#ixzz0z2Aorn00

Why not you shout at Muslims for wearing Cap?
Pastors for wearing cross? and
Your own family members
stalinmayiladudurai11.jpg?w=300&h=199

Don't Preach when your own house people do not follow you.[dinakaran.jpg][dn_100507_e1_04_cni.jpg]


-- Edited by devapriyaji on Thursday 9th of September 2010 05:31:38 PM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04-06-2008-1a.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

e0ae95e0af81e0aeb2e0af8de0aeb2e0aebe-e0aeaae0af8be0ae9fe0af8de0ae9f-e0aeb8e0af8de0ae9fe0aebee0aeb2e0aebfe0aea9e0af8d-e0aeaee0aebe.jpg

-- Edited by devapriyaji on Thursday 9th of September 2010 05:36:40 PM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

235637894.jpg

235637442.jpg__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இலவசங்களை கைவிட வேண்டும்!’
திரும்பிபார்க்க வைக்கும் திருமாவளவன்

Thiruma.jpgஈழத் தமிழர் பிரச்னைகள் குறித்து மூச்சு-முட்டப் பேசும் தமிழகத் தலைவர்களில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவரான தொல்.திருமாவளவனுக்கு முக்கிய இடம் உண்டு. சமீப நாட்களாக அவர் தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்தும் கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய சீட்கள் குறித்தும் நிறைய பேச ஆரம்பித்-திருக்கிறார்.

இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் நடந்து ஓராண்டைக் கடந்து விட்டது. இந்நிலையில் அவரோடு ஒரு நேர்காணல்.

தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கைக்கு சென்றுவந்து ஏறக்குறைய ஓராண்டாகப் போகிறது. அங்குள்ள தமிழர்களின் வாழ்வில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லையே..?

நாடாளுமன்றக் குழுவின் பயணம் எதையும் சாதித்துவிடாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். சிங்கள அரசு, இந்தக் குழுவின் எண்ணங்களுக்குப் பணிந்து எதுவும் செய்துவிடப்போவதில்லை என்பது தெரிந்ததுதானே. ஆனால், சில விஷயங்-களில் சிங்கள அரசை கட்டுப்படுத்த முடியும்.

தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கொண்ட ஒரு கண்-காணிப்பு குழுவை அமைக்க வேண்டும். அக்குழு இலங்கையில் மறுகட்டமைப்பு பணிகளை கண்-காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் வேதனையை நினைத்து நான் தினந்-தோறும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்-கிறேன்.

நீங்களோ கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்கிறீர்கள். ஆனால், ‘இலங்கை தமிழர்-களுக்கு மத்திய அரசு உதவிதான் செய்ய முடியும்... போலீஸ்காரன் வேலை பார்க்க முடியாது’ என்கிறாரே டி.ஆர்.பாலு?

எதுவும் நடக்க மாட்டேன்கிறதே என்ற விரக்தியில் டி.ஆர்.பாலு அப்படி சொல்லி-யிருக்கலாம். அனைத்து கட்சி எம்.பி.க்களையும் இலங்கைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் கோரிக்கை வைப்பதே, ஏதாவது நடக்கும் என்கிற நம்பிக்கையில்தான். இந்தியா கொடுத்துள்ள நிதியுதவி தவிர, தமிழர்-களின் மறுவாழ்வைக் காரணம்காட்டி, அவர்களின் அவலநிலையை படங்களாகவும், அறிக்கை-யாகவும் தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி நிதிதிரட்டிக் கொண்டிருக்கிறான் சிங்களன். அந்த நிதியை சிங்கள நலனுக்கும், இலங்கை வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.

இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்-படாத வரையில் ஈழத் தமிழர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படாது என்று சொல்கிறீர்கள். ஆனால், மத்திய அரசுக்கு கலைஞர் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்...

முதல்வரின் வலிமைக்கு ஏற்றபடி தகுந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார். கடிதத்துக்குப் பிறகு சின்ன வேலை நடந்தாலும் அவருக்கு அது ஆறுதல்தான். இதனாலெல்லாம் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது என்பது அவருக்கும் தெரியும்.

தி.மு.க. கூட்டணியில் நீங்கள் கேட்கும் இரட்டை இலக்கத்தில் ஸீட்கள் ஒதுக்கப்படா விட்டால்..?

குறைந்தது 7 இடங்களிலாவது வெற்றி பெற்றால்தான் சொந்த சின்னத்தில் நிற்க தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் கிடைக்கும். அந்தளவுக்கு வெற்றிபெற வேண்டும் என்றால், குறைந்தபட்சம் இருபத்தோறு தொகுதிகளிலாவது நாங்கள் போட்டியிட வேண்டும். அதற்கான முயற்சிதான், எங்கள் விருப்பமாக வெளிப்பட்டிருக்கிறது. இதில் தவறில்லை...

டாக்டர் ராமதாஸ் தி.மு.க. கூட்டணியில் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே..?

வடமாவட்டங்களில் டாக்டர் ராமதாஸுக்கு பலம் உண்டு. அதனால், அவரும் தி.மு.க. கூட்டணியில் இருந்தால், அது தி.மு.க. கூட்டணிக்கு பலம் சேர்க்கும். கசப்புகளைப் போக்கி, அவரை மீண்டும் தி.மு.க. கூட்டணிக்கு அழைத்துவரும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தால், அதனை செய்து முடிப்பேன்.

தே.மு.தி.க.வை விட எங்களுக்கு செல்வாக்கு அதிகம் என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்களால் தனித்து போட்டி-யிடமுடியுமா?

ஏற்கனவே 200 இடங்களில் டெபாசிட் போன கட்சிதான் தே.மு.தி.க. 234 தொகுதிகளில் போட்டி-யிட்டால், ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் 20 ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும். எங்களுக்குத் தமிழகம் முழுவதும் வாக்கு வங்கி இருக்கிறது. அதை வைத்துத்தான் தே.மு.தி.க.வை விட எங்களுக்கு செல்வாக்கு அதிகம் என்று சொல்லியிருக்கிறேன். இதை நிரூபித்துக் காட்ட முடியும்!

சமீப காலமாக அ.தி.மு.க.வின். செல்வாக்கு பெருகி வருகிறதே..?

ஆர்ப்பாட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை கொண்டு நடத்தப்படுவது. அ.தி.மு.க. ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சி. அப்படியென்றால், ஜெயலலிதாவின் திருச்சி ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றரை கோடி பேரும் கலந்து கொண்டிருக்க வேண்டாமா? வெறும் இரண்டு லட்சம் பேர் மட்டும்தானே வந்திருந்தார்கள்? இதனை வைத்து ஆதரவு பெருகி வருவதாக எடுத்துக் கொள்ள முடியாது.

‘இலவசமாக மீன் கொடுப்பதைவிட மீன் தூண்டில் கொடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி-யானால், தமிழக அரசின் இலவச திட்டங்கள் தேவை-யில்லை என்கிறீர்களா?

கொள்கை ரீதியாக இலவசங்கள் கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்தும். விஜயகாந்தும் வறுமையை ஒழிப்பதாகச் சொல்லி புடவை, கம்யூட்டர், வேட்டி கொடுத்து வருகிறார். வறுமை ஒழிப்பு என்பது நாலு பேருக்கு உதவி செய்வது மட்டும் அல்ல. கொடுக்கிறவன் இருக்க கூடாது. வாங்குறவனும் இருக்கக் கூடாது. அது அரசுக்கும் பொருந்தும். அரசு இலவச திட்டங்களை கைவிட்டால் நல்லது-.

ஐ-.ஏ.எஸ். அதிகாரியான உமாசங்கருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்று தலித் அமைப்புகள் உங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனவே?

உமாசங்கர் மீது பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று முதன்முதலில் குரல் எழுப்பியவன் நான்தான். அதன்பிறகு அது அரசியலாகிவிட்டது. கம்யூனிஸ்ட், அ.தி.மு.க. போன்ற கட்சிகள், இந்தப் பிரச்னையை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டன. இருந்தாலும், முறைப்படி முதல்வர், துணை முதல்வரோடு இது குறித்துப் பேசியிருக்கிறேன்.

தலித் விரோத அரசாக தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று குற்றச்சாட்டு கிளப்புகிறார்களே..?

அப்படி சொல்ல முடியாது. உயர் பதவியை பிடிக்க கடுமையான போட்டி நிலவுகிறது. தலித் அதிகாரிகளால் போட்டிபோட முடியவில்லை. அவ்வளவுதானே தவிர, இதில் அரசின் தவறு என்று எதைச் சொல்ல முடியும்? வைகோ, நெடுமாறன் குறித்து குமரன் பத்மநாதன் சொல்லியிருக்கும் கருத்துக்கள் பற்றி..?

வைகோ, நெடுமாறன் விஷயத்தில் கே.பி. சொல்லியிருக்கும் கருத்தை நான் ஏற்க மாட்டேன். புலிகளை ஆதரிக்கும் தமிழகத் தலைவர்களுக்கு சிக்கலை உண்டாக்கும் நோக்கத்தோடு அவர் பேசியிருக்கிறார்...__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

விடை பெறத்தானா பெரியார் விருது?
வீரபாண்டியாரை சுற்றும்‘ஓய்வுச் சுழல்’

Salem%203.jpg‘‘அடுத்த முறையும் கலைஞர்தான் முதல்வர்’’ என்று மு.க.ஸ்டாலின் அடித்துச் சொன்னாலும்... ‘கட்சியில் இருக்கும் மூத்தவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார் முதல்வர்... அதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் மூத்த அமைச்சர்கள் பலரும் போட்டியிட மாட்டார்கள்’ & என்ற பேச்சு கொஞ்ச காலமாகவே அறிவாலய வட்டாரத்திலிருந்து வேகமாக கசிந்து வந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், ‘செப்டம்பர் 20-ந் தேதி நாகர்கோவிலில் நடக்கவிருக்கும் தி.மு.க. முப்பெரும் விழாவில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ‘பெரியார் விருது’ வழங்கப்படும்’ என்று அறிவாலயத்தில் இருந்து அறிவிப்பு வெளியாக, இந்தக் கருத்துக்கு கூடுதல் பலம் சேர்ந்திருக்கிறது.

Salem%202.jpgஇந்த விஷயம் மெல்ல சேலம் பகுதி தி.மு.க.-வினரிடமும் பரவ ஆரம்பிக்க, இரண்டுவிதமான ரியாக்ஷன்கள் சேலம் தி.மு.க.வில்.

‘‘அண்ணனே தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்ள விரும்பித்தான் இத்தனையும் நடக்கிறது. முதல்வரிடம் அவர் நேரடியாகவே இந்த விஷயத்தை வற்புறுத்திச் சொன்ன பிறகுதான், அண்ணனுக்கு பெரியார் விருது கொடுத்து கௌரவிக்க தலைவர் முடிவெடுத்து அறிவித்திருக்கிறார். அதனால், பெரியார் விருது பெற்ற கையோடு, அண்ணன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வார். அதனால், வரும் தேர்தல் அண்ணன் வழிகாட்டுதலின்படி இளை-ஞர்கள் சந்திக்கும் தேர்தலாகத்தான் இருக்கும்...’’ என்று சேலம் தி.மு.க.வினர் பரபரப்பாக பேச ஆரம்-பித்திருக்கிறார்கள். ஆனால், ‘‘என்னது... அண்ணன் வீரபாண்டியார் இல்லாத தேர்தலா? சேலம் தி.மு.க.வில் அதற்கான அவசியம் இப்போது வரவில்லையே? அண்ணன் இல்லாத சேலம் தி.மு.க., வெற்றிடத்துக்கு சமமானது’’ என கருத்துக் கடை விரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

தலைமைக்கு நெருக்கமான தி.மு.க.வின் முக்கியப்-புள்ளி ஒருவரிடம் இது பற்றி கேட்டோம்.

‘‘இந்த விஷயத்தில் தலைமை யாரையும் கட்டாயப்-படுத்துமா என்று தெரியவில்லை. ஆனால், அமைச்சரைப் பொறுத்த வரையில், போதும் அரசியல் என்கிற முடிவில் இருப்பதாகவே தெரிகிறது. அதனால்தான் சேலத்தின் வெகுநாள் கனவாக இருந்த கலெக்டர் அலுவலகத்துக்குப் புதிய கட்டடம், ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவற்றை முதல்வரை அழைத்து வந்து திறக்க வைத்தார். ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணிகள் கூட முழுமையாக முடியாத சூழ்நிலையிலும் அதனை அவசரமாகத் திறக்க வைத்ததற்கான காரணம் அதுதான்.

50 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் சேலத்தில் தி.மு.க.வுக்கென்று அழுத்தமான பதிவை அவர் ஏற்படுத்தி இருந்தாலும், அவருக்கென்று சமீபகாலமாக சில வருத்தங்களும் உண்டு. தன்கூடவே இருந்து வளர்ந்து அரசியல் கற்றுக் கொண்ட, பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் தன்னை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்வது அமைச்சரை ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறது. ராஜேந்திரனுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சப்போர்ட் செய்வதும் அவரை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

மேலும், அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்த செல்வகணபதி ஆரம்பத்தில் அமைச்சர் சொல்வதை கேட்டு நடந்து கொண்டிருந்தார். ஆனால், சமீபத்தில் அவரும் அமைச்சருக்கு எதிராக அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அவர் எம்.பி.யான பின்னால், மரியாதைக்கு கூட அமைச்சரை கண்டுகொள்வதில்லை. அவரும் தனக்கென்று சேலம் கிழக்கு மாவட்டத்தில் கோஷ்டியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இப்படியெல்லாம், கட்சிக்குள் பல்வேறு முனைகளிலிருந்தும் தொடர்ந்து சங்கடங்கள் வருவது அமைச்சரை சங்கடப்படுத்தி இருக்கிறது. அதனால்தான் ‘போதும் அரசியல்...’ என்ற மனநிலைக்கு வந்திருக்கிறார்.

Salem%204.jpgஇதுபற்றியெல்லாம் அவ்வப்போது லேசுபாசாக முதல்வரிடம் சொன்னபோது, ‘யோவ், நானே பல விஷயங்களில் ஸ்டாலின் சொல்றபடிதானேய்யா நடந்துக்கறேன்...’ என்று சொல்லி, அடுத்த தலைமுறைக்கு வழிவிடுமாறு மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார். அதன்பிறகுதான், வீரபாண்டியாருக்கு ஓய்வு விஷயத்தில் தீவிர எண்ணம் வந்துவிட்டது’’ என்றார்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டபோது, நெருப்பை மிதித்தது போல பதற ஆரம்பித்து விட்டார்கள். ‘‘யார் சொன்னது அமைச்சர் வீரபாண்டியார் அரசி-யலில் இருந்து ஓய்வுபெறப் போகிறார் என்று? சமீபத்தில்கூட சேலம் மாநகராட்சி மேயர் ரேகா ப்ரியதர்ஷினி தி.மு.க கவுன்சிலர்களையும் மாநராட்சி அதிகாரிகளையும் அழைத்து கூட்டம் போட்டார். ‘சேலத்தில் முடிக்காத பணிகள் எதுவாக இருந்தாலும் அதனை சீக்கிரம் முடிக்க வேண்டும். பிரச்னை என்று சேலம் மக்கள் எந்தக் குறையும் சொல்லக் கூடாது. இதனை செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்றாலும், உடனடியாக என்னிடம் சொல்லுங்கள். அமைச்சரிடம் சொல்லி, பிரச்னைகளை சரி செய்கிறேன்...’ என்று சொல்லியிருக்கிறார். அமைச்சரின் ஆலோசனை இல்லாமல் அவர் அப்படி பேச மாட்டார். குறிப்பிட்ட அந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்த கவுன்சிலர்களில் பெரும்பாலானவர்கள் சேலம் இரண்டாவது தொகுதியைச் சேர்ந்தவர்கள். சேலம் இரண்டாவது தொகுதியிலிருந்து சட்ட-மன்ற உறுப்பினராகத் தேர்ந்-தெடுக்கப்-பட்டவர்தான் அமைச்சர். கூட்டம் நடந்த மறுநாள் சேலத்துக்கு வந்த வீரபாண்டியார் பாதாள சாக்கடை திட்ட பணிகள், மாநக-ராட்சியில் கட்டி முடிக்காமல் நிற்கும் பாலங்-களையெல்லாம் உடனடியாக கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால், அமைச்சருக்கு ஓய்வு என்பதெல்லாம் கிடையாது...’’ என்று அடித்துச் சொன்னார்கள்.

அமைச்சர் வீரபாண்டியாரை மையமாக வைத்து சேலம் தி.மு.க.வில் கிளம்பியிருக்கும் வாத, எதிர்வாதங்களுக்கு அமைச்சரின் அடுத்தடுத்த செயல்பாடுகள்தான் தீர்ப்பு சொல்லும்!

படங்கள்: இளங்கோவன்__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

என் உயிரினும் மேலான...

Kalainger.jpg

 என் உயிரினும் மேலான தலைவனுக்கு வணக்கம்!

எண்பத்தி ஏழு வயதில் நீங்கள் துடிதுடிப்புள்ள இளைஞராகவே செயல்-படுவதைக் தமிழ்நாடு மற்ற மாநிலங்களும் ஆச்சரியத்துதோடும் அதிசயத்தோடும் பார்க்கின்றன. உண்மைதான். உங்கள் ஆட்சியில் அதுவும் இந்த ஆட்சியில் சாதாரண மக்களுக்குப் போய்ச்சேரும் வகையில் பல திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டும் வருகின்றன. ‘108’ திட்டமும், கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் உதவும் வகையில் அமைந்து பெருவாரியான மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கின்றன. மற்ற இலவசத் திட்டங்களில் சில குறைபாடுகளும் குற்றச்சாட்டுகளும் இருந்தாலும், அவற்றை மக்கள் சந்தோசத்துடன் அனுபவிக்கிறார்கள்.

இந்த வயதில் நீங்கள் இத்தனை பாடுபட்டு பணியாற்றிவருவதை மட்டும் வைத்துப் பார்த்தால் தி.மு.க. பொதுமக்களின் முழு அபிமானத்தைப் பெற்று, அடுத்த தேர்தலில் அமோக வெற்றிபெறும் சூழ்நிலை உருவாகியிருக்க வேண்டும். ஆனால், நடப்பது என்ன? எதிர்கட்சிகள் இன்னும் இருக்கின்றனவா என்று மக்கள் சந்தேகப்படும் வகையில் தளர்ந்திருந்த கட்சிகள் வீறுகொண்டு எழுந்து உங்களுக்கு சவால்விடும் அளவுக்கு தங்கள் பலத்தை காட்டும் நிலை எப்படி ஏற்பட்டது? மக்கள் கூட்டம் அ.தி.மு.க.வை நோக்கி அலை அலையாக ஆர்ப்பரிக்கும் சூழ்நிலை எப்படி திடீரென்று வந்தது? இது கூட்டப்பட்ட கூட்டம் என்ற வழக்கமான அரசியல் வசனத்தை விலக்கி வைத்துவிட்டு யதார்த்தத்தை யோசித்துப் பாருங்கள்.

மக்களுக்கு நம் கட்சி மீதும், குடும்பத்தின் மீதும் (இரண்டும் வேறு வேறு என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும்) வெறுப்பு ஏற்படும்படியான சூழ்நிலை வந்ததே மக்களின் மனமாற்றத்திற்குக் காரணம் என்பது புரியும். இத்தனைக்கும் தி.மு.க. மற்ற கட்சிகளை விட கட்டுக்கோப்பான கட்சி என்று ஒரு காலத்தில் பெயர் வாங்கிய கட்சி. தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க., ம.தி.மு.க. என்று கட்சிகள் பிரிந்தபின்னும் கட்டுக்கோப்பைத் தக்க வைத்து, நீண்ட இடைவெளிக்குப் பின்னும் ஆட்சியில் தி.மு.க. அமரமுடிந்தது என்றால் அதற்கு உங்கள் அரசியல் சாணக்கியமும் சாதுர்யமும் முழுக் காரணம். அடிமட்டத் தொண்டனைத் தலைவனே நினைவில் வைத்துத் தொடர்பு கொள்ளும் கட்சி என்று மார்தட்டிய தி.மு.க.வில் மற்ற கட்சிகளைப் போலவே இன்று உள்குத்துப் போராட்டங்கள், அடி-தடிகள், அசிங்கங்கள். கட்சிக்கும் குடும்பத்திற்கும் உள்ள கோட்டை நீங்கள் அழித்துவிட்டதனால் அல்லது குடும்பத்தினர் அக்கோட்டை அழிக்க அனுமதித்ததினால்தான் இந்த நிலை.

உங்களுக்கு அடுத்தபடியாக பேராசிரியரும் மற்ற சீனியர் அமைச்சர்களும் கட்சி செயல்பாட்டில் முழுமனதோடு ஈடுபட்ட வரை உங்களுக்குப் பிரச்னை எழவில்லை. உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவராக உள்ளே நுழைய, நுழைய தி.மு.க.வின் தூண்கள் என்று கருதப்பட்ட சீனியர்கள் மனம் ஒடுங்கி, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பிழைப்பிற்காக குடும்பத்தின் ஏதோ ஒரு கிளையில் ஒட்டிக் கொண்டு அரசியல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இன்று நடப்பதென்ன? தமிழ்நாட்டில் பரப்பரப்-பாகப் பேசப்படும் அத்தனை அராஜகங்களிலும் உங்கள் சுற்றத்தினர் பெயர்தான் அடிபடுகிறது. குடும்பக் கிளைகளுக்குள் நடக்கும் நிழல் யுத்தம் பல சமயங்களில் நிஜயுத்தங்களாகி நாலாபக்கமும் ரத்தத்தைத் தெளிக்கிறது. எந்த தொழிலானாலும் வியாபாரமாயினும் உங்கள் குடும்பத்தினரே ஆக்கிரமிப்பதுடன் நியாயமான ஆரோக்கியமான வியாபாரமும் தொழிலும் நடக்கவிடாமல் அராஜகம் செய்கிறார்கள் என்ற எண்ணம் பொதுமக்களின் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. எவ்வளவு நாள் இந்த நிலையை நீங்கள் மறைத்து வைக்க முடியும்? பயத்தில் ஓடும் நாய்கள் கூட ஓடுவதற்கு வழியில்லை என்றால் திரும்பி நின்று குலைக்கும். முடிந்தால் எதிர்த்துப் பாயும். என்பது சாதாரண மனிதனுக்கே தெரியும்போது சாணக்கியரான உங்களுக்குத் தெரியவில்லையா?

சென்னையில் மாதாமாதம் நட்சத்திர ஓட்டல்-களிலும் கேளிக்கை விடுதிகளிலும் ஏற்படும் தகராறுகளில் உங்கள் குடும்பத்தினர் பெயரே மீண்டும் மீண்டும் கிசுகிசுக்கப்படுகிறது. புரியாத கொலைகளும் வன்முறை அராஜகங்களும் நீதிமன்றங்களில் திறமையாகப் புதைக்கப்பட்டாலும் மக்கள் மனங்களில் இருந்து அழித்து விடமுடியாது. இத்தனை நடக்கும்போதும், எதுவுமே நடக்காதது போல் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதையும் மக்கள் பார்க்கத் தவறவில்லை. குடும்ப சச்ச-ர-வுகளைச் சரிப்படுத்த நீங்கள் எடுக்க முயலும் நட-வடிக்கைகள் அரசு ஊழியர்களையும் மக்களையும் எரிச்சல்படுத்தவே அமைந்து உங்களுக்-கெதிராகவே உள்ளவர்களுக்குத் தீனியாவதுதான் மிச்சம் & உமாசங்கர் சஸ்பெண்ட் விவகாரம் உட்பட.

தமிழ்நாடே ஒரு குடும்பத்திடம் சிக்கிச் சின்னா-பின்னமாகியிருக்கிறது என்ற எண்ணம் மக்களிடம் உறுதியாக ஏற்படக் காரணம் யார்? தலைக்குமேல் வளர்ந்தவர்களைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ உங்களுக்கு மனம்வராமல் இருக்கலாம். ஆனால் அந்தப் பாசத்தை மக்களிடம் எதிர்பார்க்க முடியாது. என்னுடைய பிள்ளைகள் வியாபாரம் செய்யக் கூடாதா? என்று நீங்கள் கேள்வி கேட்பீர்கள். தாராளமாகச் செய்யலாம். தவறில்லை. ஆனால் வியாபாரம், தொழில் என்ற பெயரில் மற்றவர்களை நசுக்க அவர்கள் ஆட்சியையும் கட்சியையும் பயன்படுத்தும்போது அந்த குற்றங்களுக்குப் பொறுப்பு உங்களைச் சாரும். மக்களின் வெறுப்பும் உங்களைச் சேரும்.

பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க.வை எடுத்துக் கொண்டால், அங்கே தலைமை தவறு செய்தது என்று மக்கள் நினைத்தால் அந்த வெறுப்பு மாறி வாக்குச்சாவடியில் விளைவுகளை உண்டாக்கும். அப்படித் தவறு செய்தவர்கள் என்று மக்கள் நினைத்திட அங்கே அதிகபட்சம் இரண்டே பேர். அவர்களைப் பிடித்தால் அவர்களுக்கு ஓட்டு. பிடிக்காவிட்டால் மாற்றுக் கட்சிக்கு ஓட்டு (கட்சி சார்பற்ற பொது வாக்காளனின் கண்ணோட்டத்தில்). ஆனால் தி.மு.க.வில் இன்றைக்கும் பன்முகங்கள். அத்தனையும் குடும்பத்தின் கிளைகள் & மூன்று தலைமுறைகள். இத்தனை முகங்களில் ஒரு முகத்தைப் பிடிக்கவில்லை என்றாலும் மாற்றுக் கட்சிக்கு ஓட்டுப்போடும் மனோபாவம் பொதுமக்களுக்கு ஏற்படும் என்பது உங்களுக்குப் புரியாமல் போனது ஏன்?

மேற்கு வங்காளத்தை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட ஜோதிபாசு கடைசிவரை மக்களின் தொண்டனாகவே வாழ்ந்து அழியாப் புகழ் பெற்றதற்கு முழுக்காரணம் அவர் தன்னுடையை குடும்பத்தினர் யாரையும் பெரிதாக அரசியலில் கொண்டுவரவில்லை. அதோடு அவர்களை எல்லா தொழிலிலும் தலையிட்டு ஆக்கிரமிக்க விடவில்லை. இந்தியாவின் ஒப்பற்ற மாநிலத் தலைவர்கள் வரிசையில் ஜோதிபாசுக்கு அடுத்த நிலையில் உங்களைப் பெருமையாகச் சொல்ல முடியும். உங்கள் அரசியல் ராஜதந்திரத்தையும் திறமையையும் வைத்து. ஆனால் குடும்பத்தை முன்னிறுத்தி மாநிலத்தையே குடும்பத்திற்கு தாரைவார்த்த குற்றத்தால் அந்த மதிப்புப் பட்டியலில் இருந்து நீங்கள் விடுபடுகிறீர்கள். வயதிலும் பதவியிலும் உச்சத்தில் இருக்கும் நீங்கள் மக்களின் மனதில் இருந்து விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே இதை எழுதுகிறேன் தலைவா!

தேர்தலுக்கு இன்னும் இருப்பது சில மாதங்களே என்ற நிலையில் நிலைமையை நீங்கள் ஓட்டுச்சாவடியில் வைத்து உங்கள் பாணியில் சமாளிக்கலாம். ஆனால் சில நூறுகளுக்கு விலைபோகும் வாக்காளன் கூட சிந்திக்கத் தொடங்கிவிட்டால் நிலைமாறும் என்பதை இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள். விட்டுவிட்ட கடிவாளத்தை இப்பொழுதாவது எடுங்கள். தறிகெட்டு ஓடும் குதிரைகளைக் கட்டுக்குள் கொண்டு வாருங்கள் தலைவா!

-இப்படிக்கு

நடக்கும் நிகழ்வுகளால் மனம்வெதும்பிய, அண்ணா காலத்து தி.மு.க. தொண்டன்.__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_09_2010_006_031dmk.jpg?w=116&h=30017_09_2010_006_034mk.jpg?w=280&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஈ.வே.ரா.நாயக்கர் பிறந்த நாள் தேவையா?

ஈ.வே.ரா.நாயக்கர் பிறந்த நாள் கொண்டாடும் தோழர்களே எனது கேள்விக்குப் பதிலைச் சொல்லிவிட்டுக் கொண்டாடவும்.

 • “நாயக்கர் என்றால் தான் ஆந்திராவில் தெரியும் ” என்று தெலுங்கில் பெரியார் படத்தின் பெயர் காரணத்தின் விளக்கத்திலிருந்து அறியமுடிகிறது. அப்படியென்றால் நாயக்கர் சமூக பலத்தைப் பெற அப்பெயரில் தான் ஆந்திராவில் அறிமுகமானாரா?
 • பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல என்று சொன்னால் மறுப்பீர்களா?
 • திராவிடக் கொள்கை, திராவிட இனம், திராவிட பகுத்தறிவு என்று பதவி ஆசையில் இந்தியாவை பிரிக்க நினைத்தவர் பெரியார். இந்த திராவிடக் கொள்கை மற்ற மாநிலங்களில் உள்ள பற்று எவ்வளவு? அவருக்குப் பிறகும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் மற்ற மாநிலத்தில் திராவிட போலிப் பிரச்சாரம் எடுபவில்லை என்பதை அறிவீர்களா?
 • மதம் என்கிற கண்ணாடி வழியே பார்க்காமல் தனி மனிதனாக ஒரு இறை நம்பிக்கையாளரை மதித்து அவரைப் பாராட்டியதுண்டா? இல்லையென்றால் இறை மருப்பாலரைத் தவிர மற்றவரெல்லாம் மட்டி மடையர்களா?
 • அன்றிலிருந்து சாதி என்கிற விஷயத்தைத் தவிர வேறு ஏதாவது முற்போக்கான சிந்தனையில் நாட்டுக்கு என்ன செய்தார்?
 • ஒதிக்கீடு முறையை அமல்படுத்தப் பாடுபட்டவர்கள் என்கிற காரணத்தால் கேட்கிறேன் ஒவ்வொரு சாதிக் கட்சிகளும் அரசிடம் அளவிற்கு அதிகமாக ஒதிகீடுகள் கேட்கிறதே! இதற்கு என்ன வழி? ‘..நிதி’ அவர்களின் பேரன்களுக்கு மட்டும் ஒதிக்கீடு வழங்கலாமா?
 • ராமாயணத்தில் போன்ற மதப் புராணங்களில் நொட்டை எனப்படும் குறைகள் கண்டுபிடித்து பக்கம் பக்கமாக எழுதும் கழக கண்மணிகள் ஏன் அதில் உள்ள நல்லவிஷயங்களை எழுதுவதில்லை? தர்மத்திற்காக கொள்கையா? இல்லை கொள்கைக்காக தர்மமா?
 • கடவுள் இல்லை என்பதுதானே இவரின் கொள்கை அதற்குத்தானே கோவில்களையும் சிலைகளையும் உடைக்கின்றனர் பின் எதற்கு தலித்களுக்கு ஆலயப்பிரவேஷம் வாங்கித் தர வேண்டும்? கூட்டம் சேர்க்கவா?
 • கடவுள்களை ஆபாசமாகக் காட்டி எழுதி பகுத்தறிவை வளர்ப்பதாகச் சொல்லும் கழக கண்மணிகள் ஏன் பெரியார் இணைந்த நிர்வாண சங்கத்தைப் பற்றி ஒப்புக்குக் கூட எழுதுவதில்லை? உபதேசம் ஊருக்கு மட்டுமா?
 • அன்றைக்கு எடுத்த அதே சாதி ஆதிக்கத்தைத் தான் இன்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள் சமூகத்தில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாததைப்போல வேறு எதுவும் சிந்திக்கமுடியவில்லையா? இல்லை அறிவில் பரிணாமமில்லையா?
 • அன்று ஆதிக்கச் சாதி மக்களை அடிமைப் படுத்தியது என்று இன்று எழுதும் நீங்கள் கண்முன்னே ஒரு அரசியல் குடும்பம் பல தொழில்களில் ஆக்கிரமித்து வருமானம் ஈட்டி கொள்ளை அடிப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா? இல்லை கண்ணுக்கும் கறுப்புச் சட்டையா?
 • பெரியார் கொள்கைகளை பலர் பினபற்றுவதாகச் சொன்னாலும் கொள்கையின் வாரிசாக காட்டும் தி.க.மற்றும் பெரியார் தி.க. ஏன் சண்டைப் போட்டுக் கொல்கிறது? கொள்கையில் ஏதாவது கொள்ளைபோகிவிட்டதா?
 • சாதி வேற்றுமையை ஒழிக்கத் தான் சாதி ஒதிக்கீடு என்று பிரச்சாரமிடும் நீங்கள், சதிகள் ஒழிந்தபின் அந்த ஒதிக்கீடு திரும்ப எடுக்கப்படும் என்று எங்குமே பிரச்சாரம் செய்யாதது ஏன்? ஆரசியல் நடத்த முடியாதே அதனாலா?
 • பகுத்தறிவை வளர்க்க கடவுள் சிலைகளை உடைப்போம் என்கிறீர்களே அப்படிஎன்றால் பெரியார் வன்முறையைத்தான் சொல்லிக் கொடுத்தாரா? வன்முறை எடுத்தபிறகு எங்கே பகுத்தறிவு வேளை செய்யும்?

(விடுதலை, 12.12.1968)

வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும் ஏன்?

 

பொதுவாக யாருக்குப் பிறந்த நாள் கொண்டாடினாலும் பிறந்த நாள் என்பது கொள்கையைப் பாராட்ட, பரப்ப என்கின்ற கருத்திலேயே ஆகும். வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும். அந்த வார்த்தைக்கு உண்மையில் மதிப்பே கிடையாது.

நாமம் போட்டுக் கொள்வது எப்படி முட்டாள் தனமோ அப்படிப்பட்ட முட்டாள்தனம்தான் வாழ்த்துக் கூறுவதுமாகும். பார்ப்பான் பிச்சை எடுப்பதற்கு ஆசீர்வாதம் என்று ஆரம்பித்தான். அதையே தமிழாக்கி இவன் வாழ்த்து என்கின்றானே ஒழிய, அதில் எந்தப் பலனும் கிடையாது. ஒருவன் நூறு வருஷம் வாழவேண்டும் என்று சொன் னாலேயே எவனும் வாழ்ந்துவிட முடியாது. அதுபோல, வசை கூறுவதால் எவரும் கெட்டுப் போய்விடப் போவதுமில்லை.

என்னை வாழ்த்துகிறவர்களைவிட வசை சொல்கிறவர்கள்தான் அதிகம். அதற்கு உண்மையான பலனிருக்குமானால் நான் இத்தனை ஆண்டுகள் உயிரோடிருந்திருக்க முடியாது. எனவே, வாழ்த்துவதற்கும் வசை கூறுவதற்குமுள்ள பலன் ஒன்றேயாகும். வாழ்த்துவது வாய்க்கும், காதுக்கும் இனி மையாக இருக்குமே தவிர பலனில் ஒன்று மில்லை.

பிறந்தநாளில் மட்டும் ஏன் ஒரு விழா எடுத்துக் கொண்டாட வேண்டும்? அந்த நாளில் சிந்திப்பதால் ஏதேனும் நன்மை வரவாப் போகிறது?

அடபோங்கப்பா நீங்களும் உங்க தலைவரும்__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

18_09_2010_016_002-pili.jpg?w=186&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19_09_2010_004_044-raja-eng.jpg?w=300&h=250

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

POLES APART 
Sulking Alagiri skips partys Nagercoil meet

TIMES NEWS NETWORK

Chennai: DMKs Madurai strongman MK Alagiri is sulking again.His absence was conspicuous at the partys Nagercoil meeting on Monday,which was attended by chief minister and DMK patriarch M Karunanidhi himself.
Party sources say the Union minister for chemicals and fertilizers,who is also DMKs organizing secretary for south zone,was quite unhappy with his father and younger brother M K Stalin.He is keen on quitting the Union cabinet and returning to the state.He has mounted pressure on his father once again to appoint him a top functionary of the party,preferably general secretary,a post currently held by senior leader K Anbazhagan, said a senior DMK functionary.
But Karunanidhi is apparently reluctant to concede the demand as it would undermine Stalins authority in the party.Sources close to Alagiri said he had remained incommunicado for more than a week and was camping at his farmhouse near Madurai.Alagiri,seemingly reluctant to remain in New Delhi,tops among absentee ministers,with hardly 30% attendance,in Cabinet meetings of the UPA-II held so far.He is also a frequent absentee in parliament.However,Alagiri has not openly said he wanted to quit the cabinet.So far,only Karunanidhi and Stalin have denied such reports and not Alagiri,whose only reaction has been,If Kalaignar (Karunanidhi) so desires and wants me to give up my ministers post,I will give it up. 
The larger issue is of course Karunanidhis succession plan.It has been a matter of discussion ever since Karunanidhi said last December that he would retire from active politics after the world classical Tamil conference.He had also indicated earlier that Stalin could take over the reins.The issue blew into a controversy when Alagiri reacted saying,I dont find anybody with the eligibility and capacity to replace him (Karunanidhi).After Anna (DMK founder CN Annadurai),Kalaignar has been and will be my only leader.I will not accept anybody else as my leader in the DMK. He was apparently ruling out accepting Stalin as Karunanidhis heir.He has also made it clear that in the event of polls for party chief post,he would contest.Karunanidhi had said there was no immediate plan for a change of guard.Seeking to put an end to the succession row,Stalin also recently said his father would return as CM after the next assembly polls.

DMK celebrates inception day 


The function in Nagercoil was the annual DMK celebrations of three anniversaries marking the birth of social reformer Periyar and DMK founder Anna and the partys inception day.In his address,Karunanidhi said he would return to Kanyakumari next June after the election to either lay the foundation stone or inaugurate a memorial for the late A Nesamany,a political leader who successfully struggled for the merger of Kanyakumari with Tamil Nadu.

Pc0081300.jpg

Pc0081400.jpg
__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

1.jpg

தொண்டர்களுக்கு எப்படியோ... தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு செப்டம்பர் மாதத்தில் வருகிற முப்பெரும் விழா எப்போதுமே களிப்பூட்டும் திருவிழா!

கட்சியைத் தொடங்கிய இதய தெய்வம் அண்ணா... அரசியல் குருநாதர் பெரியார் ஆகியோரின் பிறந்த நாட்களோடு... கொட்டும் மழையில் சென்னை ராயபுரம்


ராபின்சன் பூங்காவில் தி.மு.க. இயக்கத்தைத் துவக்கியதும் இந்த மாதத்தில்தான். கருணாநிதியின் நெஞ்சத்து நினைவுகள் அத்தனையும் இந்த மூன்று பெரும் நிகழ்வுகளில் சிலிர்ப்புகொண்டு எழுந்து நிற்க... இந்த முப்பெரும் விழாவில், வருடாவருடம் பேருவகையோடு தொண்டர்களை சந்திப்பார்! இந்த ஆண்டு அது நாகர்கோவிலில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

''சிலிர்ப்பு விழாவே தலைவரின் 'கடுப்பு' விழாவாக மாறிப்போனது. தன் மனக் கிலேசங்களை மறைத்துக் கொண்டுதான் அவர் மேடையில் வீற்றிருந்தார்...'' என்று முணுமுணுக்கிறார்கள் கட்சியின் சீனியர்கள் சிலர்.

அழைப்பிதழ் அச்சடித்ததுமே சஞ்சலங்கள் தொடங்கியதாம். நடக்கும் இடம் நாகர்கோவில் என்பதால் அமைச்சர் சுரேஷ்ராஜன் வரவேற் புரையாற்ற...தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்களான துரைமுருகன், பரிதிஇளம்வழுதி, சற்குணபாண்டியன் ஆகிய நிர்வாகிகளின் பெயர்கள் மட்டுமே அதில் இடம் பெற்றிருந்தன.

மத்திய அமைச்சரும், கழகத்தின் தென் மண்டலப் பொறுப்பாளரு மான மு.க.அழகிரியின் உயிர் நண்பர்களுக்கோ... தங்கள் அன்பு அண்ணனின் பெயரை அழைப் பிதழில் காணாததால்... அதிர்ச்சி. ''வருகிற சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களின் அத்தனை தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சிந்தாமல் சிதறாமல் ஜெயிக்கவைப்பதற்கு அண்ணன் மெனக்கெட்டு வியூகங்கள் வகுக்கும் வேளையில்... அழைப்பிதழில்கூட அவர் பெயர் இல்லாமல், தெற்கே இந்த விழா தேவையா?'' என்று இந்த உயிர் நண்பர்கள் கொந்தளிக்க... அதில் நியாயம் இருப்பதாக அழகிரியும் நினைத்தாராம்.1.jpg


இதற்கு சமாதானம் பேசிய சிலர், 'கூட்டம் நடத்துவது தி.மு.க. தலைமைக் கழகம். எனவே, தலைமைக் கழகத்தின் நிர்வாகிகள் பெயரை மட்டும்தான் போட முடியும். தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற வகையில் அழகிரி பெயரைப் போட்டால்... மாநில அமைப்புச் செயலாளர்களாக டி.கே.எஸ். இளங்கோவன், கல்யாண சுந்தரம் ஆகிய இருவர் பெயரை 'ஓவர்லுக்' செய்வதாக ஆகாதா?' என்று விதிமுறை - நடைமுறை பேசிப் பார்த்தார்களாம். 'தேர்தல் காலத்தில், எதிர்க் கட்சிகளின் ஒட்டுமொத்த விமர்சனங்களையும் சட்டை பண்ணாமல், பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து, இதனை இன்னார் செய்தால் சரிவரும் என்று முடுக்கிவிட்டு வேலை பார்ப்பதற்கு மட்டும் அண்ணன் வேணும். கூட்டம் நடத்தும்போது, விழாக் கோலாகலத்துக்கு அவர் வேண்டாமா? அண்ணன் இந்த நிகழ்ச்சிக்கு வர மாட்டார்...' என்று சில குரல்கள் கிளம்பின.

விவகாரம் மு.க.ஸ்டாலின் காதுக்குப் போக... விழாவை நடத்தும் பிஸியில் இருந்த சுரேஷ்ராஜனை தொடர்புகொண்ட அவர், ''அண்ணனை விழாவுக்குக் கூப்பிடுங்க. முக்கியத்துவம் கொடுத்துப் பேசுங்க!' என்று உத்தரவு போட்டாராம். சுரேஷ்ராஜனும் மதுரையில் இருந்த அழகிரியிடம் பேச, ''எனக்கு அன்னிக்கு டெல்லியில் வேலை இருக்கு. என் துறை தொடர்பான கூட்டம். அதனால், என்னால் வர முடியாது!'' என்று நயமாகவே சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்ததாகச் சொல்லப்படுகிறது.

'விஷயம் சீரியஸ்' என்று மறுபடி சென்னைக்குத் தகவல் எட்ட... அடுத்த முயற்சி தொடங்கியதாம். தினப் பத்திரிகை விளம்பரங்களில் அழகிரி பெயரையும் இணைத்து ஈடு கட்டுவதன் மூலம், அவரை சாந்தப்படுத்தலாம் என்று கட்சி முக்கியஸ்தர்கள் சொல்ல... தலை அசைத்தாராம் கருணாநிதி.

அதைத் தொடர்ந்து முப்பெரும் விழா விளம்பரங்களில், தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி., திருமதி குஷ்பு சுந்தர் ஆகிய மூன்று பெயர்கள் இணைக்கப்பட்டன. யார் சொல்லி மற்ற இரு பெயர்கள் புதிதாக இணைந்ததோ... அதுவே எரிமலைக்குள் எண்ணெய் ஊற்றிவிட்டது என்கிறார்கள். 'இது அண்ணனுக்கு முக்கியத்துவம் தருவதற்கு போட்ட விளம்பரம் மாதிரி தெரியலை. சந்தடி சாக்கில் குஷ்பு பெயரைச் சேர்க்கக் காத்திருந்த காரியமாக இருக்கிறது!'' என்று அழகிரியின் ஆதரவுப் படையினர் அதிர்ந்து பேசத் தொடங்கினார்களாம். ''அண்ணன் பெயரை இணைத்து புது அழைப்பிதழே அடித்தாலும்... எத்தனை விளம்பரங்கள் கொடுத்தாலும் அவர் அப்செட் ஆனது ஆனதுதான்!'' என்று மீடியா நண்பர்களிடம் மனவோட்டத்தைக் கசியவிட்டனர்.

குஷ்புவின் பெயர் இணைக்கப்பட்டது, கனிமொழி வட்டாரத் திலும் அதிர்வலை பரப்பியதாம்! அதே சமயம், அழகிரியை இந்த விழாவுக்கு எப்படியும் வரவழைத்து... அவருக்குத் தெற்கே உள்ள தனி முக்கியத்துவத்தை விழா மேடையில் வெளிச்சம் போட்டு... சில விஷயங்களை உணர்த்த நினைத்ததாம் கனிமொழி தரப்பு! இதுபற்றிச் சொல்பவர்கள், ''முப்பெரும் விழா ஜொலிப்பு செப்டம்பர் 20 தேதி என்றால்... அதற்கு முந்தைய தினம் சுரேஷ்ராஜனை தொடர்புகொண்டு கனிமொழி தரப்பில் பேசினார்கள். 'நீங்கள் மறுபடி அழகிரி அண்ணனைக் கூப்பிடுங்கள். அவர் மதுரையில்தான் இருக்கிறார். கட்டாயம் நாகர்கோவில் கூட்டத்துக்கு வருவார்' என்று கூறினார்கள். அவர், தனக்கும் அழகிரிக்கும் ஏற்கெனவே நடந்த தொலைபேசி உரையாடலைச் சொல்லி, 'வர மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். மறுபடி நானே எப்படி அழைக்க முடியும்?' என்று கேட்டாராம். 'நீங்கள் நேரில் போய் அழைத்தால் நிச்சயம் வருவார்!' என்று பதில் வந்ததாம்.

'நாகர்கோவிலில் இருந்து மதுரைக்குப் போய் வரவே எட்டு மணி நேரம் தேவை. அங்கே இரண்டு மணி நேரம் தேவை. 10 மணி நேரத்தை இன்றைக்கு என்னால் செலவழிக்க முடியாது. காலையில் தளபதி வந்து இறங்கிவிட்டார். அவரை அழைத்துப் போய் பொதுக் கூட்டம் நடக்கும் மேடையைக் காட்டியாக வேண்டும். அதோடு, இரண்டு அரசு விழாக்களும் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு என்னால் போக முடியாது!' என்று சுரேஷ்ராஜன் விளக்கம் அளித்தார் என்கிறார்கள்.1.jpg


அடுத்த சிறிது நேரத்தில் தலைவரே சுரேஷ்ராஜனை தொடர்புகொண்டு பேசினார் என்றும், அவரிடமும் நடந்ததை சுரேஷ்ராஜன் விவரித்தார் என்றும் தகவல். தொண்டர்கள் கூடும் தனிப் பெரும் திருவிழாவை நடத்துவதற்குள் இப்படி ஓர் உணர்ச்சிப் போராட்டமா என்று வருந்தியபடி தலைவர் போனை வைத்ததாகச் சொல்வோரும் உண்டு.

மூத்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு இந்தத் தகவல்கள் சென்றன. ''நான் வேண்டுமானால் தம்பி யிடம் பேசவா?'' என்று தலைமையிடம் அனுமதி கேட்டு வாங்கினாராம்.

''என்னுடைய வாழ்நாளில் இது முக்கியமான விழா. பெரியார் பெயரிலான விருதை நான் வாங்குகிறேன். அதற்கு நீங்கள் வராமல் இருக்கக் கூடாது. நிச்சயம் வந்தாக வேண்டும்!'' என்று வீரபாண்டியார் சொல்ல... ''உங்களை நான் மதிக்கிறேன் அண்ணே!'' என்று மட்டும் சொன்ன அழகிரி, ''நமக்காகப் பாடுபடுறவங்களோட உணர்வையும் மதிக்கணுமே!'' என்றபடி கசப்புகளைப் பட்டியல் போட்டதாகவும்... தகவல் தெற்கில் பரவியது.

'வருத்தங்கள் யாருக்கும் இருக்கலாம். அதற்கு உரிய விளக்கங்களை கட்சி கொடுக்கும். ஆனால், தொண் டனும் கட்சியும்தான் முக்கியம். தேதி குறித்த பிறகு, எதிலும் எங்கும் சுணக்கம் கூடாது!' என்று எரிமலை குரலில் கண்டிப்பாக சொன்னாராம் கருணாநிதி. அதே சமயம், சென்னையில் இருந்து பறந்து வந்த கட்டளையை ஏற்று அழகிரி மற்றும் கனிமொழிக்காக பிரத்தியேக விளம்பரங்களை சுரேஷ்ராஜன் வெளியிட்டு குஷிப்படுத்தியதும் நடந்தது

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_09_2010_001_066mk.jpg?w=105&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_09_2010_013_007-mla-son.jpg?w=300&h=194

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_09_2010_001_012-mk.jpg?w=300&h=128

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கோபாலபுரத்தை கலங்கடித்த குஷ்பு புயல்!

Kushboo.jpg‘‘சில மாதங்களாக அடங்கிக்கிடந்த தி.மு.க.வின் உட்கட்சி பூசல்களும் குடும்ப மோதல்களும் அப்பட்டமாக வெளிப்படும்’’ என்பதுதான் எல்லாதரப்பு அரசியல்வாதிகளும் முணுமுணுக்கும் செய்தியாக இருக்கிறது.

திடுமென தி.மு.க.வில் புகைய ஆரம்பித்திருக்கும் புகைச்-சலுக்கு காரணம் நாகர்கோவிலில் நடந்த முப்பெரும் விழா. இந்த விழாவில் அழகிரியின் பெயர் அழைப்பிதழில் முதலில் அச்சேரவில்லை. அவர் ஆவேசப்பட்டதும், அதே விழாவில் குஷ்புவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும் தி.மு.க.வில் மீண்டும் குடும்ப மோதலுக்கு இழுத்துச் சென்றுள்ளது.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தி.மு.க.விற்கு கொண்டாட்ட மாதம்தான். திராவிட பாரம்பரியத்தின் அச்சாணிகளான பெரியார், அண்ணா ஆகியோரின் பிறந்த தினங்களோடு, கட்சி தொடங்கிய நாள் என மூன்று விழாக்களையும் இணைத்து, முப்பெரும் விழா எடுத்து வருகிறது தி.மு.க.

Kushboo%204.jpgஇந்த முப்பெரும் விழாவில் எப்போதும் ஒரு மெசேஜ் இருக்கும். இந்த முறை கிடைத்த மெசேஜ்... கலைஞர் தனது வாரிசுகளின் மூக்குடைத்துவிட்டு, குஷ்புவுக்கு ராஜ மரியாதை செய்திருப்பதுதான். அந்த விஷயத்துக்கு இறுதியில் வருவோம். நாகர்கோவில் தேர்வான ரகசியம்!

இந்த வருடம் முப்பெரும் விழா பற்றிய பேச்சுக்கள் கிளம்பியதுமே முதல்வர் கருணாநிதியிடம், ‘‘கோவையில் செம்மொழி மாநாடு நடத்திவிட்டீர்கள். திருச்சியில் திகைப்பான கூட்டம் கூட்டி விட்டீர்கள். சமீப காலங்களில் வட மாவட்டங்களில்தான் கட்சியின் பெரிய விழா எதுவும் நடக்கவில்லை. அதனால் திருவண்ணாமலையில் முப்பெரும் விழாவை நடத்த வேண்டும்’’ என கோரிக்கை வைத்திருந்திருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. அந்த கருத்தை ஸ்டாலினும் ஆதரித்திருக்கிறார். முதல்வர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ‘‘தமிழகத்தின் தென் கோடியை நாம் மறந்து விட்டோம். இம்முறை நாகர்கோவில்தான். நான் அங்கு சென்றும் வெகு நாட்களாகிறது’’ என்று சொல்லி நாகர்கோவிலை விழா நகரமாக தேர்வு செய்தாராம். 

ஆவேசத்துக்கு அச்சாரம் அழைப்பிதழ்!

நாகர்கோவிலில் முப்பெரும் விழா என்று முடிவானதுமே, அதற்கான மொத்த ஏற்பாடுகளையும் செய்யும்படி சுற்றுலா மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரான சுரேஷ்ராஜனிடம் ஒப்படைப்பது என்று முடிவு செய்தார் கலைஞர். இதற்குள் அழகிரியின் காதுகளுக்கு முப்பெரும் விழா செய்திகள் போனது. உடனே ஆவேசமான அழகிரி, ‘‘தென்மண்டலத்தில் விழா நடத்துவதைக்கூட ஒரு செய்தியாகத்தான் என்னிடம் சொல்கிறீர்கள். என்னிடம் கலந்தாலோசிக்க மாட்டீர்களா?’’ என அப்போதே முதல்வரிடம் ஆவேசப்பட்டாராம். 

இருந்தாலும், விழா நடக்கட்டும் என்று அமைதியாக இருந்தார் அழகிரி. இதற்கிடையில், விழாவுக்கான அழைப்பிதழ் தயாராகி வந்தது. அதில் தன் பெயர் இல்லை என்றதும், கொதிக்க ஆரம்பித்து விட்டார்.

தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்களான துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன் ஆகியோரின் பெயர்களோடு லோக்கல் அமைச்சரான சுரேஷ்ராஜன் ஆகியோரது பெயர்கள் மட்டும்தான் அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது. 

‘‘திட்டமிட்டு என்னை அவமானப் படுத்துகிறார்கள். விழாவை நல்லா நடத்திட்டுப் போகட்டும். ஆனால், சத்தியமாக நாகர்கோவில் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கமாட்டேன்’’ என்று தனது தாயிடமும், சகாக்களிடமும் தெரிவித்துவிட்டார். அழகிரியின் கோபம், ஆவேசமாக மாறிய விஷயம் கலைஞருக்கு எட்டியது. முப்பெரும் விழா தென் மண்டலத்தில் நடக்கிறது, அதில் அழகிரி பெயர் இல்லையென்றால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறியாதவர் அல்ல கலைஞர். ஆனாலும், அழகிரியின் பெயரை கலைஞர் ஏன் தவிர்த்தார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

அழகிரியின் கோபம் குறித்து, செப்.18&ம் தேதி காலை முதலே விவாதிக்கத் தொடங்கிவிட்டார் கலைஞர். ‘என்னய்யா... அவன் கோவிச்சிக்கிறான். அமைப்புச் செயலாளர் பெயர்களை இதுவரை முப்பெரும் விழாவில் போட்டதே கிடையாது. அப்படி போட்டால், அழகிரியோடு டி.கே.எஸ்.இளங்கோவன், பி.வி.கல்யாணசுந்தரம் பெயரையும் போட வேண்டுமே’ என்றெல்லாம் விவாதம் தொடங்கி, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார் கலைஞர். அவரது பெயரை போட்டுவிடுவது என்று முடிவு செய்து, அமைச்சர் துரைமுருகன் மூலம், அழகிரிக்கு தெரியப்படுத்தி-விட்டார் கலைஞர். அழகிரி பெயர் சேர்க்கப்பட்ட விளம்பரம் தயா-ராகி முரசொலி இதழ் அச்சாகிக் கொண்-டிருந்தது.

அழகிரியின் புயல் ஓய்ந்துவிடும் என்று கலைஞர் நினைத்துக் கொண்டே, சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் சென்றார். அங்கே, அந்த விழா அழைப்பிதழில் கனிமொழி பெயரும் இடம் பெற வேண்டும் என்று ராசாத்தியம்மாள் போர்க்கொடி தூக்க, கலைஞருக்கு நெருக்கடி தொடங்கியது. ஒரு மணி நேரம் விவாதம் நடந்து முடிந்ததும், முரசொலிக்கு சென்ற விளம்பரத்தில் மாற்றம் செய்யும்படி உத்தரவிட்டார் கலைஞர்.

அழைப்பிதழில், அழகிரியின் பெயரோடு, கனிமொழி பெயரைச் சேர்த்ததுடன், குஷ்பு சுந்தர் பெயரையும் சேர்க்கச் சொன்னார் கலைஞர். அங்கேயும் ஒரு சுவாரஸ்ய திருப்பம் ஏற்பட்டது. சென்னைக்கு மட்டும் அடிக்க வேண்டிய முரசொலி மட்டுமே பாக்கி இருந்தது. அதனால் சென்னை பதிப்பு முரசொலி யில் மட்டுமே, கனிமொழி பெயரும், குஷ்பு சுந்தர் பெயரும் இருந்தது. முரசொலியின் இதர பதிப்புகளில் இந்த இருவரின் பெயர் இல்லை. மற்ற நாளிதழ்களில் திருத்தப்பட்ட அழைப்பிதழில் அழகிரி, கனிமொழி, குஷ்பு சுந்தர் பெயர்களும் இருந்தன. 19&ம் தேதி விளம்பரம் வந்த அன்றுதான், வாரிசுகள் அத்தனை பேரையும் கலைஞர் மூக்குடைத்தது அம்பலமாகி இருந்தது.

Kushboo%202.jpg‘ ஆளாளுக்கு என் பேரை சேருங்கன்னு டார்ச்சர் செய்யறீங்களா... இருங்க என் வேலையை நான் காட்டுறேன்’ என்று கலைஞர் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் மறுநாள் தான் தெரிந்தது.

குஷ்பு பெயர் வந்ததும் கடும் வெறுப்பில் மூழ்கியவர் கனிமொழி. கட்சிக்காக ஊர் ஊராக ஓடித்திரியும் தனது பெயரை சேர்க்க வேண்டி தாயார் கோரிக்கை வைத்தால், தனது இடத்திற்கு சமமாக குஷ்புவைக் கொண்டு வந்ததை கனிமொழியால் ஜீரணிக்க முடியவில்லை. இருந்தும் தனது அதிருப்தியை, கலைஞரிடம் காட்டாமலேயே, நாகர்கோவில் சென்று வந்தார்.

குஷ்புவின் பெயர் அச்சில் ஏறிவிட்டது என்ற செய்தி தன்னை எட்டியதும், ஸ்டாலின் தவிப்புக்குள்ளானார். அழகிரியின் பெயரை போடுவதற்கு எப்போதுமே, தன்னால் தான் பிரச்னை ஏற்படும். இந்த முறை குஷ்புவின் மூலமாக குடும்பத்திற்குள் பிரச்னை வெடிக்கப்போகிறதே... அண்ணனை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று அவர் தவித்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரைவிட உச்சக்கட்ட கடுப்புக்கு ஆளானவர் அழகிரிதான். பெயர் இல்லையே என்று மேலோட்டமாக கோபம் காட்டிய அழகிரி, திருத்தப்பட்ட அழைப்பிதழில் இருந்த பெயர்களைக் கண்டதும், கொதித்துவிட்டார். 

எடுபடாத தயாளு சமாதானம்!

பல தரப்பில் இருந்து சமாதானம் செய்தும் அழகிரி மசியவில்லை. பின்னர் துரைமுருகன் பேசியிருக்கிறார். ‘‘நான் எம்.ஜி.ஆர் படம் பார்த்துக்கிட்டிருக்கேன். என்னை டிஸ்டர்ப் செய்யாதீங்க’’ எனச் சொல்லி தொடர்பை கட் செய்துவிட்டாராம் அழகிரி. 

இந்நிலையில் அழகிரியை சமாதானப்-படுத்த தயாளு அம்மாளைக் கொண்டு வந்தார்கள். வழக்கமாய் பேசும் அதே உருகிய குரலுடன் அழகிரியின் லைனுக்கு போயிருக்கிறார் தயாளு. ‘‘எல்லாரும் ஒண்ணாயிருக்கறப்ப, நீ மட்டும் ஏம்பா முரண்டு பிடிக்கிறே. தேர்தல் வர்ற நேரத்துல, நீ இப்படி செய்யறது அப்பாவுக்கு பிடிக்கலைப்பா. எல்லாத்தையும் மறந்துட்டு என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து விழாவுக்கு போகணும்..’’ என உரிமை கலந்து உத்தரவு போட்டாராம்.

‘‘அழைப்பிதழில் என் பெயர் போடாததே பரவாயில்லை. விளம்பரத்துல என் பெயரை போடறேன்னு சொல்லிட்டு குஷ்பு பெயருக்கு மேல போட்டிருக்கீங்க. குஷ்புவுக்கு சமமா நான்? கட்சிக்குள்ள தலைவருக்கு அடுத்து ஸ்டாலின்னு முடிவு பண்ணிட்டீங்க. ஸ்டாலினுக்கு அடுத்து கூட நான் இல்லேன்னா, என்னை எந்த இடத்துலதான் வைச்சிருக்கீங்க?’’ என்று கேட்டுவிட்டு, போனை ஆஃப் செய்துவிட்டார் அழகிரி

அண்ணன் நாகர்கோவில் செல்லவில்லை என்றதும், அவரது ஆதரவாளர்கள் அங்கே குவியத்தொடங்கினர். ‘‘இந்தக் கட்சிக்காக எவ்வளவு உழைக்கிறேன். வர்ற சட்டமன்ற தேர்தலுக்காக இப்ப இருந்தே நாயா பாடுபடறேன். பெங்களூருல இருந்தும், டெல்லியில இருந்தும் ஆட்களை கூப்பிட்டு வந்து, இப்பவே சர்வே எடுத்துப் பார்க்கறேன். தென் மண்டலம் முழுவதும் இப்பவே பூத் கமிட்டி அமைக்கச் சொல்லியிருக்கேன். இப்படி நான் உழைக்கற உழைப்பு மாதிரி யார் உழைக்கறாங்க? அடுத்து வேற ஆட்சி வந்தால், என் நிலைமை என்னாகும்? எனக்கு என்ன பாதுகாப்பு இருக்கு? இன்னும் ஆறு மாசத்துல தேர்தல் வரட்டும். அப்ப நான் யாருன்னு காட்டறேன்’’ என ஆவேசத்தில் தன்னுடைய வருத்-தங்கள் அனைத்தையும் தன் வீட்டில் குவிந்-தவர்களிடையே கொட்டினாராம். இந்த விஷயங்கள் அப்படியே கலைஞரின் காதுக்கும் போயிருக்கிறது.

Kushboo%205.jpgஇதற்கிடையில், முப்பெரும் விழா நாளில் நான் மதுரையில் இல்லாமல் இருப்பது போல் வெளியே தெரியக்-கூடாது. மதுரையில் இருந்து கொண்டுதான் விழாவுக்கு வரவில்லை என எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே, தொகுதி மேம்பாட்டு நிதியில் மதுரையில் நடைபெறும் சில வேலைகளை தனது படை, பரிவாரங்கள் சூழ சென்று பார்வை-யிட்டாராம் அழகிரி.

‘‘விழாவைப் புறக்கணித்துவிட்டு அழகிரி, இப்போதைக்கு அமைதியாக இருந்தாலும், அடுத்தடுத்து அவர் ஆற்றப் போகும் காரியங்கள் கட்சிக்குள் பெரும் புயலை வீசச் செய்யும்...’’ என்று அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் இருந்து விடுக்கும் செய்திகளால், தி.மு.க. தலைவர்கள் சிலர் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

கோபாலபுரத்தில் வழக்கமாக உள்ளூர் புயல்தான் வீசும். நீர் அடித்து நீர் விலகாது என்ற வகையில் அந்த புயல்கள் புஸ்வாண-மாகிவிடும். வடஇந்தியாவிலிருந்து வங்கக்-கரைக்கு வந்திருக்கும் குஷ்பு புயலால், கோபாலபுரம் குடும்பத்தில் என்ன கலவரத்தை ஏற்படுத்தும் என்பதைதான் தி.மு.க.வின் தொண்டர்கள் திகிலாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம், முப்பெரும் விழாவில் கட்சியில் சேர்ந்து ஆறு மாதங்கள் கூட ஆகாத ஒரு நடிகைக்கு கொடுக்கப்பட்ட ராஜமரியாதை, தி.மு.க. முக்கியஸ்-தர்களை மட்டு-மின்றி, மூன்று வாரிசுகளுமே வெவ்-வேறு வகைகளில் சங்கடத்திற்கு ஆளாகியிருக்-கிறார்-கள் என்பதும் மறுக்க முடியாத செய்தியாகும். 

ஆக, முப்பெரும் விழாவில் இறுதியில், தி.மு.க. தொண்டனுக்கு கிடைத்திருப்பது ஒரே ஒரு செய்திதான்... தனது வாரிசுகளை கட்டுப்படுத்த முடியாமல் அல்லது அவர்களுக்கு பாடம் கற்பிப்பதாக நினைத்து குஷ்புவை தாங்கிப்பிடித்திருக்கிறார் கலைஞர். ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு வாரிசை சமாளிக்க, அந்தந்த நேரத்தில் ஒரு அஸ்திரம் எடுப்பார். மூன்று வாரிசுகளுக்கும் ஒரே நேரத்தில் நெருக்கடி கொடுக்க, கலைஞர் எடுத்த அஸ்திரம்தான் குஷ்பு! இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அழகிரியின் அடுத்த மூவ்தான் முதலில் எடுத்துக்காட்டும்!__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இலவச செல்போன்...
‘இன்கமிங்’ மச்சான்!
ஆ.ராசாவின் அவினாசி பிளான்

Karthick.jpg


வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்காக இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை, கோவை மாவட்டம் அவினாசி தொகுதியில் துவக்கி வைத்திருக்கிறார் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா. 

ஆயிரத்து 35 ருபாய் மதிப்புள்ள எல்.ஜி செல்போன், லைப் டைம் வேலிடிட்டி மற்றும் 40 ரூபாய் டாக் டைம் கொண்ட பி.எஸ்.என்.எல். சிம்கார்டு என ஆயிரத்து 200 பேருக்கு வழங்கி அதிரடி கிளப்பியிருக்கிறார் ஆ.ராசா. மேலும், ‘‘பரிசோதனை முறையில் அறிமுகம் செய்யப்-பட்டுள்ள இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும்’’ என்றும் சொல்லியிருக்கிறார். 

முதன் முறையாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் தொகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச செல்போன் வழங்கும் திட்டம், அடுத்து அவினாசியில்தான் அரங்கேறியிருக்கிறது. 

இதுபற்றி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் வட்டாரத்தில் பேசியபோது, ‘‘இந்தத் திட்டத்துக்கென மத்திய அரசு தனியாக ஒரு தொகையை ஒதுக்க வேண்டியதில்லை. மத்திய தகவல் தொடர்பு துறை தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு சில விதிகளை தளர்த்தியதால், கிராமப்புற பகுதிகள் தகவல் தொடர்பு துறையில் மேம்படுவதற்கு, தனியார் செல்போன் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தில ஆண்டுக்கு 5 சதவிகிதத்தை மத்திய அரசுக்கு செலுத்துகின்றன. 

Rasa.jpgஅப்படி வந்த லாபமான 18ஆயிரத்து 500 கோடி ரூபாயில் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களையும் பிராட் பேண்ட் சேவை கண்ணாடி இழைகள் (பைபர் ஆப்டிகல்) மூலம் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டம்தான் இந்த திட்டம்’’ என்றனர். 

‘தொலைத் தொடர்பு துறையின் வளர்ச்சி சாமானிய மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்’ என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டாலும் இதன் பின்னணியில் இன்னொரு சுவாரஸ்யமான அரசியல் கதை இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்த தி.மு.க. தலைகள். அவர்களிடம் பேசியபோது... 

‘‘2ஜி, 3 ஜி சேவை என்றெல்லாம் வந்து கொண்டிருக்கும் நிலையில், இலவச செல்போன் அறிவிப்பு என்பது துவக்கத்தில் தலைவரின் யோசனையில் இருந்தது. இதை தமிழகத்தில் அறிமுகப்படுத்தவும் ஏற்பாடுகள் நடந்தன. பின்னர் அதிலுள்ள துறை ரீதியான நடைமுறை சிக்கல், பொருளாதார பிரச்னை எல்லாம் கவனத்தில் கொண்டும், தகவல் தொடர்பு துறையும் தன் கைவசம் இருப்பதாலும் இந்தத் திட்டத்தை மத்திய அரசின் மூலமாகவே செயல்படுத்த கலைஞர் முடிவு செய்தார். ஆனால், முதன் முறையாக உத்தரப்-பிரதேச மாநிலத்தின் அறிமுகமான இந்த திட்டம் இரண்டாவதாக தமிழகத்தில் அறிமுகப்-படுத்தபட்டுள்ளது. தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் எத்தனையோ பகுதிகள் இருக்க... இன்னும் சொல்லப்போனால் அவினாசி தொகுதியை காட்டிலும் மிக பின் தங்கிய கிராமங்கள் இருக்கும் போது தன்னுடைய தொகுதிக்குட்பட்ட அவினாசி பகுதிக்கு கொடுப்பதற்கு காரணம் இருக்கிறது. 

தற்போதெல்லாம் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவரும் ராசாவை அழைத்த கலைஞர், ‘கூட்டத்தில மட்டும் அந்தம்மாவை தாக்கி பேசினா பத்தாது. உன்னோட தொகுதியிலதான் அந்தம்மாவோட ஆரம்பகால வெற்றிப் பகுதியான அவினாசி இருக்கு. 96-க்கு பின் அவினாசி நம்ம கைக்கு வரல.. அதையும் பார்’ என்று அவினாசி பகுதியை சிக்னல் காட்டியிருக்கார். 

எம்.ஜி.ஆருக்குப் பின் ஜெ.& ஜா என பிரிந்தபோது பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அவினாசி தொகுதியில் ஜெ. ஆதரவாளர் அண்ணாநம்பி வெற்றிபெற்றார். அன்றிலிருந்து ஜெ.வுக்கு செல்வாக்கான ஏரியா அவினாசி. தனித்-தொகுதியான இங்கு ஜெ. யாரை கை காட்டினாலும் அவர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள் என்ற நிலைதான். தலித் மக்களும் அதிக அளவில் இருக்கிறார்கள். இங்கு அ.தி.மு.கவை சாய்க்கவே தொலைத் தொடர்பு துறையின் பிரதான திட்டமாகவும், பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்களை அதிகப்படுத்தம் திட்டமான இலவச செல்போன் திட்டத்தை அவினாசியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதற்கு முன்பும் இதே போல் கிராமப்புற சிறுசேமிப்பு என்று கிராமப்புற அஞ்சலக காப்பீட்டு திட்டத்தை இங்கு துவக்கி வைத்தார்’’ என்றவர்கள் ஆ.ராசாவின் அடுத்த கட்ட திட்டத்தையும் விவரித்தார்கள். 

‘‘இதில்லாமல் இன்னொரு சூட்சமும் இருக்கிறது. தனித்தொகுதி, தன்னுடைய நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு வருவது, தலைவரின் கட்டளையில் கைப்பற்றவேண்டியது என்று, அவினாசி சட்டமன்ற தொகுதி தனக்கு சவாலாக மாறி இருப்பதால், தன்னுடைய மச்சான் ஒருவரை களமிருக்க அவினாசி மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறார் ராசா. வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த அவினாசி மர்மம் விலகத்தானே போகிறது’’ என்கிறார்கள். இலவச செல்போனுக்குப் பின்னால் இப்படியொரு அரசியல் சிக்னலா? __________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தஞ்சை கோயில் சென்ட்டிமென்ட்!

1.jpg

"அது ராஜராஜசோழனுடைய திமிரின் உச்சம்' என்கிறார் தஞ்சையைச் சேர்ந்தவரான கவிஞர் யுகபாரதி. அவர் குறிப்பிடுவது 1000 ஆண்டுகளைக் கடந்தும் உயர்ந்து நிற்கும் தஞ்சாவூர் பெரிய கோயிலைத்தான். மாமன்னன் ராஜராஜசோழனுடைய ஞானச்செருக்கு எனும் கலைத்திமிரின் உச்சமாக இக்கோயில் உயர்ந்து நிற்பது உண்மைதான் என்பதை அரசு சார்பில் நடைபெறும் கோலாகலமான கொண்டாட்டமும் அதற்கு கூடுகின்ற மக்கள் பெருங்கூட்டமும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

தஞ்சையின் முக்கிய இடங்களில் சங்கமம் நிகழ்ச்சிகள் களைகட்ட, பெரியகோயிலின் உள்ளே 1000 நடனக் கலைஞர்களின் பரதம், இன்னிசை, சொற் பொழிவு என நயம் சேர்க்க, ஆயுதப்படைக் காவலர் மைதானத்தில் முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் ஏற்பாடாக.. உற்சாக உற்சவத்தில் திளைக்கிறார்கள் பக்தர்களும் பொதுமக்களும். இத்தனை சிறப்பு களுக்கிடையிலும் சின்னதாக ஒரு சென்ட்டிமென்ட் உணர்வுடன் பலரும் ஒரு விஷயத்தைப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்க முடிகிறது. அது, தஞ்சை பெரியகோயிலுக்குள் வந்தாலோ, கோயில் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலோ பிரபலங் களுக்கு ஆபத்துகள் ஏற்படும் என்கிற சென்ட்டி மென்ட்தான்.

""கி.பி. 985 முதல் 1014 வரை ஆட்சி செய்த முதலாம் ராஜராஜசோழனால் 1010ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சை பெரியகோயில், அந்த மன்னன் பெயராலேயே ராஜராஜேஸ்வரம் என அழைக்கப்பட்டது. 29 ஆண்டுகள் பேரரசனாக ஆட்சி செய்த ராஜராஜன் தனது 25-வது ஆண்டு ஆட்சி யின்போது இக்கோயிலைக் கட்டி முடித்து குடமுழுக்கு செய்தான். அதற்கு முன் ஈழம், முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம் ஆகியவற்றைத் தன் வலிமைமிகுந்த கடற்படையால் வெற்றிகொண்டான். கலிங்கம், மைசூர், கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த போர்களிலும் பெருவெற்றி பெற்றிருந்தான். பெரியகோயில் கட்டிமுடிக்கப்பட்டபிறகு, அவன் ஆட்சி செய்தது 4 ஆண்டுகளே. அத்துடன், தன் உடல்நிலையைக் கருதி 1012ஆம் ஆண்டில், அதாவது கோயில் கட்டிமுடிக்கப்பட்ட 2 ஆண்டுகளில் தன் மகன் ராஜேந்திரசோழனுக்கு இளவரசுப்பட்டம் சூட்டி, ஆட்சி அலுவலகப் பொறுப்புகள் பலவற்றை ஒப்படைத்துவிட்டான்'' என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.1.jpg

இதைத்தான் சென்ட்டிமென்ட்டாகப் பார்க்கிறார்கள் ஆன்மீகவாதிகள். ""மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் 1972-ல் ராஜராஜசோழன் சிலையை கோயிலுக்குள் நிறுவமுடியாமல் வெளியில் அமைத்தது கலைஞர் அரசு. கோயில் சென்ட்டிமென்ட்தான் ராஜராஜனை வீதியில் சிலையாக நிற்கவைத்துவிட்டது'' என்கிற ஆன்மீகவாதிகள், ""சோழநாட்டில் உள்ள பல கோயில்களுக்குத் திருப்பணி செய்து கொடையளித்தான் ராஜராஜன். அப்போதெல்லாம் அவனது புகழும் ஆட்சியும் பரவியது. சிவபாதசேகரன் எனப் புகழப்பட்ட ராஜராஜன், பெரியகோயில் கட்டப்பட்ட பிறகு நான்கே ஆண்டுகளில் சிவபாதத்தைச் சேர்ந்துவிட்டான். பேரரசனுக்கே இந்த நிலைமை ஏற்பட்டதால்தான், இன்றைய ஆட்சியாளர்களும் அதிகாரத்தில் பங்கு பெற்றிருப்பவர்களும் இந்தக் கோயிலுக்கு வருவதற்குத் தயங்குகிறார்கள். 1984ஆம் ஆண்டில் நடந்த ராஜ ராஜசோழன் சதய விழாவில் (பிறந்தநாள்) அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியும் முதல்வர் எம்.ஜி.ஆரும் கலந்துகொண்டார்கள். அதையடுத்து சில வாரங்களில் எம்.ஜி.ஆர் சிறுநீரகக்கோளாறாலும் பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டு நினைவிழந்தார். இந்திராகாந்தி அம்மையார் அவரது மெய்காப்பாளர்களாலேயே சுடப்பட்டு மரணமடைந்தார். அரசியலிலும் மக்கள் செல்வாக்கிலும் மிகப்பெரும் சக்திகளாக விளங்கிய இருவருக்கும் ஏற்பட்ட பாதிப்பு, மற்றவர்களை யோசிக்க வைக்கிறது. முதல்வர் பங்கேற்கும் அரசு சார்பிலான நிகழ்ச்சிகூட கோயிலுக்குள் நடைபெறாமல் வெளியிலுள்ள மைதானத்தில் கோயில் செட் போட்டு நடைபெறுகிறது'' என்கிறார்கள்.

விழா ஏற்பாட்டாளர்களோ, ""1997ல் பெரிய கோயில் கும்பாபிஷேகத்தின்போது யாகசாலையில் தீ விபத்து ஏற்பட்டு பலர் இறந்தார்கள். உடனடியாக முதல்வர் கலைஞர் சென்னையிலிருந்து புறப்பட்டு தஞ்சை கோயிலுக்கு வந்து நிலைமைகளை பார்வையிட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டார். இப்போதும், கூட்ட வசதிக்காகத்தான் இங்கே மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலுக்குள் நடைபெறும் நிகழ்ச்சியில் பேராசிரியர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்'' என்கிறார்கள்.

கோயில் சாஸ்திரம் அறிந்தவர்களாகக் கூறிக்கொள்வோர் நம்மிடம், ""பெரியகோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மிகப் பெரிய சிவலிங்கத்திற்கு பலவித சக்திகள் ஏற்றப்பட்டுள்ளன. ஆனால், அந்த சக்தியை சரியானபடி பூட்டி வைக்கவில்லை. அதனால் சக்தி லீக்காகிறது. அதனால்தான் தஞ்சை பெரியகோயிலுக்குள் சென்றால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் இதேபோன்றுதான் சக்தியைப் பூட்டி வைக்காமல் விட்டிருக்கிறார்கள். உரிய பரிகாரங்களும் பூஜைகளும் செய்து இந்த சக்தியைப் பூட்டிவைக்க முடியும். ஆனால், தற்போதுள்ள சமூக அமைப்பு அதற்கு அனுமதிப்பதில்லை'' என்கிறார்கள்.

தஞ்சை பெரியகோயிலுக்கு சென்றால் பாதிப்பு ஏற்படுமா என்று தஞ்சையின் 4 முறை எம்.எல்.ஏவும் தமிழக வணிகவரித்துறை அமைச்சருமான எஸ்.என்.எம்.உபயதுல்லாவிடம் கேட்டோம். ""ஏதோ ஒரு நேரத்தில் எதிர்பாராமல் நடந்தவற்றை வைத்துக்கொண்டு ஆட்சியாளர்களுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் ஆபத்து என்று சொல்வது சரியானதல்ல. எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நான் பலமுறை பெரியகோயிலுக்கு சென்று வந்திருக்கிறேன். என் அரசியல் வாழ்வில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதே தவிர, ஒருபோதும் பாதிப்பு ஏற்பட்டதில்லை. வருடந்தோறும் நடைபெறும் சதயவிழாவில் மாநில அமைச்சர் கோ.சி.மணி, மத்திய இணையமைச்சர் பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் பல ஆண்டுகளாக கலந்துகொண்டு வருகிறார்கள். முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போதும் அமைச்சர்கள் கலந்துகொண்டார்கள். கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கோயில் விழாக்களில் தொடர்ந்து பங்கேற்கிறார்கள். அதனால் வீண் வதந்திகளை நம்பவேண்டியதில்லை.

சமீபகாலமாக பிரதோஷ வழிபாடு என்பது பெரியகோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது. இதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள். கோயிலுக்குள் இடநெருக்கடி ஏற்படுகிற அளவுக்கு கூட்டம் கூடுகிறது. பாதிப்பு ஏற்படும் என்றால் பக்தர்கள் வருவார்களா?'' என்றவரிடம், "கோயிலைக் கட்டிய 4 ஆண்டுகளில் ராஜ ராஜசோழன் மரணமடைந்ததை சென்ட்டி மென்ட்டாகக் கூறுகிறார்களே' என்றோம். அதற்கு, ""மரணம் எல்லோருக்கும் வருவதுதான். ஆனால், கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் கழித்தும் வரலாற்றில் ராஜராஜசோழன் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறான். அவனுடைய பெருமையை நாம் பேசுவதற்கு பெரியகோயில்தானே காரணம்'' என்றார் அமைச்சர்.

சென்ட்டிமென்ட் சர்ச்சையை மீறி, தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவுவிழாவை மக்கள் கூட்டமும் அரசு இயந்திரமும் கோலாகலமாக்கியிருப்பதை தஞ்சை நகர் முழுக்க காண முடிந்தது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

cmcartoon.jpg?w=300&h=224

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_09_2010_005_034-mk-raja.jpg?w=271&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

முதல்வர் குடும்பம் வழிபாடு

First Published : 27 Sep 2010 02:06:35 AM IST


முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள், மகள் கனிமொழி எம்.பி., பேரன் ஆதித்யா மூவரும் ஞாயிற்றுக்கிழமை பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

 

முதலில் தனியாக வந்த ராசாத்தி அம்மாள் நேராக வராஹி அம்மனை தரிசித்தார். பின்னர், பெருவுடையார், பெரியநாயகி சன்னதிகளில் வழிபட்டார்.  அவரைத் தொடர்ந்து, மகன் ஆதித்யாவுடன் கோயிலுக்கு வந்த கனிமொழி, அங்கு நடைபெற்ற திருமறை ஓதுதல் நிகழ்ச்சியை சிறிது நேரம் பார்த்தார். பின்னர், வராஹி, பெருவுடையார், பெரியநாயகி சன்னதிகளில் வழிபட்டார். அவருக்கு  குருக்கள் பழம், தேங்காய் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினார்.

 

இதையடுத்து, அவர்கள் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

1.jpg
''ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரன் 1012-ம் ஆண்டில்தான் பட்டம்

சூட்டிக்கொண்டான். தந்தையும் மகனுமாக சிறப்பாக ஆட்சி செய்தார்கள் என்பது வரலாறு. தந்தைக்குத் துணையாக நின்று வெற்றிகளைக் குவித்தான் ராஜேந்திரன்...'' - தஞ்சை பெரிய கோயிலின் 1000 ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் இப்படி கருணாநிதி உதிர்த்த வார்த்தைகள் 'அரசியல் சாணக்கியத்தன'மாகப் பார்க்கப்படுகின்றன!

தி.மு.க. நடத்தும் முக்கிய விழாக்களில் கட்சிக்குள் இருக்கும் முக்கியப் புள்ளிகளே... கசப்பு, துரோகம், ஆவேசம், மோதல், புறக்கணிப்பு என்று வெடித்துக் கிளம்புவது அடிக்கடி நடக்கக்கூடிய நிகழ்வாகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நாகர்கோவிலில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழா பொதுக் கூட்டத்துக்கு, தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற வகையில் மு.க.அழகிரிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்கிற கொதிப்பு கிளம்பி இருந்தது. அழகிரியும் அப்செட் ஆகி அந்த விழாவுக்கு ஆப்சென்ட் போட... 'அழகிரி - ஸ்டாலின் சகோதர யுத்தம்' என்று அரசியல் உஷ்ணத்தோடு யூகங்கள் ஆவி பறந்தன. இந்தக் கசப்புக் காயங்களுக்கு மருந்து போடும் முயற்சி நடந்த வேளையில் தஞ்சை பெரிய கோயில் விழா தொடங்கிவிட்டது.

கோவை செம்மொழி மாநாட்டைப்போலவே, தஞ்சையிலும் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியத் துவம் தரப்பட்டது. கோவை செம்மொழி மாநாட்டின் கண்காட்சியைத் திறந்துவைக்கும் பொறுப்பு மத்திய அமைச்சர் அழகிரிக்கு வழங்கப்பட்டது. ஆனால், திடீரென டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததால் கிளம்பிப் போனார். அதேபோல, தஞ்சையிலும் நடந்துவிடக் கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ, விழாவில், எந்த அமர்வுக்கும் அழகிரியின் பெயர் அழைப்பிதழில் அச்சடிக்கப்படவில்லை. விழாவை ஒட்டிய கண்காட்சியை ஸ்டாலின்தான் திறந்துவைத்தார். ஆய்வரங்கத்தை முதல்வர் தொடங்கி வைப்பார் என்றது அழைப்பிதழ். ஆனால், கருணாநிதி வரவில்லை. அந்த வாய்ப்பும் ஸ்டாலினுக்கே! 1.jpg

பெரிய கோயிலில் 1,000 பேர் நடனம் ஆடிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கருணாநிதி தனி மேடையில் இருந்து ரசித்தபோதும் அவருக்குப் பக்கத்தில் ஸ்டாலினே இருந்தார். அப்போது வெளியிட்ட புத்தகத்தைக்கூட ஸ்டாலினே பெற்றுக்கொண்டார். 'தலைவர் இருக்கும் இடத்தில் தளபதி இருப்பார்' என்று கமென்ட் அடித்தார் அமைச்சர் ஒருவர். இதெல்லாம் நடந்து, தன் ஆதரவாளர் களை வருத்தத்தில் ஆழ்த்தும் என்று புரிந்தேதான் தஞ்சை விழாவையும் புறக்கணித்துவிட்டார் மு.க.அழகிரி என்று காரணம் சொல்லப்படுகிறது. ஐந்து நாட்கள் நடந்த தஞ்சை பெரிய கோயில் விழாவின் நிறைவு விழா வில் கருணாநிதி பேசினார். அவரோடு மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், நாராயணசாமி, பழனிமாணிக்கம், ஆ.ராசா ஆகியோரும் மேடை யில் இருந்தனர். ''வரலாற்றில் மைல் கல்லாக இருக்கும் தஞ்சை பெரிய கோயில் விழாவில் பங்கெடுக்க அண்ணனுக்கு முக்கியத்துவமே கொடுக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மத்திய அமைச்சர்களை மேடை ஏற்றியவர்கள் மத்திய அமைச்சரான அண்ணனை எப்படியாவது அழைத்து வந்து கௌரவப்படுத்த மறந்தது ஏன்? திட்டமிட்டே அவரை மறக்கடிக்க வேண்டும் என்று செய்யப்பட்ட விஷயங்கள்தான் தஞ்சையில் அரங்கேறி இருக்கின்றன. விழாவுக்கு வெறுமனே பார்வையாளராக வந்துபோக, அவர் ஒன்றும் சாதாரண நபர் அல்ல. தேர்தல் வேலைக்கு மட்டும் பயன்படுத்தும் கறிவேப்பிலையாக அவரை இனியும் பயன்படுத்த முடியாது!'' என்கிறார்கள் அழகிரிக்கு நெருக்கமானவர்கள்.

இப்படி ஓர் இறுக்கமான சூழ்நிலையில் நடந்த கூட்டத்தில், ஸ்டாலினுக்குத் தரப்பட்ட முக்கியத் துவமும், கருணாநிதி தனது பேச்சில் கொடுத்த மரியாதையும், 'ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகத்தை விரைவில் நடத்துவற்கான முன்னறிவிப்பாகவே தென்பட்டது' என்கிறார்கள் உள் விஷயங்கள் அறிந்தவர்கள்!

''சோழ சாம்ராஜ்யத்தில் ராஜராஜனின் நிர்வாகத் திறமை எல்லா மன்னர்களுக்கும் ஓர் உதாரணமாக விளங்கியது. அவனது சாம்ராஜ்யத்தின் எல்லாப் பகுதிகளிலும் காவல் படைகள். சிங்கம்போல் சுற்றி வருவதற்கு மகன் ராஜேந்திரன் காரணமாக இருந்தான். நம்பிக்கையான அரசியல் அறிவு கொண்டவனாக விளங்கினான்!'' என்று கருணாநிதி பேசினார். அவர் பேச்சுக்கு உடன்பிறப்புகள் வேறு அர்த்தம் கற்பிக்கிறார்கள். ராஜராஜ சோழனாக கருணாநிதியையும், ராஜேந்திர சோழனாக ஸ்டாலினையும்தான் அவர்கள் பார்க்கிறார்கள்.

''எப்படி ராஜராஜ சோழனின் ராஜ்யத்தை ராஜேந்திர சோழன் காவல் காத்தானோ, அதேபோல, கட்சி என்கிற படையை நடத்திப்போகும் தளபதியாக துணை முதல்வர் விளங்குகிறார். அதைத்தான் தலைவர் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்!'' என்கிறார்கள்.

''ராஜராஜன் செல்லாத பகுதிகள் இல்லை, வெல்லாத மன்னர்கள் இல்லை. அப்படிப்பட்டவன் அமைதியின் உருவமாகவும், எல்லோருக்கும் நல்லவனாகவும், எல்லோரையும் சமமாகக் கருதுபவனாகவும் விளங்கி னான்!'' என்று கருணாநிதி சொன்ன வார்த்தைகளும் ஸ்டாலின் குறித்து அழகிரியின் ஆதரவாளர்களுக்குத் தெரிவிக்க விரும்பியவையே என்கிறார்கள். 1.jpg

ஆனால், சீனியர் தலைவர் ஒருவரோ, ''அழகிரியையும் ஸ்டாலினையும் தலைவர் சமமாகவே கருதுகிறார். யாரையும் அவர் குறைத்து மதிப்பிடவில்லை. ராஜராஜ சோழனின் கம்பீரத்தோடு தான் இருப்பதை மட்டுமே யாருக்கோ அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்!'' என்று சொன்னார்.

தஞ்சை விழாவில் கருணாநிதி ஆற்றிய நிறைவு உரையின் இறுதிப் பகுதிதான் அர்த்தபுஷ்டியோடு இருந்தது. ''ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரன் 1012--ல் பட்டம் சூட்டினான். தந்தையும், மகனு மாக சிறப்பாக ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்புமிக்கது. தந்தைக்குத் துணையாக நின்று வெற்றிகளைக் குவித்தான். அந்த ராஜேந்திரனையும், அவரது தந்தை ராஜராஜ சோழனையும் பெற்ற இந்த தஞ்சை தரணியில் அவர்களுக்கு விழா எடுப்பது நம்மை நாமே பெருமைப் படுத்திக்கொள்ளும் விழா!'' என்று தனது உரையை முடித்தார் முதல்வர்.

''தந்தைக்குத் துணையாக வெற்றிகளைக் குவித்தான்' என்ற வார்த்தையிலேயே 'துணை' என்கிற வார்த்தை தளபதியைத்தான் குறிக்கும். சென்னையில் பெரம்பூர் மேம்பாலம் திறப்பு விழாவில்கூட தலைவர் பேசும்போது 'எனக்கு எல்லா வகையிலும் துணையாக இருப்பார் என்பதால்தான் அவரை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறோம்' என்றார். ராஜராஜ சோழனுக்குப் பிறகு அவரது மகன் அரியணையில் ஏறியதுபோது தளபதியும் அரியணையில் அமர்வார் என்பதை யாருக்கோ புரிய வைத்து இருக்கிறார் தலைவர்!'' என்கிறார்கள்.

கருணாநிதி மட்டுமல்ல... அழகிரியின் ஆதரவாளராகக் காட்டிக்கொண்ட அமைச்சர் துரைமுருகன் இப்போது ஸ்டாலின் விசுவாசியாக மாறிவிட்டார். சீனியரான அவரே விழாவில், ''ராஜேந்திர சோழன் உருவில் ஸ்டா லினைப் பார்க்கிறேன்!'' என்று முன்கூட்டி பொழிப்புரை கொடுத்தார்.

''ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலன், மன்னரைவிட அதிகாரம் பெற்றவர்களால் கொல்லப்பட்டான். அவனுக்குப் பிறகு ராஜராஜ சோழன்தான் ஆட்சியில் அமர வேண்டும். ஆனால், அவனுடைய சித்தப்பா உத்தம சோழன் ஆட்சி செய்ய ஆசைப்பட்டார். ராஜராஜ சோழனும் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு அந்த ஆட்சி முறையைப் பற்றியும் ஆட்சியின் நுணுக்கங்களையும் பார்த்து தேர்ச்சி பெற்றான். 15 ஆண்டுகள் கழித்துதான் ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்தான். அதனால், இப்போது யார் பதவிக்கு வர ஆசைப்பட்டாலும் அதற்காக தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்!'' என்று ஆய்வரங்கத்தில் பேராசிரியர் அன்பழகன் வைத்த கருத்துகளும் யாரையோ மையப்படுத்தித்தான் வைக்கப் பட்டதோ? 1.jpg

அதன் பிறகு கனிமொழி பேசும்போது, ''தகுதி உடையவர்கள் எந்த சாதியாக இருந்தாலும், அவர் கள் நிச்சயம் பதவிக்கு வரலாம். யோக்யதாம்சம் பொருந்தியவர்கள்தான் பதவிக்கு வர முடியும் என்று ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் சொல்கின்றன!'' என்று குறிப்பிட்டதும் கவனிக்கப்பட்டது! அழகிரி யின் உரசல்களுக்குத் தொடர்ந்து சமாதான முயற்சிகள் நடந்து கொண்டே இருந்தனவாம். தஞ்சை விழாவுக்கு வரச் சொல்லி கருணாநிதியே அழகிரியிடம் கேட்டுக்கொண்டாராம். ஆனால், பிடிகொடுக்காமல் இருந்தார் அழகிரி. தஞ்சையில் சங்கம் ஹோட்டலில் தங்கி இருந்தபோது, சீனியர்கள் சிலரிடம் சற்றே கோபமும் கலந்து சில விஷயங்களை கருணாநிதி பகிர்ந்துகொண்டதாகப் பேச்சு இருக்கிறது. ''இன்னும் எத்தனை காலத்துக்குதான் அழகிரியை நான் சமாதானப்படுத்திக்கொண்டு இருக்க முடியும்? அரசியலில் அழகிரியின் வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய விஷயங்களில் நான் எதைச் செய்யவில்லை? கட்சிக்கு என்று கட்டுப்பாடு இருக்கிறதே... அதைக் காப்பாற்ற வேண்டாமா?'' என்றாராம் முதல்வர்.

மூத்தவர் மீதான இந்த கோபம் இளையவருக்கு லாபமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்கிறார்கள் தஞ்சை விழாவை நன்கு கவனித்தவர்கள். அதேசமயம், ''தெற்கே பலமிக்க அழகிரியைக் கோபப்படுத்தும் நேரமா இது? திட்டமிட்டு அழகிரிக்கு எதிராக காய் நகர்த்தும் சிலர் ஜெயிக்கும்படி முதல்வர் இருந்துவிடக் கூடாது! இல்லையேல், ஆட்சிக்கு வந்த இந்த நாலரை வருடங்களில் திட்டம்போட்டு தி.மு.க. குவித்த வெற்றிகளுக்கு க்ளைமாக்ஸில் அர்த்தமில்லாமல் போய்விடும்!'' என்பதும் இவர்கள் கருத்து!

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஸ்டாலின் முதல்வர்? கலைஞர் அவசர ஆலோசனை! மதுரையை டென்ஷனாக்கிய தஞ்சை!

1.jpg
""ஹலோ தலைவரே... தஞ்சாவூரில் அரசு நடத்திய பெரிய கோயில் ஆயிரமாண்டு விழாவினால் அரசியல்ரீதியான பரபரப்பு ஆளுங்கட்சி வட்டாரத்தில் ஏற்பட்டிருக்குது.''

""நானும்கூட கேள்விப்பட்டேம்ப்பா.. அமைச்சர் துரைமுருகன் பேசுறப்ப, ராஜ ராஜசோழனுக்குப் பிறகு ராஜேந்திர சோழன் ஆட்சி செய்தார். கலைஞருக்குப் பிறகு ராஜேந்திரசோழனாக நாங்கள் மு.க.ஸ்டாலினைப் பார்க்கிறோம்னு சொன்னாரே, அதுதானே பரபரப்புக்கு காரணம்?''

""அந்தப் பேச்சோட பின்னணிதான் பரபரப்பை அதிகமாக்கிடிச்சி. தஞ்சை விழாவுக்கு 3 நாள் முன்னாடி யிலிருந்தே ஆளும்தரப்பு வட் டாரத்தில் பரபரப்புதான்னு மதுரை ஏரியாக்காரங்க பீடிகை போடுறாங்க. நாகர்கோவிலில் நடந்த முப்பெரும்விழாவுக்கு அழகிரி போகாததால் கட்சிக்குள் ஏற்பட்ட சர்ச்சை சுழன்றடித்துக் கொண்டேதான் இருந்தது. நான்கைந்து நாட்களுக்கு முன்னாடி அழகிரி தரப்பில் ஒரே குஷியாம்.''

""என்ன காரணம்?''

""முப்பெரும் விழாவுக்குப்பிறகும் கலைஞரின் கோபம் குறையலைன்னு போன முறை நாம பேசியிருந்தோமே.. அந்தக் கோபத்தை கலைஞர் வெளிப்படுத்தியவிதம்தான் அழகிரி தரப்பை குஷியாக்கியிருக்கு. விழா அழைப்பிதழில் ஆரம்பத்திலேயே ஏன் அழகிரியோட பெயரைப் போடலைன்னு ஆற்காடு வீராசாமியை கலைஞர் கடுமையா சத்தம் போட்டதோடு, பேராசிரியர்கூட இதைக் கவனிக்கலையான்னு ஆற்காட்டார்கிட்டே கலைஞர் கேட்டதா, மதுரைத் தரப்பிற்கு தகவல் போயிருக்கு. அதுதான் அவங்க குஷிக்கு காரணம். ஆனா மறுநாளே, அவங்களுக்கு டவுட் வந்திடிச்சி.''

""ஏன்?''

""கலைஞர் நடத்திய ஒரு அவசர ஆலோசனை பற்றிய தகவல் தெரியவந்ததுதான் இதற்கு காரணம். அவங்ககிட்டே கேட்டா, என்னன்னு தெரியலீங்க.. கலைஞர் திடீர்னு ஸ்டாலினை இப்பவே முதல்வராக்கிடுறேன். கட்சியை மட்டும் நான் பார்த்துக்குறேன், ஆட்சியை ஸ்டாலின் கவனிக்கட்டும்னு சொல்லியிருக்காரு. எதிர்காலத்தில் அழகிரி 40, 50 எம்.எல்.ஏக்களை குரூப்பா வச்சிக்கிட்டு செயல்பட்டார்னா ஸ்டாலினால் சமாளிக்க முடியாது. அதனாலதான் இப்பவே முதல்வர் பதவியைக் கொடுத்திடுறேன். ஸ்டாலின் ரெடியா இருக்காரான்னு கேட்டிருக் காருங்கன்னு சொல்றாங்க. கலைஞரோட அவசர ஆலோசனையையடுத்து, மந்திரிகள்-சீனியர் கட்சிக்காரர்களெல்லாம் தஞ்சாவூர் விழாவிலேயே ஸ்டாலினை முதல்வரா கலைஞர் அறிவிக்கப்போறாருன்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த விஷயம், மதுரைக்குத் தெரியவர, அவர் ரொம்ப அப்செட்டாகிவிட்டதா அவர் தரப்பு சொல்லுது. சீனியர்களோ தஞ்சை விழாவில் கலைஞர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்னு எதிர்பார்க்க ஆரம்பிச் சிட்டாங்க.''

""துரைமுருகனோட ராஜேந்திர சோழன் பேச்சோட பின்னணி இதுதானா? ஆனா கலைஞர் அது சம்பந்தமான அறிவிப்பு எதையும் தஞ்சாவூர் விழாவில் வெளியிட லையே!''

""ஆலோசனை நடத்தியது உண்மையாம். ஸ்டாலினிடம் இதுபற்றி சீனியர்கள் கேட் டப்ப, தலைவர் எப்போ என்ன முடி வெடுத்தாலும் சரின்னு சொல்லிட்டு, மறுநாளே வெளிநாடு கிளம்பிட்டார். இந்த தஞ்சை திட்டம், மதுரையை டென்ஷனாக் கிட்டதா அங்கே உள்ளவங்க சொல்றாங்க.… தஞ்சை விழா நடந்த அதே நாளில் அழகிரியோட ஆதரவாளரான ராமநாதபுரம் சேக் முகமது வீட்டில் கல்யாணம். பத்திரிகையில் அழகிரி பெயர் மட்டும்தான் இருந்தது. மா.செ. உள்பட யார் பெயரும் இல்லை. அழகிரிகூட இந்த விழாவில் கலந்துக்கப் போறதா யார்கிட்டேயும் சொல்லலை. ஆனா, திடீர்னு ரகசிய பயணமா அங்கே போயிட்டார். ராமநாதபுரம் மா.செ. சுப.தங்கவேல னோ, எம்.பி. ரித்தீஷோ மற்ற நிர்வாகிகளோ வரலை. ரகசியமா வந்த அழகிரி, மேடைக்குகூட போகாம கீழே இருந்து ஆசிர்வாதம் செய்தபடியே மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். வாழ்த்திப் பேசச் சொன்னபோதும் பேசலை. மதுரைக்கு கிளம்பும்போது, கல்யாணத்துக்கு வராத கட்சி நிர்வாகிகளோட லிஸ்ட் தனக்கு வேணும்னு சொல்லிட்டுப் போயிருக்கிறார்.''

""முதல்வரின் நிழல் போல தொடர்ந்தே வரும் அவரோட செயலாளர் சண்முகநாதனை தஞ்சை விழாவில் பார்க்க முடியலையே?''

""72 வயதாகும் சண்முகநாதன், முப்பெரும் விழா பேச்சுகளை பிழை திருத்தி முரசொலிக்குக் கொடுக்கும் பணியில் முதல்வரோடு சேர்ந்து ஈடுபட்டார். நாகர்கோவிலில் இருந்து திரும்பும் போதே அவருக்கு உடல்நிலை சரியில்லை. மறு நாள் கோபாலபுரத்தில் இருந்தப்ப, நெஞ்சு வலிக்குதுன்னு சண்முகநாதன் சொல்ல துரை முருகனும் பொன்முடியும் உடனடியா அவரை ஆஸ்பிட்டலுக்கு அழைத்துப்போனாங்க. டாக்டர்கள் செக்கப் பண்ணிட்டு நிறைய ப்ளாக் இருப்பதால பை-பாஸ் சர்ஜரி செய்யணும்னு சொல்லி, செவ்வாய்க்கிழமை ஆபரேஷன்னு முடிவு செஞ்சிட்டாங்க. அதனாலதான் தஞ்சை விழாவில் அவர் இல்லை.''

""நல்லபடியா உடல்நலன் தேறி வரட்டும்.''

""போயஸ்கார்டன் சந்திப்பு பற்றி சொல்றேங்க தலைவரே.. .. மதுரையில் வரும் 18-ந் தேதி அ.தி.மு.க கண்டனப்பொதுக்கூட்டம் நடத்துற நிலையில், ஜெ.வை சந்தித்த சி.பி.எம். தலைவர்கள், நாங்க மதுரையில் நிறைய போராட்டம் நடத்தியிருக்கோம். அழகிரியை எதிர்த்த அனுபவமும் இருக்குது. அதனால், மதுரையில் உங்களுக்கு பக்கபலமா நாங்களும் வர்றோம். இனி கூட்டுப் போராட்டங்களை நடத்தலாம்னு சொல்லி யிருக்காங்க. ஜெ.வோ, நோ.. இப்போதைக்கு எதுவும் வேண்டாம். அப்புறம் பார்க்கலாம்னு சொல்லிட் டாராம். அடுத்ததா, மேலவை எலெக்ஷன் பற்றி பேச்சு வந்திருக்கு. எம்.எல். ஏ.க்களால் தேர்ந்தெடுக் கப்படும் எம்.எல்.சி.க்களின் எண்ணிக்கை 26. அதா வது, 9 எம்.எல்.ஏ.க்கள் இருந்தா ஒரு எம்.எல்.சி. சி.பி.எம்.மிலிருந்து திருப்பூர் கோவிந்தசாமியை நீக்கி அவர் தி.மு.க.வுக்குப் போயிட்டதால சி.பி.எம். பலம் 8தான். அதனால அ.தி.மு.க.விலிருந்து 1 எம்.எல்.ஏ.வின் சப்போர்ட்டைக் கொடுத்து 1 எம்.எல்.சி. பதவி கிடைக்கச் செய்வ தோடு, கூடுதலா இன்னொரு எம். எல்.சி. பதவியும் தங்கள் கட்சிக்குத் தரணும்னு கேட் டிருக்காங்க.''

""ஜெ.வோட பதில்?''

""இப் போதைக்கு எம்.எல்.சி. தேர்தல் வராதுன்னும் வந்தா பார்த்துக்கலாம்னும் சொல்லிட்டாராம். அரசுத் தரப்பிலோ பிப்ரவரியில் தேர்தல் வரும்னு சொல்வதோடு அதற்கு ரெடியாகவும் இருக்காங்க. தேர்தலை எதிர்பார்த்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்கள் மாநிலச் செயலாளர் தா.பா.வை எம்.எல்.சி.யாக்கிட திட்டமிட்டிருக்கு. இதுதொடர்பா அவரும் விரைவில் ஜெ.வை சந்திக்கப் போறாராம். இதற்கிடையில், ஆசிரியர்களுக்கான எம்.எல்.சி. தொகுதியில் தனியார் பள்ளி கூட்டமைப்பின் சார்பில் பத்து ஆட்களை நிறுத்தி, மேலவைக்கு அனுப்பினாதான் நம்ம குரல் பலமா இருக்கும்ங்கிற கணக்கும் போடப்படுது.''

""அரசியல் கணக்குகள் எப்போது எப்படி மாறும்னு தெரியலைப்பா.. விஜயகாந்த் பற்றிய கேள்விக்கெல்லாம் அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை, எதிரியுமில்லைன்னு சமீபகாலமா ராமதாஸ் சொல்லிவந்தார். இப்ப அன்புமணி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் கட்சிக்கூட்டத்தில் பேசுறப்ப, டூப் போட்டு நடிக்கிற வனுக்கெல்லாம் ஓட்டுப் போடுறீங்க. எந்த நடிகனாவது இங்கே வந்து உங்களைப் பார்த்திருக்கானா? நானும் சினிமாவில் நடிக்கணும்னு எதிர்பார்க்குறீங்களா? அப்பதான் ஓட்டு போடுவீங்களான்னு கேட்டு பிடிபிடின்னு பிடிச்சிருக்கிறார். அன்புமணியின் இந்த அட்டாக், பா.ம.க.வினரை யோசிக்க வைத்திருக்குது.''

""தேர்தல் நேரத்தில் சினிமாவும் அரசியலும் கைகோர்த்துக்கொள்வதும், கைகலப்பில் ஈடுபடுவதும் வழக்கம்தான். நான் ஒரு தகவல் சொல்றேன்… முன்னாள் எம்.எல்.ஏ சைதை துரைசாமி வீட்டுத் திருமண வரவேற்பில் ஜெ கலந்துக்கிட்டாங்க. அந்த வரவேற்புக்கு அஜீத்தும் வந்ததையடுத்து, அவர் அ.தி.மு.க.வில் சேரப்போறதா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு. உண்மை என்னன்னா, சைதையோட மகனும் அஜீத்தும் ஃப்ரெண்ட்ஸ். அந்த அடிப்படையில் வந்ததை, அரசியலோடு முடிச்சுப்போட்டு பேசுறதை அஜீத் கொஞ்சம்கூட ரசிக்கலையாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தடையை மீறி ராமநாதபுரம் விசிட்:
தொண்டனுக்கு தோள் கொடுத்த அழகிரி!

Azhagiri%203.jpgதி.மு.க. தலைமை மீது கொண்ட கோபத்தால் நாகர்கோவில் முப்பெரும் விழா புறக்கணிப்பு, தஞ்சை ராசராசசோழன் விழா புறக்கணிப்பு என தொடர்ந்து தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கும் மத்திய அமைச்சர் அழகிரி... தொண்டர்களுக்கோ இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

Azhagiri%201.jpgராமநாதபுரம் எம்.ஏ.சேக் ஆரம்ப காலம் தொட்டு மு.க.அழகிரியின் தீவிர விசுவாசி. அழகிரியின் ஆதரவாளராக அடையாளம் காட்டப்பட்டதாலேயே அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ‘சூப்பாத்தா’வின் (லோக்கல் உடன்பிறப்புகள் சுப.தங்கவேலனுக்கு வைத்த செல்லப் பெயர் இது) அக்கினி பார்வைக்கு ஆளானார் எம்.ஏ.சேக். அதனாலேயே, இன்று வரைக்கும் தி.மு.க.வில் பதவி ஏதும் இல்லாமல், கரை வேஷ்டி கட்டிய தி.மு.க. தொண்டனாக மட்டும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் ‘அழகிரி ஆதரவாளர்’ என்ற முத்திரையை மட்டும் எம்.ஏ. சேக் இழக்க விரும்பியது கிடையாது.

இந்த நிலையில்... தனது மகள் கதீஜாவின் திருமணத்துக்கு தேதி கேட்டு அழகிரியை சந்தித்தார் எம்.ஏ.சேக். செப். 26 அன்று ராமநாதபுரத்திற்கு வந்து எம்.ஏ.சேக்கின் மகள் திருமணத்தை நடத்தி வைப்பதாக வாக்குறுதி கொடுத்தார் அழகிரி. ஆனால் சேக்குக்கு ஒரு கண்டிஷனையும் சேர்த்தே போட்டார் அழகிரி.

மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான சுப.தங்கவேலன் முதல் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய தி.மு.க. செயலாளர்களுக்கும் திருமண அழைப்பிதழை நேரில் போய் கொடுத்து அழைக்க வேண்டும் என்பதுதான் அழகிரி போட்ட கட்டளை. அழகிரியின் வாக்கை வேதவாக்காக எடுத்துக் கொண்ட எம்.ஏ.சேக்கும், சுப.தங்கவேலன், ரித்தீஷ் எம்.பி. மற்றும் அனைத்து ஒன்றிய செயலாளர்களையும், ‘அழகிரி அண்ணன் தலைமையில் நடக்கும் திருமணத்துக்கு அவசியம் வரணும்’ என்று நேரில் போய் சந்தித்துச் சொல்லி பத்திரிகை வைத்து அழைத்தார்.

ஆனால் சுப.தங்கவேலனோ, மாவட்டத்திலுள்ள அனைத்து நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு, ‘மாவட்டக் கழகத்தின் ஒப்புதலைப் பெறாமல் சேக் வீட்டு திருமணத்துக்கு வருகிறார் மு.க.அழகிரி. எனவே அழகிரியே திருமணத்துக்கு வந்தாலும் அந்த திருமண மண்டப பக்கம் யாரும் தலையைக் காட்ட வேண்டாம் என ‘ரெட் சிக்னல்’ போட்டு விட்டாராம்.

தஞ்சை பெரியகோயில் விழாவைக் காரணம் காட்டி அமைச்சர் சுப.தங்கவேலனும், அவரது பேரனும் எம்.பி.யுமான ரித்தீஷும் நைஸாக கழன்று கொண்டனர்.

இந்த பரபரப்பான நிலையில்... செப். 26-ம் தேதி அழகிரி திருமணத்துக்கு வருவாரா வரமாட்டாரா என்று உடன்பிறப்புகள் பெட் கட்டி கொண்டிருக்க... நிக்காஹ் நேரமான காலை 11 மணிக்கு மண்டபத்தில் பிரசன்னமானார் அழகிரி. சுப.தங்கவேலனின் கட்டளைப்படி அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகளும் திருமணத்திற்கு ‘ஆப்சென்ட்’ ஆகிவிட... இறுக்கமான முகத்துடன் மண்டபத்துக்குள் நுழைந்தவுடனேயே தன் பக்கத்தில் அமர்ந்திருந்த சீனியரான காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி தேவரிடம், ‘‘சூப்பாத்தா தஞ் சாவூரை காரணம் காட்டி தப்பிச்சுக்கிட்டாரா?’ என கமென்ட் அடிக்க... பக்கத்தில் இருந்த முருகவேல் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி.க்கள் பவானி, எம்.ஏ.காதர் ஆகியோர் அழகிரியின் வெளிப்படையான பேச்சைக் கேட்டு சிரித்துவிட்டனர்.

மதுரையில் இருந்து அழகிரியோடு வந்த உடன்பிறப்புகள் சிலரிடம் பேசினோம்.

Azhagiri%202.jpg ‘‘அழகிரி அண்ணனைப் பார்க்க வேண்டாம் என்று மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு ‘சூப்பாத்தா’ கட்டளை போட்டாலும்... அண்ணன் கோபித்து கொள்வார் என்பதற்கு பயந்து, பரமக்குடி யூனியன் அலுவலகம் முன்பாக தனது மகன்களான சுப.த. சம்பத், சுப.த. திவாகர் இரண்டு பேரையும் வரவேற்கச் சொல்லி நிறுத்தியிருந்தார். சூப்பாத்தாவின் மகன்களுடைய வரவேற்பு பற்றி தகவல் தெரிந்ததும் அண்ணன், தனது ரூட்டையே மாற்றி சிவகங்கை, நயினார்கோவில், ஆர்.எஸ்.மங்கலம் என பரமக்குடிக்குள் நுழையாமலேயே ராமநாதபுரத்துக்கு வந்துவிட்டார்.

அண்ணனைப் பொறுத்தவரை, தன்னை நம்பி இருப்பவர்களை எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டார் என்பதற்கு, இப்படிப்பட்ட இறுக்கமான தருணத்திலும் இங்கே வந்திருப்பதே சாட்சி’’ என்றார்கள்.

நாம் எம்.ஏ.சேக்கிடம் பேசினோம். ‘‘அழகிரி அண்ணன் மீண்டும் ஒருமுறை தொண்டர்களின் தோழன் என்பதை நிரூபித்துவிட்டார். எந்தப் பதவியிலும் இல்லாத எனக்கு இதைவிட கௌரவம் என்ன வேணும்?’’ என்று உணர்ச்சிவசப்பட்டவர், ‘‘தி.மு.க.வுக்குள் ஆயிரம் சலசலப்புகள் மையம் கொண்டாலும், நாங்களெல்லாம் என்னைக்கும் அண்ணன் பக்கம்தான்’’ என்றார் ஆணித்தரமாக,

‘அண்ணன்... அண்ணன்’ என்று அழகிரியை தொண்டர்கள் தூக்கிக் கொண்டாடுவதற்கான ரகசியம் இப்போதாவது தலைமைக்கு புரிந்திருக்குமே!__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 __________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Sibling rivalry worries DMK ahead of elections

TIMES NEWS NETWORK

New Delhi/Chennai: Amidst speculation of a growing rift between Union minister for chemicals and fertilizers M K Alagiri and his younger brother and Tamil Nadu deputy chief minister M K Stalin,the two along with Union ministers A Raja and Dayanidhi Maran took the same evening flight from New Delhi to Chennai.
Having gone to New Delhi on Thursday morning in separate flights,the siblings seemed to be putting up a show of unity before the PM in their family.
This,however,is unlikely to nip the speculation about a widening rift in the DMKs first family between Karunanidhi and elder son Alagiri,and between Alagiri and Stalin.The feud is an ongoing phenomenon but with assembly elections round the corner,it is causing concern like never before for the party leadership.
What worries the DMK top brass is whether Alagiri would revolt on the eve of Assembly polls due in May 2011 as he had done in 2001,thereby playing spoilsport in about 70 assembly segments in the southern districts if his choice of candidates is not approved by the party top brass,which also includes Stalin.
A senior journalist said,During 2001 assembly elections,he had not yet tasted success in electoral politics. 
Having tasted that in the Tirumangalam and Tiruchendur assembly byelections and the last parliament elections,it is quite unlikely that he will put a spanner in the DMK works now.He also knows that his high stakes will be at risk if he chooses to start an open rebellion during the assembly polls.Also,the leadership will not totally reject the list of candidates recommended by him.
While the prominent faces among Alagiri loyalists would be accommodated,Karunanidhi is likely to give some seats to Stalin supporters as well,thereby seeking to strike a balance.To prove once again that he is the boss of the south,Alagiri may bury the hatchet and work for everybodys success.

Pc0070800.jpg
WAR ON WALLS: Posters hailing AIADMK chief Jayalalithaa as a world leader and Union minister and DMK leader M K Alagiri for his contribution to peoples welfare are common in Madurai


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_10_2010_001_031-ram-dmk.jpg?w=300&h=202

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘நேரு குடும்பத்தை போல கலைஞர் குடும்பம் ஆளக்கூடாதா?’’
கேட்கிறார் வெற்றிக்கொண்டான் 

Vettri.jpgகருத்துக்களோடு கொஞ்சம் இரட்டை அர்த்தம் வரும் வார்த்தைகளையும் கலந்து பேசி, எதிரே அமர்ந்திருப்பவர்களை சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பார் தி.மு.க.வின் ஸ்டார் பேச்சாளர் வெற்றிக்கொண்டான். உடல்நலம் குன்றியிருந்த அவர், சமீப காலமாக கூட்டங்களை தவிர்த்து வந்தார்.

அக். 25-ம் தேதி சென்னை, மதுரவாயலில் ‘கலைஞர் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்’ என்ற பெயரில், தி.மு.க.வினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு வந்திருந்தார் நெடு நாளைக்குப் பிறகு வெற்றிக்கொண்டான்.

இரவு எட்டரை மணிக்கு மைக் பிடித்த 75 வயது வெற்றிக்-கொண்டான், கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் சிரிக்க வைக்கும் பேச்சுக்களால் கூட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். சரவெடியாக வெடித்த அவருடைய பேச்சில் நிறைய ஆக்கிரமித்திருந்தவர் ஜெயலலிதா. 

இனி அவருடைய வார்த்தை விளையாட்டு...

‘‘உலகமே அழிஞ்சாலும் அழியுமே தவிர, தி.மு.க.வின் கடைசித் தொண்டன் இருக்கிறவரை ஜெயலலிதாவை முதல்வர் நாற்காலியில் உட்காரவிட மாட்டோம். அதுக்காக எதுவும் செய்வோம். சோனியா காந்தியப் பத்தி பேசுறியே, அந்தம்மா என்ன செஞ்சிருக்கு? தன்னைத் தேடி வந்த பிரதமர் பதவியே வேணாம்னு சொல்லி, கட்சியின் மூத்த தலைவர் மன்மோகன் சிங்குகிட்ட பதவியை ஒப்படைச்சிருக்கு. ஆனா, நீ அத மாதிரி விட்டுக் கொடுப்பியா?

அதுனால நாங்க என்ன சொல்றோம்னா, நீ எங்க பொறந்தியோ அங்கயே போய்டு. உடனே, நீ திருப்பிக் கேப்ப... ‘உங்க தலைவர் அதே மாதிரி முதல்வர் பதவிய விட்டுக் கொடுப்பாரா?’ன்னு. ஏன் விட்டுக் கொடுக்க மாட்டாரு. அவர் ஆள்வாரு. அவருக்கு பின்னால தம்பி ஸ்டாலினுக்கு விட்டுக் கொடுப்பாரு. ஸ்டாலினுக்கு பின்னாடி அவுங்க பிள்ளைங்க ஆட்சிக்கு வருவாங்க. 

அதுக்காக ‘குடும்ப ஆட்சி’ன்னு வேணும்னாலும் நீ சொல்லிட்டுப் போ. அதுப்பத்தியெல்லாம் நாங்க கவலைப்படப் போறதில்லை. சாதனை மேல சாதனைகளை செஞ்சிட்டு, நாங்க அடுத்த வூட்டுக்காரன்கிட்டயா ஆட்சிய கொடுத்துட்டுப் போவோம்? எங்க பிள்ளைகள்கிட்டதான் ஆட்சியைக் கொடுத்துட்டுப் போவோம். 

இந்தியாவை நேரு குடும்பம்தான் ஆளுது. அதப்-போல தமிழகத்தை எங்க கலைஞர் குடும்பம் ஆளக்-கூடாதா?

தன் வீட்டயே மருத்துவ-மனைக்காக எடுத்துக்கன்னு சொல்லி எந்தத் தலைவன் கொடுப்பான்? மகாத்மா காந்தி குடியிருந்த சபர்மதி ஆஸ்ரமத்தை மக்களுக்கு கொடுத்தாங்களா? பண்டித நேரு குடியிருந்த வீட்டை கொடுத்தாங்களா? கலைஞர் தான்யா கொடுத்திருக்காரு.

பார்லிமென்ட் எலக்ஷன்ல நம்ம கூட்டணில இருந்த கம்யூனிஸ்ட்காரன், ராமதாஸ் எல்லாரும் அங்க போனானுவ. 7& க்கு 7&ம் இல்லாமல் போனாரு ராமதாஸ். உள்ளதும் போச்சுடாங்கற நிலைமை கம்யூனிஸ்ட்காரனுக்கு. அந்தம்மாவோட சேர்ந்து கோபால்சாமி கட்சிக்கே அங்கீகாரம் போச்சு. இனி, பம்பரத்தை எங்க விடுவார்னு பார்ப்போம்!’’ என்று கேலியும் கிண்டலுமாய் கூட்டத்தை கிளுகிளுக்க வைத்தார் வெற்றிகொண்டான்.
__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_11_2010_004_024-unicode.jpg?w=158&h=30007_11_2010_011_016-granhta.jpg?w=130&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_11_2010_116_007-kanimozi.jpg?w=50&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_11_2010_008_013-gnani-kalaignar.jpg?w=398&h=1551

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

18_11_2010_001_049-madurai.jpg?w=640&h=1095

__________________
« First  <  Page 3  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard