New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: லஞ்சம்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
லஞ்சம்
Permalink  
 


லஞ்சம் வாங்கிய துப்புரவு ஆய்வாளர் கைது
மார்ச் 08,2010,00:00  IST

சென்னை:துப்புரவு பணியாளரை இடமாற்றம் செய்வதற்கு 2,000 ரூபாய் லஞ்சம் பெற்ற துப்புரவு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.சென்னை, மணலி பகுதியைச் சேர்ந்தவர் முத்து (32). இவர் ராஜமங்கலம் பகுதி 62 "பி' வார்டு மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். மணலியில் இருந்து தினசரி ராஜமங்கலம் பகுதிக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், இவர் தன்னை மாதவரம் பகுதிக்கு மாற்ற வேண்டும் என துப்புரவு ஆய்வாளர் கணேசன் (51) என்பவரிடம் கோரிக்கை விடுத்தார். இடமாற்றம் செய்வதற்கு துப்புரவு ஆய்வாளர் கணேசன் 2,000 ரூபாய் தருமாறு கேட்டார்.



பணத்தை கொடுக்க விரும்பாத முத்து, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்படி, டி.எஸ்.பி., பொன்னுசாமி, இன்ஸ்பெக்டர்கள் உச்சப்பட்டி பரமசாமி, அசோகன் மற்றும் இமானுவேல் ஞானசேகர் ஆகியோரது ஆலோசனையின் படி, நேற்று காலை அலுவலகம் வந்த முத்து, துப்புரவு ஆய்வாளர் கணேசனிடம் பணத்தை கொடுத்தார்.அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணேசனை கையும் களவுமாக பிடித்தனர். திருவள்ளூர், மணவாள நகரில் உள்ள கணேசன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கணேசன் மீது வழக்குப் பதிந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி தேவராஜ் முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

துணை வேந்தர் பதவி விற்பனைக்கு - விலை இரண்டு கோடி!!!


for_sale

தஞ்சாவூர்,செப்.29:திருவாரூரில் அமையவுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் உதவியாளர்கள் முதல் விரிவுரையாளர்கள் வரை பணியில் சேர லஞ்சம் கேட்கப்படுவதாகவும், துணை வேந்தர் நியமனத்திலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டுள்ளன. . மாநிலங்களின் தரமான உயர் கல்வியை வழங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க அனுமதி வழங்கியது.

அதன்படி தமிழகத்திற்கு வழங்கப் பட்ட மத்திய பல்கலைக்கழகம் முதல மைச்சர் கருணாநிதி பிறந்த மாவட்டமான திருவாரூரில் அமைய உள்ளது. 
இதற்கான துவக்க விழா திருவாரூரில் நாளை நடைபெறுகிறது. முதலமைச்சர் கருணாநிதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த பல்கலைக்கழகத்துக்காக வண்டாம்பாளையத்தில் 516 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளன.மத்திய அரசு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் ரூ.400 கோடியில் கட்டிடங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 
உயரிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப் படும் இந்த மத்திய பல்கலைக் கழகத்தில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் தெரிவிக்கின்றன.திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம் துணை வேந்தர் பதவிக்கு தேர்வுகள் நடைபெற்றன.

தமிழகம், ஆந்திரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து 3 பேர் தேர்வுப் பட்டியிலில் வைக்கப்பட்டிருந்தனர். சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் தமிழகத்தைச் சேர்ந்தவரிடம் அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் மகனது செய்தித் தொடர்பாளர் ஒருவர் துணை வேந்தர் பதவிக்காக ரூ.2 கோடி தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த பதவியில் அமர்ந்தால் கட்டிடம் கட்டுகின்ற பணிக்காக ஒதுக்கப் பட்டுள்ள ரூ.400 கோடியில் ரூ.4 கோடியும், பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்டோரை நியமிப்பதில் பணமும் கிடைக்கும் என்று அவரிடம் கூறியதாக தெரிகிறது.

ஆனால் தன்னால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என தமிழகத்தை சேர்ந்தவர் கூறி விட்டதால், தேர்வுப் பட்டியலில் இருந்த பி.பி.சஞ்சய் என்பவர் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் மத்திய அமைச்சரின் மகன் சார்பில் கேட்கப்பட்ட ரூ.2 கோடியை கொடுத்து பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை பெற்றதாகவும் இவருக்கு ஆந்திராவை சேர்ந்த பெண் இணையமைச்சர் சிபாரிசும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், மத்திய பல்கலைக் கழகத்திற்கு விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் குறித்து விளம்பரங்கள் அளிக்கப்பட்டன.

இதனையடுத்து பல கல்லூரிகளில் வேலை பார்க்கும் கல்லூரி ஆசிரியர்கள் பலர் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.அவ்வாறு விண்ணப்பித்தவர் களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவர்களை பணியில் சேர்க்க லஞ்சம் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. 
ரூ.2 கோடி கொடுத்து இந்த பதவியை பிடித்துள்ள மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் தற்போது பேராசிரியர், விரிவுரையாளர் பதவிகளுக்கு ரூ.20 லட்சமும், பணியாளர் பதவிகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலும் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

ரூ.2 கோடி கொடுத்து தான் இந்த பதவியை பெற்றதாக துணை வேந்தர் வெளிப்படையாகவே கூறி இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அந்த புகார்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இத்தகைய முறைகேடுகள் ஆரம்பக் கட்டத்திலேயே நடப்பது கல்லூரி ஆசிரியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

http://stopbribe.blogspot.com/2009/09/blog-post_29.html


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27 FEBRUARY 2010

சுயஉதவிக்குழு நடத்திரூ.23 லட்சம் மோசடி செய்த பெண் கைது

3ed4506379c46a410a4a6ea4508a6ae7.jpg
திண்டுக்கல்:கொடைக்கானலில் சுயஉதவிக்குழு நடத்தி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக பெண் ஒருவரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஏழு பேரை தேடி வருகின்றனர்.கொடைக்கானலில் கீழ் பூமி பிரமபுத்திர பெண்கள் இணைப்பு குழுவின் கீழ், 237 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செம்பகனூர் மரிய ஜெயா இருந்துள்ளார். இவர், உறுப்பினர்களுக்கு தேவையான வங்கிக் கடன்களை பெற்றுத் தருவதும், இந்த பணத்தை வசூல் செய்து வங்கியில் கட்டுவதாக கூறி கிராம பெண்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்று கையாடல் செய்து தலைமறைவானார்.

இவருக்கு உதவியாக விமலாராணி, தனபாக்கியம், ஆரோக்கிய செல்வி, லாரன்ஸ் செல்வி, மெர்சி, ஜாகீர்லூர்துராஜ் ஆகியோர் செயல்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், கடந்த வாரம் கொடைக்கானல் செம்பகனூர் சுயஉதவிக்குழு அலுவலகம் அருகே நடந்து சென்ற இந்த குழுவை சேர்ந்த மெர்சி என்ற பெண்ணை கேட்டில் கட்டி வைத்து, மறியல் செய்தனர். போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து இவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த குழுவில் பணியாற்றிய கொடைக்கானல் லேக் ரோட்டை சேர்ந்த லாரன்ஸ் செல்வி(43)யை கைது செய்து, திண்டுக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உமாராணி உத்தரவிட்டார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:சுயஉதவிக்குழு நடத்தி கிராம மக்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு வங்கியில் கட்டாமல் ஏமாற்றியுள்ளனர். 23 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் இன்னும் ஏழு பேர் தலைமறைவாகினர். இவர்களை தேடி வருகிறோம், என்றனர்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆயிரம் ரூபாய்க்கு போலி சான்றிதழ் : வி.ஏ.ஓ.,தலையாரி உட்பட 3 பேர் கைது

panam.jpg
ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு போலியான வாரிசு சான்றிதழ் கொடுத்த வி.ஏ.ஓ.,தலையாரி கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அச்சம்பட்டியை சேர்ந்த ஆசீர்வாதம் மகள் அன்னமணி(39) என்பவர் வாரிசு சான்றிதழ் கோரி திருநெல்வேலி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

வாரிசு சான்றிதழ் தர தலையாரி சுப்பையா ரூ. ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். மேலும் தலையாரி, கிராம நிர்வாக அதிகாரி செந்தில்முருகன்(28) ஆகியோர் சேர்ந்து நெல்லை தாசில்தார் கையெழுத்து போட்டது போல போலியான வாரிசு சான்றிதழ் தயாரித்து கொடுத்தனர்.

அன்னமணி, அந்த சான்றிதழுடன் பூர்வீக சொத்துக்கு பட்டா மாற்றத்துக்கு நெல்லை தாலுகா அலுவலகத்தின் விண்ணப்பித்தார். அந்த சான்றிதழை பார்த்த தாசில்தார் அந்தோணிமுத்து அதிர்ச்சியடைந்தார்.

அச்சு அசலாய் தமது கையெழுத்து போட்டு போலி சான்றிதழ் கொடுத்தது குறித்து நெல்லை எஸ்.பி.,ஆஸ்ரா கார்க்கிடம் புகார் கொடுத்தார். குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து போலி சான்றிதழ் கொடுத்த வி.ஏ.ஓ.,செந்தில்முருகன், தலையாரி சுப்பையா, மனுதாரர் அன்னமணி ஆகியோரை கைது செய்தனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் கைது

மராட்டியம் மற்றும் கோவா மாநிலங்களுக்கான தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மஞ்சித்சிங்பாலி. இருமாநில தபால்நிலையங்கள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.

இவர் தபால்நிலையங்களுக்கு சொந்தமான நிலங்களை தனியாருக்கு விற்றதாக புகார் கூறப்பட்டது. இதற்காக இவர் ரூ.2 கோடி லஞ்சமாக பெற்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து சி.பி.ஐ.யின் லஞ்சஒழிப்பு போலீசார் மஞ்சித்சிங் பாலியின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்.எல்.சி. பொது மேலாளர் கிருபானந்தன் கைது

tblSambavamnews_77503603697.jpg
NLC.jpg

என்.எல்.சி. நிறுவனங்களில் காண்டிராக்டர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் குவிந்தன. இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து இந்தியா முழுவதிலும் உள்ள 10-க்கும் மேற்பட்ட என்.எல்.சி. நிறுவனங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு சொந்தமான நெய்வேலி இல்லத்திலும் அதிரடி சோதனை நடந்தது.

இந்த அலுவலகத்தில் பொது மேலாளராக இருப்பவர் கிருபானந்தன் (50). இவருக்கு கீழ் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பொது மேலாளர் கிருபானந்தன் மீது சி.பி.ஐ.க்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தன.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை பெறுவதில் காண்டிராக்டர்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும்.

இந்த போட்டியை கிருபானந்தன், தனக்கு சாதகமாக பயன்படுத்தி காண்டிராக்டர்களிடம் பேரம் பேசி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சி.பி.ஐ. சூப்பிரண்டு முருகன் தலைமையிலான போலீசார் நேற்று மாலையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள என்.எல்.சி. இல்லம் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது காண்டிராக்டர் ஒருவர் பொதுமேலாளர் கிருபானந்தனை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்துக்கு சென்றார். ஏற்கனவே பேசியபடி தனக்கு ஒதுக்கப்பட்ட உள்ள ஒப்பந்த பணிக்காக ரூ.50 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கொடுத்தார். அதை பொது மேலாளர் கிருபானந்தன் பெற்றுக் கொண்டார்.

அப்போது அங்கு மறைந் திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் கிருபானந்தனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இன்று கிருபானந்தன் ஆஜர்படுத்தப்படுகிறார்.

கிருபானந்தனின் வீடு தி.நகரில் உள்ளது. அவரது வீட்டில் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். அங்கு லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சொத்து ஆவணங்களும் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

சி.பி.ஐ. நடத்திய அதிரடி வேட்டையில் என்.எல்.சி. அதிகாரி ஒருவர் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நீதிபதி மீது செருப்பு வீசிய கோர்ட் பெண் ஊழியர் கைது

shoe-throwing.jpg
ஆந்திராவில், நீதிபதி மீது செருப்பு வீசிய கோர்ட் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். கர்னூலை சேர்ந்தவர் ராதாராணி. இவர், நான்காவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் சுருக்கெழுத்தராக பணியாற்றி வருகிறார். இந்தக் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் சண்முகம்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கோர்ட்டுக்கு ராதாராணி வந்தார். அப்போது, தனது செருப்பை கழற்றாமல் கோர்ட் ஹாலுக்குள் நுழைந்தார். இதை கவனித்த நீதிபதி சண்முகம், செருப்புக் காலுடன் கோர்ட்டுக்கு வருவதற்கு பதிலாக, செருப்பை தலையில் சுமந்தபடியே வரலாமே என, கமென்ட் அடித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த ராதாராணி, தனது செருப்பைக் கழற்றி நீதிபதி சண்முகத்தை நோக்கி வீசினார். அதிஷ்டவசமாக, செருப்பு அவர் மீது படாமல் சென்றது.

யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நீதிபதி சண்முகம், விசாரணையை ஒத்திவைத்தார். அத்துடன், ராதாராணியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டதுடன், போலீசிலும் புகார் அளித்தார். அதன் பேரில், ராதாராணியை போலீசார் கைது செய்தனர்.ராதாராணியைகடந்தஏழு மாதங்களாகநீதிபதிசண்முகம்பல்வேறுவகைகளிலும்அவமானப்படுத்தி வந்ததுடன், மனஅளவிலும்தனக்குதொந்தரவுகளைசெய்துவந்ததாக நிருபர்களிடம்பேசியராதாராணிகூறினார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

டெண்டருக்கு ஒப்புதல் தர லஞ்சம் வாங்கிய கொம்யூன் ஊராட்சி ஆணையர் கைது

IDAC.JPG
புதுச்சேரி: டெண்டருக்கு ஒப்புதல் அளிக்க லஞ்சம் வாங்கிய கொம்யூன் ஊராட்சி ஆணையரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். புதுச்சேரி வில்லியனூர் அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் குப்தன். மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்கான டெண்டர் கோரி, ஊராட்சி ஆணையர் அனிச்சனிடம் குப்தன் விண்ணப்பித்திருந்தார்.

டெண்டருக்கு ஒப்புதல் அளிக்க குப்தனிடம், ஆணையர் அனிச்சன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முதல் தவணையாக அவரிடம் குப்தன் 3,000 ரூபாய் வழங்கினார். மீதி பணத்தை வழங்காததால் டெண்டர் வழங்காமல் அனிச்சன் காலம் கடத்தினார்.

இதுகுறித்து குப்தன், சென்னையில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். சி.பி.ஐ., இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் அதிகாரிகள் புதுச்சேரி வந்தனர். சி.பி.ஐ., அதிகாரிகளின் ஆலோசனைப்படி, கோர்க்காட்டில் உள்ள அனிச்சன் வீட்டிற்கு குப்தன் நேற்று காலை சென்று, அவரிடம் ரசாயன பவுடர் தடவிய 5,000 ரூபாய் வழங்கினார். அங்கு கண்காணித்துக் கொண்டிருந்த சி.பி.ஐ., போலீசார், அனிச்சனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அனிச்சனை, புதுச்சேரி 2வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சித்தார்த்தர் உத்தரவிட்டார். அதன்பேரில் அனிச்சன் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வங்கி மோசடிகளால் ரூ.5,500 கோடி இழப்பு

MaalaimalarSID068f9d0a-6904-4976-90c6-dde8ab322367.gif.jpg
"கடந்த நான்கு நிதியாண்டுகளில், நடந்த மோசடிகளால், வங்கித் துறைக்கு 5,517 கோடி ரூபாய் இழப்புஏற்பட்டுள்ளது' என, சி.பி.ஐ., இயக்குனர் அஸ்வினி குமார் தெரிவித்தார்.

டில்லியில், பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மத்திய கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகளின் இரண்டாவது மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சி.பி.ஐ., இயக்குனர் அஸ்வினி குமார் கூறுகையில்,"கடந்த நான்கு நிதியாண்டுகளில், நடந்த மோசடிகளால், வங்கித் துறைக்கு 5,517 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வருங்காலங்களில், இத்தகைய மோசடிகளால், வங்கித்துறைகளுக்கு ஏற்படும் இழப்பை குறைக்கும் வகையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதோடு, திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.

இதுகுறித்து சி.பி.ஐ., கூடுதல் இயக்குனர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஹர்ஷ் பால் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2005-06, 2006-07, 2007-08 மற்றும் 2008-09ம் நிதியாண்டுகளில், நிகழ்ந்துள்ள 733 மோசடி சம்பவங்களால், வங்கித் துறைகளுக்கு முறையே, 1,381 கோடி ரூபாய், 1,194 கோடி ரூபாய், 1,059 கோடி ரூபாய் மற்றும் 1,883 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., இயக்குனர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார். இதை தவிர, கடன்கள், எலக்ட்ரானிக் முறையில் பணம் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கர்ப்பிணி பெண்களிடம் பணம் பிடுங்கும் லஞ்சப் பேய்கள் !

advertisment_billboard_on_the_street_1ddvczcbm.jpg
கர்ப்பிணி உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கியதாக நர்சு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து 8260 ரூபாய் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் 6000 ரூபாய்க்கு 100 முதல் 600 ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டது தெரியவந்தது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீவிர சோதனை நடத்தியதில்நர்சு லட்சுமியிடம் கணக்கில் வராத 1260 ரூபாயைகைப்பற்றினர். உதவித்தொகை பெற வந்த பெண்களிடம் நடத்திய விசாரணையில், நர்சு லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதை தொடர்ந்து, நர்ஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் டாக்டர் ரவிக்குமாரிடம் 7000 ரூபாய்கைப்பற்றப்பட்ட நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

cr447.jpg
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை மாலையில் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ,18,085 கைப்பற்றப்பட்டது.

இந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக இப் பிரிவு போலீசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையொட்டி, துணை ஆய்வுக் குழு அதிகாரி விஜயராஜன் தலைமையிலான குழுவினர் சாத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு மாலை 6 மணியளவில் சென்றனர். இக் குழுவில் டி.எஸ்.பி. வி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், கணேஷ்தாஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இக் குழுவினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ,18,085 கைப்பற்றப்பட்டது. சார்-பதிவாளர் அலுவலகத் துணைப் பதிவாளர் அல்லி அரசி கைப்பையிலிருந்த கைப்பற்றப்பட்ட தொகையும் இதில் அடங்கும். இதுகுறித்து சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றுவோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது என்றும் ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மோசடி நிதி நிறுவனத்தில் லஞ்சம் வாங்கிய இரண்டு இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட்

board+-+a.jpg
திருப்பூரில் செயல்பட்ட "பாசிபாரெக்ஸ்டிரேடிங்இந்தியாபி., லிமிடெட்' நிதி நிறுவனத்திடம், பல லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவ்விவகாரத்தில், மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஆறு போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

திருப்பூர் அவினாசி ரோட்டில் "பாசி பாரெக்ஸ் டிரேடிங் இந்தியா பி., லிமிடெட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டது. அதன் இயக்குனர்களாக கதிரவன், அவரது மகன் மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர் செயல்பட்டனர். 

இந்நிறுவனம், வெளிநாட்டு கரன்சிகள் மீது முதலீடு செய்து, அதிக லாபம் பெற்றுத்தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் பணம் வசூலித்தது. திருப்பூர், கோவை, ஈரோடு, மதுரை, சென்னை, திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு, வட்டியுடன் கூடிய தவணை தொகையை முன்தேதியிட்டு, அந்நிறுவனம் காசோலைகளாக வழங்கியது.

இந்நிலையில், வங்கியில் பணம் இல்லாமல் காசோலைகள் திரும்பின. மத்திய குற்றப்பிரிவு போலீசார், அந்நிறுவனம் மீது திடீரென வழக்கு தொடர்ந்து, "சீல்' வைத்தனர். நிறுவனத்தினர், ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். இதுதொடர்பான வழக்கில், "பணம் முதலீடு செய்தவர்கள், தாமாக முன்வந்து திருப்பிக் கேட்டால், அப்பணத்தை பெற்றுத்தர கமிட்டி அமைத்து கண்காணிக்க வேண்டும்' என, திருப்பூர் எஸ்.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, திருப்பூர் டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது.

திருப்பூர் எஸ்.பி.,யாக இருந்த சாந்தி கண்காணிப்பில், டி.எஸ்.பி.,யாக இருந்த ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது. முதலீடு செய்த பொதுமக்களில், சிபாரிசு உள்ளவர்களுக்கு மட்டும், அந்நிதி நிறுவனத்திடம் பணத்தை திரும்ப பெற்றுத்தர இக்கமிட்டி உதவியதாக தெரிகிறது. அதன் மூலம், பல லட்ச ரூபாயை போலீஸ் அதிகாரிகள் சிலர் லஞ்சமாக பெற்றனர். இந்நிலையில், எஸ்.பி., சாந்தி, திருட்டு "விசிடி' தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, எஸ்.பி.,அருண் பொறுப்பேற்ற பின், இந்நிதி நிறுவனத்திற்கு உடந்தையாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் பற்றி ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. ராஜேந்திரனுக்கு பதிலாக, டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்ட ராஜா தலைமையில் புதிய கமிட்டி அமைக்கப்பட்டது. போலீஸ் உயரதிகாரிகள் விசாரணையில், "பாசி பாரெக்ஸ் டிரேடிங் இந்தியா பி., லிமிடெட்' நிறுவனத்துக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உடந்தையாக செயல்பட்டு, லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஆதாரப்பூர்வமான தகவல் அடங்கிய விவரங்களை எஸ்.பி., அருண், டி.ஐ.ஜி., பாலநாகதேவியிடம் சமர்ப்பித்தார். இது தொடர்பாக டி.ஐ.ஜி.,யும் விசாரணை நடத்தினார்.

அதையடுத்து, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சண்முகய்யா, வால்பாறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின், திருச்சி மண்டலத்துக்கு உட்பட பகுதிக்கு மாற்றப்பட்டு, தற்போது, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர், இந்நிதி நிறுவனத்தாரிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், பொள்ளாச்சி தாலுகா ஆனைமலையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய மோகன்ராஜ், தானாகவே விரும்பி இடமாற்றம் கேட்டு, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவுக்கு இன்ஸ்பெக்டராக வந்தார். அவருக்கு, இந்நிதி நிறுவன செயல்பாடுகளில் மறைமுக தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோகன்ராஜூம், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவ்விரு இன்ஸ்பெக்டர்களுக்கும் "சஸ்பெண்ட் ஆர்டர்' வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் மற்றும் ஆறு போலீசாரையும் எஸ்.பி., கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளார். அருள்தாஸ், தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஏட்டு ரங்கசாமி மங்கலம் ஸ்டேஷனுக்கும், ஏட்டு வேலுச்சாமி பெருமாநல்லூருக்கும், விஜயக்குமார், வெள்ளியங்கிரி ஆகிய ஏட்டுகள் அவினாசிக்கும், ஏட்டு சுந்தரபாண்டியன் குமரலிங்கத்துக்கும், ஏட்டு தாகூர் பல்லடம் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர்.

பாசி பாரெக்ஸ் டிரேடிங்' நிறுவனத்துக்கு உடந்தையாக செயல்பட்டு, லஞ்சம் பெற்ற விவகாரத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என போலீஸ் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்நிறுவனத்தில் லஞ்சம் பெற்ற விவகாரத்திலும், மற்றொரு விவகாரத்திலும் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள், சில நபர்கள் விரைவில் சிக்குவர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கை கூட வரலாம், என்றார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

லஞ்ச போலீசார் பட்டியலை வழங்க வேண்டும் : தனி நீதிபதி உத்தரவுக்கு 'முதல் பெஞ்ச்' தடை
மார்ச் 09,2010,00:00 IST

 

சென்னை : லஞ்ச வழக்கில் சிக்கிய போலீசாரின் பட்டியலை வழங்குமாறு பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.


லஞ்ச வழக்கில் சிக்கிய போலீசாரின் பெயர், பதவி, முகவரி அடங்கிய பட்டியலை வழங்கக் கோரி, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கார்த்திகேயன், மாதவ் கோரினர். இந்த விவரங்களை வழங்க முடியாது என லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளித்தது. இதையடுத்து, தகவல் பெறும் உரிமை கமிஷனில் இருவரும் புகார் தெரிவித்தனர். இவர்கள் கோரிய விவரங்களை அளிக்குமாறு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் பெறும் உரிமை கமிஷன் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட், "பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் விவரங்களை தெரிவிக்க வேண்டும். தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விலக்கு பெற முடியாது. எனவே, விவரங்களை இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது.


ஐகோர்ட் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அப்பீல் மனுவை லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்தது. "உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் தகவல் பெறும் உரிமை சட்டம் பொருந்தாது. தகவல்களை அளித்தால், நாங்கள் சேகரித்த தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படும்' என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த அப்பீல் மனு, தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி தனபாலன் அடங்கிய "முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு "முதல் பெஞ்ச்' தடை விதித்தது. மனுவுக்கு வரும் 19ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை "முதல் பெஞ்ச்' தள்ளிவைத்தது



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

காவல் துறை சீர்திருத்த மசோதா: மக்கள் கருத்துக் கேட்க முடிவு

First Published : 09 Mar 2010 03:13:01 AM IST

policeoffice.jpg
சென்னை, மார்ச் 8: தமிழக காவல் துறை சீர்திருத்த மசோதா குறித்து பொது மக்களின் கருத்துகளைக் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

"காவல் துறையில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் அளித்தது.

 

 

இதைத் தொடர்ந்து, "தமிழ்நாடு காவல் துறை சீர்திருத்த மசோதா}2008' கடந்த  ஆண்டு மே 14}ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் குறிப்பிடத்தக்க பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.

 

 

"அதிகாரிகள் மாற்றம் தொடர்பான முடிவை எடுக்க தனி அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "டி.எஸ்.பி. மற்றும் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகளை மாற்றம் செய்யும் பொறுப்பு இந்த அமைப்பினைச் சாரும் எனவும், டி.எஸ்.பி.க்கு மேல் உள்ள அதிகாரிகளை மாற்றுவதற்கான பரிந்துரைகளை இந்த அமைப்பு அளிக்கலாம்' என்பது மசோதாவில் உள்ள குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

 

தேர்வுக் குழு அமைப்பு...

 

 

இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட போது, அதன் அம்சங்களை ஆராய வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை எழுப்பின.

 

இதைத் தொடர்ந்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.), டி.சுதர்சனம் (காங்கிரஸ்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 

 

இந்தக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

 

 

கூட்டத்தின் முடிவு குறித்து தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியது:

 

 

""மசோதாவில் உள்ள அம்சங்களை மேலும் ஆராய வேண்டியுள்ளது. எனவே, 2 மாதங்களுக்குப் பின் குழு மீண்டும் கூடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மசோதாவை பொது மக்கள் பார்வைக்கு விட்டு கருத்துக் கேட்கப்பட உள்ளது. சட்டப்பேரவைச் செயலகத்தின் இணையதளத்தில் இந்த மசோதா வெளியிடப்படும்'' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

COP WAS RECENTLY MOVED FROM CCB 
Inspector suspended for taking Rs 42L bribe

TIMES NEWS NETWORK

Chennai: A police inspector,recently transferred out of Chennai from the central crime branch,was placed under suspension on Wednesday for accepting a bribe of Rs 42 lakh to mediate in a bank fraud case.
The police commissioner issued the suspension order to inspector Senthil Kumar,pending a DVAC inquiry against him.
Sources here told the Times Of India that Kumar,when he was administration inspector in the CCB,took Rs 42 lakh from a victim of a multi-crore bank fraud.
Kumar had approached the complainant saying he would help him get his money back if he paid a percentage of what he got.When the complainant got back his money with the intervention of the police,Kumar allegedly collected Rs 42 lakh from him.
The corruption came to light later in an internal inquiry and Kumar was transferred out of Chennai a month ago.Now,the DVAC has booked a case against him and the investigation is on.
Sources here said some other officials of the CCB could also have been involved in the case.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரூ 12 லட்சம் லஞ்சம்: போலீஸ் இன்ஸ்பெக்டர், ஓய்வு பெற்ற தபால்துறை உயரதிகாரி வீடுகளில் அதிரடி சோதனை!
சனிக்கிழமை, ஏப்ரல் 3, 2010, 11:43[IST]

சென்னை: லஞ்சம் வாங்கியதாக புகார் [^] கூறப்பட்ட போலீஸ் [^]இன்ஸ்பெக்டரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அவரது மாமனாரான முன்னாள் தலைமைத் தபால்துறை உதவி ஜெனரல் மேனேஜர் பிரமானந்தம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 

சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் நிர்வாக பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றியவர் செந்தில்குமார்(48) மீது பல்வேறு லஞ்சப் புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் செல்வம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் ஒன்றை கொடுத்தார்.

அந்த புகாரில், தனது தொழில் பிரச்னையை தீர்த்து வைப்பதற்காக இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், அந்த லஞ்ச பணத்தை அவர் சொன்னபடி அவரின் மாமனாருடைய வங்கி கணக்கில் போட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இதுபற்றி விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் சிபாரிசு செய்தார்.

ஓய்வு பெற்ற தபால்துறை உயரதிகாரி பிரமானந்தம்

லஞ்ச ஒழிப்பு போலீசார் செந்தில்குமாரின் வீட்டிலும், பக்கத்து தெருவில் உள்ள அவரது மாமனார் பிரம்மானந்தம் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

பிரம்மானந்தம் ஓய்வு பெற்ற தபால்துறை உதவி ஜெனரல் மானேஜர். மாதம் ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் பெறும் அவரின் வீட்டில் ரூ.11/2 லட்சம் ரொக்கப்பணம் சிக்கியது. 

லஞ்சப்பணம் தனது வங்கிக் கணக்கில் போடப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை பிரமானந்தம் மறுத்துள்ளார். வங்கிக் கணக்கில் அதற்கான ஆதாரங்களும் இல்லை.

எனவே இதுபற்றி புகார் தாரரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

MCI boss Ketan Desai arrested

thumb.cms?msid=5847135&width=300&resizemode=4
MCI chief Ketan Desai arrested for corruption
NEW DELHI: Medical Council of India president Dr Ketan Desai and two others were arrested late on Thursday for allegedly accepting a bribe of Rs two crore to grant recognition to a medical college in Punjab. 

Desai was arrested late last night after the CBI conducted searches at his office here following information that he along with his associate Jitender Pal Singh was allegedly demanding a bribe of Rs two crore to recognise a college in Punjab, CBI spokesperson Harsh Bahal said today.

Bahal said that Desai along with Singh and another associate Dr Kanwaljit Singh of Gyan Sagar Medical College in Punjab have been arrested by CBI on corruption charges. 

The spokesperson said that the three were being interrogated and searches were going on at six other places in Delhi and outside. 

The CBI laid a trap after receiving a complaint and caught Singh allegedly with Rs 2 crore which was to be delivered to Desai. 

The agency also conducted raids in Punjab, Delhi and Gujarat to trace Desai's other associates. 

The main objectives of the Medical Council include maintenance of uniform standards of medical education and recommendation for recognition/de-recognition of medical qualifications of medical institutions of India or foreign countries.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வருமானத்துக்கஅதிகமாசொத்தகுவித்வழக்கில் அமை‌ச்ச‌ர்க‌ள் வீரபாண்டி ஆறுமுகம்,துரைமுருகன், பெரியசாமி, ே.என். நேரு,எம்.ஆர்.ே. பன்னீர்செல்வம், ோ.ி.மணி ஆகியோ‌ர் உ‌ள்பட ‌தி.மு.க.‌வின‌ர் 10 பேரு‌க்கு உச்நீதிமன்றமதா‌‌க்‌கீதஅனுப்பிஉள்ளது.

இவர்களதவிமுன்னாளமத்திஅமைச்சரஎஸ். ரகுபதி, மதுரமுன்னாளமேயரகுழந்தவேலு, வீரபாண்டி ஆறுமுகத்தினமனைவி ரங்கநாயகி, எம்.ஆர்.ே.பன்னீர்செல்வத்தினமனைவி ி. செந்தமிழசெல்வமஆகியோருக்கும் தா‌க்‌கீது அனுப்உத்தரவிடப்பட்டுள்ளது.

அ.இ.அ.ி.ு.தலைவர்களே.எம். ஆறுமுகம், எம். கோவிந்தன், ி.ரவீந்தரனஆகியோரதாக்கலசெய்மேல்முறையீட்டமனுவவிசாரணைக்கஏற்று, நீதிபதிகளமார்க்கண்டகட்ஜு, ஏ.ே. பட்நாயகஆகியோரைககொண்உச்நீதிமன்ற அம‌ர்வு, ி.ு.அமைச்சர்களுக்குதா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்டது.

தா‌க்‌கீது அனுப்பப்பட்ட 10 பேரமீதுமவருமானத்துக்கஅதிகமாசொத்தசேர்த்ததாவழக்கதொடரப்பட்டது. அ.இ. அ.ி.ு.ஆட்சியின்போதஇந்வழக்கதொடரப்பட்டது. இவர்களமீதாகுற்றச்சாட்டநிரூபிக்கப்படவில்லஎன்றகூறி கீழநீதிமன்றமவழக்கை ‌நிராக‌ரி‌த்து அவர்களவிடுவித்தது.

கீழநீதிமன்தீர்ப்பஎதிர்த்தசென்னஉயரநீதிமன்றத்தில் அ.இ.அ.ி.ு.சார்பிலமேல்முறையீடசெய்யப்பட்டது. ஆனாலமேல்முறையீட்டமனுவசென்னஉயரநீதிமன்றம் ‌நிராக‌ரி‌த்தது.

இதையடுத்தஉயரநீதிமன்உத்தரவஎதிர்த்து அ.இ.அ.ி.ு.தலைவர்களே.எம். ஆறுமுகம், எம். கோவிந்தன், ி. ரவீந்தரனஆகியோரஉச்நீதிமன்றத்திலமேல்முறையீடசெய்தனர்.

இந்வழக்கசென்னஉயரநீதிமன்றமதவறுதலாக ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.மூன்றாமதரப்பினர் மேல்முறையீடசெய்வதஏற்முடியாதஎன்உயரநீதிமன்றத்தினவாதமஏற்கத்தக்கதல்ல. இதசட்டப்படி சரியல்என்றதங்களமனுவிலஅவர்களகூறியுள்ளனர்.

இந்வழக்கிலமேல்முறையீடசெய்மாநிஅரசதவறிவிட்டது. எனவஇந்வழக்கவிசாரணைக்கஏற்வேண்டுமஎன்றஅவர்களகோரியிருந்தனர்.

இந்மனுவவிசாரணைக்கஏற்றுக்கொண்உச்நீதிமன்நீதிபதிகள், 6ி.ு.அமைச்சர்களஉள்ளிட்ட 10 பேருக்கு தா‌க்‌கீது அனுப்உத்தரவிட்டனர


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Arrested Medical Council chief was guilty of misconduct'

2010-04-23 19:50:00

 

Medical Council of India chief Ketan Desai, who was arrested Thursday night, was guilty of a 'conspiracy' to fraudulently give recognition to a private medical college in Punjab to enable it to run courses and take more students even though they did not meet required criteria, Central Bureau of Investigation (CBI) sources said Friday.

Desai was to accept 'heavy' bribe money from a middleman, J.P. Singh, and a doctor, Kawaljeet Singh, of the Gian Sagar Medical College, located between Chandigarh and Patiala on a sprawling campus that also includes a 500-bed hospital.

 

The CBI sources, who did not wish to be identified as they were not supposed to speak to the media, said Sukhwinder Singh, vice chairman of the Gian Sagar Charitable trust and one of the trustees of the Gian Sagar Medical College, approached Desai through J.P. Singh 'to find out ways and means to overcome the deficiencies regarding infrastructure of the college and get permission from MCI.'

 

'Desai sought heavy consideration through J.P. Singh. He not only provided prior information about the inspection schedule of MCI but also ensured that favourable report is given by the inspectors, resulting which the Gyan Sagar Medical College has obtained the requisite permission,' the sources said.

 

Sukhwinder Singh has also been arrested and brought to New Delhi.

 

The sources said an inspecting team of MCI had denied renewal to Gian Sagar Medical College. The inspecting team in their Jan 12 report, which was for renewal of permission for the fourth batch of students for the 2010-2011 academic session, reported many infrastructural deficiencies, like in the radiology department, that had three static and three mobile units against the requirement of five each.

 

'There was no facility for demonstrating experimental work on animals by computer aided education. There was no provision for e-class. Pharmaco-vigilance committee is not constituted. Space for endoscopy is not provided in the operation theater. Central research laboratory was not available,' said the CBI's internal report a copy of which was available with IANS.

 

There were also other infrastructural deficiencies like no proper common room for boys and girls, limited seating capacity in auditorium and examination hall non-availibility of other key clinical equipment.

 

The college was asked to provide an undertaking to the MCI that it will not undertake courses leading to Diploma in National Board (DNB), a post graduate medical diploma, in the opthalmology and medicine until they improve their infrastructure.

 

According to the CBI, Sukhwinder Singh arranged for Rs. 2 crore to be delivered to Desai through J.P. Singh at a preferred location in Delhi on April 22. The money was brought to Delhi by Kawaljeet Singh who was exerting influence over Desai by 'corrupt or illegal means...'

 

J.P. Singh had also been providing expensive gifts to Desai for some time in the pursuit of his nefarious plans, the sources said.

 

However, close associates of Desai in the MCI, the profession's highest regulatory body, said that Desai was being framed as he had initiated many reforms that had alienated vested interests in the profession as well pharmaceutical firms that often worked hand in glove with many doctors.

 

In the last few months, Desai has been in the news for wide-ranging reforms - ranging from abolishing the 'corrupt practice' of accepting gifts by doctors to introducing a truncated rural MBBS course for creating a cadre for rural India. He has also written to pharmaceutical companies asking them to explain why they sponsored foreign trips for scores of doctors and threatening to withdraw licensing of doctors who accepted such favours.

 

However, no one from MCI came forward to speak in favour of or against Desai on record.

 

When contacted, K.P. Mathur, an MCI member, told IANS: 'I read about the incident in newspapers this (Friday) morning. I have no more information. You know as much as I know.'

 

spacer.gif


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது
ஏப்ரல் 24,2010,00:00  IST

Important incidents and happenings in and around the world

மறைமலைநகர்:மறைமலைநகரில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலைப் பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.மறைமலைநகர் அ.தி.மு.க., நகரச் செயலர் ரவிக்குமார்; நகராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். இவரிடம், சிங்க பெருமாள் கோவில் நரசிம்மன் தெருவைச் சேர்ந்த அன்பழகன்(40), எலக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து வந்தார்.ரவிக்குமாருக்கு சொந்தமான தோட்டம் மட்டான்ஓடை பகுதியில் உள்ளது. அங்கு மூன்று மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன. மின் ஒயர்கள் தாழ்வாக தொங்குகின்றன.எனவே, மின் கம்பம் மற்றும் மின் ஒயர்களை மாற்றி அமைக்கக்கோரி, அன்பழகன் கடந்த மாதம் 8ம் தேதி மறைமலைநகர் மின்வாரிய இளநிலைப் பொறியாளர் நடராஜ்(43) என்பவரிடம் மனு கொடுத்தார்.


இவர், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர்.மனுவை பெற்றுக் கொண்ட நடராஜ், இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின் மின் கம்பம் மற்றும் ஒயர்களை மாற்றி அமைக்க 17 ஆயிரத்து 570 ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்தார். அதை மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தும்படி கூறினார்.அதை ஏற்று அன்பழகன் கடந்த 16ம் தேதி பணம் செலுத்தினார். அப்போது நடராஜ் மின் கம்பத்தை மாற்றி அமைக்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் முதலாளியிடம் கேட்டு சொல்வதாகக் கூறிச் சென்றுள்ளார்.மீண்டும் 22ம் தேதி சந்தித்துள்ளார். அப்போது நடராஜ் 20 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். பணம் கொடுக்க விருப்பம் இல்லாத அன்பழகன் சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.டி.எஸ்.பி., சம்மந்தம், இன்ஸ்பெக்டர் விஜய ஆனந்த், கந்தசாமி ஆகியோர் நேற்று மறைமலைநகர் சென்றனர்.


மாலை 3 மணிக்கு ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அன்பழகனிடம் கொடுத்தனர். அவர் மாலை 4.20 மணிக்கு மின்வாரிய அலுவலகத்தில் நடராஜை சந்தித்து பணத்தை கொடுத்தார். அவரும் பெற்றுக்கொண்டார்.அப்போது மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவரை சோதனை செய்தபோது அவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர். அதை அவர் கடன் வாங்கி வைத்திருந்ததாக தெரிவித்தார்.தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைதான நடராஜ் ஆறு மாதங்களுக்கு முன்தான் பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

MCI chief held in bribery case

CBI seizes papers of property worth Rs 100 cr from Ketan Desai’s residence in Bodakdev

By Ahmedabad Mirror Bureau
Posted On Saturday, April 24, 2010 at 02:28:27 AM

04-1.jpg

Dr Ketan Desai’s palatial house: 7, Aashirvas at Friends Avenue Bungalows in Bodakdev


04-2.jpg

CBI officials leaving Dr Desai’s house in Bodakdev

Medical Council of India president Dr Ketan Desai and three others were arrested by the CBI in connection with an alleged Rs 2-crore bribe case for permitting a medical college in Punjab to admit students despite lack of infrastructure. Desai is understood to have been arrested on his way to the airport.

The others arrested were alleged middleman Jitendar Pal Singh, a faculty member of Gyan Sagar Medical College in Patiala, Kamaljeet Singh and the college’s vice-chairman Sukhvinder Singh, CBI said. 

The arrests were made late on Thursday. The four were booked under various provisions of the Prevention of Corruption of Act, dealing with inducing a public servant to accept bribe, criminal misconduct and payment of money.

Search continues
The CBI team, which raided Dr Desai’s residence at 7, Aashirvas in Friends Avenue Bungalows in Bodakdev, has seized documents proving that Desai had given admissions to kin of IAS-IPS officers, politicians and industrialists. The team reportedly seized papers of property worth more than Rs 100 crore. Now, the Income-Tax department will search Desai’s records. 

The CBI continued their search operation at till 3.30 pm on Friday. The MCI chief’s wife Dr Alka Desai left the house soon after the CBI team left their house with important documents.  When contacted, Alka said,” I am in no position to comment on anything at the moment.”

Sources said the documents seized by the CBI were related to the chemical business and real estate.

Bribe for recognition
Desai was guilty of a “conspiracy” to fraudulently give recognition to the medical college to enable it to run courses and take more students even though they did not meet required criteria, said CBI sources. 

The four accused were produced before a special CBI court on Friday. Desai’s counsel told a special CBI court that the case was false and based on a “concocted story”. 

The prosecutor told the court that the CBI has laid a trap outside the south Delhi residence of J P Singh on Thursday based on contents of intercepted telephonic calls among the accused. This led to the arrest of the middleman and Kanwaljeet. 

Kanwaljeet had allegedly delivered Rs 2 crore to J P Singh as bribe to be paid to the MCI president for according recognition to the medical college at Patiala, the prosecutor said. The money was allegedly sent by Sukhwinder Singh.

The four were remanded to five days in CBI custody. Additional Sessions Judge O P Saini termed the offence as “grave”. In a related development, the Prime Minister’s Office sought details from the Health Ministry about the developments


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Note: This post is related to the previous post requesting support for the NCHRH billthat is likely to be proposed in the Indian Parliament this year. Again, I would greatly appreciate any publicity that you can give for this issue. Please link, reblog, tweet, digg, stumble, or share in all the other myriad ways of Web 2.0.

I would be grateful if  Indian bloggers and blog aggregators like DesiPundit andBlogbharti publicized this.

Fellow medical blogger and colleague in my town Dr. George Paul is a highly respected teacher and practitioner who is well known in the dental & maxillofacial surgical fraternities. He and a group of like minded individuals have been actively involved in increasing awareness about irregularities in the functioning of private dental colleges and the poor role played by the Dental Council of India. I had forwarded him a link to my post asking for support for the NCHRH Bill.  George in turn forwarded it to his extensive mailing list. He also called me up and told me about an editorial by the Editor Emeritus of the Indian Journal of Medical Ethics Dr. Sunil K Pandya, published in the current issue of that journal, which highlighted all that is wrong with the Medical Council of India. Here are the most relevant (and telling) excerpts from the long and detailed editorial.

via Indian Journal of Medical EthicsMedical Council of India : the rot within [links mentioned were added by me]

Consider two recent news items. The first in The Times of India on June 6, 2009 carried the headline “MCI members on erring college board“. In the text of the report, which investigated medical colleges in Chennai that charged capitation fees from students in violation of the law, the reporter noted: “Even as questions swirl over the impunity with which private medical colleges are charging illegal donations despite an explicit Supreme Court ban, it now appears members of the apex regulatory body - the Medical Council of India (MCI) - themselves have strong links with the offending institutions. “Two senior officials of MCI, the authority tasked with keeping a vigil on medical education, are currently board members of one of the colleges caught demanding capitation fees in the TOI-Times Now investigation. MCI president Ketan Desai and vice-president P C Kesavankutty Nayar are on the board of management of Sri Ramachandra University (SRU), which demanded Rs 40 lakh from students seeking MBBS admission.” Asked whether it was appropriate for him to be a member of the board of management of an institution that he was supposed to monitor in his capacity of president of the Medical Council of India, Dr Ketan Desai replied: “I am the UGC nominee and my colleague, Nayar, is the MCI nominee. It’s just like how the Dental Council of India members are on the board of several dental colleges. But I have never attended board meetings of SRU for at least three years now. We are there only as ex-officio members.” (18)

Were it not for Dr Ketan Desai’s formidable reputation, such a statement could have been attributed to naivety. The lie to his disclaimer was unwittingly provided by officials within the SRU. As the reporter pointed out, “Amazingly, the two medical colleges in Chennai are virtually unmindful of the peculiarity of the situation. An SRU official told this reporter, ‘The top MCI officials are on our board. We will talk to them about the allegations (of illegal donations) and sort them out.’ ” Dr Ketan Desai’s expertise in “sorting matters out” will stand him and the SRU in good stead and to mutual benefit. An independent report appeared on page 11 of the same issue of The Times of India as that on Dr Ketan Desai and Dr Nayar. Entitled “Trouble for UGC chief, CVC registers complaint against him on host of charges“, it informed the reader that theCentral Vigilance Commission had registered a complaint against the UGC chairman, S K Thorat. The allegations against him ranged from his involvement in pushing through a Rs 224 crore e-governance project, corruption in the grant of deemed university status and misusing UGC resources to run his own institute, Indian Institute of Dalit Studies. (19)

Isn’t there an old English saying about birds of a feather?

In the minutes of the general body meeting held on March 1, 2009, we read an account of the presidential address delivered by Dr P C Kesavankutty Nayar, “president (acting)”. Dr Nayar stated that “The ‘intellectual informational inputs’ that were received through this Herculean exercise were diligently compiled… in the commemorative Souvenir that was released today under the caption ‘Tryst with Consensus’.” (17) In the context of Dr Nayar’s reference to Hercules, those at the helm of affairs might consider the fifth of the Twelve Labours set to Hercules. King Augeas was best known for his stables, which housed the single greatest number of cattle in the country and had never been cleaned. Hercules was asked to perform the task of cleaning these stables in a day - deemed almost impossible since the livestock were divinely healthy and therefore produced an enormous quantity of dung.

In the context of cleaning up the Medical Council of India, where shall we find an Indian Hercules today?

[read the entire editorial here]

Quis custodiet ipsos custodes?

The need now is not a Hercules to clean up the MCI, but for the government to demolish the entire shoddy edifice and replace it with something like the proposed National Council for Human Resources in Health, which ought to have independent constitutional powers comparable to other autonomous constitutional bodies like the Election Commission.

Update 10.09.09, 10:30 AM:

Just found out about this article (via George again) that was published in the Kochi edition of The Indian ExpressDocs launch online campaign by Sudha Nambudiri.

Even as the Union Health Ministry Task Force has suggested that all regulatory bodies, including the Medical Council of India, the Dental Council of India, the Pharmacy Council and the Nursing Council, be scrapped, an interesting petition has surfaced in cyberspace among the medical community in the country. The petition, addressed to the Prime Minister, seeks to garner support to revamp all fields of medical education and to bring it under a single regulatory body - the ‘National Council for Human Resources in Health (NCHRH)’. The online petition titled ‘Support group for National Council for Human Resources in Health Bill’ hosted on the web by PetitionOnline.com,http://www.PetitionOnline.com/NCHRH/ has more than 590 signatures till date and is fast gathering momentum. “I personally agree with what this petition says, and I think you might agree too”, is how the request goes. “All of us in the medical field in India know that the Medical and Dental Councils have become bloated bureaucracies that do very little for their members. I do not suppose the new council will turn out to be any different, but we can hope that there will be a change for the better,” was the comment by a doctor. It is learnt that the campaign has gained momentum following reports that the present members of the MCI, the DCI and other organisations are wooing MPs to delay or scrap the proposed Draft Bill to overhaul medical education. Meanwhile, in a hard-hitting editorial in the Journal of Medical Ethics, renowned neurosurgeons Dr Sunil Pandey … of Jaslok Hospital and Research Centre have asked how the heads of such boards could continue despite High Courts passing severe strictures against them.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_06_2010_007_025.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெசன்ட்நகர் மயான பூமியில் பிணம் எரிக்க லஞ்சம்

June 8, 2010

சென்னை மாநகராட்சி சார்பில் மயான பூமியில் எரியூட்டும் பணிகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. பெசன்ட் நகர் மயானபூமி அழகுபடுத்தும் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

மயானபூமியில் நேற்று 8 எரியூட்டும் பணிகள் குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் நேரிடையாக தொலைபேசி மூலம் எரியூட்டப்பட்ட நபர்களின் குடும்பத்தாரிடம் எரியூட்டும் பணிகளுக்காக மாநகராட்சி ஊழியர்கள் பணம் கேட்டார்களா? என்று கேட்டறிந்தார்.

அப்பொழுது பலர் எரியூட்டும் பணிகளுக்கு பணம் வழங்கியதாக புகார் தெரிவித்ததன் பேரில் உடனடியாக பெசன்ட் நகர் மயானபூமி பொறுப்பாளர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்தார். 2 மயான உதவியாளர்களை பணிமாறுதல் செய்ய உத்தரவிட்டார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி சார்பில் 38 மயானபூமிகளை சீர்படுத்தி அழகுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 10 மயானபூமிகளில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதில் பெசன்ட் நகர் மயான பூமி, ஜி.கே.எம்.காலனி மயான பூமி ஆகியவை தலா ரூ. 1 கோடியே 50 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மயானபூமிகளில் நடைபாதை, அமரும் இடம், அழகிய புல்தரைகள் மற்றும் கழிப்பிட வசதிகள் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது. கண்ணம்மாபேட்டை, ஜாபர் கான்பேட்டை மயானபூமிகள் எழிலுட்டும் பணிகளுக்காக ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 5, 6 மாத காலத்தில் முடிக் கப்படும். மேலும் காசி மேடு, மூலகொத்தளம், வியாசர் பாடி, ஓட்டேரி, வேலங்காடு, கிருஷ்ணாம்பேட்டை ஆகிய வற்றில் விரைவில் எழிலூட்டும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

1996ம் ஆண்டுக்குப் பிறகு மாநகராட்சி ஒப்புதல் பெற்று மயானபூமிகளில் நினைவுச் சின்னங்கள் எழுப்பியவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை மாநகராட்சி மயானபூமிகளில் எரியூட்டுவது இலவசமயமாக் கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பிரேதங்களை எரியூட்டுவதற்கு மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மயானபூமியில் பணம் வழங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சென்னை மாநகராட்சி மூலம் பிரேதங்கள் எரியூட்டும் பணி இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்த புகார்கள் இருந்தால் அந் தந்த பகுதி உதவி சுகாதார அலுவலரிடமும், சுகாதார அலுவலரிடமும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

10 மண்டலங்களிலும் உள்ள உதவி சுகாதார அலுவலர்கள் தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்து எந்தவித முறைகேடும் நிகழாதவாறு பணி மேற்கொள்ள மேயர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கவுன்சிலர் முருகேசன் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சென்சார் அதிகாரிக்கு காப்பு!

1.jpg


"காதல் சொல்ல வந்தேன்'’படத்துக்கு தணிக்கை சர்டிபிகேட் கொடுக்க லஞ்சம் கேட்ட ஊழல் முதலை ஒன்றை குறிவைத்துப் பிடித்திருக்கிறது சி.பி.ஐ. டீம். 

இந்த ஊழல் முதலை விவகாரத் துக்குப் போவதற்கு முன்... டிராஜிடியும் நெகிழ்ச்சியும் கலந்த ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். 


1.jpg




அமைச்சர் பரிதி இளம்வழுதி யின் செல்லமகன் பெயர் அப்பு. துரு துருவென அழகாய் இருப்பார். கல்லூரி ஒன்றில் படித்து வந்த அப்பு மீது பரிதியும் அவர் மனைவியும் உயிரையே வைத்திருந்தனர். இந்த நிலையில்... திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அப்பு இறந்துபோனார். இந்த சோகத்தைத் தாங்கமுடியாமல் பரிதி குடும்பம் திணறியது. பரிதியின் மனைவி, மகன் நினைவாக எப் போதும் அழுதுகொண் டே இருந்தார்.

இந்த நிலையில் விஜய் டி.வி.யில் "கனா காணும் காலங் கள்'’தொடரில் நடித்துக்கொண் டிருந்த பாலாஜி யைப் பார்த்து திகைத்துப்போய்விட்டார் பரிதி மனைவி. காரணம்... தன் மகன் அப்புவின் சாயலில் அப்படியே இருந்தார் பாலாஜி. உடனே தன் கணவரான பரிதியிடம்... ""இந்தப் பையனைப் பார்த்தா நம்ம அப்பு மாதிரியே இருக்கு. இப்பவே இந்தப் பையனை நேர்ல பார்க்கணும் போலிருக்கு. எப்படியாச்சும் நீங்க இந்தப் பையனைக் கண்டுபிடிச்சி வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்க''’ என அழ ஆரம்பிக்க... பரிதியே அந்த பாலாஜியைத் தேடி களம் இறங்கினார். 

சென்னை கோயம்பேட்டில் பாலாஜியின் அப்பா காய்கறிக்கடை வைத்திருக்கும் தகவலைத் தெரிந்து கொண்டு.... பாலாஜியை நேரில் சந்தித்தார். தன் மகன் அப்பு பற்றி எடுத்துச்சொல்லி... பாலாஜியை வீட்டுக்கு அழைத்து வந்தார். பரிதியின் மனைவி, பாலாஜியை தன் மகனாகவே பார்த்து கண்ணீர் வடித்தார். புத்தாடைகள் கொடுத்து, தன் கைகளால் சாப்பாடு போட்டார். அதிலிருந்து அடிக்கடி பாலாஜி, பரிதி வீட்டிற்கு வந்து போவார்.

பாலாஜிக்கு நடிப்பில் அதிக ஆர்வம் இருப்பதைத் தெரிந்துகொண்ட பரிதி... தன் நண்பரான எஸ்-3 பிலிம்ஸ் ஜெயக்குமா ரிடம் பாலாஜியை அறிமுகப்படுத்த... ஜெயக்குமாரோ... பாலாஜியை ஹீரோ வாகப் போட்டு படம் எடுக்கும் முடிவுக்கு வந்தார். இப்படித்தான் இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் "காதல் சொல்ல வந்தேன்'’ படத்தின் ஹீரோவாக ஆனார் பாலாஜி. ஹீரோயின் மேக்னா. படத்துக்கு இசை யுவன். சமீபத்தில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. படப்பணிகள் முடிக் கப்பட்டு... தணிக்கைச் சான்றிதழுக்காக சென்னை சாஸ்திரிபவனில் இருக்கும் அதற்கான அலுவலகத்துக்குப் போனது. அங்கு மண்டல அதிகாரியாக இருந்த ராஜசேகர்... ""எனக்கு ஒரு லட்சரூபாய் கொடுத்தால்தான் சான்றிதழ் கொடுப்பேன்'' என்று சொன்ன தோடு... படத்தையும் பார்க்காமல் சான்றிதழையும் தராமல் இழுத்தடித்தார்.
1.jpg
படத்தின் தயாரிப்பு நிர்வாகியான வரதராஜன், ""நானும் தணிக்கைக் குழுவில் உறுப்பினரா இருந்தவன்தான். எங்கக்கிட்டயே கறாரா பணம் கேட்டா எப்படி?''’ என்று பேசிப் பார்த்தார். ஊழல் முதலையான ராஜசேகர்... ""பணமிருந்தால் வாங்க. படத்தைக் கூடப் பார்க்காம... சர்டிபிகேட் கொடுக்கு றேன்''’என்றார் விடாப்பிடியாக. ""சரி பணத் தோட வர்றேன்'' என்றபடி அங்கிருந்து கிளம் பிய வரதராஜன்... அதே சாஸ்திரிபவனில் இருந்த சி.பி.ஐ. அலுவலகத்துக்கு இன்னொரு பட நிர்வாகியான கோவிந்தராஜை அனுப்பினார். 

டி.ஐ.ஜி. அருணாச்சலத்திடம் விவரங் களைச் சொல்லிப் புகார் கொடுத்தார் கோவிந்தராஜ். உடனே சி.பி.ஐ. டீம் அதிரடி ஆக்ஷனுக்கு ரெடியானது.

10 ஆயிரம் ரூபாயை ரெடிசெய்து.. அதன் எண்களைக் குறித்துக்கொண்டதோடு... அந்தப் பணத்தை அப்படியே ஸ்கேன் செய்து கொண்டனர். பின்னர் அதை கோவிந்த ராஜிடம் கொடுத்து ராஜசேகரிடம் அனுப் பினர். ""என்ன 10 ஆயிரம் ரூபாய்தான் இருக்கா. மிச்சத்தை எப்பத் தருவீங்க?''’என்றபடி ராஜசேகர் அந்தப் பணத்தை வாங்கி சட்டைப் பைக்குள் வைக்க... அதே நேரம் அவர் அறைக்குள் நுழைந்த எஸ்.பி.ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான சி.பி.ஐ. டீம், புழல் சிறைக்கு ராஜசேகரை அனுப்பி வைத்தது. 

தஞ்சாவூர்க்காரரான ராஜசேகர் பஞ்சாப் கேடரில் ஐ.எஃப்.எஸ். படித்து... விலங்குகள் சரணாலய அதிகாரியாக இருந்தவர். சினிமாப் புள்ளிகளின் நட்பிற்காகவும் சம்பாதிப்பதற்காகவும்... கொஞ்சம் செலவு செய்து விருப்ப மாறுதல் வாங்கிக் கொண்டு கடந்த ஜூன் 17-ந் தேதிதான் இங்கு வந்து சேர்ந்தார். 40 வயதுக் காரரான ராஜசேகர், இங்கு வந்த 40-வது நாளிலேயே லஞ்ச வழக்கில் சிக்கி கைதாகியிருக்கிறார். இந்த 40 நாளில் அவர் தணிக்கைச் சான்று கொடுத்த படங் களின் எண்ணிக்கையும் 40 என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் திருவள்ளூர் கிளையில் பேராசிரியையாக இருக்கிறார். குழந்தைகள் இல்லை. இருந்தபோதும் பண ஆசை... ராஜசேகரை விடவில்லை. 

ராஜசேகர் முதலில் கொடுத்த தணிக்கைச் சான்று.. "ராவணன்' படத்துக்காகத்தான். இதற்காக 75 ஆயிரம் ரூபாய் மொய் வசூலித்திருக்கிறார். சின்ன சின்ன புரட்யூசரைக்கூட விடாமல் கறாராக லஞ்சத்தைக் கேட்டு வாங்கிய ராஜசேகர்... இந்த 40 நாளில் 30 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதித்திருக்கிறார் என்கிறது தணிக்கை அலுவலகத் தரப்பே.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., கைது
திருமுல்லைவாயில்: ராணுவ வீரரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சென்னை, திருமுல்லைவாயில் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஸ்டான்லி ஜோன்ஸ்(38). திருமுல்லைவாயில் வெங்கடாசல தெருவில் வசிப்பவர் துரைசாமி; ராணுவ வீரர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாடசாமி. ராணுவ வீரர் துரைசாமி வீட்டு கழிவுநீர், மாடசாமி என்பவர் வீட்டில் நேரடியாக விழுவதாக, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக, மாடசாமி, ராணுவ வீரர் மீது திருமுல்லைவாயில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில், ராணுவ வீரர் துரைசாமி மீது எப்.ஐ.ஆர்., போடாமல் இருக்க எஸ்.ஐ., ஸ்டான்லி ஜோன்ஸ் அவரிடம் 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். எஸ்.ஐ.,க்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத, துரைசாமி லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., பொன்னுசாமி உத்தரவின் பேரில், இன்பெக்ஸ்டர்கள் உச்சப்பட்டி பரமசாமி, அசோகன், இமானுவேல், ஞானசேகரன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்தார். துரைசாமி அளித்த லஞ்ச பணத்தை, எஸ்.ஐ.,ஸ்டான்லி ஜோன்ஸ் பெற்ற போது, மறைந்திருந்த தனிப்படை போலீசார் கைது செய்தனர்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல் புகார்: லதா எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு
Vellore வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 13, 4:43 PM IST குடியாத்தம், ஆக.13-
ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல் புகார்:    லதா எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு
ரூ.20லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் லதா எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் அதிபர் செல்வம் ரூ.20 லட்சம் பணம் கேட்டு லதா எம்.எல்.ஏ. மிரட்டுவதாக கலெக்டர் ராஜேந்திரனிடம் மனு கொடுத்தார். அதில் தனக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்த 35 குடும்பங்களுக்கு வார்டு கவுன்சிலர் பார்த்திபன் மூலமாக மாற்று இடம் கொடுத்தேன். அதில் 7 குடும்பத்தினர் வீட்டுமனைக்கு பதிலாக ரூ.40 ஆயிரம் பணம் வாங்கினர்.
இந்த விவகாரத்தில் லதா எம்.எல்.ஏ. என்னிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார்.
இதன் பேரில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் ராஜேந்திரன் பரிந்துரை செய்தார்.
போலீஸ் சூப்பிரண்டு அன்பு உத்தரவின் படி குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் லதா எம்.எல்.ஏ. உள்பட மேலும் சிலர் மீது (384) அச்சுறுத்தி பணம் கேட்பது (427) சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.
மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
aPlus.gif


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Ex-CJIs sons get prime property in Delhi,but they never bid for it

Manoj Mitta | TNN

Pc0013000.jpg
Justice Sabharwal
New Delhi: The two sons of the former Chief Justice of India,YK Sabharwal,under probe for their business deals,suddenly came to buy a Rs 122 crore property here four months ago,thanks to controversial orders passed by the Delhi high court.
Chetan and Nitin Sabharwal,with partner Kabul Chawla,chief of real estate company BPTP,turned out to be the ultimate beneficiaries of HC orders passed since 2006 in connection with the auction of the 2.7-acre property at 7 Sikandra Road.
An appeal challenging the April 2010 sale deed revealed they had not participated in an auction in September 2006,in which a twojudge bench declared Triveni Infrastructure the highest bidder.Triveni was required to pay 25% of its bid amount,Rs 117 crore,within a week and the rest in three weeks,subject to the property being converted from leasehold to freehold.
But Triveni became liable to pay the 75% component only in February 2009 as it took so long for the property to be converted to freehold.It was then that a succession of single-judge orders resulted in the payment being made,with a Rs 5 crore penalty,in April 2010,that too by the two Sabharwals and Chawla although they had no formal stake in Triveni.
Ex-CJIs sons didnt take part in auction,yet acquired property

New Delhi: An appeal challenging the April 2010 sale deed revealed that the three partners,including the two sons of former CJI Y K Sabharwal,had not participated in an auction in September 2006 on which a two-judge bench declared Triveni Infrastructure the highest bidder.
The appeal being heard by a special bench,headed by Justice A K Sikri,shed light on the various ways in which the 2006 order had been bypassed,particularly by Justice Manmohan Singh,leading to a windfall for the Sabharwal brothers and Chawla: 
When the owners of the property filed a contempt application against Triveni for its failure to pay the balance in February 2009,Justice Manmohan Singh gave more time to the defaulter directing that it would have to pay Rs 3 crore by July-end and Rs 85 crore by October-end.Later,he extended the time further to Decemberend with a penalty of Rs 5 crore.
The repeated extension of the deadline by Justice Manmohan Singh was contrary to the division benchs direction that if the highest bidder failed to make the payments on time,the property would have to be sold to the next highest bidder,Prime Commercial.
In June 2009,Justice Manmohan Singh allowed a four-day old company,Angle Infrastructure,to come in place of Triveni for paying the balance and to take over the property.The owners of the property appealed against this order as it had been passed without any notice to them.
A week before the expiry of the December 2009 deadline,Justice Manmohan Singh gave a fresh extension to Angle,this time by five months.He also granted Angles request to introduce the condition that it would be required to pay the balance only when the owners were in a position to deliver immediate possession of the property.Most of the owners challenged this order,again because it had been passed without any notice to them.
A month before the expiry of the May 2010 deadline,Triveni and Angle filed a joint application requesting that the balance be allowed to be paid by the Sabharwals and Chawla and that the property be registered in their names.Since the Sabharwal brothers and Chawla appeared in the court with demand drafts of the balance amount,Justice Rajiv Shakdher directed the owners on April 20 to execute the sale deed within two days.
That is how the Sabharwal brothers and Chawla acquired the property from an auction in which they had not participated at all.





__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Ex-Arunachal CM held for 1,000cr PDS scam

TIMES NEWS NETWORK

Itanagar/Guwahati: Former Arunachal Pradesh chief minister Gegong Apang was arrested on Tuesday for his alleged involvement in the Rs 1,000-crore public distribution system scam and remanded in seven days of police custody.
A Special Investigation Cell,constituted by the Arunachal Pradesh government,arrested Apang under Sections 120b (criminal conspiracy ),420 (cheating),468 (forgery),409 (criminal breach of trust) of IPC,read with B-2 of Prevention of Corruption Act.
The drama surrounding Apangs arrest began in the morning when he was summoned to the Special Investigation Cell (Vigilance) in Itanagar for questioning.In the afternoon,he was arrested under non-bailable clauses and produced before the court of the district sessions judge in Assams Lakhimpur district.The court remanded him in seven days of police custody.
While entering the Lakhimpur court,Apang claimed that he was innocent and it was a political ploy to tarnish his image.I am innocent and it is a political conspiracy against me.There should be a CBI probe, the former CM told the mediapersons waiting outside the court.
The Arunachal Pradesh government had constituted the Special Investigation Cell to investigate the PDS scam following a directive of the Gauhati High Court.The courts order came in the wake of a PIL filed by Arunachal Citizens Rights (ACR) chairperson Bamang Tago and a mass leader,Domin Loya,on June 13,2004.The two had alleged that hill transport subsidy bills for carrying PDS items to Arunachal Pradesh from godowns in Assams North Lakhimpur were claimed in fraudulent ways.They had also claimed that the bills were cleared without any financial concurrence when Apang was the chief minister of the hill state.
The state exchequer had suffered a loss of about Rs 1,000 crore due to such fraudulent claims of hill transport subsidy bills, an official said.
Apang was arrested on the basis of material evidence produced against him and statements given by other accused, Special Investigation Cell investigating officer M S Chauhan said.
We had provided Apang with a set of questionnaires.Despite three summons issued earlier,he appeared before the probe panel for the first time today,but denied any knowledge of facts or persons involved in the scam, he said.Since the charges brought against him were under nonbailable sections,police had the power to arrest him, Chauhan added.
Apangs counsel Kardak Ete,however,said the former chief minister had been illegally detained.We smell a political foul play in the entire episode.The probe panel had called Apang as a witness.There should not be any question of his arrest under any clause.But law will take its own course, Kardak said.
Soon after the news of Apangs arrest spread,an elated Tago said,I am happy that our claims about the scam are vindicated,though we had not named anybody while filing the PIL. 
The Arunachal Pradesh Police had earlier named 40 people,including Apang and two of his office staff,an MLA each from Assam and Arunachal Pradesh and three IAS officers,as accused in the transport subsidy scam.

Pc0081800.jpg
IN THE DOCK: Former Arunachal Pradesh CM Gegong Apang talks to mediapersons after he was arrested and produced at a Lakhimpur court


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

GUJARAT HC DENIES PENSION BENEFIT 
Judge dismissed for paying less taxi fare

Dhananjay Mahapatra | TNN

New Delhi: The judiciarys efforts to clamp down on corruption may seem to have slackened with those who allegedly siphoned off crores of rupees from the PF accounts in Ghaziabad district court continuing to enjoy office but in 1988,a Gujarat chief judicial magistrate was dismissed from service for paying Rs 65 less towards taxi fare while on a private visit with family.
The judge,P N Bavishi,has now approached the Supreme Court.A Bench comprising Justices J M Panchal and C K Prasad admitted his petition after hearing his counsel Haresh Raichura narrate a nearly two-decade fight by Bavishi for proper pension,which he claimed the state government had refused to give.
Bavishi,who joined judicial service in 1963,was working as CJM Junagadh in 1981 when he took his family on a private trip to various places and the taxi bill came to Rs 120.But he allegedly paid Rs 55 to the taxi operator,who then complained to the HC.
The HC termed this a grave misconduct on the part of a judicial officer as he allegedly misused his official position to pay less to the taxi operator and ordered Bavishis dismissal.He challenged this administrative order on the judicial side.During the hearing in SC,the government counsel said the HC,on the administrative side,agreed to permit the petitioner to retire voluntarily from service from the date of his removal if he made an application to this effect.
Bavishi withdrew the petition and made an application for voluntary retirement as was suggested.The HC recommended his case.The government accepted the same and cancelled its earlier notification dismissing Bavishi from service.However,it refused Bavishi the benefit of weightage of additional service as was granted to others according to government rules.
Since his voluntary retirement in 1992,Bavishi has been fighting for consideration of weightage of his service while fixing pension.The HC rejected his plea but the SC has now agreed to hear his case.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தவருக்கு 6 ஆண்டு சிறை

திருவள்ளூர்: போலி ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்று கொடுத்து ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தவருக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து திருவள்ளூர் கோர்ட் தீர்ப்பளித்தது.


வேலூர் மாவட்டம், கங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் வெற்றி (எ) வெற்றிச்செல்வன்(40). இவர், கடந்த 2001ம் ஆண்டு போலியான ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்று கொடுத்து திருவள்ளூர் மாவட்டம், பல்லவாடா ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தார். இது குறித்து அப்போதைய திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் பூபதி, 2002ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அப்புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். விசாரணையில்,"நான் அவனல்ல. நான் அப்போது வேலூர் போக்குவரத்துக் கழகத்தில் வேலை செய்து வந்தேன்' என, போக்குவரத்து மேலாளரின் கையெழுத்தை இவரே போலியாக போட்டு அக்கடிதத்தை கொடுத்து வழக்கில் இருந்து தப்பிக்க முயன்றார். இவ்வழக்கு குறித்த விசாரணை திருவள்ளூர் ஜே.எம் 1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


விசாரணை முடிந்து நேற்று மாஜிஸ்திரேட் சாந்தி தீர்ப்பு அளித்தார். அத்தீர்ப்பில், "போலியான ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்று கொடுத்து ஆசிரியர் பணிக்கு சேர்ந்த குற்றத்துக்காக மூன்று பிரிவுகளின் கீழ், தலா இரண்டு ஆண்டு வீதம் மொத்தம் ஆறு ஆண்டு சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும், இத்தண்டணையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

லஞ்சத்தைச் சொன்னால் மிரட்டல்!

""சுனாமி வீட்டுக்கு 30 ஆயிரம் கமிஷனா? ஏதோ ஆயிரம், ஐநூறு என்றால் கொடுக்க முயற்சிக்கலாம். 30 ஆயிரமெல்லாம் தர முடியாது. அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கே போவேன்?'' என்றாராம் பாம்பன், மொட்டையன்பனைப் பகுதியில் வசிக்கும் மீனவர் மரியராயப்பன். இவர் இடத்துக்கு கிழக்கே, மேற்கே, தெற்கே, வடக்கே உள்ளவர்கள் எல்லாரும் சுனாமி வீட்டுக்கு செலக்ட் ஆகிவிட்டார்கள். இவருக்கு மட்டும் வீடு மறுக்கப்பட்டுவிட்டது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை தீர்க்கும் முகாமில் இருந்து நக்கீர னுக்கு தகவல் தந்தார் மரியராயப்பன். ""சுனாமி வீட்டுக்காக லஞ்சம் கேட்ட அதிகாரிகளைப் பற்றி, கலெக்டரிடம் புகார் கொடுக்க வந்தேன். இங்கே சுனாமி ஏ.டி.க்கு பதிலா வேலை செய்ற ஒருத்தரு, "ஏண்டா எவ்வளவு தைரியம்... எங்க அதிகாரி பத்தியே புகார் கொடுக்க வந்தியா? இனிமே சுனாமி வீடு மட்டுமில்ல... எந்தச் சலுகையுமே உனக்குக் கிடைக்க விடமாட்டேன். மரியாதையா ஓடிப்போயிடு. இல்லேன்னா ஆளைவச்சு காலிபண்ணிப்பிடுவம்'னு மிரட்டுறா ருங்க.இப்ப வெளிய வந்து நிக்கிறேன். கலெக் டர்ட்ட மனு கொடுக்கணும். உதவி செய்யுங்கள்' -பதட்டக் குரலில் சொன்னார் மரியராயப்பன்.

கலெக்டர் அலுவலகம் சென்றோம். டி.ஆர்.ஓ. பாலசுப்ரமணியனும் ஆர்.டி.ஓ. பிரபா கரனும் மற்ற அதிகாரிகளும் பொதுமக்களிட மிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.

மரியராயப்பனை, ஆர்.டி.ஓ. முன்னால் நிறுத்தினோம். ""பொதுமக்கள் பயமில்லாமல் தங்களோட பிரச்சினைகளை சொல்வதற்குத் தானே இதுபோன்ற முகாம்களை நடத்துறீங்க. மனு கொடுக்க வந்த இவரை உங்க ஊழியர் ஒருவர் மிரட்டி வெளியே அனுப்பியிருக்கிறார் சார்''.

""சுனாமி ஏ.டி. உடனே இங்கே வரவும்'' -மேஜையிலிருந்த மைக்கில் அழைத்தார் ஆர்.டி.ஓ.

வெள்ளை வேட்டி சட்டை அணிந்த ஒருவர், அலட்சியத் தோரணையோடு வந்தார். ""ஏ.டி.க்காக நான் தான் வந்திருக்கேன்'' என் றார் அவர்.

""மனு கொடுக்க வந்த "பப்ளிக்'கிடம் இப்படித்தான் மரியாதை குறைவா நடப் பீங்களா?'' -கண்டிப்போடு கேட்டார் ஆர்.டி.ஓ.

""இப்படியெல்லாம் மனு எழுதக் கூடாதுன்னு அட்வைஸ் செய்தேன். மிரட்ட வில்லை'' என்றார் அலட்சியத்தோடு அந்த ஊழியர் மலைராஜ்.

பக்கத்தில் நின்ற மரிய ராயப்பன் உடனே குறுக்கிட்டு, ""என் குழந்தைங்க மேல சத்தியமா இவர் மிரட்டினாருங்க. இவங்க கேட்ட லஞ்சத் தை கொடுக்கலைன்னுதான் என்னை சுனாமி வீட்ல சேர்க்கலை'' என்றார் தழுதழுத்த குரலில். 

""நீங்க பயப்படாதீங்க. இந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கணும்னு கலெக்டரிடம் சொல்றேன். உங்களுக்கு சுனாமி வீடு கிடைக்க ஏற்பாடு செய்றேன்... அந்த மனுவை என்னிடம் தாங்க'' மனுவைப் பெற்றுக்கொண்டு மரிய ராயப்பனையும் நம்மையும் அனுப்பி வைத்தார் ஆர்.டி.ஓ. பிரபாகரன்.

அங்கு நடந்த விஷயங்களை கலெக்டர் ஹரிகரன் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் கலெக்டர்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கடவுள் பெயரில் லஞ்சம்! -அரசு ஊழியர்களின் புது டெக்னிக்!

லஞ்சம் வாங்கும் போது கையும் களவு மாக கலெக்டர் அலுவலக ஊழியர் சிக்கிக் கொண்டார், காவல்துறை அதிகாரியும் சிக்கிக் கொண்டார். வருவாய்த்துறை அதி காரியும் சிக்கிக் கொண்டார் என தினந் தோறும் எதாவது ஒரு அரசுத்துறை ஊழியர் லஞ்சத்தில் சிக்கிக் கொள்ளும் செய்தி தினசரிகளில் தினமும் வருவதால், அரசு ஊழியர்கள் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கை தேய்ந்து கொண்டே போகிறது.

இந்த சூழ்நிலையில் "சீனிகிழங்கு தின்ன பன்றி, செவி அறுத்தாலும் நிக்குமா?' என்ற கிராமத்து பழமொழிக்கேற்ப கையூட்டு வாங்கிய அதிகாரிகளின் கை சும்மா இருக்கு மா? மீண்டும், மீண்டும் வாங்க தூண்டுவதால் விஜிலென்ஸ் கையில் சிக்காமல் இருக்க நம்மூர் லஞ்ச அதிகாரிகள் புதிய டெக்னிக் மூலம் லஞ்சத்தை வாங்குகிறார்கள். அந்த டெக்னிக்தான் என்ன?

சம்பவம்:-1

குமரி மாவட்ட மின்சார வாரியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் பக்தி பரவசமான அந்த உயர்ந்த அதிகாரி. தடிக் காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த தனியார் எஸ்டேட் முதலாளிகள் சிலர், எஸ்டேட் டுக்கு மின்சாரம் வேண்டி அந்த அதிகாரியை சந்தித்தனர். அதிகாரியோ வழக்கம் போல், மின்சாரம் கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாகக் கூறியதால் இறுதியில் அந்த எஸ்டேட் முதலாளிகள் ""உங்களுக்கு வெட்ட வேண்டியதை வெட்டுறோம்'' என்ற ஒரு பிட்டைபோட, அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த அதிகாரியோ, ""நான் அதை என் கையால தொடமாட்டேன். ஒரு கோயிலை சொல்லுறேன். அந்த கோயிலில் இரண்டு லட்சம் ரூபாய் நன்கொடையாக கட்டிவிட்டு ரசீதை கொண்டு வாருங்கள். உடனே மின்சாரத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்'' என்று கூறியிருக்கிறார். இதற்கு எஸ்டேட் முதலாளிகளும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்த விஷயம் இன்னொரு அதிகாரி மூலம் நம் காதுக்கு எட்ட, உடனே நாம் அந்த அதிகாரி கூறிய பூதப்பாண்டி அருகேயுள்ள அந்த அம்மன் கோயில் நிர்வாகியை துருவினோம். நிர்வாகி சொன்ன தகவல் பலத்த அதிர்ச்சியாக இருந்தது.

""விஜிலென்ஸுக்கு பயந்து அந்த அதிகாரி நேரிடையாக லஞ்சம் வாங்க மாட்டார். இப்படி கோயிலில் கட்ட சொல்லிவிடுவார். நாங்களும் பணத்தை வாங்கிட்டு நன்கொடை ரசீது கொடுத்துவிடுவோம். அதன்பிறகு அந்த அதிகாரி யிடம் பணத்தைக் கொடுக்கும்போது அவர் ஒரு லட்சத்துக்குக் கீழ் இருந்தால் 20 பர்சன்டேஜும், அதற்கு மேல் இருந்தால் 30 பர்சன்டேஜும் கோவிலுக்கு தந்து விடுவார்.

இப்படி பல லட்சம் ரூபாய்க்கு இங்கிருந்து ரசீது கொடுத்து இருக்கிறோம். அவர் புண்ணியத் தில் எங்கள் கோயிலின் கட்டிடங்கள் உயருது'' என்றார்.

சம்பவம்:-2

வரதட்சணை கேஸ் என்றால் அங்கு "தட்சணை' கொடுத்தால் போதும். எல்லாம் சரியாகிவிடும். கடற்கரை யோர அந்த மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அமைதிக்கு பெயர் கொண்ட அந்த பெண் எஸ்.ஐ.யை கையும் களவுமாகப் பிடிக்க அந்த பகுதி வர்த்தக நண்பர்களும், விஜிலென்சும் பொறி வைத்தனர். அதை எப்படியோ மோப்பம் பிடித்து விட்டார் அந்த எஸ்.ஐ.

பாலியல் ரீதியாக கொடுமைக்கு ஆளான ஒரு புது மணப்பெண் தனது கணவர் மீது புகார் கொடுக்க எஸ்.ஐ.யிடம் வந்தார். வசதி படைத்த அந்த புது மணமகனிடம் இருந்து கரன்சியை கறக்கவும் வேண்டும், விஜிலென் சிடம் மாட்டிக் கொள்ளவும் கூடாது என யோசித்தார் எஸ்.ஐ.

அதற்காக அந்த பெண் எஸ்.ஐ. மேற்கொண்டது கோயில் பாலிசி. மணமகனிடம், ""நீ செய்த பாவம் தொலைய வேண்டுமானால் எனது ஊரில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடு, உன் மீது நடவடிக்கை எடுக்கமாட்டேன்'' என்றதும், மணமகனும் உடனே அந்த பணத்தை கோயிலில் சென்று கட்டி விட்டார்.

இதில் கோயிலுக்கு 15 ஆயிரம் ரூபாய் போக மீதியை எஸ்.ஐ. வாங்கிச் சென்றார். பாதிக்கப்பட்ட புது மணப்பெண் உடல் முழுக்க பாலியல் கொடுமை தழும்போடு கதறிக் கொண்டிருக்கிறார்.

சம்பவம்:-3

லஞ்சம் தலைவிரித்தாடும் பத்திரப் பதிவுத்துறையை சொல்லவே வேண்டாம். துறை மந்திரியின் சொந்த தொகுதியில் இருக்கும் மலையடிவார பதிவு அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்களின் ஆதிக்கம்தான் அதிகம். ஆனால் அதன் பதிவாளர், ரியல் எஸ்டேட் அதிபர்களின் தில்லுமுல்லுகளை கண்டுகொள்ளாமல் இருக்க, கோயில் பாலிசியைத்தான், ஒரு பத்திரப் பதிவு எழுத்தர் மூலம் முறைப்படுத்தி வருகிறார். தோவாளையில் உள்ள ஒரு தேவசம்போர்டு கோயிலிலேயே லஞ்ச பணத்தை செலுத்தி ரசீது வாங்கிக் கொள்கிறார்கள். நம் விசாரணையில் கோயில் நிர்வாகி ஒருவர் இதற்கென்றே போலி ரசீது அடித்து வைத்து இருப்பதாக தெரிய வந்தது.

இன்னும் பல அதிகாரிகளும் இதேபோல் கோயில் பாலிசியை பின்பற்றி வருகிறார்கள். பாதிக்கப்படும் மக்களோ, ""தெய்வத்தின் பெயரால் இந்த புது டெக் னிக்கை பயன்படுத்தும் லஞ்ச அதிகாரிகளுக்கு தெய்வம் நிச்சயம் கூலி கொடுக்கும்'' என்கி றார்கள்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard