New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: M Karunanidhi DMK Government Achievements


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: M Karunanidhi DMK Government Achievements
Permalink  
 


ஸ்டெர்லைட் விவகாரம்:
களை கட்டும் போராட்டங்கள்... கல்லா கட்டுவதற்கா?

Sterlite%203.jpg



மத்திய அரசுக்கு 747 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவன துணைத்தலைவர் வரதராஜன் கைது’’ என்று எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வருவதை, அந்த நிறுவனம் தடுக்க எத்தனையோ முயற்சிகளில் இறங்கியது. அதில் ஓரிரு பத்திரிகைகள் மட்டும் பின்வாங்கி, அடக்கி வாசித்தது. ஆனால், பெரும்பாலான பத்திரிகைகளிலும் டி.வி.க்களிலும் ‘ப்ளாஷ்’ செய்தியாக வந்ததும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக போராட்டங்கள் களை கட்டியுள்ளன.

Sterlite%204.jpgதூத்துக்குடியில் 1996ல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடங்கும் போதே, கடும் எதிர்ப்பு கிளம்பியது. தாமிரத் தாதுவை இறக்குமதி செய்து, அதைப்பிரித்தெடுத்து தமிரத் தகடு மற்றும் கம்பி உற்பத்தி செய்யும் இந்த ஆலையை திறக்கக் கூடாது என்று தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்கள் சத்தமின்றி ஓய்ந்தன.

இப்போது வரி ஏய்ப்பு விவகாரம் அம்பலமானதும், போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, அரசியல் கட்சிகளும், பல சமூக அமைப்புகளும் ஒன்று சேர்ந்து, ஜூலை 26ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முடிவில் மாவட்ட ஆட்சியர் வெளியே வந்து தங்களது மனுவை வாங்க வேண்டுமென வலியுறுத்தினர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டிருந்ததால் ஆட்சியர் பிரகாஷ் வெளியே வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி தர்ணாவில் ஈடுபட்டு தங்களை மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாகக் கூறி மனுக்களை கலெக்டர் அலுவலகம் முன்பு தீயிட்டு கொளுத்தினர். இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜோயலை சந்தித்தோம். 

Sterlite%201.jpg‘‘மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக ஆய்வின்படி சுற்றுச்சூழல் மாசு மற்றும் நிலத்தடி நீர் மாசுபாட்டினால் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி, மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு மூலக்காரணமே ஸ்டெர்லைட்தான். நம்ம கரன்ட் பில் கட்டலைன்னா உடனே சர்வீஸை கட் பண்ணிடுவாங்க. ஆனா, இந்த நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி வைத்துள்ளது. மக்களையும் அரசையும் ஏமாற்ற நலத்திட்டங்கள் என்ற பெயரில் மோசடி செய்துள்ளது. தொழிற்சாலையில் வேலைபார்ப்பதில் ஐந்தில் ஒருபகுதி கூட தூத்துக்குடிகாரங்க கிடையாது. எல்லாம் வெளிமாநிலத்தில் இருந்து வேலைக்கு சேக்குறாங்க. எல்லாவகையிலும் மக்களை பாதிக்கிற இந்த ஆலையை அரசு உடனே இழுத்துமூடணும்’’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், ‘‘இந்த தொழிற்சாலையை தொடங்குவதற்கு, நாங்கள் கடைசிவரை எதிர்ப்பு தெரிவித்தோம். இப்போது, யாருடைய அனுமதியும் இல்லாமல் இரண்டாவது ப்ளான்ட் தொடங்கிட்டாங்க. இந்தத் தொழிற்சாலையை அரசு இப்போதே மூட வேண்டும் இல்லையெனில் தூத்துக்குடி ‘போபால்’ ஆக மாறிவிடும்’’ என்றார். 

தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கழக ஒருங்கிணைப்பாளர் அண்டன் கோமஸிடம் பேசினோம். ‘‘2005&ல் இருந்து 2010 வரைக்கும் 750 கோடி ரூபாய் மோசடின்னு இன்னைக்கு தெரியுது. இதை கண்டுபிடிக்க 5 வருஷம் தேவையா? தெற்கு வீரபாண்டியபுரம், குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர் படிப்படியாக மாறிவருகிறது. மாதம் தோறும் 8 முதல் 10 கப்பல்களில் தாமிரத் தாதுக்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகிறது. இதனை முறையில்லாமல் துறைமுகத்தில் இறக்குவதால் கடல் மாசுபட்டு மீன்வளம் பாதிக்கப்படுகிறது’’ என்றார். 

Sterlite%202.jpgதூத்துக்குடி மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரனிடம் பேசினோம். ‘‘இந்த தொழிற்சாலையிலுள்ள விஷவாயு தாக்கி பலர் மரணமடைஞ்சிருக்காங்க. இந்த விஷயம் வெளிய வந்ததே கிடையாது. ஒரிசாவிலுள்ள நியாம்கிரி மலையை குறைந்த விலைக்கு லீசுக்கு எடுத்து, அங்க இருந்து விலைமதிப்பு மிக்க பாக்சைட் தாதுப் பொருளை, இந்த வேதாந்தா குழுமம்தான் வெட்டி எடுத்துக்கிட்டு இருக்கு. இவங்களுக்கு இடையூறாக உள்ள பழங்குடி மக்களும் அங்கிருந்து துரத்தப்படுகின்றனர். இந்தப் பிரச்னைகள் தற்போது நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் எதிரொலிக்க வேண்டும். மனித உயிரை துச்சமாக மதிக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மோசடிகளை பத்திரிகையாளர்கள்தான் வெளியே கொண்டுவரவேண்டும்’’ என்றார்.

கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் புஷ்ப-ராயனிடம் பேசினோம். ‘‘இந்த ஆலை தொடங்கினதிலிருந்தே சட்ட விரோதமான காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவர்றாங்க. 2300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதி இன்றி ஆலை விரிவாக்கம் செய்தாங்க. இதை எதிர்த்து எங்க அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி இந்த வேலையை தடை செஞ்சிட்டோம். 2004&ல் உச்சநீதிமன்ற கண்காணிப்புக்குழு பரிந்துரைகள் எதையும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை கடைபிடிக்கவில்லை. இதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நடைமுறைபடுத்தவில்லை. இவை அனைத்தும் மத்திய மாநில அரசுகளின் துணையோடுதான் நடைபெறுகிறது. மக்களுக்கு பிச்சை போடுறது போல நலத்திட்டங்களை கொடுக்குறாங்க. வரதராஜனை கைது செய்த கலால் வரி அதிகாரிகளைக்கூட இடமாற்றம் செய்ய வேலை நடந்துகிட்டு இருக்கு’’ என்றார். 

இந்தக் குற்றச்சாட்டு பற்றி ஸ்டெர்லைட் நிறுவன செய்தித் தொடர்பாளர் ராஜேஷிடம் கேட்டோம். ‘‘இதுல நாங்க ஏதாவது சொல்லப்போய், அது பெரிதானால் நல்லாவா இருக்கும். இதை அப்படியே விட்டுருவோம்’’ என்றார் பெருந்தன்மையாக(!).

இத்தனை நடந்தும் தூத்துக்குடி மக்கள் பேச்சு மட்டும் வித்தியாசமாக இருந்தது. ‘‘இப்படி எல்லாரும் மல்லுக்கட்டி எதிர்ப்பாங்க. கொஞ்ச நாளைக்கு பின்னாடி, அந்த கம்பெனிக்காரங்க பணத்தை கொடுத்தா, எல்லாரும் சைலன்டா போயிடுவாங்க. இதுவரை நடந்ததும் இதுதான். இனிமேல் நடக்கப் போவதும் இதுதான்’’ என்று வெறுப்பை உமிழ்ந்தார்கள்.

போராட்டக்காரர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஸ்டாலின் முன்னிலையில் கொடுத்த பட்டா, போலி பட்டா?!
எல்.ஜி.யின் சொந்த கிராம அதிர்ச்சி

Patta.jpg



போலி டாக்டர்கள், போலி மருந்துகள், போலி மதிப்பெண் சான்றிதழ் என சமீப காலமாக தமிழகத்தை உலுக்கிய போலிகள், தற்போது இலவச வீட்டு மனைப்பட்டாவிலும் ஊடுருவி விட்டன. 

தஞ்சை மாவட்டம் ஒரத்த-நாட்டில்தான் இந்தக் கூத்து. அதுவும் மொழிப்போர் தியாகி எல். கணேசனின் நிர்வாகத்தில் 35 ஆண்டுகளாக இருந்து, இப்போது அவர் மனைவியின் நிர்வாகத்தில் இருக்கும் கண்ணந்தங்குடி கீழையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண¢டிநத்தம் காடு கிராமத்தில்! 

Patta%201.jpg‘எங்களுக்கு உண்மையான பட¢டா வழங்கி கலைஞரின் வீட்டு வசதித் திட்டத்தில் வீடுகள் வழங்க வேண¢டும். இல்லையென்றால் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அரசிடமே திரும்பக் கொடுப்போம்’’ என குரல் எழுப்பிவரும் ஆண்டிநத்தம் காடு கிராமத்துக்கு சென்றோம். 

தங்கராசு, தெய்வானை, ராசேந்திரன் ஆகியோர் கூறுகையில், ÔÔநாங்களெல்லாம் எங்க அப்பா காலத்திலிருந்து இங்கனதான் இருக்கோம். மொத்தம் 107 குடும்பத்துக்கு விவசாயக் கூலி வேலைதான் தொழில். பத்து வருசத்துக்கு முந்தி இலவச வீட்டு மனைப்பட்டா தர்றோம்னு சொல்லி அரசாங்க அதிகாரிகளெல்லாம் விழா நடத்தி பட்டா கொடுத்தாங்க. அப்பறம் 2008-ம் வருசம், தஞ்சாவூர்ல ஸ்டாலின் வந்த நிகழ்ச்சியிலயும் அதே பேர்ல அதே பட்டா கொடுத்தாங்க. எங்களுக்கு படிப்பறிவெல்லாம் கிடையாது. அதனாலே கொடுத்த 2 பட்டாவையும் நாங்க படிச்சுக் கூட பார்க்கலீங¢க. 

இப்ப கொஞ்ச நாளைக்கு முந்தி கலைஞர் வீட்டு வசதித் திட்டத்துக்காக விசாரிக்க... ஒரத்தநாடு தாசில்தார் மற்றும் சில அதிகாரிகள் வந்தாங்க. உங்ககிட்ட பட்டா இருக்குதான்னு கேட்டாங்க. எங்ககிட்ட இருந்த இரண்டு பட்டாவையும் கொடுத்தோம். பட்டாவைப் பாத்த அவங்க, ‘இது பட்டாவே இல்லை. நீங்க எல்லாம் ஆபீசுக்கு வாங்க’ன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. அப்ப ஸ்டாலின் முன்னாடி கொடுத்த பட்டாவெல்லாம் போலி பட்டாவான்னு எங்களுக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு... கண்ணந்தங்குடி கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் ராமசாமி, விவசாய தொழ¤லாளர் சங்க ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் கலெக்டரைச் சந்தித்து மனு கொடுத்திருக்கோம். படிக்காதவங்கன்னு சொல்லி அரசாங்கமே எங்களை ஏமாத்துதா?ÕÕ என்றனர் அப்பாவியாய். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமசாமி, விஜயகுமார் ஆகியோரிடம் பேசினோம்.

‘‘ 60 ஆண்டுகளாக ஒரே இடத்தில் குடியிருந்து வரும் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு கடந்த 2000 மற்றும் 2008 ஆண்டுகளில் ஒரே நபருக்கு, ஒரே இடத்துக்கு 2 முறை பட்டா வழங்கியுள்ளனர் தாலுகா அதிகாரிகள். இந்த 2 பட்டா குறித்து அப்போதைய டி.ஆர்.ஓ., கருணாகரன் தலைமையில் 21.2.2010 அன்று ஒரத்தநாட்டில் நடைபெற்ற மனுநீதி முகாமில் முறையிட்டோம், அப்போதைய தாசில்தார் பொன்னியின் செல்வன், வி.ஏ.ஓ., கோவிந்தராஜ், ஆகியோர் இந்த பட்டாக்கள் கிராம கணக்கில் வகை மாற்றம் செய்யப்படாமல் இருக்கிறது என தெரிவித்தனர்.

Patta%203.jpgஇதையடுத்து ஒரத்தநாடு தாசில்தார் தமிழ்ராஜன¢, கலைஞர் வீட்டு வசதித் திட்டத்துக்காக கண¢ணந்தங்குடி கீழையூர், ஆண்டிநத்தம்காடு பகுதியில் ஆய்வு செய்தபோதுதான், இதெல்லாம் போலி பட்டா என்றும், இதை வைத்து வீட்டு வசதித்திட்டத்தில் இந்த பகுதியை சேர்க்கமுடியாது என்றும் கூறியிருக்கிறார். இதுபற்றி கலெக்டரிடம் முறையிட்டோம். ஒரத்தநாடு தாசில்தாரைப் பார்க்கச் சொல்லி கலெக்டர் அலுவகத்திலிருந்து கடிதம் வந்தது. அதன்படி, ஒரத்தநாடு தாசில்தார் தமிழ்ராஜனை சந்தித்தபோது, ‘பட்டா என்றால் நாண்கள், விஸ்தீரனம், புல எண் இருக்க வேண்டும். ஆனால் அந்த பட்டாவில் எதுவுமே இல்லை. அதனால், அவர்கள் குடியிருக்கும் பகுதி முழுவதும் மேய்ச்சல் தரிசு நிலம். அதனால் பட்டா மாற்றம் செய்ய முடியாது’ என உறுதியாக கூறிவிட்டார். 

தேர்தல் நேரங்களில் படிப்பறிவில்லாத ஏழை கூலித்தொழிலாளிகளை அதிகாரிகளின் துணையோடு அரசியல்வாதிகள் இதுபோன்ற போலி பட்டாக்களை தயாரித்து வழங்கி ஏமாற்றிவிட்டனர். அதுவும் துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலேயே இப்படி போலி பட்டாக்கள் கொடுக்கப்பட்டிருப்பதுதான் கொடுமை. இந்த மக்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம்’’ என¢றார்.
Patta%202.jpg
இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக 35 ஆண்டுகள் இருந்த எல்.கணேசனிடம் இதுபற்றி நாம் கேட்க, ‘‘நான் இப்போ அந்த ஆண்டிநத்தம் ஊரில் இருந்துதான் வருகிறேன். ஒரே பெயரில் ஒரே இடத்துக்கு 2 முறை பட்டா வழங்கியுள்ளார்களா என்று எனக்குத் தெரியவில்லையே... இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் தாசில்தார், வி.ஏ.ஓ.வை நேரில் சந்தித்து, ஆண்டிநத்தம் விவசாய கூலித் தொழிலாளர்கள் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் பயனடைவதற்கான நடவடிக்கை எடுப்பேன்’’ என்று பொறுப்பாக பதிலளித்தார்.

இதுகுறித்து கலெக்டர் சண்முகத்திடம் பேசினோம். ÔÔபட்டா விஷயத்தில் சில தவறுகள் நடந்துள்ளது என்பது உண்மைதான். இதுதொடர்பாக பரிசீலனை செய்து கிராமக் கணக்கில் சேர்க்கப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கூலித்தொழிலாளர்களும் கலைஞர் வீட்டுவசதித் திட்டத்துக்குத் தகுதி-யானவர்களாக ஆக்கப்-படுவார்கள்ÕÕ என்றார்.

அரசு நிலங்களில் 3 வருடம் குடியிருந்தாலே போதும் பட்டா வழங்கலாம் என்று அரசு சொல்கிறது. இப்படியிருக்க... 60 ஆண்டுகளாக குடியிருந்து வரும் கூலித் தொழிலாளர்களுக்கு பட்டாவும், கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் வீடும் கிடையாது என்பது எந்த ஊர் நியாயம்?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உள்ளாட்சியில் ஒரு பொல்லா ஆட்சி!

-துயர்மிகு துறையூர் நகராட்சி

Trichy%204.jpg

‘‘இந்த நகராட்சியில பொதுமக்களுக்கு ஏதாவது வேலை நடக்கணும்னா ஆயிரம் ரூபாயும், ஒரு குவார்ட்டர் பாட்டிலும் கொடுத்தாதான் முடியும்ன்னு மக்கள் பேசிக்கிறாங்க. ரொம்ப அசிங்கமா இருக்கு’’


-இப்படி கவுன்சிலர் அமைதிபாலு நகர்மன்றக் கூட்டத்தில் பேச... அதற்கு சேர்மன் மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாகவே இருக்க... ‘‘அப்படின்னா நான் சொல்றதெல்லாம் உண்மைதான்’’ என்கிறார் கவுன்சிலர்.

Trichy%203.jpgஇப்படியொரு அவலம் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில். இந்த அவலம் மட்டுமல்ல... ‘‘நகராட்சி அலுவலகம் திறந்திருந்தால்தானே இப்படி குவார்ட்டர் பாட்டில் லஞ்சம் கேட்கிறீர்கள்? இதைத் திறந்தால் என்ன திறக்காவிட்டால் என்ன?’’ என நகரவாசிகளே ஒன்று கூடி நகராட்சி அலுவகத்தைப் பூட்டு போட்டு பூட்டிய ஜனநாயக விநோதமும் துறையூரில் நடந்திருக்கிறது. 

துறையூர் நகரில் மூன்றாவது முறையாக கவுன்சிலராக உள்ள அமைதிபாலுவை சந்தித்தோம். 

Trichy%201.jpg‘‘பிரச்னைகளுக்கிடையில் வாழலாம். ஆனால், வாழ்வதே பிரச்னையாக இருக்கிறது துறையூரில். நகரில் புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு வரிவிதிக்க வேண்டும் என்று நகராட்சிக்கு சென்றால் வீடுகட்டுவதற்கு எவ்வளவு காலம் ஆனதோ அவ்வளவு காலம் ஆகும். இதனால் நகராட்சியின் வரிவருவாய் பாதிக்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகளால் மின்சார வாரியத்தில் வேலை செய்யும் பலரும் நகராட்சி வரி ரசீது இல்லாமலேயே மின்சாரகட்டண விகிதத்தை மாற்றி கொடுத்து விடுகின்றனர். இதனால் அவர்களுக்கும் லாபம், மக்களுக்கும் அலைச்சல் மிச்சம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை அங்கீகரிக்க கட்டணம் அறிவிக்கப்பட்டது. இதில் பணம் கட்டிய பலருக்கும் உண்மையான ரசீது கொடுக்காமல் நகராட்சி ஊழியர்கள் பலரும் போலி ரசீது கொடுத்து பெரும் வசூல் பார்த்து விட்டனர். இது குறித்து புகார் வந்தவுடன் ஒரே ஒரு ஊழியரை இடமாற்றம் செய்ததுடன் பிரச்னையை மறந்து விட்டனர். வீட்டு மனையை அங்கீகரிக்க பணம் செலுத்தியவர்கள் அனைவரும் அவரவர் பெற்ற ரசீதை கொண்டு வந்து அவர்களது பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கினால் எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம். இதை நகராட்சித் தலைவரிடம் கூறினோம். ஆனால் அதைச் செய்ய மறுக்கிறார். அதேநேரம், போலி ரசீது கொடுத்து ஊழல் செய்தவர்களிடம் கமிஷன் பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. 

இந்த நகராட்சிக்கு அனுபவம் வாய்ந்த யாரும் ஆணையராக வருவதில்லை. புதிதாக ஆணையராக பொறுப்பேற்பவர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று இடமாறுதல் பெற்று சென்றுவிடுகின்றனர். இன்றுவரை நகராட்சிப் பணிகளை நிர்வகிக்க டவுன் பிளானிங் அலுவலர், செயற்பொறியாளர், வரிவிதிப்பு அலுவலர் ஆகியோர் இல்லை. நகராட்சி பொறியாளர்தான் சில மாதங்களாகவே பொறுப்பு ஆணையராக இருக்கிறார். இப்படி இருந்தால் நகராட்சி எப்படி இயங்கும்? வரி இழப்பு, பணியாட்களின் பொறுப்பற்ற தன்மை, சுகாதார சீர்கேடு இது எதைப் பற்றியும் கவலைப்படாதவராக இருக்கிறார் நகராட்சித் தலைவர்’’ என்று ஆவேசமாக முடித்தார் அமைதிபாலு. 
Trichy%202.jpg
மற்றொரு கவுன்சிலரான பாலகிருஷ்ணனோ, “நகராட்சியின் செயலற்ற தன்மையால் குடிநீர் வரிகட்டும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் சரியாக செய்யமுடியவில்லை. குடிநீர் குழாய் செல்லும் மட்டத்தில் இருந்து 3 அடி உயரத்தில் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பதுதான் குடிநீர் வடிகால் வாரியத்தின் விதி. ஆனால் துறையூர் நகரத்திலோ பூமிக்கு அடியில் குடிநீர் செல்லும் குழாயில் இருந்து அவரவர் செல்வாக்கு மற்றும் பணபலத்துக்கு ஏற்ப தனித்தனி இணைப்புக்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதனால் முறையாக வரிகட்டும் பலருக்கும் குடிநீர் கிடைப்பதில்லை. திருச்சியில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் இருக்கும் ராமநாதபுரத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீர் கிடைக்கிறது. ஆனால், 35 கி.மீ. தூரத்தில் இருக்கும் துறையூரில்? காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் இருந்தும் நகராட்சியின் செயலற்ற தன்மையால் தண்ணீருக்கு பதில் காற்றுதான் வருகிறது. இந்த லட்சணத்தில் 2008-&ம் ஆண்டு முதல் இந்த நகராட்சி, தேர்வுநிலை நகராட்சியாம். இது தேறாத நகராட்சி” என்று வெடித்தார்.

Trichy.jpgஇந்தப் பிரச்னைகளுக்கு இடையில், துறையூர் நகராட்சி மருத்துவமனை மருந்தகத்தில் வேலை நேரத்தில் மருந்தாளுநர்கள் இல்லை என்று 11&வது வார்டு கவுன்சிலர் செந்தாமரையின் கணவர் காமராஜ் மருந்தகத்தை பூட்டி அதிரடி செய்தார். பிரச்னை முற்றியவுடன் நகராட்சி தலைவர் பூபதி மற்றும் அவரது கணவர் செல்லதுரை ஆகியோர் டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மருந்தகத்தைத் திறக்கச் செய்தனர்.

சரமாரியான புகார்கள் பற்றி கேட்க, துறையூர் நகராட்சி தலைவர் பூபதியை தொடர்பு கொண்டோம். வழக்கமான ஜனநாயகப்படி(!) அவரது கணவர் செல்லதுரை எடுத்துப் பேசினார். “நான்தான் சேர்மன், சேர்மன்தான் நான்’’ என்று முன்னுரையுடன் நம்மை எதிர்கொண்ட செல்லதுரை... ‘‘கண்ட, கண்ட ...ங்களின் புகார்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’’ என்று மிகப் பொறுப்பாக(?) பதில் சொன்னார்.

உள்ளாட்சியில் நல்லாட்சி தர நினைக்கும் மு.க.ஸ்டாலின் நிர்வாகத்தின் கீழ், இப்படி ‘பொல்லா’ ஆட்சி. என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

செம்மொழி மாநாடு:
உணவுப்படியை உண்டது யார்?
-நாகை குமைச்சல்

Ragavan%201.jpg

சுமார் நானூறு கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாடும் முடிந்து, அதற்காக சென்னை நட்சத்திர ஹோட்டலில் பாராட்டு விருந்தும் நடந்து முடிந்துவிட்டது.


ஆனால், நாகை மாவட்டத்திலிருந்து செம்மொழி மாநாட்டுக் காவல் பணிக்குச் சென்றவர்கள், தங்களின் உணவுப் படியை யார் சாப்பிட்டது? என குமைந்து கொண்டிருக்கிறார்கள். 

நாகை மாவட்டத்திலிருந்து செம்மொழி மாநாட்டுப் பணிக்குச் சென்ற காவலர்கள் வட்டாரத்தில் பேசினோம். 

Ragavan.jpg‘‘ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியே திருமண மண்டபம் ஒதுக்கப்பட்டது. அதன்படி எங்களுக்கும் ஒரு மண்டபம் ஒதுக்கி, அதில் ஆட்கள் மூலம் சமைத்து உணவு கொடுத்தார்கள். இதற்கு பொறுப்பு புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன். எங்களுக்கான உணவுப்படி நாள் ஒன்றுக்கு 100 ரூபாய். ஆக, நாங்கள் தங்கியிருந்த 12 நாட்களுக்கும் நபர் ஒருவருக்கு ஆயிரத்து 200 ரூபாய். 

மற்ற மாவட்ட போலீஸாருக்கு எல்லாம் ‘நான் வெஜ்’ போட்டு அதிலும் மீதித் தொகையாக 400 முதல் 550 ரூபாய் வரை ஒவ்வொருவருக்கும் மண்டப வாசலிலேயே பிரித்துக் கொடுத்துவிட்டார்கள். 

ஆனால் 12 நாட்களும் தயிர் சோறு, பொங்கல் என வெறும் வெஜிடேரியன் சாப்பாடு போட்டு எங்களுக்கு இன்று வரை ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. இதில் ஊழல் செய்யப்பட்ட பல ஆயிரம் ரூபாய் பணம் யாரிடம் உள்ளது? ஏன் எங்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை? நாகையின் புதிய எஸ்.பி. சந்தோஷ்குமார்தான் இதுபற்றி விசாரித்து நியாயம் வழங்கவேண்டும்’’ என்று புலம்புகிறார்கள்.

புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசனிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டபத்தில் சைவம்தான் சமைக்க வேண்டும் என்று மண்டப மேனேஜர் சொல்லிவிட்டதால்தான் சைவம் சமைக்கப்பட்டது. நான் வெறும் சூப்பர்வைசர் மட்டும்தான். வரவு செலவு எல்லாம் ஆயுதப் படையில் எஸ்.எஸ்.ஐ.ஆக இருக்கும் ஆனந்தராஜ்தான் பொறுப்பு’’ என்றார்.

ஆயுதப் படை எஸ்.எஸ்.ஐ., ஆனந்தராஜிடம் கேட்டோம், ‘‘எனக்கு ஒதுக்கப்பட்டவர்கள் 120 பேர். ஆனால் சாப்பிட்டவர்களோ 148 பேர். நபருக்கு 100 ரூபாய் உணவுப் படி என்று அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள்(யார்?) ரூபாய் 25 எடுத்துக்கொண்டு 75 ரூபாய் வீதம்தான் என்னிடம் கொடுத்தார்கள். 5 சமையல் ஆட்கள் வைத்து சமைத்து போட்டு 52 ரூபாய் வீதம் செலவு செய்து மீதிப் பணத்தை ஆயுதப்படை ஆய்வாளரிடம் ஒப்படைத்துவிட்டேன். 

ஆனால் நாகை மாவட்டத்திலிருந்து செம்மொழி மாநாடு காவல் பணிக்கு 300 பேர் சென்றோம். பணம் பெற்றுத் தரும் பொறுப்பை ஏற்றவர்கள் நாகை ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ்தான். அவர்களோ 246 பேருக்குதான் பயணப் படி பெற்றிருக்கிறார்கள். மீதி நபருக்கு வாங்கவில்லையாம். அவை வந்த பின்புதான் பணம் பிரித்து கொடுக்க முடியும் என்கிறார்கள். இதுபற்றி ஸ்பெஷல் பிராஞ்ச்சில் கேளுங்கள்’’ என்றார். ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸை நான்கு முறை தொடர்பு கொண்டும், ‘இன்ஸ்பெக்டர் இல்லை’ என்ற பதிலையே சொன்னார்கள். 

மாநாடு நடத்தி தமிழுக்கு சோறுபோட்டார்களோ இல்லையோ... சிலர் தங்களுக்கு ‘சோறு’ போட்டுக் கொண்டுள்ளார்கள்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி:
அறிவித்த தி.மு.க. எம்.எல்.ஏ.; ஆடிப்போன வங்கிகள்!

Raja%202.jpg

ஆடித் தள்ளுபடியால் நகர்ப்புறக் கடைகளில் கூட்டம் அலையடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்... விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தி.மு.க. எம்.எல்.ஏ., திருநாவுக்கரசு அறிவித்திருக்கும் ஆடித் தள்ளுபடியால் வங்கி அதிகாரிகள் ஆடிப் போயிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.


Raja%201.jpg‘‘கலைஞர் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால், கண்டிப்பாக மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். எனவே அனைத்து மகளிர் சுயஉதவிக் குழுக்களும் கடன் பெற்றுக்கொள்ளுங்கள். குழுக்கள் இல்லாதவர்கள் உடனடியாக புதியதாக உறுப்பினர் சேர்த்து கடன்பெற்று பலன் பெறுங்கள்’’

-அ.தி.மு.க. வசம் உள்ள திருநாவலூர் தொகுதிக்கு உட்பட்ட மதியனூர் கிராமத்தில் கூட்டுறவு துறை சார்பில் ஜூலை 21&ம் தேதியன்று நடந்த நலத்திட்ட உதவி விழாவில்தான், இப்படித் தள்ளுபடி அறிவிப்பு செய்திருக்கிறார் தி.மு.க. எம்.எல்.ஏ. திருநாவுக்கரசு.

இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் ஆளாளுக்கு இருபது பேரை சேர்த்து புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் என சொல்லி கடன் வாங்க கிளம்பிவிட்டார்கள். 

விழுப்புரம் மாவட்டத்தில் இப்போது 12 ஆயிரத்து 533 சுயஉதவிக் குழுக்கள் இருக்கின்றன. அவற்றுக்கு கடன் கொடுத்த தொகை ரூ.70 கோடி. அதில் திரும்ப செலுத்தப்பட்டது 30 கோடி ரூபாய்தான். பாக்கி வட்டி உட்பட சுமார் 60 கோடி ரூபாய்க்கு மேல் வரவேண்டியிருக்கும் நிலையில்... எம்.எல்.ஏ.வின் அறிவிப்பால், ‘கடன் தொகை திரும்ப வருமோ, வராதோ?’ என வங்கி அதிகாரிகள் கவலையில் இருக்கிறார்கள். 

இந்த நிலையில், எம்.எல்.ஏ. அறிவிப்பின் போது மேடையிலிருந்த விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர் மலர்விழியிடம் பேசினோம். 

‘‘திரும்பக் கட்டும் திறனை ஆராய்ந்துதான் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி செய்கிறோம். கடனை திரும்பக் கட்டமுடியாது என யாரும் சொல்லமுடியாது. திரும்பக் கட்டாதவர்களுக்கு கால அவகாசம் தருவோம். பிறகு முறையான நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்வோம். மதியனூரில் நடந்த விழாவில் கடன் தள்ளுபடி என எம்.எல்.ஏ. திருநாவுக்கரசு எப்படி பேசினார் என்று புரியவில்லை’’ என்றார்.

விழா நடந்த தொகுதியான திருநாவலூர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான குமரகுருவிடம் பேசினோம். 

‘‘ என் தொகுதிக்கு ரோடு வசதியும், அடிப்படை வசதிகளும் செய்து தரவேண்டும் என்று சட்டசபையில் பலமுறை பேசியும் செய்துதர மறுக்கிறார்கள். ஒரு தொகுதிக்கு 2 பஸ் தடங்கள் வழங்கவேண்டும் என்று அரசு அறிவித்தது. ஆனால் என் தொகுதிக்கு இதுவரை எந்த பஸ் வழித் தடங்களும் புதியதாக இதுவரை விடவில்லை. இதுஇப்படி இருக்க என் தொகுதியில் வந்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கிறார் திருநாவுக்கரசு. ஓட்டுக்கு பணம் கொடுக்கிறது தி.மு.க. என நாங்கள் சொல்லிவரும் குற்றச்சாட்டை நிரூபிப்பதாகத்தான் இருக்கிறது தி.மு.க. எம்.எல்.ஏ.வின் இந்தப் பேச்சு’’ என்று கண்டித்தார். 

Raja.jpgதே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசனோ, 

‘‘மக்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்க வேண்டிய மக்கள் பிரநிதியான திருநாவுக்கரசு, அரசை எப்படி ஏமாற்றுவது என்று மக்களுக்கே சொல்லிக் கொடுப்பது வேதனையானது. மகளிர் சுய உதவிக் குழுக்களை அரசியலுக்கு பயன்படுத்துகிறது தி.மு.க. என்கிற எங்களைப் போன்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மெய்யாக்கியிருக்கிறார் திருநாவுக்கரசு. தி.மு.க.வின் பெரிய புள்ளிகள் நாட்டை கொள்ளையடிப்பதைப் போல மக்களுக்கும் கொள்ளையடிக்கக் கற்றுத் தருகிறாரா திருநாவுக்கரசு?’’ என கொந்தளித்தார். 

எம்.எல்.ஏ.வின் அறிவிப்புப்படி மகளிர் சுய உதவிக் குழுக் கடன் தள்ளுபடி ஆகுமென எதிர்பார்க்கிறீர்களா? & திருக்கோவிலூர் வட்டார சுய உதவிக் குழுவினரிடம் விசாரித்தோம். 

‘‘ஒரு தடவை லோன் வாங்கணும்னா இருபது பேர் கையெழுத்து போட்டு பேங்க்ல அக்கவுன்ட் ஒப்பன் பண்ணுவோம். ஆறுமாசகாலம் அதை சரிபார்த்து அதன் பிறகுதான் பேங்க்ல கடன் கொடுப்பாங்க. இது எல்லாரும் சேர்ந்து வாங்குற கடன்கிறதால யாரும் ஏமாத்த முடியாது. ஏமாத்தினா அடுத்தவாட்டி கடன் வாங்க முடியாது. அந்த எம்.எல்.ஏ. ஏதோ அவர் பாட்டுக்குப் பேசிட்டுப் போயிட்டாரு. ஆனால் அவரால பல பெண்கள் குழப்பத்துல இருக்கறது உண்மை’’ என்கின்றனர். இந்த நிலையில், திருநாவுக்கரசு எம்.எல்.ஏ.வின் ஆடித் தள்ளுபடி பேச்சு துணை முதல்வர் வரை போக... அவர் எம்.எல்.ஏ.வை சென்னைக்கு அழைத்து, ‘உங்களை யாரு இதுமாதிரி பேசச் சொன்னது?’ என கண்டித்திருக்கிறாராம். இதையடுத்து எம்.எல்.ஏ. செல்போனை அணைத்து வைத்துவிட்டார். இதுபற்றி விளக்கம் கேட்க நாம் அவரது வீட்டுக்குப் போனபோது, ‘‘அவர் வெளியே போய்விட்டார்’ என்றனர். தி.மு.க. எம்.எல்.ஏ.வின் பேச்சால் அப்பாவிப் பெண்கள் குழம்பிப் போயிருக்க, பல கட்சிகளும் இதைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தத் தயாராகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மாணவர்களின் ஸ்காலர்ஷிப் கொள்ளை!

மாணவர்களின் ஸ்காலர்ஷிப் தொகையை ஆசிரியர்களே கொள்ளையடிக்கிறார்கள்’ என ஏகத்துக்கும் பெற்றோர் தரப்பில் இருந்து புகார்கள் வர... விசாரணையில் இறங்கினோம்.

புகார்க்குரல் எழுப்பும் மாணவர்கள் தரப்பில் திருவண்ணாமலையைச் சேர்ந்த கௌசல்யா, அஸ்வினி, ரேகா, சங்கீதப்பிரியா ஆகியோரைச் சந்தித்தோம்.

குமுறலோடு பேசிய அவர்கள் ""தலித் சமூகத்தைச் சேர்ந்த நாங்க இப்ப கல்லூரியில் சேர்ந்திருக்கோம். இதுக்கு முன்ன வி.டி.எஸ்.மேனிலைப்பள்ளியில் படிச்சோம். ப்ளஸ்-1, ப்ளஸ்-2 படிச்ச எங்களுக்கு அரசாங்கம் கல்வி உதவித்தொகை வழங்கியது. வருஷத்துக்கு 1,500 ரூபா வீதம் தந்த இந்த உதவித்தொகையை அந்தப் பள்ளி நிர்வாகம்... இவ்வளவு நாள் ஆகியும் எங்களுக்குத் தரலை. 

அந்த பள்ளியில் ஸ்காலர்ஷிப் விவகாரத்தை கவனிக்கிற வெங்கடேசனிடம் போய்க் கேட்டால்... "ஹெச்.எம்.மை போய்ப் பாருங்க'ன்னாரு. ஹெச்.எம். ஆனந்தனைக் கேட்டால்... "இது என் வேலையில்லை. போய் ஆபீஸ் ரூமில் கேளுங்க'ன்னு துரத்தறார். அரசாங்கம் எங்களுக்குக் கொடுத்த கல்வி உதவித்தொகையை வாங்க 4 வருசமா அலையா அலைஞ்சிக்கிட்டு இருக்கோம். கொடுக்கமாட்டேங் கறாங்க''’என்றார்கள் ஆதங்கமாய்.

டேனிஷ் மிஷன் பள்ளியில் கடந்த ஆண்டு ப்ளஸ்-2 முடித்து வெளியே வந்திருக்கும் மாணவி கௌசல்யாவோ ""நானும் ப்ளஸ்-1 படிக்கும் போதே கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிச்சேன். இந்த ரெண்டு வருஷ உதவித்தொகையையும் கொடுக்க மாட் டேங்கறாங்க.. 2 வாரத்துக்கு முன்ன மார்க் ஷீட் வாங்கப் போனப்பகூட கேட்டேன். அரசாங்கம் இன்னும் அனுப்பலைன்னு சொல்றாங்க. அங்க படிச்ச பாதிப் பேருக்கு மட்டும் கொடுத்துட்டு மீதிப் பேருக்கான பணத்தை கொடுக்காம அமுக்கிட் டாங்க''’என்கிறார் கவலையாய்.

தலித் விடுதலை இயக்க நிறுவனர் ஞானசேகரனோ ""திருவண்ணாமலையில் இருக்கும் இந்தப் பள்ளிகள் மட்டுமல்ல... தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான பள்ளிகளில் இந்த நிலைமை இருக்கு. இது தொடர்பா நாங்க ஆதி திராவிட நலத்துறையில் கேட்டப்ப.. "பள்ளிகள் சரியா விண்ணப்பம் அனுப்பறதில்லை'ன்னு சொல் றாங்க. பள்ளிகள்ட்ட கேட்டா... 

"நாங்க அப்ளிகேஷன் அனுப்பறோம். அவங்கதான் பணம் அனுப்பலை'ன்னு மழுப்பறாங்க. இந்த ரெண்டு தரப்பு சொல்றதுமே பொய். அரசாங்கம் ஒதுக்கும் உதவித் தொகையை பள்ளிகள்ல இருக்கும் சில நந்திகள்தான் வழிமறிச்சி.. தானே எடுத்துக்குது. இதே டேனிஷ் பள்ளியில் இருக்கும் ஒரு ஆசிரியர்... மாணவர்களைப் போல போலியாக் கையெழுத்து போட் டுட்டு.. உதவித்தொகைப் பணத்தை எடுத் திருக்காரு. அதற்கான ஆதாரம் எங்கக்கிட்ட இருக்கு. இது பற்றி அதிகாரிகள் தரப்பிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை''’என்றார் எரிச்சலாய்.

இந்த விவகாரம் குறித்து வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆனந்த னிடம் நாம் கேட்டபோது ‘""ஸ்காலர்ஷிப்பில் பிரச்சினை வருதுன்னு தெரிஞ்சதால்.. கடந்த ரெண்டு வருசமா நானே மாணவர்களைக் கூப்பிட்டு உதவித் தொகையைத் தர ஆரம்பிச் சிருக்கேன். 2006-2007-ல் 40 மாணவர்களுக்கான உதவித் தொகை வரலை. அதற் கான ரெக்கார்டுகளைக் காட்டச் சொல்றேன் பாருங்க’’என்றவர்'' கிளரிக்கல் செக்ஷனைச் சேர்ந் தவர்களைக் கூப்பிட்டு... பைல் களை நம்மிடம் காட்டும் படி சொன்னார்.

அங்கிருந்தவர்கள் ஒருமணி நேரத்துக்கு மேலும் தேடிக் கொண்டே இருந்தனர்.

ஆதிதிராவிட நலத்துறை மாவட்ட அலுவலர் கண்ணை யாவோ, ""டேனிஷ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஸ்காலர்ஷிப்பை அங்க இருக்கும் ஆசிரியரே திருடியது எங்க விசாரணையில் தெரியவந்திருக்கு. அவங்க விநியோகிக்காம வச்சிருந்த 24,500 ரூபாயை நாங்க திருப்பி வாங்கிட்டோம். அதை நாங்களே சம்பந்தப்பட்ட மாணவர்கள்ட்ட கொடுக்கப்போறோம். தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வி.டி.எஸ். மேல் நிலைப்பள்ளிக்கான உதவித் தொகையை நாங்க பள்ளிக்கு அனுப்பிட்டோம். அதே சமயம் அந்தப் பள்ளி குறித்த புகார்கள் எதுவும் எங்களுக்கு வரலை''’என்றார் உறுதியாக.

நிறைவாக நாம் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனிடமும் இந்த கல்வி உதவித்தொகை மோசடி குறித்துக் கேட்டோம். மாவட்ட ஆட்சியரோ 

""டேனிஷ் பள்ளி ஆசிரியர் கில்பர்ட் தனசேகரன்... மாணவர்களின் கல்வி உதவித் தொகையை 3 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி கேட் டிருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் அவரைக் கைது செய்து... அவரிடமிருந்து பணத்தை ரெக்கவரி செய்து... சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பிரித்துக் கொடுப்போம். மற்ற பள்ளிகளின் நிலவரம் குறித்தும் விசாரணை நடந்துகொண்டிருக் கிறது''’என்கிறார் நம்மிடம்.

மாணவர்களின் கல்வி உதவித் தொகையில் கைவைக்கும் இப்படிப்பட்ட திருட்டு ஆசிரியர்களைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Sathyalaya Ramakrishnan reporting from Chennai
Chennai, 04 August, (Asiantribune.com):

A Social activists knocked the Madras High Court (HC) door through a writ petition, seeking direction to the Director of Vigilance and Anti Corruption (DVAC) to file case against three policesecurity officers to the Tamil Nadu Chief Minister M Karunandhi allegedly purchased housing plot from Tamil Nadu Housing Board (TNHB) by paying of Rs 75 lakh each.

The three police security officers are drawing the salary ranging Rs 10,000 to 12,000 per-months, the petitioner submitted.

The petition was filed in the criminal jurisdiction of the Madras High Court seeking adirection to the DVAC to probe into allegations of corruption against three security officers of Mr Karunanidhi.

The petitioner C.Selvaraj, Financial Controller of an Non Governmental Organisation(NGO), Federation of Anti Corruption Team submitted in his writ petition alleged that C.Vinothan, C.Ganesan and P.Pandian are working as security officers of the Chief minister, in possession of assets disproportionate to known sources of income and in this regard he had launched a complaint with the DVAC in September 2009.

Even after a lapse of about a year, no enquiry has been ordered by DVAC, Selvaraj contended.

The three security officers are in the rank of Inspectors of Police in the Core Cell, Security Branch CID of Tamil Nadu Police whose carry home salary is between Rs.10,000/- and Rs.12,000/-.

The three security officers, who were allotted a two ground plot in Chennai City under the Government Discretionary Quota, had paid Rs.75,00,000/- in a single payment, for which they do not have legal sources of income, Selvaraj submitted.

While the government of Tamil Nadu has allotted housing plots to Vinothan and Ganesan under the discretionary quota for their ‘unblemished service’ Pandian’s wife Meena got the allotment under ‘social worker’ scheme.

Documents in the possession with a private television channel reveal that all the three Inspectors of Police had paid a sum of Rs.75 lakhs and odd, on 29.03.2008, in a single payment to the Tamil Nadu Housing Board.

Since his complaint to the DVAC had not elicited any response, Selvaraj had sought adirection from the Court to register cases against the three police officers under Section 13 (1) (e) r/w 13 (2) of the Prevention of Corruption Act, 1988.

The maximum term if convicted would run up to seven years. In his affidavit, Selvaraj avers that the DVAC, which was set up by the Tamil Nadu government as a first organized measure towards tackling corruption in public administration have failed to investigate his complaint which is violative of Article 14 of the Constitution.

The petition is likely to come up for hearing before a division bench on Wednesday.

- Asian Tribune -



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

10 ஆயிரம் பேர் தேவைக்கு 1.74 லட்சம் பேர் போட்டி : 22 ஆயிரம் பெண்கள் பங்கேற்பு

large_57749.jpg

சென்னை :இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. 10 ஆயிரம் பேர் தேவைக்கு, 17 மடங்கு அளவுக்கு 1.74 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில், 22 ஆயிரம் பேர் பெண்கள்.


தமிழகத்தில் காலியிடங்களை நிரப்பும் வகையில், 9,000 இரண்டாம் நிலை காவலர்கள், 487 சிறைக்காவலர்கள், 630 தீயணைப்பு வீரர்கள் என, மொத்தம் 10 ஆயிரத்து 117 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று எழுத்துத் தேர்வு நடந்தது. 32 மாவட்டங்களில், 105 மையங்களில் தேர்வு நடந்தது.இதற்காக ஒரு லட்சத்து 84 ஆயிரத்து, 632 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 22 ஆயிரத்து 790 பெண்கள் உட்பட, 1.74 லட்சம் பேர் நேற்று தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் ஏழாயிரம் பேர் தேர்வெழுதினர்.


சென்னை புறநகரில் எம்.ஐ.டி., தொழில்நுட்பக் கல்லூரியில் தேர்வு நடந்தது. இங்கு, 886 பெண்கள் உட்பட, 3,146 பேர் தேர்வெழுதினர். தேர்வு மையங்களில் இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையத்திற்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது.தேர்வெழுத வந்தோர், மைய வாயிலில் சோதிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்த மொபைல் போன்களை வாங்கிய போலீசார், "டோக்கன்' கொடுத்து, அவற்றை தங்கள் பாதுகாப்பில் வைத்திருந்தனர். மொத்தம் 10 ஆயிரத்து 117 இடங்களுக்கு, 1.74 லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர்.


திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்றாயிரத்து 929 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். அதில், மூன்றாயிரத்து 632 பேர் நேற்று தேர்வு எழுதினர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழம்பியில் உள்ள திருமலை பொறியியல் கல்லூரியில் எழுத்துத் தேர்வு நடந்தது. நான்காயிரத்து 288 ஆண்கள், 448  பெண்கள் என, மொத்தம் நான்காயிரத்து 736 பேர் தேர்வு எழுதினர்.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடந்த போலீஸ் எழுத்து தேர்வில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.தமிழகத்தில் பல மையங்களிலும் ஆர்வமாக பலரும் வந்து தேர்வு  எழுதியுள்ளனர்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Three panchaloha idols stolen from Nagai

Read more: Three panchaloha idols stolen from Nagai - Chennai - City - The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Three-panchaloha-idols-stolen-from-Nagai/articleshow/6284403.cms#ixzz0wBFQnqfDNAGAPATTINAM: Three panchaloha idols were stolen from a temple in Thirupugalur near Nagapattinam. The idols were guarded in a chest in the `praharam' (the area around the sanctum sanctorum) of the Sri Nageswarar temple. Priests in the temple came to know about the theft of three idols on Saturday. Police said that they received the complaint only on Sunday and are investigating. 

The idols were part of a treasure stumbled upon by a group of construction workers in 2003 when they were renovating the Nageswarar temple, under the control of Velakurichi Adheenam. The workers unearthed 27 panchaloha idols then. The idols were kept in the safety chest and were taken out only during auspicious days and temple festival when special poojas were performed. In view of the `Adi Pradhosham', the temple priests, who took out the idols, found that those including that of saint Kannappanayanar and Goddess Amman were missing. The police are yet to find out when the idols were stolen but suspect that insiders in the temple would have a role in the theft since there were no indications of the chest lock being tampered. 

The theft is a testimony to the state of security in Hindu temples. The temples, especially in Thanjavur, Tiruvarur and Nagapattinam districts that boast of a number of invaluable Chola era relics, have long become the soft target of the idol thieves. The exquisite Chola era idols remain primary targets of the idol thieves. 

K Vasudevan, a member of Divya Desa Parampariya Peravai, a Vaishnavite forum said the present security system of the HR and CE department was grossly inadequate given the number of temples and the rich spiritual and antique value of their idols. While bigger temples like Madurai Meenakashi temple and Srirangam Ranganathar temples have police protection besides a good safety system, thanks to security threat, the smaller temples in isolated places of the vast countryside cry for attention. At least one idol theft is reported every month from these temples. 

A HR and CE official said there were 15 icon centres in major temple towns of the state that are equipped to safeguard up to 500 icons. Besides five more icon centres are under construction and would be ready in a year, he said. 

Read more: Three panchaloha idols stolen from Nagai - Chennai - City - The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Three-panchaloha-idols-stolen-from-Nagai/articleshow/6284403.cms#ixzz0wBFIfCXP

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_08_2010_001_041sirpatyhy.jpg?w=217&h=873

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_08_2010_004_024-uma-raja1.jpg?w=354&h=819
14_08_2010_003_044dal.jpg?w=630&h=258
14_08_2010_001_047dal1.jpg?w=630&h=153


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Pc0062400.jpg
SC seeks TNs views on jallikattu duration

Welfare Board Wants Sport Limited To 2 Mths

TIMES NEWS NETWORK

New Delhi: The Supreme Court on Friday sought the Tamil Nadu governments response on suggestions made by the Animal Welfare Board (AWB) to limit the annual bull taming event jallikattu to two months,increase security deposit by organisers to Rs 20 lakh and hike the fine for violations to Rs 1 lakh from Rs 10,000.
Appearing for AWB,senior advocate Raj Panjwani told a Bench comprising Justices R V Raveendran and H L Gokhale that the Regulation of Jallikattu Act,2009,needed to be made stringent if misuse of the event and loss of human lives were to be averted.Panjwani suggested that Section 4(ix) of the Act,mandating organisers to deposit Rs 2 lakh as security to cover exigencies like death or injuries of participants,needed to be enhanced to Rs 20 lakh.
He said the events,which were related to the harvest festival,need not be permitted for five months and the law should be amended to limit it to January and February.He also objected to the mild penalty Rs 10,000 imposed on organisers found violating provisions of law and suggested that it be made Rs 1 lakh.
On July 9,the apex court had expressed dissatisfaction at the deterrent provisions of the law and had termed it too lenient.Its first objection was to the periodJanuary to Maypermitted under the 2009 law.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

EXPERT VIEW
Refusal to accept resignation of MLA unconstitutional

Era Sezhiyan

The news item Selvam remains an MLA despite switching parties in the August 5 edition of The Times of India has raised some issues on constitutional and procedural aspects relating to the non-acceptance so far of the resignation of K Selvam,MLA,by the speaker of the Tamil Nadu Assembly and the inaction in applying the anti-defection law over his successive acts of joining different political parties.


Regarding resignation of membership of a State Assembly,article 190 of the Constitution reads: ( 3)( b) If a member of a House of the Legislature of a State resigns his seat by writing under his hand addressed to the speaker or the chairman,as the case may be,and his resignation is accepted by the speaker or the chairman,as the case may be,his seat shall thereupon become vacant. It also has a proviso which says if the speaker or chairman,as the case may be,is satisfied that such resignation is not voluntary or genuine,he shall not accept such resignation.
In the present case of the resignation letter submitted by K Selvam in writing under his hand,the speaker is reported to have refused to accept his resignation as it was not in order.
The state assembly rules require that a resignation letter by an MLA should be in the following form: I hereby tender my resignation of my seat in the Tamil Nadu Legislative Assembly with effect from Rule 21 further states that the letter should conform to this form and no other matter shall be introduced.
It is reported that Selvam had stated that he was resigning to express displeasure that no steps were being taken to address the problems of Eelam Tamils. As Selvam had included some other matter in his letter,the speaker seemed to have decided not to accept his resignation.It may be noted here that article 101 of the Constitution,on resignation of a Member of Parliament,contains similar provisions and proviso as those of article 190 (3)( b).
For the resignation of an MP,Rule 240(1) of the Rules of Procedure of Lok Sabha requires the member to send a letter with a one-sentence request.It adds that where any member gives any reason or introduces any extraneous matter,the speaker may in his discretion,omit such words,phrases or matter and the same shall not be read out in the House.Further,it says if the letter is given to the speaker personally and informs him that it is voluntary and genuine,the speaker may accept the resignation immediately.
While the speaker should not accept a resignation if he is satisfied it is not voluntary or genuine,no such situation has arisen in the case of Selvam as to make the speaker delay acceptance.
The Constitutional provisions for resignation of MPs or MLAs have not prescribed any restriction as given in the Rule 21 of the TN Assembly to warrant refusal of the resignation submitted by Selvam.No such unwarranted restrictions are in the Lok Sabha Rules.In fact,the Supreme Court has decided that the Constitutional provisions are more mandatory than the Rules of Procedure adopted by the Assembly.(Ravi S.Naik v.Union of India,AIR 1994 SC 1558).
Whereas the Rules of Lok Sabha allow acceptance of resignation of a member without taking into consideration extraneous matter in the resignation letter,the TN assembly Speaker relied wrongly on the unwarranted restrictions included in Rule 21.His decision in not accepting the resignation of Selvam is ultra vires the Constitution.Had the Speaker accepted in time the resignation of Selvam,the impact of the anti-defection law could not have been raised about the MLA switching to parties. Then,he would have been free to join any party.
In the 2006 election,the Viduthalai Chiruthaigal Katchi was in the alliance led by AIADMK and Selvam won the election defeating the DMK candidate in Mangalore assembly constituency.Since then,the political situation has changed as his party had joined the DMK alliance in TN and is supporting the UPA government.It looks as though the assembly and the ruling party are allowing extra-constitutional indulgence to the MLA in having the benefit of both sides of party politics.


(Era Sezhiyan,former MP,is a senior fellow,Institute of Social Sciences,New Delhi)



Pc0101100.jpg




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Courts order seizure of govt buses over compensation delay

TIMES NEWS NETWORK

Puducherry/Villupuram: The Puducherry and Villupuram courts on Thursday ordered the attachment of two Tamil Nadu State Transport Corporation (TNSTC) buses following the delay by the state-run body to disburse compensation to families of accident victims.
Eight years after the accident,the principal district sessions court directed the corporation on May 26,2009,to pay a compensation of Rs 4.54 lakh to the family of a man named Sellappan (38),who was fatally knocked down by a speeding TNSTC bus when he was proceeding on his two-wheeler to Agaram from Villupuram on May 25,2001.Sellapans wife,S Shanthi had moved the court seeking compensation.
However,the transport corporation failed to honour the court order and Shanthi filed a petition in the court.The petition came up for hearing on Wednesday and the court pulled up the corporation directing it to pay a compensation of Rs 7.76 lakh including interest and ordered that the bus to be attached.Court officials seized the TNSTC bus bound for Madurai from Chennai when it halted at Villupuram bus stand on Wednesday evening.
In another case,a Puducherry court attached a TNSTC bus after the transport corporation failed to provide compensation to the family of accident victims.An industrialist Azhaganandam was killed and his wife A Sengeni and children were injured when the car in which they were travelling was hit by a TNSTC bus near Thiruchittrambalam cross roads in Puducherry on November 11,1995.
Sengeni moved a Puducherry court seeking compensation and the court directed the corporation to pay a compensation of Rs 91,000 on March 15,2001.Following delay,the court,based on a petition by Sengeni,filed a petition before the court that directed the corporation to pay a compensation of Rs 1.5 lakh and attached the bus.The court has been taking action against the corporation whenever it failed to provide compensation to the families of accident victims.In one case,a Tamil Nadu court permitted a petitioner,who did not receive compensation from the corporation on time,to take custody of a bus until the corporation settled the amount.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இன்னுமோர் அட்டாக் பாண்டி ? கலைஞருக்கே மிரட்டலா ?

இன்னுமோர் அட்டாக் பாண்டி ?
கலைஞருக்கே மிரட்டலா ?

கீழ்க்காணும் – தினமலரில் வெளிவந்துள்ள
விளம்பரத்தைப் பாருங்கள் -
jv-add.jpg?w=438&h=703

ஜூனியர் விகடனில் வெளிவந்த -மதுரை
VIP க்களைப் பற்றிய – சில திரைமறைவு
நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுரையை கண்டித்து,
பயமுறுத்தி, வெளியிடப்பட்டுள்ள விளம்பரம்
தான் இது.

அந்த கட்டுரையை படிக்காதவர்களுக்கு
ஆவலாக இருக்கும் -அப்படி என்ன தான் எழுதி
இருந்தது அதில் – என்று.

கலைஞர் “ஆசியுடன்”
சில திருந்தாத தென் மாவட்டத்து
பிரமுகர்களுக்கு “கவனிப்பு”
நடந்ததாக செய்தி வெளியாகி இருந்தது !!

இப்போது சில  கேள்விகள் -

1) “சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில்
பெரும் போராட்டம்” என்றால் என்ன அர்த்தம் ?
சட்டம் ஒழுங்கை சீர்குலைப்போம் என்று தானே ?
காவல் துறைக்கு பொறுப்பான  கலைஞருக்கே
சவால் என்று தானே அர்த்தம் ?

2) உண்மையில் இந்த விளம்பரத்தின் நோக்கம்
யாரை பயமுறுத்துவது ? ஜுனியர் விகடனையா -
இல்லை கலைஞரையா ?

3) “தமிழ்நாடு இல்லத்துப் பிள்ளைமார்  மாநில
சங்கம்” –
இப்படி ஒரு சங்கத்தைப் பற்றி
இதற்கு முன்னால் யாராவது
கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

4) ஜாதி சங்கம் என்று சொல்லிவிட்டு
அதென்ன  “பெரியார் வழியில் “

5)அதென்ன  “நேதாஜியை நினைத்து”

6) கால் பக்க அளவிற்கு தினமலரின் எல்லா
பதிப்புகளிலும் பெரிய விளம்பரம்
அளிக்கவல்ல  பெரிய பணவசதி உள்ள
சங்கமா  இது ?

7) நேற்று காலை வந்த விளம்பரம் இது.
இன்று இரவு வரை கலைஞர் அலுவலகத்தில்
இருந்து எந்தவித ரீ-ஆக் ஷனையும் காணோம்.
என்ன காரணமோ ?

8)உடனுக்குடன் அதிரடி பதில் கொடுக்கும்
கலைஞர் ஏன் மௌனம் சாதிக்கிறார் ?

9) தினமலர் பத்திரிகைக்கு மானம், வெட்கம்,
சூடு, சொரணை,கொள்கை, கோட்பாடு  -
என்று எதாவது ஒன்றாவது
இருந்தால் தன் சக பத்திரிகையை பயமுறுத்தும்
இத்தகைய விளம்பரத்தை வெளியிட
ஒப்புக்கொள்ளுமா ?

10) தமிழ் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது ?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

16_08_2010_006_019chiegf.jpg?w=259&h=300

16_08_2010_006_039-palani.jpg?w=161&h=300


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Man picked up for cheating let off due to political pressure

CHENNAI: A white-collar offender picked up on charges of cheating to the tune of Rs 10 crore was let him off scot-free, allegedly due to political pressure. 

A S Suresh, 38, has 10 cases of cheating people of a total of more than Rs 10 crore pending against him two cases are pending with the CBI and the rest with the central crime branch (CCB). Though he was appearing in court regularly for the CBI cases, he reportedly refused to surrender or appear for the cases registered by the CCB. 

Based on a complaint filed by Durai of Valasaravakkam, CCB police arrested Suresh as he came out of the CBI court in Egmore. Suresh had borrowed Rs 60 lakh from Durai against forged documents for a property in Valasaravakkam. When Suresh defaulted on payments, Durai tried to take possession of the property and realised that the documents were not original. CCB police teams nabbed Suresh when he was leaving the CBI court in Egmore and took him to the CCB headquarters for interrogation. 

While they were questioning Suresh, a luxury car entered the CCB premises without even stopping to register at the police reception and parked in officers' parking lot. Two men got out of the car, met a senior police officer and convinced him to let Suresh off. Sources alleged that the pressure came from a woman Rajya Sabha MP who is close to Suresh. Durai, who was inside the city police commissioner's office, was allegedly threatened with dire consequences if he pursued the case. 

According to the police, Suresh lives with one Sangeetha in Alwarpet. The two are named as absconding accused' in the three cheating cases pending with the CCB. Suresh has two other houses in Virugambakkam and Valasaravakkam. 

A police officer said, "Suresh would buy a luxury house or apartment and make copies of the documents. He would then get loans from various banks and individual lenders based on these documents. Recently, he had borrowed Rs 60 lakh from a nationalised bank in Purasawalkam. We are yet to receive a complaint from the bank officials."



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Quarrying deal costs govt Rs 10cr

Flouting Norms,Private Firm Given Mining Rights In Keerapakkam Free 

Julie Mariappan | TNN

Pc0020800.jpg
BLATANT VIOLATION: The hillock is the part of the mining area in Keerapakkam,where the private company quarried for blue metal
Chennai: The state government has lost at least Rs 10 crore by giving away stone quarrying rights in Keerapakkam in the southern suburbs of the city to a private company doing civic work for the Chennai Corporation and highways department absolutely free.What is more,the corporation issued a recommendation letter to the Kancheepuram collector to speed up clearance.
Roman Tarmat,the company,was given the contract to construct storm water drains in the Central Buckingham canal water catchment areas like Mylapore and Royapettah for Rs 38 crore.Citing the requisition of the corporation,the Kancheepuram district collectorate has granted a lease to the company to mine 3.9 lakh tonnes of blue metal without participation in any auction or tender.The state government would have earned Rs 10 crore if the quarry had been auctioned.
Not only was the tender process not followed,the tonnage allotted to the miner was way above the requirement of less than 50,000 tonnes of blue metal.The district collector has given free mining rights to the company,citing Rule 7 of the Tamil Nadu Minor Minerals Rules 1959.What is left unsaid,however,is that the same rule says such rights can be given only if the products are used solely for bonafide public purposes and not for sale or commercial profits. 
As the amount the company gets from the corporation for the storm water drain project includes the cost of materials,it become a commercial deal for which it cannot seek exemption.While the company would be paying only a nominal seigniorage fee for the blue metal it quarries,procuring 3.9 lakh tonnes of the material from the open market would have cost the company nearly Rs 7 crore.
Though the company has also bagged another project for the highways department,there seems to be no system in place to ensure that the rest of the blue metal would be used only for public work.
Government quarry operators are up in arms against the contract.For a small quantity of crushed blue metal,the company should not be allowed to mine blue metal worth crores of rupees.The government instead of generating revenue out of stone quarry,is losing its core revenue, said K Dhanasekar,president,Kancheepuram Stone Quarry Welfare Association.
The corporation maintained that there was nothing wrong in issuing the recommendation letter.The communique to the district collector was only to speed up the work, said SV Mathiazhagan,superintending engineer,storm water drains.It is a government policy to grant such lease when a department comes up with a requisition for their contractor, Kancheepuram collector Santosh K Misra told TOI.
About 33.5km of new drains will be laid in the Central Buckingham Canal catchment areas with the blue metal mined from Keerapakkam panchayat.
Meanwhile,Roman Tarmat has brushed aside the allegations.The district collector has granted the lease after ascertaining the prequalification for obtaining the lease under Rule 7.The raw material from the quarry will be used for specified public projects and will not be sold outside, said NV Natarajan,director,southern operations,Roman Tarmat.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

துணைவேந்தரை தாக்கினாரா எம்.எல்.ஏ.?

1.jpg

""திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளியப்பனையும் உடற்கல்வி இயக்குநர் தேவதாஸையும் தாக்கியதாகக் கூறப்படும் நெல்லை எம்.எல்.ஏ. மாலைராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!''.

ஜெயலலிதாவும் கூட்டணிக் கட்சி யினரும் கொடுத்திருக்கும் அறிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக் கின்றன.

என்னதான் நடந்தது... 7.8.10 சனிக்கிழமை மாலை, நெல்லை அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில்...?

""பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போதே பிரச்சினை கள் உருவாகி விட்டன. "பட்டமளிப்பு விழாவுக்கு துணை முதல்வர் வருகிறார். நீங்களும் கட்டாயம் கலந்து கொள்ளணும்'னு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, சபா நாயகர் ஆவுடையப்பனை தொடர்பு கொண்டு சொன்னார். அதற்கு சபாநாயகர் "எனக்குக் கூட கூரியர்ல அழைப்பிதழை அனுப்பியிருக்கிறார்கள்' என்று சொன்னாராம். அதன்பிறகு அமைச்சர் துணைவேந்த ரிடம் பேசியதும், துணைவேந்தர் காளியப்பன் நேரடியாகப் போய் ஒரு அழைப்பிதழை சபாநாயகருக்கு கொடுத்தார். ஆனாலும் எம்.எல்.ஏ. மாலைராஜாவுக்கு கூரியர்லதான் அனுப்பினார்கள். யூனிவர்சிடி சிண்டிகேட் மெம்பரான எம்.எல்.ஏ. மாலைராஜாவை அவமானப்படுத்தலாமா?'' என்கிறார்கள் நெல்லை உடன்பிறப்புகள். விழாவில் என்ன நடந்தது என்று பல்கலைக் கழக வட்டாரத்தில் விசாரித்தோம்.

1.jpg

""துணை முதல்வர் வருவதற்கு முன்பே மேடைக்குக் கீழே முதல் வரிசை நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார் எம்.எல்.ஏ. மாலைராஜா. அப்ப, பேராசிரியர் ஒருத்தர் எம்.எல்.ஏ.விடம் போய், "நீங்க சிண்டிகேட் உறுப்பினர். கவுன் போட்டுட்டு மேடையிலதான் இருக்க ணும். வாங்க கவுன் தர்றேன்'னு கூட்டிட்டுப் போனார். கவுன் கொடுக் கிறதுக்கு ரொம்ப லேட்டாகியிருக்கு. அதற்குள் ஸ்டாலின் வர, அந்த பரபரப்பில் எம்.எல்.ஏ. உட்கார்ந்திருந்த நாற்காலியில் வேறு யாரோ உட்கார்ந்து விட எம்.எல்.ஏ. கவுனும் இல்லாமல் பின் வரிசையில் உட்கார வேண்டியதாப் போச்சு... பட்டமளிப்பு விழா 5.55-க்கு முடிந்து எல்லாரும் போய்விட்ட பிறகு 6.15-க்கு தன்னோட ஆட்களோட துணைவேந்தர் அறைக்குப் போனார் மாலைராஜா. அங்கே ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கு. தகராறுனு தெரிஞ்சதும் மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் நாகராஜன், அந்த அறைக்குள் நுழைந்து மாலைராஜாவையும், மற்றவர்களையும் வெளியே அழைத்து வந்தார்...'' என்றார் பல்கலைப் பேராசிரியர் ஒருவர்.

எம்.எல்.ஏ. மாலைராஜாவைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.

""அவர் அறைக்குப் போய் அவரிடம் என்னை நீங்க சரியா நடத்தலை. ஏன் கவுன் தரலைனுதான் கேட்டேன். இதெல்லாம் ஒரு சில்லி மேட்டர்... உங்க மாதிரி அரசியல்வாதிகளுக்கு நாங்க பயப்படணும்னு அவசியமில்லைனு சொல்லிட்டு, இவங்களை வெளியேத்துங்கனு அவங்க ஆட்களிடம் சொன்னாரு... அவர்கள் எங்களை தள்ளுனாங்க. தேவதாஸ்ங்கிறவர் என் தோள் மேல கையை வச்சதும், என்னோட வந்தவங்க தேவதாஸ் கையைத் தட்டிவிட் டாங்க. அவமானப்பட்டுத் திரும்பியது நான்தான்...!'' என்றார் கோபத்துடன் எம்.எல்.ஏ. மாலைராஜா.

துணைவேந்தர் காளியப்பனையும் உடற்கல்வி இயக்குநர் தேவதாஸையும் பலமுறை நாம் தொடர்பு கொள்ள முயன்றோம். பேச மறுத்துவிட்டார்கள்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ராகுல் வியூகம்! தமிழக காங்கிரசை கரையேற்றுமா?

1.jpg

காமராஜருக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரசை சொந்தக்காலில் நிற்கவைக்கும் ஆற்றல் மிக்க தலைவர் யாரு மில்லை என்பதை அரசியல் பார்வையாளர்கள் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்கள். காங் கிரசுக்கான பாரம்பரிய செல் வாக்கைக் காப்பாற்றும் விதத்தில் செயல்பட்ட தலைவர் ஜி.கே. மூப்பனார். அவரைப்போலவே வாழப்பாடி ராமமூர்த்திக்கும் இதில் பங்கு உண்டு. தமிழக காங்கிரஸ் தலைவர்களாக மேலிடத்தால் நியமிக்கப்பட்ட மற்ற அனைவருமே தங்கள் பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்காகப் போராடவேண்டியிருந்ததால் காங்கிரசின் செல்வாக்கை வளர்க்க முடியவில்லை.


இந்திய அளவில் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடம் நிரம்புவதற்கு சில ஆண்டுகள் ஆனது. சோனியாவின் அரசியல் வருகைக்குப்பிறகே காங்கிரசுக்கு புத்துயிர் கிடைத்தது. தற்போது , ராகுல் மேற்கொள்ளும் சீர்திருத்தங்களும் புதிய வியூகங்களும் காங்கிரசை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு அகில இந்திய அளவில் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் மீது அவர் செலுத்தும் கவனமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது



காமராஜர் காலத்திலிருந்து ராகுல்காந்தி காலம்வரை தமிழகத் தில் காங்கிரசின் செல்வாக்கு என்ன என்பதை வரைபடம் காட்டுகிறது.

காமராஜர் ஆட்சிக்காலத் திற்குப்பிறகு காங்கிரசின் செல்வாக்கு மெல்ல மெல்லத் தேய்ந்து வந்திருப்பதையே வரைபடம் சுட்டிக்காட்டுகிறது. திராவிடக் கட்சிகளின் வளர்ச்சி இதற்கொரு முக்கிய காரணம் என்றாலும், காங்கிரசில் ஆளுமைமிக்க தலை வர்கள் இல்லாமையும் அதற் கான அடிப்படைக் கார ணங்களில் ஒன்றாகும். மேலிடத்தால் நியமிக்கப்படும் நிர்வாகிகளின் பதவிக்காலம் குறித்த அச்சமும், கட்சிக்குள் தலைமை அங்கீகரிக்காத தலைவர்கள் பலர் உருவாகி கோஷ்டிகளை உருவாக்கியதும் காங்கிரஸை தொடர்ந்து பலவீனப்படுத்தி வந்திருக்கிறது. 

1.jpg

இரு கழகங்களை காங் கிரஸ் நம்புவதும், காங்கிரஸை இரு கழகங்களும் நம்புவதும் இன்றளவில் தமிழகத்தின் தேர்தல் சூத்திரமாக இருக் கிறது. எனினும், காங்கிரசால் தனித்து நிற்கமுடியாமல் மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டே செயல்படவேண்டியுள்ளது. 1996 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் மேலிடத்தின் கூட்டணி முடிவுக்கு எதிராக வெளிப்பட்ட உணர்வே மூப்பனார் தலைமையிலான த.மா.காவை உருவாக்கியது. காங்கிரசின் பெரும்பாலான தொண்டர்கள் மூப்பனார் பக்கம் நின்றனர். காங்கிரஸ் வாக்குவங்கியும் அவர் பக்கம் இருந்தது. எனினும், அவராலும் அத்தேர்தலில் தனித்து நிற்க முடியவில்லை. தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தார். 1999 எம்.பி. தேர்தலில் தனித்து நின்று வெற்றிபெற முடியாததால், 2001-ல் அ.தி.மு.கவுடன் கூட்டணி சேரவேண்டிய நிலைமை ஏற்பட்டது. மூப்பனார்-வாழப்பாடி ஆகியோரின் மறைவுக்குப்பின் காங்கிரஸ் ஆட்சி என்ற கடைசி நம்பிக்கையும் பொய்த்துவிட்டதாலும், புதிய கட்சிகளின் வளர்ச்சியாலும் காங்கிரசின் பாரம்பரிய வாக்குவங்கியில் சரிவு ஏற்பட்டு தற்போது 12% என்ற அளவில் உள்ளது.


இந்த நிலையில், தமிழகத்தில் காங்கிரசின் செல்வாக்கை வளர்த்து, அதன் தலைமையிலான அணி மூலம் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்கிற நீண்டநாள் கனவை ராகுலின் வியூகங் கள் செயல்படுத்தும் என காங்கிரசின் புதிய தலைமுறை எதிர்பார்க்கிறது. 2009 நாடாளுமன்றத் தேர்தல் வெற் றிக்குப்பிறகு, காங்கிரஸ் கட்சி யை முழுமையாக தன் கையில் எடுத்துக் கொண்ட ராகுல், கட்சியை கீழ்மட் டத்திலிருந்து வளர்க்கும் பொறுப் பை மேற்கொண்டி ருக்கிறார். கட்சியின் நிலவரத்தை தொ டர்ந்து கண்காணித் தும் வருகிறார். அதன் அதிர்வுகள் தமிழகத் திலும் தென்பட ஆரம்பித்துள்ளது.



இளைஞர் காங்கிரசுக்கு புதிதாக உறுப் பினர்களைச் சேர்த்து, அதன் நிர்வாகிகளுக்கான தேர்தலையும் நடத்தி முடித்திருப்பது ராகுலின் ஆளுமையை வெளிப்படுத்து கிறது. 


அவர்களுக்கான பயிற்சி முகாம்களை தொ டர்ந்து நடத்திவருவதும் புதிய அணுகுமுறையாக இருக்கிறது. அதே நேரத்தில், காங்கிரசின் மாநில-மாவட்ட நிர்வாகிகளுக்கானத் தேர்தலை நடத்த முடியாமல் திணறுவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய தாகும்.


கட்சியின் மாநிலத் தலைவ ராக தங்கபாலு இருந்தாலும் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் என பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கி றார்கள். இந்தக் கோஷ்டிகளை ஒருங்கிணைத்து, காங்கிரஸ் தலைமையில் புதிய அணியை உருவாக்கி, மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்பது என்ற கனவை நிறைவேற்றுவது அத்தனை எளிதல்ல என்கிறார்கள் அரசியல் ஆய் வாளர்கள். நமது கள ஆய்விலும் அதனை அறிய முடிந்தது.


தமிழக காங்கிரசில் தொண் டர்களின் செல்வாக்கைப் பெற்றவராக ஜி.கே.வாசனும் மதிப்பிற்குரியவ ராக ப.சிதம்பரமும் இருக்கின்றனர். மற்ற கோஷ்டிகளின் தலைவர் களுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு ஏதுமில்லை. வாசன் இளையவர் என்பதாலும் கட்சித் தொண்டர் களைக் கடந்து அவர் பொது மக்களை ஈர்க்கவில்லை என்ப தாலும் காங்கிரஸ் மேலிடம் அத்தனை சுலபமாக அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடாது. 


அனுபவமிக்கவரான ப.சி.யோ இந்தியாவின் நிதி யமைச்சர், உள்துறைஅமைச்சர் என முக்கிய பொறுப்புகளை வகித்து சிறந்த நிர்வாகி எனப் பெயர் எடுத்திருக்கிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் அரசியல்-பொருளாதாரம் பற் றித் தெளிவாகப் பேசி எக்கட்சியையும் சாராத படித்த- நடுத்தர இளைஞர்களை கவர்ந்துள்ளார். ஆனால், மக்களிடமும் கட்சித் தொண் டர்களிடமும் அவரால் தலைவர் என்ற பெயரை எடுக்கமுடிய வில்லை. கடந்த எம்.பி. தேர்தலில் 2000 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று கடைசி ரவுண்டில் கரை யேறினார் ப.சிதம்பரம். எம்.பி. தொகுதிக்குட்பட்ட 6 சட்ட மன்றத் தொகுதிகளில் நான்கில் அவருக்குப் பின்னடைவே ஏற்பட்டது. 



மூப்பனாரை முன்னி றுத்தி தமிழகத்தில் காங் கிரஸ் ஆட்சி என 1989-ல் ராஜீவ்காந்தி மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. தற்போது, காங்கிரசில் செல்வாக்குமிக்க தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆட்சி என்ற ராகுலின் திட்டம் நிறை வேறுவது கடினமானது. இரண்டு திராவிட கட்சி களைத் தாண்டி வேறெதை யும் ஆட்சியில் அமர்த்தும் மனநிலை தமிழக வாக் காளர்களிடம் இன்னும் வளரவில்லை. மூன்றாவது கட்சியைத் தேடும் மனநிலையில் உள்ளவர்களிடம் தே.மு.தி.க.வுக்கு உள்ள செல்வாக்குகூட காங்கிரசுக்கு இல்லை. இந்தநிலையில், காங்கிரசின் பாரம்பரிய வாக்குகளைக் காப்பாற்றி, புதிய வாக்காளர்களைக் கவர்ந்து, கீழ்மட்டத்திலிருந்து கட்சிக்குப் புத்துயிர் அளிக்கும் ராகுல் ஃபார்முலா முழுமையாக வெற்றிபெற்று, கட்சி பலமடைந்து ஆட்சியைப் பிடிப்பதென்பது பகீரத முயற்சியாகும். திராவிட கட்சிகளைக் கடந்து காங்கிரசை வளர்த்து, ஆட்சியில் அமர்த்துவதென்பது அடுத்த 5 ஆண்டுகளில் நடைபெறுவதற் கான நடைமுறை சாத்தியம் இல்லை. அதன் பிறகு, தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தும், அவற்றை காங்கிரஸ் எப்படி கையாளப் போ கிறது என்பதைப் பொறுத்துமே சாத்திய மாகும்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சேவல் சூதாட்டத்தில் சிக்கிக் கொண்ட ஆளுங்கட்சி பிரமுகர்!

கோவை அன்னூரை யடுத்த பொங்கலூரில் உள்ள கந்தசாமி நாயக்கர் தோட்டத்தில் சேவல் சண்டை யில் லட்சக்கணக்கில் வைத்து சூதாட்டம் நடத்துவதாக வந்த தகவலின்படி அன்னூர் இன்ஸ்பெக்டர் ஜெயச் சந்திரன், எஸ்.ஐ.வெங்கடாச்சலம் தலைமையிலான டீம் தோட்டத்திற்குள் நுழைந்தது. பணம் வைத்து விளையாடிக் கொண்டிருந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் சேவல் களைத் தூக்கிக்கொண்டு எஸ்கேப்பாகிவிட்டாலும்...

28 பேரை கைது செய்த போலீஸ் அவர்களில் சிலரிடமிருந்து 2 லட்சத்து 37 ஆயிரத்து 950 ரூபாயை பறிமுதல் செய்ததோடு 24 கார்கள், 25 டூவீலர்களையும் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றியிருக்கிறது அன்னூர் போலீஸ்.

தப்பித்துப் போனவர்களில் முக்கிய தி.மு.க. பிரமுகர் ஒருவர் சேவல் சண்டை நடக்குமிடத்தில் இருந்த தாகவும், அவரின் காரும் போலீஸால் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் வர... நாம் நம் அன்னூர் போலீஸ் சோர்ஸ்களிடம் பேசினோம். ""இந்தப் பகுதிகளில் சேவல் சண்டை சூதாட்டத்தை நடத்தி லட்சக்கணக்கில் பணம் பார்ப்பது தி.மு.க.வின் கோவை மாநகர து.செய லாளரும், மாவட்ட ஊராட்சிகளின் து.தலைவரும், அவினாசி தொகுதியின் மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ. இளங்கோ மகனுமான ஆனந்தன்தான். இவருக்கு தொண்டாமுத்தூர் தி.மு.க. ஒன்றிய து.செ. சாமி பையன், உருமாண் டாம்பாளையம் பாலு போன்றவர்கள் துணையாக நிற்பார்கள்.

ஆனந்தனுக்கு லோக்கல் அமைச்சரின் ஆதரவுக்கரம் எப்போதும் நீளும். அதனால் அவரை நாங்கள் நெருங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தோம்.

இம்முறை சேவல் சண்டை நடக்கும் இடத்திற்கு நாங்கள் ரெய்டு போன போது ஆனந்தன் வசமாக மாட்டிக் கொண்டார். ஆனந்தன் ஒரு காரில் ஏற முயற்சிக்கும் போது எஸ்.ஐ.வெங்கடாச் சலம் அந்த காருக்கு முன்னால் கற்களைத் தூக்கி வீசினார்.

என்ன செய்வதென்று தெரியாமல் அந்த களேபரத்தில் கட்டுப் பணத்தோடு காரை விட்டு இறங்கி ஓடி விட்டார் ஆனந்தன். அந்தக் கார் ஃபோர்டு பீஸ்டா டி.என்.37 ஏ.எக்ஸ்.9999. ஆனந்தன் எங்களிடம் பிடிபடாமல் போனதால் பிடிபட்ட கார் அவருடையதுதானா? என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது'' என்கிறார்கள் சோர்வாய்.

இதுகுறித்து தி.மு.க. மாநகர துணைச் செயலாளரான ஆனந்தனிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்... ""நான் அந்தப் பொங்கலூர் பகுதிப் பக்கமே போனதில்லை. இதுமாதிரி சேவல் சண்டைகள் எல்லாம் காட்டம்பட்டி ஆனந்தன் என்பவர்தான் நடத்திக் கொண்டிருப்பார். அவர்தான் அன்று அங்கே இருந்திருக்கிறார்.

ஃபோர்டு பீஸ்டா டி.என்.37 ஏ.எக்ஸ்.9999 என்ற கார் என்னுடையதேயில்லை. நான் எப்பவும் என்னுடைய இன்னோவா காரைத்தான் உபயோகப்படுத்துவேன். யாரோ இந்தக் கார் என்னுடையது என்று தவறாக செய்தி பரப்புகிறார்கள்'' என்றார் கோபமாய்.

ஆனால் உண்மையிலேயே அந்த கார் யாருடையது என்று தெரிந்து கொள்ள ஆர்.டி.ஓ. ஆபீஸில் உள்ள நம் சோர்ஸ்களிடம் ஃபோர்டு பீஸ்டா கார் நம்பரைக் கொடுத்துக் கேட்டோம்... நம் சோர்ஸ்களோ... "எழுதிக் கொள்ளுங்கள்... இ.ஆனந் தன், த/பெ.இளங்கோ, 550, ஒயிட் பில்டிங், ஆர்.எஸ்.புரம், கோவை-641 001' என்ற முகவரி தந்து ஆனந்தனின் பொய்க் கூற்றை சரி செய்து கொடுத்தார்கள்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வேதனையில் முடிந்த சோதனை!

1.jpg
தீபாவளிக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல... நாடு முழுவதுமே தீபாவளியின் தாக்கம் என்பது தெரிந்த சேதிதான். வழக்கம் போலவே, இப்பண்டிகையை மக்கள் எதிர்கொள்ள பட்டாசு தயாரிப்பில் படு பிஸியாக இருக்கின்றன சிவகாசியும் அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களும். அப்படி ஒரு கிராமமான துரைச்சாமிபுரத்திலிருந்து...

"அடக் கொடுமையே... அரசு அனுமதி பெறாமல் வீடுகளில் கள்ளத்தனமாக பட்டாசு தயாரிக்கும் கிராமங்களில் ரெய்டுக்குப் போன அதிகாரிகள் 8 பேர் வெடி விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார் கள். சோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்யும் அதிகாரிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்று திட்டமிட்டே தீவைத்து விபத்தை உண்டாக்கியிருக்கிறார்கள்' என காட்டுத் தீயாய் முதலில் பரவிய இந்தத் தகவல் விருதுநகர் மாவட்டத்தையே உலுக்க... சம்பவ இடமான சாத்தூர்-தாயிப்பட்டி அருகிலுள்ள வீ.துரைச்சாமிபுரத்துக்கு விரைந் தோம். "துவம்சம் செய்து விடுவார்கள் காக்கிகள்...' என்ற பயத்தில் எங்கும் புகைமயமாக மயான அமைதி அங்கு நிலவ... பக்கத்து கிராமமான மீனாட்சிபுரத்தில்தான் ஒரு சிலரைப் பார்க்க முடிந்தது.

""ஏதோ வயித்துப் பொழப்புக்காக இந்தத் தொழில செய்யறோம். அதுக்காக, அதிகாரிகளத் தீ வச்சுக் கொளுத்துற அளவுக்கு நாங்க மோசமானவங்க இல்ல...'' என்று பதற்றத்தோடு விவரிக்க ஆரம்பித்தார்கள்-

""இங்கே மீனாட்சிபுரம், துரைச்சாமிபுரம், ராமலிங்காபுரம் இன்னொரு மீனாட்சிபுரம்னு பல கிராமங்கள்ல திரி தயாரிக்கிறாங்க. விஜயகரிசல்குளம், கனஞ்சாம்பட்டி, கலைஞர் காலனி, எஸ்.பி.எம். தெரு, கோட்டையூர்ன்னு இன்னும் சில கிராமங்கள்ல வீடுகள்லயும், தோட்டத்துலயும் வச்சு பட்டாசு தயாரிக்கிறாங்க. இன்னைக்கு நேத்து இல்ல. காலம் காலமா இதுதான் எங்களுக்குத் தொழில்.

இங்க மட்டுமில்ல... விருதுநகர் மாவட்டத்துல உள்ள பல கிராமங்கள்ல இதுதான் நடக்கு. அந்த அளவுக்கு இந்தத் தொழில வளர்த்துவிட்டவங்க அரசியல்வாதி களும் அதிகாரிகளும்தான். எங்க மேல சீரியஸா நடவடிக்கை எடுத்தா அப்ப ஆட்சில இருக்குற கட்சிக்கு சுத்தமா ஒத்த ஓட்டு விழாது. அதனால, மறைமுகமா அரசியல் வாதிங்களோட சப்போர்ட் எங்களுக்கு எப்பவும் உண்டு. இந்த அதிகாரிங்க, குறிப்பா வெம்பக்கோட்டை போலீஸ்காரங்க மாசா மாசம் வந்து வீட்டுக்கு 200 ரூபாய் மாமூல் வாங்கிட்டு போவாங்க. அப்புறம் பெட்ரோல் செலவு, அது இதுன்னு வந்து வீட்டு வாசல்ல நிப்பாங்க. இந்த விசுவாசத்துல ரெய்டுக்கு வர்றதுக்கு முன்னாலேயே எங்களுக்குத் தகவல் சொல்லிருவாங்க. நாங்களும் வேஸ்ட் வெடிகள அங்க இங்க போட்டுட்டு ஓடிருவோம். அவங்களும் வந்து அத அள்ளிட்டுப் போயி, பல லட்சம் பெறுமான கள்ள வெடிகளைக் கைப்பற்றியதா கணக்கு காட்டிடுவாங்க.

இந்த நடைமுறைக்கு மாறா இப்ப நடந்துருச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னால இங்கே கோதைநாச்சியார் புரத்துல அரவிந்த்ன்னு எட்டு வயசு சின்னப்பய, வீட்டுல இருந்த வெடிக் குவியலப் பத்த வைக்க, அது வெடிச்சு செத்துப் போனான். ஸ்டவ் வெடிச்சு அவன் செத்ததா ரெக் கார்டு பண்ண நெனைச் சாங்க. ஆனா, அது முடி யாம... ட்ரீட்மெண்ட் டுக்குப் போன இடத்துல ஆஸ்பத்திரிக்காரங்க சொல்லி விஷயம் மேலதி காரிக்கு தெரிஞ்சிருச்சு.

உடனே, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எங்க மாவட்ட அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர்., கலெக்டர் சண்முகம்னு எல்லாரும் உட் கார்ந்து மீட்டிங் போட்டு சோதனையைக் கடுமையாக்கி கள்ளவெடி தயாரிக்க விடாம பண்ணுனாங்க. ஆனாலும், வெம்பக்கோட்டை போலீசார் எங்களுக்கு அனுசரணையா இருக்குறது தெரிஞ்சு, அவங்களுக்குத் தெரியாமலேயே திடீர் சோதனை நடத்த வந்தப்பதான் இது நடந்து போச்சு.

ஆமாங்கய்யா... வந்த அதிகாரிகளுக்கு கருந்திரியப் பத்தி என்ன தெரியும்? பெரிய பெரிய பட்டாசு ஃபேக்டரியிலயே கருந்திரி கழிவுகளை அழிக்கணும்னா, ஃபேக்டரிய விட்டு அரை கிலோமீட்டர் தள்ளி, ஒத்தத் திரிய மட்டும் பிரிச்சு 300 மீட்டர் கொண்டு போயித்தான் - அதுவும் போர்மேனே வச்சுக் கொளுத்திட்டு ஓடிருவாங்க. அப்படி ஒரு டேஞ்சரான கருந்திரிக் குவியல்ல, இங்க சோதனைக்கு வந்தவங்க, ஏதோ குத்துவிளக்கு ஏத்துறமாதிரி சாதாரணமா பத்த வச்சுட்டாங்க. திரில தண்ணி ஊத்தி அத நமுத்துப் போகச் செய்யறதுதான் சரியானது. அத விட்டுட்டு, "இது சாதாரண திரிதான்... கொளுத்திட்டா புசுபுசுன்னு எரிஞ்சு சாம்பலாயிடும்'னு ஒருத்தரு சொல்ல... அப்படின்னா எரிச்சிடுங்கன்னு ஆர்.டி.ஓ. உத்தரவு போட, சுத்தி நின்னு பத்த வச்சவங்களே விபத்துல சிக்க வேண்டியதாப் போச்சு. இனிமே நாங்க என்னத்த தொழில் பண்ணுறது? இந்த வருஷம் சோக தீபாவளிதான்'' என்றார்கள் வருத்தத்தோடு.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் பேசியபோது ""வெம்பக்கோட்டை காவல்நிலையம் குறித்து புகார் எழுந்ததால்தான், அவர்களுக்குத் தெரி யாமலே சோதனைக்குப் போனார்கள் அலுவலர்கள். ஆர்.டி.ஓ. சொல்லுறத வச்சுப் பார்க்கும்போது, உராய்வில்தான் தீப்பற்றியிருக்க வேண்டும். வழக்கமாக இதுபோன்ற விபத்துக்கள் நடக்கும் போது சம்பந்தப் பட்ட தொழிலாளர்கள்தான் பலியாவார்கள். இங்கோ வி.ஏ.ஓ. குமார சாமி பலியாகிவிட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆர்.ஐ., போலீஸ் காரர்கள்ன்னு இன்னும் 7 பேரு உடலெல்லாம் கருகித் துடிக்கிறத ஆஸ் பத்திரில பார்த்துட்டு...'' வார்த்தையை முடிக்க முடியாமல் கலங்கினார்.

அரசாங்கத்துக்கே ஒரு சவாலாக பட்டாசு தயாரிப்பில் கள்ளத்தன மாக ஈடுபடுவோர் குறித்து "இதுவும் தீவிரவாதம் தான்...', "தேசத்துக்கே திரி வைக்கிறார்கள்' என்னும் தலைப்புகளில் இந்த விதிமீறல்கள் குறித்து ஏற்கனவே எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது நக்கீரன். உரிய விதத்தில் நடவடிக்கை எடுக்காததன் விளைவை அரசு அலுவலர்களே சந்திக்க நேரிட்டது கொடுமையிலும் கொடுமை.

ஒவ்வொரு பட்டாசிலும் திரியைப் பற்ற வைப்பதற்கு முன் "இதைத் தயாரிக்க எந்தத் தொழிலாளியின் உயிர் போனதோ?' என ஒரு நொடி சிந்தித்தாலே போதும்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இதுவா ஜனநாயகம்? -மிரட்டிய விளம்பரமும் வெளியான செய்தியும்!

1.jpg

"ஜூனியர் விகடன் இதழை எதிர்த்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குக்கு சவால் விடும் மிகப்பெரும் போராட்டத்தை எங்கள் இயக்கம் நடத்தும்!' -தமிழ்நாடு இல்லத்துப் பிள்ளைமார் மாநில சங்கத்தின் தலைவர் வி.பி.எம்.சங்கர் பெயரில் வெளிவந்த இந்த விளம்பரத்தைப் பார்த்து... கருத்து சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் அத்தனை பேரும் கொந்தளித் தார்கள். 

இதை கண்டித்து சென்னைப் பத்திரிகையாளர் சங்கம், சென்னை பத்திரி கையாளர் மன்றம் உள்ளிட்ட பத்திரிகை யாளர் அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. விளம்பரம் வெளியான அன்றைய தினமே சென்னை பத்திரி கையாளர் மன்றத்தில் அவசரக் கூட்டம் ஒன்றும் கூட்டப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு எதிரான வெளிப்படையான மிரட்டல் சவால்களை எதிர்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்ட அந்தக் கூட்டமே பிறகு கண்டனக் கூட்டமாகவும் மாறியது. 

மிரட்டல் விளம் பரம் கொடுப்பது, பணி யாற்றும் ஊழியர்களின் பெயரைக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டுவது, தொலைபேசியில் அச்சுறுத்தி வருவது உள்ளிட்ட ஜனநாயக விரோதச் செயலை கண்டிப்பதோடு, பத்திரி கையாளர்கள் உயிருக்கும், உடை மைக்கும் அச்சுறுத்தல் ஏற் பட்டுள்ள சூழ்நிலையை சென்னை உயர்நீதிமன்ற கவனத்துக்கு கொண்டுசென்று உரிய பாது காப்புக்கான உத்தரவை பெறுவது, பகிரங்க அச்சுறுத்தல் கொடுத்த தனி நபர்கள், சங்கங்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட 8 தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் பத்திரிகையாளர்கள். 

கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த ஜூனியர் விகடன் ஆசிரியர் அசோகன் பத்திரிகை யாளர்களிடம் பேசியபோது, ""சட்டம்-ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத் துக்கு முன்பு1.jpgநடத்தப்போவதாக வெளியான விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட செய்தியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இப்படிப்பட்ட விளம்பரங்கள் கொடுப்பது இந்திய தேசத்தின் அரசமைப்பு சட்டத்துக்கும், அடிப்படை கருத்துரிமைக்கும் எதிரானது மட்டுமல்ல -பத்திரிகையாளர்கள் அத்தனை பேருக்கும் விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே அமைந்துள் ளது. யூகத்தின் அடிப்படையில் சில நிருபர்கள் பெயரைக் குறிப்பிட்டு மதுரை முழுக்க 10-க்கும் மேற்பட்ட வகையிலான போஸ்டர்களை ஒட்டி யிருப்பதன் மூலம் அவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படக் காரணமாகியுள்ளனர். தொலைபேசி வழியாகவும் முகம் தெரியாத மனிதர்களின் அச்சுறுத்தலும் தொடர்கிறது. இது பற்றி டி.ஜி.பி., சென்னை கமிஷனர் ஆகியோரிடம் முறைப்படி தெரிவித்திருக்கிறோம். ஜூ.வி. அலுவலக ஊழியர்களின் பாதுகாப்புக்கும், அலுவலகத்தின் அச்சமற்ற செயல்பாட்டுக்கும் வழி ஏற்படுத்த வேண்டி தமிழக முதல்வரிடம் மனு அளிக்க இருக்கிறோம்''’என்றதோடு, குறிப்பிட்ட அந்த செய்தி தொடர்பாக சட்டரீதியாக விடுக்கப்படும் சவால்களை சந்திக்க தயாராகவே இருக்கிறோம்''’என்றார் அழுத்தமாக. 

மிஸ்டர் கழுகு என்ற பகுதியில், ’மடக்கப்பட்ட மதுரை திலகம்’என்ற தலைப்பில் அவதூறான செய்தி வெளி யிடப்பட்டதாக குறிப்பிட்டது கண்டனத்துக்குரிய அந்த விளம்பரம். குறிப்பிடும் அந்த செய்தி என்ன?

""பேரென்ன ஊரென்ன என்றெல்லாம் குறுக்குக் கேள்வி கேட்கக் கூடாது. அமைச்சர்கள் தொடங்கி போலீஸ் வட்டாரம் வரை, இந்த விவகாரம்தான் இப்போது பெரிதாக பேசப்படுகிறது. மூத்த புள்ளிக்கு முழுநேர உடன்பிறப்பாக இருக்கும் குங்குமப் புள்ளியை போலீஸ் வகையாகக் கவனித்த கதைதான் அது. அமைச்சர் ஒருவர் கடந்த வாரம் அந்தக் குங்குமப் புள்ளிக்கு போன் போட்டிருக்கிறார். உடனடியாக சென்னைக்கு வாருங்கள் என்று’ அமைச்சர் அழைக்க, சரி எனத் தலையாட்டிய குங்குமப் புள்ளி சட்டென உஷாராகிவிட்டாராம். ‘நான் வரமுடியாது’ என அமைச்சரிடம் தடாலடியாக மறுத்திருக்கிறார். அடுத்தநாள் காலையில் முதல்வருக்கு நிழலான அதிகாரியிடம் இருந்து குங்குமப் புள்ளிக்கு போன் போயிருக்கிறது. அதி உயர்வான ஒரு பெயரைத் துணைக்கு அழைத்தவர், ‘அவருடைய ஆர்டர்... சீக்கிரம் வந்து சேருங்க’ எனச் சொல்லப்பட, தனது ‘சூப்பர்’ நண்பருடன் சென்னைக்கு வந்திருக்கிறார் குங்குமப் புள்ளி. ‘சூப்பரை’ வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, குங்குமத்தை தனி அறைக்கு கூட்டிக்கொண்டு போனது கட்டுமஸ்தான ஒரு டீம். இதை போலீஸ் என்கிறார்கள் சிலர், இல்லை போலீஸ் மாதிரி என்கிறார்கள் இன்னொரு சிலர். உள்ளே தரப்பட்ட பிரசாதத்தில் வெலவெலத்துப்போன குங்குமம், ‘அண்ணனுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியும்ல...’ எனக் குமுற, ‘அவர் சொல்லித்தான் பூசை..’ என வரி வரியாகப் போட்டு அனுப்பினார்களாம்'' என்று போகிறது அந்த செய்தி.

குங்குமப் புள்ளி என்று தன்னைத்தான் குறிப்பிடுகிறார்கள் என மு.க.அழகிரிக்கு நெருக்கமாக இருக்கும் சுரேஷ் பாபு ஜூ.வி.க்கு எதிராக மதுரை ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜராகி கிரிமினல் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சுரேஷ்பாபு, “""குங்குமப்புள்ளி என்று அவர்கள் குறிப்பிடுவது என்னைத்தான். அவர்கள் குறிப்பிடுவது போன்ற சம்பவமே நடக்கவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் நிரூபிக்கட்டும். அதை விட்டு ஆதாரமில்லாத செய்தியை வெளியிட்டு என்னையும், மத்திய அமைச்சரையும் கொச்சைப்படுத்துவது எப்படி பத்திரிகை தர்மம் ஆகும். நீங்கள்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்று என்னிடம் விசாரித்தீர்களே? அவர்களின் செய்தியால் எனக்கு கடுமையான மன உளைச்சல் ஏற் பட்டிருக்கிறது. எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாக 10 கோடி ரூபாய் தரவேண்டும் என்று கிரிமினல் வழக்கு போட்டிருக்கிறேன்''’என்றார். 

சுரேஷ்பாபு தொடர்ந்திருக்கும் கிரிமினல் வழக்கில் விகடன் நிறு வனத்தை சேர்ந்த 7 பேர் பெயரைக் கொடுத்திருப்பதால் அவர்களுக்கு முன் ஜாமீன் உள்ளிட்ட சட்ட பாது காப்புக்கான வேலைகளை செய்து வருகிறார்கள். 

பத்திரிகை விளம்பரத்தை பார்த்து டென்ஷனான முதல்வரும் சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக கண்டித்திருக்கிறார். இதை ஒட்டி தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் விளம்பரம் கொடுத்த வி.பி.எம். சங்கர். 

ஜனநாயக நாட்டில் சட்ட ரீதியாக எதையும் சந்திப்பது மட்டுமே நியாயமான செயலாக இருக்கும்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இளம்பெண் படுகொலை: பாதுகாப்பாற்ற நிலையில் அரசு பள்ளிக்கூடம் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அட்டூழியம்
சென்னை, ஆக. 17-
இளம்பெண் படுகொலை: பாதுகாப்பாற்ற நிலையில்    அரசு பள்ளிக்கூடம்    இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அட்டூழியம்சைதாப்பேட்டை அரசு பள்ளி வளாகத்தில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.இரவு நேரத்தில் சமூக விரோதிகள் எளிதில் புகுந்து விடுவதால் பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடப்பதாக ஆசிரியர்கள் புகார் கூறுகிறார்கள்.
இந்த பள்ளிக்குள் செல்ல 3 வாசல்கள் உள்ளன. இரவு நேரத்தில் இந்த வாசல்களை மூடி விடுவார்கள். பள்ளிக்கு பின் பகுதியில் பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை ஒட்டியுள்ள காம்பவுண்டு சுவரில் மிகப்பெரிய துவாரம் உள்ளது. மேலும் ஒரு கார் உள்ளே வரும் அளவுக்கு காம்பவுண்டு சுவர் இடிக்கப்பட்டுள்ளது.
இதன் வழியாக சமூக விரோதிகள் இரவு நேரத்தில் உள்ளே சென்று பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, மது அருந்துவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.
பள்ளி வளாகம் முழுக்க காலி மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் சிதறி கிடக்கின்றன.
பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருப்பவர்களும் அவசரம் என்றால் அந்த துவாரம் வழியாக உள்ளே சென்று இயற்கை உபாதைகளை தணித்து கொள்வார்கள்.
பள்ளி நிர்வாகம் சார்பில் பலமுறை அந்த துவாரத்தை அடைத்துள்ளார்கள். அதை இரவோடு இரவாக இடித்து விடுகிறார்கள்.
இந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நீண்ட நாட்களாக கஞ்சா விற்று வருகிறார். இவரது தொழில் நண்பர்கள் பள்ளி வளாகத்தில் வைத்து கஞ்சா பொட்டலங்களையும் விற்பனை செய்கிறார்கள்.
மேலும் கழிவறை கதவுகள், பல்புகள், மின் வயர்கள் ஆகியவற்றை இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சேதப்படுத்தி விடுகிறார்கள்.
கடந்த ஒரே மாதத்தில் 6 முறை பள்ளியில் கதவு, வயர், நாற்காலிகள் திருட்டு போய் உள்ளது. இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசில் பல முறை புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது வரை யாரும் கைது செய்யப்பட்டதில்லை.
இங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறும்போது, பணி முடிந்து மாலையில் சென்று விடுகிறோம். இரவில் இங்கு என்ன நடந்தாலும் கேட்க ஆளில்லை. மறுநாள் நாங்கள் வரும்போது சேர் இருந்தால்தான் உண்டு. இல்லையென்றால் நாங்கள் தரையில்தான் அமர வேண்டும் என்றனர்.
இந்த பள்ளியில் மாணவர்களும், மாணவிகளும் சேர்ந்து படிக்கிறார்கள். பள்ளி வளாகத்தில் கிடக்கும் மதுபாட்டில்கள், ஆணுறைகளை பார்த்து முகம் சுளிக்கிறார்கள்.
இந்த பள்ளியை சீரமைத்து பாதுகாப்பான இடமாக மாற்றி தர வேண்டும் என்று ஆசிரியர்களும், மாணவர்களும் குமுறுகிறார்கள்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கோயில் நிலத்தில் கொள்ளை போகும் மரங்கள்

First Published : 17 Aug 2010 02:28:00 AM IST

16forest.jpg
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள அரிய வகை மரங்களை சிலர் சிறிதுசிறிதாக வெட்டி எடுத்துச் செல்கின்றனர்.

அண்ணாமலையார் கோயிலுக்குப் பல இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. இவற்றை அறநிலையத்துறை பராமரித்து வருகிறது.

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் சாலையில் கோயிலுக்குச் சொந்தமான அஷ்டலிங்க கோயில்கள், நேர் அண்ணாமலை கோயில் ஆகியவை உள்ளன.

தனியார் திருமண மண்டபம் அருகே சாலையின் இருபுறமும் கோயிலுக்குச் சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. வனப்பகுதி போல் காட்சி தரும் இந்த நிலப்பரப்பில் சந்தனம், கருங்காலி, புளி, மா, கருவேலம் போன்ற மரங்கள் வளர்கின்றன.

இப்பகுதியில் மான்கள் உள்பட வனவிலங்குகளும் வாழ்கின்றன. இப்பகுதியைப் பாதுகாக்க கோயில் சார்பில் பாதுகாவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் யாரோ சிலர் மரங்களைச் சிறிது சிறிதாக வெட்டி எடுத்துச் செல்வதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகின்றனர்.மரங்கள் திருடுபோவது கோயில் நிர்வாகத்துக்குத் தெரியவரவில்லை. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது:

கால்நடைகளை மேய்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர்களில் சிலர் மரங்களை வெட்டி எடுத்துச் செல்வதாகத் தெரிகிறது.

கோயில் நிர்வாகத்தினர் முழு கவனம் செலுத்தி இப்பகுதியைக் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க முடியும் என்றனர்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தனியார் திருமண மண்டபம் அருகே அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலப்பகுதியில் மர்ம கும்பலால் வெட்டப்பட்டுள்ள மரங்கள்



-- Edited by devapriyaji on Tuesday 17th of August 2010 07:07:15 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_08_2010_005_020-agasthiwarar.jpg?w=630&h=324

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !!

குமுதமும்  கலைஞருக்கு
சொந்தமாகி விட்டது !!

கடந்த 3 மாதங்களாக குமுதம் பக்கத்திலிருந்து
ஒரே கலைஞர் ஜால்ரா சப்தமாக இருந்ததை குமுதம்
வாசகர்கள்  கவனித்திருக்கலாம்.

கலைஞரை  விமரிசித்து எழுதக்கூடாது என்று
குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதி வந்த எழுத்தாளர்
ஞானி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்துள்ளார்.

இதோ  அவரது வாரத்தைகளில் – குமுதம்
ஆசிரியருக்கு அவர் எழுதிய  கடிதத்தின் சாரம் -
————-
“தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக என்
ஓ பக்கங்கள் கட்டுரையில் தங்கள் அலுவலகத்தின்
குறுக்கீடு என் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதாக அமைந்துள்ளது.  தி.மு.க, ஆட்சி,
அதன் தலைவர், அவரது குடும்பத்தினர் சார்ந்த
பொது வாழ்க்கை விஷயங்கள் பற்றியெல்லாம்
விமர்சனங்கள் செய்யவேண்டாம் என்று
வேண்டுகோள் தொடர்ந்து என்னிடம் வைக்கப்பட்டது.

இன்றும் என் கட்டுரையில் காமராஜர் நினைவிடத்தில் அணையாவிளக்கு வைப்பதாக முதல்வர் அறிவித்தது
பற்றி நான் எழுதிய விமர்சனம் நீக்கப்படுவதாக் தெரிவித்திருக்கிறீர்கள்.”

——————-
இதையடுத்து எழுத்தாளர்  ஞானி குமுதத்தில்
எழுதுவதை நிறுத்திக்கொண்டுள்ளார்.

குமுதத்திற்கு கலைஞரை குஷிப்படுத்தவேண்டிய
அவசியம் என்ன  என்று கேள்வி எழலாம்.


மே மாதம் இதே  விமரிசனம் வலைத்தளத்தில் –

“குமுதத்தில்  நடப்பது  பாவத்திற்கு கூலி
கொடுக்கும் படலம் – முதல்வர் இதில்
தலையிட வேண்டிய  அவசியமென்ன  ?”

என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள இடுகை
இந்த  வினாவிற்கான விடையை அளிக்கும்.

—————————-
படிப்பவர் வசதிக்காக அந்த இடுகையின்
நகலை மீண்டும் கீழே தந்துள்ளேன்.

குமுதத்தில்  நடப்பது  பாவத்திற்கு கூலி
கொடுக்கும் படலம் – முதல்வர் இதில்
தலையிட வேண்டிய  அவசியமென்ன  ?

லட்சக்கணக்கான   தமிழர்களை முட்டாளாக்கும்
விதத்தில் பத்திரிகை   நடத்தி,  போலி
சாமியார்களின் ஏஜெண்டுகளாகவும்,
நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை
பரபரப்பாக்கி  பத்திரிகை   விற்பனையை  உயர்த்தியும்
தமிழ்ப் பண்பாட்டையே  நாசமாக்கும்
விதத்தில்  செயல்படும்   பத்திரிகை   குமுதம்,

இந்த  பத்திரிகை  பங்காளிகளுக்குள்  இப்போது
ஒரு   மோதல்,
சமுதாயத்துக்கோ,  அரசாங்கத்துக்கோ   இதில்
எந்தவித சம்பந்தமும்  இல்லை.  இரண்டு
மோசடிப்  பங்காளிகளுக்குள்
ஏற்பட்ட மோதலை   அடுத்து   ஒருவர்  மீது
ஒருவர்   புகார் கூறிக் கொள்ளுகிறார்கள்.

அவர்கள்  செய்த  பாவத்தின்  விளைவு   இது.
அவர்கள்   தற்போது   கொடுத்துக்கொண்டிருப்பது
பாவத்திற்கான  கூலி.

இன்று  வெளியாகியுள்ள    கீழ் காணும்
செய்தியை   பாருங்கள்  !

செய்தி -

லாபத்தி்ல் இயங்கும் குமுதத்தை நஷ்டக் கணக்கு
காட்டி பல கோடி நிதி மோசடி செய்ததாகவும்,
நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும்
வரதராஜன் மீது ஜவஹர் பழனியப்பன் கொடுத்த
புகாரின் அடிப்படையில் வரதராஜன்
சில நாட்களுக்கு முன் கைது
செய்யப்பட்டார்.

அவர் மீது 323, 341, 342, 344, 365, 307, 25 (1) ஆகிய
பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்ட
வரதராஜன், சில மணி நேர விசாரணைக்குப் பின்
நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் நிறுவனத்தின் நிதியை தனது சொந்த
காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தியுள்ளார்
என்றும், தனது ஊதியத்தை பல மடங்கு
உயர்த்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு
கூறியள்ளார் ஜவஹர் பழனியப்பன்.

இந் நிலையில் இவர்களிடையிலான
பிரச்சனையைத் தீர்க்க சமரசக்குழுவை
அமைப்பதாக முதல்வர் கருணாநிதி
அறிவித்துள்ளார்.

————————————————————–
குமுதத்தில்  நடப்பது  பாவத்திற்கு கூலி
கொடுக்கும் படலம் – முதல்வர் இதில்
தலையிட வேண்டிய  அவசியமென்ன  ?
கோடிக்கணக்கான  பணம்  மோசடி
செய்யப்பட்டுள்ளதாகவும்,   ஏமாற்றப்பட்டு
விட்டதாகவும்   ஒருவர்   புகார்   கொடுக்கும்போது
அதில்  உள்ள   உண்மையை   நீதிமன்றம்
விசாரிப்பது   தானே   நேர்மையான  முறையாக
இருக்கும் ? இதில்   முதல்வர்   அவசர அவசரமாக
தலையிட  வேண்டிய  அவசியம்   என்ன ?
முதல்வராக   இருப்பவர்   கட்டை பஞ்சாயத்து
செய்வது  போல்  செயல்படலாமா ?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

புதிய சலுகைகள்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கருணாநிதி அறிவிப்பு

புதிய சலுகைகள்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கருணாநிதி அறிவிப்பு
சென்னை, ஆக. 17-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2006 ஆம் ஆண்டு இந்த அரசு பதவியேற்றபின் டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனைப் பிரிவு பணியாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இவர்களுக்கு 2007 ஜூலை மாதம் மற்றும் 2009 ஆகஸ்ட் மாதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இவ்விரு ஊதிய உயர்வுகள் மூலம் மாதம் ஒன்றுக்கு ஏற்கெனவே பெற்று வந்ததைவிட மேற்பார் வையாளர்கள் ரூபாய் 1000, விற்பனையாளர்கள் ரூபாய் 800 மற்றும் மதுக்கூட உதவியாளர்கள் ரூபாய் 600 கூடுதலாகப் பெற்று வருகிறார்கள்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் 10 சதவீதமாக வழங்கப்பட்ட போனஸ் மற்றும் கருணைத் தொகையை இந்த அரசு 20 சதவீதமாக உயர்த்தி கடந்த மூன்று வருடங்களாக வழங்கி வருகிறது.
பணியாளர்களிடமிருந்து பெறப்பட்ட காப்புத்தொகைக்கு முந்தைய ஆட்சியில் வட்டி ஏதும் வழங்கப்படவில்லை. இந்த அரசால் 3.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.
முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைமுறையிலிருந்த ஊக்கத் தொகைத் திட்டம், இந்த ஆட்சியில் அனைத்துப் பணியாளர்களும் பயன் பெறும் வகையில் மாற் றியமைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆட்சியில் தான் முதல் முறையாக மேற்பார்வையாளர்களுக்கு மாதாந்திரப் பயணப்படி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆட்சிக்காலத்தில் தான் பணியாளர் இறக்க நேரிட்டால் குடும்ப நல நிதியிலிருந்து வழங்கப்படும் தொகை ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தஉண்மைநிலையை அறிந்திருந்த போதிலும், அரசியல் காரணங்களுக் காகவும், நிர்ப் பந்தங்களுக் காகவும், சில தொழிற் சங்கங்கள் அறிவித்த ஒருநாள் வேலை நிறுத்தத்தில் மிகக் குறைந்த எண்ணிக் கையிலான பணியாளர்களே பங்கேற்றனர்.
தொழிலாளர் நலனில் என்றென்றும் அக்கறை கொண்டுள்ள முதல்- அமைச்சர் கருணாநிதி டாஸ்மாக் பணியாளர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாகப் பல சலுகைகளை தானாகவே முன்வந்து வழங்கியதைப்போல, பின்வரும் சலுகைகளை தற்போது வழங்கி ஆணையிட்டுள்ளார். அவையாவன:-
மேற்பார்வையாளர்களின் மாத தொகுப்பு ஊதியம் ரூபாய் 4000- லிருந்து 4500 ஆகவும், விற்பனையாளர்களின் தொகுப்பு ஊதியம் ரூபாய் 2800-லிருந்து 3200 ஆகவும், மதுக்கூட உதவியாளர்களின் தொகுப்பு ஊதியம் ரூபாய் 2100-லிருந்து 2400-ஆகவும் உயர்த்தப்படும். இதனால் 30,000 பணியாளர்கள் பயன்பெறுவர்.
டாஸ்மாக் பணியாளர் களின்காப்புத் தொகைக்கான வட்டி 3.5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் வருடம் ஒன்றிற்கு மேற்பார்வையாளர்கள் ரூபாய் 1250, விற்பனையாளர்கள் ரூபாய் 375, மதுக்கூட உதவியாளர்கள் ரூபாய் 250 கூடுதலாகப் பெற்று பயனடைவர்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை 1.5 சதவீதத்திலிருந்து 1.75 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
காலி அட்டைப்பெட்டி சேதத்திற்கான இழப்பை பணியாளர்கள் மீது சாட்டப்படுவதற்குப் பதிலாக நிர்வாகமே ஏற்கும்
மதுபான விற்பனைக்குப்பின் கடைகளில் தேங்கும் காலி அட்டைப்பெட்டிகள் பணியாளர்களால் ஒப்பந்த தாரர்களுக்கு விற்கப்படுகிறது. இந்த அட்டைப் பெட்டிகளில் ஏற்படும் சேதம் சுமார் 2.5 சதவீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அது தற்போது பணியாளர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப்படுகிறது. இனி அட்டைப் பெட்டிகள் சேதத்தினால் ஏற்படும் இழப்பை நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். இச்சலுகைகள் 1.9.2010 முதல் நடைமுறைக்கு வரும்.
தூண்டுவோருக்குத் துணையாக நிற்காமல், இந்த அரசின் தூய நோக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, தொடர்ந்து பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இந்த அரசு உரிய நேரத்தில் சலுகைகளையும், உரிமைகளையும் அளிக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மின்சாரமே இல்லாத நிலையில் இலவச பம்புசெட் எப்படி சாத்தியம்-நல்லகண்ணு கேள்வி

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 17, 2010, 15:32[IST]

தூத்துக்குடி: மின்பற்றாக்குறை தீர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என மின்வாரியத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி [^] கூறும் நிலையில்,

விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளது எப்படி சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி [^], ஸ்ரீவைகுண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியதாவது,

எல்லையை தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களை காக்க முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளது கண்டனத்திற்குரியது.

தமிழக மீனவர்கள் [^] ஒன்றும் எல்லை தாண்டுவதில்லை. மாறாக சிங்கள கடற்படையினர் தான் நாகை, கோடியக்கரை உள்ளிட்ட நமது கடல் பகுதிக்குள் வந்து நமது மீனவர்களையே தாக்கிச் செல்லும் செயல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மின்பற்றாக்குறை தீர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என மின்வாரியத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது எப்படி சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறினார்

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆண்ட பரம்பரைதானடா…உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு…
மே 5, 2010 by தொகுப்புகள் ...

அரசுப் பணிகளில் அமரவோ, டாக்டர் போன்ற சேவைத் தொழிலில் இறங்க வேண்டிய கட்டாயமோ இந்தச் சாதிகளுக்கு 1800களின் பிற்பகுதி வரையில் எழவில்லை என்பது தான் உண்மை. கவுண்டர் தேவர் போன்ற சாதிகளெல்லாம் வரலாற்று ரீதியில் நிலவுடைமையாளர்களாவே இருந்து வந்துள்ளனர் ( பெருமளவிலோ, குறைந்தளவிலோ ).. இவர்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. அப்படி இவர்களை ஒடுக்கியிருந்தால் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த இந்த சாதியினர் பார்ப்பனர்களை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள். சமூகத்தில் பார்ப்பனர்கள் மேலே ஏறினார்கள் என்றால் அப்படி அவர்கள் மேலேயே உட்கார்ந்திருப்பதற்கான தேவை இவர்களுக்கும் இருந்தது. இவர்களுக்கும் கீழே அடக்கி ஒடுக்கப்பட்டு கடுமையாக சுரண்டப்பட்டு, நிலத்தின் மேல் ஆதிக்கம் இல்லாதிருந்த சாதிகளிடம் “பார் எனக்கு மேலே அவன் உனக்கு மேலே நான்” என்று நியாயப்படுத்துவதற்கு தேவையாய் இருந்தது.

அரசு வடிவம் மாறி ஆங்கிலக் கல்வியுள்ளவர்களுக்கு ( மாண்டேகு- சிம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் இரட்டை ஆட்சிமுறை ) அரசுப் பணி என்றும் அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் கிடைக்க ஆரம்பித்த புள்ளியில் தான் இவர்களுக்கும் அரசுப்பணியின் அவசியம் ஏற்பட்டது. அது நிராகரிக்கப்பட்டவனின் உரிமைக் குரல் அல்ல – மாறாக இது வரையில் இருந்த ஆதிக்கத்தை நிலை நிறுத்தியாக வேண்டியதன் கட்டாயத்தில் எழுந்ததே. உங்கள் மூலமான நீதிக் கட்சியின் நிறுவனர்கள் பழைய ஜமீந்தாரிகள், மன்னர்கள் என்பது நினைவிருக்கட்டும் ( பொப்பிலி மகாராஜா போல ).. இவர்கள் ஆரம்பத்திலேயே பெரியார் போல பகுத்தறிவு இயக்கம் நடத்தவோ பார்ப்பனிய எதிர்ப்பிலோ ஈடுபட்டிருக்கவில்லை.. மாறாக பார்ப்பனியத்தின் அத்துனை கூறுகளையும் உட்செறித்து மேலே வந்து விட முடியுமா என்கிற முயற்சியில் தான் ஈடுபட ஆரம்பித்தனர். ..

மேலும் நீங்கள் கேட்பது போல இடஒதுக்கீட்டுக்கு முன் இவர்கள் நிறம்பவில்லையே ஏன்? என்கிற கேள்வியே அப்போது எழவில்லை. இடஒதுக்கீடு அமுலான ஆரம்ப காலத்திலேயே அதன் பலன்களை அதிகம் சுருட்டிக் கொண்டதும் ( தமிழக அளவில் உதாரணம் தர முடியும் ) இந்த “பிற்படுத்தப் பட்டோ ர்” என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்ட ஆண்டைகள் தான்.

இவர்கள் அதிகாரத்திற்கு வந்த பின் 1927ம் ஆண்டே வகுப்புவாரி உரிமை என்னும் அரசானையின் படி தமக்கான உரிமையை நிலை நாட்டிக் கொண்டனர்.. இடஒதுக்கீடு அமுலான முதல் (20 ஆண்டுகளில் ஆண்டைகளும் நிலவுடைமையாளர்களும் தமது ஆதிக்கத்தை அரசு மட்டத்திலும் உறுதிப்படுத்திக் கொண்டனர். அதற்கு முன் – குறிப்பாக மாண்டேகு – சிம்ஸ்போர்ட் சீர்த்திருத்தங்களுக்கு முன் – இட ஒதுக்கீட்டுக்கான தேவை சாதி இந்துக்களுக்கு எழவே இல்லை.. ஏனெனில் அவர்கள் நிதர்சனத்தில் ஆதிக்க சாதிகளாகத் தான் இருந்தனர்.

இப்போது மீண்டும் உங்கள் பதிவுக்கு வந்தால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் – தமிழகத்தில் எல்லோருமே தங்களை ஆண்ட சாதிகள் என்று தான் பெருமையடித்துக் கொள்கிறார்கள் என்கிறீர்கள். இது பார்ப்பனியம் தோற்றுவித்த காரணிகளில் ஒன்று தான். எல்லோரும் தங்களை ஆண்ட சாதி என்று சொல்லிக் கொண்டாலும் – நடைமுறையில் யார் நிலவுடைமையாளர்கள், ஆதிக்க சாதிகள் என்பதைக் கொண்டு தான் முடிவெடுக்க முடியும். இந்த வாதத்தை நீங்கள் விரிவாக்கிச் சென்றால் – தெற்கே திராவிடர்கள் வருவதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு ஆண்ட
சாதி என்பது இப்போது மலைவாழ் மக்கள் என்று அறியப்படுபவர்கள் தான் எனவே ம.க.இ.க மலைவாழ் மக்களுக்கும் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லுமா என்று கேணத்தனமாகக் கேள்வி கேட்கும் அளவிற்கும் போகலாம்… ஆனால் துரதிர்ஷ்டவசமாக ம.க.இ.கவின் நிலை அதுவல்ல.. நாம் அறிந்த வரலாற்றிலும், நிதர்சனத்திலும் எவர் ஆதிக்க சாதியாய் இருக்கிறார்கள் என்பதைத் தான் கணக்கில் எடுக்கச் சொல்கிறார்கள். எனவே நீங்கள் கேட்கும் கேள்வி அர்த்தமற்றது மட்டுமல்ல முட்டாள்தனமானதும் கூட.

பல்லவன் குடிசையில் பன்றி மேயுது என்கிற பம்மாத்து இல்லாமல் நேரடியாகச் சொல்லுங்கள் – வன்னியர்கள் அடிமைச் சாதி தானா? அடிமைச்சாதியென்றால் “வன்னிய குல சத்திரியர்” என்கிற வெட்டிப் பெருமை மட்டும் எதற்கு? அப்படி வெட்டிப் பெருமையடிப்பதற்காக ராமதாஸ் போன்றவர்களை நீங்கள் கண்டிக்க தயாரா?

இல்லை வன்னியர்கள் குடிசையில் பன்றி மேய்வது உண்மையானால் அதற்கும் சக்கிளியன் சேரியில் பன்னி மேய்வதற்கும் ஒரே காரணம் தானா? அதாவது பார்ப்பனியம் தானா? தீண்டாமையால் கொடுமைப் படுத்தப்பட்ட சாதி தான் வன்னிய சாதியா?

வன்னியர்களையும் காட்டு நாயக்கர்களையும் ( அவர்கள் தங்களை ஆண்ட சாதி என்று கருதிக் கொள்வதால் ) ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது என்பது முழு முட்டாள் தனம்.

***************

ஆண்ட பரம்பரைகள்னு போகிற போக்கில் சொல்லி ரகசியமாய் மகிழ்ந்து கொள்ளும் அறியாமையில் கிடக்கும் ஜனங்களை நோக்கிக் கூறப்பட்டதல்ல ‘ஆண்ட பரம்பரையா! அடிமைப்பரம்பரையா?” என்பது.

நாங்கள் மூவேந்தரின் வாரிசுகள் என்றும், பல்லவனின் பரம்பரை என்றும் மேடை போட்டு முழங்கி முக்குலத்தோரின், வன்னியரின் உணர்வுகளை முறுக்கேற்றி, அவர்களின் போலி கவுரவத்தை வளர்த்தெடுத்து, பிற சாதியினரை (வேறு யாரை தலித்துகளைத்தான்) தங்களுக்கு அடிபணிந்து போகச்சொல்லி மிரட்டும் ‘ஆண்ட பரம்பரை’ப் பொறுக்கிகளுக்குத்தான்…இட ஒதுக்கீட்டை ரத்து செய்யச் சொல்லுகிறோம்.

பொன்.பரமகுருவில் இருந்து மலைச்சாமி வரை எத்தனையோ பேர்கள் இட ஒதுக்கீட்டால் படித்து முன்னேறினார்கள்தான். அவர்கள் தங்கள் பணிக்காலத்தில் செய்தது என்ன? தங்கள் சாதிக்காரனாகப் பார்த்து போலீசுதுறையில் ரொப்பிக்கொண்டார்கள். ஓய்வு பெற்றவுடன் ஓடிச்சென்று தேவர்பேரவை போன்ற சாதித்தீ மூட்டும் அமைப்பில் ஒட்டிக்கொண்டார்கள் என்பதில் இருந்தே இவர்களின் அரசுப்பணியின் லட்சணத்தை நல்லாவே யூகிக்கலாம். யூகம் என்ன எல்லாமே நெசந்தான். 70% பேர் போலீசுக்காரங்களா இருப்பது..ஆண்ட பரம்பரை ‘தேவர்’தான். தேவர் சாதிப்போலீசின் மிருகத்தனத்தை ஒவ்வொரு தலித் – தலித் அல்லாதோரின் மோதல்களிலும் பார்க்க முடியும்.. சமீபத்தில்–கடந்த 10 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டில் வந்த தேவர் சாதி போலீசுக்கும்பல் கொடியங்குளத்திலும் தாமிரபரணிக்கரையிலும் போட்ட வெறியாட்டம்…2 வயது சிறுவன் விக்னேசைக்கூட விட்டு வைக்கவில்லை.
…….
பறையர் பையனைக்காதலித்த குற்றத்துக்காக கண்ணகி-முருகேசனைக்கொன்ற சாதி வெறியர்களைக் காப்பாற்ற உள்வேலை செய்பவனோ, இட ஒதுக்கீட்டில் படித்து கலெக்டராக இருந்தவன்..இவன் திருநெல்வேலிக்கு கலெக்டராக இருக்கும்போதுதான் 17 தலித்கள் போலீசால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அன்று போலீசின் அத்துமீறலை ஆரம்பித்து வைத்து வன்கொடுமை சாதி வெறியந்தான் அந்த கலெக்டர்.. இவர்களுக்கு இட ஒதுக்கீட்டை தரக்கூடாது என்கிறோம்.

பிற்பட்டோ ர் பட்டியலுக்குள் ஆதிக்க சாதிகள் எல்லாம் உட்கார்ந்து கொண்டு உண்மையிலே பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடமில்லாமல் ஆக்குகிறார்கள் என்பதற்கு புள்ளிவிவரங்களைத்தேடி எல்லாம் செல்ல வேண்டாம்.

தென் மாவட்டக்கல்லூரிகள் எங்கும் நடக்கும் மாணவர் மன்றத் தேர்தல்களே இதற்கு சான்று. BC பட்டியலில் 80 சதவீத இடங்களை நாடார்களோ நாயுடுகளோ (அதாவது வடுகன் என்பவர்கள்) ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச் சங்கமே மாணவர்கள் மத்தியில் அமைத்து சாதி வெறி உண்டாக்கி தேர்தலில் நிற்கின்றனர். MBC ஒதுக்கீட்டில் பெருமிடங்களை தேவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச்சங்கம் கட்டி, உணவு விடுதிகளில் தலித் மாணாக்கரை ‘ஓசிச்சோறு’ என்றும், தலித் மாணவிகளை பாலியல்ரீதியாகக் கொச்சைப்படுத்திப்பேசி வக்கிரமாய் நடந்து கொள்வதும், சேவைத் தொழில் செய்யும் சாதியில் இருந்து வரும் ஒன்றிரண்டு மாணவர்களிடம் ‘எனக்கு சிரைத்து விடு’ என்றோ ‘என் செருப்பைத் தைடா’ என்றோ சாதித்திமிரோடு நடந்து கொண்டு வருவது வெளிப்படையான விசயம்.

அக்கல்லூரிகளில் உட்கார்ந்திருக்கும் ஆசிரியர்களும் தங்களைஆதிக்க சாதி சங்கங்களுக்குள் இணைத்துக் கொண்டு அதே சாதி மாணவர்களைக் கொம்பு சீவி விடுகின்றனர்.. இதை எல்லாம் சொல்லி இந்தக் கேடு கெட்ட சாதிவெறியன் களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்.. பிற்பட்டோ ர் பட்டியலை சீர் செய் என்றால்…மறைமுகப் பார்ப்பனீயம் என்கிறார்கள்..

ஆதிக்க சாதிகள் என நாம் சொல்லிடும் நாயுடு,கவுண்டர்,தேவர்,நாடார்,வன்னியர் எனப்படும் சாதியினரிடம் நூற்றுக்கணக்கிலும்,ஆயிரக்கணக்கிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கல்லூரிகளும் குவிந்து கிடக்கின்றன. அங்கு இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றதாக வரலாறு உண்டா? எப்படி நாடார் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பியூனில் இருந்து தலைமை ஆசிரியர் வரை நாடார்களாகவே இருக்க முடிகிறது? நாயுடு கல்லூரியும் அப்படித்தான்..கவுண்டன் கல்லூரியும் அப்படித்தான். ஆனால் பட்டியலில் இருக்கும் பல நூறு சாதிகளால் ஒரு நர்சரி பள்ளி ஆரம்பிக்கக் கூட தெம்பு கிடையாது என்பதுதான் உண்மை. எங்காவது வண்ணார் சங்கப் பள்ளியையோ மருத்துவ சாதி சங்க கலைக்கல்லூரியையோ காட்ட முடியுமா?

இதே மாதிரி எண்ணற்ற உதாரணங்கள் தமிழகம் எங்கும் பெருத்துக் கிடக்கும்போது சமூக நீதிப் புடுங்கிகள் இதற்கு எதிராக என்ன புடுங்கினார்கள்?

கல்லூரிக்கு அடுத்து வேலை செய்யும் இடங்களைப் பார்த்தால் பொதுத்துறை நிறுவனங்களுக்குள் ஆதிக்க சாதிக்கும்பல்தான் வேலை வாய்ப்பில் பெரும் இடங்களைப் பிடித்துக் கொண்டு சாதி ரீதியாய் தொழிற்சங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்கம் என்றால் ஏதோ தொழிலிடப் பிரச்சினைகளுக்காகப் போராடும் அமைப்பு என்றெல்லாம் எண்ண வேண்டாம். யார் யார் வீட்டில் கல்யாண வயசில் பொண்ணு இருக்கு? என்பதை விசாரித்து தங்களுக்குள் திருமணம் மூலம் மேலும் சாதியாய் இறுகிக்கொள்ளவும், மறக்காமல் ஆண்டுதோறும் தங்கள் குலதெய்வத்தின் விழா எடுக்கவும்தான் இச்சங்கங்கள்.. திருச்சி பெல்லில் பார்க்கலாம்..பெல்-சேனைத்தலைவர் சங்கம்..பெல்-வன்னியர் சங்கம்..லொட்டு லொசுக்கு எல்லாம்.

விப்ரோ டெக்னாலஜியில் பார்ப்பனர் சங்கம் கட்டி இருக்கிறார்கள்.. சவுராஸ்டிரா சங்கம் வைத்திருக்கிறார்கள்.. நவீன தொழில்நுட்பவாதிகள் இல்லையா? மெயிலிங் லிஸ்ட்டில் – ஈ-சாதிச்சங்கமாய் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு சங்கமாய்த் திரண்டு சாதியைக் காப்பாற்றும்/ சாதி வன்முறையை (கல்லூரி அளவிலேயே) வளர்க்கும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். அல்லது BC ஐ இரண்டாகப்பிரித்து இந்த மாதிரி ஆதிக்க சாதிகளை BC1ல் வைத்து 3 சதவீதம் அவர்களுக்கும்… இதர 200 BCகளை 27% கொடுத்து BC 2லிலும் வைப்பதுதான் உண்மையான சமூக நீதி.

சமூகநீதிப் புடுங்கிகள் என்றைக்காவது சாதிமறுப்புத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கோரி இருக்கிறார்களா? சாதி ஒழிப்புதானே – சமூக நீதியாகும்! சாதி ஒழிப்பை சாதிமறுப்பு திருமணம் தானே சாதிக்கும்!

சாதி மறுப்புத் திருமணம் மூலம் பிறந்தவர்களுக்கு பெயரளவில் இருந்த சிறு வீத ஒதுக்கீட்டையும் ‘சமூக நீதியை’ காத்த வீராங்கனை ஒழித்துக்கட்டியது.. ஆனாலும் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ‘சமத்துவப் பெரியாரும்’ இதைக் கண்டு கொள்ளவே இல்லை.

***********

சாதி ஒழிப்பைத் தவிர்த்து விட்டு, இட ஒதுக்கீட்டில் மட்டும் அழுத்தம் கொடுக்கும் திராவிட,தமிழ்தேசிய,வன்னியவிய,தேவர்வெறியியக் கட்சி/குழுக்களால் ஏற்பட்ட சமூகவியல் மாற்றங்களைப் புரிந்து கொள்ள சில சான்றுகள்.

1) திண்ணியம் ஊரில் சக்கிலியர் வாயில் மலத்தைத் திணித்த சாதிவெறியர்களில் ஒருவர் – அரசுப்பணியில்-ஆசிரியராகப் பணியாற்றியவர். பெயர் என்ன தெரியுமா? குடியரசு.

2) சமதாக் கட்சியின் தமிழ் நாடு பிரிவுக்கு ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டார். பெயர் குடியரசுத் தேவர். (1929இலேயே வாலை நறுக்கிய இயக்கப்பின்னணி கொண்ட பெயருடையவருக்கு வால் முளைக்கிறது)

3) பெரியார் திராவிடர் கழகத்தினர் பழனி ஒன்றியத்தில் கவுண்டர் சாதிவெறியர்கள் நிறைந்த பகுதியில் ‘தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பயணம்’ மேற்கொண்டிருந்தபோது ‘இரட்டைக்குவளைகள் முறை பற்றி’கண்டித்துப் பேசி வந்தனர். ஆத்திரமுற்ற கவுண்ட சாதி வெறியர்கள் பெ.தி.க. தொண்டர்களைத் தாக்க முயன்றனர். அப்போது அவர்கள் சொன்னது “தி.க.ங்கிற..சாமியப் பத்திப் பேசு..இட ஒதுக்கீடு பத்திப் பேசு..ஆனால் ரெட்டக்கிளாஸ் அது இதுன்ன..கொளுத்திப்புடுவோம்..”

****************

ராமதாசின் குடும்பத்தில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணங்கள் எத்தனை?

ஆனைமுத்துவின் கட்சி ஏன் வன்னியர் சங்கம் மாதிரியே இருக்குது?

தமிழரசனின் தனித்தமிழ் நாடு படை ஏன் வன்னியர் படையாக மட்டுமே இருக்குது?

தமிழ் தேசியம் என்பது வன்னியர் தேசியமா?

ஆண்ட பரம்பரன்னு சொல்லுர ராமதாசு ரிலயன்சு போன்ற சேட்டுகிட்ட போய் நாய் மாதிரி வாலாட்டுறப்ப ஆண்ட பரம்பரையின் குலப்பெரும கெட்டுடாதா?

இதற்கெல்லாம் குழலி எனும் ஆண்டபரம்பரைகள் பதில் சொல்ல வேண்டும்..

*************

கம்யுனிஸ பூச்சாண்டி சொல்வதை பார்த்தால் படித்தவன் எல்லாம் சாதி வெறயில்லாம இருப்பதாக இருக்க வேண்டும். அப்ப்டி இல்லை என்பதைத்தான் கனேசு, அன்பரசன், குரல்கள், புல்டோ சர் உள்ளிட்டவர்களின் எ-கா சொல்கிறது. இன்னும் சொன்னால் கல்வி நிலையங்க்ளில் சாதி ரீதியாக திரண்டு பிற சாதியினரை இழிவுபடுத்தும் போக்கு உங்களது வாதத்திற்க்கு முரனாகவே இருக்கிறது.

கல்வியறிவினால் சாதி ஒழியும் என்பதே ஒரு அப்பட்டமான மோசடி.

எப்படி பொருளாதார விடுதலை மட்டுமே சாதியை ஒழித்துவிடும் என்று கம்யுனிஸ்டுகள் சொன்னது அடிப்படையற்றதோ அதே போல வெறுமே பண்பாட்டு சீர்திருத்தங்களால் மட்டும் சாதி ஒழிந்து விடும் என்பதும் அடிப்படையற்றதே.

தத்துவம், பொருளாதாரம், அரசியல் என்று மூன்று முனைகளிலும் சம்ரசமற்ற போராட்டமே சாதியை ஒழிக்கும்.

இடஓதுக்கீட்டை சர்வரோக நிவாரணியாக காட்டும் உங்களது சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தையே படித்தவன் முதல் பலரும் தமது சாதி வெறியை விடாமல் இருப்பதும், இன்றைக்கு திராவிட அரசியலுக்கு உரிமை கொண்டாடும் பாமக உள்ளிட்டவர்கள் சாதி ரீதியாக அணி திரண்டு உரிமை பெறுங்கள் என்று அப்பட்டமாக பிழைப்புவாதம் பெசுவதும், குஜ்ஜார் பிரச்சனைகளும் காட்டுகின்றன. இடஓதுக்கீடு ஒரு சீர்த்திருத்தம் என்பதை புரிந்து கொள்ளாத நண்பர்கள் அதனது யாதர்த்த விளைவுகளை கண் கொண்டு நோக்கும் வலுவின்றி இருப்பது பரிதாபமே.

****************

Gopalan Ramasubbu said…

இது சட்டநாதன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருக்கும் ஒரு பத்தி(Page-188),

[http://books.rediff.com/bookshop/bkproductdisplay.jsp?PLAIN-SPEAKING-by-A-N-SATTANATHAN&prrfnbr=60109970&multiple=true&frompg=_]

“There are two tendencies which have become noticeable.Reservationhas helped the backward classes for nearly six decades from the 1920′s to the 1980s-practically three generations.The benefit of reservation has gone mostly to the top few castes amongst the backward,and to an increasing layer of upper crust in each caste.The filtration process has not been through or uniform.This is not surprising,and is to some extent unavoidable.It would be a step in the larger interest of society and of the backward classes themselves,if a check is applied to both tendencies.There has been thinking on these lines among administrators;but the opposition of vested interest has been too strong to carry out the necessary pruning.But sooner or later,the removal of the two kinds of upper crust will become un-avoidable;otherwise we will be encouraging the caste to form a class system within caste system-not an altogether desirable trend in a democratic and sicialitic society”

***********

முருகேசன் கண்ணகியை எரித்துக்கொன்ற வன்னிய சாதி வெறியர்களைக் காப்பாற்றத் துடிக்கும் முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவரும் இட ஒதுக்கீட்டில்தானே படித்து முன்னேறி வந்திருக்கிறார்? இப்பேர்ப்பட்ட சாதி வெறி நாய்களுக்கு இட ஒதுக்கீட்டை இரத்து செய்யச் சொல்வதுதானே சரியாகும்?

கண்டதேவியில் தேர் இழுக்கப்படாது..வன்னியன் தெருவழியே பறையன்பிணம் வரப்பிடாது…கட்டினால் வன்னியகுல சத்திரியகுலத்திலேதான் செவப்பா அழகா கட்டுவோம் (இருப்பது இங்கிலாந்தில்) எனும் சாதி வெறியுடனும், பஞ்சாயத்து தலைவரா தலித் வந்தா ஆத்தாவுக்கு ஆகாது…ரெட்டை டம்ளர் டீ க்கடை… எல்லாவும் செஞ்சுப்புட்டு இட ஒதுக்கீடு வேணும்…நாங்கள்ளாம் மிகவும் பிற்பட்டவங்க என்பதும், சாதிக்கூட்டங்களிலே போய் நாங்க பல்லவர்களின் வழித்தோன்றல்…பாண்டிய மன்னர்கள்தான் எங்களோட 56 வது கொடிவழி பாட்டனாரு…ன்னு மீசையை முறுக்கறதும்… ஆண்ட பரம்பரைதானடா…உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு…

என்னக் கேட்டால், எவன் சாதி மறுப்பு திருமணம் செய்கிறானோ, ஆதிக்க சாதி சங்கத்திலே ஒட்டாம இருக்கிறானோ அவனுக்க மட்டுமே இட ஒதுக்கீடு தரணும்…ம.க.இ.க.வும் இதத்தான் சொல்லுதுன்னு நினய்க்கேன்.

அது கிடக்கட்டும்… பெரியாரின் கொள்கையில் இட ஒதுக்கீட மட்டுமே முன்னிறுத்தி வரும் ராமதாசும், ஆனமுத்துவும் ஏன் சாதி ஒழிப்பு பத்தி பேச மாட்டக்காக?


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நாட்டுக்கோழியில் கலப்படம்!

1.jpg
வெள்ளாட்டுக் கறியை மட்டுமே சாப்பிட் டுப் பழகியவர்கள், செம்மறி உட்பட வேறு எந்த ஆட்டுக்கறிகளையும் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

அதைப்போலவே நாட்டுக் கோழிக்கறியை மட்டுமே சாப்பிட்டுப் பழகியவர்கள் பிராய்லர் உட்பட வேறு எந்த கோழிக்கறியையும் முகர்ந்து கூடப் பார்க்கமாட்டார்கள்.

""நாட்டுக்கோழிக் கறிங்கிறது மருந்து மாதிரி... மாதிரியென்ன மருந்தேதான். நாட்டுக் கோழிக் குஞ்சை நச்சுப் பிட்டுப் போட்டு ரசம் வச்சு, புள் ளைப் பெத்தவளுக்கு குடுக்கிறமே எதுக்காக? உடம்பு வலியை உடனே இல்லாமப் பண்ணிப்பிடும். நாட்டுக் கோழிக் கழுத்தை அறுக்கப்பிடாது. அறுத்தா ரத்தம் போயிடும். தலையைத் திருகணும். உசுரு போனதும் மசுரைப் பறிச்சுப்புட்டு அரைச்ச மஞ்சளைப் பூசிப் புட்டு நெருப்புல வாட்டோணும். அப்பவே வாசனை தூக்கும். உடம்புக்கும் நல்லது. கொழம்பு கொதிக்கும் போதே ஏழு ஊருக்கு வாசனை போகும். இப்ப நாட்டுக்கோழினு கிலோ 200 ரூபாய்க்கி என்கிட்ட விக்கிறியே... பார்க்கிறதுக்கு நாட்டுக்கோழி மாதிரியேதான் இருக்கு. போன ஞாயித்துக்கெழமை தந்தியே... தீயில பொசுக்கும்போதும் வாசனை வரலை. கொழம்பும் ருசிக்கலை. கறியும் சவசவன்னு சக்கை மாதிரி இருந்துச்சு. நெஜத்தைச் சொல் லுப்பா... இது நாட்டுக்கோழியா டூப்ளிகேட்டா?'' திண்டுக்கல் மார்க்கெட் கோழிக்கடையில் பரிதாப மாகக் கேட்டார் ஒரு பெரியம்மா.

""இது நெஜமாகவே நாட்டுக்கறிதான்... நம்பி வாங்கிட்டுப் போங்க'' என்று உயிரோடு எடை போட்டுக் கொடுத்து அனுப்பினார் கடைக்காரர்.

உண்மையில் இப்போது கோழிக்கடையில் விற்பனையாகிக் கொண்டிருப்பது நாட்டுக்கோழி தானா?

நமக்கு வேண்டிய கோழிக்கடைக்காரர் திண்டுக்கல் ரவியிடம் கேட்டோம்.

""ஒரிஜினல் நாட்டுக்கோழி, விற்றால் ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் லாபம் கிடைக்கும். இந்த டூப்ளிகேட் நாட்டுக்கோழியில் கிலோவுக்கு 80 ரூபாய் லாபம் கிடைக்கிறது. பிராய்லர் உற்பத்தியாகும் கோழிப்பண்ணைகளில்தான் இந்த கலப்பின நாட்டுக்கோழியும் உற்பத்தியாகிறது... என்ன செய்ய? இதிலயும் கலப்படம்தான்'' என்றார் அவர்.

நாமக்கல், பல்லடம், கரூர், திருப்பூர், கோவையில் உள்ள கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்வது போலவே திண்டுக்கல் கோழிப்பண்ணையிலும் கலப்பின நாட்டுக்கோழி உற்பத்தி செய்கிறார்கள். 

""இதில் ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லைங்க. பிராய்லர் கோழியை விட மட்டமானது கிரிராஜா கோழி. கிரிராஜா கோழியோடு நாட்டுச் சேவலை பழகவிட்டு, கிரிராஜா கோழி போடுற கிராஸ் முட்டைகளை மிஷின் மூலம் பொறிக்க வச்சு, அந்தக் குஞ்சுகளை தலா 25 ரூபாய்க்கு தர்றாங்க. அந்தக் குஞ்சுவை பிராய்லர் குஞ்சுகளுக்கு போடுற தீவன மும், ஊசி, மாத்திரை, வேதிப்பொருளும் போட்டு பெருக்க வச்சு கடைகளுக்கு சப்ளை செய்றோம். பார்க்கிறதுக்கு நாட்டுக்கோழி மாதிரி இருக்கும்'' என்கிறார்கள் கோழிப்பண்ணைக்காரர்கள்.

""பிராய்லர் கோழியைப் போலவே மலட்டுத் தன்மையை உருவாக்குவதுதான் இந்த கிரிராஜா கலப்பினக் கோழிகளும். பெண்களையும் ஆண் களையும் மலடுகளாக மாற்றுவதோடு, 10 வயது குழந்தைகள் கூட வயதுக்கு வருகிறார்களே அதற்கும் இந்த வேதிப்பொருள், ஊசி, மாத்திரை மூலம் வளரும் கோழிகள்தான் காரணம்'' என்கிறார் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக இணை பேராசிரியர் டாக்டர் பீர்முகம்மது.

கோழிக்கறிப் பிரியர்களே ஜாக்கிரதை!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சேவல் சூதாட்டத்தில் சிக்கிக் கொண்ட ஆளுங்கட்சி பிரமுகர்!

கோவை அன்னூரை யடுத்த பொங்கலூரில் உள்ள கந்தசாமி நாயக்கர் தோட்டத்தில் சேவல் சண்டை யில் லட்சக்கணக்கில் வைத்து சூதாட்டம் நடத்துவதாக வந்த தகவலின்படி அன்னூர் இன்ஸ்பெக்டர் ஜெயச் சந்திரன், எஸ்.ஐ.வெங்கடாச்சலம் தலைமையிலான டீம் தோட்டத்திற்குள் நுழைந்தது. பணம் வைத்து விளையாடிக் கொண்டிருந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் சேவல் களைத் தூக்கிக்கொண்டு எஸ்கேப்பாகிவிட்டாலும்...

28 பேரை கைது செய்த போலீஸ் அவர்களில் சிலரிடமிருந்து 2 லட்சத்து 37 ஆயிரத்து 950 ரூபாயை பறிமுதல் செய்ததோடு 24 கார்கள், 25 டூவீலர்களையும் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றியிருக்கிறது அன்னூர் போலீஸ்.

தப்பித்துப் போனவர்களில் முக்கிய தி.மு.க. பிரமுகர் ஒருவர் சேவல் சண்டை நடக்குமிடத்தில் இருந்த தாகவும், அவரின் காரும் போலீஸால் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் வர... நாம் நம் அன்னூர் போலீஸ் சோர்ஸ்களிடம் பேசினோம். ""இந்தப் பகுதிகளில் சேவல் சண்டை சூதாட்டத்தை நடத்தி லட்சக்கணக்கில் பணம் பார்ப்பது தி.மு.க.வின் கோவை மாநகர து.செய லாளரும், மாவட்ட ஊராட்சிகளின் து.தலைவரும், அவினாசி தொகுதியின் மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ. இளங்கோ மகனுமான ஆனந்தன்தான். இவருக்கு தொண்டாமுத்தூர் தி.மு.க. ஒன்றிய து.செ. சாமி பையன், உருமாண் டாம்பாளையம் பாலு போன்றவர்கள் துணையாக நிற்பார்கள்.

ஆனந்தனுக்கு லோக்கல் அமைச்சரின் ஆதரவுக்கரம் எப்போதும் நீளும். அதனால் அவரை நாங்கள் நெருங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தோம்.

இம்முறை சேவல் சண்டை நடக்கும் இடத்திற்கு நாங்கள் ரெய்டு போன போது ஆனந்தன் வசமாக மாட்டிக் கொண்டார். ஆனந்தன் ஒரு காரில் ஏற முயற்சிக்கும் போது எஸ்.ஐ.வெங்கடாச் சலம் அந்த காருக்கு முன்னால் கற்களைத் தூக்கி வீசினார்.

என்ன செய்வதென்று தெரியாமல் அந்த களேபரத்தில் கட்டுப் பணத்தோடு காரை விட்டு இறங்கி ஓடி விட்டார் ஆனந்தன். அந்தக் கார் ஃபோர்டு பீஸ்டா டி.என்.37 ஏ.எக்ஸ்.9999. ஆனந்தன் எங்களிடம் பிடிபடாமல் போனதால் பிடிபட்ட கார் அவருடையதுதானா? என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது'' என்கிறார்கள் சோர்வாய்.

இதுகுறித்து தி.மு.க. மாநகர துணைச் செயலாளரான ஆனந்தனிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்... ""நான் அந்தப் பொங்கலூர் பகுதிப் பக்கமே போனதில்லை. இதுமாதிரி சேவல் சண்டைகள் எல்லாம் காட்டம்பட்டி ஆனந்தன் என்பவர்தான் நடத்திக் கொண்டிருப்பார். அவர்தான் அன்று அங்கே இருந்திருக்கிறார்.

ஃபோர்டு பீஸ்டா டி.என்.37 ஏ.எக்ஸ்.9999 என்ற கார் என்னுடையதேயில்லை. நான் எப்பவும் என்னுடைய இன்னோவா காரைத்தான் உபயோகப்படுத்துவேன். யாரோ இந்தக் கார் என்னுடையது என்று தவறாக செய்தி பரப்புகிறார்கள்'' என்றார் கோபமாய்.

ஆனால் உண்மையிலேயே அந்த கார் யாருடையது என்று தெரிந்து கொள்ள ஆர்.டி.ஓ. ஆபீஸில் உள்ள நம் சோர்ஸ்களிடம் ஃபோர்டு பீஸ்டா கார் நம்பரைக் கொடுத்துக் கேட்டோம்... நம் சோர்ஸ்களோ... "எழுதிக் கொள்ளுங்கள்... இ.ஆனந் தன், த/பெ.இளங்கோ, 550, ஒயிட் பில்டிங், ஆர்.எஸ்.புரம், கோவை-641 001' என்ற முகவரி தந்து ஆனந்தனின் பொய்க் கூற்றை சரி செய்து கொடுத்தார்கள்..


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_08_2010_002_041-distillery.jpg?w=296&h=30023_08_2010_002_027_009mike.jpg?w=251&h=30023_08_2010_002_027-public-0.jpg?w=300&h=26223_08_2010_002_026-dmk.jpg?w=212&h=30023_08_2010_002_010-farce-hearing.jpg?w=300&h=195



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தலையங்கம்:மூச்சு முட்டுகிறதே...

First Published : 23 Aug 2010 01:51:56 AM IST

editorialimg.jpg
ராஜ்பவன், ஆளுநர் மாளிகை என்றெல்லாம் இப்போது அழைக்கப்படும் இடம் கில்பர்ட் ரோட்டரிக்ஸ் என்ற ஆங்கிலேயரின் சொத்தாக இருந்தபோது அதன் பெயர் "கிண்டி லாட்ஜ்'. பறவைகளையும், விலங்குகளையும் வேட்டையாடிக் களிக்க, மரம் செடி கொடிகள், அடர்ந்த வனப்பகுதியாகக் காட்சியளித்த இந்த "கிண்டி லாட்ஜ்' தோட்டத்துக்கு நடுவில் ஒரு பங்களாவைக் கட்டிக் கொண்டு வாழ்ந்த கில்பர்ட் ரோட்டரிக்ஸ், 1817-ல் இறந்த அடுத்த சில ஆண்டுகள் பராமரிப்பு இல்லாமல் இருந்தது, இந்த "கிண்டி லாட்ஜ்'.

 

1821-ல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்த 500 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த "கிண்டி லாட்ஜ்' என்கிற தோட்ட வீட்டை விலைக்கு வாங்கியது. அப்போது கவர்னர் மாளிகை அரசினர் தோட்டத்தில் அமைந்திருந்தது. "கிண்டி லாட்ஜ்', அன்றைய பிரிட்டிஷ் ஆளுநர்களுக்கு வாரக் கடைசிகளில் ஓய்வெடுக்கும் மாளிகையாகவும், நண்பர்களுடன் பறவைகளை வேட்டையாடிக் களிக்கும் இடமாகவும் இருந்தது. 1910-ல்தான் இந்த கிண்டி லாட்ஜைச் சுற்றியுள்ள பகுதிகள், சென்னை வனச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.

 

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, கிண்டி லாட்ஜும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியும்தான் ஆளுநர் மாளிகைக்காக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டது. சென்னை நகரின் ஒரு பகுதியாக, அதேநேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இணையான கட்டடக்கலை வனப்பும், வசதிகளும் நிரம்பிய "கிண்டி லாட்ஜ்', தமிழக ஆளுநரின் மாளிகையாக மாற்றப்பட்டது ஒருவகையில் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் இந்த இடம் அடையாறு பகுதியைப்போல, "மால்'களும், வணிக வளாகங்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பகுதியாக மாறியிருக்கக் கூடும்.

 

500 ஹெக்டேர், அதாவது 1,250 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த இந்த ஆளுநர் மாளிகைத் தோட்டம் (வனம்!), காலப்போக்கில் சுருங்கிக் கொண்டுதான் வந்திருக்கிறது. முதலில், 1954-ல் மகாத்மா காந்தி நினைவகத்துக்காக 9.25 ஏக்கரும், புற்றுநோய் மருத்துவமனைக்காக 9 ஏக்கரும் இதிலிருந்து வழங்கப்பட்டது. 1958-ல் இந்தியத் தொழில் நுட்பக் கல்லூரிக்காக (ஐ.ஐ.டி.) 388 ஏக்கரும், தேசியப் பூங்கா அமைப்பதற்காக வனத்துறைக்கு 625 ஏக்கரும் வழங்கப்பட்டது.

 

1970-ல் குருநானக் கல்லூரி தொடங்குவதற்காக இதிலிருந்து நிலம் வழங்கப்பட்டது. 1974-ல் 2.5 ஏக்கர் பரப்பில் ராஜாஜி நினைவகமும், 1975-ல் 6 ஏக்கர் நிலப்பரப்பில் காமராஜ் நினைவகமும் இதிலிருந்து வழங்கப்பட்ட இடங்கள்தான்.

 

1977-ல் தான், 1958-ல் வனத்துறைக்கு வழங்கப்பட்ட இடம் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. மேலும், 88 ஏக்கர் நிலப்பரப்பு வனத்துறைக்கு வழங்கப்பட்டு, அதில் 22 ஏக்கரில் பாம்புப் பண்ணையும், குழந்தைகள் பூங்காவும் அமைக்கப்பட்டன.

 

ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள வனப்பகுதி, கான்கிரீட் கட்டடங்களால் நிறைந்து விட்டிருக்கும் தென்சென்னைக்கு பிராணவாயு வழங்கும் நுரையீரல் பகுதியாகத் தொடர்கிறது என்பது மட்டுமல்ல, இதன் பெருமை. இந்த வனப்பகுதி சுமார் 130 வகை பறவை இனங்களுக்கும், 350 தாவர இனங்களுக்கும், 60 விதமான வண்ணத்துப் பூச்சிகளுக்கும், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் ஒன்றான "பிளாக் பக்' என்றவகை மான்களுக்கும், புள்ளிமான்களுக்கும், நரிகள், பல்வேறு விதமான பாம்புகள், ஆமைகள், நத்தை வகைகள் போன்றவற்றுக்கும் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது.

 

இத்தனை பெருமைகளும், முக்கியத்துவமும் வாய்ந்த ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள வனப்பகுதி ஏற்கெனவே கணிசமாகச் சுருங்கி விட்டிருக்கிறது. இப்போது, இந்த வனப்பகுதிக்கு மேலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புதிய முயற்சிகள் அரங்கேற்றப்படுகிறது என்னும்போது மௌனமாக வேடிக்கை பார்ப்பது விபரீதத்தில் முடிந்துவிடக் கூடும்.

 

கடந்த மாதம், தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் தெரிவித்திருக்கும் ஒரு தகவல், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இடியெனத் தாக்கி இருக்கிறது. ஆளுநர் மாளிகை வனப்பகுதியில் 500 படுக்கைகளுடன்கூடிய ஒரு மருத்துவமனையை நிறுவுவதற்காக நான்கு ஏக்கர் நிலப்பரப்பை வழங்க ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்பதுதான் துணைவேந்தரின் அந்தத் தகவல்.

 

ஏற்கெனவே வனப்பகுதிகள் சுருங்கிக் கொண்டு வருகின்றன. கிழக்குக் கடற்கரை ஓரமாக அமைந்த உஷ்ணப் பிரதேசங்களில் மட்டுமே காணப்படக்கூடிய தனித்தன்மை வாய்ந்த இதுபோன்ற வனப்பகுதி மிகவும் குறைவு. அதே மேலும் அழித்து, அதிலிருக்கும் மரம், செடி, கொடிகளையும், அதை வாழ்வாதாரமாகக் கொண்ட பறவைகள், விலங்குகள், பிராணி வகைகளை இம்சிப்பதில் மனிதன் என்ன சுகம் காண்கிறானோ தெரியவில்லை.

 

குறிப்பாக, மருத்துவமனை கட்டப்பட்டால், அதனால் உருவாகும் ஆள் நடமாட்டம், அதிலிருந்து வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் போன்றவை அந்த உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாக அமையும் என்பது உறுதி. கடந்த 15 ஆண்டுகளில் பல பறவை இனங்கள் இந்தக் காடுகளில் இருந்து சென்று விடவோ, அழிந்துவிடவோ, செய்துவிட்டன என்கிறார்கள். இந்த நிலையில், மிச்சம் மீதி இருக்கும் வனப்பகுதியையும் அழித்து மருத்துவமனை அமைக்க  வேண்டிய அவசியம்தான் என்ன? வேறு இடமா கிடைக்கவில்லை?

 

ஆளுநர் மாளிகையும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியும் எந்தக் காரணத்துக்காகவும் கட்டடம் கட்ட பயன்படுத்தப்படக் கூடாது. ஏற்கெனவே சென்னை சுற்றுச்சூழல் பாதிப்பால் மாசுபட்டுக் கிடக்கிறது. இந்த நிலையில் அதன் நுரையீரலைக் கசக்கிப் பிழிந்தால் எப்படி


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ON Insurance

தலையங்கம்: மக்களின் வரிப்பணம்தானே...

First Published : 21 Aug 2010 12:00:00 AM IST

Last Updated : 21 Aug 2010 07:16:36 AM IST
editorialimg.jpg
கல்வியைத் தொடர்ந்து இப்போது மருத்துவத் துறையையும் முழுமையாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது ஆட்சியாளர்களின் எழுதப்படாத கொள்கைகளில் ஒன்று என்று தோன்றுகிறது. முதலில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் தனியார் ஒத்துழைப்பு என்று தொடங்கி, இப்போது அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பைத் தனியாரிடம்விடும் அளவுக்குத் தனியார்மயக்கொள்கை செயலாக்கம் பெற்றிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு ஒட்டுமொத்தமாக மூடுவிழா நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

தமிழக அரசு மட்டுமே சுகாதாரத் துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்க முன்வந்திருப்பதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். உண்மையில், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் ஏனைய மாநிலங்களைவிட சற்று அடக்கியே வாசிக்கிறது என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் வழிகாட்டுதலை இதுவரை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

 

கடந்த 10 ஆண்டுகளாகவே அரசு மருத்துவமனைகளையும், ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிடும் முயற்சி அகில இந்திய அளவில் முனைப்புடன் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மக்கள் வரிப்பணத்தில், அரசு நிலத்தில் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் முதல்கட்டமாக பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சுகாதாரத் துறை வற்புறுத்தி வருகிறது.

 

அடுத்தகட்டமாக, எக்ஸ்-ரே, ரத்தப்பரிசோதனை மையம் போன்றவைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து நடத்துவது என்று தீர்மானிக்கக்கூடும். காலப்போக்கில் தனியாருக்கே அரசு நிறுவனங்களைத் தாரைவார்ப்பதுபோல இந்த ஆரம்பச் சுகாதார நிலையங்களையும்  கொடுத்துவிடுவது என்பதுதான் மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டம் என்று கருதவும்  இடமிருக்கிறது. கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஆரம்பச் சுகாதார நிலையங்களை ஏற்று நடத்த எந்தத் தனியார் மருத்துவமனைதான் தயங்கும்?

 

"கல்வி, மருத்துவம் போன்றவை அரசின் செயல்பாடுகள் அல்ல. இவைகளிலிருந்து அரசு முழுமையாக விடுபட்டாக வேண்டும்' என்கிற தனியார்மயவாதிகளின் கருத்து ஏற்புடையதல்ல. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையே இந்தியா ஒரு ஜனநாயக சமதர்ம அரசு மட்டுமல்ல, மக்கள் நலம்பேணும் அரசும்கூட என்பதுதான். கல்வி, சுகாதாரம் போன்றவை அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் தனியாரிடம் விடப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியாவைப் போன்ற வறுமைக்கோட்டுக்குக்கீழே பல கோடி மக்கள் வாழும் நாட்டில் தனியாரிடம் இவற்றை ஒப்படைப்பது என்பது மிகப்பெரிய அரசியல் சமூக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

 

நியாயமாகப் பார்த்தால், தமிழக கார்ப்பரேட் மருத்துவமனைகளின் தரத்தில் நமது அரசு மருத்துவமனைகளைப் பராமரிப்பதுதான் முறையான நல்லாட்சிக்கு அடையாளமாக இருக்கும். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்கிற பெயரில் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரிமியம்) முதலாண்டில் கொடுத்திருப்பது ரூ. 628.20 கோடி. ஆனால், பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டணமாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடிதான். மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம். இரண்டாவது ஆண்டுக்கு, அரசு அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருக்கும் கட்டணத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 750 கோடி.

 

இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களின் வரிப்பணத்திலிருந்து தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு வாரி வழங்கும் அரசு, அதை அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துவதில் செலவிட்டால் அதனால் நிரந்தரமாகப் பயன் கிடைக்குமே என்கிற நியாயங்கள் ஆட்சியாளர்களின் காதில் விழாது. அப்படிச் செய்தால் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்று ஆட்சியின் சாதனைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும், தேர்தலில் வாக்குவேட்டை ஆடவும் முடியாதுதானே..

 

சென்னையிலுள்ள பொது மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் பணி தனியாரிடம் விடப்பட்டது. ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். மாதந்தோறும் ஏழு லட்சம் ரூபாயையும் வாங்கிக்கொண்டு அந்தத் தனியார் நிறுவனம் பெரிதாக எதையும் சாதித்துவிடவும் இல்லை. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலரும் அந்தத் தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று தெரிவித்திருக்கும் நிலையில், நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

 

"சென்னை பொது மருத்துவமனையைப்போல, சென்னையிலுள்ள ஏனைய அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்கும் பணியையும் தனியாரிடம் கொடுக்க இருக்கிறோம். முறையாகச் செயல்படாவிட்டால் அவர்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.

 

தனியார் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்ந்து மருத்துவமனைகளின் பராமரிப்பிலும், தனியார் நிறுவனங்களின் காட்டில் மழை. மக்கள் வரிப்பணம்தானே, சொந்த முதலா மோசம் போகிறது..!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தலையங்கம்: இது ரசிகனின் குரல். Theaters

சென்னையிலுள்ள திரையரங்குகளில் நடைபெறும் பகல் கொள்ளை ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெறுகிறது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

 

மாநில மனித உரிமை ஆணையம் சமீபத்தில் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதன்படி, துணை ஆணையர் நிலையிலுள்ள அதிகாரி ஒருவரைக் கொண்டு திரையரங்குகளில் நடைபெறும் சுரண்டல்களையும் பகல் கொள்ளைகளையும் விசாரித்து அதன் அடிப்படையில் காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. குறிப்பாக, திரைப்படம் பார்க்கவரும் ரசிகர்கள் குடிதண்ணீர், நொறுக்குத்தீனி போன்றவற்றை வெளியிலிருந்தோ தங்களது வீட்டிலிருந்தோ கொண்டு வரக்கூடாது என்று தடுப்பதும், பாதுகாப்பு என்ற பெயரில் அவற்றை அரங்குக்குள் நுழையும்போதே சோதித்துப் பறிப்பதும் தனிமனித உரிமை மீறல் என்று மாநில மனித உரிமை ஆணையம் கருதுகிறது என்பதை கரகோஷத்துடன் வரவேற்க வேண்டும்.

 

திரையரங்குகளில் நடைபெறும் கொள்ளைகளைத் தட்டிக் கேட்க யாருமில்லையே என்கிற மனப்புழுக்கத்துடன் படம்பார்க்க வரும் ரசிகர்கள்தான் பெரும்பாலோர். வெளியில், வெறும் | 12-க்கு விற்கப்படும் மினரல் வாட்டர் திரையரங்குகளில் | 30 முதல் |40. பாப்கார்ன் சிறியது | 50, பெரியது | 100 என்று விற்பது வெளியில் வெறும் பத்தே ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு காபி குடிக்க வேண்டுமானால் இந்தத் திரையரங்குகளில் | 40 செலவழித்தாக வேண்டும். சென்னையிலுள்ள அதிநவீன திரையரங்குகளில் தொடங்கிய இந்த "தியேட்டர் கொள்ளை' இப்போது மாவட்டத் தலைநகரங்களில் உள்ள திரையரங்குகளுக்கும் பரவத் தொடங்கிவிட்டது.

 

அதிநவீனத் திரையரங்குகள் சுமார் | 10 கோடி முதலீட்டில் அமைக்கப்படுகின்றன. இந்தத் திரையரங்குகளில் உள்ள வசதிகள் முதலீடு போன்றவற்றைக் கருத்தில்கொண்டு அதிகக் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது நியாயம்தான். ஆனால், அந்தக் கட்டணம் இவ்வளவுதான் என்கிற நிர்ணய வரம்பு இல்லாமல் இருக்கிறதே, அதுதான் அநியாயம்.

 

அதிநவீனத் திரையரங்குகளில் குறிப்பிட்ட இடங்கள் சாதாரண ரசிகனுக்கும் பயன்படும்படியாகக் குறைந்த கட்டணத்தில், அதாவது பத்தே பத்து ரூபாய் என்று அமைய வேண்டும் என்பது அரசின் நிபந்தனை. அதற்காக, ஒரு கண்துடைப்புப்போல, திரையை ஒட்டிய முதல் வரிசையை மட்டும் குறைந்த கட்டணம் என்று ஒதுக்குகிறார்கள். அதை ஒட்டுமொத்தமாக வாங்கி கறுப்பு மார்க்கெட்டில் விற்றுப் பணம் சம்பாதிப்பதற்கென்றே திரையரங்கு உரிமையாளர்களின் ஆசியுடன் இயங்கும் ஒரு "தாதா' கும்பல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

ஏனைய அத்தனை சீட்டுகளும் 100 ரூபாய் கட்டணத்துக்கு மேல். இந்த அதிநவீனத் திரையரங்குகளில் | 100 அல்லது | 120 என்கிற இரண்டே கட்டணங்கள்தான்.

 

திரையரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும் பகுதி, அந்த அரங்கத்தின் தொழில்நுட்பம், திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் போன்றவற்றின் அடிப்படையில், திரையின் அருகில் சற்று பின்னால், அதற்கும்பின்னால், அதிகம் பின்னால் அமைந்த இருக்கைகளுக்கு ஏற்பக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்ட காலம், எம்.ஜி.ஆரின் ஆட்சியுடன் போய்விட்டது என்பதுதான் யதார்த்த உண்மை.

 

திரையரங்குகளில் இருக்கைக் கட்டணம் | 100 அல்லது | 120 என்று நிர்ணயிக்கப்பட்ட பிறகு அந்தக் கட்டணத்தைத்தானே எந்தத் திரைப்படமாக இருந்தாலும் வசூலிக்க வேண்டும். அப்படியொரு லாஜிக்கும் இன்றைய திரையரங்குகளில் கிடையாது. பிரபல நடிகர்கள் நடித்த புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, இருக்கைக் கட்டணத்தைத் திரையரங்குகளே தீர்மானித்துக் கொள்கின்றன. சில திரைப்படங்களுக்கு | 1,000 வரை கட்டணம் வசூலித்துக் கொள்ளையடிக்கும் திரையரங்குகள் பல.

 

குறைந்தது | 1,000 இல்லாமல் குடும்பத்துடன் திரையரங்குக்குப்போய் திரைப்படம் பார்க்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பதால்தானே திருட்டு டிவிடிக்கள் கோலோச்சுகின்றன. திருட்டு டிவிடிக்களை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிடும் திரைப்படத்துறையினர் திரையரங்குகளின் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி வற்புறுத்தாமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை.

 

கட்டணம் வசூலிப்பது திரையரங்குகள் தரும் வசதிக்காகவே தவிர, இன்னார் திரைப்படத்துக்கு இன்ன கட்டணம், இத்தனை நாள்களுக்கு இவ்வளவு கட்டணம் என்று திரையரங்குகளே தீர்மானிப்பது பகல்கொள்ளை என்று தெரிந்தும் அரசு அதை ஏற்றுக்கொண்டிருக்கிறதே அதன் காரணம்தான் புரியவில்லை. அரசியல் தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் பெரிய அளவில் திரைப்படத் தொழிலில் ஏகபோக உரிமை செலுத்தத் தொடங்கியிருப்பது சமீபகாலத்தில்தான். ஆனால், இந்த நிலைமை நீண்டநாள்களாகவே தொடர்கிறது.

 

திரையரங்குகளின் கட்டணம், முதலீடு, தரம், வசதிகளைப் பொறுத்து | 100 அல்ல, | 1,000 கூட நிர்ணயிக்கப்படட்டும். வசதி உள்ளவர்கள் அங்கேபோய் திரைப்படம் பார்த்துக் கொள்ளட்டும். ஆனால், நடிகருக்குத் தகுந்தபடி, படத்துக்குப் படம் இந்தக் கட்டணம் வேறுபடுவது என்பது ஏற்புடையதல்ல. பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இந்தக் கட்டண நிர்ணயமுறை எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதன் காரணம் புரியவில்லை. ஆட்சிகள் மாறின. கட்சிகள் மாறின. கட்டணக் குளறுபடி மட்டும் மாறாமல் தொடர்கிறது.

 

திரையரங்குகள் வாடிக்கையாளர்களுக்கு முறையான விலையில் மட்டுமே உணவுப்பொருள்களை விற்க வேண்டும். ரசிகர்கள் கொண்டுவரும் உணவுப்பொருள்களைத் தடை செய்வது ஏற்புடையதல்ல. திரையரங்குகள் அசுத்தமாகும் என்பது அபத்தமான வாதம். அதற்காகத்தானே கட்டணம் வசூலிக்கிறார்கள். திரைப்படக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை தொடர்வது திரைப்படத்துறையினருக்கும் நல்லதல்ல; நடிகர்களுக்கும் நல்லதல்ல.

 

இந்தப் பிரச்னைகளை மக்கள் மன்றத்தின் விவாதத்துக்குக் கொண்டு வந்திருக்கும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு நமது பாராட்டுகள்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தலையங்கம்: பொறுமைக்கும் எல்லையுண்டு...

First Published : 16 Aug 2010 12:00:00 AM IST

Last Updated : 16 Aug 2010 12:52:41 AM IST
edits.jpg
வயல் வரப்புகளுக்காக வெட்டி மடிந்த சகோதரர்கள் பற்றிய கதைகள் இந்த மண்ணுக்குப் புதியதல்ல. ஆனால் அத்தகைய கொலைகள் வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பின் மேலீட்டால் நடந்தவையாகத்தான் இருந்து வந்தது. ஆனால், தற்போது தமிழ்நாட்டில், சகோதரர்களைத் தூண்டிவிட்டு, கூலிப் படைகள் கொலை செய்யும் அளவுக்கு வரம்புகள் எல்லை மீறிச் சென்றுள்ளன.

 

இரு தினங்களுக்கு முன்பு, சேலம் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடைசி வாரிசான சிவகுரு என்கிற சிறுநீரக நோயாளி, தானே இந்தக் கொலைகளைச் செய்துள்ளதாகச் சென்னையில் சரணடைந்தபோதிலும், இந்தக் கொலையைச் செய்தவர்கள் நிலம் பறிக்கும் கும்பல்தான் என்பதைக் காவல்துறை உள்பட அனைவரும் உறுதியாக நம்புகின்றனர். இதன் பின்புலத்தில் சில அரசியல்வாதிகள் இருப்பதாகவும் வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது. ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. போலியாக பவர் ஆப் அட்டார்னி தயாரித்து வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று ஏற்கெனவே காவல்நிலையத்தில் புகார் செய்தும்கூட, நடவடிக்கை இல்லை என்பதால்தான் இந்தக் கொலைகள் நடந்துள்ளன.

 

இந்தக் கொலைகள் நடந்த பண்ணை வீட்டுக்கு வந்த மோப்ப நாய், அங்கே தூவப்பட்டிருந்த மிளகாய்ப் பொடி காரணமாக, வீட்டுக்கு உள்ளேயும் நுழையாமல் திரும்பியது. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான தந்தை முன்னாள் காவல் ஆய்வாளர். ஒரு சகோதரருக்குக் கராத்தே தெரியும். ஆகவே இது கூலிப்படையின் செயல்  என்றே எல்லோரும் சொல்கிறார்கள்.

 

சென்ற ஆண்டு, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதும், கொலையாளியைப் பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பின்னர் அவர் இறந்து போனார் என்பதும் பெரும் பரபரப்பாகப்  பேசப்பட்டது. அந்தக் கொலையும், கொலையான நபருக்குச் சொந்தமான சில ஏக்கர் நிலத்தை விற்க மறுத்ததால் நிகழ்த்தப்பட்ட கொலை என்றும், இதில் இரு முக்கிய அரசியல்வாதிகளின் சகோதரர் மற்றும் மகன் சம்பந்தப்பட்ட நிலபேரம் காரணம் என்றும் பேசப்பட்டது. கொலையாளி காவல் நிலையத்தில் எப்படி இறந்தார் என்பதை விசாரிக்க குழு அமைத்தார்கள். என்ன ஆயிற்று? மக்கள் மறந்தே போனார்கள்.

 

இன்று தமிழகத்தில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் என்ற பெயரில் மிகப்பெரும் மோசடிகள் அரசியல்வாதிகளின் ஆசியுடன், கடைக்கண் பார்வையுடன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. முக்கியமான ஓர் இடத்தில் காலி மனை அல்லது பழைய வீடு இருக்குமானால், இந்தக் கூட்டம் உள்ளே நுழைந்து, விற்றுவிடுங்கள் என்று ஆலோசனை சொல்கிறது. மறுத்தால் கொலை மிரட்டல் விடுக்கிறது. விற்கச் சம்மதித்தால், விலையை அவர்கள் தீர்மானிப்பார்கள். பவர் ஆப் அட்டார்னி பத்திரம் செய்து அவர்களிடம் கொடுத்துவிட வேண்டும். இரண்டு மடங்கு விலைக்கு விற்றுவிட்டு, பேசிய தொகையில் பாதியை உரிமையாளர்களிடம் கொடுத்துவிட்டு, மிச்சத் தொகையை இந்தக் கூட்டம் அப்படியே பங்குபோட்டுக் கொள்கிறது. இதுதான் இன்று தமிழகத்தில் நடைபெறும் நிலம் பறிக்கும் கும்பலின் கொள்ளையடிக்கும் தந்திரம்.

 

இவர்களை மீறி ஒரு பத்திரம் எழுதப்பட்டால்கூட இந்தக் கூட்டத்துக்கு முதல் தகவல் போய்ச் சேரும் வகையில் அரசியல் செல்வாக்கு இவர்களுக்கு இருக்கிறது.

 

இந்த நிலம் பறிப்புக் கூட்டத்தில் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் முக்கிய நபராக இருந்தாலும், ஒவ்வொரு பகுதியைப் பொறுத்து, ஆங்காங்கே பலமாக இருக்கும் மாற்றுக் கட்சிப் பிரமுகரையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டுவிடுகிறார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் சட்டை செய்வதில்லை.

 

இந்த நிலம் பறிக்கும் கூட்டத்திடம் ஒரு சர்வே இருக்கிறது. ஊருக்குள் எந்தெந்த வீட்டில் நுழைந்தால் கேட்க நாதியில்லை, யாருக்கு எந்தப் பின்புலம் இருக்கிறது, எந்த வீட்டில் இருக்கும் பெற்றோர் தனியாக இருக்கிறார்கள், யார் இந்தச் சொத்தை வாங்கிப் போட்டுவிட்டு வெளிநாட்டில் இருக்கிறார்கள் என எல்லா புள்ளிவிவரமும் இருக்கிறது. அதன் பிறகே இவர்கள் தங்களுடைய நிலம் பறிப்பு நடவடிக்கையைத் தொடங்குகிறார்கள்.

 

ஒவ்வொரு மாவட்டத் தலை-களும் தங்களை அப்பகுதியின் குறுநில மன்னர்களாக நினைத்துக் கொண்டு கோலோச்சுவதுதான் இந்த நிலைமைக்கு எல்லாம் காரணம் என்பதை நாம் சொல்லித் தெரிவிக்க வேண்டியதில்லை. இன்ன மாவட்டம் இன்னாருக்குச் சொந்தம் என்று பட்டா போட்டுக் கொடுக்காத குறை.

 

காவல்துறையும் அரசியல் கட்சித் தலைமைகளும் இதில் கண்மூடிக் கொண்டு இருக்கலாம். ஆனால் மக்கள், யார் அனுபவத்தில் இருந்த சொத்து யாருக்கு எப்படிக் கைமாறியது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாக்குச் சாவடியின் வரிசையில் நிற்கும்போது அங்கே இருக்கும் ஒவ்வோர் அரசியல்வாதியையும் பார்த்து எந்த அளவுக்கு வயிற்றெரிச்சல் அடைகிறார்கள் என்பதைப் பொறுத்து வாக்குகளும் இடம் மாறும். கட்சித் தலைமைகள் இதைப் புரிந்துகொண்டு, வால்-கள் ஆடாமல் இருக்க வகை செய்தால் மட்டும்தான் தமிழகத்தில் பல குடும்பங்கள் அச்சமின்றி இருக்கும். மக்களாட்சியில் அச்சத்தை மாற்றவல்ல மாமருந்தாக ஆட்சி மாற்றம் அமைந்த சரித்திரங்கள் பல உண்டு என்பதை இவர்கள் நினைவில் நிறுத்தினால் நலம்!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Govt quota engg students cry foul over excess fees

Karthika Gopalakrishnan | TNN

Chennai: R Devina (name changed on request) is among the hundreds of students with an admit to an engineering college but finds herself up against an unjustly high fee.The youngster,who wants to pursue post-graduate course at an engineering college in Kunrathur,has got through the government quota through singlewindow counselling but still finds it out of her reach.
It is heart-rending to find that even after getting a seat under government quota,Im being asked to pay a tuition fee of Rs 90,000 as against the mandated amount of Rs 45,000.Together with transport fees,the amount comes up to nearly Rs 1.1 lakh a year.I cant afford it, she said,with tears in her eyes.
Devina,who lost her father early on,is now looking for support from charitable organisations.Since she will lose the seat if she does not pay the fee by August 31,she has approached the Tamil Nadu State Council for Technical Education (TNSCTE) to lodge a written complaint.
I have been told that the complaint will be taken into consideration but there was no word on whether it would be effective, she said.MS Palanichamy,vice-chairman,TNSCTE,said inquiry was an elaborate process once a complaint was lodged.First,we approach the college and inform the principal,without revealing the complainants identity.After recording the principals response,we seek a response from the management and examine records from the college office.We select a few cases at random and look at the fees collected.Next,we speak to some students,both under the state and management quota,if they had to pay a capitation fee or excess fee.After this,we compile all the responses and present a report to the government for action to be taken, he said.
The panel,which looked into 35 complaints of collection of excess fee across the state,had finished inspecting six colleges in the city.The report was expected to be submitted to the government soon.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CHENNAI: Appointment of a new chief information commissioner for Tamil Nadu is likely to be a complex task for the State government as right to information (RTI) activists have stepped up their campaign to prevent the appointment of KS Sripathi to the post. 

With the meeting of the selection committee for the appointment of the new CIC scheduled on Monday, a group of activists on Sunday met AIADMK general secretary Jayalalithaa who, as a opposition leader, is part of the three-member selection committee headed by chief minister M Karunanidhi. The other member of the committee is a minister deputed by the chief minister. 

The activists - V Madhav of Association for India's Development, Nityanand Jayaraman of Tamil Nadu Right To Information Campaign and K Saravanan of Corporate Accountability Desk told Jayalalithaa that the name of chief secretary KS Sripathi was doing the rounds as the next CIC even before the meeting of the selection committee. 

"We told the opposition leader that it was when Sripathi was the vigilance commissioner that Tamil Nadu Vigilance Commission (TNVC) pushed for the exemption of directorate of vigilance and anti-corruption (DVAC) and TNVC from the purview of RTI Act. Moreover, as the chief secretary, Sripathi had challenged the order of the Tamil Nadu State Information Commission which directed the government to disclose details as to whether IAS and IPS officers have disclosed their assets,'' Madhav said. 

Jayalalithaa assured the activists that she would do her best. However, it is not known whether she would participate in the selection committee's meeting on Monday. 

While the present Tamil Nadu chief information commissioner S Ramakrishnan's term is to end this month, RTI campaigners started their campaign last year itself. Some of the activists inspected, under the RTI Act, records of appointment of the present chief and other information commissioners and found the procedure followed was arbitrary. 

The campaign gathered momentum last month when activists from several parts of the state applied for the CIC post to have a locus-standi to legally challenge the selection if it was not done in a transparent manner. 

"We want the state government to prescribe rules for the appointment. It should call for applications by giving advertisement through media, prescribing minimum educational qualification and experience for the candidates. It should also test the capability and integrity of the applicants and shortlist the candidates and invite public objections, if any, before sending the panel of names to the selection committee,'' said H Krishnaraj Rao, an activist. 

On August 4, about 50 RTI activists from across the country including Arvind Kejriwal and Aruna Roy met in New Delhi and discussed how governments at the Centre and the states could be pressured to evolve a clear eligibility criteria and transparent selection process for the appointment of information commissioners to the state and the central information commissions. 

As per Section 15 of RTI Act, "the state chief information commissioner shall be a person of eminence in public life with wide knowledge and experience in law, science and technology, social service, management, journalism, mass media or administration and governance.'' CIC can hold office for five years but not beyond the age of 65. 

jeeva.pugazvendan@timesgroup.com 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Tamil Nadu least compliant with NREGA's norm on payment mode
nwbottom_left1.gifnwbottom_right1.gif
Published: August 22,2010




 

 

 

 

 

 

 

 

 

 

New Delhi, Aug 22 Less than a per cent of the wages paid under NREGA was routed through bank and post office accounts in Tamil Nadu, even as the country&aposs average stood at 84 per cent last fiscal.

The government has been stressing on NREGA wage payments through bank or post office accounts to avoid partial or non-payment of wages to workers, complaints of which had become quite frequent.

 

In 2009-10, while total wage under the rural employment guarantee scheme paid in Tamil Nadu was Rs 1,711 crore, just Rs 2.4 crore was disbursed through bank and post office accounts, officials informed.

 

With 0.14 per cent of wages for unskilled workers under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) paid through the accounts, the southern state is behind even the less-banked states of Northeast.

 

This is despite regional spread of branches of scheduled commercial banks being skewed towards southern India that has 28.1 per cent of the country&aposs total 88,363 bank branches.

 

Central part of the country has almost 20 per cent of the branches, 17 per cent in the north, 16 per cent each in the east and the west, and a meager 2.7 per cent in the Northeast.

 

Of the 90&aposunbanked&aposblocks in India, about 80 are in the Northeast, according to the Reserve Bank of India.

 

While Nagaland and Sikkim beat the national average with 85.4 per cent and 844 per cent wages disbursed through bank and post office accounts, Assam and Manipur showed better compliance to guidelines with 76 per cent and 50 per cent.

 

Rest of the Northeast -- Meghalaya, Tripura, Arunachal Pradesh and Mizoram -- paid over 30 per cent through accounts.

 

"As per the Operational Guidelines, 2008 of MGNREG Act, the type of banks to be allowed (eg rural banks, cooperatives, nationalised, post offices, mobile banks for inaccessible areas), should be selected in the light of the local conditions, with a view to ensuring smooth and timely payments,"Finance Minister Pranab Mukherjee recently said.

 

States and Union Territories that showed compliance of 99 per cent and above are Jharkhand, Himachal Pradesh, Goa, Dadra and Nagar Haveli, Uttarakhand, Madhya Pradesh, Uttar Pradesh and Gujarat, sources informed.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

குப்பைக் கிடங்கில் 33 கோடி ரூபாய்!
செம்மொழி மாநாட்டு அதிர்ச்சி!

Kovai%202.jpg



சுதந்திர தின விழாவில் கொடியேற்றி வைத்து கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை சிலாகித்திருக்கிறார் முதல்வர்.

ஆனால், செம்மொழி மாநாட்டுக்காக 33 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட 60 நடமாடும் நவீனக் கழிவறைகள் குப்பைமேட்டில் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள் கோவை மக்கள். 

உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது சுகாதார சீர்கேடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, கோவை மாநகராட்சி சார்பில் நவீன நடமாடும் கழிவறைகள் வாங்க தீர்மானம் போடப்பட்டு, மும்பையை சேர்ந்த ‘விண்டோஸ் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திடம் இ-டெண்டர் மூலம் 33 கோடியே 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 60 நடமாடும் கழிவறைகள் வாங்கப்பட்டன.

இதில் 8 கழிவறைகள் மிகவும் நவீனமயமான கழிவறைகள். ஒன்றின் மதிப்பு 9 லட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய். இவை அனைத்தும் மாநாட்டு வளாகத்தில் மிக முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டன. 

Kovai%201.jpgஅதே போல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மாநாட்டு வளாகத்தில் 10 கழிவறைகள் வைக்கப்பட்டன. இதன் ஒன்றின் மதிப்பு 6 லட்சத்து 36 ஆயிரத்து 600 ரூபாய். அதே மாநாட்டு வளாகத்தில் வெஸ்டர்ன் கழிவறைகள் 10 அமைக்கப்பட்டிருந்தன. இதன் ஒன்றின் மதிப்பு 6 லட்சத்து 35 ஆயிரத்து 600 ரூபாய்.

அவினாசி சாலையில் வைக்கப்பட்டிருந்த ஆண்களுக்கான 12 கழிவறைகளில் ஒன்றின் மதிப்பு 5 லட்சத்து 48 ஆயிரத்து 800 ரூபாய், அதே போல் பெண்களுக்காக வைக்கப்பட்டிருந்த 20 கழிவறைகளில் ஒன்றின் மதிப்பு 3 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய். மொத்தம் 60 நடமாடும் கழிவறைகள் 33 கோடியே 98 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது.

மாநாடு முடிந்த பிறகு, ‘இந்த கழிவறைகள் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயன்பாட்டுக்காக வைக்கப்படும்’ என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால், மாநாடு முடிந்து இரண்டு மாதங்கள் ஆன பிறகும் இந்த நவீன நடமாடும் கழிவறைகளை கோவை மாநகரில் எங்கும் காண முடியவில்லை. மாநாட்டிற்கு பிறகு, இந்த கழிவறைகள் என்ன ஆனது என்பதை அறிய மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது சரியான பதில் இல்லை. 

இந்நிலையில் இந்த அறுபது கழிவறைகளும் கோவையை அடுத்த வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் இருப்பதாக நமக்கு தெரிய வர, அதனை பார்வையிட சென்றோம். ஆனால், அங்கிருந்த காவலர்கள் நம்மை உள்ளே அனுமதிக்கவில்லை. எப்படியாவது உள்ளே சென்று அதன் நிலையை பார்த்துவிட வேண்டும் என்று இருந்த நிலையில்தான் கடந்த திங்கட்கிழமை, பேரூர் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள அந்த கழிவறைகளை பார்வையிடச் செல்கிறார் என்ற தகவல் நமக்கு கிடைக்க, அவருடன் நாமும் சென்றோம். 

33 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நவீன கழிவறைகள், வெள்ளலூர் குப்பை கிடங்கின் பின் பகுதியில் கிடந்தன. 

அதனை பார்வையிட்ட வேலுமணியிடம் பேசினோம். 

Kovai.jpg‘‘இந்தக் கழிவறைகளை வாங்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்த போதே எங்கள் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி மும்பையை சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது. ஒவ்வொரு கழிவறைகளும் லட்சக் கணக்கில் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் உண்மையான விலை இவ்வளவு அதிகமாக இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. இதில் பல கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக சந்தேகப்படுகிறோம். கோவையில் தற்போது பொது இடங்களில் தேவையான அளவுக்கு கழிவறைகள் இல்லை. அப்படி ஏதோ ஒரு சில இடத்தில் இருக்கும் கழிவறைகளும் சுகாதாரமாக இல்லை. அதிக மதிப்பில் டெண்டர் விடப்பட்டு குறைந்த செலவில் தரமற்ற நிலையில் கட்டப்பட்ட கழிவறைகளும் தற்போது தரைமட்டமாக உள்ளன. 

செம்மொழி மாநாட்டிற்காக வாங்கப்பட்ட இந்த கழிவறைகள் எங்கே என கடந்த இரண்டு மாதமாகவே தேடி வந்தோம். தற்போது அவற்றைக் கண்டு பிடித்துவிட்டோம். இந்தக் கழிவறைகள் குறித்த அனைத்து தகவலையும் மாநகராட்சி வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் கோவை மாநகராட்சியை கண்டித்து கண்டன போராட்டங்கள் நடத்தப்படும்’’ என்றார் வேலுமணி.

இது குறித்து கோவை மாநகராட்சி மேயர் வெங்கடாசலத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘எதுவாக இருந்தாலும் நேரில் வந்து பேசுங்கள்’’ என்றார். நாமும் அவரது அலுவலகத்துக்கு சென்றபோதெல்லாம் அவர் கிடைக்கவே இல்லை. கழிவறைகள் வாங்கியதில் ஊழல் நடந்ததோ இல்லையோ... இத்தனை ரூபாய் கொடுத்துவிட்டு அதை ஏன் குப்பைக் கிடங்கில் வீசவேண்டும் என்ற கேள்விக்கு கோவை வாசிகள் பதிலை எதிர்பார்க்கிறார்கள்.

மாநாட்டுக்குப் பிறகு கோவையின் உள்கட்டமைப்பு வசதி அதிகரிக்கும் என அரசு கொடுத்த வாக்குறுதியின் அர்த்தம் இதுதானா..?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பயன்தராத புதிய மேம்பாலம்!
புலம்பும் நெல்லை

Nellai%204.jpg



நெல்லை மக்களின் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக இருந்தது, வண்ணார் பேட்டை ரவுண்டானா பகுதியில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல். பாளையங்கோட்டை, குலவணிகர்புரம், என்.ஜி.ஓ. காலனி, பெருமாள்புரம், கே.டி.சி.நகர், வி.எம்.சத்திரம் என பல பகுதிகளிலிருந்தும், கிழக்கு மற்றும் மேற்கு திசையில் உள்ள அனைத்து ஊர்களிலிருந்தும் நெல்லை ஜங்ஷன், டவுன் பகுதிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கடந்து செல்லும் பகுதி வண்ணார்பேட்டை ரவுண்டானா. 

Nellai%203.jpgஇந்தப் பகுதியில் நிலவிய கடும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ஒரே வழி, பாலம் கட்டுவது தான் என்று முடிவு செய்து பாலமும் கட்டி திறந்து விட்டார்கள். ஆனால், போக்குவரத்து நெரிசல் தீரவில்லை. தனியாருக்காக பாலத்தையே திசைமாற்றி கட்டி விட்டார்கள் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது நெல்லையில்.

இப்பிரச்னையை கையில் எடுத்து போராடிய பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மோகன்ராஜ் நம்மிடம் பேசினார். “வண்ணார்பேட்டை போக்குவரத்து நெரிசல் நெல்லையில் பிரசித்தம். இதற்கு தீர்வு, மேம்பாலம் கட்டுவதுதான். அதை எந்த திசையில் கட்டுவது? மாநகர காவல்துறை ஆய்வு மேற்கொண்டது. வண்ணார்பேட்டை ரவுண்டானாவை சுற்றி ஒரு மணிநேரத்தில் 16 ஆயிரம் வாகனங்கள் பயணித்தன. அதில் வடக்கு தெற்காக உள்ள மதுரை டூ நாகர்கோவில் சாலையில் 4- ஆயிரம் வாகனங்களும், கிழக்கு மேற்காக உள்ள திருவனந்தபுரம் சாலையில் 12 ஆயிரம் வாகனங்களும் பயணிக்கின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டது. 

அதிக போக்குவரத்து நிறைந்த திருவனந்தபுரம் சாலையில் பாலம் கட்டினால் நெரிசல் தீரும் என்று காவல் துறை அறிக்கை சமர்பித்தது. ஆனால் பாலத்தை வடக்கு & தெற்கு திசையில் கட்டுவது என்று முடிவு செய்தனர். நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தோம்.

Nellai%202.jpgகிழக்கு & மேற்காக கட்டினால் 3 ஆயிரத்து 790 சதுர அடி நிலம் தனியாரிடமிருந்து வாங்க வேண்டியது வரும். புறவழி சாலைகளில் தான் பாலங்கள் கட்டப்படுகின்றன என்று நெடுஞ்சாலை துறையிடம் பேசி வடக்கு&- தெற்காக மேம்பாலத்தை கட்டி முடித்து விட்டார்கள். 

இதற்கு முக்கியமான, உண்மையான காரணம் என்னவென்றால், கிழக்கு மேற்காக உள்ள திருவனந்தபுரம் சாலையில் புகழ்பெற்ற வணிக நிறுவனங்கள் பெரிய தொகையை பல தரப்பிலும் கவனித்து பாலத்தை திசை திருப்பி விட்டதுதான். நெல்லையில் உள்ள ஈரடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறந்த பிறகு, மேம்பாலத்தின் இருபுறமும் இருந்த புகழ்பெற்ற வணிக நிறுவனங்கள், மக்கள் கூட்டமின்மையால் பூட்டப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டன. 

அதைக் கருத்தில் கொண்டு, திருவனந்தபுரம் சாலையில் உள்ள தனியார் நிறுவனங்கள், கவனிக்க வேண்டியவர்களை கவனித்து விட்டு பாலத்தை திசைதிருப்பி விட்டன. அவர்களுக்கும், மாநகராட்சியின் முக்கிய புள்ளிகளுக்கும் கொண்டாட்டம் தான். ஆனால், மக்கள் தான் திண்டாடி வருகின்றனர்” என்றார்.

சமூக ஆர்வலரும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞருமான செல்வகுமார் என்ன சொல்கிறார்?

“மொத்தத்தில் மக்களின் வரிப்பணம் ரூ.16.40 கோடியை வீணடித்து விட்டார்கள். தனியாருக்காக பாலத்தையே திசை திருப்பி விட்டார்கள். பாளை குலவணிகர்புரத்திலிருந்து, கொக்கிரகுளம் வரை நான்கு வழிபாதையாக மாற்றப் போகிறோம் என்று மிகவும் பழமையான, பெரிய மரங்களையெல்லாம் வெட்டித் தள்ளினார்கள். சாலையை நான்கு வழி ஆக்கினார்களா? வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக வேறு எங்கும் மரத்தை நட்டு வைத்தார்களா? அதுவும் இல்லை. அந்த ரவுண்டானாவை கடக்கும் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் கடக்க வேண்டியுள்ளது” என்றார்.

Nellai%201.jpgதே.மு.தி.க.வின் வர்த்தக அணியைச் சேர்ந்த ஜெயசந்திரனிடம் பேசினோம்.

“அந்த மேம்பாலத்தை பயன்படுத்தும் வாகனங்கள் எண்ணிக்கை என்ன? மேம்பாலத்தின் கீழே போகும் வாகனங்களின் எண்ணிக்கை என்ன? இப்போது ஆய்வு நடத்தச் சொல்லுங்கள். மக்களை மறந்து விட்டு தனியாருக்காக பாலத்தை கட்டியுள்ளார்கள். மாநகராட்சி தொலைநோக்கு பார்வை-யில்லாமல் செயல்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து, மதுரைக்கு செல்லும் வாகனங்கள் எதுவும் இப்போது வண்ணார்பேட்டை வரவேண்டிய அவசியம் இல்லை. அவை பொன்னாகுடி அருகிலேயே தங்கநாற்கர சாலையில் சென்று விடுகின்றன. ஆனால் பாளை பகுதியிலிருந்து சந்திப்பு, டவுன் செல்லும் வாகனங்கள் நாளுக்கு நாள் கூடி வருகின்றன. இதனால் வண்ணார்பேட்டை பகுதியில் மீண்டும் விரைவில், இன்னும் நெரிசல் வரும்” என்றார். இந்தப் பிரச்னை குறித்து நெல்லை துணை மேயர் முத்துராமலிங்கத்திடம் பேசினோம். “மேம்பாலம் முழுக்க முழுக்க அரசு விதிமுறைகளின் படிதான் கட்டப்பட்டுள்ளது. எந்த ஒரு தனிநபருக்காகவும் நிறுவனங்களுக்காகவும் திசைமாற்றம் செய்யப்-படவில்லை. திருவனந்தபுரம் சாலையில் கட்டுவதற்கு தனியார் இடங்களை வாங்க வேண்டியது வரும். அதற்கு பல வருடங்கள் ஆகும். இப்போது போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது என்பது தான் உண்மை” என்றார்.

நெல்லை மாநகர காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் நிஜாமுதீனிடம் பேசினோம்.

“முதலில் நெரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் நெரிசல் இல்லை” என்றார்.

பொதுமக்களோ, ‘மேம்பாலம் கீழே நுழைந்து செல்லும் போது சர்வீஸ் ரோட்டில் உள்ள வாகனங்களும் சேர்ந்து திரும்புகின்றன. இதனால் சிறிது கவனம் திருப்பினாலும் விபத்துதான். திருவனந்தபுரம் சாலையில்மேம்பாலம் கட்டப்பட்டிருந்தால் நிச்சயம், போக்குவரத்து நெரிசலற்ற, பாதுகாப்பான பயணம் கிடைத்திருக்கும்’ என்கின்றனர். 

ஏழை, பணக்காரன் என்று பாகுபாடில்லாமல், மக்களுக்காக பாடுபடும் அரசு என்றுதான் ஆட்சியாளர்கள் சொல்லுவார்கள். ஆனால், நெல்லையில் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ‘இது பணக்காரங்களுக்கு மட்டும் பாடுபடும் அரசு’ என்ற குரல் தான் நெல்லையில் ஓங்கி ஒலிக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

30 ஆண்டுகள்... ஒரு லட்சம் மனுக்கள்!
முகவரி தேடி முகாரி பாடும் கிராமம் 

Raja%204.jpg



அறுபத்து மூன்றாவது சுதந்திர தின விழாவை கொண்டாடி உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதாக பெருமிதப்பட்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். 

ஆனால், அதே இந்தியாவில் தனது முகவரியைத் தேடி ஒரு லட்சம் மனுக்களோடு முப்பது ஆண்டுகளாக முகாரி பாடிக் கொண்டிருக்கிறது ஒரு கிராமம். 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம்தான் டி.எடப்பாளையம். இங்கு 4 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். ரேஷன் கார்டு, வாக்குரிமை, வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் வருவாய்த்துறை, ‘இப்படி ஒரு ஊரே வரைபடத்தில் இல்லை’ என கைவிரித்து வருகிறது. இதுதான் இந்த கிராம மக்களின் முகவரி பிரச்னை. 

Raja%203.jpgகேள்விப்பட்டதுமே கலங்கிப் போய் அந்த கிராமத்தில் லேண்ட் ஆனோம். 

முதலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கிளைத் தலைவரான சையத்கரீம் நம்மிடம் பேசினார். 

‘‘எங்கள் கிராமம், இதற்கு முன்னாடி சித்தலிங்கமடம் ஊராட்சியில் டி.எடப்பாளையம் கிராமமாக இருந்தது. 1971&ல் தனி ஊராட்சியாக டி.எடப்பாளையம் என்று பிரிக்கப்பட்டது. ஆனால், கிராமத்துக்கு ஏற்ற எல்லை பிரிக்கவில்லை. அதனாலேயே கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதையும் செய்யாமல் புறக்கணிக்கிறார்கள் அரசுத் துறை அதிகாரிகள். இந்தப் பிரச்னையால், ஊர் நிலபுலன்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாயும், பத்திரப் பதிவுகள் மூலம் கிடைக்கும் வருவாயும் ஊராட்சிக்கு கிடைப்பதில்லை.

காரணம், வருவாய்த்துறை ‘கெசட்’படி டி.எடப்பாளையம் என்ற கிராமமே வருவாய்த் துறையிடம் இல்லை. இதனால்தான் பல்வேறு குழப்பங்கள். கிராமப் பள்ளிக்கூடத்தில் படிப்பை முடித்துவிட்டு, மேல் படிப்புக்காக கிராமத்துப் பிள்ளைகள் வெளியூர் போனால், அங்கே, ‘இப்படியொரு ஊரை நாங்கள் கேள்விபட்டதில்லையே...’ என்று சொல்கிறார்கள். ‘இல்லாத ஊரை, இருப்பதாகச் சொல்கிறீர்கள்...’ என்றும் சொல்கிறார்களாம். இதனால் எங்கள் கிராமத்துக் கல்வித்தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் எங்கள் ஊரில் உள்ளவர்கள் பலரும் வரிசையாக ஊரை விட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களும், ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களும் மட்டும்தான் இந்த கிராமத்தில் மிஞ்சி இருக்கிறார்கள்.

அரசின் எந்த உதவியும் இல்லாமல் தவிக்கும் எங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக பிரித்திருப்பதை, அரசு ஆவணங்களில் முறைப்படி பதிவு செய்யச்சொல்லி பல போராட்டங்களை நடத்தி விட்டோம். குடும்ப அட்டை ஒப்படைக்கும் போராட்டம், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் போராட்டம் என்று நிறைய போராட்டங்கள் நடத்தப்பட்டப் பிறகும் தீர்வில்லை.

ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும்போதும், மாவட்டக் கலெக்டர் உட்பட உயரதிகாரிகள் வருகிறார்கள். சமாதானம் சொல்கிறார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

இனிமேலும் எங்களுக்குப் பொறுமை இல்லை. விரைவில் இந்த கிராமத்தை விட்டு வெளியேறப் போகிறோம். மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்குச் சென்று குடியேறப் போகிறோம். அங்கேயே குடும்பம் நடத்தப் போகிறோம். வரும் சட்டமன்ற தேர்தலையும் புறக்கணிப்போம்...’’ என்று பிரச்னைகளையும் அது தீர வகுத்திருக்கும் அதிரடி திட்டங்களையும் நம்மிடம் இறக்கி வைத்தார். 

Raja%202.jpgஅடுத்து நம்மிடம் பேசினார் ஜப்பார். ‘‘எங்கள் கிராமத்தைச் சுற்றிலும் சித்தலிங்கமடம், வடமருதூர், எல்ராம்பட்டு, கொடியூர் போன்ற கிராமங்கள் இருக்கு. எங்க கிராமத்துல 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைகள் எதுவும் நடக்கலை. மற்ற ஊர்களுக்கும் போய் வேலை செய்ய முடியலை. எல்லைப் பிரச்னையைக் காரணம் காட்டி விரட்டுறாங்க. வருவாய்த்துறை வரைபடத்தில் எங்கள் கிராம எல்லை வகுத்துச் சொல்லப்படாததால், யாரிடமும் நாங்கள் மறுத்துப் பேச முடியவில்லை. ஆனாலும், எங்க கிராமத்தை மையமா வெச்சு, ஊராட்சி மன்ற தலைவரை தேர்வு செய்கிறார்கள். எங்கள் கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகமெல்லாம்கூட இருக்கிறது. எல்லாம் இருந்தும் அரசு வரைபடத்தில் பெயர் இல்லையே...’’ என்று வேத¬னையோடு அலுத்துக் கொண்டார்.

எடப்பாளையம் கிராம தலைவர் அப்துல் கபூரிடம் பேசினோம். ‘‘எங்கள் கிராமத்தில் ஒரு மின்கம்பத்திற்கு பல்பு மாட்டுனாக்கூட பி.டி.ஓ.விடம்தான் முறையிடணும். தெரு மின்விளக்கு கரன்ட் பில்லை கூட பி.டி.ஓ. ஆபீஸ்தான் கட்டுது. தனி ஊராட்சி பிரித்தும் எங்கள் கிராமத்திற்கு அடிப்படை பிரச்னைகளை பூர்த்திசெய்ய முடியவில்லை’’ என்று இயலாமையை சொல்லிப் புலம்பினார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியிடம் கேட்டபோது, ‘‘இப்படியொரு கிராமம் இருக்கா?’’ என்று ஆச்சரியமாகக் கேட்டவர், ‘‘கிராமத்து மக்களை மனு கொடுக்கச் சொல்லுங்க. பிரச்னையை உடனே தீர்த்துடலாம்...’’ என்றார். என்னது? லட்சத்தி ஒன்றாவது மனுவா..? ஏ... அரசு எந்திரமே... உனக்கு மனசாட்சியே கிடையாதா?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

எம்.எல்.ஏ.வின் மணல் வம்பு..!
-போராடும் வருவாய்த்துறை

Sand.jpg



துணைவேந்தரை அடிக்கப் பாய்ந்தார், அரசு மேடையிலேயே வைத்து தலித் இன அரசு அதிகாரியை சாதியைச் சொல்லித் திட்டி அடிக்கப் பாய்ந்தார் என்றெல்லாம் ஆளும்கட்சி அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மீதெல்லாம் தொடர்ந்து சர்ச்சைகள் அணிவகுக்கின்றன. 

இந்நிலையில், மணல் கடத்தல்காரர்களை விரட்டிப் பிடித்த வருவாய்த் துறையின் பெண் ஊழியரை தரக்குறைவாக பேசியதாக ஆளும்கட்சி மாவட்டச் செயலாளர் மீது குற்றச்சாட்டுக் கிளம்பி, கிடுகிடுத்துக் கிடக்கிறது கிருஷ்ணகிரி.

இந்தக் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செங்குட்டுவனை எதிர்த்து மாவட்டத்தின் பல இடங்களிலும் வருவாய்த் துறையினர் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். 

இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி சீலேப்பள்ளி ஏரியில் இரண்டு டிராக்டர்களை வைத்து ஒரு கும்பல் சட்டவிரோதமாக மணல் எடுத்துச் செல்வதாக அந்தப் பகுதிக்கு உட்பட்ட குருபரபள்ளி வருவாய்த்துறை ஆர்.ஐ.யான சித்ராவுக்குத் தகவல் கிடைத்தது. உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார் சித்ரா. சட்டவிரோதமாக மணல் எடுத்துக் கொண்டிருந்தவர்களைத் தடுத்தார். உடனே, ‘இந்த டிராக்டர்கள் யாருடையது தெரியுமா? மாவட்டச் செயலாளர் செங்குட்டுவனுக்கு வேண்டப்பட்டவர்களுடையது. தேவையில்லாமல் வம்பு வேண்டாம்...’ என்று சொல்லி மிரட்டியிருக்கிறார்கள், மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள். இருந்தும் விவகாரத்தை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்று விட்டார் சித்ரா.

இந்தத் தகவல் உடனே, மாவட்டச் செயலாளர் செங்குட்டுவனுக்குச் சென்றது. 

Sand%201.jpgதகவல் கிடைத்த சிறிது நேரத்துக்குள் செங்குட்டுவன் தனது ஆதரவாளர்களுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விட்டார். ஸ்டேஷனுக்கு வெளியிலேயே சித்ராவை பார்த்து தாறுமாறாகப் பேசியிருக்கிறார் செங்குட்டுவன். அவர் கூட வந்தவர்களும் சித்ராவை தகாத வார்த்தைகளால் பேசியிருக்கிறார்கள். இதையெல்லாம் சாமர்த்தியமாக செல்போன் கேமராவில் பதிவு செய்து விட்டார் சித்ரா. இதனைத் தொடர்ந்து, சித்ராவுக்காக வருவாய்த் துறை ஊழியர்கள் மாவட்டத்தின் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்’’ என்றார்.

இது குறித்து சித்ராவை தொடர்பு கொண்டு கேட்டோம்.

‘‘நடந்த சம்பவங்கள் குறித்த பதிவுகளை வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கத்தினரிடம் கொடுத்து விட்டேன். மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்...’’ என்று மட்டும் சொன்னார்.

செங்குட்டுவனை தொடர்பு கொண்டபோது, ‘‘வேப்பனபள்ளி சமத்துவபுர பணிக்காக மணல் எடுக்கப்பட்டது. அப்படி மணல் எடுத்த போதுதான், வருவாய்த்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்த தகவல் கிடைத்து, உடனே சம்பவ இடத்திற்குச் சென்றேன். விவரங்களை சொன்னேன். ஆனால், டிராக்டரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விட்டார்கள். மற்றபடி, வேறு எதுவும் நடக்கவில்லை...’’ என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார்.

மொத்தத்தில் நடப்பது எதுவும் நல்லதாகத் தெரியவில்லை!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

துணைவேந்தரை அடித்தாரா மாலைராஜா? 
அதிர்ச்சியில் நெல்லை

Malai.jpg



அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மோதிக்கொள்வது ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதிய விஷய-மில்லைதான். அந்த வகையில் லேட்டஸ்ட் மோதல் நெல்லையில் நடந்திருக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவரை, அவருடைய அறைக்குள்ளேயே புகுந்து, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., தாக்கினார் என்கிற தகவலால் நெல்லை மாவட்டமே பரபரத்துக் கிடக்கிறது.

நெல்லையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருப்பவர் காளியப்பன். இவரை அறைக்குள் புகுந்து தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார், திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா.

என்னதான் நடந்தது? விசாரித்ததில் கிடைத்த விவரங்களைப் பார்ப்போம்...
Malai%202.jpg
நெல்லை அண்ணா பல்கலை-கழகத்தின் துணைவேந்தர் காளியப்பனுக்கும், அதே பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான மாலைராஜாவுக்கும் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. சிண்டிகேட் கூட்டங்களில் தன்னை புறக்கணிப்பது, தகுந்த மரியாதை அளிப்பது இல்லை, தற்காலிக பணிநியமனங்களில் தன்னை புறக்கணிப்பது போன்ற பல காரணங்களால் துணைவேந்தர் காளியப்பன் மீது, ஏகக்கடுப்பில் இருந்துள்ளார் மாலைராஜா. இந்நிலையில், நெல்லை அண்ணா பல்கலைக் கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா, கடந்த 7-ஆம் தேதி மாலையில் நடந்தது. பட்டமளிப்பு விழா துவங்குவதற்கு முன்பே துணைவேந்தர், காளியப்பனுக்கும், மாலைராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேடையில் இருந்த பலருக்கும் பட்டமளிப்பு விழா அங்கி வழங்கப்பட, சிண்டிகேட் உறுப்பினரான மாலைராஜாவுக்கு அங்கி வழங்கப்படவில்லை. அவர் ஆதரவாளர்கள் சிலர், பல்கலைக்கழக அதிகாரிகளிடம் இதைச் சொன்னவுடன், மாலைராஜாவை அங்கி அணிய வாருங்கள் என அடுத்த அறைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு அங்கி இல்லை. வேறு யாருக்கோ கொடுத்து விட்டனர். இதனால் கடுப்பான மாலைராஜா, மேடைக்குத் திரும்பியுள்ளார். மேடையிலும் அவருக்கு மரியாதையான இடம் ஒதுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் விழா முடியும் வரை வெறுப்புடனே இருந்துள்ளார். அதன்பிறகு, பல்கலைக் கழக துணைவேந்தர் அலுவலகத்துக்கு மாலைராஜா சென்றிருக்கிறார். அதன்பிறகுதான், உள்ளே குத்து, கும்மாங்குத்து என்று சகலவிதமான வீரவிளையாட்டுக்களும் நடத்தப்-பட்டதாக செய்தி பரவி, நெல்லையை கிடுகிடுக்க வைத்திருக்கிறது.

இது தொடர்பாக பல்கலைக் கழக வட்டாரங்களில் விசாரித்த போது, அதிர்ச்சியோடு சம்பவங்களை விவரித்தார்கள். 

‘‘மாலைராஜா தனது ஆதர-வாளர்களுடன், துணைவேந்தரின் அறைக்குச் சென்று, அழைப்பிதழ் முறையாக வழங்கப்படாதது, அங்கி வழங்காதது உள்ளிட்ட பல விஷயங்களுக்கு துணைவேந்தரிடம் விளக்கம் கேட்டுள்ளார். வார்த்தைகளில் காரம் ஏற, கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் துணைவேந்தரும், பல்கலைக்கழக விளையாட்டு துறை இயக்குனரான தேவதாசும் ‘நன்கு கவனிக்கப்பட்டதாக’ பேச்சு. 

உடனே மாலைராஜாவும், அழகிரியை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறியதாகவும் தெரிகிறது. அதன்பிறகு மாலைராஜா தரப்பு இந்த விஷயத்தில் அமைதியாக இருந்தாலும், துணைவேந்தர் காளியப்பன் இந்த விஷயத்தை வேறுவிதமாக திசைமாற்றிச் சென்று கொண்டிருக்கிறார். அவர் தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த விவகாரத்துக்குள் தலித் தலைவர்கள் தலை நுழைத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் சாதி ரீதியில் எடுத்துச் செல்லப்படுவது சரியல்ல...’’ என்றார்கள்.

அடுத்து, பட்டியலின-பழங்குடியின அரசு ஊழியர்-அரசு அலுவலர் பாதுகாப்பு நடவடிக்கை குழு அமைப்பாளராக இருக்கும் கோபாலனிடம் பேசினோம். 

Malai%201.jpg“மாலைராஜா, தலித் இனத்தைச் சேர்ந்த துணைவேந்தரை அடித்திருக்கிறார். அதனால் அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிண்டிகேட் உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும். உத்தப்புரத்திலிருந்து உமாசங்கர் விவகாரம் வரை தி.மு.க. அரசு தலித் விரோத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தாக்குதல் நடத்திய தன் கட்சி எம்.எல்.ஏ., மீது தலித் பாசம் நிரம்பிய கலைஞர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றவர், ‘‘இதற்கு முன்பும் மாலைராஜா, கிராம நிர்வாக அதிகாரி ஒருவரை தாக்கியிருக்கிறார். பல அதிகாரிகளை மரியாதை இல்லாமல் பேசி வருகிறார்...’’ என்றும் கூறினார்.

பெரும் அரசியலாக்கப்படும் இந்த விவகாரம் தொடர்ந்து பற்றி எரியுமா? அல்லது அப்படியே அமுங்கிப் போய்விடுமா என்பது விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் தலித் தலைவர்களின் செயல்பாடுகளில்தான் இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பாலின் தரத்தோடு விளையாடும் மதுரை ஆவின்?

Madurai.jpg

 



‘உண்மையை நிரூபிப்பதற்காக பால் மீது சத்தியம் வாங்கும் பழக்கம் கிராமங்களில் இன்றும் நிதர்சனம். ஆனால் மதுரை ஆவின் பாலை வைத்து இனி சத்தியம் வாங்க முடியாது போலிருக்கிறது. 

ஆமாம்... அரசு விநியோகிக்கும் ஆவின் பாலிலும் போலி வந்துவிட்டது என்ற பகீர் புகார் மதுரையில் எழுந்துள்ளது. அதிர்ச்சியுடன் மதுரை ஆவின் வட்டாரங்களில் விசாரணையைத் தொடங்கினோம்.

Madurai%202.jpg‘‘தேசிய உற்பத்தி திறன் குழு இந்தியாவிலேயே சிறந்த பால் பண்ணைக்கான விருதை அப்போதைய பொது மேலாளர் பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கியது. ஆனால்... 2006-ம் ஆண்டு பொது மேலாளராக (பொறுப்பு) தங்கராஜன் பதவி ஏற்றார். அவர் செய்த முதல் வேலை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 4 வகையான பால்களிலும் கொழுப்பு ஒரு சதவிகிதம், இதர சத்து 0.3 சதவிகிதம் ஆகியவற்றைக் குறைத்து அதற்கு பதிலாக தண்ணீர் கலந்து கல்லா கட்ட ஆரம்பித்ததுதான். மேலும், பால் விற்பனை செய்யும் ஏஜென்ட்களுக்கு கமிஷனை 50 பைசாவில் இருந்து ஒரு ரூபாயாக உயர்த்த அனுமதி கேட்டார். தற்போது கொடுக்கும் கமிஷனிலேயே கமிஷன் கேட்டால் பிரச்னை வரும் என்பதற்காக கமிஷனைக் கூட்டி கொடுப்பதாக சொல்லி அதில் டீலிங் பேசி 25 பைசாவை கமிஷனாக தங்கராஜ் எடுப்பதாக அப்போதே புகார் கிளம்பியது. அதனால், அப்போதைய கலெக்டர் ஜவஹர் இதற்கு அனுமதிக்கவில்லை. 

இந்த நிலையில் ஜவஹர் போய் சீதாராமன் கலெக்டராக வந்தபோது, புதியதாக அரசு அனுமதி பெறாத பிரிமியம் என்ற பாலை அறிமுகம் செய்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி வாங்கி விட்டார். கிட்டதட்ட நிலைப்படுத்திய பாலும் பிரிமியம் பாலும் ஒன்றே. நிலைப்படுத்திய பாலுக்கு அரசு நிர்ணயம் செய்த விலை அட்டை உள்ளவர்களுக்கு ரூ.9.15. அட்டை இல்லாதவர்களுக்கு ரூ.10 மட்டுமே. ஆனால் பிரிமியம் பால் விலை அட்டை உள்ளவர்களுக்கு ரூ.9.75. அட்டை இல்லாமல் ரூ. 10.50 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை அனைத்துமே அரை லிட்டருக்கு மட்டுமே.

தமிழகத்திலேயே மதுரையில் மட்டும் சுத்தமான பசும்பால் என்று இன்னொரு கொள்ளையடிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார் தங்கராஜன். இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்தவர் அப்போதைய கலெக்டர் மதிவாணன். பால் கொள்முதல் செய்யும் போது எருமை பால், பசும்பால் என சேர்த்துதான் கொள்முதல் செய்யப்படுகிறது. பிறகு எப்படி சுத்தமான பசும்பால் நுகர்வோருக்கு கொடுக்க முடியும்? சமன்படுத்திய பாலுக்கு அரசு நிர்ணயித்த விலை அரை லிட்டருக்கு ரூ.8.90. அரசு அனுமதி பெறாமல் விற்கும் போலி பாலுக்கு விலை அரை லிட்டருக்கு ரூ.11. 

புதியதாக ஒரு பாலை அறிமுகம் செய்ய வேண்டுமென்றால் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், உலக சுகாதார நிறுவனம் பால் மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தில் பதிவு செய்யப்படவேண்டும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பொறுப்பு அதிகாரியாக தங்கராஜன் இருந்து கொண்டு தன்னிச்சையாக அரசின் சட்டதிட்டங்களை பின்பற்றாமல் ஆடுகிறார். இவருக்கு பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்பது தான் புதிராக இருக்கிறது.

2005&ம் ஆண்டில் இருந்து இன்று வரை ஐந்து ஆண்டுகளாக மதுரை ஆவின் கணக்குகளை தணிக்கை செய்யவில்லை. கடந்த ஆண்டு மட்டும் பத்து கோடி ரூபாய் லாபம் என்று சொல்கிறார் தங்கராஜன். மதுரை போலவே பால் கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் கோவை ஆவினில் கடந்தாண்டு லாபம் 28 கோடி ரூபாய். அப்படியானால் மதுரையில் இடைப்பட்ட கோடிகள் எங்கே முடக்கப்படுகிறது?’’ என பெருமூச்சோடு முடித்தார்கள். 

நம்மிடம் பேசிய மேலும் சில ஆவின் அதிகாரிகளோ, ‘‘ஆவின் பொது மேலாளர் பதவிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி, பி.இ., பி.டெக் அல்லது கால்நடை துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று அரசு விதியில் உள்ளது. ஆனால், இப்போது பொது மேலாளராக இருக்கும் தங்கராஜனுக்கு இந்த அளவுக்கு கல்வித் தகுதி இல்லை. மேலும், மதுரை ஆவினுக்கு வரும் பால் 4 டிகிரி செல்சியஸில், குளிரூட்டப்பட்டு அதன் பிறகு தான் பால் பாக்கெட்டுகளில் நிரப்பப்படும். ஆனால் தற்போது அவசர அவசரமாக 10 டிகிரி செல்சியஸில் பாக்கெட்டுகளில் நிரப்பப்படுகிறது. அதனால் வீடுகளில் ஆவின் பால் வாங்கி காய்ச்சும்போதே கெட்டு போய்விடுகிறது. மதுரைக்கு மட்டும் தினமும் மூன்று லட்சம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. தங்கராஜனின் தவறான நிர்வாகத்தால் தற்போது இரண்டு லட்சம் லிட்டர் பால்தான் கொள்முதலாகிறது.

Madurai%201.jpgமதுரை ஆவினில் வேறு எந்தப் பாலுக்கும் அட்டை இல்லை. பசும்பாலுக்கு மட்டும்தான் அட்டை என்று சொல்லி மக்களை கட்டாயப்படுத்தி திணிக்கிறார்கள்’’ என்றனர்.

இந்த புகார்கள் பற்றியெல்லாம் மதுரை ஆவின் பொது மேலாளராக பொறுப்பு வகிக்கும் தங்கராஜனிடம் பேசினோம்.

‘‘தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்ட நான்கு வகையான பால் மதுரை ஆவினில் உண்டு. அதில் சமன்படுத்திய பால், முழு கொழுப்பு செறிந்த பால் மட்டும் தற்போது விற்பனை செய்வதில்லை. நிலைப்படுத்திய பாலுக்கு பதிலாக பிரிமியம் பால் நான் வருவதற்கு முன்பே அறிமுகப்படுத்தி விட்டார்கள். நான் பதப்படுத்தப்பட்ட பசும்பாலை அறிமுகம் செய்தேன். பாலில் உள்ள சத்துக்களை குறைத்து இதுவரை எந்தப் பாலும் விற்பனை செய்யவில்லை. தமிழ்நாட்டில் என்னைப் போல் மேலும் ஒரு சில இடங்களில் ஆவின் மேலாளர்கள் இருக்கிறார்கள். நான் மட்டும் விதிவிலக்கல்ல. நான் ஊழல் இல்லா நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறேன்’’என்றார்.

இதுபற்றியெல்லாம் பால்வளத் துறை அமைச்சர் மதிவாணனை தொடர்பு கொண்டு பேசினோம். ‘‘நான் ஆபரேஷன் செய்து கொண்டு ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறேன். மதுரை ஆவினில் விற்பனை செய்யப்படும் பசும்பாலை விற்பனை செய்யக் கூடாது என்று அரசாணையில் இல்லையே. தற்போது மதுரை ஆவின் பொது மேலாளராக இருக்கும் தங்கராஜன் இன்சார்ஜில்தான் இருக்கிறார். பாலின் தரம் பற்றி ஆதாரத்தோடு புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார் உறுதியோடு.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

காக்கிகள் கரைவேட்டிகள் கூட்டு! 
-பாடாய்ப்படும் பத்திரிகையாளர்கள்

TOI%202.jpg



ஆகஸ்ட் 6, வெள்ளிக் கிழமை... திருச்சி தில்லைநகரில் உள்ள ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகை அலுவலக வளாகத்துக்கு வந்த அந்தநல்லூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் குடமுருட்டி ஆறுமுகம் அங்கிருந்த கழிவறைக்குள் சென்றார்.

இதைப் பார்த்த அலுவலக நிர்வாகி, ‘நீங்க யாரு... ஊழியர் இல்லியே?’ எனக் கேட்க, பதிலுக்கு நாராசமான வார்த்தைகளே வந்து விழுந்தன. பயந்து போய் அலுவலகத்துக்குள்ளேயே சென்றுவிட்டார் அந்த நிர்வாகி. 

‘எதிர்பார்த்த’ அளவுக்கு தகராறு பெரிதாகவில்லை என்பதாலோ என்னவோ... சிறிது நேரம் கழித்து 4 பேருடன் மீண்டும் பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்றார் ஆறுமுகம். 

TOI.jpgஇந்த முறை அங்கு இருந்த நிருபர் மயில்வாகனன், ‘‘இது பத்திரிகை அலுவலகம். இதன் உள்ளே அந்நியர்கள் வரக்கூடாது. வெளியேறுங்கள்’’ என்று கூறியிருக்கிறார். உடனே, ஆறுமுகம் குழுவினர் நிருபரின் கையை முறுக்கி, அவரது செல்போனை பிடுங்கி தரையில் அடித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர். 

இதையடுத்து பத்திரிகையாளர்கள் தில்லைநகர் போலீஸ் நிலையம் சென்றனர். அங்கிருந்த ஏட்டுக்கள் மிகவும் அலட்சியமாக புகாரை பெற்றுக்கொண்டு ரசீது கொடுத்துள்ளனர். அடுத்ததாக பத்திரிகையாளர்கள், துணை ஆணையர் ரூபேஸ்குமார் மீனாவை சந்திக்க, ‘வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன்’ என்று வாக்குறுதியளித்தார் அவர். ஆனால், இருதரப்பும் அவர்களுக்குள் சமாதானம் செய்து கொண்டனர் என்று போலீஸே தகவல் பரப்பியது. 

இதனால் வெகுண்ட பத்திரிகையாளர்கள் கமிஷனர் விடுமுறையில் இருந்ததால் பொறுப்பு அதிகாரியாக இருந்த மத்திய மண்டல ஐ.ஜி. கரன்சின்ஹாவை சந்தித்து முறையிட்டனர். 

அப்போது பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, குடமுருட்டி ஆறுமுகம் குழுவினரை கைது செய்ய துணை ஆணையருக்கு உத்தரவிட்டார் ஐ.ஜி. ஆனாலும், அடுத்த நாள் காலைவரை ஆறுமுகத்தை போலீஸார் கைது செய்யவில்லை. இந்த இரண்டு நாட்களுக்குள் குடமுருட்டி ஆறுமுகமும் தில்லைநகர் இன்ஸ்பெக்டர் கென்னடியும் ஐந்துக்கும் மேற்பட்ட தடவை ஒன்றாக தேநீர் அருந்தியதாக நிலைய காக்கிகளே கிசுகிசுக்கின்றனர்.

இதையெல்லாம் கேள்விப்பட்டு போலீஸைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர் பத்திரிகையாளர்கள். அதற்கு முன், இறுதியாக கமிஷனர் வன்னியபெருமாளை சந்திக்க முடிவு செய்து அவரது அலுவலகம் சென்றனர். பத்திரிகையாளர்களை சந்தித்த வன்னியபெருமாள், ‘‘அந்த ஆறுமுகத்தை இன்று மாலை 6.30 மணிக்கு கைது செய்து ஸ்டேஷன் ஜாமீனிலேயே விட்டுவிட்டோம்’’ என்றார். ஆனால் நமது விசாரணையில் ஆறுமுகத்தை கைது செய்து விடுவித்ததாக குறிப்பு மட்டுமே எழுதியதாக தெரியவருகிறது.

‘பத்திரிகையாளர்’ கலைஞரின் ஆட்சியில் நன்றாகத்தான் வாழ்கிறது பத்திரிகையாளர் நலன்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திரைத் துறையினருக்கு வீடு கட்ட தலித்துகளை அகற்ற முயற்சி: செ.கு.தமிழரசன் கண்டனம்

First Published : 24 Aug 2010 03:07:02 AM IST

cin.jpg
சேலம், ஆக. 23: திரைப்படத் துறையினருக்கு வீடுகள் கட்டுவதற்காக பையனூர் அருகில் இருக்கும் தலித் மக்களை அகற்ற தமிழக அரசு முயற்சிப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய குடியரசுக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

 

சேலத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:

 

திரைப்படக் கலைஞர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் 96 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதில் 15 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் வீடு கட்டும் இந்த முயற்சிக்காக அருகில் வசிக்கும் தலித் மக்களை அகற்ற அரசு முயற்சித்து வருகிறது.

 

1980-களில் தமிழகத்தில் பெரும் புயல், வெள்ளம் ஏற்பட்டபோது தாழ்வான பகுதியில் வசித்து வந்த தலித்துகள் வாழ்விடங்களை இழந்தனர். இதையடுத்து அப்போதைய அரசு, பையனூர் பகுதியில் 76 ஏக்கர் நிலத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கியது.

 

இந்த நிலையில் சினிமா நகரம் அமைய உள்ள இடத்துக்கு அருகில் இந்த மக்களின் நிலம் இருப்பதால் இவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு அரசு முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

 

இதை அறிந்த அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதனால்தான் அங்கு நடைபெற இருந்த விழா ரத்து செய்யப்பட்டது. தலித்துகளுக்கு எதிரான இந்த செயலை வாபஸ் பெறாவிட்டால் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

 

ஜெயலலிதாவுக்கு விருது: ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக விழிப்புணர்வு மாநாடு சென்னையில் அக்டோபர் 2-வது வாரத்தில் நடத்தப்பட உள்ளது. தாழ்த்தப்பட்டோரின் கோரிக்கைகளை நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்நிகழ்ச்சியில் விருது வழங்கப்படுகிறது என்றார் தமிழரசன்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

“கருணாநிதி பிராண்ட்” சாமான்கள் விற்க்கப் படுகின்றன!

large_61537.jpg

தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கருணாநிதி, மக்கள் பணத்தை தனது சுயவிளம்பரத்திற்காக சாமர்த்தியமாகவே செலவு செய்து வருகிறார். இதற்கு, ஆலோசனைக் கொடுக்க, பெரிய-பெரிய கம்பெனிகளினின்று ஆலாசனையாலர்கள் வேறு! எந்த பொட்டலத்தில், எத்தகைய படத்தை போடவேண்டும், எப்படி ஓட்டவேண்டும் என்று ஆராய்ச்சி வேறு! “கலைஞர் ஆட்சியில் மான்ய விலையில் மளிகைப்பொருள்“, என்று அச்சிட்டு, தனிநபர் விளம்பரத்திற்கு உபயோகப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது

ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்ட 50 ரூபாய் மதிப் புள்ள மளிகை பொருட்களை, இம்மாத இறுதிக்குள் விற்று காலி செய்ய விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் 25 ரூபாய் மதிப்புக்கு, மளிகை பொருள் பாக்கெட் வர இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

வெளிமார்க்கெட்டில் மளிகை பொருட்கள் விலை அதிகரித்ததால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைத் தடுக்க தமிழக அரசு கடந்த 2008ல் ரேஷன்கடையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டது. அதன்படி மிளகாய் தூள் 250 கி., மல்லி 250 கி., கடலைப்பருப்பு 75 கி., மஞ்சள் 50 கி., சீரகம் 50 கி., வெந்தயம், கடுகு, சோம்பு, மிளகு தலா 25 கி., பட்டை, லவங்கம் 10 கி.,என 10 வித மளிகை பொருட்கள், தனித் தனி பாக்கெட்களில் அடைக்கப் பட்டு ரேஷன்கடைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப் பட்டன. மொத்தம் 71.30 ரூபாய் அடக்கவிலை கொண்ட பத்து மளிகை பொருட்களை, மக்கள் நலன் கருதி அரசு 21.30 ரூபாய் தள்ளுபடி செய்து, 50 ரூபாய்க்கு விற்பனை செய்தது. ஆரம்பத்தில் ரேஷன்கடையில் விற்பனை செய்யப்பட்ட மளிகை பொருட் கள் தரமானதாக இருந்ததால், கார்டுதாரர்கள் போட்டி, போட்டு வாங்கினர்.

ஆரம்பத்தில், பிரபலமான சமையல் பொருள் உற்பத்தி நிறுவனம் தயார் செய்த மளிகை பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு வந்தது. கார்டுதாரர்களும் ஆர்வத்தோடு வாங்கினர். அதன் பின்னர், மளிகை பொருட்கள் தரம் குறைவாக இருப்பதாக கூறி பலர் 50 ரூபாய் மளிகை பொருள் வாங்குவதை தவிர்த்தனர். எனினும், ரேஷன் கடைகளில் மூன்றாண்டுகளாக 50 ரூபாய் மளிகை பொருள் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பிட்ட கார்டுதாரர்கள் தொடர்ந்து மளிகை பொருட்கள் வாங்கினர். இந்நிலையில், ரேஷனுக்கு சப்ளை செய்த மளிகை பொருள் பாக்கெட்டுகளை, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இருப்பு வைக்காமல் விற்று தீர்க்க வேண் டும் என, விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், விற்பனையாளர்கள் மளிகை பொருள் பாக்கெட்டுகளை விரைவாக விற்று வருகின்றனர்.

பாக்கெட்டுகள் விற்று தீர்ந்தவுடன், ரேஷன் கடைகளுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை சப்ளை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். கலெக்டர்கள் மாநாடு முடிந்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அடுத் தாண்டு, சட்டசபை தேர்தல் நடந்து முடியும் வரை, ரேஷனில் இந்த மலிவு விலை மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

6,000 MTC staff skip work for rally

Commuters Hassled As Demo For Pay Revision Keeps Buses Off Roads 

Jeeva | TNN



Pc0031600.jpg

Pc0031300.jpg

Pc0031400.jpg
ANXIOUS WAIT: (Top) Passengers waiting at the T Nagar bus terminus;(above) MTC bus crew affiliated to the DMKs Labour Progressive Front holding an agitation on Pallavan Salai demanding wage revision 
Chennai: Bus commuters struggled to reach their destination on Tuesday with over 1,000 of the Metropolitan Transport Corporations (MTC) more than 3,000 buses staying off the roads.Reason About 6,000 drivers and conductors of the corporation affiliated to the ruling DMKs Labour Progressive Front (LPF) had gone off to participate in a rally demanding wage revision.
Office-goers and school students,caught unawares by the mass absenteeism,had to wait for a long time for buses.
I came to the KK Nagar terminus at 7.30am but was shocked to see that only a few buses had moved out.After waiting for about an hour,I finally chose to take an auto to reach my office in Egmore, said Muthukumar,a private company employee.
The MTC has about 18,000 drivers and conductors,of whom at least 6,000 took part in the rally from Parrys Corner to Pallavan Salai.
Crew who chose to be on duty had to face public anger.Those who did not come for duty need not fear,while we were in trouble as passengers turned their anger against us.While both drivers and conductors were absent in most of the cases,there was a lot of confusion as many buses had drivers but no conductors and viceversa, said an MTC driver.
School students escaped the trouble because Tuesday had been declared a holiday on the occasion of Avani Avittam. The usual passenger crowd travelling by buses to go for shopping or festivals was not there,thanks to the rains.
In some depots,temporary workers alleged that they were threatened by LPF members against reporting for duty even after they had signed in the attendance register.
Many crew members attached to other unions strongly criticised the LPF for causing trouble to the passengers but did not want to say anything on record as they felt it would their spoil their relationship with the fraternal union.
LPF general secretary M Shanmugam said the rally was organised to promote the unionist mindset of our crew members.Shanmugam denied the allegations that non-LPF drivers and conductors were forced not to report to duty.
Officials in the MTC admitted that the agitation by the LPF had caused trouble to the commuters.But,they did not comment on whether action would be taken against those who did not report for duty in order to participate in the rally.
How can the DMK allow members of the union owing allegiance to it to make people suffer The union representatives can very well meet the CM and place their demands.It is obvious that the management cannot act against ruling party union workers.Had this been done by members of other unions,action would have been initiated by now, said a middle-level official in the MTC.



__________________
« First  <  Page 3  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard