New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Benasir Bhuto Killing- Did America diD it?


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Benasir Bhuto Killing- Did America diD it?
Permalink  
 



பெனாசிர் பூட்டோ படுகொலை குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணைக் குழு, நேற்று தனது அறிக்கையை ஐ.நா. செயலர் பான் கி மூனிடம் அளித்த நிலையில், அதனை வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம் என்று பாகிஸ்தான் அதிபர் சர்தாரி அவசரமாக கேட்டுக்கொண்டார்.

அவரது வேண்டுகோளை ஏற்று அறிக்கையை வெளியிடுவதை பான் கி மூன் தாமதப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அறிக்கை வெளியிடுவதை தாமதப்படுத்துமாறு சர்தாரி கேட்டுக்கொண்டதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

பெனாசிர் படுகொலை குறித்து அமெரிக்க முன்னாள் அயலுறவுத் துறை அமைச்சர் கண்டலீஸா ரைஸ், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய், சவூதி அரேபியாவின் புலனாய்வு பிரிவு தலைவர் இளவரசர் முக்ரின், ஐக்கிய அரபு எமிரேடு புலனாய்வு துறை தலைவர் ஆகிய நான்கு பேருக்கும் முன்கூட்டியே தெரியும் என்றும், எனவே ஐ.நா. விசாரணைக் குழு இந்த நான்கு பேரையும் சந்தித்து இது தொடர்பாக விசாரணை நடத்திவிட்டு , அவர்களது சாட்சியங்களையும் ஐ.நா. விசாரணைக் குழு அறிக்கையில் சேர்த்து வெளியிட வேண்டும் என்றும் பான் கி மூனை சர்தாரி கேட்டுக்கொண்டதாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும், " தி நியூஸ்" என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

'பூட்டோ படுகொலை'- ஐநா காட்டம்
t.gif
பெனாசீர் பூட்டோ
பெனாசீர் பூட்டோ
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் படுகொலையை தடுக்கவோ அது தொடர்பில் விசாரணை நடத்தவோ அந்நாட்டு அரசாங்கம் தவறியுள்ளதாக ஐநாவால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்தோடு பாகிஸ்தானின் அதிகாரம்மிக்க புலனாய்வு முகவர்களையும் அந்த விசாரணைக் குழு கடுமையாக சாடியுள்ளது.

பெனாசீர் பூட்டோ இரண்டு வருடங்களுக்கு முன்னால் இஸ்லாமாபாத்துக்கு அருகே தேர்தல் பிரச்சாரமொன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும் போது நடத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

படுகொலை நிகழ்ந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளை மட்டுமே கருத்தில் எடுக்ககூடிய விதத்தில் அமைந்திருந்த ஐநாவின் இந்த விசாரணை ஆணையம், குற்றவியல் பொறுப்பு எதனையும் யார்மீதும் சுமத்தாதபோதிலும் மிகக்கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளது.

t.gif
படுகொலைக்கு முன்னதாக பிரச்சார வாகனத்தில் பெனாசீர் பூட்டோ
படுகொலைக்கு முன்னதாக பிரச்சார வாகனத்தில் பெனாசீர் பூட்டோ
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஷ் முஷாரப் அரசாங்கம் பெனாசீர் பூட்டோவை எல்லா மட்டங்களிலுமே பாதுகாக்க தவறியுள்ளதாக மிகத் தெளிவாக குற்றஞ்சாட்டியுள்ள இந்த விசாரணை அறிக்கை, பூட்டோவின் படுகொலைக்கு பின்னால் இருந்தவர்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

பூட்டோ ஏற்கனவே படுகொலை முயற்சியொன்றிலிருந்து தப்பிவந்திருந்த நிலையில், அவரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவரது உயிருக்கே உலை வைக்குமளவிற்கு இருந்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த படுகொலையின் பின்னரான அரசாங்கத்தின் பதில்நடவடிக்கை தொடர்பில் இன்னும் காட்டமாகவே விசாரணைக் குழு விமர்சித்துள்ளது.

படுகொலை விசாரணைகளை பாதுகாப்பு படையினர் திட்டமிட்டே புறக்கணித்துள்ளதாக ஐ.நா விசாரணைக்குழுவின் தலைவர் ஹெரால்டோ முனொஸ் கூறுகிறார்.

 

t.gif
800_left_quote.gif பிரச்சனையை மூடிமறைப்பதற்கு திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதற்கு சங்கிலித் தொடரான பல சம்பவங்கள் சான்றுகளாக உள்ளன
800_right_quote.gif
ஹெரால்டோ முனொஸ்-ஐநா விசாரணைக்குழு

 

ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சூத்திரதாரிகளை சிக்க வைக்காமல் விசாரணைகள் அடிமட்டங்களிலேயே நின்று விட்டதாகவும் அந்த விசாரணைகளின் அனைத்து கட்டங்களிலும் புலனாய்வு முகவர்களின் பரவலான செல்வாக்கு ஊடுருவியிருந்ததாகவும் ஐநா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் தற்போது அதிபராகவுள்ள பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆசிஃப் அலி ஸர்தாரி கையிலேயே விசாரணைகளின் அடுத்தக்கட்டம் தங்கியுள்ளது.

பாகிஸ்தானின் மிக பலமான இராணுவக் கட்டமைப்பை விசாரணைக்குள்ளாக்குவதே நம்பத்தகுந்த குற்றவியல் விசாரணையொன்றுக்கு வழிவகுக்கும் என்பதை அந்நாட்டு மக்களுக்கு இந்த ஐ.நாவின் அறிக்கை உணர்த்தியுள்ளது.

ஆனால் பாகிஸ்தானில் அப்படியான விசாரணைகளை செய்வது சிரமம் என்றே தெரிகின்றது.

t.gift.gift.gif


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard