New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருப்போரூர் ஆதீனத்தை கடத்த முயன்ற கும்பல்

Guru

Status: Offline
Posts: 24601
Date:
திருப்போரூர் ஆதீனத்தை கடத்த முயன்ற கும்பல்
Permalink  
 
ரூ.60 கோடி சொத்தை அபகரிக்க திருப்போரூர் ஆதீனத்தை கடத்த முயன்ற கும்பல் Posted By: Chakra Published: Thursday, October 7, 2010

திருப்போரூர்: திருப்போரூர் முருகன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் கும்பல் கோவிலின் ஆதீனத்தை காரில் கடத்த முயன்றது. பொதுமக்கள் திரண்டதால் அந்தக் கும்பல் தப்பியோடி விட்டது.

திருப்போரூரில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாவாக 91 வயதான ஸ்ரீலஸ்ரீ சிதம்பர சிவஞான சுவாமிகள் உள்ளார்.

இந்த கோவிலுக்கு திருப்போரூர் மற்றும் சென்னை பகுதிகளில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் 18.20 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.60 கோடி ஆகும்.

''இந்த நிலத்தை விற்று பணத்தை பாங்கியில் டெபாசிட் செய்து அதில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணம் மூலம் கோவிலை நிர்வகிக்க ஆதினம் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் 7 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்'' என்றும் கடந்த வாரம் பத்திரிகையில் ஒரு விளம்பரம் வெளியானது.

ஆனால், இந்த விளம்பரத்தை நாங்கள் வெளியிடவில்லை என்று ஆதீனமும் கோவில் நிர்வாகிகளும் கூறிவிட்டனர். இதனால் நிலத்தை ஏதோ ஒரு கும்பல் சுருட்ட முயன்றது தெரியவந்தது.

இது தொடர்பாக ஸ்ரீலஸ்ரீ சிதம்பர சிவஞான சுவாமிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க திட்டமிட்டிருந்தார்.

இந் நிலையில் இன்று அதிகாலை அவர் தங்கியிருந்த மடத்துக்கு காரில் வந்த ஒரு கும்பல் ஆதீனத்தை கடத்திச் செல்ல முயன்றது. இதைப் பார்த்த கோவில் ஊழியர்கள் அந்தக் கும்பலைத் தடுத்தனர். தகவல் அறிந்து ஊர் மக்களும் அங்கு விரைந்து வரவே அந்த மர்மக் கும்பல் தப்பிவிட்டது.

Read more at: https://tamil.oneindia.com/news/2010/10/07/gang-tries-abduct-thiruporoor-aadeenam.html

__________________

Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: திருப்போரூர் ஆதீனத்தை கடத்த முயன்ற கும்பல்
Permalink  
 
கந்தசுவாமி கோவில் ஆதீன பதவி போட்டியில் இருந்தவர் மரணம்

பதிவு செய்த நாள்

12பிப்
2017 
00:09
 
திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவில் ஆதீன பதவி போட்டியிலிருந்தவர், உடல்நலக் குறைவால் இறந்தார்.

திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. சங்க கால கோவிலான இக்கோவிலை, 17ம் நுாற்றாண்டில், மதுரையைச் சேர்ந்த கவிராயர் சிதம்பர சுவாமிகள் சீரமைத்து திருப்பணிகளை மேற்கொண்டு, முதல் ஆதீனமாக குடமுழுக்கு செய்தார்.

அவரை தொடர்ந்து பல்வேறு ஆதீனங்கள் பொறுப்பு வகித்து வந்தனர். அதற்கான ஆதாரங்கள் கோவில் உற்சவர் மண்டபத்தில் கற்சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. கந்தசுவாமி கோவிலில், 40 ஆண்டுகளாக ஆதீனமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சிதம்பர சிவஞான சுவாமிகள், 2012ம் ஆண்டில் சிவப்பேரு அடைந்தார்.

அதை தொடர்ந்து, ஆதீன பதவியை பிடிக்க அவரது இரண்டாவது மகன் சிவப்பிரகாச முருகன் முயற்சி செய்து வந்தார். அதற்கு, நீதிமன்ற வழக்குகள் மற்றும் ஊரார் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தடையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிவப்பிரகாச முருகன், நேற்று முன்தினம் இரவு, திருச்சியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் உடல் நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.

__________________

Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 
திருப்ப்போரூர் கந்தசாமிகோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
Jump to navigationJump to search

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நகரம் மையத்தில் அமைந்துள்ளது.

திருப்போரூர் கந்தசாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் பல்லவ காலத்தில் அமைந்திருக்கும் பழங்கால கோயிலாகும். தமிழ்நாட்டில் 33 முக்கிய கோயில்களில் ஒன்றாகும் மு இந்த இடத்தில் முருகன் வள்ளி மற்றும் தேவயாயண தெய்வங்களுக்கு பாதுகாப்பை வழங்கினார் என்றும் முருகனுக்கு பிரணவத்தின் அர்த்தத்தை விவரிக்கிறார் என்றும் பரதபூஷணத்தில் வெளிப்படுத்துகிறது. புராணத்தின்படி, ஸ்கந்தா இங்கே பிரம்மாவின் கொள்கை அல்லது உண்மைகளை தேவதார்களிடம் உறுதிப்படுத்தினார். பிராணவத்தின் கருத்துப்படி இங்கு ஸ்கந்தனை வழிபட்டுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் கோயிலின் பின்புறம் உள்ள பிரணவ மலை பிரம்மா மலை என்று அழைக்கப்படுகிறது. பிரம்மா மலை மீது சிவன் விஷ்ணுவை வணங்கினார் என்று புராணம் கூறுகிறது. சூரபதனைக் கொல்லும் பாவத்தை நீக்கிவிட்டு, சிவபெருமானை வணங்கினான்.

  வரலாறு திருப்போரூர் கல்வெட்டுகளை 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, 12 ஆம் நூற்றாண்டின் கி.மு. நூற்றாண்டின் விக்ரமா சோழனின் காலத்தில் இருந்து பாதுகாக்கிறது. இந்த கோயிலின்  ஒரு கல்வெட்டில் காணப்படும் கல்வெட்டுக்கு சான்றாக, இந்த கோயில் முதலில் பல்லவர்களின் ஆட்சியில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். , திருப்போரூரில் உள்ள முருகனுக்காக ஒரு கோயில் கட்டுவதற்கு தேவிக்கு  தரிசனம் கொடுத்தார் என்பது புராணக்கதை.  
.கோவிலை நிறுவுவதற்கான ஆறு முயற்சிகள் தோல்வியடைந்ததாக அவர் சொன்னார்.  ஆலயத்தைக் கட்டுவதற்கான முயற்சிகள் எங்கு எடுக்கப்பட்டன என்பதை முருகன் ஒரு சிறிய சிறுவனாக தோன்றி, முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், அங்கு ஒரு புன்முறுவலுடன் மூழ்கியிருக்கிறார். சிதம்பர ஸ்வாமிகல் முருகப்பெருமான் சுவாமி மூர்த்தியைக் கண்டுபிடித்தார், அவரின் தோழர்கள் அவற்றைக் கண்டுபிடித்து ஆலயத்தை நிறுவினர்.

__________________

Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் - Thiruporur Murugan Temple

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் தனித்துவம் கொண்டது. ஏனெனில் அசுரர்களை அழிக்க முருகன் போரிட்ட 3 முக்கிய இடங்களில் திருப்போரூரும் ஒன்றாகும். 

திருச்செந்தூரில் சூரபத்மனுடன் போரிட்ட முருகன் மாயையை அடக்கினார். இந்த போர் திருச்செந்தூர் கடலில் நடந்தது. திருப்பரங்குன்றத்தில் அசுரர்களுடன் சண்டையிட்ட முருகர் கன்மத்தை அதாவது வினைப் பயனை அழித்தார். இந்த போர் நிலத்தில் நடந்தது. திருப்போரூரில் தாரகசுரனை எதிர்கொண்டு சண்டையிட்ட முருகன் அவனது ஆணவத்தை அடக்கி ஞானம் கொடுத்தார். 

இந்த போர் விண்ணில் நடந்தது. இதனால் திருப்போரூர் தலம் போரூர் என்றும் அழைக்கப்படுகிறது. தாரகனுடன் போர் நடந்த காரணத்தால் தாருகாபுரி, சமராபுரி என்றும் பெயர்கள் ஏற்பட்டன. கந்த சஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகன், சமராபுரிவாழ் சண்முகத்தரசே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

கோயிலுக்கு அருகிலுள்ள குன்றில் கைலாசநாதர், பாலாம்பிகை கோயில் உள்ளது. இவ்வாறு மலையில் சிவனும், அடிவாரத்தில் முருகனுமாக அமைந்த தலம்.

__________________

Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 
 மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழும் திருப்போரூர் கந்தசுவாமி கோயில்

2017-10-25@ 15:00:24

Tamil-Daily-News-Paper_3564983606339.jpg

சென்னை அருகே திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோயில் உள்ளது. முருகன் என்பது ஆறுமுக கடவுளின் திருப்பெயர்களுள் ஒன்று. அழுத்தி உச்சரித்து நா தழும்பேற ஓதி உணர வேண்டிய மந்திர பொருளே முருகன். முருகன் என்றால் அழகு. முருகு என்றால் இளமை, முருகு என்றால் மணம், முருகு என்றால் இனிமை, முருகு என்றால் ஞானம், முருகு என்றால் செவ்வேள். இந்த ஆறு வகையான இயல்புகளை விளக்கும் முருகு என்னும் பெயர்ச்சொல்லும், அன் என்னும் விகுதிச் சொல்லும் இணைந்து முருகன் எனப்படுகிறது. திருப்போரூரில் உள்ள பிரணவமலையில் அவுணர்கள் என்போர் ஆட்சி செய்து மக்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினர். இவர்களின் தலைவனான தாரகன் என்பவனை தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் சமர் (போர்) புரிந்து வதம் செய்ததால் இவ்வூருக்கு சமராபுரி என்ற பெயர் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இவ்வூரின் மற்ற பெயர்கள் போரி, போரி மாநகர், யுத்தபுரி, சமராபுரி, சமரப்பதி இத்தல பெருமை பாடியோர் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூரை சுற்றிலும் தென்னஞ்சோலைகளும், அவற்றை கமுகு மரங்களும் சூழ்ந்திருந்தன. கமுகு மரங்களை தொடர்ந்து மாஞ்சோலைகளும், பலா மரங்களும் இருந்தது. வாழைகளும், அவற்றைத் தொடர்ந்து கரும்பு, நெல் வயல்கள் சூழ்ந்திருந்தன. இந்த இயற்கை எழிலை திருப்போரூர் கந்தசுவாமி கோவிலை நிர்மாணித்த சிதம்பர சுவாமிகள் தனது இறைவனைப் போற்றி வணங்கும் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார். திருவண்ணாமலையில் பிறந்த அருணகிரிநாதர் 16000 திருப்புகழ் பாடல்களை பாடினார். அவற்றில் தற்போது 1304 பாடல்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. 

அருணகிரிநாதர் கந்தசுவாமி கோவிலுக்கு வந்து திமிர எனத் தொடங்கும் திருப்புகழ் பாடல்களை பாடி முருகா பெண்ணாசை ஒழியவும் உன்னைப் புதுமலர் கொண்டு பூஜித்து உன் தாளில் வாழும் ஆய்ந்த அறிவு கூடிடவும் அருள்புரிவாய் என்று வேண்டிப் பாடுகிறார். தற்போதைய கர்நாடக மாநிலத்தில் அரச குடும்பத்தில் பிறந்து நல்லாட்சி செய்தவர்களுள் ஒருவராகிய குமாரதேவர் ஆட்சியினை கைவிட்டு கோயம்புத்தூரை அடுத்துள்ள போறையூர் (தற்போதைய பேரூர்) சாந்தலிங்க சுவாமிகளின் தொண்டராக பணிபுரிந்தார். அவரின் உத்தரவுக்கு ஏற்ப விருத்தாசலத்தில் தங்கி தொண்டு புரிந்து வந்தார். அவினாசி பகுதியில் வாழ்ந்து வந்த ரெட்டியார் ஒருவரின் குழந்தைகளுக்கு கல்வியறிவு போதிக்க சென்றிருந்த சிதம்பர கவிராயரை குமார தேவர் சந்திக்க நேர்ந்தது. அவரின் தமிழ்ப்புலமையை பார்த்து வியந்த குமாரதேவர் சிதம்பரக் கவிராயருக்கு வீரசைவ நெறிப்படி 21 விதமான தீட்சைகள் செய்து அருளினார்.

சிதம்பரக் கவிராயர் சிதம்பர சுவாமிகளாக மாறி தியானத்தில் ஈடுபட்டு வந்தார். ஒருநாள் தியானத்தில் நீல நிற மாமயில் ஒன்று தோகை விரித்து ஆடக்கண்டார். இதுகுறித்து அவர் குமாரதேவரிடம் விளக்கம் கேட்டார். அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வணங்குமாறு உத்தரவிட்டார்.
சிதம்பர சுவாமிகள் மதுரை சென்று மீனாட்சியம்மனை தரித்து கலிவெண்பா எனும் தமிழ் பிரபந்தப் பாடலை பாடினார். இதனால் மகிழ்ந்த மீனாட்சி அம்மன் சிதம்பர சுவாமிகளிடம் இப்பகுதியின் வடபால் முப்பது யோசனை தூரத்தில் திருப்போரூர் என்னும் தலம் ஆறு முறை அழிந்து ஏழாம் முறையாக சிறப்புற்கு விளங்க உன் வருகைக்காக காத்துள்ளது. உடன் சென்று கோவிலை நிர்மாணிக்கும் பணியை மேற்கொள் என்று உத்தரவிட்டார். 

போறையூர் (தற்போதைய பேரூர்) மடத்தில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் சென்று குமாரதேவரை சந்தித்து ஆசிபெற்று அங்கிருந்து புதுச்சேரி வழியாக பொம்மைய பாளையம் சிவஞான பாலைய சுவாமிகளை சந்தித்து நடந்தவற்றை விவரித்தார். அவரும் சிதம்பர சுவாமிகளை உபசரித்து வேண்டிய உதவிகளை செய்து திருப்போரூருக்கு அனுப்பி வைத்தார்.  அங்கிருந்து நடந்தே வந்த சிதம்பர சுவாமிகள் திருப்போரூரில் உள்ள வேம்படி வினாயகர் கோவிலில் தங்கி முருகன் கோவிலை தேடி அலைந்தார். ஏழாவது நாளில் பனங்காடு ஒன்றில் முருகப்பெருமான் கோவில் புதையுண்டு கிடப்பதை கண்ணுற்று திடுக்கிட்டார். அன்றே திருப்பணிகளை தொடங்கி கோவிலை கட்டினார். தீராத நோய்களான காய்ச்சல், சூலை (வயிற்றுவலி), மகோதரம், குடவாதம், குட்டம் போன்ற நோய்களையும் தீராத வினைகளையும் திருநீறு கொடுத்தே தீர்த்து வைத்தார்.

கோவிலின் முதல் ஆதீனமாக இருந்து கோவிலை மறு நிர்மாணம் செய்த சிதம்பர சுவாமிகளைத் தொடர்ந்து பதினான்கு ஆதீனங்கள் இக்கோவிலை நிர்வகித்து வளர்ச்சி பெற செய்தனர். ஒவ்வொரு ஆதீனங்களின் காலத்திலும் பிரகாரங்கள், வட்ட மண்டபம், பதினாறு கால் மண்டபம், திருக்குளம் போன்ற திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் ஆதீனமான சிதம்பர சுவாமிகள் வைகாசி மாதத்தில் விசாகப் பெருநாளில் தான் தங்கியிருந்த மடத்திற்குள் இருக்கும் ஒடுக்க அறைக்கு சென்றமர்ந்து பூஜை செய்து சுரங்கத்தின் வழியாக சென்று சமாதியில் முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியின் சுழல் வடிவ தேவியாய் நின்று உச்சி மேற்குவித்த வண்ணம் வணங்கி மூலவரோடு திருவருட் கலந்தார். இக்காட்சியை சுவாமிகளின் நெருங்கிய சீடர்கள் ஐவர் கண்ணுற்று ஆனந்தப்பட்டனர். இவர்கள் கண்ணுற்றதால் இவ்வூருக்கு கண்ணுவர்பேட்டை (தற்போது கண்ணாப்பேட்டை அல்லது கண்ணகப்பட்டு) என்ற பெயர் ஏற்பட்டது.

இக்கோவில் குறித்த 7 கல்வெட்டுகளும், ஒரு செப்புப் பட்டயமும் தற்போது திருப்போரூர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த செப்பு பட்டயத்தில் கோவளம் என்ற இடத்தை ஆண்டு வந்த ஆற்காடு நவாப் திருப்போரூர் கோவிலின் இரண்டாம் பட்டமான சிவசங்கர தேவரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினான். அவனது மனைவிக்கு தீராத சூலை நோய் (வயிற்றுவலி) ஏற்பட்டு அவதியுற்றதை கண்ட சிவசங்கர தேவர் சுவாமிகள் திருநீறு கொடுத்து முருகனை வணங்கச் சொன்னார். அதன்படி செய்ததும் வயிற்று வலி குணமானது. இம்மகிமையை உணர்ந்த ஆற்காடு நவாப் சுவாமிகளை விடுதலை செய்ததோடு திருப்போரூர் முழுவதையும் கோவிலுக்கு தானமாக கொடுத்ததாகவும், ஏராளமான தங்க, வெள்ளி காசுகளை நன்கொடையாக கொடுத்ததாகவும் செப்புப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. 

__________________

Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 
குமாடி கட்டட நிறுவனம் மோசடியாக பெற்ற பட்டாவை, வருவாய் கோட்டாட்சியர் அதிரடியாக ரத்து செய்து, கோவில் பெயரில் 

பட்டா நிலைத்திருக்க உத்தரவிட்டார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், சென்னை அருகில், திருப்போரூர் கந்தசுவாமி கோவில், முக்கியமானதாக விளங்குகிறது.

திருப்போரூர் மற்றும் சுற்றுப்புற இடங்கள், சென்னை ஆகிய பகுதிகளில், கோவிலுக்கு, சொந்த நிலம் உண்டு. திருப்போரூரில், புல எண், 239/1ல் உள்ள, 2.51 ஏக்கர் நிலம் குறிப்பிடத்தக்கது.
இதற்கு உரியவராக, வருவாய்த்துறையின், நில உடமை மேம்பாட்டு திட்ட, 'அ' பதிவேட்டில், பட்டா எண் மூன்றில், வள்ளி தேவஸ்தானம் என பதிவாகி, பத்திரப்பதிவிலும் கோவிலுக்கு உரியதாகவே தொடர்கிறது.

பாதை

இந்நிலையில், இப்பகுதியில், வெவ்வேறு நபர்களின் நிலத்தை வாங்கிய தனியார் சொசைட்டி நிறுவனம், அடுக்கக வீட்டு வளாகம் அமைத்தது. வளாகம் செல்ல, பழைய மாமல்லபுர சாலையிலிருந்து, நிறுவன பாதை உண்டு.இதற்கிடையே, வளாகம், வேறு நிறுவனத்திடம் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

புதிய நிறுவனம், அடுக்கக விற்பனை கருதி, கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலிருந்தும், வளாகம் செல்ல, திருப்போரூர் - நெம்மேலி சாலையிலிருந்து, அணுகுபாதை அமைத்தது.
இப்பாதையில், நெம்மேலி சாலை பகுதி அருகில், 2.51 ஏக்கர் பரப்பு கோவில் நிலம் குறுக்கிடுகிறது. இந்நிலத்திற்கே, போலி ஆவணம் மூலம், நிறுவனம் மற்றும் தனிநபர் பெயரில், பட்டா பெறப்பட்டுள்ளது.

நீண்டகால தரிசு நிலத்தை, நிறுவனம், பிறரிடம் வாங்கியதாக, போலி ஆவணம் தயாரித்ததாக கூறப்படுகிறது.இவ்வூர் புல எண் 6ல், 1.81 ஏக்கர்; புல எண் 55ல், 82 சென்ட் (இவற்றின் பட்டா எண் 2) நில உரிமதாரராக, 'அ' பதிவேட்டில் கந்தசுவாமியார் சேர்ந்த வள்ளியம்மன் கோவில் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்றே, புல எண் 239/1ல், வள்ளியம்மன் கோவில் என பதிவாகியுள்ள நிலையில், இந்நிலம், கந்தசுவாமி கோவிலுக்கே உரியது.

ஆவணம்

நிலத்தை வளைத்த நிறுவனம், பட்டா பெயர் மாற்ற முயன்று, அன்றைய செங்கல்பட்டு வட்டாட்சி நிர்வாகம், இதுகுறித்து, கோவில் நிர்வாகத்திடம் பரிசீலிக்காமல், விதிகளுக்கு புறம்பாக ஆவணம் பதிந்து, 1994ல், தனியார் பெயரில் பட்டா வழங்கிஉள்ளது.வருவாய்த்துறை, தனியார் பெயர் மாற்றத்திற்கு முன், கோவில் நிர்வாக கருத்தறிய முயல்வதாக, கோவில் பெயரில், சென்னை, ராயப்பேட்டை முகவரிக்கு கடிதம் அனுப்ப, இத்தகைய கோவிலே, அங்கு இல்லை என, வட்டாட்சி அலுவலகத்திற்கே, கடிதம் திரும்பியது.

இக்கோவில், உள்ளூர் 'அ' பதிவேட்டில் பதிவான நிலையில், இதற்கு தொடர்பற்ற சென்னைக்கு கடிதம் அனுப்பி, கடிதம் திரும்பியதையும், அதன்பேரில், கோவிலே இல்லையென உறுதிப்படுத்தியும் பதிந்து, நிறுவன பெயருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
'அ' பதிவேடு, பத்திரப்பதிவில், உரிமதாரர் வள்ளியம்மன் கோவில் என்றே தொடரும் நிலையில், மோசடியை, கோவில் நிர்வாகம் அறியவில்லை. 
இதற்கிடையே, அடுக்கக, உள்ளூர் திட்ட குழும அங்கீகார அனுமதி பெற, உள்ளாட்சி நிர்வாகத்திடம், பொது திறவிட பகுதியாக, இந்நிலமே ஒப்படைக்கப்பட்டு, பேரூராட்சி நிர்வாக உடந்தையுடன், கடந்த ஆண்டு, சாலையும் அமைக்கப்பட்டது.
கோவில் நிலத்திலும் சாலை குறுக்கிட்டதை கண்டு, கோவில் நிர்வாகம், கோவில் நில பகுதியில், சாலை அமையவிடாமல் தடுத்தனர். நில பதிவேடுகளை ஆய்வுசெய்தபோது, நிறுவனம், அதை சார்ந்த தனிநபர் பெயரில் பட்டா பெயர் மாற்றப்பட்டுள்ளது தெரிந்தது.
பட்டா பெயர் மாற்றிய வட்டாட்சி நிர்வாகம், 'அ' பதிவேட்டில், கோவில் பெயரை நீக்காமல், அதே பெயரில் தொடர்ந்தனர். பெயர் மாற்றத்தை, 'அ' பதிவேட்டில் பதியவேண்டிய நிலையில், அவ்வாறு செயல்படவில்லை. 
அலட்சியம்
மாற்றத்தை பதிந்தால், மோசடி வெளியாகும் என்பதால், மோசடி அலுவலர்கள், 'அ' பதிவேட்டில், கோவில் பெயரை மாற்றாத நிலையில், பத்திரப்பதிவிலும், கோவில் நிலமாகவே தொடர்கிறது.
இச்சூழலில், கோவில் செயல் அலுவலர் நற்சோணை, நிலம் தொடர்பான ஆவணங்களை, மாவட்ட ஆட்சியரிடம் அளித்து விளக்கி, தனியாருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து, கோவில் நிலத்தை மீட்க, கடந்த ஆண்டு முறையிட்டார்.
ஆட்சியர் உத்தரவின்பேரில், சார் - ஆட்சியர் நடத்திய ஆய்வில், நிலம், கோவிலுக்குரியதாக உறுதியானது.
எனவே, மாவட்ட ஆட்சியர், தனியார் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்ய கருதி, அறிக்கை அளிக்க, திருப்போரூர் வட்டாட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டும், அலட்சியப்படுத்தப்பட்டது. 
இந்நிலையில், செயல் அலுவலர், தற்போதைய கோட்டாட்சியர் முத்து வடிவேலிடம், மீண்டும் நில ஆவண ஆதாரங்களுடன் விளக்கி, மோசடியாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தினார்.
பதிவேடுகள், துறை அலுவலர்கள் அறிக்கைகள் ஆகியவற்றை விரைந்து ஆய்வு செய்து, விசாரித்து, உண்மைத் தன்மையை தெரிவிக்காததை கோட்டாட்சியர் அறிந்தார்.
நில உடைமை மேம்பாட்டு திட்ட, 'அ' பதிவேட்டில், கோவில் நில பட்டாவை, தனியார் பெயருக்கு மாற்றப்படும் முன், வட்ட நிர்வாகம், அறநிலையத்துறை நிர்வாகத்திடம் தெரிவித்து விசாரிக்காததையும், கோட்டாட்சியர் அறிந்தார்.
அறநிலையத்துறையிடம் விசாரிக்காமலே, வள்ளி தேவஸ்தானமே இல்லை என முடிவெடுத்து, தனிநபர் பெயரில் பட்டா மாற்றப்பட்டது ஏற்புடையதல்ல என, முடிவெடுத்தார்.
மேலும், விதிமுறைகளை புறக்கணித்து, பட்டா பெயர்மாற்றம், இதுதொடர்பான அனைத்து உத்தரவுகளையும் ரத்துசெய்து, வள்ளி தேவஸ்தானம் என்ற பெயரில், பட்டா நிலைத்திருக்க, திருப்போரூர் வட்டாட்சியருக்கு, தற்போது உத்தரவிட்டுள்ளார்.

"> திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நிலத்திற்கு, தனியார் அடுக்குமாடி கட்டட நிறுவனம் மோசடியாக பெற்ற பட்டாவை, வருவாய் கோட்டாட்சியர் அதிரடியாக ரத்து செய்து, கோவில் பெயரில் 

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் முருகன் சிலை திடீர் மாயம் சிவனடியார் பரபரப்பு புகார் 

1/30/2017 12:06:20 PM

சென்னை: திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோயில் உள்ளது. கடந்த வாரம் கோயிலுக்கு வந்த சென்னை வேளச்சேரியை சேர்ந்த சிவனடியார் ஆடலரசு என்பவர் மூலவரை வணங்கி விட்டு உள் பிரகாரத்தை வலம் வந்தார். அப்போது பிரகாரத்தில் கந்தன் சிலை இல்லாதது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து திருக்கோயில் செயல் அலுவலர் நற்சோணையிடம் அவர் புகார் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிவனடியார் ஆடலரசு கூறுகையில், ‘நான் கடந்த வாரம் திருப்போரூர் முருகன் கோயிலுக்கு வந்து உள் பிரகாரத்தில் வலம் வந்தபோது சோமாஸ்கந்தர் சிலையில் சிவனும், பார்வதியும் மட்டுமே உள்ளனர். கந்தன் சிலை இல்லை. இதுபற்றி கோயில் அலுவலகத்தில் கேட்டபோது, செயல் அலுவலர், ‘தான் பொறுப்பேற்கும் போது இருந்த சிலைகள் அப்படியே உள்ளதாகவும், மற்ற சிலைகள் பற்றி தனக்கு தெரியாது,’ என்று கூறினார். ஆகம விதிப்படி சோமாஸ்கந்தரை பிரித்து வைப்பது தவறு என்று கூறினேன். ஆனால் செயல் அலுவலர் தலைமை அர்ச்சகரிடம் கேட்கச்சொன்னார். பின் அவரே தலைமை அர்ச்சகரை அழைத்து என் முன்பாக விசாரித்தார். தலைமை அர்ச்சகர் நான் என்ன என் வீட்டிற்கா எடுத்துச்சென்று விட்டேன். இங்கேதான் இருக்கும் என்று கூறினார். இருவரின் பதிலும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. தற்போது முதலமைச்சரின் தனிப்பிரிவு, அறநிலையத்துறை ஆணையர், வேலூர் இணை ஆணையர், காஞ்சிபுரம் உதவி ஆணையர் ஆகியோருக்கு புகார்கள் அனுப்பி உள்ளேன். ஆகவே, உயர் அதிகாரிகள் இதில் உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்,’ என்றார். 

சிவனடியார் புகார் குறித்து காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணியிடம் கேட்டபோது, ‘எந்த சிலையும் காணாமல் போகவில்லை, பாதுகாப்பாக உள்ளது. இந்த புகார் குறித்து அந்த சிவனடியார் கூறியவுடன் நான் விசாரித்து விட்டேன். மற்ற விஷயங்களை நேரில்தான் பேச முடியும்,’ என்றார். கோயில் செயல் அலுவலர் நற்சோணையிடம் கேட்டபோது, ‘சிவனடியார் ஆடலரசு சில நாட்களுக்கு முன்பு வந்து செம்பாக்கம் சிவன் கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ள அனுமதியும், சுண்ணாம்பு பூச பணமும் கேட்டார். நான் கோயிலின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு தர முடியாது என்று கூறி விட்டேன். அதனால் தற்போது திருப்போரூர் கோயிலில் சிலை காணவில்லை என்று கூறி தவறான தகவலை கூறுகிறார். சிலைகள் அனைத்தும் அர்ச்சகர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களிடமும் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. கோயிலின் எல்லா சிலைகளும் பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. தவறு நடக்க வாய்ப்பில்லை,’ என்று கூறினார். சிலை காணாமல் போக வாய்ப்பில்லை என்றாலும் வழிபாட்டுக்குரிய சிலையை பூட்டி வைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பும் பொதுமக்கள், கோயில் நகைகள், விலை மதிப்பில்லா சிலைகள் குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

__________________

Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 
காணாமபோச்சு... கண்டு பிடிச்சாச்சு... மீண்டும் தொலைந்திடுச்சு.. சோமாஸ்கந்தர் சிலை இருக்கா.. இல்லையா?

2018-09-29@ 00:49:15

DKN_Tamil_Daily_News_Sep25_2018__2911798

சென்னை: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மாயமாகி உள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. புகழ்பெற்ற முருகன் கோயில்களில்  ஒன்றானது திருப்போரூர் கந்தசுவாமி கோயில். இங்குள்ள மூலவர் சன்னதிக்கு  பின்புறம் உள்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த சோமாஸ்கந்தர் சிலையில் கந்தன்  சிலையை காணவில்லை என்று கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் வேளச்சேரியைச்  சேர்ந்த சிவனடியார் ஆடலரசு என்பவர் இந்து அறநிலையத்துறை ஆணையரிடம்  புகார்  அளித்தார். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.  இதையடுத்து அந்த சிலை கண்டு பிடிக்கப்பட்டதாக கூறி 2017ம் ஆண்டு ஜூன்  மாதம் மீண்டும் வைக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னை தி.நகரைச் சேர்ந்த முருக  பக்தர் ஸ்ரீதரன் என்பவர் கடந்த 13ம் தேதி திருப்போரூர் முருகன்  கோயிலுக்கு சென்றதாகவும், அங்கு வைக்கப்பட்டடுள்ள சோமாஸ்கந்தர் சிலை பழைய  புராதன சிலை இல்லை என்றும், புதியதாக வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறி சிலை  தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேலிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரை  காஞ்சிபுரம் எஸ்.பி.க்கு பொன் மாணிக்கவேல் அனுப்பி வைத்தார். அதன்பேரில்  திருப்போரூர்  கந்தசுவாமி கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை காணவில்லை என்று திருப்போரூர்  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில்  வைக்கப்பட்டுள்ள சோமாஸ்கந்தர் சிலை பழமையான சிலையா அல்லது புதியதாக செய்து  வைக்கப்பட்டுள்ளதா என்று மீண்டும் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard