New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவரும் வேதங்களும் - பார்ப்பனர்களும்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
திருவள்ளுவரும் வேதங்களும் - பார்ப்பனர்களும்
Permalink  
 


திருவள்ளுவரும் வேதங்களும் - பார்ப்பனர்களும்

 
தமிழில் இலக்கணம் செய்த தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பார்ப்பனர்களே என்பது தமிழ் பாரம்பரிய வரலாறு. வள்ளுவரை - பஞ்சாங்கம் செய்யும் வள்ளுவர் சாதி எனச் சொல்வோரும் உண்டு.
 

thiruvalluvar.png
                                   திருவள்ளுவரின் 14ம் நூற்றாண்டு சிலை
தமிழர்களின் மூத்த தொல்குடி அந்தணர்கள் அல்லது பார்ப்பனர்கள் என மிகத் தெளிவாய் சிலப்பதிகாரம் கூறுகிறது.
 பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து  சிலம்பு 7. வரந்தரு காதை

திருக்குறளில் வள்ளுவர் வேதங்களையும், பார்ப்பனர்களையும் போற்றியே குறளில் கூறி உள்ளார்.
                                              download.jpg

திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்
ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
   
“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை
மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
தமிழ் பகைவர்களான கிறிஸ்துவ பாதிர்கள், மற்றும் அவரோடு பொருள் பெற்று துணை நின்ற திராவிட அரசியல்வாதிகளின் விஷபோதனையாலும் பல உரைகள் பிதற்றலாய் எழுதப்பட்டுள்ளன, அதில் அறு தொழிலார் என்பதை ஆறு தொழில் என மட்டுமின்றி நூல் என்பதைக் கொண்டு நெசவு, அறுக்கும் நூல் என்றெல்லாம் வள்ளுவரையும், தமிழர் மெய்யியலையும் பழித்து உரைகள் வந்துள்ளன.

நாம் அறுதொழிலோர் எனில் சங்க இலக்கிய நடைமுறையில் காண்போம்.
 
பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.


 ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
 ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்”                      – பதிற்றுப்பத்து 24)
 கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்   (பதிற்றுப்பத்து  பாட்டு - 74
 அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் புறம்  -126-11
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு புறம் 361/4,5
அறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2

நல்ல அரசன் அந்தணர்களின் வேத அற நூல்களை உறுதுணையாய் ஆட்சி செய்ய வேண்டும், அரசன் மோசமான ஆட்சி செய்தால் அந்தணர் வேதம் மறப்பர் என வள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி கூறுகிறார்.

வள்ளுவர் பார்ப்பனர் வேதம் ஓதுதலை மறந்தாலும் குடி பிறப்பால் உள்ள ஒழுக்கம் பேண வேண்டும் என்கிறார்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (-134 ஒழுக்கமுடைமை)
 பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

 ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில்  வேதம்  பிராமணர்ளை தான் குறிக்கிறது.
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை  - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
ஓத்து இலாப் பார்ப்பான் உரை      இன்னா நாற்பது 21

வள்ளுவர் குறளின் அந்தணர் எனும் சொல்லை மேலும் இரண்டு குறளில் கூறி உள்ளார்.
 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.                                   (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.                   (30-நீத்தார் பெருமை)
இதில் "அந்தணர் என்போர் அறவோர்" எனும் குறளை தமிழ் மெய்யியல் பகைவர்கள் திரித்து வள்ளுவர் கூறியதை விட்டு கூறாததை சொன்னதாய் கேவலமாய் பயன்படுத்துவர்
நீத்தார் பெருமை - அதிகாரத்தில்; அந்தணர் என்பதை   துறவி எனும் பொருளில் வள்ளுவர்  ஆண்டுள்ளதை,  அந்தணர் குல மரபை  ஏற்க வில்லை என தமிழர் மரபை மீறி பொருள் கூறுவர்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தால் தான் பிறப்பு கடலைக் கடக்க இயலும் என உள்ளதை - எந்த தமிழ் அறிஞரும் சுட்டுவதே இல்லைகடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எனும் சொல் அந்தணர் கடவுளைக் குறிக்கும், 
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,

                ..............அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்  - பரிபாடல் 5ல் -இவை முறையே பிரம்மாவையும், சிவ பெருமானையும் குறிக்கும்
 திருவள்ளுவர் தமிழர் மெய்யியல் மரபில் அந்தணர் என்பதை கடவுள் என கடவுள் வாழ்த்து  அதிகாரத்திலும், நீத்தார் பெருமை  துறவியர் அதிகாரத்திலும் என பயன்படுத்தி உள்ளதை சரியாய் சொல்ல வேண்டும்

திருவள்ளுவர் வேததை பார்ப்பான் ஓத்து, அறுதொழிலார் நூல் எனச் சொன்னது போலவே மறை எனவும் பயன் படுத்தி உள்ளார்.

 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.                  (28-நீத்தார் பெருமை)

தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.

வடமொழி வேதங்கள் முனிவர்களால் இயற்கையிலிருந்து கேட்டு பெற்றவை, இப்பொருளிலேயே ஸ்ருதி என அழைக்கப்படும்.
வேதங்களிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் எழுந்த பாணினியின் இலக்கண வரைமுறையினுள் வாராதமையால் எழுத்தில் வடிக்க மாட்டார்கள், குரு மூலமாய் ஒத்து கூற ஓதிக் கொள்வதால் ஓத்து. எழுதாமையால் மறை, எழுதாக் கற்பு எனும் பெயரில் சங்க இலக்கியத்தில் காணலாம்.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 5
எழுதாக் கற்பினின் சொல்லுள்ளும் குறுந்தொகை 156

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப.   தொல்காப்பியம்-செய் 480

 மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,  திருமுருகாற்றுப்படை2.

 பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.    தொல் -பொருள-கற் 4
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் - தொல்  பொருள். கற்:5/29


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: திருவள்ளுவரும் வேதங்களும் - பார்ப்பனர்களும்
Permalink  
 


ஆயுர்வேதத்திற்கு வ்யாகரணம்

ஆடுதுறையிலுள்ள விக்ரமசோழனின் கல்வெட்டொன்று அங்கிருந்த பாடசாலையைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. அங்கிருந்த வைத்யசாஸ்த்ரம் படித்த மாணவர்கள் கற்க வேண்டிய நூல்களாக அது குறிப்பிடுவது.

1. வாகடம் - வாக்படம்
2. சரக ஸம்ஹிதை மற்றும்
3. வ்யாகரணம் குறிப்பாக ரூபாவதாரம்

இதில் ஆயுர்வேதம் படிக்கும் மாணவர்கள் வ்யாகரணத்தையம் படிக்க வேண்டுமென்று குறிப்பு தெளிவாகிறது.
மேலும் பல்வேறு தமிழக சாலைகளிலும் 10-11ஆம் நூற்றாண்டுகளில் வ்யாகரணத்தைப் போதிக்க இருந்த நூல் ரூபாவதாரமேயாம். இது தர்மகீர்த்தியென்னும் பௌத்தரால் இயற்றப்பெற்றதாகும். இவர் புகழ்பெற்ற பௌத்த ஆசிரியரான தர்மகீர்த்தியிலிருந்து வேறானவராகக் கருதப்பெறுகிறார். இவரது காலத்தை 11-12ஆகக் கருதுகிறார்கள். ஆனால் தமிழக - கர்ணாட கல்வெட்டுக்களைக் கொண்டு அதற்கு சில நூற்றாண்டுகள் முன்பு கொள்ளப்பட வேண்டியதிருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இந்தும் அதிலும் சைவத்தை அழிக்க வேண்டி திராவிட அமப்புகளும், கிலுஷ்தவ அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுவதாக தெரிய வருகிறது. திருவான்மியூரில் காலகாலமாக இந்துவாக இருந்த குடும்பத்தில் ஒருவன் கிருஷ்தவ நாட்டிலிருந்து கோடிகளை பெற்றுக்கொண்டு திடீரென சராச் முதலாளி ஆகிவிட்டான். வெள்ளையர்கள் இந்தியர்களை வீழ்த்த பணம், பெண், பதவி இவற்றைக்காட்டி வெற்றிக்கொண்டான். ரோமன் கிருஷ்தவ வியாபாரிகள் அமெரிக்காவி்ல் சமஸ்கிருத ஆராய்ச்சி என்ற அமைப்பை ஜோஸ்வா பவுண்டேசன் என நிறுவினராம். சென்னை மைலாப்பூரில் செயல்பட்ட நடனசபா போன்றவற்றை தெய்வநாயகம் என்பவன் வாங்கி அமெரிக்காவில் நடனப்பள்ளியை நடத்துவதுபோல் தெய்வநாயகம் மகள், போதகர் கஸ்பர்ராஜ் போன்றோர்கள் அங்கத்தினராக இருந்து பல்லாயிரம் கோடியில் தமிழக அரசியல் வாதிகள், சினிமாக்காரர்கள், கல்லூரிகளில் பணிசெய்யும் சரவணன் போன்ற திராவிட நாத்தகர்கள் சைவத்தை இழிவாக சித்தரித்து அதை.அழித்துவிட்டு கிருஷதவர்களையும், இஸ்லாமியர்களையும் வளரவிட்டு நாட்டை. இழிநிலைக்குத் தள்ள வேண்டி செயல்படுகின்றனர். சன்னிதானங்களாக இருப்பவர்களும் திராவிட அனுதாபிகளாம். சில ஜாதியினர்.மட்டும் தான் ஆதீனங்களாக இருப்பதை நீக்கி நல்ல ஞானம் உள்ள எந்த ஜாதியினராயினும் ஆதீனங்களாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு திராவிட கட்சிகள் முன்வராது. ஏனென்றால் இவர்களின் ஜாதியினர் தான் ஆதினங்கள். ஆதீனங்கள் அரசர்கள் கட்டிய கோயிலைககூட சரியாக பராமரிப்பதில்லை. சைவம் மற்றூம் இந்துமக்களின் வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை. காமராஜர் பள்ளிக்கூடங்களை ஆரம்பிக்கும்போது அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் தொடங்கவேண்டி அரசு கேட்டபோது நிராகரித்தனர். ஆனால் கிருஷ்தவன் முந்தியதால் 60% ஆசிரியர்கள் கிருஷ்தவர்களாகி மக்களை மதம்மாற்றி இன்று அனுபவிக்கன்றனர். காமராஜருக்கு இவர்கள் திமுகவோடு சேர்ந்து துரோகமும் செய்தனர். வைகோ, திருமாவளவன், கமலஹசன், நடிகன் விஜய் குடும்பம் போன்றோர் ஜோஸ்வா பவுண்டேஷனில் இணைந்துள்ளனராம். தாய் போன்று நன்நெறிகளை போதிக்கும் சைவத்தின் மேல் கரியை பூசிவிட்டால் இந்துமதத்தை அழிப்பது இலகுவாகிவிடும். மற்ற சக்தி வழிபாட்டாளர்கள் மது, பலி என அறிவு மயங்கி கிடப்பர். முக்திபெற்றவர்களைப்பற்றிதெரியாது வைஷ்ணவத்திலும் பழங்கால கதைகளைத்தான் கூறுவதாக பிறமதத்தவர் கூறுகின்றனர். உண்மை இறைவனின் இலக்கணம், கற்புநெறி, கொல்லாமை முக்திநெறி இவை சைவத்தில் மட்டும்தான் உண்டு. சைவத்தை அழிக்க பணத்தை அள்ளிவீசி ஆய்வு நூற்கள் சில புல்லுருவிகளால் எழுத வைக்கின்றனர். இவர்கள் குலத்தை அழிப்பவர்கள். உருப்படமாட்டார்கள். பழங்கால பாண்டிய மன்னர்கள் சரிதம் முழுமையாக யாருக்கும் தெரியாது. மாணிக்க வாசகர் காலம்கூட சரியாக கணிக்க முடியாமல் உள்ளது. இந்துமதம் தமிழ் நாட்டின் மண்ணின் மைந்தர்களாலும், அரசர்களாலும் காகாலமாய் கடைபிடிக்கப்படுகிறது. சைவத்தை பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். பணம்,பதவி, பெண் இந்த பலவீனர்களை நம்பாதீர். திருக்கோவிலூரில் மெயின் இடத்தில் ஆரசி சர்ச்க்கு என நிலம ஒருரெட்டியார் கொடுத்தார். இன்று அவர் குடும்பம் ஏழ்மையில் தவிக்க, கிருஷ்தவ கும்பல்கள் அனுபவிக்கிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard