Real shame on Christians !!!
அறிவர் ஞானவரம் - அறிவர் தேவசகாயம் அவர்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
-------------------------------------------------------
மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பி.எச்.டி படித்த மணிப்பூரைச் சேர்ந்த பழங்குடியின மாணவியை கல்லூரி முதல்வர் அறிவர்.ஞானவரம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும், அதற்கு தான் உடன்படாததால் ஆய்வை முடிக்க இயலாத சூழலுக்குத் தள்ளப்பட்டதாகவும், அந்தமாணவிக்கு வழங்கப்பட்ட 6 லட்சத்து 50 ஆயிரத்தை யு.ஜி.சி -க்கு திருப்பி அனுப்பியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகார் கல்லூரியின்ஆசிரியர்களாலும், செராம்பூர் பல்கலைக்கழக நிர்வாகிகளாலும் உறுதி செய்யப்பட்டு மதுரை எஸ். எஸ். காலனி காவல்நிலைய முதல் தகவல்அறிக்கை எண்: 425/2013, US 354 (4) IPC -யின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளியான கல்லூரியின் முதல்வர் அறிவர். ஞானவரம் இதுவரை கைது செய்யப்படாததைக் கண்டித்தும், அவரின் தலித் - பழங்குடி விரோதப் போக்கின் எதேச்சதிகாரத்துக்கு முழுக்க ஆதரவாகச் செயல்படும்,தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் ஆட்சிமன்றக்குழு தலைவரும், சென்னை பேராயருமான அறிவர். தேவசகாயம் அவர்களைக் கண்டித்தும்,தமிழக அரசு உடனே தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழக தலித் இயக்கங்கள் நிகழ்த்தும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாள்: 14 நவமபர் 2013 காலை 10 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு.
தலித் பெயரைச் சொல்லி, தலித்துகளையே பகடைக்காய்களாக்கி, சுயநல சந்தர்ப்பவாத அரசியல் பிழைப்பு நடத்தி தலித் மற்றும் பழங்குடியினர்விரோதப்போக்கைக் கடைப்பிடிக்கும் அறிவர் ஞானவரம் - அறிவர் தேவசகாயம் அவர்களைக் கண்டித்து நடைபெறும் இந்தக் கண்டனஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்க தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
ஒருங்கிணைப்பு
-------------------------
தலித் விடுதலை இயக்கம் - DLM - தமிழ்நாடு
தொடர்புக்கு - 9047838080, 9443815252