ஓமலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி சுகன்யா பாதிரிகளால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். அதுபற்றி 8-12-2006 அன்று விஜபாரதத்தில் நான் எழுதிய கட்டுரை.
சேலம் மாவட்டம் ஓமலூரில் இருக்கிறது கிறிஸ்தவப் பாதிரிகள் நடத்தும் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளி. கடந்த நவம்பர் 18-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவி சுகன்யா இப்பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தாள். இந்தச் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தோளூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள்தான் சுகன்யா. ஓமலூர் பாத்திமா பள்ளி விடுதியில் தங்கி, அங்கு படித்துவந்த சுகன்யாவின் மர்ம மரணம் கிறிஸ்தவப் பாதிரிகளின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டி யிருக்கிறது.
கற்பழித்துக் கொல்லப்பட்ட மாணவி 12-ம் வகுப்பு மாணவி சுகன்யா
"15 வருஷத்துக்கு முன்ன எங்க மகள் சின்னம்மா அங்க படிச்சிக்கிட்டு இருந்தா. அவளை ஸ்கூல்ல ஒரு ரூமில் போட்டு அடிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டு ஓடினோம். கடைசியில் ஏரியில் பிணமாதான் கிடைச்சா. போலீஸில் அப்ப புகார் தந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை" என்கிறார் 15 வருடங்களுக்கு முன்பு இதே பள்ளியில் மர்மமான முறையில் இறந்த மாணவி சின்னம்மாவின் தாயார் பழனியம்மாள். இதேபோலவே கடந்த ஜூலை 29ம் தேதி காவேரி என்ற மாணவி தூக்கில் தொங்கினாள். "எந்தப் பிரச்சினையும் இல்லீங்க. திடீர்னு உங்க மகள் செத்துட்டான்னு சொன்னா எப்படி இருக்கும்? என்ன நடந்துச்சுன்னே தெரியலை. எங்க மகளை இழந்துட்டோம்" என கண்ணீருடன் பெருமூச்சு விட்டார் காவேரியின் அம்மா வளர்மதி.
ஓமலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிரோத் மற்றும் பீர் பாட்டில்கள்

நவம்பர் 20ம் தேதி ஓமலூர் தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ தமிழரசு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய 8ம் வகுப்பு மாணவி கிரிஜா, "ஒரு நாள் எங்க வகுப்பறை சுவர் முழுக்க ரத்தக்கறையும் பூவும் இருந்தது. அந்தக் கறையை மாணவிகளான எங்களைக் கழுவி சுத்தம் பண்ண வச்சு, அதுக்கு காசும் கொடுத்தாங்க" என்ற `பகீர்' குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பூட்டினாள்.
நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு பேட்டு அளிக்கும் அபிராமி

இந்து முன்னணி நிறுவனத் தலைவர் இராம.கோபாலன் நவம்பர் 23ம் தேதி இந்தக் கொடூரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்நடத்தப் போவதாகஅறிவித்தார். ஆனால் சதாம் உசேனை விடுவிக்கவேண்டும் என்பதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்திற்குக் கூட அனுமதி தரும் போலீசார், இதற்கு அனுமதி தரவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளியை பார்வையிடவும் அனுமதிக்க வில்லை.போலீசார் பாதிரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதையே இது காட்டுகிறது.
இப்போது ஆளும் கட்சி உதவியுடன் தப்பித்துக் கொள்ளபாதிரிகள் திட்டமிடுவதாக பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள். இதை நிரூபிக்கும் வகையில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பாதிரிகளுக்கு சாதகமாகவே வந்துள்ளது. மாணவி சுகன்யாவுக்குநீதி கிடைக்குமா? நீதி தேவதைக்கு வெற்றி கிடைக்குமா? அல்லது கிறிஸ்தவர்களின் ஓட்டுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கன்னியாஸ்திரிகளுடன் பாதிரிகள் உல்லாசம்!ஓமலூர் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் பாதிரிகள் தங்கும் அறைகளில் வெளிநாட்டு மது பாட்டில்களும், காண்டம்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. இந்தப் பள்ளியில், வெளிமாநிலங்களிலிருந்து பாதிரிகள் வந்து வெள்ளிக்கிழமை இரவிலிருந்து சில நாட்களுக்கு தங்குவது வழக்கம். அந்த நேரத்தில் பாதிரிகள் கன்னியாஸ்திரிகளுடன் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருப்பார்களாம். இப்படி உல்லாசமாக இருக்கும் பாதிரிகளுக்கும், கன்னியாஸ்திரிகளுக்கும் விடுதியில் தங்கிப் படிக்கும் அழகான மாணவிகள்தான் உணவு உள்ளிட்ட பொருட்களை (?) எடுத்துச் சென்று பரிமாறுவார்களாம்.
பொதுமக்கள் எழுப்பும் கேள்விகள்?
பிளஸ் 1-ல் மாணவி சுகன்யா மூன்றாவது ரேங்க் எடுத்துள்ளார். ஆனால் சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் சுகன்யா சரியாக படிக்கமாட்டார் என்று பேட்டி அளித்துள்ளார். சிங்கராயன் ஏன் பொய் சொல்கிறார்?
மாணவி சுகன்யாவின் பெற்றோரிடம் ரூ.7 லட்சம் வரை பேரம் பேசியதாக செய்தி வந்துள்ளது. ஏற்கனவே மர்மமான முறையில் இறந்த மாணவிகளின் பெற்றோருக்கும் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. இதுபற்றி காவல்துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
மர்ம மரணம் என்றால் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடலைப் புதைப்பதுதான் வழக்கம். ஆனால் மாணவி சுகன்யாவின் உடலை போலீசார் எரித்துள்ளனர். இதற்கு என்ன காரணம்?
ஓமலூர் பாத்திமா பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளில் 15 மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?
240 மாணவிகள் தங்கியுள்ள விடுதிக்கு வெளி மாநிலங்களிலிருந்து வந்து பாதிரிகள் பலர் இரவு தங்குகிறார்களே எதற்காக? இது சிறுபான்மை கிறிஸ்தவ அமைப்பு நடத்தும் பள்ளி. இது அரசுப் பள்ளி அல்ல. அதனால் இங்கு பணியிலிருக்கும் 86 பேரையும் மாற்றமுடியாது என்று சேலம் மறைமாவட்ட பிஷப் ஆணவமாக பேட்டி அளித்துள்ளார். எந்த தைரியத்தில் பிஷப் இப்படி பேசுகிறார்?
பொதுவாக குற்றம் நடந்த இடத்தில் குற்றவாளி எனக் கருதப்படுவோரை தங்க போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் கற்பழிப்பு குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாதிரிகள், சம்பந்தப்பட்ட பாத்திமா பள்ளியிலேயே தங்கியுள்ளனரே ஏன்?
மாணவி சுகன்யா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் முதல் 3 குற்றவாளிகளை இருதய நோயாளிகள் என்பதற்காக கைது செய்யவில்லை என்று சேலம் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இருதய நோயாளிகள் கொலை, கொள்ளை, கற்பழிப்பில் ஈடுபட்டால் போலீசார் அவர்களை கைது செய்யாமல் விட்டுவிடுவார்களா? இல்லை கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு மட்டும் இந்த சலுகையா?
பா.ஜ.க தவிர மற்ற அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் மௌனம் சாதிக்கின்றனரே ஏன்? கிறிஸ்தவர்களின் ஓட்டுகளுக்காக ஹிந்து மாணவி கற்பழிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்களா?
மாணவியர் விடுதியில் `கோஹினூர்' காண்டம், `மார்கோபோலோ' பீர் பாட்டில்
கிறிஸ்தவப் பாதிரிகளால் மாணவி சுகன்யா கற்பழித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஓமலூர் பாத்திமா மேல்நிலைப் பள்ளி விடுதியில் ஏராளமான கோஹினூர் `காண்டம்'களும், `மார்கோபோலா' பீர் பாட்டில் உட்பட வெளிநாட்டு மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஆங்காங்கே பீர்பாட்டில்களும் காலி வெளிநாட்டு மது பாட்டில்களும் குவியல் குவியலாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கன்னியாஸ்திரிகளுடன் பேட்டி அளிக்கும் பிஷப் சிங்கராயன்

பொதுமக்களின் எதிர்பார்ப்புகள்...
மாணவி சுகன்யா மட்டுமல்ல 15-க்கும் மேற்பட்ட அழகான மாணவிகள் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்படும் பாத்திமா மேல்நிலைப் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
அரசு உதவியுடன் நடந்து வரும் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் பாதிரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் தங்குவதற்கு தடைவிதிக்க வேண்டும். அங்கு ஜெபம் என்ற பெயரில் நடக்கும் மதமாற்றத்தையும் தடுக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளில் இறந்துபோன 15-க்கும் மேற்பட்ட மாணவிகளின் மர்ம மரணம் பற்றி விசாரணை நடத்தி உண்மையை வெளி வரவழைக்க வேண்டும்.
இது கிறிஸ்தவப் பள்ளி. ஆசிரியர்களை இடமாற்றம் செய்யமுடியாது என்று ஆணவமாகப் பேசிய சேலம் மாவட்ட பிஷப் சிங்கராயன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டில்லியில் பிரியதர்ஷிணி மட்டூவை கற்பழித்து கொலை செய்ததற்காக வழக்கறிஞர் சந்தோஷ் சிங்கிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அதுபோல மாணவிகளைக் கற்பழித்து கொன்றதாகக் கூறப்படும் பாதிரிகளுக்கும் விசாரணை நடத்தி மரண தண்டனை விதிக்க வேண்டும்.
நாடுமுழுவதும் கிறிஸ்தவப் பாதிரிகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகளில் கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் அடிக்கடி வருகின்றன. எனவே நாடுமுழுவதும் உள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முழுமையாக ஆய்வு செய்து அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அமைச்சர் ஒருவர் உதவியுடன் பாதிரிகள் இந்த விஷயத்தை அமுக்கப் பார்ப்பதாக செய்திகள் வருகிறது. அதனால் இந்த வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.



















கத்தோலிக்கத் திருச்சபையில் சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவருகின்றன





The nuns were reportedly unhappy police had entered convent groundsUganda police are investigating after a marijuana plantation was uncovered in the garden of a convent. A regional police chief told the BBC that plants covering one acre had been found and uprooted in the southern Masaka district. Two nuns and two porters have been questioned. One of the nuns has been quoted by local media as saying the marijuana was used to treat farm animals, such as pigs. Southern regional commander Emmanuel Muhuirwe told the BBC News website that only the porters had been arrested – not the nuns. He said the nuns had been questioned because the garden was part of the convent.

காவல்துறையிடம் புகார் தந்திருக்கும் முகமது பாருக்கை மண்ணடியில் நாம் சந்தித்தபோது “""நான் அவரோட ஆசிரமத்தில் கொஞ்சகாலம் தங்கி யிருந்தேன். அப்பதான் அவரோட செக்ஸ் ரீதியிலான நடவடிக்கை களைப் பார்த்து அதிர்ந்துபோனேன். மந்திரிச்சி தண்ணீர் கொடுப்பார். பிறகு கற்கண்டு கொடுப்பார். அதை சாப்பிடும் பெண்கள்… கண்செருகிப் போய்டுவாங்க. அப்புறம் அவர் இஷ்டப்படிதான் அவங்க நடக்கணும். இதேபோல்… சின்ன பையன்களைக் கூப்பிட்டு… என்னோட செக்ஸ் விளையாடினால் உங்களுக்கு ஆயுள் அதிகரிக்கும்னு தன் அறைக்குள் கூட்டிட்டுப்போய்டுவார். இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்து… இஸ்லாத்தின் மாண்பை இப்படி இந்த ஆள் கெடுக்கிறாரேன்னு கோபமாகித் தான்… அங்கிருந்து வந்தேன். இதை என் நண்பர்கள்ட்டசொல்லி நான் புலம்பினேன். அவங்கதான் என்னை போலீஸ்ல புகார் கொடுக்கச் சொன்னாங்க. இந்த சர்க்கார் வாப்பாவின் முகமூடியை நான் கிழிக்காம ஓயமாட்டேன்”’’என்றார் எரிச்சல் மண்டும் குரலில்.









K N George, honorary secretary of the NGO, has given in writing to the Child Welfare Committee (CWC) that Shaila had carried out all the activities without his knowledge.







இமெயில்
பிரதி
வலைப்பூக்கள்
digg
del.icio.us
திருச்சி:”
திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், எஸ்தரின் பெற்றோரால் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணமான நாளிலிருந்து எஸ்தரிடம் இருந்து மனோவா ஒதுங்கியே இருந்தார். அவரை கண்டு கொள்ளவும் இல்லை. ஒப்புக்கு கணவனாக இருந்து வந்தார்.திருமணத்துக்கு முன் மஸ்கட்டில் பணியாற்றிய மனோவா, தற்போது, தேனியில் உள்ள ஒரு மில்லில் பணியாற்றி வருகிறார். திருமணம் ஆனது முதல், இரண்டு மாதம் வரை கணவன், மனைவிக்குள் தாம்பத்ய உறவே நடக்கவில்லை.இதுகுறித்து எஸ்தர் கணவரிடம் கேட்டபோது, “உன்னை எனக்கு பிடிக்கவில்லை; பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்தேன்’ என்று கூறியுள்ளார்.மன உளைச்சலுக்கு ஆளான எஸ்தருக்கு, மாமனாரும், மாமியாரும் சரியாக சாப்பாடு போடாமல் உடலளவில் தொந்தரவு கொடுத்தனர். கணவனாலும், அவரின் குடும்பத்தாலும் மன உளைச்சலுக்கும், உடல்ரீதியான பாதிப்புக்கும் உள்ளான எஸ்தரை,போடிநாயக்கனூரில் உள்ள மாரநாதா சபைக்கு பைபிள் படிப்புக்கு கணவனின் குடும்பத்தார் வற்புறுத்தி அனுப்பினர்.அங்கு மதபோதகராக இருக்கும் டேவிட் புஷ்பராஜ், எஸ்தரை தனியாக அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். ஆபாச படங்களை, “டிவி’யில் பார்க்க வற்புறுத்தியுள்ளார். அவரிடம் சிக்காமல் தப்பிவந்த எஸ்தர், தன் கணவரிடம், மதபோதகரின் தவறான நடத்தை குறித்து கூறினார்.ஆனால், கணவரோ, அவரது குடும்பத்தாரோ அதுகுறித்து அலட்டிக் கொள்ளாமல், “மதபோதகர் டேவிட் புஷ்பராஜை, “அட்ஜஸ்ட்’ செய்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது’ என்று கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த எஸ்தர், தன் தாய் வீட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் வந்து விட்டார்.இந்நிலையில், எஸ்தரை அவரது கணவன் மீண்டும் குடும்பம் நடத்த அழைத்தார். “50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 சவரன் நகையுடன் வந்து மதபோதகரை அனுசரித்துச் சென்றால், என்னுடன் வாழலாம்’ என்று கூறியுள்ளார்.விரக்தியடைந்த எஸ்தர், தன் தாயுடன் நேற்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாளிடம், வரதட்சணை கேட்டு, மதபோதகருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொல்லும் கணவன், அவரது குடும்பத்தார் மற்றும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மதபோதகர் டேவிட் புஷ்பராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் அளித்தார்.உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் வன்னியபெருமாள் உறுதி அளித்துள்ளார்.எஸ்தர் கூறியதாவது:என் மாமா மகனை கட்டிக் கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமென நினைத்தேன். ஆனால், அவரே, பாஸ்டருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொன்னது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது பேச்சை கேட்டு பாஸ்டரும் என்னிடம் தவறாக நடக்க முயன்றது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த பாஸ்டர் என்னைப் போல் பல பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பல பெண்களை சீரழித்துள்ளார். என் கணவர் குடும்பத்தினரின் தொந்தரவு அதிகமானதால் தற்போது போலீசில் புகார் செய்துள்ளேன்.இவ்வாறு எஸ்தர் கூறினார்




